அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-66-ஞானம் கனிந்த நலம் கொண்டு -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –

அறுபத்தாறாம் பாட்டு -அவதாரிகை –
நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே -என்று எம்பெருமானார் உபகரித்து அருளின
ஜ்ஞான வைபவத்தை யருளி  செய்தார் கீழ் -இதில் அவருடைய மோஷ பிரதான
வைபவத்தை யருளிச் செய்கிறார் –
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாடொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த விராமானுசன் தன்னை எய்தினர்க்கத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே -66 –
வியாக்யானம் –
ஸ்ரீய பதியான சர்வேஸ்வரன் மோஷம் கொடுப்பது -ஜ்ஞான விபாக ரூபமான பிரேமத்தை உடையராய் –
அந்த பிரேம அநுரூபமாக தன்னை ப்ராபித்து -அநுபவித்து -அவ்வனுபவ ஜனித ப்ரீதி காரித-கைங்கர்யம்  செய்வது எப்போதோ என்கிற ப்ராப்ய த்வரையாலே
ஒரு பகல் ஆயிரமூழி-திருவாய் மொழி -10 3-1 – – யாய்க் கொண்டு நாடொறும் சிதிலராமவர்களுக்கு –
மகா பாபியான என்னுடைய மனசிலே தோஷத்தை போக்கி அருளின எம்பெருமானார்
தம்மை யடைந்தவர்களுக்கு –வானம் -என்று சொன்ன அந்த ஸ்த்தானம் கொடுத்து அருளுவது -தம்முடைய கிருபை என்று சொல்லப்படுகிற சாதனத்தை அவர்களுக்கு கைம்முதலாகக் கொடுத்து
இது ஒரு மோஷ பிரதனம் இருக்கும் படியே என்று கருத்து .
ஞானம் கனிந்த நலம் -என்றது -ஜ்ஞானத்தின் உடைய பக்வ தசையான
ப்ரேமம் -என்றபடி ./நலம் -ச்நேஹம் .
தாதாமி புத்தி யோகம் -திருவடிகளில் விழாமல் -கிருபையால் கூட்டிச் செல்பவர் திருவடிகளில் –ஞானம் பக்தி கொடுத்தது அனுபவிக்க -ஆசை பிராப்யத்தில் ருசி வளர பண்ண /தகவு -கிருபை -/ உத்தாராக ஆச்சார்யர் அன்றி நம் ஸ்வாமி -/ ஞானம் கனிந்து -பக்தி ஞான விசேஷம் -நலம் -பக்தி ரூபா பன்ன ஞானம் கொண்டு -மாதவன் கொடுக்க -இனி இனி கதறியபின் -/ஷேமுஷி பக்தி ரூபா -மதி நலம்–நைபவர்க்கு அவன் எய்தினவர்களுக்கு நம் ஸ்வாமி –கிருபை உந்த -பிராட்டி ஸ்தானத்தில் ஸ்வாமி கிருபை -கிருபா பரதந்த்ரர் ஸ்வாமி -கொண்டு -அங்கு / இங்கு கொடுத்து –நெடும் வாசி -நினைவு கூட வாராத படி -கிருபையையை கொடுத்து -ஞான பலாதிகள் சொல்லி -மோக்ஷ பிரதத்வம் -சரண முகுந்தத்வம் -சிரமம் இல்லாமல் நம் போல்வாருக்கும் -ஸ்வாமி அருளுகிறார் –
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

அவதாரிகைநம் இராமானுசன் தந்த ஞானத்திலே -என்று எம்பெருமானார்  உபகரித்து அருளின ஞான வைபவத்தை-கீழ்ப் பாட்டிலே அருளிச் செய்து -இதிலே -ஈஸ்வரன் மோஷத்தை கொடுக்கும்போது -சேதனர் பக்கலிலே-சிலவற்றை அபேஷித்தே அத்தைக் கொடுப்பன் -இவர் அப்படி அன்றிக்கே தம்முடைய கிருபா பாரதந்த்ராய்-கொண்டு காணும் சேதனருக்கு மோஷத்தைக் கொடுப்பது – என்று இவர் தம்முடைய மோஷ பிரதான வைபவத்தை-அருளிச் செய்கிறார் –

வியாக்யானம் -மாதவன் -லஷ்ம்யா சஹ ஹிருஷீகேசா தேவ்யா காருண்யா ரூபயா ரஷகஸ் சர்வ சித்தாந்தே-வேதாந்தே ஷூ சகீயதே -என்றும் -அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா -என்றும் –
சொல்லுகிறபடி  சர்வேஸ்வரன் சேதனரைக் கைக் கொள்ளும்போது -பிராட்டியிடே கூடி இருந்து கைக் கொள்ளுவது
என்பது சகல வேதாந்த சித்தம் ஆகையாலே -அவளுக்கு வல்லபனான சர்வேஸ்வரன் –வானம் கொடுப்பது -பரமாகாசம் –
என்றும் -நலமந்தமில்லதோர் நாடு -என்றும் -பெயர்களை உடைத்தான ஸ்ரீ வைகுண்டத்தை -ஒரு சேதனருக்கு கொடுப்பது –
ஞானம் கனிந்த நலம் கொண்டு -ஸ்வ ஸ்வாமி பாவ சம்பந்தத்தை முதலிலே பெற்று -தைதலதாராவாத அவிச்சின்ன
ச்மர்த்தி சந்தான ரூபமாய் -ஆப்ரனாயாத ஹரஹர அனுஷ்டீயமான -மானகர்ம சாத்யமாய்க் கொண்டு –
பரிபக்குவமான ப்ரீதி ரூபாபன்னமான பக்தியை உடையவராய் –நலம் -சிநேகம் -அதாவது பக்தி –
நாடொறும் நைபவர்க்கு-விளம்பேதத் ப்ராப்திர்ப் பஜன ஸூ கமேகச்ய விபுலம் -என்னும்படி ரசானுபவம்
பெரிதாய் இருந்தாலும் -விளம்பம் உண்டாய் இருக்கையாலே -வகுத்த சேஷியை ப்ராபித்து – அனுபவித்த –
அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யங்களை செய்வது எப்போதோ -என்கிற ப்ராப்ய த்வரை அதிசயத்தாலே –
ஒருபகல் ஆயிரம் ஊழி யாய்  -பிராப்தி அளவும் -கால் ஆளும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்கிறபடியே

நாள் தோறும் சிதில அவயவரான அதிகாரிகளுக்கு –நை கை -சைதில்யம் -இது சகல சாஸ்திர சித்தமாய் இருக்கை –வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசன் –இப்போது அனுபவ பிராயசித்தங்களாலும்

கழியாதே இருக்கிற பிரபல பாபங்களை பண்ணின -என்னுடைய நெஞ்சிலே குடி கொண்டு இருக்கிற
நிஹிநையான -அந்த பாப வாசனையை நிவர்த்திப்பித்த எம்பெருமானார் -தன்னை எய்தினர்க்கு -தம்மை
ஆஸ்ரயித்தவர்களுக்கு –பிள்ளை உறங்காவல்லி தாசர் -ஊமை -வேடுவிச்சி -முதலானவர்களுக்கு –
அத்தானம் கொடுப்பது -சிரகால சாத்தியமாய் -சாதன சப்தகாங்ககமான பக்தி ரூப சாதனத்தாலே –
சாதிக்கத் தக்கதான அந்த ஸ்தானத்தைக் கொடுத்து அருளுவது –தன் தகவு என்னும் சரண் கொடுத்தே –
தம்முடைய கிருபை யாகிற சாதனத்தை கைமுதலாகக் கொடுத்து -அத்தையும் ஆஸ்ர்யிக்கும்   சேதனர்
சாதனமாக நினைக்க ஒண்ணாது என்று தாமே -பொதுவாக கல்பித்து -பரம புருஷார்த்த லஷண மோஷத்தை –
வருத்தம் அறக் கொடுப்பர் என்றபடி –எய்தினர்க்கு –என்று சாமான்யேன அருளிச் செய்கையாலே -ஆஸ்ரிதருடைய-ஜாதி குண வ்ருத்தாதிகளை அபேஷியாதே -அனுகூல்யத்தையே பற்றாசாகக் கொண்டு சர்வருக்கும் அத் தானத்தைக்
கொடுப்பது என்னும் இடம் தோற்றுகிறது –தச் -சப்தத்தால் –பிரம ருத்ராதிகளுக்கும் கூட எட்டாத நிலம் என்றும் தோற்றுகிறது –
இத்தால் இவருடைய மோஷ பிரதன வைபவத்தை அருளிக் செய்தார் ஆய்த்து -மா மலராள் கோன் மடியில்-வைத்து உகக்கும் வாழ்வு நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே –என்று இத்தை ஜீயரும் அனுசந்தித்தார் இறே –
————————————————————————–
அமுத விருந்து
அவதாரிகை –
எம்பெருமானார் தந்த ஞானத்தின் வைபவம் கூறப்பட்டது .கீழ்ப் பாசுரத்திலே .
மோஷத்தை அவர் கொடுத்து அருளும் வைபவத்தை அருளிச் செய்கிறார்
இப்பாசுரத்திலே .
பத உரை

மாதவன் -திருமகள் கேள்வன்

வானம்-மோஷத்தை
கொடுப்பது -வழங்குவது
ஞானம் கனிந்த –ஞானம் முதிர்ந்து கனிவான நிலையை யடைந்த
நலம் கொண்டு -பக்தி உடையவராய்க் கொண்டு
நாள் தோறும் -ஒவ்வொரு நாளும்
நைபவர்க்கு -நெக்குண்டு போவார்களுக்கு
வல்வினையேன் -வலிமை வாய்ந்த பாபம் செய்தவனான என்னுடைய
மனத்தில்-நெஞ்சத்தில்
ஈனம் -தோஷத்தை
கடிந்த -போக்கி அருளின
இராமானுசன் -எம்பெருமானார்
தன்னை எய்தினர்க்கு -தம்மை அடைந்தவர்களுக்கு
அத்தானம் -அந்த வானம் என்கிற இடமாகிய மோஷத்தை
கொடுப்பது -கொடுத்து அருளுவது
தன் தகவு என்னும் -தம்முடைய கிருபை என்று சொல்லப்படுகிற
சரண்-சாதனத்தை
கொடுத்து -அவர்களுக்கு கைம்முதலாகக் கொடுத்து .
மாதவன் வானம் கொடுப்பது -நலம் கொண்டு நைபவர்க்கு
இராமானுசன் அத்தானம் கொடுப்பது தன்னை எய்தினர்க்குத் தன் தகவென்னும் சரண் கொடுத்து
என்று வானம் கொடுப்பதில் மாதவனுக்கும் இராமானுசனுக்கும் உள்ள வேறுபாடு காட்டின படி –
வியாக்யானம் –
ஞானம் கனிந்த –கொடுப்பது மாதவன்
ஞானம் கனிந்து நலம் ஆகிறது .
அறிவு முதிர்ந்து அன்பாய்க் கனிகின்றது .
நலம் -அன்பு -பக்தி
ஸ்ரீ ய பதி-ஈஸ்வரன் –சேஷி ஸ்வாமி என்று அவனோடு தனக்கு உண்டான சம்பந்தத்தை உணர்ந்து –
தைலதாரை போலே இடைவிடாது அவனையே நினைந்து நினைந்து வருபவர்க்கு
அந்நினைவு அன்பு வடிவமாக கனி வுறும்-அதுவே பக்தி எனப்படுகிறது ..
அத்தகைய பக்தியை உடையவர் இறைவனை அடைந்து அனுபவித்து -அவ அனுபவத்தால் உண்டான
உவகை உள் அடங்காது தூண்ட பனி புரியும் வாய்ப்பு எப்போதோ என்று பேற்றினைப் பெறுவதில் உள்ள
ஆத்திரத்தாலே -ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ -திருவாய் மொழி – 10-3 1- – -என்றபடி

நாள் தோறும் பெறாத ஏக்கத்தாலே நிலை கொள்ளாது நைந்து போவார்கள் .அத்தகையோருக்கு பரமாகாசம் எனப்படும் மோஷத்தை மாதவன் கொடுக்கிறான் நலம் கொண்டு –பக்தியை தம்மிடம் கொண்டு

இனி
நலம் –பக்தியை -கொண்டு -வானம் கொடுப்பதற்கு ஹேதுவாக -சாதனமாக –கொண்டு-என்னலுமாம் ..
கொடுப்பது —மாதவன் –பிராட்டி காருண்ய ரூபை யாதலின் .
அவள் கொடுப்பிக்க கேள்வன் கொடுக்கிறான்-என்க.
பக்தி இருப்பினும் பிராட்டி தூண்டிய கருணை இன்றேல்
ஸ்வ தந்த்ரனை மோஷம் தருமாறு வற்புறுத்த இயலாது அன்றோ –
திரு மா மகளோடு கூடிய அருளாளன் -நாணாளும் நின்னினைந்து நைவேற்கு –பெரிய திரு மொழி -3 6-5-
என்றபடியும் -கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே சாலப் பல நாள் அடியேன் இன்னம் தளர்வேனோ
திருவாய் மொழி -6 9-3- – – – என்றபடியும் நைந்து தளர்பவர்களுக்கு வானம் கொடுக்கிறான் .அந்தோ அருளானான
மாதவன் நாடொறும் நைய விடுகிறான் தன்  பக்தர்களை .
வல்வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமானுசனை
மகா பாபியான என் மனத்தில் உள்ள தோஷத்தை போக்கினவரே என்று அமுதனார் இங்கு கூறியது
எத்தகையோருக்கும் தோஷத்தை நீக்கி -வானத்தைக் கொடுக்கும் வல்லமை எம்பெருமானாருக்கு உண்டு
என்று தோற்றுகைக்காக -தன்னை விடப் பாபம் அதிகமாக செய்தவர் வேறு எவருமே இருக்க மாட்டார்கள்

ஆதலின் -மற்று எல்லோருக்கும் தோஷம் தவிர்த்து -வானம் கொடுப்பது எளிது எனபது அமுதனார் திரு உள்ளம் .தன்னை எய்தினார்க்கு –சரண் கொடுத்தே

எம்பெருமானாரை அடைகிறவர்கள் இன்னார் இனையார் என்று இல்லை .
ஏற்றத் தாழ்வு இன்றி எல்லோருக்கும் அந்த வானத்தை கொடுத்து விடுகிறார் அவர் .மாதவன் போல தன்னை அடைந்தவர்களை அவர் நாடொறும் நைய விடுவது இல்லை
நலம் கொண்டவர்களுக்கு தான் மாதவன் மோஷம் கொடுப்பான்
எம்பெருமானாரோ எதுவுமே இல்லாதார்க்கும் தமது கிருபையை முன்னிட்டு மோஷம் அளிக்கிறார் .
மாதவன் மோஷத்திற்கு விலையாக -சாதனமாக –தான் நலத்தைக் கொண்டு வானம் அளிக்கிறான் .
எம்பெருமானாரோ மோஷத்திற்கு விலையாக தன் கிருபையை கொடுத்து வானம் அளிக்கிறார் .
எல்லோருக்கும் பொதுவான கிருபையை எம்பெருமானார் தம்மை அடைந்தவர்க்கு சாதனம் ஆக்குதலால்
அவர்கள் தாங்கள் ஒரு சாதனத்தை கைக் கொண்டதாக கருதவற்கு இடமில்லை என்க –
எய்தின அனுகூலர்க்கு கொடுப்பதால்-சர்வ முக்தி பிரசங்கத்திற்கு இடம் இல்லை .
பிராட்டியும் பெருமாளுமான இருவர் சேர்ந்து நைபவர்க்கு வானம் கொடுக்கின்றனர் –
எம்பெருமானார் ஒருவரே தம்மை எய்தினர்க்கு நைதலில்லாமல் அத்தானம் கொடுக்கிறார் .
இதனால் உத்தரகாசார்யர் எம்பெருமானார் என்பதை உணர்த்தினார் -ஆயிற்று .
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தல்

எம்பெருமானாரின் மோஷ பிரதான வைபவத்தை அருளி செய்கிறார் இதில்-

மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்-மோஷ பிரதன் திரு மால் ஒருவனே-சாதனம் பண்ணினவர்க்கு கொடுப்பான்-விதி ஒன்றும் இன்றி ஸ்வாமி நமக்கு கொடுக்கிறார் அத் தானம்-ஸ்ரீ வைகுண்டம்

மாதவன் -பிராட்டி உடன் மிதுனத்தில்- வானம்-பரம பதம்- கொடுப்பது.-ஞானம் கனிந்த நலம்-பக்தி-பெற்று அனவரதம்-நாள் தோறும்-நைபவர்க்கு துடிப்பு ஏற்பட்டு=-பிரார்த்தித்து உருகி இருப்பவர்க்கு–ஒரு பகல் ஆயிரம் வூழியாலோ என்று துடிப்பவர்க்கு-ஒழிவில் காலம் எல்லாம் வழு  இலா அடிமை செய்ய வேண்டும் என்று துடிப்பவர்க்கு -எய்துபவர்க்கு ஸ்வாமி கொடுக்கிறார்-போய் சேர்ந்தாலே  போதும்-அத் தானம் கொடுக்கிறார்

 -சஹெத்- எதிர்பார்க்கிறான்  சர்வேஸ்வரன் -நிர் ஹேதுகமாய் கொடுக்கிறார்  ஸ்வாமி -தன் தகவு-கிருபை-சாதனமாக கொண்டு
 -தகவு என்னும் சரண்-உபாயமாக கொண்டு தருகிறான்-தன் திருவடி சேர்த்து
 –அத் தானமும் கொடுக்கிறான்..நம்புவார் பத்தி வைகுந்தம் காண்மினே என்றார் மதுரகவி ஆழ்வாரும்
 – -உத்தாரக ஆச்சார்யர் ராமானுஜரே –ஆசை உடையாருக்கு எல்லாம் ..பேசி  வறம்பு அறுத்தாரே-
 -அனைவரும் ஸ்வாமி திருவடிகளில் சேரும் படி வழி வகுத்து
 -கூரத் ஆழ்வான் காவேரி தீரத்தில் சத்யம் சத்யம் என்று ஜகதாசார்யர் இவர் ஒருவரே
ஷேமுஷி பக்தி ரூபா -மதி நலம்-ஞானி -முதிர்ந்து பக்தன்-ப்ரேமானுரூபமாக  அடைந்து அனுபவித்து-
  அவ் அனுபவ ப்ரீதி ஜனித்த கைங்கர்யம்
மகள் -பாசுரம் -பேற்றுக்கு துவரிக்கை நிலை காட்டி –
 தாய்  பாசுரம் -பேறு  தப்பாது என்று துணிந்து இருத்தல்
தோழி  பாசுரம் -பகவத் சம்பந்தம் உணர்த்தி
பாடி அருளி -ஆழ்வார் இவ் வெவ்வேறு நிலைகளை காட்டி அருள –
துடித்து  பிரிவாற்றாமையால் –ஒரு பகல் ஆயிரம் வூழி  ஆலோ
சீதை 10 மாசம்  பிரிவு
தேவகி 10 வருஷம் பிரிவு
நைபவருக்கு நெக்கு வுருகி நிற்பது
– நித்யமும்-நாள் தோறும்-.வல் வினையேன் மனத்தில்-ஈனம்- கடிந்த
-தோஷம் போக்கி-நேராக கை காட்டாமல்-
தன்னை காட்டி- தன்னை போல நீசனுக்கும்
-அடைந்தாலே போதும்-எய்தினவர்க்கு அத் தானம்
-தத் விஷ்ணோ பரம பதம் -அந்த -தகவு  என்றாலும்
உன் தன்னை பிறவி-உன்னை இல்லை –
 அவன் என்ற பெருமை போல இங்கு தகவு என்றும்-சரண்
-கொடுத்து கை முதலாக கிருபை கொடுத்தார்/இது ஒரு மோஷம்- கொடுத்தே- ஆச்சர்ய ஏ காரம்…சகேதுகமாக ஈஸ்வரன் கொடுக்கிறான்

-பிரார்த்தனை எதிர் பார்கிறான் பிரார்த்தனையும் சொரூபம்

-ஸ்வாமி தன் கிருபையை  எதிர் பார்த்து கொடுக்கிறான்-பக்த  பராதீனன் அவன்-கிருபை பராதீனன் ஸ்வாமி-அவளுக்கு வல்லபன்-

-தேனார் மலர் கொழுநன் மணாளன்-மாதவன்-பெரிய பிராட்டியார் கூட இருந்தே கை கொள்கிறான்-மாய மான் மட நோக்கி உன் தோழிமாதவ -பெரிய பிராட்டியார் ஸ்வாமி வல்லபன்-/நலம் அந்தமில் நாடு -வானம்

/ ஞானம்- ஸ்வ–  ஸ்வாமி  பாவ சம்பந்தத்தை அறிந்த ஞானம் –துளிர் இது –ரஷ ரஷாக –  சரீர சரீரி .நவ வித சம்பந்தமும் தெரிந்து-தைல தீரா -அவிச்சின்ன -இடை வெளி அற்று நினைவு பரம பக்தி–சத் காரிய வாதம்-இருப்பது உரு மாறும்-இருந்த விளக்கில் தான் மங்கள ஹாரதி பண்ணுவார்கள்

ஸ்ரீ ரெங்கத்தில்/பேர் அமர் காதல் ..பின் நின்ற காதல்-கழிய மிக்கதோர்  காதலாக வளர்ந்து..பீதி இன்றி பிரீதி கொண்டு-கால் ஆளும்  -பேற்றுக்கு துவரிக்கை-ச்தில  அவயம் -ஒவ் ஒன்றும் -அனைத்து இந்திரியங்களும் -எல்லா செயலும் விரும்ப-என்று கைகள் தொழுமோ-கை தொழ கூடும் கொலோ என்று கொல் கண்களோ பார்ப்பது-வாயாரா என்று கொலோ வாழ்த்தும்  கொலோ–கூடுமோ -கூடும் என்பர் கூரத் தாழ்வான் -திருவடி -இடம் சீதை -பெருமாள் கை விட்ட தவற்றை சொல்லி -மடலூர்ந்தது போலே -பிரளய ரோஷம் போலே -அப்புறம் மதுர பாஷம் கேட்டு திருவடியை -எனக்காக பெருமாளை திருவடி வணங்கு -எனக்காக -மமார்த்தே சுகமாக இருக்கிறானா விசாரி-என்றாள்  -அது போலே இங்கும் கூடும் என்றானாம் –என் நாள்,அந்நாள்-பகல் கண்டேன் நாரணனை  கண்டேன்-காணாத நாள் பட்டினி நாளே-/கோல திரு மா மகளோடு உன்னை கூடாதே சல பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனே /முன் புற்றநெஞ்சு-வலையுள் அகபடுத்து என் நல் நெஞ்சம் கூவி கொண்டு -அலை கடல் பள்ளி அம்மானை -ஆழி பிரான் தன்னை-தலையில் வணங்குவாம் கொலோமடல் -கடியன் கொடியன்- வணங்குவாம் கொலோ கூறுவாரோ-மாசறு சோதி மடல் எடுக்கும் பதிகம்-சங்கை வராதே-ஓம் காணும் கொடும்–காவல் சோர்வால் ராமன் கை  விட்டானே சீதை மடல் வூடுவது போல சொன்னாள்–சிரசால் அபிவாதயே -சுகம்-ஏறு செவகனார்க்கு என்னையும் உளள்  -ஓன்று -இன்றியமையாமை ./உலகத்தார் போல ரஷிக்கனுமனால் சேவிக்கனுமே என்று நினைத்தாராம்-மடல் வூருவதும் சேவிக்கவும் போல

/தூ முறுவல் தொண்டை வாய் பிரானே-தொண்டை-பழம் போல் சிவந்த அதரம்-என்னார் கொலோ நான் உருகும் தோழி-வல் வினையேன் மனசில்-குடி கொண்டு இருக்கிற ஈன தன்மை பாப வாசனை போக்கி-எய்தனருக்கு– சாமான்யர் -வூமை பிள்ளை உறங்கா வல்லி தாசர் வேடுவச்சி போல்வார்-அதிகாரம் இன்றி- எய்தினர்க்கு-நைபவர்க்கு அங்கு.. எளிமை/எய்தினர்க்கு- அனைவருக்கும்/ எய்தார்வர்களுக்கு இல்லை சர்வ முக்தி இல்லை என்பதால் /திருவடி கிட்டினால்-மற்று எல்லாம் புல்லுக்கு சமம்-தகவு கிருபை பார்த்து-அங்கு நலம் உடையவர்க்கு/ அங்கு  மிதுனத்தில் /இங்கு ஸ்வாமி தானாக-அங்கு நைந்தால் தான் கிட்டும் இங்கு எய்தினால் போதும்//கிருபை பொதுவாக- தன்னது இல்லை எங்களது ./ஜாதி குண விருதாதிகளை அபேஷியாதே ஆசை  என்கிற வேஷம் ஒன்றே போதும்..தத் சப்தம்-அத்-தானம்-விதி -பிரம  சிவ ஜனக  கூட கிட்டாத அந்த ஸ்தானம்-மோஷ பிரதானம்..மா மலராள் கோன் மடியில் வைத்து உகக்கும் வாழ்வு–நமக்கு எதிராசன் அருளும் வாழ்வே திரு அடி பிடித்து மடி பெறுவோம்..ஜீயரும் அருளினாரே ..

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: