அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–107-இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
நூற்று ஏழாம் பாட்டு -அவதாரிகை
இப்படி தம் பக்கலிலே வ்யாமோஹத்தை பண்ணா நிற்கிற
எம்பெருமானார் உடைய திரு முகத்தைப் பார்த்து –
தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு -என்று
தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார் –
இன்புற்ற சீலத்து இராமானுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல் தோறும் பிறந்திறந்து எண்ணரிய
துன்புற்றுவீயினும் சொல்லுவது ஓன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை யாக்கி யங்கு யாட்படுத்தே – – – 107- –
வியாக்யானம் –
எத்தனையேனும் தண்ணியனான என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து –
அது தன்னைப் பெறாப் பேறாக நினைத்து –
ஆநந்த நிர்பரராய் -எழுந்து அருளி இருக்கிற சௌசீல்யத்தை உடையவரே –
இப்படி இருக்கிற தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது-ஒரு கார்யம் உண்டு –
அது ஏது என்னில் –
ஐயார் கண்டமடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த –என்னுமா போலே -திரு வாய் மொழி -2 9-3 – –
தோற்புரையே போமதன்றியிலே  அஸ்த்திகதமாய் இன்று நலிய கடவ
வியாதிகளுக்கு பாஜனமான சரீரங்கள் தோறும் -ஜநிப்பது மரிப்பதாய் –
அசந்க்யேய துக்கங்களை அனுபவித்துமுடியிலும்
சர்வ காலத்திலும் -சர்வ தேசத்திலும் -தேவரீருக்கு அனந்யார்ஹ்ராய் இருக்கும்
அவர்களுக்கே மாறுபாடுருவின ச்நேஹத்தை உடையேனாய்  இருக்கும்படியாக செய்து
என்னை அவர்கள் திருவடிகளிலே அடிமையாம்படி பண்ணி யருள வேணும் .
இதுவே அடியேனுக்கு புருஷார்த்தம் -என்று கருத்து .
இன்பு -சுகம்
சீலமாவது -பெரியவன் தண்ணியன் உடன் புரையறக் கலக்கும் ஸ்வபாவம்
என்பு -எலும்பு
துன்பு -துக்கம் –
தொண்டர்கட்கே –ஏவகாரம் -உமக்கும் ஆழ்வாருக்கும் அவனுக்கும் இன்றி -அடியார் அடியார் -அவர்க்கே அல்லால் -அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்ப்பாடு
என்னைப் பண்ணி -அங்கு ஆள்படுத்தே –கிரய விக்ர அர்ஹமாகும் படி –
இப்பொழுது தான் விண்ணப்பம் செய்ய -முன்பு சொன்னது எல்லாம் இதற்கு தயார் பண்ணி -கீதாச்சார்யன் -அர்ஜுனனை தயார் பண்ணி அருளிச் செய்தால் போலே –குஹ்ய தமம் -பக்தி பண்ணி சொல்ல -மன்மனா பாவ இத்யாதி –
ஸ்ரீ பெரும் பூதூர் மட்டும் இல்லை -எம்பார் முதலியாண்டான் கூரத் ஆழ்வான் திருப் கட்சி நம்பி திருவவதார ஸ்தலங்களுக்கு போக வேண்டுமே/ -2-பாசுரத்தில் உபக்ரமித்து மிக்க சீலம் அல்லால்  இதிலும் -இன்புற்ற சீலத்து இஇராமாநுச என்று உப சம்ஹரிக்கிறர் /ஆக்கி ஆள்படுத்தி- மனசில் உணரவைத்து கைங்கர்யமும் கொள்ள வேணுமே /அடியேன் செய்ய விண்ணப்பம் ஆழ்வார் தொடங்கும் பொழுதே பிரார்த்தித்து -இங்கு அமுதனார் விண்ணப்பம் செய்த உடனே தலைக் கட்டி அருளுகிறார் ஸ்வாமி /-23-பாசுரம் -யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -பிரார்த்தனை –அச்சமயத்தில் சொல்லும் அசடு இல்லையே -29-பாசுரத்தில் உற்றோமே ஆவோம் -உனக்கே ஆட் செய்வோம் –கைங்கர்ய பிரார்த்தனை -சரணாகதிக்கு அப்புறம் தானே -இங்கு சொல்லுவது ஓன்று உண்டு சொல்லி அடுத்த வரியில் -என்ன என்கிறார் -இன்புற்ற சீலவான் ஸ்வாமி என்பதால் /தொண்டர்களுக்கே -ஏக -சப்தம் தானும் பிறருமான  / தானும்  இவனுமான நிலையையும் கழுத்து வெளி உள் இரண்டையும் கழித்து என்றபடி -உபாய பரமாக இல்லை ப்ராப்ய பரமாக -/
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை -கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து நிரதிசய ப்ரீதி யோடு கூட
நித்ய வாசம் பண்ணா நின்றார் -என்று தம் அளவிலே அவர் பண்ணின விஷயீ காரத்தை அனுசந்தித்து – இதிலே
அப்படி பட்ட வியாமோஹத்தையும் நிரவதிக சௌசீல்யத்தையும் உடையவரே என்று சம்போதித்து –
அஸ்திகதமாய் நின்று நலிய கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரங்கள் தோறும் ஜநிப்பது மரிப்பதாய் கொண்டு –
அசங்க்யேயமான துக்கங்களை அனுபவித்து உரு மாய்ந்து முடியிலும் –சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும்—
தேவரீருக்கு அனந்யார்ஹராய் இருக்குமவர்கள் பக்கலிலே அதி வ்யாமுக்தனாய் -அவர்களுக்கு க்ரய விக்ரய அர்ஹனாய்
கொண்டு அடிமைப் படும் படி அடியேனைப் பண்ணி அருள வேண்டும் என்று தம்முடைய அபேஷிதத்தை விண்ணப்பம்-செய்கிறார் –
வியாக்யானம்இன்புற்ற சீலத்து இராமானுசா -திரு வேம்கட முடையானுக்கும் திரு குறும்குடி நம்பிக்கும்
திரு இலச்சினையும் -ஸ்ரீ பாஷ்யதையும் பிரசாதித்த ஆசார்யராகவும் -செல்லப் பிள்ளைக்கு பிதாவாயுமாய் இருக்கிற
தேவரீருடைய மதிக்கையும் -அத்யந்த பாபிஷ்டனான என்னுடைய தண்மையையும் பாராதே -என்னை
தேவரீருக்கு அவ்வருவாக எண்ணி -என்னுடைய ஹிருதயத்திலே வந்து புகுந்து –அது தன்னையே பெறாப்  பேறாக நினைத்து –
ஆனந்த நிர்பரராய் எழுந்து அருளி இருக்கிற சௌசீல் யத்தை உடைய எம்பெருமானாரே -இன்பு -ஸூ கம்
சீலமாவது பெரியவன் தண்ணியரோடு  புரை யறப்  பரிமாறும் ஸ்வாபம் -இப்போதாக காணும் இவருடைய-சீலம் அமுதனாருக்கு வெளியாகத் தொடங்கிற்று
சொல்லுவது ஓன்று உண்டு -சர்வஞ்ஞாரான தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டுவது ஓன்று உண்டு –
நத்வே வாஹம் -என்று தொடங்கி- கர்ம ஞான பக்திகளை பரக்க உபதேசித்து கொண்டு போந்து –சர்வ குஹ்ய தமம்-பூய ஸ்ருணுமே பரமம் வச -என்று  உபதேசிக்கும் போது கீதச்சர்யன் அருளிச் செய்தால் போலே இவரும் –
இராமானுசா  இது என் விண்ணப்பமே -என்கிறபடியே இவ்வளவும் தம்முடைய அபிநிவேசம் எல்லாம் விண்ணப்பம் செய்து
இப்பாட்டிலே தம்முடைய அபேஷிதத்தை நிஷ்கரிஷித்து அருளிச் செய்கிறார் -அங்கு சேஷி உடைய உக்தி –இங்கு சேஷ பூதனுடைய அபேஷிதம் -ஒரு பிரயோஜனம் உண்டு என்றீர் அது என் என்ன –என்புற்ற நோயுடல் தோறும்-பிறந்து இறந்து எண்ணரிய துன்புற்று -நோய் -வியாதி -அதாகிறது -ஆத்யாத்மிகாதி துக்கங்கள் -அந்த நோயானது
அந்தர்பஹிந்திரிய வியாபார ரூப ஸ்வ க்ரத கர்ம பலம் ஆகையாலே தோற்புரையே போம்  அது அன்றிக்கே –
அஸ்திகதமாய் கொண்டு இருக்கையாலும் ஆத்மா நாசகம் ஆகையாலும் –என்புற்ற –என்று விசேஷிக்கிறார் –
என்பு -எலும்பு –உறுகை  -அத்தைப் பற்றி நிற்கை -உடல் தோறும் -அப்படி அஸ்திகதங்களாய்  கொண்டு நலியக்-கடவ வியாதிகளுக்கு பாஜநமான சரீரம் தோறும் -துர்வார துரித மூலம் துஸ்தர துக்காநாம் பந்த நீ ரந்தரம்வபு -என்னக் கடவது இறே –
-அன்றிக்கே – நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை –என்கிறபடியே அந்த வியாதி
தானே உருக் கொண்டு இருக்கிற -தேவ திர்யக் மனுஷ்ய ஸ்தாவர ரூபமான சரீரங்கள் என்று என்னுதல்-
ஜன்ம பரம்பரைகள் தோறும் -என்றபடி-பிறந்து இறந்து என்ற இது மற்ற அவஸ்த தாந்தரங்களுக்கும் உப லஷணம் –

இறப்பு -நாசம் –பிறந்து இறந்து எண்ணற்ற துன்புற்று வீயினும் -அவ்வவ ஜன்மங்களிலே ஜநிப்பது-மரிப்பது தொடக்கமான அவஸ்தா சப்தகத்திலும் விரலை மடக்கி ஓன்று இரண்டு என்று எண்ணப் புக்கால்-அது கால தத்வம் உள்ள அளவும் எண்ணினாலும் எண்ணித் தலைக் கட்ட அரிதான துக்கங்களை ஒன்றும்-பிறிகதிர் படாதபடி அனுபவித்து முடியிலும் –போற்றலும் சீலத்து இராமானுச –என்கிறபடியே தேவரீர் உடைய-சீல குணத்தை அளவிட்டு சொல்லினும் -இஸ் சரீர அனுபந்தியான துக்கத்தை அளவிட்டு சொல்ல ஒண்ணாது என்கிறார் காணும் –துன்பு –துக்கம் –என்றும் -எல்லா காலத்திலும் –எவ்விடத்தும்எல்லா இடத்திலும் -உன் தொண்டர் கட்கே -பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இராதே மோஷ-பிரதான தீஷிதராய் அன்றோ -இவ்வளவாக திருத்தி என்னுடைய ஹிருதயத்திலே புகுந்து நித்ய வாசம் பண்ணா நிற்கிற தேவரீருக்கு அனந்யார்ஹா சேஷமாய் இருக்கும் அவர்களுக்கே –அவதாரணத்தாலே –அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகிறார் -உனக்கே நாம் ஆட்  செய்வோம் –தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே —  ஆறேனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் – என்றும்

தமேவசாத்யம் புருஷம் பிரபத்யே -என்றும் பிரதம பர்வத்தில் சொல்லுகிறபடியே –
குருரேவ பரம்  பிரம்ம -என்றும் -உபாய உபேயே பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -என்றும்
தேவு மற்று அறியேன் -என்றும் தீதில் சரணா கதி தந்த தன் இறைவன் தாளே அரணாக மன்னுமது –
என்றும் சரம பர்வத்தில் சொல்லுகிறபடியே சொல்லுவித்தார் -இறே –அன்புற்று இருக்கும் படி -நிரவதிக-பிரேம யுக்தனாய் இருக்கும்படி –அன்பு -ச்நேஹம் –என்னை ஆக்கி -தேவரீருக்கு கிருபா விஷய பூதன்  ஆகும் படி
 என்னைப் பண்ணிஅங்கு ஆள்படுத்தே –பவதீயர் திருவடிகளில் விஷயமான எல்லா அடிமைகளிலும் அன்வயித்து-க்ர்த்தார்த்தனாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார் –ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் நீங்காது  ஏத்த
அருள் செய் எனக்கே என்று இப்படியே ஆழ்வாரும் அருளிச் செய்தார் இறே –
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
தன்னுடைய மேன்மையைப் பாராது -எனது தண்ணிய இதயத்து உள்ளே இன்பமாய்
இடம் கொண்டு இருக்க வேண்டுமானால் -எம்பெருமானாருக்கு என் மீது எவ்வளவு வ்யாமோஹம்
இருக்க வேண்டும் என்று -அவரது வ்யாமோஹத்திலும் சீல குணத்திலும் தாம்     ஈடுபட்டமை தோற்ற –
அவரை விளித்து –
தாம் ஒரு விண்ணப்பம் செய்யப் போவதாகச் சொல்லி –
எத்தகைய துன்பம் நேரும் காலத்திலும் தேவரீர் தொண்டர்கட்கு அன்புடன் நான்
ஆட்படும்படி யாக அருள் புரிய வேண்டும் என்று தமக்கு வேண்டியதை
விண்ணப்பம் செய்கிறார் .
பத உரை –
இன்புற்ற -தண்ணிய என் இதயத்தில் இடம் பெற்று ஆனந்தம் அடைந்த
சீலத்து -பழகும் இயல்பு வாயந்துள்ள
இராமானுச -எம்பெருமானாரே
சொல்லுவது -தேவரீரிடம் விண்ணப்பம் செய்வது
ஓன்று உண்டு -ஒரு விஷயமிருக்கிறது
அது யாது எனில் –
என்பு உற்ற நோய் -எலும்பைப் பற்றி நின்று வருத்தும் நோய்கள் உடையதான
உடல் தோறும் -ஒவ்வொருசரீரத்திலும்
பிறந்திறந்து -பிறப்பதும் சாவதுமாய்
எண் அறிய -எண் இல்லாத
துன்பு உற்று –துன்பம் அடைந்து
வீயினும் -ஒழிந்தாலும்
என்றும் -எக் காலத்திலும்
எவ்விடத்தும் -எல்லா இடத்திலும்
உன் தொண்டர்கட்கே -தேவரீருடைய அடியார்களுக்கே
அன்புற்று இருக்கும்படி -அன்பு உடையேனாய் இருக்கும்படியாக
ஆக்கி -செய்து
என்னை-அடியேனை
அங்கு -அவ்வடியார்கள் திறத்திலே
ஆட்படுத்து -அடிமையாம்படி பண்ணி யருள வேணும்
வியாக்யானம் –

இன்புற்ற சீலத்து இராமானுச

மிகத் தண்ணியனான எனது இதயத்துள்ளே  இருப்பதை பெறாப் பேறாக கருதி  இன்பத்துடன்
எழுந்து அருளி வுள்ளமையால் -என்னிடம் உள்ள வ்யாமோஹம் வெளிப்படுகிறது
.இந்த வ்யாமோஹம் எவ்வளவு குற்றங்கள் நிறைந்து இருந்தாலும்  -அவற்றை நற்றமாக தோற்றும்படி
செய்து விடுகிறது .சர்வேஸ்வரன் சேதனர்கள் இடம்   உள்ள வ்யாமோஹத்தாலே அவர்களோடு மிகப்
புல்லிய இதயத்திலே குற்றம் தோற்றாமல் அது நற்றமாக தோன்ற எழுந்து அருளி இருப்பது போன்றது இதுவும் -என்க-
அனைவருக்கும் ஈசானன் மத்தியில் இதயத்தில் கட்டை விரல் அளவினனாய் எழுந்து அருளி உள்ளான் .
ஈச்வரனே இருப்பதால் அருவருப்பதில்லை -என்னும் உபநிஷத்தும்
தத பூத பவ்ய ஈச்வரத்வாதேவ  வாத்சல்யாதிசயாத் தேக கதாநபி தோஷான் போக்யதயா பச்யதீத்யர்த்த  -என்று
ஆகையினாலே முற்காலத்தவருக்கும் பிற்காலத்தவருக்கும் ஈச்வரனே இருப்பதனாலேயே வாத்சல்யம் மிக்கதனால்
தேஹத்தில் உள்ள தோஷங்களையும் போக்யமாகப் பார்க்கிறான் -என்று பொருள்
ஸ்ரீ வேதாந்த தேசிகனும் –
ஔதன்வதே   மதி சத்மனி பாசாமானே ச்லாக்க்யே ச திவ்ய சதனே தமஸ  பரஸ்தாத்
அந்த களேபரமிதம் சூஷிரம் சூசூஷ்மம் கரீச கதமா தர்ண ஸ்பதம் தே -வரதராஜ பஞ்சாசத் – 21-
திருப்பாற்கடலின் கண் உள்ள பெரிய இல்லம் இலங்கிக் கொண்டு இருக்கும் போது –
பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் கொண்டாடத் தக்க அப்ராக்ருதமான திரு மாளிகையும்
துலங்கிக் கொண்டு இருக்கும் போது -சரீரத்துக்கு உள்ளே மிகவும் நுண்ணிய இந்தப்
பொந்து-அத்திகிரிப் பெருமாளே -எப்படி நீ ஆதரிக்கும் இடம் ஆயிற்று –
என்று அருளிய ஸ்லோகமும் நினைவிற்கு வருகின்றன –
இறைவனும் தம் இதயத்தில் இடம் தேடி வரும்படியான ஏற்றம் வாய்ந்த எம்பெருமானார் –தமது மென்மையை-மேன்மையை – நோக்காது -மிகத் தாழ்ந்தவனான எனது இதயத்து உள்ளே –
பதிந்து உரையும்படியாக -என்னோடு பழகினால் -அந்த சீல குணத்தை என் என்பது -என்று
வ்யாமோஹம் -அதானாலாய வாத்சல்யம் சீலம் -என்னும் குணங்களில் ஈடுபட்டு
இன்புற்ற சீலத்து இராமானுச –என்று விளிக்கிறார் .
தாம் சீரிய புருஷார்த்தத்தை பெற விண்ணப்பிக்கப் போவது வீணாகாது -பயனுறும் -என்னும்
தமது துணிபு தோன்ற இங்கனம் விளிக்கின்றார் -என்று அறிக -சீலமாவது-பெரியவன் சிறியவனோடு
வேற்றுமை தோன்றாமல் பழகுதல் –மிக்க சீலமல்லால் உள்ளாதென்நெஞ்சு– 2- என்று முதலில்

சீல குணத்தில் ஈடுபட்டவர் முடிவிலும் ஈடுபடுகிறார் .

என்றும் எவ்விடத்தும் —அங்கு ஆட்படுத்து –
தாம் அறுதி இட்டு இருக்கிற புருஷார்த்தத்தை திரு உள்ளத்திலே இறுதியாகப் படும்படி செய்து
கார்யத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக நயந்து -சொல்லுவது ஓன்று உண்டு -என்கிறார் .
இரந்து உரைப்பது உண்டு -திரு சந்த விருத்தம் – 101- என்று எம்பெருமானிடம் திரு மழிசைப்  பிரான்-விண்ணப்பித்தது போலே விண்ணப்பிக்கிறார் ..
எத்தனை கஷ்டம் நேர்ந்தாலும் சித்தம் சிதறாது தேவரீர் தொண்டர்கள் இடம் அன்பு மாறாமல்
அவர்களுக்கே அடிமை செய்யும்படியான நிலைமையை அடியேனுக்கு அளித்து அருள வேணும் –
என்று புருஷார்த்தத்தை வடி கட்டி அபேஷிக்கிறார் .
என்புற்று நோய் உடல் தோறும்
தோல் அளவோடு நில்லாது எலும்பைப் பற்றி நின்று வாட்டும் தாபம் -ஷயம் முதலிய
வியாதிகளுக்கு இடமான ஒவ்வொரு சரீரத்திலும் -என்றபடி –
நோயெல்லாம் பெய்ததோர் ஆக்கை -பெரிய திரு மொழி – 9-7 7- – என்றார் திரு மங்கை மன்னனும் .
நோய்களினால் நலிவு விரும் உடல் வாய்ந்த பிறப்புக்கள் தோறும் -என்றது ஆயிற்று –
தேவரீர் தொண்டர்கட்கே அன்புற்று ஆட்படுத்தப் பெறுவேன் ஆயின்
நோய்களினால் நலிவுறும் பல பிறப்புக்கள் நேரினும் நல்லதே -என்று கருத்து
பிறந்து இறந்து எண்ணரிய -துன்புற்று வீயினும்
பிறப்பு இறப்புகளை சொன்னது ஏனைய
இருத்தல் -மாறுபடுதல்-வளர்த்தல் தேய்தல் என்னும் விகாரங்களுக்கும் உப லஷணம்.
ஆக பொருள்களுக்கு உள்ள ஆறு விகாரங்களும் கூறப் பட்டன .ஆகின்றன .
இனி அவஸ்தாசப்தகம் எனப்படும்
கர்ப்பம் ஜன்மம்  .பால்யம் யவ்வனம் வார்த்தகம் மரணம் நரகம் என்னும் இவைகளைக்
கூறப்பட்டனவாகக் கொள்ளலுமாம் .
இந்த விகாரங்களுக்கு உள்ளாவதோடு எண்ணற்கு அரிய துன்பங்களால் தாக்கப்பட்டு படு-நாசத்துக்கு உள்ளாக்கும் நிலை ஏற்படினும் ஏற்படுக –தேவரீர் தொண்டர்கட்கே அன்பனாய்-அடிமை யாக்கப் பெறின் அவைகளும் ஏற்கத் தக்கனவே -என்கிறார் .

இறத்தல் சரீரத்திற்கு நேருவது

வீதல் ஆத்மாவுக்கு நேரிடும் உழலுதலாகிற படு நாசத்தை கூறுகிறது -என்று வேற்றுமை அறிக
-.நான் பிறப்பு இறப்பு வேண்டாம் .துன்புற்று வீதல் ஆகாது என்று தேவரீர் இடம் விண்ணப்பிக்கிறேன் அல்லேன் -எத்தகைய நிலை ஏற்படினும் தேவரீர் தொண்டர்கட்கே அடிமை செய்யும் படி அருள் புரிய- வேணும் -என்று விண்ணப்பிக்கிறேன் என்றார் ஆயிற்று –
பிராணன் பிரியும் போது கபம் தொண்டையை அடைக்கும் காலத்தும் –நின் கழல் எய்யா தேத்த அருள்-செய் எனக்கே  -திருவாய் மொழி -2 9-3 – என்று நம் ஆழ்வார் பிரார்தித்ததை இங்கு நினைவு கூர்க–
எம்பெருமானார் தொண்டர்கட்கே ஆட்பட்டோருக்கு – உடல் தோறும் பிறந்து இறந்து
துன்புற்று வீதல் நேரவே மாட்டா -நேரினும் ஆட்படும் இன்பத்தை நோக்க அவைகள் இருந்த இடம் தெரியாமல்
மறைந்து ஒழியும் என்க –
என்றும் எவ்விடத்தும் –
இந்த காலம் இந்த இடம் என்கிற வரையறை இன்றி  ஆட்படுத்தப்பட வேணும் -என்க
உன் தொண்டர்கட்கே
இன்னார் இணையார் என்று இல்லை –
தேவரீர் தொண்டர்களாய் இருத்தலே வேண்டுவது
தேவரீருக்கு பிரியும் தொண்டினையே குறிக் கோளாக கொண்டவர்களுக்கே என்னை

ஆட்படுத்த வேணும் . அன்புற்று இருக்கும் படி –அங்கனம் ஆட்படுதல் நிலை நின்று முதிர்ந்த அன்பினால் ஆயதாய் இருத்தல் வேண்டும் .

என்னை யாக்கி அங்கு ஆட்படுத்து –
அன்புடையவனாய் இருக்கும்படியும் செய்ய வேணும் –
ஆட்செய்யும்படியாகவும் பண்ண வேணும்
இரண்டும் வேண்டிப் பெற வேண்டிய புருஷார்த்தங்கள் ஆகும் எனக்கு -என்பது கருத்து -அன்பின் பயனாய் அடிமை தானே அமையாதோ-எனின் –
இவன் அடிமைசெய்திடுக -என்று தேவரீர் இரங்கி தந்ததாய் இருத்தல் வேண்டும் என்கிறார் –உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் -திரு பள்ளி எழுச்சி – 10- என்னும் தொண்டர் அடிப் பொடியார்
திருவாக்கினை இங்கு நினைவு கூர்க –
தொண்டர்கட்கே –ஆட்படுத்து
உனக்கே  நாமாட் செய்வோம் –திருப்பாவை – 29- என்று ஆண்டாளும்
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -திருவாய் மொழி -2 -9 -4 – என்று நம் ஆழ்வாரும்
போலப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷித்துத் –தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்கிறார்
முன்னைய பாசுரங்களில் முன்னிலையாகப் பேசி வந்த நம் ஆழ்வார்
புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது மட்டும் எம்பெருமான் திரு முகத்தை நோக்கி
முன்னிலையில் கூறாது –தனக்கேயாக -என்றது –
முகத்தை நோக்கில் புருஷார்த்தத்தில் கொண்ட துணிவு அவ் அழகினால் குலைவுறும்
என்று கவிழ்ந்து இருந்தமையினால் என்று ரசமாக பணிப்பர் ஆச்சார்யர்கள் –
ஆண்டாள் அங்கன் அன்றிப் புருஷார்த்தத்தை நிஷ்கர்ஷிக்கும் போது அதனில் ஊன்றி
நிற்பவள் ஆதலின் -புருஷார்த்தத்தில் தான் கொண்ட துணிவு குலைவுறுமோ என்னும்
அச்சம் ஏற்பட வழி இல்லாமையால் -கோவிந்தன் முகத்தை நோக்கி –
உனக்கே நாம் ஆட்செய்வோம் -என்று நிஷ்கர்ஷம் செய்து அருளினாள் –
அமுதனாரோ -பிரதம பர்வத்தில் ஆண்டாள் நிஷ்கர்ஷித்தது போல சரம பர்வத்தில் எம்பெருமானார்-திரு முகத்தை நோக்கி -உன் தொண்டர்கட்கே ஆட்படுத்து -என்று நிஷ்கர்ஷிக்கிறார் .
தொண்டர்கட்கே அன்பும் -ஆட்படுதலும் உபயோகப் படுவனவாய் அமைய வேண்டும் .
தொண்டர்கட்கும் பிறர்க்குமாக ஒண்ணாது
தொண்டர் கட்கே யாக வேணும்
தொண்டர்கட்கும் எனக்குமாக ஒண்ணாது
தொண்டர்கட்கே யாக வேணும் என்பது அமுதனார் செய்யும் புருஷார்த்த நிஷ்கர்ஷமாகும் .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது

ஷட் பாவ விகாரம்/அஸ்தி பிறக்கிறது மாறுதல் வளர்ந்து தேய்ந்து  முடிதல்/சம்சார சேற்றில் அழுந்தி சுக துக்கம் ஆத்மா அனுபவிக்கிறது/அநிஷ்டம் இஷ்டம் மாறும் எடுத்து கொண்ட சரீரம் படி/ஏழு  அவஸ்தை –கற்ப ஜன்ம பால்யம் யௌவனம்…மூப்பு மரண நரகம்-ஏழு எருதுகள் கொம்பு தான் இரட்டை கர்ம ஒவ் ஒன்றிலும்-முறித்தால்- நப் பின்னை திரு கல்யாணம் போல ஜீவாத்மாவை கொள்கிறான் /

/தலை குப்புற சம்சாரத்தில் விழுகிறான்ஞானம் தொலைத்து சடம் வாயு மூடி கொண்டு/கரு விருத்த குழி நீத்த பின்- ஒரு குழி விட்டு வேறு குழி விழுகிறோம்/அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய்-தொண்டர் அடி பொடி ஆழ்வார் கேட்டதற்கு-திரு பாண் ஆழ்வாருக்கு அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன்-ஒருவர் தானே ஆழ்வார்கள்/அது போல ஸ்வாமி அடியார்கள் இடம் ஆட படுத்த வேண்டுகிறார்-பிரகலாதனும் வரம் கேட்காத வரம் கொள்வான் அன்று-குற்றேவல் கொள்ள வேண்டும்/என்பிலாத இழி பிறவி எய்தினாலும் நின் கண் அன்பு மாறாமல் வேண்டும் என்றான்/

எறும்பி  அப்பா  வரவர முனி சம்பந்திகளின் சம்பந்தம் வேண்டும் என்றார்
/ஆழ்வாரும் அடியார் அடியார்-ஏழு தடவை பின் அடியவன்
கள்ளார்  -குறையால் பிரான் அடி கீழ் இரண்டாம் பாசுரம்/
 இன்புற்ற சீலத்து இராமனுசன்//மிக்க சீலம் அல்லால் அங்கும் சொல்லி
/ஆண்டாளும்   பரமன் அடி பாடி ஆரம்பித்து அடியே போற்றி முடித்தாள்-அடி விடாத சப்ராதயம்
/ஆக்கு அங்கு ஆட படுத்து /கைங்கர்யமும் பண்ண வை என்கிறார் இரண்டும்–மனசாலும் கா யிக   வியாபாரமும் /
எம்பெருமானார் உடைய திரு முகத்தை பார்த்து விண்ணப்பம் செய்கிறார் /அடியேன் செய்யும் விண்ணப்பமே
-ஆரம்பத்தில் ஆழ்வார் சொல்ல இறுதியில் முகில் வண்ணன் அடி சேர்த்து கொண்டான் எல்லா பிர பந்தங்களும் பெற்று கொண்டு
/ இங்கு ஸ்வாமி இடம் சொன்னதும் முடித்து கொடுத்தார்
/சீலம் ராமனுக்கு பட்டர்-இன்புற்ற சீலம்- ஆனந்தத்துடன்
/வண்ணானுக்கும் தெருப்பு தைப்பவனுக்கும்  விற்பவள்  ஊமை- பிரசித்தம்
அமுதனார் தன உள்ளம் வந்ததையே சீலம் என்கிறார் /
இதயத்தின் உள்ளே வந்தது/ இன்பம்- புகுந்து ஆனந்தம் அடைந்தார் .இது கிடைக்க பெற்றதே என்று மகிழ்ந்தாராம்
 /வேங்கடம் வந்து அவன் மகிழ்ந்தது போல /பெறா பேறாக நினைந்து கொண்டாராம் -ஆனந்த நிர்பரராய் இருக்கிற ஸ்வாமி /
தோஷ போக்யத்வம் -வாமனன் சீலன் இராமனுசன் /சீலம் இருப்பதால் தான்-இன்புற்ற சீலத்து ராமாநுச  சொல்லுவது ஓன்று உண்டு/
 அம்பரமே தண்ணீரே சோறே  சொல்லி  ஆண்டாள் கண்ணனை கேட்டாளே
/சொல்வது ஓன்று உண்டு சொல்லி உடனே சொன்னார்/ ஆண்டாள்-யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்
 -அசமயத்தில் சொல்லும் அசடு அல்லள்-பரதன் போல சிஷ்யன் தாசன் ஏதாவது வைத்து கொள் திரும்பி வா என்றான்
/கைங்கர்ய பிரார்த்தனை சரணா கதி பண்ணிய பின்பு தானே கறவைகள்   பாசுரத்தில்
/ எல்லீரும் மோட்ஷம் பெற்றால் வீடில் இடம் இல்லை பல நீ காட்டி படுப்பான்
பிரதம பர்வத்தில் அவனை பரி பக்குவமாக ஆக்கி பின்பு தான் காரியம்
/இரந்து உரைப்பது ஓன்று உண்டு/ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல் எய்யாது ஏத்த –திரு வாய் மொழி-2-9-3 என்னுமா போல
 ,கபம் அடைத்தாலும் -வாதம் பித்தம் கபம் மூன்றும் சேர்ந்து -என்புற்ற  நோய்-உடல் -வியாதிகளுக்கு பாஜனமான சரீரங்கள் தோறும்
– தேவ திர்யக்  ஜங்கம யோனிகள் தோறும் -ஜனிப்பதும் மரிப்பதுமாய் ,அசந்கேயமாய் துக்கங்களை அனுபவித்து முடியிலும்
,சர்வ காலத்திலும் சர்வ தேசத்திலும்,,தேவரீருக்கு அனந்யார்கராய் இருக்கும் அவர்களுக்கே
/ஏ காரம்-/மாம் ஏக -தானும் பிறரும் ஆன நிலையை குலைத்தான்-
சர்வ தரமான்-அவனே உபாயம்- /தானும் இவனும் ஆன நிலையை குலைத்தான் இங்கு
-இங்கு ஒருவனையே–செய்தது நான் என்று ச்வீகாரத்தில் உபாய புத்தி கூடாது-அது அஹங்கார ஜனகமாய் இருக்குமே
 நான் பற்று வித்து கொண்டேன்-என்கிறான்/
உள்ளுக்குள் இருக்கும் விரோதி இதில் தவிர்கிறான்
/தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே /இங்கு பிராப்யத்துக்கு -உனக்கே ஆட் செய்ய /அன்பன் -அனைவருக்கும் அவன்/ ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அன்பன் ஆழ்வார்/மதுரகவி ஆழ்வார் ஆழ்வாருக்கு-/கடல் சூழ்ந்த மண் உலகம் வாழ என்கிறோம்

/அன்பு உற்று -அவ்விவசார பக்தி -அடிமை ஆகும்பண்ணும்படி ஞானம் கொடுத்து -இன்பு-சுகம் /அநந்த கிலேச பாஜனம்-சரீரம்-நித்ய பிரளம்-நாம் மரிப்பது-/நைமித்திக  பிரளயம்-மூன்று லோகம் முடிவதால்/பிராக்ருத பிரளயம்/அதியந்திக்க பிரளயம்-நாம் முக்தர் ஆவது//கிரய விக்ரயம் –அசித் போல பாரதந்த்ர்யம்-அடிமை கொள்வது/எம் தம்மை விற்கவும் பெறுவார்களே- கேசவன் வாங்கலையோ/கண்ணன் வாங்கலையோ//செல்ல பிள்ளைக்கு பிதா-அப்பனுக்கு சங்கு  ஆழி அளித்து -சங்கு அடையாளம் திருந்த கண்டேன்-ஆழ்வார்

/திரு குருங்குடி நம்பிக்கி ஸ்ரீ பாஷ்யம் அளித்தும்-வட்ட பாறை-வடுகா-வைஷ்ணவ நம்பி-கர்ப கிரகத்தில் ஆசனம் இன்றும்-ஸ்ரீ பாஷ்யத்தின் செழுமிய பொருளை அருளினார்-பக்தியாலே மோஷம் ஜகத் காரணன் -விரோதம் தவிர்த்து /உபாசனமமே உபாயம்,கைங்கர்யமே பிராப்யம்/சமுத்திர ராஜன் இடம் விழுந்து பலிக்க வில்லை /மர்மம் தெரிவித்தார் தத்வ தரிசினி வசனம்/ஆற்ற படைத்தான் மகனே-செல்ல பிள்ளை-வள்ளல் பெரும் பசுக்கள்-ராமனின் சர வர்ஷம் போல-பெரிய திருமலை நம்பி -திருவேங்கடத்தான்-நடாதூர் அம்மாள்- தேவ பிரான் /என்றும் கொள்ளலாம்/கோவில் பிள்ளாய் இங்கே போதராய்/தாழ்ச்சியை மதியாது -உள்ளத்தை வேண்டி-என்னை  அவ் அருவாக எண்ணி-இன்புற்ற சீலம்-இவர் உடைய சீலம் அமுதனாருக்கு வெளிட்டு பிரகாசித்தது/சர்வ குஹ்ய தமம் கீதாசார்யன்  இறுதியில் அருளியது போல-இப் பொழுது செய்த விண்ணப்பம்-அமுதனார் இங்கு அருளுகிறார்-

பக்தி ஆசை பிரேமம் எல்லாம் இது வரை சொல்லி-பிரார்த்திக்கிறார்  சேஷ பூதனின் அபேஷிதம்/அங்கு உபதேசம் விதி இங்கு விண்ணப்பம்  பிரார்த்தனை/நானே நாநாவித நரகம் புகும் பாபம் பண்ணி ஆத்ம நாசம் உண்டாகி– கர்ம பலன் அனுபவிக்க-நோய் எல்லாம் புகுவதோர் ஆக்கை பெற்று/பல் பல் யோனிகள்-ஜன்ம பரம்பரை/மரம் சுவர் மதிள்–  மருமைக்கே வெறுமை பூண்டு-அறம் சுவராகிய அரங்கனுக்கு ஆட் செய்யாது இருக்கிறீர்களே

/கற்ப ஜன்ம –ஏழுக்கும் உபலஷணம்/ஆத்மா வீயினும்–தாழ்ந்து போகும் சரீரம் தான் அழியும் ஆத்மாவுக்கு  -சொரூப நாசம்/பிறி  கதிர் படாத படி அனுபவித்தாலும்-/சீலத்து ராமானுச-போற்ற அரும்-என்றும் -எவ் விடத்தும்-உன் தொண்டர்கட்க்கே-உன்-பந்த மோஷங்கள் இரண்டுக்கும் ஹேது அவன்-உமக்கே அற்று தீர்ந்து -அயோக/அந்ய யோக/விவசேதம் ராமன் வில்லாளியே ராமனே வில்லாளி போல

/உனக்கே நாம் ஆட் செய்வோம்-ஆண்டாள் நேராகா சொல்ல /தனக்கே யாக எனை கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை நான் கொள்ளும் சிறப்பே-நேராக சொல்லவில்லை-பயம்-கைங்கர்யம் பண்ண முடியாது அழகில் தோற்று-உன் தொண்டர்கட்க்கே அன்புற்று இருக்கும் படி/யார் எனக்கு நின் பாதமேசரணாக  தந்து ஒழிந்தாய்-ஆழ்வார்/தமேவ சரணம் விரஜெது-பிரதம பர்வத்தில்–தேவு மற்று அறியேன்/ சரணாகதி அருளியவன் தாளே அரணாக மன்னும் அது/பிரேம யுக்தனாய் -அன்பு-ஆக்கி ஆட் படுத்து என்று பிரார்த்திக்கிறார்–

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: