அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-69-சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –

அறுபத்தொன்பதாம்  பாட்டு -அவதாரிகை
எம்பெருமானார் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்கள் விஷயத்தில் தமக்கு உண்டான
அதி ப்ராவண்யத்தை அனுசந்தித்து திருப்தராகா நிற்கச் செய்தே –
ஈச்வரனிலும் காட்டிலும் இவர்  ஸ்வ விஷயத்தில் பண்ணின உபகாரம்
ஸ்ம்ருதி விஷயமாக -அத்தை அனுசந்த்திது -வித்தராகிறார் .
 
சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்றாழ்ந்தது கண்டு அவையென் தனக்கு அன்றருளால்
தந்த வரங்கனும் தன் சரண் தந்திலன் தானது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே – 69- –
வியாக்யானம் –
ஸ்ருஷ்டே-பூர்வ காலத்தில் பிரதான கரணமான மனச்சோடே கூட  சர்வ கரணங்களும்
அழிந்து நாசத்தை அடைந்து -அசித் விசேஷமாம் படி தரைப்பட்ட படி கண்டு -அந்தக்
கரணங்களை அசித் கல்பனாய்  கிடக்கிற எனக்கு -அக்காலத்திலே –
கரண களேபரைர் கடயிதும் தயமாநமநா  -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -2-41 – – என்கிறபடியே
கேவலக் கிருபையாலே -உபகரித்து அருளின பெரிய பெருமாளும் –
கரணங்களைத் தந்தவோபாதி -தம்முடைய சரணங்களைத் தந்திலர்-
எம்பெருமானார் எனக்கு ஜனகராய்க் கொண்டு வந்து -அரங்கன் செய்ய தாளிணை யோடார்த்தான் – -52 –என்னும்படி –தாம் அந்தத் திருவடிகளை தந்து அருளி-சம்சார ஆர்ணவ மக்னனான என்னை இன்று-எடுத்து அருளினார் -இது ஒரு உபகாரமே ! என்று கருத்து ..
தான் தந்து -அது -அரங்கன் திருவடிகள் / தனது திருவடிகள் -அத்ரபரத்ர ஸாபிதருவதற்கு அவன் திருவடிகள் அவரது இல்லையே -உடையவர் இடமே எல்லா சொத்துக்களும் -/ உபாய உபேயங்களாக தன்னுடைய திருவடிகளை தந்து என்றுமாம் -/ சிந்தை -கரணங்கள் -தனி மதிப்பு மனஸ் என்பதால் தனியாக எடுத்து -அரங்கனுக்கு -இங்கே வந்த பின்பும் தன் சரண் கொடுக்க வில்லையே -இங்கே வந்ததே ரக்ஷிக்க என்று விருது வூதி –ஸ்வாமியை வரவழைத்த அரங்கன் -அமுத்தனாரை கைக் கொள்ள -ஆழ்வான் ஆண்டான் போல்வார் இல்லையே அமுதனார் -அவர்கள் போலே தாமே  சென்று ஸ்வாமியை பற்ற / ஆச்சார்ய சம்பந்தம் பெற்றாள் தானே கொடுக்க முடியும் -இரண்டு காரணங்கள் தாராமைக்கு -பிரளய ஆர்ணவத்தில் இருந்து அரங்கன் உதாரணம் பண்ண சம்சார ஆர்ணவத்தில் இருந்து இவர் -அவன் விபசரிக்க கரணங்களைக் கொடுக்க ஸ்வாமி கைங்கர்யம் பண்ண அருளினார் -/ என்னையே எடுத்தனர் -நீசனேன் -என்னை எடுத்தால் லோகங்கள் எல்லாம் எடுத்தது போலே தானே-தனது திருவடிகளை தந்தது தானே கூரத் தாழ்வானை இட்டு என்னை உத்தரித்தது –
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

அவதாரிகை -கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்களுடைய
கல்யாண குணங்களிலே தமக்கு உண்டான ப்ரீதி பிரகர்ஷத்தை -சொல்லி -ஹ்ர்ஷ்டராய் -இதிலே –
சர்வ சேதனர்களும் சம்ஹார தசையிலே மனசோடு கூட சர்வ விஷயங்களையும் இழந்து -அசித் கல்பராய்
இருக்கிற தசையைக் கண்டு -அப்படிப் பட்ட எனக்கு அபேஷா நிரபேஷமாக-தம்முடைய நிர்ஹே துக பரம கிருபையாலே
கரண களேபர பிரதானம் பண்ணின பெரிய பெருமாளும் -ஸ்ர்ஷ்டித்த மாத்ரம் ஒழிய -அவ்வோபாதி சம்சார சம்பந்தத்தை
விடுத்து தம்முடைய திருவடிகளைத் தந்திலர் -இப்படி அதி துர்லபமான வற்றை நமக்கு பிதாவான எம்பெருமானார்
தம்முடைய திருவடிகளை உபாய உபேயமாக எனக்கு தந்து இப்போது என்னை சம்சாரத்தில் நின்றும் உத்தரித்தார் என்கிறார் –

வியாக்யானம் – சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து -மனஷ் ஷஷ்தேந்த்ரியாணி -என்கிறபடியே இந்திரியங்களிலே-மனஸ் பிரதானம் ஆகையாலும் – அவைகளுக்கு மனஸ் சஹாகாரம் இல்லாவிடில் தன் காரியங்களிலே அகிஞ்சித் கரங்களாய் போகையாலும் மனசை எடுத்தது தச இந்த்ரியங்களுக்கும் உப லஷணம் -இப்படி ஏகாதச இந்த்ரியங்களும் பிரளய காலத்திலேயே சேர்ந்து -பிர்திவ்யப் ஸூ லீயதே -என்று தொடங்கி -தமம் பரேதேவ ஏகீ பவதி – என்னும் அளவும் சொன்ன  க்ரமத்திலே   லயித்து –  சூஷ்ம அவஸ்தையை பெற்று –அந்தம் உற்று ஆழ்ந்தது -சர்வமும் உப சம்ஹ்ர்தமாய் அசித் அவிஷேதிமாய் கிடக்கிற தசையிலே –முன்னாள் -ஸ்ர்ஷ்டே -பூர்வ காலத்தில் –கண்டு -ததை ஷத பஹூச்யாம் பிரஜாயேயேதி –

என்றும் -கரண களேபர சைர்க்கட இதும் தயமா நமனா –  என்றும் -அர்த்தித்வ நிரபேஷமாக நிர்ஹேதுக கிருபையால்
தமக்கு பரிகரமாம் படியையும் -விசித்ரா தேக சம்பந்தி ரீஸ்வராய நிவேதிதும் பூர்வமே வக்ர்தா ப்ரஹ்மன் ஹஸ்த பாதாதி
சம்யுதா -என்றும் ஸ்வ சரண கமலத்திலே பரிசர்யார்த்தமாக –அவை -என்றது -மனசையும் தச இந்திரியங்களையும் கூட்டி –
அன்று -ஸ்ர்ஷ்டி காலத்தில் –என் தனக்கு அருளால் -நிர்ஹேதுகமாக எனக்கு கரண களேபரங்களை பிரதானம் பண்ணி அருளின
அரங்கனும் -அப்படி பட்டவன் தூரஸ்தனாக நின்றால் அடியேன் சம்சார துக்கத்தை  சகிக்க மாட்டாதே கூப்பிட த்வனி
அவன் செவிப்பட அரிது என்று  ஆறி இருக்கலாமோ -கார்யாந்தர அசக்தனாய் இருக்கிறான் என்று ஆறி இருக்கலாமோ –
அவன் அடியேன் ஜனித்த தேசத்தில் -நித்ய சந்நிகிதனாய் இருந்தான் -சர்வரையும் ரஷிக்க வேண்டும் என்று
உத்சாஹா யுக்தனாய் அபய ஹஸ்தத்தைக் காட்டிக் கொண்டு இருந்தான் -தாத்ர்சனும்

தன் சரண் -சர்வே வேதா யத்பத மாம நந்தி -என்றும் -விஷ்ணோர் பதே பரமே மத்வ உத்ச -என்றும்

தனம் மதியம் தவ பாத பங்கஜம் -என்றும் கதா புன ச சங்க ரதாங்க கல்பகத்வஜார விந்தாகுச வஜ்ர லாஞ்சனம்
த்ரிவிக்கிரம  த்வத் சரணாம் புஜத்வயம் மதிய மூர்த்த்னம் அலங்க்ரிஷ்யதே -என்றும் -கதாஹம் பகவத் பதாம்புஜ த்வயம்
சிரஸா சங்கர ஹிஷ்யாமி -என்றும் ஏதத் தேஹா வாசநேமாம் த்வத் பாதம்  ப்ராபய ஸ்வயம் -என்றும்

சம்சார துக்க நிவ்ருத்தி பூர்வகமாக பரம புருஷார்த்தமான தம்முடைய ஸ்ரீ சரணார விந்தத்தை தந்திலன் -சேர்த்து கொண்டது இல்லை –என்னுடைய அதி கர்ம பாஹூள்யத்தைப் பார்த்து -பிரதம சங்கல்ப-ரூபமாய் சம்சார ப்ரவர்த்தகமான தம்முடைய நிஹ்ரக சக்தியை பிரவர்த்திப்பித்தான் -என்றபடி –

ஏவம் சமர்த்தி சக்ர ஸ்த்தே ப்ராம்ய மானே ஸ்வ  கர்மபி -என்றும் சம்சார ஆர்ணவ மகநா நாம்  விஷயாந்தர சேதஸாம் –
என்றும் சம்சார மருகரந்தாரே துர்வித திவ்யக்ரா பீஷனே -விஷய சூத்திர குல்மாட்யே த்ரிஷா பாத பசா லீநீ –
புத்திர தார க்ரஹா ஷேத்திர ம்ர்கத்ர்ஷ்ணாம் புபுஷ்கலே-க்ர்த்ய அக்ர்த்ய    விவேகாந்தம் பரிப்ராந்தமிதச்தத-
அஜஸ்ரம் ஜாத த்ர்ஷ்ணார்த்த  மவசன் நாங்க மஷமம் -ஷீன சக்தி  பலாரோக்கியம் கேவலம் கிலேச சம்ஸ்ரியம் –
என்றும் -அவிவேககநாந்த தின்முகேப  ஹூதா சந்தத துக்க வர்ஷிணி-பகவன் பவ துர்த்தி நே –  என்றும்

சொல்லப்பட்ட சம்சார சாகரத்தில் நிமக்நனாய் இருக்க –எந்தை இராமானுசன் –சஹி வித்யா தஸ்தம் ஜனயதி தச் ஸ்ரேஷ்டம் ஜன்ம -என்றும் -அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்-மறந்திலேன் -என்றும் அஸ்தி ப்ரக்மேதி  சேத்வேத சந்தேமேனம் ததோவிது -என்கிறபடியே  -அது தானெது என்ன –

நாராயண சரணவ் -என்றதை கொடுத்த பிதாவான எம்பெருமானார் -இன்று வந்து –இந்த தசையிலே ஸ்ரீ பெரும் புதூரிலே
அவதரித்து -காஞ்சி நகரிலே தேவப் பெருமாளுடைய அனுக்ரகம் பெற்று இருந்து -என்னை உத்தரிக்க வேணும் என்று
நான் இருந்த தேசத்தை தேடி வந்து -பரகத ச்வீகாரத்தாலே அநேக க்ர்ஷிகளை பண்ணி என்னை பரிக்கிரகித்து –

தானது தந்து -யச் ஸ்ரேயஸ் யான் நிச்சிதம்  ப்ரூஹி தன்மே சிஷ்யச்தேகம் சாதிமாம் த்வாம் பிரபன்னம் -என்று

உபசன்னனாய் அர்த்தியாதே இருக்கச் செய்தே -தானே நிர்ஹேதுக மாக -ஸ்ரீ ரெங்க நாதனுக்கும் கொடுக்க
அசக்யமான அந்த நாராயண சரண த்வத்வங்களை உபாய உபேயமாக கொடுத்து –என்னை எடுத்தனன் –
அமுதனார் திரு உள்ளத்திலே ஓடுகிறது தம்மையே உத்தரித்தார் என்று காணும் —என்னையே -பிரபல
பாபிஷ்டனான என்னையே -சர்வ சக்தி யுக்தனான சர்வேஸ்வரனாலும் எடுக்க அசக்யனான என்னையே
உத்தரித்தார் -ஸ்ருதா ஸ்ருதமான அர்த்தத்தைக் கொண்டு சொன்னேனோ -இதுக்கு உதாஹரணம் அடியேனே –
சம்சார சாகரத்தில் நின்றும் உத்தரித்தார் -மக்னா நுத்தரதே லோகன் காருண்யா சாஸ்திர பாணினா -என்ற
அர்த்தைத்தை பிரத்யஷமாக கண்டேன் -ஸ்வ அனுபவத்தாலே தெளிந்தேன் என்றது ஆய்த்து –
————————————————————————–
அமுது விருந்து
அவதாரிகை
எம்பெருமானார் திருவடி சம்பந்தம் வாய்ந்தவர்களிடம் தமக்கு ஏற்ப்பட்ட மிக்க ஈடுபாட்டை
கண்டு களியா நிற்கும் அமுதனார் – இந்நிலை தமக்கு ஏற்படும் படி தம்மைக் கை தூக்கி விட்ட
எம்பெருமானார் உடைய பேருதவி நினைவிற்கு வர –
இறைவன் செய்த உதவியினும் சீரியதாய் -அது தோன்றலின் -அவ்வுதவியில்
ஈடுபட்டுப் பேசுகிறார் .
பத உரை

முன்னாள் -படைப்புக்கு முந்திய காலத்தில்

சிந்தையினோடு -மனத்தோடு கூட
கரணங்கள் யாவும் -இந்த்ரியங்கள் அனைத்தும்
சிதைந்து -அழிந்து போக
அந்தம் உற்று -நாசம் அடைந்து
ஆழ்ந்தது -பிரகிருதி தத்வத்தில் அழுந்திப் போனதை
கண்டு-பார்த்து
அவை-அந்த சிந்தையையும் கரணங்கள் யாவற்றையும்
என் தனக்கு -எனக்கு
அன்று -படைக்கப் புகும் அந்தக் காலத்திலே
அருளால்-தன் கிருபையால்
தந்து -கொடுத்த
அரங்கனும் -பெரிய பெருமாளும்
தன் சரண்-தன்னுடைய திருவடிகளை
தந்திலன் -கொடுக்க வில்லை
இராமானுசன் -எம்பெருமானார்
எந்தை -என்னுடைய தகப்பனாய்
வந்து -எழுந்தருளி
தான்-தாமாகவே
அது தந்து -அந்தத் திருவடிகளைக் கொடுத்து
என்னை-கீழ்ப் பட்டுக் கிடக்கும் என்னை –
 -இப்பொழுது கை கொடுத்து எடுத்து அருளினார் .
வியாக்யானம் –
சிந்தை –தந்திலன் —
கரணங்களுள் சிந்தையும் அடங்குமாயினும் -அஃது இன்றிக் கரணங்கள் இயங்க மாட்டாத
முக்கியத் தன்மை தோற்றச் சிந்தையை தனித்து எடுத்து கூறினார் –
கரணங்கள் அனைத்தும் சிதைந்து -ஆத்ம தத்துவம் அறியும் திறன் அற்றுப் போதலின்
அந்த நாசம்-உற்றதாக கூறினார் .மழை பெய்து நெல் விளைந்தது -எனபது போலே-சிதைந்து அந்தம் உற்றதாக
கூறுகிறார் .சிதைய -அந்தமுற்றது என்க -எச்சத் திரிபு
ஆழ்ந்தது -தரையிலே போய்ப் படிந்தது -அதாவது அஷர தத்வம் தமஸ் எனப்படும்
பிரகிருதி தத்வத்தில் லயம் அடைந்தது -என்றபடி .
அந்த சிந்தை முதலிய கரணங்களை எனக்கு தந்த -என்னாமல்
என் தனக்கு தந்த -தாக கூறுகிறார் .கரணங்களை சொந்தமாக கொண்டு விரும்பிய வண்ணம்
உபயோகப்படுத்தும் ஸ்வாதந்த்ரிய சக்தியோடு அவற்றை கொடுத்தமை தோற்ற –
அருளால் தந்தான்-வேண்டித் தந்திலன் –
வேண்டுவதற்கு அறிவில்லையே -அறிவு இழந்து அசேதன பொருள் போல் அன்றோ
ஆத்ம தத்வம் கிடக்கிறது -காரணம் இன்றி இயல்பாய் அமைந்த அருளினாலேயேஇறைவன்
கரணங்களை தந்ததாக கூறினார் ஆயிற்று .
அன்று -படைக்கும் போது –
பிரகிருதி தத்வத்தில் லயம் அடைந்து -அறிவு ஒடுங்கி -அசேதனப் –பொருள்களினும்  வேறுபாடு
இன்றிக் கிடந்த ஆத்மதத்வங்களுக்கு -எல்லா கரணங்களையும் -சரீரங்களையும் -தந்தது போலே
எனக்கும்தந்தானே அன்றி -எனக்கு என வேறு எதுவும் இறைவன் தந்திலன் என்று
குறைபடுகிறார் அமுதனார் .
அரங்கனும் தன் சரண் தந்திலன் –
கரணங்களைக் கொடுத்த இறைவன்-இனி அவர்கள் பாடு என்று கை விட்டு விடாது
திருவரங்கத்தில் எழுந்து அருளி இருந்து –
பெற வேண்டிய பெரும் பேறாகிய தம் திருவடிகளை அவர்களுக்கு கொடுப்பதற்கும் காத்து கிடக்கிறான் .
அடியேன் இருக்கும் இடமாகியதிருவரங்கத்திலேயே காத்துக் கிடக்கும் பெரிய பெருமாள்
தம் திருவடிகளை தந்திலரே என்று வருந்திக் கூறுகிறார் .
அரங்கனும் -உயர்வு சிறப்பு உம்மை
கரணங்களை கொடுத்தவனும் தன் சரணங்களைக் கொடுத்திலனே .
அடியேன் குடி இருக்கும் இடமாகிய திருவரங்கத்திலேயே பேராது குடி புகுந்து கிடந்தும் –
சம்சாரப் படுகுழியில் விழுந்து அழுந்தும் என் அவல நிலை கண்டும் –
சரணங்களைத் தந்து -மேலுறுமாறு செய்யாது வாளா கிடந்தானே -என்று வருந்துகிறார் .
தானது தந்து –என்னையே
தன் சரணங்களைத் தானே தந்திலன் அரங்கன்
அவ்வரங்கன் திருவடிகளைத் தாமே -என் வேண்டுகோள் இல்லாமலே -தந்து அருளினார் எம்பெருமானார் .
அரங்கன் சரணம் எம்பெருமானாருக்கு சொந்தம் போலும் .
வச்யஸ் சதா பவதி -ரங்க ராஜன் எதிராஜராகிய தேவரீருக்கு எப்பொழுதும் வசப்பட்டவனாய் இருக்கிறான் –
என்றபடி -அவ்வளவு விதேயனாய் இருக்கிறான் அரங்கன் எம்பெருமானாருக்கு .
தத்தே ரங்கீ நிஜமபிபதம் தேசிகா தேசகா ங்ஷீ -அரங்கன் தனது பதத்தையும் ஆசார்யனுடைய ஆணையை
எதிர்பார்த்து கொடுக்கிறான்-என்பர் வேதந்ததேசிகன் .
.என் வேண்டுகோள் இன்றி தாமாகவே எம்பெருமானார் அரங்கன் சரணங்களை எனக்குத் தந்ததற்கு
காரணம் தந்தையானமையே என்கிறார் .இராமானுசன் எந்தையேதான் அது தந்து என்று இயைக்க –
தந்தை தானாக தனயற்கு தனம் அளிப்பது போலே –
எந்தை இராமானுசன் அரங்கன் சரணமாம் தனத்தை தானே தந்தார் -என்க
அரங்கர் செய்ய தாளினையோடு ஆர்த்தான் -என்று முன்னரே இவ்விஷயம்
கூறப்பட்டு இருப்பதும் காண்க .
ஞானப் பிறப்புக்கு மூல காரணமாய் இருந்தமை பற்றி –எம்பெருமானார் எந்தை-எனப்படுகிறார் .
திருவடிகளைத் தருதலாவது -அவைகளை நாம் பெறற்கு உரிய பெரும் பேறும் சாதனுமாம்
என்னும் துணிவைத் தருதல் -அரங்கன் தந்தவை எல்லோருக்கும் தருமவைகளான  கரணங்கள் .
எம்பெருமானார் தந்தவையோ -எனக்கே தருமவையாய் அமைந்த அரங்கன் சரணங்கள் .
நான் உள்ள இடம் வந்தும் அரங்கன் தன் சரண் தந்து என்னை எடுத்திலன்-
எம்பெருமானாரோ நான் உள்ள இடத்துக்கு கச்சியில் இருந்து வந்து தந்தையாய் நச்சி
அரங்கன் சரணைத்   தான் தந்து என்னை எடுத்து அருளினார் .
அரங்கன் தந்தவை ஊன உடலும் -இவ்வுலகிய இன்பம் நுகர்ந்து சம்சாரத்தில் விழுந்து
உழலுவதற்கு உறுப்பான கரணங்களுமாம்
எம்பெருமானார் தந்தவைகளோ -அரங்கனுடைய திவ்ய சரணங்களாம்.
சம்சாரத்தில் இருந்து கரை ஏறுவதற்கு உறுப்பான திவ்ய சரணங்களே
ப்ராப்யமும் ப்ராபகமுமாம் என்னும் திண் மதி எம்பெருமானார் தந்தது -என்றது ஆயிற்று .
இன்று –
அரங்கனும் கை விட்டு -சம்சாரத்தில் விழுந்து அழுந்துகிற இந்நிலையில்
இதனால் காலத்தில் செய்த இவ் உதவி மாணப் பெரிது என்று ஈடுபடுகிறார் .
எடுத்தனன் -என்கையாலே ஆழமான சம்சாரக் கடலிலே விழுந்து கரை ஏற இயலாது
 தவித்தமை தெரிகிறது .-
என்னை –
அரங்கனும் இரங்காத நிலையில் உள்ள பாபியான என்னை –
ஆச்சார்ய சம்பந்தம் இதுகாறும் இல்லாமையின் அரங்கன் சரண் பெற்றிலர் அமுதனார் .
இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் பொருந்தாதவர்களுக்கு நன்மை செய்ய மாட்டார் அன்றோ
அரங்கனாம் பெரும் தேவர் .இன்று இராமானுசன் சம்பந்தம் வாய்த்ததும்
அரங்கன் சரண் பெற்று மேன்மை உற்றார் அமுதனார் -என்க –
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

எந்தை-தந்தை-என்னை கை பிடித்து தூக்கி விட்டார்/யாரோ பண்ண  வில்லை./அசித் போல கிடந்த அன்று- முன் நாள்- சிருஷ்டிக்கு முன்/ சிந்தை-மனச- கரணங்கள்- 10 இந்தரியங்களும் –நாம ரூபம் இன்றி-அந்தம் உற்று -முடிந்து ஆழ்ந்தது -அதை கண்டு- இன் ஒரு கண்டு -சங்கல்பித்து-பல வடிகளால் ஆக-கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்-சிருஷ்டிக்க சங்கல்பித்து -கண்டு/அவை- ஆழ்ந்து போன கரணங்களை –அன்று–பிரார்தியாத  அன்று-அருளால்- அனுக்ரகத்தாலேயே -தந்தான்–நீர்மையினால் வ்யாபரிக்கைக்கு ஈடாக அருளினான் அரங்கன்//இவன் கூட-தன் சரண் தந்திலன்– சம்சாரத்தில் அழுத்த வழி கொடுத்தவன்-நமக்கு  உத்தாரணத்துக்கு அவன் சரண் தர வில்லையே-உடல் ஜன்மா கொடுத்த தந்தை-ஞான ஜன்மா கொடுத்த தந்தை- வகுத்த சேஷி-/எந்தை-தான் அது தந்து-இன்று வந்து என்னை  எடுத்தனன்-ஈஸ்வரனை காட்டில் தன் விஷயத்தில் உபகார எண்ணம் தோற்ற-உபாகார  ஸ்ம்ருதி  தான் இந்த பாசுர விஷயம்- நினைந்து ஆனந்த படுகிறார்..ஒன்றும் தேவும் –மற்றும் யாரும் இல்லா அன்று–பிரளயம்-கடல் சூழ்ந்த காலம் என்று நினைப்போம்-அன்று -தண்ணீரே இல்லையே/ஆகாசம் முதலில்-வாயு அக்நி தண்ணீரே பிர்த்வி சிருஷ்டி  க்ரமம்லயம் பிரத்வி-தண்ணீர்- அக்நி-வாயு- ஆகாசம்-அகங்காரம் -மகன்–தமஸ்- அவ்யக்தம்-மூல பிரகிருதி-நைமித்திக  பிரளயத்தில் தான் கடல் சூழ்ந்து இருக்கும்/சமுத்ரத்தில்- ஆல் இலை சயனம்/ மூன்று லோகம் அழிந்த நைமித்திக பிரளயம்/பிராக்ருத பிரளயத்தில் யாரும் இல்லா அன்று -/சிந்தை முதலில்- இந்தரியங்களில் ஓன்று தான்-தலைவன் மனசு என்பதால்/பிராதன்யம் தோன்ற எடுத்தார்..அழிந்தும் போனது அந்தம் முற்றது -சிதைந்தது  முடிந்தும் போனது நாசம் அடைந்ததுகாரணமும் காரியமும்..//மழை பொழிந்தது நெல் விளைந்தது போல //

அசித் போல இருந்த அன்று/என் தனக்கு–இது இவன் உடையது என்று பிரமித்து -எனேக்கே எனக்காய்- தனைக்கே ஆக  எனை கொள்ளும் ஈதே இன்றி // சம்சாரிகளில் திரு வுள்ளம் -இவற்றை வ்யாபரிக்கை ஈடாக -கொடுத்தான்-தயையால் -யாரும்  – பிரார்த்திக்க வில்லை/அவனுக்கு இவைற்றை  உபயோகிக்காமல் என் தனக்கு/கிருபையால் கொடுத்து அருளிய அரங்கனும் கூட-அலம் புரிந்த நெடும் கை-இவனுக்கு- கரணங்கள் தந்து அருளியது போல சரண் அருள வில்லை/அநிஷ்ட பிராப்தியும் இஷ்ட நிவ்ருதியும் அருளினான்//ராமானுஜர்-எந்தை- கருத்து ஸ்வாமி தான்/ஜனகராய் கொண்டு பிறப்பித்தார்-ஞான ஜன்ம -அருளி..வந்து அரங்க செய்ய தாள் இணை சேர்த்தாரே ஆழ்வான் மூலம்/வந்து-ஸ்ரீ பெரும் புதூர் பிறந்து -ஸ்ரீ   காஞ்சி –வளர்ந்து கற்று -ஸ்ரீ ரெங்கம் எனக்காக  வந்து/என்னை-சம்சார அரணவம் –அரங்கனோ பிரளய அரணவத்தில் இருந்து எடுக்க-இது ஒரு வுபகாரமே ஆச்சர்யம்/அதி துர் லபம்-அறிவுக்கு அரியது கிடைக்கவும் அரியது// பிரளயத்தில் கிடைக்காத கரண முதலானவை கிட்டினாலும் சம்சார விலக்கு கிட்டுவது துர்  லபம்/ தம் திருவடிகள் உபாய உபயமாக தந்து-தன் திருவடி=ஆழ்வான்/சம்பந்தம் கொடுத்து சம்சாரத்தில் இருந்து உத்தரித்தார்/பிரார்த்திக்காமல் இருவரும் கொடுத்தார்/அவன் அனைவருக்கும் கொடுக்க ஸ்வாமி என்னை மட்டுமே எடுத்தார் /அவன் தேவை இல்லாதவற்றை கொடுக்க ஸ்வாமி தேவை உள்ளதை கொடுத்தார்/மனசு-பிரதானம் பொங்கு ஐம்புலனும்-மனசை கடைசியில் மானாங்கர மனம் என்றார்/ பந்தத்துக்கும் மோஷத்துக்கும் மனசு தான் காரணம்//ஒன்றும் தேவும் ஒன்றி கிடக்கும் எல்லாம்/பூர்வ அவஸ்தையில் சேர்வதே லயம்/தமச பரமோ தாதா -மண்டோதரி//சிதைந்து -ஆத்மா தத்வம் அறிவது இயலாத நிலை /கண்டு- தானே கண்டு– பிரார்திக்காமலே கடாஷித்து/பகுச்யாம் என்று /தமக்கு பரிகரம் ஆகும் என்று திருவடி தாமரைகளில் கைங்கர்யம் பண்ண/பொருள் என்று இவ் உலகம் படைத்து//அப் படி பட்டவன்-தூரச்தான் கூப்பிடு -பத்ம நாபாவோ-பத்ம பாதாவோ- ஒ ஒ பிராந்திய  பாஷை கூப்பாடு குரல்=/அரங்கனும்--உம்மைத் தொகை இங்கு -என்ஊரிலே இருக்க நான் எப்படி ஆறி இருக்க முடியும்//காரியம் வேற செய்கிறான் என்று ஆறி இருக்கவோ/வைத்த அஞ்சல் என்ற கையும் கவித்த முடியும் புன் சிரிப்போடு திரு வடிகள் காட்டி கொண்டு-கருட வாகனும் நிற்க என்றோ ஆழ்வார் அருளி இருக்கிறார்/

..-உம்பியை நம்பியை தென் குறுங்குடி நின்ற அச் செம்பொனே திகழும்–எம் பிரானை-என் சொல்லி மறப்பேனோ ஆழ்வார் கேட்பது போல/அடியேன் ஜனித்த திவ்ய தேசத்தில் நித்ய சந்நிதினாய் அபாய ஹஸ்தத்துடன் இருந்தாயே–கை காட்டுவதை வாயால் புன் சிரிப்புடன் காட்டி கொண்டு இருகிறாயே../அரங்கனும் — உயர்வு சிறப்பு உம்மை/ஸ்ரீ சரணாரவிந்தம்-சர்வே வேதாக எத் பதம் சொல்லுமோ/-வாமனந்தி/தனம் மதியம் தவ பாத பங்கஜம் கதா புன-சரணாம் புஜ துவயம் மதியம் மூர்தனம் அலங்கரிஷ்யதி-திரு பொலிந்த  சேவடி என் சென்னியில் மேல் பொறித்தாய்-/கொடுக்காதது -சாமான்யம் இலை- தன் சரண்உத்தமன் உத்தம வஸ்து தந்திலன்-தன் உடன் சேர்த்து கொண்டது இல்லை-அநாதி கால கர்ம பார்த்து அனுக்ரகம் மறந்து நிக்ரகம் -முதலில் இதை பார்த்ததும்..-சம்சார நிவர்தனமாக அனுக்ரகம் காட்டாமல்//சுழலில் விட விட்டு -தன் சரண் தந்திலன்-அனர்த்தம் எல்லாம் அருளினார்-சம்சாரம்-துர் வியாதி-விஷயாந்திர காடுகள்-நிழல் அனுபவிக்க ஆசை- புத்திர தார கிருக  ஷேத்திர இவை எல்லாம்  கானல் நீர் போல-க்ருத்ய அக்ருத அறிவு இன்றி- திக் மோகம் பிடித்து -கிலேசமே மிஞ்சி -வந்து அவை என் தனக்கு  ராமானுசன் -எந்தை-தந்தை -மோஷத்துக்கு ஹேது-ஞானம் கொடுத்தல்/அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்/ஞானம் ஒன்றாலே மோஷம் -தந்தை தனயனுக்கு சொத்து கொடுக்கணும் ..சொத்தை கொடுத்தார்..சொத்து அரங்கன் இடம் இல்லை-கொடுக்க வாய்ப்பு இல்லை//ஆச்சர்ய சம்பந்தம் இருந்தால் தான் கொடுப்பன்-தானே வைகுந்தம் தரும்/மன்னு மா மலர் தாள்  பொருந்தாவருக்கு தந்திலன் //அவிவேகம் பகுத்தறிவு- இன்று துக்கம்-சேர்ந்து -இன்று வந்து என்னை எடுத்தினன்/இந்த திசையிலே ஸ்ரீ பெரும் புதூரில் காஞ்சி  தேவ பிரான் அனுக்ரகம்  பெற்று இருந்து -ஸ்ரீ ரெங்கம் தேடி வந்து-பரகத ச்வீகாரம்  கொண்டு/பிரார்த்திக்காமல் இருக்கும் பொழுதே-தானே அதை தந்து சொத்து ..இவருக்கே சொந்தம் -வச பட்டு இருக்கிறார்/உபாய உபயமாக புத்தி தெரிவித்து

என்னையே- ஏ வாகாரம்/ என்னை கூட நீசனாக இருந்த-..சர்வ சக்தனாலும் எடுக்க முடியாத பிரபல பாபிஷ்டன்-செவி வழி செய்தி இல்லை -என்னை –பிரத்யட்ஷ  சாஷி /சாஸ்திரம் கொண்டு ஆச்சார்யர் அவன் இடம் சேர்கிறார்..

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: