அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-68-ஆரெனக்கின்று நிகர் சொல்லில்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை .
அறுபத்து எட்டாம் பாட்டு -அவதாரிகை
இப்படி பகவத் சமாஸ்ரயணத்துக்கு மடைத்தேற்றலாயும் (அடைத்து ஏற்றலாவது — கொண்டம் கட்டி நீர் பாய்ச்சுதல் -என்றவாறு )
ஆஸ்ரயித்தார்கள் ஆகில் அவ்வளவில் சுவறிப் போரக் கடவதான (சரம பர்வ நிஷ்டை இல்லாமல் )-வித்தேசத்தில் –
என்னாத்மாவும் மனசும் எம்பெருமானாரை ஆஸ்ரயித்து இருக்கும் அவர்கள்
குணங்களிலே சென்று பிரவணம் ஆயிற்று -ஆன பின்பு எனக்கு சத்ருசர் இல்லை –என்கிறார் .
 ஆரெனக்கின்று நிகர் சொல்லில் மாயன் அன்று ஐவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரியப்
பாரினில் சொன்ன விராமானுசனைப் பணியும் நல்லோர்
சீரினில் சென்று பணிந்தது என்னாவியும் சிந்தையுமே – 68- –
வியாக்யானம் –
பார்த்தம் ரதி நம் ஆத்மானம் ச சாரதிம் சர்வ லோக சாஷிகம் சகாரா -கீதா பாஷ்யம் அவதாரிகை -என்கிறபடியே -சாரத்திய வ்ருத்தாந்தாலே தன்னுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை-ஜகத் பிரசித்தம் ஆக்கின ஆச்சர்ய பூதன் –
விஸ்ருஜ்ய சசரம் சாபம் சோக சம்விக்ன மானச -கீதை –1 47- -என்கிறபடியே
ரதியான அர்ஜுனன் கையில் வில்லையும் பொகட்டு சோகாவிஷ்டனாய்-
சிஷ்ய ஸ்தேஹம் சாதிமாம்   த்வாம் பிரபன்னம் -கீதை -7-2 – -என்கிற
அக்காலத்திலே பாண்டவர்களுடையதாய் தன்னுடைய திருவடிகளோட்டை
ஸ்பர்சத்தாலே திவ்யமாய் இருந்துள்ள திருத் தேர்த்தட்டிலே -நின்று அருளிச் செய்த -ஸ்ரீ கீதையினுடைய ஸ்வ ரசமான அர்த்தத்தை -சூவ்யக்தமாம் படி -தேரிலே அர்ஜுனைக
விஷயமாக அவன் அருளிச் செய்தால் போல் அன்றிக்கே –
பாரிலே சர்வ விஷயமாக அருளிச் செய்த எம்பெருமானாரை
ஆஸ்ரயித்து இருக்கும் விலஷணரானவர்கள் உடைய    கல்யாண குணங்களிலே
இவ்வருகுஒன்றில் கால் தாழாதே சென்று
என்னாத்மாவும் மனசும் அத்தை விடில் முடியும் என்னும்படி ப்ரவணமாய் விட்டது .
சொல்லுமளவில் யார் தான் எனக்கு இன்று சத்ருசர்
செம்மை-செவ்வை / பணிதல்-தாழ்தல்/ சிந்தை-ஹ்ருதயம்–
தன்னை வணங்க வைத்த கரணங்கள் -அவன் பக்த பக்த அடியார்கள் இடம் பிரவணம் ஆயின -ஸ்வாமி கிருபா பிரவாகத்தால் -யார் எனக்கு நிகர் -முன்பு நீசனேன் நிரை ஒன்றும் இலேன் என்றவர்  -சரமபர்வ நிஷ்டையால் வந்த சாத்விக அஹங்காரத்தால் அருளிச் செய்கிறார் –நல்லோர் -ஆழ்வான் ஆண்டான் -போல்வார் -ஆவியும் சிந்தையும் தனித்தனியே சென்றது -பிராணன் மனஸ் இரண்டும் -அக்கார அடிசில் நாடி
————————————————————————–

பிள்ளை லோகம்ஜீயர் அருளிய உரை

அவதாரிகை -கீழ் பாட்டிலே எம்பெருமானாருடைய ஜ்ஞான பிரதான வைபவத்தையும் -மோஷ பிரதான-வைபவத்தையும் -இந்திரிய  பரவசரான சேதனரைக் குறித்து அவருடைய  யதாவசிதித்த பிரகாரத்தை தெளிவித்து –
மகாபாரதசமரத்திலே -திருத் தேர் தட்டிலே உபதேசித்த பகவத்கீதைக்கு எதாவச்த்திதார்த்தத்தை அருளிச் செய்த
எம்பெருமானாரை ஆஸ்ரயித்த-சத்துக்களுடைய கல்யாண குணங்களிலே -என்னுடைய பிராணனும் மனசும்
த்வரித்துப் போய் -அங்கே கால் தாழ்ந்தது – ஆனபின்பு இப்போது வ்யபிதிஷ்டரை  கணிசித்து சொல்லத் தொடங்கி
எனக்கு சத்ர்சர் லோகத்தில் யார் உளர் -என்று தமக்கு உண்டான அதிசயத்தை சொல்லுகிறார்
வியாக்யானம் -மாயன் -மாயாத் யஷேனே பர்க்ர்திஸ் ஸூ ச சராசரம்  அஹம் சர்வச்ய பிரபவ -என்கிறபடியே
சர்வ ஜகத் காரண பூதம் அன்றிக்கே -சைசவா அவஸ்தையில் இருந்தும் பூதன சகட யமளார்ஜுநாதி சம்ஹாரங்களும் –
கோவத்ச கோபால  ஸ்ர்ஷ்டியும் கோவர்த்தன உத்தாரணமும் -யசோதா அக்ரூர தார்த்தராஷ்ட அர்ஜுன உதங்காதிகளுக்கு
விஸ்வரூப பிரதர்சனமும் முதலான -ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் என்னுதல் -இப்படிப் பட்ட ஸ்ரீ கிருஷ்ணனும்  –
அன்று -தத்ர தாவத் பாண்டவானாம் குருநாம்ச யுத்தே ப்ராரப்தே பகவான் புருஷோத்தம சர்வேஸ்வர ஜகதுபக்ர்திமர்த்ய –
பார்த்தம் ரதி நமாத்  நமாத்மானம் ச சாரதிம் சர்வ லோக சாஷிகம் சகாரா -என்கிற சமயத்திலே –ஐவர் தெய்வத் தேரினில் –

பஞ்ச பாண்டவர்களுக்கு விஜயம் கொடுக்கைக்காக —தெய்வத் தேர் –என்கிறது அர்ஜுனனுக்கு தேவதா ப்ரசாதத்தாலே வந்த தேர் -என்னுதல் -அன்றிக்கே தேவ தேவனான கிருஷ்ணனுடைய

ஸ்ரீ பாத ஸ்பரசத்தால் வந்த அதிசயத்தை இட்டு சொல்லுதல் -இப்படிப் பட்ட திரு தேர் தட்டிலே -செப்பிய –
கார்ப்பன்யோ தோஷோபஹத ஸ்வ பாவ பர்ச்சாமித்வா  தர்ம தம்மூட சேதா-யச் ஸ்ரேயச்யான் நிச்சிதம்
ப்ரூஹிதந்மே சிஷ்யச்தே ஹம்சாதிமாம் த்வாம் பிரபன்னம் -என்று பிரபன்னனான அர்ஜுனனைக் குறித்து –
நத்வே வாஹம் ஜாது நா சம்நத்வம் நேமே ஜநாதிபா-ந சைவ ந பவிஷ்யாம சர்வே வயமதம் பரம் -என்று
ஜீவ ஈஸ்வர பேதமும் –    ஜீவ பரஸ்பர பேதமும் உபக்ரமித்து -அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோஷ யிஷ்யாமி –
என்று அபய பிரதானம் பண்ணின ஸ்லோகம் அளவும் மோஷ சாஸ்த்ரமாக உபதேசித்த -கீதையின் -பகவத் கீதையினுடைய
செம்மை -செவ்வை -ஆர்ஜவம் -ஆதி மத்திய அவசானங்களிலே-கரூபத சங்கர  ஸ்ரீ தர ஆனந்த தீர்த்தாதிகள் போலே
தத்தவத்தை உபதேசிக்க வேணும் என்று உபக்ரமித்து -நடுவே தம்முடைய குதர்ஷ்டி பஷத்துக்கு அனுரூபமாக
சில அர்த்தங்களை கலந்து -பூர்வோத்தர விருத்தமாக சொல்லுகை அன்றிக்கே -யதாவச்தித்தார்த்த வபோதகமாய்
உபநிஷத்துகளோடு ஏக வாக்ய தாபன்நமான-பொருள் -கீதா பாஷ்யத்தை –தெரியப் பாரினில் சொன்ன –லோகத்தில்
தத்வ விவேக சூன்யரான ஜனங்களுக்கு தத்வ ஹித புருஷார்த்தங்களை விசதமாகத் தெளியும்படி ஸ்ரீ பாஷ்யத்தை பண்ணின
இராமானுசனை -எம்பெருமானாரை –பணியும் நல்லோர் -ராமானுஜச்ய சரணவ் சரணம் ப்ரபத்யே – என்று ஆஸ்ரயித்த சத்துக்கள் -ஆழ்வான்-முதலானவர்கள் -என்றபடி –சீரினில் -அவருடைய கல்யாண குணங்களில் –சென்று பணிந்தது -ஒரு பகல்
ஆயிரம் ஊழி  -என்றும் -ஷண மாத்ரம் கல்ப சமம் மந்வானா -என்னும்படி அவருடைய கல்யாண குண சந்தானம்
இன்றிக்கே இருக்க மாட்டாத ப்ராவண்யத்தாலே த்வரித்து சென்று -அந்த கல்யாண குணங்களிலே -மொழியைக் கடக்கும்-பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் -என்று ஆழம் கால் பட்டது –

யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத் பாதார விந்த யுகளம் பஜதாம் குருணாம்-கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம் -என்று ஜீயரும் அருளிச் செய்தார் இறே -அது எது என்றால் –என் ஆவியும் சிந்தையுமே -இவ்வளவாக என்னுடைய ஹிதத்தை தெரியாதே சம்சரித்துப் போன என்னுடைய பிராணனும் மனசுமே இப்படி ரசஞ்சமாய் இருந்தது  —

————————————————————————–
அமுது விருந்து
அவதாரிகை
இப்படி தம் கரணங்களை கண்ணன் தனக்கே உரியவை ஆக்குவாரும் அரியராய் –
அங்கனம் ஆக்கினார் உளராயினும் அவர்கள் அளவோடு ஆளாதல் சுவறிப்போமதமான
இந்நிலத்திலே என்னுடைய ஆத்மாவும் மனமும் எம்பெருமானாரைப் பற்றினவர்களுடைய-குணங்களிலே நோக்குடன் சென்று ஈடுபட்டு விட்டது ..ஆகவே எனக்குச் சமமானவர் எவருமே-இல்லை என்று களிப்புடன் கூறுகிறார் .
பத உரை –
மாயன் -வியக்கத் தக்க தன்மை வாய்ந்த கண்ணன்
அன்று -அந்தக் காலத்திலேயே
ஐவர் -பஞ்ச பாண்டவர்களுடைய
தெய்வத் தேரினில் -தெய்வத் தன்மை வாய்ந்த திருத் தேரிலே இருந்து
செப்பிய -அருளிச் செய்த
கீதையின் -ஸ்ரீ கீதையினுடைய
செம்மை பொருளை-நேரிய பொருளை
தெரிய -தெளிவாக தெரிந்து கொள்ளும்படி
பாரினில் -பூமியில்
சொன்ன -கீதா பாஷ்யம் அருளிச் செய்த
இராமானுசனை -எம்பெருமானாரை
பணியும் -பற்றி இருக்கும்
நல்லோர் -நல்லவர்களுடைய
சீரினில் -கல்யாண குணங்களில்
என் ஆவியும் -என் ஆத்மாவும்
சிந்தையும்-மனமும்
சென்று -நோக்குடையதாக சென்று
பணிந்தது -ஆழ்ந்து ஈடுபட்டது
சொல்லில்-சொல்லப்போனால்
இன்று -இக் காலத்தில்
ஆர் எனக்கு நிகர் -எவர் எனக்கு ஒப்பாவார் –
வியாக்யானம் –
ஆர் எனக்கின்று நிகர் சொல்லில்
கண்ணனை வணங்குவாரே இல்லாத இந்நிலத்திலே –
இராமானுசனை பணியும் நல்லோர் சீரினில் சென்று பணியும் ஆவியும் சிந்தையும் எனக்கு-ஒப்பார் ஆவாரை தேடித் பார்த்து சொல்லப் புக்கால் எவர் தான் ஒப்பாவார் -என்று தமது ஒப்பற்ற-சிறப்பை களிப்புடன் கூறுகிறார் .
பாகவத சேஷத்வத்தின் எல்லை நிலையில் இருப்பவன் -நான் என்னும்
சாத்விக அகங்காரத்தால் வந்த களிப்பாதலில் இது குற்றமாகாது -என்று உணர்க –
மாயன் அன்று செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரிய –
சாரதிஸ் சர்வ நேதா -எல்லாவற்றையும் நடாத்துபவன் -அர்ஜுனன் சொற்படி நடக்கும்
தேரோட்டி யானவன் -என்றபடி சர்வ நியந்தா தேசம் அறிய வோர் சாரதியாய் நின்று தனது
ஆஸ்ரித பாரதந்த்ரிய குணத்தை உலகில் வெளிப்படுத்தின வியப்பை நினைத்து –
மாயன்-என்கிறார் .   –
அன்று –
போர்க்களத்தில் பகைவர் திறத்தில் உறவினர் என்ற பாசம் மேலிட்டு -அவர்கள்
இறந்து விடுவரே என்று வருந்தி -வில்லும் அம்பும் சோர -போர் புரியகிலேன் என்று
தேர்த்தட்டில் உட்கார்ந்து  -கண்ணன் பேச்சினால் கலக்கம் மிக்கு தர்ம நிர்ணயம் செய்து
கொடுப்பதற்காக -கண்ணன் திருவடிகளில் -சரண் அடைந்து சிஷ்யனாய் அர்ஜுனன் கேட்ட அன்று –
ஐவர் தெய்வத் தேரினில்
தேர் அர்ஜுனனுக்கு மட்டும் சொத்தாயினும் -அதனில் சாரதியாய் கண்ணன் அமர்ந்தது
பஞ்ச பாண்டவர்களின் விஜயத்தை கருதியே யாதலின் –ஐவர் தேர் -என்றார் .
தக்க ஐவர் தமக்காய்- அன்று ஈர் ஐம்பதின்மர் தாள் சாயப்புக்க நல் தேர்த் தனிப் பாகா -திரு வாய் மொழி -8 5-8 – -என்று நம் ஆழ்வார் ஐவர்க்கு கையாளாய் கண்ணன் தேர்ப்பாகன் ஆனதாக அருளிச் செய்து-இருப்பது இங்கே அறியத் தக்கது .
அக்நி தேவனால் அர்ஜுனனுக்குகொடுக்கப் பட்ட தேர் ஆதலின் -தெய்வத் தேர் -என்கிறார்
தெய்வம்-தேவ சம்பந்தம் பெற்றது -வடசொல் –
இனி
தேவனான கண்ணன் திருவடி சம்பந்தம் பெற்ற பீடுடைமை பற்றி -தெய்வத் தேர் -என்றார் என்னலுமாம் .
மஹதி சயந்தனே ஸ்த்திதவ்-என்று கீதையில் இத்தேரைமஹத்தானது  என்று
குறிப்பிடப் பட்டு இருப்பது -கவனிக்கத் தக்கது .
கண்ணன் திருவடி சம்பந்த்தாலே வந்த தெய்வத் தன்மையால் அன்றோ -அவன் சாரதியாய் அமர்ந்த வரை

ஆக்னேயாஸ்த்ரம்-இந்த தேரை அளிக்க இயலாது –பின்னரே  எரிக்க வல்லதாயிற்று .தேரினில் செப்பிய கீதை–அரசன் சிம்ஹாசனத்தில் இருந்து செப்பியது போலே கண்ணன் தெய்வத் தேர்த்தட்டில்-இருந்து செப்பிய கீதையும் தப்பாது என்க -இனி ஐவர் தேரினில் சரண் அடைந்த பக்தனும் -நண்பனுமான அர்ஜுனனை நோக்கி செப்பிய கீதை என்னலுமாம் –

செம்மை பொருள்-ஸ்வ ரசமான அர்த்தம்
தெரியப் பாரினில் —நல்லோர் –
எம்பெருமானார் கீதா பாஷ்யம் அருளிச் செய்வதற்கு முன்பு பாரில் உள்ளோர்
கீதையின் செம்மைப் பொருள் தெரிகிலராய் இடர்ப்பட்டனர் .ஏனையோர் செய்த
பாஷ்யங்கள் தங்கள் கொள்கையினைப் புகுத்தி வலியுறுத்துவனவாய் இருந்தனவே
அன்றி -கீதையின் நேரிய பொருளை உரைப்பனவாய் இல்லை ..அக்குறை தீர
எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ கீதா பாஷ்யத்தின் சீர்மையை உணர்ந்து –
அவ உபகாரத்துக்குதோற்று-நல்லவர்கள் அவரைப் பணிகின்றனர் -என்க ..
கண்ணன் தேரினில் அர்ஜுனன் ஒருவனை நோக்கிச் சொன்னான் கீதையை –
எம்பெருமானாரோ-அதன் செம்மைப் பொருளைப் பாரினில் அனைவரையும்
நோக்கி அருளிச் செய்தார் –
கண்ணன் கீதை செப்பினானே யன்றி -கேட்ட அர்ஜுனன் தெரிந்து கொள்ளும்படி செப்பிலன் .
வ்யாமிச்ரேணை வவாக்யே ந புத்திம் மோஹயஸீவமே –என்று
கலந்து கட்டியான வாக்யத்தினாலே என் புத்தியை மயக்குகிறாய் போல் இருக்கிறது -என்று
கேட்கும் அர்ஜுனனே கூறுவது காண்க –
எம்பெருமானாரோ அனைவரும் தெரிந்து கொள்ளும்படி கீதையின் செம்மைப் பொருளைச் சொன்னார் .
அகல் ஞாலத்தவர் அறிய நிறை ஞானத்தொரு மூர்த்தியான கண்ணன்
நெறி எல்லாம் எடுத்து உரைத்ததாக நம் ஆழ்வார் அருளிச் செய்து இருந்தாலும் –
அவனே எடுத்து உரைப்பினும் கேட்டு புரிந்து கொள்ளும் தகுதி அற்றோர் திறத்து
தன் வடிவு அழகாலே குறிய மாணுருவாகிவலுக்கட்டாயமாக அவர்களைத்
தனக்கு ஆக்கிக் கொள்வதாக அவர் அங்கேயே -திருவாய் மொழி -4 8-6 – – கூறி
இருப்பதும் இங்கு அறியத் தக்கது .
அகல் ஞாலத்தவர் அறிந்து கொள்வதற்காக கண்ணன் செப்பியது கீதை
அறிவிக்க கேளாதவரை அவன் வலுக்கட்டாயமாக தனக்கு ஆக்கிக் கொள்ள
வேண்டியதாயிற்று .எம்பெருமானார் சொன்ன செம்மைப் பொருளோ
பாருக்கு எல்லாம் தெரியும் படியாக அமைந்து இருத்தலின் -எவர் திறத்தும்
வலுக்கட்டாயம் செய்ய வேண்டுவது அவசியமில்லை -என்க ..
தேரினில் உள்ள அர்ஜுனன் கண்ணன் இடம் கேட்ட கீதையை மறந்தான் .
அவனுக்கு இன்னாப்புடன் மீண்டும் கீதையைச் சொல்ல வேண்டிய நிலைமை
தவிர்க்க ஒண்ணாதாயிற்று கண்ணனுக்கு .பாரினில் உள்ளாரோ
மறக்க ஒண்ணாதபடி தெரியச் செம்மைப் பொருளை எம்பெருமானார்
உரைத்து இருப்பதனால் மீண்டும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுவதற்கு
வழியே இல்லை -என்க .
பணியும் நல்லோர் –ஆஸ்ரயித்து இருக்கும் நல்லவர்கள்
கூரத் ஆழ்வான் போன்றவர்கள் -என்க –
சீரினில் –ஆவியும் சிந்தையுமே
சீர் -நற்குணங்கள்
பணிந்து -விடில் முடியும் படியான மிக்க ஈடுபாடு கொண்டது
ஆவி -ஆத்மா
சிந்தை -மனம்
பணிந்தன என்று பன்மையில் கூறாது ஒருமையில் கூறினார் .
ஒன்றை ஓன்று எதிர்பாராது -தனித் தனியே ஈடுபட்டமை தோற்றற்கு-
ஆவியும் பணிந்தது /சிந்தையும் பணிந்தது-என்று தனித் தனியே கூட்டி உரைக்க –
சென்றது என்பதோடு அமையாமல் சென்று பணிந்தது -என்றமையால்
சீரினை விட்டு பிரிய இயலாமை தோற்றுகிறது
பணிதல்-தாழ்தல்
சென்று என்றவிதப்பு இடையே வேறு ஒன்றினில் கண் செலுத்தாது ஒரே நோக்காக
சீரினில் ஈடுபட்டமை தோற்ற .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது .

தன் சம்பந்தி -அடியார்க்கு அடியார் அளவும் சரம பர்வத்தில் – நிலை நிறுத்திய பின்பு யார் எனக்கு நிகர் என்கிறார் இதில்.-.ஆழ்வான் போல்வாரின் கல்யாண குணங்களில் என் ஆவியும் சிந்தையும் பணிய-இதை சொல்லில்- யார் எனக்கு நிகர் /கீதையின் செம்மை பொருளை இருள் தரும் மா ஞாலத்தில்-பாரினில்- சொல்லி அருளினார் –ஸ்வாமி-தெரிய சொன்னார்-பொருளை -செம்மையான நேர்மையான பொருளை சொல்லி –அவன் அன்று சொன்னான் -எங்கு செப்பினான்-ஸ்ரீ வைகுண்டத்தில் இருந்து-இரவில் சிறையில்  பிறந்த மாயம்–அன்று-அர்ஜுனன் மயங்கி இருந்த பொழுது–ஐவர் தேர்-தெய்வ தேர்-அம்சம் -திருவடி பட்டதால் அக்நி கொடுத்தால்/வன்மை படைத்த தேர்- கீதை கொடுத்தால் ஜெயித்ததால் //ரகஸ்ய த்ரயத்தில் இவன் அருளிய சரம ஸ்லோகம் தான் சேர்ந்தது-//பொருள் ஸ்பஷ்டமாக -கீதா பாஷ்யத்துக்கு மயங்கி பணியும் நல்லோர்//என் ஆவியும் சிந்தையும்-எங்கோ திரிந்த என்–பணிந்த பின்பு யார் எனக்கு நிகர்..ஆனந்தமாக அருளுகிறார்-எதையோ விட்டு தரிக்காத மனசு இப் பொழுது ஆழ்வான் போல்வாரின்  சீரை விட்டு தரிக்காது-மாறு உளதோ இம் மண்ணின் மிசையே //யார் எனக்கு நிகர் இல்லை/-/ எனக்கு எதிர் இல்லை //சாத்விக அகங்காரம்  இவை நல்லது/அபிமான துங்கன் அபிமான பங்க/அரக்கரில் பொல்லா அரக்கர் உண்டே விபீஷணன் போல //அமலன் -விமலன்-நிமலன்/நின்மலன் தனக்கு அடியவர்க்கு தன் பேறாக நான் பிரார்திகாமலே  ஆட் கொண்டான்-தொண்டர் அடி பொடிஆழ்வார்- கேட்க திரு பாண் ஆழ்வாருக்கு-அடியார்க்கு ஆட் படும்படி அருளி – கொடுத்தார் ஏக கண்டர்கள்// திரு வாட்டாறு- திரு அனந்த புரம் போல  திரு அருள் தரும் ..அருள் பெறுவான்   அடியாருக்கு //கொடு மா வினையேன்-பாகவதர்களை பாடாமல் அடியார் அடியாருடன் கூடும் இது அல்லால்-தனி மா தைவம்  தளிர் அடி புகுதல் அன்றி-அலங்கரித்த பின் சிகை  சேதம்-கண் சோர .தண் சேறை எம்பெருமான்-தாள் தலை மேலே-உற்றதும் உன் அடியார்க்கு அடிமை /இவை எல்லாம் கடல் ஓசையோ-பெரிய நம்பி மாறனேர் நம்பிக்கு சம்ஸ்காரம் பண்ணினதும்//பார்த்தம் ரதினம் ஆத்மாநாம் ச சாரதிம் சர்வலோக ஸாஷிகம் சகாரா –சௌசீல்யம்-ராமன்  அனுஷ்டித்து காட்டிய இந்த சீல  குணத்தை கண்ணன்  5111 /38 முன் கீதை ஓதினான்.–கீதை பிறந்து 5149வருஷம்  ஆகிறது ..ஆஸ்ரித பாரதந்த்ர்யம்- கண்ணன் காட்ட// ந காண்டீபம் கீழே விழ -சோகா விஷ்டனாய் -சிறந்த நன்மையை சொல்லி சிஷ்யன் சரணா கதன்– எனக்கு உபதேசிப்பாய்–கேட்டதும்-2-12 தொடங்கி 18-66 ஸ்லோகம் வரை அருளினான் அன்று–ஐவருக்கும் சேர்த்து நன்மை பயந்த தேர்/கீதையால் ஐவர்க்கும் பலன்/தெய்வம்-தன் திருவடி சம்பந்தத்தால் திவ்யமாய்-அக்நி கொடுத்ததாலும்  தெய்வ தேர்/செப்பிய- சிம்காசனத்தில் ராஜா பேசுவது போல தேரில் இருந்து அருளினான்/தேர் தட்டு வார்த்தை  கடல் கரை வார்த்தை  சரம ஸ்லோகம்/செப்பிய-உண்மை செப்பம் உடையாய் திறல்  உடையாய்-அர்ஜுனன்  கஷ்டம் தீர்க்க சிரித்து செப்பிய /ரசமான பொருள்..தெரிய- ஸ்வாமி சொல்லியது /அவன் அருளி செய்தது போல இன்றி-அரங்கத்து அமலன்-என்பதால் இன்னும் ஒருவர் மலம் உள்ளவர் தொனிக்க அங்கு-விபவ அவதார நரசிம்கன் ஒரு தூணில் ஒருவனுக்கு ஒரு முகூர்த்தம்  என்பதால்/-அது போல் இங்கும்  தேர் தட்டில் அவன் ஸ்ரீ ரெங்கத்தில்-மேல் எழுந்த வாறு சொல்லிய வார்த்தை-மேல் இருந்து ஆழம் இன்றி ஸ்வாமி அப்படி இல்லை-அனைவரும் நன்கு தெளிந்து அறியும் படி – பாரினில் ராஜ தானியில் அனைவருக்கும் வலு   கட்டாயம் இல்லை புரிந்து சொன்னது ..-கலங்கிய கருப்பு யமுனை போல– வெளுத்த தெளிவு  ஸ்வாமி காவேரி போல-/சர்வ விஷயமாக -பூமியில்/பணியும் நல்லோர்-நன்மையால் மிக்க நான்மறை யாளர்கள்-ஆழ்வான் போல/சென்று-பணிந்தது-கண்ட விஷயத்துக்கு இழுத்தாலும் திரும்பாமல் போனதே-சென்றதுக்கு பல்லாண்டு/அத்தை விடில் முடியும் என்று பிராவண்யத்துடன்- பணிந்தது -தொழுகை-விட ஸ்திரம்//சொல்லில் யார் இன்று எனக்கு நிகர்/அன்று அவன் செப்பினான்-அன்று இவ் உலகம் அளந்தான் அடி போற்றி-இன்று யாம் வந்தோம் இரங்கு  போல//யதாவச்தித்த அர்த்தம்-சரியாக பார்த்து சரியான வேளையில் மனசில் நிறுத்தி  உள்ளபடி கண்டு உணர்ந்து பேசுவது—நித்தரை நிர்தேவத்வம் -கும்ப கர்ணன்/–17 தப்பு மதங்களையும் ஸ்ரீய  பதி ஈடு பார்த்து தெரிந்து கொள்ளலாம்— ஆழ்வான் திருவடிகளில் பணிந்து -துவரித்து போய் அங்கேயே கால் தாழ்ந்தது ..மின் இடையார்-தன் நிலை போய்- பந்தும் கழலும் தந்து போ நம்பி- தள்ளினாலும் அங்கேயே கால் தாழ்ந்தான்-காதில்  கதிப்பு இட்டு தண்அம் துழாய்  கலி கச்சு கட்டி சுவரார் புறம் யார் வந்தீர் கால் தாழ்ந்து  நின்றான்-ஹனுமான் ராமன் இடம் கால் தாழ்ந்தது போல/சதிர்சர் யார் உளர் -நேய நாயோ நய-சகர நாம திரு நாமம் – நேதா-சர்வ நீயா -எல்லா உலகத்தை தன் பக்கம் -ஒருவனுக்கு வேலை காரன்-அஹம் சர்வத்ய பிரபவ உத்பத்தி ஸ்தானம் -லயிக்கும் உருவாகும் அவன் இடமே..

/லோக நாதன் சுக்ரீவனை நாதனாக- சர்வ நாதா சாரதி-அரங்கம் ஆளி என் ஆளி-ஆழ்வார்/ஸ்ரீ ரெங்க நாத மம நாத-ஸ்வாமி-/சர்வ ஜகத் காரணன் -சிறு குழந்தை சேஷ்டிதம்-சின்ன குழந்தையாக இருந்ததே மாயம்/பூதனை சகட யமளார்ஜுனன்/கோ   வஸத கோபாலர் ஸ்ருஷ்ட்டியும்-தானே எல்லாம் ஆக இருந்தான்-/கோவர்த்த நோத்ரணம்/யசோதை வையம் எழும் கண்டாள்  பிள்ளை வாயுளே-அக்ரூரர் விஸ்வ ரூபம் த்ருஷ்ட்ராதன் பிள்ளைகளுக்கும் -விஸ்வ ரூபம்-அர்ஜுனன் உதங்கர் – சஞ்சயன் /-அன்று-தத்ர தாவது-யுத்தம் ஆரம்பிக்கும் பொழுது-பகவான் புருஷோத்தமன் சர்வேஸ்வரன்-பார்த்தனை ரதியாக/ஐவர் தெய்வ தேர்- விஜயம் கொடுக்கும் தேர்/அக்நி அஸ்தரம் எரித்து இருக்கும் எரிக்காமல் விட்ட கண்ணன் திருவடி யால் தானே ஏற்றம்/தக்க ஐவர் தனக்கே தக்க தேர்  தனி பாகன்/மாய பேர் தேர் பாகு/சிரித்து கொண்டே அருளினான் சத்ரியன்-வைச்யர் சொல்ல போகிறேன்-நினைத்து சிரிக்கிறார்/புரியாது-ஸ்வாமி பாஷ்யம் எழுதி புரிய வைப்பார்/சிஷ்யன் தம்பி தாசன்–எதை நினைத்தாவது வா -திரும்பி வா என்றான் பரதன்/-ராமன் வரவில்லை  தாசன் என்றதும்  கீதை அருளினான் கண்ணன்/-ஆத்மாவின் நித்யத்வமும் ஜீவ ஈஸ்வர பேதமும் /ஜீவர்களில் பரஸ்பர பேதமும் அருளி- சரமச்லோகம்-மாயன் அன்று தெய்வ தேரில் செப்பிய /செம்மை-ஆர்ஜவம்-நேர்மை புனிதம் போக்கியம் நிறைந்த கீதா பாஷ்யம்/சங்கரர் இதை ஒரே ஜீவாத்மா பல உடல் சரீர பேதம் உபாதி என்பர் /முன்னுக்கு முன் முரணாக உபாதியும் பொய் என்றார் இவரே..கீதா பாஷ்யத்தை-தத்வ ஹிதம் புருஷார்த்தம்-விசதமாக தெரியும் படி-உபநிஷத் பாஷ்யதுடன் சேர்த்து.-பணியும் நல்லோர்/தெரியும் படி ஸ்வாமி சொல்ல-/சீரில் சென்று பணிந்தது-ஒரு பகல் ஆயிரம்  ஊழி ஆலோ என்று தரிக்க முடியாமல் ஈடு பட்டது-ஆழம்  கால் பட்டது ஆழ்வான் திருவடிகளில்/ முன்பு /வென்றியே நீங்கி போன மனம் -இன்று இங்கு சேர்ந்ததே –இனி சொல்லில் யார் எனக்கு இன்று நிகர் /பணிந்தன -பன்மையில் பணிந்தது–ஆவிக்கு தனி சிறப்பு சிந்தை தனியாக சென்றது-ஓன்று ஒன்றுக்கு  சகாயம் இன்று சென்று பணிந்தன- நோக்கி ஏக சிந்தையாய் சென்றதாம்-

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: