அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-51-அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
ஐம்பத்தோராம் பாட்டு –அவதாரிகை
எம்பெருமானார் இந்த லோகத்தில் அவதரித்து அருளிற்று என்னை யடிமை கொள்ளுகைக்காக -வேறு ஒரு ஹேதுவும் இல்லை -என்கிறார்.
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர் கட்காய் அன்று பாரதப்போர்
முடியப் பரி நெடும் தேர் விடும் கோனை முழுது உணர்ந்த
அடியர்க்கு அமுதம் இராமானுசன் என்னை யாள வந்திப்
படியில் பிறந்தது மற்றில்லை காரணம் பார்த்திடிலே –51 –
வியாக்யானம் –
க்ருஷ்ணாஸ்ரயா க்ருஷ்ணபலா கிருஷ்ண நாதாச்ச பாண்டவா -பாரதம்-த்ரோண- 183- – என்கிறபடியே
திருவடிகளை பின் சென்று -கர்வோத்தரராய் இருக்கிற பாண்டவர்களுக்காகாத் துர்வர்க்கமடைய
அங்கே திரண்டு இவர்கள் தனிப்பட்டு -தன்னை ஒழிய வேறு துணை அற்று இருக்கிறவன்று –
பாரத சமரத்திலே அவர்கள் பிரதி பஷம் முடியும் படி -ஆடிய மா நெடும்தேர் -திருவாய் மொழி – 6-8 9- –
என்கிறபடியே குதிரை பூண்ட நெடிய தேரை நடத்தின சர்வேஸ்வரனை ஆஸ்ரித பஷபாதம் -ஆஸ்ரித பாரதத்ர்யம் -ஆஸ்ரித விரோதி நிரசனம் –முதலான சர்வ ச்வபாவங்களையும் அறிந்து-அவவவ ச்வபாவங்களுக்கு தோற்று எழுதிக் கொடுத்து இருக்கும் அவர்களுக்கு போகய பூதரராய் இருக்கும்-
எம்பெருமானார் இந்தப் பூமியில் வந்து அவதரித்து -என்னை ஆளுகைக்காக –
ஆராயில் வேறு ஒரு காரணம் இல்லை –
எழுச்சி –கிளப்பும் -அதாவது -நாம் கிருஷ்ண ஆஸ்ரயர் -என்கிற ஒவ்த்தத்யம்
படி-பூமி–
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை

அவதாரிகை -பால்யமே பிடித்து -மாதுலேயன் என்று நினையாதே ரஷகன் என்றே அத்யவசித்து இருக்கிற-பஞ்ச பாண்டவர்களுக்கு பிரதி பஷம் அழியும்படி சாரத்தியம் பண்ணின கிருஷ்ணனுடைய ஆனைத்-தொழில்கள் எல்லாம் தெளிந்த ஸ்வரூப ஞானம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஆராவமுதாய்-இருக்கும் எம்பெருமானார் -இந்த பாப பிரசுரமான பூ லோகத்திலே -அவதரித்தது -ஆராய்ந்து பார்த்தால் -என்னை ஆளுகைக்காகவே என்று நிச்சிதமாய்த்து இத்தனை ஒழிய வேறு ஒரு ஹேது இல்லை என்கிறார் –
வியாக்யானம்அடியைத் தொடர்ந்து எழும் -பால்யமே பிடித்து -வியாசர் குந்தி மார்கண்டேயன் முதலானவர்கள்-
 உடைய உக்தி விசேஷங்களாலும் -ஆபத்து வந்த போதெல்லாம் உதவி ரஷித்த படியாலும் -கிருஷ்ணனை
மாதுலேயன் என்று நினைக்கை அன்றிக்கே -தங்களை ரஷிக்கும் பரதத்வம் என்று அத்யவசித்து –
 கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ணா பலா கிருஷ்ணா நாதஸ பாண்டவ -என்கிறபடியே அவன் திருவடிகளை ஆஸ்ரயித்து
ருத்ரேந்த்ராதிகளை வென்று -காலகேய ஹிடிம்ப ஜராசந்தாதிகளை சம்கரித்து லோகத்திலே-தங்களுக்கு ஒருவரும் சதர்சர் இல்லை என்று கர்வோத்தராய் இருந்த ஔத்தத்யம் -ஐவர்கட்கா -தர்ம-பீமார்ஜுன நகுல சகதேவர் என்று ஐந்து பேரான பஞ்ச பாண்டவர்களுக்காக அன்று -துரி யோதனன் இடத்தில்-
பஷ பாதத்தால் கர்ண சல்யாதி துர்வர்க்கம் எல்லாம் திரண்டு -இந்த பாண்டவர்களும் தனிமைப் பட்டு-தன்னை ஒழிய வேறு ஒரு துணை இன்றிக்கே இருக்கிற சமயத்திலே -பாரத போர் முடிய -உபய சேனையிலும் -பரத வம்சத்தாரில் பரிமிதரானாலும் துர்வர்க்கங்கள் இந்த உபய சேனையிலும்-அந்வயித்து யுத்தம் பண்ணினார்கள் ஆகையாலே அந்த யுத்தத்துக்கு பாரத யுத்தம் என்று பேராய் இருக்கிறது –

அப்படிப்பட்ட உபய சேனையிலும் திரண்டு இருக்கிற பதினெட்டு அ ஷோகிணி  பலத்துக்குமாக  பாண்டவர்கள் ஐவரரும்  சேஷித்து அவர்களுக்கு பிரதி பஷ பூதரான மற்றப் பேர் எல்லாரும் முடியும்படி

பரி நெடும் தேர் விடும் கோனை -ஆடிய மா நெடும் தேர் -என்கிறபடி ச்வேதாச்வங்களாலே பூணப்பட்டு -சர்வாலன்க்ர்தமாய் –தேவதா ப்ரசாதத்தாலே வந்ததாகையாலே திவ்யமாய் மகத்தான திருத் தேரை-தான் சாரதியாய் நடத்தி தன்னுடைய சர்வ ஸ்வாமித்வம் சர்வருக்கும் தெரியும்படி இருக்கிற கிருஷ்ணனை தத்ர பாண்டவாநாம் குருணாம் ச யுத்தே ப்ராரப்தே பகவான் புருஷோத்தம சர்வேஸ்வர ஜகது
பக்ர்திமர்த்ய ஆஸ்ரித வாத்சல்ய விவச பார்த்தம் ரதினம் ஆத்மாநஞ்ச சாரதிம் சர்வலோக சாஷிகம் சகார-என்று கீதா பாஷ்யத்திலே இவ் அர்த்தத்தை எம்பெருமானார் அருளிச் செய்தார் இறே -.இந்த  கிருஷ்ணன்-யது குலத்திலே அவதரித்தாலும் –   ஸ்ரீ ருக்மிணி பிராட்டி யினுடைய சுயம்வரதுக்காக குண்டின புரத்துக்கு
ஏற எழுந்து அருளின போது -இந்த்ரன் தேவ ஜாதிகையிலே ஒரு சிம்காசனத்தை அனுப்பி வைத்து- கிருஷ்ணனை ராஜாவாகும்படிஅந்த சிம்காசனத்திலே எழுந்து அருளப் பண்ணுவித்து -திரு அபிஷேகம்
பண்ணிவித்தான் என்று பிரசித்தம் இறே -ஆகா ராஜா என்னக் குறை இல்லை -இப்படிப் பட்டவனை –
முழுது உணர்ந்த அடியர்க்கு-ஸ்வரூப ரூப குண விபூதிகளையும் ஏஷ நாராயணஸ்  ஸ்ரீ மான் ஷீரார்ணவ-நிகேதன -நாக பர்யங்க முத்ஸ்ரஜ்ய ஹ்யாகதோ மதுராம்புரிம் -என்கிறபடியே சர்வ ஸ்மாத் பரனாயும்
அஜகத் ஸ்வபாவனாயும் வந்து அவதரித்து   -உபசம்காசர்வாத்மன் ரூபமே தச்சதுர்புஜம் -என்று பிதாவானவன்
பிரார்த்திதவாறே ப்ராக்ரதரைப்  போலே இருந்தபடியையும் -யமுனா நதியைக் கால் நடையாக பண்ணினதும் –
ஓர் அபலை கையிலே கட்டுண்டு அடி உண்டதும் -பூதனா சகட யமாளார்ஜுன உரிஷ்ட ப்ரலம்ப தேனுக காளிய-கேசி குவலயாபீட சாணூர கம்சாதிகளாகிற ஆஸ்ரித விரோதிகளைக் கொன்றதும் -அக்ரூர மாலாகாராதிகளை
அனுக்ரகித்ததும் -கோவர்த்தன உத்தரணாத்ய    அதி மானுஷ திவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணினதும் –
பாண்டவர்களுக்கு பரதந்த்ரனாய் கழுத்திலே ஓலை கட்டிக் கொண்டு தூத்யம் பண்ணினதும் -காலாலே ஏவிக்-கார்யம் கொள்ளும்படியான சாரத்யத்தைச் செய்ததும் -விஸ்வரூபத்தை தர்சிப்பததும் -அர்ஜுன வ்யாஜேன லோக-உபகார அர்த்தமாக அத்யாத்ம சாஸ்த்ரத்தை வெளி இட்டதும் -முதலானவற்றையும் அறிந்தவர்களாய் -அவ் வவ-ஸ்வ பாவங்களுக்கு தோற்று -தங்களை எழுதிக் கொடுத்து சேஷத்வ  ஸ்வரூபத்தில் நிஷ்டரான ஆழ்வான் ஆண்டான்-பிள்ளான் எம்பார் முதலானவர்களுக்கு -அமுதம் –ஸ்வரூப உஜ்ஜீவனத்தை பண்ணுமவர் ஆகையால் நித்ய அபூர்வராய்

ரசிக்குமவரான –இராமானுசன் -எம்பெருமானார் –என்னை யாள வந்து -பரம பதத்திலே பரி பூர்ண அனுபவம் நடவா நிற்க –

அத்தைக் காற்கடைக் கொண்டு -அதில் நின்றும் அடியேனை அடிமை கொள்ளுக்கைக்காக எழுந்து அருளி –
இப்படியில் -பகவத் ஸ்வரூப திரோதா நகரீம் விபரீத ஞான ஜநநீம் ஸ்வ விஷயா யாச்ய போக்ய புத்தர் ஜநநீம் -என்னும்படியான ப்ராக்ருத பூமியிலே -பிறந்து -ஸ்ரீ மான் ஆவிர்பூதவ் பூமவ் -என்கிறபடியே அவதரித்து அருளினது –
என்னை யாள -அஹ மச்ப்யபராத சக்ரவர்த்தி -என்றும் பாபானாம் பிரதமோச்ம்யஹம்-என்னும்படியான-அடியேனை ரஷிக்கவே ஆய்த்து –  மற்று இல்லை காரணம் பார்த்திடிலே –பின்னையும் இவ் அவதாரத்துக்கு மூலம்

எது என்று ஆராய்ந்து பார்த்தால் வேறு ஒரு காரணம் இல்லை என்று அருளிச் செய்தார் ஆயிற்று –

————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
என்னை அடிமை கொள்வதற்காகவே எம்பெருமானார்-அவதாரம் செய்து அருளினார் –என்கிறார்
பத உரை
அடியை தொடர்ந்து -திருவடிகளை உபாயமாக பற்றி கொண்டு அதன் வழியே பின்பற்றிச் சென்று
எழும் -எழுச்சியை பெரும்
ஐவர்கட்காய்-பஞ்ச பாண்டவர்களுக்காக
அன்று -அக்காலத்திலே
பாரதப் போர் -மகா பாரத யுத்தத்திலே
முடிய -எதிரிகள் நாசம் அடையும்படியாக
பரி-குதிரைகள் பூட்டிய
நெடும் தேர் -பெருமை வாய்ந்த தேரை
விடும் -செலுத்தும்
கோனை-சர்வேஸ்வரனை
முழுது உணர்ந்த -முழுவதும் தெரிந்து கொண்ட
அடியர்க்கு -அறிந்த அந்தந்த தன்மைகளுக்கு தோற்று அடிமை யானவர்களுக்கு
அமுதம் -இனியராய் இருக்கும்
இராமானுசன் -எம்பெருமானார் –
இப்படியில் -இந்த பூமியில்
வந்து பிறந்தது -வந்து அவதாரம் செய்து
என்னை ஆள -என்னை ஆளுகைக்காக
பார்த்திடில் -ஆராய்ந்து பார்த்தல்
மற்று -வேறு காரணம்
இல்லை-ஏதும் இல்லை
வியாக்யானம்
அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் –
அடியைத் தொடர்ந்ததனால் ஐவர் எழுந்தனர் –
தொடராமையால் மற்றையோர் அனைவரும் முடிந்தனர் –
கச்சத் தவமே நம் சரணம் சரண்யம் புருஷர்ஷபா -புருஷ ஸ்ரேஷ்டர்களே இந்தக் கண்ணனை-சரணம் அடையுங்கோள்-என்று மார்கண்டேயன் உபதேசிக்க  -அதன்படியே –
த்ரவ்பத்யா சஹிதாஸ்  சர்வே நமச்சக்ரூர் ஜனார்த்தனம் -என்று
அனைவரும் த்ரவ்பதியோடு கூடினவர்களாய் கண்ணனை சரண் அடைந்தனர் –
பாண்டவர்கள் ஐவரும் கண்ணனை சரண் அடைந்தமை காண்க –
ஐவர்கட்காய் -என்றதனால் -ஐவர்கள் கையாளாய்   தன்னை நினைத்துக் கண்ணன் இழி தொழில்
செய்தமை தோற்றுகிறது –
நாடுடை மன்னர்க்குத் தூது செல்னம்பிக்கு -என்றதும் காண்க –
ராஜ்யமுடையார் பாண்டவர்களே -நாம் அவர்களுக்கு ஏவல்  செய்து நிற்கிறோம் என்று ஆயிற்று அவன்-நினைத்து இருப்பது -என்பது அவ்விடத்திய- 6-8 3- – –  ஈடு .பாண்டவர்கள் தங்களைக் கண்ணன் அடிமைகளாக-நினைத்து இருக்க -இவன் அவர்களுக்குத் தன்னை யடிமையாகக் காணும் நினைத்து இருப்பது .
அன்று –தேர் விடும் கோனை –
கையில் ஆயுதம் எடேன் -என்று பிரதிக்ஜை செய்து இருப்பதால்
தேரை விட்டுத் தேர்க் காலாலே சேனையைத் தூளாக்கினான் .
ஸ்வாமி நம் ஆழ்வாரும்
 -குரு நாடுடை ஐவர்கட்காய் ஆடிய மா நெடும் தேர்ப்படை நீர் எழச் செற்ற பிரான் -திருவாய் மொழி – 6-8 3-
என்றார் .ஆயுதம் எடாமைக்கு அனுமதி பண்ணுகையாலே தேர்க் காலாலே  -சேனையைத் துகள் ஆக்கினான் -என்பது ஆங்கு உள்ள ஈட்டு ஸ்ரீ சூக்தி .
மகதி சயந்த நேச்த்திதவ் -பெரிய தேரில் இருப்பவர்கள்-என்றதற்கு ஏற்ப நெடும் தேர் –எனப்பட்டது –
தேர் விடும் கோனை
தேர்விடும் -என்பதால் சௌலப்யமும்
கோனை -என்பதால் பரத்வமும் புலன் ஆகின்றன
முழுது உணர்ந்த –இராமானுசன்
ஐவர்கட்காய் என்று ஆஸ்ரித பஷ பாதமும்
தேர் விடும் -என்று ஆஸ்ரித பாரதந்திரியமும்
முடிய விடும் என்று விரோதி நிரசன சாமர்த்தியமும்
முழுதும் -என்பதனால்-உணர்த்தப்படுகின்றன –
அவதார ரகஸ்யத்தை அறிந்து -எம்பெருமான் ச்வபாவங்களுக்கு தோற்று உள்ள அடியர்
அமுதம் போல் இராமானுசனை அனுபவிக்கின்றனர் .ஆதலின் இவர் ப்ராக்ருதராய் இருத்தல் கூடாது .
அமுதம் திவ்யம் அன்றோ-
ஆகையால் -இவ்வமுதம் இப்படியில் பிறப்பதற்கு காரணம் அதன் கருமம் அன்று
பின்னை ஏன் பிறந்தது
என்னை யாளவே என்கிறார்
இந்தப்பாட்டில் -எம்பெருமானார் என்னை விஷயீகரிக்க முடியாமையால்-அவன் திருவடிகளில்-எனக்கு ஈடுபாடு இல்லை -எனக்காகவே அவதரித்து -விஷயீ கரித்தமையால்-எம்பெருமானார் திருவடிகளே எனக்கு விலஷணமாய்த் தோற்றுகின்றன என்று-அமுதனார் கருதுவதாகத் தோற்றுகிறது .
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது –

அவதாரத்துக்கு ஹேது -பயன்- கர்ம இல்லை ..கை பிடித்து உத்தாரணம் பண்ண தான்நாம் கர்மம் அடியாக  பிறக்க -/ஸ்வாமியோ  -நம் கர்ம தீர அவதாரம்நானும் பிறந்து நீயும் பிறக்க வேணுமா-கண்ணன்-அர்ஜுனன் கீதையில்/அமர்த்தம்-அனுபவத்துக்கும் உஜ்ஜீவனதுக்கும் -பிராப்ய பிராபகம்./பரி- குதிரை பூட்டிய தேர் வெள்ள புரவி-ஆயுதம் எடுக்காமல் தேர் ஒட்டியே முடித்தான்/கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பல கிருஷ்ணா நாதச்ச பாண்டவ-திருவடிகளை பின் சென்று..மார்கண்டேயர் சரண் அடைய சொன்னதும் திரௌபதி உடன் நமச் கரிக்க-நமஸ்காரமே சரணாகதி-எழும்-கர்வோத்தராய் இருக்கிற -கர்வம் அடைந்து -கண்ணனை பற்றிய பலம்-இவர்கள் தனிமை பட்டு தன்னை ஒழிய வேறு துணை அற்று இருக்கிற அன்று –ஆடிய மா நெடும் தேர்-திருவாய்மொழி-6-8-9/விசயற்க்காய்–தேரை நடாத்தின-சர்வேஸ்வரன்-கோன்-ராஜா-முழுது உணர்ந்த-ஆஸ்ரித பஷ பாதம்-ஐவர்கட்காய்–ஆஸ்ரித பார தந்த்ர்யம்-தேர் விடும் கோன்-ஆஸ்ரித விரோதி நிரசனம்-பாரத போர் முடிய முதலான சர்வ ச்வாபவங்களையும் அறிந்து /அடியவர்- அதற்க்கு தோற்று எழுதி கொடுத்து இருக்கும் அவர்கள் போக்ய பூதர் திரு மாலே  நானும் உனக்கு  பழ அடியேன்-என்று பிரதம  பர்வ நிஷ்டியர் போல் பார்த்திடில்- ஆராயில் மற்று  வேற காரணம் இல்லை..

எழுச்சி-கிளப்பும் படி-ரஷகன் /-ஈஸ்வரன் செய்த ஆனை தொழில்கள்  எல்லாம் இவர்களுக்கு –ஆஸ்ரிதர்க்காகவே -நஞ்சீயர்

ஞான விஷயம் பார்த்த சாரதி/அனுபவம் ராமானுசர் -என்று இருக்கிற ஸ்ரீ வைஷணவர்கள்

படியில்– பாபமே உள்ள பூ  உலகத்தில்–என்னை ஆள .

.பால்யம் பிடித்து வியாசர் குந்தி மார்கண்டேயர்  போல்வரே சொல்லி சொல்லி..சகே யாதவா அடே -சிறு பேர் இட்டு /தெரியாமல் அறியாத பிள்ளைகளோம் அன்பினால்/சகஸ்ரநாம யுத்தம் கேட்டதும் யுதிஷ்டிரன் ஆகாசத்தில் தேட/பீஷ்மர் அருகில் உள்ள வாசுதேவனை காட்டி இவன் தான் அவன் என்றாரே/உக்தி விசேஷத்தாலும் ஆபத்து  வந்த போது எல்லாம் உதவி ரஷித்த படியாலும்- பர தெய்வம் என்று நம்பிக்கை பண்ணி

ருத்ரன் இந்த்ராதிகளை வென்று..சிவன் முடி மேல் தான்  இட்டவை கண்டு -பார்த்தன் தான் இட்ட புஷ்பங்களையே கண்டு தெளிந்தானே.கர்வம் விஞ்சி –அடியை தொடும் எழும்- தொழுது எழும்-தொழுதால் எழலாம்–ஐவர்கட்காய்- கை ஆளாகி -நாடு உடை மன்னருக்கு தூது செல்  நம்பி-குண  பூர்ணம் இட்ட பணியாளன் போல நடந்தானே-ஐந்து பேரான பஞ்ச பாண்டவர்/ இது நூற்றுவர் வீய சொன்னது அது-திரு வாய் மொழி- ஐ ஐந்து முடிக்க/-ஐந்து பேரை தொடுவது இல்லை என்று பீஷ்மர் பிரதிக்ஜை பண்ணினதே  இவர்கள் கண்ணன் இடம் இருந்ததால்/பஷ பாதமே தப்பு இல்லை-அவன் பெருமையே ஆஸ்ரித பஷ பாதமாய் இருப்பதே ..குரு  நாடு உடை ஐவர்கட்காய் ஆடிய மா நெடும் தேர் படை நீர் எழ –தான் தேர் ஒட்டி-மற்ற தேர் போகும் படி தேர் நடாத்தினான்/சர்வ அலங்க்ருதனாய்  -கீதாசார்யனே அலங்காரம்-சர்வ ஸ்வாமித்வம் தெரியும் படி இருந்தான்..தேர் விடும்- சௌலப்யம் கோன்-பரத்வன்/-பக்தி சாஸ்திரமே கீதை -பகவான் புருஷோத்தமன் சர்வேஸ்வரன் ஆஸ்ரித வாத்சல்ய வடிவுடன்-அஸ்தான சினேகா கருணை தர்ம அத்தர்ம வியாகுலம் -மூன்று தோஷங்களையும் பச்சை ஆக்கி கொண்டு/தூத்வ சாரத்யங்கள் செய்தும் உபதேசித்தும் ரஷித்து-அனைவரும் பார்க்க -கோன்- எது குலத்தில் அவதரித்தாலும்-ருக்மிணி குண்டினபுரம் – இந்த்ரன் தேவ சாதியிலே சிம்காசனம் அனுப்பி வைத்து –ராமனுக்கு தேர் அனுப்பியது போல-திரு அபிஷேகம் செய்தது பிரசித்தம் அதனால் கோன்..சொரூப ரூப குண விபூதிகளையும்/ பரத்வன் /முழுது உணர்ந்த -அப்ராக்ருதன் -கடியன் கொடியன் நெடிய மால் ..ஆகிலும்  கொடிய என் நெஞ்சு அவன் என்றே கிடக்குமேமதுரா புரிம்- வந்தவன்   ஸ்ரீ மான் நாராயண-நாக பர்யங்கம் விட்டு -என்று உணர்ந்த-முழுது உணர்ந்து- விபூதி- தனக்காக இட்ட வேஷத்தை தன்னை கொண்டு/பாராத அவனை கொண்டு பார்த்து அச்சம்  அடைய மாசுசா சொல்லி அதை தீர்த்து தீர்த்து..சொரூபம் ஒன்றும் குறையாமல் அவதரித்தான் என்று உணர்ந்த..ரூபம் சதுர் புஜம் –மாதா -பிதா பிரார்த்தித வாறே -பிறந்த ஷணமே  கேட்டு மறைத்து கொண்டானே/பேணும் கால் பேணும் உருவாகும் -..யமுனா நதியை கால் நடையை தாண்டியதும்/யசோதை கையால் கட்டு பட்டதையும்/பூதனா சகட -கம்சன்-ஆஸ்ரித விரோதிகளை கொன்றதும்./மாலா  காரர் அக்ரூரரை போல்வாருக்கு காட்டியும்/கோவர்த்தனம் ஆதி மானுஷ  திவ்ய செயல்களை செய்ததும்/கழுத்தில் ஓலை கட்டி கண்டு காலால் ஏவி  கொள்ளும் படி பண்ணி செய்ததும்./விஸ்வரூபம் காட்டியும், பார்த்தன் வ்யாஜமாய் -அருளினான் அவ் அறு மறையின் பொருள் கொடுத்தும்-ஒவ் ஒரு சேஷ்டிதங்களுக்கும் தெரிந்து எழுதி கொடுத்தார்கள்.-ஆழ்வான் ஆண்டான் பிள்ளான் எம்பார் போல்வார்../மறைந்து வளர்ந்தாய்ஆயர் குலத்தினில்  தோன்றும் அணி விளக்கு-விட்டில் பூச்சி போல விழுந்தார்கள்..ராச கிரீடை விரகம் அடைந்த பொழுது உன் திருவடி பட்ட ரஜஸ் தேடி போனார்களே/அதில் ஒரு துவளாக இருக்க ஆசை கொண்டார் ஆழ்வான்/அமிர்தம் -நித்ய அபூர்வம் //பரி பூர்ண அனுபவம்  நடவா இருக்க -அத்தை கால் கடை கொண்டு என்னையே ஆள் கொள்ள வந்தாரே..அவதரித்து அருளினீர்-அபராத சக்கரவர்த்தி-என்னை கொள்ள -வேறு காரணம் இல்லை..கண்ணனால் தூக்க முடியாத அமுதனாரை ராமானுசர் தூக்கினரே-அவன் பிறந்து ஐஞ்சு பேரை ரஷித்தான்..அவன்  ஞானம் ஒன்றுக்கே விஷயம்.. அனுபவத்துக்கு விஷயம் ஸ்வாமி..ஸ்வாமி இந்த லோகத்தில் அவதரித்து -திவ்யம்- அமுதம்- அருளிற்று என்னை அடிமை கொள்ளுகைக்காக–வேறு ஒரு ஹேதுவும் இல்லை..

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: