அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–106-இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை -இத்யாதி

பெரிய ஜீயர் அருளிய உரை
நூற்றாறாம் பாட்டு -அவதாரிகை –
இப்படி இவர் தமக்கு -தம் பக்கல்  உண்டான அதி மாத்திர ப்ராவண்யத்தை   கண்டு -எம்பெருமானார் -இவர் திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள –
அத்தைக் கண்டு உகந்து அருளிச் செய்கிறார் .
இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிரும் சோலை யென்னும்
பொருப்பிடம் மாயனுக்கென்பர் நல்லோர் -அவை தன்னொடும் வந்
திருப்பிடம் மாய  னிராமானுசன்     மனத்தின்றவன் வந்
திருப்பிடம் என் தனி  தயத்துள்ளே தனக்கின்புறவே – – 106- –
வியாக்யானம்-
ஸ்வரூப ரூப குண விபூதிகளால் – ஆச்சர்ய பூதனான சர்வேச்வரனுக்கு வச்தவ்ய தேசம்
ஸ்ரீ வைகுண்டமும் -வடக்குத் திரு மலையும் -திரு மால் இரும் சோலை என்று பிரசித்தமான -திருமலை யாகிற -(என்னும் -திருநாமத்துக்கே -திரு மால் இரும் சோலை மலை என்னே என்னே என் மனம் புகுந்தான் -அதனால் தான் இதற்கு மட்டும் என்னும் -வைகுண்டம் வேங்கடம் -இரண்டுக்கும் சொல்லாமல் -)
ஸ்த்தலமுமாக-வைகுந்தம் கோயில் கொண்ட -திருவாய் மொழி – 8-6 5- வேங்கடம் கோயில் கொண்டு -திருவாய்
மொழி – 2-1 7- அழகர் தம் கோயில் -திருவாய்மொழி – -2 9-3 – என்று சொல்லா நிற்பவர்கள்-(நித்யர் / மண்ணோர் திர்யக் -அவனுக்கு என்று இருப்பவர்களுக்கு / விமுகனுக்கும்-மலையத்வஜனை சேர்த்துக் கொண்டாயே  -இப்படி மூன்றும் )
பகவத் தத்வத்தை சாஷாத்கரித்து இருக்கிற    விலஷணரானவர்கள் —
அப்படிபட்டு இருந்துள்ள சர்வேஸ்வரன் –அழகிய பாற்கடலோடும் -பெரிய திருமொழி 5-2 10– என்கிறபடியே
அந்த ஸ்த்தலங்கள் தன்னோடே  கூட வந்து எழுந்து அருளி இருக்கிற ஸ்த்தலம்
என்னுடைய ஹ்ருதயத்துக்குள்ளே –
பெரிய கோயில் நம்பி -திருவரங்கத்து அமுதனார் -/ 74 சிம்ஹாசனபதிகள் பொக்கிஷம் -இந்த பிரபன்ன காயத்ரி உடன் –
சப்தாவரண-புறப்பாடு -ஏழாவது பிரகாரம் சித்திரை விதி -இன்றும் நம் பெருமாள் -இத்தை கேட்டு அருளுகிறார் –
கோஷ்ட்டியில் உடையவரை மடத்தில் விடச் சொல்லி -ஆனந்தமாக கேட்டார் அன்றே
அமுதனார் திரு உள்ளத்தில்– தானான– தமர் உகந்த– தான் உகந்த–எல்லா திருமேனிகளையும் சேவிக்கலாம்
மாயன் ராமானுசன் -சேஷி சேஷ ராமானுசன்-இருவரும் மாயன்-
என்பர் –ஆழ்வார்-நல்லோர் -ஆச்சார்யர்கள் நான் -கேள்வி பட்டேன் -அடியேன் அறிந்தது இப்பொழுது என் நெஞ்சத்துள்
இன்று -நாம் ஆச்சார்ய சம்பந்தம் பெற்ற அன்று -நாமும் இத்தை அனுபவிக்கலாம் -ரஷா பாரம் இரங்கி -திவ்ய தேச எம்பெருமான் எம்பெருமானார் உடன் மகிழ்ந்து உள்ளே இருப்பார்களே -என் இதயம் -என் தன் இதயம் -தாழ்ந்த நீசன் –
கண்ணுக்கு இனியன கண்டோம் -கலியும் கெடும் -ஆழ்வார் அன்றே எம்பெருமானார் திரு உள்ளத்திலே ஸ்ரீ வைகுண்டம் இத்யாதி கண்டார் என்றுமாம்
சர்வ மங்கள விக்ரஹயா ஸமஸ்த பரிவாரங்கள் உடன் -நித்யம் சொல்லுவோமே –
ஞானி து ஆத்மைவ மே மதம் -நித்ய யுக்தா -ஆதி சேஷனே ராமானுஜர் -படுக்கையில் சயனம் -சாக்ஷி நேரே உண்டே -சிந்தாமணி -மாணிக்கம் உமிழ்ந்து கண் கொத்தி பாம்பு -பார்த்துக் கொண்டே பரிவாலே –
புறப்பாடு நடந்து ஆஸ்தானம் போகும் வரை அத்யாபகர்கள் பரிந்து —
அடியார் திரு உள்ளமே ஸூ ரக்ஷணமான வாஸஸ் ஸ்தானம் –
என் தன் இதயத்து உள்ளே – தம்முடைய திரு உள்ளம் போல் பக்தி ரச சந்துஷிதமாய் -நிச்ச்சலமாய் – விஷய விரக்தமாய் -இருக்கை அன்றிக்கே -சுஷ்கமாய் -சஞ்சலமாய் -விஷய சங்கியான உள்ளம் -திரு முடி சேவை -ஆழ்வார் திருநகரி -பொலிந்து நின்ற பிரான் -அவை தன்னோடும் வந்து இருப்பிடம் காட்டி அருளி – மற்று எங்கும் திரு வடி தொழுதல் சேவை/சேஷி மாயன் -விபு வானவன் ஏகதேசம் இருப்பதே /–சேஷ மாயன் – பரனும் பரிவிலானாம் படி அன்றோ எல்லா உலகோரையும் விண் மீது அளிப்பான் வீடு திருத்த விண்ணின் தலை  நின்றும் மண்ணின் தலை மிசை உதித்தார் /திருப்பேர் நகர் ஸ்வாமித்வம் காட்டி -திருமால் இன்சொல்லை -இன்று வந்து ஆழ்வார் திரு உள்ளம் / அயோத்தியை சித்ர கூடம் -ஜடாயு சிறகின் கீழே இருக்க பெருமாள் ஆசை /இப்படி மூன்று மூன்றாக நிறைய பார்க்கலாமே / ஸ்ரீ வைகுண்டம் -திருப்பாற்கடல் -வடமதுரை -சத்ய லோகம்-ஸ்ரீ அயோத்தியை  -ஸ்ரீ ரெங்கம் / போலே –நின்றும் இருந்தும் கிடந்தும் -/நெஞ்சமே நீண் நகர் -இடம் இருக்கவே அவை தன்னோடும் வந்து அமுதனார் இதயத்துக்குள் ஸ்தாவர ப்ரதிஷ்டையாக இருந்தாரே /ஆதிசேஷன் / இளைய பெருமாள் / பலராமன் -/ கைங்கர்யம் எல்லா அவஸ்தைகளிலும் -சேஷ சேஷ பாவம் மாறாமல் -யசோதை தாயாக இருந்தாலும் சேஷி தானே –
ஸ்ரீ வைகுண்டம் -ஆதி சேஷன் தானே கைங்கர்யம் -சென்றால் குடையாம் படி / திருவேங்கடம் -சேஷாத்ரி -/அஹோபிலம் -நடு பகுதி ஸ்ரீ கூர்மம் ஸ்ரீ சிம்காசலம் முடிந்து / பிரியாமல் இருந்து கைங்கர்யம் /ஸ்ரீ வைகுண்டம் கைங்கர்யம் ஆசைப்பட்ட ஆழ்வார் -/ கீழ் உரைத்த பேறு கிடைக்க -எம்மா வீட்டில் பேறு-திருமால் இரும்சோலை ஆஸ்ரயிக்கிறார் -முன்னோர் நிர்வாகம் -/எம்பெருமானார் -இருள் தரும் மா ஞாலம் தடங்கல் இல்லாமல் அனுபவிக்க ஸ்ரீ வைகுண்டம் -நித்யர்களும் அந்த கண்ணும் காதையும்  வைத்து அனுபவிக்க முடியாமல் அழுதுண்டு இருக்க -இருக்கும் இடத்திலே -ஞாலத்தூடே நடத்து உளக்கி பார்த்து இந்த ஏகாந்த ஸ்தலம் -காட்டி அருள – / அதற்காக சென்றார் -காலக்  கழிவு செய்யேல் என்றாரே -/-உகந்து அருளினை நிலம் -ப்ராப்யம் -ஆச்சார்யர் திருவடி பரம ப்ராப்யம் /
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

அவதாரிகை -திருவடிகளை ஆஸ்ரயித்த மகாத்மாக்கள் -அவர் தம்முடைய குண அனுபவ ஜனித
ஹர்ஷ பிரகர்ஷத்தாலே  களித்து சசம்ப்ர்ம ந்ர்த்தம் பண்ணும் இடம் தமக்கு வாசஸ்தானம் என்று கீழ்ப்பாட்டில் அருளிச் செய்து -இப்பாட்டிலே -வேத -தத் உப ப்ரஹ்மணாதிகளாலே பரிசீலனத்தை பண்ணி இருக்குமவர்கள்
சர்வேஸ்வரனுக்கு உகந்து அருளின நிலங்களாக சொல்லுகிற -ஸ்ரீ வைகுண்டம் வட திருமலை    தென் திருமலை
தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட எம்பெருமானாருடைய திரு உள்ளத்திலே அவன் மிக விரும்பி
வர்த்திக்குமா போலே –இப்போது -அந்த திவ்ய தேசங்களோடும் – அந்த திவ்ய தேசங்களுக்கு நிர்வாஹனான
சர்வேச்வரனுடனும் கூட வந்து எம்பெருமானார் தாமும் நிரதிசய சுகமாக எழுது அருளி இருக்கிற ஸ்தலம்
தம்முடைய திரு உள்ளம் என்று அனுசந்தித்து பிரீதர் ஆகிறார் –
வியாக்யானம்-வைகுந்தம் -அவ்யாஹதளம் கல்பம் வஸ்து லஷ்மி தரம் விது -என்கிறபடியே –1-சமஸ்த சங்கல்ப்பங்களும்
மாறாதே செல்லுக்கைக்கு உடலான தேசமாய் –நலமந்த மில்லதோர் நாடு -என்று ஸ்லாக்கிக்கப் படுமதான
ஸ்ரீ வைகுண்டமும் -அன்றிக்கே–2- –தர்ம பூத ஞானத்துக்கு திரோதானம் இல்லாத  தேசம் என்னுதல் –
வேங்கடம்கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு தண்ணார் வேம்கட விண்ணோர் வெற்பு -என்றும்
பரன் சென்று சேர்  திரு வேங்கட மா மலை -என்றும் சொல்லுகிறபடியே -இரண்டு பிரஜையை பெற்ற
மாதாவானவள் இருவருக்கும் முலை கொடுக்க பாங்காக நடுவே கிடைக்குமா போலே –நித்ய சூரிகளுக்கும்

நித்ய சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கைக்காக -அவன் நின்று அருளின திரு மலையும் மாலிரும் சோலை என்னும் பொருப்பிடம்புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில் -என்றும் –வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை -என்றும் -கிளர் ஒளி சேர் கீழ் உரைத்த பேறு கிடைக்க-வளர் ஒளி மால் சோலை மலை –என்றும் சொல்லுகிறபடியே –திருமால் இரும் சோலை என்னும்-பேரை உடைத்தாய் -ஆழ்வார் பிரார்த்தித்து  அருளின படியே உகந்து வர்திக்கைக்கு ஏகாந்த ஸ்தலம்-என்று அவன் விருப்பத்தோடு வர்த்திக்கிற தென் திருமலை ஆகிய ஸ்தலமும் -பொருப்பு -பர்வதம்

இருப்பிடம் -ஆவாஸ ஸ்தானம் –மாயனுக்கு -யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா சஹா -என்றும்
நமே விதுஸ் ஸூ ர கணா-என்றும் -பிரபவன்ன மகர்ஷய  -என்றும் -யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன் –
என்றும் சொல்லுகிற படியே அசிந்த்ய ஸ்வபாவனாய்-ததை ஷத பஹூச்யாம் பிரஜாயேயேதி-என்றும்
தான் ஒரு உருவாய் தனி வித்தாய் -என்றும் -சொல்லுகிறபடியே சர்வ காரண பூதனாய் -ஸ்வரூப ரூப
குண விபூதிகளால் ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனுக்குநல்லோர் -மகாத்மா ந சதுமாம் பார்த்த
தைவீம் ப்ரகர்தி மாஸ்திதா -பஜன்த்ய நன்ய மனசொஜ்ஞாத்வா பூதாதி மவ்யயம் -என்கிறபடியே பரா வரதத்வயா
தாத்ம்ய விதக்ரே ஸ்ரரான மக ரிஷிகள் -என்பர் -சொல்லுவார்கள் -வைகுண்டேது  பார் லோகே  ஸ்ரீ யா சார்த்தம்
ஜகத்பதி –ஆச்தே விஷ்ணுர சிந்த்யா த்மா பக்தைர்    பாகவதஸ் சஹா -இத்யாதியாலே பிரதிபாதிப்பர் -என்றபடி
அன்றிக்கே –நல்லோர் -மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்வார்கள் என்றுமாம் –

அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் –திரு மால் வைகுந்தம் -என்றும் –தெண்ணல் அருவி  மணி பொன் முத்து அலைக்கும் திரு வேம்கடத்தான் -என்றும் –வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்  வளர் இளம் பொழில் சூழ் மால் இரும் சோலை -என்றும் –விண் தோய் சிகரத் திருவேங்கடம் -என்றும் –சீராரும் மால் இரும் சோலை –என்றும் –வேங்கடத்து மாயோன் -என்றும் –விரை திரை நீர் வேங்கடம் –என்றும் –மங்குல் தோய் சென்னி வட வேங்கடத்தான் -என்றும் –வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் -என்றும் இத்யாதிகளாலே அருளிச் செய்வார்கள் -என்றபடி –

அவை தன்னொடும் -அந்த வைகுண்டம் வேங்கடம் மால் இரும் சோலை தொடக்கமான திவ்ய தேசங்களோடு கூட-வந்து -பர கத சுவீகாரம் —அழகிய பாற்கடலோடும் –என்கிறபடியே- அந்த திவ்ய தேசங்களில் -1–அவரைப் பெறுகைக்கும்-2-ஜகத் ரஷணம் பண்ணுகைக்கும் -உறுப்பாகையாலே அந்த கிருதக்ஜ்ஜையாலும் –3-தனக்கு பிராப்யரான-இவர் தம்முடைய ப்ரீதி விஷயங்கள் ஆகையாலும்   -அவற்றை பிரிய மாட்டாதே -அந்த திவ்ய தேசங்களோடு கூடே தானே  வந்து –மாயன் -சுவையன் என்னும்படி நிரதிசய போக்யனான சர்வேஸ்வரனுக்கு –1- ஜ்ஞாநீத்வாத் மைவமே மதம் -என்று
அவன் தானே சொல்லும்படி –தாரகராய் இருக்குமவர் -அன்றிக்கே –2-என் நின்ற யோனியுமாய் பிறந்தாய் -என்கிறபடி
சர்வேஸ்வரன் தானே வந்து உபகரித்து -படாதன பட்டு -உபதேசித்தாலும் திருந்தாத ப்ராக்ருத ஜனங்களை எல்லாம்-அநாயாசேன  திருத்திப் பணி கொண்ட ஆச்சர்ய பூதர் -என்னுதல் -இராமானுசன் –இப்படிப் பட்ட எம்பெருமானாருடைய –மனத்து -திரு உள்ளத்திலே வாசஸ்தானமாக எழுந்து அருளி இருந்தார் -என்றபடி –இன்றுஅடியேனை
அந்தரங்கராக கைக் கொண்ட இப்போது –என் தன் இதயத்து உள்ளேதம்முடைய திரு உள்ளம் போல் -1-பக்தி ரச சந்துஷிதமாய் -2–நிச்ச்சலமாய் -3- விஷய விரக்தமாய் -இருக்கை  அன்றிக்கே –1-சுஷ்கமாய் –2-சஞ்சலமாய் –3-விஷய சங்கியான –என்னுடைய ஹ்ருதயத்திலே –தனக்கு இன்புறவே -அந்த எம்பெருமானார் தமக்கு -யமைவைஷ வர்நுந்தேதேலப்ய –   என்னும்படி நிரவதிக பிரீதி யோடு-எழுந்து அருளி இருக்கும் இடம்காமினி உடம்பில் அழுக்கை காமுகன் உகக்குமா போலே என் -பக்கல்-வ்யாமோஹத்தாலே என் ஹ்ர்தயத்தை விட்டு மற்று ஒன்றை விரும்பார் என்றபடி –உச்சி உள்ளே நிற்கும் -என்னும் படி சர்வேஸ்வரன் ஆழ்வார் திரு முடிக்கு அவ்வருகு போக்கு இல்லை என்று அங்கே தானே-நின்றால் போலே எம்பெருமானாரும் இவர் திரு உள்ளத்துக்கு அவ்வருகே போக்கு ஓன்று இல்லை என்று திரு உள்ளமாய் -அங்கே தான் ஸ்தாவர பிரதிஷ்டையாக எழுந்து அருளி இருந்தார் காணும் –
————————————————————————–

அமுது விருந்து –

அவதாரிகை –

இப்படித் தம்பால் எல்லை கடந்த ஈடுபாட்டினை கண்ட எம்பெருமானார் –
அமுதனாருடைய திரு உள்ளத்தை மிகவும் விரும்பி யருள -அதனை நோக்கி –
அக மகிழ்ந்து அருளிச் செய்கிறார் .
பத உரை –
நல்லோர் -நல்லவர்
மாயவனுக்கு -ஆச்சர்யப் படும் தன்மை வாய்ந்தவனான சர்வேச்வரனுக்கு
இருப்பிடம்-குடி இருக்கும் இடம்
வைகுந்தம் -ஸ்ரீ வைகுண்டமும்
வேங்கடம் -திரு வேங்கடமும்
மால் இரும் சோலை -திரு மால் இரும் சோலை
யென்னும் -என்று உலகினரால் வழங்கப்படும்
பொருப்பு இடம் -திருமலையாகிற இடமும்
என்பர் -என்று சொல்வார்கள்
மாயன் -அந்த ஆச்சர்யப் படத்தக்க சர்வேஸ்வரன்
அவை தன்னொடும் -அந்த இடங்களோடு கூட
வந்து -எழுந்து அருளி
இருப்பிடம் -குடி கொண்ட இடம்
இராமானுசன் மனத்து -எம்பெருமானார் திரு உள்ளத்திலே
அவன் -அந்த எம்பெருமானார்
இன்று -இப்பொழுது
வந்து -எழுந்து அருளி
தனக்கு இன்புற -தமக்கு இன்பம் உண்டாக
இருப்பிடம் -வசிக்கும் இடம்
என் தன் இதயத்து உள்ளே -என்னுடைய இதயத்துக்கு உள்ளேயாம் .
வியாக்யானம் –
இருப்பிடம் –என்பர் நல்லோர் –
எம்பெருமான் சாந்நித்யம் கொண்டு அருளும் மூன்று திவ்ய ஸ்தலங்கள்  இங்கே பேசப்படுகின்றன .-
முதலாவதாகப் பேசப்படுவது ஸ்ரீ வைகுண்டம் .இது பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் உள்ளது .
முக்தி பெற்றோர் போய்ச் சேரும் இடமானது .-வைகுண்டம் என்பதுவடமொழி பெயர் –
விகுண்டருடைய இடம் வைகுண்டம் -விகுண்டர் -மழுங்காத ஞானம் உடையவர்களான நித்ய சூரிகள் –
இவர்களுடைய இடம் ஆதலின் வைகுண்டம் -என்ப-
அடியார் நிலாகின்ற வைகுந்தம் -திரு விருத்தம் -என்பர் நம் ஆழ்வார் .
வைகுண்ட நாடு அவர்கள் உடையதாய் இருத்தல் பற்றியே நித்ய சூரிகள்
விண்ணாட்டவர்-எனப்படுகின்றனர் மாயன் இந்த வைகுந்தத்திலே நித்ய சூரிகள் கண் வட்டத்திலே
இருந்து தன்னை மேவினவர்களுக்கு வீவில் இன்பம் தந்து கொண்டு இருக்கிறான் -இரண்டாவதாக பேசப்படுவது வேங்கடம்
நித்ய சூரிகளிடையே விளங்கா நிற்கும் மாயன் -சம்சாரிகளையும் விடமாட்டாத
வாத்சல்யத்தாலே -அங்கு நின்று வந்து இறங்கிய இடம் வேங்கடம் .
விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் -என்றார் பாண் பெருமாள் .
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும்  ஒக்க அருள் புரியும் நோக்கத்துடன் இரண்டு
குழந்தைகளுக்கு இடையே கிடந்தது பாலூட்டும் தாய் போலே -தரையிலும் இறங்காமல் -விண்ணகத்திலும் தங்காமல் -இடையே வேங்கடம் எனப்படும் வடமா மலையின் உச்சியாய்
விளங்குகிறான் அம்மாயன் –வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு -என்றும்
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர் க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர்
 வெற்பனே -திருவாய் மொழி -1 8- 3- என்றும் இருவருக்கும் பொதுவாக கூறப்பட்டமை நோக்குக –
வைகுந்தத்தின் நின்றும் திரு வேங்கடத்துக்கு வந்து தன்னை அடைந்தார் திறத்து தன் வாத்சல்யத்தை
காட்டி -கொண்டு இருக்கும் –அம் மாயன் -உகப்பின் மிகுதியால் சரண் அடையாதவர் இடத்தும்
வ்யாமோஹம் வாய்ந்தவனாய்வலுவிலே பிடித்து இழுத்து ஆட் கொள்ள வேண்டும் யென்னும் கருத்துடன் –
திரு மால் இரும் சோலையில் கோயில் கொண்டான் -மலயத்வஜ பாண்டியன் கங்கை நீராடப் போகும் போது –
தானே அவனை வலுவில் இழுத்து -நூபுர கங்கையிலே நீராட செய்து -தன்பால் ஈடுபடும்படி செய்ததாக
சொல்லப் படுவதில் இருந்து இவ் உண்மையை  உணரலாம் ..
தென்னன் திரு மால் இரும் சோலை  -திருவாய் மொழி – 10-7 3- -என்று நம் ஆழ்வாரும்
தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே -பெரியாழ்வார் திருமொழி – 4-2 7- என்று
பெரியாழ்வாரும் இந்த பாண்டியனைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார்கள் -கூரத் ஆழ்வான் –  இந்த
பாண்டியன் விருத்தாந்தத்தை சிறிது விளக்கமாக அருளிச் செய்கிறார்
இதமிமே ஸ்ருணுமோ மலயத்த்வஜம் ந்ருபமிஹா ச்வயமேவஹி சுந்தர சரண சாத்க்ருதவாநிதி
தத்வயம் வனகிரீச்வர ஜாதமநோரதா -சுந்தர பாஹூஸ்தவம் -125 -எனபது அவர் திரு வாக்கு
திரு மால் இரும்சோலைக்கு ஈஸ்வரனாகிய அழகரே – மலயத்த்வஜா பாண்டியனை  தானாகவே இங்கே
திருவடிக்கு ஆளாக்கி கொண்ட விருத்தாந்தத்தை நாங்களும் கேள்விப் படுகிறோம் -ஆகையினால் எங்கள்
விருப்பம் அந்த முறையில் நிறை வேறப் பெற்றவர்களாக ஆகி விட்டோம் –
இந்த பாண்டியன் வரலாற்றினாலே உயிர் இனங்களை உறு துயரினின்றும் தானாகவே காப்பதற்கு
என்றே எம்பெருமான் மிக்க அன்புடன் இங்கே எழுந்து அருளி இருக்கிறான் எனபது புலனாகும் .
இங்கு –மன்பதை மறுக்கத் துன்பம் களைவோன் அன்புதுமேயே யிரும் குன்றத்து இருந்தான்  -பரிபாடல் -15 51- 52- –
யென்னும் பரிபாடலும் –மால் இரும் சோலை தன்னைக் கருதி உறைகின்ற கார்க்கடல் வண்ணன் அம்மான் தன்னை -யென்னும்
பெரியாழ்வார் திருமொழி யும் -4 2-11 –காணத் தக்கன –
திரு மால் இரும் சோலை யென்னும் பெயர் அழகார்ந்ததும் -சோலைகள் நிறைந்துதுமான
மாலின் -அடியாரிடம் வ்யாமோஹம் கொண்டவனின் -பெருமை வாய்ந்த மலை யென்னும் பொருள் கொண்டது .
திரு மால் இரும் சோலை மலை யென்னும் இப் பெயரே தனி இனிமை வாய்ந்தது –
அதன் மகிமை நாடு எங்கும் பரவியது -விரும்பும் பயனைத் தர வல்லது –
இதனைச் சொல்வது விரும்பிய பயனுக்கு விதைப்பதாகும் -விளைவை -பயனை -உடனே எதிர்பார்க்கலாம்
என்கிறது பரி பாடல் –
சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவில்
சோலை யொடு தொடர்  மொழி மாலிரும் குன்றம்
தாம் வீழ் காமம்  வித்தி விளைக்கும்
நாமத் தன்மை நன் கனம்படி எழ
யாமத் தன்மையில் வையிரும் குன்றத்து – 15- 22-26 –
அழகு பொருந்திய திரு யென்னும் சொல்லோடும்
சோலை யென்னும் சொல்லோடும்
மால் இரும் குன்றம் யென்னும் சொல் தொடர்ந்த மொழி யாகிய திரு மால் இரும் சோலை மலை யென்னும்
நாமத்தினது பெரும் தன்மை நன்றாக பூமியின் கண் பரக்க – மகளிரும்மைந்தரும்  தாம்
வீழ் காமத்தைவித்தி விளைக்கும் யாமத்தியல்பை உடைய இவ்வையிரும் குன்றத்து எனக் கூட்டுக –
எனபது பரிமேல் அழகர் உரையாகும் .
பயன் கருதாது இப்பெயரை நம் ஆழ்வார் கூறினமையில் வீடு பேறு பெற்றனர் -என்பர் .’
பெயருக்கு உள்ள இத்தகைய பிரசித்தி தோற்ற –மால் இரும் சோலை -யென்னும் பொருப்பு
என்று அருளிச் செய்தார் –பொருப்பிடம் -பொருப்பாகிற இடம்- இரு பெயரொட்டுப் பண்புத் தொகை –
வைகுந்தம் வேங்கடம் பொருப்பிடம் யென்னும் இவற்றில் உம்மைகள் தொக்கன
மாயனுக்கு -ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி -அனைத்திலும் வியக்கத்தக்கவனான சர்வேஸ்வரனுக்கு
மாயனுக்கு வைகுந்தமும் -வேங்கடமும்-பொருப்பிடமும்  இருப்பிடம் -என இயைக்க –
என்பர் நல்லோர் –
இம் மூன்று திவ்ய தேசமும் மாயன் கோயில் கொண்டுள்ள இடமாக சொல்லா நிற்பார் -நல்லவர்கள் என்றபடி ..
நல்லவர்கள் சர்வேஸ்வரனை சாஷாத்காரம் செய்ய வல்ல ஆழ்வார்கள் –
வைகுந்தம் கோயில் கொண்ட -திருவாய் மொழி – -8 6-5 – –
வேங்கடம் கோயில் கொண்டு – பெரிய திரு மொழி – 2-1 7- –
அழகர் தம் கோயில் -திருவாய் மொழி – 2-10 2- – என்று ஆழ்வார்கள் கோயிலாக இம் மூன்றினையும்
குறிப்பிட்டு உள்ளமை காண்க –
இம் மூன்று இடங்களையும் ஒக்க எடுத்தது மாயனுக்கும் அடியார்களுக்கும் இன்பம் பயப்பதாய்
ப்ராப்யம் -பேறாகப் பெறத் தக்கது -பிராப்யமாய் ஆம் இடமாய் இருத்தல் பற்றி -என்க-
வைகுண்டத்தில் போலே வேங்கடத்தில் நித்ய சூரிகள் அடிமையினை ஏற்பதோடு அமையாமல் –
நீணிலத்தில் உள்ளார் அடிமையினையும் ஏற்று முக்த அநுபூதியை மாயன் வழங்கிக் கொண்டு இருப்பதால் –
அதுவும் பிராப்ய பூமி ஆயிற்று என்க -அடிமையில் விடாய் கொண்டவர்கள் மலையேறி வருந்தாது
 நினைத்த போதே அடிமை செய்யலாம்படி –அம்மாயன் வந்து மலை அடிவாரத்தில் அடிமையினை
எதிர்பார்த்து இருக்கும் இடம் திரு மால் இரும் சோலை மலை ..நம் ஆழ்வார் தாம் வடிகட்டின அடிமையை
உடனே பெற்றாக வேண்டும் படியான விடாய் கொண்டு –காலக் கழிவு செய்யேல் –என்று ஆத்திரப்
படுவது கண்டு -சரீரம் நீங்கும் வரை அடிமை செய்ய காத்து இருக்க இவரால் இயலாது என்று
சரீரத்தோடேயே- நினைத்த கணத்திலேயே அடிமை கொள்ள இந்த இடம் சால ஏகாந்த ஸ்த்தலமாய்
இருந்தது என்று -திரு மால் இரும் சோலை மலையிலே எழுந்து அருளின நிலையைக் காட்டி
பகவான் அவரை அனுபவிப்பித்து இனியர் ஆக்கினான் -என்று அருளிச் செய்வர் எம்பெருமானார் .

கிளர் ஒளி ஈட்டு அவதாரிகை -காண்க .

அவை தன்னொடும் வந்து இருப்பிடம் மாயன் இராமானுசன் மனத்து
அர்ச்சிராதி வழியே வந்து உடலம் நீங்கினவர்க்கு அடிமை செய்ய பாங்கான இடம் என்று வைகுந்தத்தையும் –
போவான் வழி கொண்டு – -சிகரம் -வந்தடைந்த நீணிலத்தில் உள்ளார்கட்கும்
அடிமைத் தொழில் பூண்பதற்கு பாங்கான இடம் என்று திரு வேங்கடத்தையும்
போவான் வழிக்  கொள்வதற்கும் -சிகரத்தில் ஏறுவதற்கும் -திறன் அற்றார்க்கும் விடாய்த்த உடனே
உடலோடு அடிமை செய்வதற்கு பாங்கான இடம் என்று திரு மால் இரும் சோலை மலையையும்
தனக்கு கோயில்களாக கொண்டது போலே –
மாயன் –எம்பெருமானார் இதயத்தையும் தனக்கு கோயிலாக கொண்டான்
இவ்விடம் ஒரே காலத்தில் பல்லாயிரம் பேர்கள் ஆட்பட்டு அடிமை புரிவதற்கு -பாங்காக அமையும்
எனபது மாயனது அவா -ஆயின் ஏனைய இடங்கள் போன்றது அன்று எம்பெருமானார் உடைய இதயம்
வேங்கடத்தை இடமாக கொண்ட போது -த்யக்த்வா வைகுண்டம் உத்தமம் -சீரிய வைகுண்டத்தை விட்டு –
என்றபடி .வைகுண்டத்தை துறந்தான் –இங்கனமே திரு மால் இரும் சோலை யை இடமாக கொள்ளும் போது
ஏனைய இரண்டினையும் விட வேண்டியதாயிற்று .இம் மூன்று இடங்களிலுமே இருப்பவன்
மாயன் ஒருவனே -ஆயின் இடங்கள்  வெவ்வேறு பட்டன .அவ்வவ இடங்களிலே வாசம் பண்ணினதன் பயன்
இவர் இதயத்தில் வாசம் பண்ண வேண்டியதாயிற்று ..அங்கனம் வாசம் பண்ண வரும் போது –
தான் கோயில் கொண்டு இருந்த மூன்று இடங்களையும் கூடவே கொணர்ந்து இங்கே குடி புகுந்தானாம் அம் மாயன் –
ஏனைய இடங்கள் அவன் இருப்பதற்கே போதுமானவை –
மற்ற இடங்களைக் கொணர்ந்தால் இடம் போதாது –
எம்பெருமானாரிதயமோ இன்னும் எத்தனை இடங்களோடு வந்தாலும் இடம் கொடுக்கும் .அவ்வளவு விசாலமானது -இது போன்ற இதயம் இருப்பிடம் என்னாது -இதயத்து இருப்பிடம் -என்ற அழகு பாரீர் –
வைகுந்தம் முதலியன இருப்பிடமாயின
எம்பெருமானார் இதயத்தில் ஒரு பகுதி அவற்றோடு மாயன் இருப்பதற்கு இடம் ஆயிற்று -என்றபடி –
மேலும் பூதத் ஆழ்வார் தமது உள்ளத்தை -திரு மால் இரும் சோலை மலை -திரு வேங்கடம்
இவற்றைப் போலே கோயில் கொள்ளக் கருதியதை அறிந்து பகவானே  நீ என் உள்ளத்தில் குடிபுக
பாலாலயமாகக் கொண்ட திருப்பாற்கடலை கை விட்டு விடாதே என்று
வெற்பு என்று இரும் சோலை வேங்கடம் என்று இவ் இரண்டும்
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மைபோல் -நிற்பென்று
உளம் கோயில் உள்ளம் வைத்து உள்ளினேன் வெள்ளத்து
இளம் கோயில் கை விடேல் என்று – -54 –  யென்னும்
பாசுரத்தில் வேண்டிக் கொண்டதற்கு ஏற்ப பெரியாழ்வார் திரு உள்ளத்திலே
அழகிய பாற்கடலோடும் -5 -2 10- -புகுந்து பள்ளி கொண்டது போலவும்
கோயில்கொண்டான்  திருக் கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சகம் –
திரு வாய் மொழி -8 6-5 – – என்றபடி நம் ஆழ்வார் திரு உள்ளத்தில் திருக் கடித்தானத்தோடு கோயில்
கொண்டது போலவும் –எம்பெருமானார் திரு உள்ளத்திலும் அந்த வைகுந்தம் முதலிய வற்றோடு
எழுந்து அருளி இடம் கொண்டான் -என்க .
பொருந்தாதவற்றையும் பொருந்த விட வல்ல மாயன் ஆதலின் -அளவிடற்கரிய
த்ரிபாத் விபூதியான வைகுந்தத்தையும் இதயத்துக்கு உள்ளே அடக்க வல்லனாயினான் -என்னலுமாம்
இன்று அவன் வந்து இருப்பிடம் –தனக்கின்புற –
இன்று -ஈடுபாடு உடையவனாக்கி -என்னை ஆட் கொண்ட இன்று –
அவன் வைகுந்தம் முதலிய வற்றோடு மாயனை இதயத்திலே ஓர் இடத்திலே ஒதுக்கி வைத்து கொண்டு
 இருக்கிற எம்பெருமானார்  .
அத்தகைய எம்பெருமானார் தாம் இன்புறும்படி -தாமே வந்து -என் தன் இதயத்துக்கு உள்ளே இடம் கொண்டார்
என்கிறார் –இத்தகைய இதயம் படைத்த பீடு -தோன்ற -என் தன் -இதயம் -என்கிறார் -மாயன் இருப்பிடம் எம்பெருமானார் இதயத்திலே
அந்த எம்பெருமானார் இருப்பிடம் என்னுடைய இதயத்துக்கு உள்ளே -என்றது கவனிக்கத் தக்கது –
இதனால் எம்பெருமானாரிதயத்திலும் அமுதனார் இதயம் இடம் உடைத்தாய் உள்ளமை

புலன் ஆகின்றது அன்றோ

 கீழ் இரண்டு பாட்டுக்களாலே எம்பெருமானார் திரு மேனி குணங்களின் அனுபவம் இன்றேல்
ப்ராப்யமான வைகுந்தம் சேரினும் கால் பாவி நிற்க மாட்டேன் என்றும் –
எம்பெருமானாரைத் தொழும் பெரியவர் களிக் கூத்தாடும் இடமே தனக்கு பிராப்யமான இடம்
என்றும் சர்வேஸ்வரனோடு ஒட்டு அறுத்து பேசினவர் –
இங்கே பிராப்யமான இடத்தோடு மாயனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு எம்பெருமானார்-தன் இதயத்துக்கு உள்ளே எழுந்து அருளி இருப்பதாக அருளிச் செய்து இருப்பது கவனத்திற்கு உரியது .ஆசார்ய சம்பந்த்தினுடைய மகிமை –
 இவர் கால் பாவ மாட்டேன் என்று ஒதுக்கின இடமும் –
ஆசார்யனோடும்
அவன் உகந்த ஈச்வரனோடும்
தானாகவே  இவரை நாடி வருகிறது –
ஆசார்யன் உகந்த இடமும் -அவன் உகந்த எம்பெருமானும் ஆசார்யன் முக மலர்ச்சிக்காக
நெஞ்சார ஆதரிக்கத் தக்க எய்தி விடுவதை இது புலப் படுத்து கிறது .
இதனால் ஆசார்யனைப் பற்றுகை -பகவானை பற்றுவதினின்றும் வேறு பட்டது அன்று –
பேற்றினை எளிதில் தர வல்லது எனபது தெளிவாகின்றது –
இங்கே -ஈஸ்வரனை பற்றுகை கையைப் பிடித்து கார்யம்கொள்ளுமோபாதி
ஆசார்யனைப் பற்றுகை காலைப் பிடித்து கார்யம் கொள்ளுமோபாதி –-47 –  யென்னும்
ஸ்ரீ வசன பூஷணமும் அதன் வியாக்யானமும்  சேவிக்கத் தக்கன ..
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

இப்படி இவர் தமக்கு தம் பக்கல் உண்டான அதிமாத்ர ப்ராவண்யத்தை கண்டு ,-எம்பெருமானார் இவர் திரு உள்ளத்தை மிகவும் விரும்பி அருள ,அத்தை கண்டு உகந்து அருளி செய்கிறார்-ஸ்வரூப ரூப குண விபூதிகளால் ஆச்சர்ய பூதனான சர்வேச்வரனுக்கு வஸ்தவ்ய தேசம்-ஸ்ரீ வைகுண்டமும் ,வடக்கு திருமலையும் திரு மால் இரும் சோலை என்று பிரசித்தமான திரு மலை ஆகிற ஸ்தலமுமாக—வைகுந்தம் கோவில் கொண்ட -திரு வாய் மொழி 8-6-5/-வேங்கடம் கோவில் கொண்டு -பெரிய திரு மொழி 2-1-7–அழகர் தம் கோவில் திரு வாய் மொழி 2-9-3/என்று சொல்லா நிற்பவர்கள் பகவத் தத்தவத்தை சாஷாத் கரித்து இருக்கிற விலஷணர் ஆனவர்கள்..அப் படி பட்டு இருந்துள்ள சர்வேஸ்வரன் அழகிய பாற்கடலும் பெரிய திருமொழி 5-2-10 என்கிற படியே-அந்த ஸ்தலங்கள் தன்னோடு கூட வந்து எழுந்து  அருளி இருக்கிற ஸ்தலம் என் உடைய ஹ்ருதயத்துக்குள்ளே

மாறன் அடி பணிந்து உய்ந்தவன்ஸ்ரீ ராமானுசம் வாங்கி கொண்டீர்களா- ஆழ்வார் திரு நகரில்-மற்ற இடங்களில் மதுர கவி ஆழ்வார் //முதலி ஆண்டான் ஸ்வாமி திருவடிகள்-திரு மலையில் மட்டும் அனந்தாழ்வான்/திரு நகரி- கலியன்- திருமேனி-குறையல் பிரான் அடி கீழ் விள்ளாத அன்பு உடையவனை-அங்கும் சேவித்து கொள்ளலாம்/அபிமான பங்கமாய்-ஆண்டாள் / அபிமான துங்கன்-பெரிய ஆழ்வார்-/பெரியவர் திருவடியில் ஒதுங்கினவர் ஸ்வாமி என்றே அருளி இருக்கிறார் அமுதனார்

/அஷ்டாதச ரகசியம்  விளைந்த இடம் காட்டு அழகிய சிங்கர் சந்நிதியில் அரங்கேற்றம்/ஸ்வாமி நுழைந்ததும்- பல ராமானுசன் நுழைந்ததும் அன்று -எழல் உற்று மீண்டு இருந்து -போல எழுந்தார்கள்-அதனால் இந்த கடைசி  மூன்றும் சாத்து முறை பாசுரங்கள் ஆயின-/ஆடி பாடி ராமானுசா என்று இரைஞ்சும் இடமே-வகுத்த இடம்/ பாட்டு கேட்க்கும் இடமும் கூப்பிடு இடமும்  குதித்த இடமும்  ஊட்டும் இடமும்-வளைத்த இடங்களும் எல்லாம் வகுத்த இடமே-ஆச்சர்ய  அபிமானமே உத்தாரகம்/ உன்னை ஒழிய மற்று அறியாத வடுக நம்பி நிலை தா -மா முனிகள்

/நெஞ்சை கொண்டாடுகிறார் இதில்/அமுதனார் திரு உள்ளத்தில்– தானான– தமர் உகந்த– தான் உகந்த–எல்லா திருமேனிகளையும் சேவிக்கலாம்//மூவர் வர-ஸ்வாமி திரு உள்ளத்தில் மூவர் இருக்க/மாயன்-ஸ்ரீ வைகுண்டம்- திருவேங்கடம்- திரு மால் இரும்சோலை-மூன்றும்/அவை தன்னோடும் மாயன் ராமானுசன் –சேஷி சேஷ ராமானுசன்-இருவரும் மாயன்-

நீக்கமற  நிறைந்தவன்- வியாபகன் பொற்குன்றத்தில் சேவை-மாயன்/ஸ்வாமி-அவனால் திருத்த படாத மக்களை திருத்தினார்/திரு மழிசை சொல்லி பை நாக பாம்பு அணையை சுருட்டி கொண்டான்/ இங்கு ஸ்வாமி சொல்லாலாமலே -திவ்ய தேசங்களை எல்லாம் எடுத்து கொண்டு-அவை தன்னோடும்-மனத்து வந்தார்கள்

/திரு பேர் நகரான்-ஸ்வாமித்வம் காட்டிய இடம்-திருமால் இரும் சோலை- ஆழ்வார் மனம் -பேரென் என்று /அயோத்தியை சித்ர கூடம் ஜடாயு சிறகு அடியில் வாழ ஆசை பட்டான் ராமன்/

/சத்ய லோகம் அயோதியை ஸ்ரீ ரெங்கம் /மதுரை கோகுலம் த்வாரகை/அது போல இங்கும் அமுதனார்- ஸ்வாமி திரு உள்ளம் புகுந்தது இதற்க்கு தான்/வாராயோ என்று அவை தன்னோடும் –இன்று-/நெஞ்சமே நீள் நகராக -/ஸ்ரீவைகுண்ட விரக்தாய-கல்யாண குணங்கள்-பகல் விளக்கு பட்டு இருக்கும்-ஷமை தப்பே பண்ணாதவர் இடம் காட்ட முடியாது தயா/அமிர்தம் உண்டு களித்து இருக்கிறார்கள்/ இளம் கோவில் கைவிடேல் என்று பிராத்திக்க வேண்டும்படியாய் இருக்குமே-உச்சி உள்ளே இருத்தும்-பெரியோரை உள்ளத்தில்  வைப்பதே தீ மனம் கெடுக்க வழி-/ஆனந்தம் பிரதம ரூபம்- அனந்தன்/ அடுத்து லஷ்மணன்/ பல ராமன்- கைங்கர்யம் இருவரும்- சேஷ சேஷி பாவம் மாறாது/கலி யுகத்தில் அவர்களே   ஸ்வாமி/ஸ்ரீ வைகுண்டம்-சென்றால் குடையாம்-தானே எல்லா கைங்கர்யம்/

வேங்கடம் சேஷாத்ரி மலையே /அஹோபிலம் நடு-ஸ்ரீ  ஷீராப்தி  பைம் தலைய அனந்தன் ஆடும் இடம்-ஆதிசேஷ மலை திரு மால் இரும் சோலை என்பர்/மாயன்- ஸ்வரூப ரூப குண விபூதிகளால் ஆச்சர்ய பூதன் சர்வேஸ்வரன்/–ஜகத் வியாபார வர்ஜம்- நிறைய சிரமம் திரு மந்த்ரத்தில் பிறந்து துவயத்தில் வளர்ந்து -இருப்பதே உத்தேசம்

/வேர்த்த  பொழுது குளித்து பசித்த பொழுது சாப்பிட்டு  -பட்டர்  திருவடிகளில் இருந்தால் மோட்ஷம் கிட்டாதோ-அனந்தாழ்வான்-நஞ்சீயர்/திருநாமத்துக்கு தனி வைபவம்/திரு மால் இரும் சோலை என்ன நெஞ்சில் புகுந்தான்- ஆழ்வார்

திரு வேங்கடம் இல்லாத சீர்/மால் வாழும் குன்றம்-பரிபாடல் உண்டு/விகுண்டர்- குண்ட-தடை/தடை இல்லாத ஞானம் நலம் இல்லாத நாடு என்பதால்-ஸ்ரீ வைகுண்டம் இருந்து திரு மலை வழியாக  /வடக்கு வாசல் வழியாக புகுந்து ஸ்ரீ ரெங்கத்தில் சயனித்தான்/சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது கிளம்ப மாட்டேன் என்று சயனித்து கொண்டு இருக்கிறான்

தென்னல் உயர் பொற்பும் வட வேங்கடமும்/விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்/மால் இரும் சோலைஎன்பர்  /நல்லோர்-ஆழ்வார்கள்/அனந்யார்க்க சரணர்களுக்கு-நித்யர் மட்டும் கைங்கர்யம்/காடும் வானரமும்-அனைவரும் கைங்கர்யம்-சௌலப்யம்-பொது அறிந்து வானரங்கள்  பூம் சுனை புக்கு-முதலை இங்கு -புல் பூண்டு கூட அடிமை செய்ய தான் இங்கு-சுமந்து -விஷ்வக் சேனரும்   குரங்கும் //மலையத்வஜ பாண்டியன் விமுகன்- கூப்பிட்டு சேவை சாதித்தார் -வனகிரீச்வரன்-குழல் அழகர் கொப்பூழில் எழில் அழகர் –என் அரங்கத்து இன் அமுதர் /

2-10கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் வளர் ஒளி மாயோன் மருவிய கோவில்/ஸ்ரீ வைகுண்டம் ஆசை பட்டார் ஆழ்வார் /கீழ் உரைத்த பேறு- தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -2-9 கேட்டார்-கைங்கர்யம் பண்ண /பிராப்யம் நிஷ்கரித்தார்/அழ ஆரம்பித்தார்

-1௦௦௦ பாசுரம் பாட வேண்டுமே இருக்கிற இடத்தில் ஞாலதூடே பார்த்துதிரு மால் இரும் சோலை வர சொன்னார் கைங்கர்யம் பண்ண இருள் தரும் மா ஞாலம் –ஆழ்வார் சொல்ல- அங்கு நித்யர் அங்கும் அனுபவிக்க முடியவில்லை என்று தான் /பிராப்யத்தை/கால கழிவு செய்யேல் என்றார்- கொடுத்தார் ஆழ்வாருக்கு/அழகிய பாற் கடலோடு ..-பரவி கின்றான் விஷ்ணு சித்தன்/பரம பிராப்யம் ஸ்வாமி திரு உள்ளம்/ உகந்து அருளிய திவ்ய தேசங்கள் -எல்லாம் பிராப்யம்-பிரயோஜனம் ஸ்வாமி திரு உள்ளம் அடைய /தபஸ் பண்ணுகிறானாம் எல்லா இடங்களிலும் ஸ்வாமி உள்ளம் போக/அறியாதன அறிவித்த அத்தா-க்ருத்க்ஜன் -அதனால் தான் அவை தன்னோடும் வந்து இருந்தானாம் திரு கடித்தானமும் என் உடை சிந்தையும்- ஆழ்வார் சாத்தியம்-சாதனம்-க்ருதஞ்ஞா  கந்தம்/இன்று-அவர் வந்து தமக்கு இன்புற -இன்பமாக உகந்துஅருள அமுதனார் இதயத்துக்குள்ளே

/நீதி வானவர் சேஷத்வம் தெரிந்தவர்கள் வாழும் ஸ்ரீ வைகுண்டம்-நலம் அந்தம் இல்லாத நாடு/நித்ய சங்கல்பம் நடக்கும் இடம்/தர்ம பூத ஞானம் மாயையால்-பிரக்ருதியால்-மறைக்காத இடம்/மித்யை பொய் இல்லை/தெளி விசும்பு திரு நாடு/பரம் சென்று சேர் திருவேங்கடம்/கண்ணாவான் -ரஷகன்-விண் ணோர்க்கும்    மண்ணோர்க்கும்-வராக ஷேத்ரம் தான் அது–சென்று சேர்-இருவருக்கும் பால் கொடுக்க நித்ய சூரிகளுக்கும் நித்ய சம்சாரிகளுக்கும்/ மால் இரும் சோலை என்னும் பொருப்பிடம்-திரு நாம வைபவம்  தோன்ற-

நன்மை என்று பெயர் இடலாம் படி -மடி மாங்காய் இட்டு-ஓன்று பத்தாக்கி நடாத்தி கொண்டு போகும்-/புயல் மழை /திரு மால் இரும் சோலை -தொடர் மொழி-இரும் குன்றம் நாமதன்மை -பரி பாடல்-சிலம்பாறு அணிந்த- நூபுர கங்கை-புயல் மழை வண்ணர் புகுந்து உறை கோவில்-பயன் அல்ல செய்து பயன் அல்ல நெஞ்சே-பரத்வம் விபவம் சேவிக்காதே

-மேகம்-போய் வர்ஷிக்கும்/ நின்றே கொட்டும் மேகம் அழகர்/மயல் மிகும் -அவனுக்கும் நமக்கும் பைத்தியம் பிடிக்கும்-த்யாஜ்ய தேக வியாமோகம்-கேசவா என்ன கெடும் இடர் ஆயின எல்லாம் கெடும் என்றார்-வான் ஏற வழி தந்த  வாட்டாற்றான் –

நெஞ்சே நரகத்தை நகு/வஞ்ச கள்வன் மா மாயன் நெஞ்சையும் உள் கலந்து தானே ஆய நின்றான் அழகர்/திரு மேனி –உன் மாமாயை மங்க ஒட்டு-தன்னை கண்டால் பாம்பை கண்டால் போல இருக்கும் சரீரம்/பாம்போடு ஒரு கூரையில் வர்தித்தது போல இருக்கிறோம்/மயல் மிகு பொழில்  சூழ் மால் இரும் சோலை/பின்னை கொல் நிலா மா மகள் கொல் திரு  மகள் கொல் பிறந்திட்டாள்// வேர் மண் பற்று கழியாது  போல ஞானியை திரு மேனியோடு ஆதரிக்கும்/கீழ் உரைத்த பேறு கிடைக்க -/மாயன்- பொருந்தாததை பொருந்த வைத்தவன்-எவர்க்கும் சிந்தைக்கு  கோசரம் அல்லன்–அவன் இங்கே வர்த்திகிரானே/சுத்தமான பக்தியாலே கிட்ட முடியும்/ஜகத் காரணம் சங்கல்ப்பதாலே பண்ணும் மாயன்/தான் ஓர் உருவே தனி வித்தாய்/நல்லோர் சொல்வார்கள்-

ஆதி ஆனந்தம் அற்புதமாய -பர அவர விவேகம் தெரிந்தவர்கள்/வைகுண்டே பரே லோக -ஜகத் பதி- பாகவத சக- லிங்க புராண ஸ்லோகம்/நடுவாக வீற்று இருக்கும் நாயகன் /நல்லோர்- தத்வ ஞானிகள் / ஆழ்வார்கள்/சீராரும் மால் இரும் சோலை என்னும்/அயர்வறும் அமரர்கள் அதிபதி/திரு மால் இரும் சோலை திரு பாற்கடலே என்றும்-தென் நல்  அருவி மணி ஒண் முத்து அலைக்கும் என்றும்/விண்  தோய் சிகரத்து திரு வேங்கடம்/வேங்கடத்து மாயன் என்னும்/வெற்பு என்னும் இரும் சோலை வேங்கடம்//அவை தன்னோடும் -ஸ்வாமி நெஞ்சம் நீள் நகரமாக இருந்ததால்/எதிராஜரே எம்பெருமானார் சத்யம் கூரத் ஆழ்வான்/அருளாள பெருமாள் எம்பெருமானார் தம் மடத்தை இடித்தார்/வந்து- திரு கமல பாதம் வந்து/ வந்து அருளி என் நெஞ்சம் இடம் கொண்டான்- பரகத ச்வீகாரம்/பெருகைக்கும்  ஜகத் ரஷகத்துக்கும் திவ்ய தேசம்

/வைகுண்டம் வேங்கடம் ஸ்வாமிக்கும் ப்ரீதி விஷயம் தானே/சேஷ மாயன் சுவையன் திருவின் மணாளன்-ரசிக தன்மை கத்துண்டு/தாரகன்- ஸ்வாமி ஞானி ஆத்மை மே  மதம்/என்னது உன்னதாவி  உன்னது என்னதாவி /மாயனான கண்ணனை தாங்கும் மாயன் ஸ்வாமி/மண் மிசையோனிகள்- நண்ணரும் ஞானம் தலை கொண்டு நாரணர்க்கு ஆள் ஆக்கின மாயம்/அண்ணல் இராமானுசன் தோன்றிய அப் பொழுதே -ஆனதே- மாயம்/அனாயாசனே திருத்தினாரே/இன்று அந்தரங்கராக கை கொண்டு-..இனி தம் உள்ளத்துக்கும் ஸ்வாமி உள்ளத்துக்கும் வாசி-பக்தி ரசம் நிரம்பி நிஸ் சலமாய் ஸ்வாமி திரு உள்ளம் விஷயம் ஒன்றிலும் தீண்டாமல்/

உலர்ந்து நில்லவா நில்லாத நெஞ்சு விஷய சஞ்சீவ- தனக்கு இன்புறவே வந்தார்-இதற்க்கு என்றே காத்து இருந்தார்-நிரவதிக ப்ரீதி உடன் வந்தாராம்/அவராக ஆசை பட்டு -தன் ஆனந்தத்துக்கு-நான் பிரார்த்திக்காமல்காமுகன் காதலி உடம்பின் அழுக்கை விரும்புமா போல -/பாசி தூரத்து கிடந்த பாற் மகள்க்கு –மான மிலா பன்றியாம்-உபமானம் அபிமானம் இரண்டும் இல்லாத/பகவான் விட ஸ்வாமி ஏற்றம்/ ஸ்வாமி மனசுக்கு வந்தது விட-அமுதனாருள்ளதுக்கு வந்தது உசந்தது-எங்கும் பக்க நோக்கு அறியாமல் /பொலிந்த நின்ற பிரான் ஆழ்வாரை நாவில் உளானே உச்சி உள்ளே வந்தாரே-திரு முடி சேவை இன்றும் உண்டு /போக இடம் இல்லை என்று ஸ்தாவர பிரதிஷ்ட்டையாக இருந்தார்-அது போலே எம்பெருமானாரும்  இனி பேரென் என்று  அமுதனாரின் நெஞ்சுக்குள் இருந்தார்–

———————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: