அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-55-கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

ஐம்பத்தஞ்சாம்  பாட்டு-அவதாரிகை –
எம்பெருமானார் ஸ்வபாவத்தைக் கண்டு வேதம் கர்வோத்தரமாய் ஆயிற்று என்றார் கீழ் .
இப்படி ஒருவர் அபேஷியாது இருக்கத் தாமே -சகல வேதங்களும் பூமியிலே நிஷ்கண்டமாக
நடக்கும் படி பண்ணின ஔதார்யத்திலெ ஈடுபட்டு அவரை ஆஸ்ரயித்து இருக்கும்  குடி
எங்களை யாள உரிய குடி -என்கிறார் இதில் .
கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென்னரங்கன்
தொண்டர் குலாவும் இராமானுசனைத் தொகை யிறந்த
பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்
கொண்டலை மேவித் தொழும் குடியாம் எங்கள் கோக்குடியே – -55 –
வியாக்யானம் –
அநந்தா வை வேதா -என்கிறபடியே -ஒரு தொகையில் நில்லாத -அடங்காத -படி -அனந்தமாய்-
உதாத்யாதியான ஸ்வரங்களுக்கு பிரகாசகங்களாய்  இருக்கிற வேதங்களானவை-
பூமியிலே வர்த்திக்கும்படி -பண்ணி யருளின பரம உதாரராய் –
கண்டவர்கள் நெஞ்சை யபஹரியா நிற்பதாய் –
பரிமளத்தை உடைத்தான திருச் சோலைகளை உடைத்தாய் –
தர்சநீயமான கோயிலிலே நித்ய வாசம் பண்ணுகிற பெரிய பெருமாள் திருவடிகளுக்கு
சேஷ பூதரான வர்கள் -அந்த ஸ்வபாவத்துக்கு தோற்று கொண்டாடும்படி -யிருக்கிற
எம்பெருமானாரை -தத் ஸ்வபாவத்திலே ஈடுபட்டு -விஷயாந்தர விமுகராய் –
ஆஸ்ரயித்து இருக்கும் குலம்-தத் சம்பந்திகளே உத்தேச்யர் என்று இருக்கும் எங்களை
ஆள உரிய குலமாய் இருக்கும்
எங்கள் கோக்குடி என்றது -எங்களுக்கு கோவான குடி -என்றபடி -.
கண்டவர் சிந்தை கவரும் -என்ற இது -பெரிய பெருமாளுக்கு விசேஷணம் ஆகவுமாம்-
கடி -மணம் /குலாவுதல்-கொண்டாட்டம்/நிலவுதல்-வர்த்தித்தல்
பண்டரு வேதங்கள் -என்கிற இடத்தில் -பண்டே உள்ளதாய் அரிதாய் இருந்துள்ள வேதங்கள் என்று-வேதங்களினுடைய அநாதித்வத்தையும் – அலப்யத்த்வத்தையும் -சொல்லுகிறதானாலோ என்னில் –

பண்டையருவேதம் -என்று பாடமாயிற்றாகில் அப்படி பொருள் கொள்ளலாம் –பண்டு என்கிற சப்தம் பூர்வ காலத்துக்கு வாசகமாம் இத்தனை யல்லது பூர்வ காலீ நமானத்துக்கு வாசகம் ஆகையாலே அப்படிச் சொல்லப்  போகாது –.பண்டை நான்மறை -பெரிய திரு மொழி -4 7-1 -/பண்டைக் குலம்- .பண்டையோமல்லோம்  –பெருமாள் திரு மொழி -9 7- -/பண்டு நூற்றுவர் -பெரியாழ்வார் திரு மொழி – 9-7 -/பண்டுமின்றும் -திருச் சந்த விருத்தம் – -22 -/பண்டொரு நாள் ஆலின் இலை-பெரியாழ்வார் திரு மொழி -1 4-7 – – என்றும்/இத்யாதி ச்த்தலந்களிலே இந்த விபாகம் கண்டு கொள்வது .

திரு அரங்கத்தில் நித்ய வாசம் செய்வதே இவனுக்கு பெருமை / ஆழ்வார்கள் கொண்டாடும் இராமானுசன் என்றும் ஆழ்வார்களைக் கொண்டாடும் ராமானுஜன் –பதின்மர் பாடும் பெருமாள் பெருமை அரங்கனுக்கு மட்டுமே -எங்கள் -நம்மையும் சேர்த்து அருளிச் செய்கிறார்–தென்னரங்கன்-தொண்டர் குலாவும் இராமானுசனைத் —அரங்கன் தொண்டர்கள் ஆழ்வார்கள் -குலாவும் இராமானுசன் / இராமானுசன் குலாவும் அரங்கன் அடியார்களான ஆழ்வார்கள் பூர்வாச்சார்யர்கள் / அரங்கன் தொண்டர்களாக நாம் குலாவும் ராமானுஜர் என்றுமாம் -சிந்தை –பொழில்–தன்னை முழுவதும் -காட்டி -நம் சிந்தையை  கவர்ந்து இஷ்ட விநியோக அர்ஹமாக்கி ராமானுஜர் அடியார்களாகிய ஆக்கினவனே அரங்கன் அன்றோ –

——————————————-
பிள்ளை லோகம் ஜீயர் உரை
அவதாரிகை
-கீழ்ப் பாட்டிலே வேதமானது எம்பெருமானாருடைய வைபவத்தை கண்டு கர்வித்து
தனக்கு ஒருவரும் லஷ்யம் ஆக மாட்டார்கள் என்று பூ லோகத்தில் சஞ்சரியா நின்றது என்றார் -இதிலே –
அப்படி அந்த வேதங்களை ஒருவர் அபேஷியாது இருக்க தாமே நிஷ்கண்டனமாக ப்ரவர்ப்பித்த-ஔதார்யத்தை உடையராய் -சகல ஜன மநோ ஹரமாய் -பரிமளத்தை உடைய திவ்ய உத்யானங்களாலே-சூழப்பட்டு -தர்சநீயமான கோயிலுக்கு ஸ்வாமியான பெரிய பெருமாளுடைய அடியவரான ஆழ்வார்களை-கொண்டாடுகிற எம்பெருமானார் –இந்த ஸ்வபாவன்களிலே ஈடுபட்டு ஆஸ்ரயித்து இருக்குமவர்களுடைய
குலத்தார் -எங்களை ஆளக்கடவ ஸ்வாமித்வத்தை உடைய குலத்தார் என்கிறார் –
வியாக்யானம்
தொகை இறந்த -வேதங்களை எண்ணப் புக்கால் -அநந்தாவை வேதா -என்கையாலே எண்ணித்-தலைக் கட்டப் போகாது இறே -தொகை -சங்க்யை -இப்படி ஒரு தொகையில் அடங்காதபடி -அனந்தமாய் –
பண் தரு வேதங்கள் -பண் என்று கானமாய் –அது தானும் இங்கு உதாத்தாநுதாத்த ஸ்வரித ப்ரசயாத்மகமாய்-
அந்த சுவரங்களும் சாகா பேதென -பஹூ விதங்களாய் -அவற்றுக்கு பிரகாசகமான வேதங்கள் என்னுதல் –
எல்லார்க்கும் அவ்வவ ஸ்வர பரிஜ்ஞானத்தை கொடுக்க வல்ல வேதங்கள் என்னுதல் –
சமஸ்த்தான் ஜ்ஞாதவ்யார்தம் ச்சவேதய தீதிவேத -என்று ஆராதன அர்த்த்யோ உபாயாத்மகமான

அர்த்தத்தை அபேஷித்தவர்களுக்கு அடைவே அறிவிப்பிக்கும் அதாலே வேதம் என்று பேராய் இருக்கிறது .

பண்டரு வேதங்கள் -என்கிற இடத்தில் பண்டு -என்று பூர்வ காலீ நமாய் –அரு -என்று தெரிய அரியதாய் இருக்கும் வேதங்கள் என்று பொருள் ஆனாலோ என்னில் -பண்டு என்று கால மாத்ர வாசகம் ஆகையாலே காலீ நத்தை சொல்ல மாட்டாது –பண்டை -என்றால் காலீ நத்தை சொல்லலாம் –பண்டை நான்மறைபண்டைக்குலம்பண்டையோமல்லோம் -என்று இவை காலீ நத்துக்கு உதாஹரணங்கள் –பண்டு நூற்றுவர் -பண்டொரு நாள் -என்று இவை பூர்வ கால வாசகத்துக்கு மட்டும்  உதாஹரணங்கள் -ஆகையால் பண்டு என்று பதம் பண்ணினாலும் கால பரமாய் போம் இத்தனை ஒழிய காலீ  நபரம் ஆக மாட்டாது -ஆக பண் தரு என்று பதச் சேதம் பண்ணினால் தான் – சூசங்கதம் என்று உரையிலே ஜீயரும் அருளிச் செய்தார் இறே-இப்படி இருந்துள்ள  ரிக் யஜூர் சாம அதர்வண ரூப சதுர் வேதங்களும் -பராசர பாராசர்ய ப்ராசேதச -ஆதி பரம ரிஷிகளாலே அவகாஹிக்கப்பட்ட வேதாந்தங்களும் –

பார்மேல் -மகா ப்ர்த்வியில் -நிலவிடப் பார்த்தருளும்-ஜைன பௌ த்தாதி பாஹ்யரை வேரோடே முடிவித்து-
வேதங்களை ஆசேது ஹிமாசலம்  வ்யாபிக்கும்படி பண்ணியருளின-நிலவுதல் -வர்த்தித்தல் -இவர் தாம் வேத மார்க்க
பிரதிஷ்டாப நாச்சார்யர் -இறே -கொண்டலை -ஜல ஸ்தல விபாகம் அற வர்ஷிக்கும் மேகம் என்னலாம் படி வதாந்யராய் –
கண்டவர் சிந்தை கவரும் -பூகி கண்ட த்வய சசர சந்நிக்த தநீரோப கண்டாமவிர்மோத -ஸ்திமிதசகு
நாநூதித பிரம்ம கோஷாம்  -மார்க்கே மார்க்கே பதிக நிவஹை ரும்ச்யாமா நாபவர்க்காம்  பாடிச்யந்தாம்
புனரபிபுரீம் ஸ்ரீ மதிம் ரங்க தாம்ன-என்கிறபடியே -தன்னைப் பார்க்கிறவர் களுடைய  மனசை அபஹரித்து –
தன் வசமாக்கி பாராது போது -திரும்பவும் காண்கிறது எப்போதோ -என்று ஆகான்க்ஷிக்கும்படிநிற்பதாய் –
கவருகை -க்ரஹிக்கை – கடி பொழில் தென்னரங்கன் -பரிமள பிரசுரங்களான சோலைகளாலே சூழப்பட்டும்
விமான மண்டப கோபுர பிரகார உத்யானங்களாலே நிபிடமாயும் -த்வஜ பதாகாதிகளாலே அலங்க்ருதமாயும்
இருக்கையாலே தர்சநீயமாய் இருக்கிற கோயிலிலே நித்ய வாசம் பண்ணி அதுவே நிரூபகமாம்படி
இருக்கிற திருவரங்க செல்வனாருடைய —கடி -பரிமளம் -கண்டவர் சிந்தை கவரும் கடி -என்று பரிமளத்துக்கு
விசேஷணமாய் சொல்லவுமாம் -அன்றிக்கே –கண்டவர் சிந்தை கவரும் தென்னரங்கன் -என்று பெரிய பெருமாளுக்கு
விசேஷணமாக சொல்லவுமாம் -சர்வ கந்த -என்று சொல்லப்படுகிறவரோட்டை ஸ்பர்சத்தாலே காணும்
அவ்விடத்தே இருக்கும்  திருச் சோலைகளுக்கு  -கடி பொழில் -என்று நிரூபிக்கும் படி பரிமளம் உண்டாவது –
தொண்டர் குலாவும் –-கண்டேன் திருவரங்கமே யான் திசை –என்றும் -இனி அறிந்தேன் தென் அரங்கத்தை -என்றும்
தேனார் திருவரங்கம் -என்றும் -பண்டரங்கமே எதுவும் -என்றும் -திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய் -என்றும் –
அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும் கடல் விளங்கு கருமேனி அம்மான் தன்னை கண்ணாரக் கண்டு -என்றும் –
அணி அரங்கத்தே கிடந்தாய் -என்றும் -அரங்கத்தம்மா -என்றும் -அண்டர்கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள்
மற்று ஒன்றினைக் காணாவே -என்றும் -நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் சூழ் அரங்கத்தம்மானே -என்றும்
அவருடைய போக்யதையில் ஈடுபட்டு இருக்கிற பொய்கையார் தொடக்கமான ஆழ்வார்கள் பத்துப் பேரையும் –
அன்று எரித்த திருவிளக்கை தன் திரு உள்ளத்தே இருத்தும் -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே கொண்டாடி நிற்கிற —
அவர்கள் பக்கலிலே எப்போதும் பிரதி பத்தி பண்ணிக் கொண்டு போரா நிற்கிற என்றபடி –குலவுதல் -கொண்டாட்டம்
இராமானுசனை -எம்பெருமானாரை –மேவித் தொழும் குடி -அவருடைய ஸ்வபாவன்களிலே-அத்ய அபிநிவிஷ்ட
சித்தராய்   -விஷயாந்தர அபிமுகராய் -ஆஸ்ரியித்து இருக்கும் அவர்களுடைய -திரு வம்சத்தார் அடங்கலும் –
ஆம் எங்கள் கோக்குடியே – தத் சம்பந்திகளே உத்தேச்யர் என்று இருக்கும் எங்களை அடிமை கொள்ள வல்லவர்களுடைய
திரு வம்சத்தார் ஆவர் -தமக்கு ஒருவருக்குமே அன்றி -தம்முடைய சம்பந்த சம்பந்திகளுக்கு இக் குடி ஒன்றுமே
வகுத்த சேஷி என்று காணும் -இவருடைய பிரதிபத்தி இருக்கும்படி -அன்றிக்கே -எம்பெருமானாருடைய
திருவடிகளில் ஆஸ்ரயித்தவர்கள் எந்தக் குலத்திலே அவதரித்தாலும்  அந்தக் குலமே எங்களை எழுதிக்
கொள்ள வல்ல ச்வாமியாம்  என்று யோஜிக்கவுமாம் -தவத் தாஸ தாஸ கண ந சரம அவதவ்யச சதத்
தாசதைகரசதா விரதாமமாஸ்து  -என்று ஜீயரும் அருளிச் செய்தார் இறே -சாரன்ஜோயதிகஸ் சிதச்திபுவனே
நாதஸ் சயூதச்ய ந-என்று அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே -குலம் தாங்கும் சாதிகள் நாலிலும்
கீழ் இழிந்து எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர் ஆகிலும் -வலம் தாங்கு சக்கரத் தண்ணல்
மணி வண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் அடியார் தம் அடியார் எம் அடிகளே -என்றால் போலே
அருளிச் செய்தார் ஆய்த்து –
———————————-

அமுத உரை

அவதாரிகை
நாரணனைக் காட்டிய வேதம் களிப்புரும்படி யாகச் செய்த எம்பெருமானார் உடைய வள்ளன்மையில்-ஈடுபட்டு –அவரை ஆஸ்ரயித்து இருக்கும் குடி எங்களை ஆள்வதற்கு உரிய குடி –என்கிறார் .
பத உரை –
தொகை இறந்த -ஒரு தொகையில் அடங்காத
 பண் தரு வேதங்கள்-ஸ்வரங்களை வெளியிடுகிற வேதங்கள்
பார்மேல்-பூமியிலே
நிலவிட -நிற்கும்படியாக
பார்த்தருளும் -செய்தருளும்
கொண்டலை -மேகம் போலே வள்ளன்மை வாய்ந்தவரும்
கண்டவர் -பார்த்தவருடைய
சிந்தை-நெஞ்சை
கவரும் -கொள்ளை கொள்ளும்
கடி பொழில் -மணம் உள்ள சோலைகள் உடைத்தான
தென்னரங்கன் -அழகிய திருவரங்கத்தில் உள்ள பெரிய பெருமாள் உடைய
தொண்டர்-அடியார்கள்
குலாவும் -மகிழ்ந்து கொண்டாடும் படி இருப்பவருமான
இராமானுசனை -எம்பெருமானாரை
மேவி-பொருந்தி
தொழும் குடி   -ஆஸ்ரயித்து இருக்கிற திருக் குலம்
எங்கள் கோக்குடி -எங்களை ஆளும் குலம் ஆகும்
வியாக்யானம்
கண்டவர் –தென்னரங்கன்
சர்வ கந்தன் -எல்லா வாசனையுமாய் இருப்பவன் எனப்படும் அரங்கனும் -இங்கு வசிக்கலாம் படி பொழில்
நல்ல மணம் உடைத்தாய் இருத்தல் பற்றி –கடி பொழில் -என்கிறார் -கண்டவர் யாவராயினும் சரி –
அவர் மனம் சிந்தைக்கு உள்ளாய் இருப்பினும் சரி-அத்தகைய மனத்தையும் கவர்ந்து விடுகிறது
கடி பொழில் -இனி கவரும் தென்னரங்கன் -என்று கூட்டிப் பொருள் கொள்ளலுமாம் .
கண்ண புரத்தம்மானைக் கண்டவர் தன மனம் வழங்குவர்
தென்னரங்கன் கண்டவர் சிந்தை கவருவார்

தொண்டுக்கு பாங்கான இடம் எனபது தோற்ற –கடி பொழில் தென்னரங்கன் –என்றார் .தொண்டர் ..இராமானுசன்

அடியார்களுக்கு ஊரோ குடியோ நிரூபகம் இல்லை -தொண்டே நிரூபகம்
தங்கள் சிந்தை கவரும் தென்னரங்கன் உடைய தொண்டர்கள் அவ்வரங்கனை விட்டு
எம்பெருமானாரைக் குலாவுகின்றனர் -அரங்கனை விட அவர்கள் சிந்தையை எம்பெருமானார்
கவர்ந்து விடுகிறார் .அவர்களை அவர் அப்படி ஆனந்தப்படுத்துகிறார் .அவர்கள் தொண்டு பட்ட
அரங்கனே வேதாந்த விழுப் பொருள் என்று ஸ்ரீ பாஷ்யத்தாலே நிரூபித்து வேதம் களிப்புரும்படி
செய்யவே வைதிகர்களான அத் தொண்டர்கள் இவ் எம்பெருமானாரைக் குலாவத் தொடங்கி விடுகின்றனர் ,
நிருபதி ரங்கவ்ருத்தி ரசிகா நபிதாண்ட வயன்
நிகம விமர்ச கேலி ரசிகைர் நிப்ருதைர் வித்ருத
குண பரிணத்த சூக்தி த்ருட கோண விகட்ட நயா
ரடதி திசாமுகேஷூ யதிராஜ யச படஹா-என்று
வேறு ஒரு காரணம் இன்றி ஸ்ரீ ரங்கத்திலே இருப்பதையே ரசித்துக் கொண்டு இருப்பவர்களை
களிக்கூத்தாடும்படி செய்து கொண்டு -வேதத்தை விமர்சனம் செய்தல் ஆகிய விளையாட்டிலே –
ரசிகர்களினாலே ஓர்மையுடன் தாங்கப்படும் குணங்களினாலே-நூல்களினாலே –
கட்டப்பட்ட சூக்திகள் -என்கிற த்ருடமான கொம்பு கொண்டு அடிப்பதனால் -யதிராஜர் உடைய –
புகழ் என்கிற பேரி-திசைகள் அனைத்திலும் ஒலிக்கிறது -என்று வேதாந்த தேசிகன்
யதிராஜ சப்ததியில் -ஸ்ரீ ரங்க வாச ரசிகர்களை எம்பெருமானார் புகழ் கூத்தாடச்
செய்வதாக வருணித்து இருப்பது -இங்கு காணத்தக்கது –
தொகை–கொண்டல்-
வேதங்கள் அனந்தங்கள் ஆதலின் –தொகை இறந்த -என்று விசேஷித்தார்.
உதாந்தம் -அநுதாத்தம் -ஸ்வரிதம் -ப்ரசயம் –   என்று பழ தரப்பட்ட ஸ்வரங்களை
வேதத்தில் உள்ளமையால் –பண் தரு வேதங்கள் -என்றார் .
கருத்து அறியப்படாது போது வேதங்கள் இருந்தும் பயன் இல்லை -அன்றோ
எம்பெருமானார் அவற்றின் கருத்தை ஸ்ரீ பாஷ்யம் முதலிய நூல்களினால்
உலகு எங்கும் பரப்பவே -அவ்வேதங்கள் பார் மேல்  நிலவின ஆயின –
தொகை இறந்த என்றமையின் -சர்வ சாகா ப்ரத்யத்ய ந்யாயம்-சர்வ வேதாந்த ப்ரத்யய ந்யாயம்
முதலியவைகளால் வேதத்தின் கருத்தை இவர் அறிந்தமை தோற்றுகிறது ..
அர்த்தங்களை அறிந்த பின்பே அர்த்தங்களை அறிவிப்பது வேதம் என்னும் காரண இடுகுறிப் பெயர்
அதற்க்கு இசைதலின் வேதங்கள் பார் மேல் நிலவிட -என்றார் .
பார்த்தருளும் என்றமையால்-எம்பெருமானாருக்கு அதில் அருமை இன்மை தோற்றுகிறது .
அறு சமயங்கள் பதைப் பட பார்த்தார் முன்பு –
வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தார் இங்கு
இங்கனம் செய்தது வேறு பயன் கருதி யன்று நீர் நிலம் என்கிற வேறு பாடு இன்றி மேகம் மழை
பொழிவது போலே எல்லாருக்கும் அநந்ய ப்ரயோஜனராய் உபகரித்தமை தோற்ற –கொண்டல்– என்றார் .
மேவித் தொழும் –கொக்குடியே
இத்தகைய உபகாரத்துக்கு தோற்று புறம்பான விஷயங்களை விட்டு ஒழித்து அநந்ய
ப்ரயோஜனராய் எம்பெருமானாரை ஆச்ரயித்தவர்கள் குலம் -எகுலமாயினும் –
அவர் சம்பந்தம் வாய்ந்த அனைவருமே நம்மை யாள்பவர் என்னும் எண்ணம் கொண்ட
எங்களுக்கு ஆட் கொள்வதற்கு உரிய குலமாகும் -என்கிறார் .
கோக்குலம் என்று ஓதுவாரும் உளர் .
—————————————-

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது

கர்வத்தோடு வேதம்  விடுதலை கிடைத்த கர்வம்- நிஷ்கண்டகமாக நடக்கும் படி-முள்ளை எடுத்து –சீதை வேதமே வடிவாக வந்த  ராமனுக்கு -முன்பு சென்று எடுத்தால் போல-அபேஷியாது இருக்க தாமே பண்ணின ஒவ்தார்யம்-இதில் ஈடு பட்டு அவரை ஆச்ரயித்த்கு இருக்கும் குடி எங்களை ஆள உரிய குடி  என்கிறார் இதில்…பராசரரை  வள்ளல் என்கிறார் ஆள வந்தார்..அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் அடியோங்களே –அக் குடி எந்த குடியாக இருந்தாலும் எனக்கு கோக்குலமே/கோ -மன்னன்/தொகை- சாகைகள் பல கொண்ட அனந்தமாய்/பண் தரு -காட்டி கொடுக்கும்/பார் மேல்-வேதம் கற்று அதன் படி நடக்க ஸ்வாமி பண்ணி அருள-பார்த்து அருள-உபநிஷத் -பராசர பாராசர போல்வார் அருளிய/பார் மேல் நிலவிட பார்த்து அருளிய/வேத மார்க்க பிரதிஷ்டாபனாச்சர்யர் -எளிதாக பண்ணினார் பார்த்து அருளினார்-சங்கல்ப சக்தியால் /கடாஷத்தாலே ராமனுக்கும் ஸ்வாமிக்கும் செயல்..சபரி மோஷம் அடைந்தது போல வேதம் பிழைத்தது இவர் கடாஷத்தால்/கடி-பரிமளம் /கண்டவர் சிந்தை அபகரிக்கும்/கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ண புரம் போல/பார்த்தவர் மட்டும் இல்லை கண்டவர்- உதாசீனர்  உடைய சிந்தையும்  கவரும்..கண்டவர் சிந்தை கவரும்-ரெங்கமும்/ பெரிய பெருமாளுக்கும் .கடி– இழுக்குமாம்- கண்டவர் மனம் கவரும் கடி/தென்-தர்சநீயமான கோவிலிலே நித்ய வாசம் பண்ணுகிற பெரிய பெருமாள் திருவடிகளுக்கு- தொண்டர்-அடி இல்லாமல் அடியேன் இல்லை-சேஷ பூதரான அடியார்கள்- ஸ்வாமி ச்வபத்துக்கு தோற்றி ஈடு பட்டு -தொழும் குலம்/விஷயாந்தர விமுகராய்–ஆச்ரயித்து இருக்கும் குலம்-தத் சம்பந்திகளே உத்தேசம் என்று இருக்கும் ஆண்களை ஆள உரிய குலமாய் இருக்கும் .. எங்களுக்கு கோவான  குடி /அரங்கன் அழகை காட்டி சிந்தை கவர்ந்து -இஷ்ட விநியோகம்-ஸ்வாமி திருவடியில் சேர்த்து வைத்தான்-பிராட்டி பூ கொய்ய போக /வேட்டைக்கு அவன் போக- சம்பந்தம் ஆனது போல//ராமானுஜர் சம்பந்தி தேடி அமுதனார் போய் அடைந்தார்/கோவான குலம்-.குலவுதல்-கொண்டாடுதல்/நிலவுதல்-வர்த்தித்தல்/பண்டரு- பண்டே உள்ள அரிதான வேதங்கள்/அநாதி அல்ப்யத்வம்  இல்லை என்பதால்–பண்டையறு வேதம் —-பண்டை நான் மறை //பண்டை குலம் //பண்டையோம் அல்லோம்// -என்றும் -பண்டு நூற்றுவர்// பண்டும் இன்றும்// பண்டு ஒரு நாள் ஆல் இலை  வளர்ந்த// -பண்டை-என்று பண்டை நான் மறை பண்டை குலம் பண்டை யோம் அல்லோம் -/மேலும்- காலம் மட்டும் சொல்லும்-பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த-ஆழ்வார்களை கொண்டாடும் ஸ்வாமி தொண்டர் குலாவும் தன்மை //தொகை -எண் நிறைந்த -சாகை ஒன்றையும்-முழு  சாக இல்லாமல் – கொண்டால் அர்த்தம் மாறும்–பேத அபேத கடக்க ஸ்ருதிகள் மூன்றும் உண்டே//பண்-சுரங்கள் பல விதம் .பாவின் இன் இசை பாடி திரிவனே//காரண இடு குறி பெயர் தன் உள் இருக்கும் அர்த்தங்களை காட்டி கொடுக்கும்-ஆராதன முறையையும் , ஆராத்யதையும், ஆராதிக்க படும் அவனையும்  காட்டி கொடுக்கும்-.பண்டு-காலம் மட்டும் தான் சொல்லும்-அந்த காலத்தில்  இருந்த வஸ்து இல்லை/ மாறனில்-மால் தனில் மிக்கு ஓர் தேவும் வுளதோ/-எளிதாக பண்ணினார் பார்த்து அருளினார்/ எடுத்தது கண்டனர் இட்டது கேட்டனர்/வேதம்-என்றாலே நிலவுதல் காட்டி கொடுக்கும் காரண பெயர்/கொண்டல்– ஜல ஸ்தல விபாகம் இன்றி பொழிவது போல ..பேசி வரம்பு அறுத்தார் ..காவேரி விரஜை /சப்தம் சாம கானம்/ போல ..மனசை அபகரித்து/தெளிவிலா காவேரி-போகும் பொழுதும்  வரும் பொழுதும் கலக்கம்/பரி மளம்  பிரசுரமான சோலைகள் விமானம் /மண்டபம்/கோபுரம்/ஆர்த்து வண்டு அலம்பும் சோலை/சோலைகள் தண்ணீர் பாசுரங்களால் குளிர்ந்து/பலி பீடம் ஹனுமான் பெரிய பெருமாள்-மூவரும் ஒரே உயரத்தில் திருவரங்கத்தில்/செம் பொன் மாட திரு குறுங்குடி/இதை பார்த்து வர இழுத்தார் போல/பரி மளம் –/பெரிய பெருமாளுக்கும் அரங்கத்துக்கும் விசேஷணம்//சர்வ கந்தா -பரி மளமே நிரூபக தர்மம்./கண்டேன் திரு அரங்கமே திசை இனி அறிந்தேன்-அரங்கத்து கண்ணாரா கண்டு-அணி அரங்கத்து கிடந்தாய்-மற்று ஒன்றினை காணா-என்று-அருளிய ஆழ்வார்களை -போக்யதையில் ஈடு பட்டு இருக்கும்-திரு விளக்கை தன் திரு உள்ளத்து இருத்தும்–குலாவுதல்-கொண்டாட்டம்/மேவி தொழும் குடி–அபார விச்வாசதுடன் /வேறு ஒன்றை நினைக்காமல்/ஸ்வாமி மட்டுமே -ஆம் அவர் எங்களுக்கு –குடியாம்-எங்கள்-சம்பந்த சம்பதிகளுக்கும்..பிரதி பத்தி நம் பேரிலும்..

/எந்த குலத்தில் பிறந்து இருந்தாலும் எங்களை எழுதி கொள்ளலாம்//தாண்டவம் ஆட வைத்து இருக்கிறார் ஸ்வாமி-பேரி வாத்தியம்-பறை வாசித்து-தடி-கயிறு-யஜஸ் தான் பறை/எட்டு திக்கிலும் ஓசை எழுப்ப/நிரூபாதிகமாய் ஸ்ரீ ரெங்கத்தில் ஆசை படும் மக்களை தாண்டவம் ஆட வைத்தார்–வேதாந்தம் விமர்சனை பண்ணி ஸ்ரீ சுக்தி  என்னும் தடி கொண்டு/ரெங்க நாதன் குணங்கள் கயிறு /தேசிகன்-சப்ததியில் அருளியது ../தொண்டர் குலவும் ஸ்வாமி/தாச தாச கணங்களும்..சரம தாசனாய் இருந்தாலும் ..அவரே எங்கள் ஸ்வாமி../ஸ்வாமி .விஷயம் தெரிந்தவன் தான் எங்கள் ஸ்வாமி/ குலம் தாங்கு சாதிகள்.. மணி வண்ணன்  உள்  கலந்தார் -.அடியார்

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: