அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-57-மற்றொரு பேறு மதியாது அரங்கன் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
ஐம்பத்து ஏழாம் பாட்டு -அவதாரிகை
இனி என் வாக்கு உரையாது -என் மனம் நினையாது -என்பான் என் –
விபூதி இதுவாகையாலே அஞ்ஞானம் வரிலோ -என்ன
எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்த பின்பு -விவேகம் இன்றியே -கண்டது ஒன்றை-விரும்பக் கடவ பேதைத் தனம் ஒன்றும் அறியேன் -என்கிறார் .
மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலரடிக்கா
ளுற்றவரே தனக்குற்றவராய்க் கொள்ளும் உத்தமனை
நற்றவர் போற்றும் இராமானுசனை யின் நானிலத்தே
பெற்றனன் பெற்ற பின் மற்று அறியேன் ஒரு பேதமையே -57- –
வியாக்யானம் –
வேறு ஒரு பிரயோஜனன்களை ஒன்றாக நினையாதே
பெரிய பெருமாளுடைய நிரதிசய போக்யமான திருவடிகளுக்கு அடிமையாகையே பரம புருஷார்த்தம்
என்று -அதிலே ஊன்றி இருக்குமவர்களையே-தமக்கு பந்து பூதராக அங்கீகரிக்கும் உத்தம அதிகாரிகளாய் –
சூசுகத்வ -அவிளம்ப்ய-பலப்ரதத்வ -ஸ்வரூப அநுரூபத் வாதிகளாலே -சர்வ தபச்சுக்களிலும் வைத்துக் கொண்டு –
விலஷண தபச்சான -சரணாகதி தர்மத்திலே நிஷ்டரானவர்கள் -தம்முடைய வைபவத்தையே
சொல்லிப் புகழும்படியான எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்தேன் –
லபித்தற்கு பின்பு இத்தை ஒழிய ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணாதே கண்ட தொன்றிலே
மேல் விழுகைக்கு உறுப்பான ஒரு அஞ்ஞானம் கண்டிலேன் –
ஆதலால் மேலும் உண்டாகக் கூடாது என்று கருத்து–
பித்தர் பேசினார் பேதையர் பேசினர்–கம்பர் – -அஞ்ஞானம் இல்லை என்கிறார் இதில் / மூடர் ஆசூரா பாவம் -அவதரித்தவனை உண்மையாக அறியாத பாஷாண்டிகள் –
நல் தவர் -உபாயமும் உபேயமும் அவனே என்று அத்யவசித்து –74 சிம்ஹாசனத்திகளும் –
ஜகத் குரு -சத்யம் சத்யம் எதிராஜரே ஜகத் குரு -சம்சயம் இல்லை -தத் ஏவ சர்வ லோகாநாம் உத்தாரகர்
பெற்ற பின் மற்று அறியேன் -பெற்ற ஹர்ஷத்தால் மீண்டும் அருளிச் செய்கிறார்-ஆழ்வாராதிகளையும் -அரங்கன் அடியாரர் களையும் உற்றவராக -உத்தமன் –ஆச்சார்ய சிரேஷ்டர் -என்றவாறு -மேல் கீழ் விடாமல் எல்லா பாசுரங்களும் -ஆழ்வார் -ராமானுஜர் -ஆழ்வான் போல்வார் —
உத் -பகவான் / உத்தர ஆழ்வார் / உத்தமர் -ஆச்சார்யர் -வைபவம் மிக்கு என்றபடி –
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை
இனி என் வாக்கு உரையாது -என் மனம் நினையாது மற்று ஒன்றையே -என்றீர் –
இருள் தரும் மா ஞாலத்திலே -இந் நாளிலே இந்த நியமம் நிலை நிற்குமோ -என்ன –
சஞ்சலம் ஹி மன-என்று மனச்சு ஒரு விஷயத்தில் தானே சர்வ காலமும் நிற்க மாட்டாது இறே –
ஆகையாலே மற்றொரு காலத்திலே மனச்சு வ்யபிசரித்து அஞ்ஞாநத்தை விளைத்தாலோ என்று
ஆஷேபித்தவர்களைக் குறித்து -நீங்கள் சொன்னதே சத்யம் -ஆகிலும் நான் கீழே இழந்து போன
நாள் போல் அன்று இந் நாள் -இப்போது தம்தாமுடைய பரமை  ஏகாந்த்யத்தாலே ஸ்ரீ ரங்கநாதன் உடைய
பரம போக்யமான திருவடிகளுக்கு அடிமைப் படுக்கையே பரம புருஷார்த்தம் என்று அத்யவசித்து
இருக்குமவர்களையே தமக்கு   பந்து பூதராக அங்கீ கரித்து கொண்டு பிரபன்ன குல உத்தேச்யராய் –
சர்வ தபச்சுக்களிலும் வைத்துக் கொண்டு -விலஷணமான தபசான சரணாகதி தர்மத்திலே நிஷ்டர் ஆனவர்கள் –
தம்முடைய வைபவத்தை சொல்லி புகழும்படியான எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்தேன் –
ஆன பின்பு ப்ராப்த அப்ராப்த விவேகம் இன்றிக்கே கண்டதொன்றை விரும்பக் கடவதான அஞ்ஞாநமானது

என் இடத்தில் சேரக் கண்டிலேன் -என்கிறார் –

வியாக்யானம்
மற்று ஒரு பேறும் மதியாது -நமாம் துஷ்க்ர்தி நோ மூடா ப்ரபத்யந்தே நராதமா -மாயாயாப
ஹ்ர்தஞான ஆசூரிம் பாவாமாஸ்ரிதா -கலவ் ஜகத்பதிம் விஷ்ணும் சர்வ ஸ்ரஷ்டாரமீச்வரம் -நார்ச்சயிஷ்யந்தி
மைத்ரேய பாஷண்டோபஹதாஜனா -காமைஸ் தைஸ் தைர்  ஹ்ர்தஜ்ஞான ப்ரபத்யந்தே அந்ய தேவதா –என்று
நிஷேதித்த படியே சத்துக்கள் உடைய உபதேசாதிகளாலே தெளிந்து கொண்டு -அனந்யாஸ் சிந்தயந்தோமாம் –
வ்யவசாயாத் மிகா புத்த்திரே கேஹ குரு நந்தன   -மயிஸா நனந்யோகே  ந பக்தி ர வ்யவிசாரிணி -என்கிறபடியே
ததேக நிஷ்டராய் -ஏகாந்தீது விநிஸ் சித்ய தேவதா விஷயாந்தரை பக்தயுபாயம் சமம் க்ருஷ்ண ப்ராப்தவ்
கிருஷ்ண ஏக சாதன -என்னும்படி தேவதாந்திர -மந்த்ராந்தர -பிரயோஜனாந்தரங்களை-ஸ்மரியாத
பரம ஏகாந்த யத்தாலே -மதிக்கை -விரும்புகை-
அரங்கன் மலர் அடிக்கு -ரங்கம் ரங்கமிதி ப்ரூயாத்யோஜநாநாம் -சதைரபி முச்யதே சர்வ பாபேப்யோ –
விஷ்ணு லோகம் ச கச்சதி -இதம் ஹி ரங்கம் த்யஜிதாமி ஹாங்கம்-என்னும்படி பிரசித்த தமமான
ஸ்ரீ ரங்க நகரை தனக்கு இருப்பிடமாக உடையனாய் -அதுவே நிரூபகமாம்படி -எழுந்து அருளி இருக்கிற
ஸ்ரீ ரங்க நாதனுடைய -சர்வே வேதா யத்பதமாமநந்தி  -விஷ்ணோ பதே பரமே மத்வ உத்ச -என்றும் –
கதா புனஸ் சங்க ரதாங்க கல்பக த்வஜார விந்தாகுச வஜ்ராலாஞ்சனம் -திரிவிக்கிரம த்வச் சரணாம்
புஜத்வயம் மதீய மூர்த்தானம் அலங்கரிஷ்யதி -என்றும் கதாஹம் பகவத் பாதாம்  புஜத்வம் சிரஸா சங்கர ஹிஷ்யாமி –
என்றும் சொல்லுகிறபடியே -வேதாந்த வாக்ய சர்வ ஸ்வம்மாய்-நித்ய நிரதிசய போக்யமாய் -சர்வ லஷணோ  பேதமாய் –
அத்யந்த ப்ரார்த்த நீயமாய் -புஷ்ப ஹாச சூகுமாரமாய் -சேவித்தவர்களை அனந்யார் ஹராம்படி பண்ணக் கடவதான

திருவடிகளுக்கு –

ஆள் உற்றவரே -தாசோஹம் வாசுதேவச்ய -லஷ்மீ பர்த்துர் நர ஹரித நோர்த்தா சதா   சச்ய தாஸா -என்றும் –
பொன் ஆழிக்  கை என்னம்மான் நீக்கமில்லா அடியார் -என்றும் சொல்லுகிறபடியே -வழு இலா அடிமைகளில்
அன்வயித்து -முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன் -என்றும் ஆதலால் உன்  அடி இணை
 அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே -என்றும் -அதுவே பரம புருஷார்த்தம் என்றும்
அத்யவசித்து இருக்கிற பராங்குச பரகாலாதிகளே –தனக்கு உற்றவராகக் கொள்ளும் –பாந்தவா விஷ்ணு பக்தாஸ்ஸ –
என்றும் -மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதிஸ் சர்வம் -என்றும் சொல்லுகிறபடியே மாதா பித்ர்ப்ரப்ர்தியான
சர்வ வித பந்துக்களாய் அனுசந்தித்து இருக்குமவராய் -உத்தமனை -கீழ் சொன்ன அதிகாரிகளில் எல்லாரையும்
வைத்துக் கொண்டு -உத்தம அதிகாரியாய் -ஆசார்யராய் –   என்றபடி –நற்றவர் போற்றும் -தவம் –தபசு
நல தவம் -வி லஷணமான தபசு -தஸ்மான் நியாச மேஷாம் தபஸா மதி ரிக்த மாஹூ-என்றும் –
சத் கர்ம நிரதாஸ் சூத்த -சாங்க்ய யோக விதஸ்ததா -நார்ஹந்தி சரணஸ் த்தச்யகலாம் கோடிதமீமபி -என்னும்
சுருதி ச்ம்ர்திகளாலே    -பிரசம்சிக்கப் பட்டதாய் -அர்ஜுனனுக்கு மோஷ உபாயங்களை உபதேசிக்கும் இடத்தில்
முந்துற முன்னம் -கர்ம யோக ஞான யோக பக்தி யோக அவதார ரகஸ்ய புருஷோத்தம வித்யா நாம
சங்கீர்த்தன ரூப இதர உபாயங்களை உபதேசித்தவாறே -அவற்றை கேட்டு சோக விசிஷ்டனானவனைக் குறித்து
அவனுடைய சோகாபநோத நார்த்தமாக உபதேசிக்கப்பட்ட அர்த்தமாய் -அத ஏவ சுகமாய் -அவிளம்ப்ய பல ப்ரதமாய்   –
ஸ்வரூப அநு ரூபமாய் -அத்யந்த விலஷணமான –சரணாகதி தர்மத்திலே -அத்யபிநிவிஷ்டரான –ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் -எம்பார் கிடாம்பி ஆச்சான் முதலான முதலிகளும் -லோகத்தாரை உத்தரிப்பிக்கைக்காக அவதரித்த வருடைய

வைபவத்தை அறிந்து –

ந சேத் ராமாநுஜேத்யேஷா     சதுரா சதுரஷரி  காமவஸ்த்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாதரசா -என்றும்
புண்யம் போக விகாசாய பாபத்வாந்த ஷயாயச ஸ்ரீ மான் ஆவீர் பூத் பூமவ்   ராமானுஜ திவாகர -என்றும் –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குச விபூதயா-ராமானுஜ   பதாம் போஜ  சமாச்ரயண சாலிந -என்றும்
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் யதிராஜோ ஜகத் குரு -ச ஏவ சர்வ லோகா நாம் உத்தர்த்தா ந அத்ர சம்சய -என்றும்
குதர்ஷ்டி குஹ நாமுகே நிபதித பரப்ரஹ்மண கரக்ரஹ விசஷணே ஜயதி லஷ்மணோ யம் முனி -என்றும் –
ச்ருத்யக்ர வேத்ய நிஜ திவ்ய குண ஸ்வரூப ப்ரத்யஷ தாமுபக தஸ்த்வி ஹ ரங்கராஜ வச்யஸ் சதாபவதி தே
யதிராஜ  தஸ்மாத் சக்தஸ்ஸ்வ கீய ஜன பாப விமோச நேத்வம் -என்றும்
வாழி எதிராசன் வாழி எதிராசன்    -என்றும் சொல்லிப் புகழும்படி எழுந்து அருளி இருக்கிற –
இராமானுசனை -எம்பெருமானாரை –இந் நானிலத்தே -இருள் தருமமா ஞாலத்திலே –பெற்றனன் -ஆஸ்ரயித்தேன் –
நிழலும் நீரும் இல்லாத மருகாந்தரத்திலே தண்ணீர் பந்தல் பெற்றவன் ஹ்ர்ஷ்டனாப் போலே -இந்த
லோக ஸ்வ பாவத்தை அழிய மாறி என்னை உஜ்ஜீவிப்பிக்கும் விஷயத்தை பெற்றேன் என்று
ஹ்ர்ஷ்டர் ஆகிறார் காணும் –பெற்றபின் மற்று அறியேன் ஒரு பேதமையே –எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு
முன்பு அநாதி காலமே தொடங்கி ஆவிர்பூதமாய் இருக்கிற என்னுடைய -தேகாத்ம –  பிரமமும்
ஸ்வ ஸ்வா தந்த்ர்யா பிரமமும்-அந்ய சேஷத்வ பிரமமும் -அநுபாய உபாயத்வ பிரமமும் -எங்கே சென்றது கண்டிலேன் –
மற்று அறியேன் ஒரு பேதமையே -அஞ்ஞானமானது மனசுக்கு தோற்றுகிறது இல்லை –
பிரத்யட்ஷமாக காணப்படுகிறது இல்லை -பிராப்த அப்ராப்த விவேகம் பண்ணாதே -கண்ட ஒன்றிலே மேல் விழுந்து
மண்டிகைக்கு உறுப்பான அஞ்ஞானம் வாசனையோடு போய்த்து என்றபடி -த்யஜபட தூரதரென தான பாபான் –
என்றாப் போலே அஞ்ஞானம் அடங்கலும் தூரதோ நிரச்தம் என்றது ஆய்த்து –
 
————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை –
என் வாக்கும் மனமும் மற்று ஒன்றை இனி உரையாது நினையாது என்னும் உறுதி எங்கனம் கூடும் –
இருள் தரும் மா ஞாலம் அன்றோ –
மீண்டும் அறியாமை வாராதோ -என்பாரை நோக்கி
இன் நானிலத்தில் எம்பெருமானாரை நான் பெற்ற பின்பு நன்மை  தீமைகளைப் பகுத்து அறியாது
கண்டதொன்றை விரும்பும் பேதைமை ஒன்றும் அறியேன் -என்கிறார் .
பத உரை –
மற்று ஒரு பேறு -வேறு பயனை
மதியாது -ஒரு பொருளாகக் கருதாமல்
அரங்கன் -பெரிய பெருமாள் உடைய
மலர் அடிக்கு -அழகிய திருவடிகளுக்கு
ஆள் உற்றவரே -ஆட் புக்கு நிலை நிற்பவர்களையே
தனக்கு உற்றவராய் -தமக்கு உறவினராக
கொள்ளும் -ஏற்கும்
உத்தமனை -மிக்க மேன்மை வாய்ந்தவரான
நல் தவர் –நல்ல தவமாம் சரணா கதி தர்மத்தை கை கொண்டவர்கள்
போற்றும் -துதியா நிற்கும்
இராமானுசனை -எம்பெருமானாரை
இன் நானிலத்தே -இந்த உலகத்திலே
பெற்றனன் -பெரும் பேறாக பெற்று விட்டேன்
பெற்ற பின் -பெற்ற பிறகு
‘மற்று -இப் பேற்றைத் தவிர மற்று ஒன்றை விரும்புவதற்கு உறுப்பான
ஒரு பேதைமை -ஒரு அஞ்ஞானம்
அறியேன் -வருவது கண்டிலேன் .
வியாக்யானம்
மற்றொரு –உத்தமனை –
அரங்கன் மலர் அடிக்கே ஆளுகையே பேறு
அடிகள் நிரதிசய போக்யமாய் மலர் போன்று இருத்தலின் ஆளுறுகை பெரும் பேறாயிற்று –
திரு வரங்கத்தில் அரங்கன் திருவடி வாரத்தில் பண்ணும் கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
மற்ற புருஷார்த்தங்கள் புருஷார்த்தமாக மதிக்கத் தக்கன அல்ல என்று ஆளுற்றவர் கருதுகின்றனர் .
இனி திருவரங்கத்தில் அரங்கனுக்கு ஆளுறுகை தவிர்ந்து பரம பதத்தில் பர வாசுதேவனுக்கு ஆளுறுகை
நேரினும் -அதனையும் மதிக்கிலர் என்னும் கருத்தில் –மற்றொரு பேறு மதியாது -என்று கூறினதாகக்
கொள்ளலலுமாம்-மற்று ஒரு பேறு -பரம பதத்தில் பெரும் பேறு -முக்த ஐஸ்வர்யம் என்றபடி –
இப்படி பொருள் கொள்ளும்போது –மற்று ஒரு பேறும் என்று பிரிக்க -உம்மை உயர்வு சிறப்புப் பொருளது –
சீரிய முக்த ஐஸ்வர்யத்தையும் மதிக்கிலர் என்றது ஆயிற்று -திருவரங்கத்தில் ஈடுபட்டவர்கள்
பரம பதத்தையும் விரும்ப மாட்டார்கள் என்பது கீழ் வரும் ஐதிஹ்யங்களாலே விளங்கும் .
ஆள வந்தார் மகனார் சொட்டை நம்பி -அந்திம தசையிலே முதலிகள்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
அடைய புக்கிருந்து -நீர் நினைத்துக்கிடக்கிறது என் -என்ன –
ஸ்ரீ வைகுண்டத்தில் சென்றால் நம் பெருமாள் உடைய குளிர்ந்த முகம் போலே
ஸ்ரீ வைகுண்ட நாதன் முகம் குளிர்ந்து இருந்தது இல்லை யாகில் -முறித்துக் கொண்டு இங்கு
ஏற ஓடிப் போகும் இத்தனை -என்று கிடக்கிறேன் -என்றார் .
பட்டர் -பெருமாள் பாடே புக்கு இருக்க -பெருமாள் திரு மஞ்சனத்துக்கு ஏறி அருளுகிறவர் –
பட்டரைக் கண்டு -உனக்கு வேண்டுவது என் -என்று கேட்டு அருள –
சேலையைக் கடுக்கி -திருவரையையும் துடைப்பற்றையும் ஒரு கால் காட்டி அருள வேணும் -என்றார் .
பெருமாள்-அஞ்சினாயோ -என்று கேட்டு அருள -ஆடை இல்லாத ஏகாந்த நிலையில் -பெருமாளை சேவித்தால் –
சீக்கிரம் பரம பதத்துக்கு போவார் -என்கிற பிரசித்தியைப் பற்ற -பரம பதம் போவதற்கு அஞ்சினாயோ –
என்று பட்டரை பெருமாள் கேட்டு அருளினார் -என்க ..
நாயந்தே பரம பதம் என் சிறு முறிப்படி அழியும் –எனக்கு வசப்பட்டதே பரம பதம் ஆதலின் அங்குப் போக
நான் அஞ்ச வில்லை -என்றபடி -உம்முடைய குளிர்ந்த திரு முகமும் திரு நாமத் தழும்பும் இழக்கிறேனாக

கருதி அஞ்சா நின்றேன் -என்றார் .இவ்விரண்டி ஐ திஹ்யங்களும் -திரு விருத்தம் – 44- ஆம் பாசுரத்தில் -வ்யாக்யானத்தில்-பெரிய வாச்சான் பிள்ளை காட்டியவைகள் .நாச்சியார் திரு மொழி வ்யாக்யானத்திலும் -அவராலே -சிறிது மாறு பாட்டு -இவை -நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் -11 5-என்னும் இடத்தில் கட்டப் பாட்டு உள்ளன -அவ்விடத்திலேயே -பரம பதம் வரில் செய்வது என் என்று நடுங்குவார்கள் போலே காணும் அவ்வூரில் திருவரங்கத்தில் -வர்த்திக்கிறவர்கள் – – என்று அவர் அருளிச் செய்து இருப்பதும் இங்கு அறியத் தக்கது –

அரங்கன் மலர் அடிக்கு ஆளுற்றவர் பரம பத நாதனுக்கு ஆளுருதலையும் பேறாக மதிக்கிலர் –
வான் இளவரசு வைகுந்தக் குட்டன் தானே அவன் –
அரங்கனோ புவனியும் விண்ணுலகும் ஆதும் சோராமல் ஆள்கின்றவன்
மாகம் -பரம ஆகாசமாம் பரம பதம் -மட்டும் இறைஞ்சும் அது பரம பத நாதன் அடி –

அரங்கனதோ -மாகம் மாநிலம் முழுதும் வந்து இறைஞ்சும் மலரடி .தனக்கு உற்றவராய்க் கொள்ளும் உத்தமனை

அரங்கன் திரு முற்றத் தடியார்களையே தமக்கு உறவினராக கொண்டவர் -எம்பெருமானார் -என்றபடி .
துறக்கும் போதும் ஆண்டானையும் ஆழ்வானையும் துறவாது உறவாக -ஆத்மபந்துவாக -கொண்டவர்
அன்றோ அவர் .
மாதவன்  திருவடிகளை உபாயமாகவும் -உபேயமாகவும்-கொள்ளுமவன் உத்தம அதிகாரி எனப்படுவான் .
எம்பெருமானார் அத்தகைய அதிகாரி ஆதலின் அவரை உத்தமன்-என்கிறார் .
த்வயார்த்த நிஷ்ட்டர் -என்றபடி .
நல் தவர் போற்றும் இராமானுசனை
த்வயார்த்த  நிஷ்டர் ஆதலின் அத்தகையோர் அவரைப் போற்றுகின்றனர் .
தவம்-சரணாகதி –
தவங்களுக்குள்தனக்கு மேற்பட்டது ஓன்று இல்லாத தவம் ந்யாசம் எனப்படும் சரணா கதி –
என்று வேதம் ஓதுகிறது .ஏனைய தவங்களில் நின்றும் மேம்பாடு தோற்ற –நல் தவம் –என்று விசேஷித்தார் –
நன்மையாவது -எளிதில் கை யாளலாம்படி இருத்தலும் –
காலம் தாழ்த்தாது பயன் அளித்தாலும் –
ஜீவான்ம ஸ்வரூபத்தின் பார தந்த்ரியத்திற்கு இயைந்து இருத்தலும் .
ஏனைய தவங்கள்-சாதனாந்தரங்கள் -அரும் பாடு பாட்டு கைக் கொள்ள தக்கனவாய் உள்ளன .
காலம் தாழ்த்து -அதாவது -பிராரப்த கர்மம் தீர்ந்த பின்னர் பயன் அளிப்பான –
அஹங்காரம் கலந்தவை யாதலின் ஆன்மாவின் பாரதந்த்ரியம் நிலைக்கு இசையாதன -என்றுணர்க –
அத்தகைய நல் தவம் உடையவர்கள் -சரணா கதி நிஷ்டர்கள் –
எம்பெருமானார் தான் சரணா கதியைக் கைக் கொண்டும் -உபதேசத்தாலும் -நூல்களாலும்
உலகினரை சரணா கதி நெறியில் ஒழுகச் செய்தும் -தாம் செய்த சரணா கதியில் செருகி உலகினர்
உய்யுமாறு வரம் பெற்றும் -சரணா கதியை எங்கும் -என்றும் -நிலை நிறுத்தின
பெருதவிக்குத் தோற்று நல் தவத்தவர்கள் எம்பெருமானாரைப் போற்றுகின்றனர் -என்க –
இன் நானிலத்தே –பேதமையே –
பெறற்கு அரிய எம்பெருமானார் ஆகிய பேறும் பேற்றினை இவ்வுலகிலே பெற்று விட்டேன் .
பெற்றனன் என்று கூறி -மீண்டும் பெற்ற பின் என்று அநுவாதம் செய்கையாலே இதனது பெறாப் பேறாம்
தன்மை புலப்படுத்தப் படுகிறது .இப் பேற்றினை பெற்ற பிறகு -தக்கது இது -தகாதது இது -என்று
பகுத்து பாராது கண்ட ஏதேனும் ஒரு பொருளிலே ஈடுபடுகைக்கு உறுப்பான பேதைமை -அறியாமையை நான் –
கண்டிலேன் .என்கிறார் .
பேதமையை பற்றி எதுவுமே அறிந்து கொள்ள முடியாத படி அடியோடு அது ஒழிந்தமையின்
இனி அது தலை காட்டவே முடியாது என்பது கருத்து –
தன இயல்பினை விஷய வைலஷண்யம் மாற்றியது போலே இருள் தரும் மா ஞாலத்தின்
இயல்பையும் மாற்றி விட்டது -என்பது உட் கருத்து–
 
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது —

லீலா விபூதி இது ஆகையாலே அஞ்ஞானம் வரிலோ என்ன-எம்பெருமானாரை இந்த லோகத்திலே லபித்த பின்பு விவேகம் இன்றியே கண்டது ஒன்றை விரும்ப கடவ -அந்த பேதை தனம் ஒன்றும் அறியேன்…மனசு- பந்தமும் மோட்சமும்  வர காரணம்-அடக்கம் /அடக்கும் முறை -அணை தேக்கி சக்தி பெரும் ..இந்த்ரியங்களை அடக்குபவன் ஸ்திர பிரதிக்ஜன்/அனுபவித்து மேய விட்டால் சக்தி விரயம்..ஓடுகிற தண்ணியில் இல்லை அடக்கிய தண்ணீரால் தான் சக்தி/சஞ்சலம் மனசு.. நின்றவா நில்லாது நெஞ்சு/நல் தவர் போற்றும் ஸ்வாமி/சரணா கதி நிஷ்டையர்/இந் நானிலத்தே பெற்றேனே //இறந்த காலம்–காண வாராய் என்பர் ஆழ்வார்/ மேவினேன் அவன் பொன் அடி மெய்மையே போல-பெற்றனன் -பெற்று விட்டேன்/ மற்று பேறு பேறும் மதியாது-பாட பேதம்../மலர் அடிக்கு ஆள் என்று உற்றவர்-கைங்கர்யமே உற்ற வாழ்வு-என்று இருப்பவர் அனைவரும் தனக்கு உற்றவர்..ஆழ்வார் போல்வாரை ஸ்வாமி உற்றவர் என்கிறார்ஸ்ரீ ரெங்க வாசிகளை உற்றவர்-உத்தமன்- வாசி-ஆச்சா ர்யர்களுக்கு யேற்றம்-அரங்கன் தொண்டர்களில் உத்தமன்..-பேதைமை தெரியாது நோய் முதலுக்கு மருந்து-நோய் நாடி நோய் முதல் நாடி-காம குரோதம்-கீதையில் அருளிய  உதாரணம் -புகை படியும்/கண்ணாடி அழுக்கு/குண கர்ம இரண்டாலும் வர்ணம்/சத்வ ரஜோ தமஸ் குணங்களால் மாறி மாறி இருக்கிறான்-சங்கத்தில் /பற்றுதல் /பேர் ஆசை/ காமம்/ கோபம்/ பகுத்தறிவு போகும்../காமாதி தோஷங்கள் போக்கி  ஸ்வாமி -/வேறு  பிரயோஜனங்களை மதியாது-அரங்கன்-மலர் அடி- நிரதிசய போக்யமான -அடிமை தனமே புருஷார்த்தம்-தனக்கு பந்துவாக -ஸ்வாமி கொண்டார்/ மாமான் மகளே பிரகிருதி சம்பந்தம் ஆண்டாள் வேண்டுவது போல-முதலி  ஆண்டான்  சன்யாசம் கொள்ளும் போதும் விடாமல் இதனால் தான் கொண்டார்/திரு கோஷ்டியூர் நம்பி அருளியதை ஆத்மா பந்துகள் அனைவர் இடம்-நீக்கமில்லா அடியார்-லஷ்மணன்  கோதில் அடியார்-சத்ருக்னன்  சயமே அடிமை தலை நின்றார்-பரதன்/வந்து உன்  அடி இணை அடைந்தேன் -கலியன்/இவர்களே ஆள் உற்றவர் /பேறும் மதியாது..உம் சேர்ந்து–ஸ்ரீ வைஷ்ணவ பிராப்தி மதியாது திரு பாண் ஆழ்வார் தொண்டர் அடி பொடி ஆழ்வார் சிறிய திருவடி போல்வார்/அவர்கள் தான் பந்துகள்-மாதா பிதா என்று சர்வமும் இவர்கள் என்று மதித்து/ உத்தம அதிகாரிகளாய் //உத்தமன்  – ஸ்வாமி/ உத்தமனே நல் தவர் போற்றும் ராமானுசன்//தவம்-நல் தவம்-கர்ம ஞான பக்தி யோகம் தபஸ்-/சரணா கதி-நல்தவம்/சுலபம் / அவிலம்பன சீக்கிரம் பலம் தரும்/சொரூப அநுரூப பலம்/சேஷத்வம் பாரதந்த்ரயமே சொரூபம்/பெற்றனன்  பெற்ற பின்– பெறுவதில் இருக்கும் துர் லப தன்மை -திரும்பி சொல்கிறார்-நெடு மரம்  கலம் கரை சேர்ந்தால் போல-பேதைமை-ப்ராப்த அப்ராப்த விவேகம் பண்ணாதே-கண்டதொன்ற்றிலே மேல் விழுகைக்கு உறுப்பான ஒரு அஞ்ஞானம் கண்டிலேன்..ஆதலால் உண்டாக கூடாது என்று கருத்து/மத்  பக்தி அவி- விவசாரிணி../இழந்த நாள் போல அன்று இன்று..பரம ஏகாந்த பக்தர்கள்..அவன் திருவடிகளில் -அடிமை படிதல்-தேறின  ஆழ்வார்கள் தான் -பிர பன்ன குல உத்தேச்யர்-ஜகத் பதி விஷ்ணு  கண்டும் தெளிய கிலீர்/காரியம் வியாபகன் நியந்தா ஜகத் பதி/அனந்யா  சிந்தை யந்தாம்-யோக ஷேமம்  வகாம் அகம்-கிடைக்காத கிருஷ்ண பிராப்தி கொடுத்து பின்பு அதையே  நிலை நிற்க பண்ணுவான்-மலர் அடி-சர்வ வேதங்களும் இவன் பதத்தையே பேசும்/வஜ்ர லாஞ்சனதுடன் மதியமூர்தனம்  அலங்கரிஷ்யதி-வேதாந்த வாக்கியம் நித்ய நிரதிசய போக்யமாய்/ பரத்வ லஷண சூசுகமாய் புஷ்ப காச /சேவிதவர்களை அற்று தீர்க்க வைக்கும் திரு கமல பாதம் /விவச்யாத்மா புத்தி-மூன்று வித த்யாகங்கள் உடன் கர்ம யோகம் செய்ய செய்ய-சாஷத்காரம்  ஒன்றையே குறி கோளாகா கொண்டு பண்ணனும்/வேறு எதில் ஆசை வைத்தாலும் தாவி கொண்டு போகும்..தேவதாந்த்ரங்கள்/ மந்த்ராந்த்ரங்கள்/பலாந்த்ரன்களை விட்டு-நாளும் விழவின் ஒலி-வேறு எதிலும் எண்ணம் போகாது இருக்க ஸ்ரீ ரெங்கம்  ஸ்ரீ ரெங்கம்  என்று சொன்னால் எங்கு இருந்தாலும் சர்வ பாபங்களும் விடு பட படுகிறான்//உபாய உபயமும் துவயதுக்கு  அதிகாரி ஆள் உற்றவரே-கைங்கர்யமே பரம புருஷார்த்தம்-/மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு/முகில் வண்ணன்  அடியை  அடைந்து அருள் சூடி   உய்ந்தவன்.–ஆழ்வார் ./ ஸ்வாமி வேழம் /சீயம் /உத்தமனை..கீழ் சொன்ன அதிகாரிகளில் அரங்கனையும் சேர்த்து..உத் புருஷன் உத்தர புருஷன் ஆழ்வார்கள் உத்தம புருஷன் ஆச்சார்யர்கள் என்ற படி..நல் தவம்–சரணா கதி..முந்தர முன்னம் கர்ம ஞான பக்தி யோகம் அவதார ரகசியம் புருஷோத்தம விதியை நாம சங்கீர்த்தனம் கேட்டு-சோகா விஷ்டனாய் சோகம் போக்க அருளிய சரம ஸ்லோகம்-சுலபம் சீக்கிர பலம் சொரூப அனுரூபம் அத யந்த விலஷணம்/லோகத்தை உத்தரிக்க /ஜந்து வாக இருக்கும் நம்மை தூக்கி விட ராமானுஜ திவாகரன் /வேதாந்தத்தில் உள்ளவன் கண் முன் சேவை சாதிக்க -அந்த அரங்கனே உனக்கு ஆட் பட்டு இருக்க-வாழி எதிராசன் வாழி எதிராசன் /சொல்லி புகழும்  படி எழுந்து அருளி இருக்கிற ஸ்வாமி யை பெற்றனன /திரு விருத்தம் 44 -வ்யாக்யானத்தில் அருளிய ஐ திக்யம்/பரம பத சேவையும் விரும்ப மாட்டார்கள்-அழகிய மணவாளன் திரு வடிகளே சரணம்/ஆள வந்தார் குமரன் -சொட்டை நம்பி முதலிகள் சேர்ந்து இருக்க என்ன நினைந்து இருந்தீர்-பட்டரும்-சேலையை அகற்றி திரு தொடை  சேவை காட்டி அருள-அஞ்சினாயோ-பரம பத பிராப்தி கிட்டும்-சிறு முறிப்பு அறியும் ஓலை  எழுதி கிட்டும்உம் உடைய குளிர்ந்த திரு முகமும் வைத்த அஞ்சல் என்ற கையும் சேவை இல்லை என்று ..தண்ணீர் இல்லாத பாலை வனத்தில் சோலை போல சுவாமியை இந் நானிலத்தே பெற்றனன் ..தேக ஆத்மா பிரமம்/ சுதந்தரன் என்ற நினைவு/அந்ய சேஷத்வம்- எங்கு எல்லாம் போய் / அநு உபாயம் /இதை எல்லாம் முன்பு பட்டேன்-அல் வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியூர் கோன்-ஆறு வித அல் வழக்கு  காட்டினார்/ ம காரம் தேக விலஷணம்/-ச்வதந்த்ரன்  ஆய /உ காரம் அனந்யார்க்க சேஷத்வம் அந்ய /நம= கண்டதும்  உபாயமில்லை /நாராயண -அபந்துகளை பந்து / ஆய -பிரயோஜநான்தரம் விட்டு   அவன் திருவடிகளே என்று இருக்கை/இவை எல்லாம் வாசனை உடன் ஒழிந்தனவாம்/விவேக ஞானம் பெற்றேன் ..யம தர்மன் தமர்கள் இடம் ஸ்ரீ வைஷ்ணவர்களே நம் ஸ்வாமி — ஸ்ரீ வைஷ்ணவனை பாபம் தட்டாது என்று சொன்னால் போல அஞ்ஞானம் விலகிற்று -பேதைமை- பகுத்தறிவு-அறியேன்-தெரியவே தெரியாது என்கிறார்..தெரிந்து விட வில்லை  வாசனையே தெரியவே தெரியாது-ஸ்வாமி திருவடிகளைப் பெற்ற பின்–

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: