அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–99-தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும்-இத்யாதி

பெரிய ஜீயர் அருளிய உரை

தொண்ணூற்று ஒன்பதாம் பாட்டு -அவதாரிகை –
நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையேல் -என்றவாறே –
ஆனாலும் -ஜ்ஞான வ்யவசாயங்களை பங்கிக்கும் பாஹ்ய குத்ருஷ்ட்டி பூயிஷ்டமான
 தேசம் அன்றோ -என்ன -எம்பெருமானார் அவதரித்த பின்பு –
அவர்கள் எல்லாரும் நஷ்டர் ஆனார்கள் என்கிறார் –
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ் சடையோன்
சொற் கற்ற சோம்பரும் சூனியவாதரும் நான் மறையும்
நிற்கக் குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற் கற்பகம் எம்மிராமானுச முனி  போந்த பின்னே – – 99-
வியாக்யானம் –
தருக்கினால் சமண்  செய்து -பெரிய திரு மொழி -2 2-7 – – என்கிறபடியே -தர்க்க சாமர்த்த்யத்தாலே
ஸ்வ மத பரிபாலனம் பண்ணுகிற ஆர்ஹதரும் –
சமணரும் சாக்கியரும் -திரு வாய் மொழி -4-10 4- என்று அவர்களை எண்ணினால் இரண்டாம்
விரலுக்கு விஷயமாம் படி -அவர்களோடு தோள் தீண்டியாய் — பேய் போலே விடுதல் -பற்றுதலை-அறியாதே -பிடித்ததை பிடித்துக் கொண்டு நிற்கிற பௌத்தரும் –
தன்னை ஈஸ்வரன் என்று லோகம் ஆராதிக்க வேணும் என்று -அதுக்கு ஈடாக -தீர்க்க ஜடாதரனாய்க் கொண்டு
சாதனம் அனுஷ்டித்து -பகவத் அனுமதியாலே -மோஹ சாஸ்திரங்களைப் ப்ரவர்த்திப்பித்த –
ருத்ரனுடைய  வசனமான ஆகமத்தை அதிகரித்து இருக்கிற தாமசரான சைவரும் –
பிரமாண பிரமேய ப்ரமாதாக்களான இவை மூன்றும் இல்லை என்று சர்வ சூன்ய வாதம் பண்ணுகிற
மாத்த்யாமிகரும் -இவர்களைப் போல் அன்றிக்கே
ருகாதி பேதத்தாலே நாலு வகைப் பட்டு இருந்துள்ள வேதத்தை பிரமாணமாக அங்கீ கரித்து வைத்து –
திஷ்டத்சூ வேதேஷூ -என்கிறபடியே அது நிற்கச் செய்தே -அத்தோடு ஒரு சம்பந்தம் இல்லாத
அபார்த்தங்களைச் சொல்லி -மூலையடியே நடத்துகிற ப்ரஹீனரான குத்ருஷ்டிகளும் –
ச்ப்ருஹநீயமான -கல்பகம் போலே -பரமோதாரராய்-அது தன்னை நமக்கு பிரகாசிப்பித்தது அருளின
எம்பெருமானார் மகாப்ருதிவியிலே எழுந்து அருளின பின்பு -முடிந்து போனார்கள் .
ஸ்ரீ பாஷ்ய முகேன-தத் மதங்களை பங்கித்து – அசத் கல்பம் ஆக்குகையாலே -அவர்கள் நஷ்டர் ஆனார்கள்
என்று கருத்து –
சாக்கியர் என்றது -சாக்யர் -என்றபடி
மாத்யாமிகரும் சாக்கிய  வர்க்கத்திலேயாய் இருக்க பிரித்து எடுத்தது தந் மத க்ரௌர்ய விசேஷத்தைப் பற்ற –
லீலா வியாபாரம் -/ வாதத்தால் பாஹ்ய குத்ருஷ்டிகளை முடித்து -அருளினார் -நியாய சாஸ்திரம் -தர்க்கம் –ஜைனர்கள் -புத்தர்கள் -சாக்கிய பேய்கள் -பிடித்தத்தை கெட்டியாக விடாமல் இருப்பதே பேய் தனம் -பேயாழ்வார் திருவை விடாதால் போலே -பிரமாதம் -கவனக் குறைவு —மாத்யமிகர் புத்தரின் உள் பிரிவு சர்வ சூன்ய வாதம்
கற்பக வருஷ வாகனத்தில் அரங்கனாகிய கற்பகம் எழுந்து அருளுவார் -அனைத்தும் கொடுத்தாலும் தன் தாள் தந்திலன்
அதிகாரம் கொடுத்து அரங்கன் தாள் பெற்று தரும் -பொற் கற்பகம் எம் இராமானுச முனி
வேத மார்க்கம் பிரஷ்டாபனம்-செய்து அருளி –
ஞானம் அறிவு -அறிவாளி -அறியப்படும் பொருள் -க்ஷணம் நசிக்கும் என்று சொல்லும் மூன்று வகை புத்தர் இங்கே -சொல்லி மேலே சர்வ சூன்யவாதி
சப்த வாதிகள் –இருக்கு -இல்லை -இருக்கும் இல்லை இரண்டும் சொல்லலாம் போலே -பாஸ்கரன் கடாகாசம் பாடாகாசம் உபாதை -சரீரம் போனதும் ஒன்றாகும் –
ஸ்ரீ பாஷ்யாதி முகத்தால் இவர்கள் மாளும் படி பண்ணி அருளினார்-/செந்நெல் கவரி வீசும் -ஆராவமுதனுக்கும் திருக்   குருகூரில் ஆழ்வாருக்கும் மட்டுமே -/-9-மதங்களை காட்டி–காட்டாத  -8-க்கும் உப லக்ஷணம் –/மோக்ஷ பிரதத்வம் -தனியாக பிரித்து திண்ணன் வீட்டில் அருளி -சம்ப்ரதாயம் -சாதித்து அருளினார் ஆழ்வார் /கண்டது மெய் என்னில் காணும் மறையில் அறிவு கண்டோம் -கண்டது அல்லாது இல்லை எனில் -சாஸ்திரமே கண் கண்டிலம் குற்றம் -பிரத்யக்ஷ வாதம் நிரசனம்
கண்டது போலே வேதம் காட்டுமே -தேசிகன் -பரமத பங்கம் /உண்டால் பசி போகும் என்பதும் அனுமானத்தாலே தானே -பிரத்யக்ஷம் இல்லை –சிலருக்கு பசி வர உண்ண வேண்டுமே –பிரத்யக்ஷம் அனுமானம் விசுவாசம் இல்லாதவர் ஆப்த வாக்கியம் விஸ்வஸித்து -வேப்பம் கொழுந்து உண்டு -ஆப்த தமர் மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணன் அன்றோ -/த்ரஷ்டம்–அதிரஷ்டம் -கண்ணால் பார்க்க வில்லையே என்றால் -லோகத்தால் இறப்பதும் பிறப்பதும் உண்டே -ஜனத்தொகை கூட -பிரத்யக்ஷம் மட்டுமே உண்மை என்றால் -இருப்பவனே பிறக்க வேண்டுமே -சாஸ்திரம் சொல்வதும் உண்மையாகும்  /சப்த பங்கி -மூ வே ழு/ நித்யா நித்யா / பின்னம் அபின்னம் / சத்யா அசதியா -இப்படி மூன்றிலும் -ஸர்வத்ர சப்த பங்கி -அஸ்தித்வம் -இருக்கும் தன்மை / இருக்கலாம் -மீதி வாதங்களுக்கும் இடம் /இல்லாத இடங்கள் உண்டு -ஸியாத் நாஸ்தி -இல்லாமலும் இருக்கலாம் / சேர்ந்தும் ஸியாத் அஸ்திச்ச நாஸ்திச்ச / ஸியாத் அஸ்திச்ச அவயக்யத்வஞ்ச சொல்ல முடியாமல் போகலாம் /இது போலே /வைபாஷிகன் -ஜகத் பிரத்யக்ஷம் சித்தம் ஜகத் அது மட்டும் உண்டு –பரமாணு சங்காதம்-தத் விஷய ஞானமும் க்ஷணிகம் -இதில் ஸ்திரத்தவ புத்தி சம்சாரம் -க்ஷணிக புத்தி மோக்ஷம் -என்பான் /நாஸ்தித்வ விசிஷ்டா ப்ரஹ்மம் -அஸ்தித்வ விசிஷ்டா ப்ரஹ்மம் -உளன் எனில் உளன் அவ்வ்ருவுகள் அவன் உருவம் அவ் உருவுகள்  –உளன் அலன் எனில் அவன் அறிவும் அவ் அருவிகள் /அபாயம் -சூன்யம் -கட உத்பத்தி மண்ணுக்கு அபாவம் -அதனால் சூன்யம் / உத்பத்தியே அபாவம் -சொல்லி தர்க்கம் உக்தியாலே நிரசனம் / சூன்யம் ஸ்தாபிக்க எண்ட்யஹா பிரமாணம் -அது உண்மையா பொய்யா -உண்மை என்றால் சர்வ சூன்யவாதம் நிரஸ்தம் -ஸர்வதா அனுபவத்தே ச /மகாதீர்கதவாதிகரணம்–அணுவை பாகமாக்கலாம் வருமே -அணு-சேர்ந்து த்வி அணு –நூல் சேர்ந்து வஸ்திரம் போலே -ஓட்டிக்காத்த பாகம் இருக்குமே -பேதிக்கமுடியாத ஸ்வரூபம் பாதிக்கும் -பரமாணு -அவையாவும் இருந்தால் அதுக்கும் காரணம் இருக்க வேண்டு வருமே – ஸூ க துக்கங்கள் -பரமாணுவில் இருக்குமா ஆத்மாவிடத்தில் இருக்குமா -பிரதம கிரியா -எங்கு -யார் அனுபவிக்க -/நிர்விசேஷ ப்ரஹ்மம் -சின் மாத்ர ப்ரஹ்மம் -வாக்ய ஜன்ய ஞானத்தால் பிரம்மம் போய் மோக்ஷம் என்பான் -சப்த வித அநுபவத்தை மகா பூர்வ பக்ஷம் -/உபாதி கண்ணாடி போலே உபாதி -பாஸ்கரன் -/ ப்ரஹ்மத்துக்கு சித் அசித் ப்ரஹ்மம் பகுதி அம்சம் என்பான் யாதவ பிரகாசம் /நமுசி பிரக்ருதிகள் -விஷ்ணு பக்தர்களாக இருந்து வைத்தே இந்த்ராதிகளை –நலிய -விப்ரபத்தியை பிறப்பிக்க -தம் பக்கல் உள்ள ஆதரவை நீக்கி சம்ஹரிக்க -ருத்ரனை ஏவி -மோஹனார்த்தாம் -/ஞாத்ருத்வம் ஜீவன் -கர்த்ருத்வம் பிரகிருதி -கண் தெரியாதவன் நொண்டி இருவரும் சேர்ந்தே -கபிலர் சாங்க்ய -நிரீஸ்வர சாங்க்ய /
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை

அவதாரிகைகீழ்ப் பாட்டிலே எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு -நம்மை நம் வசத்தே விடுமே -என்று
இவர் மகா விச்வாசத்தோடே சொன்னவாறே -அது சத்யம் -ஆனாலும் -சமயக் ஞானமும் -தத்
அனுரூபமான அனுஷ்டானமும் -இவ்விரண்டையும் அடைவே அறிவிப்பிக்க கடவதான
வேதம் நடையாடாதபடி  -அத்தை மூலை யடியே நடப்பித்துக் கொண்டு உபத்ராவாதிகளான
பாஹ்ய குத்ருஷ்டிகள்  தனிக்கோல் செலுத்தும் தேசம் என்பது என்ன -சமஸ்த புருஷார்த்த
பிரதத்வத்தாலே -கற்பகம்-என்று சொல்லப்படுகிற எம்பெருமானார் இந்த மகா பிர்த்வியில்
அவதரித்த பின்பு அப்படிப்பட்ட நீச சமய நிஷ்டர் எல்லாரும் சமூலகமாக நஷ்டமாய் போனார்கள் -என்கிறார் –
வியாக்யானம் -தற்கச் சமணரும் – தருக்கினால் சமண  செய்து -என்கிறபடியே பிரமாண அநு குணங்களாய்
இருந்துள்ள தர்க்கங்களால் அன்றிக்கே -ஸ்வ அபிநிவேச அநு குணங்களான தர்க்கங்களாலே ஒரு மதத்தை
கல்பித்து -அத்தை பரிபாலித்து கொண்டு போருகிற ஆர்ஹதரும் -அன்றிகே –தர்க்க   சமணரும் –பரமாணு-காரண வாதிகளாய் -பாஷாண கல்பா முக்தி -என்றும் சொல்லுகிற நையாயிக வைசேஷிகர்களும்-வேத வைதிக பிரத்வேஷிகளுமான ஜைனரும் என்றுமாம்   –சமணரும் என்றது ஷபனகர் என்றபடி –
நையாயிகரும்  வைசேஷிகரும்-தர்க்க  பிரதான வாதிகள் ஆகையாலே –தர்க்க  என்று அவர்களை-நிர்தேசிக்க தட்டில்லை – சாக்கியப் பேய்களும் -வேத பாஹ்யரை என்னும் போது இரண்டாம் விரலுக்கு விஷயமாம் படி
ஆர்ஹதரோடு தோள் தீண்டியாய்-த்யாஜ்ய உபாதேய விவேக லேசம் இன்றிக்கே
க்ரஹீத க்ராஹி களான பௌ த்தரும்சாக்கியர் என்றது சாக்யர் என்றபடி –
ஜைனர் ஆகிறார்கள் -அங்கீ க்ர்த்யது சப்தபங்கி குஸ்ரிதம் ச்யாதஸ்தி நாஸ்த்யாதிகாம் விச்வம் த்வத்-விபவம் ஜகஜ்ஜி நமதே நேகாந்த மாச ஷதே –    என்கிறபடி கார்ய காரண ரூபேண ஜகத்து பின்னாபின்னமாயும்
நித்யா நித்தியமாயும் -சத்யா சத்தியமாயும் இருக்கும் -என்றும் -ச்வேதே ஹமா நாஹ்யாத் மநோமோஹாத்
தேஹாபிமாநின –  க்ர்மீகீடாதி பர்யந்தம் தேக பஞ்சரவர்த்தினா -என்கிறபடியே ஆத்மாக்கள் -ஸ்வ ஸ்வ கர்ம
அனுகுணமாக சரீரத்தினுடைய பரிணாமத்தையே தங்களுக்கும் பரிணாமாக கொண்டு இருப்பார்கள் -என்றும் –
பிராணி ஜாத மஹிம் சந்த மநோ வாக் காய  கர்மபி -திகம்பராஸ் சரந்தஏவ யோகினோ
பிரம சாரிணா–மயூரபிஞ்ச ஹச்ஸ்தாச்தே க்ர்தவீராச நாதிகா –   பானிபாத்ரேஷூ புஞ்சானா
லூனகேசாச்த  மவ்நின-சதா ஷபன காசர்யா க்ர்தமந்தார துராசதா –குருபதிஷ்ட மார்கேன
ஜ்ஞான கர்ம சமுச்சயாத் –மோஷோ பந்த விரக்தச்ய   ஜாயதே புவி கச்யசித் -என்கிறபடி
மல தாரண ஹிம்சாதிகளாலும் ஆத்மா ஞானத்தினாலும் பிரக்ர்தி விநிர்முக்தராய் ஊர்த்த்வ  கதியை
ப்ராபியா நிற்கை மோஷம் என்றும் வேதாந்த விருத்தார்த்தங்களை வாய் வந்த படி பரக்க
சொல்லுமவர்கள் –சமணர் என்றது சார்வாகரையும் கூட்டி -ஈட்டிலே இவரையும் சேரப் பிடித்து இறே எடுத்தது
அவர்கள் ஆகிறார்கள் -பிரதிவ்யாப ச்தேஜோ வர்யுரிவிதி தத்வானி -என்கிறபடியே -பிரதிவ்யாதி பூத-சதுஷ்டயமே தத்வம் –ஆகாசாதி பூதாந்தரம் இல்லை -என்றும் தேப்யஸ் சைதன்ய கிண்வாதிப்யோமதசக்திவத் -என்றும்-
க்ரமுகபல தாம்பூல தளாவயவாதி ஷூ பிரத்யேக வித்யமா நச்யாபி ராகச்யோ வாவயவி நிசம்யோக
விசேஷாத்தே    ஹாரம் பக பரமாணு சம்ச்லேஷ விசேஷா தேவ தேக சைதன்யா விர்ப்பாவோ நா நுபன்ன –
என்றும் சொல்லுகிறபடியே ஸூரா பூரித சரம பஸ்த்ரிகையை ஆதபத்திலே வைத்தால் -சலனாதி விகாரங்கள்-தன்னடையே தோற்றுமா போலேயும் –   வெற்றிலையும் பாக்கையும்     சுண்ணாம்பையும் சேரப் பிடித்து-மெல்லும் அளவில் ஒரு விசேஷம் பிறக்குமா போலேயும் -அந்த ப்ரிதி வியாதி பூதங்களுடைய கூட்டரவிலே

 சைதன்யம் என்று ஒரு தர்மம் பிறக்கும் என்றும் –

ப்ரத்யஷ சம்யமேவாதி நாஸ்த்ய த்ரஷ்ட த-   அதர்ஷ்டவாதி பிச்சாபி நாத்ர்ஷ்டம் த்ர்ஷ்டமுச்ச்யதே –
க்வாபித்ரஷ்ட ம த்ர்ஷ்டஞ்சே தத்தர்ஷ்டம் ப்ரவதேகதம் -நித்யாத்ர்ஷ்டம் கதம் சத்ச்யாத் சச்சஸ்ரின்காதி
சந்நிபம் -ந கல்ப்யன் சுக  துக்காப்யாம் தர்மாதர்மவ்பரைரிஹா -ஸ்வபாவேந ஸூ கீ  துக்கீ
பவேன்னான்யத்தி காரணம் -நிசிசக்ரே யேத் கோவாகொகிலாங்க பிரகூஜயேத் –   ஸ்வபாவ வ்யதிரேகென
வித்யதே நாச்ய காரணம் –   இஹலோகாத்பரோ நான்ய ஸ்வ ச்வர்கொஸ்தி நார்கோ நவா – என்கிறபடியே
ப்ரத்யஷ த்ர்ஷ்டமான அர்த்தமே உள்ளது -வேறு ஒன்றும் இல்லை –அந்த சைதன்யத்துக்கு உண்டான
ஸூ க துக்கங்களே ஸ்வர்க்க நரகங்கள் -வேறு சில புண்ய பாபங்களும் -அவற்றால் உண்டான
தர்மாதர்மங்களும் இல்லை என்றும் -மோஷச்து மரண ம பிராண சம்ஜ்ஞவாயு நிவர்த்தனம் –
அதஸ் தத்தர்த்தன்   நாயாசம் கர்த்துர் மதி பண்டித -என்கிறபடியே அதனுடைய புரிவாகிற
மரணமே மோஷம் -அவ்வருகு ஒன்றும் இல்லை -என்று ஸ்ருதி விருத்த பிரக்ரியையை ஆக்கிரமித்து
சொல்லுமவர்கள் –

நையாயிக வைசேஷிகர் ஆகிறார்-அக்ஷபாதர் கணாதர் இருவரும் இந்த -மத ப்ரவர்த்தகர்கள்  -ப்ரத்யஷ அனுமான உபமான சப்தா பிரமாணா நி -என்றும் -த்ரிதா பிரமாணம் ப்ரத்யஷ அனுமான ஆகமாதிதி -த்ரி ப்ரேதை பிரமானைஸ்து –  ஜகத்க்ர்த் தரவகம்யதே -தஸ்மாத் ததுக்த கர்மாணி குர்யாத் தஸ்யை வதர்ப்த்யே பக்த்யைவசார்ச்ய நீயோ ஸௌபகவான் பரமேஸ்வர-தத் பிரசாத ந மோஷஸ் ஸ்யாத் காணோ பரமாத்மக-காணோ பரமேத்யாத்மா -பாஷாணவத வஸ்த்தித -என்றும் சொல்லுகிறபடியே -பிரத்யஷாதிகள் நாலும் கூட  பிரமாணம் என்றும் -சப்தம் அனுமான வித்யா பிரமாணம் ஆகையாலே -பிரத்யஷாதிகள் மூன்றுமே பிரமாணம் என்றும்-ஜகத்துக்கு உபாதான காரணம் பரமாணுக்கள்ஆநுமானி கேஸ்வரன்  நிமித்தகாரணம் என்றும்-(சாக்ஷி சர்வேஸ்வரன் -குயவன் போலே தான் மண் போலே  இல்லை -என்பர் ) -சம்சாரம் அநாதி -ஈச்வராவ்பாஸ்தியாலே சுக துக்க ஞானங்கள் நசித்து -பாஷாண கல்பனாய் இருக்கை மோஷம்     யென்றும் உத்ப்ரேஷிக்குமவர்கள் –

தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும் -தன்னை ஈஸ்வரன் என்று பிரமித்து லோகம் எல்லாம்-ஆராதிக்க வேண்டும் என்று -அதுக்கு தகுதியாக தீர்க்க ஜடையைத் தரித்து கொண்டு -சாதனா-வேஷத்தோடு இருந்து -மோஹா சாஸ்தராணி காராய -என்கிறபடியே -பகவத் அனுமதியாலே மோஹா சாஸ்த்ரத்தை-பிரவர்த்திப்பித்த ருத்ரனுடைய  வசனமான ஆகமத்தை அதிகரித்து போந்து -அதி தாமசராய் இருக்கும் பாசுபதரும் –பௌ த்தரை எடுத்த உடனே பாசுபதரை எடுத்தது –அவர்களோபாதி  இவர்களும் வேத பாஹ்யர் என்னும் இடம்  தோற்றுக்கைக்காக –
(பசய்து  அசமஞ்சஸ்யாத் -சாஸ்திரம் உடன் விரோதிக்கும் படியால் -)-பிரதான காரணத்வா வுப்யுகம சாம்யாத் சாம்க்ய நிராச நந்தர பாவித்வே பாசூபத நிராசச்ய-ப்ராப்தே பிசதவ் கதா ஆர்  ஹதம நிராஸா நந்தரம் தத் பிரதிஷேப தச்யாத் யந்த வேத பாஹ்ய-த்வஜ்ஞாப நாயக்ர்தா -என்று சுருதி பிரகாசார்யரும் -பத்யுர சமாஞ்ஜச்யாத்  -என்கிற அதிகரணத்துக்கு சங்கதி-சொல்லும் பொழுது அருளிச் செய்தார் இறே-அவர்கள் ஆகிறார் –பிரதானம் ஜகத்து உபாதான காரணம் –ஆகம சித்த ஈஸ்வரன் நிமித்த காரணம் -என்றும் -முத்ரி காஷாட் கதத் வஜ்ஜ பரமுத்ரா விசாரத பாகாச நஸ்த-மாத்மானம் த்யாத்வா நிர்வாணம் ர்ச்சதி -கண்டிகாருசி கஞ்சசைவ குண்டலஞ்ச-சிகாமணி -பச்மயஞ்ச்ஜோப வீதஞ்ச முத்ராஷட்கம் பிரசஷதே -ஆபிர் முத்ரித தேஹச்து-நபய இஹா ஜாயதே -ருத்ராஷ கங்கணம்  ஹஸ்தே ஜடா சைகா சமஸ்தகே -காபாலம் பஸ்ம-நா ஸ்நானம் த்யானம் பிரணவ பூர்வகம் தீஷா பிரவேசமா த்ரேன ப்ராஹ்மானோ பவதி-தத் ஷனாத்-காபாலம் வ்ரதமாஸ்த்தாய யதிர்பவதி மாநவ-என்றும்     சர்வஜ்ஜ ருத்ர ப்ரகோத்த தாஷர  ராசியான ஆகமத்திலே சொல்லுகிறபடி முத்ரிகாஷட்க தாரண-பாகாச நஸ்தாத்மா த்யான ஸூ ர கும்பஸ்தாபச்த தேவதார்ச்ச்சனா  மூடாச்சார ச்மச்சான பசம ஸ்நான-பிரணவ பூர்வ கத்யா நாதி கர்ம அனுஷ்டானத்தாலே -பசுபதி சாரூப்யத்தை பெருகை மோஷம் ஆகிறது என்றும்
ஸ்ருத்யத்ந்த விருத்தார்தங்களை அத்யந்தம் ஆதரித்து சொல்லுமவர்கள் –
சூனிய வாதரும் -சூன்யமே ததுவ்வம் என்று சொல்லுகிற மாத்யாமிகரும் சாக்ய வர்க்கத்திலேயாய் இருக்க-பிரித்து எடுத்தது தந் மத க்ரௌர்யத்தைப் பற்ற –பௌத்த மத ப்ரவர்த்தகர் –வைபாஷிகன் என்றும் –
ஸௌ த்ராந்திகன் என்றும் -யோகாசுரன் என்றும் -மாத்யமிகன் -என்றும் நாலு வகை பட்டு இருப்பார் இறே -இவர்களுள் முதலில் சொன்ன மூவர்க்கும்  ஸ்வாப்யுபதகமாய் விஜ்ஞான ரூபமாய் இருக்கிற-வஸ்துவினுடைய ஷணிகத்வம் சாமானமாய் இருக்கும் –  பூத பௌதிகங்களும் சித்த சைத்தன்யங்களையும்-ஒழிய வேறு சில ஆகமாதிகளை அவர்கள் அங்கீ கரித்தது இல்லை -இவர்களிலே வைபாஷிகன் ஆனவன்-வி பாஷை –மாற்றி பேசுவதால் வைபாஷிகன் -பரமாணு சன்காதாத்மகமாய் பிரதிஷ சித்தமாய் கொண்டு இருக்கும் ஜகத்து என்றும் -தத் விஷய ஞானம் ஷணிகம் என்றும் –
ஞான விஷயமான பாஹ்யார்த் தங்கள் எல்லாம் உத்பத்தி விநாசங்கள் உடன்  கூடி இருக்கும் என்றும் –
ஷணிக விஞ்ஞான சந்தானமே ஆத்மா என்றும் -இதில் ச்த்திரத்வ புத்தி சம்சாரம் -அச்த்திரத்வ புத்தி மோஷம்

என்றும் சொல்லுமவன் –ஸௌத்ராந்திகன் ஆகிறான் -சூத்ர அந்தம் வரைக்கும் கேட்டவன்-என்றபடி  –ஞானத்தில் ஸ்வ ஆகாரத்தை சமர்ப்பித்து -நஷ்டமே போந்த வர்த்தங்கள்-எல்லாம் ஞானகதமான நீலாத்ய ஆகாரத்தாலே அனுமேயங்களாய்  இருக்கும் என்றும் -அர்த்தவைசித்த்ரயகர்தம்-ஞானவைசித்ரியம் என்றும் அனுமான சித்தம் ஜகத் -தத் விஷய ஞானம் ஷணிகம் -அந்த ஷணிக விஞ்ஞானம் தானுமே-ஆத்மா –இதில் ச்த்திரத்வ புத்தி சம்சாரம் அச்த்திரத்வ புத்தி மோஷம் என்றும் சொல்லுமவன் –

யோகாசாரன் ஆகிறான் -அர்த்தங்களைப் போலே சாகாராங்களாய்  இருந்துள்ள ஞானங்களும் ஸ்வ மேயவிசித்தரங்களாய்
இருக்கையாலே -அர்த்தவைசித்யர்த்தத்தாலே ஞான வைசித்ரியம் சொல்ல ஒண்ணாது என்றும் ஞானமே உள்ளது
பாஹ்யார் தங்கள் ஒன்றுமே இல்லை என்றும் -அந்த ஞானம் ஷணிகம் என்று அறிகை மோஷம் என்றும் சொல்லுமவன் –
யோகாசாரோ ஜகாத பல பத்யந்திர ஸௌத்ராந்திகஸ்து  ஈவைசித்ரியாத நுமதி பதம் வக்தி ஸௌ த்ராந்தி கஸ்து
ப்ரத்யஷம் தத் ஷணிக  மிதே ரெங்கநாத திரையோ பஞ்ச்ஞாநாத் மகத்வ ஷன பு மூகேத சஷி தாந்தத் ஷிபாமா -என்று

சந்க்ரகேன இம் மூவருடைய மதங்களையும் உபன்யாசித்து அருளினாரே பட்டரும் – மாத்யாமிகன் ஆகிறான் -பிரமாணமும் பிரமேயமும் பிரமாதாவும் இவை உண்டு என்று அறிவது ப்ரமம்-சூன்ய வாதம் ஒன்றுமே சுகத்துக்கு பராகாஷ்டை என்றும் -கீழ் சொன்ன மூவரும் சித்த சைதன்யங்கள் உண்டு-என்றும் -ஷணிக விஞ்ஞானம் உண்டு என்றும் -சிஷ்யனுடைய பிரதிபத்தி ஸௌ கர்யார்த்தமாக சொன்னார்கள்

இத்தனை என்றும் -நசன் நாசன் நசதசத் நசாப்ய நுபயாத்மகம் -சதுஷ்கோடி விநிர்முக்தம் தத்வம் மாத்யமிகோவிது –
என்கிறபடியே சத்தும் இன்றிக்கே அசத்தும் இன்றிக்கே -சத் அசத்தும்  இன்றிக்கே -சத் அசத் விலஷணமும் இன்றிகே -இந் நாலு கோடியிலும் உத்தீர்ணமாய் இருப்பது ஒன்றே தத்வம் என்றும் சூன்யத்தில் சூன்யம் என்று அறிகையே-மோஷம் என்றும் உத்ப்ரேஷிக்குமவன் –
நான் மறையும் நிற்க குறும்பு செய் நீசரும் -அந்த பௌத்தாதிகளைப் போல் அன்றிக்கே -ரிகாதி பேதென
நாலு வகைப்பட்டு இருந்துள்ள வேதங்களை பிரமாணமாக அங்கீ கரித்து வைத்தும் – அவற்றுக்கு உப பிரமண
உப ப்ரக்மிதங்களான தாத்பர்ய விஷய பூதார்த்தங்களைச் சொல்லாதே -சர்வார்த்தான் விபரீதான்ஸ்ஸபுத்திச்சா
பார்த்ததாமசீ -என்கிற தாமச புத்தியாலே -விபரீதார்த்தங்களை கற்பித்து     -அவற்றை மூலை அடியே நடப்பித்து
லோகத்தாரை தம் தாமுடைய துஸ் தர்க்கத்தாலே மோஹிப்பித்து-பிபேத் யல்ய ஸ்ருதாத்  வேதோமாமயம் பிரத்யஷ்யதி –
என்கிறபடியே வேத பிரதாரகர் ஆகையாலே -எதி ப்ரஹீனரான மாயாவாதிகளும்குறும்பு செய் நீசர் என்றது –
சங்கர பாஸ்கர யாதவர்கள் மூவரையும் சேரப் பிடித்து –அம மூவருக்கும் பிரமாணம் பிரமேயம் ஒன்றாய் இருக்கும் இறே –
சங்கரன் ஆகிறான் -சதேவ சோம்யே தமக்ர ஆஸீத்  ஏகமேவாத்மதீயம் -என்கையாலே
நிர்விசேஷ சின் மாத்ரமே பிரம்மம் -என்றும் -ஏவம் ஜாக்ரத் பிரபன்ஜோயம் மயிமாயா விஜ்ம்ர்மித -என்கையாலே -இந்த பரிதர்சயமானமாய் இருந்துள்ள ஜகத்து மாயா கல்ப்பிதமாய் மித்யா பூதமாய்-இருக்கும் என்றும் –இந்த்ரோ மாயோ புரு ரூப ஈதியதே -என்கையாலே அந்த பிரம்மம் தானே மாயாசபளிதமாய்-
கொண்டு –பிரமிக்கை சம்சாரம் என்றும் -இத்தை கட்டி கொள்ளவும் சொல்லுகையாலே தத்வம்பதசேதி-வஸ்த்துக்களுடைய ஐக்ய  பாவனையாலே  -அந்த ப்ரமம் போகை-மோஷம் -என்றும் சொல்லுமவன் –
பாஸ்கரன் ஆகிறான் -அவித்யோ பப்ப்ரக்மிதம்  பிரம்ம ஜீவ இத்யபிதீயதே -என்கையாலே-அந்த பிரம்மம் தானே புத்தி இந்திரியாதி ரூபமாய் -சத்தியமாய் இருந்துள்ள –உபாதியோட்டை
சம்சர்க்கத்தாலே ஜீவ பாவத்தை பஜித்து -பிரமித்து கொண்டு போருகைசம்சாரம் ஜகத்து சத்யம் என்றும் –
சத்யமான பந்தத்துக்கு ஜ்ஞான மாத்திர நிவர்த்தயம் கூடாது ஆகையாலே -வித்யாஞ்சா வித்யாஞ்சா யஸ் தத்வே
தோபயம்சஹா –வித்யயாம்ருத்யம் தீர்த்தவா வித்யயாம்ரத் தமஸ் நுதே -என்கையாலே -ஸ்வ வர்ணாஸ்ரம
தர்மோ பேதமாய்     வேதமாய் -தத்வமஸி – இத்யாதி வாக்ய ஜன்ய ஞான பூர்வகமாய் இருந்துள்ள உபாசனாத்மாக
ஞானத்தாலே அந்த உபாதி நசித்தவாறே -கடத்வம் சே கடகாசோ நபின்னோ நபசாயதா -என்று கடாத்யுபாதி நாச
அநந்தரம் தத்வ சின்னமான ஆகாசத்துக்கு மகா ஆகசத்தொடே ஏகி பாவம் உண்டாகிறது போலே உபஹிதாம்சமான

ஆத்மாவுக்கு அனுபஹிதாம்சமான பிரம்மத்தோடு ஏகி பாவம் மோஷம் ஆகிறது என்று சொல்லுமவன் – யாதவன் ஆகிறான் -அத பிரம்மம் தானே சத்தியமாய் -பாரமார்த்திகமாய் -ஸ்வ ஸ்வாத் பின்னமான-சிதசித் விச்வகாத்மாக பிரபஞ்சமானது -ஸ்வ ஸ்வாத் பின்னம் என்று பிரமிக்கைசம்சாரம் -வித்யாஞ்சா வித்யாஞ்சா -என்றும் உபாப்யாமே வபஷாப்யாம் யதாகே பஷணாம் கதி -ததைவஞான கர்மப்யாம்ப்ராப்ய தே பிரம்ம சாஸ்வதம் -என்றும் சொல்லுகையாலே ஞான கர்ம சமுச்ச்யத்தாலே-அந்த பேத ஞானம் நசித்துப் போகை மோஷம் என்று சொல்லுமவன் –இந்த மதங்கள் எல்லாம் ஸ்வ அஞ்ஞாதி-லங்கணம் பண்ணிப் போருகிற அசூர ராஷசாதிகள் மோகிபபைக்காக-தானாயும் ருத்ரனைக் கொண்டும்-சர்வேஸ்வரன் ப்ரவர்த்திப்பிதவை இறே –இவ்வர்த்தம் -புத்தோ நாம மு நிர்ப்பூதாய மோஷ இஷ்யாமி-மானவான் தத பஸ்சாத் பவிஷ்யந்தி முண்டா காஷாய வாசச -தேஷா மல்பதரோதர்ம இஹலோகே பரத்ரச -தேஷாம் தத்தஞ்ச புக்தஞ்ச பஸ்மி பவந்தி  காஷ்டவத் -விப்ராஸ் ஸ்ராத் தேஷ்வதாச்யந்தி மயிபுத் தத்வமாகத -அல்பதோ யாஸ்த தோமேகா – அல்ப சச்யா வசுந்தரா -அல்ப ஷீராச்த தோகாவ -அல்ப வித்யாசா பிராமணா -நிவர்த்த யஞ்ச  ஸ்வாத்யாய பிண்டோதக விவர்ஜிதா -அனன்யா   எஷ் வதீயந்தே ப்ரக்மனோ  ஸௌ சவர்ஜிதா அக்னி ஹோத்ராச்ச நச்யந்தி குரு பூஜா பரண ச்யாதி-பிராமணாஸ்  சர்வ யக்ஜேஷு பிரசாந்தி சத தஷிணா-தத் பிரஜா பிரளயம் யார்ந்தி காலக தர்மேன சோதிதா  நஸ்ருன் வந்தி பித்து புத்ரா நச்துஷா நச ஹோதரா-ந ப்ர்த்தயா ந களத்ரபாணி பவிஷ்யத் யதயோத்தரம் -என்று மகா பாரதத்தில் மோஷ தர்மத்திலும் சர்வேஸ்வரன்-தானே சொன்னான் இறே   ருத்ரன் ஏகாதசி தர்மத்தை பரக்க சொல்லிக் கொண்டு போந்து அத்திவசத்திலே பாஷாண்டிகளுடனே-சல்லாப சகவாசாதிகள் பண்ண ஒண்ணாது என்று பிரசன்காத் சொல்லக் கேட்ட பார்வதி யானவள் -ஆகில்நீர் அவர்களுடைய இந்த நிஹித சிஹ்னங்களை தரித்து கொண்டு இருப்பான் என் –  என்று கேட்க -நமுசாத்யாம ஹாதைத்யா புரஸ்வயாம் புவேந்த்ரே -என்று தொடங்கி அந்த ராஷசர்கள் விஷ்ணு பக்தராய் இருந்து வைத்ததே-தத் பக்தரான இந்த்ராதிகளை பாதித்து -அவர்களுடைய ஸ்தானங்களை ஆக்ரமித்த வாறே அவர்களுடைய சர்வேஸ்வரன்-ஆன ஸ்ரீ மன் நாராயணன் -பக்கலிலே சென்று சரணம்புகுந்து தங்களுக்கு வந்த ஆபத்தை விண்ணப்பம் செய்யக் கேட்டு –அந்த ராஷசர்கள் ஸ்வ பக்தராய் ஸ்வ அஞ்ஞாதி லங்கனம் பண்ணினார் ஆகையாலே அவர்களுக்கு தன்னளவிலே- விப்ப்ரபத்தியை பிறப்பித்து பின்பு அவர்களை சம்ஹரிக்க கடவோம் என்று நினைப்பிட்டு –இத்யா கர்ணயா ஹரேர் வாக்கியம் தேவோ நாம பயார்த்தினாம் -நான்ஸ்வ வ்ர்த்தான்விதி-த்வாத்மாமஹா புருஷோத்தம -ஸ்ரீ பகவான் உவாச -த்வஞ்ச ருத்ர    மகா பாஹோ மோஹோநார்த்தம்-ஸூ ரத்விஷாம் பாஷண்டா சரணம் தர்மம் குருஷ்வ  ஸூ ர சத்தம –தாமஸா நி   புராணா நி-ரசயச்வசதான் பிரதி -மோகனா நிச சாஸ்தராணி த்வம் குருஷ்வ  மகா மாதே -என்று சொல்லிக்கொண்டு போந்து -வம்சதாம் ஸ ச மகாமுனி -தவ சக்த்யா சமா விச்ய குருஸ் வஜ கதோ ஹிதம்கதயன் சேவதேவிப்ரா தாமஸ நிஜ கத்ரயே  -புராணா நிச சாஸ்தராணி த்வத் பரேநேப பிரமஹித -தாதாபா சுபதாம் சாஸ்திரம் த்வமே குரு ஸூ வ்ரத-கங்கா ள ந்ஜ்சைவபாஷண்ட மகா சை வாதிபேதித -அவலம்ப்ய மதம் சமயக் வேத பாஹ்யாத் விஜோத்தமா -பஸ்மாதி தாரணாஸ் சர்வே    பபூவுஸ்தே-ந சம்சய –த்வாம் பரத்வே ந சம்சந்தி சர்வ சாஸ்த்ரேஷூ தாமஸ  -அஹமப்ய வதாரேஷு த்வாஞ்ச ருத்ர மகா பாலா –தாமஸ நாம்  மோஹா நாரத்தம்  பூஜயாமி யுகே யுகே —மதமேத வஷ்டப்ய ரதன்யேவன சம்சய -என்று இப்படி-நியமித்து  அவர்கள் விஸ்வசிக்கைக்காக நீ அந்த சிஹ்னங்களை தரித்து கொண்டு இருக்க வேணும்-என்று சொன்னவாறே -நான் தரித்து கொண்டு இப்படியே இரா நின்றேன் என்று அவளுக்கு பிரத் யுத்தரம் சொல்லி – ப்ரதமம் ஹிமையைவோக்தம் சைவம் பாஸூ பதாதிகம் -மத்ஸ் சக்த்யாவேசி தைர் விப்ரை -சம்ப்ரோக்த்தா நிதத பரம் -மாயாவாத மசஸ் சாஸ்திரம் பிரசன்னம் பௌ த்யமுச்ச்யதே –மயைவகதிதம்-தேவி கலவ் ப்ராஹ்மன ரூபிணா -அபார்த்தம் சுருதி வாக்யானாம் தர்சிதம் லோக கர்ஹிதம் –கர்ம ஸ்வரூபவத்யாஜ்யம்யத் அத்ரைவ பிரதிபாத்யே -சர்வ கர்ம பர்ப்ரஷ்டம் விகரம ஸததம்ததுச்யதே-பாச ஜீவயோரைக்யம் மயாத்  பிரதிபாத்யே    ப்ரம் ஹனேப்ய ப்ரம்ரூபம் நைர்குண்யம் வஷ்யதேமையா-சர்வச்ய ஜகதோ   பார்த்த மோகனார்த்தம் கலவ் யுகே வேதார்த்த மன் மகா சாஸ்திரம் மாயா வாதம-வைதிகம்  மயைய வஷ்யதே தேவி அஸ்தாம் நாச காரணாத் என்ற பின்பு –ருத்ரன் தானே சொன்னான் என்று பாத்ம உத்தர காண்டத்திலே உமா= மகேச்வர-சம்வாதத்திலும் -பரக்க சொல்லப் பட்டது இறே -இப்படி பாஹ்ய சமயங்களையும் குத்ருஷ்டி-சமயங்களையும் எடுத்தது -1–சாங்கியர்  2-யோகிகள்-3- பாட்டர் -4-ப்ரபாகரர்-5- ஏகாயனர் ஐவருக்கும்-உப லஷணம் -ஈட்டுக் காரர் இவ் ஐந்து மதங்களையும் எடுத்தார் இறே -அவர்களோடு ஒக்க-சாங்கிய யோகிகள் ஆகிறார் -சதேவ சொம்யேத மகர ஆஸீத் -என்றும்  -சத்வம் ரஜஸ் தம இதி குணா-பிரகிருதி சம்பவா -என்றும் -சொல்லுகையாலே -சத்வர ஜஸ்த மோ மயமாய் சச் சப்த வாச்யமான-பிரதானமே ஜகத் காரணம் என்கிறது என்றும் -அஹங்காரவி மூடாத்மா கர்த்தா ஹமிதி மந்யதே -என்கையாலே ஆத்மாவுக்கு கர்த்த்ரத்வம் பிரக்ரிதி சம்சர்க்காயத்தம் இத்தனை ஒழிய ச்வாபாவிக்கம்-அன்று என்றும் -பிரக்ருதே க்ரிய மானானி –  என்கையாலே அந்த பிரக்ருதிக்கே கர்த்ரத்வம் உள்ளது என்றும்பி-ரகிருதி புருஷ விலஷணாய் கொண்டு வேறு ஒரு ஈஸ்வரன் இல்லை என்றும் -அந்த பிரக்ருதியோடு-ஆத்மாவுக்கு உண்டான அநாதி சம்பந்தம் சம்சாரம் என்றும் –பிரகிருதி புருஷ விவேகமே மோஷம் என்றும்சொல்லுமவர்கள் -பாட்ட பிராபகர் ஆகிறார்கள் –ஆத்மானோ பகவ ப்ரோக்தா நின்யாஸ் சர்வ கதாஸ் ததா -அந்யைர் மதி மதாம் ஸ்ரேஷ்ட தத்வா லோக நதத் பரை -என்றும் -புத்தீந்த்ரிய சரீரேப்யோ பின்ன ஆத்மா  விபுர்த்ருவ –நா நா பூத பிரதி ஷேத்ர மர்த்ஞ்சா ஞானே ஷூ பாசதே -என்றும் சொல்லுகையாலே-

ஆத்மாக்கள் நித்தியராய் -அநேகராய் – சர்வகதராய் -சரீராதி வி லஷணராய் இருப்பர் என்றும் – பத்த்யதே சஹிலோகஸ்
துயகாம்ய பிரதிஷித்த க்ரத் -காம்ய கர்மாணி குர்வாணை ரகாம்யகர்மா நுரூபத – ஜனித்வைவோப போக்தவ்யம்
புன காம்ய பலம் நரை -க்ர்மிகீடா தி ரூபேண ஜனித்வாது நிஷித்த க்ரத் நிஷித்த பல போகிச்யாதி தோயோ நரகம் வ்ரஜேத் –

என்கையாலே காம்ய நிஷித்த ரூபமான அநாதி கர்மத்தை அனுஷ்டித்து சம்சரிக்கிரார்கள் என்றும்  யதாத்ய ஜகதோ புத்தி ததா காலாந்த ரேஷ்வபி -பிரவாஹோ நித்ய எவைஷா க கர்த்தேதி  சகேச  ந ந –

என்கையாலே ஜகத்து பிரவாஹா ரூபன நித்யம் என்றும் -நதேவதா சதுர்த்யந்த விநியோத்ருதே பரா –
என்கையாலே -சதுர்த்த்யந்த விநியோகாதிரிக்தமாய் கொண்டு வேறு ஒரு தேவதா விசேஷம் இல்லை என்றும் –
வெதைக விஹிதம் கர்ம மோஷதம் ந பரந்தத -என்கையாலே -வைதக விஹிதமாய் பலாபிசந்தி விதுரங்களாய்
கொண்டு அனுஷ்டிக்கப்பட்ட யக்ஜ்ஜாதிகளாலே ஆத்மாவினிடத்தில் இருந்து ஒரு அபூர்வம்  பிறந்து
அத்தாலே உண்டான கர்ம பந்த நிவ்ருத்தி பூர்வாக கேவல ஆத்மா ப்ராப்தியே மோஷம் ஆவது என்றும் சொல்லுவார்கள் –
ஏகாநயர் ஆகிறார் –த்வத் ப்ரியம் லோக நாதம் -என்கிறபடி மிதுன சேஷத்வத்தை அங்கீ கரியாதே நி ஸ்ரீ க பிரம்மசேஷத்வத்தை அங்கீ கரித்துக் கொண்டு -(மாதவ சம்பிரதாயத்தில் மிதுனம் இல்லை என்பர் )-சக்தி பிஸ் சேவிதா நித்யம் ஸ்ர்ஷ்டிஸ்தித்யாதி பிரபா -த்வத்ரிம்சத் சதசாஹஸ் ரஸ்ர்ஷ்டி சக்தி ப்ரவர்த்தாம் வ்ர்தாதத் விகுணா பிஸ்ய திவ்யா பிஸ்திதி
சக்திபி நாதாதச்வி  விகுணா பிஸ்ய யுக்தா சசம்ஹ்ருத சக்திபி -நாயிகா சர்வ சக்தினாம் சர்வ சக்தி மகேஸ்வரி -ஏகம்
தத் பிரம்மம் பஹ்ம ஷாட் குணிய அஸ்தி மிதம் மஹ பாவ  பாவ மதி தஸ்ய சக்தி ரேஷா நபாயி நீ தத் தர்மதர்மதீ
திவ்யாக்ஜ்ஜ்யோத் ச்நேவ ஹி மதிதிதே -நைவ சக்த்யாவி நாகஸ் சித் பக்தி மா நாஸ்தி காரணம் -என்றும் லஷ்மி
தந்த்ரத்தில் சொல்லுகையாலே சக்தி வி லஷணமாய் இருக்கிற லஷ்மி இல்லை என்றும்  -ஸ்ர்ஷ்டி ஸ்த்தியாதி
பரிமித சக்தி பரிவேஷ்டிதையான ஸ்ரீ என்கிற பிரதான சக்தியோடேயும் மற்றும் அபூர்ணங்களான சக்தியோடேயும்

அந்த பிரம்மம் விசிஷ்டமாய் இருக்கும் என்றும் சொல்லுமவன் –நீணிலத்தே-இப்படி பல வகைப்பட்டு இருந்துள்ளது -வேத பாஹ்யருக்கும் குத்ருஷ்டிகளுக்கும் நடை-யாடுக்கைக்கும் ஈடான பரப்பை உடைத்தான மகா ப்ரித்வியிலே –நீட்சி –பரப்பு –பொற் கற்பகம் –ச்ப்ர்ஹநீயமான கற்பகம் போலே பரம உதாரராய் -பொற் கற்பகம் என்று விசே ஷிக்கையாலே -ப்ராக்ருதமாய் -ஜடமாய் -அர்த்த காம பரர்கு மாத்ரமே -ஸ்பர்ஹீநீயமாய் இருக்கிற கல்பகம்-போலே அன்றிக்கே -அப்ராக்ருதமாய் -ஸ்வ பிரகாசமாய் -சர்வருக்கும் ச்ப்ர்ஹநீயமாய் -அபேஷா நிரபேஷமாக உஜ்ஜீவன அர்த்தங்களை ஸ்ரீ பாஷ்யாதி முகேன – ஆசந்த்ரார்த்தமாக கொடுத்துஉபகரிக்கை யாகிற -மகா ஔதார்யத்தை உடையரான -விலஷண கல்பகம் என்றபடி -இக் கல்பகம்-கொடுக்கிற பல பரம்பரை விலஷணமாய் இருக்கிறாப் போலே காணும் இதுவும் விலஷணமாய்-இருக்கிறபடி –எம் இராமானுசன் -லோகம் எல்லாம் ஒரு தலையாயும் -அதி பிரதி கூலனான நான் ஒரு தலையுமாய் இருக்கச் செய்தே -என்னை ஒருவனையே உஜ்ஜீவிப்பைக்காக மனனம் பண்ணிக் கொண்டு இருக்கிற எம்பெருமானார் –போந்த பின்பு –எழுந்து அருளின பின்பு –மாண்டனர் -துர் மத நிஷ்டர்  எல்லாரும் முடிந்து போனார்கள் -ஸ்ரீ பாஷ்ய முகேன தந் தந் மதங்களை பங்கித்து அசத்கல்ப்பம் ஆக்குகையாலே அவர்கள்ந ஷ்டர்கள் ஆனார் -என்றபடி –

சாருவாத மத நீறு செய்து சமணக் கடல் கொளுத்தியே -சாக்கிய கடலை வற்றுவித்தி -மிக சாங்கியக் கிரி-முறித்திட -மாறுசெய்திடு கணாத வாதியர்கள்  வாய்த கரத்தற மிகுத்து மேல் -வந்த பாசுபதர் சிந்தியோடும் -வகை வாது செய்த வெதிராசனார் -கூறுமா குரு மதத்தோடு ஓங்கிய குமாரிலன் மதமவற்றின் மேல் கொடிய-தர்க்க சரம் விட்ட பின்பு குறுகு மத வாதியரை வென்றிட -மீறி வாதில் வரும் பாற்கரன் மத விலக்கடி-கொடி எறிந்து  போய்  மிக்க யாதவர் மதத்தை மாய்த்த பெரு வீரர் நாளும் மிக வாழியே –என்று
பர பஷ பிரதி ஷேபனே பிரகாரத்தை அனுசந்தித்து அத்தால் வந்த வீர ஸ்ரீ க்கு மங்களா சாசனம்-பண்ணி அருளினார் இறே -நம்முடைய ஜீயரும் -காதா தாதா கதா நாம் களதிகம நிகாகா பிலீக்வாபி லீநா-ஷீணா காணாத  வாநீத்ருஹின ஹரகிரஸ் ஸௌ ர பன்னார பந்தே -ஷாமா கௌ மாரிலோக்திர்ஜகதி-குரு மதம் கௌ ரவாத் தூரவாந்தம் காசன் காசன் கராதேர்பஜதி எதிபதவ்  பத்ரவேதீம் த்ரி வேதீம் -என்று
இவ் அர்த்தத்தை அபியுக்தரும் அருளிச் செய்து அனுசந்தித்தார் இறே
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
நம்மை நம் வசத்தே விடுமே -மனமே நையல் -என்று மனத்தை தேற்றினார் -கீழ் .
நம் வசத்தில் விட மாட்டார் என்னும் நம்பிக்கை குலையாமல் இருக்க வேண்டாமா –
பாஹ்யர்களும் குத்ருஷ்டிகளும் நிறைந்த இவ் உலகத்திலே அவர்களது சேர்க்கையாலே
அது குலைந்து விடில் என் செய்வது என்று -தம் மனம் தளர –
எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர்கள் அழிந்து ஒழிந்தனர் -தளரற்க-என்கிறார் .
பத உரை –

தற்கச் சமணரும் -தர்க்கம் செய்யும் திறமையினால் தங்கள் மதத்தைக் காப்பவர்களான ஜைனர்களும்

சாக்கியப் பேய்களும் -பேய் போலே பிடித்த பிடியை விடாத பௌத்தரும்
தாழ் சடையோன் -தாழ்ந்த சடை உடையவனாகிய பசுபதியினுடைய
சொல் -சொல்லாகிய சைவ ஆகமத்தை
கற்ற -கற்றவர்களான
சோம்பரும் -சோம்பலுக்கு காரணமான தமோ குணம் வாய்ந்த சைவர்களும்
சூனிய வாதரும் -சூன்யமே தத்தவம் என்று வாதம் புரியும் மாத்யாமிக மதத்தவரும்
நான்மறையும் நிற்க -நான்கு வகைப்பட்ட வேதங்களும் பிரமாணங்களாக ஏற்கப் பட்டவைகளாய் இருந்த போதும்
குறும்பு செய் நீசரும் -தவறான பொருள்களை தம் இஷ்டப்படி கற்பனை செய்யும் ஈனர்களான குத்ருஷ்டிகளும்
பொற் கற்பகம் -விரும்பத் தக்க கற்பக விருஷம் போன்ற வாளால் தனம் வாய்ந்த
எம் இராமானுச முனி -எங்களுடைய எம்பெருமானார் ஆகிய முனிவர்
நீள் நிலத்தே -நீண்ட இவ் உலகத்திலே –
போந்த பின் -எழுந்து அருளின பின்பு
மாண்டனர் -நசித்து விட்டனர் .
வியாக்யானம் –

தற்கச் சமணரும் –

பிரமாணத்துக்கு ஒத்து வராது -வெறும் தர்க்க பலத்தாலே தங்கள் கொள்கைகளைக் காப்பவர்களான ஜைனர்களும்
என்றபடி –தருக்கினால் சமண் செய்து -பெரிய திரு மொழி -2-3-7 – -என்றார் திரு மங்கை மன்னனும் ..
உலகில் உள்ளவைகளாக நாம் காணும் பொருள்களை உள்ளவைகளும் அல்ல -இல்லாதவைகளும் அல்ல –
என்று முரண்பட்ட தன்மைகளை ஒரு பொருளின் இடத்திலேயே -அவர்கள் தர்க்க பலத்தினாலே
ஸ்தாபிக்கின்றனர் –
தர்க்கம் என்பது  எதுகை நயம் பற்றி –தற்கம் என்று ஆயிற்று .
ஷபனகர்-சமணர் எனப்படுகின்றனர் –
சாக்கியப் பேய்கள் –
வேதத்தை பிரமாணமாக ஏற்காத நிலையில் அவர்களுக்கு ஒத்தவர்களான பௌ த்தர்கள் பேசப்படுகின்றனர் –
சாக்கியர் -பௌத்தர்-சமணமும் சாக்கியமும் -திருவாய் மொழி -4 10-4 -என்று சமணரை அடுத்து  சாக்கியரை
நம் ஆழ்வார் அருளிச் செய்தார் .அவர்களில் பலர் தள்ளுவதும் -கொள்ளுவதும் -தாம் அறியாது-குருவான புத்தர்
உபதேசித்ததையும் -மீறித் தாம் கொண்ட கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு
இருத்தலின் –பேய் -எனப்பட்டனர் .
புத்தர் -தம் சிஷ்யர்களுக்கு சர்வம் சூன்யம் -என்று முதலில் உபதேசித்தார் .
நால்வகைப்பட்ட பாவனை -இடையறா நினைப்பு -யினால் பரம புருஷார்த்தத்தை பெறுதல் வேண்டும்
என்றும் உபதேசித்தார் -இவ் உபதேசங்களைக் கேட்டவர்களில் சிலர் நான்கு வகைப் பட்ட பாவனையை ஏற்று –
சர்வமும் சூன்யம் என்னில் -வெளியில் உள்ள பொருள்கள் போலே உள்ளே உள்ள ஞானமும் சூன்யமாக
நேரிடும் – அங்கனம் ஆயின் உலகமே குருடாக்கி விடுமே -என்று வெளியில் உள்ள பொருள்களை மட்டும்
உலகை -மட்டும் சூன்யம் என்று இசைந்து –ஜ்ஞானத்தை உள்ளதாக கொண்டு –குருவினிடும் கேள்வி கேட்டு
தாம் பிடித்த பிடியை விடாது நிலை நிறுத்திக் கொண்டனர் -இவர்கள் யோகாசாரர் எனப்பட்டனர் –
குருவினிடம் கேள்வி -யோகம்-கேட்டமையினாலும் -அவர் சொன்ன நால் வகைப்பட்ட பாவனையை
ஏற்று ஆசார -அனுஷ்டானத்தில் -கொண்டமையினாலும் இவர்கள் யோகாசாரர் எனப்பட்டனர் –
நால்வகைப் பட்ட பாவனைகள் ஆவன –
எல்லாம் ஷணிகம் ::-துக்கம் ஸ்வ லஷணம் .சூன்யம் என்னும் நினைப்புக்கள் -ஷணிகமாவன
ஷன நேரத்தில் அழிவன -இந்த பாவனையினால் நிலையானவை என்னும்ப்ரமம் தொலைகின்ற்றது –
எல்லாம் துக்கம் என்னும் பாவனையினால் இன்புறுத்துமவைகள் என்னும் ப்ரமம் தவிருகிறது .ஸ்வ லஷணம்
என்னும் பாவனை யாவது எல்லாம் ஷணத்தில் அழியுமவை யாதலின் இன்ன பொருள் மாதிரி என்று
திருஷ்டாந்தமாக மற்றொரு பொருளைக் காட்ட இயலாமையின் -பொதுத் தன்மை இன்றி
ஒவ்வொரு பொருளும் -தன் தனக்கு என்று தனித் தன்மை வாய்ந்தது -என்று நினைத்தலாம் –
இதனால் பொதுவான தன்மை வாய்ந்தது என்னும் ப்ரமம் நீங்குகிறது -.சூன்யம் என்னும் பாவனையால்
சத்யமான -உண்மையான -பொருள் என்னும் ப்ரமம் ஒழிகின்றது –
மற்றும் சிலர் அறிபவனும் -அறியப் படுமவைகளுமான வெளிப் பொருள்கள் இல்லை -என்பது ஏற்புடைத்தன்று –
அவை உண்மையில் இல்லையாயின் -வித விதமான அறிவுகள் எங்கனம் ஏற்படக்கூடும் –
உண்மைப் பொருளாக கொல்லப்பட்ட அறிவின் விசித்திர தன்மையினால் அறியப்படும் பொருள்களும்
உண்மையில் உண்டு என்பது அனுமானத்தால் தெரிகின்றது என்றனர் -இவர்கள் ஸௌத்ராந்திகர்
எனப்படுகின்றனர் -குரு சொன்ன சூத்ரத்திற்கு அனுமானத்தால் உலகு அறியப்படுவது என்னும்
முடிவைப் பற்றி -கொண்டு நிற்பவர்கள் என்றபடி -இனி சூத்ரம் எது பர்யந்தம் போகுமோ என்று
கேட்டமையின் -இவர்களுக்கு அப் பெயர் எற்பட்டதாகவுமாம் -சூத்ராந்தம் ப்ருச்சந்தீதி ஸௌத்ராந்திகா -என்று
இதற்கு வ்யுத்பத்தி கண்டு கொள்க -ப்ருச்ச தவ் சூஸ்நாதாதிப்ய-என்னும் வார்த்திகத்தின் படி -டக் -பிரத்யயம்
வந்தது என்று அறிக -.
வேறு சிலர் -பொருள்கள் அனுமானத்தாலே அறியப்படுவன என்று கூறுவது தவறு -பிரத்யஷமே இல்லை என்பார்க்கு -அதன் மூலமாக வர வேண்டிய அனுமானம் எங்கனம் பொருள்களை
உள்ளவைகளாக சாதிக்க இயலும் -பிரத்யஷத்தால் ஹேது சாத்தியங்களுக்கு வ்யாப்தியை கிரஹிக வேண்டாமோ –
நேரே கண்டு அறியும் -லோக அனுபவத்திற்கும் -அது முரண் பட்டது -எங்கனம் அனுபவ பலத்தாலே வெளிப் பொருள்கள்
ஒப்புக் கொள்ளப் படுகின்றனவோ -அங்கனமே ப்ரத்யஷ அனுபவத்தாலே -வெளிப் பொருள்கள் ப்ரத்யஷ பிரமாணத்திற்கு –
புலனாவன என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கின்றனர் -இவர்கள் உள் உள்ள ஞானமும் வெளிப் பொருள்களும்
பிரத்யஷத்திற்கு புலனாய் இருக்க -சிலருக்கு வைராக்கியம் உண்டாவதற்காக முதலில் எல்லாம் சூன்யம் என்று
உபதேசித்தார் குரு -ஞானத்தை மட்டும் உண்மையானது என்று கொண்டு பிடிவாதத்துடன் -வாதாடுபவர்க்கு ஞானம் தவிர
மற்றவை சூன்யம் என்றார் .ஞானத்தைப் போலே வெளிப் பொருள்களும் உண்டு என்று அடம் பிடிப்பார்க்கு –
வெளிப் பொருள்களும் உள்ளனவே யாயினும் -அவை அனுமானத்தினாலேயே அறியப்படுவன -என்றார் .இது விருத்தமான
பேச்சு என்றனர் ..இதனால் இவர்கள் –வைபாஷிகர் –என்று பேர் பெற்றனர் -வெளிப் பொருள்களும் பிரத்யஷமாக உள்ளனவே
என்பது தவிர ஸௌ த்ராந்திகர்களுக்கும் இவர்களுக்கும் வேறு பாடு இல்லை .
இம் மூன்று திறத்தவர்களான பௌ த்தர்களும் குருவின் உபதேசத்தை முழுமையாக ஏற்காமல்
தங்கள் பிடிவாதப் பேயினால் ஆட்டப்படுதலின் –சாக்கியப் பேய்கள் -என்றார் .
இம் மூவருக்கும் எல்லாம் ஷணத்தில் அழிபவை என்பதிலும் -அவ வண்ணமான ஞானமே ஆத்மா
என்பதிலும் கருத்து வேறுபாடு இல்லை ..ஆதலின் இம் மூவரும் ஒன்றாக எடுத்துப் பேசப்படுகின்றனர் –
பட்டரும் -யோகாசாரோ ஜகத பல பத்யத்ர ஸௌ த்ராந்திக ஸ்தத் தீவை சித்ர்யாதனுமிதிபதம்  வக்தி
வைபாஷிகச்து ப்ரத்யஷம் தத்  ஷணிகயதி தே ரங்கநாதா த்ரயோபி ஜ்ஞானாத்மத்வ  ஷணபிதுறதே
சஷதே  தான் ஷிபாம –  ஸ்ரீ ரங்க ராஜ ஸ்தவம் – -உத்தர சதகம் – 8- என்று
பௌ த்தர்கள் நால்வரில் யோகாசாரன் -உலகினை இல்லை என்று மறைக்கிறான் –ஸௌ த்ராந்திகன் அவ் உலகினை ஞானத்தினுடைய விசித்திர தன்மையினாலே அனுமானத்தினாலே
அறியத் தக்கதாகச் சொல்லுகிறான் —வை பாஷிகனோ -பிரத்யஷமான அவ் உலகினை ஷணத்தில்
அழிவதாக கொள்கிறான் -அந்த மூவரும் ஞானத்தையே ஆத்மாவாகவும் -ஷணத்தில் அழிவதாகவும்
சொல்லுகின்றனர் -அவர் மூவரையும் தள்ளுகிறோம் -என்று இம்மூவரையும் சேர எடுத்து
கண்டிக்கத் தக்கது காணத் தக்கது ..
தாழ் சடையோன் சொல் கற்ற சோம்பரும்
தாழ் சடை -வினைத் தொகை –நீண்ட சடையை உடையவனாகிய ருத்ரன் -என்றபடி -சடை தவக் கோலத்தை காண்பிக்கிறது -தன்னை ஈஸ்வரன் என்று உலகம் ஆராதிக்க வேணும் என்று தவக் கோலத்துடன் தவம் செய்து இறைவனிடம் வரம் கேட்டு -அவன் அனுமதி பெற்று -மோக சாஸ்திரம் ஆகிய சைவ ஆகமத்தை இயற்றி
நடத்தினதாக பிரமாணங்கள் கூறுவது இங்கே அறியத் தக்கது .
தாழ் சடையோன் சொல்-சைவ ஆகமம் .
அதனை கற்றனரே யன்றி -அதனை இயற்றினவன் தவக் கோலத்தைக் கொண்டு உண்மையை
அறியப் பெற்றிலரே -என்கிறார் .அங்கனம் அறியாமைக்கு ஹேது அவர்கள் சோம்பராய் இருத்தலே –
சோம்பர் -சோம்பலை உடையவர் –சோம்பலுக்கு காரணமான தமோ குணம் வாய்ந்தவர் -என்றபடி -உபசார வழக்கு .
மாறுபட்ட உணர்வைத் தருவது -தமோ குணம் -என்க
சூனிய வாதிக்கும் சாக்கிய பேய்களுக்கும் இடையே சைவரை எடுத்தது
பௌ த்தர்களில் உள் பிரிவுகள் பல ஒன்றுக்கு ஓன்று முரண் பட்டவைகளாய் இருப்பினும்
வேதத்திற்கு அவை அனைத்தும் முரண்பட்டவை என்னும் தன்மையை முன்னிட்டு
எவ்விதம் அவை அனைத்தும் புறக்கணிக்கப் படுகின்றனவோ –அவ்விதமே சைவ ஆகம
கொள்கைகளும் வேதத்திற்கு முரண் பட்டவைகளாய் இருத்தலின் புறக்கணிக்கத் தக்கனவே
என்பதை புலப்படுத்துகிறது .
.உலகமாக மாறும் உபாதான காரணம் பிரகிருதி தத்வம்
நிமித்த காரணம் ஆகமத்தாலே சித்தித்த ஈஸ்வரன் என்பது சைவ ஆகம கொள்கை -உபாதான காரணமும் -நிமித்த காரணமும் -வேதத்தில் சித்தித்த பரப் பிரம்மமாம் நாராயணனே
என்பது வேதத்தின் கொள்கை –
வேத வியாச பகவானும் பிரகிருதி தத்தவத்தை உபாதான காரணமாக  ஒப்புக் கொண்டு உள்ள –
சாங்கிய மதத்தை கண்டித்தும் -அக் கொள்கையினையே உடைய பாசுபத மதத்தை
கண்டிக்காமல் விட்டு -முற்றிலும் வேதத்துக்கு புறம்பான வர்களான பௌத்த ஜைன
மதங்களைக்  கண்டித்த பிறகு -பாசுபத மதத்தை கண்டிப்பது –பௌத்த ஜைன மதங்கள் போன்று
முற்றிலும் வேதத்துக்கு புறம்பானது பாசுபத மதம் என்பதை உய்த்து உணர வைக்கிறது .
இவ் விஷயம் ஸ்ருத பிரகாசிகையில் தெளிவாக உள்ளது ..
கள்ள வேடத்தைக் கொண்டு புத்தனாய் மோஹா சாஸ்த்ரத்தை ப்ரவர்த்தித்தது போன்றதே –
ருத்னனுக்கு அனுமதி அளித்து அவன் மூலமாக சைவ ஆகமத்தை ப்ரவர்த்திப்பித்ததும்  என்பது பௌத்த
மத்தத்தவர் இடையே சைவரை வைத்து பேசிய அமுதனார் கருத்தாகும் .
சூனிய வாதியரும்
எல்லாம் சூன்யமே என்று வாதம் புரிபவரும் பௌத்தர்களே-இவர்கள் மாத்த்யமிகர் -எனப்படுகின்றனர் .
சிறந்த சீடர்களிடம் -யோகம் -ஆசாரம் -என்னும் இரு செயல்களும் இருத்தல் வேண்டும் –
யோகமாவது -மேலும் விஷயங்களை தெரிந்து கொள்வதற்காக குருவினிடம் கேள்வி கேட்பது .
ஆசாரமாவது -குரு சொன்னதைக் கேட்டு அதன்படி ஒழுகுதல் .குரு முதலில் சொன்ன சர்வசூன்யக் கொள்கையை
ஏற்று அதன்படி ஒழுகினமையின் உத்தம சீடர்கள் ஆயினர் .ஆயினும் மேலும் விஷயம் அறிந்து கொள்ள கேள்வி
கேட்காமையினால் அவர்கள் அதமர்கள் ஆகி விட்டனர் .
ஒழுகினமையினால் உயர்வும் -கேள்வி கேளாமையினால் தாழ்வும் இவர்களிடம் சேரவே
நடுத்தரமான நிலையினை இவர்கள் எய்தினவர்கள் ஆகிறார்கள் –ஆகவே மாத்த்யமிகர் –
நடுத்தர நிலையினோர் -என்று இவர்கள் பேர் பெற்றனர் ..
மாத்த்யமிகர்கள் இங்கனம் கருதுகிறார்கள் –
சூன்யம் என்பதே முடிவான கொள்கை -புத்தர் உபதேசித்த ஷணிகம் துக்கம் ஸ்வ லஷணம் சூன்யம் –
என்னும் பாவனைகள் நான்கும் இம் முடிவு நிலை எய்துவதற்கே யாம் -நிலை நிற்பது இன்பம் தருவது
பொதுவான இன்னதன்மைத்து -சாத்தியமானது என்னும் ப்ரமம் நீங்குவதற்காக நான்கு பாவனைகள்
உபதேசிக்கப் பட்டன ..உண்மையில் ஒரு பொருளையும் இன்னது என்று சொல்ல இயலாது –
சத் -என்னவும் முடியாது -சத் இல்லாத அசத் என்னவும் ஒண்ணாது –
சத்தும் அசத்துமானது என்று கூருவதர்க்குமியலாது
சத் அசத் என்னும் இப் பொருள்களிலும் வேறு பட்டது என்பதற்கும் இடம் இல்லை
குடம் முதலிய பொருள்கள் இயல்பினில் -சத் -உள்ளபோர்ல் -ஆயின் -அவற்றை குயவன் மண் கொண்டு
உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை .இனி இயல்பினில் -அசத் -இல்லாத பொருள் -ஆயின்
அப்பொழுதும் குயவன் உண்டுபண்ண வேண்டிய அவசிமில்லை ..ஆகாசத் தாமரையை யார் உண்டு பண்ணுகிறார்கள் –
மேலும் ஆகாசத் தாமரை கண்ணுக்கு தோற்றுவது இல்லை –இவைகளோ தோற்றுகின்றன
ஆகவே குடம் முதலிய பொருள்கள் இயல்பினில் சத் ஆனவை என்பதற்கோ -அசத் ஆனவை
என்பதற்கோ வழி இல்லை -முரண்படுதலின் சத்தாகவும் அசத்தாகவும் உள்ளன என்ன ஒண்ணாது -இனி
சத்தும் அசத்தும் இல்லாத தனிப் பட்ட பொருள்கள் என்பது -அத்தகைய பொருள்கள் எங்கணும் காணாமையாலே
கூடாததாம் -ஆகவே உலகில் உள்ள குடம் முதலிய பொருள்களைப் பற்றி வ்யவஹாரங்கள் ஸ்வப்ன உலகில் நடக்கும்
வ்யவஹாரங்கள் போன்றவைகளே .சூன்யமே தத்தவம் –
அறிவும் அறியப்படுமவையும் அறியுமவனும்-எல்லாம் சூன்யமே -அந்நிலையினை எய்துதலே முக்தி .
மாத்த்யமிக மதத்தைப் பற்றி பட்டர் -ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவத்தில் சுருங்க கூறி அம்மதம் கூறு கூறாக
கண்டிக்கத் தக்கது -என்கிறார் .
நசதசதுபயம்வா நோப யஸ்மாத் பஹிர்வா ஜகதிதி நகிலைகாம் கோடி மாடீ கதேதத் இதி நிருபதி
சர்வம் சர்விகாதோ நிஷேதன் வரத சூகதபாசச்சோர லாவம் விலாவ்ய -உத்தர சதகம் – – 6- என்று
வரம் தரும் அரங்கனே -உலகமானது சத்தாகவும் இல்லை -அசத் ஆகவுமில்லை-சத்தும் அசத்துமாகவும் இல்லை –
சத் அசத் என்னும் இரண்டிற்கும் புறம்பான தாகவும் இல்லை -ஆகையினால் அவ் உலகம் கீழ் சொன்ன நான்கினில்
ஒரு பொருளின் வகையிலும் சேர வில்லை யன்றோ -இங்கனம் இங்கே  இப்பொழுது என்னும் வரையறை
இன்றி யாதும் இல்லை என்று மறுக்கும் கீழ் மகனான புத்தன் திருடனைப் போலே கூறு படுத்தி
தண்டிக்கத் தக்கவன் -என்பது அவரது திரு வாக்கு .
யோகாசாரன் முதலியோர்களை தள்ளுகிறோம் என்றார் .
மாத்த்யாமிகனையோ தண்டிக்க வேண்டும் என்கிறார் –
இங்கே இப்பொழுது இது -என்று எல்லாம் குறிப்பிடாமல் கண்ணை மூடிக் கொண்டு எல்லாம் சூன்யம்
என்பது ஏனைய பௌ த்தர் மூவரும் புரியும் குற்றத்திலும் மிகக் கொடியதாக தோற்றுதலின்
ஆத்திரத்துடன் மாத்த்யாமிகரைக் கூறாக தண்டிக்க வேண்டும் என்கிறார் .
அமுதனாரும் சாக்கிய பேய்களிலும் சூன்ய வாதரின் கொடுமை மிகுந்து இருத்தலின்
அது தோன்ற பிரித்து அருளிச் செய்தார் -என்க .
சாக்கிய பேய்களுக்கும் சகிக்க ஒண்ணாமையாலே அன்றோ  அவைகளாலே சூன்ய வாதம்
குருவான புத்தரிடமே ஏற்க ஒண்ணாது என்று மாற்றப் பட்டது –
நான் மறையும் நிற்க குறும்பு செய் நேசரும் –
இதனால் குத்ருஷ்டிகளை சொன்னபடி
புற மத்ததவாரகிய ஜைன பௌத்தர்கள் தங்களுக்கு  வழி காட்டும் பிரமான நூல் ஓன்று இல்லாமையினால்
தங்கள் மனம்போன போக்கில் கொள்கைகளை வகுத்துக் கொண்டனர் -குத்ருஷ்டிகளோ அங்கன் அன்றிக்கே உண்மை
யல்லது ஓதாத வேதங்கள் நான்கினையும் வழி காட்டும் பிரமாண நூலாக கொண்டு இருந்தும்
அந்த பிரமாணத்திற்கு கட்டுப் படாமல் -தங்கள் மனம் போன போக்கிலே தாமே வகுத்துக் கொண்ட
கொள்கைகளை நான்மறைகளும் நவில்வதாக -தாம் தமது விருப்பப்படி கூறும் பொருளை
வேதத்தின் மீது திணிக்கின்றனரே-அந்தோ இஃது என்ன பரிதாபம் -என்று வருந்துகிறார் .
பிழைக்கும்  வழி இல்லாமையால் புற மதத்தினர் அழிகின்றனர் -.
அது இருந்தும் பயன் படுத்திக் கொள்ளாமல் -அவ் வழியினைத் தூர்த்து -இதுவே அவ் வழி என்று
புது வழியை கற்பித்து அழிகின்ற குத்ருஷ்டிகள் நிலைமை மிகவும் வருந்த பாலதன்றோ –
குறும்பு செய்தல்-மறையின் உண்மைப் பொருளை கொள்ளாது தன் மனம் போன படி வலிந்து உரை கூறல் .
நீசர் -தாழ்ந்தவர்கள்
நிறம் கிளர்ந்த கரும் சோதி நெடும் தகையை நினையாதார் நீசர் தாமே -பெரிய திரு மொழி -11 6-8 – –
என்றபடி கருமை வாய்ந்த திரு மேனியையும்
இயல்பாய் அமைந்த பெரும் தன்மையான ஞான பல கிரியைகளையும்
நான் மறைப் பொருளாக கொள்ளாமையினால் குத்ருஷ்டிகளை –நீசர் -என்றார் .
குத்ருஷ்டிகள் பிரம்மத்திற்கு வடிவம் குணங்கள் முதலியன உண்மையில் இல்லை
என்ற தாம் கொண்ட பொருளை வேதத்திற்கு பொருளாக கற்ப்பித் தலினால்
அவர்கள் குறும்பு செய் நீசர் ஆயினர் -என்க –
மாண்டனர் நீணிலத்தே —-பொற் கற்பகம் போந்த பின்னே —
நீணிலத்தே போந்த பின் -என்று இயைக்க –
நீள் நிலம் -நீண்ட பெரிய பூமி
புற மதத்தவருக்கும் குத்ருஷ்டிகளுக்கும் இடம் தரத் தக்க பரப்புடமை இங்கே கருதப்படுகிறது .
கற்பகம் –கற்பக வ்ருஷம் போன்றவர் -வள்ளல் -என்றபடி
விண் தலத்திலே அசையாது இருப்பது கற்பக வ்ருஷம்
விண்ணவரான எம்பெருமானார் நீநிலத்தை நோக்கி திரும்பாதவர்
விண் உலகில் அசையாது இருந்த கற்பகம் கண்ணனால் நீணிலதிற்கு வந்தது
அது வந்தது கருதிய காதலிக்காக –
விண்ணவரான எம்பெருமானாராம் கற்பகம் வின்னூரில் உள்ள கண்ணனால் இன் நீணிலத்தே வந்தது
இது வந்தது உயிர் இனம்  மறையின் உண்மைப் பொருளை பெற்று உய்வதற்காக
கற்பகம் வந்து  நீணிலத்திலே நல்ல பொருளை தருகிறது .
பொன் -பொன் போலே விரும்பத் தக்கது
கற்பகம் -உவம ஆகு பெயர்
எம் இராமானுச முனி -மறைப் பொருள் வழங்கும் வள்ளன்மை தம்பால் உள்ளதை
நமக்குக் காட்டிக் கொடுத்த எம்பெருமானார் -என்றபடி –
போந்த பின் மாண்டனர் -என்று முடிக்க
எம்பெருமானார் நீணிலத்தில் ஸ்ரீ பாஷ்யம் அருளிச் செய்து –
அதனில் அந்த அந்த மதங்களைக் கண்டித்து –
அவற்றை இருக்கும் இடம் தெரியாதபடி
மறைய செய்து அருளினார் -என்பது கருத்து .
மற்ற மதத்தவர் இருக்கும் இடம் தெரியாது மறைந்து ஒழிந்தனர் ஆதலின்

இந்நிலை குலையாது -மனமே தளரற்க -என்றார் ஆயிற்று

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: