அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–79-பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து -இத்யாதி ..

 பெரிய ஜீயர் அருளிய உரை

எழுபத்தொன்பதாம் பாட்டு -அவதாரிகை

எம்பெருமானார் யதார்த்த ஜ்ஞானத்தை கொடுக்கையாலே அயதார்த்தங்கள்
தமக்கு பொருந்தாத படியாயிற்று என்று ஸ்வ நிஷ்டையை  யருளிச் செய்தார் கீழ் –
உஜ்ஜீவன ருசியும் உண்டாய் இருக்க -அருமந்த ஜ்ஞானத்தை இழந்து –
இவ்விஷயத்துக்கு அசலாய் போருகிற லவ்கிகர் படியை அனுசந்தித்து–இன்னாதாகிறார் இதில் –

பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து இந்தப் பூதலத்தே
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை
உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கி யாதென்று லர்ந்தவமே
ஐயப்படா நிற்பர் வையத்துள்லோர் நல்லறி விழந்தே – – 79- –

வியாக்யானம் –

ஆத்மாவினுடைய தேக பரிமாணத்வ ஷணிக ஜ்ஞானரூபத்வ ஜடத்வாதிகள் என்ன –பிரம்மத்தினுடைய மாயா சபளிதத்வ உபாதி மிஸ்ரத்வ விகாரித்வாதிகள் என்ன –
சுத்த அசத்யமாய் இருப்பதொன்றை மேன்மேலும் உபபாதியா நிற்கும் பாஹ்ய குத்ருஷ்டி மதத்தை ஒட்டி இந்த பூமியிலே யதார்த்தத்தை பரிபாலித்து அருளும் எம்பெருமானார் –
ஆரொருவர் வருவார் என்று வழி பார்த்து நிற்கச் செய்தே -சஜாதீய புத்தியாலே -இவரை உபேஷித்து-வேறு நம்மை உஜ்ஜீவிப்பிக்க வல்ல தேவதை இங்கே ஏதென்று தேடி -மன -க்லேசத்தாலே உடம்பு உலர்ந்து –
இவ்விஷயமே -நமக்கு உத்தேச்யம் என்று பற்றி உஜ்ஜீவித்துப் போருகைக்கு உறுப்பான யதார்த்த ஜ்ஞானத்தை
லபிக்க பெறாதே -உங்களுக்கு உஜ்ஜீவனகரம் இவ் விஷயம் என்றாலும் பூமியில் உள்ளார்
வ்யர்த்தமே சம்சயப்படா நின்றார்கள் -.ஐயோ இவர்கள் நிலை இருந்தபடி -என் -என்று கருத்து –

பொய்யைச் சுரக்கும் -இத்யாதிக்கு
உத்பத்தி வினாசாதி யோகத்தாலே அசத்திய சப்த வாச்யமான தேஹத்தை ஜன்ம பரம்பரையாலே
மேன்மேல் உண்டாக்கும் தேஹத்மா அபிமான ஸ்வா தந்த்ரர்யாத் யர்தங்களை ஸ்வ உபதேசத்தாலே
யோட்டி விட்டு -இந்த பூதலத்திலே சதைக ரூபதயா சத்யா சப்த வாச்யமான ஆத்மாவை
ரஷித்து அருளும் எம்பெருமானார் நிற்க -என்று பொருள் ஆகவுமாம் .

துரத்தல்-ஒட்டுதல் /புரத்தல்-காத்தல் /ஐயம் -சம்சயம்
தெய்வமிங்கியாது-என்ற இடத்தில் இகரமும் குற்றியலிகரம் ஆகையாலே உமக்கியான் 49- –என்கிற இடத்தில் சொன்ன ந்யாயத்தாலே கழித்து பூர்வாபர பாதங்களுக்கு ஒக்கப்-பதினாறு எழுத்தாக எண்ணக் கடவது .

வேத வியாசர் திரு உள்ளம் –விசிஷ்டாத்வைதம் -தொன்மை -புராண ரத்னம் -பராசரர் -இடம் வந்ததே —வேதாந்தம் வீறு கொண்டு எழுந்தது ஸ்வாமியாலே –சொத்துக்களை ஸ்வாமியிடம் சேர்த்து அருள -செய்த உபகார பரம்பரைகள் -பெரிய பெருமாள் பொறுப்பை உடையவர் இடம் விட்டு கிடக்க -இராமா னுசன் நிற்க –திருப்பாவை சாத்து முறை கூட நித்யம் உடையவர் சந்நிதியில் இருக்க -லோகத்தார் அலர்ந்து ஐயப் படா நிற்கிறார்கள் —அவமே -வீணாக –பொய்யைச் சுரக்கும் -பொருள் –மலை முகடு -மூக்கு நுனியை பெரிசாக்கி -பார்க்கும் பார்வையில் தப்பு -வஸ்து இல்லாதது இல்லை -பார்த்த முறை தப்பு -சாஸ்திரத்தை விளக்கி –அசன்னேவா ச பவதி –தேக பரிமாணம் ஆத்மா ஒருமதம் -/ பர ப்ரஹ்மமத்துக்கு அஞ்ஞானம் -மாயாவாதம் /
ஏழு வித அனுபவத்தி –உபாதி பட்டு ஆத்மாக்களாக பிரதிபலிக்கும் -பிம்மம் என்பர் -விகாரத்வாதிகள் /வேதார்த்த பரமான பொய் யை ச் சுரக்கும் -/சித்துக்கு அச்சித்தின் அபாயம் வராது -அச்சித்தின் பாவம் சித்திக்கு வாராது -ஸ்வபாவம் தேகத்துக்கு வேறு ஆத்மாவுக்கு வேறு -தேகத்தை நன்பொருள் என்னும் பொய்யைப் போக்கினார் என்றுமாம் -மெய் சரீரம் என்று நினைக்கும் பொய் என்றவாறு –பொய் நின்ற ஞானம் மித்யை இல்லை -மாறிக் கொண்டே -இருக்குமே –அஹங்காரம் -நான் அல்லாததை நான் என்கிறது -/ ஜாபாலி -வாதம் -/ மூளை செயல்பாடு -ஞானம் -மனஸ் -தொட்டுப் பார்க்க முடியாதே –செயல்பாடு மறுத்த சரீரத்தில் இல்லையே -சரீரம் விட வேறே ஒத்துக்க கொல் -அதுக்கு பெயர் ஆத்மா அப்புறம் வைக்கலாம் -தேக விலக்ஷணம் சைதன்யம் -நான் அறிவு -இல்லை –சொல்லாமல் -நான் அறிவுடையவன் –என்கிறோமே –எனக்கு கை வலி–ஸூ க துக்கம் அனுபவிப்பவன் நான் -சரீரம் இருப்பதால் தான் வலி –ஷேத்ரஞ்ஞன் -க்ஷேத்ரம் –ப்ரஹ்மம் மாயை மறைக்கிறது ஓவ்வாதே-சாஸ்திர விருத்தம் ஆகுமே —அவிகாராய -தத்வம் அன்றோ காட்டி அருளி
மெய்யை நிர்வகித்து –த்ரிவித பரிச்சேத ரஹிதன் -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -திருமேனி ஸமஸ்த கல்யாண குணாத்மகன் –உபய விபூதி நாதன் -ஸ்ரீ பூ நீளா தேவி நாயகன் –பஹுஸ்யாம் –சிங்கள ஞானத்தால் அருளால் ஸ்ருஷ்டித்து -அந்தரப்பிரவேசித்து –மரமே தெய்வம் -சத் சம்ப்ரதாயம் -அனைத்து -ஜீவ ராசிகள் நன்மை வேத சித்தம் -வியாபித்து –ஸமஸ்த திவ்ய தேச நிலையன் -சீரார் திருவேங்கடமே இத்யாதி / யாதாத்ம்ய பர ஜீவ ஸ்வரூபம் காட்டி அருளி -/பொய் -சரீரம் / மெய் ஆத்மா -இவற்றை பற்றியவை என்றுமாம் –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை
கீழ்ப் பாட்டில் எம்பெருமானார் தம்முடைய மனோ தோஷத்தைப் போக்கி –அது தன்னைத் திருத்தி –சம்யஜ்ஞ்ஞானத்தை பிறப்பித்து
-ஸ்ரீ ய பதிக்கு சேஷம் ஆக்கின பின்பு -என்னுடைய மனசு வேறு ஒன்றைத் தேடித் போமோ-
என்று தம்முடைய அத்யாவச்ய தார்ட்யத்தை அருளிச் செய்து -இதிலே –
அந்தப்படியே சம்சாரி சேதனருக்கும்-அத்யாவசிக்க ப்ராப்தமாய் இருக்க -அது செய்யாதே -ஆத்மாவினுடைய தேக பரிமாண த்வம் -ஷணிகத்வம்
தொடக்கமான வேதார்த்த விருத்தார்ந்தகளை வாய் வந்த படி பிரலாபிக்கிற பாஹ்ய குத்ருஷ்டிகளுடைய மத-ப்ரேமேயத்தை வாசனையோடு ஒட்டி விட்ட பின்பு –
அந்த மறைக் குறும்பாலே வ்யாப்தமான பூ லோகத்திலே-சத்யமான அர்த்தத்தை -எம்பெருமானார் இருக்கச் செய்தேயும் சஜாதீய புத்தியாலே
அவரை விட்டு அகன்று வேறு ஒரு தேவதை நம்மை ரஷிக்க-கடவது உண்டோ என்னும் உள் வெதுப்பாலே சுஷ்கித்துப் போய்
வ்யர்த்தமே சம்சயாத்மாக்களாய் நசித்துப்-போகிறவர்கள் படியைக் கண்டு இன்னாதாகிறார் –

வியாக்யானம் –
பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து –
பொய் என்று அசத்யம் –சுரக்கும் பொருளை -இத்தையே மேன்மேலும் உபபாதியா நிற்கிற-பாஹ்ய குத்ருஷ்டிகளுடைய மத பிரக்ரியையை -அசந்னேவ ஸ பவதி அசத் ப்ரஹ்மேதி வேதசேத் -என்கிறபடியே
-அஞ்ஞான அந்யதாஞான விபரீத ஞான விஷயங்களை -என்றபடி -அவை யாவன –
ஆத்மாவினுடைய தேக பரிமாண த்வ -ஷணிகத்வ -விஞ்ஞான ரூபத்வ ஜடத்வாதிகளும் -பிரமத்தின் உடைய மாயாசபளிதத்வ உபாதி மிஸ்ரத்வ விகாராதிவாதிகளும் -ஜகத்தினுடைய மித்யாத்வ அவித்யா கார்யத்வாதிகளும்
-இப்படி அசத்யங்களாய்வேத விருந்தங்களான அர்த்தங்களை என்றபடி –
அன்றிக்கே
-பொய்யைச் சுரக்கும் பொருளை
-நாசதோ வித்யா தேபாவ -என்கிறபடி -உத்பத்தி விநாசாதி யோகத்தாலே-அசத் சப்த வாச்யமான தேகத்தை
-ஜன்ம பரம்பரையாலே மேன்மேலும் உண்டாக்கும் தேகாத்ம அபிமானம் -ஸ்வ ச்வாதந்த்ர்யம்-தொடக்கமான அர்த்தங்களை -என்றுமாம்
-பொருளைத் துரந்து -இப்படி பட்ட அசத்தியமான அர்த்தங்களை-திரு நாராயண புரத்திலும் – சரஸ்வதீ பண்டாரத்திலும்
-கோவாச ஷூரி தஞ்சயே தபிபு ரச்சோடோ பதர்க்கச் சடா-சஸ்த்ரா ஸஸ் த்ரிவிகார சம்ப்ரதரணா ஸ்வா தேஷு ந -என்கிறபடியே
கரை கட்டா காவேரி போலே நடையற பெருகி-
வருகிற சத் அர்த்தங்களாலே -பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு கண் விழிக்க ஒண்ணாதபடி -அவர்களோடு பஹூ முகமாக பிரசங்கித்து
சரீரமே ஆத்மா வாகில் மிர்த சரீரத்திலும் சைதன்யம் உண்டாக வேண்டி வரும் -என்றும்
-ஆத்மா ஷணிகம் ஆனால் –பூர்வ ஷணது பூதங்களான சுக துக்கங்களுக்கு உத்தர ஷணத்தில் பிரதிசந்தானம் வாராமல் போக வேண்டி வரும் என்றும் –
ஜ்ஞானமே ஆத்மா வாகில் -நான் அறிவேன் என்று இருக்க வேண்டும் ஒழிய நான் அறிந்தேன் -என்று ஞாத்ர்த்வேன
பிரதி சந்தானம் கூடாது என்றும் –
ஆத்மா ஜடம் என்றால் -எதத்யோ வேத்திதம் ப்ராகூ ஷேத்ரஜ்ஞ இதி தத்வித -என்கிறபடியே -பாதமே வேத நா சிரசிமேசுகம் -என்றும்
விஜ்ஞா நகந -என்று ஜ்ஞான ஸ்வரூபமாக சொல்ல கூடாது என்றும் –
பிரம்மம் மாயாசபளிதமானாலும் -நிஷ்களம் நிஷ்க்ரியம் சாந்தம் நிரவத்யம் நிரந்ஜ்னம் -என்கிறபடி
நிர்மல-ஆனந்த ஏக ஸ்வரூபம் ஆகையாலே -நான் ஜீவன் என்றும் ஈஸ்வரன் என்றும் -பிரமிக்க கூடாது என்றும் –
அப்படி-பிரமித்தால் –ஏகோ தேவஸ் சர்வ பூதேஷு கூடி -என்கிறபடியே அத்விதீயனான அவனுக்கு ப்ரம நிவர்தகர்
இல்லாமையாலே சர்வதா பிரமித்தே போக வேண்டி வரும் என்றும் –
பிரம்மம் விகாரி என்றால் -நிர்விகாரி என்கிற-ஸ்ருதியோடு விரோதம் பிரசங்கிக்கும்   என்றும் –
அவர்களை குறித்து பஹூ முகங்களாக பிரதி கூல அர்த்தங்களை-சொல்லி -அவர்களை சிஷித்து பராஜிதராக்கி –
இந்த மகா பிருத்வியில் இருக்க கூடாமல் கடலில் புகும்படி-ஒட்டி விட்ட –துரத்தல் –ஒட்டுதல் –இந்த பூதலத்தே மெய்யைப் புரக்கும் -யதாஜ்ஞ்ஞானத்தை இந்த பூதலத்தில்
பரிபாலித்து அருளும் -சுஷ்க தர்க்க வாதிகளைஒட்டி விட்டு -பிரமாணம் வேதாஸ் ஸ-என்றும் ஆதவ் வேதாம் பிரமாணம் –
என்றும் -சொல்லுகிற படியே சகல பிரமாணமான வேதத்தில் வைத்துக் கொண்டு -சத்யம் ஞானம் அநந்தம் பிரம்மம் –
என்கையாலே சர்வேஸ்வரன் -ஸ்வரூப விகார த்வ ஜடத்வ த்ரிவித பரிச்சேத ரஹீதன் என்றும்
-கப்யாசம்புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்றும் விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்கையாலே –சுபாஸ்ர்ய திவ்ய ரூபன் என்றும் –
பராஸ்ய சக்திர் விவைதைவஸ் ருயதே ஸ்வா பாவிகீ ஜ்ஞான பல கிரியஸா -என்கையாலே சமஸ்த
கல்யாண குணாத்மகன் என்றும் -பாதோச்ய விஸ்வ பூதானி த்ரிபாதஸ் யாம்ர்தம் திவி -என்கையாலே
உபய விபூதி நாதன் -என்றும் –
ஹரீஷ் சதே லஷ்மீஸ் ஸ பத்ன்யவ் -என்கையாலே திவ்ய மகிஷி வல்லபன் என்றும்
யத்ரபூர்வே சாத்யாஸ் ஸந்தி தேவா -என்றும் -யத்ர ருஷய பிரதமஜாயே புராணா -என்றும் –
ஏதத் சாமா காயான் நாஸ்தே -என்கையாலே சூரி ப்ரந்த பரிசார்யமாணன் என்றும்
ததை ஷத பஹூச்யாம் பிரஜா யேயேதி -என்றும் தத் ஸ்ரஷ்ட்வா ததேவ அனுப்ராவிசத் தது அனுப்ரவச்ய
சத் சத்யஸ்-சா பவத் -என்கையாலே சூஷ்மசித் அசித் விசிஷ்டனாய் கொண்டு ஜகத் காரண பூதன் என்றும் –
ஏஷ சர்வ பூதாந்தராத்மா பகதபாப்மா திவ்யா தேவ ஏகோ நாராயணா -என்கையாலே சர்வ அந்தர்யாமி என்றும் –
அம்பச்ய பாரே புவநச்ய மத்யே நாகச்யப்ர்ஷ்டே மகதோ மகீயான் -என்கையாலே வ்யூஹா ரூபேண வஸ்த்திதன் -என்றும் –
ப்ரஹ்மன்யோ தேவகி புத்ரோ ப்ரஹ்மன்யோ மது சூதனோம் -என்றும்-அஜாயமானோ பஹுதா விஜாயதே -என்கையாலே
அநந்த அவதார கந்தன் என்றும் -சயச்ய்யாயம் புருஷே யாச்சா சாவாதித்யே என்றும் -ய யஷோந்தராதித்யே
ஹிரண்மயீம் புருஷ -என்கையாலே சமஸ்த திவ்ய தேச நிலையன் என்றும் –நாராயணாய வித்மஹே வாசுதேவாய
தீமஹி தந்நோ விஷ்ணு பிரசோதயாத் -என்கையாலே விஷ்ணு நாராயண வாசுதேவன் சப்த வாச்யன் என்றும் –
பராத்பரம் புருஷம் உபைதி திவ்யம் -என்கையாலே சர்வ ஸ்மாத் பரன் என்றும் -ஏஷ அணுராத்மா புருஷம் உபைதி திவ்ய-என்றும்-(ஆக -12-பரணராமத்துக்கு அருளி -ஆத்மாவுக்கு -6-/ பிரக்ருதிக்கு -3-அருளிச் செய்கிறார் -தத்வ த்ரயம் -அர்த்த பஞ்சகம் -பரத்வாதி பஞ்சகம் -அனைத்தையும் ப்ரமாணங்களால் காட்டி அருளி )
-ஆராக்ர மாத்ரோ ஹ்யவரேபிதர்ஷ்டா-என்கையாலே பிரத்யகாத்மா அணுவாய் இருப்பான் என்றும்
நித்யானாம் சேதனானாம் -என்கையாலே நித்யனாய் இருப்பான் என்றும் – போக்தா போக்யம் ப்ரேரிதாராஞ்ச மத்வா –என்கையாலே போக்தா என்றும் –
ப்ர்தகாத்மானாம் ப்ரேரிராதம் சமத்வ -என்கையாலே சர்வேச்வரனில் வேறுபட்டு
இருப்பான் என்றும் -தயோரன்யம் பிப்பலம் ச்வாத்வத்தி – என்கையாலே கர்ம பல போக்தா என்றும் –
பிரமனே த்வா மகச ஒமித்யாத்மானம் புஞ்ஜீத -என்கையாலே பகவத் அனந்யார்க்க சேஷ பூதன் என்றும் –
தமேவம் வித்வானம்ர்த்த இஹ பவதி -என்கையாலே தாதர்ச ஜ்ஞானத்தை கொண்டு பரம புருஷார்த்த லஷண மோஷத்தை-பெறக் கடவன் என்றும்
-சமானம் வ்ர்ஷம் பரிஷஸ்வ ஜாதே -என்கையாலே அசித் ஈஸ்வரனுக்கு கிரீடா பரிகாரமாய்- இருக்கும் என்றும் –
ஆகாசாத் வாயு வாயு ரோர் அக்னி அக்னேராப அத்ப்ய ப்ர்த்வி-என்கையாலே சதுர்விம்சதிதத்வாதகமாய்
பரிணமிக்கும் என்றும் -ம்ர்த்தி கேத்ய வசத்யம் -என்கையாலே துச்ச வ்யாவர்த்தமாய் இருக்கும் என்றும் –
இப்படி தத்வ த்ரயத்தினுடையவும் ஸ்வரூப ஸ்வ பாவாதிகளை -இந்த அஞ்ஞான வர்த்தகமான பூ லோகத்திலே
யதாவாக உபதேசித்து உபகரித்து -என்று –புரத்தல் -காத்தல் -அன்றிக்கே இரண்டாம் யோஜனைக்கு அனுகுணமாக
பொருளைத் துரத்தி இந்த பூதலத்தே மெய்யை சுரக்கும் -என்றதுக்கு ஸ்வ ஸ்வா தந்த்ர்யாதிகளை ஸ்வ உபதேசத்தாலே
ஒட்டி விட்டு இந்த பூதலத்தில் சதைக ரூபனாய் சத்ய சப்த வாச்யனாய் ஆத்மாவை ரஷித்து அருளினார்-என்று பொருளாக கடவது
-இராமானுசன் நிற்க
-எம்பெருமானார் -வேத மார்க்க பிரதிஷ்டாப நாச்சார்யராய் –உபய வேதாந்தாசார்யராய் -திருத்துக்கைக்கு யாரேனும் ஆளுண்டோ என்று
-எதிர் சூழல் புக்கு வழி பார்த்து-நிற்கச் செய்தே –வேறு நம்மை உய்யக் கொள்ள தெய்வம்-அநாதி பாப வாசனா தூஷித சேஷி ஷேமுஷீகராய்
அவர் பக்கல் சஜாதீய புத்தியைப் பண்ணி -அவர் உபதேசத்துக்கு இசையாதே -எங்களை உஜ்ஜீவிப்பைக்கு சமர்தமான-வேறு ஒரு தெய்வம் –
இங்கி யாதென்று உலர்ந்து –
இந்த பூமியிலே ஏதோ வென்று தேடித் தேடித் தடுமாறி -அப்படி-பட்ட தெய்வத்தை லபியாதே -மிகவும் உடம்பு உலர்ந்து கிலேசித்து –
அவமே ஐயப்படா நிற்பர் –
இவ் விஷயம் எனக்கு-உத்தேச்யம் என்று பற்றி உஜ்ஜீவித்து போகைக்கு உறுப்பான யதா ஜ்ஞானத்தை லபிக்க பெறாதே
உங்களுக்கு உஜ்ஜீவனகரம் இல்லை என்று சொன்னாலும் வ்யர்தமே -இனி நமக்கு ரஷகர் ஆவார் ஒருவரும் இல்லை
என்று சம்சயப்படா நின்றார்கள் –ஐயம் –சம்சயம் –
வையத்து உள்ளார் நல்லறிவு இழந்தே
-பூ லோகத்தில்-இருக்கிற சேதனர்கள் நல்ல பரி சுத்த ஜ்ஞானத்தை இழந்து போனார்களே -அத்தால் நம்முடையுபதேசமும் வெறிதே
தலைக் கட்டிற்று – சம்சயாத்மா விநச்யதி -என்று இவர்கள் நசித்துப் போனார்களே ஐயோ -என்று சர்வ பூத சூகுர்த்தர்
ஆகையாலே அவர்களுக்காக அமுதனார் அவசாதப் படுகிறார் காணும் –

————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை

எம்பெருமானார் உண்மை யரிவை உபதேசித்தமையால் எனக்குப் பொய்ப் பொருள்-பொருந்தாத நிலை ஏற்பட்டதென்று -தன் நிலை கூறினார் கீழே-உலகில் உள்ளோர் உய்வு பெற வேணும் என்னும் ஆசை இருந்தும் -அருமந்த ஜ்ஞானத்தை-உபதேசித்து உஜ்ஜீவிப்பிக்க காத்திருக்கும் எம்பெருமானாரைத் தெய்வமாக பற்றி –-அவ அருமந்த ஜ்ஞானத்தை பெற கிலாது இழந்து -வேறு தெய்வத்தை தேடி அலைந்து-உழல்கிறார்களே என்று வருந்திப் பேசுகிறார் -இப்பாசுரத்தில் .

பத உரை .

பொய்யை -உண்மை கலப்பு இல்லாத பொய்யான விஷயத்தை
சுரக்கும் -மேன்மேலும் எடுத்துக் கூறும்
பொருளை -பிற மதத்து அர்த்தத்தை
துரந்து -நிலை நிற்க ஒட்டாமல் ஒட்டி
இந்த பூதலத்தே -இந்தப் பூதலத்தே
மெய்யை -பொய் கலப்பில்லாத சத்யமான விஷயத்தை
புரக்கும் -காத்து அருளும்
இராமானுசன் -எம்பெருமானார்
நிற்க -தம்மிடம் வருவரை எதிர்பார்த்து காத்து நிற்க
உய்ய -உஜ்ஜீவிக்கும்படி
நம்மைக் கொள்ள வல்ல -நம்மை ஏற்றுக் கொள்ள திறமை வாய்ந்த
வேறு தெய்வம்-மற்றொரு தெய்வம்
இங்கு -இங்கே
யாது என்றே -எது என்றே தேடி அலைந்து
உலர்ந்து -உடல் வாடி
நல் அறிவு -நல்ல மெய் உணர்வை
இழந்து -பெறத் தக்க நிலையில் இருந்தும் பெறாமையால் நஷ்டம் அடைந்து
உய்யும் வழி இதுவே என்று உணர்ந்திடினும்
வையத்து உள்ளோர் -பூமியில் உள்ளவர்கள்
அவமே -வீணாக
ஐயப்படா நிற்பர் -சதேகப் பட்டுக் கொண்டு இருப்பார்கள்

வியாக்யானம்
பொய்யை –நிற்க –
வேதப் பிரமாணத்தை ஏற்காத புற மதங்களும் -அதனை ஏற்கும் குத்ருஷ்டிகளும் பொய்யான விஷயங்களையே
புகட்டி மேலும்மேலும் அவைகளையே விளக்கி வலியுறுத்துவனாய் உள்ளன .இம்மதங்கள் சுரக்கும் பொய்களில்
ஒன்றுக்கு ஓன்று வேற்றுமை காணப் படினும் பொய்யான விஷயத்தை சுரத்தல் என்னும் அம்சத்தில்
சிறிதும் வேற்றுமை இல்லை .
புற மதமாகிய ஜைன மதம் ஆத்மா தத்துவம் தேகத்தின் அளவினது என்னும் பொய்யை சுரக்கின்றது .
பௌத்த மதம் ஆத்மா தத்தவத்தின் ஷணிகவிஞ்ஞானம் எண்ணம் பொய்யை சுரக்கிறது .
குத்ருஷ்டி மாதமாகிற ந்யாய மதம் ஆன்ம தத்வம் விழ அது அறிவுடைமை யதே யாயினும்
வடிவம் அறிவன்று என்னும் பொய்யை சுரக்கிறது .
மாயாசபளி தமான பிரம்மம் அவித்யையினால் மறைக்கப் பட்டு சம்சரிக்கிறது என்னும்
பொய்யை சுரக்கிறது மாயி -சங்கர -மதம் .
சத்யமான உபாதியினால் பிரம்மம் கர்மத்துக்கு வசப்படுகிறது என்னும் பொய்யை சுரக்கிறது-பாஸ்கர மதம்
பிரம்மம் அசேதனப் பொருளோடும் -சேதனப் பொருளோடும் இயல்பான பேதமும் அபத்தமும்
கொண்டதாலின்-பிரம்மமே ஜீவன் அசேதனப் பொருள்களின் மாறுபடும் இயல்பும் -பரிணாம ஸ்வபாவமும் –
சேதனர்களின் அபுருஷார்த்த அந்வயமும்-துக்கப் படும் இயல்பும் -பிரம்மத்துக்கு இவர்கள்
பஷத்தில் தவிர்க்க ஒன்னாதவை என்னும் பொய்யைச் சுரக்கிறது யாதவ பிரகாச மதம் .
இங்கனம் பொய்யைச் சுரக்கும் மதங்களின் அர்த்தங்களை நிலை நிற்க ஒட்டாமல்
துரத்துகிறார் எம்பெருமானார் .
துரத்தல் -ஒட்டுதல்
துரந்து-பிறவினையின் கண் வந்த தன்வினை -துரத்தி -என்றபடி –
வெளிச்சம் உள்ள இடத்தில் இருள் இருப்பு கொள்ள மாட்டாது ஓடுகின்றன -என்க.
பொய்ப் பொருள்களை பரவுவதற்கு பாங்கான இந்த பூதலத்திலே -மெய்ப் பொருளைப்
பரப்புவதின் மூலம் -அவற்றைத் துரத்தி அருளினார் எம்பெருமானார் .
1-ஜீவாத்மா ஸ்வரூபம் அணு ஸ்வரூபமானது .
2-அது நித்தியமாய் -ஞான ஸ்வரூபமாய் உள்ளது –
3-ஞானத்தை தன் குணமாகக் கொண்டதும் ஆதலின் -அது அறிவு வடிவில்லாத பொருளாகாது .
4-அது திருமகள் கேள்வனுக்கு சேஷப்பட்டது –
5-பிரம்மமும் ஈஸ்வரனும் ஒன்றே
பிரம்மம்மாயா சபளிதமாய் -ஈச்வரனாவதும் -அவித்யையினால் பிரம்மம் மறைக்கப் படுவதும்
பொருந்துவன அல்ல –
6-ஜீவனும் பிரம்மமும் என்றும் வேறு பட்ட பொருள்களே .
7-பிரம்மம் சேஷி -ஜீவன் சேஷ பூதன்
8-எனவே சத்யோபாதியினால் ஜீவா பிரம்ம பேதம் ஏற்படுவதாக கூறுவதும் ஏற்புடைதாகாது-
9-நிர் விகாரமாக -மாறுபாடு அற்றதாக -ஓதப்படும்ப்ரம்மத்துக்கு -அசேதனப் பொருள்களின் மாருபாடுமியல்பும் –
10-சேதனர்களின் துக்கப்படும் நிலையும்-நினைத்தற்கும் ஒண்ணாத மகா பாபங்களாகும் என்று-கருதுகிறார் எம்பெருமானார் .
இங்கனம் வேத நூல் ஒத்கின்ற உண்மைப் பொருள்களை பாதுகாப்பதன் மூலம்
பொய்யைச் சுரக்கும் பிற மதப் பொருள்களை கண்டித்து -தாம் பாது காத்த
மெய் அறிவை உய்வதற்காக பெற விரும்பி –தன் பால் வருவார் யாரேனும் உண்டோ
என்று வழியிலே விழி வைத்து எதிர்பார்த்து எம்பெருமானார் எழுந்து அருளி இருக்க-
உய்யும் வழி உணராது உலகத்தார் உழல்கின்றனரே என்று வருந்துகிறார் .
இனி -பொய்யைச் சுரக்கும் பொருளைத் துரந்து -என்பதற்கு பொய்யான தேஹத்தை
பிறவிகள் தோறும் மேன்மேலும் உண்டாக்கிக் கொண்டு இருக்கும் பொருளான
தேகாத்ம அபிமானத்தையும் -ஸ்வ த்ந்த்ரிய அபிமானத்தையும் ஒட்டி என்றும் –
மெய்யைப் புரக்கும் -என்பதற்கு மெய்யான ஆத்ம ஸ்வரூபத்தை காப்பாற்றும்
என்றும் உரை கூறலுமாம் .
பொய் -எனபது பிறப்பு இறப்புகள் வாய்ந்தது -என்றுமொருபடி பட்டு இராது மாறுபடும்
இயல்பினதாக தேஹத்தை சொல்லுகிறது ..இன்று தேஹம் என்னும் பேர் வாய்ந்து -பிறந்தது ஒரு படிப்-பட்டு இராமல் மாறுபட்டுக் கொண்டே வந்து இறுதியில் அழிந்து சாம்பலாகி விடுகிறது அன்றோ –
ஆதலின் அது பொய் ஆயிற்று .அத்தகைய தேஹத்தை பிறவித் தொடரிலே மேன்மேலும் சுரப்பான
தேகாத்ம அபிமானமும் ஸ்வ தந்த்ர்யா அபிமானமும் ஆகும் .
அநாத்மன் யாத்மா புத்திர்யா அச்வே ஸ்வ மிதியா மதி –
அவித்யா தரு சம்பூதி பீஜமேதத் த்விதா ஸ்த்திதம் –என்று
ஆத்மா அல்லாத தேகத்தில் ஆத்மா என்னும் எண்ணமும்
தனக்கு உரிய சொத்து அல்லாத ஆத்மா தத்துவத்தில் தனக்கு உரிய சொத்து என்னும்
ஸ்வா தந்த்ரிய எண்ணமும் -அவித்யை-சம்சாரம் -என்னும் மரம் உண்டாவதற்கு விதையாம்-இந்த விதை கீழ்க் கூறியவாறு இரு பிரிவாக உள்ளது .-எனபது காண்க .இங்கனம் உடல் எடுத்து
சம்ஸ்ரிப்பதற்க்கு காரணமான -தேகாத்ம அபிமானத்தையும் -ஸ்வா தந்த்ர்யா அபிமானத்தையும் –
அந்ய சேஷத்வ அபிமானத்தையும் -ஒட்டி என்றபடி
இவ் அபிமானங்களை தம் உபதேசத்தால் ஒட்டி இந்த பூதலத்தே மெய்யைப் புரக்கிறார் எம்பெருமானார் -என்க .
மெய் என்பது -பிறப்பு இறப்புகள் இன்றி -என்றும் ஒருபடி பட்டு -மாறுபாடு அற்று -விளங்கும்
ஆத்மா தத்துவத்தை –மெய் போலே என்றும்குலையாமல் இருத்தலின் -ஆத்மா ஸ்வரூபத்திற்கு மெய் எனபது
ஆகு பெயர் ஆயிற்று -.மாறுபடும் அசேதன பொருள்களை பொய் -அந்ருதம் -என்றும் -மாறு படாத சேதனப் பொருள்களை
மெய் -சத்யம் -என்றும் உபநிடதம் -ஓதி இருப்பதும் இங்கு உணரத் தக்கது .
தம் உபதேசத்தால் தொடர்ந்து உடல் எடுத்து சம்சரிப்பதற்க்கு காரணமாக தேகாத்ம அபிமானாதிகளை ஒழித்து
இவ் உலகில் ஆத்மா ரஷணம் பண்ண எம்பெருமானார் காத்து நிற்கும் போது -இவ் வையத்தில் உள்ளோர்
உய்யும் வழி உணராது -உழல்கின்றனரே -என்று வருந்துகிறார் .
வேறு நம்மை –நல்லறி விழந்தே ..
இராமானுசன் உய்யக் கொள்ள வல்ல தெய்வமாக காத்து இருக்க -வையத்து உள்ளோர் வேறு தெய்வத்தை
தேடுவது -அவரது மகிமையை அறியாது தம்மிலே அவரும் ஒருவர் தானே -என்னும் எண்ணத்தாலே –
அவரை உபஷித்தமை யினாலேயே என்க .தேடும் உய்யக் கொள்ள வல்லதான தெய்வம் வேறின்மையின்
கிடைக்கப் பெறாமையின் -மனக்கிலேசம் மிக்கு உடம்பு உலர்ந்தது -என்க –
தாம் உய்யும் படியாக தம்மைக் கொள்ள வல்ல தெய்வத்தை தேடுவதால் -தமது உஜ்ஜீவனத்தில்
வையத்தில் உள்ளோருக்கு நாட்டம் இருப்பது புலனாகிறது .ருசி இருந்தும் இழக்கின்றனரே -என்று வருந்துகிறார் .
நல் அறிவை -உண்மை ஞானத்தை -தருமவர் காத்து நிற்கிறார் .-
உய்யும் வேட்கைக்கும் குறை இல்லை
நல் அறிவைத் தரும் எம்பெருமானாரைப் பற்றி -நல் அறிவைப் பெற்று -உய்வுறாமல் இழக்கின்றனரே
என்று இரங்குகிறார்
அவமே ஐயப்படா நிற்பார் –
தாமாக அறிந்து பற்றுகின்றிலர் ஆயினும் -எம்பெருமானாரை பற்றுவதாலேயே நீங்கள் உய்வுற முடியும் –
என்று அறிவுறுத்தினால் -அதனையும் நம்பகில்லாது –ஐயப்படா நிற்பர்–
தமக்கும் தெரியாது
சொன்னாலும் புரியாது .
இவ் வையத்தில் உள்ளோர் நிலை இருந்த படி ஏன் ! என்கிறார் .
ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே -திருவாய்மொழி -4 10-1 – – என்றார் நம் ஆழ்வார் .
மெய்யைப் புரக்கும் இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக் கொள்ள வல்ல தெய்வம் இங்கியாதென்று
உழலுகிறீரே என்கிறார் அமுதனார் .
உடல் கொடுக்கும் -படைக்கும் -அவனே தெய்வம் என்றார் நம் ஆழ்வார் .
நல் அறிவு கொடுக்கும் ஆத்மா ரஷணம் பண்ணுமவனே தெய்வம் என்கிறார் அமுதனார் .தெய்வமிங்கியாது-என்னும் இடத்தில் இகரம் குற்றியலிகரம் ஆகையால்
– 43- பாசுரத்தில் போலே அலகிடாது கழிக்கவே முன் பின் அடிகளில் போலே
பதினாறு எழுத்துக்கள் அமைகின்றன -என்று அறிக .
——————————————————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது
தேடி உலர்ந்து வ்யர்தமாக சங்கை உடன் அறிவு இழந்து இருக்கிறார்களே/உய்ய வழி தேடுபவர்கள் தான் இவர்கள்.–பொய்யான அர்த்தம் சுரக்கும் பொருள்–பால் சுரப்பது போல 17 புற சமயங்களும் சுரக்கும்/பொய்யை-சுத்த அசத்வம்–ஆத்மாவின் உடைய தேக பரிமாணாத்வ-ஜைனன் வாதம் சப்த பங்கி வாதம்-/ஷணிக ஞானம் ரூபத்வ ஜடத்வாதிகள்- புத்தன்,நையாயிக/பிரமத்தின் மாயா சபளிதத்வ -மாயா வாதம்-சங்கரர்/உபாதி மிஸ்ரம்-பட்டு பிரதி பலிகிறது -பாஸ்கர மதம்/கத்தி குளம் கண்ணாடி பட்டு சந்திரன் பிரதி பலிப்பது போல -உபாதியும் பொய் என்பார் சங்கரர்//பாஸ்கரன் உபாதி உண்டு பிரமமும் கர்ம வசம் என்பான்/விகாரம் உண்டு என்பார் பிரமத்துக்கும் -அசித் சித் சம்பந்தத்தால் மாறுதல் அடைந்து சுக துக்கம் அன்பவித்து -யாதவ பிரகாசர்//வேத பாக்கிர் குதுருஷ்டிகளை சொல்லி- சுத்த அசத்வம்-பொய் ஒரே வார்த்தையில் அனைவரையும் சேர்த்தார்-சுரக்கும்- மென் மேலும் உபபாதியாய் நிற்கும் /

/அவற்றை ஓட விட்டு- இந்த பூ தலத்தே -மெய்யை புரக்கும்ராமானுசன்-ரஷிக்கும்/-ஸ்வாமி நிற்க-.நின்ற ஆதி பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே-ஆழ்வார்//கருட வாகனனும் நிற்க சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருகின்றீரே //சஜாதி புத்தி பண்ணி விலகி போனார்கள்-ராமா னுசன் நிற்க தெய்வம் நாடி போகின்றார்களே –உலர்ந்து இழந்து போனார்கள்-வைதிகர்-வேதம் தெரிந்தவர்-ஸ்ரீ பாஷ்யம் தெரிந்து கொண்டு ஸ்வாமி அடி பணிந்து இருப்பார்கள்-இவற்றை ஒட்டி /யதார்த்தத்தை பரி பாலித்து அருளும்-எம்பெருமானார் ஆர் ஒருவர் வருவார் என்று வழி பார்த்து நிற்க செய்தே--சஜாதி புத்தியாலே உபேஷித்து–தன்னை இட்டு பார்த்த அச்சம் தீர மா சுச க -என்றானே கீதச்சர்யன்-அகம் ஏவ பரம் தத்வம் –ச்வாதந்த்ர்யம் காட்ட மாட்டாரே ஸ்வாமி//பொய்யை சுரக்கும்-தேகத்தை ஜன்ம பரம்பரை யாலே மென் மேலும் உண்டாக்கும் –ஒரு படி இல்லாததால் பொய்-உத்பத்தி விநாசாதி யோகத்தாலே-அசத்திய சபத்த வாச்யம்-தேகம்–தேஹத்மா அபிமான அநந்ய சேஷத்வ அபிமானம் ஸ்வாதந்தர்ய   அபிமானம் ஸ்வ உபதேசத்தாலே ஒட்டி விட்டு-இந்த பூதலத்திலே சதைக ரூபா தயா சத்ய வாச்யமான ஆத்மாவை ரஷித்து அருளும் எம்பெருமானார் நிற்க என்றும் பொருள்.-.துரத்தல்-ஒட்டுதல் //புரத்தல் -காத்தல் /ஐயம் -சம்சயம் //பொய் நின்ற ஞானம் -பொய்யான ஜகத்தை பற்றிய ஞானம்-மாறுதலுக்கு உட் பட்ட அசித் சம்பந்தம்..//பிரமமும் அசித்தும் தன் உடன் சேர்ந்த ஜீவாத்மாவை தம் போல ஆக்கும்/-/அசித் -சொரூப விகாரம் உண்டு சித்- ஸ்வாபக விகாரம் உண்டது/சத்-அபாவம் இருக்காது அசத் -பாவம் இருக்காது -ஒரு படி பட்டு இருக்காது –கீதை 2 அத்யாயம்// ஸ்வாமி பகுமுகமாய் பிரசங்கித்து ..–பொய்யை துறந்தார்..-சரீரமே ஆத்மா என்றால் மிருத சரீரத்திலும் சைதன்யம் உண்டாகி இருக்க வேணும்..-/ ஆத்மா ஷணிகம் ஆகில் -பூர்வ ஷண சுக துக்கம் அனுபவித்தால் அடுத்த ஷணம் நினைவு இருக்க கூடாது//ஞானமே ஆத்மா வாகில்= நான் அறிவு என்று இருக்கணும் நான் அறிந்தேன்- என்று சொல்ல மாட்டோம்//ஞானத்துக்கு இருப்பிடம் ஞான சொரூபன் /ஆத்மா ஜடம் என்றால்-காலில் வலி சிரசில் ஆனந்தம் நான் தலை வலி சொல்லணும் -ஷேத்ரம் ஷேத்ரக்ஜன் -கீதை /பிரமம் மாயா சபலிதம்-நிர்மல ஆனந்த நிஷ்கலம் சாந்தம் நிரவத்யம் நிரஞ்சனம் -அவித்யை எப்படி சேரும் –/ஏகோ தேவக -அத்வதீயர் -பிரமம்-அஞ்ஞானம் போக்க யாரும் இல்லையே//விகாரி என்றால் நிர்விகாரி சாஸ்திர வாக்கியம் விரோதிக்கும்//ஜெயித்தார்-கடலில் புகும் படி ஒட்டி விட்டு/எழிலார் திலத்துக்கு புக்கு ஒழிப- கலியன்//மதுரா விட்டு த்வாரகை போனான் கண்ணன்/ ஸ்வாமி இந்த மண்ணகத்தே மெய்யை பரி பாலித்து/வேதமே பிரமாணம்–சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா /சொரூப விகாரம் இல்லை ஜடம் இல்லை அனந்தம்-கால தேச வஸ்து -பர பிரமம் அடி படை இது //கப்யாசம் புண்டரீகாஷா ஏவம் அஷணீ -கமல கண்ணன்/தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான் மிகும் சோதி மேலறிவார் யவரே

/திருவடி /திருமேனி குணம் உண்டு/பராச்ய சக்தி பரா அசய சக்தி ஞான சக்தி போல்வன/பாதோ ச்ய விசவா பூதானி -விபூதி உண்டு/-செங்கோல் உடைய /லஷ்மி பத்த்யோ/திவ்ய மகிஷி வல்லபன்/ சூரி பிரசன்ன-யாத்ரா ரிஷிகள் /தத் ஸ்தூல சூஷ்ம பிரமம் -பகு ச்யாம்/சர்வ பூத அந்தராத்மா திவ்ய ஏக நாராயண/தத் அனுப்ரேவேசம்/வியூக ரூபனே வாசுதேவ சங்கர்ஷன –தேவகி புத்திர அனந்த அவதாரம் அஜாய மானோ பகுவிதா ஜாயதே/பிறப்பில் பல் பிறவி பெருமான்/சமஸ்த திவ்ய தேச நிலையன் /சாகைகளில் இருந்து எடுத்து கோத்து-அர்த்த பஞ்சகம் தத்வ த்ரயம் பரமனின் எல்லா நிலைகளையும் சேர்த்து விளக்கினார்-ஆதித்யமண்டல மத்திய வர்த்தி-ஸ்ரீ வைகுண்ட நிகேதன்/விஷ்ணு நாராயண வாசுதேவ சப்த வாக்யன்/சர்வ  ஸ்மாத் பரன்-பராத் பரன் -ஒத்தாரும் மிக்காரும் இல்லாத உயர்வற உயர் நலம் உடையவன்-நம் கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –-–எஷோ அணு -பிரத்யக ஆத்மா -தனக்கு தானே ஒளி விடுவான்-நித்யா அநித்யோ நித்யன் /போக்தா போக்தா பிரேரிதம்-

போக்தா என்றும்/தூண்டு விடுபவன் வேறு பட்டு//கர்ம பல போக்தா-அனந்யார்க்க சேஷ பூதன் ஓம் காரம் கொண்டு உபாசித்து/தமேவ வித்வான் வேதனம் .பிரபத்தி – லஷணம் கொண்டு மோட்ஷம் அடைய/அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் அனுபவித்து –/தேகம் -அசித்-க்ரீடா பரிகிரகம் மரம்-பறவைகள்-உட்கார்ந்து கூடு கட்டி கொண்டு விளையாட/திருமலை- ஆழ்வார் உடன் அனுபவிக்க விளை ஆட இடம் /ஆகாசம்-சதுர விம்சதி 24 தத்வமாய் இருக்கும்/மண் என்ற பொருள் இருக்கும்- மிருது ஏவ சத்யம் //உபதேசித்து உபகரித்தார் உள்ள படி //பொய்-தேகம் -ச்வாதந்ர்யம் ஒட்டி-இசைந்து உபதேசம் வருகிறார்களா என்று எதிர் சூழல் புக்கு-பல திரு மேனிகள் உடனிருந்து -வேறு நம்மை உய்ய கொள்ள தெய்வம்–உண்டோ என்று-சஜாதி புத்தி பண்ணி அழுக்கு அடைந்த அவித்யை –கர்ம வாசனையால்-தேடி தேடி தடுமாறி-உடம்பு உலர்ந்து கிலேசித்து அவமே ஐயப்படா நிற்பார் .-உஜ்ஜீவன ருசியும் உண்டாய் இருக்க –அருமந்த ஞானத்தை இழந்து–-இவ் விஷயத்துக்கு அசலாய் போருகிற லவ்கிகர் படியை அனுசந்தித்து இன்னாதார் ஆகிறார் இதில்

——————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்    திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: