அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–98-இடுமே இனிய சுவர்க்கத்தில் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
தொண்ணூற்று எட்டாம் பாட்டு -அவதாரிகை –
இப்படி எம்பெருமானார் செய்த உபகாரத்தை பேசினவாறே-இவர் திரு உள்ளமானது –
நிருபாதிக பந்துவான ஈஸ்வரன் அநாதி காலம் ஸ்வர்க்க நரக  கர்ப்பங்களிலே
தட்டித் திரிய விட்டு இருந்தது -கர்மத்தை கடாஷித்து அன்றோ –
பிரகிருதி சம்பந்தம் கிடக்கையாலே துர் வாசனை மேலிட்டு
விபரீதங்களிலே போகவும் யோக்யதை உண்டே –
இன்னும் ப்ராப்தி பர்யந்தம் ஆனால் இறே என்று தளர –
எம்பெருமானார் தன்னை சரணம் என்றால் -அப்படி ஒன்றிலும் விட்டுக் கொடார்
ஆகையாலே ப்ராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டா -என்கிறார் .
 
இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னும் நரகிலிட்டுச்
சுடுமே யவற்றைத்  தொடர்தரு தொல்லைச் சுழல் பிறப்பில்
நடுமே யினி நம் இராமானுசன் நம்மை நம் வசத்தே
விடுமே சரணமென்றால் மனமே நையல் மேவுதற்கே – – -98 – –
வியாக்யானம் –
தம்மை உத்தரிப்பிக்கைக்காக வந்து அவதரித்த எம்பெருமானார் –
தேவரே சரணம் -என்று ஓர் உக்தி மாதரம் பண்ணினால் -பிரகிருதி வச்யருக்கு
சப்தாதி போக விஷயங்களாலே இனிதாக தோற்றி இருக்கும் ஸ்வர்க்கத்திலே இட்டு வைப்பாரோ –
தம் திருவடிகளைப் பற்றின பின்பும் நரகத்திலே இட்டு வைத்து தபிப்பிப்பரோ –
அந்த ஸ்வர்க்க நரக அனுபவத்துக்கு ஈடான கர்மம் ஜென்மத்துக்கு உருப்பாகையாலே –
அவற்றை அநுசரித்து கொண்டு இருப்பதாய் -அநாதியாய் -வளைய வளைய வரா நின்றுள்ள-ஜன்மத்திலே நிறுத்துவரோ –
மேலுள்ள காலம் நம்மை நம்முடைய ருசி அநு குணமாக விடுவரோ –ஆன பின்பு ப்ராப்தி நிமித்தமாக-நெஞ்சே சிதிலமாகாதே கொள் –
மேவுதல்-பொருந்துதல் -அதாவது ப்ராபித்தல்
சோற்றுக்கு கரையாதே கொள் -என்றால் சோறு நிமித்தமாக கரையாதே கொள் -என்னுமா போலே
மேவுதற்கு நையல் -என்றது மேவுதல் நிமித்தமாக -என்றபடி
நடுதல்-ஸ்த்தாபித்தல்–
பரம்- ஸ்வாமி உடையதே -சுவர்க்கம் நரகம் -பிறவி -நம் வசம் நான்கும் வராதே -ராமானுஜர் சரணம் என்ற யுக்தி மாத்திரத்தாலே –
இடுமே-/ சுடுமே / நடுமே –/ விடுமே -பிரி நிலை எவகாரம் -இட மாட்டார் –சுடாது -நட மாட்டார் – விட மாட்டார் -என்றபடி –
ஆகையால் நைய வேண்டாமே –கர்ம ஜென்ம சூழல் தப்புவோம்
தாய் போலே அன்றோ ஸ்வாமி –அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான -தனக்கே யாக நம்மை கொள்வார் -சர்வேஸ்வரன் இல்லையே கர்ம அனுகுணமாக செய்வதற்கு -/  நம் வசம் -ருசிக்கு அனுகுணமாக காட்டிக் கொடுக்காமல் – -ரக்ஷணமும் அவர் ஆதீனம் -என்றவாறு -சரணம் என்றால் -ஆல் -சரம பர்வ நிஷ்டை துர்லபம்-அன்றோ /யுக்தி மாத்திரமே அமையும் -மேவினேன் அவன் பொன்னடி -படர்க்கை –நேராக கூட செல்ல வேண்டாம் -இருந்த இடத்திலே நாவினால் நவின்றாலே போதுமே /கொடு உலகம் காட்டேல் -நம்மாழ்வார் பிரார்த்திக்க -ஸ்வாமி திருவதரித்தார் /அவன் ஈஸ்வரன் ஸ்வ தந்த்ரன் ஸ்வதந்த்ரம் கொடுப்பான் -இவர் பாரதந்த்ரர் -நமக்கு பாரதந்தர்யம் கொடுத்து நம்மை தன் வசத்தே சேர்த்து கொள்கிறார் /அவன் நம்  கர்மம் பார்ப்பான் இவர் தம் கிருபை ஒன்றையே பார்ப்பார்
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

அவதாரிகை -இப்படி எம்பெருமானார் தம்முடைய சர்வ உத்கர்ஷ்டமான அதிகாரத்திலே மூட்டின
உபகாரத்தை அனுசந்தித்து ஹ்ர்ஷ்டரானவாறே -இவருடைய திரு உள்ளமானது -நீர் இப்படி சொன்னீரே யாகிலும் –
சர்வ நியந்தாவான சர்வேஸ்வரன் -அநாதி காலம் தொடங்கி -தத் தத் கர்ம அனுகுணமாக பலத்தை
கொடுப்பதாக சங்கல்பித்துக் கொண்டு இருக்கிறான் ஒருவன் ஆகையாலே -இவ்வளவும் ஸ்வர்க்க நரக
கர்ப்பங்களிலே இடைவிடாது அடைவே தட்டித் திரிய விட்டு இருந்து -நம்முடைய கர்மத்தை
கடாஷித்து அன்றோ -அக் கர்மங்களை உண்டாக கடவதான பிரகிருதி சம்பந்தம் நமக்கு இன்னும் கிடைக்கையாலே
துர்வாசனை மேலிட்டு திரும்பவும் நிக்ரஹத்துக்கு உடலான  துஷ்கர்மங்களிலே அன்வயிக்கவும் -யோக்யதை
உண்டே -ப்ராப்தி பர்யந்தம் ஆனால்  இறே -நீர் இப்படி நிர்பரராய் சொல்லக் கூடுவது என்று தளரா நிற்க –
எம்பெருமானார் தம்மை சரணம் என்றால் அப்படி ஸ்வர்க்க நரகாதிகள் ஒன்றிலும் விட்டுக் கொடுக்கும்
ஸ்வபாவர் அல்லர் ஆகையாலே -இனி பிராப்தி நிமித்தமாக நீ கிலேசிக்க வேண்டாம் என்கிறார் –

வியாக்யானம் -மனமே -இப்படி அதி சங்கை பண்ணா நிற்கிற நெஞ்சே -எம் இராமானுசன் -சாஷான் நாராயணோ தேவ க்ர்த்தவா மர்த்த்யமயீம் தநும் -மக்னா நுத்தரதே லோகன்  காருண்யாஸ் சாஸ்திர பாணி நா -என்றும் -பாபத்வாந்த ஷயாயச -ஸ்ரீ மான் ஆவிரபூத் பூமவ் ராமானுஜ திவாகர -என்றும் சொல்லுகிறபடியே-எங்களுடைய முன்னை வினை- பின்னை வினை- பிராரப்த  என்று மூன்று வகைப் பட்டு இருக்கிற வினைத் தொகை-அனைத்தும் நசிப்பித்து -சம்சார கர்த்தத்தில் நின்றும் உத்தரிப்பிக்க வேணும் என்று தீஷித்துக் கொண்டு –

இக்கொடு உலகத்தில் திருவவதரித்து அருளின எம்பெருமானார் –
சரணம் என்றால்-ராமானுஜச்ய சரணவ் சரணம் பிரபத்யே -என்றும் சரணமேமி ராமானுஜம் -என்றும் –
இராமானுசா உன் சரணே கதி -என்றும் -மூலே நிவேச்ய மஹதாம் நிகமத்ருமாணாம் முஷ்ண ந ப்ரதாரக பயம்-த் ர்த  நைக தண்ட -ரங்கேச பக்த ஜன மானஸ ராஜ ஹம்ஸோ  ராமானுஜஸ் சரணமஸ்து முநிஸ் ஸ்வயந்ர – என்றும்
ராமானுஜாய முநயே நம உக்தி மாதரம் காமாதுரோபிகுமதி  கலயன்ன பீஷணம் -யாமாம நந்திய மிநாம்
பகவஜ் ஜாநாநாம் தாமேவவிந்தித கதிம் தமஸ பரஸ்தாத் –  என்கிறபடியே- தேவரீரே சரணம் -என்கிற ஒரு-உக்தி மாத்ரத்தை பண்ணினால் –
இனிய ஸ்வர்க்கத்தில் -பிரகிருதி வச்யராய் இருப்பார்க்கு -சப்தாதி போக விஷயங்களாலே அத்யந்தம்-போக்யமாய் தோற்றுகிற ஸ்வர்க்கத்திலே -இனிமை -போக்யதை -ஸ்வர்க்கமாவது -த்ரைவித்யாமாம்-சோம பர பூத பாபா -யஜ்ஞை ரிஷட் வாஸ்வர்காதிதம் ப்ரார்த்தயந்தே -தே புண்யமாசாத்யா ஸூ ரேந்த்ரலோகம்
அஸ் நந்தி திவ்யான் திவிதேவ போகான் –தேதம் புக்த்வா ஸ்வர்க்க லோகம் விசாலம் ஷீணே புன்யே-மர்த்த்யலோகம் விசந்தி -என்கிறபடியே -நச்வரமாய் சோபாதிகமாய் இருப்பதொரு     ஸூக விசேஷம்-இறே இப்படி பட்ட ஸ்வர்க்கத்தில் —இடுமே -இட்டு வைப்பாரோ -தந்தும் கேன சம்பின்னம் -இத்யாதிப்படியே அதுக்கு இதோபி விலஷணமாய் இருந்ததே ஆகிலும் -முமுஷுக்கு நரக கல்பமாயும் -பிரதி கூலமாயும் இறே இருப்பது – தேவேந்திர த்வாதி கம்பதம் ஏதேவைநிரயாஸ் ததாஸ் த்தா நஸ்ய பரமாந்தமான –ஷேத்ராணி மித்ராணி தனானி நாத புத்ராச ச தாரா பஸவொக்ரஹாநித்வத் பாத பத்ம ப்ரவனாத்மாவர்த்தேர்ப்பவந்தி  சர்வே பிரதி கூல ரூபா -என்னக் கடவது இறே  —   பல நீ காட்டிப் படுப்பாயோ இன்னம் கெடுப்பாயோ  -போர வைத்தாய் புறமே -நெறி காட்டி நீக்குதியோ –
அற்ப சராசரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் -கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –
என்று ப்ராக்ர்த்த ஸூகத்தை கட்டடங்க பிரதி கூலமாகவும் ஸ்வரூப நாசககமாகவும் நம் ஆழ்வார்-அனுசந்தித்து அருளினார் இறே –
இன்னும் நரகில் இட்டு சுடுமே -உபாய உபேய பாவேன தத்வதஸ் சர்வே  தேசிகை -ஸூ நிச்சிதான்க்ரி பத்மாய –
என்கிறபடியே –   தன திருவடிகளையே உபாயம் உபேயம் என்று அத்யவசித்து -அனந்யார்ஹராய் போன பின்பு
கேட்ட உடனே அஞ்சும்படி -அதி துஸ் சகங்களான ரௌவராதி நரகங்களிலே விழ விட்டு தஹிப்பிப்பாரோ
கர்ச்ச்ரென   தேஹான் நிஷ்க்ராந்திம் யாம் யகிங்கர தர்சனம் -யாத நாதேக சம்பந்தம் யாம்யபாசைஸ் ச கர்ஷணம் –
உக்ர மார்க்க கதின்லேசம் யமச்ய புர தஸ்திதம்–தன்னி யோகேன தாயாதா யாதனாச்ச சகஸ்ரசா   -ஸ்ருத்வாஸ்
ம்ர்த்வாச தூயேஹம் தத் ப்ரேவேச பயாகுல -என்றும் -கடும் சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர்-கொடுமிறைக்கு அஞ்சி – என்றும் –எண்ணிறந்த துன்பம் தரு நிரயம் பல -என்றும் சொல்லப்பட்ட நரகங்களிலே சென்று

துக்கப்ப்படும்படி உதாசீனராய் இருப்பாரோ -என்றபடி அவற்றை தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் சுடுமே -கர்ம பிரம்மோத் த்பவம் வித்தி -என்கிறபடி -அந்த ஸ்வர்க்க நரகாதிகளுக்குஈடான புண்ய பாப் ரூப கர்மார்ஜனத்துக்கு -பிரம சப்த வாச்யமான சரீரம்-ஹேதுவாய் இருக்கையாலே  அத்தை அனுசரித்து கொண்டு இருப்பதாய் –தொன் மாயப் பல் பிறவி –என்கிறபடி –அநாதியாய் -ஏவம் சம்சர்த்தி சக்ரச்தே ப்ராம்ய மானே ஸ்வ  கர்மபி -என்றும் -மாறி மாறி-பல பிறப்பும் பிறந்து -என்றும் சொல்லுகிறபடி –சக்ரம் போல் சுழன்று வாரா நின்றுள்ள ஜன்ம பரம்பரைகளில்-நிறுத்துவாரோ -அவற்றில் அன்வயிக்கும்படி பிரவர்த்திப்பிப்பாரோ என்றபடி –நடுதல் –ஸ்தாபித்தல் –

இனி நம்மை நம் வசத்தே விடுமே -எம்பெருமானார் திருவடிகளுக்கு நிழலும் அடிதாறும் போல் அத்யந்த-பரதந்த்ரராய் போந்த நம்மை மேல் உள்ள காலம் எல்லாம் ஸ்வ தந்த்ரராக்கி -நம்முடைய ருசி அனுகுணமாக-ச்வைர சம்சாரிகளாய் போகும்படி விட்டு விடுவாரோ -எம்பெருமானார் திருவடிகளை ஆஸ்ரயித்து-
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஏதே -என்னும்படியான நிஷ்கர்ஷத்தைப் பெற்ற   அடியோங்களை –அப்ராப்தமானவை ஒன்றும் தட்டாதபடி பண்ணி அருளுவார் -என்று கருத்து
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரம்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ  சமாஸ்ரயண சாலி ந -என்றும்
மதன கதனைர் நக்லிச்யந்தே யதீஸ்வர சம்ஸ்ரயா -என்னக் கடவது இறே -மேவுதற்கு -அடியார் குழாம் களை உடன்
கூடுவது என்று கொலோ – என்றும் -ராமானுஜச்ய வசக பரிவர்த்தி ஷீய -என்றும் சொல்லுகிறபடியே –நம்மால்
பிரதி பாதிக்க படுகிற ப்ராப்தி நிமித்தமாகநையல் -சிதிலமாகாதே கொள் –மேவுதல் –பொருந்துதல் -அதாவது ப்ராபித்தல் –
சோற்றுக்கு கரையாதே கொள் என்றால் -சோறு நிமித்தமாக கரையாதே கொள் என்னுமா போலே

மேவுதற்கு நையேல் என்றது -மேவுதல் நிமித்தமாக நையல் வேண்டா -என்றபடி -ந புக்தம் ஷீயதே கர்ம கல்ப கோடி சதைரபி -அவசியம் அனுபோக்தவ்யம் க்ர்தம் கர்ம ஸூ பா ஸூ பம் -என்கிற சாஸ்த்ரத்தை உட் கொண்டு சர்வேஸ்வரன் சம்சாரத்தில் மூட்டும் ச்வாபவனாய் விட்டாப் போலே-எம்பெருமானாரும் தம் சாஸ்திர மரியாதையை உட் கொண்டு உதாசீனராய் இருப்பாரோ என்று அதி சங்கை-பண்ணின நெஞ்சைக் குறித்து –எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பும் -பிரபன்னராய் -சரம பர்வ நிஷ்டராய் இருக்கும்-நம்மை உபாசகரைப் போலே ப்ராப்ய அவசான பர்யந்தம் சம்சார வெக்காயம் தட்டும்படி காட்டிக் கொடார் -என்றது ஆய்த்து –

மனமே நையல் மேவுதற்கே -என்று சேதன சமாதியால் அருளிச் செய்கிறார் -அசித்தை கூட திருத்தும் படி காணும்-இவர் உபதேசம் இருப்பது -நகலு பாகவதாய மவிஷயம்கச்சந்தி -பரிஹர மது ஸூ தன பிரபன்னான் பிறப்பு ரஹமன்ய நிர்னாம் -த்யஜபட தூரதரென தானபாபான் -என்னக் கடவது இறே –எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே – என்று-இவ்வர்த்தத்தை பிரதம பர்வத்தில் திரு மழிசைப் பிரானும் அருளிச் செய்தார் இறே –
————————————————————————–

அமுது விருந்து

 
அவதாரிகை
தம் அடியார் திருவடிகளை அடைந்து ஆட் செய்யும் படியான உயர்ந்த நிலையினை எம்பெருமானார்
தமக்கு உதவினதைக் கூறியதும் –அமுதனார் திரு உள்ளம்-
இயல்பினில் அண்ணிய உறவினனான  இறைவன் நெடும் காலமாக ஸ்வர்க்கத்திலும் நரகத்திலும் -கர்ப்பத்திலும் –
நிலை இல்லாமல்திரிந்து உழலும் படி விட்டு இருந்தது கர்ம சம்பந்தத்தினால் அன்றோ –
கர்மத்திற்கு ஏற்ப வந்த சரீர சம்பந்தம் நீங்காமையாலே-கர்ம வாசனை மேலிட்டு மீண்டும் கர்மங்கள்
புரிந்து திரிந்து உழலும் நிலை ஏற்படின் என் செய்வது -எம்பெருமானார் உதவியதற்கு நாம் மகிழ்வது
அந்தமில் பேரின்பத்து  – எம்பெருமானார் அடியாரோடு இருத்தல் ஆகிய பேறு கிட்டும் அளவு ஆனால் அன்றோ
என்று மிகவும் தளர்வுற
அதனை நோக்கி எம்பெருமானார் சரணம் -என்றவரை திரிந்து உழலும்படி விட்டுக் கொடுக்க மாட்டார்
நீ பேறு கிடையாதோ என்று வருந்த வேண்டாம் -என்கிறார் .
பத உரை –

நம் இராமானுசன் -நம்முடைய எம்பெருமானார்

சரணம் என்றால் -சரணம் என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டால்
இனிய -பிறருக்கு அனுபவித்தற்கு தக்கதாய் தோன்றுகிற
ஸ்வர்க்கத்தில் -ஸ்வர்க்க லோகத்தில்
இடுமே -அனுபவிக்கும்படி விட்டு இருப்பாரோ
இன்னும் -அவரைப் பற்றின பின்பும்
நரகில் -நரகத்தில் இட்டு வைத்து
சுடுமே -தபிக்கும்படி செய்வாரோ
அவற்றை -அந்த ஸ்வர்க்க நரகங்களை
அனுபவிப்பதற்கு ஈடான கர்மம் பிறப்பினுக்கு உறுப்பாகையாலே
தொடர் தரு -தொடர்ந்து வருகிற
தொல்லை -பழையதான
சுழல் பிறப்பில் -சுழன்று சுழன்று வாரா நிற்கும் பிறப்புகளிலே
நடுமே -நடுவாரோ -அதாவது நிற்கும் படி செய்வாரோ
இனி -நம்மை ஏற்றுக் கொண்ட பிறகு மேலுள்ள காலம் எல்லாம்
நம்மை நம் வசத்தே -நம்மை நம்முடைய இஷ்டப்படி நம் வசத்திலே
விடுமே -ஸ்வ தந்த்ரிரமாய் நடக்க விடுவாரோ
மனமே -நெஞ்சே
மேவுதற்கு -பேற்றினை அடைதளுக்காக
நையல் -வருந்து நைந்து போகாதே .
வியாக்யானம் –
இடுமே இனிய ஸ்வர்க்கத்தில் –
சரணம் என்றால் -என்பதனை -இந்த வாக்யத்திலே கூட்டிக் கொள்க –
எம்பெருமானாரை சரண் அடைவது முக்திகாக –
மீண்டும் பண்டைய வாசனை தலை எடுத்து அதனுக்கு மாறாக இனியது என்று பாமர மக்கள்
மயங்கிக் கொண்டுஇருக்கிற ஸ்வர்க்கத்தை எய்தி இன்பம் துய்க்க -விரும்பிப் புண்ணியம்
பண்ணிச் சரணடைந்த அவனே சுவர்க்கத்திற்கு குடி யிருக்க முர்ப்படும்படி விட்டு வைக்க
மாட்டார் எம்பெருமானார் -என்றபடி ..கர்மங்களை வாசனை என்னும் வேரோடே களைந்து எரிந்து
விட்டமையின் அந்நிலை ஏற்படுவதற்கு வழியே இல்லாமல் போய் விடுகிறது -எனபது கருத்து .
ஸ்வர்க்கம் முக்தி நெறிக் கண் நிலை நில்லாதவாறு வல்லாரையும் அல்லாரையும் இனியது எனத் தோன்றித்-தன்பால் வீழ்ந்து அழுந்தி மாயுமாறு மயக்க வல்லதாதலின் -அதனை முந்துற கூறினார் .இனிய ஸ்வர்க்கம் என்று

அதன் கொடுமை தோற்றக் கூறினபடி -வாயில் இட்டால் ரசித்து பின்னர் முடியும்படி செய்யும் விஷம் போன்றது ஸ்வர்க்கம் என்க-விஷம் எனபது முன்னரே தெரிந்தால் வாயில் இடாது தப்பிப் பிழைக்கலாம் .

துன்பம் தரு நரகு என்றால் அதனில் விழாது தப்பிப் பிழைக்கலாம் .இனியது என்று முகப்பிலே தோன்றும்
ஸ்வர்க்கமோ -பிரம்மானந்தம் பெற ஒட்டாது செய்து முடித்தே விடும் என்க .இடுதல்-வைத்தல் .
இன்னும் நரகில் இட்டுச் சுடுமே –
இன்னும் -சரணம் என்றதற்குப்  பிறகும்
நரகத்திலே போட்டு தபிக்கும்படி செய்வாரோ
எம்பெருமானார் சரணம் -என்று சொன்னதும் கர்மங்கள் வாசனையோடு களையப் படுதலின்
மீண்டும் பாபம் செய்து நரகத்தில் விழுந்து தபிக்க வழி இன்றி செய்து வருகிறார்
எம்பெருமானார் -எனபது கருத்து .
அவற்றைத் தொடர் தரு தொல்லை சுழல் பிறப்பில் நடுமே –
கீழ் சொன்ன ஸ்வர்க்க நரகங்களைத் தொடர்ந்து வருவன பிறப்புக்கள் .
ஸ்வர்க்கத்தில் இன்பத்திற்கு ஈடான புண்ணியமும்
நரகில் தபித்தற்கு ஈடான பாபமும் -அவற்றை அடுத்து வரும் பிறப்பிற்கு உறுப்பாய் இருத்தலின் –
அவற்றைத் தொடர் தரு பிறப்பு -என்றார் .
கர்மம் அடியாக ஏற்படும் பிறப்பு அநாதி யாதலின் –தொல்லைப் பிறப்பு -என்றார் .
கர்மத்தினால் ஓய்வின்றி மாறி மாறிப் பிறப்பு வந்த வண்ணமாய் இருத்தலின் –சுழல் பிறப்பு –என்றார் .
சுழல் பிறப்பு -வினைத் தொகை –
துரிதபவந ப்ரேரிதே ஜன்ம சக்ரே -கர்மமாகிற பாபம் என்னும் காற்றினால் சுழலுகின்ற பிறப்புச் சக்கரம் -ஸ்ரீ ஸ்துதி –
என்றார் வேதாந்த தேசிகன்
சுழன்று கொண்டே யிருக்கும் அத்தகைய பிறப்புச் சக்கரத்தில் அகப்பட்டுச் சுழலும்படி விட்டு
விடுவாரோ -என்றபடி-நடுதல்-நிறுத்துதல்
நாற்று நடுதல் -என்னும் வழக்குக் காண்க .
இனி நம்மிராமானுசன் நம்மை நம் வசத்தே விடுமே –
நம் இராமானுசன் -நம்மை கை தூக்கி விட வேணும் என்பதற்காகவே அவதரித்த எம்பெருமானார் .
வீடளிப்பான் மண்ணின் தலத்து உதித்தவர் -என்றபடி –
மோஷத்திற்கு மட்டும் ஹேதுவானவர் -பந்தத்துக்கு உள்ளாகும்படி நம்மை நம் வசத்தே விடுவாரோ -என்பது  கருத்து
இனி நம் வசத்தே விடுமே
எதிர்காலத்தில் நம் விருப்பப் படி நடக்க விடுவாரோ –
நம்மை -இதற்கு முன்பு விருப்பப்படி ஸ்வ தந்தரமாக நடந்து பாழ் படுத்திக் கொண்டவர்களான -நம்மை
கீழ்க் கூறியபடி ச்வர்க்கத்திலும் -நரகத்திலும் -;பிறப்பிலுமாக -நாம் மாறி மாறி திரிந்து கொண்டு
இருந்தது -மனம் போனபடி ஸ்வ தத்ரமாக நாம் நடந்து கொண்டமையால் -அதனுக்கு இடம் தாரார் -என்றபடி .
இதனால் ஈச்வரனிலும் ஆசார்யர் ஆகிற எம்பெருமானாருக்கு உள்ள வேறுபாடு தோற்றுகிறது-அவன் கர்மத்திற்கு
தக்கவாறும் நடாத்துகிறவன் -எம்பெருமானாரோ கிருபைக்கு தக்கவாறு மட்டும் நடாத்துவார் –
அதனால் தன் கருணைக்கு ஏற்ப -அவித்யை கர்மம் முதலியவற்றை   .அடியோடு ஒழிப்பவ னாய் இருப்பினும்
கேட்ப்பார் அற்ற ஸ்வ தந்த்ரனாதலின் -நம் கர்மத்திற்கு ஏற்ப அவன் நடாத்த புகின் நம் நிலைமை
என் ஆவது -ஸ்வர்க்கத்தில் போடுவானோ -நரகத்தில் போட்டு தபிக்க செய்வானோ -கர்மத்தில்
சுழல விடுவானோ -என்று மனம் நைதற்கு  இடம் உண்டு -மேலும் அவற்றிலே திரிந்து உழலுதற்கு
காரணமான வினைகளை ஈட்டிக் கொள்ளுமாறு ஸ்வ தந்தரத் தன்மையை தந்து விடுவானோ என்று
பயப்பட்டு நைய வேண்டியது ஆகிறது .எம்பெருமானாரோ அவன் போல சுவர்க்கத்தில் இட மாட்டார் –
நரகில் இட்டு சுட மாட்டார் -சுழல் பிறப்பில் நட மாட்டார் -அந்நிலை ஏற்படும் படி   நம்மை

ஸ்வ தந்தரமாக நம் இஷ்டப்படி   விட மாட்டார் -ஆகவே நெய்வதற்கு இடம் எது -என்கிறார் .ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனைப் பற்றினார்க்கு -மீண்டும் ஸ்வ தந்த்ரதன்மையைத்தந்து -கர்ம பந்தத்துக்கு உள்ளாக்கி விடுவானோ -ஸ்வ தந்த்ரனான அவன் -என்று அஞ்சி-நைவதற்கு இடம் உண்டு ..கர்மங்கள் தொலைக்கப் பட்டு இருந்தாலும் அவை கிளறுவதற்கு-ஹேதுவான தேக சம்பந்தம் இன்னும் நீங்காமையின் அஞ்சி நைதல் தவிர்க்க ஒண்ணாதாயிற்று.

ஈஸ்வரனுக்கும் தம் ஆசார்யனுக்கும் பரதந்த்ரர் ஆகிய எம்பெருமானாரோ  -ஸ்வ தந்த்ர்ய தன்மையை தந்து
கர்ம பந்தத்துக்கு உள்ளாகும்படி விட்டு விட மாட்டார் ..பரதந்த்ரர் ஸ்வ தந்த்ரம் தர மாட்டார் அன்றோ –
தேக சம்பந்தம் உள்ள வரையிலும் புத்தி பூர்வகமான -தெரிந்து வேண்டும் என்றே புரியுமவையான –
பாபங்களில் இறங்க ஒண்ணாதவாறு கண் காணித்து காத்து அருளுவார் -என்பது -கருத்து –
இங்கு -எம்பெருமானார் சம்பந்தம்  உடையவனாய் இருந்து வைத்தும்-அரங்க மாளிகை -என்பான் ஒருவன் –
விஷய ப்ரவண னாய்  வர்திக்கக் கண்டு-பஹூச -பலகாலும் சிஷித்து கீதா  அத்யாயங்களை-பதினெட்டும்
ஓதுவித்து –அதில் அர்த்தம் நெஞ்சில் படுத்தி -ஊண்  உறக்கமும் அறியாதே   -வீத ராகனாய் -ஆசை அற்றவனாய் –
கிருபா பரதந்திர -அருளுக்கு உட்பட்டவனாம் படி -அருளினாரே -என்று எம்பருமானார்
தம் சம்பந்தம் உடையாரை அவர்கள் வசத்தே விடாமைக்கு உதாஹரணமாய்-விலஷண மோஷ அதிகாரி-நிர்ணயத்தில் காட்டி இருப்பது -காணத்தக்கது ..
ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே பிரசங்கம்  –பயம் அபயம் -இரண்டும்-மாறி மாறி நடப்பது -தான் உள்ளது -என்னும் ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ சூக்தியும் –
பரதந்திர ச்வரூபனாய் மோஷ ஏக ஹேதுவான ஆசார்யனை உபாயமாக பற்றில் இப் பிரசங்கம்-இல்லை -சதத நிர்ப் பரனாய்   இருக்கலாம் என்று கருத்து -என்னும் மணவாள மா முனிகள்-வியாக்யானமும் அறியத் தக்கன .
சரணம் என்றால் –
சரணம் அடைந்தால் என்றபடி -மனம் வாக்கு உடல் என்னும் மூன்று கரணங்களும் சரண்
அடைவதற்கு தேவை இல்லை – அம மூன்றுக்குள் மிக எளிதான வாக்கு ஒன்றே போதும் -அதாவது எம்பெருமானார் திருவடிகளே சரணம் -என்று சொன்னாலே போதும் –
எம்பெருமான் கைவிடாமல் இருப்பதற்கு -என்னும் கருத்துடன் -சரணம் என்றால்-என்கிறார் .
இதனை எம்பெருமான் திறத்து-சரணா கதி என்னும் சொல்லை சொன்ன என்னை -நான் மகா-பாபியாய் இருப்பினும் ஈஸ்வரனாகிய நீ உபேஷிப்பது தகாது என்னும் பொருள்பட –
பாபீ யசோபி சரணாகதி சப்த பாஜோ நோபே ஷணம் மாமா தவோசிதம் ஈச்வரஷ்ய – என்று
இவர் ஆசார்யரான  கூரத் ஆழ்வான் அருளிச் செய்து உள்ளமை -காண்க –பெரியோர்கள் இது பற்றியே
ஸ்ரீ மதே ராமானுஜாய நம -என்று சொல்லியோ எழுதியோ தங்கள் பணியைத் தொடக்கி
இடையூறு இன்றி முடிப்பதைக் காண்கிறோம் .
இவ்விடத்தில்
ராமானுஜாய முநயே நம உக்திமாத்ரம்  காமாது நுரோபி குமதி கலயன் ந பீ ஷணம்
யாமாம நந்தி யமி நாம் பகவஜ்ச நா நாம் தாமேவ விந்ததி கதிம் தமஸ பரஸ்தாத் –
புத்தி கெட்டவனாய்-காமத்தினால் பீடிக்கப் பட்டவனாய் -இருப்பினும்
ராமானுஜாய நம -என்னும் சொல்லை மட்டும் அடிக்கடி சொல்லுமவன் –
பகவானைச் சேர்ந்தவர்களான யோகியர் பிரகிருதி மண்டலத்திற்கு அப்பால் உள்ள
எந்த மோஷத்தையேபெறுவதாக ஒதுகின்றனரோ அந்த மோஷத்தை  அடைகிறான் –என்னும்
ராமானுஜ அஷ்டக ஸ்லோகம் அனுசந்திக்கத் தக்கது .
மனமே நையல் மேவுதற்கு –
சோற்றுக்கு நையாதே எனின் சோறு கிடைப்பது பற்றி வருந்தாதே -அது கிடைப்பது உறுதி என்று பொருள் படுவது போலே
மேவுதல்-பேற்றினைப் பெறுதல் பற்றி நையாதே -என்றது பேறு கிடைப்பது பற்றி வருந்தாதே
அது கிடைப்பது உறுதி என்று பொருள் பட நின்றது .
நையல்-எதிர்மறை வியங்கோள் வினை முற்று
பேற்றுக்காக வருந்தாது நிம்மதியாய் இரு என்று மனத்தை தேற்றினார் -ஆயிற்று .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது –

இடுமே-இட மாட்டார்/இன்னும் -திருவடிகளை பட்ட பின்பு-தபிப்பிபரோ ? அவற்றை-சவர்க்க நரக அனுபவத்துக்கு ஈடான கர்மம் -ஜென்மத்துக்கு உறுப்பாகையாலே-அவற்றை அனுசரித்து கொண்டு இருப்பதாய்–தொடர் தரு-தொல்லை சுழல் பிறப்பில்-அநாதியாய், வளைய வளைய வாரா நின்று உள்ள ஜன்மத்திலே நிருத்துவரோ ?/மேல் உள்ள காலம் நம்மை நம் உடைய ருஷ்ய அனுகுணமாக விடுவரோ ?ஆன பின்பு பிராப்தி நிமித்தமாக நெஞ்சே சிதிலமாகாதே கொள்/

மேவுதல்– பொருந்துதல்

நடுதல்-ஸ்தாபித்தல்

//சர்வ நியந்தா சர்வேஸ்வரன்-அவன் அவன் கர்மா தீனமாக சொர்க்கம் நரகம் கர்ப்பம் கொடுக்க சங்கல்பம் கொண்டவன் தானே-நடத்தையும் அப்படி தானே இது வரை/ பிரகிருதி சம்பந்தம் இன்னும் உண்டே/துர் வாசனை வரும்–கர்ம தூண்டுமே

எம்பெருமானாரை சரணம் என்றால் –ஸ்வாமி நம்மை அப்படி விட்டு கொடுக்க மாட்டார்-பிராப்தி நிமித்தமாக கிலேசிக்க வேண்டாம் என்கிறார்/சரணம் சொல்ல  பிரயத்தனம் பண்ணி மேலே சரணம் சொன்ன பின்பு எல்லாம் பண்ணுவார்/ஸ்வாபம் ஸ்வாமிக்கு இது /மனமே-இப்படி அதி சங்கை பண்ண வேண்டாம்-நமக்கு அருள /நேராக சொன்னால் கேட்டு கொள்ள  மாட்டோம் என்று /

ஆச்சார்ய அவதாரம் பெருமாள்-சாஸ்திரமும்  கையுமாக -ஸ்வாமியோ சஸ்த்ரமும்கையுமாக-/கருணையால்/ராமானுஜ திவாகரன்-ஞானம் மலர -அஞ்ஞானம் விலகி/முன்னை வினை-சஞ்சிதகர்ம   பின்னை -ஆகாமி கர்ம -வினை ஆரப்தம்  கர்ம – மூன்றையும் முடிக்க தீஷை-கொண்டு இருக்கிறார் ஸ்வாமி

/செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே/தமர்கள் வல் வினையை கூட்ட நாசம் செய்கிறான்/கர்ம-ஜன்ம-கர்ம சுழல்-அவன் சத்ய சங்கல்பம்/ஸ்வாமி கர்ம தொலைத்து மோட்ஷம் கொடுக்க தீஷை கொண்டு இருக்கிறார்-கங்கணம் கட்டி கொண்டு/உபதேசத்தாலே திருத்தி-கொடு உலகம் காட்டேல்-ஆழ்வார் பிரார்த்திக்க ஸ்வாமி  யை பிறப்பித்தார்

-உத்தாரணம் பண்ணவே அவதரித்தார்..இது ஒன்றே அவதார பலன்/ராமனுஜம் சரணே கதி/ ஸ்ரீ ரெங்கேச   பக்த ஜன-ஆழ்வார்-மானச ராஜ ஹம்சம்-ஸ்வாமி-/ராமானுஜாய முனயே நம உக்தி மாதரம்– காமாதி துமதி தோஷங்களை போக்கி அருளிவாறே

தமசில் உழன்ற  இருக்கும் ஒருவன்-ராமனுஜன் சரணம் என்று சொல்லி -தமசை காட்டிலும் உயர்ந்த பரம பதம் அடைகிறான்/சரணாகதி சப்தம் மட்டும் பார்த்து-கை விட மாட்டார்/அரங்கம் ஆளி-ஐதீகம்/பிரகிருதி வசம் பட்டவன்-சுவர்க்கம் -இந்திர லோகம்-ஜோதிஷ்ட ஹோமம் பண்ணி-போகம் அனுபவிக்க-புண்யம் குறைந்து -செலவழிக்க வந்தோம் என்று புரிந்து கொண்டு-மீண்டும் வந்து பிறந்து-பயம் தீராமல்-அழிய கூடிய -காரணத்தால் வந்த இடம்- இடுமே -நரக கல்பம் போல சொர்க்கம் முமுஷுக்கு/

 இதுவே -பிரதி கூல- தமம்–ஸ்ரீ வைகுண்டம் நினைவே வராமல் இருப்பதால்
//பிரதி கூலம்-சம்சாரம்-ஸ்ரீ வைகுண்டம் நினைவு இருக்கும்/
/ பிரதி கூலதரம்- நரகம்  //பல நீ காட்டி படுப்பாயோ-இந்திரியங்களை   அலைக்க பண்ண
/போர வைத்தாய் புறமே// நெறி காட்டி நீக்குவாயோ /
அல்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
//கூவி கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ/
//ஈஸ்வரன் கர்மத்தை பார்ப்பார் ஸ்வாமி கிருபையை பார்ப்பார்//
/ ஸ்வாமி சேஷ பூதர் பாரதந்த்ரர்-நமக்கு  அவற்றையும் கொடுப்பார்/
 ஈஸ்வரன் ச்வதந்த்ரன் நமக்கும் ச்வதந்தர்யம் கொடுத்து நம்மை நம் வசம் வைக்க பண்ணுகிறான்
//ஸ்வாமி நம்மை  அவர் வசம் கொள்வார்
/இன்னும்-உபாயம் உபேயம் என்று அநந்யார்ஹர் ஆன பின்பு
-திட விசுவாசம் கொண்ட பின்பு //
கேட்க கூட பயம் நரகம்-ஸ்வாமி அங்கு செலுத்துவர் என்று சொல்லுவது
 32 நரகம் படுத்தும் பல  வித க்ரூரம்/ வென் நரகம் சேரா வகை
// கடும் சொலார் கடியார்
-நிரயம்-நரகம்-துரித பவனம்பிரேரிதே-
ஜன்மம் -சக்கரம்
-புண்ய பாபம் காற்று -சுவர்க்கம் நரகம் ஈடு-
 தொடர் தரு தொல்லை-அநாதியாய்
-ஜன்ம பரம்பரையிலும் நட்டு வைக்க மாட்டார்/
 நம்மை நம் வசத்தில் விட மாட்டார்/சரணம் சொன்ன உடன் -கண்ட வழியில் போக விட மாட்டார்
-ஹிதம் என்று ஸ்வாமி கண்ட வழியில்-தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -போல
ஸ்வாமி அடியோங்களை-அப்ராப்தம் ஓன்று தட்டாமல் பண்ணி அருளுவார்/
/மற்ற எல்லாம் புல் தானே ஸ்வாமி பதாம் புஜம் பற்றிய பின்பு
/காம க்ரோதோ லோப மத ஆட பட மாட்டோம்/
 மேவுதல்- அடியார் குழாம்  களை  உடன் கூடுவது என்று கொலோ
-இது தான் மேவுதல்-மோட்ஷம் என்று இல்லை/மேவுதலுக்கு நைதல் என்றால் மேவுதல் நிமித்தமாக நைய வேண்டாம் /
/அனுபவித்து தீர்க்க முடியாத கர்மா -சாஸ்திரம் பார்த்து ஈஸ்வரன்/
 மதுசூதனன் அடியாரை விட சொல்லி –நமனும் தம் தமரை கூடி- சாதுவராய் போதுமின் என்றார்-ஸ்ரீ வைஷ்ணவர்களே எனக்கு பரர

பாபம் தட்டாது/நமன் தமரால் ஆராய பட்டு அறியார் கண்டீர்

/-அரவணை மேல் பேர் ஆயற்கு    ஆட் பட்டார் பேர் -பெயரை வைத்து கொண்டாலே போதும்-எத்தினால் இடர் கெட கிடத்தி //இறந்த குற்றம் எண்ண வல்லானே//மாசுச- என் நெஞ்சமே-மதுர கவி/ மனமே நையல் மேவுதற்கு-

சரம பர்வ நிஷ்ட்டையில்-உள்ள நம்மை-சம்சார வெக்கையில் காட்ட மாட்டார் ஸ்வாமி
-உபாசனம் படி -பக்தி-யோகம்-பிரகிருதி சம்பந்தத்தால் இடையூறு-பிர பன்னனுக்கு எதோ உபாசனம் பலன் இல்லை- இருந்தாலும்-உபாசனமே திருவடிகள் தான் இங்கு -பிராப்யம் கிடைக்கும் வரையில் காத்து இருக்க வேண்டாம்-அறிவிப்பே அமையும்-ஒரே கர்த்தவ்யம்-/அசித்தை கூட-மனசை- திருத்துவார் ஸ்வாமி-அதனால் மனசுக்கு சொல்லுகிறார்-

—————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: