அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–77-ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

எழுபத்து ஏழாம் பாட்டு -அவதாரிகை

தாம் அபேஷித்த படியே திருவடிகளை கொடுத்து அருளப் பெற்று க்ருத்தார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து -இவை எல்லாம் செய்த பின்பு-இனிச் செய்வதாக நினைத்து அருளுவது ஏதோ ?–என்கிறார்-

ஈந்தனன் ஈயாத இன்னருள் எண்ணில் மறைக் குறும்பைப்
பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் இப்படியனைத்தும்
ஏய்ந்தனன் கீர்த்தியினால் என் வினைகளை வேர் பறியக்
காய்ந்தனன் வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே – 77 –

வியாக்யானம் –

1-இதுக்கு முன்பு   ஒருவர்க்கும் உபகரியாத விலஷணமான அருளை எனக்கு உபகரித்தார் –2-.எண்ணிறைந்த மறைக் குறும்புண்டு-வேதத்தை மூலையடியே நடத்துகிற குத்ருஷ்டி மதங்கள்–அவற்றை அந்த வேத ப்ரதிபாத்யமான அநேக அர்த்தங்களைக் கொண்டு தள்ளி விட்டார் –3-.-இந்த பூமி எல்லாம் கீர்த்தியாலே வ்யாப்தர் ஆனார் .-4-என்னுடைய கர்மங்களை வாசனையோடு போம் படி ஓட்டினார் –பரம ஔதாரரான எம்பெருமானார்க்கு இனித் தம் திரு உள்ளத்தில் ஓடுகிறது எது ?-இன்னும் செய்யத் தக்கது உண்டோ ?-என்று கருத்து .

ஏய்ந்த வண் கீர்த்தியினால் -என்று பாடமான போது -பூமி எங்கும் பொருந்தப் பட்டுள்ள தம்முடைய விலஷணையான குணவத்தா ப்ரதையாலே-என் கர்மங்களைப் போக்கினார் -என்கை- .அதாவது -இவரோடு அந்வயம் உடையவன் அன்றோ இவன் என்று கர்மம் தானே விட்டுப் போகை –

பாய்தல்-உதைத்தல் -அதாவது -தள்ளுதல்

எய்தல்-பொருந்துதல் –

காய்தல்-கடிதல் .–

அவன் அருள் -ஸ்வாமி இன்னருள் –/ எண்ணில் மறை -எண்ணில் குறும்பு –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை -கீழ் பாட்டிலே எம்பெருமானாரை குறித்து -தேவரீருடைய திருவடிகளை சர்வதா அனுபவித்துக்
கொண்டு இருக்கும் படி எனக்கு தந்து அருள வேணும் -என்ன -அவரும் உகந்து அருளி-தாம் அபேஷித்த படியே
விலஷணமான கிருபையை பண்ணி -திருவடிகளைக் கொடுக்க -அவரும் க்ர்த்தார்த்தராய் -வேத பிரதாரகரான
குதர்ஷ்டிகளை பிரமாண தமமான அந்த வேதார்த்தங்களைக் கொண்டே நிரசித்தும் -பூமிப் பரப்பு எல்லாம்
தம்முடைய கீர்த்தியை எங்கும் ஒக்க வியாபித்தும் -என்னுடைய ப்ராப்தி பிரதிபந்தக கர்மங்களை வாசனையோடு
ஒட்டியும் –இப்படி பரமோதாரரான எம்பெருமானார் எனக்கு இன்னமும் எத்தை உபகரித்து அருள வேணும் என்று
நினைத்து இருக்கிறார் -என்கிறார் –
வியாக்யானம் -ஈந்தனன் ஈயாத இன்னருள் -ஈயாத -மந்த்ரம் யத்நேன கோபயேத் -என்றால் போல்
அஹங்கார யுக்தாஸ் சைமே -என்று சொல்லப்படுகிற ஹர விரிஞ்சாதிகளுக்கும்    கூட கொடுக்க ஒண்ணாத படி
பேணிக் கொண்டு போந்த –இன்னருள் -விலஷணையான தம்முடைய கிருபையை -நிர்ஹேதுக பரம-கிருபையை -என்றபடி –ஈந்தனன் -கொடுத்தார் -கீழ்ப் பாட்டில் இவர் -தேவரீர் திருவடிகளைக்
கொடுத்து அருள வேணும் என்று பிரார்த்தித்த படியே -அவர் கொடுக்கையாலே அதுக்கு மூலம் –
அவருடைய கிருபா குணம் என்று அனுசந்தித்து –இன்னருள் -என்று -அத்தை கொண்டாடுகிறார் காணும் –
ஈந்தனன் -ஈன்றனன்   –இன்னருள் சர்வேஸ்வரனுடைய அருளையும் -இவருடைய அருளையும் சேரப் பிடித்து –
பார்க்கும் அளவில் இவருடைய அருளுக்கு உண்டான தன்னேற்றம் வடிவிலே தொடை கொள்ளலாம் படி
காணும் இதனுடைய போக்யதை இருப்பது -ஆஸ்ரயத்துக்கு தகுதியாய் இறே அதினுடைய குணங்கள் இருப்பது –
எண்ணில் மறைக் குறும்பை பாய்ந்தனன் அம்மறைப் பல் பொருளால் -எண்ணிறைந்த மறைக் குறும்புண்டு –
வேதத்தை மூலையடியே நடத்தக் கடவ குதர்ஸ்ர்டி மதங்கள் –தொகையில் இட்டு சொல்ல ஒண்ணாதபடி
அசந்க்யேயராய் -வேதப் பிரதாரகராய்  ப்ரமித பிரமாண ப்ரமேய பிரமாத்ர் ஸ்வ ரூபராய் இருந்துள்ள
குதர்ஷ்டி மத நிஷ்டராய் என்றபடி -அநந்தா வை வேதா –  என்கையாலே எண்ணிறந்த மறை என்று யோஜிக்கவுமாம் –

அம் மறைப் பொருளால் -ஸ்ருதிகளுக்கு -சுத்த அபேத பிரதிபாதனமே பொருள் என்று குறும்பு சொல்லுகிற அந்த குத்ர்ஷ்டி மதநிஷ்டரை அடங்கலும் -அகிஞ்ச்சித்ஜ்ஞனாய் கர்ம வச்யனான சேதனனுக்கும் -சர்வஜ்ஞ்ஞனாய் அகர்ம வச்யனான – ஈஸ்வரனுக்கும் ஸ்வரூப ஐக்ய பிரதிபாதாகநத்தாலே அவற்றுக்கு தாத்பர்யம் சொல்ல ஒண்ணாமையாலே -விசிஷ்ட ஐக்யமே அவற்றினுடைய தாத்பர்ய விஷயீ பூதார்த்தம் என்று ஸ்வரூப ஐக்ய பிரதிபாதகனத்துக்கு -அத்யந்த பிரதி கூலங்களாயும் -விசிஷ்ட ஐக்ய பிரதிபாதாக நத்துக்கு அத்யந்த அனுகூலங்களாயும் -இருந்துள்ள -போக்தா போக்யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா – என்றும் – த்வா ஸூபர்ணா ஸ யுஜா ஸ  காயா சமானம் வர்ஷம் ப்ரிஷஸ் வஜாதே -தயோ ரக்ய பிப்பலம் சாத்வத்தி அனஸ் நன் நன்யோ அபிசாக சீதி -என்றும் -இமான் லோகன் காமான் நீ காம ரூப்ய நு சஞ்சான்-ஏதத் சாம காயான் நாஸ்தே -என்றும் -யஸ் யாத்மா சரீரம்  யஸ்ய பர்த்வீ சரீரம் -என்றும் -இத்யாதி பேத சுருதிகளையும்கடக சுருதிகளையும் உபன்யசித்தும் பஹூ முகமாக ப்ரசங்கித்தும் அந்த ஸ்ருதிகளுடைய தாத்பர்யன்களைக்-கொண்டு தானே பாய்ந்தனன் -அந்த ஸ்தலத்தில் நின்றும் பலாயனம் பண்ணுவித்தார் –பாய்தல் -உதைத்தல் –

ததன்ய மத துர்ம் தஜ்வலித சேத சாம்வாதி நாம் சிரஸ் ஸூ நிஹிதம் மயாபத மதஷிணம் லஷ்யதாம் -என்கிறபடியே
அச் செயல்கள் எல்லாம் அவருடைய சம்பந்திகளுக்கு கூட உண்டாக கடவன ஆகையாலே அவருக்கு உண்டாக
சொல்ல வேண்டா இறே -இப்படி அனைத்தும்  ஏய்ந்தனன்கீர்த்தியினால் -இந்தபூமிப் பரப்பு எல்லாம் கட்டடங்க
தம்முடைய குணவத்தா பிரதையாலே ஆக்கிரமித்தார் –ஏய்தல்-பொருந்துதல் –  தம்முடைய நியமனத்தை சிரசா வகிக்கும்படி
வ்யாபித்தார் என்றபடி –என் வினைகள் வேர் பறிய காய்ந்தனன் -அநாதி காலமே தொடங்கி எம்பெருமானார் உடைய
விஷயீ கார பாத்திர பூதனான அளவும் -நான்தீர கழிய செய்த அக்ர்த்ய கரணாதிகளை  சமூலோன் மூலனம் பண்ணி
நிவர்ப்பித்தார் –காய்தல் -கடிதல் -வேர் கிடந்தால் திரியட்டும் அங்கு உரிக்கும் என்னும் அதி சங்கையால் அத்தோடு கூட
அவற்றைப் பிடுங்கிப் போட்டார் என்றபடி -இவற்றிலே இந்த செடி சில நாள் இருந்து போய்த்து என்று தெரியாதபடி

பண்ணினார் என்று வித்தர் ஆகிறார் காணும் –

சும்மனாதே கை விட்டோடி தூறுகள் பாய்ந்தனவே -என்றும் வானோ மறிகடலோ மாருதமோ
தீயகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்றும் சொல்லுகிறபடியே பண்ணி அருளினார் என்றபடி –
இப்படி யனைத்தும் மேய்ந்த வண்  கீர்தியினார் -என்ற பாடம் ஆன போது -பூமியிலே எங்கும் ஒக்க வியாபித்து
நிற்பதாய் சகல புருஷார்த்த ப்ரதத்வ ரூப ஔதார்யத்தை உடைய கீர்த்தியாலே  என்னுடைய துஷ் கர்மங்களை
வாசனையோடு ஓட்டினார் என்று பொருளாக கடவது -அதாவது இவரோடு அந்வயம் உடையான் ஒருவன் அன்றோ-
இவன் என்று துஷ் கர்மங்கள் எல்லாம் தன்னடையே விட்டுப் போகை -வண்மை இராமானுசற்கு என் கருத்து இனியே –
இப்படிப்பட்ட பரம உதாரரான எம்பெருமானாருக்கு இன்னும் தம் திரு உள்ளத்தில் ஓடுகிறது ஏதோ -அடியேனுக்கு
இன்னம் எந்த விசேஷார்த்தத்தை கொடுப்பதாக நினைப்பிட்டு இருக்கிறீரோ -அவரைப் பார்த்தால் இன்னம் சில
எனக்கு கொடுக்க வேணும் என்று நினைத்து கொண்டு இருக்கிறாப் போலே இருக்கிறது காணும் என்று
வித்தர் ஆகிறார் –உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்னும்படி ஆய்த்து –
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை –

கோரிய படி திருவருளை ஈந்து அருள -அவைகளைப் பெற்று க்ருதார்த்தராய் -அவர் செய்த உபகாரங்களை அனுசந்தித்து -இவை எல்லாம் செய்த பின்பு இனிச் செய்யப் போவது ஏதோ -என்கிறார் .

பத உரை .

ஈயாத -இதற்க்கு முன் எவர்க்கும் கொடுத்திடாத
இனி அருள் -இனிய திருவருளை
ஈந்தனன் -எனக்கு கொடுத்து அருளினார்
எண் இல் -எண்ணிக்கை இல்லாத
மறை குறும்பை -வேதத்தை தம் இஷ்டப் படி பொருள் கூறும் குறும்புத் தனம் வாய்ந்த மதங்களை
அம்மறைப் பல் பொருளால் -அந்த வேதம் கூறும் பல நேரிய பொருள்களைக் கொண்டு
பாய்ந்தனன் -உதைத்து தள்ளி விட்டார்
இப்படி அனைத்தும் -இந்த பூமி முழுவதும்
கீர்த்தியினால் –இசையினால்
ஏய்ந்தனன் -பொருந்தினார் -பரவி நின்றார்
என் வினைகளை -என்னுடைய கர்மங்களை
வேர் பறிய-வேர் போன்ற வாசனை போம் படி யாக
காய்ந்தனன் -போக்கடித்தார்
வண்மை இராமானுசர்க்கு -வள்ளன்மை வாய்ந்த எம்பெருமானார்க்கு
இனி -இதற்கு மேல்
கருத்து என் -திரு உள்ளத்தில் நினைப்பு எது ?
இன்னும் செய்யத் தக்கது உண்டோ ? என்பது கருத்து .

வியாக்யானம் –

ஈந்தனன் ஈயாத இன்னருள் -இது காறும் வேறு யாருக்கும்கிடைக்காத இன்னருள் -தமக்கு கிடத்தமையின் ஈயாத இன்னருள் ஈந்தனன்-என்கிறார் .எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததால் -திருவாய் மொழி -2 7-5 – – என்று-நம் ஆழ்வார் கூறியது போலே இவரும் கூறுகிறார் .இவர் இங்கனம் கூறுவது எம்பெருமானார் தம் இணை மலர்த்தாள் தமக்கு தந்தமையை –பரி பூரணமாக அருளுவது திருவடிகளை கொடுத்தே போலும் -செழும் பறவை தானேறி திரிவான தாளிணை என் தலை மேலே –திருவாய் மொழி- 10-6 5- -திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் -பெரியாழ்வார் திருமொழி – 5-4 7- -என்பன காண்க

இனி தனக்கு கிடைத்த இன்னருளை பிறருக்கு தான் கொடுக்க ஒண்ணாதபடி -முழுதும் தானே துய்க்கலாம் படியான சீர்மை வாய்ந்து இருப்பதாகக் கண்டு –ஈயாத இன்னருள் -என்கிறார் ஆகவுமாம்-தாரேன் பிறர்க்கு உன்னருள் என்னுடை வைத்தாய்-ஆரேனதுவே பருகிக் களிக்கின்றேன் -பெரிய திருமொழி – 7-1 3-என்னும் திரு மங்கை மன்னன் திவ்ய சூக்தி இங்கு அனுசந்திகத் தக்கது .

எண்ணில் அம்மறைப் பல் பொருளால் -கட்டுக் கடங்காது தமக்குத் தோன்றின படி -எல்லாம் திரிதல் –குறும்பு -எனப்படும் .மறைக்குறும்பாவது-வேதத்தின் பொருளைச் சொற்களின் பகுதி விகுதிகளை பிரித்துக் காட்டும்-வியாகரணதிற்கும்  – சம்பந்தத்தை உணர்த்தும் பல சொற்களின் தொகுப்பாகிய வாக்கியத்திற்கும் –முன்பின் இடங்களுக்கு ஏற்ப அமையும் பிரகரணதிற்கும் -சொல் அமைந்து இருக்கும்-இடத்திற்கும் பெயருக்கும் ஏற்ப கட்டுப்பட்டு பொருள் கொள்ளாது -தங்கள் நெஞ்சில் தோன்றினதையே-மறையின் பொருளாக ஆக்குவது மறைக் குறும்பாகும் .இதனால் வேதத்திற்கு அவப் பொருள்களை-தம் தமக்கு தோன்றினவாறே கூறும் குத்ருஷ்டி மதங்கள் கருதப் படுகின்றன .–அவை பலவாதலின் -எண்ணில் குறும்பு -என்கிறார் .

எண்ணில்லாமை மறைக்கு அடையாகவுமாம்.-இங்கு மறை என்னும் சொல்லை வழங்கியது குறிப்பிடத் தக்கது .-இறைவன் பால் பக்தி உணர்வு இல்லாதாருக்கு தம் பொருளைக் காட்டாது மறைப்பது பற்றி-வேதத்திற்கு இப்பெயர் வந்தது .பக்தி உணர்வு அற்ற மற்றவர்கள் மெய்ப்பொருள் காணாது-தம் தமக்கு தோற்றும் அவப்போருள்கள் கூறி இடர்ப்படுவதற்கு இதுவே காரணம் என்று உணர்க .-எந்த மறைக்குக் குத்ருஷ்டிகள் அவப்பொருள்கள் கூறினரோ-அந்த மறைக்கே மெய்ப்பொருள்கள்-கூறி அவற்றின் பலத்தினாலே அந்தக் குத்ருஷ்டிகளை உதைத்து தள்ளி விட்டார் எம்பெருமானார் .

எண்ணிறந்த குறும்புகள் பல் பொருளால் தள்ளப்பட்டன .-வேதத்தில் கூறப்படும் பல பல மெய்ப் பொருள்களால் பல குத்ருஷ்டி மதங்களைத்-தள்ளி -வேதத்தின் உட் பொருள் நெஞ்சுள் நிற்கும் படி தமக்கு எம்பெருமானார் உபகரித்த படியை-அமுதனார் இங்கே அனுசந்திக்கிறார் என்று அறிக .

பாய்தல் -உதைத்தல்  / இப்படி அனைத்தும் ஏய்ந்தனன் கீர்த்தியினால் -/ இப்பார் முழுதும் போர்த்தனன்  புகழ் கொண்டு -என்றார் கீழும் /ஏய்தல்-பொருந்துதல்

படி அனைத்தும் ஏய்தல் -பூமி எங்கும் வியாபித்தல் /கீர்த்தி -ஈதலினால் வந்த புகழ்வண்மை இராமானுசன் -என்று ஸ்வாமியைக் குறிப்படுவதும் காண்க .தமக்கு புரிந்த உபகாரன்களைப் பேசும் போது இப்படி யனைத்தும் கீர்த்தியினால் ஈய்ந்தமைகூறுவது எங்கனம் பொருந்தும் ?இஃது இவருக்கு செய்த உபகாரமோ -எண்ணில்எங்கோ கிடந்தது உழலும் என்னைத்தன் மகிமையை உணரச் செய்து –தன்னருளுக்கு இலக்கு ஆக்குவதற்கு என்றே கீர்த்தியினால் யேய்ந்ததாக கருதிஅமுதனார் இங்கனம் கூறுவது பொருந்தும் -என்க.

தான் கீர்த்தி பெற்று சிறப்புற வேணும் எண்ணம் எம்பெருமானாருக்கு இல்லை .-அமுதனார் போல்வார் அதனால் உய்வு பெற வேண்டும் என்பதே அவரது விருப்பம்என்று உணர்க .–காரண கார்ய பாவம் என்றவாறு –

என் வினைகளை வேர் பறியக் காய்ந்தனன் -கீர்த்தியினால் ஏய்ந்ததன் பயன் இதனால் கூறப்படுகிறது .-வினைகள்-புண்ணிய பாப ரூபமான கர்மங்கள் .-என் வினைகள் –பிறர் உடையவர்களாய் என்னிடம் வந்தேறினவைகள் அல்ல .-நானே செய்து என்னிடம் வேரூன்றினவைகள் .-வினைகளுக்கு வேராவன வாசனைகள்  .அவை அறவே போகும்படியாக வினைகளை ஓட்டினார் -வேர் பறிபோகவே மீண்டும் வினைகள் தலை தூக்க வழி இல்லை யாயிற்று –அமுதனார் தாமாகப் போக்கிக் கொள்ளில் அன்றோ -வாசனை-ருசிகள்-ஒட்டிக் கொண்டு-கிடந்தது மீண்டும் வினைகள் தலை தூக்க இயலும் .கருமமும் கரும பலனுமாகிய   காரணன் தன்னைக் காயப்படுத்தி வைத்து இருப்பவர்ஆகையாலே -வினைகளை வேர் பறியக் காயும் திறமை எம்பெருமானாருக்கு உண்டு என்க .-இனி ஏய்ந்த வண்  கீர்த்தியினால் -என்று பாடமான போது-இப்பூமி எங்கும் பொருந்திய அழகிய கீர்த்தியினால் என்வினைகளை ஓட்டினார்என்று பொருள் கொள்ளல் வேண்டும் .கீர்த்தியினால் வினைகளை ஒட்டுதலாவது -நற்குணம் வாய்ந்தவர் என்று பேர் பெற்ற எம்பெருமானாருடைய தொடர்பு உடமையை-நாடறியவே-பாபத்திற்கு கடவரான நமன் தமரும் -புண்ணியத்திற்கு கடவரான தேவர்களும்-குறுகப் பெறாது விலகுமாறு -கன்மங்கள் தாமே வலுக்குன்றி ஒழிதலாம்-வண்மை இராமானுசற்கு என்கருத்து இனியே –வள்ளலாகிய எம்பெருமானார் இவ்வளவு உபகரித்ததோடு அமையாமல் மேலும்உதவுதற்கு முற்படுகிறார் -இவ்வளவுக்கு மேலும் உதவுதற்கு என்ன தான் இருக்கிறதோ – என்றபடி .என்னை முற்றுமுயிர் உண்டு …இன்னம் போவேனோ கொலோ என் கொல் அம்மான் திருவருளே -திருவாய் மொழி – 10-7 3- – என்னும் நம் ஆழ்வார் ஸ்ரீ சூக்தியையும் –நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக் குறிப்பே –பெரியாழ்வார் திரு மொழி 5-4 1-என்னும்பெரியாழ்வார் ஸ்ரீ சூக்தியையும் இங்கு ஒப்பு நோக்குக .

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது –
–யாருமுமே கொடுக்காத அருளை கொடுத்தான் –
/ எண்ணில் மறை குரும்பை -குதிருஷ்டிகள்- தன் நெஞ்சில் – இன்னருள் -/ எண்ணில் மறை -எண்ணில் குறும்பு -தோற்றினதை சொல்லுபவர்கள்–அந்த மறை பொருளால்  -அதை கொண்டே -சாடினான்/உலகு முழுவதும் வ்யாபித்தார் தம் கீர்த்தியினால்/
என் வினைகளை போக்கினார்–ஆக நான்கு உபகாரங்கள்
–மேலும் என்ன பண்ணுவார் அவர் தான் அறிவார்/
 கங்குலும் பகலும் -இவள் திறத்து என் செய்கின்றாய்
-கிலேசத்தில் பிரார்த்தனை அங்கு– இங்கு பெற்ற ஆனந்தத்தில் பாடுகிறார்
-சரம பர்வதம்- பிரார்த்திக்கிறார்செய்து அருளுவதாக நினைத்து அருளுவார்-இரண்டும் அருள்
/ /கொடுக்க போவதும் யான் அறியேன் அறியாமலே பெற்ற உபகாரம்  நினைத்து /
/இதற்க்கு முன் ஒருவருக்கும் உபகரியாத விலஷனமான அருளை-
 ஆழ்வான் திரு வடிகளை அருளி-இதனாலே இன் அருள்–
ஈயாத -நிர்கேதுகம் பரம கிருபை
இன் அருள்-பிரார்த்திக்காமல் பெற்றது

எனக்கே அருள் செய்ய விதி வாய்கின்ற்றது-ஆழ்வார்-பிரம்மா சிவன் கூட கிட்டாத இன் அருள்-மோஷ பிரத்வம் சுவாமி தானே அருளுவார்-சர்வேச்வரனின் அருளையும் சுவாமி அருளையும் ஒப்பு நோக்கினால் -தன் யேற்றம் இதற்க்கு-வடிவிலே தொடை கொள்ளலாம் படி/ கை கூப்பின பாரதந்த்ர்யம் சேஷத்வமே சொரூபம் /போக்யத்வமும் உண்டு-அபய  ஹச்தமே இருந்தாலும் வினைகளை நோக்கி பயமே மிஞ்சி இருக்கும்-ஈயாத -நானே அனுபவிக்க –பகிர்ந்து கொள்ள முடியாத இன் அருள்..செழும் பறவை தான் ஏறி ..என் தலை மீது /தாரேன் பிறர்க்கு உன் அருள் என் இடை வைத்தாய் -கலியன் //திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்-படிக்கு அணியாய் நிமிர்த்த பாத பங்கயமே தலைக்கு அணியாய்/நின் செம் மா பாதம் -எம்மா  வீட்டில் எம்மா வீடு பாசுரம்-/வீடு- செப்பம் மா வீடு -செப்போம் எம்மா வீடும் திறமும்  செப்போம்//உமக்காக  பெற்று கொள் -என்றால் த்யாஜ்யம் / உனக்காக கொடுத்தால் -உன் ஆனந்தத்துக்கு நரகம் கொடு கொள்வோம்-என் ஆனந்தத்துக்கு மோஷமும் வேண்டாம் -இடை ஆட்டமும் வேண்டாம் =பிரஸ்தாபிக்க கூட வேண்டாம்-நின்-செம் மா பாத பற்பு என்   தலை சேர்த்து ஒல்லை- சடக்கு  என்று –இன்று இப் பொழுதே கைம்மா துன்பம் கடிந்த பிரானே- பண்ணினாயே யானைக்கு – முன்பு-பிரான் -உபகாரன்- அம்மா -சொல்லுக்கு நிகர் வேற இல்லை/அடியேன் -நிர்பந்தம் இல்லை வேண்டுவது-ஈதே -வேற  ஒன்றை கேட்க மாட்டேன்–எம்மா வீடும் வேண்டேன் –மாறன் மலர் தாள் சூட/எண் நிறைந்த மறை குறும்பு உண்டு -வேதத்தை மூலை  அடியே நடத்துகிற குத்ருஷ்ட்டி மதங்கள்ப-ரப் பிரம்மத்துக்கே  அஞ்ஞானம் சொல்பவர்கள்

/பிரமித்த பிரமாண பிரமேய பிரமாத -ஒவ் ஒன்றிலும் பல கூட்டங்கள்/எண்ணில் மறை -என்றும் /எண்ணில் குதிருஷ்டிகள் என்றும் கொண்டு/

/மறை– வேதம் என்று சொல்லவில்லை மறைத்து இருந்ததால் குதிருஷ்டிகள்/ பக்தி இல்லாதவர்கள்/பக்தி மறைந்ததால் குதிருஷ்டிகள் ஆனார்கள்

அவர் அவர் தமதமது அறிவு வகை-என் நிறைந்த மாயா வாதிகள்
–நடு முத்தத்தில் வைத்து வணங்காமல்–அவற்றை அந்த வேத பிரதி பத்திமான அநேக அர்த்தங்களை கொண்டு-பல் பொருள்-கொண்டு- தள்ளி விட்டார்
பிரமாணம்–பிரமாண தரம்– பிரம்மாண தமம் – வேதமே /

சப்தத்திலோ வாக்கியம் பத்தி  பிரகரணம் -சேர விடாமல்//மகா வாக்யங்கள் –சர்வம் கலு இதம் பிரம்மா /ஏகமேவ அத்வீதீயம் அக்ரா ஆஸீத் /தத்வமசி தத் துவம் அசி /போல்வன-சுத்த அபேதம்-பிரம்மா சத்யம் ஜகம் மித்ய ந அபர-/பராசரர் இப்படி சொல்பவர்களே மாயாவாதிகள் என்றார்-/சரீர ஆத்மா பாவத்தாலே  ஓன்று/பேர் ஆத்மாவுக்கு இல்லை ஞானம் சரீரத்து இல்லை

//போக்தாபோக்கியம் பிரேரிதா -தூண்டுபவர்/மரம்-அசீத் இரண்டு பறவை- //எத் ஆத்மா சரீரம் எத் ப்ரித்வி சரீரம் -பேத அபேதகடக   ஸ்ருதிகள்-பல் பொருள் கொண்டு ஸ்வாமி–பாய்ந்தனன் /பேர்த்து எடுத்தார் ..உதைத்தல்–யேய்ந்தணன்// ஏய்ந்த வண்  கீர்த்தியினால்-இரண்டு பாட பேதங்கள் /ஏய்ந்த நன் கீர்த்தியினால்

//இதனாலே வினைகள் போக்கினார் என்கை/இச்சாலே நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன் அடியே போகும்-போல-என் வினைகளே -தேடி தேடி சம்பாதித்த வினைகள்//பரவிய கீர்த்திக்கு பயனாக சேர்த்து வைத்த வினைகள்/வேரோடு பிடிங்கி போட்டார் -அதி சங்கை ஸ்வாமிக்கு-சும்மணாதே கை விட்டு தூறுகள் பாய்ந்தன-வானோ மரி  கடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கித்து கண்டிலம்

/கங்குலும்  பகலும் காணோம்-/கருமமும் கரும பலனும் பகவானை கையில் வைத்து இருக்கிறாரே /-தவர் அசுரர் அண்டார் புண்யமும் பாவமும் வாராது என்னையும் என் உடமையும் ..-இனி  என் திரு குறிப்பே–என்னை   முற்றும் உயிர் உண்டு

என் கொல் அம்மா திரு அருளே -போல//ஸ்வாமி திரு மேனி  பார்த்து இருக்கும் பொழுது இனி என் கொடுப்போம் என்றே இருக்கும்-திரு மேனி அடியார்க்கு என் செய்வாம் என்றே இருத்தி நீ உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இட எந்தை அரங்கனும்இ-ன் அருள் ஈந்ததேகீர்த்தி இதுவேபரவி-சேர்த்து வியாக்யானம்.

..இந்த பூமி -படி– அன்று  இப் படி தான் நீண்டு தாண்டிய அசைவோ-எல்லாம் கீர்தியாலே வ்யாப்தர் ஆனார் .
.என் உடைய கர்மங்களை வாசனையோடு போம் படி ஓட்டினார் ..
வினைகளை மீண்டும் வராத  படி வாசனை உடன் ஒட்டி
/ஏய்ந்த வண்  கீர்த்தியினால் -இதனாலே என் கர்மங்களை போக்கினார் என்றும் பாடம்
இந்த ஒரு காரியத்துக்கு தான்கீர்த்தி பரவ விட்டார் /
இவரோடு அந்வயம் உடையவன் அன்றோ இவன் என்று கர்மம் தானே விட்டு போகை

பாய்தல்– உதைத்தல் -தள்ளுதல்//எய்தல் -பொருந்துதல் /காய்தல் -கடிதல் ராஜ குல மகாத்மயம்-சம்பந்தம் ஒன்றாலே -வினைகள் போயின —

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: