அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-60-உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
அறுபதாம் பாட்டு -அவதாரிகை –
இப்படி எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை இவர் அருளிச் செய்ய கேட்டவர்கள்-
அவர் தம்முடைய பக்தி வைபவம் இருக்கும்படி என் -என்ன –
பகவத் பாகவத விஷயங்களிலும்
தத் உபய வைபவ பிரதிபாதிகமான திருவாய் மொழியிலும்
அவர்க்கு உண்டான ப்ரேமம் இருக்கிற படியை
அருளிச் செய்கிறார் .
உணர்ந்த மெய்ஞ்ஞானியர் யோகம் தொறும் திரு வாய் மொழியின்
மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் மா மலராள்
புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதி தொறும்  புக்கு நிற்கும்
குணம் திகழ் கொண்டல் இராமானுசன் என்னும் குலக் கொழுந்தே – -60 –
வியாக்யானம் –
ஆத்ம குண  ஔஜ்ஜ்வல்ய யுக்தராய் -ஆத்மகுணங்கள் தன்னை சர்வ விஷயமாக
உபகரித்து அருளும் பரம ஔ தாரராய் -எங்கள் குலத்துக்கு தலைவரான எம்பெருமானார்
-ஞாதவ்யார்தங்களை அடங்க அறிந்து இருந்தும் -யதா ஞான யுக்தரானவர்கள் கூட்டுரவு தோறும் –
திரு வாய் மொழியினுடைய பரிமளிதமாய் விலஷணமான இசை நிரந்தரமாக நடக்கும் ஸ்த்தலங்கள் தோறும் –
பெரிய பிராட்டியாராலே நித்ய வாசம் பண்ணப்பட்ட அழகிய திரு மார்வில் உடையவன் உகந்தருளி
வர்த்திக்கும் திருப்பதிகள் தோறும் –
அவ்வவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே புக்கு அவற்றிலே ஆழம் கால் பட்டு
நில்லா நிற்பர்-இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும் படி என்று கருத்து .
அன்றிக்கே
எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை பேசின அநந்தரம் -அவருடைய பக்தி வைபவத்தை
தாமே அனுசந்தித்து -ஏவம் பூத குண ஔஜ்ஜ்வலராய் இந்த பிரேமத்தை எல்லாருக்கும் உபகரிக்கும்-பரம ஔதாரரான எம்பெருமானார் எம் குலக் கொழுந்து என்கிறார் ஆகவுமாம் ..
யோகம்-கூட்டுரவு–இத்தால் கூட்டத்தை சொன்னபடி/ கொழுந்து -தலை
அதவா
என்குலக் கொழுந்து -என்றது எங்கள் குலம் வேராய்-தாம் கொழுந்தாய் கொண்டு
வேரிலே வெக்கை தட்டினால் -கொழுந்து முற்பட வாடுமா போலே -இக்குலத்துக்கு ஒரு தீங்கு வரில்-முற்படத் தாம் முகம் வாடி இருக்கும் அவர் என்றுமாம் .
இசை மணம் தருகை யாவது -செவ்விப் பாட்டை உடைத்தாய் இருக்கை –
தாஸ்யத்வம் / சேஷத்வம் -அவன் இடம் இல்லாததை சமர்ப்பிக்க வேண்டும் -அதற்காக பக்தி உத்தி அருளினார்
ஆழ்வார் கோஷ்ட்டியில் -/ அருளிச் செயல் கோஷ்ட்டியில் -ஸ்ரீ ராமாயணம் கேட்க திருவடி போலே / திவ்ய தேசங்கள் -பொருந்தி நின்ற பதிகள்–சாத்துப்பொடி இத்யாதி சாத்தி -வேதாந்தி ஒரு பக்கம் –பத்தி தோறும் -எல்லா திவ்ய தேசங்களிலும் புக்கு -கைங்கர்யங்கள் ஏற்பாடு செய்து -நிற்கும் -இவை செய்த பின்பே நிற்பார் –
கீதை -ரெங்க விலாஸ் மண்டபம் -திருவாய் மொழி -பெரிய மண்டபத்தில் —
பெருமாள் ரிஷிகள் குடிலில் -கிருஷ்ணன் -முந்தானை -மஞ்சளை உரசிப் பார்க்க போவான் –
உணர்ந்த -நாயகி பாவம் -பல்லாண்டு பாடும் –பத்திமை நூலுக்கு வரம்பு இல்லையே –
பொன் மார்ப -பிராட்டி வாசித்தால் -மாதவா பக்தவத்சலன்–அவள் அடியாக -போலே மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் -பொருந்தும்  திருப்பதி –ஸ்ரீ வைகுண்ட விரக்த்தாயா -ராமயா -அது பொருந்தாத திருப்பதி அன்றோ –
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை -கீழ் எல்லாம் எம்பெருமானாருடைய வேத மார்க்க பிரதிஷ்டாப நத்தையும் -பாஹ்ய மத-நிரசன சாமர்த்த்யத்தையும் -வேதாந்தார்த்த பரி ஜ்ஞானத்தையும் -அந்த ஜ்ஞானத்தை உலகாருக்கு எல்லாம்
உபதேசித்த படியையும் அருளிச் செய்து -இதிலே அந்த ஜ்ஞான பரிபாக ரூபமாய்க் கொண்டு பகவத் விஷயத்திலும் –
அவனுக்கு நிழலும் அடிதாருமாய் உள்ள பாகவதர் விஷயத்திலும் -தத் உபய வைபவ பிரதிபாதகமான
திருவாய் மொழியிலும் -இவருக்கு உண்டாய் இருக்கிற நிரவதிகப் பிரேமத்தையும்-இம் மூன்றின் உடைய
வைபவத்தையும் சர்வ விஷயமாக   உபகரிக்கைக்கு உடலான இவருடைய ஔதார்யத்தையும் அருளிச் செய்கிறார் –
வியாக்யானம்உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தோறும் –பக்தி யாகிறது ஞான விகாச விசேஷம் ஆகையாலே
ஸ்ரீ ய பதியான சர்வேஸ்வரன்  சர்வ சேஷி என்று முந்துற தெளிந்து -அது சமஸ்த கல்யாண குணாத்மகனாய் –
ஆனந்த மயனாய் -சர்வ கந்த சர்வ ரச -என்கையாலே சர்வவித போக்யனானவனை -விஷயீ கரிக்கையாலே
ஸ்வயம் ப்ரீதி ரூபாபன்ன மாய்-பக்தி என்கிற பேரை உடைத்தானதாய் இருக்கிறது -ஆக உணர்வு என்றது பக்தி என்றபடி –
இப்படிப் பட்ட பக்தி யாகிற மெய் ஞானம் -யாத வஸ்த்தித ஜ்ஞானம் –பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை கட்டடங்க
அனுபவித்த -மயர்வற மதி நலம் -என்றபடி -அப்படிப் பட்ட பக்தி ரூபாபன்ன ஞானத்தை உடையரான ஆழ்வார்களுடைய
குழாம் எங்கே எங்கே இருக்கிறதோ அந்த இடங்கள் தோறும் –யோகம்-கூட்டரவு-பரிஷத்து -என்றபடி -பக்தரான ஆழ்வார்கள்
அனைவரும் அடியிலே மயர்வற மதிநலம் அருளப் பெற்று -பரிபூர்ண ஞானராய் -தத்வ த்ரயத்தையும் உள்ளபடி அனுசந்தித்து –
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதம்  -என்னும்படி பரம போக்யனான சர்வேஸ்வரன் பக்கலிலே ஈடுபட்டு
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் –என்று பாஹ்ய சம்ச்லேஷ அபேஷை பிறந்து  -பெண்ணுடை உடுத்தும் –
தூது விட்டும் -மடல் எடுத்தும் -நிரவதிக பிரேம யுக்தரகளாய் இருந்தார்கள்  இறே -ஆகையால் உணர்ந்த மெய் ஞானியர் என்று

ஆழ்வார்களை சொல்லக் குறை இல்லை –

திருவாய் மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னும் இடம் தொறும் -ஆழ்வார்கள் பதின்மரிலும் வைத்துக் கொண்டு
பிரதாநரான நம் ஆழ்வாருடைய திருப் பவளத்தாலே அருளிச் செய்யப்பட சப்த ராசியான திவ்ய பிரபந்தத்தினுடைய
சர்வ கந்த -என்கிற விசேஷத்தை பிரதிபாதிக்கையாலே -தானும் பரிமளிதமாய் அநு சந்தாதாக்களுக்கு  அவ் விஷயத்தைக்
கொடுக்கக் கடவதாய் -யாழினிசை வேதத்தியல் -என்றும் -தொண்டர்க்கு அமுதம் -என்றும் சொல்லுகிறபடியே
போக்ய தமமாய் இருக்கிற அனுசந்தான கான ரூபமான இசையானது -எந்த எந்த ஸ்தலத்திலே நடையாடி சுப்ப்ரதிஷ்டமாய்

இருந்ததோ அவ்வவ ஸ்தலங்கள் தோறும்-மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் -சர்வ பிரகார விலஷனமான பத்மத்தை தனக்கு இருப்பிடமாக உடையாளான-பெரிய பிராட்டியார் சம்ச்லேஷிக்கும்படி –  ச்ப்ர்ஹநீயமான திரு மார்வை உடையனான சர்வேஸ்வரன் –பொருந்தும்-பதி தோறும் -உகந்து அருளி வர்த்திக்கிற திருப்பதிகள் தோறும் -பேர் அருளாளர் வழித் துணையாக தாமே சேர்த்து-அருளின பெருமாள் கோயிலிலும் -பெரிய பெருமாள் நியமனத்தாலே நம் பெருமாள் கோயிலிலும் -காளகஸ்தியில் நின்றும்-சைவர் வந்து ஷூத்ர உபத்ரவம் பண்ணின பொது திருப்பதியிலும் -வேத பாஹ்யரை நிரசிக்கைக்காக-திரு நாராயண புரத்திலும் -மற்றும் திரு நகரி திரு மால் இரும் சோலை தொடக்கமான திவ்ய தேசங்கள் தோறும் –புக்கு நிற்கும் -அவற்றை அனுபவிக்கையில் உண்டான ஆசையாலே அவ்வவ திவ்ய தேசங்களில் பல படியாக-பிரவேசித்ததும் -அவற்றை அடைவே நிஷ்கண்டகமாக நிர்வஹித்து -புநர் விஸ்லேஷ பீருத்வ ரூபமான

பரம பக்தியாலே ஆழம் கால் பட்டும் -மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கிற
உணர்ந்த மெய் ஞானியர் -என்கிற விலஷண பிரமாதாக்களிலும் ப்ரீதி மிகுதியாய் இருக்கையாலே
அம் மூன்றையும் இறையும் அகலகில்லாதே அவற்றிலே தானே ஆழம் கால் பட்டு இருப்பர் -என்றபடி –
குணம் திகழ் கொண்டல் -இப்படிப்பட்ட பக்தி யாகிற மகா குணம் -தன்னிடத்திலே சென்று நிறம் பெற்று
பிரகாசிக்கவே -முகச் சோதி வாழியே   -என்கிறபடியே தம்முடைய ஞான பக்தி வைராக்யங்களையும் –
அந்த பிரமாதக்களுடைய பிரபாவத்தையும் -அந்த பிரமாணத்தின் உடைய பிரபாவத்தையும்
அப்ரமேயம் ஹிதத்தேஜோ யச்யஸா ஜனகாத்மஜா -என்கிற பெரிய பிராட்டியாரையும் -மையல் ஏற்றி
மயக்க வல்ல பிரேமத்தினுடைய பிரபாவத்தையும் -ஜல ஸ்தலவிபாகம் அற வர்ஷிக்கும் வர்ஷூ கவலாஹகம்
போலே -சர்வாதிகாரமாக சர்வ ஜனங்களுக்கும் சர்வதா கொடுத்தும் உபதேசித்தும்  உபகரித்து அருளும்
பரமோதாரான இராமானுசன் -எம்பெருமானார் –எம் குலக் கொழுந்தே -எங்குலம்-ஸ்ரீ வைஷ்ணவ குலம்
அதுக்கு கொழுந்து -என்றது -வ்ர்ஷமாய் பலிக்கைக்கும் -கொடியாய் படர்ந்து பலிக்கைக்கும் -மூலம்
கொழுந்து ஆகையாலே -எங்கள் குலத்துக்கு எல்லாம் மூலமானவர் -என்ற படி –கொழுந்து-தலை –
அன்றிக்கே -எங்குலக் கொழுந்து -என்றது –எங்கள் குலம் அடங்கலும் ஒரு வேராய் –அதுக்கு
எம்பெருமானார் தாம் கொழுந்தாய் கொண்டு -வேருக்கு வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட
வாடுமா போலே -எங்கள் குலத்துக்கு ஒரு குறை வந்தால் முற்பட தம்முடைய முகம் வாடி இருக்கும்
அவர் என்னவுமாம் –குணம் திகழ் கொண்டலாய் -எங்கள் குலக் கொழுந்தான -இராமானுசன் -பதி தோறும்-புக்கு நிற்கும் -என்று இங்கனே யோஜிக்கவுமாம் –
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
எம்பெருமானார் உடைய ஞான வைபவத்தை கேட்டு அறிந்தவர்கள் –பக்தி வைபவத்தையும்
கேட்டு அறிய விரும்புகிறோம் என்ன -பகவான் இடத்திலும் -பாகவதர்கள் இடத்திலும் –
அவ் இருவர் பெருமையும் பேச வந்த திருவாய் மொழி இடத்திலும் -அவருக்கு உண்டான
ப்ரேமம் இருக்கும் படியை அருளிச் செய்கிறார் .
இனி புக்கு நிற்கும் என்பதனை -வினை முற்றாக்கி -பிறருக்கு உபதேசிப்பதாக கொள்ளாது –
நிற்கும் குணம் என்று பெயர் எச்சமாக கொண்டு -ஞான வைபவம் பேசினதும் தாமே
பக்தி வைபவம் பேசி ஈடுபடுகிறார் என்னலுமாம் .
பத உரை
குணம் திகழ்-நற் குணம் விளங்கும்
கொண்டல்-மேகம் போன்ற வன்மை வாய்ந்தவரும்
எம் குலக் கொழுந்து -எங்கள் குலத்திற்கு  தலைவருமான
இராமானுசன்-எம்பெருமானார்
உணர்ந்த -அறிய வேண்டியவற்றை அறிந்து கொண்ட
மெய்ஞ்ஞானியர் -உண்மை அறிவாளிகளினுடைய
யோகம் தோறும் -கூட்டம்தொரும்
திரு வாய் மொழியின் -திரு வாய் மொழி என்னும் திவ்ய பிரபந்தத்தின் உடைய
மணம் தரும் -வாசம் வீசும்
இன் இசை-இனிய இசை
மன்னும் -நிலைத்து நடை பெறும்
இடம் தோறும் -இடங்கள் தோறும்
மா மலராள்-பெரிய பிராட்டியார்
புணர்ந்த -கூடி நிற்கிற
பொன் மார்பன்-அழகிய மார்பை உடையவனான சர்வேஸ்வரன்
பொருந்தும் -உகந்து அருளிப் பொருந்தி உள்ள
பதி தோறும் -திவ்ய தேசம் தோறும் –
அவை அவைகளில் அனுபவிக்கையில் உள்ள ஆசை யாலே
புக்கு -புகுந்து
நிற்கும் -அவற்றில் ஈடுபட்டு நிற்பார்
இது அவருடைய பக்தி வைபவம் இருக்கும்படி என்பது கருத்து .
வியாக்யானம் –
உணர்ந்த ..யோகம் தோறும் –
ஸ்வஞானம் பிராபக ஞானம் ப்ராப்ய ஞானம் முமுஷூபி ஞான த்ரயம் உபாதேயம் ஏதத் அந்ய கிஞ்சன -என்று
முக்தியை பெரும் விருப்பம் உள்ளவர்களால் தன்னைப் பற்றிய அறிவும் -உபாயத்தை பற்றிய அறிவும் –
உபேயத்தை பற்றிய அறிவும் – ஆன மூன்று அறிவுகளுமே கைக் கொள்ளத் தக்கன -இவற்றைத் தவிர
வேறு ஒன்றும் தேவை இல்லை -என்றபடி உணர்ந்து கொள்ள வேண்டியவைகளை உணர்ந்து கொண்டு விட்டவர்
என்னும் கருத்துப்பட -உணர்ந்த ஞானியர் -என்கிறார் .
அங்கன் உணர்ந்ததும் உள்ளது உள்ளபடியே என்பார் மெய் ஞானியர் .என்கிறார் .
இனி திருவாய் மொழியைப் பற்றி எடுத்துப் பேசுவதால் -திரு வாய் மொழியின் பொருளை-அதாவது
மிக்க இறை நிலையும்-என்றபடி அர்த்த பஞ்சகத்தை -உணர்ந்த மெய் ஞானியர் -என்னலுமாம் .
யோகம்-கூறும் இடம்
வசந்தி வைஷ்ணவா யத்ர தத்ர சந்நிஹிதோ ஹரி –வைஷ்ணவர்கள் எங்கு வாசம் செய்கின்றனரோ
அங்கு இறைவன் சாந்நித்யம் கொள்கிறான் .எனபது போலே மெய் ஞானியர்கள் கூடும்
இடம் எல்லாம் புக்கு நிற்கிறார் எம்பெருமானார் -என்க-
அணி அரங்கன் திரு முற்றத்தார் -அடியார் தங்கள்-இன்பமிகு பெரும் குழுவு கண்டு யானும்-இசைந்துடனே என்று கொலோ இருக்கும் நாளே –என்று குலசேகர பெருமாளும்
அவனடியார் நனிமா கலவியின்பம் நாளும் வாய்க்க நங்கட்கே -என்று நம் ஆழ்வாரும்
இந்நிலையினை பெரும் பேறாக  பெற அவாவுவது காண்க .
சம்சாரம் ஆகிற விஷ வ்ருஷத்திலே பழுத்து அமுதம் போலே இனிப்பது அன்றோ பாகவத சஹாவாசம் .
சத்பிரேவ சஹாசீத சத்பி குர்வீத சங்கமம் சத்பிர் விவாதம் மைத்ரஞ்ச நா சத்பி கிஞ்சிதா சரேத்-என்று
நல்லவர் உடனே இரு -நல்லவர் உடனே சேர் -நல்லவர் உடனே விவாதம் செய் .நட்பும் பூணுக

கேட்டவர்கள் உடன் ஒன்றும் செய்யாதே-என்று சத்சங்கத்தின் சீர்மை சொல்லப் பட்டு இருப்பது காண்க .

திருவாய் மொழியின் –இன்னிசை மன்னும் இடம் தொறும்
குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரியும் மதுர கவிகள் போல்வார் திரு வாய் மொழியை-இனிமையாக இசைக்கும் இடங்களில் எல்லாம் -எம்பெருமானார் -புக்கு நிற்கிறார் -என்க .
பண்ணார் பாடல் -என்று நம் ஆழ்வாரே அருளிச் செய்தமைக்கு ஏற்ப -திருவாய் மொழியின்
இன்னிசை -என்கிறார் .நம் ஆழ்வார் உடைய ஏனைய திவ்ய பிரபந்தங்களும் இயற்பா ஆதலின்
இசைப்பாவான திருவாய் மொழியின் இன்னிசை என்கிறார் .இசை மணம் தருகை யாவது -செவ்வி
உடைத்தாய் இருத்தல்-எங்கு எங்கு எல்லாம் ரகுநாதனுடைய கீர்த்தனம் நிகழ்கின்றதோ அங்கு அங்கு எல்லாம்
மத்தகதிடை கைகளைக்  கூப்பி கண்ணும் கண்ணீருமாய் ஆஞ்சநேயன் ஈடுபட்டு நிற்பது போல்
திருவாய் மொழியின் இன்னிசை மன்னும் இடம் எல்லாம் எம்பெருமானார் புக்கு நிற்கிறார் என்க .
திருவாய் மொழி பாடி அனுபவிக்கும் ரசத்துக்கு ஜகத் காரண பூதனான சர்வேஸ்வரனுடைய
நிரதிசய ஆனந்தமும் ஈடாகாது என்று -நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு-திருவாய் மொழி -8 10 9- –  என்று
தொடங்கும் பாசுரத்தில் பேசியதற்கு ஏற்ப -ரசித்து திருவாய் மொழி பாடும் இடங்கள் எல்லாம்

பரம ரசிகரான எம்பெருமானாரும் புக்கு நிற்கிறார் என்றது ஆயிற்று

மா மலராள் பொருந்தும் ….பதி தொறும்
மாண்புடையதும்-மலர்ததுமான தாமரையை இடமாக கொண்ட பெரிய பிராட்டியார் -அதனை விட்டு விரும்பி வந்து அணைந்து இருக்கும் படியான அழகிய மார்பை உடையவன் -என்றபடி .
அழகுத் தெய்வமும் ஆசைப் படத்தக்க பேர் அழகு பெருமான் திரு மார்புக்கு –
பொன் -பொன் போலே விரும்பத்தக்க பேர் அழகு
பொன் மார்பன்-உவமைத் தொகை -இனி பொன் நிறம் ஆதலுமாம் .
மலராள் புணர்ந்தமையின்  பொன் மார்பு ஆயிற்று
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் -என்றது காண்க .
மலராள் புணர்ந்த பொன் மார்பன் ஆதலின் இந்நில உலகின் குற்றம் தோற்றாது-திருப்பதிகளிலே-வாத்சல்யத்துடன் அவன் பொருந்தி எழுந்து அருளி இருக்கிறான் -என்று அறிக .
மாதவோ பக்த வத்சல – என்றபடி
மாதவன் ஆதலின்பக்தர்கள் இடத்திலும் அவர்களை பெறுவதற்கு சாதனமான திருப்பதிகள் இடத்திலும்
எம்பெருமான் வாத்சல்யத்துடன் விளங்குகிறான் -என்க .
பொருந்தும் பதி -எனவே பொருந்தாத பதியும் உண்டு என்று தோற்றுகிறது-அந்த பொருந்தா பதியே .-பரம பதம் என்க -அல்லலுறும் சம்சாரி சேதனரை நினைந்து உள் வெதுப்புடன் பரம பதத்தில் பொருந்தாமல்
இருப்பது போல் அல்லாமல் இந்நிலத்தில் உள்ள திருப்பதிகளில் பொருந்தி உகந்து அருளி இருக்கிறான்
எம்பெருமான் -என்க .அவன் மேவி உறை கோயில் -என்னும் இடத்தில் -அவன் பரம பதத்தில் உள் வெதுப்போடே
போலே காணும் இருப்பது .சம்சாரிகள் படுகிற கிலேசத்தை அனுசந்தித்து -இவை என் படுகின்றனவோ  என்கிற
திரு உள்ளத்தில் வெதுப்போடே யாயிற்று அங்கு இருப்பது -4 10-2 — – என்னும் ஈட்டு ஸ்ரீ சூக்தியை
இங்கு நினைவு கூர்க-ஸ்ரீ வைகுண்ட விரக்தாய -என்றும் த்யக்த்வா வைகுண்ட முத்தமம் -என்னும் பரம
பதத்தில் வைராக்கியம் பிறந்து -அதனை விட்டு திருப்பதிகளிலே உகந்து அருளி பொருந்தி உள்ளமைக்கு
ஹேது-மலராள் புணர்ந்த பொன் மார்பினன் ஆனதால் .திவ்யதம்பதிகள் இங்கேயே
இமயத்து பரம பதத்தை துறந்து மறந்து ஒழிந்தனர்-என்க
திருமங்கை ஆழ்வாரைப் போலே –தான் உகந்த திருப்பதிகள் தொறும் மண்டி அனுபவிக்க புக்கு நிற்பவர்-எம்பெருமானார் -என்க -ஸ்ரீ ரங்கம்-கரிசைலம் -பெருமாள் கோயில் -அஞ்சன கிரி -திரு வேம்கடம் -முதலிய
திருப்பதிகளில் -புக்கு நின்று ரமிப்பது பிரசித்தம் -நம் ஆழ்வாருக்கு தனியே புகுமூர் திருக் கோளூர் ஒன்றே –
திரு மங்கை ஆழ்வார் என்னும் மட மானுக்கு –கரியான் ஒரு காளையோடு புகுமூர் அணியாலி ஒன்றே –
எம்பெருமானாருக்கோ திருப்பதிகள் அனைத்தும் பரிவாரத்துடன் புகுமூர் ஆயின –
மூவரும் பிரகிருதி சம்பந்தத்தால் உள்ள நசைதீர்ந்து -பகவானை அனுபவிப்பதில் உள்ள -ஆசையாலே புகுவார் ஆயினர் .திரு மங்கை ஆழ்வார் அருளி செய்த -பதியே பரவித் தொழும் தொண்டர் -பெரிய திரு மொழி -7 1-7 – -எனபது எம்பெருமானாரையும் அவர்  கோஷ்டியையும் கருதியே போலும் .
யோகம் தொறும் இன்னிசை மன்னும் இடம் தொறும் பதி தொறும்
அவற்றை அனுபவிக்க அவாவிப் புகுந்து நிற்கிறார் எம்பெருமானார் .
நிற்றல்-ஈடுபட்டு மெய் மறந்து நின்றால்
இனி இவற்றில் புகாத போது கால் பாவி நிற்க மாட்டாது -புகுந்து பின்னர் தரித்து
கால் பாவி நிற்கிறார் -என்னலுமாம் .
இதனால் எம்பெருமானாருடைய பக்தி வளம் விளக்கப் பட்டதாயிற்று .
குணம்-அறிவு முதலிய ஆத்ம குணம்
கொண்டல்-வள்ளன்மையால் வந்த ஆகு பெயர் .
மேகம் போலே ஆத்ம குணங்களை அனைவருக்கும் வழங்கும் வள்ளல் -என்றபடி .
இனி நிற்கும் -என்பதை பெயர் எச்சமாக கொள்ளும் போது
புக்கு நிற்கும் குணம் எனபது பக்தி ஆகிறது .புக்கு நிற்கும் பக்தியை வழங்கும் வள்ளன்மை படி
கொண்டல் என்று எம்பெருமானார் அப்பொழுது கொண்டாடப் படுகிறார் -என்க .
நிற்கும் குணம் திகழ் கொண்டலான  இராமானுசன் எம் குலக்கொழுந்து -என்று முடிக்க -கொழுந்து -தலைவர்
இனி கொழுந்து -என்று உருவகமாய் –குலம் -வேராய்
தாம் கொழுந்தாய் வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போலே
இக்குலத்துக்கு ஒரு தீங்கு வரில் முற்படத் தம் முகம் வாடி இருக்குமவர் என்றுமாம் .
குலம்-ஞான குலம்-பிரபன்ன குலம் -என்க .
இப்பாசுரத்திலே முறையே
பிரமாதாக்களும் -பிரமாணத்தை கொண்டு அறிபவர்கள்-பிரமாணமும் –
ப்ரமேயங்களும் -பிரமாணத்தால் அறியப்படும் அவைகளும் –
பேசப்பட்டு -அவற்றில் எம்பெருமானாருக்கு உள்ள பக்தி வளம் கூறப்பட்டது காண்க .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது –

இப்படி எம்பெருமானாரின் ஞான வைபவத்தை இவர் அருளி செய்ய கேட்டவர்கள்-அவர் தம் உடைய பக்தி வைபவம் இருக்கும் படி என் என்ன /வேத மார்க்க பிரதிஷ்டாபனம்/பாக்ய மதம் நிரசனம்/ வேதார்த்த ஞானம் பரி ஞானம்/உபதேசித்தும் படியை கீழே அருளி செய்து ஞான பரி பாகமாக இதில்/பகவத் பாகவத விஷயங்களிலும் தத் உபய வைபவ பிரதி பாதக மான திரு வாய் மொழியிலும்/அவர்க்கு உண்டான ப்ரேமம் இருக்கும் படியை அருளி செய்கிறார் /பிரமத்தை அறிந்தவர் மோஷம் என்பதால் – /ஞானத்தால் மோஷம்-வாக்ய ஞானம் -இல்லை பக்தி கலந்த ஞானம் வேண்டும்..பக்தி -கலக்கம் /சரண்  அடைவது மூன்று வகை பட்டவர்களும்/அஞ்ஞானத்தாலே அஸ்மத்-நம் போல்வார்/ / பக்தி பாரவச்யத்தால் ஆழ்வார்கள் / /ஞான ஆதிக்யத்தால் ஆச்சார்யர்கள் //ஸ்வாமி ஆழ்வார் பரம்பரைக்கும் ஆச்சார்யர் பரம்பரைக்கும் பாலம் போல இருந்தவர்..அந்த பக்தி விஷயத்தை இதில் அருளுகிறார்..

திவ்ய தேசங்களில் புக்கு-பகவத் வைபவம்/ ஞானியர் யோகம் தோறும் புக்கு -பாகவத விஷயம்/ திரு வாய் மொழி பிரேமம் – நடுவில்-இரண்டு பக்கமும் சேர /மா தவ பக்த வட்சல்யன் -திரு பதி புக்க மா மலராள் தூண்ட –முதலில் பாகவத வைபவம் அருளியது உசந்தது என்பதால்

/சம்சார நச்சு மரம் -இரண்டு பழம் கேசவ பக்தி/ அடுத்து அடியார் பக்தி/துல்ய விகல்பம் இல்லை  விவச்தித்த விகல்பம் என்பார் ஸ்வாமி/ தேவை பக்தர் பக்தி .அது கிடைக்காவிடில் கேசவ பக்தி./ /பிர பன்ன குலத்துக்கு தளை-கொழுந்து- குணம் திகழ்-ஆத்மா குணங்களுக்கு சாந்தி சம தம -கொண்டல் –கொடுத்த வள்ளல் –எம் குலம்-ஞான குலம் பிர பன்ன குலம் -தலைவர்/உணர்ந்த -மெய் ஞானிகள்-தத்வ யாதாக்த்ய ஞானம் -தெரிந்து கொள்ள வேண்டியதில் உள் பொருள்- அறிந்து அறிந்து தேறி தேறி /யோகம்-சேர்க்கை கூட்டு -தோறும் -படித்தவர்கள் திருவடியில் ராமர்-ரிஷிகளுன் கால்  அடியிலே மண்டி -பெருமாள்-ஸ்வாமி  பாகவதர்களின் கூட்டம் பிரிய மாட்டார்/ 700 சன்யாசிகள் 10000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் கூடவே இருக்க காண கண் கோடி வேண்டுமே/ திரு வாய் மொழி மணம் உடையவர்  சொன்னதால் மணக்குமாம்./.இன் இசை /நிரந்தரமாக இருக்கும்-பாவின் இன் இசை பாடி திரிவனே-ஸ்வாமி அது போல இதில் ஈடு பாடு/விலஷணமான இசை/நாத முனிகள் அருளியது/

மதுரகவியே பாவின் இன் இசை பாடி திரிவனே- என்பதால்-முன்னமே இசை உண்டு நாத முனிகள் இசை உடன் பெற்றார் ஆழ்வார் இடம் இருந்து-ஆழ்வாரே இடம்/யோக ரகசியம் முற்று உணர்ந்தவர் /மன்னும்-நிரந்தரமாக இருப்பார்/ ஸ்ரீமத் பாகவதம் பாடும் இடம் எல்லாம் கன்று குட்டி -தாய் பசு போல கண்ணன் போவதுபோல /இடம் தோறும்-எல்லா  இடங்களிலும் கேட்டு கொண்டு இருப்பாராம்/ ஸ்ரீ ராமயணத்துக்கு  திருவடிக்கு மணை போட்டு இருப்பது போல–திரு வாய் மொழிக்கும் சுவாமிக்கு மணை போடணும்..இன்பம் பயக்க எழில் மாதர் தன்னோடும் அவனே இனிது கேட்பானேஸ்வாமி கேட்க கேட்க வேண்டுமா -மிதுன்மே அங்கே இருக்க -/மா மலராள் புணர்ந்த பொன்-அழகிய- மார்பன் பொருந்தும்-உகந்து வர்த்திக்கும்-நித்ய வாசம் தாமரை பிறப்பிடம் மறந்து -தண்ணீர் தண்ணீர் என்று  இவளே வாய்வெருவ வைக்கும் திரு மார்பு/உகந்து அருளி வர்த்திக்கும் தேசங்களில் அனைத்திலும் -ஸ்வாமி அனுபவித்து கொண்டு இருப்பார் /மார்கண்டேயர் ப்ருகு காவேரி பிரகலாதன் கற்ப கிரகத்தில் இருப்பார்கள்–திருப்பதிகள்  தோறும் புக்கு-கைங்கர்யத்தில் ஆசை கொண்டு புகுந்து நிற்கும் ஸ்வாமி/-பல்லாண்டு அருளி நிற்பார்  ஆழங்கால் பட்டு–/இவர் இது அவரின் பக்தி வைபவம் இருந்த விசேஷம். -கதய த்ரயம் அருளி ஸ்ரீ ரெங்கத்தில் வசித்து இருந்தாரே / /யோகத்தில் முதிர்ந்த நிலை திவ்ய தேச கைங்கர்யம் //லோக சன்க்ரகம் முன்னோடி-பின்னோர்க்காக அடுத்த வழி பின் பற்றனும் /யோகம்-கூட்டுறவு/ கொழுந்து-தளிர் /கேசவ பிரியை திரு துழாய்-நான்கு  இதழ்கள் சேர்ந்து பறிக்கனும் / இசை மணம் தருகை -செவ்வி பாட்டை உடைத்தாய் இருக்கை/ இசை மணம் தருவது -குற்றம் இன்றி அழகாய் இருப்பது /பாகவத பாகவத வைபவமும்/திடுவாய் மொழி ஈடு பாடும் சர்வ விஷயமாக கொடுத்த வள்ளல் /உணர்ந்த மெய் ஞானம்-ஞான த்ரயம்  அர்த்த பஞ்சகம்/ பக்தி ஞான விகாசம்-படி படியாக உணர்த்து – ஸ்ரீய  பதி சர்வ சேஷி/ சமஸ்த கல்யாண குண மயன்- ஆனந்த மயன்/சர்வ கந்த சர்வ ரச -சுயம் போக்கியம் –பரத்வன்  அவன் ஒருவனே என்று உணர்ந்து சுலபம் மெய் ஞானம்–ததீய நிலை ஒவ் ஒன்றிலும் -அர்த்த பஞ்சகம்-உணர்ந்து மெய் ஞானம் / ஸ்வரூபம்  ரூப குண விபூதி  சேஷ்டிதங்கள்  அனைத்தையும் கட்டடங்க அனுபவித்து

ஈர நெல் விளைவித்து முதல்பர பக்தி பர ஞான பரம பக்தி -வளரும் வரை -அறிந்து பார்த்து அடைதல்/ஆழ்வார் இருக்கும் இடம் தோறும்-வைஷ்ணவர் இருக்கும் இடம் ஹரி அங்கு ஸ்வாமி -புலவர் நெறுக்கு  உகந்த பெருமான்-–அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் // தனி மா தெய்வம் தளிர் அடி கீழ் புகுதல் அன்றி– நனி மாகலவி   இன்பம் அடைதல்/அப் பொழுதைக்கு  அப் பொழுது ஆரா அமுது /அயர்பிலன் தழுவுவன் /பெண் உடை உடுத்து தூது விட்டு மடல் எடுத்து /உண்மையான மெய் ஞானி என்று ஆழ்வார்களை சொல்ல குறை இல்லை/குறையல் பிரான் அடி கீழ் ஸ்வாமி எழுந்து அருளி இருக்கிறார்  இன்றும் நாம் சேவிக்கும் படி-ஆழ்வார் உடன் சேர்த்தி திரு மஞ்சனம் இன்றும்  சேவிக்கலாமே திரு குருகூரில்-/இயற்ப்பாவில் வ்யாவர்த்தி -திரு வாய் மொழி- பக்தாம்ர்தம் /சப்த ராசி/துழாய் முடியானை-பரிமளம்  மிக்கு-சர்வ கந்தன்-

/உடைந்து நோய்களை ஒடுவிகும் பலன் /இன் இசை யாழின் இசை வேதத்தின் இயல்/ தொண்டர்க்கு அமுது உண்ண/இசை கூட்டி சேவை/முகர்சி உறுமோ-மா மலராள் புணர்ந்த பொன் மார்பன்-அழகிய பத்மம் இருப்பிடம் -அகல கில்லேன் இறையும்/பொன்னை போன்ற மார்பன்/ புணர்ந்த படியால் பொன் ஆன மார்பன்/உகந்து -திண்ணம் திரு கோளூர் புகுவர் -தனித்து  போனதால்/கலியன் அணி  ஆலி புகுவர் கொலோ -சேர்ந்து போனதால்// ஸ்வாமி எல்லா திவ்ய தேசங்கள்  /பொருந்தும் பத்தி/ பொருந்தாத பத்தி-பரம பதம்/அங்கே பகல் விளக்கு பட்டு இருக்குமே அவன் சீலாதி குணங்கள்// திரு கண்டேன் -,பொன் மேனி கண்டேன் போல மா மலராள் – பொன் மார்பன் /காஞ்சி -முதலில் கூட்டி வந்த தேசம்.-நம் பெருமாள் -நியமனத்தால் வர்த்தித்து / வட மதுரை போல காஞ்சி -ஆய்ப்பாடி போல திரு அரங்கம்//பதியே பரவி தொழும் தொண்டர் /அநு- பல படிகளாக பிரவேசித்ததும்-புக்கு / . களை பறித்து நிர்வாகம்/புனர் உத்தாரணம் செய்தும்/ஆழங்கால் பட்டு பரம பக்தியால் மங்களா சாசனம் பண்ணி கொண்டே புக்கு நிற்கும்–நின்று புக்கார் புகுந்தால் தான் தரித்து நிற்பார் புகுந்த படியால் தான்.–அவனுக்கு ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹாரம் போலே ஸ்வாமிக்கு இந்த மூன்று ஆகாரங்கள் -உணர்ந்த மெய் ஞானி விட ப்ரீதி அதிகம் /–அவர்கள் கலங்கி பாடி விட்டு போக-/ இவர் தானே ரஷித்து நிர்வகித்து இருந்தார் /மூன்றையும் இறையும் அகல கில்லாதே ஆழம்  கால் பட்டு இருக்கும் குணம் திகழ்   கொண்டல்/தூ முறுவல் வாழி சோறாத துய்ய  செய்ய முக சோதி வாழியே/ஞான பக்தி வைராக்யம்/ பிர மாத வைபவம்/ பிர மாணம் வைபவம்

/பெரிய பிராட்டியார்/ மையல் ஏற்றி மயக்கும் பிரபாவத்தையும்/ஜல ஸ்தல விவாகம் இன்றி வர்ஷிக்கும் மேகம்/சர்வ அதிகாரமாக சர்வ ஜனங்களுக்கும் என்றும் கொடுத்து உபதேசித்து அருளும்/ ஸ்ரீ வைஷ்ணவ பிரபன்ன குலம்/விருஷமாக படரவும்-பழத்துக்கும் மூலம் கொழுந்து /குலம்-வேர் ஸ்வாமி-கொழுந்து-வெப்பம்  வேருக்கு வந்தால் கொழுந்து  முதலில் வாடும் /எம் குல கொழுந்து என்றது -எங்கள் குலம் வேராய்–தாம் கொழுந்தாய் கொண்டு/ வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமா போல-இக் குலத்துக்கு ஒரு தீங்கு வரில் முற்பட தம் முகம் வாடி இருக்கும் அவர் என்றுமாம்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: