அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-59-கடளவாய திசை எட்டினுள்ளும்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
ஐம்பத்தொன்பதாம் பாட்டு-அவதாரிகை –
இவர் இப்படி வித்தராகிற இத்தைக் கண்டவர்கள் -இவர் இது செய்திலர் ஆகிலும் -சேதனர்
பிரமாணங்களைக் கொண்டு நிரூபித்து -ஈஸ்வரன் சேஷி-என்று அறியார்களோ -என்ன –
கலியுக பிரயுக்தமான அஞ்ஞான அந்தகாரத்தை எம்பெருமானார் போக்கிற்றிலர் ஆகில்
ஆத்மாவுக்கு சேஷி ஈச்வரனே என்று நிரூபித்து ஒருவரும் அறிவார் இல்லை-என்கிறார் .
கடளவாய திசை எட்டினுள்ளும் கலி யிருளே
மிடை தரு காலத்து இராமானுசன் மிக்க நான்மறையின்
சுடர் ஒளியால் அவ் இருளைத் துரந்திலனேல் உயிரை
யுடையவன் நாரணன் என்று அறிவார் இல்லை யுற்று உணர்ந்தே – -59 –
சதுச்சாகர பர்யந்தமான சர்வ திக்குகளிலும் கலி பிரயுக்தமான அஞ்ஞான ரூப தமச்சே நெருங்கி
வர்த்திக்கிற காலத்திலே எம்பெருமானார் -சர்வ பிரமாண உத்க்ருஷ்டமான சதுர் வேதத்தின் உடைய
நிரவதிக தேஜச்சாலே -அந்த தமச்சை ஒட்டிற்று இலர் ஆகில் -ஆத்மாவுக்கு சேஷி யானவன் –
தன்னை ஒழிந்தது அடங்கலும் தனக்கு பிரகாரமாக -தான் பிரகாரியாய் இருக்கையாலே -நாராயண –
சப்த வாச்யனானவன் என்று கொண்டு -உற்று அனுசந்தித்து -அறியத் தக்கார் இல்லை .
மிடைதல்-நெருங்குதல் / சுடர் என்றும்  ஒளி என்றும் பர்யாயமாய் -மீமிசைச் சொல்லாய் -மிக்க ஒளி -என்றபடி -/ துரத்தல்-ஒட்டுதல் .
ஞானம் கனிந்த நலம் -பக்தி ரூபாபன்ன ஞானம் -மதி நலம் -மதிக்கடல் -சேமுஷீ பக்தி ரூபம் -ஞானம் பக்தி வைபவம் இரண்டையும் கொண்டாடுகிறார் –
கலி இருளே -ஏவ காரம் –துக்கமேயாக —
ஆத்மா நாராயண பர –
கலி =தோஷ நிதி -/ மிக்க நான்மறை -சுடர் ஒளி -விசேஷணன்கள்-உடன் -அருளி -/ஆச்சார்ய தேவோ பாவ -ஞானம் -சாவி கொண்டு திறந்து அவனைக் காட்டி -/ பதிம் விஸ்வஸ்ய–/ உற்று அறிவார் -விசததமமாக அறிவார் -/
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை -எம்பெருமானார் வேத உத்தாரணம் பண்ணி அருளினார் என்றும் -தத் அர்த்த
உத்தாரம் பண்ணி அருளினார் என்றும் கீழ் எல்லாம் படியாலும் சொன்னீர் –அவர் இப்படி செய்தார் ஆகிலும் –
பிரமாதக்களான சேதனரும் நித்தியராய் -பிரமாணங்களான  வேதமும் நித்தியமாய் இருக்கையாலே -அவர்கள்
அந்த வேதத்தை அடைவே ஓதி -தத் ப்ரதிபாத்யனான நாராயணனே ஆத்மாக்களுக்கு சேஷி என்று தெளிந்து –
உஜ்ஜீவிக்கலாகாதோ என்று சொன்னவர்களைக் குறித்து -கலி இருளானது லோகம் எல்லாம் வியாபித்து
தத்வ யாதாம்ய ஜ்ஞானத்துக்கு பிரதிபந்தகமாயிருக்கையாலே   -எம்பெருமானார் திருவவதரித்து -சகல
சாஸ்திரங்களையும் அதிகரித்து -அவற்றினுடைய நிரவதிக தேஜச்சாலே அந்த கலி பிரயுக்தமான அஞ்ஞான
அந்தகாரத்தை ஒட்டிற்றிலர் ஆகில் -நாராயணன் சர்வ சேஷி என்று இந்த ஜகத்தில் உள்ளோர் ஒருவரும்
அறியக் கடவார் இல்லை என்கிறார் –

வியாக்யானம்  –

கடல் அளவாய திசை எட்டின் உள்ளும் -சதுஸ் சாகர பர்யந்தமான அஷ்ட திக்குகளின் உடைய
ஆந்த்ரமான பிரதேசம் எல்லாம் –சதுஸ் சமுத்திர முத்ரிமான பூமிப் பரப்பு எல்லாம் என்றபடி -கலி இருளே-மிடை தரு காலத்து -கலேர்த்தோஷநிதே -என்னும்படியான -கலி புருஷன் தன்னுடைய ஸ்வ பாவத்தாலே
லோகத்தார் எல்லார்க்கும் ஞான பிரம்சத்தைப் பண்ணி வித்தும் -சன்மார்க்கத்தை மூலையடியே நடப்பித்தும் –
போருகையாலும் தத் பிரயுக்தமான அஞ்ஞா நத்தாலே நெருங்கி எங்கும் ஒக்க வியாபித்துக் கொண்டு
வர்த்திக்கும் காலத்திலே–கலி சாம்ராஜ்யம் பண்ணுகிற காலத்திலே என்றபடி –மிடைதல் -நெருங்குதல்
இராமானுசன் -விண்ணின் தலை நின்றும் மண்ணின் தலத்து உதித்த எம்பெருமானார் -மிக்க நான் மறையின்
மிக்க வேதியர் வேதத்தின் உட்-பொருள் -என்றும் –சுடர்மிகு சுருதியுள் – என்றும் சொல்லுகிறபடியே சர்வ பிரமாண
உத்கர்ஷ்டமாய் -சர்வேச்வரனுடைய ஸ்வரூப ரூப குண விபூதிகளை அடைவே பிரகாசிக்கக் கடவதாய் –
அபௌருஷமாய் -நித்ய நிர்தோஷமாய் -ரிக் யஜூர் சாம அதர்வண ரூபேண நாலு வகைப்பட்டு இருக்கிற
வேதத்தினுடைய –சுடர் ஒளியால் -சுடர் மிகு ஸ்ருதியாகையாலே அந்த வேதத்தின் உடைய சுடர் வளர்ந்து
அவைதிக சமயங்களை எல்லாம் நிர்மூலமாக்கி -பின்னையும் மேல் மேல் என ஒளி நெருங்கி வருகையாலே
சுடர் ஒளி -என்று பிரயோக்கிகிறார் -அப்படிப்பட்ட நிரவதிக தேஜச்சாலே -அவ்விருளை -அஞ்ஞான திமிராந்தச்ய –
அஞ்ஞானத் வாந்த ரோதாத் -என்கிறபடியே கலி புருஷனாலே ப்ரவர்த்திக்கப் பட்ட பாபங்களாலே உண்டாய்
இருக்கிற அஞ்ஞான அந்தகாரத்தை –துரந்து இலனேல் -பிரமாணமும் அநாதியாய் நித்தியமாய் -பிரமாதக்களும்
அநாதியாய் நித்தியமாய் -காலமும் அநாதியாய் நித்தியமாய் -கொண்டு இருந்தாலும் ஒருத்தர் ஆகிலும்

வேதார்த்ததை சுயமாகவே தெளிந்து உஜ்ஜீவித்தார் என்று ஒரு சாஸ்திரமும் சொல்லக் கேட்டதில்லை –

யஸ்ய தேவே பராபக்திர் யதாதே வேததா குரவ தஸ்யை தேகதிதா  ஹ்யர்த்தா பிரகாசந்தே மகாத்மன –
என்றும் ஞானா ஞ்ஜனசலாகயா -என்றும் சஷூ ருன்மீலிதம் எனதச்மைத த்குரவே நம –  நாராயணோ
பிலிக்ர்தம் யாதிகுரோ பிரச்யுதச்ய துர்ப்புத்தே -என்றும் -கமலம் ஜலதா பேதம் சோஷயதிரவிர் ந் தோஷயதி –
என்று ஸ்ருதி ஸ்மரதி யாதிகளிலே சொள்ளப்படுகையாலும் -என்றும் அனைத்து உயர் க்கும் ஈரம் செய் நாரணனும்-அன்று தன் ஆரியன்  பால் அன்பு ஒழியில் நின்ற புனல் பிரிந்த பங்கயத்தை பொங்கு சுடர் வெய்யோன் அனல்-உமிழ்ந்து  தான் உலர்த்தி யற்று -என்று அருளாள பெருமாள் அருளிச் செய்கையாலும் -ஸ்வ அபிமானத்தால்
ஈஸ்வர அபிமானத்தை குலைத்து கொண்ட இவனுக்கு ஆசார்ய அபிமானம் ஒழிய கதி இல்லை என்று பிள்ளை
பலகாலம் அருளிச் செய்யக் கேட்டிருக்கையாய் இருக்கும் -என்கையாலே -சும்மனாதே கை விட்டோடி தூறுகள்
பாய்ந்தனவே -என்கிறபடி ஓடிப் போம் படி பண்ணுகை அன்றிக்கே -அவரவர் விதி வழி அடைய நின்றனரே -என்று
தடஸ்தனாய் இருந்து கொண்டு அந்த அஞ்ஞான அந்தகாரத்தை போக்குகைக்கு கர்ஷி பண்ணாதே ஒழிந்தால் –

துரத்தல் -ஒட்டுதல் –உயிரை உடையவன் நாரணன் என்று –பதிம் விஸ்வத்யாத்மேச்வரம்-என்றும் யச்சகிம் கிஜ்ஜகத் யச்மிந்தர்ச்தேச்ய  ச்ரூயதேபிவா -அந்தர்பஹிஸ்ஸ-தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும் -நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் -என்றும்-ய தண்ட மண்டாந்தர கோசரம் சயத்த சோத்தரான்ய வராணா நியா நிச -குணம் பிரதானம் புருஷம் பரமம் பதம்-பராத்பரம் பிரம்ம ச தேவி பூதய -என்றும் சொல்லுகிறபடியே தன்னை ஒழிந்தது அடங்கலும் பிரகாரமாய்-தான் பிரகாரியாய் இருக்கையாலே நாராயண சப்த வாச்யனான சர்வேஸ்வரன் இந்த த்ரிவித சேதன-வர்க்கத்தையும் தனக்கு சேஷமாக உடையானாய் இருப்பான் என்று -உற்று -அத்யவசித்து -விசதமாக தெளிந்து கொண்டு -அறிவார் இல்லை -அறியத் தக்கார் இல்லை -பிபேத்  அல்ப்ஸ் ருதாத் வேதொமாமயம் பிரதியிஷ்யதி -என்கையலே-அத்தாலே ஸ்வரூப நாசமே சித்திக்கும் இத்தனை ஒழிய ஸ்வரூப சித்தி இல்லை என்றது ஆய்த்து –நிரா லோகே லோகே நிரவதி பர சிநேக பரிதோ யதிஷ்மா பரத்தீ போயதி  ந கலு ஜாஜ்   வல்யத இஹா -அஹம்காரத்வாந்தம் விஜயதுகதம் காரமநகா  க்ர்தஸ் தத்யா லவ்லகம் குமதிமதபா தாள குஹாம் -என்றுஇவ்வர்த்தைத்தை அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
அத்வைதிகளை இங்கனம் வாதில் வென்றிலர் ஆயினும் -அறிவாளர்கள் பிரமாணங்களைக் கொண்டு –
நாராயணனே ஈஸ்வரன் ஆதலின் உலகமாம் உடலை நியமிக்கும் ஆத்மா வான சேஷி என்று அறிந்து கொள்ள
மாட்டார்களோ -என்று தமது ஈடுபாட்டை கண்டு கேட்பாரை நோக்கி -கலிகால வேதாந்தங்கள் ஆகிய
அத்வைதங்களாம் அக இருள் உலகு எங்கும் பரவி உள்ள இக் கலி காலத்தில்
எம்பெருமானார் அவ் விருளைப் போக்காவிடில் –ஆத்மாவுக்கு ஆத்மாவான  சேஷி ஈச்வரனே -என்று எவரும்
நிரூபித்து அறிந்து இருக்க மாட்டார்கள்-என்கிறார் .
பத உரை
கடல் அளவு ஆய -நாலு புறங்களிலும் கடலை எல்லையாக கொண்ட
திசை ஏட்டின் உள்ளும் -எட்டு திசைகளிலும் -அதாவது -எல்லா இடங்களிலும்
கலி இருளே -கலி காலத்தில் நேர்ந்த அத்வைத அஞ்ஞானமாம் அக இருளே
மிடை தரு காலத்து -நெருங்கி உள்ள வேளையிலே
இராமானுசன் -எம்பெருமானார்
மிக்க -பிரமாணங்களில் சிறந்த
நான்மறையின் -நான்கு வேதங்களின் உடைய
சுடர் ஒளியால்-சிறப்பு வாய்ந்த பிரகாசத்தினால்
அவ்விருளை-அந்த அக இருளை
துரந்திலன் ஆகில் -ஓட்ட வில்லை யானால்
உயிரை உடையவன் -ஆத்மாவுக்கே சேஷியான ஆத்மாவே இருப்பவன்
நாரணன் என்று -நாராயணன் என்று
கற்று உணர்ந்து -கவனித்து ஆராய்ந்து
அறிவார் இல்லை-தெரிந்து கொள்வார் இல்லை
வியாக்யானம் –
கடளவாய —மிடை தரு காலத்து
கடல் அளவாய திசை எட்டின் உள்ளும் -கடல் சூழ்ந்த பூ மண்டலம் எங்கும் -என்றபடி-
அங்கே பரவி நெருங்கி நின்றது கலி இருள் .
வானகமாய் இருப்பின் -அல்லது கிருத யுகமாய் இருப்பின் -நாரணனை உயிரை உடையவன்
என்று உற்று உணர்ந்து அறிவார் இருப்பார் .அங்கன் இன்றி -இருள் தருமமா ஞாலத்தில் –
கலி இருளும் பரவி -நெருங்கி இருத்தலின் -உற்று உணர்வார் இலர் ஆயினர் -என்க –
கலவ் ஜகத்பதிம் விஷ்ணும் சர்வஸ்ரஷ்டார மீச்வரம் நார்ச்ச யிஷ்யந்தி மைத்ரேய
பாஷண்டோபஹதா ஜனா -என்று
மைத்ரேயனே-கலி காலத்தில் மத நம்பிக்கை அற்றவர்களால் கெடுக்கப்பட்ட ஜனங்கள் உலகிற்கு சேஷியும்
அனைவரையும் படைப்பவனும் -நியமிப்பவனுமான விஷ்ணுவை வழி படப் போவது இல்லை-என்றபடி .
கலி காலத்தில் இறைவனை உள்ளபடி அறிய மாட்டாத இருள் உடைமை விஷ்ணு புராணத்தில்
பேசப் பட்டு உள்ளமை -காண்க –
எம்பெருமானார் காட்டி யருளிய பிரதான பிரதி தந்திரமாகிய சரீர -ஆத்மா பாவ ரூபமான சம்பந்தத்தை
அவர் காட்டா விடில் இந்நில உலகில் கலி காலத்தில் எவர் தான் அறிய வல்லார் –
பிரதான பிரதி தந்திரமாவது மற்றையோரிசையாது -நம் மதத்தவரே முக்கியமாக
ஏற்கும் பொருளாகும் .
அந்திம யுகே கச்சித் விபச்சித் தம் யதி வித்யாத் -என்று
கடைப்பட்ட யுக காலத்திலே –எம்பெருமானார் அருளிய பிரதான பிரதி தந்திரமான இந்த சரீர ஆத்மா பாவ ரூப
சம்பந்தத்தை ஒரு புலவர் பெருமான் அறிவானே ஆகில் -என்று வேதாந்த தேசிகனும் காலையில் அறிய
முடியாமையை காட்டினார் .அபேதத்தையே பற்றி நின்று -இதனை அறிய மாட்டாத

அத்வைதிகளைகளைப் பிரம மீமாம்சகர் என்றார் ஸ்ரீ பராசர பட்டரும் –கலி யிருளே மிடை தரு காலத்து –சிறிதும் வெளிச்சம் இன்றி இருள் அடர்ந்த காலத்தில்

நிராலோகே லோகே -வெளிச்சம் இல்லாத உலகிலே -என்றார் வேதாந்த தேசிகனும் யதிராஜ சப்ததியிலே
மிடைதரு -துணை வினை
மிக நான் மறையின் –துரந்து இலேனேல்
பிரமாண ங்களுக்குள் சிறந்தமை பற்றி மிக்க நான் மறை என்றார்
 சுடர் ஒளி-மீமிசை  என்பது போலே மிகுதியில் இரட்டிப்பு
அளவற்ற நான்மறை அளவை -பிரமாண -ஒலியால்-கலி இருளைத் துரத்தினார் எம்பெருமானார் -என்க .
வேதாந்த தேசிகன் -எம்பெருமானார் ஆகிய ஒளி விளக்கே இருளைத் தொலைத்ததாக –
நிராலோகே  லோகே நிருபத்தி பர சிநேக பரிதோ யதிஷ்மாப்ருத் தீப -என்று
வெளிச்சம் அற்ற உலகில் இயல்பாய் அமைந்த இறை பக்தியாம் நெய் நிறைந்த எதிராஜராம்
குன்றில் இட்ட விளக்கு -என்று அருளிச் செய்து இருப்பது இங்கு நினைவுக்கு வருகிறது .
சிறையிலே நள் இருள் கண் -ஞானத்தின் ஒளி உருவான கண்ணன் என்னும்
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கு வந்தது -வெளிச்சம் அற்ற நில உலகில்
கலி இருள் மிடை தரு காலத்தில் -பிரபன்ன குலத்தினில் யதிராஜர் எண்ணு குன்றில் இட்ட-விளக்கு வந்து ஜ்வலித்தது .
நான்மறை -என்றும் இருப்பினும் -அம மறையின் சுடர் ஒளி -கொண்டு இருளைத்

துறக்கும் திறமை எம்பெருமானார் ஒருவருக்கே உள்ளது என்க –

அவ்விருள் -அந்த மிடை தந்த கலி இருள் -வெகு தொலைவில் போய் விட்டமை பற்றி-
அதனை காணாது –அவ்விருள்-என்கிறார் -தத் இதி பரோஷே விஜா நீயாத் -என்று
அது என்னும் சுட்டி கண்ணுக்கு புலப்படாத இடத்தில் கொள்ள வேண்டும் -என்றது காண்க
இனி மிடை தரும் இருளின் கொடுமை பற்றி -அவ்விருள்-என்கிறார் ஆகவுமாம்-
தேச தோஷத்தலும் -கால தோஷத்தாலும் -நேர்ந்த அறியாமை தொலைந்தது -என்றது ஆயிற்று .
துரந்து இலேனேல் -பிறவினை பொருளில் வந்ததன்வினை
உயிரை உடையவன் –உற்று உணர்ந்தே
உயிர் -ஆத்மா-சாதி ஒருமை
உடையவன் -தனக்கு உடலாக உடையவன்
நாரணன்-நாராயணன் என்னும் வட சொல் சிதைவு

நாராயணன் என்பதன் பொருள் உயிரை உடையவன் என்பது –இனி இதனை விவரிப்போம்

நாராயண என்னும் சொல்
நார அயன என்னும் இரு சொற்கள் இணைந்த தொகைச் சொல்
இதனை நாரங்களுக்கு அயனமாய் உள்ளவன் என்று ஆறாம் வேற்றுமை தொகையாகவும்
தத் புருஷ சமாசம் -நாரங்களை அயனமாக கொண்டவன் -என்று அன் மொழித் தொகை -பஹூவ்ரீஹி சமாசம் –
ஆகவும் கொள்ளலாம் .நார என்பதற்கு ஜீவத்மாக்களின் திரள் என்பது பொருள்.
நரர் -அழிவு இல்லாத ஆத்மாக்கள் -அவற்றின் திரள்கள் நாரங்கள்-
நார   சப்தே ஜீவானாம் சமூஹா -பரிகீர்த்யதே -நார என்னும் சொல்லால் ஜீவாத்மாக்களுடைய
சமூகம் சொல்லப்படுகிறது -என்பது காண்க .
அயனம்-இடம்
வேற்றுமை தொகையில் ஜீவாத்மாக்களுக்கு இடமாய் -அதாவது -ஆதாரமாய் -இருப்பவன்
என்று பொருள் படுகிறது –என்றும் பிரியாது -ஆதாரமாய் உள்ள சேதனன் ஆத்மா என்ற லஷணத்தின் படி –
நாரங்கள் சரீரம் ஆகவும் -அயனமான பரமன் ஆத்மாவாகவும் ஆகிறான் .
.ஒரு பொருளை என்றும் தாங்கி நிற்கும் பொருள் ஆத்மா -என்றும்
அங்கனம் தாங்கப்படும் பொருள் சரீரம் என்றும் முறையே ஆத்மாவுக்கும் சரீரத்துக்கும் லஷனம் உணர்க .
இனி நாரங்களை அயனமாக கொண்டவன் -என்று அன் மொழித் தொகையாக கொண்டால்-
நாரங்களில் -சுருதிகளில் ஓதியபடி -அந்தர்யாமியாய் இருப்பவன் -என்று பொருள் படுகிறது .
அந்தர்யாமியாய் இருப்பவனே அதாவது உட் புக்கு நியமிப்பவனே ஆத்மா என்ற லஷணத்தின் படி
நாரங்கள் சரீரங்களாயும் -அவற்றை நியமிக்கும் இடமாக கொண்டவன்  ஆத்மா ஆகவும் ஆகிறான் .
உட் புக்கு நியமிக்கும் பொருள் ஆத்மா என்றும் அங்கனம்நியமிக்க படும் பொருள் சரீரம் என்றும்
முறையே ஆத்மாவுக்கும் சரீரத்துக்கும் லஷனம் உணர்க
.இங்கனம் உயிர் களை உடலாக உடையவன் நாரணம் என்னும் பொருளை எம்பெருமானார் காட்டிலரேல்-யாரே ஆராய்ந்து அறிய வல்லார் –
இனி உலகில் ஜீவாத்மா தன் பயனுக்காகவே உடலை பயன் படுத்திக் கொள்வது போல
பரமாத்மாவும் தனது போகம் அல்லது லீலை என்னும் பயனுக்காகவே எல்லாப் பொருளையும்
உபயோகப் படுத்திக் கொள்வதனால்-உடலுக்கு ஆத்மா போலே உலகிற்கு ஈஸ்வரன் சேஷி யாகிறான் -என்க .
பயன் உறுவது சேஷி என்றும் பயன் உறுத்துவது சேஷம் என்றும் உணர்க .
ஈஸ்வரனுக்கு உயிர்கள் சேஷமாய் இருத்தலின் -அவன் உகப்பாய் நோக்கி
பணி புரிதலே புருஷார்த்தம் ஆயிற்று -என்க .இவை எல்லாம் எம்பெருமானார்
இருளைத் துரந்து காட்ட நாம் கண்டவை -என்க
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

கடல் எல்லையாக கொண்ட-பொய்  நின்ற ஞாலம் -கலி இருள்-கலி ப்ரயுக்த மான அஞான ரூப தமசாலே நெருங்கி வர்த்திக்கிற காலத்திலேயே/தர்ம சாஸ்திரம் /மிடை-நெருக்குதல் /தேசமும் காலமும்  நீசம்/மிக்க நான் மறையின் -உளன் சுடர் மிகு சுருதியுள்/சுடர் ஒளியால்-இரண்டும் ஒரே அர்த்தம் மீமிசை இரட்டிப்பு /அர்த்தம் புரிய/தீபம் ஒளி ஆச்சா ர்யகளின் ஞானம் என்பதால் /சுடர் விட ஆரம்பித்து அது ஒளி கொடுக்க/அவ் இருள்-காணும்- சொல்லி கொள்ளாமல்  போயே போனது/படுத்திய பாடு நினைத்து அவ் இருள்-என்கிறார்/தானே வாதில் வென்றான்–சந்நியாசி வாதம் வரலாமா ?-/யாதவ பிரகாசர் முதலானவர் யக்ஜ மூர்த்தி–சாஸ்திர வரம்பு  துர் தசையில்   இருந்தால்  தன் நிலை விட்டாகிலும்  காக்கணும்-குறிப்பு என -தலையை அறுப்பதே கருமம்  -தொண்டர் அடி பொடி ஆழ்வார் அருளியது போல//விவேகம் -ராஜா -சந்நியாசி -வேதாந்த சித்தாந்தம் கூட்டி-வாதம் -சிஷ்யன் -சங்கல்ப சூர்யோதயம்/நம் போல்வார் இழக்க கூடாது என்று தன் நிலை/கீதா சார்யானும் தன் அடியார் பீஷ்மர் வாக்கை நிஜம் ஆக்க தானே ஆயுதம் எடுத்தால் போல/சேதனர் பிரமாணங்களை  கொண்டு  நிருபித்து ஈஸ்வரன் சேஷி-என்று அறியார்களோ என்ன-/கலி இருட்டை இவர் போக்காமல் இருந்தால் ஆத்மாவுக்கு சேஷி ஈச்வரனே-என்று நிரூபித்து ஒருவரும் அறிவார் இல்லை  என்கிறார்..//தேவ தாந்திர பஜனம் நிறைய பண்ணி கொண்டே இருக்கிறார்களே //அவர் அவர் விதி வழி அடைய நின்றனர்//ஆந்தனையும் சொல்லி திருத்தணும்//எம்பெருமானார் மிக்க -சர்வ பிரமாண உத்க்ருஷ்டமான  சதுர் வேதத்தின் உடைய .வேத சப்தம் கொண்டே அவனை அறிய முடியும்/பிர பல பிரமாணம் /நிரவதிக-சுடர்/ஒளி-தேஜஸ்/ஸ்வாமி சின்ன ஒளி கொடுக்க இன்று அளவும் ஒளி இட்டு கொண்டு இருகிறதே /இது கொண்டு ஸ்வாமி அந்த தமசை ஒட்டு இட்டிலர் ஆகில் ஆத்மாவுக்கு சேஷி ஆனவன்-நாராயணன் ஒருவனே என்று அறியாமல் திண்டாடுவோமே -என்கிறார்-,தன்னை ஒழிந்த தடங்கலும் தனக்கு பிரகாரமாக தான் பிரகாரயாய் இருக்கையாலே-நாராயண சப்த வாச்யன் ஆனவன் என்று கொண்டு உற்று  உணர்ந்து–அனுசந்தித்து  அறிய தக்கார் இல்லை என்கிறார் ./சுடர் ஒளி-மிக்க ஒளி/ துரத்தல்-ஒட்டுதல்/ மிடைதல்-நெருங்குதல் /அறிந்து அறிந்து தேறி தேறி  உணர்ந்து உணர்ந்து/ உணரிலும் இறை நிலை உணர்வு அரிது/ யாதாத்மா ஞானத்துக்கு கலி பிரதி பந்தம் /எங்கள் மாதவனே-பிறந்தும் பாசுரம்/ /கலி -தோஷ நிதி/பொய் நின்ற ஞானம் ஒரு படி பட இல்லாததால் / முதல் யுகம் நான்கு  கால்கள்  ஒவ் ஒன்றாக போக  கலியுகம்  ஒரே கால்/ -தர்ம சாம்ராஜ்யம் –கலி சாம்ராஜ்யம் அதற்க்கு எதிர் தட்டு –டம்பம் வரண ஆஸ்ரம தர்மம் மறைய – வாக்கு ஜாலம் .பணத்துக்கு எதையும் செய்வார் சொரூப நாசம் .மழை இன்றி பசி தாகம் மிகுந்து .. -குளிக்காமல் சாப்பிடுவார்கள் ஸ்ரார்த்த கர்மா குறையும்-குள்ளமாக பருத்து கொண்டே இருப்பார்கள் – நசிக்க  தேகமே பார்த்து ஆத்மா பார்க்காமல் -அதை எதிராஜ சாம்ராஜ்யம் -மிக்க நான்மறை சுடர் மிகு சுருதி நிலை நாட்டி /தீயதே நல்லதாக கொள்பவன் – மிக்க நான் மறையாளர்கள்/ /வூற்றம் உடையாய்-வேதத்தால்– பெரியாய்–சொல்லி முடிக்க முடியாது / பன்னலார்  பவிலும் பரனே உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -விபவம் ..பைலர்-ரிக்  ஜைமினி- சாம சுமந்து-அதர்வண  வைசம்பாயனர்- யஜுர்/மேல் மேலும் பெருகும் ஒளி-சுடர் மிகும்  சுடர் ஒளி/ அவ் இருளை ..அஞான அந்த காரம் -துரந்திலன் யேல் –மைத்ரேயர் பராசரால் பெற்றார் /வியாசர் ஜைமினி குரு சிஷ்யர் விரோதம்/ ஸ்வாமி பின் இல்லை //தெய்வத்தை காட்டி கொடுத்த குரு இடம் நன்றி/ அஞ்சனம் மை சாவி  போல ஞானம் திறந்து விட பிரமத்தை தெரிந்து கொள்கிறோம்/ ஆதியனின் செம்மை உடைய  தழலே -நீர் பசை அற்று போனால் அலர்தாமல்  உலர்துவான் /ஆரியன் பால் அன்பு இன்றி ..பொங்கு சுடர் வெய்யோன் அனல் உமிழ்ந்து /ஸ்வ  அபிமானம் இருந்தால் அவன் ஒழிந்து போவான் / குரு கடாஷம் இருந்தால் – சும்மணாதே கை விட்டு ஓடி விடுமே/ அவர் அவர்  விதி வழி அடைய நின்றனரே – உதா சீனமாய் பார்த்து கொண்டு இருக்கிறானே- ஆகாசம் நீர் சமுத்ரம் நோக்கி போகும் யாரை வணங்கினாலும் கேசவன் வணங்குவது போல . நாட்டினான் தெய்வங்கள் நல்லதோர் உய்யும் வண்ணம் -தடச்தனாய்..விழுந்தவனை தூக்க கரையிலே இருந்து வேடிக்கை பார்த்து இருக்கிறான் .. துரந்திலன் யேல்-தனக்கு இல்லை நமக்கு என்று -ஒட்டி . /உயிர் உடையவன் நாரணன் இருள் போனதால் கண்டதை சொல்கிறார் /-ஸ்ரீ வைஷ்ணவ பிர பன்ன குலம் கொழுந்து-மூலம் காரணம்/ குலம் வேர்/ ஸ்வாமி கொழுந்து ..குணம் உண்டு-வையம்  விபூதி உண்டு-அன்பே திரு கண்டேன்  மூன்றையும் சேர்த்து அகல கில்லேன்/உற்று -அத்சவித்து -சரீர ஆத்மா பாவம் -சாமானாதிகரணம்.. உயிரை உடையவன் நாராயணன் ../உற்று உணர்ந்து – நம்பி மனனம் பண்ணி. /எந்த வித பயன் எதிர் பார்க்காமல் அருளி-சோபாதிகம்– நிருபாதிகம்//காரணம் இன்றி நிஷ் காரணமாக தான் கொடுக்கிறான் -காரண விசேஷம் இன்னது என்று அறிய மாட்டாதத காரண விசேஷம்/ கசண்டு அற்ற நெய்யால் தீபம் ஏறிய / வேத உண்மை பொருளை காட்ட- ஸ்ரீ பாஷ்யம் -அருளி –நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் /எத் அண்டம் அண்டாந்தர கோசரம் /உயிர்களை அனைத்தையும் உடையவன் /பதிம் விச்வச்ய ஆத்மேச்வரம் /நிகரில் புகழாய் உலகம் மூன்று உடையாய் /சர்வ அதிகாரமாய் சர்வ காலத்திலும் சர்வருக்கும் /ஆழ்வார்கள் அருளி செயல் கொண்டே சூத்தரங்களை ஒருங்க விட்டார்/

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: