அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-54-நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
ஐம்பது நாலாம் பாட்டு –அவதாரிகை
இப்படி எம்பெருமானார் யதார்த்த ச்த்தாபனம் பண்ணி யருளின ஸ்வபாவத்தைக் கண்டு
பாஹ்ய சமயங்களுக்கும் வேதத்துக்கும் திரு வாய் மொழிக்கும் உண்டான
ஆகாரங்களை அருளிச் செய்கிறார் –
நாட்டிய நீசச் சமயங்கள் மாண்டன நாரணனைக்
காட்டிய வேதம் களிப்புற்றது தென் குருகை வள்ளல்
வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மண்ணுலகில்
ஈட்டிய சீலத்து இராமானுசன் தன்னியல்வு கண்டே – 54- –
வியாக்யானம்
ஷூத்ரரான செதனரோடே தம் பெருமையும் -அவர்கள் சிறுமையும் பாராதே -கலந்து பரிமாறி -பூ லோகத்திலே மேன்மேலும் திரட்டிக் கொண்ட சீல குணத்தை உடையரான
எம்பெருமானார் உடைய ஸ்வபாவத்தைக்   கண்டு  –
ஆதித்ய தர்சனத்தில் அந்தகாரம் நசித்து அம்புஜ ஜாதங்கள்முகம் மலருமா போலே –
ஸ்வ யுக்தி  ச்த்தாபிதங்களாய் -வேத பாஹ்யங்கள் ஆகையாலே -தண்ணிதான சமயங்கள் நசித்தன .
பூர்வ பாகம் ஆராதனா ஸ்வரூபத்தையும்
உத்தர பாகம் ஆராத்ய ஸ்வரூபத்தையும் -சொல்லுகையாலே
வேதைஸ் ச சர்வைரஹமேவ வேத்ய -கீதை -என்கிற உபய விபூதி யுக்தனான
சர்வேஸ்வரனை பிரகாசிப்பித்த வேதம் ஆனது -நமக்கு இனி ஒரு குறை இல்லை -என்று-கர்வித்தது -சர்வ பிரகார விலஷண்மான திரு நகரியை தமக்கு வாசஸ்தானமாக உடையராய்  -பகவத் அனுபவ பரீவாஹா ரூபமான ஸ்வ உக்திகளை லோகத்துக்கு
உபகரித்து அருளின பரம உதாரரான ஆழ்வார் அருளிச் செய்ததாய் –
பாஹ்ய குத்ருஷ்டிகளால் அவிசால்யம் ஆகையாலே ஒரு குறை இன்றிக்கே இருப்பதாய் -ஜ்ஞான ப்ரப்ருதி மோஷ அந்தமான சகல பலங்களையும் கொடுக்கும் ஔ தார்யத்தை உடைத்தாய் -இருக்கிற திராவிட வேதமான திரு வாய் மொழி ப்ராப்த ஐஸ்வர்யம் ஆயிற்று –
களிப்புறுதல்-கர்வித்தல்
வாட்டம்-சங்கோசம்
ஈட்டுதல்-திரட்டுதல்
இயல்வு-ஸ்வபாவம்–
-நாட்டிய -அண்டை கொடுத்து பேசி வைத்த என்றபடி -பேச நின்ற -ஸூலபத்தில் போக்க முடியாமல் நாட்டிய /
பக்தாம்ருதம் -தொண்டர்க்கு அமுது உண்ண சொல் மாலைகள் – -நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் -இவை பத்தும் வீடே -இஹ லோக பர லோக ஸமஸ்த பிரபன்ன ஜனங்களும் மங்களா சாசனம் -தண் தமிழ் நூல் வாழ மணவாள மா முனியே நூற்றாண்டு இரும் சடகோபன் சொல் கேட்டு கை கூப்புகிறோம் வாழி வாழி
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –கீழ் எல்லாம் எம்பெருமானார் துர்மத நிரசனம் பண்ணினார் என்றும் -வேதொத்தரணம்-பண்ணினார் என்றும் -ஆழ்வார்களுடைய திவ்ய சூக்திகளிலே தானே அவஹாகித்தார் என்றும் -சொன்னீர் –
ஆன பின்பு -அத்தால் துர் மதங்களுக்கும் -வேதங்களுக்கும் -ஆழ்வாருடைய அருளிச் செயல்களுக்கும் உண்டான-ஆகாரத்தை சொல்ல வேண்டாவோ என்ன -துர் மதங்கள் அடங்கலும் வேரோடு கூட நசித்துப் போனதன –
வேதமானது பூ லோகத்தில் எனக்கு யாரும் நிகர் இல்லை -என்று கர்வித்து இருந்தது -அருளிச் செயல்கள் எல்லாம்-அனைவரும் உஜ்ஜீவிக்கும்படி நித்யாபிவ்ர்த்தங்களாய் கொண்டு இருந்தன -என்கிறார் –
வியாக்யானம்நாட்டிய நீசச் சமயங்கள் என்று தொடங்கி-மண்ணுலகில் -அஞ்ஞா னத்துக்கு  விளை நிலமான பூ லோகத்திலே –
ஈட்டிய சீலத்து -உபய விபூதி ஐச்வர்யத்தை பெற்ற தம்முடைய மகத்ம்யத்தையும் -லவ்கிகருடைய சிறுமையும் பாராதே -திருக் கோட்டியூரிலே பால வ்ர்த்த விபாகம் அற எல்லார்க்கும் குஹ்ய தமமாக தாம் பெற்ற சரம ச்லோகார்த்தத்தை வெளி இட்டு –
கொங்கில் பிராட்டியையும் -இரட்டை திருப்பதியில் மாடு மேய்க்கும் பெண் பிள்ளையையும் -மேல் நாட்டுக்கு எழுந்துஅருளும் போது
காட்டிலே ஒரு இடையனையும் -ஊமை முதலானவர்களையும் -நிர்ஹேதுகமாக விஷயீ கரித்து கலந்து  பரிமாறி –
மேல் மேல் என திரட்டிக் கொண்ட சௌசீல்யம் உடையவரான -ஈட்டுதல் -திரட்டுகை –இராமானுசன் -எம்பெருமானார் உடைய –
இயல்வு கண்டு -பிரதிபஷ பிரதி ஷேபகத்வ தர்ம மார்க்க பிரதிஷ்டா பகத்வாதி ச்வபாவங்களைக் கண்டு -இயல்வு  -ஸ்வபாவம்
நாட்டிய நீச சமயங்கள் மாண்டன -சோழ மண்டலத்தில் இருக்கிற திவ்ய தேசங்களில் கோயில்களில் எல்லாம்-நைஷ்யடிம்பரான பாஷாண்டிகள் பிடுங்கிப் போகட்டு -சிவாலயங்களை கட்டுவிக்கும் போது -திரு மங்கை மன்னன் திருவவதரித்து அருளி –
அந்த பாஷாண்டிகளுடனே பிரசங்கித்து –அவர்களை வென்று திவ்ய தேசங்களை கட்டடங்க நிர்வஹித்தார் -ஆள வந்தார்
சோழன் சபையிலே ருத்ர பஷ பாதிகளோடே பிரசங்கித்து -அவர்களை வென்று அந்த ராஜாவாலே அர்த்த ராஜ்யத்தை வென்றார் –
இங்கே அப்படி இன்றிக்கே -இவர் தம்முடைய  காலத்தில் -தானே அவ்யயபதேசன் என்பான் ஒருவன் -சிவாத்பரதரம் நாஸ்தி -என்று
சாசனத்தை எழுதி -இந்த பூ மண்டலத்திலே ஸ்தாபிப்பதாக-அநேக பகவத் பாகவத் ரோகங்களைப் பண்ணி கொண்டு போந்து

நீசரும் மாண்டனர் -என்கிறபடியே -இவறுடைய யத்னம் இன்றிக்கே -இவர் தம்முடைய அதிப்ராத்திமா பிரபாவத்தை கண்ட போதே -கழுத்திலே புண் பட்டு கிரிமி கண்டனாய் நசித்தான் -என்றும்-காளஹஸ்தியில் -நின்றும் சைவர்கள் திரண்டு வந்து திரு வேம்கடமுடையானை தங்களுடைய-கந்த நாயனார் -என்று வழக்கு பிடித்து அக் காலத்திலே-ராஜாவான-யாதவராயனாலேயும் பரிகரிக்க அரிதாம் படி-திருமலையை ஆக்ரமிக்க -அப்போது திருவேம்கடமுடையானுடைய விஷயீ காரத்தாலே எம்பெருமானார்-எழுந்து அருளி -அவர்களை பராஜிதர் ஆக்கினவாறே -அவர்கள் எல்லாரும் தலை அறுப்புண்டு போனார்கள் என்றும் -மேல் நாட்டிலே பௌத்த சமயத்தார் பிரபலராய் அவ்விடத்திலே ராஜாவும் அவர்களுடைய சிஷ்யனாய் -அத்தேசத்தில்-தத் வ்யதிரிக்தர் இருக்கவும் கூட அரிதாய் போந்து இருந்த காலத்தில் -இவரும் யதார்ச்சிகமாக அத் தேசத்தில் சில நாள்-எழுந்து அருளி இருக்க -அந்த ராஜாவும் இவருடைய வைபவத்தை சேவித்து -அந்த பௌத்தருக்கும் எம்பெருமானாருக்கும் பிரசங்கம் பண்ணுவித்து -அவர்களுடைய குத்ர்ஷ்டி கல்பனத்தையும் -எம்பெருமானாருடைய-சமீசீன கல்பனத்தையும் கண்டு வித்தனை இவருடைய திருவடிகளில் ஆஸ்ரயித்து-பட்டாசார்யன் காலத்திலும் நசியாதே வேர் பாய்ந்து இருக்கிற பௌ த்தருடையவும் ஜைனருடையவும்-தலைகளை யறுப் பித்து    அத்தேசத்திலே அப்படிப்பட்ட நீச சமயங்கள் நடையாடாதபடி பண்ணினார்-என்றும் பிரசித்தம் இறே -நாட்டிய -இத்யாதி -ஆதித்ய தர்சனத்தில் அந்தகாரம் நசிக்குமா போலே இவருடைய-வைபவங்களைக் கண்டு பிரமாண தர்க்கங்கள் அன்றிக்கே -ஸ்வ யுத்தி ஸ்தாபிதங்களாய்  -எத்தனை-தரமுடையவராலும் நிவர்திப்பிக்க அசக்யங்களாய் -வேத பாஹ்யங்கள் ஆகையாலே அதி நீசங்களாய்  இருக்கிற-அவைதிக சமயங்கள் எல்லாம் நிர்மூலமாகப் போயின –நாரணனைக் காட்டிய வேதங்கள் களிப்புற்றது —நாராயண பரப்ரம்ம தத்வம் நாராயணா பர நாராயணா பரஞ்சோதி ராத்மாநாராயணா -பர யச்சகிம் சிஜ்ஜகத்-யஸ்மின் தர்ச்யதே ச்ரூயதேபிவா -அந்தர்பஹிஸ் சதத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித -என்றும் -நாராயணாத் பிரம்மா ஜாயதே -என்று தொடங்கி நாராயண பரத்வத்தை காட்டுகிற வேதமானது-பூர்வோத்தர பாதங்கள் இரண்டிலும் வைத்துக் கொண்டு -பூர்வ பாகம் ஆராதன கர்ம ஸ்வரூப பிரதிபாதகம்-ஆகையாலும் -உத்தர பாகம் ஆராத்ய பிரம்ம ஸ்வரூப உபாய புருஷார்த்த பிரதி பாதகம் ஆகையாலும்-இரண்டுக்கும் ஏக சாஸ்த்ரவத்தைஇவ் எம்பெருமானார் சமர்த்தித்து -ஆசேது ஹிமாசல பிரதிஷ்டை-பண்ணுகையாலே -இனி நமக்கு ஒரு குறைகளும் இல்லை என்று -தேஜிஷ்டமாய் கோயில் சாந்து பூசிக் கொண்டு-இந்த லோகத்தில் நாவலிட்டு சஞ்சரியா நின்றது -களித்தல் -கர்வித்தல் -தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது -திருவழுதி நாடு என்றும் -தென் குருகூர் என்றும் -என்கிறபடி தென் தேசத்துக்கு எல்லாம் அலங்கார பூதமாய் -தர்சநீயமான-திரு நகரியை தமக்கு திரு அவதார ஸ்தலமாய் உடையராய் -பகவத் ஸ்வரூப ரூப குண விபூதிகளை-அனுபவிக்க அனுபவிக்க உள்ளடங்காமே தத் அனுபவ பரிவாக ரூபங்களாய்  -மொழி பட்டோடும் -கவியமுதின் நுகர்ச்சி உறுமோ முழுதுமே -என்று தம்மாலே ச்லாக்கிக்கப் படுமவையான ஸ்வ சூக்திகளை-லோகத்தார் எல்லாருக்கும் சர்வ அதிகாராம் ஆகும் படி உபகரித்தருளும் பரமோதாரரான நம் ஆழ்வாராலே-அருளிச் செய்யப்பட்டதாய் -பாஹ்ய குத்ருஷ்டிகளாலே அவிசால்யம் ஆகையாலே ஒரு குறையும் இன்றிக்கே-இருப்பதாய் -நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே -என்கிறபடி ஐ ஹிக-புருஷார்த்தத்தையும் -நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே -இவை பத்தும் பிடித்தார் பிடித்தார்-வீற்று இருந்து பெரிய வானுள் நிலாவுவரே -அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே -என்கிறபடியே ஆமுஷ்மிகமான பரம புருஷார்த்தையும் கொடுக்கக் கடவதான ஔதார்யத்தை உடைத்தாய்-இருக்கிற திராவிட வேதமான திரு வாய் மொழி யானது -சடகோபன் தண் தமிழ் நூல் வாழ -என்கிறபடியே-சமஸ்த பிரபன்ன ஜனங்களும் மங்களா சாசனம் பண்ணும்படி உஜ்ஜ்வலம் ஆய்த்து -வாட்டம் -சங்கோசம் –

————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
நற்பொருள் நாட்டிய தன்மை கண்டு -புற மதங்களும் -வேதங்களும் -திருவாய்மொழியும்-அடைந்த நிலைகளை -இதில் அருளிச் செய்கிறார் .
பத உரை –
மண்ணுலகில் -பூ லோகத்திலே
ஈட்டிய -திரட்டிய
சீலத்து -சீல குணம் உடையரான
இராமானுசன் தன் -எம்பெருமானார் உடைய
இயல்வு -ஸ்வபாவத்தை
கண்டு-பார்த்து
நாட்டிய -தங்கள் தங்கள் யுக்தியால் நிலை நாட்டிய
நீசச் சமயங்கள் -கீழ்ப் பட்ட மதங்கள்
மாண்டன -அழிந்தன
நாரணனை-சர்வேஸ்வரனை
காட்டிய -காண்பித்துக் கொடுத்த
வேதம்-வேதமானது
களிப்புற்றது -கர்வம் அடைந்தது
தென்-அழகிய
குருகை-திரு நகரியில் எழுந்து அருளி இருக்கும்
வள்ளல்-வள்ளல் தன்மை வாய்ந்த -நம் ஆழ்வார் அருளிச் செய்த
வாட்டமிலா -ஒரு குறைவும் இல்லாத
வண் தமிழ் மறை -வள்ளல் தன்மை வாய்ந்த திரு வாய் மொழி
வாழ்ந்தது -வாழ்வு பெற்றது .
வியாக்யானம் –
நாட்டிய –சமயங்கள் மாண்டன –
தாமே நிற்கும் தகுதி அற்றவை -பர சமயங்கள் .
அவரவர்கள் தாங்கள் தாங்கள் கற்பித்த யுக்திகளாலே நிலை நிறுத்தப் பட்டவை அவை –
பிரமாண பலத்தாலே நற் பொருளை எம்பெருமானார் நாட்டிய பின்பு
மெய்க்கு எதிரே பொய் போலவும் -கதிரவனுக்கு எதிரே நள்ளிருள் போலவும் –
சமயங்கள் தாமாக மாண்டன ..மாண்டன -என்றமையின் -இனி அவை தலை தூக்க
மாட்டாமை தோற்றுகிறது .
நாரணனைக் காட்டிய வேதம் களிப்புற்றது –
நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன் -வேத மயன்-திருவாய்மொழி 2-7 2- – – என்றபடி -நாரணன் உலகு அனைத்திற்கும் நாதன் –உபய விபூதி நாயகன் -என்றபடி –
வேதத்தில் முற்பகுதி -இறைவனுடைய ஆராதனா ரூபமான கர்மத்தையும்
பிற்பகுதி ஆராதிக்கப்படும் இறைவனுடைய ஸ்வரூப ரூபாதிகளையும் காட்டுகையாலே
வேதம் நாராயணனைக் காட்டியதாகக் கூறினார் .முற்பகுதி பிற்பகுதி இரண்டையும் சேர்த்து-ஒரே சாஸ்திரம் என்கிற சித்தாந்தத்தை காட்டி அருளுகிறார் –
நாரணனைக் காட்டிய வேதம் என்கையாலே நாரணனைக் கூறுவதிலேயே வேதத்திற்கு நோக்கம்-என்று தெரிகிறது -வேதைஸ் ச சர்வை அஹமேவ வேத்ய -எல்லா வேதங்களாலும் நானே அறியப்-படுகிறேன் -என்று கீதையில் கண்ணன் அருளிச் செய்ததும் இங்குக் கருதத் தக்கது .
அத்தகைய வேதம் இனி எவராலும் அவப்பொருள் கூறி நம்மைக் குறைப் படுத்த முடியாது என்று-செருக்குக் கொண்டது -என்கிறார் ..வேதாந்த தேசிகன்-
த்ரிவேதீ நிர்வேத ப்ரசமன விநோத  ப்ரணயிநீ-என்று
மூன்று வகைப் பட்ட வேதமும் சோர்வடைவதைப் போக்கடிப்பதைத் தனக்கு விநோதமாக விரும்புவது -என்று யதிராஜ சப்ததியில் கூறி உள்ளமை காண்க –
தென் குருகை –வாழ்ந்தது
உதார சந்தர்சயன் நிரமமீத புராண ரத்னம்-என்று பராசரர் என்னும் வள்ளல்
எல்லாப் பொருள்களுக்கும் காண்பிப்பதற்காக -புராண ரத்னம் -என்னும் விஷ்ணு புராணத்தை-இயற்றி அருளினார் -என்றபடி-மொழி பட்டோடும் கவி யமுதத்தை உலகிற்கு உபகரித்தமையின்-நம் ஆழ்வாரை வள்ளல்-என்கிறார் .
வேதம் போலே அவப்பொருள் காண்பதற்கு இடம் ஆகாமையின் ஒரு குறையும் இல்லாதது -என்பது தோன்ற -வாட்டமிலா மறை-என்கிறார் .பொருள் விளங்கும்படி தமிழில் அமைந்தமையின்-வண் தமிழ் மறை -என்கிறார் .வள்ளல் தந்த மறையும் -வண் மறை யாயிற்று –
தமிழ் மறைக்கு வண்மையாவது -ஞானம் முதல் வீடு -வரை எல்லாப் பயன்களையும் அளிக்கும் தன்மை .கதிரவன் வருகை கண்டதும் -தாமரை மலர்வது போல் -எம்பெருமானார் இயல்வு கண்டதும்-வேதம் களிப்புற்றது .வண் தமிழ் மறை வாழ்வுற்றது -என்க –
மண்ணுலகில் –இயல்வு கண்டே –

சீலம் ஈட்ட வேண்டிய இடம்-மண்ணுலகம் ஆதலின் -மண்ணுலகில் -என்கிறார் .பாமர மக்களிடம் உள்ள சிறுமையையும்-தம்மிடம் உள்ள பெருமையையும் பாராது அவர்களோடு புரை யற கலந்து பரிமாறி கலந்து-இம்மண்ணுலகத்தில் சீலத்தை இராமானுசர் திரட்டிக் கொண்டார் -என்க ..சீல குணம் வாய்ந்தவராய் எம்பெருமானார் பாமரரோடும் பழகி -அவர்களை ஆட் கொள்ளலின்-நீசச் சமயங்கள் அவர்கள் இடமும் இடம் பெற மாட்டாமல் மாண்டு ஒழிந்தன -என்க –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது –

பொறை அற கலந்து ஈட்டிய சீலம் குணம் புகழ்கிறார் இதில் -எம்பெருமானார் ச்வாபத்தை கண்டு பாஹ்ய சமயங்களுக்கும் வேதத்துக்கும் திரு வாய் மொழிக்கும் உண்டான ஆகாரங்களை அருளி செய்கிறார்../பிரயயோஜனாந்த பரர்  ஷுத்ரர்-சேதனர் உடன்-தன் பெருமையும் அவர்கள் சிறுமையும் பாராதே கலந்து பரிமாறி-பூ லோகத்தில் -அங்கு இல்லை -இங்கேயே -மென் மேலும் திரட்டி கொண்ட சீல  குணத்தை உடையவரான எம்பெருமான் உடைய ச்வாபத்தை கண்டு–ஆதித்ய தர்சனத்தில் அந்த காரம் நசித்து அம்புஜ சாதங்கள்-அம்புஜாதிகள்- முகம் மலருமா போலமலர -பாஹ்ய மதங்கள் -குருஷ்டிமதங்கள்.ஸ்வ  யுக்தி ச்தாபிதங்களாய் -பேச நின்ற சிவனுக்கும் -யுக்தியால் நிற்க வைத்து இருக்கிறார்கள்-கற்பனை வளம் மிக்க சமயங்கள்–.சிங்கம் இல்லா காட்டில் நரி போல நிற்க –நீசம்-வேத பாக்கியம் என்பதால் தாழ்வு -அனைத்தும் மாண்டன- மீண்டும் தலை தூக்காது..தர்மம் தலை குனிவு ஏற்பட்டால் அவதரிக்கிறான்– சர்வேஸ்வரன்-அந்த ச்ரமம் இங்கு இல்லை..நாரணனை காட்டிய வேதம் களிப்புற்றது–பூர்வ பாகம் கர்ம காண்டம்  16 அத்யாயம் ஜைமினி-12 கர்ம 4 தேவதா கண்டம் கடைசி நாலு அத்யாயம் பிரம காண்டம்..வேதம் தான் ஸ்தாபித்து கொடுத்தது..எல்லாம் வேற சாஸ்திரம் இல்லை ஒரே சாஸ்திரம்..வேதமும் வேதாந்தமும்  ஓன்று தான்-ஸ்வாமி- வேததாலே தான் நான் சொல்ல படுகிறேன் -கீதை//பூர்வ பாகம்- ஆராதனா ஸ்வரூபத்தையும் உத்தர பாகம் ஆராத்ய ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே-/உபய விபூதி யுக்தன்- வையம்  தகளியா -பேரை சொல்லாமல்-உபய விபூதியும் அருளிய பாசுரம் முதலில்– முதல் பதிகம் பர பரன்–அன்பே நாரணர்க்கு-எண் பெரும் அன்னலத்து நாரணர்க்கு என்று இரண்டாம் பத்தில் அருளியது போல-திரு கண்டேன்- இவரை தவிர வேறு இல்லை-கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை நம் கண்ணன் கண் இரண்டையும் சேர்த்து ஆழ்வார்/நாரணனை காட்டிய வேதம்-இவை–இனி ஒரு குறை இல்லை என்று கர்வித்தது/தென்- சர்வ பிரகார விலஷனமான திரு நகரி- ஆழ்வார் திரு நகரி-கலியனும் திரு வாலி திரு நகரி-/வள்ளல்- பகவத் அனுபவ பரிவாக ரூபமான ச்வோக்திகளை லோகத்துக்கு உபகரித்து அருளின/கருணை வெள்ளம் பீரிட்டு வாய் வெளியே வரும் – வாய் கரை போல/நாலாயிரமும்  கொடுத்த வள்ளல் ஆழ்வார்-வாட்டமிலா -ஒருகுறை இன்றிக்கே இருப்பதாய்-தமிழ் மறைக்கும் வண்மை-ஒவ்தார்யத்தை உடைத்தாய் இருக்கிற திராவிட வேதமான திரு வாய் மொழி-பிராப்த ஐஸ்வர்யம் ஆயிற்று ..வாட்டம்-சங்கோசம் ஈட்டுதல்-திரட்டுதல் களிப்புருதல்-கர்வித்தல்-துர் மதங்கள் வேரோடு நசித்து போயின-அருளி செயல்களும் அபிவிருத்தங்கள் அடைந்தன.-.பிள்ளான் தொடங்கி வ்யாக்யானங்கள் பெருகின ../மண் உலகில்-இங்கேயா!..அக்ஞானம் விளையும் இடம்..பொய் நின்ற ஞானம் -பொய்யான உலகம்-பொய்யான ஞானம் அத்வைதம்- இல்லதும் உள்ளதும்-விகாரம் என்பதால் –சுத்த சத்வ மயம் தானே ஞானம் விளைவிக்கும் ../ஏறிய சீலம்-கலந்து -உபய விபூதி ஐஸ்வர்யம் பெற்ற பெருமை.,பாராதே –நம் சிறுமையும் பாராதே–திரு கோஷ்டியூர் நம்பி இடம் –  சரம ஸ்லோக அர்த்தம் குக்ய தமமாக தான் பெற்றதை அருளியதால்..இதனால் தானே நம்பி எம்பெருமானாரே என்று  அவரே பட்டாம் சூட்டி அருளினார்-/மேல் நாட்டு எழுந்து போகும் பொழுது–கிருமி கண்ட சோழன்- பிள்ளை ஸ்ரீ ராமாயணமும் திரு வாய் மொழியும் இருக்கும் வரை ஸ்ரீ வைஷ்ணவம் அழிக்க முடியாது-  ஸ்ரீ வைஷ்ணவர் பிரிந்து போக – இடையர்கள் நெற்றியில் இருந்த குறி கண்டு-நம் வூர் ஸ்ரீ ரெங்கம்- என்ன-எம்பெருமானார் செவ்வனே இருக்கிறாரா ?திரு மலை நல்லான் சிஷ்யர்கள்-சேர்ந்து தேடி போக-ஸ்வாமி இவர்கள் தீ பந்தம் பார்த்து வர-வெள்ளை சாத்தி கொண்டு இருக்கிறார்-தேனும் தினை மாவும் சமர்ப்பிக்க -ராமானுஜர் சம்பந்தம் உண்டு-ஆணை இட -காட்டி கொடுக்க-45 பேர் மீண்டும் பிரிய வேடர்கள் தேடி கொண்டு வர-கொங்கு நாடு-பக்கத்தில் பிராமணர் கொங்கு பிராட்டி இருக்கும் இடம் கூட்டி போக-சேவிக்க-தொட்டு சாப்பிட மாட்டோம்- ஸ்வாமி சம்பந்தம் உண்டே சாப்பிடலாம்-கொங்கு பிராட்டி -ஸ்ரீ ரெங்கத்தில் இருந்த பொழுது-பிச்சை எடுக்கும் பொழுது பெரிய செல்வர்கள் சேவிக்க -ஸ்வாமி இடமே வந்து கேட்டாள்-என்ன சொத்து வைத்து இருகிறீர் நாம் அறிந்த விஷயம் சில சொல்லி வருகிறேன்-அவளும் தனக்கு கேட்க்க -ஸ்வாமி துவயம் சொல்லி தர -கொஞ்சம் நாள் கழித்து வூர் போகசொல்லி கொண்டு –மந்த மதி-மீண்டும் கேட்டாள் –கதை சொல்லி ஸ்வாமி சம்பந்தம்-தளிகை பண்ணி-நல்ல ஆடை மாற்றி பெருமாளுக்கு சமர்பித்து-பாதுகைக்கு கண்டு அருள பண்ண-/கை விளக்கு கொண்டு -லஷ்மணன் நூபுரம் மட்டும் தெரியும்-ஸ்வாமி திருவடி கண்டு கொண்டாள்-கலந்து பரிமாறினர்-சிஷாபத்ரிகை -ஸ்வாமி நாராயணன்  சம்ப்ரதாயம் 1800 வருஷம்-சிஷ்யர்கள்-ஒரு தடவை ஆவது ஸ்ரீ பெரும் புதூர் போய் செவிக்கணும்-ஸ்ரீ பாஷ்யம் கால ஷேபம் கேட்க வேண்டும் -என்றார்களாம்-திரு கோளூர் பெண் பிள்ளை ரகசியம்- வார்த்தை அருளி -புகும் ஊர் போகும் ஊர் ஆனதோ-மாடு மேய்க்கும் பிள்ளை சொல்லிய  அர்த்தம் – கூப்பிடு தூரம்-கேட்டு வித்தர்  ஆனார் ஸ்வாமி-–கூவுதல் வருதல் செய்யாயே -பாசுரம்-காசின வேந்தன் திரு புளிங்குடி/இடையன் வூமை முதலானவர்க்கும் பாதுகையால்  ஸ்வாமி அருள ஆழ்வான் கண்டு மயங்கினார்– இவை போல்வன திரட்டி கொண்ட சௌசீல்யம் /பர பஷ பிரதி பத்தியம் பண்ணி தர்ம பஷம் நிலை நிறுத்திய ஸ்வாபம்/திரு வேங்கடம் உடையான்-காளகஸ்தி சைவர்கள்-யாதவ ராயன் ராஜாவாலும் தடுக்க முடிய வில்லை-ஸ்வாமி-வென்று அப்பனுக்கு சங்கு ஆழி அளித்தார்/மேல் நாட்டில்-விட்டல தேவ ராயன்-பெண் பிசாசு -தொண்டனூர் நம்பி சொல்லி பிராமரஜசை ஒட்டி-பௌ த்தர்  உடன் வாத போர்-பிரசங்கம்-பண்ணி வைத்து குதிர்ஷ்ட்டி  கற்பனையை -விரட்டி-–பட்டாச்சார்யர் முன் இருந்த ராஜா/விஷ்ணு வர்தன் பேர் மாற்றி கொண்டான்/நாராயணனை காட்டிய வேதம்-பரத்வம் சொல்லி..பிரதிஷ்ட்டை -சேது முதல் ஹிமாலயம் வரை ஞான மார்க்கம் பக்தி மார்கம் பரப்பி–இனி நமக்கு  ஒன்றும்  இல்லை –கோவில் சாந்து -அடி கீழ் அமர்ந்து-பிடித்தார் பிடித்தார் பெரிய வானுள் நிலவுவரே பிறந்தார் உயர்ந்தே-அனைத்தும் கொடுக்கும் /காமரு மானை நோக்கியர்க்கே-/வாட்ட மிலா -வண் தமிழ் -இரண்டு ஏற்றம்/வேதம் அர்த்தம் புரிய வைக்கும் வள்ளல்  தன்மை தமிழ் மறைக்கு — /பிர பன்ன குலமும் மங்களா சாசனம் பண்ணும் படி வாழ்ந்தது ..

—————————————————————-

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: