அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-63-பிடியைத் தொடரும் களிறென்ன -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

அறுபத்து மூன்றாம் பாட்டு -அவதாரிகை
அநிஷ்டமான கர்ம சம்பந்தம் கழிந்தபடி சொன்னார் கீழ் –
இஷ்டமான கைங்கர்யத்துக்கு அபேஷிதமான தேவரீர் திருவடிகளில்
ப்ராவண்ய அதிசயத்தை தேவரீர் தாமே தந்து அருள வேணும் -என்கிறார் .
பிடியைத் தொடரும் களிறென்ன யானுன் பிறங்கிய சீர்
அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் அறு சமயச்
செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்தோட வந்திப்
படியைத் தொடரும் இராமானுசா மிக்க பண்டிதனே – 63- –
வியாக்யானம் –
நூறு மண்டிக் கிடக்கிற பாஹ்ய ஷட்சமயங்களை அநுவிதானம் பண்ணுகைக்கு உறுப்பான
அறிவு கேடு குடி கொண்டவர்கள் பக்னராய் வெருவியோடும் படியாக  வந்து –
அவர் பின் படரும்   குணன் -36 – என்கிறபடியே -இந்த விபூதியில் உள்ளாரை
விஷயீ கரிக்கைக்கு அவகாசம் பார்த்து தொடர்ந்து திரியுமவராய் -வஸ்து ஸ்வபாவங்கள்
அறிந்து கார்யம் செய்கைக்கு உறுப்பாய் இருந்துள்ள -நிரவதிகமான ஜ்ஞாத்ருத்வத்தை வுடையவரே
பிடியின் அளவில் ப்ராவண்யா அதிசயத்தாலே -ஒன்றாலும் -நிவர்த்திப்பிக்க ஒண்ணாதபடி –
அத்தையே பின் பற்றித் திரியா நின்றுள்ள -களிறு போலே -நானும் தேவரீர் உடைய
சௌ ந்தர்ய-ஸௌகந்தய -ஸௌ குமார்யாதி குணங்கள் எல்லாம் பிரகாசித்து இருந்துள்ள-திருவடிகளை பின்  தொடரும் ஸ்வபாவத்தை தந்து அருள வேணும் .
களிறென்ன -என்றது-களிறு என்று சொல்லலாம் படி என்கை-இத்தால் களிறு போலே என்றபடி –
களிறன்ன-என்று பாடமானாலோ என்னில் -அப்போது பிடியைத் தொடரும் களிற்றை
ஒத்த யான் என்று -பூதார்த்த வாசியாய் –யான் -என்கிற வதிகாரிக்கு விசேஷணமாம்  இத்தனை
யல்லது -அடியைத் தொடரும் படி நல்க வேண்டும் -என்கிற ப்ராப்ய ப்ராவண்யா பிரார்த்தனைக்கு-திருஷ்டாந்தமாக மாட்டாமையாலே அது சேராது –
பிறங்குதல்-பிரகாசம் / பிறங்கிய சீரடி என்றது -மிகவும் அழகியதான திருவடி கள் என்னவுமாம் .
அப்போது பிறங்குதல் -மிகுதி —சீர் என்று அழகு –செடி-தூறு
மருள் செறிகை யாவது -அறிவு கேடு திரளுகை –
அடியைத் தொடரும்படி என்கிற விடத்தில் –படி என்றது ஸ்வபாவம் /நல்குதல்-கொடுத்தல்-அடியைத் தொடரும்படியாக செய்ய வேணும் -என்னவுமாம் .
பாஹ்ய சமயைகளை ஒட்டி -படியிலில் உள்ளாரை பெருமாள் இடம் சேர்க்கும் -மிக்க பண்டிதன் -ஞானம் கொண்டு மற்றவரை திருத்தி மாதவன் திருவடி சேர்த்ததால் மிக்க பண்டிதன் -பிடி -எம்பெருமானார் திருவடி -நாம் களிறு –போல பின் செல்வோம் -எல்லா உறவுமே அவன் புருஷோத்தமனை சேலேய் கண்ணியர் என்றாரே -ஆளவந்தாரும் மாதா பிதா இத்யாதி –
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் -குண க்ருத தாஸ்யம் இல்லைபிராப்த -வகுத்த இடமே எல்லாம் நமக்கு
/சீர் -திருமேனி குணத்தையே இங்கே அருளிச் செய்கிறார் -அழகு ஸுந்தர்யம் பரிமளம் –ஆத்ம குணம் எட்டுவதற்கு அரியது -இங்கு பிடி களிறு -உதாரணம் சரீர குணம் காமம்
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

அவதாரிகை -கீழில் பாட்டிலே -இராமானுசன் மன்னு மாலர்த்தாள் பொருந்தாத மனிசரைக் குறித்து -ஹித லேசமும்
செய்யாத பெரியோரை அனுவர்த்திக்கும் மகாத்மாக்களுடைய திருவடிகளை ஆஸ்ரயித்து – பிராப்தி பிரதி பந்தங்களான
 புண்ய பாப ரூப கர்மங்களை கழற்றிக் கொண்டு -சம்சார வெக்காயம் தட்டாதபடி இருந்தேன் என்று -எம்பெருமானார் திருவடிகள்
உடைய சம்பந்தி சம்பந்தி பர்யந்தமாக செல்லுகிற ப்ரபாவத்தைக் கொண்டாடினார் -இதிலே -அப்படிப்பட்ட திருவடிகளில்
தமக்கு உண்டான ப்ராவண்யா அதிசயம் பிறக்க வேணும் இறே என்று கொண்டு -அவைதிக சமயத்தோர் அடங்கலும்
பக்னராய் வெருவி வோடும்படி அவதரித்து -பூ லோகத்தில் எங்கும் பாஹ்யரைத் தேடி -அவர்கள் மேல் படை எடுத்து –
அவர்களைத் தேடித் திரியும்படியான -ஜ்ஞான பௌ ஷ்கல்யத்தை உடையரான எம்பெருமானாரே -தேவரீர் திருவடிகளில்
அதி மாத்ர ப்ராவன்யத்தை அடியேனுக்கு தந்தருள வேணும் என்று நேர் கொடு நேரே விண்ணப்பம் செய்கிறார் –
வியாக்யானம் -அறு சமய செடியை -தூறு மண்டிக் கிடக்கிற பாஹ்ய ஷட் சமயங்களை –செடி -தூறு
அன்றிக்கே அறு -என்று அனுஷ்டான தசையிலே யற்று இருக்கிற சமயங்கள் என்னுதல் -சாதன-தசையில் ஆட்டை அறுத்து கொடுக்கையும் -தலையை அறுத்து கொடுக்கையும் -கல்லும்முள்ளுமான-காட்டிலே -பஞ்சாக்னி மத்யத்திலே  தபசு பண்ணுகையும்–பச்ம தாரண  மலலேபநாதி துர்வ்யாபாரங்களை
பண்ணுகையும் -ப்ராப்தி தசையிலும் -பாஷாண கல்பமாய்   இருக்கையும் -முதலான துக்கங்களாலே வ்யாப்தங்கள்
ஆகையாலே வருத்ததோடு பிணைந்து இருக்கிற சமயங்கள் என்னுதல் –தொடரும்மருள் செறிந்தோர் -இப்படிப் பட்ட-துர்மதங்கள் ஆகிற -கஹனத்திலே தர்ஷ்டி விஷமான பாஷாணங்கள் எல்லாம்தலை சாய்ந்து -பஹூ சாகாக்ய நந்தாச்ச

புத்தயோர் வ்யவசாயினாம் -என்கிறபடியே -நின்றவா நில்லா நெஞ்சினராய்க் கொண்டு  துர்மதங்களை அநு விதாநம் பண்ணுகைக்கு உறுப்பான   அறிவு கேடு குடி கொண்டவர்கள் –

மருள் செறிகையாவது -அறிவு கேடு திரளுகை -சிதைந்து ஓட  -சிம்கத்தை கண்ட ம்ர்கங்கள்
ஓடுமா போலே இவரைக் கண்டு துஷ்ட சமயத்தார் பக்ன ஹ்ருதயராய் வெருவி ஒடும்படியாக –
வந்திப்படியை தொடரும் -பரம பதத்தின் நின்றும் இவ்வளவாக தாமே வந்து -இந்த பூமியில்
அந்த பிரதி பஷங்கள் மேலே படை திரட்டி திரியும் -படி -பூமி-அன்றிக்கே –அவன் பின் படரும் குணன் –
என்கிறபடியே இந்த பூமியில் உள்ளோரை விஷயீ கரிக்கைக்காக அவசரம் பார்த்து தொடர்ந்து திரியும் அவர்
என்னவுமாம் -இராமானுச -எம்பெருமானாரே –மிக்க பண்டிதனே -தேவரீருடைய ஞான பௌ ஷ்கல்யம் இருக்கிறபடி
எங்கனே -என்று ஆச்சர்யப்பட்டு சம்போதிக்கிறார் காணும் -காளகஸ்தியில் நின்றும் சைவர்கள் திருமலை மேல் வந்து
தங்களுடைய துர்மதம் பிரவர்த்தனம் பண்ணத் தொடங்க -அவ்விடத்துக்கு இவர் எழுந்து அருளி
அவர்களை ஜெயிக்க அவர்கள் பக்னராய் ஓடிப் போனார்கள் என்றும் -திரு நாராயண புரத்துக்கு சமீபத்திலே
ஜைனர் இவரோடு பிரசங்கித்து பக்னராய் போனார்கள் என்றும் -அதற்கு பிறகு திக் விஜயமாக
ஆசேது ஹிமாசலம் பர்யந்தம் பிரதிவாதிகளை நாடி பூமிப் பரப்பு எல்லாம் சஞ்சரித்து தம்முடைய
பாண்டியத்தாலே சரஸ்வதி பீடத்திலே இருந்த குத்ருஷ்டிகளை ஜெயித்தார் என்றும் பிரசித்தம் இறே –
இந்த சம்போதனத்தால் -எம்பெருமானாரே எனக்கு ஒரு அபேஷை இருக்கிறது -அத்தை விண்ணப்பம்

செய்கிறேன் என்னும் இடம் இவருக்கு அபிப்ராயமாக தோற்றுகிறதுஅது  என் என்ன -அருளிச் செய்கிறார் – –பிடியைத் தொடரும் களிறன்ன யான் –பிடியின் அளவில் வ்யாமோஹா அதிசயத்தாலே ஒன்றாலும் நிவர்த்திக்க ஒண்ணாதபடி -அத்தையே பின்பற்றி திரியா நின்றுள்ள களிறு போலே -இத்தனை நாளும் விஷயாந்தர ப்ரவனனாய் திரிந்த போட்கனான அடியேன் -அன்றிக்கே -யா ப்ரீதி ரவிவே நா நாம் விஷயேஷ்வநபாய நீ-த்வா மனுச்மரதச்சாமே விஷயான் நாபசர்பது-என்கிறபடி இப்படிப்பட்ட ப்ரீதி பிரகஷ்யத்தை உடையேனாம்படி-அடியேனை கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார் -என்னவுமாம் -பிடியைத் தொடரும் களிறன்ன -என்றது

களிறு என்று சொல்லலாம்படி என்கை -பிடி -பெண் யானை –  களிறு -ஆண் யானை -படி -ஸ்வ பாவம் –
நல்க வேண்டும் -கொடுத்து அருள வேண்டும் -இத்தனை நாளும் இப்படித் திரிந்த நான் இப்போது

உன் பிறங்கிய சீரடியைத் தொடரும்படி

கிளர்ந்து லோகம் எல்லாம் வியாபித்து இருக்கிற பாவனத்வாதி குண கரிஷ்டமான தேவரீர் உடைய
திருவடிகளில் பிராவண்ய அதிசயம் பிறந்து -ஒருநாளும் இடைவிடாதே இருக்கும் ஸ்வ பாவத்தை –
நல்க வேண்டும் -எனக்கு கொடுத்து அருள வேண்டும் -இப்படிப் பட்டவானாக என்னை அனுக்ரகிக்க வேணும்
என்றபடி –பிடியைத் தொடரும் களிறு என்னலாமோ என்னில் -மாதா பிதா யுவதயா -என்று ஆள வந்தார்
அருளிச் செய்கையாலே இப்படி அருளிச் செய்யத் தட்டில்லை இறே-பெருமாள் காட்டுக்கு எழுந்து அருளின பின்பு
சக்கரவத்தி -கௌசல்யையை நினைத்து தன்னுடைய கிலேசத்தால் -எத்தனை கிலேசப்படுகிறாளோ -என்று தானும்
போர நொந்து தன்னை அவள் போஷித்த படியை வர்ணிக்கும் இடத்தில் -யதா யதா ஹி கௌசல்யா தாஸீ வச்ச சகீ  வச-பார்யாவத்பகி நீவச்ச மாத்ர்வச்சோ பதிஷ்டதே -என்று சொன்னான் இறே -ரிஷியும் பிரீதி அதிசயத்தை வெளி இடுகைக்காக
சொன்னால் ஆகையாலே குறை இல்லை –
————————————————————————–
அமுது விருந்து
அவதாரிகை
வினைகள் கழன்ற மையின் கேடு நீங்கினமைகூறப் பட்டது முந்தைய பாசுரத்திலே –தொடர்ந்து விட்டுப் பிரியாது இணைந்து நிற்கும் அன்புடையாம் நன்மை வேண்டப் படுகிறது-இந்தப் பாசுரத்திலே-
பத உரை
அறு சமயச் செடியை -அறு வகைப் பட்ட புறச் சமயங்களாம் தூறு மண்டின இடங்களை
தொடரும் -கைக் கொண்டு அதன் வழியே தொடர்ந்து நிற்கும்
மருள் செறிந்தோர் -அறிவு கேடு குடி கொண்டு இருப்பவர்கள்
சிதைந்து -நிலை குலைந்து
ஓட -வெருவி ஒடும்படியாக
வந்து -அவதாரம் செய்து
இப்படியை-இந்நிலத்தில் உள்ளவர்களை
தொடரும் -தம் சீரிய கொள்கையை ஏற்பதற்கு இடம் ஏற்படும் அளவும் -விடாது தொடர்ந்து சென்று சீர் திருத்தும்
மிக்க பண்டிதன் -மிகுந்த அறிவு வாய்ந்த
இராமானுச-எம்பெருமானாரே
பிடியை -பெண்யானையை
தொடரும் -அது எதிர் விழி கொடாத நிலையிலும் பேராத பேரன்பால் அதனையே பின் தொடர்ந்து திரியும்
களிறு என்ன -ஆண் யானை போலே
யான்-அடியேன்
உன் -தேவரீர் உடைய
பிறங்கிய -பிரகாசிக்கும் தன்மை வாய்ந்த
சீர்-குணங்கள் கொண்ட
அடியை -திருவடியை
தொடரும் -பின் பற்றித் திரியும்
படி -ஸ்வபாவத்தை
நல்க வேண்டும் -தந்து அருள வேண்டும் .
வியாக்யானம் –
பிடியைத் தொடரும் களிறென்ன –
தொடரும் என்னும் சொல்லின் ஆற்றலால் -பிடி எதிர் விழி விழிக்காத நிலையிலும் அதன் மீது
களிறு கொண்ட காதல் -பேராது வேறு எவ்வகையினும் தளராது -நிலை பெற்றமை தோற்றுகிறது .
இவ்வுவமையால் இயல்பானமையின் பேராததும்-எவ்வகையினும் தளராததுமான பேரன்பை
எம்பெருமானார் இடம் அமுதனார் வேண்டினார் ஆயிற்று .
என்ன –என்று சொல்லும்படியாக –இது இங்கே உவமை உருபு
சிலர் களிறன்ன -என்று பாடம் ஓதுவர்-அப்பொழுது அன்ன -என்பது பெயர் எச்சமாய் களிறு போன்றவனான
யான் என்று சொன்னபடியாம் -ஆயின் இங்கு வேண்டும் அடியைத் தொடருகைக்கு உவமானம்-காட்டப்பட்டதாக மாட்டாது -ஆதலின் அது நல்ல பாடம் அன்று என்பர் பெரிய ஜீயர் .
யானுன் பிறங்கிய சீரடியைத் தொடரும்படி நல்க வேண்டும் –
களிற்றினுக்கு காதல் அழகார்ந்த பிடியைக் கண்டதும் உண்டாகியது .
அடியேனுக்கு பேரன்பு -நற்குணம் வாய்ந்த நின் திருமேனியை தேவரீர் காட்டித் தர –அதனை நான்-கண்டதும் உண்டாகும்படி செய்து அருள வேண்டும் -என்று எம்பெருமானாரையே பிரார்த்திக்கிறார் .
அடி -என்பது திரு மேனிக்கு உப லஷணம்-உபமேயத்தில் பிறங்கிய சீர் -என்பதற்கு ஏற்ப-உபமானமான பிடியினிடத்தும் சீர்-அழகு -பிறந்கியதாக கொள்க -பிடியின் சீருடைமை களிற்றுக்கு
கன்ம சம்பந்தத்தாலே தானே தோன்றி காதலை விளைவிக்கும் .அடியின் சீருடைமையோ –
எம்பெருமானார் அருள் இன்றி தோன்றி பேரன்பை விளைவிப்பதற்கு வேறோர் ஹேது இன்மையின்
அவரையே பிரார்த்திக்க வேண்டியது ஆயிற்று -இந்த பிரார்த்தனைக்கு ஏற்ப மேலும் –
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு – .என்னும் பாசுரத்தில் -தமது நெஞ்சை
அனுபவிக்கும் வண்டாகவும்-அடியை அனுபவிக்கப்படும் தாமரை மலராகவும் -அதன் கன் உள்ள-குளிர்ச்சி மென்மை மணங்களை பிறங்கிய சீராகிய தேனாகவும் -அதனை உண்டு அம்மலரிலே-நிரந்தரமாக அமர்ந்திட அவ்வண்டுவந்து அடைந்தது என்று பலித்தமை வருணிக்க பட்டுள்ளமையும் –
இப்பாட்டில் வந்துள்ள களிற்றினுக்கு போலே எவ்வகையிலும் பேராத பேரன்பு பலித்தமை-கையில் கனி என்ன –என்னும் பாசுரத்தில் -உன் தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான் -என்று விளக்க பட்டு உள்ளமை யும் கவனிக்க தக்கது .
சப்தாதி விஷயங்களில் ஏற்படும் பற்று விடுவிக்க ஒண்ணாது இருத்தல் பற்றி
களிற்றின் காதல் போன்ற பேரன்பு தமக்கு வேண்டும் என்கிறார் .ப்ரஹ்லாத ஆழ்வான்
யா ப்ரீதிர  விவேகா நாம் விஷயேஷ்வ நபாயி நீ த்வா மனுச்மர -விஷ்ணு புராணம் -1 20-13 – என்று
பகுத்தறிவு அற்றவர்களுக்கு சப்தாதி விஷயங்களில் எத்தகைய ப்ரீதி நீங்காது உள்ளதோ –அத்தகைய ப்ரீதி உன்னைத் தொடர்ந்து நினைந்த வண்ணம் இருக்கும் என் இதயத்தின் நின்றும்-நீங்காது நிலைத்து இருக்கட்டும் -என்று அச்யுதன் இடத்தில் வேண்டிக் கொண்டால் போலே-அமுதனார் எம்பெருமானார் இடத்தில் வேண்டிக் கொள்கிறார் .
இதனால் தம்மை களிறு போன்றவராகவும் எம்பெருமானாரை பிடி போன்றவராகவும்
கூறுதல் குற்றம் ஆகாது -என்பது உணரத் தக்கது …அன்புடைமைக்கு மட்டும் இவ்வுவமை கொள்ளத் தக்கது .
சேலேய் கண்ணியரும்–அவரே -என்று சர்வேஸ்வரனை அழகிய கண்ணுடைய பெண்டிராக கூறினார்-நம் ஆழ்வார் .–யுவதயா-என்று ஆழ்வாரை  யுவதிகளாக கூறினார் ஆள வந்தார் .
பிறங்கிய சீர்
பிறங்குதல்-பிரகாசித்தல் மிகுதியுமாம்
சீர் -அழகு –மென்மை மணம் முதலிய குணங்களுமாம்
தொடரும் பிடி
தொடருகின்ற ஸ்வபாம்-தொடரும்படி -பெயர் எச்சத் தொடர்
அறு சமயச் செடியைத் தொடரும் மருள் செறிந்தோர் –
வேத நூல் கூறும் உண்மை நெறிக்கு புறம்பான வை யாதலின் -அறு சமயங்களும்
செடிகளாக செப்பப் பட்டன .செடி-தூறு
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை -திருவாய் மொழி -1 5-7 – – என்னும் இடத்தில்
தூறு மண்டின சரீரம் என்று வியாக்யானம் செய்யப் பட்டு இருப்பது காண்க .அறு சமயங்கள் தூறு மண்டிக்
கிடத்தலின் -வழி தெரிந்து நடப்பதற்கு -இடம் இல்லாமல் போயிற்று -தூற்றுள் நின்று வழி திகைத்து –
அலமாந்து நிற்பவர் -இடையிலே வழி காட்ட இருப்பவரை கேட்டறிந்து நல் வழியே நடக்கலாகாதோ –
அங்கனம் செய்யாது -தூறு மண்டின இடத்தில் தமக்கு தோற்றியதையே வழியாக -மருண்டு தொடர்ந்து
செல்லா நிற்பார் -புறச் சமயத்தோர் -அவர்கள் இடம் அவ்வளவு அறிவு கேடு செறிந்து உள்ளது .
அன்னார் தூறு மண்டின இடங்களை செதுக்கி -பண்டைய நன்னெறியை துலக்க எம்பெருமானார் வந்ததும் –
சிதைவுண்டு சிதறி ஓடினர்.அங்கனம் மருள் செறிந்தோர் சிதைந்து ஓடும்படி -அவதரித்தார்
எம்பெருமானார் -என்க –
இப்படியைத் தொடரும் –
படி-ஞாலம்
இப்படியை -இவ்விருள் தருமா ஞாலத்தை என்றபடி
படி என்பது படியில் உள்ளாரை இட ஆகு பெயரால் கூறுகிறது .
அறிவினால் குறைவில்லா அகல் ஞாலத்தவர் -தம் உபதேசத்தால் -அறிவுற்று ஆளாதற்கு இடம் ஏற்படும்
அளவும் –ஞாலத்தவரை விடாது பின் தொடரும் பரம காருணிகர் -எம்பெருமானார் -என்க
அவ் ஒண் பொருள் கொண்டு அவர்பின் படரும் குணன் -36 – என்று கீழே கூறியதை இங்கே நினைவு கூர்க .
இராமானுசன் மிக்க பண்டிதனே –
மருள் செறிந்தோர் எம்பெருமானார் வந்ததும் சிதைந்தோடுதற்கும்-இப்படியை அவர் தொடருவதற்கும்
ஹேது மிக்க பண்டிதராய் இருத்தல் –
பண்டா-அறிவு அஸ்ய -இவருக்கு -சம்ஜாதா -உண்டாயிற்று   இதி -என்பதால் பண்டித என்று
பண்டிதன் என்னும் சொல்லுக்கு வ்யுத்பத்தி கூறுவர்.அறிவு வாய்ந்தவர் என்பது பொருள் .
இங்கே அறிவாவது -அறுசமய செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓடும்படி-செய்ய வல்லயுக்திகளை தோற்றுவிக்கும் சமயோசிதமான நுண்ணறிவு –
அது மிக்கு இருத்தலாவது -அவர்களுள் முரண்பாட்டை ஒருவருக்கு ஒருவர் காட்டி –
உட் பூசல் மூட்டி -சூந்த உபசூந்தர்கள் போலே ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு
மாண்டு ஒழியும்படி -எளிதில் செய்ய வல்ல மதியின் மிக்க கூர்மை-என்க –
எம் இராமானுசன் அவ் எழில் மறையில் சேராதவரை சிதைப்பது அப்போது ஒரு சிந்தை செய்தே -74 -என்று மேலே -இவர் கூறுவதும் காண்க –
இனி படியைத் தொடரும் விஷயத்திலே அறிவுடைமையாவது அவரவர் தகுதிக்கு ஏற்ப –
தம்மை அமைத்துக் கொண்டு -நெஞ்சில் படும்படி உபதேசித்து -அறிவூட்டுகை –
அது மிக்கு இருத்தலாவது அவ்வுபதேசம் பலித்து ஆளாக்கி விஷயீ கரித்தல் என்க –
இராமானுச அடியைத் தொடரும்படி நல்க வேண்டும் என்று கூட்டி முடிக்க –
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தல்

திரு கச்சி நம்பி–இடம் வரதன் நீர் வீசினீர் நான் பேசினேன் இனி  ராமானுஜர் திரு முடி சம்பந்தத்தால் தான் மோஷம்/திரு மால் இரும் சோலையில் அருள பாடு  இட்டு -ஸ்வாமி சம்பந்தம் உடையாரை சொல்ல-பெரிய நம்பி சம்பந்ததார் வராமல் இருக்க-அழகர்  கூட்டு அருளினது போல/-ஸ்வாமி  சம்பந்தம் தான் முக்கியம்/-அதற்க்கு பிரார்த்திக்கிறார் அமுதனார் இங்கு-அநிஷ்டம் தொலைந்தது பார்த்தோம் முன்பு/இஷ்ட பிராப்தி இதில்.-.இஷ்டமான கைங்கர்யத்துக்கு அபேஷிதமான தேவரீர் திரு வடி களை பிரதிக்கிறார்-அதில்  பிராவண்ய- அதிசயத்தை தேவரீர் தாமே தந்து அருள வேணும் என்கிறார்..நேருக்கு நேராக பிரார்த்திக்கிறார்..

ஆண்டாளும்-மாலே மணி வண்ண -ஆலின் இலையாய் அருள் -பிரார்த்தித்தது -போல//மிக்க பண்டிதனே –ராமானுசா -ஞான பொலிவை நினைத்து ஓங்கி குரல் கொடுக்கிறார்../மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்துதூர் மண்டி கிடக்கிற பாஹ்ய ஷட் சமயங்கள்-சாஸ்திர விரோதம்-நீர் நுமது -வேர் முதல் மாய்த்து/அறிவு கேடு குடி கொண்டவர்கள் -சிதைந்து ஓட வைத்தும்-அரு சமய செடியை தொடரும் மருள் செறிந்தோர் சிதைந்து ஓட வந்தீரே-அரு-  ஆறு / அருந்த சமயம் /அனுஷ்டானம் தசை யில்  படுத்தும் சமயங்கள்–ஆட்டை அறுத்தும் தலையை அறுத்து கொடுத்தான்/பசம தாரணம் பூசி  கொண்டு/சிங்கம் கண்ட யானை போல ஓடி போவார்கள்-இப் படி-ஞாலம் -வூர் வூராக போய்-தொடர்ந்து-வந்து ஓட விரட்டி–பிள்ளை  உறங்காவல்லி தாசரை அருளியது போலே எனக்கும் அருள வேண்டும்/பிடி-பெண் யானை..களிறு -ஆண்யானை//பெண் யானை தொடர்ந்து ஆண் யானை போல//விஷயாந்தரம் தேடி போய் இருந்தேன்/யான் உன் சீர் பிறங்கிய –மிகுதியாக ,பிரகாசிக்கும்-அடியை தொடரும் படி-மன்னு மலர் தாள்-நல்க வேண்டும்..மிக பண்டிதன் நீர் தா/ இப் படியை தொடரும்-வழு இலா   அடிமை-பிராவண்யதுடன்-அனுபவ ஜனித ப்ரீதி கார்ய -உந்த -கைங்கர்யம்-/ நல்லோரை விஷயீகரித்தும்-/படி-இட ஆகு பெயர்- படியில் உள்ளோரை தொடர்ந்து.-.இரா மடம் வூட்டுவாரை போல தொடர்வார்/வஸ்து ச்வாபம் அறிந்து-பிரம ரஜசை விரட்ட /பிள்ளை உறங்கா வல்லி தாசரை/ யாதவ பிரகாசரை/ யக்ஜா மூர்த்தி-பல வகைப் பட்ட  முறைகள் கொண்டு அருளி-அர்ஜுனன் விதுரர் குசேலர் இவர்கள் இடம் கண்ணன் காட்டியது போல-/மிக்க பண்டிதன்–அள்ள அள்ள குறை இல்லாத ஞானம் உள்ளவர்–பண்டிதன் இரண்டும் செய்தது – -மிக்க-தொடரும்-நடந்தது என ?.-.தொடர்ந்து போனது சபலம் ஆனது -பாடி கொண்டு இருக்கிறேனே-அவஸ்துவாக இருந்தேன்-.பொருள் என்னும் இவ் உலகம் படைத்தவன்–சபலம் -சோம்பாது பல் உலகம் படைத்து கொண்டு இருக்கிறான்-அவன் பண்டிதன்/ ஸ்வாமி மிக்க பண்டிதன்/

பிடியை தொடரும் களிறு– யாராலும் தடுக்க முடியாது.என்ன- தான் அன்ன பாடம் இல்லை-சீர் -மன்னு மா மலர் தாள்-போல பின்னாட்டி அழகான மென்மையான பிரகாசிக்கும் அடியை/தொடரும் படி நல்க வேண்டும்..மோகத்தால் போகும் பெண் யானை உதாசீனமாய் இருக்கிறது.-என் பெண் யானை என்பதால்- சொரூப கிருத தாஸ்யம் சொல்லப்பட்டது இங்கே-/ குண க்ருபா தாஸ்யம் இல்லை- ராமானுசா நீ ஸ்வாமி என்பதால் வரணும் குணம் நல்லது பண்ணுகிறீர் என்று இல்லை-சேஷத்வம் பிரதானம் -ஞாதுருத்வம் இல்லை என்றார் ஆழ்வான்–சேஷி சேஷன்-எங்கு வைத்தாலும் திண்ணையிலே இருக்க–மாற்றி எழுத சொல்ல/அடி தளம்-என்பதால் ஆழ்வான் மறுக்க -தாமரையாள் சிதை குரைக்குமேல்-போல-இட்ட படி இட்ட இடத்தில் வைத்தாலும் இருக்கணும்/ ஆழ்வானை திண்ணையில் இருக்க சொல்லி இருந்தாரே-பெண் யானை திருஷ்டாந்தமிதனால் தான்-/குறுக்கே  யார் வந்தாலும் திரும்பாது-நம் பெருமாள் திருவடி சேர சொல்வார்கள்-அதை தவிர்த்து சரம பர்வத்தில் நிற்க/திரு வெள்ளறை சோழியனை–எங்கள் ஆழ்வான்-பெயர் கொடுத்தார்-ஸ்ரீ பாஷ்யம் முடித்து கொடுத்ததால்/நடாதூர் அம்மாள் ஆசார்யன்-திரு வெள்ளறையில்  இன்றும் சேவிக்க லாம்-சீர் பிறந்கியது -மாறாது–அத்ரி சீதை- அனுசூயை-ராமன் .குணம் பிரித்து காட்டு பதி விரதம் காட்டி காட்டுகிறேன்/-அது போல் சீர் பிறந்காது..யான் உன் அடியை தொடர்வேன்–நல்க வேண்டும்-பிரார்திகிறாரே இங்கு-கர்மா  நிபந்தனம்-அங்கு- இங்கு தள்ளலை-கிருபை உந்தனும் ஸ்வாமி பின் போக/–கர்மா ஆவது கிருபை ஆவது வேலை செய்யணும்

அதனால் பிரார்த்திக்கிறார் க்ருபைக்கு போந்தது என் நெஞ்சு பொன் வண்டு-போல/களிறு என்று என்னை சொல்லலாம்/அன்ன-பெயர் எச்சம் -அன்ன என்றால்–களிற்றை ஒத்தவன் -என்ன -என்பது –அடியை தொடரும் பிராப்ய விஷயத்துக்கு திருஷ்டாந்தம்-ப்ராவண்ய பிரார்த்தனை அப்ராதன்யம் ஆகும் -அதனால் என்ன என்பதே பாடம்..-பிறங்குதல் –பிரகாசம்/மருள் செறுதல் அறிவு கேடு திரளுகை-ஆறு எனக்கு நின் பாதமே சரணாக  தந்து ஒழிந்தாய்–பிராபக பிரதான பாசுரம் கைங்கர்ய பிரார்த்தனை இங்கு இல்லை-/பட்டருக்கு முன் ஆறு -உபாயம் சரண்- பிராப்யம் என்பர்/எனக்கு எந்த உபாயம் என்று யோசித்து சிறந்த உபாயம் திரு வடி என்று தேர்ந்து  கொடுத்தாய்-பட்டர்/வந்து- சிதைந்து போகவும்74 பேர் சேனை/அவசரம் பார்த்து அருள  திரியும்-வாய்ப்பு கிடைக்குமா -அப்பனுக்கு  சங்கு -ஆழி அளித்து/திரு நாரயண புரம்  காடாகி இருந்ததை நாடாக்கி/செடியார் ஆக்கை அடியாரை சேர்த்தல் தீர்க்கும் திரு மாலே-தூறு மண்டின சம்சாரம் -போல செடி இங்கும்/பிடி என்று எம்பெருமானாரை சொல்வதில் குற்றம் இல்லை-பிடி களிறு பத்னி பர்தா-மாதா பிதா யுவதி-பத்நித்வம் அங்கும் உண்டு/புருஷோத்தமன் சேலேய் கண்ணியரும் – பெரும் செல்வமும் –அழகிய பெண்-ப்ரீதி தோற்ற சொன்னார்/சுமந்த்ரன் திரும்பி வந்ததும்-தசரதன்-கௌசல்யை வருத்தம் அடைவது பற்றி-தாசி தோழி பார்யை சகோதரி போல -என்கிறான்

பிடியை தொடரும் களிறு போல விஷயாந்தரம் தொடர்ந்து போனேன்-அது போல உன் பின்னால்  போக தன்னையே உபமானம் ..பிரகலாதன் சொல்லிய ஸ்லோகம்-படி-ஸ்வாபம்/நல்க வேண்டும்..அடியை தொடரும் படியாக அருள வேண்டும்-.ஆசை பிறந்து இடைவிடாமல் ஏக பக்தி யாக இருக்க அருள வேண்டும்-

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: