அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-67-சரண மடைந்த தருமனுக்கா-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
அறுபத்து ஏழாம் பாட்டு -அவதாரிகை
எம்பெருமானார் உடைய ஜ்ஞான ப்ரதத்வ-மோஷ பிரதத்வங்களை
அருளிச் செய்து நின்றார் கீழ் .பகவத் சமாஸ்ரயணத்துக்கு உறுப்பான கரணங்களை கொண்டு-வ்யபிசரியாதபடி  எம்பெருமானார் ஸ்வ உபதேசத்தாலே நியமித்து ரஷித்து இலராகில்-இவ்வாத்மாவுக்கு வேறு ரஷகர் ஆர் என்று ஸ்வ கதமாக வனுசந்தித்து-வித்தராகிறார் இதில்
சரண மடைந்த தருமனுக்காப் பண்டு நூற்றுவரை
மரண மடைவித்த மாயவன் தன்னை வணங்க வைத்த
கரண மிவை  வுமக் கன்று என்று இராமானுசன் உயிர் கட்
கரணங்கு அமைத்திலனேல் அரணார் மற்று இவ் வார்  உயிர்க்கே – 67- –
வியாக்யானம்
தான் கொடுத்த கரணங்களைக் கொண்டு ந நமேயம் -யுத்த–39 11- -என்னாதே –
திருவடிகளை ஆஸ்ரயித்த தர்மபுத்ரனுக்காக முற்காலத்திலே தன்னை வணங்கோம் என்ற
துர் மானிகளாய்  ஆஸ்ரிதரை நலிந்த துர் யோநாதிகள் நூற்றுவரை யும் -மரணத்தை
ப்ராபிப்பித்த ஆச்சர்ய சக்தி யுக்தனான சர்வேஸ்வரன் –
தன்னை ஆஸ்ரயிக்கைக்கு உப கரணங்களாக வைத்த கரணங்கள் இவை –
உங்களுக்கு சேஷமாய் உள்ளது ஓன்று அன்று -என்று
இப்படி அந்வய -வ்யதிரேகங்கள் -இரண்டாலும் -கரணங்களினுடைய பகவத்
அனந்யார்ஹத்வத்தைப் பிரகாசிப்பித்தது –
கரணங்களைக் கொண்டு வ்யபிசரிக்கிற சமயத்தில்
எம்பெருமானார் ஆத்மாக்களுக்கு
ரஷையை கற்பித்திலர்    ஆகில் இவ் ஆத்மாவுக்கு வேறு ரஷகர் ஆவார் யார் –
ஒருவரும் இல்லை என்று கருத்து .
அரண்-ராஷை
அமைத்தல்-சமைத்தல்
மாயவன் தன்னை வணங்க வைத்த -என்று சமஸ்த பதமாக யோஜிக்கவுமாம் ..
தன்னை வணங்க வைத்த –உமக்கு அன்று -என்று அரண் வெளி அமைத்துக் கொடுத்தார் ஸ்வாமி –நாமம் நமக்கு என்று கொண்டோமே -/ பாண்டவர்கள் ந நமேயம் -விலக்காமையே பற்றாசாக –நூற்றுவர் -வணங்காமல் -த்ருஷ்டாந்தம் –கரணங்களைக் கொண்டு -வியபிசரிக்கிற –நமக்கு நாமே என்றாலும் கூடாதே –ரக்ஷை அரண் அமைத்தார் ஸ்வாமி -/ மரணம் அடைவித்த –நிமித்தம் அர்ஜுனன் -என்றவாறு -/ உபதேசம் -ஸ்ரீ பாஷ்யாதிகள் மூலமும் -74 சிம்ஹாசனாதிபதிகள் மூலம் -/ திருக் கோயில் உத்ஸவாதிகள் ஏற்படுத்தி –நமக்காக பிராட்டி முன்னாக அரங்கன் திருவடிகளில் சரண் அடைந்து -ரக்ஷை பண்ணி அருளினார் –இதுவும் உபகார பரம்பரை -முந்திய இரண்டு பாசுரங்களை போலே
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை

அவதாரிகை -கீழ் இரண்டு பாட்டிலும் எம்பெருமானாருடைய ஞான பிரதான  வைபவத்தையும் -மோஷ பிரதான-வைபவத்தையும் அருளிச் செய்து -இதிலே இந்திரிய கிங்கரராய்ப் போருகிற சம்சாரிகளைப் பார்த்து -அசித விசேஷிதராய் –
போக மோஷ சூன்யராய் இருந்த வுங்களுக்கு -புருஷார்த்த யோக்யராய் -ஸ்வ சரண கமல சமாஸ்ரயணம் பன்னுக்கைக்கு உடலாக
அடியிலே கொடுத்த கர சரணாதிகளைக் கொண்டு  -வ்யபசரியாதே சர்வேஸ்வரனை ஆஸ்ரயித்து -உஜ்ஜீவியும் கோள் என்று
எம்பெருமானார் உபதேசித்து இலர் ஆகில் -இந்த சேதனருக்கு வேறு ரஷகர் யார் என்று -சொல்லா நின்று கொண்டு -அவ் வழியாலே
எம்பெருமானார் தம்முடைய மகா உபகார்த்வத்தை கொண்டாடி வித்தர் ஆகிறார் –
வியாக்யானம்சரணம் அடைந்த தருமனுக்கா -ராகவத்வே பவத சீதா -என்னும்படியான பெரிய பிராட்டியார் தானே –
விதிதஸ் சஹி தர்மஞ்சஸ் சரணாகத வத்சல-தேன மைத்ரீ பவது தேயதி ஜீவிதுமிச்சசி -என்று நேர் கொடு நேர்
உபதேசிக்கிலும் இசையாத ராவணனைப் போலே -ந நமேயம் -என்று இருக்கை அன்றிக்கே -த்ரௌபத்யா   சஹிதரஸ்
சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தனம் -என்றும் கிர்ஷ்ண  ஆஸ்ரய  கிர்ஷ்ண பலா கிர்ஷ்ண நாதாஸ் ச பாண்டவ –
என்கிறபடியே சரணாகதரான     தர்ம புத்திரன் தொடக்கமான பாண்டவர்களுக்காக –
பண்டு நூற்றுவரை -அமுதனார் -தமக்கு த்வாபரா வாஸநா காலம் புராதனம் ஆகையாலே –பண்டு -என்கிறார் –
இப்படிப் பட்ட பூர்வ காலத்திலேயே -மகா பாரதத்திலே-நூற்றுவர் -என்று தொகை இட்டு சொல்லப்பட்ட
துர்யோநாதிகள் நூற்றுவரையும் –மரணமடைவித்த -மயைவைதே நிஹிதானாம் பூர்வமேவ நிமித்தாமாத்ரம்
பவசவ்யாசாசின் -என்றும் காலோச்மி லோகஷய க்ர்தப்ரவர்த்தா -என்கிறபடி மரணத்தை ப்ராபிப்பித்த -சம்ஹரிப்பித்த
என்றபடி –மாயவன் -பகலை இரவாக்கியும் -ஆயுதம் எடேன் என்று பிரதிக்ஜை இட்டு ஆயுதம் எடுத்ததும் –
யுத்தான் நிவர்த்தனான அர்ஜுனனை நிறுத்தி -பஹூ முகமாக உபதேசித்து -கரிஷ்யே வசனம்தவ -என்னும்படி பண்ணி
தன்னுடைய பெருமை பாராதே ஆஸ்ரித பரவசனாய் -லோகத்துக்கு எல்லாம் சாஷியாக தூத்ய சாரத்யங்களைப் பண்ணின

ஆச்ச்சர்யா குண சேஷ்டிதங்களை உடைய கிருஷ்ணன் –

தன்னை வணங்க வைத்த கரணம் இவை -விசித்ரா தேக ச்ம்பத்தி  ரீஸ்வராய நிவேதிதும் -பூர்வமேவ கர்தா
ப்ரஹ்மன் ஹஸ்தபாதாதி சம்யுதா -என்றும் -ஜிஹ்வே கீர்த்தய கேசவம் முரரிபும் சேதோ பஜ ஸ்ரீ தரம்
பாணி த்வந்த்வ சமர்ச்சயாச்சுத கதாம் ஸ்ரோத்ர த்வயத்வம்   ச்ருணு கிர்ஷ்ண லோக்ய லோசன  த்வயஹரேர்
க்கச்சான்க்ரி  யுகமாலயம் ஜிக்ரக்ரான முகுந்த பாத துளஸீம்  மூர்த்தன் நமா தோஷஜம்-என்றும்
ஸ்வ சரண   கமல  பரிசரனார்த்தமாக சர்வேச்வரனாலே உண்டாக்கப்பட்ட இந்திரியங்கள் –
உமக்கு அன்று என்று -இப்படி சம்சார நிஸ்தரனத்து சாதனமாக கொடுத்த கரணங்களைக் கொண்டு –
நதியை கடக்க கொடுத்த தெப்பத்தைக் கொண்டு -அதை கடவாதே பிரவாஹத்தோடே போவாரைப் போலே
ஆக்கையின் வழி உழன்று -யாதானும் பற்றி நீங்கும் வ்ரதத்தை ஏறிட்டுக் கொண்டு -திரியுமவர்களைக் கண்டு –
உமக்கு அன்று என்று -இந்த கரணங்களைக் கொண்டு நீங்கள் சம்சரிக்கைக்காக வன்று என்று –இராமானுசன் -இந்த
எம்பெருமானார் -உயிர்கட்கு -அசேதனங்களுக்கு உபதேசிக்கப் போகாது இறே -இந்த ஆத்மா ப்ரரனவத்துக்கு உள் ஆகையாலே
இவர்களுடைய சத்தா விநாசம் கண்டு -சஹியாதே -பரம கிருபையாலே -சேதனரைக் குறித்து -கரணங்களை

உமக்கு விநியோகித்து கொள்ளுகைக்கு அன்று என்று –  அங்கு அஞ்ஞராய் -தேஹாத்மா பிராந்தர் இடத்திலே ரஷையாக –

அவ்வவ சேதனருடைய -ஸ்வ பாவத்துக்கு தகும்படி உபதேசித்தும் -பாஷ்யாதி முகேன கிரந்தீகரித்தும்
அவர்களுக்கு அமரும்படி தம்முடைய சம்பந்திகளான பேர்களாலும்-அந்வய வ்யதிரேகங்கங்களாலே
போதித்திலர் ஆகில் –  இவ்வார் உயிர்க்கு -ஏவம் சம்ஸ்ர்தி சக்ரச்தே ப்ராம்ய மானேஸ்வகர்மபி –என்கிற
சம்சார சாகர நிமக்னரான ஆத்மாக்களுக்கு –அரண் ஆர் –வேறு ரஷகாந்தரமுண்டோ -ஷேமஸ் ச ஏவ  ஹியதீந்திர
பவச்சிரிதாநாம்-என்றும் -தத்தே ரங்கீ நிஜமபிபதம் தேசிகாதேச கான்க்ஷி-என்றும் சொல்லுகிறபடியே –
தேவரீரே ரஷகர் என்றது ஆய்த்து -நசேத் ராமானுஜேத்ஏஷா சதுராசதுரஷரீ -காமவச்த்தாம் ப்ரபத்யந்தே
ஜந்தவோஹந்த மாத்ர்சா-என்னக் கடவது இறே    —
————————————————————————–
அமுது விருந்து –
அவதாரிகை –
எம்பெருமானார் ஞானம் கொடுப்பதன் சீர்மையும் -மோஷம் கொடுப்பதன் சீர்மையும்
கீழ்ப் பாசுரங்களில் கூறப் பட்டன .-இறைவன் தன்னைப் பற்றுகைக்கு உறுப்பாக கொடுத்த கருவிகளை அவன் திறத்து அன்றி
பிறர் திறத்து பயன் படுத்தாத படி –எம்பெருமானார் -தமது உபதேசத்தாலே கட்டுப் படுத்தி-இவ் ஆத்மவர்க்கத்தை ரஷித்து இலர் ஆகில் வேறு எவர் காப்பாற்றுவார் என்று தாமே-நினைந்து ஈடு பட்டுப் பேசுகிறார் .
பத உரை .
சரணம் அடைந்த -திருவடிகளை ஆஸ்ரயித்த
தருமனுக்கா -தருமா புத்த்ரனுக்காக
பண்டு -முற்காலத்தில்
நூற்றுவரை -துர் யோதனன் முதலிய நூறு பேர்களையும்
மரணம் அடைவித்த -மாளும்படி செய்த
மாயவன்-வியக்க தக்க வல்லமை படைத்த சர்வேஸ்வரன்
தன்னை வணங்க -தன்னை ஆஸ்ரயிப்பதற்காக
வைத்த  -உபகரணங்களை வைத்த
கரணம் இவை -இந்திரியங்கள் இவை
உமக்கு அன்று -உங்கள் உபயோகத்துக்காக வைக்கப் பட்டவைகள் அல்ல
என்று -என்று உபதேசித்து
இராமானுசன் -எம்பெருமானார்
உயிர்கட்கு -ஆத்மாக்களுக்கு
அரண்-ரஷையை
அங்கு -அந்த சமயத்தில்
அமைத்திலனேல் -செய்யாது இருப்பார் ஆனால்
இவ் ஆர் உயிர்க்கு -இந்த அருமையான ஆத்மாவுக்கு
மற்று அரண் ஆர் -வேறு காப்பாற்றுகிறவர் எவர் -எவருமே இல்லை -என்றபடி –
வியாக்யானம்-
சரணமடைத்த தருமனுக்கா –
தரும புத்திரனை தருமன் -என்றது -சத்ய பாமாவை -சத்யா/ பாமா- எனபது போலே நாம ஏகதேச க்ரஹணம்
மற்ற பாண்டவர்களுக்கும் த்ரௌபதிக்கும் இது உப லஷணம்-
த்ரௌ பத்யா சஹி தாஸ் சர்வே நமச்சக்ரூர் ஜனார்த்தனம் -என்று
த்ரௌ பதியோடு கூடப் பாண்டவர் அனைவரும் கண்ணனைச் சரண் அடைந்தனர் –
என்று கூறப் பட்டு இருப்பது காண்க –
சரணம் அடைந்தவர் த்ரௌபதியோடு கூடிய பாண்டவர் ஐவர் –
அவர்களைக் காப்பதற்காக நூற்றுவரை மரணம் அடைய செய்தான் மாயவன் .
கண்ணன் என்னும் கரும் தெய்வம் எல்லோருக்கும் பொதுவானதன்றோ –
அது சிலரை காப்பான் ஏன்-பலரை மாய்ப்பான் ஏன் –
கண்ணன் தன்னை வணங்குவதற்காக கொடுத்த கரணங்களை அவன் திறத்து பயன் படுத்தி வணங்கி-வழி பட்டவர் சிலர் -அத்தன்மையால் பாண்டவர்களை காப்பாற்றுகிறான் .
வணங்கா முடி மன்னன் என்று பேர் பெற்ற துர் யோதனன் முதலியோர்களோ-கண்ணன் கொடுத்த
கரணங்களை அவன் திறத்து தீங்கு இழைத்தற்காக   பயன் படுத்தி பகைமை பாராட்டினவர்கள் பலர் .
அத்தகைய நூற்றுவரை மரணம் அடைவிக்கிறான் .
தன் உயிர் நிலையான பாண்டவர்கள் இடம் பகைமைகொண்டமையின் தன் பகைவர்களாக
அவர்களைக் கருதி கண்ணன் மரணம் அடைவித்தான் -என்க .
மரணம் அடைவித்த –
மயை வைதே நிஹதா பூர்வ மேவ -இவர்கள் முன்னமே என்னாலேயே கொள்ளப் பட்டு விட்டனர் -என்று
கீதையில் கண்ணன் தானே சொல்வது காண்க –தருமனுக்காக நூற்றுவரை மரணம் அடைவித்தலின்-மாயவன் இடம் உள்ள ஆஸ்ரித பஷ பாதம் தோற்றுவது காண்க
மாயவன்-ஆச்சர்ய சக்தி வாய்ந்தவன் –
பகலை இரவாக்கியது போன்ற செயல்களை நினைத்து இங்கனம் கூறுகிறார் .
கிருஷ்ண ஏவஹி லோகானா முத்பத்தி ராபிசாப்யாய -என்று
உலகங்கட்கு கிருஷ்ணனே அன்றோ உத்பத்தி லயங்களுக்கு காரணம் .என்றபடி –
கண்ணனே கரணங்களைக் கொடுத்து சிருஷ்டி செய்வதாக அருளிச் செய்தார் .
எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயனைக் கண்ணனை -திருவாய் மொழி -3 10-8 – என்று-கண்ணனே சிருஷ்டி முதலியவற்றை செய்வதாக நம் ஆழ்வார் அருளியதும் –காண்க
பித்தேறிய காலத்திலும் -அவர்-எல்லா வுலகும் கண்ணன் படைப்பு -என்பர் .
அந்த நம் ஆழ்வார் சித்தாந்தத்தை பின் பற்றுபவரான எம்பெருமானார் கண்ணனையே
சிருஷ்டி கர்த்தாவாக சொல்வது மிகவும் பொருந்தும் அன்றோ —
கண்ணனுக்கே ஆமது காமம் -என்று பக்திக்கு விஷயமான காரணப் பொருளாக கண்ணனை-உபதேசிப்பதற்கு ஏற்ப கண்ணனே சிருஷ்டி செய்ததாக உரைக்கிறார் -என்க .
தன்னை வணங்க வைத்த —அன்று என்று-தன்னை வணங்க மாயவன் வைத்த கரணம் -என்க .
இனி மாயவன் தன்னை -என்பதனை ஒரு சொல்லாகக் கொள்ளலுமாம் .
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேசம்-இவ்விதம் ஹிருஷீகேசனாகிய -இந்திரியங்களுக்கு உரிய தலைவனாகிய –
கண்ணனாம் சாரதியை நோக்கி -அர்ஜுனன் கூறி -என்றும்
தமுவாச ஹ்ருஷீகேச ப்ரஹசன்நிவ பாரத -என்று பரத குல தோன்றலே -ஹ்ருஷீகேசனான கண்ணன்
சிரித்து பேசுபவன் போலே -அர்ஜுனனை நோக்கி சொன்னான் -என்றும் கீதையில்
கண்ணனை ஹ்ருஷீகேசன் -என்று வழங்கியதை அடி யொற்றி -எம்பெருமானார் நேர் முகமாகவும்
எதிர் முகமாகவும் –கண்ணனே இந்திரியங்களுக்கு உரியவன் -என்று உபதேசிக்கிறார் .
வைத்த கரணம் -என்று நேர் முகமாகவும்
உமக்கு அன்று -என்று எதிர்மறையாகவும்
கரணங்கள் மாயவனுக்கே உரியவை என்பதை எம்பெருமானார் வலியுறுத்து கிறார் -என்க –
நாடாத மலர் நாடி -நாடொறும் நாரணன்தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வைக்கின்று  –
திருவாய் மொழி –1 4-9 என்னும் நம் ஆழ்வார் ஸ்ரீ சூக்தி இங்கு அனுசந்திக்கத் தக்கது .
சேதனர்சம்ஹார காலத்தில் அறிவு ஒடுங்கி -அசேதனப் பொருள் போலே கிடத்தலால்
கொடுத்தகரணம் -என்னாது -வைத்த கரணம் -என்றார் .
உமக்கு அன்று -உங்களுக்கு உரியதாக வைத்தது அன்று -என்றபடி
என்று இராமானுசன்ஆருயிருக்கு-என்று -என்று உபதேசித்து
மாயவனுக்கே உரியவை கரணங்கள்
அவைகளைத் தம்நன்மைக்காக- உபயோகப்படுத்தல் தகாது -இவ் உண்மையினை அறிந்து –
தமக்காக சாதனா அனுஷ்டானம் செய்யாது -தம் கரணங்களை ஒடுக்கி -நிற்றலாகிய
சரணாகதி -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான சரணா கதி -யைக் கொண்டமையின் –
தருமன் முதலியோர் வாழ்ந்தனர் .
தம் நலனுக்காக தம் கரணங்களை உபயோகப் படுத்தி -நூற்றுவர் மாய்ந்தனர் -என்று உதாரணம் காட்டி
உபதேசித்து எம்பெருமானார் உயிர்கட்கு  அரண் அமைத்தார் -என்க .
உயிர்கள்-ஆத்மாக்கள்
அங்கு உயிர்கள் மாயவனுக்கு உரிய கரணங்களை தம் திறத்தோ பிறர் திறத்தோ உபயோகப்படுத்தி
அழிவைத் தேடிக் கொள்ளும் தறுவாயிலே
அரண்-ரஷை
அமைத்திலனேல் -செய்யாது இருப்பார் ஆயின்
இவ் ஆர் உயிர்க்கு மற்று அரண் யார்
அருமையான இவ் ஆத்மா அழியாது காக்க வேறு எவரும் இலர் -என்றபடி .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது .

பகவத் சமாஸ்ரயனத்துக்கு உறுப்பான கரணங்களை கொண்டு வ்யபிசரியாத படி எம்பெருமானார்-ஸ்வ  உபதேசத்தாலே -இந்த்ரி கேசன்-அடியார்களின் இந்தரியங்களை அபகரித்து -கண்டவர் தம் மனம் வழங்கும்-பண்டு- முன்பு ஒரு காலத்திலேயே-மாயவன்-ஆஸ்ரித சேஷ்டிதங்கள் உடையவன்-அவனை வணங்க வைத்த கரணம் இவை-உமக்கு அன்று-என்று -அரண்-ரஷகம்-வேலி இட்டு -அமைத்தார்..இந்தரியங்களை பட்டி மேய்க்க விடாமல் அவன் இடம்-இதை கீதையிலே சொன்னானே-ஸ்வாமி நம்மால் முடிந்ததை சொல்ல வந்தாரே–கர்ம யோகம் பண்ண இல்லையுமாம்-எலலாம் அவனுக்கு என்று நினைத்து சரண் அடைந்து கைங்கர்யம் பண்ண தான்-என்னையும் என் உடைமையும் -உன் சக்கர பொறி ஒற்றி கொண்டு-சேர்த்து விநியோகம் பண்ணி கொள்ளணும்-இவை எல்லாம் எனக்கு அன்று அவனுக்கு என்பதே சரணா கதி/ஆத்மா அணு சொரூபம்- சக்கர பொறி எப்படி- சேஷத்வ ஞானம் கொடுப்பது இதற்க்கு -ஞானம் ஒன்றே வேண்டுவது-அதுவும் யார்கள் தான் -மழுங்கி மறைந்து இருந்ததை வெளிப்படுத்தினால் போதும்-/மாம்- மதியம்-சேர்ந்தவர்களையும் கைங்கர்யம் கொள்வாய்-அசேதனம் -மாம்-பிரமித்து  உள்ள சரீரமும் சொத்துகளும்

வாய் அவனை அல்லாது வாழ்த்தாது-கை உலகம் தாவி அளந்தவனை அன்றி தொழாது-கேளா செவி அல்ல செவி-உள்ளாத உள்ளத்தை உள்ளமாக கொள்ளோமே-பிரிந்தால் தரிக்க மாட்டாமே

கரணங்களை கொடுக்கிறான்- காருணிகன் ஆன சர்வேஸ்வரன் நீர்மை யினால்  அருள் செய்தான் -ஆச்சர்ய ஹ்ருதயம்-ந நமேயம்-வணங்க மாட்டேன் என்று சொல்லவும் அவன் கொடுத்த வாயை கொண்டு ராவணன் சொல்கிறான்-தரும புத்ரனுக்க- திரௌபதி சேர்த்து- திரௌபதி உடன் சரண் அடைந்தார்கள்-பெரிய பாரதம் –மரணம் அடை வித்த-கொல்ல மாட்டேன் என்றவரை கொண்டு செய்தானே-அதனாலே மாயவன்-சக்தி யுத்தனான சர்வேஸ்வரன்- நியமன சாமர்த்தியம் கொண்டவன்-மனசுக்குள் இருந்து நியமித்தான்-அப்படி சர்வேச்வரனாய் இல்லாமல் ஸ்வாமி பண்ணினாரே-சண்டை போட தன் செய்ய முடிந்தது இந்த்ரியங்களை வச படுத்தி சரண் அடைய செய்ய முடியவில்லை அவனால்-ஸ்வாமி சரண் அடைய வைத்தாரே

அணைத்த வேலும் தொழுத கையும் -கலியன் நின்ற பிரகாரமும் சேஷத்வம் பறை சாற்றும்-மின் இடை-இடை சிறுத்தல் வைராக்கியம்-கண்கள்-ஞானம்-மார்பகம்-பக்தி/-அந்வயம் விரதிரேகம் இரண்டாலும் சொன்னார் -புரிய வைக்க /அர்கம்-அன்யார்கம் -அனந்யார்கம்-அவனுக்கே ஆட் படுத்தல்–என் நாவின் இன் கவி ஒருவருக்கும் கொடுத்திலேன்-அங்கு-அரண்-தேவை உள்ள இடத்தில் வேலி-ஸ்வாமி தவிர ரஷகர் வேறு இல்லை இந்த்ரியங்களை அடக்க வைத்து

சமஸ்த பதமாக –மாயவன் தன்னை வணங்க தானே-ஸ்ரீமன் நாராயணனே உன்னை என்று இன்றி-ஸ்ரீமன் நாராயணனின் சரண் அடைவது போல சேர்த்தும் விரித்தும் கொள்ளலாம்-இந்திரிய கிங்கரனாக இருக்க கூடாது

அசித் போல நாம ரூபம் இன்றி இருந்த பொழுது போக மோஷ சூன்யராய் இருந்த நமக்கு
-புருஷார்த்த யோக்யனாய் இருக்க -கரணங்களை கொடுத்தார்-இதை கட்டுக்குள் கொண்டு வைக்க உபதேசித்து  உபகரிகிறார்
/சீதை பிராட்டியே- நேராக தானே – உசந்த -நல்ல -விஷயத்தை -கொடுத்தாலும் ராவணன் கேட்க்கவில்லை/
-கிருபையே தர்மம் ஆக கொண்டவன்- சர்வ லோக சரண்யன்-கை பிடித்து கொள்-
 காலை பிடித்த அடியவரையும் கை பிடித்த  பிராட்டி போல கொள்பவன்  ராம அபிப்ராயம் தெரிந்து பிராட்டி பேசுகிறாள்.
.ச்வாபம்.பிரபாவமில்லை இது ..கேட்டும்  திருந்தாமல் இருந்தானே-
 அப்படி இன்றி சரணம் அடைந்த தர்மனுக்கா-கிருஷ்ணா ஆஸ்ரய கிருஷ்ணா நாத கிருஷ்ணா பல மாக கொண்டவர்கள்
–திரௌபதி உடன் சேர்ந்து நமஸ் கரிக்க-நமஸ்காரமே சரணா கதி.
.நூற்றுவரையும்-தொகை இட்டு சொல்ல பட்ட -மரணம் அடைவித்த -காலோச்மி-காலன்-காட்டுகிறான் விஸ்வ ரூபம் பொழுது/
 முன் கொன்ற-அழல விழித்தான்-தானே பண்ணினாலும்-தானே எல்லாம் பண்ணி விட்டு-/ஆஸ்ரித பஷ பாதி/

பகலைஇரவு  ஆக்கியும்  //வெள்ளை புரவி தேர் விசயர்க்காய்/ஆயுதம் எடேன் என்று பிரதிஜை பண்ணி  மீண்டு எடுத்ததும்//தன சத்யம் குலைத்து அடியார் சத்யம் காத்து பேர் வாங்கி கொண்டாரே //18 அத்யாயங்கள் அருளி–கரிஷ்யே வசனம் தவ-ஒரு வார்த்தை  ஜீவாத்மா இடம் வாங்க வாங்க -700 ஸ்லோகம் சொல்ல வைத்தான் அர்ஜுனன்–மாசுசக ஒரு வார்த்சை சொல்ல ஆழ்வார்கள் பட்ட பாடு/-ஆனந்தம் ஆரம்பம் அப்ரியம்- முடித்தார்  முகில் வண்ணன் அடி அடைந்து உய்ந்த சந்தோஷத்துடன் முடித்தார் ஆழ்வார் //ஸ்லோகங்கள்  கேட்டு பின்பு தேரை ஓட்ட சொல்லி பண்ணினனே-தன்னை உலகம் பார்க்க தாழ விட்டு கொண்டானே -இதுவே ஆச்சர்யம்/-மாயவன்-தன்னை-வணங்க வைத்த -கிருஷ்ணன்-ஜகத் சிருஷ்டி/எல்லா உலகும் கண்ணன் படைப்பு-மாறன் அடி பணிந்த ஸ்வாமி-கரணங்கள் கொடுத்தவனே கிருஷ்ணன்- கண்ணகுக்கே ஆம் அது காமம்-காரணத்தை த்யானம்- பண்ணு-பக்தி செய்ய வேண்டும்-கருத்த மனம் ஒன்றும் வேண்டாம் கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-ஆழ்வார் //வணங்க வைத்த கரணம் இவை-கொடுத்த என்றால் நமக்கு -வைத்த என்றால் எடுத்து கொள்ளலாம்-பிரளயம் பொழுது கொண்டு போவார் வைத்த பொழுதே நாம் அவனுக்கு உபயோகிக்கிறது இல்லை இன்னும் கொடுத்தால்-/யாரோ நம் இடம் வைத்த வஸ்துவை -நாம் உபயோகித்து கொண்டு —நாக்கே கேசவனை பாடு  கைகளே தொழு  ஸ்ரீதரனை  அர்ச்சனை–ஹரி ஆலயத்து  நோக்கி நட காலே /தலையே வணங்கு- குலேசேகரர் முகுந்த  மாலை/மோஷ சாதனங்கள்/ நதியை கடக்க கொடுத்த தெப்பம் கொண்டு கடவாமல் / பிரவாகத்துடன் போவாரை போல–ஆக்கையின் வழி உழன்று–யாதானும் பற்றி நீங்கும் விரதம்/கண்டு-உங்களுக்கு இல்லை-என்று சொல்லி-உயிர் களுக்கு -கண்ணன் அசேதனுக்கு சொன்னது போல தான்-அங்கு உயிர் களுக்கு விசேஷித்து சொல்ல வில்லை/பர துக்கம் சகியாதே நிர்கேதுக  கிருபையால்/நாடாத  மலர் நாடி  –வாடாத மலர் அடி கீழ் வைக்கணும் -ஆத்மா சமர்ப்பணமே -அத்துவும் உன்னதே/ரஷை- அவர்  அவர் ஸ்வாபம் தக்க படி உபதேசித்து-பகு முகமாக-பாஷ்யம் க்ரந்தம் போல அருளியதும் /74 பேரால் நிலை நாட்டியும் //ரஷித்து அருளினார் ..சரண கதி மோஷம் பெற்றும் கொடுத்தீர் இதுவே ஷேமம்//சதுரா சதுர அஷரம்- ராமானுஜர்-நம் போல  ஜந்துகள் பற்ற -காமங்கள் தொலைகிறார் ஆழ்வான்-ஞானம் கொடுக்கிறார் பலம் மோஷம்-அதுவும் கொடுக்கிறார்-அதை அடைய விரோதி இந்த்ரியங்கள்-இந்த்ரியங்கள் ஜெயித்தால் தன மோஷம் -அதுவும் அவர் ஆக்கி தருகிறார்–

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: