அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–100-போந்த தென் நெஞ்சு என்னும் பொன் வண்டு-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
நூறாம் பாட்டு -அவதாரிகை
இப்படி தாம் உபதேசிக்கக் கேட்டு க்ருதார்த்தமாய் -தம்முடைய திரு உள்ளம் –
எம்பெருமானார் திருவடிகளிலே போக்யத அனுபவத்தை ஆசைப் பட்டு
மேல் விழுகிற படியை கண்டு -அதின் ஸ்வபாவத்தை அவர்க்கு விண்ணப்பம் செய்து –
இனிவேறு ஒன்றைக் காட்டி தேவரீர் மயக்காது ஒழிய வேணும் –
என்கிறார் .
போந்ததென் நெஞ்சு என்னும் பொன் வண்டு உனதடிப் போதில்  ஒண் சீ
ராம்  தெளி தேனுண்டமர்ந்திட வேண்டி நின் பாலதுவே
ஈந்திட வேண்டும் இராமானுச இதுவன்றி யொன்றும்
மாந்தகில்லாது இனிமற்றொன்று காட்டி மயக்கிடலே – – 100- –
வியாக்யானம்
என்னுடைய மனசாகிற அழகிய வண்டு -தேவரீருடைய திருவடிகள் ஆகிற பூவிலே
சைத்ய மார்த்த்வ ஸௌரப்யாதி கல்யாண குணங்கள் ஆகிற நிர்மலமான மதுவைப்
பானம் பண்ணி –அங்கே  நித்ய வாசம் பண்ண வேணும் என்று தேவரீர் பக்கலிலே வந்தது –
அதி இச்சித்ததை ஒழிய மற்றொன்றைக் கொடாதே -அத்தையே தேவரீர் கொடுத்து அருள வேணும் .உடையவரே –-(மா முனிகள் ராமானுஜ பதார்த்தம் பாசுரம் தோறும் பொருத்தமான எம்பெருமானார் உடையவர் போன்ற சப்த பிரயோகங்கள் அருளிச் செய்கிறார் )
மற்றொன்றை கொடுத்தருளிற்றாகிலும் -அம்ருதாசிக்குப் புல்லை இட்டால் மிடற்றுக்கு
கீழே இழியாதாப் போலே ஈது ஒழிய வேறு ஒன்றையும் புஜிக்க  மாட்டாது –
தேவரீர் நினைத்தால் அதுவும் செய்விக்கலாம் –
இனி வேறொன்றைக் காட்டி மயங்கப் பண்ணாது ஒழிய வேணும் .
அன்பாலதுவே ஈந்திட வேண்டும் -என்றும் பாடம் சொல்லுவர்
அப்போது என்னுடைய ஹ்ருதயம் தேவரீருடைய திருவடிகளில் போக்யத அனுபவ அர்த்தமாக-அங்கே  போந்தது –சிநேக பூர்வமாக அத்தையே கொடுத்தருள வேணும் -என்றபடி
போது -புஷ்பம்
மாந்தல்-உண்டல்
மயக்கம் -மோஹம்–
குணக்கடலில் மூழ்கி -வேறு சமயங்களை பேசி பொழுது போக்காமல் -வேறு ஒன்றைக் காட்டி மயக்காதீர்
வேறு என்று பரத்வத்தையே கழிப்பார் இவர் சரம பர்வ நிஷ்டையில் இருப்பதால் –
அமிர்தம் உம் திருவடியே -மற்று எல்லாம் புல் -/ மனம்– பொன் வண்டு — மஹா உபகாரங்களை அனுசந்தித்து –ஷட்பதம் –கால் -சொற்கள் த்வயம் -உபதேசித்து -த்வயம் அர்த்தானுசந்தானம்-சர்வ காலமும் –சொன்னவரையே தாண்டாமல் –
அரங்கன் திருவடியே தஞ்சம் என்று அடைந்த மாறன் அடியே தஞ்சம் என்று இருந்த இராமானுஜர் திருவடியே தஞ்சம் -போக்யத்வம் இதில் சொல்லி பாவனத்வம் -இதிலும் -மதுரகவி ஆழ்வாரும் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் ரக்ஷகத்வம் முதல் பாசுரம் சொல்லி -பின்பு போக்யத்வம் –அனுபவம் முதலில் ஆச்சார்யர் கொடுக்க –பின்பு தான் இவரே உடைய என்று அறிகிறோம் /பொய்யிலாத மணவாள மா முனி —பொய்யிலாத பொன் முடிகள் எய்த வெந்தை –பொய்ம்மொழி ஓன்று இலாத மெய்ம்மையாளன் -திருமங்கை யாழ்வார்-பொய்யா நாவின் மறையாளர் வாழும் இடம் புள்ளம் பூதம் குடி -பொய்யில் பாடல் திருவாய்மொழி –அது போலே பொன் கற்பகம் என்பதால் பொன் வண்டு ஆகுமே நெஞ்சினாரும் /விதித்தலால் திருவடியை த்யானம் பண்ணி நின்ற்க்காமல் ராக ப்ராப்தமாக அனுபவித்து நிற்கும் படி அடைந்த நெஞ்சை -வேறே காட்டி மயக்கிடாமல் இதிலே ஸ்திரமாக  நிற்கும் படி -பண்ணி அருள வேணும் /
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகைகீழ்ப் பாட்டில் பிராப்தி நிமித்தமாக தளரா நின்ற தம்முடைய நெஞ்சினாரைக் குறித்து நாம்
சரம பர்வமானவரை ஒருக்கால் தொழுதோமாகில் நம்மை நம் வசத்தே காட்டிக் கொடார் என்று உபதேசித்து தேற்றி –
பூ லோகத்திலே பாஹ்ய குத்ருஷ்டிகள் வியாபித்து  -லோகத்தாரை எல்லாரையும் அழிக்கப் புக்கவாறே    -வேத
மார்க்க பிரதிஷ்டாபன முகேன -அவர்களை எல்லாரையும் ஜெயித்து -தமக்க கல்பக ஸ்த்தாநீயராய் இருந்த படியை
சொன்னவாறே -ஸ்ரீ ருக்மிணி பிராட்டியார்  கிருஷ்ணனுடைய வைபவத்தை கேட்டு அவனை வரிக்க வேணும் என்று
துடித்தால் போலே -இவருடைய திரு உள்ளமானது எம்பெருமானார் உடைய திருவடித் தாமரைகளில் உள்ள
மகரந்தத்தை வாய் மடுத்து பருகுவதாக பிர்யன்காயமாநமாய் இருக்கிறபடியை கடாஷித்த எம்பருமானார் உடன்
அதனுடைய தசையை விண்ணப்பம் செய்து -இனி வேறு ஒரு விஷயத்தை காட்டி என்னை  தேவரீர் மயக்காது ஒழிய
வேணும் என்கிறார் –
வியாக்யானம்போந்தது என் நெஞ்சு என்று தொடங்கி-இராமானுசா -எம்பெருமானாரே —என் நெஞ்சு என்னும் பொன் வண்டு
தேவரீர் செய்து அருளின மகா உபகாரகங்களை அனுசந்தித்துக்  கொண்டு இருக்கிற அடியேனுடைய மனசாகிற
ஷட் பதம் -பொன் வண்டு என்றது -தாம் மந்திர ரத்னத்தை அனுசந்தித்து கொண்டு இருக்குமவர் ஆகையாலே –
சகலம் காலம் த்வயேன ஷிபன் -என்றும் -மந்திர ரத்ன அனுசந்தான சந்தஸ்புரிதாதாம்-என்றும் சொல்லுகிறபடியே
சர்வ தேச சர்வ கால சர்வ அவச்தைகளிலும் அனுசந்திக்கப்படுமது ஆகையாலே -லஷ்மீ சஷூ ர நுத்யான தத்சாருப்ய
முபேயுஷே நமோஸ்து மீ நவ புஷே -என்று அபி யுக்தரும் அருளிச்செய்த படியே -தத்க்ரது ந்யாயத்தாலே ஷட் பதமான
மந்திர ரத்னத்தை அனவரதம் அனுசந்தித்து கொண்டு போகிற தம்முடைய மனசுக்கும் ஷட்பதத்வம் உண்டாக
ப்ராப்தம் ஆகையாலே -சர்வ விலஷணமான வண்டு -என்றபடி -இவர் எப்போதும் ஷட் பதத்தையே  காணும் கொண்டாடுவது –
உனதடிப்போதில் ஒண் சீராம் தெளி தேனுண்டு அமர்ந்திட வேண்டி நின்பால்-பாபக்ரியச்ய சரணம்-பகவத் ஷமைவ -சாதச்வயைவ கமலார மனேர்த்தி தாயத் ஷேமச்ச ஏவ ஹீய தீந்திர பாவச் ச்ரிதாநாம் –
என்கிறபடியே சமஸ்த சேதனரையும் -உத்தரிக்கைக்காக திருவரங்க செல்வனாருடைய -திருப் பொலிந்த-திருவடிகளிலே -ஸ்ரீ ரெங்க நாச்சியார் முன்னிலையாக சரணா கதி பண்ணி யருளின தேவரீர் உடைய-திருவடி தாமரைப் பூவிலேசைத்ய மார்த்த்வ ஸௌ கந்தியாதிகளாகிற நிர்மலமான மகரந்தத்தை பானம் பண்ணி –
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்னுமா போலே நிழலும் அடி தாறும் போலே – இருக்கக் கோலி தேவரீர் சகாசத்திலே-போந்தது – ப்ராபித்தது -குரு பதாம் புஜம் த்யாயேத்  -என்கிறபடியே தேவரீர் திருவடிகளை த்யானம் பண்ணி நின்றது -என்றபடி –
ஒண் சீர் –அழகிய சீர் –நின் பால் என்றது -தேவரீர் திருவடிகளில் என்றபடி –பால் -இடம் -அதுவே ஈந்திட வேண்டும் -சஞ்சலமான
என்னுடைய மனசு இச்சித்து நின்றவற்றை ஒழிய மற்று ஒன்றை காட்டாதே அத்தையே கொடுத்து அருள வேணும் –
தேவரீர் உடைய சரணாரவிந்த மகரந்தத்தை அனுபவத்தையே -ப்ராசதித்து அருள வேணும் என்று அபேஷித்து காணும்
இப்படி விண்ணப்பம் செய்கிறார் -விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -ரசம் ஹ்யேவாயம் லப்த்வா நந்தீ பவதி – சர்வ கந்த சர்வ ரச –
உன் தேனே மலரும் திருப்பாதம் -என்றும் தவாம்ர்த்த ச்யந்திநி பாத பங்கஜ -என்றும் சொல்லுகிறபடியே இது ஒழிய
பரம போக்யமாய் இருப்பதொரு மது வேறு உண்டு –அத்தைக் கொடுக்கிறோம் என்னில் -இது அன்றி ஒன்றும் மாந்த கில்லாது –
ஈதே இன்னும் வேண்டுவது எந்தாய் -என்கிறபடியே எங்களுக்கு ரசிப்பது தேவரீர் உடைய திருவடிகளில் மகரந்தமே ஆகையாலே அத்தை ஒழிய வேறு ஒன்றை கொடுத்து அருளிற்று ஆகில் -அமிர்தாசிக்கு புல்லை இட்டால் மிடற்றுக்கு கீழே

இழியாதா போலே –என் நெஞ்சு என்னும் பொன் வண்டு அத்தை புஜிக்க மாட்டாது – ஆகையாலே அதுவே ஈந்திட வேண்டும் என்கிறார் –அன்பால் அதுவே ஈந்திட வேண்டும் –என்ற பாடமான போது -சினேக பூர்வகமாக அத்தையே கொடுத்து அருள வேண்டும் என்றபடி–அன்பால் -சிநேகம் —மாந்தல் -உண்டல்

 இனி மற்று ஓன்று காட்டி மயக்கிடிலே -இப்படியான பின்பு வேறு ஒரு விஷயத்தை காட்டி
மோகிப்பிக்க வேண்டா –மயக்கம் -மோகம் -பகவத் விஷயத்தை என்று சொல்ல அருவருத்து மற்று ஓன்று காட்டி –
என்று சொல்லுகிறார் காணும் -மாந்த கில்லாது -தேவரீர் நினைத்தால் அதுவும் செய்யலாம் இறே -ஆகிலும்-என் மனசு அந்த பிரசங்கத்துக்கு இசையாது -ஆபிமுக்க்யத்தை கொண்டு இறே தேவரீர்  கார்யத்தை செய்ய ஒருப்படுவது –
ஸ்திதேர  விந்தே மகரந்த நிர்ப்பரே மதுவ்ரதே நே ஷூ ரகம் ஹி வீ ஷதே – என்று இவ் வர்த்தத்தை தேவரீர் திரு உள்ளம்
பற்றி இல்லையோ -தவாம்ர்தஸ் யந்தி நி பாத பங்கஜே நிவே சிதாத்மா கதமன்யதிச்சதி -என்று இவ்வர்த்தத்தை-பிரதம பர்வத்தில் பரமாச்சார்யாரும் அனுசந்தித்தார் இறே –இனி மற்று ஓன்று காட்டி மயக்கிடிலே -மற்று ஒரு விஷயத்தை
பிரசங்கிப்பதும் செய்ய வேண்டா என்கிறார் -பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ -நெறி காட்டி  நீக்குதியோ-என்று
நம் ஆழ்வாரும் இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் அனுசந்தித்து அருளினார் இறே 
————————————————————————–
அமுது விருந்து
 
அவதாரிகை –
இங்கனம் தேற்றப் பெற்ற நெஞ்சு -எம்பெருமானார் திருவடிகளிலே இன்பம் நுகர விழைந்து மேல் விழ-அதனது இயல்பினை -எம்பெருமானாருக்கு விண்ணப்பம் செய்து
தேவரீர் வேறு ஒன்றினைக் காட்டி மயக்காது ஒழிய வேணும்-என்கிறார் .
பத உரை –
இராமானுச -எம்பெருமானாரே –
என் நெஞ்சு என்னும் -என்னுடைய மனம் எனப்படும்
பொன் வண்டு -அழகிய வண்டு
உனது அடிப் போதில் -தேவரீருடைய திருவடியாகிற பூவிலே
ஒண் சீராம் -நற்குணங்கள் ஆகிற
தெளிதேன்-தெளிவான தேனை
உண்டு -பருகி
அமர்ந்திட வேண்டி -பொருந்தி அங்கேயே இருப்பதற்கு விரும்பி
நின்பால்-தேவரீர் இடம்
போந்தது -வந்தது
அதுவே -அது விரும்பின அந்த திருவடிப் பூவினையே
ஈந்திட வேண்டும் -கொடுத்தருள வேணும்
இது அன்றி -இந்த திருவடி பூவினைத் தவிர
ஒன்றும் -வேறு ஒன்றையும்
மாந்த கில்லாது -அனுபவிக்க மாட்டாது
இனி -நெஞ்சினுக்கு இந்நிலை ஏற்பட்ட பிறகு
மற்றொன்று -வேறொன்றை
காட்டி-காண்பித்து
மயக்கிடல் -மயங்கப் பண்ணாது ஒழிய வேணும்
வியாக்யானம் –
போந்தது –மாந்த கில்லாது
வண்டிகள் சபலமானவை –
தேன் நுகருவதர்க்காக பூக்கள் உள்ள இடம் நாடி அலைவன –
அதனாலேயே அவை ப்ரமரம்-சுற்றுவது சஞ்சரீகம் -அலைந்து கொண்டு இருப்பது -என்று பேர் பெற்றன –
அவை தேன் நிறைந்த தாமரைப் பூவை அடைந்திடின்  அதனைத் தவிர ஏனைய மலர்களை கண் எடுத்து
பார்க்குமா -அது போலேஎன் நெஞ்சும் சபலமானது –
இன்பம் நுகர கிடைக்கும் இடம் எல்லாம் தேடி அலைவது –
அது எம்பெருமானார் திருவடிகளில் உள்ள மென்மை -குளிர்ச்சி மணம் அழகு -என்னும்
இவற்றை நிரம்ப கண்டு -இன்பம் நுகர -அதனை அடைந்த பின்னர் -மற்ற இன்பம் நுகரும் இடங்களை
நுகர விரும்புமா என்கிறார் –
வண்டுக்கு தேன் தான் உணவு அது வன்றி மற்றொன்றை அது உட் கொள்ளாது –
மதுவ்ரதம் என்று அதனால் வடமொழியில் அதனை வழங்குகிறார்கள் –
நெஞ்சு என்னும் வண்டும் எம்பெருமானார் திருவடி மலரில்
உள்ள குணங்கள் என்னும் தேனை உணவாகக் கொண்டு உள்ளது
-மற்றொன்றை அது உணவாகக் கொள்ளாது .
வந்து தேன் நிறைந்த தாமரையில் -தேனை உண்டு அதனின்றும் நகராது -அங்கேயே அமர்ந்து விடுகிறது
நெஞ்சு என்னும் வண்டும் -இன்பம் நுகர்ந்து நகராமல் அங்கேயே அமர்ந்திட வேண்டி
எம்பெருமானார் திருவடித் தாமரையை வந்து அடைந்தது -இங்கு
தவாம்ருத ச்யந்தினி பாத பங்கஜெநிவே தாத்மா கதமன்ய திச்சதி
ச்த்திதேரவிந்தே மகரந்த நிர்ப்பரே மதுவ்ரதோ நே ஷூரகம் ஹிவீ ஷதே -ஆள வந்தார் ஸ்தோத்ரம் – 27-
உன் அமுதம் ஒழுகும் திருவடித் தாமரையில் படியும்படி செய்யப்பட மனத்தை உடையவன்
மற்றதை எங்கனம் விரும்புவான் -வண்டு தாமரை தேன் நிறைந்ததாய் இருக்கும் போது முள்ளிப்பூவை
கண் எடுத்தும் பாராது அன்றோ -என்பது நினைவுறத் தக்கது .
உணவுள்ள நல்ல இடத்தில் வந்து சேர்ந்தமையின்-தம் நெஞ்சை -பொன் வண்டு -என்று
கொண்டாடுகிறார் .பொற் கற்பகம் பூத்த அடிப்போதில் வந்து சேருவதும் பொன் வண்டாய் இருப்பது
மிகவும் பொருந்துகிறது அன்றோ –
ஷட் பதமான ஆறு பதங்களைக் கொண்ட  -த்வய மந்த்ரத்தை த்யானம் பண்ணிப் பண்ணி நெஞ்சும் ஷட்பதம்
ஆறு கால் உடைய -வண்டு ஆயிற்றுலஷ்மியினுடைய மீன் போன்ற கண்ணை த்யானம் பண்ணிப் பண்ணி
பகவான் தானே மீன் ஆனது போலே என்று ரசமாக பணிப்பர் பிள்ளை லோகம் ஜீயர்
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -என்று முந்துறப் போந்தமை
கூறினமையினால் முந்துற்ற நெஞ்சு வாய்ந்தமை தோற்றுகிறது –
உண்டு அமர்ந்திட வேண்டி -என்றமையின் இதற்கு முன்பு நல்ல உணவு கிடைக்காமல்
அலைந்து உழன்றமை தோற்றுகிறது .
நின்பால் போந்தது -என்று இயைக்க
இனி அன்பால் என்றும் பாடம் உண்டு
அப்பொழுது அன்பால் ஈந்திட வேண்டும் என்று இயைப்பது –அன்பால்-அன்போடு
அதுவே ஈந்திட வேண்டும் -விரும்பின அதனையே கொடுத்தருளினால் அன்றோ
புருஷார்த்தத்தை தந்தது ஆகும் -என்பது கருத்து .
குரு பாதாம் புஜம் த்யாயேத் –என்றபடி ஆசார்யன் திருவடித் தாமரையை த்யானம் செய்தல் வேண்டும் .
என்னும் கட்டுப் பாட்டிற்காக அன்றி -தானாகவே என் நெஞ்சு அவாவுடன்
எம்பெருமானார் திருவடி மலரில் உள்ள குணங்களுக்கு ஈடுபட்டு இடைவிடாது நினைத்து இருக்க
முற்பட்டு விட்டது .அந்த குண அனுபவத்திலேயே மேலும் மேலும் திளைத்துக் கொண்டு
இருக்குமாறு எம்பெருமானார் தான் அருள் புரிய வேண்டும் என்று அவரிடம் அதனைப்
பிரார்த்தித்தார் ஆயிற்று
இதுவன்றி ஒன்றும்மாந்த கில்லாது –
விரும்பின இத் தெளி தேன் அன்றி வேறு ஒன்றையும் இந்தப் பொன் வண்டு
உணவாக உட் கொள்ள மாட்டாது -தேன் உண்ணும் வண்டு மற்று ஏதுனும் உண்ணுமா
அம்ருதம் உண்பவர்களுக்கு புல்லிட்டுக் கட்டாயப் படுத்தினால் கழுத்துக்கு கீழே இறங்கி விடுமா –
இனி மற்று ஒன்றை காட்டி மயக்கிடல்
தெளி தேன் அன்றி உண்ணாத   -இயல்பினை அறிந்த பின்னும் தேவரீர் நினைத்தால் மற்று ஒன்றை
இது நல்ல தெளி தேன் என்று காட்டி மயக்கி உட் புகும்படி ஊட்ட முடியும் –
அங்கனம் செய்து அருளாது ஒழிய வேணும் -என்கிறார் .
தெளி தேனுக்கு மாற்றாக காட்டும்மற்று ஓன்று மது சூதநனின்
தேனே மலரும் திருப்பாதம் -என்பது அமுதனார் உட் கருத்து .
எம்பெருமான் திருவடிகளின் இனிமையை உணர்த்தி என்னை மயக்கி விடக் கூடாது என்கிறார் .
நம் ஆழ்வார் -எம்பெருமானை –சிற்றின்பம் பல நீ காட்டிப் படுப்பாயோ -திரு வாய் மொழி -6 9-9 —
என்கிறார் .இவர் எம்பெருமானாரை மற்று ஓன்று காட்டி மயக்கிடல் என்கிறார் –எம்பெருமான் காட்டும் சிற்றின்பம் பல
எம்பெருமானார் காட்டுவதோ பேரின்பமான எம்பெருமான் என்னும் மற்று ஓன்று –
இதனால் தமது சரம பர்வ நிஷ்டையை வெளி இட்டு அருளினார் ஆயிற்று .
அனந்யார்க்க சேஷத்வம் -எம்பெருமானாருக்கு அன்றி மற்று ஒருவருக்கு உரியர் ஆகாமை –
அநந்ய சரணத்வம் -எம்பெருமானார் அன்றி வேறு உபாயம் இன்மை
அநந்ய போக்யத்வம் -எம்பெருமானாரே நீ யன்றி வேர் ஒருவரையும் அனுபவிக்கத்தக்கவராக கொள்ளாமை
என்னும் ஆகார த்ரயமும் தன் பால் அமைந்து உள்ளமையை இங்கு அமுதனார் காட்டும் அழகு
ரசித்து அனுபவிக்கத் தக்கதாய் உள்ளது .
உனது அடிப் போதில் அமர்ந்திட -என்றமையின் -சேஷத்வம் தெரிகிறது
உனது அடிப் போதில் என்னவே அமைந்து இருக்க -நின் பால் -என்று மிகை படக் கூறியது-மற்றவர் பால் போதராது -நின்பாலே போந்து அமர்ந்திடலை வலி வுறுத்துவதால்-மற்றவருக்கு உரியர் ஆகாமை காட்டிற்று
அதுவே ஈந்திட வேண்டும் என்பதனால் எம்பெருமானாரே இன்பம் தரும் உபாயம் என்பது பெற்றோம்-உண்டு அமர்ந்திடப் போனது தானாகவோ அன்றிப் பிறர் மூலமாகவோ அல்லாமல்-எம்பெருமானாராலேயே அதனைப் பெற வேண்டி இருத்தலின் அவரன்றி வேறு உபாயம் இன்மை-தோற்றுகிறது .
இதுவன்றி ஒன்றும் மாந்த கில்லாது -என்று வெளிப்படையாகவே எம்பெருமானார் அன்றி வேறு போக்கியம்-இல்லாமை சொல்லப் படுகிறது ..இப்படி ஆகார த்ரயமும் -சொல்லிற்று ஆயிற்று –
 ————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

திருவடி தான் பங்கஜம்/ சீர் தேன் பெருக மனம் ஆன வண்டு-சஞ்சல புத்தி- முன் உற்ற நெஞ்சு/மற்று ஒன்றில் கண் போகாமல் திசை திருப்பாமல் இருக்க ஸ்வாமி இடம் பிரார்த்திக்கிறார்/சக்தி உண்டு உமக்கு -இருவருக்கும் லாபம்/ சேதன லாபம் உமக்கு ஆச்சர்ய லாபம் எனக்கு/நெஞ்சு என்று பொன் வண்டு-உன் அடி போதில்-  ஒண் சீராம் தெளிந்த தேன் உண்டு-ஸ்வாதந்த்ரம் அவன் இடம்-.குடித்து அமர்ந்திட வேண்டி-பேராமல்-நின் பால் போந்தது –வந்து கிட்டியது/கேட்டதை கொடுத்து விடவேண்டும்/இது அன்றி ஒன்றும் மாந்த கில்லாது-இனி மற்று ஓன்று காட்டி மயக்காதே-மாயம் செய்யேல் என்னை திரு ஆணை-20 தரும் இனி இனி என்று  கதறினார்-ஆழ்வாரும் /இனி நான் போகல் ஒட்டேன்  ஒன்றும் மாயம் செய்யாதே//மற்று- நா கூசி-பெயரையும் சொல்லாமல் –அழகிய மணவாளன் திருவடி பொன் அரங்கம் எனில் மயலே பெருகும்- காண்டகு தோள் அண்ணல் கழல்/நீர்மையினால் அருள் செய்தான் தன் சரண் தந்திலன் தான் அது தந்து -சொல்லி விட்டேன்-அதனால் காட்டி மயக்காதீர் என்கிறார்/போக்கியம் இதில் –அடுத்த பாசுரம்  -101- பாவனத்வம் அருளுவார்/ அண்ணிக்கும் அமுதூரும் -போக்யத்வம் சொல்லி மேவினேன் அவன் பொன் அடி பாவனத்வம்-அருளியது போலே இங்கும்-ஆவலிப்பு-ரஷிக்கும் சொல்லி இச் சுவை-போக்யத்வம்-தொண்டர் அடி பொடி-பிரதம பர்வம்-உபாயமாக அவனை பற்றனும் ஆச்சார்யர் அனுபவம் கொடுத்து உபாயம் புரிய வைக்கிறார்-மா முனிகள் ஸ்வாமி வண்டுஎன்பர்/ பெருமாள் வண்டு ஆழ்வார் என்பர்/வண்டு-சஞ்சலம் /ரெங்க ராஜ.சரணாம் புஜ பராங்குச பதாம் புஜ .. ராஜ ஹம்சம்   ஸ்ரீ பட்டார் பிரான் பரகால -முகாப்ய மித்திரன்- ஆழ்வார் ஆண்டாள் பெரியாழ்வார் கலியன்  -பற்றுகிறார்  -கூரேசர் இவரை பற்றுகிறார்/ வண்டு மறு பெயர்-மது விரதம் பிரமரம் சஞ்சரிகம்-சுகர் 7 நாள் சொன்னார்  பர்ஷித்க்கு -ஞான பசி- வயிற்று பசிக்கு கோபசு  பால் கறக்கும் நேரம் கூட நிற்க மாட்டார்/பொன் வண்டு-ஸ்வாமி திருவடி  தேன் குடிக்க போனதால் பொன்-சீரார் செந்நெல்- திரு குடந்தை/ ஏரார் இடை- கண்ணன் இடை கட்டி கொண்டு கடையாதே என்பானாம்/சீரார் வளை ஒலிப்ப–சங்கு முன்கை தங்கு- பிரியாமல் இருந்ததால் வளையல்கள் தங்கித்தாம் -அதனால் வந்த சீர்மை-காமரு சீர் அவுணன்-வாமனன் கண்டதால் வந்த சீர்மை மாவலிக்கு

திருப்தி இல்லை/ போக சக்தி -மாறுவதற்கு -விதி -வேற கதி இல்லை என்று/விதி பிராப்தம் ராக பிராப்தம்/ சாஸ்திரம் விதித்தால் தொடங்கி போக்யத்தால் அங்கே இருக்க வேண்டும்/பொன் கற்பகம் எம் ராமானுசன்-மனசு வண்டு-கருப்பு தான்- இதை பொன் ஆக்கினார்/

ஓங்கி உலகு அளந்த உத்தமன்-ஓங்கி பெரும் செந்நெல் போல -அவன் திருவடி கீழ் இருந்த செந்நெலும் ஓங்கி இருந்தது/அங்கும் இங்கும்-கண்டு அனுபவிக்க வேண்டும்

/நிர்ஹேதுக கிருபை /போக்யத்தில்  மேல் விழுந்த வண்டு –என் நெஞ்சு-முன்புற்ற நெஞ்சு -என்பதால் மம காரம்மமகாரம் விட்டவரின் மம காரம்– ஸ்வாமி இடம் போனதால் /பட்டர் வைராக்கியம் உபதேசித்து திரு மேனி அலங்காரம்- கோவில் ஆழ்வார் என்ற நினைவால் //அழகிய வண்டு/ஒண் சீராம்-உயர்ந்த குணம்-/அம்பன்ன  கண்ணாள் யசோதை தன் சிங்கம்-காரியம் குணம் காரணத்தில் இருக்க வேண்டும்-பூவிலே சைத்யம்-குளிர்ந்து  – மார்த்வம்-மிருதுவாகி  நறுமணம்- என்கிற-தேன்-ஓடி வர -தெளி- நிர்மலமான -ஊடி உசா துணை-நெஞ்சினாரும் அங்கு ஒழிந்தாரே-கடல் கொண்ட கண் போல தசரதன் கண்-நெஞ்சினாரும்-மரியாதை -மகர நெடும் குழை காதர் இடம் சேர்ந்ததால்/மடகிளியை வணங்கினாள் போல/

நீர் இருக்க –என் நெஞ்சம் -தூது விட்ட பிழை யார் இடம் -என்னையும் மறந்து தன்னையும் மறந்தது/வருதல் இன்றியே–வார் இருக்கும் முலை மடந்தை இருக்கும் இடம் வைத்தானே /ஒழிந்தார்-வசவு அங்கு என் நெஞ்சு கொண்டாடுகிறார் இங்கு/நித்ய வாசம் /அமர்ந்து இருக்க வேண்டி- திரியாமல்/அன்பால் அதுவே ஈந்திட -பாட பேதம்-சினேக பூர்வமாக கொடுத்து அருள வேணும் /மாந்தல்-உண்டல்/ஸ்ரீ ருக்மிணி பிராட்டி -உபன்யாசம் கேட்டு ஸ்ரீ கிருஷ்ணன் குணங்கள் கேட்டு மனம் படிந்தது போல-அமுதனார் செப்ப மனம் -ராஷச விவாகம் அங்கு-வரிக்க துடித்தாள் போல இதுவும் தேனை குடிக்க போனது//ஷட் பதம்-அறு  கால சிருவண்டே–வேகமாக போகும் வீசும் சிறகால் பறக்கும்/தலையால் தரிக்க -முழுவதும் தாங்க- ஆச்சார்யர் பத்னி புத்திரன் திருவடிகள் ஆரும்//மந்திர ரத்னம்-ஆறு  பதம்-/உதடு துவயம் சொல்லி துடித்து கொண்டே இருக்கும்

/மனசும் ஷட் பதம் ஆனதாம் அதை நினைந்து கொண்டே இருப்பதால்/கயல் விழியை பார்த்து கொண்டே அவன் மீன் அவதாரம் எடுத்தானாம்தேசிகன்-ஷட் பதம் அனுசந்தித்தி கொண்டு போருகிற மனசு -சர்வ விலஷணமான வண்டு/இவர் எப்பொழுதும் ஷட் பதம் கொண்டாடுவதால்- ஸ்வாமி துவயம் கொண்டாடி கொண்டு இருப்பதால்-உனதடி போதில் ஒண் சீராம்-தெளி தேன் -பாபம் போக்க –யதீந்த்ரர் திருவடி பற்றினால்-அவர் பண்ணினதால் -திரு அரங்க செல்வனாரின் திரு பொலிந்த சேவடி-ஸ்ரீ ரெங்க நாச்சியார் முன் நிலையில் -பண்ணி அருளிய தேவரீரின் திரு வடிகளில்-உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே -அலவன்-நள்ளி-சிக்கி கொண்ட -வூடும் நறையூர்-இங்கு அமர்ந்து இட வேண்டி-நிழலும் அடி தாரும் போல இருக்க கோரி-

அடி கீழ் அமர்ந்து புகுந்து -தென் திரு அரங்கம் கோவில் கொண்டானே என்று கங்குலும் பகலும் திருவாய் மொழி அருளுகிறார்/தேவரீர் திருவடிகளை நினைப்பது கடமை/விதித்தால் இல்லை அனுபவித்து கொண்டு இச்சித்து இருந்தது /அதுவே ஈந்திட வேண்டும்//சரணாரவிந்த மகரந்தம் அபேஷித்து–வேறு ஒன்றும் -சர்வ கந்த சர்வ ரச-தேனே மலரும் திரு பாதம் பொருந்துமாறு /அத்தை கொடுக்கவா-என்னில்-இது அன்றி -ஈதே இன்னும் வேண்டிவது ஈதே –அமிர்தாசகிக்கு புல்லை இடுமினா போல /மிடற்றுக்கு கீழ் இழியாது நெஞ்சு புஜிக்காது/இனி மற்று ஓன்று காட்டி மயக்காதே- மோகிக்காதீர்-பகவத் விஷயம்- மற்று ஒன்றினை காணா-திவ்ய தேசங்கள் எல்லாம் கழித்தார்-/கற்ப்பார் ராமனை அல்லால் மற்றும் கற்பரோ/-இங்கு கண்ணனை கழிக்கிறார் /உ ன் அடியார் எல்லாரோடும் -ஆழ்வாரை கூட கழித்தார் -ஒக்க எண்ணி இருத்தீர்  அடியேனை-கலியன் திரு இந்தளூர் பாசுரத்தில்– மலையாள ஊட்டு போல அவர்/இப்படி நால்வர் -அமுதனார் -திருப் பாண் ஆழ்வார் / திருவடி / திரு மங்கை ஆழ்வார் -அனுபவம் -மற்று -என்பதால் /

-கதம் அந்ய கச்சதி–சிற்றின்பம் பல நீ காட்டி படுப்பாயோ-ஆழ்வார்/நெறி காட்டி நீக்குதியோ-சரம பர்வ நிஷ்ட்டை-சிறந்த நெறி /ஓம் நமோ நாராயண  அநந்யார்க்க சேஷத்வம் அநந்ய சரண்யன் அநந்ய போகன் -ஸ்வாமி இடம் அமுதனார்/உனது அடி போதில் அமர்ந்திட வேண்டி –   சேஷத்வம் நின் பால் போந்து-அநந்யார்க்க சரண்யம் ஆக பற்றினார் இத்தால்/ஏக மேவ மற்று ஓன்று இல்லை போல -/  ஈந்திட வேண்டும்– இது அன்றி ஒன்றும் மாந்தகில்லாது -அநந்யார்க்க போக்யத்வம்-பிராப்யம் சொல்ல வந்த திரு மந்த்ரம் அர்த்தத்தை இதில் அருளினார்-

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: