அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்–96-வளரும் பிணி கொண்ட வல்வினையால்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
தொண்ணூற்றாறாம் பாட்டு -அவதாரிகை
மறை நாலும் வளர்த்தனன் -என்றீர்
அவர் சேதனருக்கு உஜ்ஜீவன உபாயமாக வேதாந்த பிரக்ரியையாலே அருளிச் செய்தது
பக்தி பிரபத்தி ரூப உபாய த்வயம் இறே-
அதில் ஸூகர உபாயமான பிரபத்தியிலேயோ உமக்கு நிஷ்டை -என்ன –
அதுவும் அன்று –
தாம் அபிமத நிஷ்டர் என்னும் அத்தை அருளிச் செய்கிறார் .
வளரும் பிணி கொண்ட வல்வினையால் மிக்க நல்வினையில்
கிளரும் துணிவு கிடைத்தறியாது முடைத்தலை யூன்
தளருமளவும் தரித்தும் விழுந்தும் தனி திரிவேற்கு
உளரெம் மிறைவன்  இராமானுசன் தன்னை வுற்றவரே – – 96- – –
வியாக்யானம் .
நிரவதிக துக்க அவஹமாய் -அநுபவ விநாச்யமாதல்-பிராயஸ் சித்த விநாச்யமாதல்
செய்யாத பிரபல கர்மத்தாலே பரம தர்மமான சரணாகதியில் மகா விசுவாசம்
என்பது ஓன்று நேராக கிடையாததாய் –
துர்க்  கந்த ஆஸ்ரய பூதமாய் -மாம் சாஸ்ருகாதி  ரூபமான சரீரம் -தளரா உடலம் -திருவாய் மொழி -5 8-8 – –
என்கிறபடியே -பிராண வியோக தசாபன்னமாய் -கட்டுக் குலையும் அளவும்
வன் சேற்று அள்ளல்  பொய்ந்நிலம்   -திரு விருத்தம் – 100- என்றும்
பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி -பெரியாழ்வார் திரு மொழி – -5 2-7 – என்றும்
கூடி யழுங்கிக் குழியில் வீழ்ந்து வழுக்காதே –பெரியாழ்வார் திரு மொழி 4-6 6-  – -என்றும்
சொல்லுகிறபடியே -அள்ளலும் வழுக்கலுமான   -சம்சார விபூதியிலே -தார்மிகர் உபகரித்த
த்யாஜ்ய உபாதேயம்  ஆகிற ஊற்றம்கோல் கொண்டு தரித்தும் –
துர் வாசனா மூலமான அநவதாநத்தாலே -கொடுவன்குழி -திருவாய்மொழி -7 1-9 – யான
சப்தாதி களிலே விழுந்தும் -உறு-ஒரு -துணை இன்றிக்கே திரியா நிற்கும் எனக்கு –
என் தனிமை தீர எனக்கு துணையாய் ஒறு குழியிலே விழாதபடி
தாங்களே பிடித்து நடத்தி -உஜ்ஜீவிப்பிக்கைக்கு
நமக்கு சேஷியான எம்பெருமானாரைத்
தேவு மற்று அறியேன் -கண்ணி நுண் -2 -என்று பற்றி இருப்பார் உளர் .
அவர்கள் அபிமானமே எனக்கு உத்தாரகம் -என்று கருத்து .
எம்மிறைவர் இராமானுசன் தன்னை உற்றவர் -என்று பாடமான போது
எம்பெருமானாரை யல்லது அறியோம் என்று பற்றி இருப்பாராய்-
நமக்கு சேஷிகள் ஆனவர்கள் என்று யோஜிப்பது .
பிணி -துக்கம்
நல்வினை– ஸூ க்ருதம்
கிளரும் துணிவு– மிக்க துணிவு
கிளர்த்தி -மிகுதி
முடை -துர் கந்தம்
மிக்க நல்வினையின் கிளரும் துணிவு -என்றும் பாடம் சொல்லுவர்
அப்போது பரம தர்மமான சரணா கதிக்கு அபேஷிதமான மகா விசுவாசம் -என்கை-
பக்தி -சாஸ்திரம் ஸ்ரீ பாஷ்யம் -ஸ்ரீ கீதா பாஷ்யம் -/ பிரபத்தி -கத்ய த்ரயம் -அமுதனார் -அளி யல் நம் பையன் என்று எம்பெருமானார் சிஷ்யர் அபிமானத்தில் ஒதுங்கி –
பிணி -சம்சாரம் ஆகிய நோய் -துக்கம் -கர்மம் -வளரும் பிணி -கார்ய ஆகு பெயர் மிக்க -வல் வினை -தான் என் துணிவை கெடுத்தது -மிக்க நல் வினையிலும் -பர கத – சுவீகாரத்திலும் துணிவு போக்கிற்றே –
சம்சார சூழலில் இருந்தும் –சங்கம் -பற்று ஆசை புத்தி பேதலித்து -பயன் அறியாமல் ஸ்வரூப நாசம் – சங்கம் பற்றுதல் -ஆசை உருவாக்கி -க்ரோதம் நிறைவேறாமல் -விவேக ஞானம் தொலைந்து சம்மோஹம் -ஸ்ம்ருதி பிரம்சாத் புத்தி நாஸாத் -அழியும் வழி படிக்கட்டுக்கள்  -வல்வினை -பிணி –காரியம் காரணம் -மிக்க நல்வினை -பிரபத்தி
வினை -கர்ம யோகமும் ஞான யோகமும்
நல் வினை -பக்தி யோகம்/சரணாகதி -மோக்ஷம் நிச்சயம் -சர்வேஸ்வரன் ரக்ஷகன் -இரண்டு மகா விசுவாசமும் வேண்டுமே -/இழையாது உன தாள் பிடிக்க பிரார்த்திப்பது இந்த விசுவாசம் குலையாமல் இருக்கவே ஆழ்வார்கள் பிரார்த்தனை -அந்திம ஸ்ம்ருதி வேண்டாமே பிரபன்னனுக்கு /
முடை -நாற்றம் / ஊன்-மாம்சம் –சரீரம் -/ சேற்றில் உழன்று இருக்க-சம்சாரம் பாதை -சப் தாதி   விஷயங்கள் குழி -என்றவாறு / ஊன்று கோல் த்யாஜ்ய உபாதேய ஞானம் — -த்ரி தண்டம் கொண்டு இங்கு வந்து உத்தாரணம் செய்து அருள -திருவடி பற்றி உய்ந்தேன் –
மஹாத்மாக்களே துணை ரக்ஷகம்-/ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் -/சாஸ்திர விரோதம் ஆகாதோ உபாயாந்தரமா இது -சர்வேஸ்வரனை தவிர்ந்து -கீழ் சொன்ன சரணாகதியில் அடங்கும் -திருவடி ஸ்தானீயர் என்றபடி -/வாய்க்கு வந்தபடி நாம் பேச -நம் பூர்வாச்சார்யர்கள் வந்த படி பேச வைப்பவனும் அவனே தானே /ஆனுகூல சங்கல்பயாதிகள் அதிகாரி விசேஷணங்கள் -தானாக அமைய வேண்டும் –போஜனத்துக்கு சுத்து போலே / பர கத சுவீகாரம் -மகா விசுவாசம் இல்லா விட்டாலும் -ஆச்சார்யர் -நீ என்னை விட்டாலும் நான் விட்டேன் என்று கைக் கொள்ளுவார்கள் /ஆழ்வான் திருவடி அடைந்து பிரபந்தம்  தொடங்கிய அமுதனார் இதில் மீண்டும் சொல்லி தலைக் கட்டுகிறார் -7-பாசுரம் -போலே இதிலும் -/தரிப்பது -சிரமம் பட்ட பின்பு தானே -விழுவது எப்பொழுதும் -தரிப்பது சில தடவை தானே –அதனால் அல்பம் துக்க சாந்தி ஏற்படுத்த ஆசுவாசத்தை சொன்ன படி /

————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை -கீழ்ப் பாட்டிலே நிக்ரஹ அனுக்ரஹங்கள் இரண்டுக்கும் பொதுவாய் தண்டதரனான
சர்வ ஸ்மாத் பரனிலும்-அஞ்ஞான நிக்ரஹராய் – பரம பதத்தில் நின்றும் ரஷண ஏக தீஷிதராய் வந்து –
அவதரித்த எம்பெருமானார் –நிர்ஹேதுக கிருபையை உடையவர் ஆகையாலே -சேதன சம்ரஷணார்த்தமாக
வேத வேதாந்த பிரவர்த்தனம் பண்ணி அருளினார் என்று இவர் அருளிச் செய்ய கேட்டு -அருகில் இருப்பார்
அந்த வேதாந்தந்களிலே-முமுஷூர்வை சரணமஹம் பிரபத்யே  -என்று மோஷ அதிகாரிகளுக்கு சொன்ன
சரணாகதியில் நிஷ்டராய் இருந்தீரோ என்ன -சரணா கதி பெருகைக்கு பிரதி பந்தங்களான பிரபல கர்மங்களாலே –
அது தன்னிலும் -மகா விசுவாசம் கிடையாதே -துர்கந்த பிரசுரமாய் -மாம்ஸா ஸ்ர்காதி மயமான சரீரம்  கட்டுக்
குலைந்து போம் அளவும் சுக துக்க அனுபவம் பண்ணிக் கொண்டு சகாயம் இன்றிக்கே இருக்கும் எனக்கு
அந்த சரமோ உபாயமான எம்பெருமானாரிலும் -சுலபமாய் -சேஷிகளாய் -எனக்கு ஸ்வாமியான அவர் தம்மையே
தந்தை நல் தாயம் தாரம் -இத்யாதிப்படியே சர்வ வித பந்துவாய் அத்யவசித்து -தேவு மற்று அறியேன் -என்று இருக்கும்
மகாத்மாக்களே வழித் துணையாய் -ரஷகராய் -இருப்பார் என்று அத்யவசித்தேன் -ஆகையால் -நான் ததீய அபிமான நிஷ்டன்-என்று அருளிச்  செய்கிறார் –
வியாக்யானம் -வளரும் பிணி கொண்ட வல் வினையால் -அதத்தோ ஷேன பவேத்தரித்த்ரீ தரித்திர தோஷன கரோதிபாபம் –

பாபாதாவச்யம் நரகம் வ்ரஜந்தி புநர் தரித்திர  புனரேவ பாபி -என்றும் த்யாயதோ விஷயான் பும்சஸ் சங்கஸ் தேஷ பஜாயதே -சங்காத் சஞ்சாயா தேகாமா -காமாத்

க்ரோதாபி ஜாயதே -க்ரோதாத் பவதி சம்மோஹா -சம்மோஹாத் ஸ்மரதி விப்ரம -ஸ்மரதி ப்ரம்சாத் புத்தி நாச –
புத்தி நாசாத் ப்ரணச்யதி -என்றும் சொல்லுகிறபடி -மேன் மேலும் -பெருகி வருகிற -பிணி உண்டு வியாதி -தன் மூல
துக்கம் -என்றபடி –கொண்ட வல்வினையால் -அந்த துக்கத்தையே சர்வ காலத்திலும் விளைக்க கடவதே –
அனுபவ ப்ராயசித்தங்களாலே நசியாதபடி -அதி பிரபலமான துஷ் கர்மத்தாலே –மிக்க நல் வினையில் கிளரும்-துணிவு கிடைத்தறியாது –தாஸ்மான் நியாச மேஷாம் தபஸா திரிக்தமா ஹூ என்றும் –
சத் கர்ம நிரதாஸ் ஸூ த்தாஸ் சாக்ய யோக விதச்த தா -நார்ஹந்தி சரணஸ் த்தச்யகலாம் கோடீ தமீ மபி –
என்றும் சொல்லுகிறபடியே -சர்வ உபாய உத்க்ரிஷ்டமாய் -உபாயாந்தாரங்களைப் போலே ஸ்வரூப
விருத்தமாய்    இருக்கை அன்றிக்கே -ஸ்வரூப அனுரூபமாய் இருக்கை யாகிற நன்மையையும் உடைத்தான

அஞ்சலி ரூப கிரியை யாலே -மகா விசுவாச பூர்வகம் -தகேகோபாயதா யாச்னா -என்றும் –

விச்வாச பிரார்த்தனா பூர்வம் ஆத்மா ரஷாபரம் -என்றும் சொல்லுகிறபடி -பரபக்தி
பர ஞான பரம பக்தி பர்யந்தமாக பெருகி வருகிற ப்ராப்ய த்வரைக்கு உறுப்பான மகா விசுவாசம் என்பது ஒன்றும்
நேராக லபியாதபடி ஞான விதுரனாய் இருந்து வைத்து –நல் வினை -ஸூ க்ருதம் -அதாவது பிரபத்தி-கிளரும் துணிவு -மிக்க துணிவு -கிளர்த்தி -மிகுதி —மிக்க நல் வினையின் கிளரும் துணிவு –என்ற பாடமான போது –
பரம தர்மமான சரணா கதிக்கு -அபேஷிதமான மகா விசுவாசம் -என்கை –முடைத்தலை ஊன் தளரும் அளவும் –
அமேத்யுபூர்ணம் கிர்மிஜந்துசம்குலம்  ஸ்வபாவ துர்கந்தம் அசவ்சமத்ருவம் களேபரம் மூத்ரபுரீஷா பாஜனம் -என்கிறபடியே ஸ்வபாவ துர்கந்த ஸ்த்தானமாய்-மாம்சாஸ்ர்க்பூய வின்மூத்ரா  ச்நாயுமஞ்சாச்திதம் ஹதரூபான
சரீரம் தளர்ந்து போம் அளவும் –முடை-துர்கந்தம் -முடை என்றும் ஊன் என்றும் -மாம்சமாய் -தத் பிரசுரமான
சரீரத்தை சொன்னபடி -ஊன உடல் சிறை -என்ன கடவது இறே –தரித்தும் விழுந்தும் –இப்படியான தசையிலே
சம்சார விஷ வ்ர்ஷஸ் யத்வே பலே ஹ்யம்ர் தோபமே -கதாசித்கே சவே பக்திஸ் தத்பக்தைர் வாசமாகம -என்றும் –
கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே -என்றும் –மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலம்  -என்றும்-சொல்லுகிறபடியே
அள்ளலும் வழு க்களுமான  சம்சார விபூதியிலே யாதார்சிகமாக சஞ்சரித்து கொண்டு போருகிற சில
 தார்மிகர்  சம்சார கர்த்தத்திலே அழுந்திக் கிடந்த நான் உத்தரிக்கும் படி உபகரித்தும் –த்யாஜ்ய உபாதேய
விவேகம் ஆகிற ஊன்று கோலை உத்தம்கம்பமாக  பிடித்துக் கொண்டு -அத்தாலே அல்ப துக்க சாந்தி பிறந்து –
ஆஸ்வசித்தும் -பின்னையும் -துர்வாசன  மூலமான அனவதானத்தாலே   -கொடு வன் குழியான சப்தாதி
விஷயங்களில் விழுந்தும் –தனி திரிவேற்கு -ஜீர்ணா தரிஸ் சரித தீவ  பீர நீரா பாலாவயம் சகலமித்த ம நர்த்த ஹேது –
என்றும் -நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் -என்றும் -ந தர்ம நிஷ்டோச்மி -என்றும் -பவ துர்த்தி நேபதஸ் நலிதம் –
என்றும் சொல்லுகிற படி-சேதன ரூபமாய் யாதல் -அசேதன ரூபமாய் ஆதல் -ஒரு சஹாயாந்தரம் இன்றிக்கே இருக்கும் நமக்கு
இராமானுசன் தன்னை உற்றவர் -ராமானுஜச்ய சரணவ் சரணம் பிரபத்யே -ராமாநுஜார்ய வசக பரிவர்த்தி ஷீய –

நசேத் ராமானுஜேத் ஏஷா – இத்யாதிப்படியே எம்பெருமானாரை அத்யவசித்து இருப்பார் –எம் இறைவர் —உளர் —நம்முடைய தனிமை தீர நமக்குத் துணையாய் -சம்சாரம் ஆகிற-படு குழியில் விழாதபடி -தாங்க ளாயே  பிடித்து நடத்தி உத்தரிப்பிகும் அஸ்மத் ஸ்வாமிகள் ஆனவர்கள் –

எம் இறைவர் -என்றது கூரத் ஆழ்வானை-வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் நம் கூரத் ஆழ்வான் –
என்று கீழேயும் அருளிச் செய்தார் இறே -அன்றிக்கே -எம் இறைவர் –இராமானுசன் -என்று  எம்பெருமானாருக்கு
விசேஷணம் ஆக்கவுமாம் -எம் இறைவன் இராமானுசன் -தன்னை உற்றவரேஎன்ற பாடமான போது

எம்பெருமானாரை அல்லது அறியோம் என்று அற்று இருப்பவர்கள் நமக்கு சேஷிகள் என்று யோஜிப்பது –

கர்மேதி கேசித்த பரே மதி மித்ய தான்யே பக்திம்பரே பிரபத நம் ப்ரவதந்த்யுபாயம் -ஆம் நாயா சார ரஹீகாஸ்-த்வமிதா நுபாவ ஸ்த்வாமேவ யாந்தி சரணம் சட ஜின் முதீந்திர -பராங்குச பஞ்ச விம்சதி -ஸ்லோகம் -என்றும் சரம பர்வதத்தை பற்றினவர்களே-பெரியோர்கள் என்று அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே -த்வத் தாஸ தாஸ கண நா  சரமா வதவ்  யஸ்தவத்தா-சதைகரசதாம்  விரதாமமாஸ்து -என்று ததீய சேஷத்வத்தை ஜீயரும் பிரார்த்தித்து அருளினார் இறே –
————————————————————————–
அமுது விருந்து
 
அவதாரிகை .
மறை நாலும் வளர்த்தனன் என்றீர்
அவர் வேதாந்தத்தில் கூறிய முறையைப் பின் பற்றி உயிர் இனங்கள்
உய்வதற்கு உபாயங்களாக பக்தியையும் -பிரபத்தியையும் அன்றோ அருளிச் செய்தார் –
அவற்றில் எளிய உபாயமான பிரபத்தியையோ நீர் கைக் கொண்டது -என்ன
நான் பிரபத்தி நிஷ்டன் அல்லேன்
எம்பெருமானாரைச் சேர்ந்தவர்களுடைய அபிமானத்திலே நிஷ்டை உடையேன் நான்
என்கிறார் .
பத உரை
வளரும் -முடிவின்றி மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வரும்
பிணி கொண்ட -துக்கத்தை உண்டு பண்ணுவதான
வல்வினையால் -வலிமை வாய்ந்த கர்மத்தினாலே
மிக்க நல் வினையில் -மிகுந்த -பரமமான -தர்மம் ஆகிற சரணா கதியில்
கிளரும் துணிவு -கிளர்ந்து எழுகின்ற நம்பிக்கை -மகா விசுவாசம்
கிடைத்தறியாது -நேரே அனுபவித்தில் பெற்று தெரிந்து கொள்ளாதது
முடை -கெட்ட நாற்றத்திற்கு
தலை -இடமான
ஊன் -மாம்ச பிண்டமான சரீரம்
தளரும் அளவும் -தளர்ந்து கட்டுக் குலைந்து போகும் வரையிலும்
தரித்தும் -பெரியோர் கொடுத்த பகுத்தறிவு என்னும் கோல் கொண்டு வழுக்கி விழாது தரித்து நின்றும்
விழுந்தும் -பண்டைய பழக்கத்தாலே கோலின்றி -சப்தாதி விஷயங்களிலே -விழுந்தும்
தனி திரிவேற்கு -துணை இன்றி தனியாக திரிகின்ற எனக்கு
எம் இறைவன் -எமக்குத் தலைவரான
இராமானுசன் தன்னை -எம்பெருமானாரை
உற்றவர் -பற்றி இருப்பவர்கள்
உளர் -துணையாக உள்ளார்கள் .
வியாக்யானம் –
வளரும் பிணி கொண்ட வல் வினையால்
பிணி -நோய் -இங்கு கார்ய ஆகுபெயரால் துக்கத்தை சொல்கிறது
புன புநரகம் யதிராஜ குர்வே-யதிராஜ விம்சதி -என்றபடி -பாபம் செய்தால் பயமோ -அனுதாபமோ –
வெட்கமோ  ஏற்படாமையின்  -மீண்டும் மீண்டும் வினைகளைச் செய்த வண்ணமாய்
இருத்தலின் -அதனால் விளையும் பிணியும் ஓய்வின்றி மேலும் மேலும் வளருவதாயிற்று –
பிணி கொண்ட வல்வினை -பிணியை உண்டு பண்ணும் வல்வினை -என்றதாயிற்று –
வினைக்கு வலிமை அனுபவித்தோ பரிகரித்தோ போக்க ஒண்ணாமை –
பிரபத்தியில் மகா விசுவாசம் உண்டாகாமைக்கு இவ் வல் வினையே ஹேது என்க –.மிக்க நல் வினையில் கிளரும் துணிவு கிடைத்தறியாது .
மிக்க நல்வினைபிரபத்தி
வினை -கர்ம யோகமும் ஞான யோகமும்
நல் வினை -பக்தி யோகம்
சத்கர்ம நிரதாஸ் சுத்தா சான்க்க்ய யோக விதச்ததா
நார்ஹந்தி சரணா சத்தச்ய கலாம் கோடி தமீமபி-என்று
நல்ல கர்ம யோகத்தில் மிக்க பற்று உடையவர்களும் –
அப்படியே சுத்தர்களான ஞான யோகம்கைப் புகுந்தவர்களும் .
பிரபத்தி நிஷ்டையில் உள்ளவனுடைய கோடியில் ஒரு அம்சத்துக்கும் தகுதி
உடையவர்கள் ஆக மாட்டார்கள் .-என்று பிரபத்தி -ஏனைய உபாயங்களை விட
மிகவும் உயர்ந்ததாக கூறப்பட்டு இருத்தல் -காண்க –
மகா விசுவாசத்தை முன்னிட்டு நீயே எனக்கு உபாயமாக இருந்து
காத்தருள வேணும் -என்னும் பிரார்த்தனையே -பிரபத்தி யாதலின்
அதனுக்கு -கிளரும் துணிவு –மகா விசுவாசம் -இன்றியமையாதது ஆயிற்று –
அது எனக்கு இல்லையே -பிரபத்தி நிஷ்டை எங்கனம் எனக்கு கை கூடும் என்கிறார் .
கிடைத்தறியாது –
மகா விசுவாசம் ப்ரபத்திக்கு தேவை என்பது கே ட்டு அறிந்த விஷயமே யன்றி –
நேரே எனது அனுபவத்திற்கு கிடைத்தறிய வில்லை -என்கிறார் .
மிக்க நல்வினையின் கிளரும் துணிவு -என்றும் ஓதுவர்-
அப்பொழுது ப்ரபத்திக்கு தேவைப்படும் மகா விசுவாசம் -என்று பொருள் கொள்க –
முடைத்தலை ஊன் —-தனிதிரிவேற்கு
முடைத்தலை ஊன் -வேண்டா நாற்றமிகு உடல் -என்றார் ஐயங்காரும் திருவரங்கக் கலம்பகத்திலே
ஊன் –மாம்சத்தை சொன்னது -ரத்தம் தசை எலும்பு முதலிய அருவருக்கும் பொருள்களை உடைமைக்கும்
உப லஷணம் .-ஊன் -சரீரத்திற்கு ஆகு பெயர் .
தளருமளவும் -தளர்தல் -கட்டுக் குலைத்தல்
தளரா உடலம் எனதாவி சரிந்து போம் போது –திருவாய் மொழி – 5-8 8- – என்றபடி
ஆவி பிரியும் நிலையில் உடலம் கட்டுக் குலைக்கிற அளவும் -என்றபடி .
தரித்து விழுந்தும் தனி திரிவேற்கு –
இந்த சம்சாரம் -வன் சேற்று அள்ளல்  பொய்ந்நிலம் -திரு விருத்தம் – 100- என்று
சருக்கி விழும் சகதியாகவும் –
கொங்கை சிறுவரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி -பெரியாழ்வார் திருமொழி — 5-2 7- என்றும்
கூடி யழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே -பெரியாழ்வார் திருமொழி -4 6-6 – – என்றும்
வழுக்கி விழும் குழியாகவும் சொல்லப் படுதலின் -அதிலே திரிபவனுக்கு சில நல்லவர்கள்
கொடுத்த விவேக ஞானம் ஊன்று கோலாய் -விழாமல் தரித்து நிற்பதற்கு உதவும் ..
சில வேளைகளில் அவனுக்கே -பண்டைய கெட்ட வாசனை   -தலை தூக்கி
நல்லவர்கள் கொடுத்த ஊன்று கோலை இழந்து -அள்ளலும் வழுக் கலுமான  -இந்த சம்சாரத்திலே
குலமுதலிடும் தீவினைக் கொடுவன் குழி -திருவாய் மொழி – 7-1 9- –  என்றபடி
சப்தாதி விஷயங்கள் ஆகிற குழிகளிலே விழுந்து அழுந்தும் படியான நிலை ஏற்படும் .
இங்கனம் தரித்தும் -விழுந்தும் துணை இன்றி -தனியே திரிகின்றவனான எனக்கு
விழாமல் காப்பதற்கு துணையாக இராமானுசன் தன்னை உற்றவர்கள் உள்ளார்கள் -என்கிறார் .
உளர் எம்மிறைவன் –உற்றவரே
உற்றவர் உளர் என்று இயைக்க .
தனி திரிவேற்கு உளர் எனவே -என் தனிமை தீர -துணையாய் -குழியிலே விழாதபடி
பிடித்து நடத்தி -உய்விப்பவராய் -உளர் -என்றது ஆயிற்று –
உளன் கண்டாய் நன்னெஞ்சே -முதல் திருவந்தாதி – 99- என்னும் இடத்தில் போலே
ஆபத்திற்கு உதவுவராய் கூடவே உள்ளனர் -என்றபடி –
இதனால் குழியைக் கடத்தும் கூரத் ஆழ்வானை  அண்டை கொண்டு -அவரது அபிமானத்திலே
நிஷ்டை கொண்டு உள்ளமையை குறிப்பிட்டார் ஆயிற்று .
எம் இறைவர் -என்றும் ஒரு பாடம் உண்டு
அப்பொழுது இராமானுசன் தன்னை உற்றவர் எம் இறைவர் -சேஷி-கள் -ஆக உள்ளனர் -என்று உரைக்க .
ஊன் தளருமளவும் விழுந்தும் -என்றமையின்
ஊன் தளருகின்றதே யன்றிச் சப்தாதி விஷயங்களில் ஆசை தளருவதில்லை –
அதனால் குழியில் விழ நேருகிறது என்று ஆசையின் வலிமையை குறிப்பித்து அருளுகிறார் –
இங்கு -ஜீர்யந்தி ஜீர்யதே கேசா தந்தா ஜீர்யந்தி ஜீர்யத
சஷூஸ் ச்ரோத்ரேச ஜீர்யதே ஆசைகா நிருபத்ரவா -என்னும் ஸ்லோகம்
முதுமை வுற்றவனுக்கு கேசங்கள் உதிர்ந்து -விடுகின்றன .பற்கள் விழுந்து விடுகின்றன –
கண் பார்வை மங்குகிறது -காதுகள் செவிடாகின்றன -ஆசை மட்டும் தடை இன்றி வளருகிறது –
என்பது அநு சந்திக்கத் தக்கது –
தேவு மற்று அறியேன் என்று எம்பெருமானாரைப் பற்றிய உற்றவர் அபிமானமே
சம்சாரக் குழியில் விழாது என்னைக் காக்க வல்லது -என்பது இப்பாசுரத்தின் கருத்து ..
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

/பக்தி பண்ண சக்தி இல்லை/ பிர பத்தி பண்ண  விசுவாசம் இல்லை //பேறு தப்பாது என்ற துணிவு வேண்டும்/ எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெறுவது போல மகா விசுவாசம் வேணும்/ ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்..என்கிறார் இதில்..

/உலகம் உண்ட பெரு வாயா-ஆழ்வார்இதில்-நீ கொடுத்த உபாயம் எல்லாம் தவிர்த்தேன்-கர்ம ஞான பக்தி பிர பத்தி- நான்கும் இல்லை/ ஆச்சர்ய அபிமானம் சொல்கிறார்..உபாயாந்தரம் ஆகுமா இது– இது வேற சிறந்தது என்கிறீரே/திருவடி ஸ்தானமே ஆச்சார்யர் /இதற்க்கு மகா விசுவாசம் வேண்டுமே

-அந்திம  ஸ்மர்த்தி வேணும்-இல்லை என்றால் நான் பண்ணி கொள்கிறேன்-மற்ற ஆறு   அங்கங்கள் வேணும்-போஜனத்துக்கு பசி போல ஆகிஞ்சன்யமும் அநந்ய  கதித்வமும் வேணும்.ஆச்சார்யர்அபிமானம். பர கத ச்வீகாரம்-தானே வைகுந்தம் தரும்.

/உற்றவர்- ஆழ்வான்-7 பாசுரம் புகழ் பாடி அல்லால் என்றார் படியை கடத்துவேன் என்றார்/மிக்க நல் வினை-சரணாகதி நிஷ்ட்டை-கிளரும்  துணிவு-பொங்கி வரும் மகா விசுவாசம்/முடை தலை-துர் கந்தம் ஊன் -சரீரம் /தரித்தும் விழுந்தும் –எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்–எம்பார் ஆழ்ந்து அனுபவித்த பாசுரம்-இட்ட கால்  இட்ட கைகளாய் இருக்கும்- மாற்றி எழுந்து மயங்கினாளே – கேட்டேன்- தனியாக திருவேற்க்கு– எம் இறைவர் உளர்-இராமனுசன் தன்னை உற்றவர்-கூரத் ஆழ்வான்/இறைவர் ராமானுசன் என்றும் கொள்ளலாம்/உளர்-காரியம் உமக்கு பண்ணுவாரா சத்தை அவருக்கு இருந்தால் எனக்கும் உண்டு/நிழல் போல தானே –கைகள்  சக்கரத்து-வட பாலை திரு வண்   வண்டுர்   ..ஏறு சேவகனாருக்கு என்னையும் உழல் என்மீர்களே-பம்ப உத்தர தேசம் -நாயனார் –

பஷி தூது விட –உயிர்  உடன்  இருப்பதாக அர்த்தம் -திரு மாலை ஆண்டான் அர்த்தம் சொல்ல– இன்றியாமை அவன் இருந்தால் நானும் இருக்கிறேன் ரஷிக்க வேண்டிய வஸ்துகளில் நானும் ஓன்று  என்று அறிவிக்க சொல்லி -ஸ்வாமி நிர்வாகம்/ அடிபட்டு துடிக்கும் மான் போல பராங்குச நாயகி/அறிவிப்பே அமையும்..செய் என்று சொல்ல வேண்டாம்/வளரும் பிணி- துக்கம் -பாபம் பண்ண பண்ண -தண்டனை பிரத்யட்ஷமாக பார்க்க வில்லை/சுருதி  ஸ்மர்த்தி அவன் ஆணை  என்று உணராமல்–பயம் அனுதாபம் வெட்கம் இல்லை /அதனால் வளரும் பிணி –பிரபல கர்மம்- அனுபவித்து தீர்க்க முடியாமல்-பிராயச்சித்தம் பண்ணி போக்க முடியாமல்/கிடைத்து அறியாது- கேட்டு அறிந்தோம்- ஆறு  வித அங்கங்களும் ஒப்பிபிபோம்-பரம தர்மமான சரணா கதியில் மகா விசுவாசம் எனபது ஓன்று நேராக கிடையாததாய்–கிளரும் துணிவுநேரே ஆச்சார்யர் சம்சாரம் போக்க திரு மந்த்ரம் உபதேசித்த ஆச்சார்யர் தானே/நித்ய படி வாழ்வில் ஒன்றும் மாறாமல் பிர பத்தி மட்டும் பண்ணி விட்டு இருந்தால்-பகவத் சம்பந்தம் ஒன்றும் இன்றி நித்ய படி இருந்து

முடை அடர்த சிரம் ஏந்தி -முடை தலை-துர் கந்தம் ஆஸ்ரய பூதராய்/ஊன்-ஐந்து சேர் ஆக்கை/தளரா உடலம் -திரு வாய் மொழி 5-8-8-என்கிற படியே -தளர் நடை நடக்கும் பொழுதே விழுந்தும்-முன்பு உடல் -இப்பொழுது –மனசு தரித்தும் விழுந்தும்-தளரும் அளவும்-கட்டு குலையும் அளவும்-வன் சேற்று அள்ளல் பொய் நிலம் -திருவிருத்தம் 100- என்றும்-பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி -பெரி ஆழ்வார் திரு மொழி 5-2-7 என்றும்-கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே -பெரி ஆழ்வார் 4-6-6-என்றும்

அள்ளலும் வழுக்கலும் சம்சார விபூதியில்-தார்மிகர் உபகரித்த த்யாஜ்யம் உபாதேயம் ஆகிய ஊற்றம்  கால் கொண்டு தரித்தும்-,துர் வாசனா மூலமான அனவானத்தாலே-கொடுவன் குழி-திரு வாய் மொழி 7-1-9–ஆன சப்தாதிகளில் விழுந்தும்–சம்சார குழி இல்லை– சப்தாதிகளில் விழுந்து ஒரு துணை இன்றி திரியா நிற்கும் எனக்கு

–உடல் தளரும் ஆசை தளரவில்லை திரிந்து கொண்டு இருக்கிறோம்-கேசம் கொட்டி பல் விழுந்தும் கண் பார்வை போனாலும் ஆசை மிகுந்து -திரிகிறோம்-எனக்கு துணையாய் ஒரு குழியில் விழாத படி தாங்களே பிடித்து நடத்தி உஜ்ஜீபிவிக்கைக்கு நமக்கு சேஷியான-எம்பெருமானாரை-தேவு மற்று அறியேன்-என்று பற்றி இருப்பார் உளர் ..அவர்கள் அபிமானமே எனக்கு உத்தாரகம் என்று கருத்து /

முன்பு தார்மிகன்  கொம்பை நம் இடம் கொடுக்க-பகுத்தறிவு-தான் இந்த கொம்பு–இங்கு ஆழ்வான் -தாமே பிடித்து நடத்துவதால் விழ மாட்டோம்/சத் புத்திரனாக வந்தவனை கண்டதும் கூரத் ஆழ்வானை பார்த்தாயா என்று கேட்டார் தந்தை-ஆழ்வான் கடாஷமே சத்தாக்குமே/சத் -இருக்கிறான் என்று தெரிந்தவன் பிரமம் அடைகிறான்/எம் இறைவர் இராமனுசன் தன்னை உற்றவர் -என்று பாடம் ஆன போது-,எம்பெருமானாரை அல்லது அறியோம் என்று பற்றி இருப்பாராய் நமக்கு சேஷிகள் ஆனவர்கள் என்று கருத்து/பிணி-துக்கம் //நல் வினை-சுக்ருதம் /மிக்க நல்வினையின் கிளரும் துணிவு-பாடம் -சரணாகதிக்கு அபேஷிதமான மகா விசுவாசம் //

தரித்தும் விழுந்தும்- தரிக்கிறது என்றாலே முன்பு துக்கம் தோற்றும்–விழுவது//ஊரவர்  கவ்வை எரு விட்டு அன்னைமீர் சொல் நீர் மடுத்து-அன்னைமீர் எப் பொழுதும் உண்டு அதனால் தண்ணீர் –எரு அவ் அப்பொழுது/அது போல தரித்தல் எப் பொழுதோ விழுவது என்றும்/பர கத  ச்வீகாரமாக கொண்ட ஆழ்வானை எம் இறைவர் என்கிறார் /

பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி/ பிரபத்தியில் அசக்தனுக்கு ஆச்சர்ய அபிமானமே-வேதாந்த பிரக்ரியையாலே அருளி செய்தது பக்தி பிரபத்தி ரூப உபாயத்வம் இறே/அதிலே ஸூ கர உபாயமான பிரபக்தியிலேயோ உமக்கு நிஷ்ட்டை என்ன அதுவும் அன்று,தாம் அபிமான  நிஷ்டர் என்னும் அத்தை அருளி செய்கிறார்–

————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: