அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-61-கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –
அறுபத்தோராம் பாட்டு -அவதாரிகை
குணம் திகழ் கொண்டல்-என்று இவருடைய குணத்தை ச்லாகித்தீர் –
இவர் தம்முடைய குணா வைபவம் இருக்குபடி என் -என்ன –
அது இருக்கும்படியை அருளிச் செய்கிறார் –
கொழுந்து விட்டோடிப் படரும் வெங்கோள் வினையால் நிரயத்
தழுந்தி யிட்டேனை வந்தாட் கொண்ட  பின்னும் அரு முனிவர்
தொழும் தவத்தோன் எம் இராமானுசன் தன புகழ் சுடர்மிக்கு
எழுந்தது அத்தால் நல்லதிசயம் கண்ட திரு நிலமே – 61- –
சமஹாத்மா சூதுர்லாபா -கீதை – 7-19 – என்கிறபடியே எம்பெருமானுக்கும் பெறுதற்கு  அரியவர் களாய்
வாசுதேவஸ் சர்வம் – கீதை -7 19- -என்கிறபடியே அவனே நமக்கு சகலமும் என்று மனனம் பண்ணிக் கொண்டு
இருக்குமவர்களே தம் திருவடிகளில் வந்து வணங்கும் படி இருப்பாராய் –
பிரபத்தி யாகிற மகா தபஸ்ஸை உடையவராய் –
எனக்கு ஸ்வாமியான-எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள்
மேன்மேலும் தலைப் பெற்று சீகர கதியாய் கொண்டு விஸ்த்ருதமாக நிற்பதாய்
க்ரூரமாய் -பிரபலமாய் இருந்துள்ள கர்மங்களாலே -மற்றை நரகம் -திரு வாய் மொழி – 8-1 9- – என்னும்படி-வானுயர் இன்பத்துக்கு -திருவாய் மொழி – 8-1 9- -எதிர் தட்டாய்-அநந்தக்லேச பாஜனமான சம்சாரத்திலே நிமக்நனாய்
விட்ட என்னை -நான் கிடக்கிற ஸ்த்தலத்திலே வந்து -அடிமை யாக்கிக் கொண்ட பின்பும் -அவ்வளவிலே பர்யவசியாதே -என்னை அங்கீகரிக்கையால் வந்த நிரவதிக தேஜஸ் சோடே-இன்னமும் இப்படி நமக்கு விஷயீ கரிக்கல் ஆவாரோ என்று -மாத்ருசரைத் தேடிக் கிளர்ந்தது –
அத்தாலே மகா ப்ருதிவி யானது நல்லதோர் அதிசயம் கண்டது .
இது எம்பெருமானாருடைய குண வைபவம் இருக்கும்படி என்று கருத்து .
அன்றிக்கே
இராமானுசன் தன் புகழ் சுடர் மிக்கு எழுந்தது என்றதுக்கு
பாபிஷ்டனான என்னை அடிமை கொண்ட பின்பும் தேஜஸ் குன்றாது இருக்கிற மாத்ரம் அன்றிக்கே -நிரதிசய தேஜசை உடைத்தாய் தோற்றிற்று என்று பொருளாகவுமாம் .-
அப்போதைக்கு எழுதல்-தோற்றுதல் /இராமானுசன் தொல் புகழ்-என்று பாடம் ஆகில் –
தொன்மை-பழமை ஆகையாலே -ஸ்வரூப அனுபந்தியாய்-பழையதாய் -பொறுக்கிற குணங்கள்-இப்படி செய்தது -என்க -/ கொழுந்து விடுவதாவது -வர்த்தித்து செல்லுகை –வெம்மை-க்ரௌர்யம் / கோள் -மிடுக்கு–
புகழால் இருநிலம் ஒளி மிக்கு ஆனது என்றுமாம் –பின்னும் -மேலும் நீசர்களை தேடி -வளர்ந்து -சுடர் மிக்கு எழுந்தது இராமானுசன் புகழ் –இரு நிலம் தனக்கு அதிசயம் -கீர்த்திக்கு அதிசயம்அ என்றுமாம்னை -வரும் பேற்றுக்கு உடலானார்கள் –
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை -குணம் திகழ் கொண்டல் -என்று இவர் தம்முடைய குணங்களைக் கொண்டாடினீர் –
அவற்றினுடைய வைபவம் இருக்கும்படி எங்கனே என்று கேட்டவர்களைக் குறித்து –
அத்யந்த க்ரூர பாவியாய் -சம்சார கர்த்தத்திலே அழுந்து கிடக்கிற என்னை அர்த்தித்வ நிரபேஷமாக-தம்முடைய பரம கிருபையாலே தாமே நான் இருந்த இடம் தேடி வந்து -என்னை தமக்கு சேஷமாம்படி திருத்தி –
ரஷித்து அருளின பின்பும் -பராங்குச பரகாலநாத யாமுநாதிகள் எல்லாம் தம் பக்கலிலே விசேஷ பிரதிபத்தி-பண்ணும்படி இருப்பாராய் -பெரிய பெருமாள் திருவடிகளிலே சகல சேதன உஜ்ஜீவன விஷயமாக செய்யப்பட
சரணாகதி யாகிற மகா தபஸை உடையவரான -எம்பெருமானார் உடைய கல்யாண குணங்கள் சமஸ்த திக்கிலும்
வ்யாப்தங்களாய்-அத்யந்த ஔஜ்வல்ய சாலிகளாய்  கொண்டு -பூமியிலே எங்கும் ஒக்க காணப்படுகின்றன -என்கிறார் –
வியாக்யானம்அரு முனிவர் தொழும் தவத்தோன் -அரு -சமஹாத்மா ஸூ துர்லப -என்று கீதாசார்யன் தான்  அவதரித்த
விபவ அவதாரத்திற்கு பிற்காலத்திலே -நம் ஆழ்வார் அவதரிக்கையாலே அவருடைய காட்சி தனக்கு லபியாதே
போந்ததே -என்று விசாரித்து சொன்னான் என்று பெரியவாச்சான் பிள்ளை இவ் வாக்யத்துக்கு அருளிச் செய்கையாலே
அரு -என்று துர்லபரான நம் ஆழ்வாரை சொல்லுகிறது -முனிவர் -வாசுதேவஸ் சர்வம் -என்றும் -உண்ணும் சோறு பருகும் நீர்
தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்றும் -பதினாறு வருஷம் மனனம் பண்ணிக் கொண்டு இருந்த
அர்த்தைத்தை இறே பிற்பாடு அவர் வெளி இட்டு பிரபந்தீகரித்தது – -இது தன்னையும் பெரியவாச்சான் பிள்ளை
அருளிச் செய்தார் இறே -இப்படி அத்யந்த துர்லபரான -மனன சீலரான -நம் ஆழ்வாரும் -அவருடைய கிர்பா விஷய-பூதரான நாத முனிகளும் ஆள வந்தாரும் -இவருடைய பவிஷ்யதாசார்யா விக்ரகத்தை ஆராதித்துக் கொண்டு
இவருடைய திரு அவதாரத்தை மனனம் பண்ணிக் கொண்டு -அநேக பிரயத்நன்களைப்  பண்ணிக் கொண்டு-போருகையாலும் அவர்களையும் சேரப்பிடித்து –முனிவர் –என்கிறார் –
தொழும் -பூர்வே மூர்த்நா நவய முபகதாகேசிகா  முக்திமாப்த்தா -என்கையாலே அவர்கள் இவரே
நமக்கு உத்தாரகர் -என்று பிரதிபத்தி பண்ணும்படி இருக்குமவராய் –தவத்தோன் -தஸ்மா ந்யாசமேஷாம்
தபசாமதிரிக்த   மாஹூ-என்று ஸ்லாக்கிக்கப்படுகிற-பகவத் சரணாகதி நிஷ்டரான -காலத்ர்யேபி  கரணத்ரய-நிர்மிதாதி பாபக்ரியச்ய  சரணம் பகவத் ஷமை மசாசத்வையைவ  கமலாரமேனார்த்திதாய ஷேமஸ் சஏவ
ஹியதீந்திர பவச்சரிதாநாம் – என்று இவ் வர்த்தத்தை ஜீயரும் அருளிச் செய்தார் இறே –எம் இராமானுசன் தன் –
எங்களுக்கு வகுத்த சேஷியான எம்பெருமானார் தம்முடைய –புகழ்-கல்யாண குணங்களை –இராமானுசன் தொல் புகழ்
என்ற பாடமான போது -அநாதியாய் ஸ்வா பாவிகங்களான கல்யாண குணங்களை என்றபடி -இப்படிப் பட்ட
கல்யாண குணங்கள் –கொழுந்து விட்டோடிப் பரவும்  வெம் கோள் வினையால் நிரயத்து அழுந்தி இட்டேனை –
மேன்மேலும் தலை பெற்று  சீக்ர கதியாய் கொண்டு -லோகம் எல்லாம் வியாபித்து நிற்பதாய் -துராசாரா –
என்கிறபடியே -அகர்த்ய கரண க்ர்த்ய அகரண ரூபமாய்  இருக்கையாலே -ஷிபாமி -ந ஷமாமி -என்னும்
படியான பகவத் நிக்ரகத்துக்கு உடலாய் -யத் பிரம்ம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம் -என்கிறபடியே –
அனுபவ ப்ராயசித்தங்களாலும் நசிப்பிக்க ஒண்ணாதபடி -பிரபலமான துஷ்கர்மத்தாலே -மற்ற நரகம் –
என்னும்படி -வான் உயர் இன்பத்துக்கு எதிர் தட்டாய்-அநந்த கிலேச  பாஜனமான சம்சாரம் ஆகிற விடியா
வென் நரகத்திலே -நிமக் நராய் கரை காணாதே அழுந்திக் கிடக்கிற என்னை —வெம்மை -க்ரௌர்யம்-கோள் -மிடுக்கு
வந்து ஆட் கொண்ட பின்னும் -என்னை ரஷிக்க வேண்டும் என்று நான் விரகு அறியாத காலத்திலே –
எம்பெருமானார் தம்முடைய நிர்ஹேதுக கிருபையாலே -விண்ணின் தலை நின்று -நான் இருந்த மண்ணின் தலத்தே –
என்னைத் தேடிக் கொண்டு வந்து -என்னுடைய அஞ்ஞா நத்தைப் பார்த்து கை விடாதே -அடிமை கொண்ட பின்பு –
ச காரம் அவதாரணமாய் –என்னை ஆட் கொண்ட பின்பு தானே -என்றபடி -சுடர் மிக்கு எழுந்தது -அவ்வளவிலே பர்யவசியாதே –
என்னை அங்கீ கரித்து -தரிப்பிக்கையாலே வந்த நிரவதிக -தேஜஸோடு  கூட மேன்மேலும் கிளர்ந்து எழுந்தது –
இப்படி இன்னும் விஷயீ  கரிக்கலாவார் ஆரேனும் உண்டோ என்று மாத்ர்சரைத் தேடிக் கொண்டு கிளர்ந்தது –
இவர் ஆஸ்ரயித்த பின்பு அவர் ஆகாராந்தரத்தை பஜித்தாப் போலேகாணும் அவை அடங்கலும்
இவரை விஷயீ கரித்த பின்பு  ஆகாராந்தரத்தை பஜித்தபடி –அத்தால் நல் அதிசயம் கண்டது இரு நிலமே –
அத்யந்த பாபிஷ்டனான என்னை விஷயீ கரித்த பின்பு அவருடைய கல்யாண குணங்களுக்கு உண்டான
கிளர்த்தியாலே -வசூந்தரா புண்யவதீ – என்கிறபடியே மேதினி நம் சுமையாறும் எனத் துயர் விட்டு
விளங்கத் தொடங்கிற்று என்கிறார் -இரு நிலம் -மகா விஸ்தைர்யான பூமி – இருமை -பெருமை
அன்றிக்கே -இரு நிலம் -மகா விஸ்தைர்யான இந்த ப்ர்த்வியிலே -அத்தால் நல் அதிசயம் கண்டது –
என் போலே பாபிஷ்டரை ரஷித்த பின்பு தானே எம்பெருமானார் உடைய கல்யாண குணங்கள் –
நிரவதிக ஔஜ்வல்ய யுக்தங்களாய்  கொண்டு கிளம்புகையாலே -அக் கிளர்த்தியால் -அவற்றினுடைய

ஸ்வரூபதுக்கு ஓர் அதிசயமானது எல்லாராலும் காணப்பட்டது என்று யோஜிக்கவுமாம்

சுடர் மிக்கு எழுந்தது -கொழுந்து விட்டோடிப் பரவும் -என்று அந்வயித்து -என்னை அங்கீகரித்து-கிளர்ந்த அக் கல்யாண குணங்கள் -என் போல்வாரரேனும் -இன்னும் இந்த லோகத்தில் இருந்தால் –அவர்களையும் கூட ஒக்க ரஷிக்க வேணும் என்னும் -நோயாலே -நோய் ஆசையாலே –
என்னையும் மேல் மேல் எனக் கொழுந்து விட்டு அபிவ்ர்த்தங்களாய் கொண்டு -சகல திக்குகளிலும்-வியாபியா நின்றது என்றும் சொல்லவுமாம் -இப்படி யாயிற்று எம்பெருமானார் உடைய கல்யாண குண-வைபவம் இருக்கும்படி என்று கருத்து –
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
குணம் திகழ் கொண்டல் என்று தம் குணத்தை எல்லார் திறத்தும் வழங்கும் வள்ளல் என்று வருணித்தீர் –
அங்கனம் வழங்கப்படும் குணங்கள் இன்னார் திறத்து பயன் பெற்றன என்று கூறலாகாதோ
என்பாரை நோக்கி -வல்வினையேனான என் திறத்திலே அவை பயன் பெற்று
மிகவும் விளங்கின -என்கிறார் .
பத உரை
அரு முனிவர் -அருமை வாய்ந்த முனிவர்கள்
தொழும் -தொழத் தக்க
தவத்தோன் -தவமாகிய ப்ரபத்தியை அனுஷ்டித்தவரான
எமிராமானுசன் தன் -எங்கள் ஸ்வாமி யாம்  எம்பெருமானார் உடைய
புகழ்-நற்குணம்
கொழுந்து விட்டு -மேன்மேலும் தளிர்த்து
ஓடிப் படரும் -விரைந்து பரவுகிற
வெம் கோள் வினையால்-கொடுமையும் வலிமையையும் வாய்ந்த கன்மங்களாலே
நிரயத்து -சம்சாரத்திலே
அழுந்தி யிட்டேனை -முழுகி விட்டவனான என்னை
வந்து -நான் இருக்கும் இடத்துக்கு வந்து
ஆட் கொண்ட பின்னும் -அடிமை யாக்கிக் கொண்ட பிறகும்
சுடர் மிக்கு -ஒளி விஞ்சி
எழுந்தது -இன்னமும் ஆட் கொள்ளக்கிடைப்பார் எவரேனும் உண்டோ என்று
என் போல்வாரை தேடிக் கிளர்ந்து எழுந்தது
அத்தால்-அதனால்
இரு நிலம் -பெரிய பூமி
நல் அதிசயம் -நல்லதோர் ஆச்சரியத்தை
கண்டது -பார்த்து விட்டது
இது எம்பெருமானார் குணம் என் திறத்துப் பயன் பட்டபடி எனபது கருத்து .
வியாக்யானம்
கொழுந்து விட்டு –வினையால்-
ஒரு பாபம் செய்யத் தலைப்பட்டால் -அது மேலும் மேலும் வளர்ந்து விரைவில் தொடர்ந்து
பரவிக் கொண்டே போகும் .அத்தகைய வினைகள் வெய்யவை- .வலிமை மிக்கவை –
இறைவனாலும் அன்றோ இதுகாறும் அவை போக்க முடியாமல் இருந்தன –
நிரயத்து அழுந்தி யிட்டேனை வந்து ஆட் கொண்ட பின்னும்
நிரயம்-நரகம்
அது இங்கே சம்சாரம்
யஸ்த்வையா சஹா ச ச்வர்கோ நிரயோ யஸ்த்வையா விநா-உன்னோடு கூடி இருத்தல்
ஸ்வர்க்கம் -உன்னை விட்டு பிரிந்து இருத்தல் நரகம் -என்றால்சீதை பிராட்டி இராமனை நோக்கி .–நலமென நினைமின் -அடைதல் ஸ்வர்க்கம் .அதனை யடையாது இருத்தல் நரகம் -என்றார் நம் ஆழ்வார் .ஸ்வர்க்க நரகங்கள்
வரவர் தன்மைக்கு ஏற்ப அமையும் -ஞானிகளுக்கு பகவத் அனுபவம் ஸ்வர்க்கம் -சம்சாரம் நரகம் .
நமன் தமர் செய்யும் வேதனைக்கு உள்ளாக்கும் நரகம் -பாபம் முடிந்ததும் ஓயும் -ஆதலின் அது அளவுக்கு
உட் பட்ட துன்பம் தருவது .அநாதியாய் வரும் வெம்கோள் வினையால் வரும் சம்சாரமோ நந்தா நரகம் .
அளவற்ற துன்பம் விளைவிப்பது .வானுயர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் -திரு வாய் மொழி – 2-10 7- –
என்றபடி வானுயர் இன்பத்திற்கு எதிர் தட்டாகக் கூறப்படும் நரகம் -அளவற்ற பெரும் துன்பமானது என்க –
அத்தகைய சம்சாரத்தில் அழுந்தி விட்டதாக தம்மைக் கூறிக் கொள்கிறார் அமுதனார் .இறைவனும் நெடும் தடக்கை
நீட்டி எடுக்க ஒண்ணாதபடி ஆழ அழுந்தி விட்டாராம் .அந்நிலையிலும் வந்து -எடுத்து -ஆட் கொண்டு -விடுகிறார்
எம்பெருமானார் .
திரு மங்கை ஆழ்வார் சம்சாரத்தில் தாம் அழுந்தா வகையில் அருளு புரியுமாறு இறைவனை வேண்டுகிறார் .
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும்
எந்தாய் தொண்டரானவர்க்கு இன்னருள் செய்வாய்
சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா
அந்தோ அடியேற்கு அருளாய் உன்னருளே -பெரிய திரு மொழி -1 8-9- – எனபது
அவர் வேண்டு கோள் .அமுதனாரோ தமது வேண்டு கோள் இன்றித் தாமாகவே எம்பெருமானார் வந்து
எடுத்து ஆட் கொண்டதாகக் கூறுகிறார்
வந்து –
அவர் இருக்கும் இடம் தேடி நான் போக வில்லை –
அழுந்தினவன் எங்கனம் போக இயலும் –அவரே விண்ணின் தலை நின்று மண்ணின் தலத்துக்கு-என்னை ஆட் கொள்ள வந்தார் -என்கிறார் .
இங்கே ஆட் கொள்வதற்குதேவைப்படும் குணங்கள் அனைத்தும் தோன்ற அமுதனார் அருளிச் செய்த-அழகு கண்டு களிக்க பாலது .
நிரயத்து அழுந்திய இடத்தே வந்தமையால்-வாத்சல்யம் தோற்றுகிறது .-
வேண்டுகோள் இன்றி தன் பேறாக வந்தமையால் ஸ்வாமித்வம் தோற்றுகிறது –
ஆட் கொண்டமையால்-சௌசீல்யமும்
தாமே நேரில் வந்தமையால்-சௌலப்யமும் -புலனாகின்றன .
நிரயத்து அழுந்தி உழலுவதை அறிந்து வந்தமையால்-ஞானமும் –
எடுத்து ஆட் கொண்டமையால்-சக்தியும் –
அரு முனிவர் தொழும் தவத்தோன் -என்றமையால் பூர்த்தியும்
எம் இராமானுசன் -என்றமையால்-பிராப்தியும் -சம்பந்தமும் –

வெளி இடப்பட்டு களிப்ப்ட்டுவது காண்க .

அரு முனிவர் தொழும் தவத்தோன் எம் இராமானுசன்
அரு முனிவர் -இறைவனுக்கும் பெறர்க்கரிய முனிவர்கள்
முனிவர் -மனனம் பண்ணுமவர்கள்-எல்லாம் கண்ணன் -என்று நினைப்பவர்கள் என்றபடி .
வாசூதேவஸ் சர்வமிதி   ச மகாத்மா சூ துர்லப -எல்லாம் வாசுதேவனே என்று நினைக்கும்
மகாத்மா மிகவும் துர்லபன்-என்றான் அன்றோ கண்ணன் .கீதையில் .ஆகக் கண்ணனையே
எல்லாமாகக் கருதும் நம் ஆழ்வார் போன்ற மகாத்மாக்கள் வணங்கும் தகைமை வாய்ந்தவர் .என்றது ஆயிற்று .
தமக்கு வேறு ஆள் இல்லாமையால்-வந்து ஆட் கொண்டார் அல்லர் .
தம் தகவினால் அங்கனம் செய்தார் என்பது இதன் கருத்து .
தவத்தோன் -தவம் -இங்கு பிரபத்தி –
தவங்களுள் சிறந்த தவமாக ப்ரபத்தியை சொல்லுகிறார்கள்.-என்பது காண்க .
இதனால் நிரயத்தில் இருந்து எடுத்து ஆட் கொள்ளும் சக்தி உடைமை கருதப்படுகிறது .
எம்பெருமானார் ரெங்க நாதனிடம் பண்ணின பிரபத்தி –
அவனை கட்டளைக்கு உட் பட்டவனாக்கி -என் வினைகளை வேரரிந்து -நிரயத்தில் இருந்து
என்னை எடுத்து ஆட் கொள்ளும் திறமையை அவருக்கு அளித்தது என்று கருதுகிறார் .
ரங்க ராஜ வச்யச்சதா பவதிதே யதிராஜ தஸ்மாத் சக்தாஸ் ஸ்வ கீய ஜன பாப விமோசநேத்வம்-
ரங்க ராஜன் உமக்கு எப்பொழுதும் வசப்பட்டவனாய் இருக்கிறான் -எதி ராஜரே -ஆகையால் நீர்-தம்மை சேர்ந்த ஜனங்களுடைய பாபத்தை நீக்குவதில் சக்தி படைத்தவராய் இருக்கிறீர் -என்னும்
யதிராஜ விம்சதி ஸ்ரீ சூக்தியை இங்கு நினைக்க .
தன் புகழ் சுடர் மிக்கு எழுந்தது –
நிரயத்து அழுந்தி யிட்டேனை ஆட் கொண்ட பின்னும் புகழ் சுடர் மிக்கு எழுந்தது -என்று இயைக்க –
என்னளவோடு போதும் என்று திருப்தி பெறாமல் என்னை ஆட் கொண்டமையால் சுடர் மிகுந்த குணம்
என் போன்றவர்களை மேலும் தேடிக் கிளர்ந்து எழுந்தது -என்றபடி –
எழுதல்-ஊக்கத்துடன் மேலும் கிளர்ந்து எழுதல்
இங்கு நம் ஆழ்வார் திரு வாய் மொழியில் –
சோதியாகி எல்லா வுலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ
வேதியர் முழு வேதத் தமுதத்தை
தீதில் சீர் திரு வேம்கடத்தானையே -3 3-5 – – – என்னும்
பாசுரத்தில் தம்மை விஷயீ கரித்த தோடு திருப்தி அடையாமல் -தம்மிலும் தாழ்ந்தாரை தேடிக்
கிடையாமையாலே தீதில்லாத குணம் வாய்ந்த திருவேம்கடத்தான் இன்னமும் விஷயீ கரிக்க
சமயம் பார்த்து நிற்பதாக திருவாய் மலர்ந்து அருளி இருப்பது ஒரு புடை ஒப்பு நோக்கற் பாலது .
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் என்று தம்மிலும் தாழ்ந்தார் வேறு எவரும் இல்லாமையாலே
அன்னவரைத் தேடி விஷயீ கரிக்க சமயம் பார்க்க வேண்டிய தாயிற்று அங்கே –
இங்கோ அமுதனாரைப் போன்றவர் எளிதில் கிடைப்பதால் சீர் ஊக்கத்துடன் ஆட் கொள்ள கிளர்ந்து
எழுவதாயிற்று-என்க
இனி எழுதல்-தோற்றுதல் என்னலுமாம் .
அப்பொழுது நிரயத்தில் அழுந்தி இட்ட மகா பாபியான என்னை அடிமை கொண்ட பின்பும்
குணம் அதனால் ஒளி மங்காமல் இருப்பதோடு அல்லாமல் மேலும் சுடர் மிக்கதாய் தோன்றிற்று
என்று பொருள் கொள்ள வேண்டும் .
இங்கு நிரயத்து அழுந்தி இட்ட மகா பாபியான என்னை ஆட் கொண்ட பின்னும் அரு முனிவர்
தொழு தவத்தோன் குணம் சுடர் மிக்கதாய் எழுந்தது என்பதில் நீசனும் நிறைவொன்றும் இல்லாதவனுமான என் கண் பாசம் வைத்தும் -வானவர்க்கு ஈசன் பரம் சுடர் சோதியானதாக நம் ஆழ்வார்
திருவாய் மலர்ந்து – 3-3 4- – அருளி இருப்பது நினைவு கூரத் தக்கது .
புகழ்-புகழப்படும் குணத்துக்கு ஆகு பெயர்
தொல் புகழ் என்றும் பாடம் உண்டு
இயல்பாக அமைந்த குணம் என்றபடி
புகழோடு தோன்றியபடி
அத்தால் நல் அதிசயம் கண்டது இரு நிலமே
அத்தால்-அதனால்
அதிசயம்-ஆச்சர்யம்
இரு நிலம் கண்டது என்று மாற்றுக
இரு நிலம் -பெரிய பூமி -இருமை-பெருமை
நிரயத்து அழுந்தும் இடம் செல்லுன் புகழ் மாசுறுவது இயல்பு
ஆயின் அது இங்கே நேர் மாறாக சுடர் மிக்கு எழுந்தது
இது நல்லதோர் ஆச்சரியம் அன்றோ
ஏனையோர் தீயவர் உள்ள இடத்திற்குப் போய்ச் சேரின் அச் சேர்த்தியினால் தாங்களும்
தீயவராய் சீரழிவர்.அரும் தவத்தோரும் தொழத் தக்க எம்பெருமானார் போன்ற தூயவர் அச் சேர்த்தியினால்
தாங்கள் கெடாததோடு-அனனவரையும் தூயவரே மாற்றும் சீர்மை படைத்தவர் ஆதலின் அவர்
குணங்கள் நிலை குலையாது இருப்பதோடு மற்றவர்களையும் நற்றவர்களாய் மாற்றுதலின்
சுடர் மிக்கன ஆயின -இரு நிலத்தோர்க்கு இது அதிசயமே அன்றி எம்பெருமானார் இயல்பு
உணர்ந்தோர்க்கு இது அதிசயம் அன்று என்பது தோன்ற -இரு நிலம் கண்டது -என்கிறார் .
இனி அதிசயம் -என்பதற்கு சிறப்பு -என்று பொருள் கூறுவாரும் உளர் .
புகழ் சுடர் மிக்கு எழுந்தமையால் இந்நிலத்திற்கு சிறப்பு உண்டாயிற்று என்று அவர்கள் விளக்கம்
தருகின்றனர் .
இனி இரு நிலத்தில் புகழ் நல் அதிசயம் கண்டது என்று அதிசயம் கண்டமைக்கு
புகழை எழுவாய் ஆக்கி அவர்கள் மற்று ஒரு வகையிலே உரை   வரைந்தும் உள்ளனர் .
புகழ் சுடர் மிக்கு எழுந்தது
அது கொழுந்து விட்டு ஓடிப் படரும்
என்று கொண்டு கூட்டியும் பொருள் கூறுகிறார்கள் அவர்கள் .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது –

அரு முனிவரால் போற்ற படும் ஸ்வாமி/தவத்தோன்-சரணா கதி பண்ணி வாங்கி கொடுத்த பெருமை/தன் புகழ்/ தொல் புகழ்/ இரண்டு பாடங்கள்/சம்சாரத்தில் அழுந்து இருந்தேன்-கொழுந்து விட்டு ஓடி படரும் -காட்டு தீ போல-ஒரு ஜன்மத்தில் ஆரம்பித்து பல ஜன்மங்களிலும் படர /கொழுந்து விட்டு ஓடி பரவும் வெம் கோள்//சீக்ர கதியாக கொண்டு -ஓடி-வேகமாக அதிக பாபம் பண்ணுகிறோம்/படரும்-விச்த்ருதமாய் நிற்பதாய் /வெப்பத்தை கொடுக்கும்/அசித் சம்பப்தம்- அநந்த  கிலேசம் பாஜனம்  -மற்றை நரகம்-வான் உயர் இன்பத்துக்கு எதிர் தட்டாய்-ஜன்மம்-அவித்யை- கர்மம்-அசித் சம்பந்தம்-ஏழு படிக்கட்டுகள்-இன்பம் -துன்பம் என்ற வேஷ்டி உள் இருக்கும் சரிகை/நிறைய துன்பம்/ பள பளக்கும்   சரிகை/ மாய வன் சேற்று அள்ளல்/மாதரார் கண் வலைக்குள் பட்டு அழுந்துவேனை/கை பிடித்து ஆள் கொண்டதும்-பின்னும் சுடர் மிக்கு எழுந்தது-பகவத்  சம்பந்தம் கிருபை சொவ்கார்தம்  பிறக்கும் பொழுதே கடாஷம்

சத்வ குணம் ஞானம் நிரதிசய ஆனந்தமாம் -இப்படி ஏழு படி கட்டுகள்–அந்த புகழை இரு நலம் நல்ல அதிசயம் கண்டது//குணம் திகழ் கொண்டல் -என்று ச்லாகித்தாரே-குண வைபவம் இருக்கும் படியை -அருளி செய்கிறார்-குணம் பட்ட கேள்வி புகழ் பதில்..அரு முனிவர் -கிடைக்க அரியவர்-அவனே தமக்கு சாலமமும் என்று மனனம் பண்ணி கொண்டு-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம்  கண்ணன் என்று இருக்கும்/வாசு தேவ சர்வம் -மஹாத்மா சு துர்லபா -கீதை -7-19/-எம்பெருமானுக்கும் பெறுதற்கு அரியவர் களாய்/அரக்கர் அசுரர்  பிறந்தீர்  உள்ளீரேல் -தீயோரை  ஆழ்வார் தேடுகிறார்/வாழ் ஆட்   பட்டு  நின்றீர் உள்ளீரேல்-நல்லாரை தேட்டம் பெரிய ஆழ்வார்/முனியே -மனன சீலர்-ரிஷி முனி ஆழ்வாரை -மந்த்ரம் கொடுத்த படியாலும்/-பிர பத்தி  ஆகிய மகா தபசி உடையவராய்/ எனக்கு ஸ்வாமி ஆன எம்பெருமானாரின்-அர்த்தத்துக்கு உரிய சப்தம்-கல்யாண குணங்கள் மென் மேலும் தலை பெற்று-புகழ் கொழுந்து விட்டு ஓடி பரவும்/-வந்து ஆள் கொண்டார்/

நான் இருக்கும் இடம் வந்து ஆள் கொண்டார் திரு அரங்கத்திலே இருந்தார் அமுதனார் /பாஞ்ச சன்யம் போல முழங்கி ஸ்வாமி -வாக் வன்மை-சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் அமுதனார் இன்றும் சேவை சாதிக்கிறார் திருவரங்கத்தில்-வந்து தான் ஆள் கொள்ளணும்/ சேற்றில் அழுந்து இருக்கிறேனே-நடக்க வழி இல்லை  அழுந்தின -படியாலே வந்தார்/பின்னும்-உம்மை -தொகை- சுடர் விட்டு/பெரிய காரியம் பண்ணி முடித்த பின்பும்-சுடர் மிக்கு எழுந்தது ..ஆள் கொண்ட பின்னேயே சுடர் மிக்கு எழுந்தது–ஆன பசிக்கு சோள பொறி தீனி கிடைத்த தால்–என்னை அங்கீகரிக்கையால் வந்த நிரவதிக தேஜஸ் உடன்-இன்னும் நமக்கு விஷயீ கரிக்க -ஆள் பிடிக்க மாத்ருசரை தேடி கிளர்ந்தது–அத்தாலே மகா ப்ருதிவி நல்ல தோர் ஆச்சர்யம் கண்டது/முடியாமல் கிளர்ந்து எழுந்தது -ஆச்சர்யம்/சேறு சகதிக்குள் வந்த அக்நி-சேற்றையும் சாப்பிட்டு மீண்டு கிளர்ந்தது நல்ல அதிசயம்/குன்றாமல் இருந்தது  மட்டும் இன்றி -வளர்ந்தது-தொல் -பழமையான புகழ்

நித்யர் அடிமை தனம் தெரிந்த /வர்த்தித்து இருந்து வளர்ந்த பெருமை/கோள்- மிடுக்கு -வெப்பம்/அனுக்ரகமும் கொழுந்து விட்டு எரியும்/கேட்காமலே வந்து பரம கிருபையாலே//பராங்குச பர கால  நாத யாமுன முனிகள் தம் பக்கலில் பிரபத்தி/பெரிய பெருமாள் திருவடிகளில் சரணாகதி அடைந்து நம்மை உய்வித்தாரே-மகா தபஸ்-ஒளி விட்டு கொண்டு ஆள் கொள்ள ஆள் தேடுகிறதாம் புகழ்பக்தி பிர பத்தி-லோக சந்க்ரகம் -லோகத்தார் பின் பற்ற அனுஷ்டித்து காட்டினார்/பக்தி முதிர்ந்த நிலை /ஷமை  ஒன்றே முக் காலத்திலும் முக் கரணங்களால் பண்ணிய பாபம் போக்க-புகழ்   என்ற ஒரே வார்த்தையால்-பிரார்த்திப்பதை உன்னாலேயே காட்டி கொடுத்தாய்/கமலா ரமணன் இடம்- சேர பாண்டியன் வார்த்தை- வாங்கி கொடுத்தாயே-பங்குனி உத்தர நாள்  சேர்த்தி  உத்சவம் கண்டு அருளும் பொழுது/தொல் புகல்- வந்தேறி இல்லை இயற்கையான பழைய புகழ்/ரெங்க ராஜன் உன் வசம் -மா முனிகள் ஸ்ரீ சூக்தி//நானோ கொடு வினையால்- எங்கும் பரவி-அக்ருத்ய கரண  நானா வித அபாசரங்களும்  செய்து–துர் மானி–போன்ற  பலவும் ஒன்றாக சேர்ந்த உருவம்   -நிக்ரகத்துக்கு உடலாய்-பல கல்ப காலம் அனுபவித்தும்பிராய சித்தம் பண்ணியும் போக்க முடியாமல்/வான் உயர் இன்பம் எய்தில் என் நரகம் எய்தில் என்- அந்த தெளி விசும்பு பேற்றுக்கு  நாட்டுக்கு எதிர் தட்டாய் நந்தா நரகத்து அழுந்தா வகை-சம்சார பீதியால் -கதறி போக்க பிரார்த்திக்கிறார்/நானோ கதற கூட வில்லை- ஆனாலும் வந்து ஆட் கொண்டார்/நலம் என நினைமின் -நரகு அழுந்தாதே நிலம் முனம் இடந்தான்-நரகம்-சம்சாரம் /சேர்ந்து இருந்தால் சொர்க்கம்-சீதை-/ரஷிக்க வேணும் என்று விரகு அறியாத பொழுது/விண்ணில் இருந்து அஞ்ஞானம் பார்த்து கை விடாமல்-அடிமை கொண்ட பின்பு -சோதி ஆகி  ஆதி மூர்த்தி–தீதில் சீர் திருவேங்கடத்தானையே/ஆழ்வாரை அனுகிரகித்த பின்பே

-நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதி/சுடர் மிக்கு எழுந்தது -அங்கீகரித்து தரிக்க  வைத்தால் தைரியம் கொண்டு எழுந்தது-கை கொண்ட பின்பு சோதி தோள் களை  ஆர தழுவினான்/-சோதி போல /புகழ் கொழுந்து விட்டு-யாராவது இருக்க என்று பார்த்து ஓடி படர்ந்தது-ரட்ஷிக்க வேண்டும் என்று நோய் வாய் பட்டார் உண்டாரோ -பார்க்கிறதாம் //..நிரவதிக தேஜஸ் அள்ள அள்ள குறை இல்லாதா தேஜஸ்–புகழுக்கு வந்த சுடர் /அமுதனாருக்கு வந்த புகர்/நல் அதிசயம் கண்டது இரு நிலமே..வசு-செல்வம்-மேதினி புண்யவதி-இரு நிலம் ஸ்வாமி புகழை கண்டதால்-துயர் விட்டு ஆனந்தம் அடைந்தாள்..பூமி பிராட்டி -ஆண்டாளும் ஸ்வாமி கைங்கர்யம் திரு மால் இரும் சோலை  பண்ணினதும் ஆனந்தம் அடைந்தாள்/வந்தார் அழுந்திய இடத்தில்- வாத்சல்யம் நேரில் வந்தார்-சௌலப்யம்சுலபன்/ பிரார்த்திக்காமல் வந்தார்-ஸ்வாமித்வம்/ஆள் கொண்டார்-சௌசீல்யம் /மாமின் அர்த்தம்/ அகத்தின் அர்த்தம் அழுந்தி-சர்வக்ஜன் தெரிந்து கொண்டாரே–தூராக் குழிக்குள்    இருந்தவரை எடுத்த -சர்வ  சக்தன் /அரு  முனி தொழும் -குண பூர்த்தி/பிரார்திக்காமல் பிராப்தி-

——————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: