அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–97-தன்னை வுற்றாட் செய்யும் தன்மையினோர்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
தொண்ணூற்றேழாம் பாட்டு -அவதாரிகை –
இப்படி எம்பெருமானார் தம்மள வன்றிக்கே-அங்குத்தை க்கு  அனந்யார்ஹராய் இருப்பார்
உத்தேச்யர் என்று இருக்கைக்கு இந்த ருசி உமக்கு வந்த வழி தான் என் என்ன -அதுவும்
எம்பெருமானார் தம்முடைய கிருபையாலே வந்தது என்கிறார் .
தன்னை வுற்றாட் செய்யும்    தன்மையினோர் மன்னு தாமரைத் தாள்
தன்னை வுற்றாட் செய்ய என்னை வுற்றானின்று தன் தகவால்
தன்னை வுற்றாரன்றித் தன்மை வுற்றாரில்லை என்றறிந்து
தன்னை உற்றாரை இராமானுசன் குணம் சாற்றிடுமே – – -97 –
வியாக்யானம்
தம்மை பற்றி இருப்பார் உண்டு இத்தனை ஒழியத்
தம்மைப் பற்றி இருக்குமவர்களைக் குண கீர்த்தனம் பண்ணுகை யாகிற ஸ்வபாவத்தில்
உற்று இருப்பார் ஒருவரும் இல்லை என்று திரு உள்ளம் பற்றி –
தம்மை ஒழிய விஷயாந்தரம் அறியாதபடி பற்றித் தமக்கு அடிமை செய்கையே
ஸ்வபாவமாக உடையராய் இருக்குமவர்களுடைய
பரஸ்பரம் பொருந்தியும் -பரம போக்யமுமாய் இருக்கிற திருவடிகளை
தத் வ்யதிரிக்தங்கள் ஒன்றும் அறியாத படி பற்றி –இவர்களுக்கு தம்மை அடிமை
செய்யும்படியாக எம்பெருமானார் தம்முடைய கிருபையால் இன்று என்னை
அங்கீ கரித்து அருளினார் –
தன்மை -ஸ்வபாவம்
மன்னுதல் -பொருந்துதல்
தன்னை வுற்றார் அன்றித் -தன்னை வுற்றாரை- குணம் சாற்றிடும் தன்மை வுற்றார் -இல்லை-என்று அறிந்து -தன்னை உற்றாட்   செய்யும் தன்மையினோர்- மன்னு
தாமரைத் தாள் தன்னை- வுற்றாட் செய்ய-இராமானுசன்- தன் தகவால் இன்று என்னை வுற்றான் –என்று-அந்வயம் .-.
விஷய பிரவண்யத்தை விட்டு பகவத் விஷயத்தில் வரும் அருமை போல் அன்றியே பகவத் விஷயத்தை விட்டு பாகவத விஷயம் -மேட்டு மடை அன்றோ
இளைய பெருமாள் பெருமாள் அழகில் ஈடுபட்டு இருந்ததால் -பாகவத சேஷத்வம் அறியாமல் -நம் ஸ்வாமி -அக்குறை தோன்ற அன்றோ அவதரித்தார் இங்கு
தன் தகவால் உற்றான் என்றும்-தன் தகவால் தன்னை உற்றாரை குணம் சாற்றிடும்
தன்னை வுற்றார் அன்றித் -தன்னை வுற்றாரை குணம் சாற்றிடும் தன்மை வுற்றார் -இல்லை-என்று அறிந்து -தன்னை உற்றாட் செய்யும் தன்மையினோர்– மன்னு
தாமரைத் தாள் தன்னை- வுற்றாட் செய்ய-இராமானுசன் தன் தகவால் இன்று என்னை வுற்றான் –என்று-அந்வயம் .-
அன்றிக்கே –
சாற்றிடும் -என்பது வினை முற்று அன்று –பெயர் எச்சம்-அது தன்மை என்னும் பெயரோடு முடிகிறது .
தன்னை உற்றார் அன்றி- தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை -என்று அறிந்து-
தன்னை உற்று ஆட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத்தாள் -தன்னை உற்று ஆட் செய்ய-இராமானுசன் தன் தகவால் இன்று என்னை உற்றான் -என்று கொண்டு கூட்டி முடிக்க –
ஸ்ரீ பாஷ்யம் கற்பித்த -குணம் போற்றி / அடியாருக்கு ருசி விளைவிக்க / ஆனந்தம் போக்கு வீடாக -ஆழ்வானை போற்றுவார் எம்பெருமானார் /அமுதனார் தன்மை அறிந்து தகவல் ஆழ்வான் திருவடிகளில் சேர்த்து /அடியார் அடியார் ஏற்றம் அறிந்து அடியார்க்கு ஆட்படுத்தும் தன்மை / சாற்றிடும் -பெயர் எச்சமாகவும் வினை முற்றாகவும் / அடியார்க்கு ஆள் செய்வதே அவர்களை குணம் சாற்றிடும் தன்மை தானே /சத்ருக்ந ஆழ்வான் நிஷ்டை இளைய பெருமாள் வெளியிடவில்லையே -அதனால் ஸ்வாமி இந்த அவதாரத்தில் -காட்டி அருளி அமுத்தனாரை ஆழ்வானுக்கு ஆட்படுத்தி அருளினார்  என்றவாறு-இக் கிருபை பூர்வ அவதாரத்தில் ராம சௌந்தர் யத்தாலே அமுக்குண்டு-நிற்க்கையாலே இவ் அர்த்தத்தை    வெளி இட மாட்டாதே இருந்தார் என்றபடி –  /மன்னு தாமரை தாள்கள் -போக்யமே ஈடுபடுத்தும் -கட்டாயப்படுத்த வேண்டாமே/அமுதனார் -அமுத மொழி -ஆழ்வான் வைபவம் -கவிபாடவும் ஆடி செய்யவும்- என்னை உற்று ஆள் செய்ய -உற்றது -கவி பாட –கூரத் தாழ்வான் -ஒன்றே போதும் எம்பெருமானாரை பாட சொல்லி இதுவே ஆழ்வானுக்கு ஆள் செய்வது/இங்கே போனால் அங்கு அனுப்புவார்கள் -அங்கே போனால் இங்கே அனுப்புவார்கள் அன்றோ /-என்னை உற்றான் இன்று -இன்றே விடிந்தது/இன்று தொட்டும் ஆழ்வார் புகழ் பாட அருளினால் போலவும் அக்ரூரர்  போலவும்   /
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை -கீழ்ப் பாட்டிலே எம் இறைவர் -இராமானுசனை உற்றவரே -என்று -மாதா பிதா –சர்வம் யதேவ நியமே ந மதந்வயாநாம் –
என்றால் போலே எம்பெருமானாரை- தேவு மற்று அறியேன் -என்று பற்றி இருப்பாரே –தமக்கு உறு துணை -என்று இவர்
சொன்ன வாறே -உமக்கு அவர்தம் அளவில் அன்றிக்கே -அங்குத்தைக்கு -நிழலும் அடிதாரும் போலே -அனந்யார்ஹராய்
இருப்பாரும் கூட உத்தேச்யர் என்று இருக்கைக்கு ஈடான இந்த ருசி வந்த வழி தான் ஏது என்ன –திக்குற்ற கீர்த்தி –
என்னும்படியான இவர் தம்முடைய வைபவத்தை -கண்களால் கண்டும் செவிகளால் கேட்டும் -தம் பக்கலிலே-அடிமைப்படுவாரை இத்தனை ஒழிய -தமக்கு அனந்யார்ஹராய் இருப்பார் -தமக்கு  கிடைக்க அருமை — அடிமைப் படுவார்  கிடைக்க-அரியார்
 என்று திரு உள்ளமாய் –முந்துற முன்னம் தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் பக்கலிலே என்னை
அடிமைப்படுத்தினர் ஆகையாலே -இந்த ருசி அடியேனுக்கு அவருடைய கிருபையாலே வந்தது -என்கிறார் –

வியாக்யானம் -தன்னை உற்றார் அன்றி -கலவ் கஸ் சித் பவிஷ்யதி – என்று நாரத பகவான் சொல்லுகையாலும் –பாகவத புத்ரனான ஊமை –

இவர் தம் பிரபாவத்தை கட்டடங்க வெளி இட்டு -அங்கனே திரோஹிதன் ஆகையாலும் –
யாதவ பிரகாசர் இவரை வஞ்சிப்பதாக மணி கர்னிக்கைக்கு  அழைத்துக் கொண்டு போகிற போது
கோவிந்த பெருமாள் அச் செய்தியைக் கேட்டு -வித்யாடவியிலே அறிவித்தவாறே -அங்கே இவர் தனிப்பட்டு
இருக்க -அவ்வளவிலே பெருமாள் தாமே இவருக்கு வழி துணையாக வந்து -ஒரு ராத்ரியிலே தானே இவர் தம்மை –
ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சித் திருப்பதியிலே சேர்த்தார் என்று சொல்லுகையாலும் -இவருக்கு
திருக் கச்சி நம்பி முகமாக சமஸ்த அர்த்தங்களையும் பேர் அருளாளர் வெளி இட்டார் என்கையாலும் –
திக் விஜயார்த்தமாக தத் தேசங்களிலே சென்று -சைவ மாயாவாத  ஜைன பௌதாதிகள் உடம் சஹஸ்ரமுகமாக
பிரசங்கித்து -அவர்களை பக்னர் ஆக்கினார் என்கையாலும் –வேங்கடாசல யாதவாச்சலங்களை நிர்வஹித்தார்

என்கையாலும் -இச் செய்திகளை அடைவே  கண்டும் கேட்டும்  லோகத்தார் எல்லாரும் வித்தராய் -அலசாம் ப்ரதிபேதரே -என்றால் போலே தம்மை ப்ராப்யமாகவும் பிராபகமாகவும் அத்யவசித்து -ஆஸ்ரயித்து இருப்பார் உண்டு இத்தனை ஒழிய –தன்னை உற்றார் குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை-என்று அறிந்து -தன்னை உற்றார் -தம்முடைய ஸ்வரூப ரூப குண விபவங்களை உள்ளபடி  தெளிந்து இருக்கும்-அவர்கள் –அன்றிக்கே –-சம்பந்தி சம்பந்திகள் அளவிலே கிருபை அதிசயித்து இருக்கிற தம்முடைய ஸ்வபாவத்தை-உள்ளபடி தெளியப் பெற்றவர்கள் என்னுதல் -அமுதனார் தம்முடைய சம்பந்தி சம்பந்திகள் விஷயத்தில் -கிருபை-பண்ண விரும்புவதும் -அந்த ஸ்வபாவத்தை உள்ள படி அறிகைக்கு உத்தேச்யர் என்று இறே -எம்பெருமானார் உடைய-ஸ்வபாவம் –தம்மை ஆஸ்ரயித்து இருக்குமவர்களை காட்டில் -ஸ்வ சம்பந்த சம்பந்திகள் விஷயத்தில் கிருபை-அதிசயித்து செல்ல வேண்டும்படியாய் இருக்கும் -ஆகையால் இறே –த்வத் தாஸ தாஸ கண ந சரமாவதவ் யஸ் ஸ்வத்தா-சதைகரசதா விரதாமமாஸ்து -என்று ஜீயரும் பிராரத்து அருளினார் இறே -இப்படிப் பட்ட ஸ்வபாவத்தை அறிந்து ஆஸ்ரயித்தார் உடைய-குணம் சாற்றிடும் தன்மை உற்றார் -எம்மை நின்றாளும் பரமரே -நம்மை அளிக்கும் பிராக்களே –

தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –சிறு மா மனிசராய்
என்னை ஆண்டார் இங்கே திரியவே –தொண்டர் சேவடி செழும் சேறு  என் சென்னிக்கு அணிவனே –
கடல் மலை தலை சயனம் ஆர் எண்ணு நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே -தண் சேறை எம்பெருமான்
தாள் தொழுவார் காணும் என் தலை மேலாரே –என்று பிரதம பர்வ நிஷ்டரான ஆழ்வார்கள் ததீய விஷயத்தில்
அருளிச் செய்த குணாதிக்யத்தை இட்டு ஸ்தோத்ரம் பண்ணுகை யாகிற   ஸ்வபாவத்தை உடையராய் இருப்பார் –

தன்மை -ஸ்வபாவம் -சாற்றுதல் -பிரகாசமாக சொல்லுதல் -இல்லை என்று அறிந்து -தத்ராபி துர்லபம் மன்யே வைகுண்டே ப்ரிய தர்சனம் -என்னுமா போலே இது-தான் துர்லபம் –விஷய ப்ரவணனுக்கு அத்தை விட்டு பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல்-

அன்றிக்கே -பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே வருகைக்கு உள்ள வருமை -என்றும் சொல்லுகிறபடியே
மேட்டுமடையான இவ் அத்யாவச்யத்தை உடையவர் ஒருவரும் இல்லை என்று அறிந்து -இல்லை என்று திரு உள்ளம்
பற்றி -என்றபடி -இந்த சூஷ்ம அர்த்தத்தை தெளிந்து இருக்குமவர் இவர் ஒருவரே என்று இருக்கிறார் காணும் அமுதனார் –
இராமானுசன் -எம்பெருமானார் -தம்முடைய பூர்வ அவதாரத்தில் வெளி இட மாட்டாத அர்த்தத்தை காணும்

இப்போது வெளி இடத் தொடங்கினார் -தன் தகவால் -சாவித்ரீ முக்தாநாம் சகல ஜகதேன ப்ரச மனீ கரீ யோபிஸ் தீர்த்த ரூபசித-ரசயா முன முகை நிருச்சேதாநிம் நேதாமபி சமாலாப்வயதிமாம் யதர்ச்சா விஷேபாத்-யதிபதி தயாதி வ்யதடி நீ -(கங்கை முத்து / ஸ்வாமி முக்தர் / பாபம் போக்கும் கங்கை போலே ஸ்வாமி ஸ்ரீ ஸூ க்திகள் /யமுனை தீர்த்தங்கள் சேர்ந்து -வெள்ளைப் பெருக்கு/ யாமுனாதிகள் உபதேசமும் இவர் கருணையில் சேரும் -நிருச்சேதா -வற்றாத /நின் நே  மேட்டு நிலம்  -வணங்கா முடி -யதிராஜ சப்ததி விடாமல் பிள்ளை லோகம் ஜீயர் காட்டி அருளுகிறார் )என்கிறபடி கரை கட்டா காவேரி போலே பெருகி வருகிற-தம்முடைய பரம கிருபையாலே -இக் கிருபை பூர்வ அவதாரத்தில் ராம சௌந்தர் யத்தாலே அமுக்குண்டு-நிற்க்கையாலே இவ் அர்த்தத்தை    வெளி இட மாட்டாதே இருந்தார் என்றபடி –    தன்னை உற்று ஆள் செய்யும் தன்மையினோர் -வாசா யதீந்திர மனசா வபுஷாச யுஷ்மத்-பாதார விந்த யுகளம் பஜதாம் குருணாம் -என்றும் -நித்யம் யதீந்த்ரம் தவ திவ்ய வாபஸ் ச்ம்ரத்தொமே-சக்தம் மனோபவது  வாக் குண கீரத்த நேசவ்-க்ர்த்யஞ்ச்ச  தாஸ்ய கரணந்து –  கரத்வயச்ய-வ்ர்த்யந்தே  ரேச்து விமுகம்  கரண த்ரயஞ்ச -என்றும் -நித்யம் யதீந்திர தவ திவ்ய பதாப்ஜ சேவா -என்றும் சொல்லுகிறபடி -தம்மை ஒழிய வேறு ஒரு விஷயாந்தரம் அறியாதபடி -ஆஸ்ரயித்து –கரண த்ரயத்தாலும் தமக்கு சகல வித கைங்கர்யங்களும் பண்ண வேணும் என்னும் ஸ்வபாவத்தை-உடையராய் இருக்குமவர்கள் -தன்மையினோர் -ஸ்வபாவம் உடையோர் மன்னு தாமரைத்தாள் தன்னை உற்றாள் செய்ய என்னை உற்றான் இன்று –

த்ர்ணீ கர்த விரிஞ்சாதி நிரந்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ  சமாச்ரயண சாலி ந-என்றும் –
ராமாநுஜார்ய சரண த்வந்த்வ கைங்கர்ய வ்ர்த்தய-சர்வாவச்தாஸூ   சர்வ ர ஸூ -தாரக போஷகாஸ் சமே -என்றும்
சொல்லுகிறபடி -இப்படி சர்வ பிரகாரத்தாலும் ஸ்லாக நீயராய் இருக்குமவர்கள் –உண்ணும் சோறு
பருகும் நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்று ஆழ்வார் அத்யவசித்தால் போலே
தமக்கு தாரகாதிகளாக அத்யவசித்து -கம்பீராம்பஸ் சமுத்பூதமாய் -செவ்வி பெற்று இருக்கிற செந்தாமாரை போலே
அதி ஸூ குமாரங்களாய் -ஒன்றுக்கு ஓன்று போலியாய் -பொலிந்து என்றும் -மன்னு தாமரை தாள்கள் அன்றோ-அத்யந்த போக்யங்களாய் இருக்கிற
அவர்களுடைய திருவடிகளை -தத் தாஸ தைகர சதா விரதாமமாஸ்து -என்றபடியே வழு இலா அடிமை
செய்ய வேண்டும் என்னும் மநோ ரதத்தையும் – மம  மத் பக்த பக்தேஷூ  ப்ரீதிரப்யதி காபவேத் –தஸ்மான்
மத் பக்த பக்தாஸ்ஸ  பூஜ நீயா விசேஷத -என்ற அவனுடைய ஊற்றத்தை போன்ற ஊற்றத்தையும் உடையராய்

கொண்டு –மற்றொரு பேறும் மதியாதபடி பற்றினார் -மநோ ரதித்த படியே -அவர்களுக்கு வழு இலா அடிமை செய்ய வேண்டும்படியாக அடியேனை இன்று திருத்தி-அங்கீ கரித்து அருளினார்-மன்னுதல்-பொருந்துதல் -இவ் அங்கீகாரம் முன்பு உண்டாய்-இருந்தது -ஓன்று அல்ல –இன்று உற்றான் -அத்யமே சபலம் ஜன்ம ஸூ ப்ரபாதாசமே நிசா -என்கிறபடி- விடியா வென் நரகம் அற்றுப் போய் இன்று நல் வீடு உண்டாக தொடங்கிற்று -என்கிறார்   —

————————————————————————–
 அமுது விருந்து –
அவதாரிகை
இப்படி எம்பெருமானார் அளவோடு நில்லாது -அவர் தம்மை உற்றவர்
அபிமானத்திலே நிஷ்டை ஏற்படும் படியான விருப்பம் –
எவ்வாறு உமக்கு வந்தது என்பாரை நோக்கி அதுவும்
எம்பெருமானார் கிருபையினாலே வந்தது -என்கிறார் –
பத உரை –
தன்னை உற்றார் அன்றி -தம்மை பற்றி இருப்பவர்கள் உள்ளார்களே தவிர
தன்னை உற்றாரை -தம்மை பற்றி இருப்பவர்களை
குணம் சாற்றிடும் -குணங்களை உலகறிய சொல்லி பரவும்
தன்மை உற்றார் -ஸ்வபாவம் நிறைந்தவர்
இல்லை என்று அறிந்து -ஒருவரும் இல்லையே என்று திரு உள்ளம் பற்றி
தன்னை உற்று -தம்மைப் பற்றி
ஆட் செய்யும் -அடிமை புரியும்
 தன்மையினோர் -ஸ்வபாவம் உள்ளவர்களுடைய
மன்னு -ஒன்றுக்கு ஓன்று பொருந்தி உள்ள
தாமரை -தாமரைமலர் போலே மிக்க அழகு -போக்யதை -வாய்ந்த
தாள் தன்னை -திருவடிகளை –
உற்று -பற்றி நின்று
ஆட் செய்ய -அடிமை செய்யும் படியாக
இராமானுசன் -எம்பெருமானார்
தன் தகவால் -தம்முடைய கிருபையினாலே
இன்று என்னை உற்றான் -இன்று என்னைப் பற்றி -ஏற்று அருளினார் .
வியாக்யானம் –
எல்லாரும் என்னை ஆஸ்ரயிக்கிரார்கள் தவிர
என்னை ஆஸ்ரயித்து உள்ளவர்களை ஆஸ்ரயித்து -அவர்கள் குணங்களை உலகு அறியப் பேசுகிறவர்
எவருமே இல்லையே –என்னும் குறைபாடு எம்பெருமானார் திரு உள்ளத்திலே நெடும் காலமாய் இருந்தது –
அக்குறை பாட்டினை என்னை இன்று தன்னை ஆஸ்ரயித்தவர்களை ஆஸ்ரயித்து
அவர்கள் திருவடிகளிலே ஆட் செய்யும் படி செய்ததனால் -அவர் தீர்த்துக் கொண்டார் என்றபடி –
தம்மை ஆஸ்ரயித்தவர்களை உற்று ஆட் செய்யும்படி செய்தது கட்டாயப் படுத்தியதனால் அன்று –
அதில் போக்யதையை காட்டி விரும்பும் படி செய்ததனாலேயே என்னும் கருத்து தோன்ற
மன்னு தாமரைத் தாள் -என்றார் .
தன் தகவால் –
தன் மனக்குறை தீர என்னை இந்த உயர்ந்த நிலைக்கு தேர்ந்து எடுக்க காரணம் -தனது கிருபையே –
என்கிறார் .தகவு -கிருபை
இனி ஆட் செய்ய -என்பதற்கு குணம் சாற்றிடல் ஆகிய அடிமை செய்ய என்னும் பொருள் கொண்டு
தன்னயுற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லையே என்னும் குறை தீருவதற்காக
என்னை குணம் சாற்றி -ஆட் செய்ய -ஏற்று அருளினார் -என்னவுமாம் –
என்னை –
குணம் சாற்றிடும்துதிக்கும் -தன்மை-இயல்பாய் அமைந்த உணர்ச்சி ஊட்டும் கவித் திறமை -வாய்ந்த –அமுத கவியாய -என்னை -என்றபடி .
தன்னை ஆஸ்ரயித்தவர்களைப் பற்றி கவி பாடும் தன்மை வாய்ந்தவர் எவரும் இல்லையே என்று குறை பட்டு –
அமுதனாரை கொண்டு -ஆழ்வான் விஷயமாக கவி பாடச் செய்து கேட்கலாம் என்று
அமுதனாரை ஆழ்வான் திருவடிகளிலே -ஆஸ்ரயித்து ஆட் செய்யும் படி அங்கீ கரித்து அருளினார்
எம்பெருமானார் -ஆயின் அமுதனார் ஆழ்வானுக்கு ஆட் செய்தாரே அன்றி –கவி பாடி -ஆழ்வான் குணம் சாற்றி –
எம்பெருமானாரைக் கேட்ப்பிக்க வில்லை -காரணம் ஆழ்வான் எம்பெருமானார் விஷயமாக கவி பாடக்
கட்டளை இட்டாரே  யன்றி தன் விஷயமாக கவி பாட சற்றும் இசைய வில்லை –
அதனால் எம்பெருமானாரைப் பற்றிய பாடல்களில் இடை இடையே அவரைக் குறிப்பிடுவது தவிர
தனியே கவி பாடுவது -அமுதனாருக்கு இயலாதாய் ஆயிற்று -.எம்பெருமானார் தம் ஆசார்யர் ஆகிய
 பெரிய நம்பிகள் நியமனப்படி -அவர் விஷயமாக அல்லாமல்-பரமாச்சார்ய விஷயமாக -யத்பதாம் போரு ஹத்த்யான –
என்னும் ஸ்லோகத்தை அருளிச் செய்தது போலே அமுதனாரும் பரமாசார்ய விஷயமாக இந்த
பிரபந்தத்தை அருளிச் செய்தார் -என்க –
தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் -என்று இயைக்க
சாற்றிடும் -என்பது வினை முற்று அன்று -பெயர் எச்சம்
அது தன்மை என்னும் பெயரோடு முடிகிறது .
தன்னை உற்றார் அன்றி தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் தன்மை உற்றார் இல்லை –
என்று அறிந்து
தன்னை உற்று ஆட் செய்யும் தன்மையினோர் மன்னு தாமரைத்தாள் -தன்னை உற்று ஆட் செய்ய
இராமானுசன் தன் தகவால் இன்று என்னை உற்றான் -என்று கொண்டு கூட்டி முடிக்க –
இனி உற்றான் என்பதைப் போலே –சாற்றிடும் என்பதையும் வினை முற்றாக கொண்டு –இரண்டு வாக்யங்களாக பிரித்து -பொருள் கூறலாமோ என்று தோன்றுகிறது .
அப்பொழுது கடைசியில் உள்ள சாற்றிடும் என்பதை மூன்றாம் அடியில் உள்ள –தன்மை -என்பதோடு கூட்டி வலிந்து உரை கூறும் இடர்ப்பாடு இல்லை .மூன்றாம் அடியில் உள்ள தன்மை -என்பதற்கு –தம் அடியார்க்கு அடியாராய் இருக்கும் ஆத்மாவினது இயல்பான தன்மை –என்று பொருள்
கொள்ளல் வேண்டும் ..தனக்கு அடியார்கள் உளரே அன்றி தன் அடியார்க்கு அடியாராம் இயல்பான
நிலைமையை எய்தினவர் ஒருவரும் இல்லையே -என்று இனி –
தன் அடியார்களுக்கு அடியார் ஆவதற்கு உறுப்பாக தன்னை உற்றாரை குணம் சாற்றிடுவார்
எம்பெருமானார் -என்று இப் பொழுது பொருள் ஆயிற்று ..புதிதாய் வருமவர்களிடம் தம் அடியார்களை
ஆஸ்ரயிப்பதற்கு விருப்பம் ஏற்ப்படும் வகையில் -அவ் அடியார்களை நாடறிய புகழ்ந்து உரைப்பர்
எம்பெருமானார் -என்பது கருத்து .,ராமானுசன் -என்பது இரண்டு வாக்யங்களுக்கும் ஒரே  எழுவாய் –
தன் தகவால் -என்பதனை -காகாஷி ந்யாயத்தாலே -முன்வாக்யத்திலும்
பின் வாக்யத்திலும் கூட்டிக் கொள்ளல் வேண்டும் .தன் தகவால் உற்றான் என்றும்
தன் தகவால் தன்னை உற்றாரை குணம் சாற்றிடும் -என்றும் உரைக்க –
இதனால் தன் அடியார் குணத்தை தானே சாற்றிடுதல் தகுமா என்னும் வினாவிற்கும் விடை
இறுத்ததாகிறது .–சீரியதான அடியார்க்கு அடிமை என்னும் இயல்பான நிலையில்
வருமவர்களை அமர்த்தல் வேண்டும் -என்னும் கிருபையினாலே அவர்களுக்கு ருசி
உண்டாகுவதற்க்காக-சாற்றிடுதலின் இது தகாதது அன்று -என்க .
இனி உலகை உய்வித்தலாம் தமது பணியில் -தன் அடியார்களை ஊக்குவித்து –
அடியார்க்கு அடியார்களை பெரும் மகிழ்வின் மிகுதியினாலேயே தன் அடியார்களை
கொண்டாடுதலும் தகும் -என்க –
தான் வளர்த்த கிளி -தன்னால் கற்ப்பிக்க பட்ட திரு நாமத்தை விவேகத்துடன் சமயத்துக்கு ஏற்ப –
உஜ்ஜீவிப்பித்த படி -தோற்றுமாறு –அடைவே சொல்லக்கேட்டு -தரித்து –
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக -திரு நெடும் தாண்டகம் – -14 – என்று
பரகால நாயகி -தான் கற்பித்த கிளையை கொண்டாடினது போலே
எம்பெருமானாரும் தாம் கற்பித்த சீடர்கள் தாம் வழங்கிய கல்வி கொண்டே உலகினை உய்வித்தலாம்
தமது பணியிலே -உரு துணையாய் நிற்றலையும் -தம் அடியார்க்கு அடியார் -தமக்கு கிடைத்தமையையும்
கண்டு மகிழ்ந்து -கற்பித்த தலினால் பயன் பெற்றேன் -என்று கற்ப்பிக்க பட்ட சீடர்களைக் கொண்டாடினார்
என்று அறிக .
தன்னை உற்றாரைக் கொண்டாடுவது ஆஸ்ரயிப்பவர்க்கு-அடியார்க்கு அடிமையில் விருப்பம்
உண்டாவதற்கும் -தான் கற்ப்பித்தது உயிர் களை உய்விப்பதில் பயன் பட்டமையினாலும் –
அடியார்க்கு அடியார் கிடைத்தமையினாலும்- உண்டான வரை கடந்த    மகிழ்ச்சிப் பெருக்கின்
போக்கு வீட்டிற்காகவும் -என்றது ஆயிற்று .
முதல் வாக்யத்தால் எம்பெருமானார் தம்மை ஆழ்வான் திருவடிகளில் ஆஸ்ரயிப்பித்ததும்
இரண்டாம் வாக்யத்தால் -இறாய்க்காமல் ஆசார்யன் ஆணைக்கு ஆட் பட்டு ஆழ்வான் தமக்கு
ஆசார்யனாகி -அவ் எம்பெருமானாராலே கொண்டாடப் பட்டதும்  -குறிப்பால் உணர்த்தப் படுகின்றன .
மணவாள மா முனிகள் கொண்டு கூட்டி ஒரே வாக்யமாக உரை அருளிச் செய்து உள்ளார் .அவர் தம் திரு உள்ளம் –தன்மை -என்பது எம்பெருமானார் ஆகிற தம் அடியார்க்கு அடியார் ஆகிற-ஸ்வபாவம் என்னும் பொருளைக் கொடுக்காது -என்பதோ வேறு யாதோ தெரிகிலம்-அறிஞர்கள் அருள்கூர்ந்து உணர்த்துமாறு அடி பணிந்து வேண்டுகிறோம் .
ஆசார்ய சார்வ பௌமராகிய மணவாள மா முனிகள் திரு உள்ளத்துக்கு முரண்பாடு இல்லை எனில்
நிர்வாஹச்ய நிர்வஹா ந்தரா தூஷகத்வம் -ஒறு நிர்வாஹம் -ஒருவகையில் பொருள் உரைத்தல் –
மற்ற நிர்வாஹத்தை -வேறு வகையில் பொருள் உரைத்தலை -குற்றம் கூறி கடிந்தது ஆகாது –
என்கிற கணக்கில் கொள்ளவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம் .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

தான் போலும் என்று எழுந்தான் தரணி ஆளன் -அது கண்டு பொருத்து இருப்பான் அரக்கர் தங்கள் கோன் போலும் என்று எழுந்தான்–ராவணன் வார்த்தை -இது வரை-ராமன் அகங்கரித்தான் என்று ராவணன் நினைவால்-குன்றம் அன்ன இருபது தோள் துணித்தான் -/அது போல பிரித்து அர்த்தம் கொள்ள வேண்டும்–ஆழ்வான் திருவடிகளில் சேர ஸ்வாமி கிருபை தான்–தன் அடியார் குணம்  சாற்றிட //அறியா காலத்து அடிமை கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்துஅடியேனை வைத்த்தாயால்/வருத்தம் தொனி இல்லை- ஆனந்த பிரகரணம் தானே இது-சுக துக்கங்கள் மாறி மாறி நடக்கையும் ஆழ்வாருக்கும் கலியனுக்கும்-

எனது ஆவி யார் யான் யார்- ஆனந்தமாய் பாடுகிறார்/மாற்றி அர்த்தம் கொள்ள ஸ்வாமி நிர்வாகம்/தன்னை உற்றார் குணம் சாற்றிட  வைத்தார்/இந்த ருசி ஸ்வாமி யால் தான் வந்தது //அனந்த்தாழ்வானையும்   அருளாள பெருமாள் எம்பெருமானார் இடம் சேர்த்தார் ஸ்வாமி

/அண்ணன் ஸ்வாமி-பொன் அடி கால் ஜீயர்- திருவடிகளில் சேர்க்க -அப்பாச்சியார்-அண்ணாவோ-மா முனிகள் -முதலி ஆண்டான் சம்பந்தம் பெற ஆசை கொண்டு/குணம் சாற்றிடும் தன்மை ச்வாபம்

அமுதனாரை ஆழ்வான் திருவடி சேர சொல்லி/ ஆழ்வானை கொண்டாடிய வியாக்யானம்//குணம் சாற்றிடும் தன்மை படைத்தவர்-பெயர் எச்சம்-

தன்னை உற்றார் அன்றி   தன்னை உற்றாரை  குணம் சாற்றிடும்தன்மை உற்றார் இல்லை என்று அறிந்து-தன்னை உற்று ஆட் செய்யும் தன்மை யினோர் மன்னு தாமரை தாள்  தன்னை உற்று ஆட் செய்ய-ராமானுசன் தன் தகவால்  இன்று என்னை உற்றான் –என்று அந்வயம்

ஆள் செய்கை –முக்கியம்- உடல் வருந்தி  கைங்கர்யம் பண்ண வேண்டும்..மன்னு-பரஸ் பரம் பொருந்தி -தாமரை- போக்யமாய் இருக்கிற தாள்கள்-ஆழ்வான் தாள்களை விட வேறு விஷயாந்தரங்களில் போகாமல் -உற்று-அங்கீ கரித்து-தகவு-கிருபையால் -அருளினார்/ மாதா பிதா ..சர்வம் எதேவ–ஆளவந்தார்-தேவு மற்று அறியேன்-மதுர கவி ஆழ்வார் போல-அமுதனார்- அவர் தம் அளவு அன்றிக்கே –ஆழ்வான் திருவடிகளில் சேர்ந்தது-வடுக நம்பி நிலை தாண்டி-நிழலும் அடி தாரும் போல இருப்பவரே உத்தேசர்–திக்குற்ற கீர்த்தி -ஸ்வாமி கண்ணால் கண்டும்/தம் அடியவர் களுக்கு அடியவராய் சேர்க்க ஆள் பிடிக்க -/பட்டர்-அரங்கன் திரு கண்கள் நாடு பிடிக்க கூடினது போல

-2பரத்வம் /20 வியூகம்/200 விபவம்/ 2000 அந்தர்யாமி/ 200000 அர்ச்சை/ 2000000 ஸ்வாமி/20000000  ஆழ்வான்  போல்வாருக்கு /திக்குற்ற கீர்த்தி-வூமை /யாதவ பிரகாசர்/ யக்ஜா மூர்த்தி வாதத்துக்கு -பேர் அருளாளனே உதவி-ஆறு  வார்த்தை பெற்ற விருத்தாந்தம்-திக் விஜயம் -அறு சமய செடி அருததையும்

/திவ்ய தேச கைங்கர்யங்கள்-வரதனே வழி துணையாக வந்து ஸ்வாமி காஞ்சி கூட்டி கொண்டு போனானே /தொண்டனூர் ஆயிரம் திரு முகத்தால் அருளி/வெங்கடாசல யாதவாசலம் நிர்வாகித்து-கீர்த்தியால் அனைவரும் சேர/சொரூபம் ரூபம் குணம் விபூதி அறிந்தவரை /ஸ்வாமி திருவடி அடைவதே சொரூபம் என்று நினைந்து கொண்டு இருப்பவர்கள்/தன்மை- அடியாரை பற்றுவத்தை ஸ்வாபம் என்று அறிந்து-ஆழ்வான் குணங்களை ஸ்வாமியே சாற்றிடும்-வினை முற்றாக கொண்டு/ராமன் சொல்வதை கேட்காமல் லஷ்மணன் இருத்தல் போல இன்றி-

பரதன் போல ஸ்வாமி சொன்னதை ஏற்று கொண்டு-குருவி தலையில் பனங்காய்  என்று இறாய்க்காமல்-./தன்னை உற்றார் குணம் சாற்றிடும் தன்மை-ஸ்வாமி உடைய இந்த ஸ்வாபம்-அறிந்த அமுதனார்–சம்பந்தி சம்பந்திகள் கூட இதை அறிந்து ஸ்வாமி கிருபை பெருகும்/தாச தாச குணம் ஏக ரசமாய் இருக்க மா முனிகளும் அருளினார்//சிஷ்யனை ஆச்சார்யர் புகழலாமா-வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மட கிளியை வணங்கினால் போல-கற்பிததனால் பயன் பெற்றேன் என்கிறார் ஸ்வாமி/–ஆனந்தம் போக்கு வீடாக -மது வனத்தை வானரங்கள் துவம்சம் பண்ணினது போல-அமுதனார்- கிடைத்ததும் ஆழ்வான் குணம் சாற்றினார் // அடியார்க்கு அடியார் கிடைத்தார் என்று/எம்மை  நின்று ஆளும்பரமரே/சிறு மா மனிசரே என்னை ஆண்டார் இங்கே திரிந்தாரே/நம்மை அளிக்கும் பிராக்களே

/அடியார்-அடியார் தம் அடியார் அடியார் தங்கள் அடியார் அடியார் -அடியோங்களே/ கடல் சயனம்-அவர் எம்மை ஆள்வாரே-/என் தலை மேலாரே /சாற்றுதல்-பிரகாச படுத்துதல் -எண் திசை அறிய இயம்புதல் /உலக இன்பம் குற்றம் பார்த்து பகவானை பற்றுவர்/

பந்த மோட்ஷ ஹேது  என்று ஆச்சார்யர் பக்கல்  போக/கைங்கர்யம் அவருக்கு பண்ணினால் தான் ஆச்சர்யருக்கு உகக்கும் என்று அவர் அடியவர் போக- மேட்டு-நிலம் ஏற்றுவது துர் லபம்/சூஷ்ம அர்த்தத்தை அறிந்தவர் ஸ்வாமி ஒருவரே

சபரி-தர்மம் அறிந்தவள்-வால்மீகி/அடியார்க்கு அடியார் என்று சத்ருக்னன் இருந்த நிலை ஸ்வாமி இன்று வெளி இடுகிறார்-ராம சௌந்தர்யத்தில் அமுக்குண்டு இருந்ததால் அன்று இந்த குணம் காட்ட முடியவில்லை//கிருபையாலே உற்றாரை குணம் சாற்றுகிறார்-கிருபையால் என்னை அடியவர்க்கு ஆள் படுத்தினார்-கங்கா பிரவாகம் போல கிருபை/தேசிகன்-முத்துகளை உருவாக்கும் முக்தர்களை-/ஜனம் பாபம் போக்கும்/யமுனை சரஸ்வதி தீர்த்தம் சேரும்- ஆளவந்தார் நாத முனிகள் சொல்வதும் இங்கு சேரும்/-தீர்த்தர் இங்கு/வற்றாது இரண்டும்

/மேடு கொந்தளித்து வாரி அடிக்கும்- நாம் மேடு பணியாமல் –வணங்கா முடி- கொந்தளித்து என்னையும் அழுத்தும்/கம்பீராம்புச -மன்னு தாமரை தாள்கள்-பொலிந்து போக்யமாய் –கட்டாய படுத்தி அனுபவிக்க வேண்டிய திரு வடிகள் இல்லை/வழு இலா அடிமை செய்ய வேண்டும் என்ற மனோ ரதம் வளர்த்து கொண்டு-மத் -பக்த பகதேசு- அவன் வூற்றம்  போலஅமுதனார்-கவி பாடவும் ஆள் செய்யவும் –உற்று -கவி பாட ஆள் செய்ய -7  பாசுரம் அருளி-கூரத் ஆழ்வானுக்கு ஆனந்தம் என்று மீதி  பாசுரங்களால் ஸ்வாமி  கீர்த்தி அருளி–ஆள் செய்வது கூரத் ஆழ்வான் இடம் /அவர் இங்கு அனுப்ப இவர் அங்கு அனுப்ப/மன்னுதல்-பொருந்துதல்…விடியா வென் நகரம் அற்று  போய் நல் வீடு பெற்ற-அக்ரூரர் போல இன்று தான் கிட்டியது-இன்று தொட்டு எழுமை எம்பெருமான் குன்ற  மாட திரு குருகூர் நம்பி ஏற்ற அருளினான் போல/

——————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: