அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–78-கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –

எழுபத்தெட்டாம் பாட்டு -அவதாரிகை

இப்படி செய்த உபகாரங்களை யனுசந்தித்த அநந்தரம் -தம்மைத் திருத்துகைக்காக-அவர் பட்ட வருந்தங்களைச் சொல்லி –இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உத்தேச்ய-விஷயத்துக் உறுப்பாக்கின பின்பு வேறொரு அயதார்த்தம் என் நெஞ்சுக்கு-இசையாது -என்கிறார் .

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் என்னெஞ்சினில்
பொருத்தப்படாது எம்மிராமானுச! மற்றோர் பொய்ப் பொருளே – – 78- –

வியாக்யானம்

நெடும் கை நீட்டாக இருக்கில் -இவன் நெஞ்சைத் திருத்தப் போகாதென்று நெஞ்சு தன்னிலே-வந்து புகுந்து –குடியிருக்குமவர்கள் செடியறுக்குமா போலே-உள்ளுண்டான ஆத்மபஹாரத்தைப் போக்கி-வேறு சிலர்க்கு நெஞ்சால் நினைக்கவும் கூட அரிதாய் இருந்துள்ள வருத்தத்தாலே –நான் அறியில் செய்த கிருஷி தன்னையும் அழித்து கொள்வன் என்று-எனக்கு ஒன்றும் தெரியாதபடி மிகவும் மறைத்து –தேவரீர் தாம் அறிந்ததாக யத்நித்து -தரிசு கிடந்த தரையை செய் காலாம் படி திருத்துவாரைப் போலே-திருத்தி -இந்த லோகத்திலே தேவரீருக்கு உத்தேச்ய விஷயமான ஸ்ரீய பதிக்கு-அந்தப்புர விநியோகத்துக்கு ஆளாம்படி -பண்ணின பின்பு -இப்படி தேவரீர் திருத்த -திருந்தின என்மனச்சிலே தேவரீர் அறிவித்த யதார்த்தம் ஒழிய-அதுக்கு புறம்பாய் இருப்பதொரு அயதார்த்தம் வலியப் பொருத்திலும் பொருந்தாது –

இந்த மண்ணகத்தே -என்று இருள் தரும் மா ஞாலமான -திருவாய் மொழி -10 4-1 – இந்தலோகத்திலே திருத்துகையில் உண்டான அருமையைச் சொல்லிற்றாகவுமாம்-கருத்தென்று -மனோ வருத்தி வாசியான சப்தத்தாலே மனசை சொல்லுகிறது .சிந்தை என்னுமா போலே .

வருத்தம் -ஆயாசம் /பொருந்துதல்-இசைத்தல்

இந்த மண்ணகத்தே -திரு மகள் கேள்வனுக்கு ஆக்கி -1-கருத்தில் புகுந்து –2-உள்ளில் கள்ளம் கழற்றிக் –3-கருதரிய
வருத்தத்தினால் மிக வஞ்சித்து–4- நீ யிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய உபகாரகங்கள் /உள்ளே புகுந்து திருத்தி -ட்டத்து அரசியான-பிராட்டியாரின் அந்தப் புரத்திலும் உபயோகப் படத் தக்க முறையில் அந்தரங்க கைங்கர்யம் செய்யும்படி ஆளாக்கினமை தோற்றுகிறது–நிர்ஹேதுகமாக அவர் பேறாக செய்து அருளி -தயைக சிந்து –மெய்ப்பொருள் -சேஷி சேஷி பாவம் -அருகில் வந்து புகுந்தான் பெற்ற பாவிக்கு விட போகாது-அஞ்ஞான- ஒன்றும் தெரியாத-அன்யதாஞ்ஞான-குணம் மாறி-விபரீத ஞானம் -பொருளை மாற்றி-.மூன்றையும் வாசனை உடன் ஒழித்து/பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்-போல ஆத்மா அபகாரம் தோஷம் போக்கி /மற்ற ஓர் பொய் பொருளும் -மற்றவர்களுடைய பொய் பொருள்களும் நெஞ்சில் புகாது என்றபடி /நெடும் கை நீட்டு என்று மட்டும் கூடாது என்று  -கூரத் தாழ்வான் ஸ்வாமிக்கு தஷினோ பாஹு –போதாது என்று நெஞ்சில் புகுந்து -கருத்து -ஆகு பெயர் -நெஞ்சுக்கு -ஆத்ம பாவ -கீதையில் பிரகரணத்துக்கு சேர கருத்து என்றே அர்த்தம் ஸ்வாமி அங்கே சாதிக்க -இங்கே கருத்து -மனஸ் நெஞ்சு என்றபடி -மேலே உள்ளில் கள்ளம் கழற்றுகிறார் அன்றோ -/அடியேனுக்கு உத்தேச்யமான திருமகள் -சொல்லாமல் தேவரீருக்கு உத்தேச்யம் –என்று மதுரகவி நிஷ்டை -என்றபடி /

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை -கீழ்ப் பாட்டிலே -லோகத்தை எல்லாம் பிரமித்து அளித்த குத்ர்ஷ்டிகளை பிரபல பிரமாணங்களாலே
நிரசித்து -தம்முடைய பாபங்களை எல்லாம் போக்கி -இன்னும் அதுக்கு மேலே சிறிது கொடுக்க வேணும் என்று நினைத்தார்
என்று எம்பெருமானார் செய்த உபகார பரம்பரையை அடைவே அனுசந்தித்து -இதிலே -தரிசு கிடந்த தரையை செய் காலாகும் படி
திருத்தும் விரகரைப் போலே –இவ்வளவும் விஷயாந்தர ப்ரவணனாய்  போந்த என்னைத் திருத்துகைக்காக –
படாதன பட்டு -அரியன செய்து -திருத்தி -தேவரீருக்கு வகுத்த விஷயமான ஸ்ரீ ய பதிக்கு ஆளாகும்படி பண்ணி அருளின பின்னும்-
வேறு சில அயதார்த்தங்களை என்னுடைய மனசில் வலிய பொருத்திலும் – பொருந்தாதே இருப்பன் -என்கிறார் –
வியாக்யானம்கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி -தேஷாமேவானுகம் பரர்த மஹா மஜ்ஞ்ஞான ஜந்தம நாஸ யாம்யா
மமபாவச்தோ ஜ்ஞானதீ பேகபாச்வதா – என்றும் -என்னை தீ மனம் கெடுத்தாய்-என்றும் சொல்லுகிறபடி-நெடும் கை நீட்டாக இருக்கில்
இவன் நெஞ்சைத் திருத்த பணிப்படும் என்று கொண்டு நெஞ்சு தன்னில் தானே வந்து புகுந்து -குடி இருக்கிறவர்கள்
அங்கு இருக்கிற செடிகளை அறுக்குமா போலே -உள்ளில் உண்டான அஜ்ஞ்ஞான அந்யதாஞ்ஞான  விபரீத ஜ்ஞான ரூபமான
தோஷங்களை எல்லாம் -வாசனையோடு துடைத்து -கிம் தேன நக்ர்தம் பாபம் சோரேண ஆத்மபஹரினா -என்னும்படியான
ஆத்மா அபஹராதி தோஷங்களை கட்டடடங்க போக்கி என்றபடி -கருத்து -என்று மனோ வ்ருத்தி வாசியான

சப்தத்தாலே பிரகரண அனுகுண் யத்துக்காக மனசை சொல்லுகிறது -சிந்தை என்னுமா போலே –   கருதரிய வருத்தத்தினால் -வேறு சிலருக்கு நெஞ்சால் நினைக்கவும் கூட அரிதாய் இருந்துள்ள-வருத்தத்தினாலே –வருத்தம் -பிரயாசம் -மிக வஞ்சித்து -நான் அறியில் செய்த க்ர்ஷி தன்னையும் அழித்து கொள்வன் என்று -இரா மடம் ஊட்டுவாரைப் போலே -எனக்கு ஒன்றும் தெரியாத படி மறைத்து –நீ இந்த மண்ணகத்தே திருத்தி –தேவரீர் தாம் அறிந்ததாக யத்நித்து -இவ்வளவும் நித்ய சம்சாரியாய் விஷயாந்தரங்களில் மண்டி விமுகனாய் கொண்டு -இருள் தரும்மா ஞாலத்திலே -ஸ்வை ரமாக  அபத பிரவ்ர்த்தனாய் போந்தேன் ஆகையாலே கரும் தறையான என்னை –செயல் நன்றாகத் திருத்தி -தேஷாம் சத்த யுத்க்தாதாம்  பஜதாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் தம் ஏனமா முபயாந்திதே -என்கிறபடியே ஒரு அதிகாரத்தைப் பார்த்து திருத்துகை அன்றிக்கே-நிர்ஹேதுகமாக திருத்தினாய் என்றபடி –திருத்துகை யாவது-இவ் வாத்ம வஸ்து சேஷியான ஸ்ரீ ய பதிக்கு  சேஷம் என்னும் இவ் வர்த்தம் நெஞ்சில் படும் படி உபதேசிக்கை –

திரு மகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் -நலமந்த மில்லதோர் நாடு புகுந்த பின்பு வரக் கடவதான இந்த சேஷத்வ ஜ்ஞானத்தை-
இந்த மண்ணகத்தே எனக்கு உபகரித்து -தத் பலமாகக் கொண்டு -பூ மகளார் தனிக் கேள்வன் -என்கிறபடியே ஸ்ரீ தேவி யாகிற
பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான சர்வேஸ்வரனுக்கு அந்தப்புர விநியோகத்துக்கு ஆளாம்படி பண்ணினபின்பு –
எனக்கு ஜ்ஞானத்தை பிறப்பித்தவனுக்கு என் உயிரை அறவிலை செய்து  எழுதிக் கொடுத்த பின்பு -மருவித் தொழும்
மனமே தந்தாய் -என்கிறபடி ஞானத்தை எனக்கு உபகரித்து அருளி -என்னை பகவத் அனந்யர்ஹா சேஷ பூதனனாம் படி
கடாஷித்து அருளின பின்பு -என்றபடி –என் நெஞ்சில் பொருத்தப் படாது -இப்படி தேவரீர் படாதன பட்டு திருத்த
திருந்தின என் மனசிலே இசையாது –எம் இராமானுசா -அஸ்மத் குரோ -என்கிறபடி -எனக்கு அஞ்ஞா தாஜ்ஞாபனம்
பண்ணி உபகரித்து அருளின எம்பெருமானாரே –மற்றோர் பொய்ப் பொருள் -தேவரீர் அறிவித்த யதார்த்த ஜ்ஞானம் ஒழிய
அதற்க்கு புறம்பாய் இருப்பதொரு அயதார்த்தமான அர்த்தத்தையும் –பொருத்த படாது –வலியப் பொருத்தினாலும் பொருந்தாது –
பொருந்துதல் -இசைத்தல் –இந்த மண்ணகத்தே திருத்தி –என்று -இருள் தரும் மா ஞாலத்தில் திருத்துகையில் உண்டான
அருமையை சொல்லிற்றாகவுமாம் –தீபம் வியாபித்த இடத்தில் திமிர வ்யாப்திக்கு வழி இல்லாதது போலே ஞானம் புக்க-இடத்தில் அஞ்ஞானம் புகுர வழி இல்லை என்றது ஆய்த்து – ஜ்ஞானக் நி ஸ சர்வ கர்மாணி பச்ம சாத் குரு தேர்ஜுன -என்ன கடவது இறே
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை –

இங்கனம் தமக்கு செய்து அருளிய உபகாரங்களை அனுசந்தித்த பிறகு -தம்மைத் திருத்துவதற்காக அவர் பட்ட வருத்தங்களைச் சொல்லி –இப்படி என்னைத் திருத்தி -தேவரீருக்கு உகந்த விஷயமான திரு மகள் கேள்வனுக்கு உறுப்பாக்கின   பின்பு-வேறு ஒரு பொய்ப் பொருளை  என் நெஞ்சில் பொருந்துமாறு செய்ய இயலாது -என்கிறார் .

பத உரை –

எம் இராமானுச -எங்களுடைய எம்பெருமானாரே
கருத்தில் -அடியேன் மனத்தில்
புகுந்து -வந்து
உள்ளில் -உள்ளத்தில் இருக்கிற
கள்ளம் -கலவை
கழற்றி -போக்கி
கருதரிய -வேறு எவருக்கும் நெஞ்சால் நினைப்பதற்கும் இயலாத
வருத்தத்தினால்-பிரயாசத்தினால்
மிக வஞ்சித்து -நான் அறியில் தப்பி விடுவேன் என்னும் நினைவாலே எனக்கு தெரியாமல் மிகவும் மறைத்து
நீ -தேவரீராகவே
திருத்தி -திருத்தமுறச் செய்து
இந்த மண்ணகத்தே -இந்த உலகத்திலே
திரு மகள் கேள்வனுக்கு -ஸ்ரீ ய பதியான சர்வேச்வரனுக்கு
ஆக்கிய பின் -ஆளாக்கியதற்கு பிறகு
என் நெஞ்சில் -திருத்தப்பட்டு திருந்தியவனாகிய என்னுடைய மனசிலே
மற்று -தேவரீர் உபதேசித்த மெய்ப் பொருளைத் தவிர வேறு பட்ட
ஒர் பொய்ப் பொருள் -ஒரு பொய்யான பொருளும்
பொருத்தப் படாது -வலியப் பொருத்தும்படி புகுத்தினாலும் பொருந்த மாட்டாது –

வியாக்யானம்

கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி -மனத்தின் கண் உண்டாகும் -எண்ணத்தைக் கூறும் கருத்து என்னும் சொல்-எண்ணம் உண்டாகும் இடமாகிய மனத்தைக் குறிக்கிறது .இனி ஆத்மபாவச்த்த -கீதை -10 11- -என்னும் இடத்தில் போலே -மநோ வ்ருத்திக்கு-விஷயமாதலை கூறுவதாக கொள்ளலாகாதோ எனின் -புகுந்து என்னும் சொல்லமைப்புக்கு-அது ஒவ்வாதாதலினும் -புகுந்த உள்ளத்திலே கள்ளம் கலற்றுவதாக மேலே கூறுவதற்கு-ஏற்ப உடைத்தாய் இருத்தலாலும் -மனத்திற்கு கருத்து என்பதை ஆகுபெயராகக்-கொள்ளுதலே நேரியது -என்க .

நான் அவர் எழுந்து அருளி உள்ள இடத்திற்கு சென்று பிரார்த்தித்தேன் அல்லேன் –அவர் தாமாகவே வந்து -என்மனத்தில் புகுந்தார் .-புகுந்தால் இசையேன் என்கைக்கு இடம் இல்லாதபடி அறிவுக்கு வாய்த் தலையான-நெஞ்சிலே வந்து புகுந்தார் .-என் நெஞ்சைத் திருத்துவதற்கு நெடும் தொலைவில் இருந்தால் இயலாமல் போகும் என்று-நெஞ்சத்திலே வந்து புகுந்தார்-திருத்துவதற்கு அங்கேயே இருத்தல் தேவைப் படுதலின் குடியிருப்போர் அங்குள்ள-குப்பை கூழங்கள் ஆகிய குற்றங்களை அகற்றி விடுவது போலே -உள்ளத்தில் உள்ள-கள்ளம் கழலுமாறு செய்து அருளினார் .கள்ளமாவது -ஆத்மபஹாரம் .-யோன்யதாசந்த மாத்மானம் அந்யதா ப்ரதிபத்யதே கிம் தேன நக்ருதம் பாபம் சொரேனாத் மாபஹாரினா –எவன் வேறு விதமாய் இருக்கும் ஆத்மாவை வேறொரு விதமாக பார்க்கிறானோ –ஆத்மபஹாரம் பண்ணுமவனான அந்தத் திருடனாலே எந்தப் பாபம் செய்யப் படவில்லை -என்று-ஆத்மபஹாரம் களவாக கூறப்பட்டு இருத்தல் காண்க .எம்பெருமானுக்கே உரியதாய் -பர தத்ரமான ஆத்மாவை தனக்கு உரியதாய் -அதாவது-ஸ்வ தந்த்ரிமாக கொள்ளுதல் ஆத்மபஹாரம் எனப்படும் -அதுவே களவு -பிறர் பொருளைத்-தன்னதாகக் கருதுவது களவாகும் அன்றோ -அந்தத் திருட்டுப் புத்தியாகிய-சவா தந்திரப் புத்தியை போக்கடித்து அருளினார் எம்பெருமானார் -என்றபடி .-கருதரிய வருத்தத்தினால் ….ஆக்கிய பின்-களவிலே தகனேறின என்னை விட்டு -அடியோடு -களவு தொலையும்படி -செய்தது முதல்–திருமகள் கேள்வனுக்கு ஆளாக்குதல் ஈறாக -எனக்கு தெரியாமல் மறைத்து தாமே செய்து-முடிப்பது என்பது -எவ்வளவு செயற்கு அரிய செயல் ..வேறு எவர்க்கும் இது நெஞ்சாலும்-நினைத்துப் பார்க்க முடியாத செயல் அன்றோ -அத்தகைய செயலை செய்வதற்கு எவ்வளவு-பிரயாசப் பட்டு இருக்க வேண்டும் -என்கிறார் .

மிக வஞ்சித்து –எனக்கு தெரிந்து விடில் -என் காரியத்தை நானே கெடுத்துக் கொள்வேன் என்று –என் காரியம் முடியும் வரை யிலும் தொடர்ந்து எனக்கே மறைத்து  வந்தமையின் –மிக வஞ்சித்து -என்கிறார் .இந்த வஞ்சனை தாய் குழந்தையை வஞ்சிப்பது -போன்று-இவருக்கு நல்ல பயனை அளித்தலின் –குற்றம் அன்று -குணமேயாம் -என்க .

நீ திருத்தி -நான் திருந்துகைக்கு என் முயற்சியின்  கலப்பு சிறிதும் இன்றி -தானே முயன்று-தரிசு கிடந்த நிலத்தை பயிரிடத் தக்க நன் செய்யாக வழி தெரிந்தவர்கள் ஆக்குவதைப் போலே-என்னை பயனுறத்தக்க வகையில் திருத்தி .-இந்த மண்ணகத்தே திரு மகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் –இந்த உலகத்தில் -தேவரீருக்கு உத்தேச்யனான திரு மகள் கேள்வனுக்கு என்னை-ஆளாக்கிய பிறகு –திரு மகள் கேள்வன் -என்றமையின் -பட்டத்து அரசியான-பிராட்டியாரின் அந்தப் புரத்திலும் உபயோகப் படத் தக்க முறையில் அந்தரங்க கைங்கர்யம் செய்யும்படி ஆளாக்கினமை தோற்றுகிறது .

அச்சுதன் தீர்ந்த அடியவர்களை திருத்தி தனக்கு பணி கொள்ள வல்லவனானான் ./குருகூர் நம்பி தகுதி அற்றோரையும் நன்றாகத் திருத்தி தாம் பணி கொள்ள வல்லவரானார் ./எம்பெருமானார் அங்கனம் திருத்தி -தாம் பணி கொள்ளாது -திரு மகள் கேள்வனுக்கு ஆளாக்குகின்றார் .

தன் வாசி தெரியாது எதிரம்பு கோப்பாருள்ள இம்மண்ணகத்தே – தான் மாதரம் அன்றி-திருமகளும் தானுமாய் -திருமகள் கேள்வன் எழுந்து அருளி இருக்கிற போது -அவனிடத்தில்-பரிவுடையராய் -ஆளுமாளார் -திரு வாய் மொழி – 8-3 3- -என்றபடி -அவனைக் காப்பார்-யாரும் இலரே என்று அவனைப் பரிந்து நோக்கி -காப்பதற்காக -அவனுக்கு ஆளாக்குகின்றார்-எம்பெருமானார் என்னலுமாம் .இங்கு -அல்லாதவர்களைப் போலே கேட்கிறவர் களுடையவும்  –சொல்லுகிறவர்கள் உடையவும் தனிமையைத் தவிர்க்கை யன்றிக்கே –ஆளுமாளார் -என்கிறவனுடைய-தனிமையை தவிர்க்கைக்காக யாயிற்று பாஷ்ய காரரும் இவரும் உபதேசிப்பது -ஸ்ரீ வசன பூஷணம் – 255- –என்னும் பிள்ளை உலகாசிரியர் ஸ்ரீ சூக்தி அனுசந்திக்கத் தக்கது .

இனி –இந்த மண்ணகத்தே -என்பது -திரு மகள் கேள்வனுக்கு -என்பதோடு இயையாமல்-திருத்தி -என்பதோடு இயைதலுமாம் .அப்பொழுது இவ் இருள் தரும்  மா ஞாலத்திலே-திருத்துதலில் உள்ள அருமை தோற்றுகிறது .-என் நெஞ்சில் –பொய்ப் பொருள்-என் நெஞ்சில் -திருத்தப் பட என் நெஞ்சில்-பொய்ப் பொருள் பொருத்தப் படாது-மெய்ப் பொருள் புக்க இடத்தே பொய்ப் பொருள் வலியப் புகுத்திடினும் பொருந்தி நிற்க-மாட்டாது அன்றோ

மெய்ப் பொருள் -ஜீவாத்மா திரு மகளுக்கும் அவள் கேள்வனுக்குமே உரியதாய் இருத்தல் -பொய்ப் பொருளான ஜீவாத்மா பரப்ரம ஐக்யமடைதல்  -அது தனக்கு உரிய ஸ்வ தந்திரப் பொருளாய் இருத்தல் -பிரரான தேவர்களுக்கு உரியதாய் இருத்தல் -போல்வன-மற்று ஓர் பொய்ப் பொருள்-எம் குருவான ராமானுசன் உபதேசித்த சேஷத்வமே மெய்ப் பொருள் .-அவர் உபதேசிக்காத ஒவ் ஒரு பொருளும் பொய்ப் பொருள் -என்றபடி .இனி மற்றோர் -உடைய பொய்ப் பொருள் என்று உரைத்தலுமாம்

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால்  ஜல்பித்தது –
தம்மை திருத்த ஸ்வாமி பண்ணிய -உபகாரங்களை அனுசந்த்திது -அவர் பட்ட வருத்தங்களை சொல்லி-அருளுகிறார்

வேறு பொய் பொருளுக்கு இடம் இல்லை நீ புகுந்த பின்பு

வஞ்சனை -தீய செயல் இல்லை //இந்த மண்  அகத்தே -இருள் தரும் மா ஞானத்திலே-அங்கே இருந்து ஸ்ரீ யபதிக்கு ஆட் படுத்தினார் /-திரு மகள் கேள்வனுக்கு ஆக்கிய பின்பு – /மற்று ஒருவர் உடைய பொய் பொருளுக்கு இடம் இல்லை ../கள்ளம் ஆத்மா அபகாரம்-கழற்றி –நாஸ்திகன்-ஆஸ்திகன் -பாகவதன் -பக்தன்-பரம பக்தன்-அடியார்க்கு ஆட் பட்டவன்-கருத்து அரிய வருத்தம்-பிரயத்தனம்-செயல்//நேராக வராமல்-மிக  வஞ்சித்து -விலக்காமை

-பிரஜையை தாய் முதுகில் அணைத்து–குழந்தைக்கு ஊட்டும் பொழுது இதோ கடைசி வாய் என்று சொல்லோ ஊட்டுவது போல-நெடும் கை நீட்டாகா இருக்கில் இவன் நெஞ்சை திருத்த போகாது என்று நெஞ்சு தன்னில் வந்து புகுந்து–ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ பெரும் புதூர் தம் மடம்  இன்றி வலது  கையாக  இருந்த ஆழ்வானை இவர் மாளிகைக்கு அனுப்பி ஆட் கொண்டதை//கருத்தில் புகுந்து –ஆத்மா பாவ சக -நினைவில் இருந்து கொண்டு-அஞ்ஞானம் இருட்டை போக்கடிகிறார் –அது கீதாசார்யன்– இங்கு கருத்தில் இருப்பது இல்லை கருத்துக்கு வூற்று  வாய் இருக்கிற -நெஞ்சில்  புகுந்து-உள்ளில் கள்ளம் கழற்ற -குடி இருக்கும் அவர்கள் செடி அறுக்குமா போல-,உள் உண்டான ஆத்மா அபகாரத்தை-இது தான் நம் கள்ள தனம்-சேவை சாதிக்காமல் மறைப்பது அவனின் கள்ள தனம்-தனியாக பகவானை அனுபவித்தால் அடியார் கள்ள தனம் /-அபேஷா நிரபேஷகமாக புகுந்தால் விலக்காமைக்கு வூற்று வாயில் இருந்தான்

அறியில் செய்த கிருஷி தன்னையும் அழித்து கொள்வேன் என்று மிகவும் மறைத்து-தன்னை தானே இறே முடிப்பான்–நாம் தேடி கொண்டால் நன்மையையும் தீமை ஆகும்—தேவரீர் தாம் அறிந்ததாக யத்நித்து தரிசு கிடந்த தரையை செய் காலாம் படி திரு த்துவாரை போல-இந்த லோகத்திலே தேவரீருக்கு உத்தேச்ய விஷயமான -அடியேனுக்கு விஷயமான அன்று–ஸ்ரீயபதிக்கு  அந்தபுர விநியோகத்துக்கு ஆளாம் படி பண்ணிய பின்பு-வடக்கு வாசலில் கைங்கர்யம் பண்ண—இப் படி தேவரீர் திருத்த திருந்தின என் மனசிலே தேவரீர் அறிவித்த யதார்த்தம் ஒழிய-அதுக்கு புறம்பாய் இருப்பதொரு அயதார்த்தம்   வலிய  பொருத்திலும் பொருந்தாது /

/இந்த மண் அகத்தே திருத்தி-என்று பொருள் கொண்டு-இருள் தரும் மா ஞாலத்திலே திருத்துகை-அருமை-இம் மண் அகத்தே திரு மகள் கேள்வனுக்கு ஆக்கி-என்றும் கூட்டி பொருள் கொண்டு/சிந்தை -என்னுமா போல ஆகு பெயர் கருத்து -மனசை சொல்லும் பொருத்துதல்-இசைத்தல்/வருத்தம்-ஆயாசம் /நாட்டில் பிறந்து மனிசர்க்காய் படாதன பட்டு-//என்னை தீ மனம் கெடுத்தாய் மருவி தொழும் மனமே தந்தாய்

//எனக்கே ஆட் செய்  எக் காலத்தும் என்று-ஆட் செய்/ச்வாதந்த்ர்யம் போனது-எனக்கு -உனக்கும் பிறர்க்கும்- எனக்கே -ஆட் செய்–இன்று -நேற்று மட்டும் இல்லை -எக் காலத்தும்-மனக்கே வந்து-இங்கேயே இருந்து – இடை வீடு இன்றி மன்னி-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே/வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததற் பின் வணங்கும் சிந்தை க்கு இனியாய்/எந்தாய் போய்  அறியாய் இதுவே அமையாதோ-

அருகில் வந்து புகுந்தான் பெற்ற பாவிக்கு விட போகாது-அஞ்ஞான-  ஒன்றும் தெரியாத-அன்யதாஞ்ஞான-குணம் மாறி-விபரீத ஞானம் -பொருளை மாற்றி-.மூன்றையும் வாசனை உடன் ஒழித்து/பிறர் நன் பொருள் தன்னையும் நம்பினேன்-போல ஆத்மா அபகாரம் தோஷம் போக்கி /

/கருத்தில் புகுந்து– நினைவுக்கு விஷயம் மட்டும் ஆகி ஒதுங்காமல் புகுந்தான்  மனசில்/அரிய -ராமனுக்கும்- கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் -இங்கு கண்ணனை சொல்வது போல/அமுதனார்-பகவத் கைங்கர்யம் இருந்தார் அரங்கன் திருத்த வில்லை ஸ்வாமி பண்ணினாரே/இரா மடம் வூட்டுவாரை போல- மிக வஞ்சித்து-அறியா காலத்து  உள்ளே அடிமை கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயில்//சம்சாரத்த்தில் வைத்தாயே-வருத்த பாசுரம்-திரு மாலை ஆண்டான் நிர்வாகம்/ யான் யார் எனது ஆவி யார் ஆனந்தமாக  மேலே பாடுகிறார்-.கீழும் ஆனந்தம் -பிரகரணத்து ஒத்து ஸ்வாமி அர்த்தம் அருள -.அறியா மா மாயத்து அடியேனை அடிமை கண் அன்பு செய்வித்து வைத்தாயில்/மாவலி மூவடி- இதையும் சொல்லி மாபலியை வஞ்சித்து சேர்த்து அருளினார்//திருத்துகை சேஷி – சேஷ பாவம் நெஞ்சில் படிய வைத்தது /இன்று என்னை பொருளாக்கி -அன்று புறம் போக வைத்தான்-என் என்று ஆழ்வார் கேட்க பதில் கூட முடியாமல்-பட்டர்-நஞ்சீயர்- புது பெண்  போல காலை கீறி நின்றான்-சர்வேஸ்வரன் -அச்சுதன் தீர்ந்த அடியவரை திருத்தி தனக்கு கொள்வான்-பயன்  அன்றா ஆகிலும் பாங்கு அல்லார் ஆகிலும் செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்தனக்கு / ஸ்வாமி திரு மகள் கேள்வனுக்கு ஆக்கி- ஆளும்  ஆளார் -என்னும்  படி உபதேசித்து திருத்தி-பாஷ்ய காரர்  அரங்கனுக்கு  ஆக்கி கொடுத்தார் //ஆழியும் சங்கும் சுமப்பார்யார்/உனக்கு தனிமை தீர்க்க ஆழ்வார் -சொல்ல ஸ்வாமி என்னை திருத்தி தலை கட்டி  கொடுத்தார்//எம் ராமானுச-அஸ்மத்  குரு- உபகரித்த படியால் அறியா காலத்து அறிவித்தாயால்//பொய்  பொருள்கள்-ஐக்ய ஞானம்/ ச்வதந்த்ரன் /தேவதாந்திர சேஷன் போல்வன// வலிய பொருந்தினாலும் இசையாது இவை //ஞானம் புக்கும் இடத்தில் -சூர்யன் வந்தால் இருள் விலகும் போல-அஞ்ஞானம் புக வழி இல்லை //கருத்தில் புகுந்தார்-வாத்சல்யம்உள்ளில் கள்ளம் கழன்றார்-கருதரிய வருத்தத்தினால்-மிக வஞ்சித்துநீயே திருத்தி இந்த மண் அகத்தே -அபரிமித சர்வ சக்தி காட்டினார்–

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: