அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–72-கைத்தனன் தீய சமயக் கலகரை-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –

எழுபத்திரண்டாம் பாட்டு -அவதாரிகை
எம்பெருமானாருடைய ஔதார்யத்தாலே தாம் லபித்தவற்றை யனுசந்தித்து
க்ருத்தார்த்தர் ஆனார் கீழ் ..
இன்னமும் அந்த ஔதார்யத்தாலே தமக்கு அவர் செய்ததொரு
மகோ உபகாரத்தை யனுசந்தித்து வித்தராகிறார் .-
கைத்தனன் தீய சமயக் கலகரைக் காசினிக்கே
உய்த்தனன் தூய மறை நெறி தன்னை என்றுன்னி வுள்ளம்
நெய்த்த வன் போடிருந்தேத்தும்  நிறை புகழோருடனே
வைத்தனன் என்னை இராமானுசன் மிக்க வண்மை செய்தே -72- –
வியாக்யானம் –
எம்பெருமானார் நிரதிசய ஔதாரத்தைப் பண்ணி -வேத பாஹ்யங்களாகிய ஹே யங்களான
சமயங்களைப் பற்றி நின்று கலக்கம் செய்கிறவர்களை -நிரசித்து அருளினார் .
பரிசுத்தமான வேத மார்க்கத்தை பூமியிலே நடத்தி அருளினார் .
என்று அனுசந்தித்து ஹ்ருதயம் ச்நிக்தமாய்-அந்த ச்நேகத்தொடே இருந்து ஸ்தோத்ரம்
பண்ணா நின்றுள்ள பரிபூர்ண குணரோடே-இவனும் ஒருவன் என்று பரிகணிக்கும்படி
என்னை வைத்து அருளினார் .
இப்படி செய்து அருளுவதே -என்று கருத்து .
அதவா –
நிறை புகழோர் உடனே வைத்தான் – என்றது
அசத்துக்கள் நடுவே வர்த்திதுப் போந்த வென்னை-அடியோரோடு இருந்தமை -திருவாய் மொழி -10 1-11 –
என்கிறபடியே ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே வர்த்திக்கும் படி மண்ணினார் –என்னவுமாம்
கைதல்-கடிதல்
உய்த்தல்-நடத்தல்
அவ்வன்போடென்கிற விடத்தில் -வகர ஒற்று குறைந்து கிடக்கிறது
அன்றிக்கே
நெய்த்த அன்பென்று -ஒரு பதமாக யோஜிக்க்கவுமாம்
அன்பு நெய்த்து இருக்கை யாவது -சுஷ்க சிநேகமாய் இருக்கை அன்றிக்கே கயலுண்டு இருக்கை
உள்ளம் நெய்த்த வன்பென்றது-உள்ளத்தில் நெய்த்தவன்பென்றபடி.-
சாது சமாஹம் -நழுவ முடியாமல் திருத்துவார்களே -அடியார்க்கு ஆட்படுத்திய விமலன் போலே -நிலை நிற்குமே -கீழே வண்மை /இதில் மிக்க வண்மை -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை-/ உன் அடியார்க்கு ஆட் படுத்தினாய்- ஐந்தாவது பெருமை தனியாக அருளிகிறார் இந்த பாசுரத்தில்/
காசினி வேந்தே —பூ பாலன் –வேத மார்க்க பிரதிஷ்டானம் -காசினிக்கே உய்த்தனன் தூய மறை தன்னை -/வதான்யக -வரதன் -தேவ பெருமாள் அருளால் வந்த மிக்க வண்மை –கொடுக்க கொடுக்க கூடும் வண்மை இது –துர்வாசர் சாபம் கொடுக்க கொடுக்க தபஸ் வளரும் -ஸூ ஸ்ரேயான் பவதி பிறக்க பிறக்க பல் ஒளி மிக்கு அவனுக்கு போலே /
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை -கீழ் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய ஔதார்யத்தாலே இவருடைய அபிமதத்தை
கொடுத்து அருள -இவர் தாம் அவர் தம்மாலே லபித்த புருஷார்த்தங்களை அனுசந்தித்து க்ர்த்தாரானார்  –
இதிலே -எம்பெருமானார் தம்முடைய ஔதார்ய அதிசயத்தாலே அதி ஹேயங்களான வேத  பாஹ்யர் உடைய
சமயங்களைப் பற்றி நின்று கலஹிக்குமவர்களை நிரசித்தார் என்றும் -அத்யந்த பரிசுத்தமான வேத
மார்க்கத்தை பூமியிலே எங்கும் ஒக்க நடத்தி அருளினார் என்றும் -அனுசந்திதுக் கொண்டு ப்ரீதி
பிரகர்ஷத்தாலே ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ள பெரியோர்களுடன் கலந்து -பரிமாறும்படி
அடியேனை வைத்து அருளினார் என்று அனுசந்தித்து வித்தர் ஆகிறார் –
வியாக்யானம்இராமானுசன் -வசீவதான்ய -என்றால் போலே இவ்வளவும் ஔதார்ய குணத்தை இட்டு
பிரதிபாதிக்கப்பட்ட எம்பெருமானார் –மிக்க வண்மை செய்துகொள்ளக் குறைவற்று இலங்கி கொழுந்து-விட்டோங்கிய வின் வள்ளல் தனத்தினால் -என்கிறபடியே கொடுக்க கொடுக்க ஒரு குறைகளும் இன்றிக்கே –
சாணை பிடித்த மாணிக்கம் போல் மிகவும் பிரகாசிக்கிற ஔதார்ய குணத்தாலே லோகத்தை எல்லாம்
உத்தரிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி –கைத்தனன் தீய சமய கலகரை -வேத பாஹ்யங்கள் ஆகையாலே
அதி ஹேயங்களான பௌ த்த ஜைன மாயாவாதிகளுடைய குத்ர்ஷ்டி சமயங்களிலே நிஷ்ணாதராய்க் கொண்டு
ஜகத்து ஷணிகம் என்றும் -தத்வம் ஞானம் மாத்ரம் என்றும் -பிரபஞ்சம் மிதியை என்றும் -பிரம்மம் சின்மாத்ரம் என்றும் –

பேதத்தை நிரசித்தும் –

வாக்கு மாத்ரத்திலே வேதத்தை அங்கீகரித்து வைத்து -அதிலே குத்ர்ஷ்டி கல்ப நன்களைப் பண்ணியும்
அவசானத்திலே வேதத்தை மித்யா கோடியிலே யாக்கியும் -இப்படி துஸ் தர்க்கங்களை  சொல்லியும்
கலஹிக்குமவர்களை நிரசித்து அருளினார் –கைத்தல் -கடிதல் -இவர்களுடைய பிரசங்கங்கள் எல்லாம் கலஹங்கள்
விளைவிக்குமது ஒழிய வித்வத் சம்மதங்களான பிரசங்கங்கள் அன்று காணும் -திரு நாராயண புரத்து அருகில்
பௌ த்தரையும் –  திருமலையில் சைவரையும் -சரஸ்வதி பீடத்தில் மாயாவாதிகளையும் -நிரசித்தபடி
சர்வலோக பிரசித்தம் இறே -காதா தாதா கதாநாம்-என்னக் கடவது இறே – காசினிக்கே உய்த்தனன் தூய மறை தன்னை –
காசினிக்கே -அவிவேக கநாந்த திந்முகே பஹூதா -இத்யாதியாலும் -சம்சார மருகாந்தாரே -இத்யாதியாலும்
சொல்லப்படுகிற இருள் தரும் மா ஞாலத்திலே இருந்து சம்சாரித்து கொண்டு நஷ்டப் பிராயராய் போந்த
சேதனரை உத்தரிப்பிக்கைக்காக வே –காசினி-பூமி -பூமியில் உள்ள சேதனரை -என்றபடி -இவர்களுடைய
துக்க பரம்பரைகளைக்  கண்டு பொறுக்க மாட்டாத பரம கிருபா பூர்வாக ஔதார்யத்தாலே –தூய மறைநெறி தன்னை
ப்ரம ப்ரமாத விப்ரலம்பாதிகளும் புருஷ சேமுஷீ தோஷ மாலின்யமும் – ஸ்வ ப்ராமாணயத்தில்  இதர
அபேஷையும் இன்றி இருந்தது ஆகையாலே -சுடர் மிகு சுருதி -என்னும்படி அத்யந்த பரிசுத்தமான
வேதத்தினுடைய மார்க்கத்தை -ஸ்ருதி ஸ்மரதிர்  மமைவாஜ்ஞா-என்கிறபடியே பகவத் ஆஜ்ஞா

 ரூபங்களானபரம விதிக்க தர்மங்களை  என்றபடி –

மறை என்ற நிரூப பதத்தாலே பூர்வோத்தரங்களும் -உத் தர பாகங்களும் -த்ரமிட உபநிஷத்தும்
சூசிப்பிக்க படுகின்றன -ஆக ஸ்ருதி ஸ்மரதி சோதிதங்களான சாமான்ய விசேஷ தர்மங்களையும் –
சகல வேதங்களினுடைய சாரதம அர்த்தமான   சரணாகதி தர்மத்தையும் –உய்த்தனன் –நடப்பித்தார் –
உய்த்தல் -நடத்துதல் -நெறி -மார்க்கம் -என்றுஉன்னி -இவை இரண்டையும் செய்தார் என்று த்ரட அத்யாவச்ய
பூர்வகமாக அனுசந்தித்து –உள்ளம் நெய்தத அன்போடு -திரு உள்ளம் ச்நிக்தமாய் அந்த ச்நேஹத்தொடே –
அவ்வன்பு -என்று சொல்ல வேண்டி இருக்க வகர ஒற்று குறைந்து அவன்பு -என்று கிடக்கிறது -அன்றிக்கே –
நெய்த்தவன்பென்றது -உள்ளத்தில் நெய்த்தவன்பென்றபடி-இருந்தேத்தும் -இப்படிப்பட்ட சிநேகத்தோடு இருந்து
கொண்டு -அந்த ச்நேஹமானது சந்துஷணம் பண்ணவே  -பாஷண்ட த்ரூமஷண்ட தாவதஹன-இத்யாதிப் படியே

அவரை ஸ்தோத்ரம் பண்ணா நின்றுள்ள –

நிறை புகழாருடனே-பரி பூர்ண குணர் உடன் — அடியார் குழாம் களை உடன் கூடுவது என்று கொலோ –
என்று பிரார்த்திக்க வேண்டாதபடி -இங்கே தானே -வைத்தனன் என்னை -என்னை சேர்த்து அருளினார் –
வாசா யதீந்திர மனச வபுஷாச  ச யுஷ்மத்   பாதாராவிந்த யுகளம் பஜதாம் குருணாம்–கூராதிநாத குருகேச-முகாத்யபும் சாம் பாதாநுசிந்தன பரஸ் சத்தம்   பவேயம் -என்றும் -த்வத் தாஸ தாஸ கண நா சரமா வதவ்யஸ்-தத்தாசதைக    ரசதா விரதா மமாஸ்து -என்று இத்தை இறே ஜீயரும் பிராரத்து அருளினார் –
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
எம்பெருமானாருடைய வள்ளன்மையால் தாம் பெற்ற பேறுகளை கூறினார் கீழே .
அவ்வள்ளன்மை மிக்கு மேலும் அவர் தமக்கு செய்து அருளிய பேருதவியை நினைவு கூர்ந்து-அதனிலே ஈடுபடுகிறார் .
பத உரை
இராமானுசன் -எம்பெருமானார்
மிக்க -மிகுந்த
வண்மை -வள்ளல் தன்மையை
செய்து -பண்ணி
தீய சமயக் கலகரை -கெட்ட மதங்களைப் பற்றி நின்று கலக்கம் செய்பவர்களை
கைத்தனன் -கடிந்து அருளினார்
காசினிக்கே -பூமியில்
தூய மறை தன்னை -பரி சுத்தமான வேதம் வகுத்த வழியை
உய்த்தனன்-நடத்தி யருளினார் .
என்று உன்னி -என்று நினைத்து
உள்ளம் நெய்த்து -நெஞ்சு நெகிழ்ந்து
 அன்போடு இருந்து -அந்த நெஞ்சு நெகிழ்வோடு இருந்து
ஏத்தும் -துதிக்கும்
நிறை புகழோர் உடனே -நிறைந்த குணம் உள்ளவர்களோடு கூட
என்னை வைத்தனன் -என்னை சேர்த்து வைத்து அருளினார் .
வியாக்யானம்
கைத்தனன் —கலகரை –
தூய மறை நெறிக்கு முரண்பட்ட போய் நெறிகளை கூருமவைகள் ஆதலின் -புறச் சமயங்கள்-தீய சமயங்கள் ஆயின -அத்தகைய சமயங்களைப் பற்றி நின்று மெய் நெறி கூறும்-மறையினை புவியில் பரவ வொட்டாது கலகம்செய்யுமவர்களை கடிந்து களைகின்றார்
எம்பெருமானார் -என்க
காசினிக்கே —தூய மறை நெறி தன்னை
காசினிக்கே -பூமியின் கண் -உருபு மயக்கம்
உலகு எங்கும் வேத மார்க்க பிரதிஷ்டாப  நாசார்யரானார் -என்றபடி .
தூய மறை
மறைக்கு தூய்மையாவது -ப்ரமம் முதலியவற்றுக்கு இடமாகாது இருத்தலும் –
தான் கூருமவற்றுக்கு  வேறு ஆதாரம் தேட வேண்டாதபடி தானாகவே
பிரமாணமாய் இருத்தலும் -என்க .இனி தூய்மையை நெறிக்கு -அடை யாக்கலுமாம் ..
அவப்பொருள் கூறும் குத்ருஷ்டிகள் கற்ப்பித்த தீய நெறிகளை தூறு மண்டும் படி
செய்து -பண்டைய தூய நெறியை உய்த்தனன் -என்றபடி .
என்று உன்னி –வைத்தனன் என்னை
எம்பெருமானார் புற நெறிகளை கட்டு மறை நெறி நடத்துகின்ற துறையிலே
அவரது நுண்ணறிவு -கருணை வண்மை என்னும் குணங்களிலே தோற்று –
நெஞ்சு நெகிழ்ந்து -அந்த அன்போடு இருந்து தோற்ற துறைக்கு
அவ்வன்பினால் துதி பாடுகின்றனர் மறையோராகிய நிறை புகழோர் -என்க .
நெய்த்த அன்போடு-என்பதை
நெய்த்து அ அன்போடு -என்று பிரித்து அ அன்போடு -என்னும் இடத்தில்
சுட்டுக்கு மேல் வகர உடம்படு மெய்க்கு முன்னர் வகர ஒற்று கேட்டது -என்று அறிக .
அவ்வன்பு -என்று இருத்தல் வேண்டும்
இனி சுட்டாக கொள்ளாமல் நெய்த்த அன்போடு -என்று பிரித்தலுமாம்-
அன்பு நெய்த்து இருந்ததாவது -வறண்டு போகாது என்றும் புதுமை பெற்று இருத்தல் .
உள்ளம் நெய்த்த அன்போடு -என்பதற்கு -உள்ளத்தில் நெய்த்த அன்போடு என்று பொருள் கொள்க .
இருந்து ஏத்துதல்-இடைவிடாமல் துதித்து கொண்டு இருத்தல்
நிறை புகழோர் -குணம் நிரம்பினவர்
புகழ்-குணம்
புகழோர் உடனே வைத்தல்-குணம் நிரம்பினவர் கூட்டத்திலே என்னையும் குணம்
நிரம்பினவன் ஒருவன் என்று ஒக்க எண்ணலாம் படி சேர வைத்தல் .
இனி தீய குணம் உடையோரிடை இது காரும் கூடி இருந்த என்னை
அடியாரோடு இருந்தமை -என்றபடி நிறை புகழோர் ஆன ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே
இருக்கும்படி பண்ணினார் -என்னவுமாம் .
மிக்க வண்மை செய்து வைத்தனன் என்று இயைக்க .
கீழ்ப் பாசுரத்தில் கூறப்பட்ட பேறுகள் அனைத்துக்கும் நிறை புகழோர் உடனே
வைத்தல் அடித்தளமாய் முக்கியமாதல் பற்றி இதனைத் தனிந்து நினைவு
கூர்ந்து மிக்க வண்மையினால் இங்கன் உபகரித்து அருளுவதே !
என்று ஈடுபடுகிறார் .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது ..

உற்றதும் உன் அடியார்க்கு அடிமை-/ உன் அடியார்க்கு ஆட் படுத்தினாய்- ஐந்தாவது பெருமை தனியாக அருளிகிறார் இந்த பாசுரத்தில்/

ஆழ்வாருக்கு சரம பர்வம் அமுதனாருக்கு பிரதம பர்வம்..சரம பர்வமாக ஆழ்வான் அடி பற்றினார்/மங்களா சாசனம்-ரஷ ரஷிக பாவம் – மாறாடி கிடக்கும்-மேட்டு நிலம் பெரி ஆழ்வாருக்கு மற்ற ஆழ்வாருக்கு  கடல் ஆழம்//அடியார்க்கு ஆட்படுத்தாய் -கேட்டார் -தொண்டர் அடி பொடி ஆழ்வார்-அடியார்க்கு என்னை ஆட் படுத்திய விமலன்- பேசித்தே  பேசும் ஏக கண்டார்கள் /பகவத் இச்சையால் பிறந்தவர்கள்/எல்லா திவ்ய தேச பெருமாளும் ஒருவரே ஆச்சார்யர்கள் அனைவரும் ஒருவரே/ பல்லாண்டு அருளுவது காத சித்தம் மற்றை ஆழ்வார்களுக்கு-வீற்று இருந்த  தனி கோல் -போற்றி என்று -அப் பொழுது அப் பொழுது பேசுவார்../நித்யம் திரு பல்லாண்டு அருளுகிறார் பெரி ஆழ்வார்/வண்மை குணம் -இங்கும்  பின்னாட்டுகிறது-என்னை-நீசனாக கிடந்தஎன்னை-நிறைந்த  குணம் -புகழ்-படைத்தவர் உடன் வைத்தனன்/என்று உன்னி உள்ளம் நைத்த அன்போடு இருந்து ஏத்தும் -நிறை புகழோர்/அன்பே இல்லாத குறைகள் நிறைந்த என்னை -ஏத்தாதா என்னை //உன்னி- எதை நினைத்து -தீய சமய கலகரை-தீய சமையர் பேசினால் கலக்கம் தான்

– கைத்தனன்-நலிந்தார் / அடுத்து தூய மறை நெறி தன்னை காசினிக்கு உய்த்தனன் -என்று இந்த இரண்டையும் நினைந்து உள்ளம் நைத்து-அதனால் மறக்காமல் ஸ்தோத்ரம் பண்ணி கொண்டு இருப்பவர்கள்../இது மஹோ உபகாரம் -அனுசந்தித்து தனியாக அருளுகிறார்/இது மிக்க வண்மை/முன்பு நான்கும் வண்மை யால் அருளியதை பேசிஇந்த உபகாரம் மிக பெரியது-சத்ருணன் -மதுரகவி ஆழ்வார் நிலை என்பதால்

மூன்றாவது அரை கால் பங்கு பாயாசம்-யோசித்து-அமிர்தத்துக்கு தக்க பகுதி-இதற்க்கு விசேஷணம் பண்ணியது போல மிக்கவண்மை/மஹா உபகாரம்//தீய-பொய் நெறி- வேத பாஹ்யங்கள்-ஹெயங்களான சமயங்களை பற்றி நின்று கலகம் செய்கிறவர்களை நிரசித்து அருளினார்//பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும்-

சரக்கு குறைய சப்தம் மிகும்-உசந்த குரலில் பேசுபவன் வித்வான் கலி வர வர-/பரி சுத்தமான வேத -மறை-வேதம் வேதாந்தம் அருளி செயல்- மார்க்கத்தை பூமியிலே நடத்தி அருளினார்-உய்வித்து அருளினார்- சொல்ல வில்லை–புதுசாக உயிர் ஊட்ட வில்லை//என்று அனுசந்தித்து ஹ்ருதயம் ச்நிக்த்தமாய்-அந்த ச்நேஹத்தொடே இருந்து -அவ் அன்பு-உடன் இருந்து ஸ்தோத்ரம் பண்ணி-பரிபூர்ண குணர் உடன் இவனும் ஒருவன் என்று பரி கணிக்கும் படி என்னை வைத்து அருளினார்-கூட்டத்தாரோடு  என்னும் படி-–அசத்துக்களில்  ஒருவனாய் இருந்த என்னை அடியோரு இருந்தமை  ஆக்கினையே -என்கிற படி–ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே வர்த்திக்கும் படி பண்ணினார்/அஷ்ட குண ஐக்கியம் விட -சாம்யா பத்தி மோஷம் விட -அடியோரோடு இருந்தமையே ஏற்றம்/அவன் மங்க ஒட்டு உன் மா மாயை என்று அங்கே

-இவரோ இங்கேயே இவ் உலகத்திலே  அருளினாரே–மதுர கவி சொல் படியே நிலையாக பெற்றோம்-நம்புவார் பதி வைகுந்தம் அங்கும்//கைதல்-கடிதல்//உய்த்தல் -நடத்தல் /கீழ்  பாசுரத்தில் நான்கு புருஷார்த்தங்களை

-அறம் பொருள் இன்பம் வீடு-சாஸ்திர புருஷார்த்தம்-இவை சம்ப்ரதாய புருஷார்த்தம்/விஞ்சி நிற்கும் தன்மை போல  -பொங்கும் பரிவு போல— மஹா -அதிசய புருஷார்த்தம் இது அடியார்க்கு ஆட் படுத்தினது ./ஒவ்தார்யமே  சொரூபம்  ஸ்வாமிக்கு-கோல மலர் பாவைக்கு அன்பன் என் அன்பேயோ போல-ஆழ்வார் அன்பே ஸ்வரூபம்-/கொள்ள குறை வற்று இலங்கும்  கொழுந்து விட்டு ஓங்கிய  வள்ளல்  தனம் ஸ்வரூபம் ஸ்வாமிக்கு-வாங்குவபனே கொடை வள்ளல் ஆகும் படி –மிக்க வண்மை செய்து-வண்மை செய்ய முடியுமா -சங்கல்பித்து கொண்டு-

நிர்விசேஷ-விசேஷணம் இன்றி –கூடஸ்த -ஆதாரம் காரணம்–சின் மாதரம் -பிரமம் என்பர் அத்வைதம்/65 பேர் திரு மலையில் வேத பாரயனர் 4 பேர்-மட்டுமேஸ்ரீ வைஷ்ணவர் /-/வாக்கில் தான் வேதம்-பிரமத்துக்கும் அஞ்ஞானம் கற்பித்து

-தத்வமசி -வேதம் பொய் -ஞானம் வந்து இருக்கிற பிரமம் உண்மை ஞானம் கொடுத்த வேதமே பொய் என்பர்//மித்யை-சின் மாத்தரை-ஆச்சார்யர் உபதேசிக்க மாட்டார்-தெரிந்தும் மித்யை குருவையே என்பர்/மாயாவதிகளை சரஸ்வதி பீடத்திலும்/ திரு மலையில் சைவரையும்/திரு நாராயண புரத்தில் -பௌவ்த்தரையும் நிரசித்து-கப்யாசம் புண்டரீகாஷம் ஏவம் அஷிணி- ஸ்வாமி கண்ணீர் விட்டது பிரசித்தம் இறே-சரஸ்வதி பீடத்தில் மீண்டும் அருளினாராம்-ஹயகிரீவர் எழுந்து அருளி கொடுத்து ஸ்ரீ பாஷ்யகாரர் பட்டம்/சர்வ லோக பிரசித்தம் இவை /க்ருபா பூர்வக ஒவ்தாரத்தாலே-தூய மறை நெறி-பிரமம் பிராந்தி இல்லை-கயிறு-பாம்பு/ பிரமாதம்-கவனம் இன்மை /விப்ரலம்பாதிகள் ஏமாற்றுவது இல்லை/புருஷ ஞானம் மலிந்து இன்றி /வேறு  பிரமாணம் எதிர்பார்க்காமல்-சுடர் மிகு சுருதி-மற்றவற்றால் பாதிக்க படாத சுத்தி –தூய்மை/சுருதி ஸம்ருதி  மம ஆக்ஜ்ஜை/தூய மறை தன்னை- வேதாந்தங்களும் அருளி செயலும் தர்ம மார்க்ககங்களும்-பிர பத்தி- சிறந்த தபஸ்-அர்த்த பஞ்சகமும் -சார தரம் -கர்ம பக்தி/ சார தமம் -சரணாகதி/சனாதன தர்மமே வேத நெறி //என்று உன்னி-இரண்டையும் நினைத்து -சுவாமி யின் –நுண் அறிவையும் கருணையும் வள்ளல் தன்மையும் –நினைந்து உள்ளம் -தடாகம் நிறைந்து வெளி வருவது போல ஸ்தோத்ரம் பண்ணி கொண்டு-தாடி பஞ்சகம்-பாஷண்டி காட்டை கொளுத்திய அக்நி/சாருவாக மலை மேல் இடி/இருந்து ஏத்தும் பரி பூர்ண குணம் உள்ளவர் உடன்-பிரார்த்திக்க வேண்டாத படி இங்கே தானே சேர்த்து அருளினார்/வாசா யதீந்திர .. யுஷ்மத் பாதாரவிந்தயுகளம்   பஜதாம் குருணாம்/கூராதி நாத  -துத் தாச தாச கணன-சரம -தத் தாச -அடிமை தனத்தில் நிலை நிறுத்து எதிராஜ விம்சதி-அவனுக்கு என்றே இருக்கும் நிலை //பெரியோர்கள் நடுவில் நிறுத்தின வள்ளல் தன்மை போற்றுகிறார்-

————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: