அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–76-நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற் குன்றமும் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
எழுபத்தாறாம் பாட்டு -அவதாரிகை –
பகவத் வைலஷண்யம் காணாமையாலே தேவரீரை ஒழிய அறியேன் என்று இருக்கிறேன் அல்லேன் –
கண்ட காலத்திலும் நான் தேவரீரை ஒழிய அறியேன் என்றார் கீழ் .
இப்படி இவர் விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானார் மிகவும் உகந்து அருளி
இவர்க்கு எத்தைச் செய்வோம் என்னும் இடம் தோற்ற எழுந்து அருளி இருக்கிற படியைக் கண்டு-தம்முடைய ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அபேஷிக்கிறார் இதில் .
நின்ற வண் கீர்த்தியும் நீள் புனலும் நிறை வேங்கடப் பொற்
குன்றமும் வைகுண்ட நாடும் குலவிய பாற் கடலும்
உன்றனக் கெத்தனை இன்பந்தரு முன்னிணை மலர்த்தாள்
என்றனக்கு மது இராமானுசா !இவை ஈந்தருளே – -76 –
வியாக்யானம்
காதா சித்கம் அன்றிக்கே ஒருபடிப்பட்டு நின்ற அழகிய கீர்த்தியும்

வார் புனல் அம் தண் அருவி -திருவாய் மொழி – 3-5 8- – என்னுமா போலே -ஒழுகுடைய புனலும் நிறைந்து இருப்பதாய் -திருவேம்கடம் என்னும்திரு நாமத்தை உடைத்தாய் -ச்ப்ருஹணீயமான திருமலையும் –

ஸ்ரீ வைகுண்டம் ஆகிற திரு நாடும் –
ஆர்த்தர ரஷணஅர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற இடம் என்று
விசேஜ்ஞ்ஞர் எல்லாம் கொண்டாடும் திருப்பாற்கடலும் –
தேவரீருக்கு யாதோரளவு ஆனந்தத்தை விளைக்கும் –
தேவரீருடைய -சேர்த்தி அழகை உடைத்தாய் -போக்யமாய் -இருந்துள்ள
திருவடிகள் எனக்கும் அவ்வளவான ஆனந்தத்தை உண்டாக்கும் .
ஆன பின்பு தேவரீர் திருவடிகளை எனக்கு தந்து அருள வேணும் .
குலவுதல்-கொண்டாட்டம்
ஈதல் -கொடுத்தல் .
வகுத்த இடமே  -பாட்டுக்கு கேட்க்கும் இடம்–கூப்பீடு கேட்க்கும் இடம் /குதித்த இடமும் -ஊட்டும் இடம் /வளைத்த இடமும் / திருமலையும் திருப்பாற் கடலில் பைய அரவணை -ஸ்ரீ வைகுண்டம் அனந்த போகினி -நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் கைங்கர்யம் செய்து அருளும் சேஷனே நீர் -/ ஈந்து அருளு–பரகத  சுவீகாரம்தான் சென்று பற்றினால் அகங்கார கர்ப்பம்/காலனை கொண்டு மோதிரம் போட்டால் போல-ஆச்சார்ய அபிமானம் உத்தாராகம் -உயிரான கருத்தை வெளியிட்டு அருளுகிறார் இதில் -பகவல் லாபம் ஆச்சார்யனாலே -ஆச்சார்ய லாபம் பகவானால் -ஆச்சார்ய சம்பந்தம் ஈஸ்வரன் ஸுஹார்த்தம் தானே கொடுக்கும் -பிராப்தி நிஸ்கர்ஷம் அபேக்ஷிதம் இரண்டும் ஒரே பாசுரத்தில் அருளிச் செய்கிறார் –
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை -கீழ் பாட்டில் பும்ஸா சித்த அபஹாரியான சர்வேஸ்வரன் -சமஸ்த திவ்ய பூஷணங்களாலும்-சமஸ்த திவ்ய ஆயுதங்களாலும் ஒப்புவித்துக் கொண்டு வந்து -என் முன்னே நின்று-உன்னை நான் விடுகிறேன் அல்லேன்
என்று பலாத்காரம் பண்ணினான் ஆகிலும் -குணைர் தாஸ்யம் உபாகத -என்றால் போலே தேவரீர் உடைய கல்யாண
குணங்களிலே ஈடுபட்ட அடியேனை அக் குணங்கள் தானே தேவரீருக்கு அனந்யார் ஹனாம் படி பண்ணிற்றன என்று
விண்ணப்பம் செய்ய கேட்டருளி -இவருடைய பாவ பந்தம் எங்கனே -என்று மிகவும் உகந்து -இவருக்கு நாம் எத்தை செய்வோம்
என்னும் இடம் தோற்ற -அவர் எழுந்து அருளி இருக்கிற படியைக் கடாஷித்து -தேவரீருக்கு அபிமதங்களாய்  இருந்துள்ள –
தண்ணார் வேங்கடமும் -வைகுந்த மா நகரும் -திருப்பாற்கடலும் -யாதொரு ஆனந்தத்தை விளைக்குமோ
அப்படியே -தேவரீருடைய பரம போக்யமான திருவடிகளும் அடியேனுக்கு அவ்வளவு ஆனந்தத்தை உண்டாக்கும் –
ஆகையாலே அவற்றைத் தந்தருள வேணும் என்று அபேஷித்து அருளுகிறார் –இப்பாட்டில்
வியாக்யானம்நின்ற வண் கீர்த்தியும் -ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி -என்கிறபடியே -காதாசித்கம்
அன்றிக்கே -கால த்ரய வர்த்தியாய் -அழகியதாய் -தெழில் அருவித் திரு வேங்கடம் -என்றும் -பரன் சென்று சேர்-திரு வேங்கட மா மலை -என்றும் -வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும் –
வில்லார் மலி வேங்கட மா மலை -என்றும் -ஆழ்வார்கள் ஈடுபடுக்கைக்கு உடலான குணவத்தா ப்ரதையையும் –
நீள் புனலும் -வார் புனல்  தண அருவி  வட திரு வேங்கடம் -என்றும் -குளிர் அருவி வேங்கடம் -என்றும் –
செங்கயல் திளைக்கும் சுனைத் திரு வேங்கடம் -என்றும் -சொல்லுகிறபடி அநவரதம் பாயா நின்று உள்ள
 நீண்ட திரு அருவிகளும் -நிறை வேங்கடப் பொற் குன்றமும் -இவை இரண்டாலும் நிறைந்து இருப்பதாய்-
தெள்ளியார் வணங்கும் மலை திரு வேங்கடம் -என்கிறபடியே -திரு வேங்கடம் என்னும் திரு நாமத்தை உடைத்தாய் –
எம்பெருமான் பொன் மலை -என்கிறபடியே அத்யந்த ச்ப்ர்ஹநீயமாய் – பரன் சென்று சேர் திரு வேங்கடம் –

என்கிறபடியே வகுத்த சேஷியான சர்வேஸ்வரன் உகந்து அருளின நிலமான திரு மலையும் –

வைகுந்த நாடும் -யத்ர பூர்வே சாத்த்யாஸ் ஸந்தி தேவா -என்றும் -விஷ்ணோர் யத் பரமம் பதம் -என்றும் –
தேவாநாம் பூரயோத்வா -என்றும் -அத்யர்க்கா நல தீப்தம் தத் ஸ்த்தானம் விஷ்ணோர் மகாத்மன-என்றும் –
வைகுண்டேது பரே லோகே  ஸ்ரீ யா சார்த்தம்  ஜகத்பதி -ஆஸ்தே விஷ்ணுர சிந்தயாத்மா பக்தைர் பாகவதைஸ்  சஹா –
என்றும் -சொல்லுகிறபடியே -அந்தமில் பேர் இன்பத்து அடியாரான  நித்ய சூரிகளுக்கு இருப்பிடமாய் –
சர்வேஸ்வரனுக்கு போக விபூதியான -நலமந்தம் இல்லாதோர் நாடாய்-ஸ்ரீ வைகுண்டம்  என்னும்
பேரை உடைத்தான பரம பதமும் –குலவிய பாற்கடலும் -பாற்கடலில் பையத் துயின்ற பரமன் அடிபாடி –
என்கிறபடி ஆஸ்ரிதரான தேவர்கள் உடைய கூப்பீடு கேட்பதாக சர்வேஸ்வரன் வந்து கண் வளர்ந்து
அருளுகிற இடம் என்று விசேஷ ஞ்ஜர் எல்லாரும் கொண்டாடும்படியாய் இருந்துள்ள திருப்பாற் கடலும் –
குலவுதல் -கொண்டாட்டம் -இப்படிப் பட்ட உகந்து அருளின நிலங்கள் –உன் தனக்கு எத்தனை இன்பம் தரும் –
ஆநந்த நிலயே சேஷ தல்பே வேங்கட பூதரே -இத்யாதிகளிலும் -ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான் ஷீரார்ணவே நிகேதன –
நாக பர்யங்க முத்சர்ஜ்ய ஹ்யாகதோ மதுராம்புரிம் -இத்யாதிகளிலும் கௌ ஷீதகீ பிராமணத்தில் பர்யங்க வித்தையிலும்
சொல்லுகிறபடியே -திரு வேங்கடமுடையானுக்கும் திரு பாற்கடல் நாதனுக்கும் -வான் இளவரசு வைகுந்த-குட்டனுக்கும் -பர்யங்கமாய் இருக்கிற தேவரீருக்கு எவ்வளவு ஆனந்தத்தை கொடுக்கும் -இப்படி அவ்வவ-ஸ்தலங்கள் தோறும் ஸ்ரீ ய பதியினுடைய திவ்ய மங்கள விக்ரகத்தாலே  வந்த ஆனந்தத்தை அறியுமவர்
இவர் ஒருவருமே இறே -ரம்மணாவ  நேத்ராய -என்றிவர் தம் அவதாரத்துக்கு பூர்வ அவதாரமான இளைய பெருமாளுக்கு
அந்த திவ்ய தம்பதிகளுக்கு உண்டான ஆனந்த்ததோடு ஒத்த ஆனந்தம் உண்டாய்த்து என்று சொன்னான் இறே

ரிஷியும் –

உன் இணை மலர்த் தாள் -அநந்தம் பிரதமம் ரூபம் -இத்யாதிகளில் படியே -சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைய
சோதியிலே -வான் இள வரசு வைகுந்த குட்டன் விஷயமாக -நிவாஸா சய்யாசன பாதுகாம் ஸூ கோ பதா ந
வர்ஷாதப வாரணாதிபி-சரீர பேதைஸ் தவ சேஷ தாங்கதைர்ய தோசிதம்   சேஷ இ தீரி தேஜ நை -என்கிறபடியே

அநேக சேஷ வ்ர்த்திகளிலும் அந்வயித்து -சேஷன் -என்னும் திரு நாமத்தை உடையராய் –பால்யாத் ப்ரப்ர்தி ஸூ ஷ் நிக்த -என்கிறபடியே அவதார தசையிலும் பால்யம் தொடங்கி பெருமாள் திருத் தொட்டிலோடு-இணைத் தொட்டில் இடாத போது பள்ளி கொண்டு அருளாதே -அவர் பக்கலிலே அதி வ்யாமுக்தராய் -முஹூர்த்தம்-அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்ய விவேர்த்த்ர்ரௌ-என்று பிரியில் தரியாமையை விண்ணப்பம் செய்து மகா ஆரண்யமான-தண்ட காரண்யத்தில் சென்று –அஹம் சர்வம் கரிஷ்யாமி -என்று பிரார்தன பூர்வகமாக வழு இலா அடிமைகள் செய்து- நம்பி மூத்த பிரானாக அவதரித்த தசையிலும் அவனை அனுவர்த்திதுக் கொண்டு போந்து -அங்குத்தைக்கு அந்தரங்கராய் -இருந்துள்ள தேவரீர் உடைய பாவநத்வ போக்யத்வங்களுக்கு  ஒன்றுக்கு ஓன்று போலியாய் -சேர்த்தி அழகை உடைத்தாய்-புஷ்பஹாச ஸூ குமாரமாய் பரம போக்யமாய் இருந்துள்ள திருவடிகள் -என் தனக்கும் அது –கீழ் சொன்னபடியே அந்தரங்கராய்-சர்வஜஞ்ராயிருக்கிற  தேவரீருக்கு அவ்வவ விஷயங்களிலே எத்தனை ப்ரீதி உண்டோ -அப்படியே இவ்வளவும் விமுகனாய்-அஞ்ஞ னாய்ப் போந்த அடியேனுக்கு ஸ்வ விஷயமாய் இருந்துள்ள அவ்வளவு ஆனந்தத்தை உண்டாக்கும் -எம்பெருமானார் உடைய-ஆனந்தம் பிரதம பர்வ விஷயம் ஆகையாலே -அரையாறு பட்டு -அமுதனார் உடைய ஆனந்தம் சரம பர்வ விஷயம் ஆகையாலேகரை புரண்டு காணும் இருப்பது –இராமானுச -எம்பெருமானாரே –இவை ஈந்து அருளே –எனக்கு புருஷார்த்தம் தேவரீர் உடைய-திருவடிகளே யான பின்பு -அவற்றை தேவரீர் தாமே பரகத ச்வீகாரமாக கொடுத்து அருள வேணும் ஈதல்-கொடுத்தல் –

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -நின் செம்மா பாத பற்புத்  தலை மேல் சேர்த்து ஒல்லை -கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று பிரதம  பர்வத்தில் நம் ஆழ்வாரும் இப்படியே அபேஷித்து அருளினார் இறே –
————————————————————————–

அமுது விருந்து .

அவதாரிகை –
பகவானது சீர்மையைக் கண்டு அறியாமையாலே தேவரீரை அன்றி வேறு ஒன்றினை
அறியாமல் இருக்கிறேன் அல்லேன் ..கண்டிடினும் ஆசார்யர் ஆகிய தேவரீரை அன்றிக்
கண் எடுத்தும் பாரேன் என்றார் கீழ் .
இதனை உகந்த எம்பெருமானார் இவருக்கு எதனை அளிப்போம் என்னும் கருத்து
தோன்ற எழுந்து அருளி இருப்பதை கண்டு -தமக்கு வேண்டும் பேற்றினை
இன்னது என்று முடிவு கட்டிக் கோருகிறார் –
இப்பாசுரத்திலே .
பத உரை .
இராமானுச -எம்பெருமானாரே
நின்ற -நிலை நின்ற
வண் கீர்த்தியும் -அழகிய புகழும்
நீள் புனலும் -நீண்டு பெருகும் நீரும்
நிறை -நிறைந்துள்ள
வேம்கடப் பொற் குன்றமும் -திருவேம்கடம் எனப்படும் விரும்பத் தக்க திரு மலையும்
வைகுண்ட நாடும் -ஸ்ரீ வைகுண்டம் எனப்படும் திரு நாடும்
குலவிய பாற்கடலும் -கொண்டாடப்படும் திருப்பாற்கடலும்
உன் தனக்கு -தேவரீருக்கு
எத்தனை இன்பம் -எவ்வளவு இன்பத்தை
தரும் -கொடுக்குமோ
உன் இணை மலர்த்தாள் -தேவரீருடைய ஒன்றுக்கு ஓன்று இயைந்துள்ள போக்யமான திருவடிகள்
என் தனக்கும் -அடியேனுக்கும் அது அவ்வளவு இன்பத்தைத் தரும் .
ஆகையால்
இவை -இத்தகைய திருவடிகளை
ஈந்தருள் -அடியேனுக்கு கொடுத்து அருள வேணும் .
வியாக்யானம் .
நின்ற —பொற் குன்றமும் –
கீர்த்தியும் நீள் புனலும் நிறைந்தது  வேம்கடப் பொற் குன்றம் -என்க.

ஒரு காலத்திலே ஓங்கி நின்று மற்று ஒரு காலத்திலே மங்கிப் பின்னர்மறைந்து விடும் ஏனைய கீர்த்தி போல் அல்லாது திரு மலையின் கீர்த்தி

என்றும் ஒருப்பட்டு இருத்தலின் –நின்ற கீர்த்தி -என்கிறார் .
முக்காகத்திலும் உலகத்தவர் தம் பெருமையைப் பற்றி பேசும் படி நின்றது திருமலை -என்க .
இனி நிற்கும் நான் மறை -திருவாய் மொழி -6 5-4 – – என்றபடி -எல்லாக் காலத்திலும் உள்ள ஸ்ருதியில்
மலைக்குப்போம் -கிரீன் கச்சத -என்று திருமலையின் சீர்மை ஓதப்பட்டு இருத்தலால்
திருமலையின் கீர்த்தி எல்லாக் காலத்திலும் நிலை நிற்பதாக கூறினார் ஆகவுமாம்.
வண் கீர்த்தி
வண்மை-அழகு .
இனி வள்ளன்மை யாகவுமாம்.
திரு மலையைப் பற்றி சங்கீர்த்தனமே கோரியவை அனைத்தும் கொடுக்க வல்ல
இயல்பு உடையதாதலின் –வண் கீர்த்தி -என்கிறார் ..வேறு பயனைக் கோராதவர்க்கு
பகவத் ஆபிமுக்க்யம் தொடங்கி-கைங்கர்யம் ஈறாக -தர வல்லது திரு மலையின்
கீர்த்தனமே -என்க .உள்ளத்தில் அல்லாது வாயினால் செய்யும் கீர்த்தனமே -இயல்பான
கைங்கர்யத்தில் மனத்தைஈடுபடுத்தி -முக்தி பெறுவதற்கு உரிய தகுதியையும்
தானே தர வல்லது -என்கிறார் திரு மழிசைப் பிரான் –
வெற்பென்று வேம்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல் வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால் வலையில் பட்டிருந்தேன் காண் -நான் முகன் திருவந்தாதி – 40- –
திருமலையின் சீர்மையை யறிந்து வேம்கடம்பாடினேன் அல்லேன் .
அல்லாத மலைகளைச் சொல்வது போல் -வேம்கடத்தை சொல்ல -வீடாக்கி நிற்கும் நிலை
எனக்கு ஏற்பட்டது என்கையாலே -உள்ளத்தில் இல்லாமல் செய்த கீர்தனமே தமக்குப் பயன்
பட்டதைத் திரு மழிசைப் பிரான் உணர்த்துவது உணரத்தக்கது .
இனி மேலே வீற்று இருந்து அருளும் இடமாகிய வைகுண்ட நாட்டையும் -பள்ளி கொண்டு
அருளும் இடமாகிய திருப்பாற்கடலையும் பேசுதலின் -இங்கு நின்ற திருக் கோலத்தோடு
எழுந்து அருளி இருப்பதை திரு உள்ளத்தில் கொண்டு –நின்ற வண் கீர்த்தி -என்கிறார் ஆகவுமாம் .
வேம்கடத்தில் திருவேம்கடம் உடையான் நின்ற திருக் கோலம் வல்லார் ஆடினால் போலே -தமக்கு
மிகவும் இனிதாய்  இருப்பதாக திரு மங்கை மன்னன் ஈடுபட்டுப் பேசுவது ஈண்டு அறிதற் பாலது .
திருவாய்ப்பாடியிலே  ஊர்ப் பொதுவான மன்றிலே ஆடி மகிழ்ந்தவன் -உபய விபூதிக்கும் பொதுவான
மன்றாகிய திரு வேம்கடத்திலே ஆடி மகிழும் மைந்தனாய் விளங்குவதாயும் அவரே அருளிச் செய்து
இருப்பதும் அறியத் தக்கது ..வேம்கடத்தாடு கூத்தனுக்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே-பெரியதிரு மொழி -2 1-9 –
என்பதும் -மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும் -வட திரு வேம்கடம் மேயமைந்தா என்றும் -திரு நெடும் தாண்டகம் – 16- –
என்பதும் அவருடைய திரு மொழிகள் .

நம் ஆழ்வாரும் திருமலையில் நின்று அருளிய அழகைக் காட்டி -என்னை இசைவித்து

அவ்வழகிய  கோலத்தோடு என் உள்ளத்தில் புகுந்து பிரிக்க ஒண்ணாத படி எழுந்து அருளி இருக்கிறான்
என்று திருவாய் மலர்ந்து அருளி இருப்பதும் இங்கு தெரிதற் பாலது ..
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை நிலை பேர்க்கலாமை நிச்சித்து இருந்தேனே –திரு வாய் மொழி – 10-4 4-என்பது  -அவர் திரு வாய் மொழி ..
இங்கனம் அடியார்கள் கொண்டாடிப் பேசும் –நின்ற திருக் கோலக் கீர்த்தியை -நின்ற வண் கீரத்து –
என்கிறார் அமுதனார் .
திரு வேம்கடத்தில் நின்ற நிலை கூறியது –
 ஸ்ரீ வைகுந்தத்தில் இருந்த நிலைக்கும் –
திருபாற்கடலில் கிடந்த நிலைக்கும் -உப லஷணம் என்று கொள்க .
நீள் புனலும் –
வார் புனல் அம் தண்  அருவி வட திருவேம்கடத் தந்தை –திருவாய் மொழி -3 5-8 – என்றபடி –
நீண்டு ஒழுகும் அருவி நிறைந்தது வேம்கடப் பொற் குன்றம் -என்க ..
அருவி நீர் வேம்கடம் -பெரிய திரு மொழி – 8-2 3- –
வீங்கு நீரருவி வேம்கடம் -சிலப்பதிகாரம் -என்பது காண்க ..
இனி புனிதத் தன்மையில் நீண்ட -பெருமை வாய்ந்த -புனல் என்று ஸ்வாமி புஷ்கரணி முதலிய
புண்ணிய தீர்த்தங்கள் நிறைந்தது -வேம்கடப் பொற் குன்றம் -என்னலுமாம்..
இதனால் -தாபத்தை தீர்க்கும் குளிர்ச்சியும் போக்யதையும் -திருமலையில் வாய்ந்து உள்ளமை
காட்டப் பட்டதாயிற்று .
நிறை வேம்கடப் பொற் குன்றமும்
கீர்த்தி -என்றும் குன்றாது புதுமை வாய்ந்து அழகியதாய் வளர்தலானும் –
நீள் புனல் -மாரி மாறாது தண்ணம் மலையாய் இருத்தலானும்
திரு வேம்கடப் பொற் குன்றத்தில் நிறைவு பெற்று உள்ளன -என்று அறிக .
வேம்கடம் –
சர்வ பாபாநி  வேம் ப்ராஹா கடஸ் தத்தாஹா உச்சதே -என்று
எல்லா பாபங்களையும் வேம் என்று சொல்லுகிறார்கள் –
அதனை கொளுத்துதல் –கட -என்று சொல்லப்படுகிறது -என்னும்  பிரமாணப் படி
பாபங்கள் அனைத்தையும் கொளுத்தி -நாசப் படுத்தலின் –வேம்கடம் -என்று
பேர் பெற்ற திரு மலை -என்க –
இனி வேம்கடங்கள் -திருவாய் மொழி – 3-3 6- –  என்னும் நம் ஆழ்வார் திவ்ய சூக்திக்கு ஏற்ப
கடம் -பாபம் –வேம் -வேகும் — என்பது முன்றில் என்பது போலே முன் பின்னாக மாரி வேம்கடம்
என்றாயிற்று -என்னலுமாம் .பொருள் ஒன்றே .
பொற் குன்றம்
பொன் போலே சீறியதும் -விரும்பத் தக்கதுமாய் இருத்தலின் -பொற் குன்றம் -என்றார் .எம்பெருமான் பொன் மலை -என்றார் குலசேகரப் பெருமாளும் -பெருமாள் திரு மொழி –4 10-

  வைகுண்ட நாடும் –

வட மொழியில் வைகுண்டம் எனப்படும் திரு நாட்டை வைகுண்ட நாடு என்கிறார் ..
விகுண்டரைச் சேர்ந்த நாடு வைகுண்டம் -எனப்படுகிறது .
குடி கதிப்ரதிகாதே -என்னும் வினையடியில் இருந்து பிறந்த சொல் –குண்ட -என்பது ..இவ்வினையடிக்கு -தடங்கள்-என்பது பொருள் ..அது நீங்கப் பெற்றவர்கள் விகுண்டர்கள் ..ஆத்ம ஸ்வரூபத்துக்கு இயல்பாய் அமைந்த அறிவினுக்கு தடங்கலாய் உள்ள கன்மத்தின் தொடர்பு
அறவே அற்றவர்களான -நித்ய சூரிகளைச் சொல்கிறது .-விகுண்டர்-என்னும் சொல் .
அவர்களை சேர்ந்தது என்னும் பொருளில் -அண் -பிரத்யயம்-வந்து முதலில் உள்ள இ கரம்
ஐ என்று மாறி வைகுண்டம் என்றாயிற்று .இது ததிதவ்ருதி என்பர் -நித்ய சூரிகளை சேர்ந்த இடம்
என்பது பொருள் .தமிழில் ஸ்ரீ வைகுண்டத்தை -வானவர் நாடு -என்பதும்
நித்ய சூரிகளை -விண்ணாட்டவர் -என்பதுமின்கே அறிதற் பாலான .
குலவிய பாற்கடலும்
துன்புற்றாரை காப்பதற்காக வந்து கண் வளர்ந்து அருளுகிற   இடம் என்று நல் அறிஞர் எல்லாம்-கொண்டாடும் இடம் ஆகிய திருப்பாற்கடலும் .
குலவுதல்-கொண்டாடுதல்
உன் தனக்கு எத்தனை இன்பம் தரும்
கீழ்க் கூறிய மூன்று இடங்களும் இன்பம்விளைவிப்பன –
வேம்கடப் பொற் குன்றத்தில் நிறைந்த வண் கீர்த்தி வாய்ந்த நின்ற திருக் கோலமும் –
வைகுண்ட நாட்டில் செம் தாமரைக் கண் பிரான் காட்டிய இருந்த திருக் கோலமும் –
பாற்கடலில் -கிடததோர் கிடக்கை -என்று கொண்டாடும் சயனத் திருக் கோலமும் –
எம்பெருமானார்க்கு பேரின்பம் தருகின்றன -என்க .
நிற்றல் இருத்தல் கிடத்தல் -என்னும் நிலைமைகள்  ஏற்ப
வேம்கடமும் வைகுந்தமும் பாற்கடலும் முறைப்படுத்தப் பட்டு உள்ளன .
பரம ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வேம்கடப் பொற் குன்றம் முன்னரும் –
ப்ராப்யமான இடம் ஆதல் பற்றி வைகுண்ட நாடு அதனை எடுத்தும் –
ஆர்த்தி தீர ஆஸ்ரயிக்கும் இடமாதல் பற்றி திருப்பாற்கடல் அதன் பின்னரும்
முறைப்படுத்தப் பட்டன -ஆகவுமாம் .
வைகுந்தம் ப்ராப்யமான -முக்தி பெறுவோர் சேரும் இடமான -தாயினும்
வானவர் வானவர் கோனொடும் நமன்று எழும் திரு வேம்கடம் – – திரு வாய் மொழி – 3-3 7- -என்றபடிவைகுந்தத்தில் உள்ள நித்ய சூரிகள் உட்பட அனைவரும் திரு வேம்கடத்தை நாடி-வருதலின் இது பரம ப்ராப்யம் ஆயிற்று -என்க .
சரீர சம்பந்தம் நீங்கி வெகு தொலைவில் உள்ள வைகுந்தம் அடைந்து அங்கு நின்றும்
திரு வேம்கடம்திரும்பி வருவதை விட –இந்த சரீர சம்பந்த்தோடே  இந்நில வுலகத்திலேயே
அடையும் படி அண்ணி யதாய் உள்ள திருவேம்கடம் நமக்கு சீரிய ப்ராப்யம் அன்றோ –
சரீர சம்பந்த்ததோடே  பெறத் தக்க பரம போக்யமான வேம்கடத்தை கூறிய பின்னரே –
சரீர சம்பந்தம் நீங்கிற பின் பெறத் தக்க ப்ராப்யமான வைகுண்ட நாடு கூறப் பட்டது .அதனை அடுத்து அவற்றுக்கு நிகராய் ஆஸ்ரயிக்கும் இடமாய் உள்ள திருப்பாற்கடல்
முறைப்படுத்தப் பட்டது .
உய்யக் கொள்வான் -பகவானாலேயே வைகுண்டத்தின் நின்றும் வருவிக்கப் பட்டு –அண்ணி யதாய் அவன் நின்ற வேம்கடமும் .பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் பட்டதாயும் -அவ் வேம்கடத்துக்கு மூல ஸ்தானமாயும்-அவன் வீற்று இருக்கும் இடமாயும் -உள்ள
வைகுந்தம் முதலில் கூறப்பட்டு -பிரகிருதி மண்டலத்தின் பால் பட்டு அந்த வைகுந்தத்துக்கு
தோள் தீண்டியே -அவன் பள்ளி கொண்டு அருளும் பாற்கடல் பின்னர் கூறப்பட்டது -என்க .
வழுவிலா  அடிமை செய்து  முக்த அநுபூதியைப் பெறுவதற்கு பாங்காய் அமைந்து இருப்பதால்
வேம்கடம் எம்பெருமானார்க்கு இன்பம் தருகிறது -என்க
கன்மத்துக்கு என்றும் உட்படாத -நித்ய சூரிகளால் சேவிக்கப் படும் மேன்மை உடையவன்
புன்னகை பூத்து அழைத்து -தன திருவடித் தாமரை தலை மீது வைப்பதனால் அமுதக் கடலுக்குள்
நன்கு மூழ்கும்படி செய்தலின் -வைகுந்தம் இன்பம் தருகின்றது -என்க .
விழுமிய முனிவர்களான சனகாதியர் நுகர்ந்து குலவ்ம்படியான இனிமை வாய்ந்து -பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதன் -தான் கிடக்கும் பண்பினால் –
காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும் -என்னும்படி பரவட்சம் ஆக்குதலின் பாற்கடல்
இன்பம் தருகின்றது -என்க .
இம் மூன்று இடங்களிலும் எம்பெருமானைத் தன மீது கொண்ட ஆதி சேஷனாய் இருத்தலின்
எம்பெருமானாருக்கு -ரம மாணாவ நேத்ராய –இராமன் சீதை லஷ்மணன் மூவரும் கானகத்தில் ரமித்தனர் –
என்றபடி திவ்ய தம்பதிகள் போல ஆனந்தம் உண்டாவதாக பிள்ளை லோகம் ஜீயர் பணிப்பர்
உன் இணை மலர்த்தாள் என் தனக்கும் அது
தேவரீருக்கு இம்மூன்றும் கூடத் தோன்றும் இன்பம் எவ்வளவோ
அவ்வளவு -அடியேனுக்கு தேவரீருடைய அழகிய திருவடி ஒன்றினாலேயே உண்டாகுகின்ற இன்பம் என்கிறார் .
வகுத்த சேஷியான தேவரீரது ஆதலின் -உரியதும் -ஒன்றுக்குஓன்று நிகரானத்தில் ஒப்பற்றதும் –
தலை மேல் புனையும் தன்மையில் மலர் போன்று போக்யமானதுமான திருவடி ஒன்றே அடியேனுக்கு அமையும் .
வேம்கடம் முதலிய எல்லாம் அடியேனுக்கு தேவரீர் திருவடியே -என்றபடி
அது –
அத்தனை இன்பம் தருமது
தம் ஆசார்யர் ஆகிய ஆளவந்தாரது பிரிவு ஆற்றாத தெய்வ வாரி யாண்டான் -கரமனை ஆற்றம்கரையிலே-ஆளவந்தாரை சந்த்தித்து -தம் ஆற்றாமை தவிர்ந்தவராய்
திருவனந்த புரத்து திருக் கோபுரம் அதோ தோன்றுகிறது -அங்கே  போய் ஆயிரம் பைந்தலைய-அநந்த சயனனை சேவித்து வாரும் -என்று ஆளவந்தார் அருளிச் செய்ய –
இவரும் –என்னுடைய திருவனந்த புரம் எதிரே வந்தது என்று -ஸ்வ ஆசார்யரான ஆள வந்தாரைக்-காட்டி அருளி -பெருமாள் சேவிக்காமலே திரும்பினதாக கூறப்படும் ஐ திஹ்யம் இங்கு-அனுசந்திக்க தக்கது .
இவ்விடத்தில்
ஏனைவ குருணா யஸ்ய நயாச வித்யா ப்ரதீயதே
தஸ்ய வைகுண்ட துக்தாப்த்தி த்வாரகாஸ் சர்வ ஏவ ச -என்று
எந்த ஆசார்யனாலேயே எவனுக்கு சரணாகதி விதியை அளிக்கப்படுகிறதோ
அவனுக்கு அந்த ஆசார்யனே வைகுண்டமும் பாற்கடலும் த்வாரகையும் -எல்லாம் ஆவான் –
என்னும் ஸ்லோகமும்
வில்லார் மணி கொழிக்கும் வேம்கடப் பொற் குன்ற முதல்
செல்லார் பொழில் சூழ் திருப்பதிகள் எல்லாம்
மருளா மிருளோடே மத்தகத்துத் தன் தாள்
அருளாலே வைத்த அவர் -என்னும் ஞான சாரப் பாசுரமும் அனுசந்திக்கத் தகன .
இவை ஈந்தருளே –
இத்தகைய திருவடிகளைத் தந்து அருள வனும் -என்று தமது தகுதிக்கு ஏற்ப கோருகிறார் .
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின் செம்மா பாத பற்புத் தலை சேர்க்க வேணும்
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -என்று நம் ஆழ்வாரும் எம்பெருமானைப்
பிரார்த்தித்தது போலே  அமுதனார் எம்பெருமானைப் பிரார்த்திக்கிறார் -என்க ..
ஈந்து அருள்
ஈ என் கிளவி இழிந்தோர் கூற்றே -என்றபடி தம் இகழ்வு தோன்ற இரக்கம் உண்டாகும் படி-இவ்வினைச் சொல்லை வழங்கிய நயம்  நினைத்து இன்புறத் தக்கது …
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தால் ஜல்ப்பித்தது

ஸ்ரீ வசன பூஷணம்-சிறை இருந்தவள் ஏற்றம் -சீதை பிராட்டி -புருஷார்த்த -வைபவம் ஸ்ரீ ராமாயணம் சொல்லும்-தூது போனவன் ஏற்றம்- உபாயம்  வைபவம் மகா பாரதம் சொல்லும்-ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் 466 சூத்தரங்கள் 450 சூத்திரம் முக்கியம்

இந்த பாசுரம் கொண்டே அருளியது-ஈஸ்வரனை பற்றுதல் கையை பிடித்து கார்யம் கொள்வது போல/நடந்தாலும் நடக்கலாம் விட்டாலும் விடலாம்-ஆச்சர்யர் பற்றுதல் காலை பிடித்து கொள்ளும் காரியம் போல//ஆச்சார்யர் ஈஸ்வரின் திருவடி தானே

/ பகவன் லாபம் ஆச்சார்யர் மூலம்/ஆச்சார்யர் லாபம் பகவான் மூலம்/ஆர்  வசன பூஷணத்தின் ஆழ  பொருளை அறிபவர்-ஓர் இருவர் உண்டாகில்–அனுபவிக்கலாம் நம்மால்/இவர் இருவருக்கும் உபாகரகன்–சேஷி -பல்லாண்டு பாட சேஷ பூதனை உபகரித்தான்/சேஷ பூதனுக்கு -அவனை காட்டி சம்பந்தம் உணர்த்தி.

.ஈஸ்வர ஸௌகார்தம் முதல்  -ஆறு படிகள்-யதேச்சா  சுக்ருதம்- அடுத்த படி– அத்வேஷம் ஆபி முக்கியம் விஷ்ணு கடாஷம் கிருபை//ஆச்சர்ய சம்பந்தம் கீழ் படி இந்த ஆறுக்கும்

/முமுஷு இந்த ஆறையும் தாண்டனும் -.74- சிம்காசனாதிபதிகள்  அமைத்து இருந்தார் ஸ்வாமி இதற்க்கு-பக்கம் தோறும் அனுப்பி வைத்து இருந்தார் ஸ்வாமி.. /ஆச்சார்ய சம்பந்தம் இல்லா விடில் பகவத் பிராப்தி துர் லாபம்-தாமரை அலற்ற  கடவ  சூர்யன் -உலர்துவான் நீர் பசை இன்றி-இருந்தால்- ஆச்சார்ய சம்பந்தம் போல நீர் பசை.–தாமரையாள் கேள்வனையே  ஒருவனையே நோக்கும் உணர்வு–ஆச்சார்ய சம்பந்தம் குலையாது கிடந்தால்-நம் இடம் அபிமானம் -இவன் நம் பையல்–ஞான பக்தி வைராக்கியம் உண்டாக்கி கொள்ளலாம் ஆச்சார்ய அபிமானம் இருந்தால்-ஆச்சார்ய சம்பந்தம் குலைந்தால் இவை உண்டானாலும் பிரயோஜனம் இல்லை-தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணி பூணலாம்

..பாகவத சம்பந்தம் -இவை –கொடியை கொள் கொம்பில் சேர்க்கும் பொழுது சுள்ளி கால் போல பாகவத சம்பந்தம்-ஸ்வதந்திர அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானம் குலைத்து கொண்ட இவனுக்கு ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்/இரு கையும் விட்ட பின்பு தானே புடவை சுரந்தது-ஆச்சார்ய அபிமானம் ஒன்றே கதி/பிள்ளை பல காலும் அருளி  செய்வார் -ஸ்வாமி நம்பிள்ளை-/சவா தந்த்ர்யதொடு தான் கர்ம யோகம்-செய்து  ஸ்வ ச்தாதந்த்ரத்தாலே பக்தி நழுவியது நானாக பற்றினேன் என்ற எண்ணத்தால்–-உபாயமாக கொண்டதால்/–பக்தி அசக்தனனுக்கு  பிர பத்தி-உண்டே

–பட்டத்துக்கு உரிய ஆனையும் அரசையும் கேட்ட முடியாது–ஈஸ்வர ச்வாதந்திர அபிமானத்தாலே பிரபத்தி நழுவிற்று/-என்றால் –ஆச்சார்யா அபிமானமே உத்தாரகம் என்கிறார்.. –கை பட்ட பொருளை கை விட்டு புதைத்த  பொருளை-புதையல் கிடைக்காது புறம் காலம் தான் வீங்கும்.-கண்ணுக்கு எதிராக உள்ள ஆச்சார்ய விட்டு சப்தத்துக்கு விஷயமான பெருமாளை பற்றுவது போல-.விடாய்த்தவன்- கர-தமான உதகம் விட்டு -கை தண்ணீரை விட்டு/–மேகம் பொழியுமா   – ஆற்று நீர்  வேற்று நீர் வூற்று நீரை பார்ப்பானே-ஐந்து நிலைகளையும் -என்ன என்று நினைக்க கடவன்-ஐந்தையும் பாட்டு கேட்கும் இடமும் -சாம கானம்-கூப்பிடு கேட்க்கும் இடம்-பாற்  கடல்- கூப்பாடு-குதித்த இடமும் -விபவ அவதாரங்கள்-வளைத்த இடம்-திவ்ய தேசங்கள்-அர்ச்சா ரூபம்-ஊட்டும் இடம் உள்ளே இருந்து -வகுத்த இடமே என்று இருக்க கடவன்-ஆச்சார்யர் திருவடியே-எல்லாம் வகுத்த இடமான ஆச்சாரயரே என்று இருக்க கடவன் .–நான்கு யானைகள் -ஒருத்தனை பிடிக்க  ஊரை வளைப்பாரை போல/…இப்படி பட்டவனுக்கு-இப்படி  ஆச்சார்ய திரு வடி பற்றி  இருக்கும்  அவனுக்கு–அனுகூலர்-ஆச்சார்யர் பார தந்த்ர்யர்கள் //  பிரதி கூலர் -ச்வாதந்த்ர அபிமானிகளும் தேவதாந்தர்கள் பற்றி இருப்பவர்கள் // உதாசீனர் ஈஸ்வர பரா தந்த்ர்யர்கள் /

//பிரதமம் பல்லவிதம்  பின்பு —புஷ்பிதம் –இறுதியில் பலம் வளர்த்து கொடுக்கும்//வைகுண்ட நாடு குலவிய பாற்கடல் நிறை வேங்கட பொற் குன்றமும்—மூன்றை சொல்லிஇத்தால் பர வியூக விபவ அந்தர்யாமி அர்ச்சை ஆகிய ஐந்தையும் குறிப்பிட்டு இவை எல்லாம்–உன் தனக்கு எத்தனை இன்பம் ஏற்படுமோ–அவற்றை உன் இணை மலர் தாள் /இவை ஈந்து  அருள்–அவை இல்லை- வஸ்து நிர்த்தேசம் காட்டுகிறார்/-அம்மா அடியேன் வேண்டுவது ஈதே-–பகவத் வைலஷண்யம்-கண்ட காலத்திலும் தேவரீரை ஒழிய அறியேன் என்றார்..மிகவும் உகந்து அருளி இவர்க்கு எத்தை செய்வோம் என்னும் இடம் தோற்ற எழுந்து அருள இருக்க படியை கண்டு–தம் உடைய பிராப்யத்தை நிஷ்கரித்து அபேஷிகிறார்-/நிஷ்கர்ஷம் இரண்டாம் பத்து-அபேஷிதம் மூன்றாம் பத்தில்//-/நின்ற –காதா சித்தம் அன்றிக்கே ஒரு படி பட்டு நின்ற அழகிய கீர்த்தியும்–, வார் புனல் அம் தண்  அருவி-திரு வாய்மொழி 3-5-8- -என்னுமா போல

-நிற்கிற பிரமாணம் சாஸ்திரம் கிரீம் கச்ச சதாம் -ரிக் வேதம் சொல்ல பட்டவன்-.நின்று சேவை சாதிக்கும் கீர்த்தி//அடுத்த இடத்தில்  இருந்தது கிடந்த -சொல்ல போகிறார் அதற்க்கு உப லஷனம் நின்ற-/கீர்த்திக்கு விசேஷணம் நின்ற

/ வண்-ஔதார்யம்-திரு மலை அப்பனுக்கு வள்ளல் தனம்- கீர்த்தனம் பண்ணுவார்க்கு  அனைத்தையும் -ஐஸ்வர்யம் கைவல்யம் -மோஷம் -அனைத்தையும் கொடுப்பவன்-கீர்திக்கே வண்மை தனம்..-அர்த்தம் தெரியாமல் வெற்பு என்று வேங்கடம் பாடினேன்-வெற்பு என்றே  சொன்னேன்-வீடாக்கி நிற்கின்றேன்-சுமந்து -சமன் கொள் வீடு தரும்  தடம் குன்றமே //பும்ஸாம் சிந்தை -குணஸ் தாச்யன்//நீள் புனல்-ஒழுகின்றே இருக்கும் அருவி-நிறைந்து-பொன் குன்றமும்-ஸ்ப்ருஹநீயமாக உள்ள திரு மலை-/சுட்டு உரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது //தெளி  விசும்பு ஸ்ரீ வைகுண்டம்/ஆர்த்த ரஷணார்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகிற இடம் என்று

விசேஷஜ்ஜர் எல்லாம்-ப்ரஹ்மாதிகள்-கொண்டாடும் திரு பாற் கடலும்/தேவரீருக்கு யாதொரு அளவு ஆனந்தம் விளைவிக்கும்–தேவரீர் உடைய சேர்த்தி அழகை உடைத்தாய் போக்யமாய் இருந்துள்ள திருவடிகள்-எனக்கும் அவ் அளவான ஆனந்தத்தை உண்டாக்கும்–மூன்று ஒவ் ஒன்றுமே – ஞானரான ஸ்வாமிக்கு–தான்  இன்பம் பயக்கும்-நானோ ஞான சூன்யம் ஆக இருந்தாலும் –அதே ஆனந்தம் கிட்டும். என்கிறார் –-.ஆன பின்பு தேவரீர் திருவடிகளை எனக்கு தந்து அருள வேணும்.

. குலவுதல்-கொண்டாடுதல் /ஈதல்– கொடுத்ததல்/ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி-காத சித்தம் அன்றிக்கே–கீழ் கழிந்த காலமும் சேர்த்து கைங்கர்யம் வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் ஆழ்வார் .–குற்றம் பார்த்து கை விட முடியாத அசக்தன்- அச்சுதன் கூரத் ஆழ்வான்-இனி மேல் நீ கொடுக்கிற கைங்கர்ய  அனுபவம் இழவை மறக்க அடிக்க பண்ணும் படி செய்ய வேண்டும் என்னலுமாம்

வேங்கடத்துக்கு ஆடும் கூத்தனுககு அடிமை தொழில் பூண்டாய்-நிற்பதே ஆடுவது போல் தானே-கீதாசார்யன் அருளிய சரம ஸ்லோகார்த்தத்தை நாட்டிய முத்ரையால்  காட்டி அருளுகிறான்-என் திரு வடி பற்று என்று ஒரு திருக் கரத்தாலும் -பற்றினால் முழங்கால் அளவு நீக்கி-சம்சார ஆர்ணவத்தில் இன்று நம்மை விடுவிப்பேன் என்றும் இன்னொரு திருக்கரத்தால் காட்டி அருளுகிறான் .

கோட்டம்  கை வாமனனாய் செய்த கூத்துகள்-மன்றமர கூத்தாடி மகிழ்ந்தாய்-மலைமேல்  தான்  நின்று மனத்தே வந்து சேர்ந்து நிலை பெற்றான்-தெளி குரல் அருவி திரு வேம்கடம்- நித்யருக்கு சொல்கிறதாம் இந்த செய்தியை அருவிகள்-பரன் சென்று சேர் திருவேங்கட மா மலை ஒன்றுமே தொழ வைகுந்தம்/வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும்  சேம  வைப்பு/குளிர்  அருவி வேங்கடம் //வேம் கடம் பெயரே பெருமை- சர்வ பாபங்களையும் கொழுத்த  படுத்தும்-வேம் கடங்கள்-முன்னில் இல் முன் -போல எரிக்க படும் பாபங்கள்

-எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே–வகுத்த சேஷி /பாவனத்வமும் போக்யத்வமும் உண்டு/ஸ்ரீ வைகுண்டம்-சாம கானம் விஷ்ணு யத் பரம பதம்-அயோத்யா -விஷ்ணு -வைகுண்டே பரே லோகே ..பக்தி பாகவத சக/விகுண்டன்-தடங்கல் இல்லாத இடம்-நித்யர் நினைப்பதை சாதிப்பார்கள்-அந்தமில் பேர் இன்பம் -நலம் அந்தம் இல்லாதோர் இடம்/பாற் கடலில் பைய துயின்ற பரமன்- கூப்பிடு  இடம் கிடந்ததோர் கிடை அழகு /இதில்  க்ரமம்– நின்றது இருந்தது கிடந்தது //பரம பிராப்யம்   முதலில் சொல்லி அடுத்து பிராப்யம் -அவனே சென்று சேர் வேங்கடம் என்பதால்//சரீரமுடன் சேவிக்கும் இடம் சொல்லி-சரீரம் விட்ட பின் போகும்  இடம்-சொல்லி ஆஸ்ரயிக்கும் இடம் சொல்லி-/பிரகிருதி மண்டலம் உள் வெளி ஆசரிக்கும் இடம் /

/உன் தனக்கு எத்தனை இன்பம் தரும்- ஆனந்த நிலையம்-  சேஷ கல்ப –வான் இளவரசு வைகுண்ட குட்டனுக்கு–ஆதிசேஷன்-மலையே ஆதிசேஷன் படுக்கை இருக்கை எல்லாம்/ஏஷ  நாராயண ஸ்ரீமான்-நாக பர்யங்கே  முத்ருஷ்ய ஆகோதோ மதுராம் புரீம் //வழுவிலா அடிமை செய்ய முக்தருக்கு இடம்/விழுமிய முனிவர் வணங்கும் -பாடி பாடி வித்தர் ஆகும் இடம்/இவர் ஒருவர் தானே எல்லாம் தெரியும் ஆதி செஷன் -அனந்தம் பிரதம ரூபம்// சென்றால் குடையாம் புல்கும் அணை/அசேஷ சேஷ விருத்திகள் முதல் யுகத்தில் //த்ரேதா யுகத்தில் பெருமாள்   தொட்டிலிலும் பிரியாமல்/சீதை பிரிந்தாலும்  லஷ்மணனை பிரியவில்லை படுக்கை-மூவருக்கும் ஒத்த ஆனந்தம் -புருஷ கார ஆனந்தம் பிராட்டிக்கு கைங்கர்ய ஆனந்தம் லஷ்மணனுக்கு- கைங்கர்ய ஸ்ரீ மான் -பிறக்கும் பொழுதே அழுது காட்டி ஒரே தொட்டிலில் இடம் கொண்டாரே-பரி மளிக்கும்  அங்குளிக்கும் பொழுதே திரு துழாய் போல-/ஜலம் விட்டு பிரிந்த மீன் போல -பிரிவில்  தரியாமை சொல்லி -சுற்றம் எல்லாம் பின் தொடர –அகம் சர்வம் கரிஷ்யாமி--ஏவி பண்ணி கொள்ள வேண்டும்–இளம் கோவும் அக் குளத்தில் மீன்-பகவான்-ஆழ்வார்-//உன் இணை மலர் தாள் எனக்கு ஸ்வாமி- அமுதனார் /

நம்பி மூத்த பிரான்–அந்தரங்கர்- தேவரீர்  உடைய -திருவடி-பாவனத்வம் போக்யத்வம்-இணை-//சுசி ருசி//சேர்த்தி அழகு புஷ்ப காச சுகுமார /என் தனக்கும் அது-அந்தரங்கராய்-அவ் அவ் விஷயங்களில் பெற்ற இன்பம் போல-விடாமல் யுகம் தோறும் அனந்தன் வான் இள அரசன் வைகுண்ட குட்டன் கிட்ட பெற்ற ஆனந்தம்- என் தனக்கும் -அனந்தன் ஆகிய உம்  இடம் இப் பொழுது தான் பெற்றேன்அக்ஜன்–அது-பிரதம பர்வ ஆனந்தம் ஸ்வாமிக்கு-அரையாறு பட்டு- -அளவோடு தான் இருக்கும் ..//அமுதனார் சரம பர்வ -கரை புரண்டு இருக்கும்//இவை ஈந்து அருளு/  தெய்வ வாரி ஆண்டான்-ஆள வந்தார் சிஷ்யர்- உடல் இளைத்து-கரை மனை ஆற்றம் கரையில் பார்த்து திரு அனந்த புரம் சேவிக்க சொல்ல நம் திரு அனந்த புரம் எதிரில்//வில்லார் மலி –வேம்கடம் திரு பதிகள் எல்லாம் மருளாம் இருள் ஓட தனது தாள்   மத்தகத்து -ஞான சாரம்/திரு மால் இரும் சோலை திரு பாற்கடல்-தலையே /ஏக தேசம் ஒக்கும் இரண்டும்..//விதுரன் போனது- பீஷ்மர் துரோணரை விட்டாய் என்னையும் விட்டே இருவரும் சேர்ந்து தான் என்கிறான் துரியோதனன்

/பூவை பைம் கிளி  பந்து தூதை பூம் பொட்டில் யாவையும் திரு மால் திரு நாமங்களே கூவி எழும்-அவை அசித் திரு நாமம் சொல்லாதே –அனைத்துக்கும்  திரு நாமம் கொடுத்து விளையாடுகிறார்-விளையாட்டுக்கும் அவன் தானே ஆழ்வாருக்கு-அதனால் மற்ற குழந்தைகள் இதை வைத்து விளையாடி பெற்ற இன்பம் ஆழ்வார் திரு நாமங்கள் சொல்லி பெற்றார் /அநந்ய பிரயோஜனர் ஆழ்வார்

-அது போல இங்கு  ஸ்வாமி கைங்கர்யம் பண்ணி  பெற்ற ஆனந்தம் அமுதனாருக்கு/ஆனந்த மயத்வத்தில் சாம்யா பத்தி கிட்டும்–சாஸ்திரம்-..//கஷ்ட பட்டு  தந்தை பெற்ற சொத்தை  பிள்ளை அனுபவித்து பெரும் ஆனந்தம்/ஈந்து அருள்- ஈ -கிழவி இழிந்தோர் கூற்று கெஞ்சி -எனக்கு புருஷார்த்தம் தேவரீர் திரு வடிகளே ஆன பின்பு-கொடுத்து -பரகத ச்வீகாரமாக கொடுத்து அருள வேணும்–தான் சென்று பற்றினால் அகங்கார கர்ப்பம்/காலனை கொண்டு மோதிரம் போட்டால் போல /இடு – மோபாதி-பார்க்கும் பொழுது எல்லாம் காலன் மோதிரம்-.ஸ்ரீ ய  பதி மோதிரம் பர கத ச்வீகாரம்-நின் செம் மா பாத பற்ப்பு  என் தலைக்கு அணியாய் அம்மா அடியேன் வேண்டுவது ஈதே..-போலே அமுதனார் பிரார்த்திக்கிறார்

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: