அமுதனார் கூறினதாகவுமாம் .
எம்பெருமானாருடைய வாதத் திறமையினால் அத்வைதிகள் ஆரவாரம் ஒடுங்கி வாய் மாண்டு நின்றனர் –
என்றபடி ..இனி ஸ்ரீ பாஷ்ய காரர் அவர்களை வாய் மாளப் பண்ணினதை ஒவ் ஒன்றாககக் கவனிப்போம் .
அதனை ஸ்ரீ பாஷ்ய காரர் எளிதில் வென்று விடுகிறார் .
நிர் விசேஷமான பிரம்மம் ஓன்று தான் உள்ளது ..மற்றவை அனைத்தும் பொய் என்பதைக் காட்டாது .
ஆதலின் -எந்த பிரமாணமும் அதைக் காட்ட இயலாது -குறிப்பிட்ட சத்வித்யா -வாக்கியம் ஒன்றை அறிந்தால்
உபாதான -குடமாக மாறப் போகும் மண் போலக் காரியப் பொருளாய் மாறும் காரணப் பொருள் -காரணமாகவும் –
நிமித்த -மண்ணைக் குடமாக மாற்றும் குயவன் போல காரியப் பொருளாக மாற்றும் பொருளான -காரணமாகவும் –
காட்டி-அந்நிலைக்கு ஏற்ப எல்லாம் அறிந்தமை -எல்லாம் வல்லமை -சத்யா சங்கல்பம் வாய்ந்தமை –
ச்வேதகுதுவுக்கு உபதேசம் செய்யப் புகுந்த இந்த பிரகரணம் நிர் விசேஷமான பிரம்மத்தை சொல்லுவதாக
கூறுவது இசையாது -என்கிறார் ஸ்ரீ பாஷ்ய காரர் .
ஸ்ரீ பாஷ்ய காரர் இங்கனம் அருளிய திரு வாக்கினை சிறிது விளக்குவோம் .
சோதக வாக்கியங்களில் வெறும் அறிவு வடிவமாய் பிரம்மம் உணர்த்தப் படுவதற்கு ஏற்ப -சதேவ -என்பது போன்ற
காரணத்வத்தைக் கூறும் வாக்கியங்கள் நிர் விசேஷ பிரம்மத்தை கூறுவதாக வியாக்யானம் செய்வது நேரியதாகாது .
எதனை கேட்டால்-மனனம் பண்ணினால் -அறிந்தால் –
கேளாததும் -மனனம் செய்யப் படாததும் -அறியப்படததும் –
கேட்டதும் -மனனம் செய்யப்பட்டதும் -நன்கு அறியப்பட்டதும் ஆகுமோ –
அந்த ஆதேசம்-பிரசாசனம் செய்யும் -பிரம்மத்தை கேட்டனையா -என்று ச்வேதகேதுவை நோக்கி தந்தை வினவுகிறான் .
இதனால் காரணப் பொருளான பிரம்மத்தை அறிவதனால்-
காரிய பொருளாகிய அனைத்தும் அறிந்ததாகும் என்று சொல்லப் படுகின்றது .
மண்ணாகிய காரணப் பொருளும் அதன் காரியப் பொருளும் அடுத்து திருஷ்டாந்தமாக
காட்டப் படுவதற்கு ஏற்ப இங்கனம் பொருள் கொள்வதே முறையாகும் .
பிரம்மம் ஒன்றே இருப்பதானால் மற்றை அனைத்தும் தெரிந்தவைகளாகி விட முடியாது .
மண் உருண்டை இருப்பதனால்-அதன் காரியப் பொருள்கள் எல்லாம் தெரிந்தவைகள் ஆகி விடுவது இல்லையே –
காரணப் பொருளினின்றும் வேறுபட்டு -இனி உண்டாகப் போகிறவை -எங்கனம் காரணப் பொருளை
அறிந்த மாதரத்தில் அறியப் பட்டவைகள் ஆகும் -என்று காரியப் பொருள் புதிதாய் உண்டாகிறது என்னும்
வைசேஷிக மதத்தைப் பற்றி கேள்வி எழும் பொழுது விடை இறுக்கப் படுகிறது .
——————————-என்று தொடங்கி -மண்ணின் மாறுபாடான நிலையே குடமாய் இருக்கும் நிலை –
அது புதிதாக உண்டானது அன்று -வடிவும் பெயரும் உபயோகமும் மாறினவே அன்றி பொருள் வேறு பட்டு இலது ..
மண் என்பதே உண்மையானது -குடம் உண்டான பின்பும் -மட்குடம்-என்று தோற்றுவதால் மண் குடமாவது
பிரத்யட்சம் ஆக தெரிகிறது .குடம் என்னும் அறிவும் பெயரும் வேறு பொருளாக ஆக்கி விட மாட்டாது .
நான் சுகம் உள்ளவன் -நான் துக்கம் உள்ளவன் -என்று ஒரே வடிவத்தில் அறிவும் சொல்லும் வேறு பாட்டு உள்ளன .
ஆதலின் சொல்லும் வடிவமும் -குடம் படம் -முதலிய வேறு பட்ட பொருள்களிலும் –
சுகி துக்கி -என்று ஒரே பொருளிலும் கூறப்படுவதால் அவை பொருள்களை வேறு படுத்த மாட்டா -என்கை-
மண் ஒன்றே உண்மையானது -அதன் விகாரமான பொருள்கள் அனைத்தும் பொய் என்பது கருத்தாயின் –
மண் சத்யம் என்று சொல்லப் பாட்டு இருக்க வேண்டும் -அங்கன் ————–என்னாது ———————————-என்று
மண் என்பதே உண்மை என்று ———–என்று என்னும் சொல்லை வழங்கியது பயன் அற்றதாகி விடும் .
மேலும் மண்ணின் விகாரங்கள் ஆகிய குடம் முதலியன பொய் ஆனால் -சத் -எனப்படும் பர பிரம்மத்துக்கு
மண்ணை திருஷ்டாந்தமாக காட்டி -அதன் விகாரங்களை பொய் என்பது பொருந்தாது -என் எனின் அவை
உண்மை பொருள்களாக உலகினில் தோன்றுகின்றன -எடுத்துக் காட்டாக காட்டப்படும் பொருளும் –
எத்தனுக்கு எடுத்துக் காட்டு காட்டுகிறோமோ -அந்த பொருளும் ஒரே மாதிரியான தன்மை வாய்ந்தவைகளாக
இருக்க வேண்டும் அன்றோ –சத் -எனப்படும் பொருளே உள்ளது -பிற யாவும் பொய் யானவை என்பார்க்கு
மண்ணின் விகாரமான குடம் முதலியன உண்மை பொருளாக தோன்றக் கூடாது அன்றோ –
பாரமார்த்திகமான உண்மை அவற்றில் இல்லை –
குடம் முதலியவை பாரமார்த்திகமாக -உண்மை நிலையில் -இல்லாதவைகளே –
வ்யவஹாரத்தில் -உலக நடையில் -உள்ளவைகளாக அவை தோற்றுகின்றன -என்னில்
மண்ணுருன்டையும் பாரமார்த்திகமாக இல்லாததையும் வ்யவஹாரத்தில் உள்ளது ஒன்றாயும் இருத்தலின்
காரணப் பொருள் பாரமார்த்திகமாய் உள்ளதாக கொள்ள இயலாமல் பொய் விடும் .வ்யவஹாரத்தில் உள்ளதாக காரணப் பொருள் அமைந்தாலே போதும் எனின் -குடம் முதலிய காரியப் பொருள்களும்
வ்யவஹாரத்தில் உள்ள பொருள்களே யாதலின் வேற்றுமை இன்றிப்போம் .
இனி குறிப்பிட்ட குடம் முதலிய மட கலங்களுக்கு மண் காரணம் ஆவது போலே –
பரப்ரம்மம் குறிப்பிட்டவற்றுக்கு காரணமான தன்று -உலகு அனைத்துக்கும் கரணம் என்கிறது —-என்று
தொடங்கும் வாக்கியம் .உலகு அனைத்தும் படைப்புக்கு முன்பு சத்தாகவே -ஒன்றாகவ -பிரித்து ஓன்று இன்றி -இருந்தது
என்கிறது இந்த வாக்கியம் .பின்னர் படைப்பு கூறப்படுதலின் படிப்புக்கு முன்பு என்று பொருள்
உரைக்கப் பட்டது .
இந்த வாக்கியம் மூன்று விதமான பேதமும் இல்லாமையை காட்டாது –
நேர் மாறாக அவை உள்ளமையைக் காட்டுகிறது –
முன்பு என்று காலம் உள்ளமையைக் கூறுவதால்-விஜாதீயமான -வேற்று இனத்தின் -பேதம் உள்ளமை தெரிகிறது .
ஒன்றே என்றமையால்-சஜாதீய -ஒரே இனத்தின் -பேதம் தோன்றுகிறது –
படைப்பைக்கு வேண்டிய அறிவாற்றல் முதலியவை தோற்றுதலின் -ஸ்வகத பேதமும் -குணம் முதலியன
தன் பால் உள்ளமை -தோன்றுகிறது .
சத் ஏவ -என்பது விஜாதீய பேதம் இல்லாமையையும்
அத்விதீயம் -என்பது ஸ்வகத பேதம் இல்லாமையையும்
ஸ்ருதின் —-முன்பு என்பது கூடாது என்றும் -நிர் விசேஷமாய் அன்றோ பிரம்மம் இருப்பது
இனி சத் ஏவ -என்பது விஜாதீயமான ஆசாத் அன்று என்பதைக் காட்டாதோ எனின் -காட்டும்
ஆயின் விஜாதீயம் என்கிற முறையில் காட்டாது
பின்னையோ எனில் சத்துக்கு விரோதி என்னும் முறையில் காட்டும் என்க –
ஏகம் ஏவ -எனபது தனியே பெயர் வடிவம் தோன்றாத படி -அனைத்தையும் தன்னுள்
ஒடுக்கிக் கொண்ட பிரம்மத்த்தை சொல்லுகிறது -காரண நிலையில் ஒன்றே எனபது மேலே
பல பொருளாகக் கடவேன் -பகுச்யாம் -என்பதற்கு ஏற்ப -பல பொருள்களாக போகிரே ஒரே பொருள்-என்றபடி .
எனவே மண்ணே குடம் முதலிய பல பொருள்கள் ஆவது போலே பிரம்மமே உலகமாக ஆகப் போவதனால்
உலகினுக்கு பிரம்மமுபாதான காரணம் எனபது பெறப்பட்டது .குடமாகிற மண் -கடத்துக்கு உபாதான காரணம்
ஆவது போலே -உலகமாக மாறப் போகிற பிரம்மம் உலகிற்கு உபாதான காரணம் -என்க..
அத்விதீயம் -எனபது மற்று ஒரு பொருள் இல்லாதது -என்றபடி .
ஏகமேவ -என்பதனால் உபாதான காரணம் எனபது தோன்றவே –
மண்ணைக் குடமாக்கும் நிமித்த காரணமாக குயவன் ஒருவன் இருபது போலே
நிமித்த காரணமாக பிரம்மத்தை தவிர -மற்று ஒரு பொருள் உண்டோ என்னும் கேள்வி எழும் போது –
மற்று ஒரு பொருள் இல்லை -என்கிறது அத்விதீயம் -என்னும் சொல் -பிரம்மம் ஒன்றே உபாதான காரணமும்
நிமித்த காரணமும் என்றது ஆயிற்று .-மண் அறிவற்ற பொருள் ஆதலின் அதனைக் குடமாகக
அறிவாளியான குயவன் தேவைப்பட்டான் -பிரம்மம் பலவாகக் கடவேன் என்று சங்கல்பம் செய்யும்
அறிவாளி ஆதலின் -ஆக்குவதற்கு மற்று ஒருவன் தேவை இன்றி -தானே உபாதான காரணமாகவும்
நிமித்த காரணமாகவும் ஆயிற்று என்று உணர்க -சங்கற்பம் செய்வதால் அறிவுடைமையும் –
படைப்பதால் ஆற்றல் உடைமையும் -தோன்றுகின்றன -.பல பொருள்களாக ஆவதனால்
சத்ய சங்கல்பமும் தெரிகிறது -அந்தர் பகித்ச ———-என்று ஜீவனை உடலாக கொண்டு உட் புக்கு
உள்ளமையாகிய அனுப்ரேவேசம் ஓதப்படுவதனால்-சர்வாந்தரத்வம் தெரிகிறது –
ஜீவனுக்கு உள்ளும் அனுபிரவேசம் அசேதனப் பொருளில் போலே கூறப் படுதலின்
ஜீவனையும் பிரம்மத்தையும் ஒன்றாக கொள்ள வழி இல்லை .———————————என்று
சத்தான பொருளை ஆதாரமாக கொண்டவைகளாக பிரஜைகளைக் கூறுவதனால் -சர்வத்துக்கும் ஆதாரமாய் இருத்தலும் சொல்லப்படுகின்றது ..இதனாலேயே சர்வ நியமனமும்
சொல்லப்பட்டது ஆகிறது .—————————————————————————————–ப்ருஹ் – 5-8 9- – என்று
நியமனத்தொடு -ஆதாரமாய் இருத்தலும் ஓதப்படுவது காண்க .
இங்கனம் அனைத்துக்கும் ஆதாரமாயும் -நியமிப்பதாயும் -எதனினும் உட் புக்கு இருப்பதையும் –
கூறப்படவே பிரம்மம் உலகினுக்கு ஆத்மா -என்றது ஆயிற்று ———————————–சாத் – 6-8 7– என்று
உலகம் அனைத்தும் பிரம்மத்தை ஆத்மாவாக கொண்ட உடல் எனப்படுவதும் காண்க –
ஆதாரமாய் உட் புக்குநியமிப்பது ஆத்மா என்றும் -ஆதேயமாய் -தாங்கப்படும் பொருளாய் -அங்கனம்
நியமிக்கப் படும் பொருள் உடல் என்றும் உணர்க .
ஆக -தேவன் நான் -மனிதன் நான் -என்னும் இடங்களில் சரீரத்தை சொல்லும் தேவன் முதலிய சொற்கள்
அச் சரீரத்துடன் கூடிய ஆத்மா பர்யந்தம் சொல்லுவது போலே -தத்தவம் அஸி -என்னும் இடத்திலும்
த்வம்-என்னும் சொல் ச்வேதகேதுவின் ஜீவாத்மாவை உடலாக கொண்ட ஆத்மாவாகிய பிரம்மத்தை சொல்லி –
கீழ்க் கூறிய தன்மைகள் வாய்ந்த பிரம்மமும் உனக்கு ஆத்மாவாய் அமைந்த பிரம்மமும் ஒன்றே என்கிறது .
ஆக சத்வித்யா பிரகரணம் முழுதும் நிர் விசேஷ பிரம்மத்தைப் பற்றியது அன்று -ச விசேஷ பிரம்மத்தைப் பற்றியதே
என்று தேறுகிறது .
கயிற்றில் தோன்றும் பாம்பு போன்றது -பிரம்மத்தினிடம் தோன்றும் உலகம் என்பதும்
பொருந்துவதாய் இல்லை -ஏன் எனில் கயிற்றை பார்ப்பவர்க்கு அமைப்பு ஒத்து இருத்தலின்
கயிற்றில் பாம்பு என்று மருள் -உண்டாகிறது .அது போல பிரம்மத்தை தவிர பார்ப்பவர் தனித்து இல்லாமையாலும் –
ஒப்புமை இன்மையாலும் -ப்ரமம்-மருள்-ஏற்பட வழி இல்லை .
இனி அவித்யா சபளிதமான பிரம்மமே பார்ப்பவராகவும் மருளுக்கு உரிய பொருளாகவும்
பிரமிக்கிறது என்று கொள்ளின் -ஸ்வ பிரகாசமாய் ஒளிரும் அறிவு வடிவமான அது எங்கனம்
அவித்யா சபளிதமாகக் கூடும் -ஞானத்தினால் பாதிக்கப் படுவதாய் அன்றோ அவித்யை உங்களால்
ஒப்புக் கொள்ளப் பட்டது -அறிவு வடிவமான பிரம்மத்தை அவ அறிவினாலேயே அளிவதான அவித்யை
சார்ந்து பிரமிக்க செய்யின் அவித்யை என்றும் அழியாது நிலை நின்று விடும் அன்றோ –
இனி ஸ்வரூப ஞானம் அன்று -ஞான ஸ்வரூபமாய் உள்ளது பிரம்மம் என்னும் அதனைப் பற்றிய
ஞானமே அவித்யைப் போக்க வல்லது என்னில் -அந்த ஞானமும் பிரம்ம ஸ்வரூபத்தை தவிர
வேருபடாமையின் -ஸ்வரூபத்தை பற்றிய ஞானமே அவித்யயை போக்க வல்லது -அன்று -என்று வேறுபாட்டிற்கு
இடம் ஏது-
இனி எங்கு எங்கு அஞ்ஞானம் போக்கடிக்கப் படுகிறதோ -அங்கு எல்லாம் போக்கடிப்பது
ஸ்வரூப ஞானம் அல்லாமல் பிரமாண ஞானமாகவே இருத்தல் பற்றி -இங்கும் பிரமான ஞானமே
அவித்யையை போக்க வல்லது என்று கொள்ளல் வேண்டும் -எனில்-கூறுவோம் .
கயிற்றில் பாம்பு தோன்றும் அஞ்ஞானம் -இது கயிறு -என்கிற பிரமாண ஞானத்தினால் போக்கடிக்கப்
பட வேண்டும் எனபது உண்மையே -கயிறு ஜடப் பொருள் -அது தன்னை தான் காட்டாது -ஆதலின் ஆங்கு பாம்பு
என்கிற ப்ரமம் ஏற்படுவது தகும் -இது கயிறு -என்கிற உண்மை பிரமாண ஞானத்தினால் அது போக்கடிக்கப்
படுவதுபொருந்துகின்றது .-பிரம்மமோ ஸ்வயம் பிரகாச சைதன்ய ரூபம் ஆதலின் அது பிரகாசியா நிற்க –
அதற்கு முரண்பட்ட ப்ரமம் -மருள்-ஏற்படுவதற்கே சிறிதும் இடம் இல்லை என்று தெளிக்க .
ஞான ஸ்வரூபம் பிரம்மம் -என்கிற ஞானத்துக்கு விஷயமாக பிரம்மத்தைக் கொள்ளின் அது பிரமேயம் –
அறியப்படும் பொருள் -ஆகி விடும் .ஆயின் அதுவும் பொய்ப் பொருளாம் .ஆகவே பிரம்மம் மருளுக்கு ஆஸ்ரயமாய்
இருக்கிறது என்னும் கொள்கையை கை விட்டே ஆக வேண்டும் ..————————————–என்னுமிடத்தில்
அதிஷ்டானத்தையும் அத்த்யாச்த்தத்தையும் சொல்லுகிற சொற்கள் பாதாயாம் சாமா நாதி கரண்யமாக
அமைந்து இருப்பதாக கொளல் ஆகாது .ஆத்மா என்றமையின் -சரீரம் ஆத்மா என்ற தொடர்பு பற்றி
வந்தது சாமாந்யாதிகரண்யம் என்று கொள்க –
உலகம் உண்மையானது -பொய் என்பதற்கு பிரமாணம் இல்லை .———————————————–எனபது போன்ற
சுருதிகள் பிரமநாத்மகம் அல்லாத பொருள்களே இல்லை என்கின்றனவே யன்றி வேறு பொருள்களே இல்லை
என்று கூற வில்லை .ஆக நிர் விசேஷ பிரம்மமே சத்யம் -மற்றவை அனைத்தும் பொய் -என்னும்-அத்வைத மதமே வேதம் ஓதும் வைதிக மதம் என்கிற நிரூபணம் தவறு என்று தெளிவுறுத்தப் பட்டது .
இனி அவர்கள் இரண்டாவதாக செய்த தத்வ நிர்ணயத்தையும் மிக எளிதில் வென்று விடுகிறார் ஸ்ரீ பாஷ்ய காரர் .
காரண வாக்யத்தில் நிர் விசேஷ பிரம்மம் பிரதிபாதிகப் படவில்லை -எல்லாம் அறிதல்-எல்லாம் வல்லமை -முதலிய
எல்லா விசேஷங்களும் வாய்ந்த ச விசேஷ பிரம்மமே பிரதி பாதிக்கப் படுகிறது என்று -முன்னரே நிரூபிக்க பட்ட படியால் –
காரண வாக்யத்தை அடி ஒற்றி ————————————என்கிற வாக்கியம் நிர் விசேஷ பிரம்மத்தை கூறுவதாக
கொள்வது ஏற்ப்பு உடைத்து ஆகாது .
இனி ————————————————————–என்கிற எதிர்மறை சோதக வாக்யத்திற்கு ஏற்ப சிருஷ்டி முதலிய
செயல்களும் குணங்களும் அற்றதாக ஒப்புக்– நாத முனி / எம்பெருமானார் ஆளவந்தார்-மூவரும் -கொள்ள வேண்டாவோ -எனின் –
நாத முனி / எம்பெருமானார் ஆளவந்தார்-மூவரும் –
கொள்ள கொல்ல வேண்டுமே அன்றி –
எந்தக் குணமும் எந்த செயலும் அற்றதாக கொள்வதற்கு இடமில்லை .இங்கனம் ஒப்புக் கொள்ளா விடின் –
பிரம்மத்துக்கு நித்யமும் -என்றும் உள்ளமையும் -ஒப்புக் நாத முனி / எம்பெருமானார் ஆளவந்தார்-மூவரும் –
கொள்ள முடியாமல் போய் விடும் .
ச்வேதாச்வதார உபநிஷத்தில் செயல் அற்றது என்று கூறும் இந்தப் பிரகரணத்திலேயே-
பிரம்மம் பிரமனை படைத்ததாகவும் -வேதங்களை அவனுக்கு அளித்ததாகவும் -பிரம்மத்தின் செயல்
கூறப் பட்டு இருப்பது கவனிக்கத் தக்கது .
பிரம்மத்துக்கு குணங்களும் செயல்களும் உண்டு என்னும் வாக்யங்களுக்கும் -இல்லை என்னும் வாக்யங்களுக்கும்
முரண்பாட்டை தவிர்ப்பதற்காக -குணமும் செயலும் உண்டு எனபது பொய் என்றும் -இல்லை எனபது மெய் என்றும்
கொள்வது முறை யாகாது .முரண்பாடு இருந்தால் அன்றோ இங்கனம் தவிர்ப்பது –
குணமும் செயலும் உண்டு எனபது அப்ராக்ருதமானவற்றை -இல்லை எனபது பிரகிருதி சம்பந்தத்தால் வந்த
ஹேய குணங்களையும் -செயல்களையும் என்று சாமான்ய விசேஷ நியாயத்தினால் பாகுபடுத்தினால்
முரண்பாடே இல்லை அன்றோ
ஆக —————————————–என்னும் வாக்கியம் சத்யத்வம் முதலிய வற்றோடு கூடின
ச விசேஷ பிரம்மத்தை சொல்லுகிறது என்று தான் கொள்ளல் வேண்டும் – நீலம் உத்பலம் என்னும் இடத்தில்
நீலத்வமும் உத்பலத்வமும் என்னும் இவற்றினோடு கூடிய ஒரே பொருள் சொல்லப்படுவது போலே –
சத்யத்வம் ஞானத்வம் முதலியவற்றோடு கூடிய பிரம்மம் என்னும் ஒரே பொருள் சொல்லப் படுகிறது என்று கொள்ள வேண்டும் .
சத்யத்வம் முதலியவை வெவ்வேறு தன்மைகள் ஆயினும் -அவை யனைத்தும் வாய்ந்தது பிரம்மம் என்று ஒரே பொருள் தான் .
ஆதலின் சாமா நாதி கரண்யம் நன்கு பொருந்துகிறது -அசத்தியம் முதலியவற்றின் நின்று வேறுபட்ட ஸ்வரூபம்
கூறப்படுவதாக கொள்வார்க்கு லஷணை கொள்ள வேண்டி வருகிறது –
இனி ஆன்மதத்துவமும் பிரம்மமும் வேறு பட்டவைகள் அல்ல -ஒரு பொருளே -என்பதும் –
ஆன்மாக்களுக்குள் பேதம் இல்லை -எல்லாம் ப்ரமமே -மருளே -என்பதுவும் ஏற்புடையன அல்ல
என்கிறார் ஸ்ரீ பாஷ்ய காரர் ..————————————————————————————————கட- 2-5 13- – ஸ்வேத -6 13- – என்கிற-சுருதி-ஜீவாத்மாக்கள் நித்தியமாய் இருப்பவர்கள் என்றும் -அவர்கள் பலர் என்றும் -அவர்களுடைய விருப்பங்களை
பிரம்மம் ஒன்றே நிறைவேற்றி வைக்கிறது என்றும் -விதிப்பதால்-
ஜீவான்மக்களுள் பேதமும் –
பிரம்மத்திற்கும் ஜீவான்மக்களுக்கும் பேதமும்
உணர்த்தப் படுகின்றன .இந்த சுருதி வாக்கியம் விருப்பங்களை நிறை வேற்றுவதை மட்டும் விதிப்பதாக
கொள்ளல் ஆகாதா -ஆத்மாக்களுடைய நித்யத்வத்தையும் பன்மையையும் -இந்த ஒரே வாக்யமே
விதிபதாக கொண்டால் வாக்ய பேதம் பிரசங்கிக்கும் -ஒவ் ஒரு நோக்கத்திற்கும் தனி தனி வாக்யங்களாக பிரிக்க நேரிடும் .
ஜீவாத்மாக்கள் பலவாய் இருத்தல் -உலகத்திலே நேரே கண்டு அறிந்தது ஆதலின் -அதனை இந்த சுருதி வாக்கியம்
விதிப்பதாக கொள்ளவது தகாது -தெரியாத விஷயத்தை தெரிவிப்பதால் அன்றோ சாஸ்திரம் பயன் பெறுகிறது .
ஆதலின் விருப்பங்களை நிறைவேற்றுதல் மட்டுமே விதிப்பதாக கொள்வதே தகும் -எனின் -கூறுதும் .தேகத்துடன் கூடிய ஆத்மா பலவாய் இருப்பதை உலகத்தில் நாம் கண்டு அறிந்து உள்ளோமே ஆயினும்
தேக சம்பந்தம் அற்ற பரிசுத்த ஆத்மாக்கள் நித்தியமாய் பலவாய் இருத்தல் நாம் கண்டு அறியாததே –
ஆதலின் அதனை சாஸ்திரம் கொண்டே அறிய வேண்டி இருத்தலின் அதனை இந்த சாஸ்திரம்
விதித்தே யாக வேண்டும் -என்று அறிக -தேஹத்துடன் கூடிய நிலையில் ஆத்மாக்கள் நித்தியமாய் இருத்தல்-
கூடாது ஆதலின் -நித்யத்துவத்துடன் கூடிய பன்மை-தேக சம்பந்தம் அற்ற பரிசித்த ஆத்மா ஸ்வரூபங்களுக்கு
கூடும் ஆதலின் இங்கே பரி சுத்தமான ஆத்மா ஸ்வரூபங்கள் பல எனபது சொல்லப் பட்டது ஆகிறது .
ஆகவே நித்யர்களாய் -பலராய் உள்ள சேதனர்கள் அனைவருக்கும் விருப்பங்களை பிரம்மம் ஒன்றே
நிறைவேற்றுவதாக அனைத்தையும் சேர விதிப்பதிலேயே இந்த வாக்யத்துக்கு நோக்கம் என்று கொள்ள வேண்டி இருக்கிறது .
இது —————————- எனப்படும் விசிஷ்ட விதிகளில் வாக்ய பேத பிரசங்கம் தோஷம் ஆகாது
இனி அஹமாத்மா குடாகேச சர்வ பூதாசய சத்தித – 18-20 என்று கீதாசார்யன் எல்லா உடல்களிலும்
ஆத்மாவாக தானே இருப்பதாக கூறி உள்ளானே -அதனால் எல்லா ஆத்மாகளுக்கும் ஒருவருக்கு ஒருவர்
பேதம் இல்லாமையும் -பிரம்மத்துக்கும் ஆத்மாக்களுக்கும் பேதம் இல்லாமையும் நன்கு புலப்படுகின்றன
அன்றோ -இங்கன் இருக்க -ஆத்மாக்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் பேதத்தையும் -பிரம்மத்துக்கும்
ஆத்மாக்களுக்கும் பேதத்தையும் உணர்த்தும் கீழ் சொன்ன சுருதி வாக்யத்தொடு முரண்பாடு இன்றி
கேதாச்சார்யன் கூறியதை எங்கனம் நிர்வஹிப்பது எனில் -கூறுவோம் .
ஜீவனுக்கு அந்தர்யாமியான ஆத்மாவே இருத்தலின் உடலையும் ஆத்மாவையும் ஒன்றாக
வழங்கும் மரபு பற்றி கீதாசார்யனால் அங்கனம் கூறப் பட்டது என்க-
சர்வம் சமாப் நோஷி ததோசி சர்வ -18 40- – என்று மேலே எல்லாவற்றிலும் அந்தர்யாமியாய்
வியாபித்து உள்ளே -ஆதலின் எல்லாப் பொருளுமாய் உள்ளே -என்று பேசப்படுவதும் இங்கு அறியத் தக்கது .
உபநிஷத்திலும் ——————————————————————–என்று வ்யபித்தளால் பிரம்மம்
சேதன அசேதன பொருள்கள் ஆனதாக ஓதப்பட்டு இருப்பதும் உணரத் தக்கது .
மேலும் சர்வ பூதாசய சத்தித -என்று பூத சப்தத்தை இங்கே வழங்கி இருப்பதும் கவனத்திற்கு உரியது .
அச் சொல் உடலை மாதரம் சொல்ல வில்லை -ஆத்ம பர்யந்தமான உடலைக் கொள்கிறது .
————————————–பூதங்கள் அனைத்திற்கும் ஹிம்சை செய்யல் ஆகாது என்னும் இடத்து உள்ள
பூத சப்தம் போன்றது இங்கு உள்ள பூத சப்தமும் என்று அறிக .அங்கு வேற்று உடம்புக்கு ஹிம்சை இழைத்தல்
இயலாது ஆதலின் ஆத்ம பர்யந்தம் கருதியாக வேண்டும் .இங்கும் அங்கனமே கருத்தின் ஆத்ம பர்யந்தமான தேகத்துக்கு
ஆத்மாவே இருத்தல் கூறப்பட்டது ஆகிறது .இங்கனம் அந்தர்யாமியாய் இருத்தலைப் பொறுத்து
சொன்னதாக கொள்ளாமல்-ஸ்வரூப ஐக்கியம் சொன்னதாக கொண்டால் ———————————————என்று
ஆத்மாக்களைப் பார்க்கிலும் பரமாத்மாவை வேறுபட்டதாக கீதையிலேசொல்வது முரண்படும் என்று உணர்க .
ஆக ஆத்ம தத்வத்தில் பேதம் இல்லாமையால் நிர் விசேஷ சித் மாத்ர பிரம்மம் ஒன்றே உள்ளது
என்று அத்வைதிகள் செய்த தத்துவ நிர்ணயமும் ஸ்ரீ பாஷ்ய காரரால் இவ்வாறு வெள்ளப் பட்டதாயிற்று . இனி மூன்றவதாக அவர்கள் செய்த மோஷ நிர்ணயத்தையும் மிக மிக எளிதில் வென்று விடுகிறார்
ஸ்ரீ பாஷ்ய காரர் .
மோஷம் என்னும் சொல்லுக்கு விடுதலை எனபது பொருள் ..
.வீடு எனபது அதன்நேர் மொழி பெயர்ப்பு சொல்லாகும் .-எதனின்றும் விடுதலை —
அசித்து பொருளாகிய பிரகிருதி தத்வம் அநாதி காலமாக ஜீவாத்மா தத்துவத்தை கட்டுப் படுத்தி
ஈஸ்வர தத்துவத்தை உணர்ந்து -அதனை நெருங்க ஒட்டாது தடுத்து -வருகின்றது .அத்தடை யினின்றும்
பெறும் விடுதலையே மோஷம் எனப்படுகிறது .
அறிவாளன் ஆகிய ஜீவாத்மாவை ஜடப் பொருளாகிய பிரகிருதி தத்வம் தன்னுள் அகப்படுத்தி –
அறியாமை க்கு உள்ளாக்கி -விடுகிறது .அதாவது பிரகிருதி உடன் கூடிய ஆத்மாவை -இது பிரகிருதி
இது ஆத்மா -என்று பகுத்து உணர முடியாத வண்ணம் செய்து விடுகிறது ..ஆத்மா பிரகிருதி உடன் கூடி இருத்தல் ஆவது –
பிரளய காலத்தில் சூஷ்மமான பிரகிருதி தத்துவத்தில் ஒடுங்கி நிற்றலும்
சிருஷ்டி காலத்தில் பிரக்ருதியின் பரிணாமமான -மாறு பாடான -தேஹத்தொடு ஒன்றி நிற்றலுமாம் .
பிரகிருதி பரிணாமமான தேகத்தை பகுத்து உணராமையின் –தேகமே ஆத்மா -என்னும் விபரீத உணர்வு-மருள்-
ஏற்படுகிறது .ஆத்மாவை பகுத்து உள்ளவாறு இறைவனுக்கு உரியதாய் அவனுக்கு பாரதந்திரமான ஜீவாத்மாவை ச்வதந்திரமாக
காணும் அந்யதா ஞானம் -வேறு வையில் காணும் அறியாமை -ஏற்படுகிறது -இவ்விருவகை அறியாமையும்
அநாத்ம த்யாத்மா புத்திர்யா-என்று ஆத்மா அல்லாத தேஹத்தில் ஆத்மா என்றும் விபரீத உணர்வு என்றும் –
யோந்யதா சந்தமாத்மானம் அந்யதா ப்ரதிபத்யதே -என்று பாரதத்ரியமான ஆத்மாவை வேறு வகையில்
ச்வதந்த்ர்மாகப் பார்த்தல் என்றும் -பிரமாணங்களில் கூறப் பட்டு உள்ளமை காண்க –
இவ் வறியாமைகளால் ஜீவாத்மா புண்ய பாப ரூபன்களான கர்மங்களை செய்கிறான் –
அதனால் நல்ல அல்லது கேட்ட சரீரங்களை ஜீவாத்மா மீண்டும் மீண்டும் பெறுகிறான் .அந்நிலையே பந்தம் எனப்படுகிறது .அதனின்றும் விடுதலையே மோஷம் என்க .
ஆத்மா தத்தவத்தை வீடு பெறா வண்ணம் பிநித்தல்பற்றியே சரீரத்தை -யாக்கை -என்பர் தமிழில்
யாத்தல்-பிணித்தல் –
சரீரம் சத்த்வம் ரஜஸ் தமஸ் என்னும் முக் குணங்கள் வாய்ந்து உள்ளமையின் முறையே
ஞான சுகங்களில் பற்றுதலையும் –
புண்ய பாக ரூபமான செயல்களில் பற்றுதலையும் –
கவனிப்பு இன்மை சோம்பல் உறக்கம் -என்னும் இவற்றையும் உண்டு பண்ணி மீண்டும் மீண்டும் பிறந்து –
உழலுமாறு ஜீவாத்மாவை பிணித்துக் கொண்டு இருக்கிறது ..இத்தகைய சரீரத்தின் தொடர்பு அறவே
விட்டு நீங்குதலே மோஷம் எனப்படுகிறது .அந்நிலையே இயல்பானது .இயல்பான அந்நிலையில்
இறைவனைக் கிட்டி நின்று விட்டு பிரியாது அபஹத பாப்மத்வம் முதலிய எட்டு குணங்களுடன்
விண்ணகத்தில் விளங்குகிறான் ஜீவாத்மா -இதனையே ——————————————————————————-
இந்தஜீவாத்மா இச் சரீரத்தின் நின்றும் மேலே கிளம்பி பரம் ஜோதியான பரமாத்மாவைக் கிட்டி இயல்பான
தன ரூபம் வெளிப்பட்டவன் ஆகிறான் -என்று ஸ்ருதியும் ஓதுகிறது .இதனால் சரீர சம்பந்தம் நீங்கி
மேலே கிளம்பி பரம் ஜோதியான பரமாத்மா உள்ள இடமாகிய பரம பதத்தை அணுகி
இயல்பான தன்மை உடன் ஜீவாத்மா மிளிருவதே -மோஷம்-என்று நன்கு புலப்படுத்த தாயிற்று .
உண்மை இங்கன் இருக்க -அத்வைதிகள் -சத்-உள்ளது -என்றோ அசத் -இல்லது -என்றோ
சொல் ஒண்ணாத தோற அவித்யயை அநாதியாகக் கொண்டு அதனால் ஆத்ம ஸ்வரூபம்
மறைக்கப் படுவது -பந்தம் -என்றும் -அது நெஞ்குவது -மோஷம்-என்றும் சொல்லுகின்றனர் .——————————————————————————————————யஜூ- 2-8 9- – -என்னும் சுருதியை
அவித்யை உள்ளது என்றோ இல்லது என்றோ சொல்லொணாத ஒரு பொருள் என்பதற்கு பிரமாணமாக
அவர்கள் காட்டுகிறார்கள் .-ஒளிரும் அறிவு வடிவமான ஆத்ம ஸ்வரூபம் அவித்யையினால் மறைக்கப் படுவது
எங்கனம் பொருந்தும் -பொன் முதலிய பொருள்கள் வேறு பொருள்கள் கலப்பதனால்-ஒளியை
இழப்பது போன்றது இஃது என்று கூற இயலாது .ஒளியை மழுங்கப் பண்ணும் வேறு பொருளின் கலப்பு
உண்மையில் இல்லை அன்றோ -பின்னையோ எனின் – புஷ்பம் பக்கத்தில் இருக்கும் போது
ஸ்படிக்கக்கல் சிவந்து தோற்றுவது போலே -அவித்யையின் சம்பந்தினாலே ஆத்ம ஸ்வரூபத்தில்
தேஹம் தோற்றுகிறது .விவேகித்து பார்க்கும் போது-ச்ப்படிகம் சிவப்பு நிறத்தோடு ஓட்டற்று இயல்பான
வெண்மை உடன் மிளிருவது போலே -விவேக ஞானத்தாலே -தேஹத்தொடு ஓட்டற்று ஒளிரும் ஆத்ம ஸ்வரூபமே
இயல்பான நிலையில் மிளிருகிறது ..இதனையே ——————————–என்று தொடங்கும் சுருதி ஓதுகின்றது
.இந்த ஸ்ருதியில் -சமுத்தாய என்பதற்கு -மேலே கிளம்பி என்று பொருள் கொள்ளல் ஆகாது –
ஏன் எனில் ஆத்ம ஸ்வரூபம் இயற்க்கை நிலையினில் வெளிப்படுவதற்கு -விவேக ஞானம் தான் தேவையே அன்றி
மேலே கிளம்புதல் அன்று -ஆதலின் சமுத்தாய -என்பதற்கு -பகுத்து அறிந்து -என்று பொருள் கொள்வதே -முறை யாகும் .
இவ்விதமே -உபசம்பந்த்ய -என்பதற்கு -கிட்டி -என்று பொருள் கொள்ளல் ஆகாது .சாஷாத் கரித்து
என்று பொருள் கொள்வதே -தகும் .பிரம்மத்தோடு ஒன்றுவதற்கு ஓர் இடம் தேடித் போக வேண்டிய
அவசியம் இல்லையே -இனி -அர்ச்சிராதி கதியும் -பிரம்ம பிராப்தியும் சாஸ்த்ரங்களில் சொல்லப்
பட்டு உள்ளனவே -எனின் -அவைச குண பிரம்ம உபாசகர்களுக்கே கூறப் பட்டன .நிர் விசேஷ
பிரம்மத்தை விவேகித்து அறியும் ஞானிகளுக்கு அவை பயன்படா என்று உணர்க ..
விவேகித்து பாராமையாலே ஸ்வரூபம் வெளிப்படாது ச்ப்படிகம் சிவப்பாய் தோற்றி -விவேகித்த ,மாத்ரத்திலே -அந்த ச்ப்படிகம் இயல்பான வெண்மை வாய்ந்ததாய் வெளிப்படுவது போலே –
விவேகிதுப் பார்த்த மாத்திரத்தில் -முன்பு தேஹமாய் தோற்றிய ஆத்ம ஸ்வரூபம் சைதன்ய ஆகாரமாய் –
இயல்பான நிலையில் வெளிப்படுகிறது ..இதுவே மோஷம் .
தூய்மை படுத்தப் பட்டதும் தன்பால் படிந்தமாக நீங்கி கண்ணாடி இயல்பான நிலையில்
விளங்குவது போல் -ஆத்ம தத்துவம் உபாசனையால் -சம்ச்கரிக்கப் பட்டதும் -திரோதானம் -மறைவு நீங்கி –
மோஷ நிலை-இயல்பான நிலை -ஆத்ம தத்துவத்திற்கு ஏற்படுவதாக கொள்ளுதல் தக்கதாகாது .
ஏன் எனில் உபாசனை ஒரு செயல் ஆதலின் -செயலால் நேரிடும் விகாரம்-மாறுபாடு -அவ ஆத்ம
தத்துவத்துக்கு இசைய வேண்டியதாய் இருத்தலின் -அதனை அநித்யமாய் கொள்ள வேண்டி வரும் . .
உபாசனையால் மோஷம் எனபது பொருந்தாது .-அறியாமையை -ப்ரமத்தை-நீக்க எந்த உபாசனையாலும் இயலாது .
உண்மை அறிவு தான் பிரமத்தை நீக்க வேண்டும் . .அந்த உண்மை அறிவும் ப்ரத்யஷரூபமான வாக்யார்த்த
ஞானம் ஆகவே அமைதல் வேண்டும் .ப்ரத்யஷ ரூபமான பிரமத்தை -தேக -ஆத்மா பிரமத்தை –
ப்ரத்யஷ ஞானம் அல்லது மற்றது போக்க வல்லதாகாதன்றோ –
ஆக ———————-முதலிய வாக்யார்த்த ஞானத்தால் ஏற்படும் ஜீவ பர ஐக்ய சாஷாத் காரமே –
மோஷம் என்கின்றனர் அத்வைதிகள் .ஸ்ரீ பாஷ்ய காரர் இதனையும் எளிதில் வென்று விடுகிறார் .—————————-என்னும் சுருதி
அவர்கள் கொள்ளும் அவித்யைக்கு பிரமாணம் ஆகாது எனபது அவர் திரு உள்ளம்
.அங்கு உள்ள -சத் -அசத் -என்னும் சொற்கள் சித்து அசித்து -என்னும் வ்யஷ்டி சிருஷ்டியில்
காணப்படும் பொருள்கள் பிரளய காலத்தில் அசித்தின் சமஷ்டியாக -தமஸ் -என்று சொல்லப்படும் பொருளில்
ஒடுங்கி கிடந்தமையைச் சொல்லுகின்றனவே அன்றி -அவித்யை உள்ளதும் இல்லதும் அன்று –
அது அநிர்வச நீயம் என்பதைச் சொல்லவில்லை -என்று அவர் கருதுகிறார் .
மேலும் அறிவொளி வடிவமான பிரம்ம ஸ்வரூபம் அவித்யையினால் மறைக்கப் படுவதாக
கூறுவதும் யுக்திக்குப் பொருந்தாது -.அவித்யையினால் அறிவொளி ஒளிராமல் போவது தானே
மறைவு எனப்படுவது -அறிவொளி வடிவமான பிரம்மம் அவித்யையினால் ஒளிராமல் போவான் என் –
ஒளி உண்டாகாமல் அவித்யை தடுக்கிறது -என்ன ஒண்ணாது -ஒளி உண்டு பண்ணத் தக்கதாய்
யல்லாமல் என்றும் உள்ளது ஆதலின் -அங்கன் சொல்ல ஒண்ணாது .இனி இருக்கும் ஒளி -ஞான பிரகாசம் –
நாசப் படுத்தப் படுகிறது -என்று தான் சொல்ல வேண்டும் .அங்கனம் சொல்லின் ஒளி வேறு -ஸ்வரூபம் வேறாக
இல்லாமையின் பிரம்ம ஸ்வரூபத்திற்கே நாசத்தை ஒப்புக் கொண்டதாக ஆகி விடும் .இனி பாஷ்ய காரர் மதத்திலும் அறிவொளி வடிவமாக ஆத்ம ஸ்வரூபம் ஒப்புக் கொள்ளப் பட்டு
இருபினும் -அந்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு அவித்யையினால் மறைவு ஏற்படுவதாக ஒப்புக்
கொள்ளப் படவில்லை-ஆத்ம ஸ்வரூபம்-அவித்யை-அறியாமை-எனப்படும் பிரமத்துக்கு -விரோதி அன்று .
ஆத்ம ஸ்வரூபத்தின் பால் உள்ள நித்ய தன்மை -அணு அளவு -அவயவம் அற்றவை -முதலியவைகளே
விரோதிகள்-அவைகள் சாஸ்த்ரிரத்தால் அறியத் தக்கனவாய் உள்ளன.-அவைகளே மறைக்கப் படுதலின்
ஆத்ம ஸ்வரூபதுக்கு நாசம் ஏற்பட வழி இல்லை-என்க-நித்ய தன்மை முதலியவை மறைகப்படுதலாவது –
அவை பற்றிய அறிவு வெளிப் படாது இருத்தலே யாம் .
ஸ்ரீ பாஷ்ய காரர் சித்தாந்தத்தில் ஆத்ம ஸ்வரூபம் அறிவு வடிவமாய் இருத்தலோடு
அறிவுடைமையைத் தன் தன்மையாகவும் -கொண்டு இருத்தலின் -தன்மையாய் அமைந்த அறிவு
ஒரு பொருள் ஆதலின் -ஒடுங்களும் விரிதலும் அதனுக்கு ஏற்கும் -என்க
அவித்யை முழுதும் கழிவது -அப்ராக்ருதமான தேசத்தை அடைந்த பிறகு தான் என்று கொள்ளல் வேண்டும் .
————————————என்று தேக சம்பந்தம் நீங்கும் காலத்தை எதிர் பார்ப்பது போலே -தேசத்தை அடைதலையும்
அவித்யா நிவ்ருத்தி எதிர் பார்க்கிறது -என்க .இன்றேல் அர்ச்சிராதி கதியை சொல்லும் சாஸ்திரங்கள்
பயன் அற்றவைகளாய் விடும் ..இனி பகுதி அற்றதாகவும் -நிலை வேறு படாதையும் -நிரம்சமமாயும் ,அவஸ்தா பேதம்
அற்றதாயும் -உள்ள பிரம்மம் போய் அடைய வேண்டிய நிலையை எங்கனம் எய்துதல் கூடும் -எனில் கூறுவோம் .
கிராமத்தை அடைவதற்கான வழி போலே பிரம்மத்தை அடைவதற்காக ஏற்ப்பட்டது அன்று அர்ச்சிராதி கதி .
பின்னையோ எனின் -பிரம்மத்தை அடைவதற்கு -பிரதிபந்தகங்கள் -அடியோடு தொலைவதற்காக.
கதி சாஸ்த்ரத்தை கொண்டு -பிரதிபந்தங்கள் அடியோடு நீங்கி -வித்யை-நிஷ்பன்னம் ஆவது குறிப்பிட்ட
அப்ராக்ரருத தேசத்திலே என்று கொள்ளுகிறோம் .ஆழ்வார்கள் இது பற்றியே -தெளி விசும்பு -என்றனர் பரம பதத்தை ..நிர் விசேஷ பிரம்மம் எனப்படும் நிர் குண பிரம்மம் ஓன்று இருப்பது சம்பவியாத
ஓன்று ஆதலின் -நிர் குண பிரம்ம நிஷ்டரான ஞானிகளுக்கு கதி கிடையாது .ச குண பிரம்ம
நிஷ்டருக்கே அர்ச்சிராதி கதி என்று பிரிப்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை -என்க .
வள்ளுவனாரும் -கற்றீண்டு மெய்ப் பொருள் கண்டார் தலைப் படுவர் மற்றீண்டு வாரா நெறி –
என்பதனால்-மெய் உணர்ந்த ஞானியர் வாரா நெறி யாகிய அர்ச்சிராதி கதி யில் செல்லுதலை
கூறி -ஸ்ரீ பாஷ்ய காரர் தழுவிய பண்டைய கொள்கையே ஆதரிப்பது இருப்பது -இங்கு அறிதற் பாலது . .
இனி ————————————————-ப்ருஹ்- 4-4 6- என்று சுருதி நிர் குண நிஷ்டனுக்கு -ஞானிக்கு
சரீரத்தின் நின்றும் மேல் நோக்கிக் கிளம்புதல் இல்லை-என்று ஸ்பஷ்டமாக ஓதுகிறது .——————–என்று
இங்கேயே பிரம்ம அனுபவ ரூபமான முக்தி கிடைப்பதாகவும் சுருதி ஓதுகின்றது .
உத்க்ராந்தியும் -கதியும் -உபாசகனுக்கே ஓதப்படுகின்றன -அவ் உபாசகனுக்கு – உபாசனைக்கு ஏற்ப-
அனுபவித்தற்கு தக்க -பிரம்ம ஸ்வரூபம் பிரம்ம லோகத்திற்கு உட் பட்டதாதலின் -அவனுக்கு
உத்க்ராந்தியும் அர்ச்சிராதி கதியும் தேவைப் படுகின்றன -நிர் குண நிஷ்டனுக்கு அவை தேவை இல்லை யன்றோ –
எனில் -கூறுவோம் –
——————————————என்னும் சுருதி -ஞானிக்கு சரீரத்தில் இருந்து உத்க்ராந்தி இல்லை என்று சொல்ல வில்லை .
சாரீரமான ஜீவாத்மாவை விட்டு பிராணன் பிரிவது இல்லை -என்றே சொல்லுகிறது .ஜீவாத்மாவை விட்டு
பிராணன் பிரியாமையின் -சூஷ்ம சரீரத்துடன் அர்ச்சிராதி கதியில் போவது அவனுக்கு எளிதாகி விடுகிறது –
எனபது சுருதியின் கருத்து ..——————————எனபது உபாசனை வேளையில் ஏற்படும் பிரம்ம அனுபவத்தை
பற்றினதகும் .
ஆகவே ———————————-என்று தொடங்கும் சுருதி வாக்யத்தில் -சமுத்தாய -என்பதற்கு -பகுத்தறிந்து –
என்றுபொருள் கொள்ளுதலும் -உபசம்பத்ய -என்பதற்கு -சாஷாத் கரித்து-என்று பொருள்
கொள்ளுதலும் தேவை அற்றவை ஆகி விடுகின்றன -அவ்வாறு பொருள் கூறுதல்
சொல்லமைதிக்கு முரண் பட்டது ஆகும் .
-சர்பாத் சமுத்தாய ரஜ்ஜூம் உபசம்பத்ய -என்னும் சொல் தொடரை -பாம்பையும் கயிற்றையும்-பகுத்து அறிந்து -கையிற்றை நேரே கண்டு -என்னும் பொருளில் வட மொழி அறிந்த ஒருவன் வழங்கிடின் -அதனை அங்கனம் பொருள் கூறுவோர் ஏற்ப்பார்களோ -என்பதை நினைத்து பார்க்க வேண்டும் -மேலும் சரீரத்தில் இருந்து கிளம்பி -என்று தொடங்கும் இவ் விஷயத்திற்கு அங்கேயே ஆகாசத்தில் இருந்து
கிளம்பி வாயு முதலியவை பரம்ஜோதியை அடைந்து தம்நிலையை அடைகின்றன -என்று காட்டும்
திருஷ்டாந்தங்கள் நமக்கே ஒத்து வரும் -பிறர்க்கு ஒத்து வர மாட்டா -இதனை சிறிது விளக்கிக் காட்டுவோம் .
அசரீரமான -சரீரம் இல்லாத -வாயு முகில் மின்னல் முழங்கும் மேகம் என்னும் இவைகள் -இந்த
ஆகாசத்தின் நின்றும் மேல் கிளம்பி பரம் ஜோதியை அடைந்து -தம் இயல்பான நிலையில்
துலங்குகின்றன -என்று திருஷ்டாந்தம் காட்டப் பட்டு உள்ளது .வாயு முதலியவை -ஆகாசத்தில் இருந்து –
மேலே கிளம்புதல் ஆவது -அவை அவை தம் தம் செயல் புரிவதற்காக மேலே வெளிப்படுதல் –
பரம் ஜோதியை -என்னும் இடத்தில் -பர -என்னும் சொல் -அவ் அவற்றுக்கு காரணமான நிலையைக் குறிக்கிறது .சோதி என்னும் சொல்லோ -காரணப் பொருள்கள் காரியப் பொருள்களை
பிறப்பிப்பத்தின் வாயிலாக -அவற்றை வெளிப்படுத்தும் -நிலையைக் கருதி வழங்கப் பட்டது .
ஆக –காரிய பொருள்களை தோற்றுவிக்கும் காரணப் பொருள்களே -பரம் ஜோதி -என்பதால்
கூறப் பட்டனவாயின -வாயு முதலிய பொருள்கள் காரணப் பொருள்களை அடைந்து -காரியப் பொருளாய் –
அடைந்து -காரியப் பொருளாய் நிற்கும் நிலையை விட்டு -காரணப் பொருளோடு ஒத்த வடிவத்தை
அடைகின்றன .வாயு -சப்த மருத்து -என்னும் கார்யப் பொருளாய் நிற்கும் நிலையை விட்டு
வாயு என்ற காரணப் பொருள் போன்றதாகி விடுகிறது .இங்கனமே மின்னல்-என்பதும் கார்யப் பொருளாய்
நிற்கும் தன்மையை விட்டு -தேஜஸ்-என்னும் காரணப் பொருள் போன்றதாகி விடுகிறது .
முகில் -முழங்கும் மேகம் விஷயத்திலும் -இங்கனே கொள்க -இவ்விதமே ஜீவனும் சரீரத்தில் இருந்து
மேல் கிளம்பி -அர்ச்சிராதி வழியாகப் பரம் ஜோதியான பரமாத்மாவை போன்றவன் ஆகிறான் என்று
த்ருஷ்டாந்தமும் -தார்ஷ்டிந்தாகிகமும் -பொருந்தி உள்ளமை காண்க .
சமுத்தாய -என்பதற்குப் பகுத்தறிந்து -என்று பொருள் கூறும் பிறர்க்கு இந்த திருஷ்டாந்தங்கள் ஒத்து
வர மாட்டாமை தெளிவு .இனி சைதன்ய ஆகாரமான ஆத்ம ஸ்வரூபம் தேஹமாகத் தோற்றும் ப்ரத்யஷ ப்ரமம்
பகுத்தறியும் -சாஷாத் காரத்தாலே தான் நீங்கும் .-அறியாமை எத்தகைத்தோ -அத்தகைத்தாக உண்மை அறிவும்
இருத்தல் வேண்டும் அன்றோ -ஆகவே ——————முதலிய வாக்யார்த்த ஞானத்தாலேயே
சைத்தன்ய ஆத்ம சாஷாத் காரம் ஏற்படுகிறது -என்பதையும் சிறிது கவனிப்போம் –
——————————முதலிய வாக்யன்களால் உண்டாகும் ஐக்ய ஞானம் மோஷ சாதனம் எனபது
பொருந்தாது .——————————————–என்று தொடங்கும் சுருதி வாக்யத்தில் ஜீவாத்மாவையும்
அந்தர் யாமியாய் பிரேரணை செய்யும் பரமாத்வாமையும் வேறாக நினைத்துப் -பரமாத்வாவின்
ப்ரீதிக்கு உரியவனாகி -முக்தி யைப் பெருமவனாக -ஜீவாத்மாவை சொல்லி இருத்தலின் –
அதனோடு முரண் படுதலால்-என்க ..எனவே மோஷத்துக்கு சாதனம் -ஜீவனிலும் தனிப்பட்ட
அந்தர்யாமியான பிரம்மத்தைப் பற்றிய ஞானம் என்று கொண்டால்-எல்லா இடத்திலும் முரண்பாடு இன்றி
பொருள் கொள்ள இயலும் .மேலும் சரீரத்தால்-ஜீவாத்மாவுக்கு ஏற்ப்பட்ட பந்தம் பாதிக்கப் படாமையாலே
பரமார்த்தமானது -அதனை எந்த தத்துவ ஞானமும் போக்கடிக்க முடியாது -பரம புருஷனுடைய
அனுக்ரகத்தாலே -தான் அந்த பந்தத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் .பாம்பு கடித்த விஷம் உபாசனையால்-
ப்ரீத்தி கொண்ட கருடனுடைய அனுக்ரகத்தால் நீங்குவது போலே-உபாசனையால் ப்ரீதி கொண்ட பரம
புருஷனுடைய அனுக்ரகத்தாலேயே பந்தம் நீங்குகிறது என்று கள்ள வேண்டும் .
இதனால் உபாசனை மோஷ சாதனம் ஆகாது என்னும் வாதமும் –
உபாசனையால் சம்ச்கரிக்கப்படின் ஆத்ம தத்துவமும் விகாரம் உள்ளதாய் -மாறுபாடு உள்ளதாய் -அநித்யமாம் –
எனபது போன்ற வாதங்களும் -தள்ளுண்டமை காண்க .
இனி —————————————என்னும் வாக்யத்தினால் பிரம்ம ஞானத்தினால் இடையீடு இன்றி பிரம்மமாகவே
ஆவதாக ஓதப்படுதலின் –ஜீவா பிரம்ம ஐக்ய மோஷம் என்று கொள்ள வேண்டி உள்ளதே -எனில்-கூறுவோம் –
சரீரம் ஆத்ம என்னும் தொடர்பு பற்றி-அறியும் ஜீவனும் -அறியப்படும் பிரம்மமும் ஒன்றாக
கூறப்படுகின்றனவே அன்றி -ஸ்வரூப ஐக்கியம் அங்கே கூறப் படவில்லை-எனபது உணரத் தக்கது .
அந்தர்யாமி பிராமணத்தில் -ப்ருத்வி முதலிய அசேதனப் பொருள்களும்
ஆதித்யன் முதலிய அசேதனத்தொடு கூடிய சேதனப் பொருள்களும் –சரீரமாகவே கூறப்பட்டு –
அசேதன கலப்பு நீங்கின பரி சுத்த ஆத்ம ஸ்வரூபமும் சரீரமாக கூறப்படுவதனால்-முக்தி நிலையில்
பரி சுத்த ஆத்ம ஸ்வரூபமும் பிரம்மத்துக்கு சரீரமே என்னும் கருத்து கொண்டு -சரீரத்தையும்
ஆத்மாவையும் ஒன்றாகவே வழங்கியது -வேதம் -என்க .
பிரம்ம ஞானம் ஏற்பட்டதும் -இடையீடு இன்றி -பிரம்மமாகவே விடுவதாகக் கொள்ளுதலும் தகாது –
———————–என்று ஸ்பஷ்டமாக ஓதுவதற்கு ஏற்ப -பிரம்மத்தின் அனுக்ரகத்தின் வாயிலாகவே பிரம்மம்
ஆகிறான் என்று கொள்ளுதல் வேண்டும் .அந்தர்யாமி ப்ராஹ்மனத்திலும்——————என்று
அந்தர்யாமியான பிரம்மத்தை ஜீவாத்மா அதன் அனுக்ரகம் இன்றி தானே அறிவது இல்லை
என்று கருதப்படல் -காண்க –
ஆக
முக்தியில் ஆத்மா சரீரம் என்கிற பேதம் தவிர்க்க ஒண்ணாது -பரம் ஜோதியான பிரம்மத்தை
அடைந்து -ஸ்வ ஸ்வரூப ஆவீர் பாவம் -அதாவது -தனது இயல்பான -அபஹத பாப்மத்வம் -முதலிய
தன்மைகள் தோன்றி-பிரம்மத்திற்கு சமமான நிலைமையை ஜீவாத்மா அடைதல்
மோஷம் -என்க ——————-என்று பிரம சாம்யாபத்தியை மோசமாக வேதம் ஓதியதும் காண்க .
இனி இந்த சாம்ய ஸ்ருதிக்கு ஏற்ப ————————என்னும் இடத்திலும் -ஏவ என்பதற்கு சாம்யத்தை
பொருளாக கொள்ளலுமாம் .பிரம்மம் போன்று ஆகிறான் -என்றபடி ..ஒப்புமை பொருளில் -ஏவ -எனபது
வேதத்திலேயே வழங்கப் பட்டு உள்ளது ..—————————————————————————எனபது காண்க .
இங்கே மோஷம் சொல்லப் பட வில்லை.ஆகையால் விஷ்ணுவாகவே ஆகி-என்று ஐக்கியம் சொல்லுவதற்கு
இடம் இல்லை .யாகம் செய்பவனுக்கு பலன் சொல்லப்படுகிறது .விஷ்ணு போலே ஜெயிக்கிறான் என்று
தான் பொருள் சொல்லியாக வேண்டும் .
ஆக
சமமான குணத்தோடு இருத்தலே மோஷம்-ஐக்கியம் அன்று -என்று
ஸ்ரீ பாஷ்ய காரர் வாதத்தில் வென்றார் ஆயிற்று .
ஸ்ரீ பாஷ்ய காரர் இங்கனம் -பாஸ்கரர் -யாதவ பிரகாசர் -என்னும் குத்ருஷ்டிகளையும்
வாதில் வென்று உள்ளார் -இவர்கள் இருவரும் பேத அபேத வாதிகள்.
அசித்திக்கும் பிரம்மத்துக்கும் பேத அபேதங்கள் இயல்பானவை –
சித்துக்கும் பிரம்மத்துக்கும் அபேதமே இயல்பானவை –
பேதமோ உபாதியால் வந்தது -இயல்பானது அன்று -இயல்பான முக்தி நிலையில் அபேதமே
ஓதப்படுதலால்-எனபது பாஸ்கர மதம் .
.அசித்துக்கும் பிரம்மத்துக்கும் பேதமும் அபத்தமும் இயல்பாய் அமைந்து இருப்பது போலே
சித்துக்கும் பிரம்மத்துக்கும் கூட பேதமும் அபேத்தமும் இயல்பானவையே -இயல்பான முக்தியில்
அபேதம் பொஎ பேதமும் -ஓதப்படுதலால் -எனபது -யாதவ பிரகாசர் மதம் .
பாஸ்கர மதத்தில் ஜீவனுக்கும் பிரம்மத்துக்கும் பேதம் இன்றி -ஐக்கியம் ஒப்புக் கொள்ளப்
படுதலால்-ஜீவனுடைய தோஷங்கள் பிரம்மத்துக்குத் தவிர்க்க ஒண்ணாதவைகளாம் –
யாதவ பிரகாசர் மதத்தில் அசித் துக்கும் பிரம்மத்துக்கும் அபேதம் கொள்ளப் படுவதால்
பிரம்ம ஸ்வரூபம் மாறு படுவதாக ஒப்புக் கொள்ள வேண்டி வரும் .
இவ்வாறு அபேத வாதிகள் அனைவர்கள் உடைய அல்லலையும் வாதில் வென்றார் இராமானுசன் -என்க .
அல்லல் எல்லாம் இராமானுசன் வெல்வதற்கு ஹேது மெய் மதிக் கடலாய் இருத்தலாம் –
மெய்மதிக்கடல்-
தத்துவ ஞானத்திற்கு கடலே இருப்பவர் –மெய் உணர்வு என்றும் குன்றாது -நிலைத்து இருத்தல் பற்றி
கடல் என்கிறார் ,
அறிவு அனைத்தும் -அறிவுக்கு புலனாம் அவை யாவும் -மெய்யே -என்பது -இவர் சித்தாந்தம் ஆதலின் –
எம்பெருமானாரை மெய் மதிக் கடல்-என்கிறார் .சந்நியாசி வாதம் செய்தல் ஆகாது -என்ற நியதி
இருப்பினும் -தமக்கு உள்ள மெய் உணர்வை உலகமும் எய்தி உய்வுற வேண்டும் என்று கருதி –
வதில் வென்றாரே அன்றி -தமக்கு க்யாதி லாப பூஜைகளை -கருதி அன்று என்று உணர்க –
சங்கற்ப சூர்யோதயத்தில் -இரண்டாம் அங்கத்தில் -விவேக மகா ராஜனாலே பிற மதத்தவரை வேரோடு
களைவதற்காக ஏவப்பட்ட -வேதாந்த சித்தாந்தம் எனப்படும் -சன்னி ஈசி -தன் ஆஸ்ரமத்துக்கு இசையாது என்று –
தானே நேராக செய்யாமல்-வாதம் எனப்படும் சிஷ்யனைக் கொண்டு –-விஸ்வாமித்ரர் ராமனைக் கொண்டு
அரக்கரை அழிப்பது போலே -குத்ருஷ்டிகளையும் பாஹ்யர்களையும் நிரசிக்க விரும்புவதாக
பேசி இருப்பதால்-எதிரிகளை களைவதில் நோக்கம் கொண்டு நேரேவாதம்செய்வது தகாது -என்க –
அத்தகைய நோக்கம் இன்றி -உலகம் உய்யும் நோக்குடன் வாதில் வென்று மெய் உணர்வை
உலகு எங்கும் பரப்புவதில் -யாதொரு குற்றமும் இல்லை-என்க -பிற மதத்தவரால் உலகில் உள்ளோர்
அனைவரும் அறியாமை இருளினால் அனர்த்தப் படும் பொது -இராமானுசன் -நான்மறை சுடர் ஒளியால் –
அவ்விருளை துரந்திலரேல்-நாராயணனே உயிரை உடையவன் -என்று உற்று உணர்ந்தவர் அறிவார் இல்லை
என்று அடுத்த பாசுரத்தில் பேசுவதால் -உலகம் உய்யும் நோக்குடனே வாதில் வென்றமை தெளிவு .
மெய் மதிக் கடல் இப்படி வாதில் வென்று அருளுவதே -என்று அமுதனார் ஈடுபடுகிறார்
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது
வைதிக மதம் என்று சொல்லி / பிரமம் நன்று என்று சொல்லி /மற்று எல்லா உயிர் களும் அஹது என்று -பிரமம் என்று சொல்லி-பேத ஞானம் மோகம் தவிர்ந்தால் மோஷம்/அத்வைதிகள் வாதம்–புருஷார்த்தம் மெய் விட்டு ஆதி பரன் உடன் ஒன்றாம்-ஐக்யாபத்தி என்பர் /அல்லல் -வாதில் வென்றார் ஸ்வாமி இவர்களை எல்லாம்-மெய் மதி கடல் /நாதன் -/பாக்யர் போல அன்றி குதிர்ஷ்டிகள் இவர்கள்/-வேதம் சரி என்று சொல்லி -தத் அர்த்த தரிசனத்தில் பார்வை தெரியாதவர்கள்/தாங்கள் சொல்வதை வேதார்தம் என்பார்கள் //பிரமம் சத்யம் பிர பஞ்சம் மித்யை தேகம்-உபாதி-பட்டு தெரிகிற பிரதி பலிப்பு என்பர்/தொலைந்தால் ஏக சந்திர ஞானம் என்பர் //ஆதி பரனோடு ஒன்றாம் -ஏகி பாவிக்கும்- ஐக்ய பத்தி அடையும் -ஜீவன் முக்தி -என்பர்-பல என்று நினைத்து இருந்தது மோகம் /விடு பட்டால் மோஷம்/தத்வ ஞான சாகரம்-மெய் மதி கடல்/பரமாத்மா ஜீவாத்மா அசித் தத்வங்கள் தெரிந்து உபாயங்களை அருளி வாதம் பண்ணி வென்றார் //நமக்காக பேர் உபகாரம் ..ஆதி பரன் என்றது சுய பஷம் ..ஆதி-காரணத்வம்- காரணம் உண்டு என்றால் காரியம் உண்டு பரனே இருந்தால் .. வாசனை விடாமல் அருளி இருக்கிறார்–கட்ட பொருளை மறை பொருள் என்பார்கள்..கற்பனைக்குதிரை..தமசால் வந்த அஞ்ஞானம் சங்கர பாஸ்கர யாதவாதிகள்/பிள்ளாய் பேய் பெண்ணே -பாகவத பிரபாவம் அறியாதவள் பிள்ளாய் //அறிந்தும் மறந்து இருப்பவள் பேய் பெண்/உன்னி- நிரூபித்தல்/பேத சுருதி– அபேத சுருதி– கடக சுருதி–சேர்த்து வைக்கும்-அபேத சுருதி மட்டும் கொண்டார் சங்கரர்/பேத சுருதி மட்டும் கொண்டார் மத்வர் /அனைத்தும் கொண்டார் ஸ்வாமி / / //சர்வம் கல் இதம் பிரமம்/முன்னால் சத்தாகவே இருந்ததுஅக்ரா ஆஸீத் சதேவ/ஏக மேவ ஓன்று தான் இரண்டாவது இல்லை அத்வதீயம் //இரண்டாவதுக்கு அபாவம் -அத்வைதம்/அசேஷ விசேஷ பிரத்நீயாக சின் மாதரம்/ ஞானம் ஞாதா ஞேயம் மூன்று அறிய படும் பொருள் அறிவு-அறிபவன் எனபது இல்லை ஞானம் மட்டுமே உண்டு /சஜாதீய பேதம் விஜாதீய பேதம் சுகத பேதம்-குணங்கள் இல்லை// திரிவித பேத ராகித்யவம்//ச்வேதகேது பிள்ளை உத்தாரகர் -கேட்டார்-எந்த விஷயம் தெரிந்தால் கேட்காதது எல்லாம் கேட்டது ஆகும்-அறியாதது எல்லாம் அறிந்தது போல ஆகுமோ அதை அறிந்தாயா ?சத்தாகவே இருந்தது முன் காலத்தில் இருந்தது ஒன்றாக இருந்தது இரண்டாவது இன்றி இருந்தது-நான்கு வாக்யங்கள்/மண் அறிந்து மண் பண்டங்கள் அறிந்தவை போல த்ருஷ்டாந்தமும் சொன்னார்..தத்வமசி ச்வேதகேது /சதேவ -அசத்தாக இல்லை/ சத்துக்கு அசத் விஜதீயம்/ஏக மேவ- இரண்டாவது இல்லை -சஜாதீய பேதம்/ இரண்டாவது இல்லை சுகத பேதம் இல்லை /விசிஷ்ட ஐக்ய பிரதி பாதங்கள் /கண்ணால் பார்கிறோமே -விஷ்ணு சிதீயம் வியாக்யானம் விஷ்ணு புராணம்//சர்ப்பம் கயிறு/கயிறே பாம்பை ஏற்று கொண்டது எல்லாம் பிரதி பிம்மம் என்பர்/உபாதி உண்மை என்பர் பாஸ்கரர்/பிரமத்தின் அஞ்ஞானம் என்பர் !..கற்பிக்க பட்டு இருக்கிறது கற்பனை போனால் சத்யம் ஞானமனந்தம் பிரமம்-நிஷ்கலம் நிஷ்க்ரியம் நிரஞ்சனம் வாக்கியம்..சத்யம் இது தான் ஒன்றும் கிடையாது/ பிரதான வாக்கியம் காரணத்வம் சொல்வதால் அசத்தியம் அன்று சத்தியமும் போல அர்த்தம்./.விசேஷணம் சொல்ல சொல்ல — வேறு பாடு கொண்டு அவற்றை விட வேறு பட்டது ../அசத்யத்வம் அற்றவனாய்- விசேஷணம் இதுவும் என்றார் ஸ்வாமி /அகம் ஆத்மா குடாகேச கீதை சர்வ பூதா/ ஜீவ பர பேதமும் போனது போல/ உயிர் கள் மெய் விட்டு பரனோடு /புருஷார்த்தம்-அஞ்ஞானம் தொலைந்தவாறே- கிளம்பியவாறே இல்லை-இந்த சரீரம் பொய் என்று அறிந்த பின்/ சரீரம் புறப்பாடு சேரும் இடம் ஒத்து கொள்ள கூடாது /பிரம்மா வேத பிரமம் ஆகிறான்/ வெட்டு வேளாண் போல பிரமம் அறிந்து பிரமமே ஆகிறான்/ சேர்ந்த பின்பு இரண்டு ஆகுமே ஸ்வாமி- /அஷ்ட கல்யாண குணம் மட்டும் அடைகிறான் நம் சம்ப்ரதாயம்/ தாத் பர்யம் அறியாமல் -காரண காரியம் அறியாமல் தப்பான அர்த்தம்..ரகு குனர் – ஜட பரதர் உபதேசம்- /அது அதுவே //அல்லல்-டிண்டிமம் அபாரதம் /வாதில் வென்றார் /வெற்று பேச்சு/அல்லல் ஆரவாரம் தோஷம் கஷ்டம் /ஆதி பரன் என்று -பஷத்தார் இசையார் //அமுதனார் பஷம் இது//சர்வம் கண்ணால் பார்ப்பது பிரமம் இல்லை/ புஷ்பம்-போக்ய உபகரணம் போக ஸ்தானம் போக்தா -இதம் சர்வம்-என்று இதை -சரீரம் என்று சொல்லி -விட்டு இலக்கினை விடாத இலக்கினை /விசேஷணம் வஸ்து/பிரமத்துக்கு குணம் இருக்கிறது.. விட்டு விட்டு நிர் விசேஷம்/ என்றார்/-போக்த்ரு வர்க்கம் விவிதம் நிறைய வஸ்து-சுத்த அத்வைதம் சேராது/விசிஷ்டாத்வைதம்/பிர பஞ்சம் சரீரம் /விட்டு பிரியாமல்..ஒன்றாக காண படுகிறது// இது இத்தனையும் சத்தாகவே இருக்கிறது–கார்ய பிரமம்/ காரண பிரமம்/தீஷை கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்..பிரளய காலத்தில் .அக்ரா -முன் ஒரு காலத்தில்/ கால தத்வம் உண்டு/சத்தாகவே ஒன்றாகவ இரண்டாவது இன்றி/ஸ்தூல சூஷ்ம விசிஷ்ட பிரமம்/உபாதான காரணம் அவன் தானே/அகற்ற விஜாதீய பேதம் உண்டு/காரணத்வம் சுகத பேதமும் உண்டு /வாதம் வென்றார் /ஒன்றி கிடக்கும்/ஸ்தூல அவஸ்தை போய் சூஷ்ம அவஸ்தை /நிறைய காரணம் பரம அணு என்பர் /அஷர அர்த்தத்தை பிரதி பாலித்தும்/வியாபகன் -எல்லாமே படைத்தும் காத்தும் –எல்லாம் அவனே/ எல்லா வஸ்துகளையும் சொல்லி/நின்றனர் இருந்தினர் கிடந்தினர் நின்றிலர் -எல்லாம் சொல்லி அவனே ..நியந்தா சேஷி ஸ்வாமி / ஆத்மா -சரீரம் மெய் /தது அந்த பிரமம் -இருகிறாய் குணங்களை கொண்டு -உனக்கும் ஆத்மா /துவம் தத் விசேஷணம் விட்டு பார்க்காமல் அசக்தனாய் நாம் – சக்தனாய்-அவன் – ஓன்று ஆக்க விசேஷணம் கழித்து பேசினார்/ எல்ல வற்றுக்கும் அந்தர் ஆத்மா தன் உனக்கும் /பிரம்மா ஆத்மா இல்லாத வஸ்து இல்லை /நிரசித்தார் ./பேத சுருதி போக்தா போக்கியம் பிரேரிதா-தூண்டுபவன் மூன்றும்/வேறு பட்டவன் அறிந்து மோஷம் போகலாம்/இரண்டு பறவைகள் பழத்தை சாப்பிட ஒரு பஷி ஒளி இழந்து/மரம் -அசித் சாப்பிட்ட பறவை-ஜீவாத்மா -சாப்பிடாத பறவை-பரமாத்மா /நித்ய அநித்திய-கர்மா -பழம்/அவன் நித்யன் ஒருவன் பிரார்த்திப்பதை கொடுக்கிறான் /சர்வம் மிருத்திகா மண்ணே உண்மை மண் என்றே உண்மை/ பிரம்மா இவ பவதி போல ஆகிறான்/ மண்ணும் உண்மை குடமும் உண்மை /அத்யந்த ஸ்ருதிகள்-நன்றாக பிரித்து கொடுத்தன /கடக சுருதி- சரீரம் சரீரி-நிறைய ஓன்று /பிர்திவிக்குள் இருந்து செலுத்துகிறான் /ந ஆத்மா நிவேதா தெரிந்து கொள்ள வில்லை/ /சத்யம் -ஒரு படி பட்ட /இலன் அது உளன் அது /வேறு பட்டவன் என்பதால் இல்லை என்றும் சொல்லாம் /பிரசன்ன- புத்தன் தேசிகன் //ஒத்து கொள்ள வாதம் இல்லை உன் இடம் /பேச நின்ற சிவனுக்கும்/முக்தி வேளையில் /பிரம்மா வேத பிரமம்/ சொரூப ஆவிர்பாகம் / அப்பில் அப்பை சேர்த்தால் அப்பு ஆகும் /அப்பில் உப்பை சேர்த்தல் குணம் மாறுமே /நித்ய நிர்விகாரா தத்வம் ஒவ்வாமை ஏழு வழியிலும் கட்டுகிறார் ஸ்வாமி /ஒன்றாக ஆவது பிரம சூத்தரத்தில் ஐந்தாவது அத்யாயத்தில் இருக்குமோ என்னவோ/ / தத்வ த்ரயம் காட்டினார் /ஜகத் வியாபாரம் வர்ஜம்/கூறும் ..கொடிய தர்க்க சரம்– மிக்க யாதவர் மதம் எரித்த .மா முனி அருளிய / /மெய் விட்டு-விபரீத லஷனை/ அநாதி காலம் -யான் ஒட்டி-பிரதி கூலன்–தான் ஒட்டி வந்தான்/ நம்மை உத்தரிக்க அவதரித்தார்/ மெய் மதி கடல்/எதார்த்த ஞானம் கடல் /தத்வ ஞான சாகரம் ..ஜெயித்தவர். ஆத்மா ஐதிகம் மூவரும். ஒன்றாம் முதலாம் என்பார் பாசுரம / வேத வாதம் என்பர்- வாதம் ஒத்து வராத பொடி பொடியாக பேசித்து பேசும் ஏக கண்டர்கள்…மனு வியாச போல்வாரும் இதையே அருளினார்-சத்யம் சத்யம் -கேசவனே ஒருவனே பரன்/ஸ்ரீமன் நாராயண ஒருவனே -ந பத்தி முக்தி தாதா /முக்தி போக்த என்று அருளினார்களே / கபிலர் -கல்பனா- நாடகம்-போல் – பிரக்ருதியே உண்டு /சப்த நியமனம் மட்டும் பண்ணி கொண்டு /யாதவ பிரகாசர் போட்ட முடிச்சு தன்னால் கூட அவிழ்க்க முடியாமல் ஸ்வாமி இடம் சேர்ந்தாரே /சர்வ சூன்ய வேதம்/பிரசன்ன புத்தன் ஜல்பங்கள் -ஜகம் வஞ்சிக்க பட்டது இவர்களால் – தேசிகன்- ஸ்வாமி நிரசம் பண்ணி வைதிக மதம் நிலை நிறுத்தினார் /கைங்கர்யம் பண்ணுகிறான் கொள்ளுகிறான்/ சாம கானமும் உண்டு போக ஸ்தானமும் உண்டு /நச புன ஆவர்ததே கால இடம் வித்யாசம் /போகிறான் போவது ஜீவாத்மா தெரிகிறது/ போகம் ஆனந்தம் மாத்ரத்தில் பிரகாரமாய்– விட்டு பிரியாமல் -அவனை போல ஆனந்தம் அடைகிறான்/ பித்ருகளையும் பார்க்க ஆசை கொண்டல் முடியுமாம்/ சாம்யம் பிரிந்தே அனுபவிகிறார்கள்–
——————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply