அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–73-வண்மை யினாலும் தன் மாதகவாலும் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை .
எழுபத்து மூன்றாம் பாட்டு -அவதாரிகை –
இப்படி இவர் வித்தராகிறதைக் கண்டவர்கள் -உமக்கு உஜ்ஜீவன ஹேதுவான
ஜ்ஞான பிரேமங்கள் உண்டாகையாலே தரித்து இருக்கலாமே -என்ன
தம்முடைய ஔதார்யாதிகளாலே இந்த லோகத்தில் உள்ளார்க்கு தாமே
ரஷகராய் யதா ஜ்ஞான உபதேசத்தை பண்ணின எம்பெருமானாரை அனுசந்தித்து
இருக்கும் பலம் ஒழிய எனக்கு வேறு ஒரு தரிப்பு இல்லை என்கிறார் .
 
வண்மை யினாலும்  தன் மாதகவாலும் மதி புரையும்
தண்மை யினாலும் இத்தாரணி யோர்கட்குத் தான் சரணாய்
உண்மை நன் ஞானம் உரைத்த விராமானுசனை வுன்னும்
திண்மை யல்லால் எனக்கில்லை மற்றோர் நிலை நேர்ந்திடிலே – – 73- –
வியாக்யானம்
அர்த்த கெளரவம் பாராதே உபகரிக்கைக்கு உறுப்பான தம்முடைய ஔதார்யத்தாலும் –
துர் கதி கண்டு பொறுக்க மாட்டாத பரம கிருபையாலும் –
தாப ஹரனுமாய் -ஆஹ்லாத ஹரனுமான  சந்தரனைப் போலே இருக்கிற
தண்ணளி யாலும் -அறிவினால் குறைவில்லாத -திருவாய் மொழி -4 8-6 —
இந்த விபூதியில் உள்ளவர்களுக்கு தாமே ரஷகராய் கொண்டு பாரமார்த்திகமாய்
விலஷணமான ஜ்ஞானத்தை உபதேசித்த எம்பெருமானாரை ரஷகராக
அனுசந்தித்து இருக்கும் பலம் ஒழிய ஆராய்ந்து பார்க்கில் எனக்குவேறு
 ஒரு தரிப்பில்லை –
தண்மை -தட்பம் -அதாவது குளிர்த்தி
திண்மை -திண்ணிமை -அதாவது -மிடுக்கு .
ஞான பக்திகள் கொண்டு உஜ்ஜவிக்கலாமோ என்னில் -நம்முடைய -அஹங்காரம் இல்லாமல் —ஸ்வாமி தயை வண்மை கொண்டே உஜ்ஜவனம் / இரக்கமே உபாயம்
தன் வண்மை -ஸ்வாமி வண்மை வாசி / வண்மை யினாலும் -வள்ளல் தனத்தாலும்/ தன் மா தகவலும் -சீரிய அருளினாலும் / தன் மதி புரையும் -சந்திரனை ஒத்த
தண்மை யினாலும்-
வேதம் கீதை ஸ்வாமி -மூன்று வண்மை -அதிகாரி பார்க்காமல் நமக்கு வேண்டியதை மட்டும் / மா தகவு –இரண்டு திருக் கண்களும் சந்திரன் போலே -/ ஸ்ரீ பாத தீர்த்தம் மூலம் -திருவடி நிலைகளை –சாளக்கிராமம் -முதலியாண்டான் -/ தகவு மா தகவு தன் மா தகவு -மூன்று நிலை /-அதிகாரி பேதம் பார்க்காமல் ததேவ உபாயம் உபேயம் –ஆச்சார்ய அபிமானம் ஒழிய கதி இல்லையே -ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானத்தை குழைத்து கொண்ட இவனுக்கு —
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை -கீழ் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய ஔதார்யத்தாலே தம்மை ததீயருடைய
சேர்த்தியில் சேர்த்து அருளினர் என்று -அனுசந்தித்து இவர் வித்தராய் இருந்தவாறே -அருகே இருந்தவர்கள் –
உமக்கு அவர்கள் பக்கல் ஞான பிரேமங்கள் உண்டாகையாலே -அவற்றைக் கொண்டு ஈடேறலாமே என்ன –
வதான்யதையாலும் -அதுக்கு ஹேதுவான பரம கிருபையாலும் -சகல ஜனங்களையும் ரஷிக்கும்போது –
சீறுபாறு செய்யாமைக்கு உடலாய் -ஆஹ்லாத கரனான சந்தரனைப் போலே இருக்கிற தண் அளியாலும்
இந்த பூ லோகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கட்டடங்க தமோ ரஷகராய் கொண்டு -யதா வஸ்த்திதமாய் –
விலஷணமான ஞானத்தை உபதேசித்து அருளின எம்பெருமானாரே ரஷகர் என்று அனுசந்தித்து கொண்டு
இருக்கையே நான் ஈடேறு கைக்கு  உடலாய்  விடும் இத்தனை ஒழிய -என்னுடைய ஞான பிரேமங்கள்
அதுக்கு உடல் அன்று –என்கிறார் –
வியாக்யானம்வண்மை யினாலும்  -அர்த்த கௌரவத்தையும் -அதிகாரி மாந்த்யத்தையும் பாராதே சர்வரையும்
சம்சாரத்தில் நின்றும் உத்தரிப்பிக்குமதான ஸ்ரீ பாத தீர்த்தத்தையும் -திருவடிகளையும் -லோகம் எல்லாம்
பருகும்படியாகவும் -சேவிக்கும்படியாகவும் -சாளக்ராமத்தில் பிரதிஷ்டிப்பைக்கும் -பரம குஹ்யமான
சரம ஸ்லோக அர்த்தத்தை பூரி தானமாக கொடுக்கைக்கும் -தத்வே நயஸ் சித் அசித் ஈஸ்வர தத் ஸ்வ பாவ
போகாபவர்க்க  தநுபாய கதீருதார -என்றால் போலே ஸ்ரீ பாஷ்ய கீதாபாஷ்யாதிகளைப் பண்ணி யருளி சர்வ

விஷயமாக உபகரிக்கைக்கு உடலான ஔதார்யத்தாலும் –

இப்படிப் பட்ட ஔதார்யத்துக்கு  மூலம் ஏது என்றால் –தன் மா தகவாலும் -ஏவம் சம்ஸ்ர்தி சக்ரச்தே
ப்ராம்ய மானேஸ்வ கர்மபி -ஜீவேது காகுலே விஷ்ணோ க்ர்பாகாப்யுஜாயதே -என்றும் -சம்தப்தம்
விவிதைர்த்தும் கைர்த்தூர் வசைரேவ மாதிபி -என்றும் சொல்லுகிறபடியே -சம்சார கர்த்தத்தில்   விழுந்து
அழுந்தி கிடக்கிற சம்சாரிகளுடைய துர்கதியைக் கண்டு பொறுக்க மாட்டாத பரம கிருபையாலும் -தன் மாதகவாலும் –
வந்தேறி யன்றே ஸ்வா பாவிகமாய் -அத்யந்த விலஷணமாய் -பர துக்க அசஹிஷ்ணுத்வம் கிருபை எண்ணும்படியான

தன் சீர் அருளாலும் -மதி புரியும் தண்மை யினாலும் -சர்வ ஜன ஆஹ்லாதகரனான சந்தரனைப் போலே சர்வ ஜன ஹர்ஷ-ஹேதுவாய் கொண்டு  மகத்தான தண் அளியாலும் -தண்மை -குளிர்த்தி -புரை  -பெருமை -ஹரிர்  துக்காநிபந்தேப்யோ  ஹித புத்த்யாக ரோதிச -சாஸ்திர ஷாராக் நிகர்மானி ஸ்வ புத்ராய யதாபிதா -என்கிறபடியே

ஹிதத்தை பண்ணிப் போருகை அன்றிக்கே -பித்த ரோகத்துக்கு மருந்தாக பாலைக் குடிப்பாரைப் போலே
ஸ்வ பிரகாரத்தாலும் ஆஹ்லாதகரமான தண அளிவை வடிவாகக் கொண்டு இருப்பது என்றபடி –
இத் தாரணி யோர்கட்கு தான் சரணாய் – இப்புடைகளாலே -உபாஸ்மர்த்தா -என்றுமுபாய உபேய பாவேன
தமேவ சரணம் வ்ரஜேத்  – என்றும் ஸ்வ அபிமானத்தாலே ஈஸ்வர அபிமானத்தை தொலைத்து கொண்ட
இவனுக்கு ஆசார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை -என்று சொல்லுகிற கட்டளையால் தாம் ரஷகராய் –
ச ஏவ சர்வ லோகாநா முத்தர்த்தா நாத்ர சம்சய -என்றும் தஸ்மின் ராமானுஜார்யே குருரிதசபதம் பாதி நாத்ய த்ர
தஸ்மாத் சிஷ்ட ஸ்ரீ மத் குருணாம் குலமிதமகிலம்   தஸ்ய நாதஸ்ய சேஷ -என்னக்கடவது இறே –
உண்மை நன் ஞானம் உரைத்த -தத்வ ஹிதபுருஷார்த்த யாதாம்ய ஹித ரூபமாய் -சார தமமாய் -இருக்கிற
ஞானத்தை உபதேசித்த -பஜேத் சாரதமம்  சாஸ்திரம் ரத்நாகர இவாம்ர்தம் -சரவதஸ் சாரமாதத்யாத் புஷ்பேப்ய
இவ ஷட்பத -என்னக் கடவதிறே – இராமானுசனை உன்னும் திண்மை யல்லால் –எம்பெருமானாரே ரஷகர் என்று
அத்யவசித்து இருக்கும் பலம் ஒழிய –திண்மை -திண்ணிமை -அதாவது-மிடுக்கு –மற்றோர் நிலை நேர்ந்திடில் -எனக்கு
நன்றாக கொண்டு நிரூபித்து பார்த்தால் -என்னுடைய ஞானமும் ப்ரேமம் தொடக்கமான வேறு சிறிதும் எனக்கு இல்லை –
அகிஞ்சனனாய் அநந்ய கதியாய் இருக்கிற எனக்கு தாரகமாய் மாட்டாது என்று தம்முடைய பாரமைகாந்த்யத்தை
யருளிச் செய்தார் ஆய்த்து –
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
இங்கனம் எம்பெருமானார் உடைய மிக்க வண்மை யினால் இவர் ஈடுபடுவதைக்
கண்டவர்கள் -ஞானமும் ப்றேமமும் உய்வதற்கு ஹே துக்களாக உம்மிடம்
இருப்பதனால் -நீர் தரித்து இருக்கலாமே -என்ன –
தம்முடைய வள்ளன்மை முதலியவற்றால் இவ் உலகத்தவர் கட்குத் தாமே
ரஷகராய் -உண்மையான ஞானத்தை உபதேசித்து அருளும் எம்பெருமானாரை
ரஷகராக அனுசந்திக்கும் பலம் ஒழிய எனக்கு வேறு ஒரு தரித்து இருக்கும்
நிலை இல்லை என்கிறார் .
பத உரை –

தன்-தன்னுடைய

வண்மை யினாலும்   -வள்ளல் தனத்தாலும்
மா தகவலும் -சீரிய அருளினாலும்
மதி புரையும் -சந்திரனை ஒத்த
தண்மை யினாலும் -குளிர்ச்சி யினாலும்
இத் தாரணி யோர்கட்கு -இந்தப் பூமியில் உள்ளவர்களுக்கு
தான் சரணாய் -தானே ரஷிப்பாராய்
உண்மை-பரமார்த்தமானதும்
நல் -சீரியதுமான
ஞானம் -ஞானத்தை
உரைத்த -உபதேசித்த
இராமானுசனை -எம்பெருமானாரை
உள்ளும் -சரணாக நினைக்கும்
திண்மை யல்லால் -வலிமை ஒழிய
தேர்ந்திடல் -ஆராய்ந்து பார்த்தால்
எனக்கு -அடியேனுக்கு
மற்று ஓர் நிலை -வேறு ஒரு தரித்து இருக்கும் நிலைமை
இல்லை-கிடையாது
வியாக்யானம் –
வண்மை யினாலும்
தன்  என்பதை வண்மை முதலிய மூன்றினோடும் கூட்டுக
எம்பெருமானுக்கும் இல்லாது –எம்பெருமானாருக்கே -தனிப்பட்டு அமைந்து இருப்பவை
வண்மை முதலிய மூன்றும் -என்றபடி .
வண்மை யாவது -தாம் உபதேசிப்பதன் பொருள் சீர்மையை சிறிதும் பாராது
உபதேசத்தை வழங்கும் உள்ளன்மை-
எம்பெருமான் உதவிய வேதமும் கீதையும் போலே சாரதமம் அல்லாத பொருள்களையும் .
கொண்டதாய் அல்லாமல்-சாரதமமான -அதாவது -பொருள் சீர்மை -மட்டும் வாய்ந்த உபதேசத்தை
எம்பெருமானார் வழங்குதலின் -அவரது வண்மை தனிப் பட்டு அமைந்தது -என்க .
மா தகவலும் –
மா தகவாவது -பெறுவோரின் தகுதியையோ -உபதேசிப்பதின் பொருள் சீர்மையையோ பாராது –
உயிர் மாய்தல் கண்டு ஆற்ற மாட்டாது -உபதேசிக்கைக்கு உறுப்பான பரம கிருபை .
இதம் தி நாத பச்காய -தவம் செய்யாதவனுக்கு சொல்லல் ஆகாது -என்னும் கீதாசார்யன் போல் அல்லாது
ருசி -விசுவாசம் இல்லாதாரையும் -வலுவில் ருசி விச்வாசன்களை விளைவித்து
சரம உபாயஸ்த்தர் ஆக்கினமையின் -எம்பெருமானார் உடைய மா தகவு

தனிப்பட்டு அமைந்தது -என்க .மதி புரையும் தண்மை யினாலும் –அதாவது சந்தரன் போலத் தாபத்தைத் தீர்ப்பதும் ஆனந்தப் படுத்துவதுமான குளிர்ச்சி –

உண்மை ஞானத்தை -உபதேசிப்பதனால் சம்சார தாபத்தை தீர்த்தலாலும்-
பகவானுடைய குணங்களை துய்க்க செய்து ஆனந்தப் படுத்தலாலும் –
எம்பெருமானார் இடம் சந்தரன் இடத்தில் போன்ற குளிர்ச்சி உள்ளது என்க .-
சுடர் மா மதி போல் உயிர் க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தன்மை எம்பெருமானிடம்
உள்ளதே யாயினும் அவன் பால் உள்ள ஸ்வா தந்த்ரியத்தின் வெப்பத்தினால் அத் தண்மை
தாக்கு உறுவதும் உண்டு .எம்பெருமானார் இடமும் ஸ்வா தந்த்ரிய வெப்பம் அடியோடு
இல்லாமையின் தண்மை என்றும் குன்றாது -தனிப்பட்டதாய் அமைந்தது -என்க .
மதி புரையும் தண்மை -என்னும் இடத்தில்
சுடர் மா மதி போல் தாயாய் அளிக்கின்ற -என்றபடி தாய்க்கு உபமானமாக சந்தரன் கூறப்-படுவதற்கு ஏற்ப -தாயின் குணமாகிய வாத்சல்யம் -கருதப் படுகிறது .
ஸ்ரீ பராசார பட்டர்-ஔ தார்ய காருணி கதாஸ்ரித வத்சலத்வ பூர்வேஷூ – என்று
வண்மை கருணை அடியார்கள் இடம் வாத்சல்யம் முதலிய குணங்கள் -என்று லோக மாதாவான-ஸ்ரீ ரெங்க நாச்சியார் இடம் இம் மூன்று குணங்களை முக்கியமாக அனுசந்த்திது இருப்பது போலே –
அமுதனாரும் இம் மூன்று முக்கிய குணங்களை எம்பெருமானார் இடம் அனுசந்திக்கிறார் .
இத் தாரணி யோர்கட்குத் தான் சரணாய் –
இருள் தரும் மா ஞாலம் ஆதலின் இத் தாரணியில் உள்ளவர்கள்-தாம் சரணாகுமாறு
கோராததோடு -அறிவினால் குறைவில்லா -என்றபடி அங்கனம் கோரவும் தெரியாதவர்களாகி
விட்டோமே என்னும் குறைபாடும் இல்லாதவர்களாய் இருப்பதை நோக்கி
கீழ்க் கூறிய மூன்று குணங்களாலும் எம்பெருமானார் தாமே சரணாயினார்-என்க .
இத் தாரணி யோர்க்கு சரணானதாக கூறினமையின் சரணாதற்கு அதிகாரி பேதம் இல்லாமை தெரிகிறது .
உண்மை நன் ஞானம் உரைத்த
இதனால் சரணாய் ரஷித்தபடி பேசப்படுகிறது .
உபதேசித்து திருத்தி பணி கொள்வதே எம்பெருமானார் புரியும் ரஷணம் -என்க
உண்மை ஞானம் -பாரமார்த்திக ஞானம்
நல்ஞானம் -ஆனந்தம் ஆகும்ஞானம்
உரைத்தல்-உபதேசித்தல்
மாதகவால் சரணானார்
1-வண்மையினால் தானே சரணானார்
2-தண்மை யினால் உண்மை நன் ஞானம் உரைத்தார் -என்னலுமாம் –
உண்மை ஞானம் உள்ளதை உள்ளவாறே உணர்த்துவதால் தாபத்தை தீர்ப்பதாகவும்
நல் ஞானம் எம்பெருமான் குணங்களை பற்றியதாய் இருத்தலின் ஆனந்தத்தை
 விளைவிப்பதாயும் உள்ளது ..
மதி போன்ற தண்மை யினால் உரைக்கும் ஞானமும் மதி புரைவது ஆயிற்று .
இராமானுசனை —தேர்ந்திடிலே
தாமே ரஷகர் ஆனவரை ரஷகர் என்று அனுசந்திப்பதே பலம் .
ஆராய்ந்து பார்ப்பின் எனக்கு வேறு வகையில் தரித்து இருப்பது இல்லை –என்கிறார் .
————————————————————————–
அடியேன்  கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது
முலையோ முழு முட்டும் போந்தில -கலையோ -அறிவு கண் மலர்ந்து இருக்கும் விலையோ என்று மிளிரும் கண்-
 சின்ன குழந்தைகளுக்கு தாஸ்ய புத்தி சொல்லி கொடுக்கணும்/
/ஜகத்துக்கு காட்டி கொடுத்த கல்யாண குணங்களை –
 சுவாமி குண த்ரயம்-/அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுத்தே
அழகன் மேன்மை எளிமை– ஆழ்வார்/
 மாலே மணி வண்ணா ஆலின் இலையாய்/
ஆஸ்ரித வாத்சல்யம் பரத்வம் /மணியை வானவர்  கண்ணணனை தன்னதோர் அணியை//
-பிராட்டி-  இற் பிறப்பு பொறை கற்பு சேர்க்கை/
நாம்– சத்வ ரஜஸ் தமஸ்/
/இப்படி ஆனந்த பட்டவரை கண்டவர்கள் -ஞான பிரேமங்கள் உண்டுஆகையாலே தரித்து இருக்கலாமே என்ன
 -ஸ்வாமி-தம் உடைய – – வண்மை தகவு தண்மை – ஒவ்தார்யம் , கிருபை ,குளிர்ச்சிஅனுக்ரகம் நிறைந்த கடாஷம்   –கிருபை  தூண்ட
– தானே ரஷகராக இருக்கும் படி –இத் தரணியோர்கள் அனைவருக்கும் உண்மை ஞானம் நல் ஞானம் –யதாஜ்ஞான உபதேசம்-
கொடுத்து அருளி//நினைத்து கொண்டு -இருக்கும் மிடுக்கு கொண்டு–பலம் –திண்மை-ஒழிய -வேறு ஒரு நிலை இல்லை /
/மூலத்தை விட்டு காரியம் மட்டும் பிடித்து கொண்டு இருக்கும் நிலை இன்றி அந்த ஞானம் கொடுத்த ஸ்வாமி ஒருவரையே நினைத்து இருப்பேன்/
/தன் வண்மையினால்-பகவத் வண்மை அதிகாரி கெளரவம்  பார்க்கும் அர்த்தம் கெளரவம் பார்க்காமல்,-ஒவ்தார்யம்-
 துர்  கதி கண்டு பொறுக்க  மாட்டாத மா தகவாலும்-பரம கிருபையாலும்/
 சந்திரன்- ஒத்த- குளிர்ந்த -தாப கரன் ஆக்லாத  கரன் – தண்  அளியாலும் குளிர்ந்த தண்மை /
-அறிவினால் குறை வில்லாத -நெறி எல்லாம் எடுத்து உரைத்தான்-கீதாசார்யன்
–அவன் அர்ஜுனனுக்கு -தூக்கம் ஜெயித்தவன் ஊர்வசி வந்தாலும்  ஏற் எடுத்தும் பார்க்காதவன்-
 ஸ்வாமியோ இந்த விபூதியில் உள்ளவர்களுக்கு எல்லோருக்கும்
–தாமே ரஷகராய் கொண்டு -சரண்-தஞ்சம் புகல் இடம்
/உண்மையான ஆனந்த ஞானம் உரைத்தார்தேர்ந்திடல்– ஆராய்ந்து பார்த்தால் /
/ கிருபா மாத்திர-ஆழ்வான்  -அனுவர்த்தி -ஆண்டான் குற்றம் நீங்கி குணத்தை பெருக்கு-குருக்களுக்கு அனுகூலமாக இருக்கணும்/பயன் நன்றாகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்-அதிகாரம் இல்லை-செயல் நன்றாக திருத்தி பணி கொள்வான்-அதனால் க்ருபா மாத்ரா பிரசன்னாசார்யர்   தான்  ஏற்றம் என்கிறார்- நவ ரத்ன கிரந்தம் தெரியாதவருக்கும்
-ஸ்ரீ பாத தீர்த்தம்ஸ்ரீ முதலி ஆண்டான் – அருளி சம்பந்தம் உணர்த்தி
-திருவடிகளை லோகம் எல்லாம் பெருகும் படியும் .
/சாளக்ராமம் அடை நெஞ்சே-அங்கு கூட ஸ்வாமி எழுந்து அருளி –
தன் மா தகவு– ச்வாபாவிகம்-விலஷனமான- கிருபை சீர் அருள்
/தென் அரங்கர் சீர் அருளுக்கு இலக்காக பெற்றோம்-
/குளிர்ச்சியும் ஆனந்தமும் கொடுக்கும் சந்திரன் போல –மதி புரையும் தண்மை
/அதிகாரி பேதம் இன்றி-அனைவருக்கும்
-குருவே மாதா -வாத்சல்யம்-உபாய உபேயமாக திரு வடிகளை பற்ற கடவன்
–ஸ்வ அபிமானத்தால் ஈஸ்வர அபிமானம்குலைய ஆச்சர்ய அபிமானமே உத்தாரணம்.
./தயைவ சர்வ லோகானாம் சமுத்ரத்தா  ராமானுஜர் -உத்தாரக ஆச்சார்யர் இவர் ஒருவரே-ஆழ்வான் /
/தத்வ ஹித புருஷார்த்த யாத்தார்த ஹித ரூபமாய்   /சார தமம்-அசாரம்  சாரம் சாரதரம் கழித்து
-ஷட் பதம்-வண்டு-தேன் மட்டும் தருவது போல -அருளினார்/
/சுவாமியே ரஷகர் -என்று நினைத்து இருக்கும் பலம்
/ வேதமோ கீதையோ எல்லாருக்கும்  முக் குணத்தவர்க்கும்
-உனக்கு ஏற்றதை நீ எடுத்துகொள்-கீதாசார்யன் சொன்னான் ..
//பரம கிருபை சுவாமிக்கு -ஆசை உடையோர்க்கு எல்லாம் வரம்பு அறுத்தார்
ருசி விசுவாசமும் ஏற்படுத்துவார் சந்தேகம் போக்குவது மட்டும் இல்லை/
/ச்வாதந்த்ர்யம் சூடு உண்டு அங்கு
//சுடர் மா மதி போல் தாயாய் அளிக்கிறான்–ஆழ்வார் அங்கு சுடர் உண்டு.
/ இங்கு மதி மட்டும் தான் சுடர் சம்பந்தம் இல்லை
/ஓவதார்யம் வாத்சல்யம் கிருபை-பிராட்டிக்கு பட்டர்
/மா தகவாலே சரண் ஆனார் -கிருபை ஒவ்தாரத்தாலே
-தானே சரண் ஆகி//மதி புரையும் தண்மை யால் -உண்மை நல் ஞானம் உரைத்தார்
/அகிஞ்சனனாய்   அநந்ய கதியாய்- தாரகம்  வேறு ஒன்றும் -ஆக மாட்டாது தம் உடைய பரம ஏகாந்தயாய்
–ஆத்ம யாத்ரை- பகவத் ஆதீனம் அவன் சொத்து
-சரணாகதி பொழுது சமர்பித்தே விட்டது தேக யாத்ரை
–நம் வசம் இல்லை -இரண்டையும் நினைத்து வாழ்பவனே சரணாகதி//
 ஆறிலே ஒன்றை -ஸ்ரீ பாஷ்யம் கற்று ஆராய்ந்து இருத்தல்
இது முடியவில்லை யாகில் -அருளி செயல் கற்று ஆராய்ந்து இருத்தல்
/இது முடியவில்லை யாகில்–திவ்ய தேசம் கைங்கர்யம் செய்து வர்த்தித்தல்
இது முடியவில்லை யாகில்–திரு நாராயண புரத்தில்  குடிசை கட்டி வர்த்தித்தல்
/இது முடியவில்லை யாகில்–ஸ்ரீ வைஷ்ணவர் நிழலில் ஒதுங்கி வாழனும்
இது செய்தால் மேலே கூறியவை எல்லாம் தானே  கிட்டும்../
/அனுகூலர்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் மட்டுமே என்று எண்ண எண்ண
 பிரதி கூலர்-பகவான் விரோதிகள்
/உதாசீனர்-சம்சாரிகள் /
/ ஸ்ரீ வைஷ்ணவர்களை பார்த்தல் -தன்னை சந்தனம் புஷ்பம் போல-அவர்களுக்கு பாரதந்த்ரனாக  நினைக்கணும் /
 அக்னி விஷ சர்ப்பம் போல நீ அவர் பால் -சம்சாரிகள் -பகவான் விரோதிகள்–சென்று அருக கூசி இருக்கணும்
பகவன் திரு உள்ளம் உகப்பான்- ஸ்ரீ வைஷ்ணவர் இடம் சேர்ந்தால்
/பட்ட மகிஷி  வேறு எங்கோ போனால் போல பகவத் விரோதிகள் இடம் கை நீட்டினால்-/சம்சாரிகள் இடம் போனால் ஞானம் கொடுத்து வீண்
 –ஸ்வாமி யாரையும் சீறாமல் -கிருபை-தண்மை /உள்ளவற்றை – உள்ளபடி கண்டு
-உள்ளபடி உணர்ந்து – -உள்ளபடி உரைத்தவர் -உண்மையான ஞானம்
/நல் ஞானம்– சொரூபம் ரூபம் குணம் விபூதி எல்லாம் அருளி/

இவற்றை நினைந்து ப்ரீதர் ஆகிறார்-

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: