அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–104-கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

நூற்று நாலாம் பாட்டு -அவதாரிகை
உபதேச ஜ்ஞான லாப மாத்ரம் ரசிக்கிற படி கண்டால் -பகவத் விஷயத்தை
சாஷாத் கரித்தீர் ஆகில் உமக்கு எப்படி ரசிக்கிறதோ என்று -எம்பெருமானாருக்கு
கருத்தாகக் கொண்டு -பகவத் விஷயத்தை விசதமாகக் காட்டித் தரிலும் –
தேவரீர் திரு மேனியில் பிரகாசிக்கிற குணங்கள் ஒழிய  நான் வேண்டேன் –
இதுக்கு ஈடான பிரசாதத்தை செய்து அருளில் இரண்டு விபூதியிலும்
கால் பாவுவன் -அல்லது தரியேன் -என்கிறார்
கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும் உன்தன்
மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமானுச என் செழும் கொண்டலே – – -104 –
வியாக்யானம் –
விலஷணமான மேகம் போலே பரமோதாரராய்
அது தன்னை எங்களுக்கு பிரகாசிப்பித்தது அருளினவரே —
ஆஸ்ரித சுலபனான சர்வேஸ்வரனை உள்ளங்கை நெல்லிக் கனி போலே
சாஷாத் கரிப்பித்து தரிலும் தேவரீருடைய திவ்ய விக்கிரகத்தில் பிரகாசிக்கிற
ஸௌந்தர்யாதி குணங்கள் ஒழிய நான் வேண்டேன் –
சம்சார கர்த்தமத்தில் முழுகி -அழுந்திக் கிடக்க்கவுமாம் –
சுத்த சத்வ குணம் -குண மயம் -ஆகையாலே -நிரவதிக தேஜோ ரூபமான
பரம பதத்தை ப்ராபிக்கவுமாம் –தேவரீருடைய திரு மேனி குணத்தையே
அனுபவித்து இருக்கை யாகிற இதுக்கு உறுப்பான பிரசாதத்தை
தேவரீர் செய்து அருளில் ஏதேனும் ஓர் இடத்திலும் கால் பாவி நிற்பன் –
அல்லாத போது தரிக்க மாட்டேன் -என்று கருத்து .
பிறங்குதல்-பிரகாசம்
நிரயம்-விடியா வெந்நரகம் -திருவாய் மொழி-2-9-7 – என்கிற சம்சாரம்
தொய்யில்சேறு-தொய்யில் என்கிற இடத்தில் ஏழாம் வேற்றுமை குறைந்து கிடக்கிறது -நிரயத் தொய்யில் கிடக்கிலென் சோதி விண் சேரிலென் -என்று பாடமாகில்-
சம்சாரத்தில் கிடக்கில் என் -பரம பதத்தில் போகில் என் –
இவை இரண்டும் கொண்டு எனக்கு கார்யம் இல்லை .
சம்சாரத்தின் உடைய தோஷத்தையும் பரம பதத்தின் உடைய வைலஷண்யத்தையும்
அனுசந்தித்து இத்தை விட்டு அத்தைப் பெற விருக்கிறேன் அல்லேன் .
இவ் வனுபவத்தை தேவரீர் தரில் சம்சாரத்திலும் தரிப்பன்
இது இல்லையாகில் பரம பதத்திலும் தரியேன் -என்கை-
செழும் கொண்டல் –பார்த்து பார்த்து அருளுபவர் –செழுமை மாறாத கொண்டல்/கருணை குறையாத -விலஷனமான மேகம்-
அன்ன -போலே
ஸ்ரீ வைகுண்டம் சென்றாலும் தவிப்பேன் -அங்கும் உம் திருவடி பெற்றால் தரிப்பேன் –
ராமானுஜர் குண அனுபவம் பெற்றார் சம்சாரமும் நித்ய விபூதியும் ஒன்றாகவே கொள்ளுவார்கள்
உன் தன் மெய்யில் -அவன் பொது -உம்மையே அனுபவிப்பேன் -உம்மாலே கரை மரம் சேர பெற்றேன் -முமுஷுதை அவனால் பாண்டவர்கள் பெற வில்லை -அவன் தண்டகரன் –உம் அபிமானம் உத்தாரகம் –ஆச்சார்ய சம்பந்தம் இல்லாமல் உணர்த்துவான் -தாமரை நீரில் இல்லா விடில் ஆதித்யன் உலர்த்தும்
பாலும்  சக்கரையும் சேர்த்து -பால் என்கோ-ஆசார்யன் சக்கரை சேர்த்து பருகி இன்பம் -பெற்ற பின் -வெறும் பால் சுவைக்குமோ
கீழ் பாசுரத்தில் நரசிம்ஹர் கீர்த்தி-பின் வாசல் தெள்ளிய சிங்கர்-இங்கு கிருஷ்ண பக்தி -முன் வாசல்-பார்த்த சாரதி அனுபவம் -ஸ்வாமி தானே அவனும் /
எம்மா வீடு -சிற்றம் சிறுகாலை -இந்த பாசுரம் -மூன்றும் ஏக அபிப்ராயம் -ப்ராப்ய நிஷ்கர்ஷம்/எங்கும் உளன் கண்ணன் –சர்வ வியாபியை கையில் ஏக தேசத்தில் காட்டித் தரிலும் -ப்ரஹ்மம் –காட்டித் தரும் வைபவம் உமக்கு அன்றோ –மலை –போல நீர் -நெல்லிக்கனி போலே அன்றோ கண்ணன்  -அதனால் மெய்யில் பிறங்கிய  சீர் –ஞானம் த்ராசன பிராப்தி -பக்தி தானே காட்டி தரும் -கிருஷ்ண பக்தி தானே ஸ்வாமி -/ஸ்வரூப குணங்கள் -மகரிஷிகள் ஆழ்வார்கள் -நம் போல்வார் மெய்யில் பிறங்கிய சீர் -ரூப குணங்கள் -ஸ்வரூப குணங்கள் விட ரூப குணங்கள் பெரியதே பக்த பக்தர்களுக்கு தானே உயர்ந்தவற்றை அருளுவீர் /இவருடைய அவிததத விஷயாந்தரம் இருக்கும் படி -/உந்தன் ரூப அனுபவமே -கண்ணன் ரூப அனுபவம் வேண்டாம் -நம்பியை நான் கண்ட பின் என்னை முனிவது என் -என் நெஞ்சினால் நோக்கி கண்ணீர் -ப்ராப்ய த்வரையில் தலை மகள் -இருள் தரும் ஞாலத்தில் இருள் அன்ன மா மேனி –அம்போஜ விகாசாய –ராமானுஜ திவாகரர் -அச்யுத பானு -ஆயர் குளத்தில் தோன்றிய அணி விளக்கு அன்றோ அவனும் -மெய்யில் பிறங்கிய சீர் -ஸ்வரூபத்தால் பிரகாசம் சொன்னாலும் -ரூபத்தால் -ஒப்புமை என்றபடி /ஸ்வயம் பிரகாசம் -மாலாகாரர் போல்வாருக்கு காட்ட வேண்டிற்றே -இங்கு அப்படி இல்லையே -சம்சாரப்பற்று பயந்து விட்டேன் அல்லேன் -பரமபதம் வைலஷ்ணண்யம் அறிந்து செல்ல பிரயாசப்பட்டேன் அல்லேன் -உனது மெய்யில் பிறங்கிய சீர் ஒன்றிலே ஒன்றினேன்
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை -கீழ்ப் பாட்டில் தத்வ ஹித புருஷார்த்த தத்  யாதாம்ய ஞானத்தை சுவ்யக்தமாம்படி
உபதேசித்தார் என்று இவர் இனியராய் இருந்தவாறே -அத்தைக் கண்டு உபதேச மாத்ரத்துக்கே  இப்படி
இனியராய்க் கொண்டு ரசித்து இருந்தீர் –பகவத் விஷயத்தை சாஷாத் கரிக்கும்படி பண்ணிக்
கொடுத்தோம் ஆகில் எப்படி ரசித்து இனியராக கடவீரோ என்று எம்பெருமானாருக்கு கருத்தாக
நினைத்து -தேவரீர்- சகல ஜன மநோ ஹாரி -திவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணிக் கொண்டு  போந்த-கிருஷ்ணனை கரதலாமலகமாக- காட்டித் தரிலும் தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரகத்திலே பிரகாசியா நின்றுள்ள
கல்யாண குணங்களை ஒழிய அடியேன் வேறு ஒரு விஷயத்தை வேண்டேன் என்ன -இவன் இப்படி
மூர்க்கு பேசலாமோ என்று சீறிப்பாறு செய்து அடியேனை சம்சாரமாகிற நரகத்தில் விழப் பண்ணினாலும் –
நம்மையே பற்றி இருக்கிறான் இறே என்று -கிருபையாலே -நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்திலே
கொண்டு போய் சேர்த்திடிலும்-வர்ஷூ கவலாஹம் போலே பரம உதாரரான எம்பெருமானாரே –தேவரீர் உடைய
திவ்ய மங்கள விக்ரகத்தை அனுபவிக்கைக்கு உடலான நிர்ஹேதுக பரம கிருபையாலே தேவரீர்
செய்து அருளின விபூதி த்வயத்திலும் வைத்துக் கொண்டு -ஏதேனும் ஓர் இடத்தில் கால் பாவி நின்று
தரிப்பன் – இல்லை யாகில் தரிக்க மாட்டேன் என்று ஸ்வ ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து அருளுகிறார் –

எம் செழும் கொண்டல் -ஒரு பாட்டம் மழை குறைச்சலாய் இருந்தால் முகம் வாடிக் கிடக்கும்-பயிர் போலே -வித்யா நயா சில்பனை புணம் – என்கிறபடியே -செருப்புக்குத்த க்கற்றனவோபாதியான-சாச்த்ரங்களையே அப்யசித்துக் கொண்டு போந்து -சாவித்யா யாவிமுக்யதே -என்கிற தத்வ-ஞானத்தை பிராபிக்க பெறாதே  -வாடினேன் வாடி -என்கிறபடியே உஜ்ஜீவன ஹேது அன்றிக்கே

முகம் வாடி கிடக்கிற எங்களுக்கு ஒரு பாட்டம் மழை பொழிந்தால் போலே விலஷணமான தம் திருவடிகளில் சம்பந்தத்தை உண்டாக்கி -ஞான உபதேசம் பண்ணி ஜீவனத்தைக் கொடுத்து –சத்தையை உண்டாக்கினவர் ஆகையாலே -செழும் கொண்டல் -என்கிறார் -தூமஜ்யோ திச்சலில மருதாம்
சந்நிபாதத்தாலே உண்டானதாய் ப்ராக்ருதமாய் அபேஷித்தவர்களுக்கு வர்ஷியாதே   -அபேஷியாத
சமுத்ராதிகளிலே வர்ஷித்து கொண்டு போருகிற மேகம் போல் அன்றிக்கே -தத்வ யாதாம்ய ஞானங்களிலே
தலைவராய் -அபேஷா நிரபேஷமாக –லோகத்தாரை எல்லாம் உஜ்ஜீவிப்பிக்க கடவோம் என்று-தீஷித்து கொண்டு -அவதரித்த கல்யாண குண வைலஷண்யத்தை உடையவர் ஆகையாலே-செழும் கொண்டல் -என்கிறார் -இராமானுசா -இப்படிப் பட்ட எம்பெருமானாரே –கையில் கனி யன்ன கண்ணன் காட்டித் தரிலும் -பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்கிறபடியே
ஆஸ்ரித பாரதந்த்ர்யனாய்க் கொண்டு -தூத்ய சாரத்யங்கள் பண்ணுகையும் – கண்ணிக் குரும் கையிற்றால்
கட்டுண்டான் காணேடி -என்கிறபடியே -ஒரு அறுதல் கயிற்றால் கட்டுண்டும் அடி உண்டும் இருக்கையும் –
கொற்றக் குடையாக ஏத்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின்  -என்கிறபடியே
கோவர்த்தன உத்தாராணம் பண்ணுகையும் -திண்ணன் வீடு முதல் முழுதுமாய் -என்கிறபடியே
சர்வ ஸ்மாத் பரனுமாகிய ஆச்சர்ய குண சே ஷ்டிதங்களை உடையனான கிருஷ்ணனை உள்ளம் கை
நெல்லிக் கனி போல் சாஷாத் கரிப்பித்து தரிலும்உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –
பதிம் விச்வச்ய -என்றும் -தேவாநாம் தானவா நாஞ்ச சாமான்ய மதிதைவதம் –என்றும் -உலகுக்கு ஓர்
முந்தைத் தாய் தந்தை –  என்றும் சொல்லுகிறபடியே எல்லாருக்கும் பொதுவானவன் விஷயத்தில்
சக்தன் ஆனேனோ –அனந்யார்ஹ நிஷ்டர்க்கே ஸ்வாமியான தேவரீர் பக்கலில் அன்றோ
நான் சக்தன் ஆனது -எப்போதும் பிரீதி விஷயமான  வஸ்துவிலே அன்றோ ருசி பிறப்பது  –
ஆகையாலே என்னுடைய ப்ரீதி விஷயமான தேவரீர் திவ்ய மங்கள விக்கிரகத்தில் பிரகாசிக்கிற
சௌந்தர்யா லாவண்யாதி குணங்களை ஒழிய வேறுஒன்றை நான் அபே  ஷியேன் – அத்தை
பிரசங்கிப்பதும் செய்யேன்பிறங்குதல்-பிரகாசித்தல் -அது என் -சர்வ சமாஸ்ரயநீயனான சர்வேஸ்வரன்
ப்ராப்யன் என்றும் சேதனரான நீர் ப்ராப்தா என்றும் -ப்ராப்யச்ய ப்ரம்மணோ  ரூபம் -இத்யாதி சாஸ்த்ரன்களிலே
சொல்லா நிற்க செய்தே -நீர் இங்கனே சொல்லக் கூடுமோ என்னில் -1–ப்ராப்யனான சர்வேஸ்வரன் நித்யனாய் –
எனக்கு அந்தராத்மாவாய் இருக்கச் செய்தேயும் -அநாதி காலம் பிடித்து இவ்வளவும் நான் சம்சாரத்தின் உடைய
கரை கண்டு கொண்டேன் அல்லேன் -நான் இன்று தேவரீரை லபித்த பின்பு கரை மரம் சேரப் பெற்றேன் –

ஆகையால் தேவரீரே எனக்கு பிராப்யம் என்று கருத்து – அன்றிக்கே–2- கிருஷ்ணன் தூத்ய சாரத்யங்களை பண்ணும் தசையில் -தன்னுடைய விஸ்வ ரூபத்தை-அனுகூல பிரதி கூல விபாகம் அற-தர்சிப்பித்த அளவிலும் –திருத் தேர் தட்டில் இருந்து –தத்வ ஹித-புருஷார்த்தங்களை உபதேசித்த அளவிலும் -ஒருவருக்கு ஆகிலும் முமுஷை ஜனித்ததில்லை –தேவரீரை சேவித்த மாத்ரத்திலே ஊமைக்கு  முமுஷை பிறந்தவாறே தேவரீர் உடைய விக்ரக வைலஷணயத்தை-சாஷாத்கரிப்பித்து அருளி அவன் தனக்கு வீட்டை அப்போதே கொடுத்து அருளிற்று என்னும்-இச் செய்தியை ஆழ்வான் கேட்டு அருளி -இனி நமக்கு பேறு கிடையாது ஆகாதே என்று தம்மை வெறுத்துக்-கொண்டார் என்று பிரசித்தம் இறே –இப்புடைகளாலே பகவத் விஷயத்துக்கும் தேவரீருக்கும் நெடு வாசி உண்டாகையாலே-இப்படி அத்யவசித்தேன் என்றார் என்னவுமாம் -அங்கனும் அன்றிக்கே –3–சுலபனான சர்வேஸ்வரனை காட்டித்-தரிலும் –அவன் தண்டதரன் ஆகையாலே -என் தண்மையை பார்த்து விபரீதனாய் இருப்பான் –ஆகையால்-தேவரீர் அபிமானமே உத்தாரகம் என்று அத்யவசித்து இருந்தேன் –

நாராயணோ பிவிகிர் திம் குரோ பிரச்யுதஸ் யதுர்புத்தே கமலம் ஜலாத பேதம் சோஷயதிரவிர்  ந போஷயதி –
என்னக் கடவது இறே -அன்றிக்கே –4–பிராப்யன் அவனே யாகிலும் அவனை அனுபவிக்கும் போது –
பகவத் வந்தனம் ச்வாத்யம் குரு வந்தன பூர்வகம் -ஷீரம் சர்கரயா  யுக்தம் ஸ்வததே ஹி விசேஷத -என்கையாலே ரசிகரான நமக்கு ஆச்சார்ய விக்ரகத்தை முன்னிட்டு கொண்டே இறே இருக்க அடுப்பது –
அப்படியே அடியேனும் தேவரீர் உடைய விஷயீகாரத்தாலே இந்த வாசி அறிந்தேன் -(இப்படி நான்கு வாசிகள் உண்டே-அப்யமக வாதம் -நான்காவது -ஸ்வாமி பேச்சாக கொண்டு -சக்கரையும் வேணுமே பாலை அனுபவிக்க -குரு வந்தனம் முன்னிட்டு பகவத் அனுபவம்  )ஆகையால்
தேவரீர் திவ்ய விக்ரகத்தோடே  கூடி அனுபவிக்குமது ஒழிய -தனியே அவனை அனுபவிக்க இசைந்தேன்-அல்லேன் என்கிறார் என்னவுமாம் -இவன் இப்படி ஸ்வரூப அனுரூபமாக ஸ்வா தந்த்ர்யத்தை ஏறிட்டு கொண்டான்-என்று தேவரீர் சீறி அருளி என்னை -நிரயத் தொய்யில் கிடக்கிலும் -விடியா வென் நரகான   சம்சார
கர்த்தமத்திலே அழுந்திக் கிடக்கும் படி பண்ணவுமாம்தொய்யில் -சேறுநிரயம் என்றது -துக்க கரத்வத்தாலே-சம்சாரத்தை சொல்லுகிறது -அன்றிக்கே நம்முடையவன் அன்றோ என்று தேவரீர் கிருபை செய்து அருளி என்னை
சோதி விண் சேர்க்கிலும்  -சுத்த சத்வ மயமாகையாலே நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்தில் கொண்டு
போய் சேர்க்க்கவுமாம் –நிரயத் தொய்யில் கிடக்கில் என் -சோதி விண் சேரில் என் –என்று பாடமான போது
சம்சாரத்தில் இருக்கில் என் -பரம பதத்தில் போய் சேரில் என் -அவை இரண்டும் கொண்டு எனக்கு
கார்யம் இல்லை என்று பொருளாக கடவது –நிரயத் தொய்யில் இத்யாதிகளுக்கு –நான் சம்சார கர்த்தமத்தில்
மூழ்கிக் கிடக்க்கவுமாம் -சுத்த சத்வ மயம் ஆகையாலே நிரவதிக தேஜோ ரூபமான பரம பதத்தை

ப்ராபிக்க்கவுமாம் என்றும் பொருளாகவுமாம் –இவ் அருள் நீ செய்யில் தரிப்பன் –தேவரீர் உடைய திவ்ய விக்ரக குணங்களான சௌந்தர்யாதிகளை -முற்றூட்டாக அனுபவித்துக் கொண்டு இருக்கைக்கு உடலான நிர்கேதுக கிருபையை பொகட்டு என-செய்தனில் தரிப்பேன் -இவ் அனுபவத்தை தேவரீர் தரில் சம்சாரத்திலும் தரிப்பன் -இல்லையாகில் பரம பதத்திலும் தரியேன் -என்கிறார் காணும் -தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே -களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களை கண் மற்று இலேன் – என்றும் -நதேஹம் ந பிராணான் ந சக சுகமே சேஷாபி லஷிதம் ந சாத்மா நான்யத்கி மபிதவ சேஷத் வபி பவாத் –பஹிர்ப் பூதன் நாத ஷனமபி சஹேயாது சததா வினர்சந்தத் சத்யம் மதுமதன விஜ்ஞாப நமிதம் -என்றும் –நரகும் ச்வர்க்கவும் நாண் மலராள்கோனைப் பிரிவும் பிரியாமையும் -என்று பிரதம பர்வத்தில் ஆழ்வாரும்    ஆளவந்தாரும் அருளாள பெருமாள் எம்பெருமானாரும் அனுசந்தித்தாப் போலே அமுதனாரும் சரம பர்வத்தில் அனுசந்தித்தார் ஆய்த்து –

————————————————————————–
அமுது விருந்து –
 
அவதாரிகை
உபதேசித்த ஞானமே இப்படி ரசிக்கும்படி இருப்பின் -நேரே கண்ணனைக்
காட்டிக் கொடுத்து விட்டால் எங்கனம் நீர் ரசிப்பீரோ -என்று
எம்பெருமானாருக்கு கருத்தாகக் கொண்டு -கண்ணனை நன்றாக காட்டித்
தந்தாலும் -தேவரீர் திரு மேனியில் விளங்கும் குணங்களை
ஒழிய நான் வேண்டேன் -இந்நிலையினுக்கு ஏற்றவாறு அருள் புரிந்தால் –
சம்சாரத்திலும் பரம பதத்திலும் கால் பாவி நிற்பன் –
இன்றேல் தரித்து இருக்க வல்லேன் அல்லேன் -என்கிறார் .
பத உரை –

எம் செழும் கொண்டல் -எங்களுக்கு தன் வன்மையை வெளிப்படுத்தி

செழுமை வாய்ந்த மேகம் போல் -விரும்புமவற்றை பொழியு மவரான
இராமானுச -எம்பெருமானாரே
கண்ணனை -எளிமை வாய்ந்த எம்பெருமானை
கையில் கனி என்ன -உள்ளங்கை யில் உள்ள நெல்லிக் கனி போலே
காட்டித் தரிலும் -நேரே காணுமாறு செய்து கொடுத்தாலும்
உன் தன் -தேவரீருடைய
மெய்யில் -திரு மேனியில்
பிறங்கிய -விளங்கிய
சீர் அன்றி -குணங்களைத் தவிர
யான் வேண்டிலேன் -நான் விரும்ப மாட்டேன்
நிரயத் தொய்யில் -நரகச் சேற்றிலே
கிடக்கிலும் -கிடந்தாலும்
சோதி -ஒளி மயமான
விண் -பரம பதத்தில்
சேரிலும் -சேர்ந்தாலும்
இ அருள் -இந்த மெய்யில் பிறங்கிய சீரை அனுபவிப்பதற்கு உறுப்பான அருளை
நீ செய்யில் -தேவரீர் செய்து அருளினால்
தரிப்பன் -தரித்து இருப்பேன் –
வியாக்யானம் –
கையில் —-காட்டித் தரிலும் –
கண்ணன் -கிருஷ்ணன்
எல்லாருடைய நெஞ்சையும் இழுக்கிறவன்
அத்தகைய பேர் அழகனை கையில் கொடுத்து அனுபவிக்க சொன்னாலும் வேண்டேன் -என்கிறார் –
கண்ணன் -கருப்பன்
இருள் அன்ன மா மேனி எனக்கு வேண்டாம் –
உத்யத்தி நேசனி பமுல்லச தூர்த்த்வ புண்டரம் ரூபம் தவாஸ்து எதி ராஜ த்ருசோர் மமாக்ரே -என்று
உதிக்கும் சூர்யனை ஒத்ததும் திரு மண் காப்பு துலங்குவதுமான தேவரீர் திரு மேனி
எதிராஜரே -என் கண் எதிரே தோன்றுக -என்றபடி உதிக்கும் கதிரவனை ஒத்த
திருமேனியையே நான் அனுபவிக்க வேண்டும் -என்கிறார் –
திரு மகள் கேள்வனாய் பெருமை உடையவனாய் இருப்பினும் கையில் கனி
என்ன காட்டித் தருவதற்கு பாங்காய் -கையாளாய்-எளிமைப்பட்டு
இருத்தல் தோன்றக் –கண்ணன் -என்கிறார் –
கண்ணன் -எளிமையில் கையாளானவன்-
திரு விருத்தம் -63 -ஆம் பாசுரத்தில் கண்ணன் திருமால் -என்பதற்கு
ஸ்ரீய பதி யாகையால்  ஆஸ்ரிதருக்கு கையாள் ஆனவன் -என்று ஆசார்யர்கள் வியாக்யானம்
செய்து இருப்பது காண்க .
எங்கும் உளன் கண்ணன்
கண்ட கண்ட எல்லா இடமும் தனக்கு இருப்பிடமாக கொண்டவன் கண்ணன்
எங்கும் உள்ள வ்யாபகனான கண்ணனை கையில் கனியைப் போலே உள்ளங்கையில்
அடக்கி அனுபவிக்கக் கொடுத்தாலும் நான் வேண்டேன் -என்கிறார் .
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் –
உன் தன் மெய் -தேவரீருடைய அசாதாரணமான திரு மேனி -அப்ராக்ருத திருமேனி -என்றபடி –
அதனில் பிறங்கிய சீர்
பிறங்குதல் –பிரகாசித்தல்
சீர் -அழகு
மென்மை முதலிய குணங்கள் –
கண்ணன் தன் ஸௌந்தர்யத்தை அக்ரூரர் மாலாகாரர் முதலியவர்களுக்கு வெளிப்படுத்தியது போலே
வெளிப்படுத்த வேண்டாம்தாமே அவை பிரகாசிக்கின்றன -இதனால் சிஷ்யன் ஆசார்யனுடைய
திருமேனியையே சுபாஸ்ரயமாக கொண்டு பேணி ஆதரித்தல் வேண்டும் -என்னும்
நுண் பொருளை அமுதனார் உணர்த்தினார் ஆயிற்று –
நிரய —செய்யில் தரிப்பன் –
நிரயம் -நரகம் -சம்சாரத்தை நரகம் என்கிறார்
நிரயோய ஸ்த்வயா விநா-ராம உன்னை விட்டுப் பிரிந்து இருப்பதே நரகம் –
என்று சீதா பிராட்டி கூறினது போலே பகவானுடைய அனுபவத்தை விட்டுப்
பிரிந்து இருக்கும் இடம் ஆதலின் சம்சாரம் நரகமாக சொல்லப்படுகிறது –
விடியா வெம் நரகம் -திருவாய் மொழி – 2-7 7- என்று நம் ஆழ்வாரும் சம்சாரத்தை நரகமாக
திருவாய் – மலர்ந்து அருளினார்
தொய்யில் -சேறு
தொய்யில் கிடக்கிலும் -தொய்யிலின் கண் கிடக்கிலும்
வண் சேற்று அள்ளல் பொய் நிலம் -திரு விருத்தம் -100 –
என்றபடி சம்சார நரக சேற்றிலே தப்ப ஒண்ணாதபடி அழுந்திக் கிடந்தாலும் -என்றபடி –
தேவரீர் திரு மேனியின் குணங்களை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமாயின்
சம்சார சேற்றிலும் வருந்திக் கொண்டு இராது கால் பொருந்தி தரித்து இருப்பேன் -என்பது கருத்து –
சோதி விண் சேரி லும் –
பிரகிருதி மண்டலம் போலே சத்த்வம் ரஜஸ் தமஸ் என்னும் முக்குணங்கள் வாய்ந்ததாய் அல்லாமல்
சுத்த சத்வமாய் -ஒளி மயமாய் -உள்ளமை பற்றி -பரம ஆகாசம் எனப்படும் பரம பதத்தை
சோதி விண் -என்கிறார் . அங்குச் சென்றாலும்  தேவரீர் திரு மேனிக் குணங்களை அனுபவிக்கும் வாய்ப்பினை
எனக்கு கிடைக்கச் செய்தால் அள்ளல் இல்லாத இன்ப வெள்ளத்தில் அங்குத் திளைக்காது –
தேவரீர் திரு மேனிக் குணங்களையே அனுபவித்து கால் பாவித் தரித்து இருப்பேன் -என்பது கருத்து –
நிரயத் தொய்யில் கிடக்கிலென் சோதி விண் சேரிலென் -என்றும் ஒரு பாடம் உண்டு
.வானுயர் இன்பமே எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -திருவாய் மொழி -என்னும் நம் ஆழ்வார்
ஸ்ரீ சூக்தி யடி ஒற்றியது இந்தப்பாடம் –
சம்சாரத்திலேயே கிடந்தால் என்ன
பரம பதத்திற்குப் போனால் என்ன –
எனக்கு இவற்றால் ஒரு தீமையோ அன்றி நன்மையோ இல்லை –
இரண்டும் ஒரே மாதிரிதான் –
தொய்யில் என்று சம்சாரத்தை விடுகிலேன்
சோதி விண் என்று பரமபத சீர்மை கண்டு விரும்பப் பற்ற கிலேன் –
எம்பெருமானார் திரு மேனிக் குணங்களை அனுபவிக்க பெறின் சம்சாரத்திலும் தரித்து இருப்பேன் –
அவ்  அனுபவம் பெறாவிடில் பரம பதத்திலும் தரித்து இருக்க மாட்டேன் -என்றது ஆயிற்று –
எம் செழும் கொண்டல் –
இதனால் எம்பெருமானாருடைய வண்மையை அனுசந்தித்தார் ஆயிற்று .
அவரது வண்மை இன்றித் தாம் உய்வதற்கு வேறு வழி இல்லாமையினாலே
அதனையே அமுதனார் மீண்டும் மீண்டும் அனுசந்திக்கிறார் .
இவ்வருள் செய்வதற்கு – தன்பால் தகுதி எதுவும் இல்லை –
தம் வண்மை கொண்டே இவ்வருள் புரிதல் வேண்டும் -என்பது கருத்து –
செழும் கொண்டல் –
ஏனைய கொண்டல்கள் தாம் கொண்ட நீரைப் பொழிந்த பின்னர் செழுமை நீங்கி
வெளுத்துப் போம் -எம்பெருமானாரோ எவ்வளவு பொழிந்தாலும்  கொண்ட கருணை
குறை வுறாமையால் செழுமை மாறாது பண்டைய வண்ணமே நிற்றலால்
செழும் கொண்டல்போன்றவராகக் கூறப் படுகிறார் .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

ஆளவந்தார்  இடம் கீதை ஞானம் கொடுத்து ருசி பிறப்பித்து அரங்கனை காட்டி தந்தால் போல-உபதேச ஞான லாப மாதரம் ரசிகிறபடி கண்டால் ,பகவத் விஷயத்தை சாஷாத் கரிதீராகில் உமக்கு-எப்படி ரசிகிறதோ என்று எம்பெருமானாருக்கு கருத்தாக கொண்டு பகவத் விஷயத்தை விசதமாக காட்டி தரிலும்தேவரீர் திரு மேனியில் பிரகாசிக்கிற குணங்கள் ஒழிய நான் வேண்டேன் /

/இதுக்கு ஈடான பிரசாதத்தை செய்து அருளில் இரண்டு விபூதி யிலும் கால் பாவுவன் அல்லது தரியேன் என்கிறார்/..எம்மா வீடு திறமும் செப்பம்-பிரசங்கிக கூட வேண்டாம் /

/சிற்றம்  சிறு காலே போல இந்த பாசுரம்–பறை பேதி வாத்தியம் கொண்டு வைத்தான்-பொருள் கேளாய்-பெற்று கொள்பவர் சொல்வதை கொடுக்கிறவன் கேட்க வேண்டும்-இன்று பறை கொள்வான் அன்று காண்-உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்றாள் ஆண்டாள் /

// எம்மா வீட்டு திறமும் செப்பம்.. அம்மா அடியேன் வேண்டுவது ஈதே/உன் செம்மா பாதம் தலையில் வைக்க வேண்டும் -ஆழ்வார்/சொரூபம் காட்டி தர உம் ரூபமே  போதும்/ரூப குணமே சிறந்தது -அர்ச்சைக்கே ஏற்றம்–பக்தர் நெஞ்சில் ரூபத்துடன் வ்யாபிகிறான்- மெய்யில் பிறங்கிய சீர் //கிடக்கில் என் சேரில் என் என்ற பாட பேதம்/லஷ்மணன் -முதல் படி –கட்டில் வைத்தால் என் காட்டில் வைத்தால் என்-பரதன் நிலை போல/சீதை போல-நரகம் சொர்க்கம் எது கேட்டு விளக்கினாளே–சார்ந்து இருந்தால் காடே சொர்க்கம் பிரிந்தால் நாடே நரகம்/

அது போல  ஸ்வாமி உம் சீரை அனுபவித்து கொண்டால் நரகமும்-சொர்க்கம் தான்//இல்லை என்றால் சோதி விண் கூட நரகம் போல் தான் /பிராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார்-இத்தால் –செழுமை மாறாத கொண்டல்/கருணை குறையாத -விலஷணமான மேகம்-கண்ணனை காட்டி கொடுத்தாரே கொண்டல்–சீரை காட்டியது செழும் கொண்டல்/போய் போய் வர்ஷிப்பது போல ஸ்வாமியும் /நான் இருந்த இடத்தில் வந்து காட்டி கொடுத்தீரே/அமலன் ஆதி  அடியார்க்கு ஆட் படித்தி என்று காட்டி கொடுத்த பிரான் போல எங்களுக்கு பிரகாசிப்பித்தது அருளின உபகாரரரே/எம் செழும் கொண்டல்-ஆஸ்ரித சுலபன்-முந்தானையில் கொள்ளலாம் படி மாணிக்க கல்/

ஸ்ரீயபதியாய்-காட்டி தரிலும்-எங்கும் உளன் கண்- அவனே சர்வ வியாபகன்-அதை கூட காட்டி தருவீரகில்-கூட-பிரமம் அவன் -அவனையே காட்டி தந்தால்-சீரே பெரிசு-என்பதால்/சாஷாத் கரிப்பித்து தரிலும் -அடைய அறிய பக்தி -ஸ்வாமி தான் பக்தி/

கீழ் பாசுரத்தில் நரசிம்ஹர் கீர்த்தி-பின் வாசல் தெள்ளி சிங்கர்-இங்கு கிருஷ்ண பக்தி -முன் வாசல்/தேவரீர் உடைய திவ்ய விக்கிரகத்தில் பிரகாசிக்கிற சௌந்தர்யாதி குணங்கள்–ரிஷிகள் போல்வார் சொரூப குணங்கள்/பகவத் பக்தர்களுக்கு உசந்த குணம் காட்டுவான்-விக்ரக குணம்/ ஆழ்வான் போல்வாருக்கு சொரூப குணம்/

மற்று ஒண்டும் வேண்டேன்/ உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் வேண்டேன்-தேவு மற்றுஅறியேன்//ரூபம் கண்ணன் விட ஸ்வாமி படி எடுத்து காட்டும் படி அல்லவே//அன்னைமீர்காள் என்னை முனிவது திரு குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்/என் நெஞ்சினால் நோக்கி -ஆழ்வார் கேட்டது போல /கண்ணன் கருப்பு கண்ணன் என்னும்  கரும் தெய்வம்/இவர் ராமானுஜ திவாகரன்/ஆயர் குலத்திளினில் தோன்றும் அணி விளக்கு அச்சுத  பானு-

மெய்யில் பிறங்கிய சீர் திரு மேனி கருப்பு தானே -என்றார்/இதனால் மெய்யில் பிறங்கிய சீர் -ரூப/அவன் இருள் அன்ன மா மேனி-/சீர் பிரகாசிக்காது ஆங்கு/மாலா காரருக்கும் அக்ரூரர் காட்ட வேண்டி இருந்ததே/இங்கு சங்கை இன்றி தானே பிரகாசிக்கும் சீர்/

வன் சேற்று அள்ளல்- நிரயத் தொய்யில்-விடியா வென் நரகம்- பாபம் கூடி கொண்டே இருக்கும் இங்கு–தேஜோ ரூபமானபரம பதத்தை பிராபிக்க்கவுமாம்-தேவரீர் உடைய திரு மேனி குணத்தையே அனுபவிக்க-இதற்கும் தேவரீர் தான் பிராசதம் செய்து அருள வேண்டும்-/பிறங்குதல்   -பிரகாசம் //இந்த அனுபவத்தை தேவரீர் தரில் சம்சாரத்திலும் தரிப்பேன்/இது இல்லையாகில் பரம பதத்திலும் தரியேன் என்கை-பொழிந்ததால் செழும் கொண்டல்/மனசு பயிர்-முகம் வாடி ஆத்மா ஞானம் இன்றி /முக்தி கொடுக்கும் ஞானம் இன்றி-வாடினேன் வாடி என்று இருந்து/ஆத்மாவை வெய்யில் வைத்த நமக்கு ஒரு பாட்டம்  மழை பெய்து-சம்பந்த ஞானம் உணர்த்தி ஞான ஜீவனம் கொடுத்து சத்தை உண்டாக்கி-கூடினேன் கூடி குளிர்ந்து ஆத்மாவை நிழலில்வைத்து

/தன் திருவடிகளில் சேர்த்து கொண்டு –செழும் கொண்டல்-அபேஷியையும் உருவாக்கி பொழிகிறார்/பத்துடை எளியவன் தூது போனது/கண் நுண் சிறு தாம்பால் கட்டு உண்டு /அடி உண்டு -எள்கு நிலை -அஞ்சு நோக்கும்/கொற்ற குடையாக கோவர்த்தனம் உதரணம் பண்ணியும்-குறை ஒன்றும் இல்லா கோவிந்தா-ஆகிஞ்சன்யம் -கோவிந்தா பட்டாபிஷேகம் பண்ணி கொண்டாயே-அகம் பாந்தவ ஜாதி சௌலப்ய சூசுகம்-கண்ணன் என்பதற்கு இது வரை-(வாயு மா மகன் -அகங்கார கர்ப்பம் / தூத்ய சாரத்ய–கோவர்த்தனம் -உதாரணம் -அது பரத்வம் -உங்களில் ஒருவன் என்றானே அந்த எளிமை -அஹம் வோ பாந்தவ ஜாத -என்பதை –கோவிந்தா –28-கறவைகள் -அர்த்தம் போலே -கோவிந்த பட்டாபிஷேகம் -கேட்டதுக்கு பதில் -உங்களில் ஒருவன் –கர்மாதி யோகம் கேட்கலாமோ -)திண்ணன் வீடு முதலாய் எல்லாம் தருபவன் -பரனுமாய் -தரிலும்- உம்மை தொகைக்கு-பெருமை/உன் தன் -ஸ்வாமி திருமேனி காட்டி/அவன் அனைவருக்கும் பொது-பதிம் விச்வச்ய-உலகுக்கோர் முந்தை தாய் தந்தை/-அதில் இல்லை/அனந்யார்கம்-தேவரீர் -பக்கலில்-எப்பொழுதும் ப்ரீதி உம் இடம் தானே /அத்தை பிரசங்கிபதும்-எம்மா வீட்டு திறமும் – செப்பம்-ஆழ்வார் -செய்யேன்-பிராப்யம் பெருமாள் தானே- உன் தன் பிறங்கிய சீர் சொல்லலாமோ-அநாதி கால சம்சாரத்தில் உழன்று இருக்கிறேன்-என் உடன் சேர்ந்து அவனும் கிடக்கிறான்/- கொண்டு கண்டேன் அல்லேன்- எங்கு இருக்கிறோம் தெரியவில்லை

/ ஸ்வாமி அவதரித்த அன்றே கரை  மரம் சேர பெற்றேன்- தேவரீரே பிராப்யம் என்கிறார் அமுதனார் /விஸ்வரூபம் காட்டி- அநு கூலருக்கும் பிரதி கூலருக்கும் கீதை உபதேசம் பண்ணியும்-ஒருவருக்கும் ஆகிலும் முமுஷை ஜனித்தது இல்லை–அர்ஜுனன் போன்றவருக்கும் கூட தேவரீரை சேவித்தவாறே-ஊமைக்கு தெரிந்து விக்ரகதோடே காட்டி வீட்டையும் கேட்காமல் கொடுத்து அருளினீர்ஆழ்வான் கேட்டு அருளி பேறு இழந்தோம் என்றாரே/நெடு வாசி//பெருமான் என் தண்மை பார்த்து தண்டிப்பான் என்று பயம்/ நாராயணன் -சோஷயதி-அலர்த்த கடவ ஆதித்யனும் உலர்துவான் தண்ணீரில் இல்லாத தாமரையை//உன் சம்பந்தத்தால் தான் கிட்டும்/நீர் சொல்கிற படியே வந்தாலும்-குழந்தைக்கு பால் சக்கரை போல நீர் -ஆச்சார்யர் வேண்டும்–இது அவர் படி பேசினாலும் -சம்பந்தம் வேண்டும் என்று காட்டுகிறார்/ஆள வந்தார் சேவை கிடைக்க வில்லை என்று அரங்கனை சேவிக்காமல் போனீரே-உம் படி தான் நடந்தேன்/என்கிறார் அமுதனார்– ஸ்வாதந்த்ரம் -சீறி அருளி சம்சாரத்தில் அழுத்தி  வைத்தாலும்/

வான் உளர் இன்பம் எய்தில் என் மற்றை நரகம் எய்தில் என்-நிரயம்-சீதா வாக்கியம்–நரகம்-சம்சாரம்/கிருபை செய்து அருளி சோதி விண்  சேரிலும்-சுத்த சத்வ மயம்-இவ் அருள் நீ செய்யில் தரிப்பன்/ சீரை முற்றூட்டாக அனுபவிக்க கொடுத்தால்-தரியேன்இனி உன் சரணம் தந்து சன்மம் கழியாயே/களைவாய் துன்பம் ..களை கண் மற்று இலேன்–ந தேகம் ந பிராணன் சேஷ அபிலேஷகம் நாசா ஆத்மாநாம் -ஆளவந்தார்-சேஷத்வம் அடிமை தனம் இருந்தால் வேண்டும்/நரகமும்  சுவர்க்கமும்  மலர் கோன் பிரிவதும் பிரியாததும் –அருளாள பெருமாள் எம்பெருமானார் -பிரதம பர்வம் அருளியது போல அமுதனார்/நிரயம்-நரகம் /வென் நரகம்-சம்சாரம்/இங்கு கிடக்கிலும் -அதையே சொல்வேன்-உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான்/சோதி விண் செரிலும் உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான்/எதை செய்தாலும் இதே -மற்றை காட்டி மயக்கேல்/இதை கொண்டே தரிப்பேன்-கால் பாவுவேன் எங்கும் –இதுவே புருஷார்த்தம்-

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்    திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: