அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–102-நையும் மனமுன் குணங்களை வுன்னி -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –
நூற்று இரண்டாம் பாட்டு -அவதாரிகை –
இப்படி பாவனத்வ அனுசந்தானமும் அசஹ்யமாம்படி -பரம போக்யபூதரான -எம்பெருமானார்
விஷயத்தில் -தம்முடைய அந்தக் கரணத்தொடு-பாஹ்ய கரணங்களோடு  -வாசி யற-
அதி மாத்திர ப்ரவண மாய்ச் செல்லுகிற படியைச் சொல்லி –
இந்த பூமிப் பரப்பு எல்லாம் கிடக்கச் செய்தே தேவரீர் ஔ தார்யம் என் பக்கலிலே
வர்த்திக்கைக்கு ஹேது என் -என்கிறார் –
நையும் மனமுன் குணங்களை வுன்னி என் நா விருந்தெம்
ஐயன் இராமானுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காணக் கடல் புடை சூழ்
வையமிதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே – – 102-
வியாக்யானம் –
மனச்சானது தேவரீருடைய குணங்களை அனுசந்தித்து தன்னிலே கிடந்தது நையா நின்றது –
என்னுடைய நா வானது ஒருபடிப்பட இருந்து தேவரீருடைய நிருபாதிக பந்துத்வத்தையும் -திரு நாமத்தையும் சொல்லிக் கூப்பிடா நின்றது -இப்படி இருக்க உரிய கரணங்களை
அநாதி காலம் அப்ராப்த விஷயங்களுக்கு சேஷமாக்கின மகா பாபியான என்னுடைய
கையும் எப்போதும் தேவரீர் விஷயமாக அஞ்சலி பந்தத்தை பண்ணா நின்றது –
கண்ணானது சர்வ காலத்திலும் தேவரீரை காண்கையாலே மநோ ரதியாய் நின்றது –
கடலாலே சுற்றும் சூழப் பட்டு இருந்துள்ள இந்த பூமியிலே இப் பரப்பில்
உள்ளவர்கள் எல்லாம் கிடக்க -தேவரீருடைய ஔ தார்யம் என் பக்கலிலே வளர்ந்தது-(பெரும் கேழலார் –தம் புண்டரீக கடாக்ஷம்  நம்மாழ்வார் பக்கலில் ஒருங்கினது போலே )
என் கொண்டு
அழைத்தல் -கூப்பிடுதல்-(-உபாய பாவத்தால் இல்லை -போக்யம் -அனுபவத்துக்கு -கூடு என்றபடி )
கண் கருதிடும் என்று சேதன சமாதியாலே சொல்லுகிறது .
கையும் தொழும் -நீசனான / உன் குணங்களை –அவன் குணங்கள் சங்கைக்கு இடம் -பரத ஆழ்வான் கூப்பிட திரும்ப வில்லையே –
இத்தனை நாளும் ஆத்மாவுக்கே ஞானம் இல்லாமல் திரிய இப்பொழுது கண் இந்திரியங்களுக்கு ஞானம் வந்து உம்மை பற்ற துடிக்கிறதே -மெய்யில்– சீர் -திரு மேனி அழகைக் காட்டியே இப்படி கரணங்களை பண்ண வைத்தீர்-/ஐயன் -சம்பந்தம் -குணங்கும் இருக்க  ப்ராவண்யம்  வளர்வதில் என்ன ஆச்சர்யம் -கண்ணும் காணும் சொல்லாமல் -காண கருதும் -பனி அரும்பு உதிருமாலோ/ காரேய் கருணை  -முதலிலே அருளிச் செய்தார் /இருந்து  சதா -முக்கரணங்களுக்கும் எப்பொழுதும் இதனால் /சித்தம் சித்தாகி அல்லேன் என்று நீங்கி -முடியானையில் கரணங்கள் அவையாக – -ஒவ் ஒன்றும் மற்று ஒன்றின் கார்யம் விரும்பினது போலே -/தேஜஸ் சங்கல்பித்தது –நிமித்த காரணம் -உபாதான காரணம் –சேதன அசேதன விசிஷ்டா ப்ரஹ்மம் –
தேஜஸை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் சங்கல்பிக்க -தண்ணீரை சரீரமாக கொண்ட ப்ரஹ்மம் மாறும் –ஞான சக்த்யாதிகள் சஹகாரி காரணம் -/அங்கே சேதன சமாதி வராதே -ஆழ்வார் கரணங்கள் போலே இல்லையே /
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

அவதாரிகை -கீழ்ப் பாட்டிலே -எம்பெருமானாருடைய போக்யதையில் ஈடு பட வேண்டி இருக்க -அப்படி இராதே –
அவருடைய பாவனத்தைக் கொண்டாடினது -அவரை அனுசந்தித்து சிதிலராய் இருக்குமவர்களுக்கு
அசஹ்யமாய் இருக்கும் என்று சொல்லி -இதிலே –அவர்கள் விஷயத்தால்  (விஷயீ காரத்தால் )குற்றம் தீரும்படி
அந்த கரணத்தொடு பாஹ்ய கரணங்களோடு வாசி யற -எல்லாம் எம்பெருமானார் பக்கலிலே
அதி மாத்ர ப்ராவன்யத்தாலே சக்தங்களாய் ஆழம்கால் பட்டன என்று சொல்லா நின்று கொண்டு -(மனன் அகம் மலம் அற மலர் மிசை எழு தரும் மனம் உணர்வு அவை இலன் –குற்றம் தீர்த்த மனசாலும் எம்பருமானை அறிய முடியாது -ஆச்சார்யர் விஷயத்தில் அப்படி இல்லையே )
இந்த பூ லோகத்தில் இருக்கும் எல்லா சேதனரும் இருக்கச் செய்தே -தேவரீருடைய திவ்ய ஔ தார்யம்
என் ஒருவன் பக்கலிலும் கிளர்ந்து வருகைக்கு ஹேது என் என்று -அவர் தம்மையே கேட்கிறார் –
வியாக்யானம் -நையும் மனம் வுன் குணங்களை வுன்னி -எபிஸ் ச சசி வைஸ் ஸார்த்தம் -என்கிறபடியே
மநோ ரதித்துக் கொண்டு வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுடைய மநோ ரதம் விபலமாய் போருகைக்கு உறுப்பாகையாலும் –
அனந்யா ராகவேணாஹம்-என்ற பெரிய பிராட்டியை காட்டிலே விட உறுப்பாகையாலும் -குணைர் தாஸ்ய முபாகத  –
என்ற இளைய பெருமாளை த்யஜிக்கைக்கு ஹேதுவாகையாலும் –சர்வேஸ்வரனின் கல்யாண குணங்கள்
கட்டடங்க  ஆஸ்ரிதர்களுக்கு அவிஸ்ரம்ப ஜனகங்களாய்  இருக்கும் -அப்படி அன்றிக்கே – பிரதி கூல்யத்திலே முறுகி
லீலா விபூதியில் கிடக்கிற சேதனர் எல்லாரையும்  உத்தரிப்பிக்க வேணும் என்று தீஷித்துக் கொண்டு
அவதரித்து அருளின தேவரீர் உடைய சௌசீல்ய சௌலப்ய வாத்சல்யாதி கல்யாண குணங்களை
என் மனசானது அனுசந்தித்து -அத்யந்த அபிநிவிஷ்டமாய் -தன்னிலே கிடந்தது சிதிலமாகா நின்றது

ஆஹ்லாத ஸீ த நேத்ராம்பு புளகீ க்ரத காத்ரவான்  -சதா பர குணா விஷ்ட -என்று சேதனாய் இருக்குமவன்-படும் பாட்டை படா நின்றது என்றார் -அசேதனமான மனச்சு கூட உருகும்படி காணும் இவர் கல்யாண-குணங்களுடைய போக்யத்தை இருப்பது –என் நா இருந்து எம் ஐயன் இராமானுசன் என்று அழைக்கும்

அரு வினையேன் -என்றத்தை -காகாஷி ந்யாயத்தாலே -பூர்வ உத்தர பதங்களோடு அந்வயித்து கொள்வது –
என் நா -என்னுடைய ஜிஹ்வை யானது -அநாதி காலம் பிடித்து இவ்வளவாக விஷயாந்தரன்களிலே
சக்தையாய் கொண்டு போந்து – அசத் கீர்த்தன காந்தார பரிவர்த்த பாம் ஸூ லை -யான என்னுடைய ஜிஹ்வையானது –
இருந்து -தேவரீருடைய கல்யாண குணங்களை அனுபவித்து -அவற்றிலே அத்யந்த அபிநிவிஷ்டையாய்
ஒருப்படிப்பட  இருந்தது -இவ் வாகாரத்தை பிறப்பித்த தேவரீருக்கும் கூட அசைக்கப் போகாத படி- நீர்வஞ்சி போலே
ஏகாரமாய் கொண்டு இருந்து -என்னுதல் -எம் ஐயன் -அசந்நேவசபவதி -என்கிறபடியே அசத் கல்ப்பனாய் கிடந்த அடியேனை –
சந்தமேனம் ததோவிது -என்னும்படி ஒரு வஸ்து ஆகும்படி கடாஷித்த உபகாரத்தை அனுசந்தித்து -சஹி வித்யாதஸ்தம் ஜநயதி –
என்றும் – குரூர் மாதா குரூர் பிதா -என்றும் -அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் -என்றும் -மாதா பிதா யுவதயஸ்
தனயா விபூதிஸ் சர்வம் -என்றும் -தந்தை நல் தாய் தாரம் -என்றும் பிரமாண சஹஸ்ரத்தாலே சொல்லப்பட்ட
பந்த விசேஷத்தை உட் கொண்டு -நமக்கு நிரூபக பந்து பூதரானவர் -என்று தேவரீருடைய பாந்தவத்தையும் –

இராமானுசன் -சக்ரவர்த்தி திரு மகனுக்கு அநுஜராய்    அவதரித்த போது -நச சீதா த்வயா ஹீநா-நசா ஹமபிராகவா   -முஹூர்த்த மபிஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ர்வ்–என்றும்-பிராட்டியை போலே அனந்யார்ஹராய் இருக்கையும்   -பாகவத் ப்ரத்வேஷியான மேகநாதனை நிரசிக்கையும் -முதலான கல்யாண குணங்களில் ஈடுபட்டு -அவற்றுக்கு பிரகாசமான இத் திரு நாமத்தையும் –

என்று அழைக்கும் -மடுவின் கரையில் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் பெரும் மிடறு செய்து ஓலம் இட்டால் போலே
சொல்லிக் கூப்பிடா நின்றது –அழைத்தல் -கூப்பிடுதல் -தஸ் யுபிர் முஷி தேனிவ யுக்தமா க்ரந்தி தும்ப்ர்சம் –
என்று பகவத் விஷயத்தில் அத் திரு நாமம்  மறந்த போதாய்த்து கூப்பிட அடுப்பது -இங்கு அப்படி அன்றிக்கே
அனுசந்தித்து கொண்டு இருந்த போதும் கூப்பிட வேண்டுகிறது -புணரா நின்ற மரம் ஏழு அன்று எய்த ஒரு வில்-வலவாவோ -புணரேய் நின்ற மரம் இரண்டின் நடிவே போன முதல்வாவோ -என்று அதீத காலங்களில் பண்ணின
அபதானங்களை அனுசந்தித்து பெரும் மிடறு செய்து கூப்பிட்டார் இறே ஆழ்வாரும்தேவரீர் உடைய குண-அனுபவ ஜநிதையான ப்ரீதி தலை மண்டை இட்டு அடவு கெட கீர்த்தனம் பண்ணா நின்றது -என்றபடி –
அருவினையேன் கை தொழும் –நானே நாநாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பாவமே செய்து பாவி யானேன் –

என்றும்

ந நிந்திதம் கர்தமதஸ்தி லோகே சஹச்ர  சோயம் நம யாவ்யதாயி -என்றும் -யாவச் சயச் சதுரிதம்
சகலச்ய  ஜந்தோ ஸ்தாவஸ் சதத்ததி கஞ்சம மாஸ்தி சத்யம் -என்றும் சொல்லுகிறபடியே
அநாதி காலம் பிடித்து தேவரீருக்கு உரித்தான இக் கரணங்களைக் கொண்டு அப்ப்ராப்த
விஷயங்களுக்கே உரித்தாக்கி அத்தாலே அத்யந்த க்ரூர பாபங்களைப் பண்ணின என்னுடைய
கையும் இப்போது தேவரீருடைய கல்யாண குணங்களிலே சக்தமாய் தேவரீரைக் குறித்து-அஞ்சலி பந்தத்தைப் பண்ணா நின்றது -பத்தாஞ்சலி புடா ஹ்ர்ஷ்டா நம இத்யேவ வா தி ந-என்னும்படியான ஸ்வேதா த்வீப வாசிகளோடு தோள் தீண்டி யானார் காணும் இவரும் –
கண் கருதிடும் காண -இவ்வளவும் விஷயாந்தரத்தை காண கருதின என்னுடைய கண்ணானது –
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் -என்கிறபடியே அனுபாவ்யங்களான கல்யாண குணங்களால் பிரகாசியா நிற்கிற
தேவரீர் உடைய திவ்ய மங்கள விக்ரகத்தை பார்க்க வேணும் என்று மநோ ரதியாய் நின்றது – கதாத்ர ஷ்யா மஹே ராஜன் ஜகத
க்லேச நாசனம் –  என்றும் -காணுமாறு அருளாய் -என்றும் -காண வாராய் -என்றும் -கதா நு சாஷாத் கரவாணி சஷூஷா-
என்றும் நேத்ர சாத்குரு  கரீச சதா -என்றும் -பகவத் விஷயத்தில் ஸ்ரீ பரத ஆழ்வானும் -ஆழ்வாரும் -ஆச்சார்யர்களும் –
அருளிச் செய்தால் போலே இவரும் அருளிச் செய்கிறார் -ரூபம் தவாஸ் து யதிராஜ த்ர்சோர் மமாக்ரே -என்னக்
கடவது இறே -அசேதனமான கண்ணை கருதிடும் -என்னக் கூடுமோ என்னில் – காமார்த்தா ஹி பிரதி க்ர்பனா
சேதனா சேதநேஷூ -என்று சொன்னால் போலே பிரேம பாரவச்யத்தாலே சேதன சமாதியாக சொல்லத் தட்டு இல்லை இறே –
கடல் புடை சூழ் வையம் இதனில் -கடல்களுடைய புடைகளால் சூழப்பட்ட இந்த பூமிப் பரப்பு எல்லாம் வியாபித்து இருக்கிற
சமஸ்த சேதனரும் உண்டாய் இருக்க –உன் வண்மை -சமஸ்த சேதனரையும் உத்தரிப்பிக்கைக்காக தீஷிதராய்வந்து அவதரித்த
தேவரீர் உடைய ஔ தார்யம் என்னை மாத்ரம் இப்படி ஈடுபடும் பண்ணுகை அன்றிக்கே என்னுடைய கரணங்களும்

தனித் தனியே ஈடுபடும் பண்ணின தேவரீர் உடைய ஔ தார்யம் -என்றபடி

என்பால் என் வளர்ந்ததுவே -அடியேன் ஒருவன் இடத்திலும் மேன்மேலும் கிளர்ந்து அபி வ்ர்த்தமாய்
செல்லா நின்றது -இதுக்கு ஹேது என்ன -நான் அஞ்ஞன் ஆகையால் அறிய மாட்டேன் -அறிக்கைக்கு
ஏதேனும் நான் ஆர்ஜித்த கைம்முதல் உண்டோ -அது இல்லாமை அறிந்து அன்றோ அடியேன் தேவரீரை கேட்பது –
தேவரீர் சர்வஞ்ஞர் -தேவரீர் அறிந்தது ஏதேனும் உண்டாகில் அத்தை அருளிச் செய்ய வேணும் என்ன –
இதற்க்கு எம்பெருமானார் ஒரு மாற்றமும் சொல்லக் காணாமையாலே நிர்ஹேதுகமாக இப்படி ஔ தார்யத்தை
பண்ணினார் என்று வித்தர் ஆகிறார் -இந்த திருவரங்கத் தமுதனார் பாட்டுத் தோறும் எம்பெருமானாரின் வண்மையை கொண்டாடுகிறது போஜனரசம் அறிந்த ஸூ குமாரன் பிடி தோறும் நெய்யை அபேஷிக்கிறாப் போலே காணும்–
————————————————————————–
அமுது விருந்து –
அவதாரிகைஇங்கனம் தூய்மைப் படுத்துபவர் என்பது கூடப் பொறுக்க ஒணாத படியான-இனிமை வாய்ந்த எம்பெருமானார் திறத்து -தம் உட் கரணமும் -புறக் கரணங்களும்
எவ்வித பாகுபாடும் இன்றி -தாமே மிகவும் ஈடுபட்டு இருப்பதைச் சொல்லி –
இப்பரந்த உலகினிலே அனைவரும் இருக்க -தேவரீருடைய வள்ளல் தனம்
என் மீது வளருவதற்கு ஹேது என்ன -என்று எம்பெருமானாரிடமே வினவுகிறார் .
பத உரை –
மனம் -நெஞ்சு
உன் குணங்களை -தேவரீர் குணங்களை
உன்னி -நினைத்து
நையும் -நிலை குலையும்
என் நா -என்னுடைய நாக்கு
இருந்து -நிலை மாறாமல் ஒருபடிப்பட இருந்து
எம் ஐயன் -எங்களுடைய தலைவன்
இராமானுசன் என்று -எம்பெருமானார் என்று
அழைக்கும் -கூப்பிடும்
அரு வினையேன் -கொடிய பாபம் செய்த என்னுடைய
கையும் -கைகளும்
தொழும் -கூப்பின வண்ணமாய் இருக்கும்
கண் காணக் கருதிடும் -கண்கள் தேவரீரைக் காண விரும்பிக் கொண்டு இருக்கும்
கடல்-கடலாலே புடை -நான்கு பக்கங்களிலும்
சூழ் -சூழப்பட்ட
வையம் இதனில் -இந்தப் பூமியில்
உன் வண்மை -தேவரீருடைய வள்ளன்மை
என்பால்-குறிப்பிட்டு என்னிடத்திலே
வளர்ந்தது என் -மிக்கு இருப்பது என்ன காரணத்தினால் –
வியாக்யானம் –
நையும் மனம் உன் குணங்களை எண்ணி –
இதனால் உட் கரணமாகிய மனம் ஈடுபட்டமை கூறப்பட்ட படி –
மனம் முதலிய கருவிகளை கர்த்தாவாக கூறியது -அவை அமுதனாரை எதிர்பாராது –
தாமாகவே எம்பெருமானார் திறத்து –பள்ள மடையாய் பாய்வதை காட்டுகிறது –
உன் குணங்களை –
தேவரீர் திரு மேனியைப் பற்றிய சௌந்தர்யம் முதலிய குணங்களை –
மேற் கூறப்படும்மற்றைக் கரணங்கள் திரு மேனியைப் பற்றியனவாகவே அமைதலின்
இதுவும் அங்கனமே யாகக் கடவது -இந்தப் பாசுரத்தை அடியொற்றி -இந்நிலையினை
மணவாள மா முனிகளும் –நித்யம் யதீந்திர தவ திவ்யவபுஸ் ஸ்மிருதவ் மே சக்தம் மநோ பவது –
யதிராஜ விம்சதி -4 -என்று அருளிச் செய்து இருப்பது இங்கு அறிவுறத் தக்கது ..
உன் மெய்யில் பிறங்கிய சீர்  அன்றி வேண்டிலன் யான் – 104- என்பர் மேலும் .
இனி திருமேனியினுடைய-அப்ராக்ருதமான தன்மையைக் காட்டிக் கொடுத்த –
கருணை-வண்மை -முதலிய பண்புகளையும் சேர்த்துக் கூறலுமாம் –
தன்னை நயந்தாரை தான் முனியும் எம்பெருமானிலும்
கனியும் எம்பெருமானார் உடைய சிறப்பைக் கருதி -உன் குணங்கள் -என்றார் .
என் நா விருந்து எம் ஐயன் இராமானுசன் என்று அழைக்கும்
சொலப் புகில் வாய் அமுதம் பரக்கும் -43 -திரு நாமம் ஆதலின் ருசி கண்ட என் நா சொல்லி முடித்தோம் என்று
ஒய்வுறாது-ஒருபடிப்பட இருந்து இராமானுசன் -என்னும் திருநாமத்தை சொன்ன வண்ணமாய்
இருக்கும் -என்றபடி .
திரு நாமம் எவர் சொன்னாலும் இனிக்கும் -இதற்க்கு மேல் உறவு முறையும் அமைந்து விட்டாலோ
கேட்க வேண்டியது இல்லை -இவ்வினிமையோடு அவ்வினிமையும் சேர்ந்து பேரின்பம் பல்கா
நிற்கும் அன்றோ -ஆகவே என் நா எம்பெருமானார் உடன் உள்ள உறவையும் அவர் திரு நாமத்தையும்
ஒருபடிப்ப்டச் சொல்லிக் கொண்டே இருக்கிறது -என்கிறார் .
எம் ஐயன் –
எங்களுடைய தகப்பன் –
துளப விரையார் கமழ நீண்முடி   எம் ஐயனார் -அமலனாதி பிரான் – 7- என்றது காண்க -அறிவுஊட்டி ஆளாக்கினவர் ஆதலின் ஐயன் எனப்பட்டார் –
சாஹிவித்யாதச்தம் ஜனாதி -அந்த ஆசார்யன் அன்றோ வித்யையினால் அந்த சிஷ்யனைப்-பிறப்பிக்கிறான் -என்று வித்யையினால் ஞானப் பிறப்பு அளிக்கும் ஆசார்யனைத் தந்தையாகச்-சொல்வதைக் காண்க –
அறியாதன அறிவித்த அத்தா -திரு வாய் மொழி – 2-3 2- என்று நம் ஆழ்வாரும்
ஆசார்யனை உடையவன் –ஸ்வாமி –என்னும் சம்பந்த்தத்தை இட்டுப் பார்க்கிறார் .
ஏனைய தந்தை முதலியவர்களின் உறவு எற்பட்டமையின் குலையும்
ஆசார்யனாம் தந்தை வுடன் உண்டான உறவோ அங்கன் அன்றி நிரந்தரமாக
நிற்பது -என்று அறிக
அரு வினையேன் கையும் தொழும்
அருவினையேன் -எம்பெருமானார் திறத்து பயன்பட வேண்டிய கருவிகளை இதுகாறும் தகாத
விஷயத்திலே செலுத்தி -மகா பாபியானேனே -என்று தம்மை நொந்து கொள்கிறார் .
கையும் தொழும் –
நா அழைப்பதோடு சேர்த்து கையும் தொழும்
உம்மை – தழீ இயது
இராமானுசன் என்னும் நாம சங்கீர்த்தனம் பண்ணும் போதே கைகளும் கூம்பின –
மகர்ஷே கீர்த்த நாத்தச்ய பீஷ்ம ப்ராஞ்சலி ரப்ரவீத் -மகரிஷியான அந்த வியாசருடைய பெயரை
சத்யவதி சொன்னதனால்   பீஷ்மர் கை கூப்பினவராய் பேசலானார் -என்னும் சிஷ்டாசாரத்தின் படி
நாம சங்கீர்த்தனம் கைகள் கூம்பின என்க –
இன்றும்குருகூர் சடகோபன் -என்று திருவாய்மொழி ஓதும் பெரியவர்கள் கை கூப்புவதை காணா நிற்கிறோம் அன்றோ –
நா ஒருபடிப்பட இருந்துய் அழைக்கவே கையும் எப்பொழுதும் தொழா நிற்கும் -என்று அறிக
கண் கருதிடும் காண –
உன் கணங்களை என்றும் -உன் வண்மை என்றும் நேரே நின்று பேசுபவர் கண் காணக் கருதும்
என்பது இன்று போல் என்றும் காணக் கருதும் என்னும் கருத்துடைத்து –
இனி கை தொழும் -என்றது போலே கண் காணும் -என்னாது
காணக் கருதும் -என்றது குறிக் கொள்ளத் தக்கது –
நேரே காணும் காலத்திலும் -கண்ட கண்கள் பனி யரும்புதிருமாலோ என் செய்கேன் -திரு மாலை 18- –
என்றபடி –ஆனந்தத்தினால் கண்ணீர் சொருதளால் காண முடியாமை பற்றிக் கண் காணக்
கருதுவதாகக் கூற வேண்டியது ஆயிற்று -என்க –
தன் கருத்தை தன் கருவியாகிய கண்ணின் மீது ஏற்றி -கண் கருதிடும் -என்றார் -உபசார வழக்கு –
இதனால் எம்பெருமானார் இடத்தில் தமக்கு உள்ள ஆர்வ மிகுதியை காட்டினார் ஆயிற்று -ரசிகரான தம்மைப் போலே தனியாகத் தம் கருவிகளும் ஆர்வமுடையனவாம்படி எம்பெருமானார்-விஷயத்தில் உட் புக்கபடி இது –
உன்னை மெய் கொள்ளக் காணக் கருதும் என்கண்ணே -திரு வாய் மொழி – 3-8 4- – என்னும்-நம் ஆழ்வார் ஸ்ரீ சூக்தியை இங்கே நினைவு கூர்க-
கடல் புடை சூழ் —வளர்ந்தது
சுற்றும் கடல் சூழ்ந்த இந்த நிலப் பரப்பிலே எத்தனை பேர்கள் இல்லை –
அவர்களுக்கு இத்தகைய ஈடுபாட்டினை விளைவிக்காது எனக்கு மட்டும்
மட்டற்ற ஈடுபாட்டினை விளைவிக்கும்படியான வள்ளன்மை வளம்
பெற்றதற்கு என்ன காரணமோ என்கிறார் ..
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது
ஸ்வாமி உடைய ஒவ்தார்யதுக்கு இந்த பாசுரம்
/வானமா மாலை பெருமாள் ஆழ்வாருக்கு காட்டி கொடுத்த குணம்
/பராசரர் ஒவ்தார்யம் ஆளவந்தார் சொல்ல -தத்வ ஹித புருஷார்த்தம் அருளியதால்
 /மதுரகவி ஆழ்வார் ஆழ்வாரின் வண்மை சொன்னது போல -நால்வர் அனுபவம்
/இந்த்ரியங்கள் ஸ்வாமி அனுபவிக்க பண்ணிய வண்மை /
கை நா மனம் கண் நான்கும் /பாவனத்வ அனுசந்தானும் அசக்யமாம் படி பரம போகய பூதரான எம்பெருமானார் விஷயத்தில் ,அந்த காரணத்தோடு
-உள்  இந்த்ரியங்கள்-மனசு-பாஹ்ய காரணங்களோடு வாசி அற  அதி மாத்திர பிரவணமாய் செல்லுகிற படியை சொல்லி ,
இந்த பூமி பரப்பு எல்லாம் கிடக்க செய்தே தேவரீர் ஒவ்தார்யம் என் பக்கலிலே வர்திக்கைக்கைக்கு  ஹேது என் என்கிறார்
-இருந்து வளர்ந்து கொண்டே இருக்கும் பிராவண்யம்
/நந்தா விளக்கே -பரி மள ரெங்கனை சேவிக்க பாரிப்பு உடன் -சென்ற கலியன் ஆண் பாவனையில் -வூடா – நிற்க –
இப்படி செய்ததே நானே- இது போதாது- சிந்தையில் இருப்பதே ஒவ்தார்யம் தானே

உணர்வில் உம்பர் ஒருவனை-உணர்வில் அவனை நிருத்தினேன் அதுவும் அவனது இன் அருளே/வளர்ந்து கொண்டு இருக்கும் பிராவண்யம்/கையும் தொழும்- உம்மை தொகை-விநயம் -நான்  பாட தானே கை தொழுதது/குணம்-சொரூப ரூப சே ஷ்டிதங்கள் குணம்

/நா இருந்து-எப் பொழுதும்/ஐயன்-சம்பந்தம் /கண் காணும் என்று சொல்லாமல் கருதிடும்/ கண்டால் -பனி அரும்பு -கருத தான் முடியும்/காரேய் கருணை முன்பு சொல்லி இதில் வண்மை குணம் அருளுகிறார் //மனசால் ஆத்மாவை தூக்கி விட வேண்டுமே -முதலில் மனம் நினைக்க வேண்டும்/உன் குணம்-பகவான் குணம் என்று இன்றி-விசேஷித்து அருளுகிறார்/விட்டு பிரிந்தால் தாங்க முடியாது-பரதனை-பிரிகிறான்/ராமன் //பிரிவேன் என்று சொல்லி பெரிய நம்பி திரு குமாரரை ஸ்வாமி தாமே சென்று-நீர் விட்டாலும் உம்மை விட மாட்டேன் என்று சொல்லிய இவரையும் ஸ்வாமி குணம்/மனம் நையுமா அசேதனம் தானே- ஸ்வாமி நினைந்து இருப்பதால் சிறந்த மனசு என்று தானாகவே-ஸ்வதந்திர -இது கண்டு பரவ- நா இருந்து-ஒரு படி இருந்து-இரட்டை நா இல்லை/இரு கரையர் இல்லை -மாறாமல் ஸ்வாமி ஒருவரையே பாடும்/நித்யம் யதீந்திர தவ ஸ்மித-மா முனிகள்//ஐயன்- நித்ய நிருபாதிக பந்துத்வத்தையும் திரு நாமத்தையும் சொல்லி/ சொல புகில் வாய் அமுதம் பிறக்கும்/ கமழ்  நீள்   முடி எம் ஐயனார் அணி அரங்கனார் /இப்படி இருக்க-இன்று சம்பந்த ஞானம் பிறந்த பின்பு- உரிய கரணங்களைஅநாதி காலம் அப்ராப்த விஷயங்களுக்கு சேஷம் ஆக்கின மகா பாபியான

-அரு வினையேன்–இத்தனை நாளும் அரங்கனுக்கு கைங்கர்யம் பண்ணி கொண்டு இருந்தார்/-இதுவே அரு வினையேன்/கொடு மா வினையேன்-ஆழ்வார் சொல்லி கொண்டாரே–என் உடைய கையும் எப்போதும் தேவரீர் விஷயமாக அஞ்சலி பந்தத்தை பண்ணா நின்றது/திரு மேனி கண்டாலே சத்வ குணம் வளரும்/பாவியேன் ஒரு நாள் காண நீ வாராயே பிரார்தித்தாரே ஆழ்வாரும்-விபவம் விட்டு வர முடியவில்லை ஆழ்வாரால் //-அன்று தேர் கடாவிய பெருமாள் கழல் காண்பது என் கொலோ-என்கிறார்-அதை தாண்டி அர்சைக்கு வந்தார் கலியன் /

/மதுர கவி ஆழ்வார்– ஆழ்வார் அன்றி தேவு மற்று அறியேன் என்றார் //இழந்த காலம் நினைத்து மேல் விழுந்து அனுபவிக்க எல்லா கரணங்களும் செல்கின்றன/நா இருந்து சதா -எல்லா கரணங்களுக்கும் சேர்த்து அர்த்தம்/கண்ணானது சர்வ காலத்திலும் தேவரீரை காண்கையிலே மநோ ரதியா நின்றது/பெரும் கேளலார்புண்டரீகம் ..நம் மேல் ஒருங்கே பிரள வைத்தார்-மாறன் சொல் வேராகவே விளையும் வீடு

/வைகுந்தன்  என்றும்  தோணி/ஸ்வாமி திருகண்களும் அமுதனார் மேல்- கடல் புடை-சுற்றும்- சூழ் வையம் -இதினில் –அமுதனார் பக்கலிலே வளர்த்தது.. அழைத்தல்- கூப்பிடுதல்- உபாயமாக இல்லை கஜேந்த்திரன் போல/மேவினேன் -அமுதூரும் என் நாவுக்கே- இறந்த காலம்- கிடைத்து விட்டது அனுபவிக்கும் பொழுது ஆனந்த குரல்/கூப்பாடு-கண் கருதும் சக்தி- சேதன சமாதியாலே -சொன்னது -சேஷத்வம் ஞானம்/சித்தம் சித் ஆய  அல்லேன் என்று நீங்க- பத்திமை நூல் வரம்பு இல்லை–ஒவ் ஒன்றும் உள்ளது எல்லாம் தான் விரும்ப -கரணங்கள் மற்ற காரணங்களின் வியாபாரம் கேட்டதே ஆழ்வாருக்கு-அவன் சங்கல்பித்தான்- /தேஜஸ் பார்த்தது-சித்தா இது-நிமித்த காரணம் -சங்கல்பம் என்பதால்/உபாதான காரணம் -விசிஷ்ட வஸ்து சக காரி-ஞான சக்தி இருப்பதால்//தேஜசை சரீரம் ஆக கொண்ட பிரமம்/ ஆகாசம் சரீரமாக கொண்ட பிரமம் ஆகும்-அசித்க்கு சைதன்யம் இல்லை/ஆழ்வார்களுக்கு  தான் பத்திமை நூல் வரம்பு இல்லை

/தீ மனம் கெடுத்து மருவி தொழும் மனம் கொடுத்தார்கள் ஆழ்வான் போல்வார்/மனன அக மலம் அருத்து-மலர் மிசை -குற்றம் தீர்ந்த மனசால் கூட  பகவானை தெரிந்து கொள்ள முடியாது-ஸ்வாமி யை தெரிந்து கொள்ள குற்றம் போனால் போதும்//ஒவ்தார்யம் தாய்க்கும் மகனுக்கும்தம்பிக்கும்  இவருக்கும் இவர் அடி பணிந்த சுவாமிக்கும்-ஐந்து வண்மை தனம் உண்டு- எல்லாம் பலராமானுசன் இடம் வந்தது

-சொல் என்ன சொன்னானே 700 ஸ்லோககங்களும் -மூலையில் உள்ள ரத்னங்களை எல்லாம் நடு முத்தத்தில் போட்டு-நெஞ்சு பதன் பதன் என்று சொல்ல கொடுக்கும் பொழுது பார்த்து கொடு என்கிறான் அர்ஜுனன் இடம்/அனந்யா ராகவேய -பாஸ்கராய பிரபை என்று -அருளிய பிராட்டியைகூட  பிரிந்தானே ராமன்-.பாதுகை மேலும் கீழும் ஸ்பர்சத்தால் பருத்து நடுவில் இளைத்தது-பரதன் உடன் திரும்பித்தே

-குண ஹானி– பிரணய கலகம்-கொண்டு திரும்பி போனதாம்/லோக நாதன் புரா சுக்ரீவன் நாதம் இச்சதி தம்பி ஊரார் சொன்னாலும் நான்  குணத்துக்கு தோற்ற அடிமை–அவனையும் விட்டாரே-ராமன்-சரயுவில் அவன் முன் போக பின்பு பெருமாள் போனதால்/ஆயிரம்  ராமர் உனக்கு ஒப்பார் என்று சொல்ல கூடிய பரதனை விட்டு விட்டு காட்டுக்கு போனாரே-அப்படி அநு கூலர்களை கூட விட்ட ராமன் போல  அன்றிக்கே-

/பிரதி கூலத்தில் மூழ்கி இருக்கும் நம்மை  உஜ்ஜீவிக்க தீஷை கொண்டு அவதரித்து அருளிய ஸ்வாமி -குற்றமே குணமாக கொண்ட ஸ்வாமி-.அத்யந்த மேல் மேல் எழுந்த காதல் உடன்-மனசும் சித்தாய் -கல்லும் உருகும் போல –ஈரும் வேம் ஈரியார் -ஆவி உலர்ந்தது என்கிறார் ஆழ்வார்/ந சாஸ்திரம்- அனுபவம் பெற்றதை அருளிவார்கள் ஆழ்வார்கள் /ச்தொத்ரமே  அவன்/ நா -சப்தம்- ஆனந்தம் -எல்லாம் அவனது -இவனை விட்டு வேறு ஏதோ பேசி திரிந்தது -விஷயாந்தரங்களில் திரிந்தது-அவளுக்கும் மெய்யன் இல்லை-இங்கும் ஒரு படி படாமல் -சஞ்சலம் மனசின் ச்வாபம்-

/இன்று– தேவரீர்  மேல் ஒருபடி -நீரே அசைக்க முடியாமல்-தன அடியார் திறத்து தாமரையாள் ஆகிலும்  சீதை குலைக்குமேல் அசைத்து பார்த்தாலும் அசைய முடியாது இருந்தது/ஐயன்– அசத் ஆக இருந்த அடியேனை வச்துவாகும் படி கடாஷித்த ஸ்வாமி

/உபகாரத்தை அனுசந்தித்து -ஞான பிறவி கொடுத்து /அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்- நின்றதும் இருந்ததும் கிடந்ததும்  என் நெஞ்சுள்ளே/தந்தை நல தாய் தாரம் -எல்லாம் -ஆச்சார்யர்-நிருபாதுக பந்து காரணம் இன்றி /அறியான அறிவித்தா அத்தா/

அத்தா அரியே /அத்தன் அரங்கன் /ராமானுசன்-ராமனுக்கு அனுஜனாய் பிறந்த பொழுது-மீன் நீர் பசை இருக்கும் வரை தான் -அற்று  தீர்ந்து இருக்கையும்-இருக்கும் நிலையை நினைந்து -குணங்கள் நினைந்து -ஓலம் இட்டு கூப்பிட்டு கொண்டு இருந்தது/-மறந்த பொழுது -இந்த்ரியங்கள் -பாசம் அறுக்க -கூப்பிட்ட குரல் இல்லை/

அனுசந்தித்து கொண்டே கூப்பிடுவது இது –போக்யதிவத்தால் –புணராய் நின்ற வலவாவோ -முதல்வாவோ- என்று கூப்பிட்ட படி/ஓ ஓ உலகினது இயற்க்கை-ஏழும் எய்தாய் ஸ்ரீதரா -சந்தேகம் பட்ட சுக்ரீவனுக்கு அருளினாய் சந்தேகம் படாமல் உன்னை நினைந்து இருக்கும் அடியேனுக்கு அருளாய் என்கிறார் ஆழ்வார்

-ராமானுசன் நெஞ்சே சொல்லுவோம் நெஞ்சே என்று ஆரம்பித்தார்-இதுவே பயன்-புருஷார்த்தம் –ஆர்த்தி பிர பந்தம்/உபாயமாக யதிராஜ விம்சதி மா முனிகள் அருளியது போல கூப்பிடா நின்றது-

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: