அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-53-அற்புதன் செம்மை இராமானுசன் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
ஐம்பத்து மூன்றாம் பாட்டு –அவதாரிகை .
பார்த்தன் அறு சமயங்கள் பதைப்ப -என்று பாஹ்ய சமயங்களை குலைய பண்ணி -இவ்விபூதியில்-இவர் ஸ்தாபித்த வர்த்தம் ஏது என்ன –
சகல சேதன அசேதனங்களும் சர்வேஸ்வரனுக்கே சேஷம் என்கிற விலஷணமான
அர்த்தத்தை ஸ்தாபித்து அருளினார் -என்கிறார் .
அற்புதன் செம்மை இராமானுசன் என்னை யாளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற்  பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்
நற் பொருள் தன்னை இந்நானிலத்தே வந்து நாட்டினனே – -53 –
வியாக்யானம்
என்னை அடிமை கொள்ளுகைக்காக நான் கிடந்த விடம் தேடி வந்த பரம உதாரராய் –
அறிவுடையார் ஆசைப்படும் படியான சௌசீல்யத்தை உடையராய் -அதி மானுஷமான
செயல்களை செய்கையாலே -ஆச்சர்ய பூதராய் ஆஸ்ரிதர் உடைய கௌடில்யதை பார்த்து-கை விடாதே -நீர் ஏறா மேடுகளில் விரகாலே நீர் எற்றுவாரைப் போலே தம்மை
அவர்களுக்கு ஈடாக அமைத்துப் பரிமாறும் ஆர்ஜவ குண யுக்தரான எம்பெருமானார்

நினைக்கப் புக்கால் நினைத்து தலைக் கட்ட -அரிதாம்படி அசன்க்யாதரான ஆத்மாக்களுக்கும் -அவர்களுக்கு வாசஸ்தானமாய் -அசந்க்யா தமாய்-இருக்கிற சகல லோகங்களும் -சர்வ ஸ்மாத் பரனுக்கே சேஷம் என்கிற சீரிய அர்த்தத்தை-இந்த லோகத்திலே ஒருவர் அபேஷியிதாய் இருக்கத் தாமே வந்து ஸ்தாபித்து அருளினார் .

கற்பகத்தைக் காட்டில் இவர்க்கு விசேஷம் -அடிமை கொள்ளுகையும் -இருந்த இடம் தேடி வருகையும்
காமுறுதல்-விரும்புதல்
பற்  பல்லுயிர்கள்-பல பலவான உயிர்கள்-அசந்க்க்யாதரான உயிர்கள் என்றபடி
பல்லுலகில் யாவும் -என்றும் பாடம் சொல்லுவார்கள் -எழுத்தேற்றம் வருகையால் அது சேராது -ஆனால் பல்லுலகியாவும் -என்றால் எழுத்தேற்றம் வாராதோ என்னில்
உரைக்கின்றனனுமக்கியான் -49-என்கிற இடத்தில் போலவே –
பல்லுலகியாவும் -என்கிற இடத்தில் -இகரமும் குற்றியலிகரமாய் வண்ணம் கெடாமைக்கு-கழிவுண் கையாலே எழுத்தேற்றம் வாராது
நாட்டுதல்-ஸ்தாபித்தல்–
-பற் பல்லுயிர்களும் பல்லுலகி யாவும் பரன தென்னும்-நல் பொருள் -எனக்கே தன்னைத் தந்த கற்பகம் –
வந்து அருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தாய் -வந்தாய் மனம் புகுந்தாய் அதனால் சிந்தனைக்கு இணையாய் என்று அறிந்தேன் -அமுதனார் இருந்த இடம் தேடி வந்தார்
காமுறு சீலர் -வடுக நம்பி கிடாம்பி ஆச்சான் உடையவர் திரு மேனியில் ஈடுபட்டதால் -ஆழ்வான் ஆண்டான் இரு கரையர் என்பர்
கோபிந்த ஜீயர் யதி தர்மம் சமுச்சயம் -யாதவ பிரகாசர் மாறி உடையவர் திருவடி அடைந்து
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை

அவதாரிகை -பார்த்தான் அறுசமயங்கள் பதைப்ப -என்று பாஹ்ய சமயங்களை குலைய பண்ணினார் என்றும் –
அரங்கன் செய்ய தாளிணை யோடு  ஆர்த்தான் -என்று பரம புருஷார்த்த சாம்ராஜ்யத்தை கொடுத்தார் என்றும் –
சொன்னீர் -அம் மாத்ரமேயோ -அவர் செய்தது என்னில் -அவ்வளவு அன்று -சகல அபேஷிதங்களையும் -1–அபேஷா நிரபேஷமாக கல்பகம் போலே கொடுக்குமவராய் –2-சௌசீல்யம் உடையவராய் –3-அத்ய ஆச்சரிய பூதராய் -4–ஆர்ஜவ குண யுக்தரான எம்பெருமானார் –சகல லோகங்களிலும் இருந்து உள்ள சகல ஆத்மாக்களும் சர்வ
ஸ்மாத் பரனுக்கே சேஷ பூதர் என்று இந்த லோகத்திலே பிரதிஷ்டிப்பித்து அருளினார் –
வியாக்யானம்என்னை யாள-ஸ்ரீய பதியினுடைய திவ்ய ஆக்ஜ்ஜையாலே -சகல லோக உஜ்ஜீவன-விஷயமாக  அவதரித்தாரே ஆகிலும் -எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள் செய்ய -என்கிறபடியே லோகத்தார் எல்லாரிலும் -நீசனேன் நிறை ஒன்றுமிலேன் -என்கிறபடியே அத்யந்த நிஹினனான
என்னிடத்தில் கிருபை பண்ணி அருளி -அடியேனை அடிமை கொள்ளுகைக்காக –வந்த கற்பகம் -தம்மை ஒருவரை-ரஷிக்கைக்காக அவதரித்தார் என்று காணும் இவர் திரு உள்ளத்தில் ஓடுகிறது –வந்த கற்பகம் -நித்ய விபூதியில் இருந்து-லீலா விபூதிக்கு எழுந்து அருளின கற்பகம் -கல்பகம் போலே அபீஷ்டார்த்த ப்ரதரானவர் -ஜடமாய் ஸ்தாவரமாய்-ஐஹிக புருஷார்த்த மாத்ர ப்ரதமாய் –  ஒரு தேச விசேஷத்தில் தானே நியதமாய் இறே அந்த கல்பகம் இருப்பது –
இந்த கல்பகம் அதில் நின்றும் –1-அதி விலஷணமாய் –2-அப்ராக்ருதமாய் –3–அஜஹத்ரி வர்க்கமபவர்க்க வைபவம் -என்றும்
நலமந்தமில்லதோர் நாடு புகுவீர் -என்றும் -நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்கள் -என்கிறபடி
ஐ ஹிக ஆமுஷ்மிக சமஸ்த புருஷார்த்தங்களையும் கொடுக்கக் கடவ ஔ தார்யத்தை உடையதாய் -4–உபய விபூதியிலும் வியாபித்து இருப்பதாய் -5–நித்தியமாய் நிற்பது ஓன்று இறே -ஆகையால் -வந்த கற்பகம் -என்று
சாகா சந்திர நியாயேன புத்த்யாரோபத்துக்காக சொன்னார் இத்தனை –நான் கிடந்த இடம் தேடி வந்து-விஷயீ கரித்த இது –  மகா ஒவ்தார்யம்    என்று வித்தராய் காணும் –வந்த கற்பகம் என்கிறார்

கற்றவர் காமுறு சீலன் -சகல சாஸ்திரங்களையும் அப்யசித்தாதாலே ஜ்ஞாநாதிகாராய்-உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா மன்னு புகழ்  சேர் வடுக நம்பி -என்று கொண்டாடப்படுகிற வடுக நம்பி கிடாம்பி ஆச்சான்-முதலான முதலிகள் வ்யாமுக்தராய் ஆசைப்ப்படும்படியான ஸ்வபாவத்தையும்-சத்வ்ரத்தியையும் உடையவராய் -அன்றிக்கே -பெரியவன் தாழ்ந்தவருடன் புரையறக் கலந்து பரிமாறுகை யாகிற சீல குணத்தை உடையவர் -என்றுமாம் -காமுறுதல் -விரும்புதல் -எம்பெருமானார் கோயிலிலே வாழுகிற காலத்தில் -ஒரு நாள் மாத்யாஹ்ன சமயத்திலே-திருக் காவேரியிலே நீராடித் திரும்பவும் எழுந்து அருளிகிற அளவிலே வழியில் திருக் கோட்டியூர் நம்பி எதிரே-எழுந்து அருள -எம்பெருமானாரும் அந்த மணலிலே சாஷ்டாங்கமாக தண்டன் இட்டு நிற்க -நம்பியும்-அவரைக் கடாஷித்து -எழுந்திரும் -என்று அருளிச் செய்யாதே வெறுமனே இருந்தவாறே -அச் சேர்த்தியை-கிடாம்பி ஆச்சான் கடாஷித்து அருளி -நம்பீ இவரைக் கொல்ல நினைத்தீரோ – என்று சீறு பாறு செய்து -மணலிலே சாஷ்டாங்கமாக விழுந்து இருக்கிற எம்பெருமானாரை வாரி எடுத்துக் கொண்டார் -என்று நம் முதலிகள்-கோஷ்டியில் பிரசித்தம் இறே –

அற்புதம் செம்மை -அதி மானுஷங்களான சேஷ்டிதங்களை பண்ணுகையாலே -அத்புதராய் -ஆஸ்ரிதருடைய-கௌடில்யத்தை பார்த்து கை விடாதே நீர் ஏறா மேடுகளிலே -விரகாலே நீர் ஏற்றுமா போலே – தம்மை-அவர்களுக்கு ஈடாக அமைத்து பரிமாறும் ஆர்ஜவ குணத்தை உடையவரான –இராமானுசன் -எம்பெருமானார் –
கருதரிய -நினைக்கப் புக்கால் -நினைத்து தலைகாட்ட அரிதாம்படி –பற்பல்  உயிர்களும் -பலபடியான –பல் பல்-என்கையாலே -ஒரு ஜாதியே -அசந்க்யாதமாய் -அப்படிப்பட்ட ஜாதி குலங்களும் -அசந்யாதங்களாய்-
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் -என்கிறபடியே -எண்ணிறந்த ஆத்மாக்களும் -பல் உலகியாவும் -அந்த ஆத்மாக்களுக்கு ஆவாஸ ஸ்தானமாய் –  அசந்க்யாதமாய் -இருக்கிற சகல லோகங்களும் –பரனது என்னும் -பரபரானாம் -என்கிறபடியே -பிரம்ம ருத்ராதிகளுக்கும் பரனாய் -ஸ்ரீய பதி யானவனுக்கே -சேஷ பூதம் என்றும் -சர்வே சோபி ச நாத நாகில ஜகத் வ்யாப்தாவ போதாமல  நந்தாகார யுதோப்ய நந்த  சூ குணஸ்
சர்வாத்மாநாம் சாஸிதா தேஹீ தாரண சாசநேசன   முகை -ஸ்வாதீ ந நித்ய ஸ்த்திதி ஸ்வாமீ நித்யம நோக்ய-மங்களவபும் ஸ்ரீ பூமி நீள அதிப -என்கிறபடியே -போக்ய போக உபகரண  போக ஸ்தான போக்த்தர்த்தவங்கள்-எல்லாம் -சர்வ ஸ்மாத் பரனான-நாராயணனுக்கே சேஷ பூதம் என்கிறது –
நற்பொருள் தன்னை -யதாவஸ்தித தசமீசீ நஜ்ஞா நத்தை  -அன்றிக்கே இப்படிப்பட்ட சீரிய அர்த்தத்தை-
இந் நானிலத்தே வந்து -இந்த லோகம் எல்லாம் உஜ்ஜீவிக்கைக்காக தாமே வந்து அவதரித்து அருளி –நாட்டினானே -ஒருவரும் அபேஷியாது இருக்கச் செய்தே -நிர்ஹேதுகமாக பிரதிஷ்டிப்பித்து அருளினார் –
நாட்டுதல் -ஸ்தாபித்தல் -சிலருக்கு ஒரு காலத்தில்  உபதேசித்து போன மாத்ரமே அன்றிக்கே -லோகத்தார் எல்லாரும்-சர்வ காலமும் அனுபவித்து உஜ்ஜீவிக்கும் படியாக -ஸ்ரீ பாஷ்யாதி முகேன பிரதிஷ்டாபனம் பண்ணி அருளினார்-என்றது ஆய்த்து -யதண்ட மண்டாந்தர கோசரம்  சயத்த சோத்தரான்யவரனா நியா நிச – குணாம் பிரதான புருஷ-பரமபதம் பராத்பரம் பிரமசதேவிபூதையே -என்று ஆள வந்தாரும் அருளிச் செய்தார் இறே –
கல்பத்தைக் காட்டிலும் இவருக்கு விசேஷம் -அடிமை கொள்ளுகையும் -இருந்த இடத்தே வருகையும் –
பல்லுலகில் யாவும் -என்றும் பாடம் சொல்லுவார்கள் -எழுத்து ஏற்றம் ஆகையாலே அது  சேராது -ஆனால் பல்லுலகியாவும் என்றால் எழுத்து ஏற்றம் வாராதோ என்றால் உரைக்கின்றனனுமக்கியான்-என்கிற இடத்தில் போலே பல்லுலகியாவும் -என்கிற இடத்திலும் இகரம்குற்றியலிகரமாய் வண்ணம்-கெடாமைக்கு வழி உண்டாகையாலே  எழுத்து ஏற்றம் வாராது என்று ஜீயரும் அருளிச் செய்தார் இறே –
————————————————————————–
அமுது விருந்து –
அவதாரிகை
அறு சமயங்கள் பதைப்ப பார்த்து இவர் இவ்வுலகத்தில் நிலை நாட்டின பொருள்
ஏது என்ன –எல்லாப் பொருள்களும் சர்வேஸ்வரனுக்கே சேஷம் -என்ற
இந்த நற் பொருளை நிலை நாட்டி யருளினார்-என்கிறார் .
பத உரை
என்னை ஆள வந்த கற்பகம்-கற்பகத்தின் நின்றும் வேறுபாடு -தோற்ற ஆட் கொள்கையும் -இரப்பாளர் இருக்குமிடம் தேடி வருகையும் -எம்பெருமானார் ஆகிய  கற்பகத்துக்கு கூறப்பட்டன –
வந்த கற்பகம் –பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீ ரங்கத்திற்கு எம்பெருமானார் வந்தது தம்மை ஆளுவதற்காகவே-என்று கருதுகிறார் -அமுதனார் –
என்னை-இரக்கவும் அறியாத என்னை -என்னை யாக்கி எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -என்னும் நம் ஆழ்வார் திரு வாய் மொழியை-இங்கு நினைவு கூர்க-
வந்த கற்பகம் –சக்கரவர்த்தி திருமகன் -சமேத்யப்ரதி நன்த்யச -இரப்பாளர்  இடம் வந்தும் கொண்டாடியும் -என்றபடி -இரப்பாளர் இடம் வந்து கொடுப்பது போலே எம்பெருமானாரும் இரப்பாளனாகிய என்னிடம் வந்து-தன்னையே வழங்கினார்
கற்றவர் காமுறு சீலன் –புன்மையாளனான என்னை ஆள வந்தமை யின் சீலமுடைமை தோற்றுகிறது -இத்தகைய சீலம் கற்றவர்களால் விரும்பப் படுகிறதாம் –
கற்றவர் இடம் சீலம் காண்பது அரிது அன்றோ -அது கற்றவர் ஆகிய எம்பெருமானார் இடம்-இருப்பதைக் கண்டு கற்ற மற்றவர்களும் அதனை ஆசைப்படுகிறார்களாம் –
காமம் உறுதல்-காமுறுதல் –காமமுறுதல் என்பதன் மரூஉ
கருதரிய —நாட்டினனே –
கருதரிய பற் பல்லுயிர்களும் பல்லுலகியாவும் –இத்தனை என்று கருதிப் பார்த்து எண்ணித் தலைக் கட்ட முடியாமையின் கருதரிய-பற் பல்லுயிர்களும் என்றார் .
சுருதியும் -இறைவன் ஒருவனே –பல -பஹூ-உயிர்களுக்கு  விருப்பத்தை அளிப்பதாக ஓதி உள்ளமை காண்க .
பல்லுலகில் யாவும் -என்றும் பாடம் சொல்லுவார்கள் -அது சரி அன்று
ஓர் அடிக்கு பதினேழு எழுத்து ஆதலின் நேர் பதினாறு என்ற இலக்கணத்தோடு பொருந்தாமையின் என்க .
பல் லுலகியாவும் என்ற பாடத்தில் இகரம் குற்றியலிகரம் ஆதலின்
அது தனி எழுத்தாக எண்ணப்படாது –
பல்லுலகியாவும் -அந்த உயிர் களுக்கு இருப்பிடமான எல்லா உலகங்களும் என்றபடி
பரனது -பிரமன் தொடங்கி எல்லா உயிர் களுக்கும் மேற்பட்டு இருத்தலின் இறைவன் பரன் எனப்படுகிறான் .
நம்மிலும் மேற்பட்டவர்கள் ஆகிய பிரமன் முதலியோர்க்கும் மேற்பட்டவன் என்னும்
கருத்தில் நம் ஆழ்வார் -முழுதுண்ட  பரபரன்-என்றார் .
பர பரன் ஆதலின் -புரம் எரித்ததும் -அமரர்க்கு அறிவு இயந்ததும் பரபரன் செயலே என்று அவர் கருதுகிறார் .
இங்கும் பற் பல்லுயிர்கள் என்று பிரமன் உட்பட எல்லா ஆன்மாக்களுக்கும் மேற்பட்டவனாக
பரன் என்று சொல்லுகையாலே நம் ஆழ்வார் கூறிய பரபரனே இங்கு அமுதனாரால் கருதப் படுகிறான் .
அந்தர்யாமியாக எழுந்து அருளி இருந்து புரம் எரித்தல் –முதலிய செயல்களை செய்தது போலே-எல்லாப் பொருள்கள் இடத்திலும் –
நீராய் நிலனாய்..சிவனாய் அயனாய் -என்றபடி அந்தர்யாமியாக அவன் இருத்தலின் சிவன் முதலியோர்-போலே எல்லா பொருள்களும் அவன் இட்ட வழக்காய் உள்ளமை போதரும் .
போதரவே -பொருள்கள் அனைத்தும் -உள் நின்று இறைவனால் நியமிக்க படுதலின்
இறைவனுக்கு உடல் ஆகின்றன -இறைவன் பொருள் அனைத்திற்கும் ஆத்மா ஆகிறான் .பிரியாது நின்று நியமிக்கும் பொருள் ஆன்மா என்றும்
அங்கனம் நியமிக்கப்படும் பொருள் உடல் என்றும்
ஆன்மாவுக்கும் உடலுக்கும் இலக்கணம் கூறுவர்
அத்தகைய உடல் உயிர் என்னும் தொடர்பே பரனது -என்கிற இடத்தில் –அது –என்கிற
ஆறாம் வேற்றுமை உருபினால் கருதப்படுகிறது ..இத்தொடர்பினை பிரதான பிரதிதந்த்ரார்ர்த்தம் -பிற மதத்தவரால் ஏற்கப் படாது -நம் மதத்தவரால் மட்டும் ஏற்றுக் கொள்ளப் பட்ட முக்கியமான பொருள்-என்பர் .
அத்தகைய முக்கியமான பொருள் என்பது தோன்ற –நற் பொருள்-என்றார் .
இந்நானிலத்தே –
இந் நற்பொருளை அறிய மாட்டாத இருள் தரும் இவ்வுலகிலே அதனை ஏற்கும்படி ஸ்ரீ பாஷ்யம் முதலிய-நூல்களினாலும் வாதங்களினாலும் -இந் நற்பொருளை நிலை நாட்டினார் -என்க .
இங்கு பற் பல்லுயிர் பரனது என்கையாலே
ஜீவான்மாவிற்க்கும் பரமான்விற்கும் உள்ள பேதமும் –
ஜீவான்மாக்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் உள்ள பேதமும்
காட்டப்படுகின்றன –
பல்லுலகு என்கையாலே -அவ வான்மாக்கள் இருக்கும் இடமாகிய பிரக்ருதியின்
பரிணாமமான அசித்து என்னும் பொருள் கூறப்பட்டது –
பரன் என்கையாலே ஈஸ்வர தத்வம் காட்டப்பட்டது –
ஆக
சித்து -அசித்து -ஈஸ்வரன் -என்கிற தத்வ த்ரயமும்
பரனது -என்னும் இடத்து அது என்றதால் நம்முடைய மதத்திற்கே உரிய
சரீர ஆத்ம பாவ ரூபமான சம்பந்தமும் கட்டப்பட்டன ஆயின .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது –

தத்வ த்ரயம் –சரீர ஆத்மா சம்பந்தம்– சேஷ சேஷி பாவம்-நல் பொருள் -சேதனங்கள்  அசேதனங்கள் அனைவருக்கும்-வந்த கற்பகம் -ஐதிகம் ஆமுஷ்யம் இரண்டையும் கொடுக்கும்/கற்றவர் காமுறு சீலன் -தன்னை கற்றவர் கோஷ்டியில் சேர்க்க வில்லை அமுதனார்/கற்பகம் தானே வராது-வடுக நம்பி கிடாம்பி ஆச்சான் போல்வார் என்பர் இந்த கற்றவர் –காமம் -கண் தெரியாமல் இருக்கணும்- காதல் கண்ணை மறைக்கணும் இவர்களுக்கு  தான் அப்படி/என்னை அடிமை கொள்வதற்காகவே/நான் கிடந்த -அவஸ்துவாய் இருந்த இடம் தேடி-காஞ்சி புரத்தில் இருந்து ஸ்ரீ ரெங்கம் வந்தார்/பரம பதத்தில் இருந்ததை கற்பகம்- வாகனமும் ஆதி சேஷன் தானே/பரம ஒவ்தாராய்/பரம பதம் -ஸ்ரீ பெரும் புதூர் காஞ்சி ஸ்ரீ ரெங்கம்–ஆகிய  ஸ்தான த்ரயம்/கற்றவருக்கு சீலம் இருப்பது துர் லபம்- அதனால் காமுறு சீலம்../ஜகத்துக்கு ஆச்சர்யர் ..அதி மானுஷ செயல்களை செய்கையாலே ஆச்சர்ய பூதராய்-அற்புதன்/ செம்மை- ஆஸ்ரிதர் குடில்யம் -குறுக்கு புத்தி -பார்த்து கை விடாமல்/நீரேறா மேடுகளில் விரகாலே நீர் ஏற்றுவாரை போல/தம்மை அவர்களுக்கு ஈடாக அமைத்து பரிமாறும் ஆர்ஜவ குணம் யுக்தரான  எம்பெருமானார்/நினைக்க புக்கால் நினைத்து தலை கட்ட அரிதாம் படி/எண்ணிக்கை அற்ற  ஆத்மாக்களும்/அவர்களுக்கு வாசஸ் ச்தானமாய் எண்ணிக்கை அற்று இருக்கிற சகல லோகங்களும்/சர்வ ச்மாத்பரனுக்கே சேஷம் என்கிறசீரிய அர்த்தத்தை அருளி ./வண்ணத்து பூச்சிகளே 27 லஷம் வகை உண்டாம் -அரும்  காட்சி அகம் ஒன்றில் மட்டும்/பற்பல்  உயிர் கள்-பல பல வான உயிர் கள் /எண்ண முடியாத ஜாதி கூட்டங்களையும் எண்ண முடியாது/கற்று கறவை கணங்கள் பல போல்/சகல சேதனங்களும் அசேதனங்களும்  சர்வேஸ்வரனுக்கே சேஷம் என்கிற விலஷனமான அர்த்தம்/ -விட்டு பிரியாதவை அனைத்தும் -முழுது உண்ட பர பரன் -பிரளயத்தில் அவற்றை ரஷித்து -ஒன்றுமே  தன்னை விலக்காத ஸ்திதி  என்பதால் –மனிசர்க்கு தேவர் போல தேவர்க்கும் தேவாவோ.நினைக்கு தலை கட்ட முடியாமல் -கருதரிய /பல் பல் ஜாதி -கூட்டங்களும் அநேகம்-எண் பெரும் நன்னிலத்து ஒண் பொருள் ஈறில / ஜீவாத்மா அநேகர்/.ஜீவாத்மா தங்களுக்குளே அநேகர் -பல் உலகி ஆவும்- சகல லோகக்ங்களும்அசித் சொல்லி/போக்கியம் போகோ உபகரணங்கள் போத்று வர்க்கம் போக்ய ஸ்தானம் /பரனது-பரர்களுக்கும் பரன் -ஈஸ்வரன் சர்வேஸ்வரன் /ஸ்ரீ ய பதிக்கே  சேஷ பூதன்/ ஸ்வதர சமஸ்த வஸ்து விசேஷணன்/சாசனம் ஆத்மா சேஷி தரிக்கிறான்-அசந்கேயங்கள் அனைத்தும் //நாராயணனுக்கே சேஷ பூதம் /நிகில ஜகத் உதயம் விபவம் லயம் லீலா -விவித விசித்திர அனந்த//திரு வுள்ளம் படி நடக்கும் பிரகிருதி  சித் காலம் எல்லாம் /த்ரி விதம் -இது தான் நல்  பொருள் / சுரர் அறி நிலை ..விண் முதல் முழுவதும் வரன் முதலாய் அவை முழுதுண்ட பர பரன்/புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கு அறிவு ஈந்து/, அரன் அயன் என உலகு அழித்து  அமைத்து உளன்-இவன் ஒருவனே உளன்/வச படாமல் ஸ்ருஷ்டித்தும் அளித்தும் பண்ணுவான்/சரீர ஆத்மா பாவமும் பரனது என்று-நீராய் நிலனாய் போல.இது தான் நல் பொருள்/நாரயனனனே நமக்கே பறை..தருவான்.-சுருக்கமாக – ஆண்டாள் காட்டியதையே திருப்பாவை ஜீயராகிய ஸ்வாமி/இந்த லோகத்திலே ஒருவர் அபேஷியாது இருக்க தாமே  வந்து இவற்றை  ஸ்தாபித்து அருளுகிறார்/அடிமை கொள்ளுகையும் இருந்த இடம் தேடி வருகையும் கற்பகத்தை காட்டிலும் இவருக்குவிசேஷம்/காமுறுதல்– விரும்புதல்//நாட்டுதல் -ஸ்தாபித்தல்/அனைத்தையும் கொடுக்கும் அவராய்-கற்பகம் போல/குழைந்தைக்கு என்ன  தேவை என்று தாய் போல ஸ்வாமி க்கு தெரியும்/..சௌசீல்யம் ஆச்சர்ய சேஷ்டிதம் ஆர்ஜவம் நேர்மை உடையவர்/நாட்டினார்/–1-கற்பகம் வள்ளல் மறைத்து வைக்காமல் வெளி இட்டார்/–2-அஞ்ஞானம் போக்கி இந் நானிலத்தே வந்து நாட்டியத்தால்  சௌசீல்யம்/ –3-ஆச்சர்யம் -இங்கு வந்து நாட்டிய செயல்/–4-ஆர்ஜவம்-தத்வ த்ரயம் சொல்லி ஏக தத்வம் போன்றவற்றை/சாஸ்திரம் ஒத்து கொண்ட நல் பொருளை நாட்டினார்/நம்பியை தென் குறுங்குடி நின்ற அச் செம்பொன்னே திகழும் திரு மூர்த்தியை/உம்பர்வானவர் ஆதி  அம் சோதியை/எம்பிரானை -என் சொல்லி நான் மறப்பேன்/என்னை முனிவதீர் -அன்னைமீர்கள் பாசுரத்திலும்–1–அவன் பூரணன் இல்லை என்று அகலுவேனோ—2-அஸந்நிஹிதன் என்று அகலுவேனோ—3-அழகன் இல்லை என்று அகலுவேனோ–4-மேன்மை இல்லை என்று அகலுவேனோ–5–உபாகாரம் செய்தவன் இல்லை என்று அகலுவேனோ -ஆழ்வார்-இது போல  அனைவரும் இருக்கும் படி  ஸ்வாமி அவன் ஸ்வரூப ரூப குணம் விபோதிகள் விளக்கி அருளினார்/எதிர் சூழல் புக்கு எண்ணிறந்த   அருள் எனக்கே செய்தாய்-நீசனேன் நிறை ஒன்றும் இலேன்-இருந்தும் .என்னை ஆள வந்த-ஒருவன் தான் -அபீஷ்ட வரதன்-காரபன்காடு ஷேத்ரத்தில்-தேச விசேஷத்திலே மட்டும்/சைதன்யம் உள்ளவர்- ஐதிக புருஷார்த்தம் மட்டும் கேட்டு பெற்று-ஐஸ்வர்யம் கைவல்யம் பகவத் லாபார்த்தி -எழுவார் விடை கொள்வார் -நீள் கழல் பிரியாமல் வைகலும் இருப்பவர்-ஐதிக ஆமுஷ்யக சமஸ்த புருஷார்த்தங்களும்  வழங்குவன்–நலம் அந்தம் இல்லாத நாடு புகுவீர்–நல்ல பதத்தால் மனை வாழ்வார் இரண்டும்/பிள்ளை உறங்கா வல்லி தாசர்-விபீஷணன் சரணாகதி  கட்டம் கேட்டு அச்சம் கொள்ள–ஸ்வாமி அருளிய ஐதீகம்.-குரு பரம்பரை விசேஷம்–அது ராமர் கோஷ்டி இது ராமானுஜர் கோஷ்டி–நாம் .கிடந்த இடத்துக்கு தேடி வந்தார்.வந்த கற்பகம்--திரு கமல பாதம் வந்து ஒரு ஆழ்வார் கண்ணில்-அங்கு உறையூரில்–இங்கு அனைவருக்கும்.–.என்னை ஆக்கி எனக்கே தன்னை தந்த கற்பகம்-மாதவனும் கொடுக்காத திருவடிகளை ஸ்வாமி கொடுத்தார்-இரப்பாளி இருக்கும் இடம் போய் கொடையாளி கொடுக்கணும்.கீதை கண்ணன் அர்ஜுனன் இருக்கும் இடத்தில் வந்தகு அருளியது போல/கற்றவர் காமுறு சீலன்-ஞானாதிகர் உன்னை ஒழிய  ஒரு  தெய்வம் மற்று அறியா வடுக நம்பி தன் நிலையை /கலங்கின திரு உள்ளதோடு தத் விருத்தி உடையவர் நன் நடை -அன்ன பட்ஷி போல -இவரும் ஹம்சம் தானே–ராஜ ஹம்சம் நன் நடத்தை ஸ்வாபம்//சீலம்-புரை அற கலந்தாரே/ காமுறுதல்..திரு கோஷ்டியூர் நம்பியை மணல் பாங்கில் சேவிக்கும்– பொழுது  -நம்பி இவரை கொல்ல நினைத்தீரோ-  என்ற கிடாம்பி ஆச்சானனை வாரி எடுத்தாரே. கொண்ட பெரும் காதலுக்கு பத்திமை .நூல் வரம்பு இல்லை/அற்புதம் –பிரம்மா ரஜசை ஒட்டினாரே/ஆயிரம் பேரை ஒரே சமயத்தில் வாதாடி//ஆஸ்ரிதர் நேர் மாறி இருந்தாலும் யாதவ பிரகாசரை கை கொண்டாரே/அவர்களுக்கு தகுந்தவாறு தாழ்ந்து நீராடும் குணம் பெரிய நம்பி குமாரர் திருத்தி பண்ணி கொண்டது செம்மை-ஆர்ஜிதம்.நீர் என்னை விட்டாலும் நாம் உம்மை விடோம் -என்று சொல்லி திருத்தி பணி கொண்டாரே./ /ஜகத் சரீரம் சர்வம் /சீரிய அர்த்தம் /தாமே வந்து அருளி நாட்டினார்-பிரதிஷ்டை பண்ணி-ஸ்தாபித்தார்.சிலருக்கு ஒரு காலத்தில் உபதேசித்து போகாமல்-கீதாசார்யன் போல அன்றிக்கே -அடிமை கொள்கையும் இருந்த இடத்தே வருகையும் கற்பகம் விட ஏற்றம் ஸ்வாமிக்கு-என்னை ஆள வந்த கற்பகம்-தன்னையும் விடாமல்  கை கொண்டதை அருளி கொண்டு வருகிறார்–

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்   திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: