அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–74-தேரார் மறையின் திறமென்று மாயவன்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

எழுபத்து நாலாம் பாட்டு -அவதாரிகை
உண்மை நல் ஞானம் என்று கீழில் பாட்டில்  ப்ரஸ்துதமான
யதாஜ்ஞானத்துக்கு விரோதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்து அருளுகிற அளவில் -சர்வேச்வரனிலும் காட்டில் அனாயாசேன செய்து அருளின பிரகாரத்தை அனுசந்தித்து-வித்தராகிறார் -இதில்-
தேரார் மறையின் திறமென்று மாயவன் தீயவரைக்
கூராழி கொண்டு குறைப்பது கொண்டலனைய வண்மை
ஏரார் குணத் தெம்மி ராமானுசன் அவ் எழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே – -74- –
வியாக்யானம்

நித்யத்வ அபௌருஷேயத்வ யுக்தமாய் -பிரத்யஷாதி பிரமாண விலஷணமாய் -சமஸ்த சேதன ஹித அஹித ஜ்ஞாபகமாய் -தம்முடைய சாசனா ரூபமாய் -இருந்துள்ள வேதத்தின் உடைய பிரகாரத்தை   நிரூபிக்கிறிலர்கள் என்று ஆச்சர்ய ஞான சக்திகனான சர்வேஸ்வரன்  அஞ்ஞாதி லங்கன சீலரான துஷ்டரை சேதித்து அருளுவது –கூரிய திரு ஆழியாலே –

சர்வ விஷயமாக உபகரிக்கும்படியாலே மேகத்தோடு ஒக்க -சொல்லலாம்படியான
ஔதார்யத்தை உடையவராய் -அனுத்தமமான கல்யாண குணங்களை உடையவராய் –
நமக்கு சேஷிகளாய் இருக்கிற எம்பெருமானார் –
அந்த விலஷணமான வேதத்தில் -அப்ராமணிய புத்தியாலும் –
அயதார்த்த பிரதிபத்தியாலும் -பொருந்தாத நிலை உடையவர்களை
பங்கயத்து அருளுவது -தாதாத் விகைகளான யுக்திகளாலே
-ஈதொரு வீர்யம் இருக்கும் படியே -என்று கருத்து .
குறைக்கை-சேதிக்கை
சிதைக்கை-அழிக்கை-
அப்போதொரு சிந்தை செய்கையாவது -அப்போதொரு விசாரத்தைப் பண்ணுகை.
திருவாழி எதிர் பார்ப்பான் அவன் -இவர் யுக்தி மாத்ரத்தால் -உண்ணும் குலத்தில் பிறந்து –தசரத கோபாலர் 18 நாடான் -மாதவன் /-திர்யக் காலில் விழுந்தும் ,-ஸ்தம்பத்தில் இருந்து ஆவிர்பவித்தும்..-இப்படி எல்லாம் உயர்ந்த செயல்களை செய்தும் –அலங்கிரித்த சிரை சேதம்-சம்சாரிகளை போல பல தடவை பிறந்து-
பால்ய சேஷ்டிதங்களாலே விரோதி நிரசனம்-கண்ணன் -பெருமாள் போலே வில் வித்யை இத்யாதி கற்ற பின் இல்லாமல்   -அவனும் ஆழி உதவியால் – ராமானுஜர் அப்போது ஒரு சிந்தை செய்தே -அவ வப்போது  ஒவ்வொரு சிந்தை -யதாயத்தா தர்ம -தலை குனிவு சொல்லிப் போந்தத்தை இவர் சிந்தை செய்தே – யுக்தி சாதுர்யத்தால் மட்டுமே -கிருபை பிரார்த்தனை -70-மேலே நான்கிலும் வண்மை விவரித்து அருளுகிறார் -ஞான வைபவத்தை விட கிருபை வண்மை பற்றியே பல பாசுரங்கள் -கூராழி கொண்டு குறைப்பது -மாயவனை இதனால் குறைத்து என்றபடி -மழுங்காத ஞானம் -படை ஞானம் இரண்டும் எதிர்பார்க்காமல் -சுடர் சோதி -வந்த பின்பு தானே மறையாமல் இருந்தது –
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

அவதாரிகை -கீழ் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய பரம கிருபா கார்யமான ஔதார்யத்தாலே
சேதனர் எல்லாரையும் குறித்து யதாவஸ்த்தித ஞான உபதேசம் பண்ணி யருளினார் என்று அருளிச் செய்து -இதிலே –
சத் அசத் விவேக சூன்யராய் ஸ்வ ஞாநாதி லங்கனம் பண்ணிப் போருகிற துஷ்டரை  -சர்வேஸ்வரன்
அநேக அவதாரங்களையும் -அநேக யத்னங்களையும் பண்ணி -சக்ர ஹச்தனாய் கொண்டு -வருத்தத்தோடே
நிரசித்த வோபாதி யன்றிக்கே -தாம் உபதேசித்த ஜ்ஞானத்துக்கு விரோதிகளாய் ஜ்ஞான லவ துர்விதக்தராய் கொண்டு
திரண்டு கிடக்கிற பாஹ்ய குத்ர்ஷ்டிகளை தாதாத்விகையான ஒரு கஷியாலே நிரசித்தார் என்று-கஷி -யுக்தி என்றவாறு-
அவர் தம்முடைய வைபவத்தை கொண்டாடுகிறார் –
வியாக்யானம் -மறையின் திறம் –வாசா விருபா நித்யயா -என்கிறபடி நித்தியமாய் -அசேஷ சேமுஷி தோஷ
தூஷித மாலின்ய விநிர் முக்த வேதாக்ய ஷரராசேரேவ-என்கிறபடியே -ப்ரம பிரமாதாதி  தோஷ துஷ்ட புருஷ
ப்ரநீதம் -அன்றிக்கே -அபௌருஷேயமாய் -அத ஏவ நித்ய நிரவத்யமாய் -தர்மஜ்ஞ சமயம் பிரமாணம் வேதச்ச –
என்கிறபடி பிரமாண தமமாய் -அத ஏவ பிரத்யஷ்யாதி சகல பரமான விலஷணமாய் -சாஸ்திர யோநித்வாத் -என்றும் –
ஹர்த்தும் தமஸ் சத சதீ ச விவேக்து மீசோ மாநம் பிரதீபமிவகாருணி கோ ததாதி -என்றும் சொல்லுகிறபடியே
தன்னுடைய சாசன ரூபமாய் -சத் அசத் விவேசநமாய்-மாதா பித்ர் சஹஸ்ரேப்யோ  வஸ்த்ரலதரம்-என்கிறபடி-
ஆப்த தமமாய் -ஸ்ருதி ஸ்மரதி மம ஆஜ்ஞ்ஞை  -என்றும் —தன்னுடைய சாசனா ரூபமாய் இருந்துள்ள

வேதத்தினுடைய பிரகாரத்தை -த்யாஜ்ய உபாதேய விவேசன ரூபமான சிஷையை

சத்யம் வத -தர்மம் சர -ஸ்வாத் யாயான் மாப்ரமத -ஆசார்யாய ப்ரியம் தனமாஹ்ரத்த்ய பிரஜாதந்தும்
மாவ்யவச்செத்ஸீ  -என்றும் வேத புருஷனாலே போதிக்கப்பட்ட பிரகாரத்தை -என்றபடி –தேரார் -என்று –
நிரூபிக்கிறிலர்-என்று -இதமஸ்தீத மபிமே பவிஷ்யதி புனர்த்தனம் -அ ஸௌ மயாஹதஸ் சத்ரூர் ஹ நிஷ்யோ
சாபரா நபி  -என்ற ராவணா திகளைப்    போலே -வேதத்தை தெளிந்து வைத்தே -தத் விபரீத மார்க்க நிஷ்டராய்
போனார்கள் என்று –மாயவன் -சகல ஜகத் காரண பூதனாய் இருந்து வைத்தே ராஷசருக்கு பஷன போக்யமான
மானிட சாதியில் தான் பிறந்தும் -ஒரு திர்யக்குக்கு மோஷத்தை கொடுத்தும் -ஒரு திர்யக்கின் காலில் விழுந்தும்
வானர சேனா பரிவ்ர்தனாய் கொண்டு -கடலை யடைத்தும் -ஒருக்காலும் ஒருவரும் கண்டும் கேட்டும் அறியாத
நரசிம்ஹா ரூபேண ஆவிர்பித்தும் -இப்படிப்பட்ட அநேக ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடைய சர்வேஸ்வரன் –
தீயவரை -ஆஜ்ஞ்ஞாச் சேதீம் மத்ரோஹீ -என்கிறபடியே ஸ்வ ஆஜ்ஞாதி லங்கனம் பண்ணும் அத்யந்த ரோஹிகளான துஷ்டரை
கூராழி கொண்டு -வடிவார் சோதி -என்றும் -ஸ்ப்புரத் சஹஸ்ராரா சிகாதி தீவ்ரம் ஸூ தர்சனம் பாஸ்கர கோடி துல்யம் –
என்றும் சொல்லுகிறபடியே -மிகவும் கூர்மை உடைத்தான திரு வாழியாலே –குறைப்பது -பிராண விநாசி விஷ்னேச் சக்ரம் –
என்கிறபடியே -ஆஸ்ரித விரோதிகளை -முற்றூட்டாக நிரசிக்க கடவ திரு வாழியை தரித்துக் கொண்டு -அத்தாலே
பகலை இரவாக்கி சைந்தனவனை கொன்றதும் –சாமாறு அவனை நீ எண்ணி சக்கரத்தால் தலை கொண்டாய் –

என்கிறபடியே சீமாலியைக் கொன்றதும் –குறைக்கை -சேதிக்கை அஜாயமானோ பஹூதா விஜாயதே -என்றும் -பரித்ராணாய சாதூனாம்  விநாசாய ச துஷ்க்ர்தாம் –

தர்ம சம்ஸ்தாப நார்த்தாய சம்பவாமி யுகே யுகே -என்றும் மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்று சொல்லுகிறபடி
இந்த சம்சாரிகளைப் போலே -தானும் பல பிறப்பும் பிறந்து -திரு வாழி ஆழ்வானை திருக் கையிலே பிடித்துக் கொண்டு
அவன் தனக்கு நிரூபகமாம் படி இருப்பது –வேதாந்தோக்த தர்ம சம்ஸ்தாப நார்த்தமாக -ஸ்வ ஆஜ்ஞ்ஞா அனுவர்த்தனம்
பண்ணுகிற சேதனரை ரஷிக்கைகாகவும் -தத் விரோதிகளாய் -ஸ்வ ஆஜ்ஞ்ஞா   சேதிகளான துஷ்டரை சேதிக்கைகாவும் இறே

பஹிரந்த ஸ்தமச்செதி ஜ்யோதிர் வந்தே ஸூ தர்சனம் -ஏ நாவ்யா ஹத சங்கல்பம் வஸ்து லஷ்மி தரம் விது-என்ன கடவது இறே  இப்படி விரோதி நிரசனம் அர்த்தமாக சர்வேஸ்வரனுக்கு  இத்தனை எத்னம் பண்ண வேண்டி இருந்தாலும்

எம்பெருமானாருக்கு இப்படி எத்தனிக்க வேண்டுவது இல்லை என்கிறார் மேல் -கொண்டலனைய வண்மை –
தம்முடைய அநதிகாரம்  பாராதே கைக் கொண்டு உபகரித்த இதுக்கு வித்தராய் –பாட்டுத் தோறும் இவருடைய-ஔதார்யத்தையெ கொண்டாடுகிறார் காணும் –ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலே
இருந்த இடம் தேடி வந்து உபகரிக்கும்படியான ஔதார்யத்தை உடையராய் –ஏரார் குணத்து -அதி போக்யங்களான
வாத்சல்ய சொவ்சீல்யாதி  குணங்களை உடையராய் –எம் இராமானுசன் –அடியோங்களுக்கு இவ் அதிசயங்கள்
எல்லாம் தெரியும்படி உபதேசித்து அத்தாலே வகுத்த சேஷியாய் இருக்கிற எம்பெருமானார் –அவ் எழில் மறையில் –
பூர்வோக்தமான நிரவதிக தேஜசை உடையதாய் -வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி -என்றும் -ந வேதாந்த சாஸ்திரம் –
என்றும் சொல்லுகிறபடியே  நிஸ் ஸ்மாப்யதிகமான வேதத்தில் -வேதோக்த மார்க்கத்தில் என்றபடி –சேராதவரை
ஆஸ்ரயிதவர்களை  -அப்ராமணிய புத்தியாலும்  அயதார்த்த பிரதிபத்தியாலும் -அதிலே பொருந்தா நிலை உடையரான
பாஹ்ய குதர்ஷ்டிகளை -என்றபடி –சிதைப்பது -பக்னராய் –  பராஜிதராக பண்ணுவது –சிதைக்கை-அழிக்கை –
அப்போது ஒரு சிந்தை செய்தே -அந்த பிரசங்க காலத்திலே தானே -சஏநாந பிரம்மம் கமயதி -என்றும்
பிரம்ம வேதி பிரம்மை வபவதி–இத்யாதி வாக்யங்களுக்கு உட்பொருள் அறியாதே -அபார்த்தங்களை சொல்லி
அபலாபித்தவர்களைக் குறித்து -பிரணவோத நுச்சரோ  ஹ்யாத்மா பிரம்ம தல்லஷ்ய முச்யதே -அப்ரமத்தேன
வேத்தவ்யம் சரவத்மன்வயோ பவேத் -என்றும் ஸ்ருதி வாக்யத்துக்கு ததாத்விகையான வொருயுக்தியாலே
அவர்கள் சொன்ன அபார்த்தங்களை கண்டித்து அருளி அவர்களை நிர்மூலம் பண்ணினார் என்றபடி –
ஸ்வ சித்தாந்த த்வாந்த ஸ்திதிரக்ர்தக துர்வாதி பரிஷத்திவாபித ப்ரேஷாதி நகர சமுத்தான பருஷ –
என்னும்படி இறே இவர் விஷயமான ஸ்ரீ சுக்தி இருப்பது –ஆக சர்வ  சக்தி யுக்த்தனான சர்வேஸ்வரனிலும் காட்டில்
இவர் அனாயேசன விரோதிகளை நிரசித்தார் என்று இவர் தம் பிரபாவத்தை கொண்டாடினார் ஆய்த்து –
————————————————————————–

அமுது விருந்து –

அவதாரிகை –
எம்பெருமானார் உரைத்த உண்மை நல் ஞானத்திற்குப் பகைவரான புறச் சமயத்தவரையும் –
அகச் சமயத்தவரான குத்ருஷ்டிகளையும் -களைந்து எறியும் விஷயத்தில் சர்வேஸ்வரனைப்
பார்க்கிலும் அவ் எம்பெருமானார் எளிதினில் காட்டி யருளும் திறமையை பாராட்டி
அதனில் ஈடுபடுகிறார்  .
பத உரை –
மறையின் -வேதத்தின் உடைய
திறம்-பிரகாரத்தை
தேரார் என்று -தெளிந்து கொள்ளாதவர்களாய்  இருக்கிறார்களே என்று
மாயவன் -வியக்கத் தக்க அறிவாற்றால் வாய்ந்த சர்வேஸ்வரன்
தீயவரை -கொடியவர்களை
குறைப்பது -துண்டிப்பது
கூராழி கொண்டு -கூர்மை வாய்ந்த சக்ராயுதத்தினாலே
கொண்டலனைய -மேகத்தை ஒத்த
வண்மை -வள்ளல் தன்மை வாய்ந்தவரும்
ஏரார் -அழகார்ந்த
குணத்து -குணங்கள் உடையவருமான
எம் இராமானுசன் -எங்களுக்கு தலைவரான எம்பெருமானார்
அவ் எழில் மறையில் -அப்படிப்பட்ட அழகிய வேதத்தில்
சேராதவரை -ஏற்புடமை இன்மையால் பொருந்தாதவர்களை
சிதைப்பது -சிதைந்து அழியும் படி செய்வது
அப்போது ஒரு சிந்தை செய்தே -அவ்வப்போது தோன்றும் ஒவ்வொரு யுக்தியைக் கொண்டே
வியாக்யானம் –
தேரார் குறைப்பது –
மறையின் திறத்தை எவ்வளவு எடுத்து உணர்த்தினாலும் தெளிகிலரே என்று
வைதிகர் இல்லாத தீயவரை மாயவன் குறைக்கின்றான் .
மறையின் திறங்களாவன-நித்தியமாய் இருத்தல் -ஆராலும் ஆக்கப்படாமை -பிரத்யஷ பிரமாணம் –
முதலிய பிரமாணங்களை விடச் சீரிய பிரமாணமாய் இருத்தல் –
ஆப்த தமமாய் எல்லா சேதனருக்கும் நல்லதும் தீயதும் உணர்த்துதல் –
எம்பெருமானுடைய ஆஜ்ஜையாய் இருத்தல் -என்பவையாம் .
தனது ஆணையான மறையை  ஏற்காதவர்கள் -த்ரோஹிகளாய்  ஆதலின் –தீயவர்கள்
ஆகிறார்கள் .சாஸ்திர விதியை மீறுபவர்கள் தன்னோடு மாறுபடும் அசுரர்கள் ஆதலின்
அவர்களைத் தன் கூராழி கொண்டு குறைக்கிறான் மாயவன் -அசுரப் பிறப்பாளர் -ஒரு காலும்
மறையின் திறம் தேராதவர்கள்ஆதலின் –அவர்களை கூராழி யால் குறைப்பது தவிர்க்க
ஒண்ணாதது ஆயிற்று –
மாயவன் –
ஆச்சர்யமான அறிவும் ஆற்றலும் வாய்ந்தவன் .
அவன் அறிவும்   ஆற்றலும் மறையின் திறம் தேராதவரை குறைப்பவனாய் இல்லை .
கூராழி கொண்டே குறைக்க வேண்டியதாயிற்று
இங்கனம் குறைக்கும் இறைவனை இறக்கிப் பேசுகிறார் .
கூராழி கொண்டு குறைத்ததும் -இறைவனது ஆற்றலால் ஆவதன்று –
அது ஆழியின் கூர்மையினால் ஆவது என்பது தோன்ற –கூராழி கொண்டு –என்கிறார் .
கருதும் இடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் -என்றபடி -கருத்தறிந்து பணி புரியும்
பெற்றிமை வாய்ந்த திவ்ய ஆயுதம் அன்றோ –திருவாழி -அது தன் கூர்மையாலே
குறைத்து -தான் கருவியாய் நின்று -மாயவன் குறைத்தான் என்று -சர்வேஸ்வரனுக்கு
பேர் வாங்கி கொடுக்கின்றது -என்க ..
பஹி ரந்தஸ் தமச்சேதி ஜ்யோதிர் வந்தே சூதர்சனம்
ஏனா வ்யாஹத சங்கல்பம் வஸ்து லஷ்மீ தரம் விது-என்று
எதனால் திருமகளைத் தாங்கும் பரம் பொருள் தடைப்படாத சங்கற்பம் வாய்ந்ததோ
உள்ளும் புறமும் உள்ள இருளைத் தொலைப்பதும் சூதர்சனம் எனப்படுவதுமான
அத்தகைய ஜ்யோதிசை வந்தனம் செய்கிறேன் -என்றபடி மாயவனுக்கு  மகிமை எல்லாம்

சூதர்சனம் என்னும் திரு ஆழியால் வந்தது அன்றோ –கொண்டலனைய –சிந்தை செய்தே-மாயவன் தீயவரை குறைக்க கூராழியின் உதவியை நாட வேண்டிய நிலை கூறப்பட்டது .கீழே –மற்று ஒன்றின் உதவியை நாடாது தாம் சிந்தை செய்தே எம்பெருமானார் எளிதில்-அச் செயலை முடிந்தமை கூறப்படுகிறது மேலே .

உயிர் அளிப்பான் திரிந்து அனைவருக்கும் இயல்பாய் உபகரித்தலின் எம்பெருமானார்
வண்மை கொண்டலனைய தாயிற்று .அவ் வண்மை யினால் தாம் உய்ந்தமை தோற்ற மீண்டும்-மீண்டும் கொண்டாடி -அக்குணத்தில் ஈடுபட்டு தனித்து எடுத்து அதனைப் பேசுகிறார் அமுதனார் ..
வண்மை போலத் தமக்கு மற்றைய குணங்களும் மிகவும் இனியனவாய் இருத்தலின் –ஏரார் குணம் –என்கிறார் .
இவ் வண்மை யிலும் குணத்திலும் ஈடுபட்டு தாம் தோற்றமை தோற்ற –எம்மிராமானுசன் -என்கிறார் .
எமக்கு சேஷியான இராமானுசன்-என்றபடி .
அவ் எழில் மறை-
கீழ்ச் சொல்லப்பட்ட -திறம் வாய்ந்து என்னும் தன் சீர்மை குன்றா மறை என்றபடி –
மறைக்கு எழில் ஆவது -என்றும் தடை இன்றி மேன்மேலும் வளரும் பிரமாணத் தன்மை -என்க .
மறையில் சேராதவர் –
மறையை பிரமாணமாக  ஏலாமையாலும்-பிரமாணம் இல்லாத அதனை நம்பலாகாது என்னும் எண்ணத்தாலும் –
அது கூறும் நெறியில் பொருந்தாத நிலை உடையவர்கள் –தாயைக சிந்துவான எம்பெருமானார் தூய மறை
நெறி தன்னை எடுத்து கூறி புத்தி புகட்டினாலும் -கேளாது -பண்டைய நிலை குலையாமல் இருக்கும்
இயல்பினரை சிதைப்பது தவிர வழி இல்லை -என்க .
அப்போது சேராதவரை சிதைக்கின்ற வேளை எல்லாம் என்றபடி –
இதனுக்கு ஏற்ப -அவ்வப்போது என்று இதனுக்குப் பொருள் கொள்க .
இங்கனமே ஒருசிந்தை செய்து -என்பதற்கும் ஒவ் ஒரு சிந்தை செய்து -என்று பொருள் உரைக்க .
இப்பாசுரத்தில் மாயவன் செய்த செயலுக்கும்
எம்மிராமானுசன் செய்த செயலுக்கும் -காட்டப்பட்ட வேறு பாடுகள் நன்கு உணரத் தக்கன .
1-மாயவன் மறையின் திறம் தேராதவர்களை புத்தியினால்  வெல்லலாகாது
 கைப்பிடித்த படையினால் வெல்லுகிறான் ..
எம்மிராமானுசனோ மறையில் பொருந்தாத அன்னாரைத் தம் யுக்தியினாலேயே வென்று விடுகிறார் ..
2-மாயவன் குறைக்கிறான் -குறைப்பது மீண்டும் தளிர்ப்பதும் உண்டு
இராவணன் தலை அற்றற்று வீழ மீண்டும் முளைத்தன அன்றோ –
எம்மிராமானுசனோ –சிதைக்கிறார் -சிதைத்தது மீண்டும் தளிர்க்க வழியே இல்லை
3-மாயவன் வேறு ஒரு பொருளான ஆழி கொண்டு குறைக்கிறான்
எம்மிராமானுசனோ தம் சிந்தனா சக்தியாலே சிதைக்கிறார் .
4-மாயவன் குறைப்பது என்றும் உள்ள கூராழி என்னும் ஒரே கருவி கொண்டே
எம்மிராமானுசன் சிதைப்பதோ அவ்வப்போது புதிது புதிதாய்த் தோற்றும் சிந்தை கொண்டே
அப்போதொரு சிந்தை செய்தே –
ப்ரஜ்ஞா நவ நவோன் மேஷ சாலி நீ பிரதிபாமாதா -புதிது புதிதாக தோன்றி விளங்கும் அறிவு பிரதிபை -என்று கொள்ளப்படுகிறது -என்றபடி இங்கே கூறப்படும் சிந்தையை பிரதிபை என்று உணர்க ..
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது ..

பால்ய /சேஷ்ட்டி தங்களால் எதிரிகளை முடித்தான் கண்ணன்/ராமன் ராவண யுத்தம் பெரிசு/ அந்த கண்ணன் கூட சக்ராயுதம் உபயோகிக்க வேண்டி இருந்தது..அப் பொழுது ஒரு சிந்தை செய்தே-அப் அப் பொழுது ஒவ் ஒரு சிந்தை செய்தார்/ததா யதாகி தர்மம் தலை குனிவு ஏற்படும் பொழுது பிறக்கிறான்/ஸ்வாமி யுக்தி ஒவ் ஒன்றாலும் நிரசிகிறார் //மாயவன் தீயவரை கூராழி கொண்டு குறைக்கிறான்/கருதும் இடம் பொருது கை நின்ற சக்கரத்தான்/கொண்டல் அனைய வண்மை-ஏரார் குணம்-குண கூட்டங்கள்- நிகர் இல்லாத-எம்பெருமானார்-சிதைப்பது அப் பொழுது ஓர் சிந்தை செய்தே//புதுசு புதிசாக யுக்தி பண்ணி/..நாலாவது பாசுரம் -இதிலும் -எம்பெருமானாரின் வண்மை பேசுகிறார் .//உண்மை நன் ஞானம் -விரோதிகளான பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசிக்கும் அளவில் -//சர்வேஸ்வரன் விட அநாயாசேன செய்து அருளின பிரகாரத்தை அனுசந்தித்து மகிழ்கிறார்/மறை- நித்யம்-அபௌருஷேயம் – பிரத்யட்ஷம் அனுமானம் போன்ற பிரமாண  விலஷண்மாய்-ஆப்த தமமாய்-சமஸ்த சேதன ஹித அஹித ஞாபகமாய்-புதுசாக உணர்த்தவில்லை- நினைவு படுத்தத்தான் வேதம்-சாஸ்திரம்–தம் உடைய சாசன ரூபமாய் இருந்துள்ள வேதம் //திறம்-பிரகாரத்தை -நிரூபிக்கிரிலர்கள் என்று ஆச்சர்ய ஞான சக்திகனான சர்வேஸ்வரன் -நியமிக்க தெரிந்தவன்–ஸ்வ ஆக்ஞா திலங்கன சீலரான துஷ்டரை -சேதித்து அருளுவது-குறைப்பது- சிதைப்பது இல்லை-கூரிய திரு ஆழியாலே–சகாய நிரபேஷம் -கூட இதை எதிர் பார்கிறான்-பிரபத்தி கூட சக காரிஎதிர் பார்க்காது -//சர்வ விஷயமாக உபகரிக்கும் படி யாலே மேகத்தோடு ஒக்க சொல்லலாம் படி ஒவ்தார்யம்-மூன்று பாசுரங்களில் அருளியதை இங்கும் பின் னாட்டுகிறது -அநுத்தமான கல்யாண குணங்களை உடையவராய்,நமக்கு சேஷி களாய் இருக்கிற எம்பெருமானார்,-எங்கும் தீர்தகராய் திரிந்து-மேகம்  போல/வெளுத்த மேகம் கொடுக்க ஒன்றும் இல்லை என்றி வெட்கி ஓடி போகும் கருத்த  மேகம் பொழிய இறங்கி வரும்/கல்யாண குணங்களுக்கு தோற்று-எம் ராமானுசர்/அந்த விலஷண்மான-எழில்- தடை இன்றி வளரும்-மறை-சேராதவர்-அப்ராமாண்ய  புத்தியிலும்  யதார்த்த பிரதி பத்தியாலும் பொருந்தாத நிலை உடையவர்களை பங்கித்து அருளுவது-தாதாத் விகைகளான யுக்திகளாலே-அப்போது ஒரு விசாரத்தை பண்ணுகை–அவன் ஒரே ஆழி கொண்டு -இவரோ அப் பொழுது யுக்தி மாற்றி/கூர் ஆழி -கொண்டு- –கூர்மையை எதிர் பார்த்து இருக்கிறான்-..ஈதோர் வீர்யம் இருக்கும் படியே என்று ப்ரீதராய் அருளுகிறார் அமுதனார்–குறைக்கை-செதிக்கை–மறு படியும் துளிர்க்கும்-.. சிதைக்கை-–அழிக்கை –மீண்டும் வராமல் பண்ணுவார் /

/மழுங்காத ஞானமே படையாக ஸ்வாமி /அவரே நேராக–சுடர் சோதி மறையாதே -தானே வந்து கூர்மை வைத்து அவன் முடிக்கணும்../சிந்தை-பிரதிபா- பிரக்ஜை-உதித்து கொண்டே இருக்குமாம் //சன்மம் பல பல செய்து அநேக யத்னங்களையும் பண்ணி சக்ர கதனாய் கொண்டு-பீஷ்மரை முடிக்க இரவி மறைக்க -தூத்ய சாரத்திய பிரத்யனமும் பண்ணி சக்ர ஆயுதம் கொண்டு பண்ணினான் அவன்/திரண்டு கிடக்கும் பாஹ்ய குத்ருஷ்டிகள்/ யுக்தியால் ஸ்வாமி -முடித்தாரே //சாஸ்திரம் யோநித்வாத்-வேதம்  ஒன்றாலே அவனை தெரிந்து கொள்ள முடியும்-சாதனா ரூபமாய் விவேக ஞானம் கொடுக்க அருளினான் -நீர்மையினால் அருள் செய்தான்-சுருதி ஸ்ம்ருதி மம வாக்கியம்/ராவண ஹிரன்யாதிகள் போல-வேதம் தெரிந்தும் விபரீத வழியில் போனார்களே-மாயவன்– ஜகத் காரண பூதன்- ராஷசர் உண்ணும்-பஷனனமான ஜாதியில் பிறந்து-திர்யக் க்கு மோஷம் கொடுத்தான் –திர்யக் காலில் விழுந்தும் ,-ஸ்தம்பத்தில் இருந்து ஆவிர்பவித்தும்..-இப்படி எல்லாம் உயர்ந்த செயல்களை செய்தும் –அலங்கிரித்த சிரை சேதம்-

ஆஸ்ரித விரோதிகளை முற்றூட்டாக  நிரசிக்க கூர் ஆழி  வேண்டுமே -இரவி மறைத்தும்-சாமாறு அவனை நீ  சக்கரத்தால் தலை கொண்டாய் -சீமாலிகன்-அது  இது உது- உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்.-ஆழ்வார்களுக்கு மட்டுமே காட்டிய சிலவற்றில் இதும் உண்டு./குறைப்பது -சிதைப்பது–அஜாயமானோ பகுதாம் விஜாயதே மாறி மாறி பல பிறப்பும் பிறந்து-சம்சாரிகளை போல பல தடவை பிறந்து-திரு ஆழி ஆழ்வானை திரு கைகளில் கொண்டு/

/திரு புல்லாணி பாசுரம்-ஓதி -பய படுத்துவர் கலியன்-பயந்து சேவை சாதிப்பான் நமக்கே நலம் ஆதல்  பக்தி கூட சொரூப விருத்தம்– மார்பில் கை வைத்து உறங்க கடவோம்//வழி அல்லா வழி சென்று பிரத்யத்தனம்-கொண்டால்–கை கொண்டு உபகரித்த தால்  பாட்டு தோறும் ஒவ்தாரத்தை கொண்டாடுகிறார்//தேடி வந்து -ஏரார் குணத்து எம்-இராமனுசன்-அடியோங்களுக்கு காட்டி கொடுத்த-பிரான்-அமலன் ஆதி  அடியார்க்கு ஆட படுத்திய -என்று காட்டி கொடுத்த உபாகாரன்-அது போல இங்கும் காட்டி கொடுத்த உப காரன்..ந வேதந்தாது சாஸ்திரம்- த்வயத்தை  விட ஷேமம் வேற ஒன்றுமில்லை-தேசிகன்-சிதைப்பது -அழித்தல்//பிரணவம் தனுஸ்-சரவது தன் மையோ பவது- துருஷ்டாந்தம்-அம்பும் லஷயமும் ஒன்றாக ஆகும்- இல்லைஆசார்யன் வில்லாளி வில் பிரணவம் என்றுஅது அதுவாக பாவம் உள் பொருள்/ ஐக்கியம் இல்லைஅப் பொழுது ஒரு சிந்தை செய்து /அப்பு-அப்பு-இரண்டு மடங்கு / அப்பு- உப்பு- /-உப்பு கரிக்குமே-நிர்விகார தத்வம்../ராமனுஷ திவாகரன்- பிரபாவம் கொண்டாடுகிறார் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: