அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-62-இருந்தேன் இருவினை பாசம் கழற்றி -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
அறுபத்திரண்டாம் பாட்டு -அவதாரிகை –
தம்முடைய கர்ம சம்பந்தம் அறப் பெறுகையால் வந்த
கார்த்தார்த்த்யத்தை- (-க்ருதார்த்தம் -க்ருத க்ருத்யம் இரண்டையும் சேர்த்து இந்த சப்த பிரயோகம் – )யருளிச் செய்கிறார் –
இருந்தேன் இருவினை பாசம் கழற்றி இன்றி யானிறையும்
வருந்தேன் இனி எம் இராமானுசன் மன்னு மா மலர்த்தாள்
பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப்
பெரும் தேவரைப் பரவும் பெரியோர் தம் கழல் பிடித்தே – -62 –
வியாக்யானம்
நமக்கு நாதரான எம்பெருமானார் உடைய பரஸ்பரம் பொருந்தி -பரம பூஜ்யமாய் –
பரம போக்யமாய் -இருந்துள்ள திருவடிகளில் -சேராத ஸ்வபாவத்தை வுடையரான
துர்மாநிகளுக்கு -ஏக தேசமும் அனுகூல வ்ருத்தி பண்ணாத சூரிசமரான ஸ்ரீ வைஷ்ணவர்களை –

அவர்கள் ஸ்வபாவத்துக்கு தோற்று ஸ்தோத்ரம் பண்ணா நின்று உள்ளமகா பிரபாவரானவர்களுடைய திருவடிகளைப் பற்றி-இன்று புண்ய பாப ரூபத்தாலே உபய விதமாய் இருந்துள்ள கர்ம பாச விநிர்முக்தனாய் -க்ருதக்ருத்யனாய் -நிர்ப்பரனாய் இருந்தேன் .–இப்படி இருந்த நான் இனி அத்யல்பமும் துக்கத்தில் அன்வயியேன்.கர்மம் கிடக்கில் இறே துக்கம் வருவது என்று கருத்து –

அதவா –
பொருந்தா -இத்யாதிக்கு
எம்பெருமானார் திருவடிகளில் சேரோம் என்னும் துர்மாநிகளுக்கு ஆயிரம் பண்ணை
பல் காட்டிலும் ஒரு நன்மையையும் செய்யோம்யென்று இருக்கும் பர தேவதையான பெரிய பெருமாளை –
அந்த ஸ்வபாவத்திலே தோற்று ச்தொத்ரங்களை செய்த மொழியைக் கடக்கும் பெரும் புகழ்ஆனான – 7-கூரத் ஆழ்வான் திருவடிகளைப் பற்றி –
இன்று இருவினைப் பாசம் கழற்றி -இருந்தேன் -என்று
இங்கனே யோஜிக்க்கவுமாம் .
பெரும் தேவனை என்றும் பாடம் சொல்லுவர்
புன்மையினோர்க்கு என்றும் நன்மை செய்யா -என்று பாடமான போது
ஒரு காலத்திலும் ஆநு கூல்யம் பண்ணாத வென்று பொருளாக கடவது.
புன்மையினோர் என்றது -புன்மையை உடையோர் என்றபடி .
புன்மை-பொல்லாங்கு/இன்றியான் என்கிற இடத்தில் அகரத்தின் மேலேறின இகரம் குற்றியலிகரம் ஆகையாலே
உமக்கியான் -என்கிற இடத்தைப் போலே வண்ணம் கெடாமைக்கு கழித்து
பதினேழு எழுத்தாக எண்ணக் கடவது .
பெரியோர் தம் கழல் பிடித்தே இருந்தேன் இரு வினை பாசம் கழற்றி -அந்வயம் –
மன்னி -ரக்ஷிப்பத்தில் திண்ணிய உறுதி –திண் கழல் -மன்னு மா மலர்த் தாள் -இவ்வளவு விசேஷணங்கள்
பெரும் தேவர் -நித்ய சூரிகள் /அரங்கன் என்றுமாம் -விண்ணாடு தான் அளிக்க வேண்டாதவன் தன் குருவை அடையாதவர்களுக்கு -நன்மை செய்யா பேறும் தேவர் –
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை -கீழ்ப் பாட்டிலே-சமஸ்த கல்யாண குணாத் மகரான எம்பெருமானார் -தம்மைப்
பெற வேண்டும் என்று தேடித் திரிந்த படியையும் –   அவர் நிர்ஹேதுகமாக தம்மை அடிமை கொண்ட பின்பு –
அவர் தம்முடைய கல்யாண குணங்கள் நிறம் பெற்ற படியையும் -அருளிச் செய்து -இதிலே –
எம்பெருமானார் பர்யந்தமும் அல்ல -அவருடைய தாஸ்யத்தை பண்ணிக் கொண்டு போரும் அவர்களுடைய
பர்யந்தமும் அல்ல -தம்முடைய தாஸ்யம் -என்று துர்மாநிகளாகக் கொண்டு வன் நெஞ்சரான
ஆத்மா அபஹாரிகளுக்கு வ்யதிரேக முகேன தாஸ்யத்தை பண்ணுமவர்களுடைய சம்பந்தத்தால்
அவர்க்கு உண்டான கார்த்தார்த்த்யத்தை –(க்ருதார்த்தம் -க்ருத க்ருத்யம் இரண்டையும் சேர்த்து இந்த சப்த பிரயோகம் யருளிச் செய்கிறார் -)
வியாக்யானம் -எம் இராமானுசன் -தஸ்மின் ராமானுஜார்யே குருரிதி சபதம்பாதி -என்றும்
ஸ்ரீ மத் குருணாம்  குலமிதமகிலம் தஸ்ய நாதஸ்ய சேஷ -என்கிறபடியே -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு எல்லாம் சேஷியான
எம்பெருமானாருடைய –மன்னு மா  மலர்த்தாள் -மன்னுகையாவது -ஸ்வா ஸ்ரீ தர ரஷணத்திலே தீஷித்து நிச்சலமாய் இருக்காய் –
திண் கழல் -என்னுமா போலே -புஷ்பத்துக்கு மகத்துவமாவது -காந்தி சௌகுமார்யா   லவ்ரப்ய பாவனத்வாதி குண விசிஷ்டதை –
இப்படிப் பட்ட பாவனத்வ போக்யத்வங்களை உடையவனாய் புஷ்ப ஹாச சுகுமாரமான திருவடிகளை –
சீராரும் எதிராசர் திருவடிகள் -என்றும் அழகாரும் எதிராசர் அடி இணைகள் -என்றும் ஸ்லாக்கிக்கப்பட்ட திருவடிகள்

என்றபடி –பொருந்தாத நிலை வுடைப் புன்மையினோர்க்கு -மர்க்கட முஷ்டியைப் போலே மூர்க்கித்து நின்ற-வந்து ஆஸ்ரியாதபடியான துஸ் ஸ்வா பத்தை உடைய துர்மாநிகளுக்கு -ஒன்றும் நன்மை செய்யா -ஸ்வ ல்பமானாலும்அவர்களுக்கு ஹிதமாய் இருப்பதொரு பிரயோஜனம் கல்ப்பியாது இருக்கிற –பெரும் தேவரை –தேவரை -பிரம ருத்ராதிகள் –பெரும் தேவர் -யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்திதேவா – என்கிற நித்ய சூரிகள் -தத் தாசபூதரான திவ்யசூரிகள் -என்னவுமாம் –

பரவும் பெரியோர் தம் -மாத பிதாயுவதய -என்கிற ஸ்லோகத்திலும் -பூதம் சரஸ்ஸ-என்கிற ஸ்லோகத்திலும் சொல்லுகிறபடியே -அவர்களை சர்வ காலத்திலும் சர்வ பிரகாரத்தாலும்    ஸ்தோத்ரம் பண்ணிக் கொண்டு போருமவர்களுடைய பெரியோர் -பெருமை ஞானத்தாலே யாகையாலே-ஞான பிரதானமாய் இறே பெருமை இருப்பது -மொழியைக் கடக்கும் பெரும் புகழ் கொண்ட    கூரத் ஆழ்வான்-முதலான முதலிகளுடைய  – கழல் பிடித்து -திருவடிகளை ஆஸ்ரயித்து -என்கையாலே –இராமானுஜன்மன்னு மா லார்த்தாள்-பொருந்தா நிலை உடைப் புன்மையினோர்க்கு என்றும் நன்மை செய்யாத பெரும் தேவர் என்று பெரிய பெருமாளையும் –பரவும் பெரியோர் என்று பராங்குச பரகாலாதிகளையும் சொல்லவுமாம் –அன்றிக்கே –பெரும் தேவர் என்ற இத்தைஎம்பெருமானார் இடத்திலே ஒதுக்கி –பரவும் பெரியோர் தம் கழல் பிடித்து -என்று த்வேத்  தாச தாச சரமாவதியானதாச்யத்திலே ஊன்றி இருக்கிற அத்யாவச்யத்தை சொல்லவுமாம்புன்மையினோர்க்கு என்றும் நன்மை செய்யா -என்ற பாடம் ஆன போது -அவர்களுக்கு ஒரு காலத்திலும் ஆநு கூல்யம் பண்ணாத -என்று பொருளாக கடவது –

புன்மையினோர் என்றது புன்மையை உடையோர் என்றபடி –புன்மை -பொல்லாங்கு -பெரும் தேவனை -என்றும்
பாடம் சொல்லுவார்கள் -இப்படியான போது –இருந்தேன் இருவினை பாசம் கழற்றி -புண்ய பாப ரூபேண இரண்டு-வகைப் பட்டு இருக்கிற கர்மமாகிற பிராப்ய பிரதிபந்தகமான பாசத்தை கடந்து இருந்தேன் -பந்த ஹேதுவாகையாலே
பிராப்தி பந்தகமாகிறது -சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று அவன் சொன்னதே நமக்கு பிராப்தமாய்-இருந்தது என்றபடி -இன்று யான் இறையும் வருந்தேன் இனி -இப்போது நான் ஷண மாத்ரமானாலும்
சம்சார துக்கத்தால் கிலேசப்பட கடவேன் அல்லேன் -அத்சாவ ஸ்ரீ ரெங்கே சுகமாஸ்வ -என்றபடி-சம்சார வெக்காயம் ஒரு ஷண மாத்ரமும் தட்டாதே சர்வதா ஆனந்த ரச அனுபவத்தோடு-இருக்கக் கடவேன் என்றது ஆய்த்து –
————————————————————————–
அமுது விருந்து
அவதாரிகை
இருவினையும் இன்றிப் போக பெறுகையால் தனக்கு வந்த கிருதார்த்தத்தை -பயன் அடைந்தமையை –அருளிச் செய்கிறார் .
பத உரை
எம் இராமானுசன் -எங்கள் ஸ்வாமியான எம்பெருமானார் உடைய
மன்னு மா மலர்த்தாள் -ஒன்றுக்கு ஓன்று பொருந்துவதும் -சீரியதும்-அனுபவிக்கத் தக்கதும் -ஆன திருவடியில்
பொருந்தாத -சேராத
நிலை உடை-ஸ்வபாவம்  வாய்ந்த
புன்மையினோர்க்கு -அஹங்கார தோஷம் உள்ளவர்களுக்கு
ஒன்றும் -சிறிதும்
நன்மை செய்யா -அநு கூலம் புரியாத
பெரும் தேவரை -பெரிய தேவர்களான நித்ய சூரிகளுக்கு நிகரான ஸ்ரீ வைஷ்ணவர்களை
பரவும் -துதிக்கும்
பெரியோர் தம் -மகான்களினுடைய
கழல் பிடித்து -திருவடிகளைப் பற்றி
இன்று -இப்பொழுது
யான்-நான்
இரு வினை -புண்யம் பாவம் என்றும் இருவகைப்பட்ட கர்மங்கள் ஆகிற
பாசம்-கயிற்றினாவாகிய கட்டுதல்
கழற்றி -விடுபடச் செய்து
இருந்தேன் -செய்ய வேண்டிய கடமை தீரப் பெற்றவனாய் நிம்மதியாய் இருந்தேன்
யான்-இங்கனம் க்ருதக்ருத்யனான நான்
இனி -இனிமேல்
இறை-சிறிதும்
வருந்தேன் -வருத்தத்திற்கு ஹேதுவாகிய கர்ம சம்பந்தம் இல்லாமையின் வருந்த மாட்டேன் .
வியாக்யானம் .
இருந்தேன் –இன்று
இருந்தேன் -செய்ய வேண்டியவற்றை செய்து முடிதவனாய் –க்ருதக்ருத்யனாய்இருந்தேன்
பேற்றினைப் பெறுவதற்காக இவர் புரிய வேண்டிய செயல் யாது ஒன்றும் இல்லாமையின்
செயலற இருந்தேன்  என்கிறார் .எம்பெருமானார் சம்பந்தம் வாய்ந்த பெரியோர் தம் கழல்-பிடித்த பின் பேற்றுக்கு செய்ய வேண்டியது யாது ஒன்றும் இல்லாதாயிற்று .
எம்பெருமான் பொது நின்ற பொன்  அம் கழல் அன்றி
அவன் அடியார் தம் கழல் பிடித்தால் அக் கழல்கள் முழு வினைகள் கழலுவதற்கு உபாயமாம் .
எம்பெருமானார் அன்றி அவர் அடியார் தம் கழல் பிடித்தாலோ –அவை இருவினை கழலுவதற்கு-திண்ணியவைகளான பரி பூர்ண உபாயமாம் .
அத்தகைய உபாயம் கைப் புகுந்து  இருத்தலின் –இரு வினை பாசம் கழற்றி-என்கிறார் .
பேற்றினை பெறுவதற்கு இடையூறாக புகுந்த –இரு வினைகள்-கழன்ற பின் செயற் பாலது
யாதொன்றும் இல்லை யன்றோ -அதனால் க்ருத்க்ருத்யன் -செய்ய வேண்டியதை செய்து முடித்தவன் –
ஆகி விட்டேன்-என்கிறார் .பிடித்தது பெரியோர் தம் கழல் ஆதலின் பெறப் போகும்
பேறும் அதுவே ஆயிற்று ..ஆகவே உபாயமும் உபேயமும் ஒன்றே யாயின -பரிபூரணமான
உபாயம் ஆதலின் பெரியோர் தம் கழல் அமுதனாரை க்ருத க்ருத்யர் ஆக்கிற்று  .அப் பெரியோர்
கழலே பரி பூரணமான உபேயமும் ஆதலின் அவரை க்ருதார்த்தர் ஆகவும் ஆக்கியது -என்று உணர்க –
உபாயத்வ பூர்த்தி  க்ருத க்ருத்யதுக்கு பிரயோஜனம் என்று பகுத்து அறிக –இனி செய்ய வேண்டியது எதுவும்
 இல்லாமையின் –பேறு தப்பாது என்று ஐயம் அற துணிந்து -தெளிந்து நிற்றல் க்ருதக்ருத்யத்வம் -என்க .
அதஸ்த்வம் தவ தத்வதோ மத ஜ்ஞான தர்சன ப்ராப்தி ஷூ நிச்சம்சயஸ்  சுகமாஸ்வ -என்று
ஆதலின் நீ உண்மையாக என்னைப் பற்றிய அறிவிலும் -காண்டலிலும்-அடைதலிலும்-

ஐயம் அற்றவனாய் சுகமாய் இரு -என்று சரணா கதி கத்யத்தில் எம்பெருமான் திரு வாக்காக இந்த க்ருத்க்ருத்யத்வமே-பேசி முடிக்கப் படுகிறது -சரம ஸ்லோகத்தில் சரண் ஏற்ற எம்பெருமான் -மாசுச -கவலைப்படாதே – என்பதற்கும் இந்த க்ருத்க்ருத்யத்வமே பொருளாம் .முன்பு சோகம் அடைந்தவனைப் பாபங்கள்-அனைத்தினின்றும் உன்னை நான் விடுவிப்பதனால் சோகம் அடைய வேண்டாம் என்பதனால்-க்ருதக்ருத்யனாய் இரு என்பதே கண்ணனுடைய கருத்தாம் .

இருவினை -புண்ணியம் பாபம் என்னும் இரண்டு வகைப்பட்ட கன்மங்கள்
அத்தகைய கன்மங்களை பாசமாக உருவகம் செய்கிறார் –
பல செய்வினை வன் கயிற்றால்-திருவாய் மொழி – 5-1 5- -என்றார் நம் ஆழ்வாரும் .
கழற்றி -என்றமையால் கன்ம பாசத்தின் நின்றும் விடுதலை பெறுதலின் அருமையின்மை தோற்றுகிறது .
தன்னாலும் பிறராலும் செய்ய ஒண்ணாதவை பெரியோர் தம் கழல் பிடித்த மாதரத்தில் கழன்றன –
அசக்ய விச்ரம் சனகர்ம பாசப்ரக்ரதித-என்று -யாவர்க்கும் அவிழ்க்க ஒண்ணாத கன்மம் என்னும் கயிற்றினால்
நன்கு கட்டப்பட்டவன் -என்று கத்யத்திலே எம்பெருமானார் அருளி செய்தது -ஏனையோருக்கு அன்றி –
எம்பெருமானுக்கும் -சரம பர்வமான எம்பெருமானாருக்கும் -அவர்களை சார்ந்த அடியார்களுக்கும் –
ஆகாத ஓன்று அன்று -என்று அறிக –
பசவ பாசிதா பூர்வம் பரமேன ஸ்வ லீலயா தேனைவ மோசநீ யாஸ்தே நான்யைர் மோசயிதும் ஷமா -என்று
பரம புருஷனாலே விளையாட்டாக ஜீவாத்மாக்கள் கன்ம பாசத்தினால் பசுக்கள் கயிற்றினால் கட்டப் படுவது
போலக் கட்டப் படுகிறார்கள் .அவனாலேயே விடுவிக்க படத்தக்கவர்களாய் உள்ளனர் -பிறரால் விடுவிக்க
பட தக்கவர்கள் அல்லர் -என்னும் பிரமாணம் காண்க -எம்பெருமான் வல்லவன் ஆதலானும்
பெரியோர் அவனை தன் வசத்திலே கொண்டு உள்ளமையானும்

இருவினைப் பாசம் கழற்றுவது அரியது அல்லதாயிற்று -என்க .

இனி இறையும் வருந்தேன்
இருவினை பாசமும் கழன்று போய் விட்டன வாதலின் இனி வருந்துவதற்கு இடமில்லை .
காரணமாக கர்மம் இருந்தால் அன்றோ அதன் விளைவான வருத்தம்வருவது என்பது கருத்து .
யான் இன்று பாசம் கழற்றி இருந்தேன் -இனி இறையும் வருந்தேன் -என்று இயைக்க
-யான் என்பதை முன்னும் பின்னும் கூட்டுக .
எம் இராமானுசன்–பிடித்து
பெரும் தேவர் -நித்ய சூரிகள்
பெரும் தேவர் குழாம்கள் பிதற்றும் பிரான் பரன்-திருவாய் மொழி -9 3-4 – – என்னும்
நம் ஆழ்வார் ஸ்ரீ சூக்தி காண்க .இங்கு இச் சொல் உவமை யாகு பெயராய் நித்ய சூரிகள் போல்வாரான
ஸ்ரீ வைஷ்ணவர்களை சொல்லுகிறது .ஸ்ரீ வைஷ்ணவர்கள் நன்மை ஒன்றும் செய்யாமைக்கு ஹேது
இரக்கம் இல்லாமை யன்று -எங்கனம் நன்மை செய்யினும் திருத்தகிலாத புன்மை வுடைமையே
 அதற்கு ஹேது என்பார் –பொருந்தா நிலைவுடைப் புன்மையினோர் -என்றார் .
இது கருத்துடை அடை கொளிஅணி -பரிகராங்குராலன்காரம் –
பெரும் தேவர் செய்யும் நன்மை உத்தாரக ஆசார்யராகிய எம்பெருமானார் உடைய சீரிய திருவடிகளை
சிந்தனையில் பதிப்பதே -எம்பெருமானார் திருவடிகளையே தஞ்சமாக காட்டி கொடுப்பது தான்

பெரும் தேவர் செய்யும் நன்மை-அத்திருவடிகள் ஒன்றோடு ஓன்று பொருந்தி வழி படத் தக்கனவாய் அமைந்த புனித தன்மையை-காட்டினாலும் -புன்மை உடைமை இயல்பாய் நீங்காது நிலை பெற்று இருத்தலின் சிறிதும் நெஞ்சிலே-படுவது இல்லை -இனி அத திரு வடிகளின் மலர் போல் விரும்பத்தக்க போக்யதையை உணர்த்தினாலும்-புன்மையினோர் புத்திக்கு சிறிதும் அது புலனாவது இல்லை . பூஜ்யதையையும்  -போக்யதையும் வலிந்து-காட்டினும் -ஊட்டினும் பொருந்தாமை நிலை பெற்ற பின்பு பெரும் தேவரும் நன்மை ஒன்றும் செய்ய-இயலாததன்றோ -அத்தகைய ஸ்ரீ வைஷ்ணவர்களைப் பரவும் பெரியோர் கழல் பிடித்துக் க்ருத்க்ருத்யனானேன்-என்கிறார் .

இனி பெரும் தேவர் என்பதற்கு பெரிய பெருமாள் என்று பொருள் கொண்டு உரைத்தலுமாம் .
அப்பொழுது இயல்பான ஆசார்யத்வம் வாய்ந்த எம்பெருமானார் திருவடிகளில் பொருந்தாத நிலை வுடைய
புன்மையினோர் எவ்வளவு இரங்கத் தக்க நிலையில் பல்லைக் காட்டிக் கெஞ்சினாலும் அன்னாருக்கு ஒரு
நன்மையையும் செய்யோம் என்று இருக்கும் பர தேவதையான பெரிய பெருமாள் -என்றது ஆயிற்று .
இயல்பான ஆசார்ய தன்மை வாய்ந்த எம்பெருமானார் சம்பந்தம் இல்லாவிடில் -அடிகளில் விழுந்து
கெஞ்சிப் பல் இளித்தாலும்அரங்கன் சிறிதும் அருள் புரிந்து -நன்மை ஒன்றும் செய்ய மாட்டான் -என்க –
நாராயணோ பிவிக்ருதிம் யாதி குரோ பிரச்யுதச்ய துர்புத்தே கமலம் ஜலாதபேதம் சோஷ யதி ரவிர் ந போஷயதி –
என்று நாராயணனும் ஆசார்ய சம்பந்தம் அற்ற மதிகேடன் விஷயத்தில் மாறு படுகிறான் .சூரியன் நீர்-சம்பந்தம் அற்ற தாமரையை உலர்த்துகிறான் ..மலர்த்துவதில்லை -என்னும் பிரமாணம் காண்க .
அத்தகைய பெரிய பெருமாளைப் பரவும் பெரியோர் என்பது -என்பது -மொழியைக் கடக்கும் பெரும் புகழ் படைத்த
கூரத் ஆழ்வானை-ராமானுச சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஒன்றும் நன்மை செய்யாத
ஸ்வபாவத்திலே தோற்று பெரிய பெருமானை கூரத் ஆழ்வான் பரவுகின்றார் என்க
அவர் திருவடியை ஆஸ்ரயித்து-என்றபடி..
என்றும் நன்மை செய்யா -என்றும் பாடம் உண்டு ..
பெரியோர் தம் கழல் பிடித்து இருவினைப் பாசம் கழற்றி இருந்தேன் –
.இனி இறையும் வருந்தேன்  .-என்று கூட்டி முடிக்க .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது .

தம் உடைய கர்ம சம்பந்தம் அறப் பெறுகையால் வந்த க்ருத்த்யார்த்தை  அருளி செய்கிறார்/நித்ய சூரிகள் அம்சம் ஆக பிறந்த ஆழ்வார்களோ நிலா தேவர்களோ-ஸ்வாமி தாள் பொருந்தா நிலை உடை புன்மை யினோர்க்கு ஒன்றும் நன்மை செய்ய மாட்டார்கள்/ அந்த பெரும் தேவரை பரவும் பெரியோர்-ஆழ்வான்  போல்வார்

-அவர்கள் கழல்கள் பிடித்தே -இரு வினை பாசம் கழற்றி -இருந்தேன்- செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டேன் ஆனேன்-கிருத க்ருத்யன் ஆனேன் /கிருதார்தாக -உபாயம் ஆக செய்ய வேண்டியதை செய்து-பிராப்யமும் /பூர்ண பிராப்யமும் பிராபகமும் பெரியோர் கழல்கள் பிடிப்பதே/தொழுது எழு-ஒரே வேலை தொழுவதே –உபாயமும் பிராபகமும் போல.

.பிடித்தே -ஏ காரம்-இருவினை கழற்றி- வேறு ஒன்றை பிடிக்காமல்–சத்தாகவே ஒன்றாகவே இரண்டாவது இல்லாமல் இருந்தது போல/-உபாய உபே யமும் இதுவே /கர்மம் போனதால் துன்பம் தானாவே விலகிற்று-/பெரியோர் தம் கழல் பிடித்ததே நோக்கம் இவருக்கு …பிடித்த படியால்– பிடித்தே -வேறு ஒன்றாலும் போகாது இதை பிடித்தால் தான் போகும்.பெரிய பெருமாள் திருவடி பந்த மோஷம் இரண்டுக்கும்..-ஸ்வாமி  அடியார்கள் திருவடியோ மோஷம் ஒன்றுக்கே என்றும் காட்டுகிறார்..–கீழே கீழ போக தான் உயர்ந்த ஸ்தானம் என்கிறார்.

./நாத முனிகளை பார்த்து அருள வேண்டும் என்கிறார் ஆள வந்தார்–தண்ணியன் பார்க்காதே -.இப்படி மட்டும் இல்லை-வைபவம் தனக்கு இருந்தால்  கூட என் பிதாமகர் ,நாத முனி பார்த்து கொடுக்க வேண்டாமா-கர்ம ஞான பக்தி யோகம் எல்லாம் இருக்கு -அதை பார்க்காதே நாத முனியை பார்த்து அருள வேண்டும்..அது போல தாழ்ந்த கழல் பிடித்து பெற்றேன் இல்லை எனபது இல்லை

.. இதை -உயர்ந்த -பிடித்தே தான் பெற்றேன்..மாசுச அர்த்தம் காட்டுகிறார் இதில்..தனி சரமம்-சர்வ தர்மம் -சோக படாதே- மாசுஸ-சரணம் பண்ணினால் போதும் மாசுச இருந்த இடத்திலே மாசுச ..அப்படி ஒவ் ஒன்றிலும் சேர்த்து அருளி இருக்கிறார்–தன் அடியே பாபங்கள்  விட்டு போகும் ஒன்பது அர்த்தம்-ஒன்றும் எதிர் பார்க்க மாட்டான்-செய்வதற்கு ஒன்றும் இல்லை-கிருத கிருத்தியம் இது ஒன்றே –கழல்களை புத்தியால் பிடிப்பதே/இருந்தேன்- உயிர் ஆன வாக்கியம்-வாளா இருந்தேன் ..நாதரான எம்பெருமானார் அடியார் திருவடிகளை -பரஸ்பரம் பொருந்தி-மா- -பரம  பூஜ்யமாய்,-மலர்-பரம போக்யமாய் இருந்துள்ள திருவடிகள்-உபாய உபேயமான/திரு கமல பாதம்..பாவனத்வ போக்யத்வம்–இவற்றில்  சேராத நிலை- ச்வாபம் -உடைய

துர் மாநிகளுக்கு -நேராக பெருமாளை பற்றினவர்களை-ஸ்வாமி இருந்த காலத்திலே இப்படி இருந்து இருக்கிறார்கள்-/அப்படி பட்டவர் உடன் அனுகூல விருத்தி வைக்காதவர்கள்..ஸ்வாமி திருவடி -குருவி தலையில் பனம்  காய் தாங்காது-எல்லாரும் அவர் திருவடி காட்டியே இருப்பார்கள்/சூரி சமரான ஸ்ரீ வைஷ்ணவர்கள்-பெரும் தேவர்

–திருவடி களை ஸ்தோத்ரம் பண்ணுவார்கள்/என்றும் நன்மை செய்யாத அந்த ச்வாபத்தை பரவும்-ஸ்வாமி திருவடி பற்றாத எவரையும் -ராவணன் விட மோசமானவர்கள் இவர்கள்-பற்ற கூடாது/ஆர்த்தி பிரபந்தம்-பாசுரம்

-ராமானுசாயா நம  என்று சிந்தித்து-இரா மனிசர்கள் உடன் இறை பொழுதும்-சேராத தன்மை கொடு-மா முனிகள்-/நன்மையால் மிக்கவர்கள் என்பதால் நான் மறையாளர்கள் போல-அன்யோன்ய ஆஸ்ரமம்-/1-பொது நின்ற பொன் அம் கழல் அரங்கன் உடையது / 2-முழு வினை மாள்விக்கும் உபாயம் கழல்  ஸ்வாமி உடையது /3-பரி பூர்ண உபாய உபேய  கழல்கள்-ஸ்வாமி அடியார்கள் உடையது /-என்னையும் என் உடமையும் உன் சக்கர பொறியில் ஒற்றி கொண்டேன் /-நாராயணனே நமக்கே பறை தருவான் /இறையும் வருந்தேன்-கொஞ்சம் கூட வருந்த  மாட்டேன் கொஞ்சம் வினாடி கூட //கர்மம் போனதால் துக்கமும் போகும். ./பெரும் தேவர்-பெரிய பெருமாளும் ஒரு நன்மை செய்ய மாட்டார்/ ஆயிரம் இளித்து காட்டினாலும் ஒன்றும் நன்மை செய்ய மாட்டார் /பரவும் பெரியோர்- அந்த  நிச்சய ச்வாபத்தை நினைத்து -பரவும் பெரியோர்- ஆழ்வான் போல்வார் / திருவடி பற்றிய அன்றே -அப் பொழுதே இருவினை பாசம் கழிந்தேன்.. /போனகம்செய்த அன்றே புனிதன் போல../ /பெரும் தேவனை என்றும் பாடம் /பிரமாதாவுக்கு ஆழ்வார் -அர் விகுதி– பெருமாளுக்கு அன் விகுதி தான் /புன்மை யினோர்க்கு என்றும் நன்மை செய்யா /புன்மையினோர்க்கு ஓன்று நன்மை செய்யா -இரண்டு பாடம்

/ராவணன் தான் உடலை வெட்டினாலும் காலில் விழாது–குரங்கு முஷ்ட்டி வளையாது போல மூர்ச்சித்து  நிற்கும்–அப்படிப் பட்ட புன்மையினோர் -புன்மை-பொல்லாங்கு /ஆத்மா அபகாரிகள்-எற்றைக்கும் எழ  எழு பிறவிக்கும் நன்மை செய்ய மாட்டார்கள்/-ராமானுஜருக்கு தான் ஆத்மா சேஷம்/அந்ய சேஷத்வம் கழிவதே பகவத் சேஷத்வம் விட பிரதானம்/மற்று ஓர் தெய்வம் உளது என்பார் உடன் ஒற்றிலேன்//குரு சப்தம்-இருட்டை போக்குவான்- பிரகாசிப்பது ஸ்வாமி இடம் தான்/குரு பரம்பரை -சேஷி யாகும் ஸ்வாமி சேஷத்வம் காட்டி சேஷி ஆனார்/ரஷிப்பதிலே தீஷை கொண்டு இருக்கும் ஸ்வாமி-மன்னி இருக்கும்-ஒரு திருவடி கீழ் வைத்து மேல் வைக்கணும் அவனுக்கு சுவாமிக்கு ரஷிக்க –மன்னி இருந்தால் போதும்..சென்று கொன்று – வீரனார் சென்று இலங்கை செற்ற  திருவடியும் சலம் தான் அசலம் இல்லை/ஓர் அடியும் சாடு உதைத்த ஒண் மலர் சேவடி—சஞ்சலமான திருவடிகள் ராமன் கண்ணன் திருவிக்ரமன் திருவடிகள் -ஸ்வாமி மன்னி -உபாய உபேய சங்கை இல்லாமல் — –நிஸ்ஸலமாக திண்மை –ஸ்வாமி திருவடியில் தான் உபாய உபேய நிச்சயம்- அமர்ந்த திரு கோலம்-திண் கழல்/புஷ்பத்துக்கு மா விசேஷணம்-காந்தி -ஒளி-சொவ்குமார்யம் மிருது/சௌரப்யம்- நறு மணம் பாவனத்வம் சுத்தம் / /சீர் ஆரும் எதிராசர் திருவடிகள் வாழியே /பற்பம்  என திகழ் பைம் கழல் உந்தன் பல்லவமே விரலும்-பாவனமாகிய பைம் துவராடை பருந்த மருங்கு அழகும்-முப்புரி நூல்  தன்னோடு முன் கையில் ஏந்திய முக்கோல் தான் அழகும்-சேவித்து இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் -கோஷிக்கிறாரே எம்பார்

/பெரும் தேவரை– நித்யர்-தேவர் பிரம்மா ருத்ரர்/அம்சமாகிய ஸ்ரீ வைஷ்ணவர்கள் / ஆழ்வார்கள்/ பரவும் பெரியோர்-மாதா பிதா ஸ்தோத்ரம் போல/ஆழ்வார் பாசுரங்கள் தங்க ஸ்வாமி திருவடி பற்றனும்  -தனியன்

/பூதம்.  பட்ட நாத ஸ்ரீ பக்திசார குலசேகர ..ஆண்டாளுக்கு ஸ்ரீ/சர்வ காலத்திலும் சர்வ பிரகாரத்திலும்-ஞானம் தருவதே பெருமை -மொழியை கடக்கும் பெரும் புகழ் -ஆழ்வான் போல்வார்-கழல் பிடித்தே -இருந்தேன்–/பெரும் தேவர்-ராமானுசர்/நன்மை செய்யா பெரியோர் -என்றும் கொள்ளலாம்/பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் /இடையன் கண்ணன் கயிறு கர்மா ஜீவாத்மா பசு / அவனால் தான் அவிழ்த்து விட முடியும். /கழற்றி-இரு வினையை முடிக்க கஷ்டம் இப் பொழுது அருமை இன்மை கழல் பிடித்த பின்பு சுலபமாக கழித்ததை சொல்கிறார். .கர்மா -பந்த ஹேது/-பிறவி கொடுத்து மோஷத்துக்கு பிரதி பந்தகம்..இன்று இறையும் வருந்தேன் யான்-சம்சார துக்கத்தாலே கிலேசம் பட மாட்டேன் / சர்வதா ஆனந்தம் – எந்தை எதிராசர்க்கு கொடுத்த வரம் இனிதாக-ஸ்ரீ ரங்கத்தில் துவயம் அனுசந்தித்து கொண்டு  வர்த்திக்க கடவோம்.

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: