அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-65-வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

அறுபத்தஞ்சாம் பாட்டு -அவதாரிகை
இப்படி எழுந்து அருளின எம்பெருமானார் பாஹ்ய குத்ருஷ்டி நிரசன அர்த்தமாக
உபகரித்து அருளின ஜ்ஞானத்தால் பலிதங்களை  அனுசந்தித்து ப்ரீதராகிறார் .
வாழ்வற்றது தொல்லை வாதியர்க்கு என்றும் மறையவர் தம்
தாழ்வற்றது தவம் தாரணி பெற்றது தத்துவ நூல்
கூழற்றது குற்றமெல்லாம் பத்திதா குணத்தினர்க் கந்
நாழற்றது  நம்மிராமானுசன் தந்த ஞானத்திலே – – 65-
வியாக்யானம் –
நம்முடைய நாதரான எம்பெருமானார் உபகரித்த் அருளின ஜ்ஞானத்தாலே -பயிருள்ள வன்றே-களையும் உண்டாமா போலே பழையதாய்ப் பொறுக்கிற வாதங்களை யுடைய பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு-வாழ்வு போயிற்று –.களை போனவாறே -மாய்ந்தவாறே -பயிர்  தலைப் பெறுமா போலே-அவை போகையாலே -சர்வ காலத்திலும் வைதிகரானவர்கள் -தங்களுடைய குறைவு போயிற்று .–
ஏத்த வல்லார் திரிதலால் தவமுடைத்து தரணி தானே -பெருமாள் திரு மொழி – 10-5 – – என்கிற படியே
பாஹ்யர் நிரஸ்தராய்–வைதிகர் தலைப்பெற்று பாகவத சஞ்சாரம் மிகுகையாலே பூமி
பாக்யத்தை உடைத்தாயிற்று ..தத்வ பரமான சாஸ்த்ரங்களில் சம்சயங்கள் எல்லாம் தீர்ந்தது –
சர்வ தோஷ லக்னமான ஸ்வபாவத்தைவுடையவர்களுக்கு அக்குற்றம்  தீர்ந்தது
இது ஒரு ஜ்ஞான வைபவம் இருக்கும் படியே -என்று கருத்து
ஞானத்திலே -என்றது த்ருதீ யார்த்தே சப்தமி
தாழ்வு -குறைவு
தவம்-பாக்கியம்
கூழ்ப்பு -சம்சயம்
நாழ் -குற்றம்–
மருந்து விருந்து பொருள் அமுதம் எல்லாம் ஒன்றே –வாழ்வு தாழ்வு அற்றது -இரு வகைப் பட்டவர்களுக்கும் –மறையவர் தம் தாழ்வு அற்றது..இரண்டு இடத்திலும் அற்றது–இரண்டுமே என்றும் —
ஸ்வாமி –எம்பெருமானாருக்கு மட்டுமே பொருந்தும் -நம் ராமானுசர்–நாம் -சொத்து என்று உணர்ந்தாள் போதும் சம்பந்தம் பெற-புண்யம் போஜ விகாசாய பாப த்வாந்தஷயாயச ஸ்ரீ மான் ஆவிர்பூத் பூமௌ  ராமானுஜ திவாகர-இருட்டு போக -ஆத்ம ஞானம் வளர கைங்கர்ய செல்வம் வளர –ஸ்வாமி ஞான வைபவதால் –
கிடைத்த பஞ்சாம்ருதத்தை அருளிச் செய்கிறார் -பரித்ராணாயா -த்ரயங்களும் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தியும் சொன்னபடி
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை

அவதாரிகை –

கீழ்ப் பாட்டிலே -எம்பெருமானார் திவ்ய தேச யாத்ரை எழுந்து அருளினவாறே பிரதிவாதிகளுடைய
வாழ்வு வேருடனே நசித்துப் போன படியை சொல்லி -இதிலே -அவருடைய சமீசீன ஞானத்தாலே
பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு உண்டான விநாசத்தையும் -லோகத்தர்க்கு எல்லாம் உண்டான சம்ர்த்தியையும்
பலபடியாக அருளிச் செய்து கொண்டு பிரீதராகிறார் –
வியாக்யானம் -நம் இராமானுசன் தந்த ஞானத்தினாலே -எங்களுக்கு வகுத்த சேஷியான எம்பெருமானார் –
தம்முடைய கிர்பா பரதந்த்ரராய்க் கொண்டு – நிர்ஹேதுகமாக உபகரித்து அருளின ஜ்ஞானத்தினாலே –த்ர்தீயார்த்தே சப்தமி   -என்கிற பிரக்ரியையாலே -ஜ்ஞானத்திலே -என்று நிர்தேசிக்கிறார் -இனி அத்தாலே
பலிதத்தை யருளிச் செய்கிறார் –வாழ்வு அற்றது என்று தொடங்கி-வாதியர்க்கு –பிரதிவாதிகளான
சங்கர பாஸ்கர யாதவ பாட்ட பிரபாகர பௌ த்த சார்வாதிகளுக்கு –தொல்லை-வாழ்வு அற்றது -இவருடைய
அவதாரத்துக்கு முற்காலத்திலே -பிரதிவாதிகளுக்கு வாழ்வு -வேதத்தை அங்கீகரித்து இருக்கச் செய்தே
அதின் அர்த்தத்தை அறியாதே குத்ர்ஷ்டி கல்பநங்களாக சில கிரந்தங்களைப் பண்ணி -லோகத்தை
எல்லாம் மூலையடியே நடத்திக் கொண்டு போருகையும்-வேதத்திலே சில தோஷங்களை ஆரோபித்து –
அது அப்ரமாணம் என்று சொல்லுகையும் -அப்படிப் பட்ட வாழ்வு இவர் அவதரித்து உபகரித்த ஞானத்தாலே
அடி யற்று போச்சுது -என்றும் -என்கிற பதம் -காகாஷி அந்யோன்ய பூர்வோத்தர பதங்களுக்கு விசேஷணமாய் இருக்கிறது –
என்றும் தொல்லை தாழ்வற்றதுஅற்றது அற்றது -என்று -ஆ ஸூ வி ஸ்மரசி தத்தமர்த்தி நே விச்மரஷ்ய ப்க்ர்திம்
பரேணயத் காம விச்மரண ஸீலலீலயா -என்னுமா போலே – இத்தால் -விரோதிகளானவற்றைப் போக்கடித்த
ஆற்றலை சொல்லுகிறது -சதுர்வேதிகளான ப்ராமாணிகருக்கு  இவருடைய அவதாரத்துக்கு முற்காலம்  எல்லாம்
பாக்ய குத்ர்ஷ்டிகள் லோகம் எங்கும் வியாபித்து இருக்கை யாலே வைதிக மார்க்கம் எல்லாம் தலை சாய்ந்து
இருக்கையாகிற தாழ்வு என்றும்  அற்றது -தொல்லை என்று இங்கும் அனுஷ்டிக்கக் கடவது –தொல்லையான தாழ்வு
அநாதி காலமே தொடங்கி இடைவிடாதே வந்த தாழ்வு -தொல்லை என்றது வாதியருக்கு விசேஷணமாய்-
பழையதாய் போருகிற வாதங்களை உடைய  பாஹ்ய குத்ர்ஷ்டிகள் -என்றுமாம் –தாழ்வு -குறைவு –
தாழ்வு என்று மற்றது -இனி மேல் உள்ள காலத்தில் -ஒருநாளும் மறுவ விடாதே வாசனையோடு போயிற்று
என்றபடி -லோகத்திலே பயிரை உடையவன் கிரிஷி பண்ணினால் -அந்த பயிரிலே கட்டடங்க களை வியாபித்து
அத்தை தலை எடுக்க ஒட்டாதே இருந்தவாறே -அந்தக் களையை விரகர் பிடிங்கிப் பொகட்டு அந்த பயிரை
அபிவ்ர்த்தமாம் படி பண்ணுமாப் போலே  -ஈஸ்வரனுடைய கிரிஷிக்கு விஷய பூதரான அனுகூலர்  அடங்கலும்
பாஹ்ய குத்ருஷ்டிகளாலே தலை சாய்ந்து போன பின்பு -அவர்களை நிரசித்து -அந்த சேதனரை எல்லாம்
அபிவ்ர்த்தராம்படி பண்ணினார் காணும் –தவம் தாரணி பெற்றது -பூமியானது  பாக்யத்தை பெற்றது –தவம் -பாக்கியம்

 பரித்ராணாயா சாதூனாம் விநாசாய ச துஷ்க்ர்தாம் -என்ற அநந்தரம் இறே -தர்ம சம்ச்த்தாபனார்த்தம் -என்றது –

பிரதிவாதிகள் பராஜிதராய்க் கொண்டு பூமியிலே காணப் படாத பின்பு -பாகவதர்கள் தங்கள் குறை எல்லாம் தீர்ந்து
பிரகாசித்தார்கள் ஆகையாலே -பூமியிலே தர்மமானது எங்கும் ஒக்க வியாபித்தது –புண்யம் போஜ விகாசாய பாப த்வாந்தஷயாயச ஸ்ரீ மான் ஆவிர்பூத் பூமௌ  ராமானுஜ திவாகர -என்னக் கடவது இறே –தத்துவ நூல் கூழ் அற்றது -பராவர தத்வ
யாதாத்ம்ய பிரதிபாதகமாய் இருந்துள்ள -சாஸ்திர ரூபமான வேதமானது -குத்ருஷ்டிகளாலே கலக்கப்பட்டு இவ்வளவும்
பஹூ நாயகமாய் வ்யபிசரித்து போய் -இப்போது இவர் ஸ்ரீ பாஷ்யத்தை அருளிச் செய்கையாலே -யஸ் சுருதி ஸ்மரதி
சூத்ரானாம் அந்தர்ஜுரம் அசீசமத் -என்கிறபடியே லோகத்தார் எல்லாருக்கும் ஞான பிரதானத்தையும் வேதங்களுக்கு
யதாவர்த்தத்தையும் -பண்ணுகையாலே -காலுஷ்யம் போய் நிச்ச்சம்சயமாக  தத்வார்த்தங்களை பிரகாசிப்பிக்கும் ஆய்த்து –
கூழ்ப்பு  -சம்சயம் -இவருடைய உபதேசத்தாலே -பிரமாதக்களுக்கு த்த்வபரமான சாஸ்த்ரன்களிலே சம்சயங்கள்
எல்லாம் போய்த்தின வென்றுமாம் –தத்துவம்தத்வம் -நூல் -சாஸ்திரம் –
குற்றம் எல்லாம் பதித்த குணத்தினருக்கு அந் நாழ்  அற்றது -யாவச்ச யச்சதுரிதம் சகலச்ய ஜந்தோ ஸ்தாவச்ச தத் தததி
கஞ்சம மாஸ்தி    சத்யம் -என்கிறபடியே சமஸ்த துரிதங்களும் -வியாபித்து இருக்கிற குணங்களை உடையவர்களுக்கு
இவருடைய ஜ்ஞான பிரதான வைபாவத்தாலே -அவர்களுடைய பாபம் எல்லாம் நசித்தது -ஷிப்ரம் பவதி தர்மாத்மா சஸ்
வச்சாந்திம் நிகச்சதி -என்கிறபடியே குணத்தில் உண்டான தோஷங்கள் எல்லாம் நிவர்த்தங்களாய் -ஜ்ஞாநாதிகர்
ஆனார்கள் -என்றபடி –நாழ் -குற்றம் -இது ஒரு வைபவம் இருக்கும்படி என்-என்று வித்தராகிறார் –
————————————————————————–
அமுது விருந்து
அவதாரிகை
வாதியர் வாழ்வு அற-எம்பெருமானார் உதவிய ஞானத்தாலே விளைந்த நன்மைகளை கண்டு-களிப்புடன் அவற்றைக் கூறுகிறார் .
பத உரை –
நம் இராமானுசன் -நம் தலைவரான எம்பெருமானார்
தந்த -உதவிய
ஞானத்திலே -ஞானம் காரணமாக
தொல்லை -பழைமை வாய்ந்த
வாதியர்க்கு -வாதத்தை கை கொண்டவர்களுக்கு
வாழ்வு அற்றது -வாழ்வு தொலைந்தது
என்றும் -அங்கன் அவர்கள் வாழ்வு தொலைதலினால்-எக்காலத்திலும்
மறையவர் தம் -வைதிகர்கள் உடைய
தாழ்வு -குறைபாடு
அற்றது -தீர்ந்தது
தாரணி -பூமி
தவம் பெற்றது -பாக்யத்தை அடைந்தது
தத்துவ நூல் -தத்துவங்களைப் பற்றி கூறும் சாஸ்த்ரங்களில்
கூழ் –சந்தேஹம்
அற்றது -தீர்ந்தது
குற்றம் எல்லாம் பதித்த -அனைத்து குற்றமும் தன்னுள் ஓட்டிப் பொதிந்துள்ள
குணத்தினர்க்கு-ஸ்வபாவம் உள்ளவர்களுக்கு
அந்நாழ்  அற்றது -அக்குற்றம் தீர்ந்தது
வியாக்யானம் –

வாழ்வு அற்றது தொல்லை வாதியர்க்கு –

தொல்லை வாதியர்க்கு -தொன்மையான வதம் புரிபவர்களுக்கு -என்றபடி
தொன்மை வாய்ந்தது வாதம் -வாதியர் தொன்மை வாய்ந்தவர் அல்லர் என்று அறிக –
வாதம் புரிபவர் -தற் காலத்தவர் ஆயினும்  அவர்கள் புரியும் அசத்கார்ய வாதம்  முதலியன
வேதத்திலேயே எடுத்து களையப் படுதலின் –தொன்மை வாய்ந்தவை -என்க-பயிர் உள்ள வன்றே-களையும் உண்டாமோ போலே அநாதி வைதிகக் கொள்கைக்குக் களையான அவைதிக வாதங்களும்
தொன்று தொட்டு வருமவை யாதலின் அவை தொன்மை வாய்ந்தன ஆயின -வாதியர் தாங்கள்
கைக் கொண்ட வாதம் பண்டையதாயினும் அது அடிபடவே தலை எடுக்க மாட்டாது
நசிந்து ஒழிந்தனர்.
என்றும் மறையவர் தம் தாழ்வு அற்றது –
என்றும் அற்றது என்று இயைக்க
களை எடுத்தவாறே பயிர் தலை நிமிர்ந்து ஓங்கி வளருவது போலே
துர்வாதம் தொலையவே வைதிகர் தலை நிமிர்ந்து ஓங்கி வளர்ந்தனர் -என்க –
தவம் தாரணி பெற்றது –
தவம் -பாக்கியம்
தாரணி தவம் பெற்றது என்று கூட்டுக
துர்வாதம் தொலைந்து வைதிகர் தலை நிமிர்ந்து –தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாம் திருவந்தாதி -16 –
என்றபடி பூமி எங்கும் திரிதலாலே அவர்கள் திருவடி சம்பந்தம் பெறுதலின் பூமி பாக்கியம் பெற்றது
என்றபடி .ஏத்துவார் திரிதலால் தவமுடைத்து இத் தரணிதானே-பெருமாள் திரு மொழி -10- 5- என்னும்
ஸ்ரீ சூக்தி இங்கு அனுசந்திகத் தக்கது
தத்துவ நூல் கூழ் அற்றது
கூழ் -சந்தேகம்
நூலில் சந்தேகம் தீர்ந்தது -என்றபடி
குற்றமெல்லாம் –அந்நாழ்அற்றது

குணம் -ஸ்வபாவம்

 நாழ்-குற்றம் குற்றங்களையே இழைக்கும் ஸ்வபாவம் உள்ளவர்களுக்கு அக்குற்றங்கள் தொலைந்தன –
இராமானுசன் தந்தஞானத்திலான நலன்கள் எத்திறத்தன என்று வியக்கிறார் .
ஞானத்திலே -இல் ஐந்தாம் வேற்றுமை உருபு-எதப்பொருள் அது
கல்வியில் பெரியவன் கம்பன் -என்பது போலே–
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது –

எம்பெருமானார் -எழுந்து அருளி வந்து -உபகரித்து அருளின ஞானத்தாலே-வாழ்வு அற்றது-தொல்லை வாதியர்க்கு/என்றும் மறையவர் தம் தாழ்வு அற்றது/பூமி தவம் பெற்றது/தத்துவ நூல்- வேதங்கள் சாஸ்திரங்கள் சந்தேகம்-கூழ்- தீர்ந்தது./.குற்றம் எல்லாம் பதித்த  குணத்தினருக்கு-சந்தேகம் போய்குணம் மட்டும்//நாழ்  -குற்றம்-அற்றது–ஐந்தும் பலிதம் ஸ்வாமியால்//கர்மாவேலேயே அதிகாரம்-பலத்தில் இல்லை//ஞானம் கொடுத்தார் ஸ்வாமி-.காரணத்தை அறிந்தால் காரியம் அறிந்தது போல-எந்த ஒன்றை தெரிந்து கொண்டால் எல்லாம் அறிந்தது போல/உத்தாரகர்-ஞானம் பகிர்ந்து கொண்டால் பெருகும்..

அடியார் பலவான் ஆகி எல்லாம் தானே நடக்கும்..//நம் ராமானுசர்..பகவத் ராமானுசர் என்பர் வட இந்தியாவில்–வைபவம் தெரிந்து நமோ- நெருக்கத்தால் நம் ..ஆரா அமுதன்-அபரியாப்த அம்ருதம்-/கல்வியில் சிறந்த கம்பன் போல கல்வியால் சிறந்த/தொல்லை வாதியர்- வாதத்துக்கு தொன்மை ../பயிர் உள்ள அன்றே களை இருக்கும்/விசிஷ்டாத்வைதம்  வந்த அன்றே –சகஜ பக்தி அங்குரிக்கும் பொழுதே பரி மளிப்பது போல/ஆதி உண்டு அந்தம் உண்டு கர்மா போல ஸ்வாமி வந்ததும் போயின/இல்லாத பக்தி பிறந்து வளர -கீதை 10 அத்யாயம் அருளியது போல/வாழ்வற்றது -மோஷம் இழந்தான்../களை போனதாலே பயிர் முளைக்கும்/மறையவர் தம் தாழ்வு அற்றது..இரண்டு இடத்திலும் அற்றது

–என்றும்-சர்வ காலத்திலும்-/பூ பாரம் போகினதால்-தரணி வாழ்ந்தது-உடம்பு போனது இல்லை ஞானம் பெருகி -இன்பம் பேரு பெற்றது -தவம் பெற்றது–ஏற்ற வல்லார் திரிதலால் தவம் உடைத்து இத் தரணி தானே-குலேசேகர ஆழ்வார்/அரக்கர் இளைத்த பாபம் -தவம் உடைத்து தரணி-கம்பர் -சீதை ராமர் திரு கல்யாணம் வைபவத்தால்/ தீர்தகராய் திரிந்து -முதல் ஆழ்வார்கள்/தத்துவ நூல் கூழ் எல்லாம்  அற்றது –சந்தேகம் தீர்ந்தன/குற்றம் எல்லாம் பதித்த  குணம் உடையோர்க்கு குற்றம் தீர்ந்தது

-.ஞானம் பெறுவதால் பயன்/ஸ்வாமி -திவ்ய தேச யாத்ரை எழுந்து அருளிய போதே – திக் விஜயம் போனதில்-வாதியர்கள் அனைவரும் சிதைந்து ஓடி போனார்களாம்/மறையவர் தம் வாழ்வு அற்றதும்-லோகம் அனைவரும்   வாழ்ந்து போவார்கள்/-/வகுத்த சேஷி ஸ்வாமி-தம் கிருபை தூண்ட -நிர்கேதுகமாக உபகரித்து அருளின ஞானம் /அற்றது -என்று-தெய்வ சம்பத் அசுர சம்பத் என்று கீதையில்-அவர் அவர் அபிப்ராயத்தாலே/வரத்தினில் சிரத்தை மிக்க- சிரத்தை உடன் இருந்தேனே

/அடியார்களுக்கு கொடுத்ததை மறக்கிறான்/அடியார்களின் குற்றங்களை மறக்கிறான்-மறப்பதே குணம் அது போல அறுப்பதே இங்கு/பர அவர -அவன் பரன் நாம் அவர-பரத்துக்கும் ஸுலப்யத்துக்கும் எல்லை-அது அதுவாக தான் இருக்கும் இது இதுவாகத்தான் இருக்கும்–தத்வ-யாத்தத்மிக பிரவர்த்திகமாய் உள்ள –சாஸ்திரம் கலக்க பட்டு -பகு நாயகமாய் விவசரித்து போய்-ஸ்ரீ பாஷ்யம் அருளி- அந்தர் ஜுரம் போக்கினார் -ராமானுஜ திவாகரர்/ பரம யோகி- சேர்ந்து இருக்கிறார் /ஞானம் கொடுத்து ,கலக்கம் தெளிவித்து பிரகாசித்தார் //கூழ்ப்பு  -சம்சயம் /குற்றம் எல்லாம் பதித்த-துர்மானி போன்ற சமஸ்த துரிதங்களும்-உள்ள ஸ்வாபம்-பாபம் நசிக்க பண்ணினார்-வைதிக மார்க்கம் தலை நிமிர்ந்து–தர்மம் தாங்கும் தார்மிகரால் தாங்க படும்/என்றும் தொல்லை என்பதை இங்கும்-கொண்டு-பழைய மறைவார்கள்/ பழைய தாழ்வு //என்றும்-வாசனை உடன்  கழிந்துசர்வ காலமும் என்ற படி/ஈஸ்வரனின் க்ருஷிகளுக்கு இவர்கள் தானே -அனுகூலர்- பயிர்/அவர்கள் -களை /களை பறித்து பயிர் விளையுமா போல/இதனால் தவம் தாரணி பெற்றது-உபதேச வேளை ஸ்ரீ கீதையில் பரித்ராணாம் முதலில் -பறை தருவான் போலே -இங்கு  அனுஷ்டான வேளை / கறவைகள் பின்பு சிற்றம் சிறுகாலை போலே 

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: