அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-56-கோக்குல மன்னரை மூ வெழு கால் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
ஐம்பத்தாறாம் பாட்டு -அவதாரிகை
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடி -என்று இவர் சொன்னவாறே -முன்பும் ஒரோ விஷயங்களில் நின்றால் இப்படி யன்றோ நீர் சொல்லுவது .
இதுவும் அப்படி அன்றோ -என்ன
எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு என் வாக்கு மனச்சுக்கள் இனி வேறு ஒரு
விஷயம் அறியாது -என்கிறார் .
கோக்குல மன்னரை மூ வெழு கால்   ஒரு கூர் மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனம் எங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமானுசனை யடைந்த பின் என்
வாக்குரையாது என் மனம் நினையாது இனி மற்று ஒன்றையே -56-
வியாக்யானம் –
ஐச்வர்யத்தால் –   ராஜ குலத்தை ப்ராபிக்கை  யன்றிக்கே -ஷத்ரிய குலோத்பவரான ராஜாக்களை
இருபத்தொரு கால் அரசு களை கட்ட -திருவாய் மொழி -9 2-10 – – என்கிறபடியே
இருப்பதொரு கால்-அத்விதீயமாய்க் -கூரியதாய்-இருக்கிற மலுவாலே நிரசித்த –
விரோதி நிரசன பிரயுக்தமான ஔஜ்வல்யத்தை உடைய சர்வேஸ்வரனை -அந்த
குணஜிதராய்க் கொண்டு ஏத்தா நிற்ப்பராய்-ஸ்வ சம்பந்த்தாலே அசுத்தரையும் சுத்தராக்க வல்ல-பரம பாவன பூதராய்-இப்பார் முழுதும் போர்த்தான் புகழ்  கொண்டு – – 52- என்கிறபடியே
லோகம் எங்கும் வ்யாபிக்கும்படி பண்ணின கீர்த்தியை உடைய எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு
மேலுள்ள காலம் வேறு ஒரு விஷயத்தை என்னுடைய வாக்கானது கீர்த்தியாது –என்னுடைய மனச்சானது-ச்ம்ரியாது –
போற்றுதல் -புகழ்தல் / புனிதன் -சுத்தன்
காரணங்களுக்கு இவ்விஷயத்தில் அனந்யார்ஹமாம்  படி விளைந்த ப்ராவன்யத்தைக் கண்ட
ப்ரீதி அதிசயத்தாலே –என் வாக்கு -என் மனம் -என்று
தனித் தனியே ஸ்லாகித்து அருளிச் செய்கிறார் .
அடைந்ததற் பின் வாக்குரையாது என் மனம் நினையாது -என்றும் பாடம் சொல்லுவார்கள் .
பரசுராம அவதாரம் அஹங்கார யுக்த ஜீவனை அதிஷ்ட்டித்து நிற்கையாலே முமுஷுக்களுக்கு-அனுபாஸ்யம் அன்றோ -போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் -என்பான் என்   என்னில் –
அதுக்கு குறை இல்லை -விரோதி நிரசனம் பண்ணின உபகாரத்துக்குத் தோற்று –
ஸ்துதிக்கிற மாத்ரம் ஒழிய -தத் உபாசனம் அல்லாமையாலே .
மன்னடங்க மழு வலங்கை கொண்ட விராம நம்பி -பெரியாழ்வார் திரு மொழி – 4-5 -9 -என்றும்
வென்றி மா மழு ஏந்தி முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவா –பெரிய திரு மொழி –4 3-1 – என்றும்
ஆழ்வார்கள் அருளிச் செய்ததும் -விரோதி நிரசன ஸ்வபாவத்துக்கு தோற்றுத் துதித்தது இத்தனை இறே ..
கோக்குல மன்னர் -அரச குலத்தில் பிறந்த மன்னர் -ஷத்ரியர்களாக பிறந்த -மற்ற வம்ச அரசர்களை அழிக்க வில்லையே ஸ்ரீ பரசுராமர்
உறுதியான -தந்தை சொல் கேட்டு தாயையும் அழித்து -21 தலை முறை ஷத்ரிய அரசர்களை அழித்து –இதனால் வந்த உறுதி அமுதனார்க்கும் உறுதி
———————————————

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

அவதாரிகை
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே -என்று சொன்னவாறே -நீர் இப்போது-எம்பெருமானாருடைய கல்யாண குணங்களை அனுபவித்து வித்தராய் சொன்னீர் -நீர் விஷயாந்தரங்களை-விரும்பின போது முற்காலத்தில் அப்படியே அன்று சொல்லுவது -ஆகையாலே உமக்கு இது ஸ்வபாவமாய் விட்ட பின்பு
இவரையே பற்றி இருக்கிறேன் என்ற இது நிலை நிற்க கடவதோ என்று சிலர் ஆட்சேபிக்க -அவர்களை குறித்து-
நான் துர்வாசனையாலே விஷயாந்தரங்களை விரும்புவதாக யத்நித்தேன் ஆகிலும் என்னுடைய வாக்கும்-மனசும் அவற்றை விரும்ப இசையாதே இருந்தது -என்கிறார் –
வியாக்யானம் –
கோக்குல மன்னரை -த்ரேதா யுகத்திலே -கார்த்த வீர்யார்ஜுனன் -என்பான் ஒரு ராஜா
மகா பல பராக்கிரம  சாலி யாய்   ஒருவரும் எதிரி இன்றிக்கே திரிகிற காலத்திலே -ஒரு நாள் ஜமதக்னி-மகரிஷியினுடைய ஆஸ்ரமத்திலே சென்று -பிரசந்காத் ராஜ்ய கர்வத்தாலே -அவனை ஹிம்சித்துப் போக –
அந்த ரிஷி புத்ரனான ஸ்ரீ பரசுராம ஆழ்வான் -அச் செய்தியை கேட்டு மிகவும் குபிதனாய் -தத் ஷணத்திலே-தானே அந்த ராஜாவை கொன்றும் பித்ர்வத  ஜன்யமான கோபம் சமியாமையாலே -ராஜ குலத்தை எல்லாம் நிஷத்ரமாக
பண்ணக் கடவோம் -என்று சங்கல்பித்து பூமியில் உள்ள ராஜாக்களை எல்லாம் சம்ஹரித்து-சிறிது நாள் தபசு பண்ணி கொண்டு போந்து பின்னையும் ஷத்ரிய குலம் உத்பன்னமாய் கொழுந்து விட்டு
படர்ந்தவாறே அத்தைக் கண்டு திரியட்டும் முன்பு போலே நிஷத்ரமாக பண்ணி இப்படி
இருபத்தொரு தலை முறை -ஷத்ரிய ராஜாக்களை எல்லாம் சம்ஹரித்து அவர்களுடைய ரத்தத்தால்-தில தர்ப்பணம் பண்ணினார் என்று பிரசித்தம் இறே -அப்படி ரோஷா விசிஷ்டனாய் நின்ற போது
வேறொரு குலத்தில் பிறந்தார் ராஜ்ஜியம் பண்ணிக் கொண்டு இருந்தாலும் அவர்கள் வழி போகாதே
ஷத்ரிய குல மாத்ரத்தையே சம்ஹரித்த படியை அருளிச் செய்கிறார் –கோக்குல மன்னரை -வேறொரு குலத்தில் பிறந்து
ஐச்வர்யத்தாலே ராஜ குலத்தை பிராப்பிக்கை அன்றிக்கே -சாஷாத் ஷத்ரிய குலோத்பவரான ராஜாக்களை –
மூ வெழு கால் – மூ வேழுதரம் -இருபதொருகால் அரசு களை கட்ட -என்கிறபடியே இருப்பதொரு முறை
என்றபடி –ஒரு கூர் மழுவால் -ஆவேச அவதாரமான ஸ்ரீ பரசுராம ஆழ்வானுக்கு நிரூபகமாய் இருக்கையாலே
அத்விதீயமாய் இருப்பதொரு -பர்யாயம்-ஷத்ரியரை சம்ஹரிக்கத் தக்கதான கூர்மை உடைய பரசுவாலே –
போக்கிய தேவனை -விரோதி நிரசன பிரயுக்தமான ஔஜ்வல்யத்தை உடைய சர்வேஸ்வரனை என்றபடி
இப்படிப் பட்ட தொழில்களை எல்லாம் அந்த அவதாரத்தில் பண்ணின கிரீடை யாகையாலே -ஏவம் பிரகாரமான

க்ரீடா யுக்தனை -என்றபடி -போற்றும் -ஆஸ்ரயித்து இருக்கிற மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு இருக்கிற -போற்றுதல் -புகழ்தல் -விநாசாய ச துஷ்க்ர்தாம் –

என்கிறபடி ஆஸ்ரித விரோதி நிரசன சீலமாகிற குணத்திலே தோற்று ஏத்தா நின்றார்கள் காணும் –
மகா பாராத பாஞ்சராத்ராதிகளாலும் -நம்முடைய பூர்வாச்சார்யர்களாலும் -பிரம ருத்ர அர்ஜுன வியாச
ககுஸ்த ஜாமதக்னியாதிகள் அனுபாச்யர் என்று பஹூ முகமாக    சொல்லி இருக்க
எம்பெருமானார் -பரசுராம ஆழ்வானை ஏத்துகிற இது -சேருமோ என்னில் -அந்த அவதாரம் எம்பெருமானுடைய
அஹங்கார யுக்த ஜீவ ஆவேசம் ஆகையாலே  -அவனாலே செய்யும் அம்சத்துக்கு எம்பெருமானார் ஈடுபட்டு
ஸ்துதித்தார்  என்று சொன்னேன் இத்தனை ஒழிய தத் உபாசனம் பண்ணுகிறார் என்று சொல்லாமையாலே
விரோதம் இல்லை -மன்னடங்க மழு வலங்கை கொண்ட இராம நம்பி -என்றும் -வென்றி மா மழு வேந்தி
முன் மண் மிசை மன்னரை மூ வெழு கால் கொன்ற தேவா -என்றும் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்
அருளிச் செய்ததும் விரோதி நிரசன ஸ்வ பாவத்துக்கு தோற்று –புனிதன் -பகவத் மங்களா சாசனத்தாலே
பரிசுத்த ஸ்வ பாவராய் -தம்மை ஆஸ்ரயித்தவர்களையும் -ஆத்மசாம்யா வஹத்வாத் -என்று சொல்லப் பட்ட
ஸ்வ சாம்யத்தை உடையராம்படி பண்ண வல்ல பாவனர் –புனிதன் -சுத்தன் -புவனம் ஒக்கும் ஆக்கிய கீர்த்தி –
இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு -என்கிறபடியே இந்த லோகம் எல்லாம் வ்யாபிக்கும்படி பண்ணின
கீர்த்தியை உடையரான –இராமானுசனை -எம்பெருமானாரை -அடைந்த பின் -ஆஸ்ரயித்த பின்பு -இங்கே

அடைந்தததற் பின் -என்றும் பாடம் சொல்லுவார்கள் -ஆகிலும் அர்த்த பேதம் இல்லை –

இனி மற்று ஒன்றை –மேல் உள்ள காலம் எல்லாம் வேறு ஒரு விஷயத்தை –என் வாக்கு உரையாது-என் மனம் நினையாது –-முற் காலத்தில் எல்லாம் அசத்ய பாஷணத்தையும் -அசத் கீர்த்தனத்தையும் –
பண்ணிக் கொண்டு போந்த என் வாக்கானது -எம்பெருமானாரை ஆஸ்ரயித்த பின்பு -அவருடைய
திவ்ய குணங்களையே கீர்த்தியாய் நிற்கும் இத்தனை ஒழிய -வேறு ஒன்றை கீர்த்திக்க மாட்டாது –
முற் காலம் எல்லாம் பாப சிந்தனையே பண்ணிக் கொண்டு போந்த என் மனசானது -அவரை
ஆஸ்ரயித்த பின்பு -அவருடைய திவ்ய குணங்களிலே ஈடு பட்டு சர்வவிதா அவை தன்னை மனனம் பண்ணிக்
கொண்டு இருக்கும் இத்தனை ஒழிய வேறு ஒன்றை ஸ்மரிக்க மாட்டாது என்று அருளிச் செய்தார் ஆய்த்து –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி  நிரந்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண ஸாலிந -என்னக் கடவது இறே –
———————————————-

அமுது விருந்து

அவதாரிகை
கொண்டலை மேவித் தொழும் குடி எங்கள் கோக்குடி எனபது நீர் பற்றின ஒவ் ஒரு விஷயத்திலும்
தனித் தனியே உணர்ச்சி வசப்பட்டு பேசினது போனது அன்றோ -அது போலே இதுவும் உணர்ச்சி
வசப்பட்ட பேச்சாய் நிலை நிற்காதே -என்ன –
எம்பெருமானாரை பற்றின பின்பு -மற்று ஒரு விஷயத்தை -என் மனம் பற்றி நினையாது –
என் வாக்கு உரையாது -என்கிறார் .
பத உரை
கோக்குல மன்னரை -ராஜ -ஷத்ரிய குலத்தில் பிறந்த அரசர்களை
மூ ஏழு கால் -இருபத்தொரு தடவை
ஒரு -ஒப்பற்ற
கூர் மழு வால் -கூர்மையான மழு என்னும் ஆயுதத்தினால்
போக்கிய -உலகை விட்டு போகும்படி செய்த
தேவனை-புகழ் பெற்ற சர்வேஸ்வர அவதாரமான பரசுராமனை
போற்றும் -ஏத்தும்
புனிதன் -தூயவரான
புவனம் எங்கும் -உலகம் எங்கும்
ஆக்கிய -பரவும்படி பண்ணின
கீர்த்தி -புகழை உடைய
இராமானுசனை -எம்பெருமானாரை
அடைந்த பின் -ஆஸ்ரயித்த பிறகு
இனி -மேலுள்ள காலம் எல்லாம்
மற்று ஒன்றை -வேறு ஒரு விஷயத்தை
என் வாக்கு -என்னுடைய வாக்கானது
உரையாது -பேசாது
என் மனம் -என்னுடைய நெஞ்சு
நினையாது -நினைவில் கொள்ளாது
வியாக்யானம் –
கோக்குல மன்னரை –போக்கிய தேவனை
உலகினில் ஷத்ரிய பூண்டே இல்லாமல் தொலைத்து விட வேண்டும் என்பதே பரசு ராமனது
நோக்கம் ஆதலின் மன்னரை என்பதோடு அமையாமல் -கோக்குல மன்னரை –என்றார் .
மூ ஏழு கால் -இருப்பதொரு தடவை -ஒரு தலை முறைக்கு ஒரு கால் என்கிற கணக்கில்
இருபத்தொரு கால் உலகினை வலம் வந்து ஷத்ரிய இனத்தவர் அனைவரையும் பரசுராமன் –
கொன்று தள்ளினார் -என்பர்
.இருபத்தொரு கால் அரசு களை கட்ட வென்றி நீண் மழுவா -திரு வாய் மொழி -6 2-10 – – –
என்னும் நம் ஆழ்வார் ஸ்ரீ சூக்தி காண்க –
அஷத்ராமிஹா  சந்த தஷய இமாம் த்விச்சப்தக்ருத்வ ஷிதம்-என்று
ஷத்ரிய பூண்டு இல்லாமல் -மூ வெழு கால் பூமியைச் செதுக்கினான் -என்றார் வேதாந்த தேசிகனும் .
வென்றி நீண் மழு -என்று நம் ஆழ்வாரும் -வென்றி மா மழு -என்று திருமங்கை ஆழ்வாரும்
பாராட்டும்படி ஒப்பற்ற -பெருமை தோற்ற –ஓர் கூர் மழு -என்றார் .
மழு ஒன்றினாலேயே போக்கினமையின் அங்கனம் கூறியது ஆகவுமாம்-
போக்கிய தேவனை -மீளாத படி உலகினின்றும் போக்கினான்
மழுவால் தேவன் போக்கினான் -சங்கல்பத்தால்  அன்று
தேவன் -விளையாட்டு
ஒளி என்னும் பொருள் கொண்ட –திவ் -என்னும் வினையடி யிலிருந்து பிறந்தது இச் சொல் .
தேவன் என்பதற்கு -பகை களைந்த களிப்பினால் வந்த ஒளி படைத்தவன் -என்று பொருள் கொள்க .
இனி அரசு களை கட்டத்தை விளையாட்டாக கொண்டவன் என்று பொருள் கொள்ளலுமாம் .
சர்வேஸ்வரனுக்கு உலகினை அடர்க்கும் அசூரத்தன்மை வாய்ந்த அரசர்களை அழிப்பது
புகரூட்டுவதாகவும் விளையாட்டாகவும் இருக்கிறது என்க-
போற்றும் புனிதன் –
இங்குப் போற்றுதல் வழிபடுதல் அன்று
உலகினுக்கு உதவி புரிந்தமைக்கு தோற்றி நன்றி உடன் புகழுதல்-என்று உணர்க –
பரசுராமனை தெய்வமாக கொண்டு வலி படலாகாது என்று சாஸ்திரங்கள் கூறுவதற்கு ஏற்ப
அங்கனம் உணர்தல் வேண்டும் –
அனர்ச்ச்யா நபி வஷ்யாமி ப்ராதுர் பாவான் யதாக்ரமம் -என்று தொடங்கி
பூஜிக்கத் தகாத அவதாரங்களையும் முறைப்படி சொல்வேன் -என்று தொடங்கி
அர்ஜுனோ தன்வினாம் ஸ்ரேஷ்ட்டோ ஜாமதக்ன்யோ மகான்ருஷி -வில்லாளிகளுள்
சிறந்த கார்த்த வீரியர்ஜுணனும் -பெரிய ருசியான பரசு ராமனும் -என்று பரசு ராமனையும்

எடுத்துள்ளமை காண்க –

பூஜிக்காமைக்கு ஹேது -ஆவிஷ்ட மாத்ராச்தே சர்வே கார்யார்த்தம் அமிதத்யுதே -பகவான் ஒரு காரியத்துக்காக
ஆவேசித்து உள்ளமை மட்டுமே இவர்களிடம் உள்ளது -என்று பகவான் ஒரு காரியத்துக்காக ஆவேசித்து
அவர்கள் இடம் இருப்பினும் அஹங்காரம் வாய்ந்த ஜீவாத்மாக்களாக அவர்கள் இருப்பதே என்று
விஷ்வக் சேன சம்ஹிதையில்  கூறப்பட்டு உள்ளது .இதனால் பரசு ராம அவதாரம் பத்து
அவதாரங்களில் ஓர் அவதாரமாக கருதப் படினும் -இராமன் போலவும் கண்ணன் போலவும்
சாஷாத் அவதாரம் அன்று -அஹங்காரம் வாய்ந்த ஜீவாத்மாவின் இடம் பகவான் ஆவேசித்த அவதாரமே
என்பது -தெளிவு
ஆவேசா அவதாரம் இரண்டு வகைப்படும் .
ஸ்வரூப ஆவேசம் -பகவானுடைய ஆத்ம ஸ்வரூபமே ஒரு கார்யத்துக்காக ஒரு ஜீவான்மாவிடம்
விசேடித்து புக்கு நின்றால் –
சக்தி ஆவேசம் -ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்காக ஸ்வரூபத்தால் அன்றி சக்தியைக் கொண்டே
உட்புக்கு நடாத்துதல் -என்பன இவ்விரு வகைகள்
சக்தி ஆவேச அவதாரமாக -கார்த்த வீர்யார்ஜுனன் கருதப்படுகிறான் .
ஆக சாஷாத் அவதாரம்-என்றும் ,ஸ்வரூப ஆவேச அவதாரம் என்றும் -சக்தி ஆவேச அவதாரம் என்றும்
அவதாரங்கள் மூன்று திறத்தனவாம் .
-ஆயினும் சாஷாத் அவதாரம் ஸ்வரூப  ஆவேச அவதாரத்தை விடப் பலம் வாய்ந்தது .
ஸ்வரூப ஆவேச அவதாரம் சக்தி ஆவேச அவதாரத்தை விட பலம் வாய்ந்தது .
ஆதல் பற்றியே இராமன் இடம் பரசுராமனும்
பரசு ராமனிடம் கார்த்த வீர்யார்ஜுணனும் தோல்வி கண்டனர் .
அவதாரங்கள் அனைத்தும் ஒரே தரத்ததனவாயின் வெற்றி தோல்விக்கு இடம் இல்லை அன்றோ .
இவ்விஷயங்கள் -விதிசிவ வியாச ஜாமதக்ன்யார்ஜுன -என்று தொடங்கும் தத்வ தரைய சூர்ணிகை
வ்யாக்யானத்திலும் -என் வில் வலி கண்டு -பெரியாழ்வார் திருமொழி – 3-9 2- – வ்யாக்யானத்திலும்
மணவாள மா முநிகளால் விளக்கப் பாட்டு உள்ளன ..
ஆக .முக்தியை கோருமவர்களுக்கு வழிபாட்டிற்கு உரிய தேவன் ஆகாமையின்
எம்பெருமானார் பரசுராமனை துதித்தனரே யன்றி வழி பட்டிலர் என்று தெளிக-
இங்கனமே பெரியாழ்வார் -மன்னடங்க மழு வலம் கைக் கொண்ட இராமன் –5 4-6 – – – என்றும்
திரு மங்கை ஆழ்வார் – வென்றி மா மழு வேந்தி முன் மண் மிசை மன்னரை மூ  வெழு கால் கொன்ற தேவா -5 6-1 – –
என்றும் அருளிச் செய்தவை விரோதிகளைக் களைந்தமைக்கு தோற்றுத் துதித்தவைகளே என்று கொள்க –
புனிதன் -தூய்மை அற்றவர்களையும் -தன சம்பந்தத்தால் தூயர் ஆக்க வல்ல தூய்மை படைத்தவர் -என்க .
புவனம் எங்கும் ஆகிய கீர்த்தி –
இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு -என்று கீழ்க் கூறியதை இங்கு நினைக்க
அடைந்த பின் என் வாக்கு –மற்று ஒன்றினையே –
அடைந்த பின் மற்று ஒன்றை என் வாக்கு உரையாது .மனம் நினையாது என்னவே –
அடைவதற்கு முன்பு எந்த விஷயத்தை பற்றி நிற்பினும் மற்று ஒன்றை வாக்கு உரைக்கும் .
மனம் நினைக்கும் என்பதை ஒப்புக் கொண்டார் ஆகிறார் அமுதனார் .
இராமானுசனை அடைந்த பின் அங்கனம் இல்லை -என்கிறார் .
என்னது மாறும் இயல்பே
இராமானுசனை யடைந்த பின் என்னிலை மாறியது .
என் வாக்கையும் மனத்தையும் தன்பால் துவக்க வைத்து -மாறாத நிலையனாக என்னை
மாற்றி விட்டார் -எம்பெருமானார் .
விஷய வைலஷண்யம் அப்படிப் பட்டதாய் இருக்கிறது என்று -கருத்து –
வாக்கும் மனமும் பிறர் திறத்தன வாகாது –
வகுத்த எம்பெருமானார் திறத்தே விளைந்த ஈடுபாட்டுடன் திகழ்வது கண்டு -பேருவகை
கொண்டு உறவு பாராட்டி –என் வாக்கு -என் மனம் -என்று அவற்றை தனித் தனியே
கொண்டாடுகிறார் –
அடைந்ததற் பின் வாக்குரையா தென் மனம் நினையாது -என்றும் பாடம் உண்டாம் .
பின் என அமைந்து இருக்க -இனி -என்று வேண்டாது கூறினார் –
மேலுள்ள காலம் அனைத்தும் முன் போலே வீணாகாது பயன் பெறச் செய்யும்நோக்கம் தோற்றற்கு-
புறம்புள்ள விஷயத்தில் தமக்கு ஏற்பட்ட வெறுப்பு தோற்ற -மற்று ஒன்றை -என்கிறார் .
ஆவித்யாரண்யா நீ குஹா விஹரன்மாம்கமன பீரமாத்யன் மாதங்க ப்ரதம நிகளம் பாத யுகளம் –
யதிராஜர் இணை யடி அறியாமை யடவிக்குள்ளே விளையாடுகிற என் மனம் என்னும்
மதக் களிற்றுக்கு முதல் விலங்கு ஆகும் -என்று வேதாந்த தேசிகன் தன மனத்தை மற்று ஒரு
இடத்துக்கு போக ஒட்டாது தடுத்து நிறுத்துவதாக கூறியது நினைவு கூரத் தக்கது –
இனி தென்னரங்கன் தொண்டர்கள் அரங்கனை விட்டு எம்பெருமானாரைக் குலாவுவது போலே
என் வாக்கு எம்பெருமானாரை விட்டு மற்று ஒன்றை -தென்னரங்கனை -உரையாது
என் மனம் மற்று ஒன்றை நினையாது -என்னலுமாம்
——————————————

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது —

குடியாம் எங்கள் கோக்குடி –ஒரோ விஷயங்களில் நின்றால் இப்படி அன்றோ நீர் சொல்லுவது..இதுவும் அப்படி அன்றோ என்ன- ..எம்பெருமானாரை  ஆச்ரயித்த பின்பு என் வாக்கு மனம்  இனி வேறு ஒரு விஷயம் அறியாது-முன்பு எத்தனித்தேன் ஆகிலும் -துர் வாசனையால்..விஷயாந்த்ரங்களில் அலைந்து.போனாலும் என் .வாக்கும் மனசும் ஒத்துழைக்காது-இவற்றை ஸ்வாமி இடம் சமர்பித்து விட்டேன்–மனமும் கண்ணும் ஓடி–கைவளையும் கனவளையும் காணேன்–நின்ற சதிர் கண்டு -தசரதன் சொல்லிய படியும்/இருபத்தோர்  அரசு களை கட்ட-ஒரு-அத்வீதியமாய்  கூரிய மழுவாலே நிரசித்த விரோதி நிரசன-பிரயுக்தமான ஒவ்ஜ்ஜ்வல்யத்தை  உடைய சர்வேஸ்வரனை-அந்த குண ஜிதராய் கொண்டு-குணத்துக்கு  தோற்று- ஏத்தா நிற்பரே–தளிர் புரையும்  திருவடி-தோற்றோம் மட நெஞ்சம் /போற்றும்-உபாசிக்க வில்லை -குணத்துக்கு தோற்று –புனிதன்-ஸ்வ சம்பந்தத்தால் அசுத்தரையும் சுத்தராக்க வல்ல பரம பாவன பூதராய்-இப் பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு-52 -என்கிற படி-லோகம் எங்கும் வியாபிக்கும் படி பண்ணின கீர்த்தி உடைய எம்பெருமானாரை ஆச்ரயித்த பின்பு-மேல் உள்ள காலம் வேறு ஒரு விஷயத்தை என் உடைய வாக்கானது கீர்தியாது /என் உடைய மனச  ஸ்மாரியாது–என் மனம் என் வாக்குஎன்கிறார் இங்கு -தனி தனியே ப்ரீய அதிசயத்தாலே-அனந்யார்ஹமாம் படி –ஸ்லாகித்து  அருளி  செய்கிறார் ../அடைந்த பின் என் /அடைந்ததற் பின் -என்றும் சொல்வார் முக்ய-ராமன்  கவ்ன அவதாரங்கள்- ஆவேச -அவதாரம் -சொரூப ஆவேச-பரசு ராம /  சக்தி ஆவேச -கார்த்த வீர்ய அர்ஜுனன் போல்வார்கள் ரஜோ குணம் யுக்த ஜீவாத்மா மேல் ஆவேச அவதாரம்-அர்சனைக்கு தகுந்தவர் இல்லை/.-துன்பம் வந்தால் தன் பிரஜை களை காத்தான் கார்த்த வீர்ய அர்ஜுனனும்..பிரம  ருத்ரன் அக்னி -சக்திக்கு மட்டும்  அதிஷ்டானம் ஆவேசம்-மூன்று பிரிவுகள்./முக்ய அவதாரம் தான் முமுஷுக்களுக்கு உபாசனம்..மன் அடங்க மழு வலங்கை  கொண்ட ராம நம்பி -பெரி ஆழ்வார் திரு மொழி 4-5-9–வென்றி மா மழு  ஏந்தி முன் மண் மிசை மன்னரை மூ ஏழு கால் கொன்ற தேவா -திரு வாய் மொழி 4-3-1/என்று ஆழ்வார்கள் அருளி செய்ததும் விரோதி நிரசன ச்வாபத்துக்கு தோற்று துதித்தனை  இத்தனை இறே-உண்டோ ஒப்பு -மாறி மாறி சொல்வது போல-கார்த்த வீர்ய அர்ஜுனன் ஆயிரம் கைகளால் -ராவணன் லிங்க பூஜை பண்ண அடித்து கொண்டு போக–பூச்சி போல  காட்சி பொருளாக வைத்தானே- அங்கதன் சொல்கிறான் இந்த கதையை-ராவணன் இடமே. வாலி இடுக்கிய கதையையும்..ராஜ கர்வத்தால் ஜமதக்னி -பிராமணர்-பிறப்பால் பரசுராமன் கோபம்-சத்ரியன்-பித்ரு அபசாரம்-கோபம்-ராஜ குலத்தை நிஸ் – சத்ரியன் ஆக்க-சிறிது காலம் தபசு பண்ணி -மீண்டும்-குலம் தழைக்க இவர் கோபம் மீண்டும் பரவி. 21 தலை முறை /ரோஷ ராமன்-வேற குலத்தவர் வழிக்கு போகாமல்-கோக்குல மன்னரை-சம்கரிதார்./ஓர் கூர் –நிரூபகமாய் அத்வீதியமாய்-வடுவாய மழு ஏந்தி உலகம் ஆண்டு-போக்கிய தேவன்-சங்கல்பத்தால் போக்க வில்லை ஆயுதத்தால்-மழுங்காத ஞானமே படையாக ..ஆழியாலும் சங்கல்பத்தாலும் இன்றி யானைக்கு அருளினான்-பரஞ்சோதி-ச்வாபிகம்- விரோதி நிரசன ஜோதிசை சொல்கிறார்-கிரீடை யால் வந்த விளையாட்டு-தேவன்-போற்றும்-புகழ்தல்..மங்களா சாசனம் பண்ணுதல்.விநாசாய ச துஷ்க்ருதாம்–நஞ்சீயர் -ஈஸ்வரன் பண்ணிய ஆனை தொழில்கள்  எல்லாம் பாகவத அபசாரம் பொறாததால் தான்–மன் அடங்க மழு வலங்கை கொண்ட- ராம நம்பி– கொண்ட அழகை கண்டதும் /மா முனி கொணர்ந்த கங்கை-ராமனை கொண்டு வந்தாரே–உன்னுடைய திரு விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்-சீமாலி சேஷ்டிதம்  ஆழ்வார் மட்டுமே அருளிய–விரோதி நிரசனதுக்கு போற்றுகிறார்கள்–புனிதன்-ஆஸ்ரிதவர்களையும் சுத்தி -மங்களா சாசனம் பண்ணியே பெற்ற சுத்தி-.சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே-எட்டு குணங்களில்  சாம்யம் அவன் அருளும் மோஷம்–இவர் அடிமை தனம் ஒன்றே கொடுத்து பாவன-தமர் ஆக்குவர் /அடைந்த பின்-அடைந்ததிர் பின் -வாக்கு உரையாது மனசும் நினையாது  —பாட கூடாதவரை ஸ்தோத்ரம் பண்ணி கொண்டு இருந்த வாய்–இப் பொழுது திவ்ய குணங்களையே பாடும்/ பாப சிந்தனை கொண்டு இருந்த மனசு-அவரையே நினைந்து இருக்கும்.–காட்டு யானை விலங்கு போட்டு அடைத்தால் போல..–அடைந்த பின்-இனி மற்று ஓன்று நினையாது-பிரயோஜனம் -காலத்துக்கு /அரங்கன் அடி பற்றி ஸ்வாமி தொண்டர் ஆனது போல இல்லை..சங்கை ச்வாதந்த்ர்யம் இல்லை ..இனி -காலம் மற்று-வஸ்து இரண்டும் இல்லை–அக்கார கனி உன்னை யானே மேல் உள்ள காலம் வஸ்துவும் வேண்டேன்–மற்று எக்  காலத்திலும் யாதொன்றும் வேண்டேன் போல.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: