அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-52-பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
ஐம்பத்து இரண்டாம் பாடு –அவதாரிகை
என்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது -என்று ஒருவராலும் என்னை ஆள வரியனான-என்னை ஆளுகைக்காக வந்து அவதரித்தார் என்றீர் .
இவர் தாம் இப்படி அகடிதகடநா சமர்த்தரோ என்ன –அவர் செய்த அகடிதகடனங்களை
அருளிச் செய்கிறார் .
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப இப்பார் முழுதும்
போர்த்தான்  புகழ்  கொண்டு புன்மையினேன் இடைத்தான் புகுந்து
தீர்த்தான் இருவினை தீர்த்து அரங்கன் செய்ய தாள் இணையோடு
ஆர்த்தான் இவை எம் மிராமானுசன் செய்யும் அற்புதமே –52-
வியாக்யானம் –
வேத பாஹ்யங்களான ஷட் சமயங்களும் நடுங்கும்படியாக கண்டார் .
இந்தப் பூமி எங்கும் தம்முடைய திவ்ய கீர்த்தியாலே மூடி விட்டார்
அநாத்ம குணங்களை நிரூபகமாக உடையனாய் இருக்கிற என் பக்கலிலே   என்னுடைய
அர்த்தித்வாதி நிரபேஷமாக தாமே புகுந்து –
யத் பிரம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம்-வைகுண்ட ஸ்தவம் -59 – என்கிறபடியே
கால தத்வமுள்ளதனையும் அனுபவித்தாலும் -தொலையாது என்னும்படியான மகா பாபங்களை-போக்கினார் -இப்படி பாபங்களைப் போக்கி -பெரிய பெருமாள் உடைய அழகிய திருவடிகளோடு-சம்பந்தித்தார் -எங்களுக்கு நாதரான எம்பெருமானார் செய்து அருளின ஆச்சர்யங்கள் இவை –
அற்புதம்-அத்புதம்-அதாவது அகடிதகட நா பிரயுக்தமான ஆச்சர்யம்
பதித்தல்-துடித்தல்
போர்த்தல்-மூடுதல்
இருமை-பெருமை
ஆர்த்தல்-பந்தித்தல்–
இராவண வதம் -வியாஜ்யம் -அபராத பிரதான சாரம் -ஜடாயு மோக்ஷம் இத்யாதிகள் உண்டே –
புன்மை உடையவன் இல்லை புன்மையாகவே -தர்மி தர்மம் வாசி இல்லாமல் -கருதும்படி புன்மைகள் செய்தவன் என்றபடி
தானே வந்து புகுந்து -நிர் ஹேதுகமாக -தீர்த்து அரங்கன் திருவடிகளை காட்டி -அருகில் நமக்காக வந்த பெரிய பெருமாள் திருவடிகள்
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகைஎன்னை ஆள வந்து இப்படியில் பிறந்தது -என்று ஒருவராலும் ஆள அரிய என்னை-ஆள வந்து அவதரித்தார் என்று அவரைக் கொண்டாடா நின்றீர் -இந்த அவதாரத்திலே உம்மை ஒருவரையே-ஆளா நின்றாரோ என்ன -முதல் முன்னம் உத்தேசித்து அவதரித்தது என்னை ஆளுக்கைக்காகவே -ஆகிலும்
இவர் அவதரித்துஅருளி -அவைதிக சமயங்களாலே நசித்துப் போன லோகங்களை எல்லாம் சகிக்க மாட்டாதே -அந்த அவைதிக மதங்களை நசிப்பித்து -தம்முடைய கீர்த்தியாலே லோகங்கள் எல்லாவற்றிலும் வியாபித்து -க்ரூர பாவியான என் பக்கலிலே பிரவேசித்து -என்னுடைய பாபங்கள் எல்லாம் நசித்துப் போகும்படி பண்ணி –
பின்பு பெரிய பெருமாள் உடைய அழகிய திருவடிகளோடு சம்பந்திப்பித்தார் -இப்படி ஒரு கார்யத்தை உத்தேசித்து-அநேக கார்யங்களை செய்தார் –இப்படி இந்த எம்பெருமானார் செய்து அருளும் ஆச்சர்யங்களைக்  கண்டீரே-என்று வித்தார் ஆகிறார்
வியாக்யானம்பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப -அறு சமயங்கள் -பௌ த்த சாருவாக சாக்ய உலூக்ய பாசுபத காணா பத்யங்கள்-என்கிற வேத பாஹ்ய சமயங்கள் ஆறும் என்னுதல் – -அன்றிக்கே -அனுஷ்டான  தசையிலே அத்யந்த துக்க ரூபங்கள் ஆனவை-என்னுதல் –பதைப்ப பார்த்தான் -இப்படிப் பட்ட வேத பாஹ்ய சமயங்கள் எல்லாம் நிர்மூலமாக போம்படி அவற்றை-கடாஷித்தார் -பதைத்தல் -துடித்தல் -திக்சவ்தாபத் தஜைத்ரத் வஜபடபவ நச்பாதி நிர்த்தூத தத் தத் சித்தாந்த ச்தோம கூலச்த
பகவிகம நவ்யக்தசத் வர்த்த நீகா -என்று அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –இப்பார் முழுதும் போர்த்தான் புகழ் கொண்டு –

லோகம் எல்லாம் நிச்சபத்னமாகப் பண்ண வே தமக்கு எல்லாம் கைவசம் ஆய்த்து -இப்படிப்பட்ட பூமி எங்கும் பண்டித பாமார சாதாரணமாக தம்மைக் கொண்டாடும்படி தம்முடைய கீர்த்தியை சர்வ திக்கிலும் வ்யாபித்தார் –போர்த்தல் -மூடுதல் –புன்மையின் இடை – -வந்தேறியான பாபங்கள் ஒன்றும் இன்றிக்கே -வேம்பு முற்ற கைப்பு மிகுவது போலே -என்கிறபடியே நாள் தோறும் என்னால் தீரக் கழியச் செய்யப்பட்டவையாய்  -பாபாநாம்வா -என்றும் -தேத்வகம் புஞ்சதேபாப -என்றும் சொல்லுகிறபடியே -அந்த பாபங்களே ஒரு வடிவாக உடையவன் ஆகையாலே அத்யந்த பாபியான என் இடத்திலே –தான் புகுந்து -அடியேன் ஒரு சாதனா அனுஷ்டானம் பண்ணாதே இருக்கச் செய்தேயும் –அர்த்தியாதே இருக்கச் செய்தேயும் -தத் உபய நிரபேஷமாக தாமே நிர்ஹேதுகமாக வந்து பிரவேசித்து  —இருவினை -இரண்டு வகைப்பட்ட வினை -புண்ய பாபங்கள்-என்றபடி -அன்றிக்கே -இருமை -பெருமையாய் -யத் பிரம கல்ப நியுதா நுபவேப்ய நாச்யம் தத் கில்பிஷம் ஸ்ர்ஜதி ஜந்து ரிஹஷனார்த்தே -என்றும்– பாபானாம் பிரதமோச்ம்யஹம் -என்றும் -மயிதிஷ்டதி துஷ்க்ர்தாம் பிரதானே -என்றும் அஹமசம்ய பராதசக்ரவர்த்தி -என்றும்-அனுபவ பிராயசித்தங்களாலும் -எத்தனைஎனும் தரம் உடையவராலும் நிவர்திப்பிக்க அரியதான என்னுடைய மகா பாபங்களை -என்றபடி-தீர்த்தான் -இவற்றை அநாயாசேன மணலிலே எழுதின எழுத்தை துடைப்பாரைப்  போலே துடைத்தார் –  வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்றும் -சும்மனாதே கை விட்டோடி  தூறுகள் பாய்ந்தனவே -என்றும் சொல்லுகிறபடி வாசனையோடு போக்கினார் என்றபடி -தீர்த்து -அந்தப்படி ரஷணம் பண்ணி ஆறி கை வாங்கி இருக்கை அன்றிக்கே -இப்படி பாபங்களை எல்லாம் போக்கி -அரங்கன் -எட்டா நிலமான பரம பதத்தில் போய் ஆஸ்ரயி என்றும் –யோக மார்கத்தில் அந்தர்யாமியை ஆஸ்ரயி என்றும்-இப்படி அநேகங்களானவற்றை உபதேசித்து போருகை அன்றிக்கே -அத்யந்த சுலபராய் கொண்டு -நான் இருந்த இடத்தில்-இருக்கிற பெரிய பெருமாள் உடைய –செய்ய தாளிணையோடு ஆர்த்தான் -அரங்கத்தம்மான் திருக்கமல பாதம் -என்கிறபடியே -தர்சநீயமாய் -பாவனத்வ போக்யங்களுக்கு பரஸ்பர சதர்சமான திருவடிகளோடு சம்பந்திப்பித்தார் -சேஷ சேஷி பாவ சம்பந்தத்தை அறிவிப்பித்தார்    -என்றபடி —ஆர்த்தல் -பந்தித்தல் இவை எல்லாம் ராமானுசன் செய்யும் அற்புதமே -இவ்வளவும் சொன்னவை எல்லாம் எங்களுக்காக அவதரித்து-அருளின எம்பெருமானார் செய்தருளும் அற்புத காரியங்கள் -அற்புதம் -அத்புதம் -பித்ர்வாக்ய பரிபாலனம் பண்ண-வேண்டும் என்று காட்டுக்கு போய் அவ்வளவோடு நில்லாதே -ராஷசரை எல்லாம் சம்ஹரித்து -திரு வணை கட்டுவித்து -மகா ராஜருக்கும்  ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் ஸ்வ ச்வராஜ்யங்களைக் கொடுத்தான் -போந்த-சக்கரவர்த்தி திருமகனைப் போலே -ஓன்று செய்ய என்றுஒருப்பட்டு -அநேகமான அதி மானுஷ சேஷ்டிதங்களை-பண்ணி அருளினார் காணும் இவரும்  – இப்படி இறே மகா புருஷர்கள் படி இருப்பது -கா புருஷர்கள் ஆனால்-உபக்ரமத்திலே அநேக பிரகல்பங்களைச் சொல்லி -கார்ய சமயம் வந்தவாறே -வருந்தியும் அல்பமாகிலும் செய்ய மாட்டார்கள் -என்றது ஆய்த்து –

————————————————————————–
அமுது விருந்து
அவதாரிகை
ஒருவராலும் ஆள முடியாத என்னை ஆண்டதுபோலே -இன்னும் பல
பொருந்தாவற்றையும் பொருந்த விடும் திறமை -எம்பெருமானார் இடம் உண்டு என்கிறார் .
பத உரை –
அறு சமயங்கள்-ஆறு மாதங்கள்
பதைப்ப -நடுங்கும்படியாக
பார்த்தான்-நோக்கினார்
இப்பார் முழுதும் -இம்மண்ணுலகம் எங்கும்
புகழ் கொண்டு –தம் கீர்த்தியாலே
போர்த்தான் -மூடினார்
புன்மையினேன் இடை -குற்றமுடையவனாகிய என்னிடத்திலே
தான் புகுந்து -தாமே வந்து புகுந்து
இரு வினை-பெரிய பாபங்களை
தீர்த்தான் -நீக்கினார்
தீர்த்து -இவ்வாறு தீ வினைகளை அகற்றி
அரங்கன் -பெரிய பெருமாள் உடைய
செய்ய -அழகிய
தாள் இணையோடு -திருப் பாதங்களோடே
ஆர்த்தான் -பிணைத்தார் –
எம் இராமானுசன் -எம் தலைவரான எம்பெருமானார்
செய்யும்-செய்திடும்
அற்புதம் இவை -வியத்தகு செயல்கள் இவை
வியாக்யானம் –
பார்த்தான் அறு சமயங்கள் பதைப்ப –
ஆறு சமயங்களும் தம்முள் ஒன்றுக்கு ஓன்று முரண்பட்டுக் போரிடவனவாயினும்
வைதிக மதத்தை எதிர்ப்பதில் அவையாவும் கருத்து ஒன்றிக் கூடுவன –
எம்பெருமானார் ஏறிட்டுப் பார்த்த உடன் திரண்ட அவை யாவும் பதைத்னவாம்
இப்பார் -போர்த்தான்
கற்றார் மாற்றார் என்ற வேறு பாடின்றி உலகம் அனைத்தும் இவர் புகழ் பரவியது என்றபடி –
அறு சமயங்கள் பதைப்பப் பார்த்தமையால் உண்டான புகழ் ஆதலின் அந்த
சமயங்கள் பரவிய உலகம் அனைத்திலும் அப் புகழ் பரவியது என்க –
புன்மையினேன் இடை –ஆர்த்தான்
இப்படியில் பிறந்து -தன்னை ஆண்ட விதத்தை அருளிச் செய்கிறார் –
நன்மையால் மிக்க நான் மறையாளர்கள் புன்மையாக கருதிய தன்னை –
அன்னையாய் அத்தனாய் நம் ஆழ்வார் ஆண்ட தன்மையை மதுர கவிகளும்
அருளி செய்தார் -தம்மிடம் புன்மையே மிக்கு இருத்தலின் -அதனையே தமக்கு நிரூபகமாக –
புன்மையினேன் -என்கிறார்.புன்மையினேன் இடைப் புகுந்து -என்றமையால்-வாத்சல்யம் -தோற்றுதலின் -அன்னையாய் ஆண்டமை கூறப்பட்டதாயிற்று -.இரு வினை தீர்த்தமையின் அத்தனாய் ஆண்டமை-கூறப்பட்டதாயிற்று .தான் புகுந்து -என்றமையின் –நிர்ஹேதுகத்வம் -காண்பிக்க பட்டதாயிற்று –
சாதன அனுஷ்டானம் இன்றி புகுந்தமை கூறப் பட்டதாயிற்று –
புன்மையினேன் இடைத்தான் புகுந்து என்று -புன்மை இல்லாது புகுந்தமைக்கு ஹேது வேறு இல்லை-என்பது தோன்ற அருளிச் செய்ததனால் -புன்மையாகக் கருதுவராதலின் என்னை யாண்டிடும் தன்மையான் –
என்ற பொருள் காண்பிக்க பட்டதாயிற்று –புகுந்து என்ற சொல் நயத்தாலே -எம்பெருமானாரையும் வர ஒட்டாது-தடுக்க வல்ல புன்மையின் திண்மை தோற்றுகிறது –
இருவினை -மகா பாபம்-புண்ய பாபங்கள் ஆகவுமாம் –
தீர்த்தான் தீர்த்து -என்று மீண்டும் கூறுவதால் -ஒரு அரிய செயல் செய்து முடித்தமை தோற்றுகிறது –
இதனால் அநிஷ்ட நிவ்ருத்தி கூறப் பட்டது .இனி அரங்கன் செய்ய தாள் இணையோடு ஆர்த்தான்-என்று இஷ்ட ப்ராப்தி கூறப் படுகிறது
.ஈஸ்வரன் சார்ந்த இரு  வல் வினைகளும் சரித்து-
மாயப் பற்று அறுத்து –
தீர்ந்து
தன்பால் மனம் வைக்கத் திருத்தி
தன் அடியார்க்காக வீடு திருத்துவான் –
எம்பெருமானாரோ -இவ்வமுதனாரை புன்மையினர் ஆதலின் அரங்கன் செய்ய தாள்
இணையோடு ஆர்த்து வைத்தார் .
————————————————————————–
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது –

ஸ்வாமி செய்த அகடிதகடனந்களை அருளி செய்கிறார்.

.பார்த்தான்–தீர்க்க கடாஷம்-அறு சமயங்கள் பதைப்ப-நடுங்கும் படி கண்டார்-புகழை பெரியவர் சிறுவர் வாசி இன்றி தம் உடைய திவ்ய கீர்தியாலே போர்த்தார்-ரஷிக்க போர்த்து கொள்வது போல மூடுதல்-அநாத்ம குணங்களை நிரூபகமாக உடையவனாய் இருக்கிற என் பக்கலிலே என் உடைய-அர்தித்வாதி -நிரபெஷமாக தாமே புகுந்து-கால தத்வம் உள்ளது அளவும்  அனுபவித்தாலும் தொலையாத மகா பாபங்களை போக்கினார்-அநிஷ்டம் தொலைத்து மீண்டும்  அழுக்கு வராமல் இருக்க-இஷ்டம் பிராப்தி ..போக்கி பெரிய பெருமாள் அழகிய திருவடிகள் உடன் சம்பந்த்திதார்-பிரமாணம் =அறிவின் ஊற்று -பிரத்யட்ஷம் அனுமானம் வேத சப்தம்-வேத பாஹ்யங்கள்  ஆறு சமயங்கள்.-சாந்தி சமம் தமம் இல்லாத புன்மையன்-வெளி உள் இந்த்ரியங்கள் அடக்க தெரியாத-இதையே சொரூப தர்மம்-என் இடை =என் இடத்தில்/அறம் பொருள் காமம் ஆர் ஆர்  இவற்றின் இடை அதனை எய்துவார் மூன்றின் உள்ளே -போல //தானே வந்து கை கொண்டார்../அரங்கன் உடன் ஆர்த்தான்/ தாள் இணை உடன் ஆர்த்தான்/செய்ய தாமரை தாள் இணை வாழியே அழகிய மணவாளன்/ஆர்த்தான் சம்பத்திதான் விடு பட முடியாமல் ..-இது தான் பெரிய அகடிதகட கார்யம்

-அர்சைக்கு ஏற்றம்- ஸ்வாமி திருவடியில் வைத்து கொள்ளாமல் ஆச்சார்யர் பகவான் திருவடியில் சேர்த்தான்..எம் ராமானுசன்-நாதர் செய்யும் ஆச்சர்ய செயல்கள்../இப் பார் முழுதும் போர்தான்- என் ஒருவரை மட்டும் இல்லை என்று நேராக சொல்லாமல் ..அவதரித்தது என்னை ஆளுகைக்கு தான்–கருட சேவை சேவிக்க பொழுது போனால் போது ஏற்ற கால் வாங்குவது போல இவை எல்லாம் பண்ணினாராம்..வந்தது அமுதனாரை கை பிடித்து தூக்க தான்/கீர்த்தியால் வியாபித்து அவைதிக சமயம் பதிக்கும் படி பண்ணி/குரூர பாபியான என் இடத்தில் வந்து பாபங்களை நசித்து பெரிய பெருமாள் திரு அடிகளில் சேர்த்தார்..சாருவாக சாக்யன்-ஜெயின்-பாசுபத -உலுக்ய காணபத்யம்  ஆறு என்ற எண்ணிக்கை மட்டும் இல்லை -/அனுஷ்டான தசையில் அறுக்கும்-சிரம படுத்தும் சமயங்கள் /பதஞ்சலி-ஆதி சேஷன் அவதாரம் என்பர்/.கோவிலிலே கைங்கர்யங்களில்  புகுத்தி வைத்தார்/வேதாந்த  கொடி நட்டார்/சங்கரர் கர்வம் -பாணாசுர யுத்தம் அங்கு-அத்வைதம்  நிரசனம் இங்கு/சு பலது உத்க்ருது யாதவ பிரகாசர் கீழ் குலம்  புக்க வராக கோபாலர்/அவரோபிதமான் -அ பார்த்தான் அர்ஜுனன் விரோதிகளின் இறக்கினான் /வேட்யங்களுக்கு விரோதிகளை இவர் இறக்கினார்/புகழ்  கொண்டு பண்டித பாமர வாசி அற -முதலி ஆண்டானை கொண்டு திரு அடி தீர்த்தம் சாதித்து-ஊமையை தம் திருவடி பலத்தால்-பரம பதம் கொடுத்து-புன்மையினேன் இடை /வந்தேறி யான பாபங்கள் இன்றி ச்வாபிகா பாபங்கள் வேம்பு முற்ற கைப்பு கூடுவது போல/ஜன்ம கூட  கூட பாபங்கள் அதிகரித்து/அத்யந்த பாபி-அன்பேயோ போல பாபமே வடிவு எடுத்தால் போல/சாதனம் அனுஷ்டிக்க வில்லை பிராத்திக்கவும் இல்லை..நிர்கேதுமாக தானே வந்தார்..பிரவேசித்தார்.புகுந்து-கூட்டத்தில் புகுவது போல-.புன்மை திடம் ஸ்வாமியே புகுந்து வரும் படியான திண்மை/இரு பருத்த புண்யம் பாபம்/தீர்த்தார்— மணலில் கோடு அழிப்பது  போல/வானோ மரி கடலோ .. சும்  எனாதே கை விட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே/அன்னையாய் அத்தனாய்  வாத் சல்யம் காட்டி/நல் வழி-புன்மையின் இடை புகுந்தது அன்னை போல ஆளும் தன்மை/இருவினை தீர்த்து தாள் இணை சேர்த்தான் தந்தை— நன்மையால் மிக்க நான் மறை ஆளர்கள் புன்மையாக கருதுவர்-கை விட்டதே காரணம்–இது தான் ஹேது../தானே புகுந்து-நிர்கேதுகமாக -இல்லை புன்மையே பாபத்தையே ஹேதுவாக கொண்டு/தீர்த்து தன் பால் மனம் வைக்க-அவனும்..புகுந்த பின்பு ஆறி  கை வாங்கி இருக்கை அன்றிக்கே-அரங்கன்-செய்ய தாள் இணை..எட்டா நிலம் இல்லை-ஏரார் முயல் விட்டு காக்கைபின் போவதே/யோக மார்க்கத்தால் அந்தர்யாமி /அத்யந்த சுலபர்– இருந்த இடத்தில் இருக்கிற அரங்கன்-திரு கமல பாதம் -செய்ய தாள் இணை- சேர்க்கை/பாவனத்வம் போக்யத்வம்/ உபாய உபேயம் போல–பித்ரு வாக்ய பரி பாலன் என்று போய்- ராஷசர்களை முடித்து -திரு சேது   கட்டுவித்து-மகாராஜருக்கும் விபீஷணனுக்கும் தமத அரசை வழங்கி-அதி மானுஷ சேஷ்டிதம் செய்து..சரவல லோக சரண்யன் -என்பதை மறந்து கிடந்தேன் ..ஒழிக்க ஒழியாத சம்பந்தம்/சேர்த்தார் சேஷ சேஷி பாவத்தை அறிவிப்பித்தார்/இருந்த இடத்தில் இருக்கிற அரங்கன்-திரு கமல பாதம் -செய்ய தாள் இணை- சேர்க்கை-பாவனத்வம் போக்யத்வம்/ உபாய உபேயம் போல-

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: