அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–71-சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
எழுபத்தோராம் பாட்டு -அவதாரிகை
இப்படி விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் ஒக்கும் இறே என்று என்று இசைந்து –
தம்முடைய விசேஷ கடாஷத்தாலே –
இவருடைய ஜ்ஞானத்தை ஸ்வ விஷயத்திலே ஊன்றும்படி விசதமாக்கி அருள
தாம் லபித்த அம்சங்களை அனுசந்தித்து க்ருதார்த்தார் ஆகிறார் .
சார்ந்த தென் சிந்தை வுன் தாளிணைக் கீழ் அன்பு தான் மிகவும்
கூர்ந்த தத் தாமரைத் தாள்களுக்கு உன்தன் குணங்களுக்கே
தீர்ந்த தென் செய்கை முன் செய்வினை நீ செய்வினையதனால்
பேர்ந்தது வண்மை யிராமானுசா ! எம் பெரும்தகையே !–71-
வியாக்யானம் –
கொள்ளுகிறவன் சிறுமையும் கொடுக்கிறதின்  சீர்மையும் பாராதே கொடுக்கும் ஔ தார்ய-குணத்தை உடையராய் -அந்த ஔ தார்யத்தாலே என்னை எழுதிக் கொண்ட பெருமையை உடையவரே !
என்னுடைய நின்றவா நில்லாத -பெரிய திருமொழி -1 1-4 – – நெஞ்சானது வகுத்த சேஷியான தேவரீருடைய-பரஸ்பர சத்ருசமான திருவடிகளின் கீழே
நிழலும் அடிதாறும் போலே  பிரிக்க ஒண்ணாதபடி பொருந்தி விட்டது .
அந்த பரம போக்யமான திருவடிகளுக்கு ச்நேஹமானது தான் நிரவதிகமாம் படி மிக்கது .
என்னுடைய வ்ருத்தி தேவரீருடைய குண அனுபவ ஜனித ப்ரீதி காரிதை யாகையாலே
அந்தக் குணங்களுக்கே அற்றுத் தீர்ந்தது .
பூர்வ க்ருதகர்மம் -அதுக்கு நிவர்தகரான தேவரீர் செய்த அந்தச் செயலாலே
மலை பேர்ந்தால் போலே விட்டு நீங்கிற்று .
ஆனபின்பு எனக்கு ஒரு குறையும் இல்லை -என்று கருத்து –
நீ செய்வினை -என்றது அவர் செய்து அருளின விசேஷ கடாஷம்
நீ செய்வனவதனால் -என்று பாடமான போது-
மத் கர்ம நிவ்ருத்யர்த்தமாக தேவரீர் செய்த க்ருஷிகளாலே -என்கை-
கூர்தல் -மிகுதி–
வள்ளல் தன்மை-தன்னையே பார்த்து அருளிய -ஸ்வாமி வள்ளல் தன்மையில் தம் நெஞ்சு ஈடுபட்டதை -அருளிச் செய்கிறார் -/ எம் இராமானுசர் -அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து
நான்கு லாபங்கள் இதில் -அருளிச் செய்கிறார் –விசேஷ கடாக்ஷத்தால் -ஞானம் -நிலை பெறச் செய்து –சிந்தை நின் இணைத் தாழ் கீழ் சார்ந்தது –நிழலும் அடி தாறும் போலே –உபாயமாக பற்றி -மேலே –உபேயம் -அன்பு தான் மிகவும் கூர்ந்து அது தாமரை தாள்களுக்கு -3- என் செ ய்கை குணங்களுக்கே தீர்ந்தது -ஞப்தி பக்தி வ்ருத்தி மூன்றும் இத்தால் -4- இதனால் முன் செய் வினை பேர்ந்தது -நீ செய்த அரு வினையால் –பங்குனி உத்தர சரணாகதி -/ கடாக்ஷம் வினை என்றுமாம் -/ நீ செய்வனவாதனால் -நீ செய்த வினை அதனால் -பாட பேதங்கள் / வாமனன் கண்ணன் பெருமாள் போலே -ஸ்வாமி –வண்மை–ஜல ஸ்தல விபாகம் அற -தசரத கோபால உபேந்த்ரர்கள் –
தாளிணைக் கீழ் சார்ந்தது -அடிக் கீழ் அமர்ந்து புகுந்து -ஆழ்வான் திருப்பாதம் அமுதனார் -மன்னி பொருந்தி -அன்பு கூர்ந்து அது தாமரை திருவடிகளுக்கு -செடியாய வல்வினைகள் -தீர்க்கும் திருமாலே –தமர்கள் கூட்ட வினைகளை நாஸம் செய்த சதுர் மூர்த்தி –
என் சிந்தை சார்ந்தது/ அன்பு வளர்ந்தது/செய்கை குணங்களுக்கு தீர்ந்தது–வினைகள் பேர்ந்தது-இந்த நான்கும் -ஸ்ரீ ரெங்கராஜன் -திரு அரங்க செல்வன்–உமக்கு வசம்-
வண்மை–அடியேனுடைய தண்மையும் உம்முடைய மேன்மையும் பார்த்து அருள பிரார்த்தனை கீழ் -இங்கு இரண்டையும் பார்க்காமல் கிட்டிய நன்மைகளை பட்டியல் இட்டு அருளுகிறார் -த்வா/ மாம் /அஹம் போல -மூன்று தேவை -கீழ் பிரார்த்தனை பலராமானுஜன் இடம் -போலே –இங்கு அருளியது நம்மிராமானுஜன் -இதுவே வாசி -தேவை இடாதார் திருவாராதன பெருமாள் –என்றார் அன்றோ -திருத்தேர் தட்டு வார்த்தைக்கும்  கடல் கரை வார்த்தைக்கும்  உள்ள வாசி -மயர்வற மதி நலம் அருளினான் -போன்ற அனுக்ரஹத்துக்கு நடுவில் பாசுரம் இல்லை -பிரார்த்தனை முன் பாசுரம் -கிடைத்த பலன்கள் பட்டியல் இதில்
வண் துவாராபதி மன்னனை ஏத்தினாள் எழுவாள் -உடனே அத்தையே கேட்டு எழுந்தது போலே -அனுக்ரஹ வேகம் சொன்னவாறு -சிந்தை சார்ந்தது தாள்களுக்கு உபாயம் –இங்கு உன் தாள் -அன்பு கூர்ந்து அத்தாமரை தாள்களுக்கு உபேயம் –இனிமை போக்யம் விஞ்ச அத்தாமரை விசேஷணம் இங்கே
கீழ் உன் -சம்பந்தம் -இங்கு சம்பந்தமே இல்லா விடிலும் விட ஒண்ணாத இனிமை -காட்ட -மனோ வாக் காயம் -எம்பெருமானார் இடம் போக இனி என்னால் வினைகள் செய்ய முடியாதே -நாலாவது தன்னையே பேர்ந்தது  என்றுமாம் –
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை -இப்படி இவர் நேர்கோடு நேர் விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் -ஒக்கும் ஒக்கும் -என்று
இசைந்து தம்முடைய விசேஷ கடாஷத்தாலே இவருடைய கரணங்கள் எல்லாம் ஸ்வ விஷயத்திலே தானே ஊன்றி
இருக்கும்படி பண்ணி அருள -அவருடைய திரு முக மண்டலத்தை பார்த்து –பரம குஹ்யமான அர்த்தத்தை பூரி தானம்
பண்ணும்படியான ஔதார்யத்தை உடைய எம்பெருமானாரே -என்று சம்போதித்து – தம்முடைய மனச்சு அவருடைய
திருவடிகளிலே சேர்ந்து  அமைந்து இருக்கிற படியையும் –அத் திருவடிகளின் போக்யதையில் ஈடுபட்டு பிரேமமானது
தமக்கு மிக்க படியையும் -தாம் அவருடைய குணங்களிலே அத்யபி நிஷ்டராய் கொண்டு தத் தாஸ்யத்தில் வுற்று இருந்த
படியையும் -தம்முடைய பூர்வ  க்ரத கர்மம் எல்லாம்  அவருடைய விஷயீ காரத்தாலே தம்மை விட்டு -சும்மனாதே-ஓடிப்
போன படியையும் ஹ்ர்ஷ்டராய் கொண்டு விண்ணப்பம் செய்கிறார்

வியாக்யானம் -வண்மை இராமானுசா –

 வசிஷ்ட சண்டாள விபாகம் அற -எல்லார் தலையிலும் தன் திருவடிகளை வைத்த ஸ்ரீ வாமனை போலவும்
ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம் போலவும் -அனலோசித விசேஷ அசேஷ லோக சரண்யராய்
கொள்ளுகிறவர்களுடைய சிறுமையும் கொடுத்து அருளிகிற தம்முடைய பெருமையும் பாராதே -பரம குஹ்ய தமமான
அர்த்தத்தை பூரி தானமாகக் கொடுக்கும் ஔதார்ய குணமுடைய எம்பெருமானாரேஎன் பெரும் தகையே -அந்த
ஒய்தார்யத்தாலே என்னை எழுதிக் கொண்ட பரம சேஷியே – சார்ந்தது என் சிந்தை உன் தாளிணைக் கீழ் -தேவரீர் உடன்-அடியேனும் ஏக தேச வாசியாய் இருந்து வைத்து -ஒரு நாளும் தேவரீர் திருவடிகளில் தலை சாய்வு செய்யாதே
ந நமேயம் -என்று இருக்கிற அடியேனுடைய மனசானது -சஞ்சலம் ஹி மன -என்றும் -நின்றவா நில்லா நெஞ்சு -என்றும் –
சொல்லப்படுகிற  நிலை மாண்டு போய் -த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி -இத்யாதிப்படியே  பிரமருத்ராதிகளுடைய சம்பத்தையும் ஒரு
பொருளாக நினைப்பிடாத  மகாத்மாக்களாலே ஆஸ்ரயிக்க தக்க தேவரீர் உடைய திருவடிகளின் கீழே –
கர்ம காலத்திலே ஆதித்ய கிரணங்களாலே தப்தனாவன் -நிழலையும் தட்பத்தையும் உடைத்தான செடியின் கீழே
புகுமா போலே -அவற்றினுடைய போக்யதை இரண்டும் கூடி இருக்கையாலே -அவற்றின் உடைய பௌஷ்கல்யத்த்திலே
ஈடுபட்டு –முன்பு தாம் பட்ட சம்சார தாபம் எல்லாம் தீரும்படி -நிழலும் அடிதாரும் போலே -அவிநா பூதமாய் புக்கு-பொருந்தி விட்டது -அன்பு தான் மிகவும் கூர்ந்தது -அத் தாமரை தாள்களுக்கு -தாமரைப் பூ போலே செவ்வி நாற்றம் குளிர்த்தி
முதலான போக்யதை உடைய -அத் திருவடிகள் விஷயமாக எனக்கு பிரீதியானது மேன்மேல் எனப் பெருகி மிக்கது –
கூர்தல் -மிகுதி –உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது என் செய்கை -இத்தனை நாள்களிலும் விஷயாந்தரங்களிலே  மண்டி
விமுகனாய் போந்த என்னுடைய க்ர்த்யம் எல்லாம் வகுத்த சேஷியான தேவரீர் உடைய குணா அனுபவ ஜனித ப்ரீதி
படிம்பிட்டு பிரேரிக்கப் பண்ண கடவதாகையாலே -சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்   அக் குணங்களுக்கே
அற்றுத் தீர்ந்தது –நித்யம் யதீந்திர தவ திவ்ய -என்கிற ஸ்லோகத்தில் இவ்வர்த்தத்தை ஜீயரும் பிரார்த்தித்து

அருளினார் இறே –

முன் செய்வினை நீ  செய் வினை யதனால் பேர்ந்தது –என்னுடைய பாப கர்மம் எல்லாம் அதுக்கு
எதிர்தட்டாக நிவர்த்தகமாய் இருந்துள்ள தேவருடைய க்ர்ஷி நிறைவேறி –அது தன்னாலே மலை பேர்ந்தால் போலே –சவாசனமாக விட்டு நீங்கிற்று –கர்த்த வாசக பத சமிபி வ்யாஹ்ர்த மான -முன் செய்வினையாம் -என்ற வாக்யத்துக்கு –
த்விஷந்தம் பாபக்ர்த்யாம் -என்கிறபடியே அசல் பிளந்தேறின துரிதங்களும் பொருளாகக் கடவது -நீ செய் வினை
என்றது -இவர் பெரிய பெருமாள் திருவடிகளில் பண்ணின பிரபத்தியை  -காலத்ரேபி-என்கிற ஸ்லோகத்தில்-இவ் வர்த்தைதை ஜீயரும் அருளிச் செய்தார் இறே –நீ செய்வன அதனால் பேர்ந்தது -என்ற பாடம் ஆனபோது
என்னுடைய பாப கர்மங்கள் எல்லாம் தேவருடைய பிரதம கடாஷத்தாலே போயிற்று என்று பொருளாகக்கடவது –இப்படியானபின்பு அடியேனுக்கு ஒரு குறைகளும் இல்லை என்றது ஆயிற்று –
————————————————————————–

அமுது விருந்து –

அவதாரிகை
இவர் விண்ணப்பத்தை எம்பெருமானார் இசைந்து  ஏற்று அருளி -விசேஷ கடாஷத்தாலே –
இவருடைய ஞானத்தை தம் திறத்தில் ஊன்றி நிற்குமாறு தெளிவுறுத்தி விட
தமக்கு கிடைத்தவைகளைக் கூறி க்ருதார்த்தர் ஆகிறார்
பத உரை

வண்மை -வள்ளன்மை வாய்ந்த

எம் பெரும் தகை –எங்களுக்கு தலைவரான பெரும் தன்மை உடைய
இராமானுச -எம்பெருமானாரே
என் சிந்தை -என்னுடைய நெஞ்சு
உன் தாளிணைக் கீழ் -தேவரீர் உடைய ஒன்றுக்கு ஓன்று ஒத்த திருவடிகளின் கீழே
சார்ந்தது -பொருந்தி விட்டது
அத் தாமரைத் தாள்களுக்கு -அந்த தாமரை மலர் போல் போக்யமான திருவடிகளுக்கு
அன்பு-பக்தி
தான் மிகவும் கூர்ந்தது -தானே மிகவும் வளர்ந்தது
என் செய்கை -என்னுடைய செயல்
உன் தன் குணங்களுக்கே -தேவரீர் உடைய நற்குணங்கள் விஷயத்திலேயே
தீர்ந்தது -அற்றுத் தீர்ந்தது
முன் செய்வினை -முன் செய்த கர்மம்
நீ செய் வினை அதனால் -தேவரீர் செய்த கடாஷம் என்னும் செயலால்
பேர்ந்தது –நகர்ந்து விலகிற்று
வியாக்யானம்
சார்ந்தது –உன் தாளிணைக் கீழ் –
என் சிந்தை -கண்டவா திரி தந்தவனை -என்னுடைய நின்றவா நில்லா நெஞ்சு -என்றபடி –
உன் தாளிணைக் கீழ் -வகுத்த சேஷியான தேவரீர் இணை அடிக் கீழ்
தாளிணையில் சார்ந்த -என்னாது –கீழ்ச் சார்ந்தது -என்றமையின் –
நிழலும் அடிதாறும் போலே விட்டுப் பிரியாது பொருந்தி விட்டது -என்றது ஆயிற்று –
விஷய ப்ரவண னாகிய நான் எங்கே ?
சரம சேஷியான தேவரீர் எங்கே ?
சபலத் தன்மை வாய்ந்த என் நெஞ்சு தேவரீர் திருவடிகளின் கீழ்ப் பொருந்தியது என்றால்
அது என்னால் பெறத் தக்க பேறா ?
-தேவரீர் செய்து அருளின விசேஷ கடாஷத்தின் பயன் அன்றோ ?-என்கிறார் .
நீ செய்வினை யதனால் என்னும் ஹேதுவை ஒவ் ஓர் இடத்திலும் கூட்டிக் கொள்ள வேண்டும் .
செய்வினை -செய்கிற கடாஷம் என்னும் செயல் .
அன்பு தான் –தாமரைத் தாள்களுக்கு –
உன் தாளிணை-என்று சம்பந்தம் உள்ளமையின் சிந்தை சார்ந்தமை கூறினார் முன்பு .
இப்பொழுது சம்பந்தம் இல்லா விடினும் -விட ஒண்ணாத இனிமை-போக்யதை –கூறுகிறார் .
தாமரத் தாள்கள் ஆதலின் -இனிமையை நுகர்ந்து -பக்தி தானே மிகவும் வளர்ந்து விட்டது -என்க –
சார்ந்து இனிமையை நுகர விசேஷ கடாஷம் ஹேது
அன்பு மிகவும் கூர்தல் -தானாக வந்தது -என்று அறிக
உன் தன் குணங்களுக்கே தீர்ந்தது என் செய்கை –
உன் குணங்கள் என்னாது –உன் தன்குனங்கள் -என்றமையின் -இக் குணங்கள்
எம்பெருமானாருக்கு அசாதாரண மானவை எனபது போதரும் .
செய்கை-கைங்கர்யம்
குணங்களை அனுபவித்து -ப்ரீதி தூண்ட -எழுந்த செயல்கள் ஆகையாலே

செய்யும்செயல்கள் எல்லாம் குணங்களுக்கு அற்றுத் தீர்ந்தவை யாகின்றன மணவாள மா முனிகள்

நித்யம் யதீந்திர தவ திவ்ய வபுஸ் ஸ்ம்ருதவ் மே சக்தம் மனோபவது
வாக்குண கீர்த்தநேசவ் க்ருத்யஞ்ச தாஸ்ய கரனேது கரத்வயச்ய -என்று
எதிராஜரே தேவரீர் உடைய திரு மேனியை நினைப்பதில் -என் நெஞ்சம் எப் பொழுதும்
ஈடுபட்டதாக வேணும் -இந்த வாக்கு தேவரீர் குணங்களை சங்கீர்த்தனம் பண்ணுவதில்
எப் பொழுதும் ஈடுபட்டதாக வேணும் –இரு கைகளின் உடைய செயலும் அடிமை செய்வதிலேயே
எப் பொழுதும் ஈடுபட்டதாக வேணும் -என்று பிரார்த்தனை பண்ணுகிறார் .
அந்நிலை அமுதனார் தமக்கு எம்பெருமானார் கடாஷத்தால் பலித்து விட்டதாக அருளிச் செய்கிறார்.
இந்த சிந்தை சார்ந்து அன்பு கூர்ந்ததையும் செய்கை குணங்களுக்கே தீர்ந்ததையும் கூறியது வாக்கு குண-சங்கீர்த்தனம் செய்தமைக்கு உப லஷணமாக கொள்க –
முன் செய்வினை  நீ செய்வினை யதனால் தீந்தது
செய்வினை -செய்கிற வினை -செய்யப்படுகிற புண்ய பாபா ரூபமான கர்மம் -என்றபடி
நீ செய்வினை -என்பதற்கேற்ப நான் முன் செய்வினை என்று கொள்க
நான் முன் காலத்தில் செய்த வினைகள் நினைத்தவைகள் அல்ல –
செய்தே தீர்ந்தவை -பிரம வித்துக்களுடைய வினைகளால் என்னிடம் வந்தேறினவைகள் அல்ல –
நானே நேரே செய்தவை -வினைகள் செய்வதற்கு நான் –
அவற்றைப் பேர்த்து ஒழிப்பதற்கு தேவரீர் என்னும் கருத்துடன் நீ செய் வினை யதனால் -என்கிறார் .
நீ –வினையை நீக்க வல்லரான தேவரீர் -என்றபடி .
அரங்கன் சரணாரவிந்தங்களை  தான் தரும்படி அரங்கனைத் தன் வசத்தில் வைத்துக் கொண்டு இருப்பவர் ஆதலின் –
தம்மைச் சார்ந்தோரின் வினைகளை விலக்கும் வல்லமை எம்பெருமானாருக்கு உண்டு -என்க .
ரங்கராஜ வச்யஸ் சதா பவதிதே யதிராஜ தஸ்மாத் சக்தஸ் ஸ்வ கீய ஜன பாப விமோசனே த்வம்-
எதிராஜரே ஸ்ரீ ரெங்கராஜன் தேவரீருக்கு எப்பொழுதும் வசப்பட்டவனாய் இருக்கிறான் -ஆகையால் தேவரீர்-தம்மைச் சேர்ந்த ஜனங்களுடைய பாபத்தைப் போக்குவதில் வல்லமை வாய்ந்தவராய் இருக்கிறீர்-என்னும் மணவாள மா முனிகள் ஸ்ரீ சூக்தி இங்கு அனுசந்திக்கத் தக்கது .
நீ செய்வினை என்னும் இடத்தில் வினை என்பதற்குசெயல் எனபது பொருள் .
வினையதனால் -என்பதனை –அது -அந்த -வினையினால் என்று மாற்றுக –
அந்த வினையாவது விசேஷ கடாஷத்தை செலுத்துதல் .

பேர்ந்தது –

விட்டு நீங்காது நெடும் காலமாய் ஒன்றி ஒட்டிக் கிடந்தது -மலை போல் அசைந்து கொடாமல்
இருந்த வினை -கடாஷ மகிமையினால் பேர்ந்து விலகிச் சென்றது .
எம்பெருமானுடைய கமல மலர்ப்பாதத்தை கண்டதும் ஆழ்வாருடைய
வினைகள் விண்டு ஒழிந்தன .
மதுர கவி ஆழ்வாருடைய பண்டை வல்வினையை நம்மாழ்வார்  கண்டு கொண்டு
பாற்றி அருளினார்
அமுதனார் முன் செய்வினை எம்பெருமானார் செய்து அருளிய அத்தகைய
விசேஷ கடாஷத்தால் தானே பேர்ந்து ஒழிந்தது
இனி முன் செய் வினை -என்னும் இதயத்தில் இன்னார் செய்த வினை என்று விசேஷித்து
கூறாததால்  -தான் செய்தவைகளும் -பிரம வித்துக்கள் செய்து தம்மிடம் வந்து சேர்ந்தவைகளுமான
வினைகளை சொல்லுகிறது -என்று உரைப்பாரும் உளர் .
இனி செய்வினையதனால் -எனபது ஸ்ரீ ரெங்கநாதன் இடம் எம்பெருமானார் செய்த சரணா கதியை
கூறுவதாக பொருள் கொண்டு -அவர் செய்த சரணா கத்தியினால் தன்வினை பேர்ந்தது என்று
அமுதனார் அருளிச் செய்வதாக வியாக்யானம் செய்கின்றனர் சிலர் .
சிந்தை தாள் இணைக்கீழ் சார்ந்தமை முதலியவற்றுக்கு –அது –சரணாகதி காரணம்
ஆகாமையாலும் -அவதாரிகையில் விசேஷ கடாஷத்தாலே இவருடைய
கரணங்கள் எல்லாம் ஸ்வ விஷயத்தில் ஊன்றி இருக்கும்படி பண்ணி
அருளினதாக கூறி இருப்பதாலும் -அந்த வியாக்யானம் ஆராயத் தக்கதாகும் .
நீ செய்வனவதனால் -என்றுமொரு பாடம் உண்டு .
நீ செய்யும் முயற்சிகளால் என்று அப்பொழுது பொருள் கொள்ள வேண்டும் .
செய்வான அவற்றால் என்று இருத்தல் வேண்டும் .
அதனால் என்றது ஒருமை பன்மை மயக்கம்
வண்மை –எம் பெரும் தகையே –
வண்மையாவது பெறுமவர் சிறுமையும் -கொடுக்கும் பொருளின் சீர்மையும் பாராது
தம் தகுதிக்கு ஏற்ப வழங்கும் வள்ளன்மையாகும் . –
திருக்கோஷ்டியூரில் கேட்போரின் தகுதியை ஆராயாது -உபதேசத்தின் சீர்மையை சிந்தை செய்யாது
தம் பெரும் தகைமைக்கு ஏற்ப –ஆசை உடையோர்க்கு எல்லாம் எம்பெருமானார்
பதினெட்டு தடவை நடந்து அரும்பாடு பெற்ற சரம ஸ்லோகார்த்தத்தை-உபதேசித்ததை
இதனுக்கு உதாஹரணமாக கொள்ளலாம் .அத்தகைய வண்மையில் ஈடுபட்டு தாம் தோற்றமை தோற்ற-எம் பெரும் தகை -என்கிறார்.
எம்பெருமானார் வண்மையினால் என் மீது விசேஷ கடாஷம் செலுத்த –
என் கரணங்கள் அவர் பால் ஈடுபட்டன .
வினைகள் தொலைந்தன –
இனி எனக்கு என்ன குறை -என்று
தாம் கிருதார்த்தர் ஆனமையை இப்பாசுரத்தால் பேசினார் ஆயிற்று .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

வண்மை ஒவ்தார்யம் வள்ளல் தன்மை-பாத்ரம் பாராமல் வழங்கிய தன்மை-என்னையும் என் இயல்பையும் பார்த்து உன் பல் குணம் பார்த்து கொடு-பார்க்காமலே கொடுத்தார் இங்கு-கீழே பிரார்த்தித்தது பலித்தது-இங்கு ராமானுஜர் ராமர் போல-தேவை இடாதார் நம் திரு ஆராதன பெருமாளாய் வந்தார்-சர்வ தர்மான்-அனைத்தையும் விட்டு தன்னை பற்ற–மாம்- வட்சலனாய் சுலபனாய்/அகம் சர்வக்ஜன் பூர்ணன்-உன்னை விடுகிறேன்-அசக்தனாய் அபூர்ணனாய்-இது கீழ் பாசுரம் போல்-துவா- அருள் செய்வதே நலம்.தாழ்ச்சி பார்த்த்கு மேன்மையை பார்த்து அருள/இங்கு ராமன்- மித்ர பாவனை வந்தாலும்-சீதை கை பிடித்தாலே போதும் என்கிறாள் ராவணனை- திரு தேர் தட்டு வாசகம் கடல் கரை வாசகம்/-நான் விடேன் ராமன் வார்த்தை-நீ பற்று கண்ணன் வார்த்தை.-.என்னை மட்டும் பற்று எல்லாம் விட்டு விட்டு வா சொல்ல வில்லை–சர்வ லோக சரண்யன் /அதனால் தேவை இடாதவர்/எம்பெருமானாரும் ஒக்கும் இறே என்று இசைந்து-தம் உடைய விசேஷ கடாஷத்தாலே

இவர் உடைய ஞானத்தை ஸ்வ விஷயத்திலே  வூன்றும் படி விசதம் ஆக்கி அருள-தாம் லபித்த அம்சங்கங்களை அனுசந்தித்து க்ருதார்ததர் ஆகிறார் /–தானே பாய்ச்சி-அருளினார் என்று பாசுரம் இடாமலே இதில்–துயர் அறு சுடர் அடி தொழுது எழு-கடைசியில்-முதலில் உயர்வற உயர்நலம் உடையவன்–நடுவில் மயர்வற மதி நலம் அருளினான் இருக்கிறது-அது பகவான் விஷயம்-இங்கு ஸ்வாமி விஷயம் நடுவில் பாசுரம் வேண்டாம்/-வண் துவாராபதி மன்னனை ஏத்துமின்- அடுத்த பாட்டு எழுந்து ஆடி- அந்த நாமம் கேட்டதும்..–விற் பெரு விழவும்-க்ரமம்  மாறினது வேகமாக முடித்தான் என்பதால் வீர வேகம் /அது போல–ஸ்வாமி கிருபை வேகமாக விளைந்து பலன் கிட்டி ஆனந்தம் அடைகிறார்/-வண்மை -அனுக்ரகத்தால் சிந்தை  தாள் இணைகளில் சார்ந்தது /-அன்பு மிக்கது-கூர்ந்தது /– செய்கை குணங்களுக்கு தீர்ந்தது /

-என் செய்வினை உன் கடாஷத்தால் பேர்ந்தது- காணாமல் போனது/- நான்கு பேறுகள் இதில் கிடைத்ததை பேசி இனியர் ஆகிறார்-கொள்ளுகிறவன் சிறுமையும் கொடுகிறவனின் சீர்மையையும் பாராமல் கொடுக்கும் ஒவ்தார்யம்-ஆசை உடையோர்கெல்லாம் பேசி வரம்பு அறுத்தானே–பாராமலே அருள் செய்தான்-ராமன் தீயவன் ஆனாலும் கை கொள்வேன் என்றானே–-ஆளவந்தாரும் நாத முனிகளை பார்த்து -தாழ்ச்சி பாராமல் அர்த்தம் இல்லை-தனக்கு பெருமை இருந்தாலும் பாராமல் -அருள வேண்டினாரே அது போல–இந்த வள்ளல் தனத்தால் என்னை எழுதி கொண்ட பெருமை உடையவரே !-தோற்ற துறை இது–திருவடி தோற்ற துறை ராமனின் தோள் வீரம் போல–என் உடைய நின்றவா நில்லாத நெஞ்சானது -வகுத்த செஷியான தேவரீர் உடைய-பரஸ்பர சத்ருசமான திருவடிகளின் கீழே நிழலும் அடிதாரும் போலே பிரிக்க ஒண்ணாத படி பொருந்தி விட்டது /-இணை-உபாயத்துக்கும் உபேயதுக்கும்/சார்ந்தது-நிழல் தேடி ஒண்டி இருந்தார்–அந்த பரம போக்யமான-தாமரை-திருவடிகளுக்கு -சிநேகம்–நிரவதிகம் ஆகும் படி மிக்கது-புருஷார்த்தம் இங்கு முன்பு தஞ்சம்/வந்த பின்பு அனுபவிக்கும் பொழுது போக்கியம்-தாமரை-//உன்னுடைய தாள்

–சம்பந்தம்-  அத் தாமரை—போக்யத்வம்-காதுகன் ஆனாலும் விட ஒண்ணாது-கடியன் கொடியன் ..ஆகிலும் கொடிய என் நெஞ்சே அவன் என்றே கிடக்கும்-போக்யத்வம் – உன் தாள் மேல்  இருக்க வேண்டியது இல்லை-அடி கீழ் புகுந்த பின்பு–என் உடைய வ்ருத்தி -செய்கை-தேவரீர் உடைய  குண அனுபவ ஜனித ப்ரீதி காரிதை-ஆகையாலே அந்த குணங்களுக்கே அற்று தீர்ந்தது/-நாமங்களைபாட வந்தவர் குண கீர்த்தனம் செய்ய —நாமமே குணங்களால் தானே /ஒரு திரு நாமத்துக்கு நூறு குணம் இங்கு /அன்பு தூண்டி செய்த செய்கை--அனுவப ஜனித-ப்ரீதி -தூண்டிய -கைங்கர்யம் –உன் தன-குணங்களுக்கே- அசாதாரணமாக உன் இடம் மட்டுமே-பல ராமானுஜர் இடம் இல்லை என்று காட்ட-என் செய்வினை-போக்க  மருந்தும் மருத்துவனும் நீ–அதற்க்கு ஏற நிவர்திகர் நோயும் அறிந்து  நோய் முதலும் அறிந்து–உன் செய் வினை- நீ செய்-அது வினையால்- கடாஷம்/பிரயத்தனம்/பிரபத்தியால்-ஆக மூன்றும் –

செய்வன-கிருஷி -அதனால்/பாட பேதம்..–பே ர்ந்தது-மலை போல சேர்த்து வைத்த வினைகள் விட்டு நீங்கியது-நான்கு பாக்கியம்..நீ செய்வன அதனால்-அவற்றால்-ஒருமை பன்மை மயக்கம்/-மனசை முதலில் அடங்கின படியையும்-அடைந்த பின்பு போக்யதையில் ஈடு பட்ட படியும்/-கைங்கர்யத்தில் ஈடு பட்ட படியையும்/வினைகள் சும்மானாது ஓடினதையும்–வள்ளல் -வசிஷ்டர் சண்டாளம் வாசி இன்றி-தன திருவடிகளை வைத்த வாமனன்-திரு விக்ரமனனுக்கு பாசுரம்-சுருங்கின படியால் தானே வளர்ந்தான்–சொவ்சீல்யம்வாமனனுக்கு தான்/ நீள் வான் குறள் உருவாய்/வாமனன் சீர் இராமனுசன் முன்பே சொல்லியது போல-மோஷம் -மாலா காரருக்கும் கண்ணன் போல/-அசேஷ விசேஷலோக சரண்யன்  -ராமன் போலவும்
-ரகசியம் வழங்கிய பெரும் தகை–ஏக தேச வாசியாய் இருந்தும்
– தேவரீர் திருவடிகளில் -ந நமேயம்-போல ராவணன் -நின்றவா நில்லா நெஞ்சு சஞ்சலத்துடன் நிலை மாறி-
 -பிரம இந்த்ரன் லோகமும் புல் போல நினைக்கும் மகாத்மாக்காள் ஆச்ரயித்து இருக்கும்
 – உன் –வெய்யில் தவித்து நிழலில்  புகுமா போல

தாப த்ரயங்களால் தவித்து -சார்ந்தது -கீழ்- அமர்ந்து புகுந்து /பள்ளி கட்டில் கீழ்-மாட மீமிசை கஞ்சன்-விலக விலக பயத்தால் மேலே போனான்-புகுந்த பின்பு-இருந்தும் கூடி புஷ்கலமாக-செவ்வி நாற்றம் குளிர்த்தி விகாசம் -போக்யத்வம்-

-உன் தன குணங்களுக்கே தீர்ந்தது என் செய்கை/-மனசு வாய் காயம் மூன்றும் உன் இடம் வந்தன-வகுத்த சேஷி /குணங்களுக்கே  தூண்டி அற்று தீர்ந்தது-யதிராஜ விம்சதியிலும் ஜீயரும் வாய் குணங்களையே பாடும் என்றார் நாமம் இல்லை- நெஞ்சினாரும் அங்கே  ஒழிந்தார்-ஆழ்வார்-அங்கு-ராமன் பின் போன தசரதன் கண் போல /என் கண் போனது என்றார்-அபிமானம்.என் ராமன் என் கண் நினைக்கிறார் ராமன் கண் பின் போனது // மனம் வாக்கு காயம் மூன்றும் போனதால் செய்வினை-சேர்க்க முடியாது

உடையவர் இடம் உடமை போனதால் மீண்டும் செய்வினை செய்ய ஆள் இல்லை இங்கு ../உன் கடாஷத்தால் வினைகள் எல்லாம் பெயர்ந்தன-உன் செய்வினை- பங்குனி உத்தரத்தில்  கேட்கும் பொழுது எங்களுக்கு எல்லாம் போனது/மலை பேர்ந்தது  போல -பண்டை பல் வினை பாற்றி அருளினான்-நீ செய் வினை அதனால்-நான்கும்என் சிந்தை சார்ந்தது/ அன்பு வளர்ந்தது/செய்கை குணங்களுக்கு தீர்ந்தது–வினைகள் பேர்ந்தது/முன் செய்வினை-நான் மட்டும் பண்ணினது இல்லை வந்தேறி வேற-பிரம வித்துகள் /பிர பத்தி பண்ணி அருளின-கால த்ரயத்திலும் கரண த்ரயத்தாலும் பண்ணிய பாபங்கள் போக்க இதுவே காப்பு-ஜீயர்//பாபம் சேர்க்க நான் ==போக்க நீர்/செடியாய வில் வினைகள் தீர்க்கும் திரு மாலே// தமர்கள் கூட்டும் வல்வினை நாசம் செய்யும் சதுர் மூர்த்தி// ஸ்ரீ  ரெங்கராஜன் -திரு அரங்க செல்வன்–உமக்கு வசம்-

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: