அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–108-அங்கயல் பாய் வயல் தென்னரங்கன் அணியாக மன்னும்-இத்யாதி -..

பெரிய ஜீயர் அருளிய உரை
நூற்று எட்டாம் பாட்டு -அவதாரிகை
நிகமத்தில்
இப்ப்ரபந்த ஆரம்பத்திலே
-இராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -1 – என்ற ப்ராப்யம்
தமக்கு யாவதாத்மபாவியாம்படி கை புகுருகையும் –
அந்த ப்ராப்ய ருசி ரூப பக்தி பௌஷ்கல்யமே  தமக்கு அபேஷிதமாகையாலே –
தத் உபய சித்யர்த்தமாக ஸ்ரீ ஆகையாலே –
தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி-100 –
என்கிறபடியே சர்வாத்மாக்களுக்கும் என்றும் ஒக்க சார்வாய் -சம்பத் ப்ரதையான
பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம்-என்கிறார் .
அங்கயல் பாய் வயல்   தென்னரங்கன் அணியாக மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி யெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்து நெஞ்சே நம் தலை மிசையே
பொங்கிய கீர்த்தி இராமானுசனடிப் பூ மன்னவே – – 108-
வியாக்யானம் –
நெஞ்சே -பக்தி தத்வமானது நிரவசேஷமாக -நம் அளவிலே குடி கொண்டது என்னும்படி
சம்ருத்தமாய் விஸ்ருதையான கீர்த்தியை உடைய ரான எம்பெருமானார் உடைய
திருவடிகள் ஆகிற செவ்விப் பூ –
மயிர் கழுவிப் பூ சூட விருப்பாரைப் போலே எப்போதோ என்று
ஆசைப் பட்டு இருக்கிற நம் தலை மேலே நித்ய வாசம் பண்ணும்படியாக –
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -திரு வாய் மொழி -7 2-1- -என்கிறபடியே
ஜல சம்ருதியாலே அழகிய கதர்சநீயமான கோயல்கள் உகளா நின்றுள்ள -வயல்களை உடைத்தாய் –
தர்சநீயமான கோயிலையே தமக்கு நிரூபகமாக உடைய ரான பெரிய பெருமாளுடைய
அழகிய திரு மார்விலே -இறையும் அகலகில்லேன் -திரு வாய் மொழி -6 10-10 – என்று நித்ய வாசம்
பண்ணா நிற்பாளாய்–ஸ்லாக்கியமான தாமரைப் பூவை பிறப்பிடமாக வுடையாளாய் –
நிரூபாதிக ஸ்த்ரீத்வத்தை வுடையாளான
ஸ்ரீ ரங்க நாச்சியாரை ஆஸ்ரயிப்போம் ..
போற்றுதல் -வணங்குதல் புகழ் தலுமாம்
அடியில் பூ மன்னு மாது – 1-என்றார் –இங்கே பங்கய மா மலர் பாவை -108- என்றார்
அங்கே பொருந்திய – – என்றார் –இங்கு –அணி யாகமன்னும் — – என்றார்

அங்கு –இராமானுசன் உன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ –1- – என்றார்

இங்கு –தலை மிசையே இராமானுசனடிப் பூ மன்ன – 108- என்றார் .
அங்கு நெஞ்சே – 1- என்று திரு உள்ளத்தையும் கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் –
இங்கு —நெஞ்சே – 108- என்று திரு உள்ளத்தோடு கூட அனுசந்தித்து தலைக் கட்டினார் .
இத்தால்
ப்ராப்ய ருசி வ்ருத்தியும்–
ப்ராப்ய சித்தியும் ஆகிற  –
ஸ்வரூப அநு ரூப சம்பத் சித்திக்கடி –
சகல ஆத்மாக்களுக்கும் -தத் தத் அதிகார அநு குணமாக அபேஷித்த சம்பத்விசேஷங்களை
ஸ்வ கடாஷ விசேஷங்களாலே உண்டாக்கி யருளும் –பெரிய பிராட்டியார் என்றும் –
ப்ராப்யம் தான் ஆசார்ய சரணாரவிந்தம் -என்றும் –
அத்ரபரத்ர சாபி நித்யம் -ஸ்தோத்ர ரத்னம் – 2- என்கிறபடியே
யாவதாத்மம் விச்லேஷம் அற்று இருக்கை என்றும் –
இதுக்கு அதிகாரிகளும் இந்த ப்ராப்யத்தில் சஹ்ருதயமான ப்ராவண்யம் உடையவர்கள் என்றும் சொல்லிற்றாயிற்று  –
பங்கய மா மலர் பாவையை போற்றி -அனைத்தும் பெறலாமே –
மண்டல அந்தாதி -தெருவில் ஆரம்பித்து தெருவில் முடித்து
வீட்டுடைத்த தலைவி தானே ப்ராப்யம் அருளுவாள்-ஆச்சார்ய கைங்கர்யம் -யவாதாத்மபாவி –
பிராட்டிக்கு விசேஷணம் தென்னரங்கன் -பிராட்டி இருப்பிடம் என்றே தென்னரங்கன் –
பிரபை-ஸூ ரியன்–ஆகம் மன்னும் -மாது பொருந்திய மார்பன் –
பாவையைப் போற்றுதும் -திவ்ய தம்பதியைப் போற்றுதும் -சூழ்ந்து இருந்து ஏத்துவோம் பல்லாண்டு
சரண்ராவிதம் நாம் மன்னி வாழ –இதுவே கர்தவ்யம் -சதாசார்ய பிரசாதத்தால் -திவ்ய தேச கைங்கர்யம் –
நிர்ஹேதுகமாக பரம கிருபையால் பரகத சுவீகார பாத்திரமான பின்பு மங்களா சாசன பரராக இருந்தோம் என்று திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து இத்தால்
நாமும் இப்பிரபந்தம் சொல்லி இப் பேறு பெறுவோம் என்று அருளிச் செய்கிறார் –
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
 -ஸ்ரீ மதே ரம்ய ஜாமாத்ர முநயே  விததே நம யச்மர்திஸ்  சர்வ ஸித்தீ நாமந்தராய நிவர்ரணே –
அவதாரிகை -நிகமத்தில் -கீழ் இரண்டு பாட்டிலும் எம்பெருமானார் தம்மை நிர்ஹேதுகமாக
அபிமானித்து தம்முடைய திரு உள்ளத்திலே எழுந்து அருளி இருந்து நித்ய வாசம் பண்ணுகிற
படியையும் -அநந்தரம் தமக்கு ததீய பர்யந்தமாக ப்ரேமம் பிறந்து -அவர்கள் விஷயத்தில் அசேஷ சேஷ
வ்ர்த்திகளும் பண்ணிக் கொண்டு போரும்படி என்னை கடாஷித்து அருள வேணும் என்று தம்முடைய
அபிமத்தை அருளிச் செய்து -இப்பாட்டிலே -எம்பெருமானார் திருவடிகள் ஆகிற செவ்விப்பூவை
நம்முடைய தலை மேலே கலம்பகன் மாலை அலங்கரிப்பாரைப் போலே அலங்கரித்து ஸ்தாவர
பிரதிஷ்டையாக நிறுத்தி அருளினார் ஆகையாலே –அந்த பரிக்ரஹா அதிசயத்தை கொண்டு திவ்ய தம்பதிகளான- ஸ்ரீ -ஸ்ரீயபதிகளை    மங்களா சாசனம் பண்ணுவோம் என்று பக்தி தத்வம் எல்லாம் தன்னளவிலே குடி கொண்டது என்னும்படி அத்ய அபி வர்த்தமான தம்முடைய திரு உள்ளத்தோடு கூடி-பலத்தை சொல்லித் தலைக் கட்டுகிறார் –

 

இப் பிரபந்த ஆதியிலே தமக்கு உசாத் துணையாக தம்முடைய மனசைக் கூட்டிக் கொண்டு –
எம்பெருமானார் உடைய திரு நாமத்தை சொல்லுவோம் வா என்று -உத்யோகித்தபடியே செய்து –
அத்தாலே தமக்கு பலித்த அம்சத்தை -இருவர் கூடி ஒரு கார்யத்தை பண்ண ஒருப்பட்டு -அது தலைக்
கட்டினவாறே அதிலே ஒருவன் தனக்கு தோழனான இரண்டாம் அவனுக்கு அந்த செய்தியை சொல்லுமா போலே
இவரும் தமக்கு சகாவான திரு உள்ளத்தை சம்போதித்து சொல்லுகிறார் –அடியிலே நெஞ்சு என்னும் திரு உள்ளத்தைக்
கூட்டிக் கொண்டு உபக்ரமித்தார் ஆகையாலே -இங்கே நெஞ்சே என்று தம் திரு உள்ளதோடு கூடி
அனுபவித்து தலை கட்டுகிறார்
த்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து நெஞ்சே –பக்தி சப்த வாச்யம் எல்லாம்
ஏக ரூபமாய் கொண்டு உன்னளவிலே சேர்ந்து குடி கொண்டு இருந்தது என்னும் படி சம்ர்த்தமாய்
இருக்கிற நெஞ்சே –போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -உனதடிப் போதில் ஒண் சீராம்-தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி நின்பால் –என்று இவர் தாமே தம்முடைய திரு உள்ளம்

பக்த பரிதம் என்னும் இடத்தை கீழே அருளிச் செய்தார் இறே -அன்றிக்கே –பக்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து -என்கிற இத்தை எம்பருமானார் திருவடிகளுக்கு விசேஷணம் ஆக்கவுமாம்– -பக்தி எல்லாம் தங்கிய தென்னத்து தழைத்து -சஹ்யத்தில் ஜலம் எல்லாம் கீழே குதித்து ஒரு மடுவாகத் தங்கினால் போலே -என்னுடைய பக்தி ரசம் எல்லாம் பரம பக்தி ரூபமாய்க் கொண்டு பரி பக்குவமாய் படிந்து -எம்பெருமானார் திருவடிகளிலே தங்கிற்று -என்னும் படி தழைத்து இருக்கிற –

பொங்கிய கீர்த்திஏய்ந்த பெரும் கீர்த்தி -என்கிறபடியே பரம பதத்தின் அளவும் வளர்ந்து கொண்டு ஓங்கி இருக்கிற
கீர்த்தியை உடையரான -இராமானுசன் -எம்பெருமானாருடைய –
உபக்ரமத்திலே -பல்கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன் -என்கிறார் ஆகையாலே -இங்கு பொங்கிய கீர்த்தி
இராமானுசன் -என்கிறார் -அடிப்பூ–கீழ் சொன்ன தழைப் பதோடு  கூடி இருக்கிற  எம்பெருமானாருடைய
திருவடித் தாமரைகள் –அடியிலே சரணாரவிந்தம் -என்கிறார் ஆகையாலே -இங்கே அடிப்பூ என்கிறார் –
யாவதாத்மபாவி  ஸூபிரதிஷ்டமாய் இருக்கையாலே —மன்னவே –-அம் கயல் பாய் வயல் தென்னரங்கன் -அணி யாகம் மன்னும் -செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் -என்கிறபடியே உபய காவேரி களினுடையவும்
ஜல சம்ர்த்தியாலே வளர்ந்த மத்ச்யங்கள் உகளா நின்றுள்ள -கேதாரங்களாலே சூழப்பட்டு -அத்யந்த
தர்சநீயமான -அரங்கத்துக்கு நிர்வாஹனாய் -அத்தையே நிரூபகமாக உடையரான -பெரிய பெருமாளையும் –

அவர் தம்முடைய அழகிய திரு மார்பிலே அலங்கார பூதையாய் -இறையும் அகலகில்லேன் -என்றும் அப்ரமேயம் ஹிதத் தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே பிரபையும் ப்ரபாவனையும் போலே -அப்ர்தக் சித்தையாய்-ஸ்வரூப நிரூபகையாய் -கொண்டு நித்ய வாசம் பண்ணுமவளாய்  –உபக்ரமத்திலே –பொருந்திய மார்பன் -என்றார் ஆகையாலே –இங்கே மன்னும் -என்கிறார் –

அம் -அழகு கயல்-மத்ஸ்யம் -பாய்தல்-சலித்தல் வயல்-கழனி அணி -அலங்காரம் -ஆகம்-மார்பு
மன்னுதல் -பொருந்துதல் -பங்கய மா மலர் பாவையை -தாமரை மலரிலே பெரிய பிராட்டியார் அவதரிக்கையாலே
அத்தை கடாஷித்து அதற்கு ஒரு மகத்வத்தை சொல்லுகிறார் – அப்படிப்பட்ட தாமரைப்பூவை பிறப்பிடமாகவும்
நிரூபகமாவும் உடையவளாய் -பால்ய யவன மத்யச்தையான ஸ்ரீ ரெங்க நாயகியாரையும் -அலர்மேல் மங்கை
என்னக் கடவது இறே -பாவை -ஸ்திரீ -அடியிலே பூ மன்னு மாது என்றார் ஆகையாலே இங்கு
பங்கய மாமலர் பாவையை -என்கிறார் -போற்றுதும் -இப்படி இருந்துள்ள திவ்ய தம்பதிகளை –
மங்களா சாசனம் பண்ணுவோம் –போற்றுதல்-புகழ்தல் -ஆசார்யன் சிஷ்யனை திருத்துவது –
சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு -என்கிறபடியே -பகவத் விஷயத்திலே யாவதாத்மா பாவியாக-மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு போருகை -இறே –உகந்து அருளின நிலங்களிலே-ஆதர அதிசயமும் -மங்களா சாசனமும் சதாசார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும்படி பண்ணிக்-கொண்டு போரக் கடவன் -என்று ஸ்ரீ வசன பூஷணத்திலே பிள்ளையும் அருளிச் செய்தார் இறே –
ஆக இத்தாலே –எம்பெருமானார் தம்முடைய நிர்ஹ துக  பரம கிருபையாலே பரகத ஸ்வீகார பாத்ரனான-பின்பு -அதற்கு பலமாக  -இப்படி மங்களா சாசன பரராய் இருந்தோம் என்று -தாம் பெற்ற பேற்றை-தம் திரு உள்ளத்தை குறித்து அருளிச் செய்து -இப்பிரபந்தத்தை தலை கட்டி அருளினார் ஆய்த்து –
————————————————————————–

அமுது விருந்து –

அவதாரிகை

இந்தப் பிரபந்தத்தைப் பூர்த்தி செய்பவராய்த்-தொடங்கும் போது -இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்றுதாம் அருளிச் செய்த பேறுதமக்கு ஆத்மா உள்ள அளவும் கைப்படவும் -அப் பேற்றினைப் பெறும் வேட்கை வடிவமான பக்தி தழைக்கவும் -விரும்பி-அவ் விரண்டும் தமக்கு கை கூடுவதற்காக  –ஸ்ரீ தேவி யாதலின் -அனைவராலும் ஆச்ரயிக்கப் படுவாளாய் -அதனுக்கு ஏற்ப -தேன் அமரும் பூ மேல் திரு நமக்கு என்றும் சார்வு -மூன்றாம் திருவந்தாதி – 100-என்றபடி உயரினம் அனைத்துக்கும் சார்வகிச் செல்வம் அளிப்பவளான-பெரிய பிராட்டியாரை ஆஸ்ரயிப்போம் என்று அமுதனார் தம் நெஞ்சை நோக்கிக் கூறுகிறார் .

பத உரை –
நெஞ்சே -மனமே
பக்தி யெல்லாம் –பக்தி யானது முழுதும்
தங்கியது என்ன -நம்மிடமே குடி கொண்டு விட்டது என்று சொல்லும்படி
தழைத்து -செழித்து
பொங்கிய -விரிவடைந்த
கீர்த்தி -புகழ் வாய்ந்த
இராமானுசன் -எம்பெருமானார் உடைய
அடிப்பூ-திருவடிகளாகிற மலர்
நம் தலை மிசை -நம்முடைய தலையின் மீது
மன்ன-பொருந்தி எப்பொழுதும் இருக்கும் படியாக
அம் கயல் -அழகிய மீன்கள்
பாய் -பாய்கிற
வயல் -வயல்களை உடைய
தென் அரங்கன் -அழகிய திரு வரங்கத்தின் கண் உள்ள பெரிய பெருமாள் உடைய
அணி ஆகம் -அழகிய திரு மார்பிலே
மன்னும் -எப்பொழுதும் பொருந்தி இருப்பவளும் –
பங்கயம் -தாமரை என்னும்
மா மலர் -சீரிய பூவிலே பிறப்பினை உடையவளுமான
பாவையை -பெண் மணியான ஸ்ரீ ரங்க நாச்சியாரை
போற்றுதும் -ஆஸ்ரயிப்போம்
வியாக்யானம் –
அம் கயல் –போற்றுதும் –
நெஞ்சே பக்தி யெல்லாம் தங்கியது –என்னத் தழைத்து -நம் தலை மிசை -அடிப் பூ மன்ன பாவையைப் போற்றுதும் -என்று கூட்டிப் பொருள் கொள்க –
திருவரங்கத்தில் நீர் வளம் மிக்கு இருத்தலின் வயல்களிலும் நீர் வற்றாமையினால்
அழகிய மீன்கள் -ஓங்கு பெரும் சென்னலூடு கயல் உகள -திருப்பாவை – 3- என்றபடி
உகளா நிற்கின்றன .செங்கயல் பாய் நீர்த் திருவரங்கம் -என்றார் நம் ஆழ்வாரும் .
தென்னரங்கன் அணி ஆக்கத்தில் இறையும் அகலகில்லாது மகிழ்ந்து மன்னி உறைகிறாள் -பாவை
வயல்களிலே நீரை விட்டு அகலகில்லாது களித்து உகளா நிற்கின்றன -கயல்கள் –
ஜலான் மத்ஸ்யா விவோத்திரு தெவ்-என்று மீனின் இயல்பு கொண்ட வளாகப் பிராட்டியும்
கூறப்படுவது காண்க .
நீர் உளது எனின் உளது மீன்
மார்பு உளது எனின் உழல மா மலர்ப் பாவை
நாரத்தை நீரை பற்றி உள்ளன கயல்கள்

நாராயணனைப் பற்றி உள்ளால் பங்கயப் பாவை . அணி யாகம் மன்னும் -என்கையாலே பகவானை

ஸ்ரயதே -ஆஸ்ரயிக்கிறாள் என்னும் பொருளும்
போற்றுதும் -என்கையாலே சேதனர்கள் ஆகிற நம்மாலே ஆஸ்ரயிக்கப் படுகிறாள்
என்னும் பொருளும் ஸ்ரீ சப்தத்துக்கு காட்டப் பட்டன -இதனால் சேதனர்கள் உடைய விருப்பத்தை
இறைவனைக் கொண்டு நிறைவேற்றித் தரும் தன்மை –புருஷகாரமாய் இருக்கும் தன்மை-பிராட்டி இடம் உள்ளமை உணர்த்தப் படுகிறது ..
தாமரையைப் பிறப்பிடமாக உடையவள் அதனை விட்டு மார்பிலே மன்னி விட்டாள் –
இதனை விட்டு இனி அகலாள்
அதற்கு ஹேது மார்பின் அழகுடைமை
இது தோற்ற அணி ஆகம் -என்றார் .

பாவை பதுமை போல கணவனுக்கு பர தந்திரையாய் இருத்தல் பற்றி -பெண்களுக்கு உவம ஆகு பெயர் –

தென்னரங்கனை போற்றிடில் ஸ்வ தந்த்ரன் ஆதலின் -ஒரு கால் நம்மை உதறித் தள்ளவும் கூடும் –
பாவையைப் போற்றிடிலோ -உதறித் தள்ள வழி இல்லை
பகவானுக்கு பர தந்த்ரையாய் -அவனுக்கு குறை நேராதவாறு நடந்து கொள்வாள்
ஆதலின் -போற்றுதல் பயன் பெற்றே தீரும் -என்பது கருத்து .
பக்தி யெல்லாம் தங்கியது என்னத் தழைத்து –
இங்கே பக்தி என்பது பேற்றினைப் பெறற்கு சாதனமாகக் கைக் கொள்ளும் சாதனா பக்தி யன்று -.
போஜனத்திற்கு பசி போலே பேற்றினைத் துய்த்துதற்கு -தேவைப் படுகின்ற வேட்கை யாகும் –
இது ப்ராப்ய ருசி -எனப்படும்
அந்த ப்ராப்ய ருசி எந்த விதம் யெல்லாம் வர வேண்டுமோ -எவ்வளவு வர வேண்டுமோ –
அவ்விதம் அவ்வளவு -முழுவதும் நிறைவேற வேண்டும் .
பிராப்ய ருசி முழுதும் நம்மிடம் குடி புகுந்து விட்டது -என்று சொல்லலாம்படி
தழைத்து இருக்க வேண்டும் -என்று அமுதனார் ஆசைப் படுகிறார்
இவர்க்கு பிராப்யம்   -எம்பெருமானார் அடிப்பூ மன்னுதல் –
அதனுக்கு ஏற்ப பூரணமாக ப்ராப்ய ருசியை வேண்டுகிறார் .
தழைத்து மன்ன -என இயைக்க –
பசித்து உண்ண -என்பது போன்றது இது –
நெஞ்சே -பேற்றினைப் பெற அவாவுகின்ற நெஞ்சே
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்
ஒண் சீராம் தெளிதேன் உண்டு அமர்ந்திட வேண்டி -100 – என்று இப் பேற்றின்
சுவையைத் துய்ப்பதற்கு -தம் நெஞ்சு முற்பட்டதை முன்னரே கூறினார் அன்றோ –
நெஞ்சே சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ -என்று தொடங்கினவர்
நெஞ்சே நம் தலை மிசை அடிப்பூ மன்ன -என்று முடிக்கிறார் .
நம் தலை மிசை –அடிப்பூ மன்ன
நம் தலை மிசை -தலை குளித்து பூசூட விரும்புவர் போன்று
சரணாரவிந்தம் எப்போதோ என்று ஆசைப் பட்டு கிண்டு இருக்கிற

நம் தலையிலே -என்றபடி ..பொங்கிய கீர்த்தி -பரந்த புகழ் -திக்குற்ற கீர்த்தி -என்றார் முன்னம் –

அடிப்பூ நம் தலைமிசை மன்ன –மன்னும் பாவையைப் போற்றுதும் -என்கிறார் –
தான் அணி யாகத்தில் மன்னி இருப்பது போலே நம் தலை மிசை அடிப்பூ மன்னி இருக்கும்படி
செய்வதற்காக பாவையை ஆஸ்ரயிப்போம் என்கிறார் .
போற்றுதல்-ஆஸ்ரயித்தல்-புகழுதலும் ஆம் –
உயரினங்கள் அனைத்துக்கும் தம் தம் தகுதிக்கு ஏற்ப -கோரும் அவ்வச் செல்வங்களை –
தன அருணோக்தங்களால்   உண்டாக்கி -அளிக்க வல்லவளான பிராட்டியே
சரம பர்வ நிஷ்டர் –
தம்தகுதிக்கு ஏற்ப கோரும்
ப்ராப்ய ருசி எனப்படும் -பக்தியின் வளப்பமும்
ப்ராப்யமான -அடிப்பூவுமாகிற செல்வங்களை
தந்து அருளால் வேண்டும் என்பதையும் –
சரம பர்வ நிஷ்டருக்கு ப்ராப்யம் ஆசார்ய சரணாரவிந்தம் என்பதையும் –
அது -அதர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் -ஸ்தோத்ர ரத்னம் -3 –
இங்கும் பரம பதத்திலும் எவருடைய திருவடிகள் என்றும் எனது சரணாம் -என்றபடி
பிரிவின்றி நிரந்தரமாய் உள்ளதொன்று என்பதையும்
இத்தகைய பேற்றினில் மிக்க ஈடுபாடு உடையோர் ஆசார்ய நிஷ்டைக்கு அதிகாரிகள்
என்பதையும் இங்கே அமுதனார் காட்டி அருளினார் ஆயிற்று –

முதல் பாசுரத்தில் தொடங்கிய வண்ணமே -இந்த பாசுரத்திலும் முடித்து இருக்கும் அழகுகண்டு களிக்கத் தக்கது .-

பூ மன்னு மாது தொடக்கத்தில் வருகிறாள் –
பங்கய மா மலர் பாவை முடிவிலே வருகிறாள் .
அங்கே மார்பிலே போருந்தினவல் வருகிறாள்
இங்கே அணி யாகத்திலே மன்னுமவள்  வருகிறாள் .
அங்கே மன்னி வாழ சரணாரவிந்தம் வருகிறது –
இங்கே மன்ன அடிப்பூ முடியிலே அடியிட வருகிறது –
இரண்டு இடங்களிலும் நெஞ்சு பாங்காய் அமைகிறது .
இராமானுசன் சரணாரவிந்தம் -நம் தலை மிசை மன்ன -மலர் சூடி
மங்கள வாழ்க்கை பெற்று -நிரந்தரமாக வீற்று இருப்பதற்கு -மங்கள வடிவினளான
மலர் மகளை போற்றிடுவோம் என்பது

இந்தப் பிரபந்தத்தின் திரண்ட பொருளாகும்

-குருகூரன் மாறன் அடி பணிந்துய்ந்த குருவரன் தான்-தரு கூரன் பார்ந்த திருமலை நல்லவன் தந்தனனால்-குருகூரர் நாதன் சரண் சேரமுதன் குலவு தமிழ்-முருகூரந்தாதி யமிழ்தினை இப்பார் முழுதுக்குமே – –

குருவரன் -சிறந்த ஆசாரினாகிய எம்பெருமானார் –
கூரன்பு -மிக்க அன்பு
ஆர்தல் -நிறைதல்
திருமலை நல்லவன் -திரு மலை நல்லான்
குருகூர் நாதன்-குருவான கூரத் ஆழ்வான்
அமுதன் -திருவரங்கத் தமுதனார்
குலவுதல்-கொண்டாடுதல் -பழகுதலுமாம்
முருகு -மணம் -தேனுமாம் –
நல்லவன் அமிழ்தினை இப்பார் முழுதுக்கும் தந்தனன் -என்று கூட்டி முடிக்க –
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

பிர பந்தம் ஆரம்பத்திலே -ராமானுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ -என்ற பிராப்யம் தமக்கு-யாவ தாத்மபாவி ஆம்படி கை புகுருகையும்-அந்த பிராப்ய ருசி ரூப பக்தி புஷ்கல்யமுமே தமக்கு அபேஷிதம் ஆகையாலே

தத் உபய சித்த அர்த்தமாக ஸ்ரீயாகையாலே தேன் அமரும் பூ மேல் திரு -நமக்கு என்றும் சார்வு -என்கிற படியே-சர்வ ஆத்மாகளுக்கும் என்றும் ஒக்க சார்வாய் சம்பத் பிரதையான பெரிய பிராட்டியாரை ஆச்ரயிப்போம் என்கிறார்

சாஸ்திரம் கொடுத்து அவதரித்து ஆழ்வார்களை கொடுத்து ஆச்சர்யர்களை அவதரிப்பித்து-நம்மை சேர்த்து கொள்ள அவன் படும் பாடு/குரு பரம்பரை-/சித்தி த்ரயம் ஸ்தோத்ர ரத்னம் சதுச்லோகி-ஆளவந்தார் அருளி/ஸ்ரீ வைஷ்ணவம் கோவில்- பொய்கை ஆழ்வார் ஆரம்பித்து

-பஞ்ச ஆச்சார்யர்கள் மூலம்-இளையாழ்வார் லஷ்மண முனி உடையவர் எம்பெருமானார்-கோவில் அண்ணன் ஸ்ரீ பாஷ்யகாரர் -கரிய மாணிக்கம் சந்நிதியில்- ஆ முதல்வன் கடாஷம் -எம்பெருமானார் தரிசனம்-நம் பெருமாள் பேர் இட்டுநாடி வைத்தார்  -அவர் வளர்த்த அந்த செயல் அறிக்கைக்காக/ஈன்ற தாய்/அவன் பிறந்தும் செய்து முடிக்காததை பலன் சேர செய்தாரே/

உப்பு நீரை மேகம்-ச்வாதந்த்ரம்-ஆழ்வார் -மேகம் பருகி -நாத முனிகள் மலை/அருவிகள் உய்ய கொண்டார் மணக்கால் நம்பி/ ஆளவந்தார் ஐந்து வாய்க்கால்/ஸ்வாமி ஏரி-74 மதகுகள்-மூலம் நம்மை அடைய/1017 செய்ய திரு ஆதிரை சித்திரை/பங்குனி உத்தரம்

-சீத ராம திரு கல்யாணம்- பெரிய பிராட்டியார் மாதர் மைதிலி-ஏக சிம்காசன சேர்த்தி-கத்ய த்ரயம்-அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம்-பர பக்தி பர ஞான பரம பக்தி -மாம் குருஷ்வ-அச்துதே-சாமை பொறுத்தோம்-சம்பந்தம் உள்ளோர் அனைவருக்கும் மோட்ஷம்-உண்மைதானா உறுதி-ராமனுக்கு இரண்டாவது வார்த்தை இல்லை

/இந்த அரங்கத்து இனிது இரு நீ என்று -துவயம் அர்த்தம் அனுசந்தித்து கொண்டு/சிந்தை செய்யில்- நல் தாதை -பிள்ளை என்று சம்பந்தம் ஒத்து கொண்டால் கிட்டும்/சம்பந்த ஞானமே வேண்டும்/ஓர் ஆண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் /சீர் உடை பள்ளி கூடம்-வரை அறை உள் படுத்த வெளி வேஷம்/த்வாரகா  ஈசன்-முத்தரை சாதிக்க பட்டவர்களை உள்ளே விட சொல்லி போனானே-ஆகமத்திலே உண்டு/ வளை   ஆதி விபூஷணம் போல–பர சம்பந்த வேதனம் சக்கராதி  வேதனம்/பஞ்ச சமாச்ரண்யம் /தாஸ்ய நாமம் -ஆச்சர்ய பரம்பரை -பாஞ்சராத்ர ஆகமம்-ஆமாறு அறியும் பிரானே அணி அரங்கத்து-கால சக்கரத்தாய்-ராமானுஜ திவாகரன்-விஷ்ணு லோக மணி மண்டப மார்க்க தாயி-ஸ்வாமி கை  நீட்டி காட்டும் இடமே- திருபுரா தேவி-காளி சான் மூலை காட்டினாலும் விழுவோம்/

திவ்ய தேச கைங்கர்யம்/ நவ ரத்னம் போல கிரந்தங்கள் /சிஷ்யர்களுக்கு வூட்டி பல முகம்/கலியும் கெடும் போல சூசிதம் -கண்டோம் கண்டோம் கண்டோம்-ஆழ்வார் 5105 வருஷம் முன்பு அருளினாரே–பவிஷ்யதாசார்யர்-ராமானுஜ சதுர் வேத மங்கலம் -சேர்த்தி திரு மஞ்சனம் ஆழ்வார் உடன்/108 தடவை திருநாமம் சொல்லி பக்தி வளர்ந்து சம்பந்தம் பெற

/பூ மன்னு மாது பொருந்திய மார்பன்-கண் முன்னே லஷ்மி வல்லபன் உத்தரம்-அதனால் பிராட்டி சம்பந்தத்துடன் ஆரம்பிக்கிறார்-பூ மன்னிய மார்பன் -மார்பன் புகழ் மலிந்த பா/-மாறன் அடி பணிந்து உய்ய்ந்தவன் /நாம் மன்னி வாழ சொல்லுவோம் அவன் நாமங்களே /

முதல் 7 பாசுரங்கள் அவதாரிகை-14 பாசுரங்கள் வரை ஆழ்வார் சம்பந்தம்-பொய்கை ஆழ்வார் தொடக்கி-விளக்கை திரு உள்ளத்தே இருத்தும்/–ஆளவந்தார் வரை-இணை அடியாம் ஸ்வாமி என்று அருளி-ஏகலைவன் போல

21 பாசுரம்/ 24 காரேய்  கருணை சீரே //திரு வாய் மொழி க்காக  4 பாசுரங்கள் வேழம்/வலி மிக்க சீயம் ராமானுசன்-கலியன்/ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் குடி கொண்ட கோவில்/தமிழ் பற்று/ அடையார் கமலத்து பஞ்ச ஆயுத அம்சம்/பாவனம்-32/42/52 பாசுரங்களால்/தந்த அரங்கனும் தந்திலன் தான் அது தந்து-வள்ளல் தனம்/போக்கியம் -பொன் வண்டு தேன் உண்டு அமர்ந்து/காமமே -கண்ணனுக்கு புருஷார்த்தம்-/பர மத கண்டனம் பல பாசுரங்கள்/திருவிலே  தொடங்கி  திருவிலே முடிக்கிறார்/திரு கண்டேன்- தேன் அமரும் பூ மேல் திரு -நமக்கு என்றும் சார்வு – திரு பேய் ஆழ்வார் போல

/ஸ்ரீ ரெங்க ராஜ மகிஷி-தத் இங்கித பராந்கீதம்/காந்தச்தே புருஷோத்தம /ஸ்ரீ ஒற்றை எழுத்தே பாட முடியாதே/கடாஷத்தாலே பர பிரமத்தையே ஆக்க வல்லவள்/பிறந்தகம் விட்டு புகுந்தகம்  மன்னி  ரட்ஷிக்க ஸ்ரீ ரெங்க நாச்சியாராக– அஞ்சலி ஒன்றாலே-எல்லாம் கொடுத்து பின்பும் கொடுக்க ஒன்றும் இல்லை என்றி வெட்க்கி தலை குனிந்து-/இராமனுசன் அடி பூ மன்னவே-இராமனுசன் சரணார விந்தம் நாம் மன்னி வாழ-ஆத்ம உள்ள அளவும்-நித்யமாக–பிராப்ய ருசி ரூப பக்தி-கைங்கர்யம் பண்ண இன்பம் வர-இந்த இரண்டும் நிரம்ப–நமக்கு சார்வு-புகல்  இடம்- அவள் தானே

வரத வல்லபை -பெரும் தேவி தாயார்–அலர்மேல் மங்கை-ஸ்ரீ ரெங்க  நாச்சியார் -கண் கண்ட  நாச்சியார்-நெஞ்சே- ஆரம்பித்தார்-முடிக்கிறார்- கொண்டாடுகிறார்-பற்று அற்ற நெஞ்சு ஆத்மாவை உயர்த்தும் -பக்தி -சாதனா பக்தி  இல்லை -இல்லை-பிராப்ய ருசி-போஜனத்துக்கு பசி போல-எல்லாம் வந்து குடி கொண்டதாம்-தழைத்து- செடி தழைத்தால்- மன்ன -பூ-செடி தான் பக்தி- பூ முளைக்கும்-அதை தலையில் சூடி கொள்ளலாம் /பொங்கிய கீர்த்தி-விஸ்ருதையான கீர்த்தி-உடையவர்-யோக சூத்திரம்-உத்சவம் அமைத்து நமக்கு காட்டி கொடுத்த கீர்த்தி- எண் திசையும் பரவி உள்ளது/மயிர்  கழுவி பூச்சூட இருப்பாரை போல/பூவிலே மன்னு  மாது- மன்னி கிடப்பி இருகிறவளை பற்றி/ஜல ச்ம்ர்தியால் அழகிய காவேரியால் சூழ பட்ட அரங்கத்தில்- அவன் உடைய  /அணி ஆகத்தில் மன்னி இருகிறவள்

/மரு மகனை பார்க்கும்  ஆசை /கலகத்தில்-பார்த்ததும்- பிரியும் கலக்கம்/விஷ்ணு பாதம் பட்ட ஒன்றே கொண்ட கங்கை பார்த்து சிரிக்கிறாளாம்   -வீதி கழுவி-புறப்பாடுக்கு /புனிதம் ஆகி /மணல் மேட்டில் உயர்த்தி காட்டுகிறாள்-வைபவம்/தரிசிநீயமான அரங்கம் – தென் அரங்கம்- அரங்கம் வைத்தே அவனுக்கு ஏற்றம்

ஸ்ரீயபதி-அவளாலே அவனுக்கு ஏற்றம்-/ஓங்கு பெரும் செந்நெல் வூடு கயல் உகள-யானை போல மீன்- பெருத்து கொழுத்து–செங்கயல் பாய் நீர் திரு அரங்கத்தாய்-நீரை நம்பிய மீன்-நாரத்தை பற்றியது வாழ அயனத்தை பற்றியவள் வாடுகிறாளே-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்//தாராய -வண்டு உழுது வைக்கிறதாம்-அகல் அகம்–இறையும் அகலகில்லேன்-வாமனன் இரக்கும் பொழுதும் இறங்கவில்லை/அமுதினில் வந்த பெண் அமுதத்தை கொண்டு உகந்த -நமக்காக ஏறி அமர்ந்தாள்/பாவை-அவனுக்கு வாச படுத்து-உவமை ஆகு பெயர்

– இவள் குணத்துக்கு -உவமை-பர தந்த்ரையை பற்றினால் உதர மாட்டாள்/ஸ்வ  தந்த்ரனை பற்றினால் உதறுவான்/ஸ்ரியதே- அணி ஆகம் மன்னும்/ போற்றுதும்-ஸ்ராயதே /பூ மன்னு பங்கய மா மலர் பாவை பொருந்திய அணி ஆகம்/தலை மிசையே அவர் பற்றினார் இதில் நாம் மன்னி வாழ ஆரம்பித்தார்/நெஞ்சே- கூப்பிட்டார் நெஞ்சு உடனே சொல்லி  தலை கட்டுகிறார் -இத்தால் பிராப்ய சித்தியும்-அடி பூ மன்ன – –பிராப்ய ருசியும் -பக்தி-  இரண்டையும் கேட்கிறார்//கடாஷங்களாலே விரும்பியது எல்லாம் கொடுப்பாள்/-சரம பர்வம்-ஆச்சர்ய சாரணர விந்தம் -அவள் இடம் கேட்கிறார்

/இதுவும் உபாயமாகவே இல்லை-வடுக நம்பி பால் காய்ச்சும் பொழுது அரங்கனை -உங்கள் பெருமாளை நீங்கள் சேவித்து கொள்ளுங்கள்-எம் பெருமானுக்கு கைங்கர்யமே எனக்கு முக்கியம்  என்றது போல/அங்கும் சென்று ஆச்சர்ய கைங்கர்யமே தோள் மாறாமல்/பிரிவே அற்று இருக்கையே பிரார்த்திக்கிறார்/ஆச்சர்ய திருவடிகளே பிராப்யம் /திருவடிகளாகிற செவ்வி பூவை தலையிலே -கலம்பகன் மாலை போல அலங்கரித்து-ஸ்தாவர பிரதிஷ்ட்டையாக- இளையவர்க்கு அளித்த மௌலி எனக்கும் அருள் -விபீஷணன் பிரார்த்தித்து போல/-திவ்ய தம்பதிகளுக்கு இத்துடன் மங்களாசாசனம் பண்ணுகிறார்/பக்தி பிராப்ய ருசி யால் பண்ணிய தம் நெஞ்சு-கூடி கொண்டே போகும் பக்தி

/உசா துணை மனம் -பலித்த அம்சத்தை -சொல்வது போல நெஞ்சுக்கு உரைக்கிறார்-பக்தி சப்தம் எல்லாம் ஏக ரூபமாய் கொண்டு நெஞ்சு அளவில் குடி கொண்டு இருந்தது-/நெஞ்சு வண்டு -தேனை பருகி  அமர்ந்திட சென்று இருந்து

/பக்தி தங்குவது அடி பூ இடம்-மடுவாக மலை நீர் தங்குவது போல-பரம பக்தி ரூபமாய் பரி பக்குவமாய்/பர பக்தி பூ பர ஞானம் காய் பரம பக்தி -கனி//பொங்கிய கீர்த்தி-பரம பதம் அளவும் போன கீர்த்தி/வூமை திரு பாற்கடல்  அளவும் உள்ள பெருமையை வந்து சொன்னானே-பல்கலையோர் தாம் மன்ன வந்த ராமானுசன்- தொடங்கினார்-பொங்கிய கீர்த்தி இதில்

-அடி பூ-தழைத்து பூ பூத்தது/ சரணாரவிந்தம்-ஆரம்பித்து அடி பூவில்/உபய காவேரி இருப்பதால் அழகிய கயல் மீன்/வேழ போதகமே தாலேலோ- தேவகி-தானை போல இருக்கிறான்-அன்று குட்டி /அது போல மீன்கள்/

அலங்கார பூதையாய் இருக்கிறாள்/பிரபை -பாஸ்கரேண போல பிரியாதவள்/சொரூப நிரூபகை /பொருந்திய மார்பன்/மன்னு -இங்கு /பங்கய மா மலர்-பிறப்பிடம் என்பதால் கொண்டாடுகிறார்/ பாவை-பால்ய யௌவனம் சாந்தி-/பூ மன்னு மாது-பங்கய  மா மலர் பாவை/போற்றுதல்-மங்களா சாசனம்–சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு-

திவ்ய தேசங்களில் ஆதரவும் பிராவண்யமும் சதா ஆச்சர்யர் பிரசாதத்தால் கிட்டி வர்த்திக்க கடவன்/ நிர்ஹே துகமாக பரகத ச்வீகாரம்-வந்து அருளி நெஞ்சில் இடம் கொண்டதுக்கு இதுவே பலன்/சரணார விந்தம் நாம் மன்னி வாழ -அடி பூ மன்ன -பலன் பாவையை போற்றுவதே என்கிறார்–

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: