அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-50-உதிப்பனவுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
ஐம்பதாம் பாட்டு –அவதாரிகை –
தென்னரங்கன் கழல் சென்னி வைத்து தானதில் மன்னும் -என்று
எம்பெருமானாற்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ப்ராவண்ய அதிசயத்தை-அனுசந்தித்தார் கீழ் –
அந்த பிரசங்கத்திலே தமக்கு உத்தேச்யமான எம்பெருமானார் திருவடிகளை
அனுசந்தித்து -தத் ஸ்வபாவ அனுசந்தானத்திலே வித்தராகிறார் -இதில் –
உதிப்பனவுத்தமர் சிந்தையுள் ஒன்றலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த வென் புன் கவிப்பாவினம் பூண்டன பாவு தொல்சீர்
எதித்தலை நாதன் இராமானுசன் தன் இணை யடியே – – 50-
வியாக்யானம் –
திசை யனைத்தும் ஏறும் குணன் -என்கிறபடியே சர்வ திக்கிலும் பரவி இருப்பதாய் –
ஸ்வரூப அனுபந்தி யாகையாலே -பழையதாய் இருந்துள்ள கல்யாண குணங்களை உடையராய் –
எதிகளுக்கு தலைவராய் -நாத பூதராய் -இருக்கும் எம்பெருமானார் உடைய
சேர்த்தி அழகை உடைத்தாய் இருந்துள்ள திருவடிகள் ஆனவை –
அநந்ய ப்ரயோஜனராய்  -அநந்ய சாதனராய் -இருக்கும் உத்தம அதிகாரிகள் உடைய
திரு உள்ளங்களிலே -எல்லையில் சீர் இள நாயிறு இரண்டு போலே -திருவாய் மொழி -8 5-5 – –  என்கிறபடியே
ஆதித்யன் உதித்தால் போலே பிரகாசியா நிற்கும் தன்மையை உடையன .
பாஹ்ய குத்ருஷ்டிகளான பிரதி பஷ பூதருடைய ஹ்ருதயமானது -பீதமாய்-அந்த பய அக்நியாலே -பரிதபிக்கும் படி பரஸ்பரம் மாறி இட்டு நடவா நிற்கும் தன்மையை உடையன –
சம்ருத்தமாய் பிரபலமாய் இருந்துள்ள தோஷங்கள் எல்லாம் சேர அழுத்தி வைக்கப்பட்ட என்னுடைய-புல்லிய கவிகள் ஆகிற -சந்தஸ்  சமூஹததை அணிந்து கொண்டன –
இவற்றின் உடைய தன்மை இருக்கும் படி என் என்று கருத்து –
இனத்தின் வகையான கலித்துறை யாகையாலே –பாவினம் -என்கிறார் ஆகவுமாம்-
ஒன்றலர் -சத்ருக்கள்
பாவுதல்-பரம்புதல்–
உதிப்பது -மாறி நடப்பன -பூண்டன மூன்றும் உடையவர் திருவடிகளால் நடந்தவை / ரக்ஷணம் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி -போக்யத்வம் பாவானத்வம் -இரண்டும் -மோக்ஷ ஏக ஹேது-இணை அடியே -ஏவ காரம் –
அதமர் மத்யமர் இல்லாமல் – உத்தமர் -சிந்தை உள்ளே
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை

அவதாரிகை -தென்னரங்கன் கழல் சென்னி வைத்து தான் அதில் மன்னும் -என்று எம்பெருமானாருக்கு-பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ப்ராவண்யத்தை அனுசந்தித்தார் கீழ் -இதில்
அந்த பிரசங்கத்தில் தமக்கு உத்தேச்யரான எம்பெருமானார் திருவடிகளை அனுசந்தித்து -அவற்றினுடைய ஸ்வரூப ஸ்வபாவன்களை அடைவே அருளிச் செய்து கொண்டு -வித்தார் ஆகிறார் –
வியாக்யானம்பரவு தொல் சீர்பரவுகை -பரம்புகை –திசை யனைத்தும் ஏறும் குணன் -என்று இவர்-தாமே அருளிச் செய்தபடி -சகல திக்குக்களிலும் வ்யாப்தங்களாய் -வந்தேறி யன்றே -ச்வபாவிகங்களாய்-இருந்துள்ள கல்யாண குணங்களை வுடையவராய் –எதித் தலை நாதன் -அருளாள பெருமாள் எம்பெருமானார்
எம்பார் தொடக்கமான ஏழு நூறு ஜீயர்களுக்கும் வகுத்த சேஷியாய் -அவர்களுக்கு ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை-தத் யாதாம்ய பர்யந்தமாக உபதேசித்து அருளி -அவ் வழியாலே அவர்களுக்கு தலைவராய் -நாத பூதராய்-இருந்துள்ள –இராமானுசன் –எம்பெருமானார் –தன் இணை யடியே -இச் சம்சார சேதனரை அதில் நின்றும்
நிவர்த்திப்பிக்கைக்கும் -அனுபாவ்யமாய்க் கொண்டு ரசிப்பிக்கைக்கும் -இத் திருவடிகளோடு ஒத்து இருப்பார்- உண்டோ என்று ஆராய்ந்து பார்த்தால்  -வேத புருஷனாலும் சொல்லப்பட்ட பிரபாவத்தை உடைய சர்வேஸ்வரனும் –
பிராப்யம் உண்டோ இல்லையோ என்று சம்சயிக்க வேண்டும்படி பண்ணக் கடவன் ஆகையாலும் -ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு இரங்காதே போன படியாலும் -இவ் உபாயத்துக்கு ஒப்பாக மாட்டாது –
நிஸ் சம்சய பிரதிபாதகமாய் அந்ய யோகவ்ய வச்சேதகமாய் இருந்துள்ள  பிரமாண பலத்தாலே இவ் உபாயம்-அதிலும் ஸ்ரேஷ்டமாய்த்து இருப்பது -ஆகையாலே அந்த அதிசயத்துக்கு ஒன்றுக்கு ஒன்றே -சதர்சமாய் இருக்கிற

இரண்டு திருவடிகளும் -என்றபடி –

உதிப்பன உத்தமர் சிந்தையுள்உத்தமராவார் -அதம மத்யமரான வேத பாஹ்யரும் -வைதிகராய் கொண்டு-சாமான்ய தர்மத்திலே தானே மண்டி இருக்குமவர்களுக்கும் -அவர்களுடைய நிஷ்டைக்கும் பிரதிபடராய் -பரம வைதிகரான -விசேஷ சாஸ்திர ஏக நிஷ்டராய் -முமுஷுக்களாய் இருக்குமவர்கள்  –
உத்க்ருஷ்டராய் -அநந்ய சாதனராய் -அநந்ய ப்ரயோஜனராய் இருக்கும் உத்தம அதிகாரிகள் -என்றபடி –
அன்றிக்கே -இது சரம பர்வ பிரதிபாதாக சாஸ்திரம் ஆகையாலும் -முமுஷுக்களிலும் -ஏகாந்திகளிலும் –
பரம ஏகாந்திகளிலும் வைத்துக் கொண்டு –உத்தமர் பரம  ஏகாந்திகள் ஆகையாலும் -இவ்விடத்திலே
உத்தமர் என்றது -பரம ஏகாந்திகளை சொன்னபடி என்னவுமாம் –சிந்தையுள் –அவர்களுடைய திரு உள்ளங்களிலே
உதிப்பன -எல்லையில் சீர் இள நாயிறு இரண்டு போல் -என்கிறபடி சக்ரவாள பர்வதத்தில் இரண்டு ஆதித்யர்கள்
சேர உதித்தால் போலே -சத்துக்களுடைய திரு உள்ளங்களிலே எம்பெருமானார் உடைய இரண்டும் எப்போதும்-உதித்து பிரகாசியா நிற்கும் தன்மையை உடையன -கீழ்ச் சொல்லப்பட்ட அத்யாவச்ய ரஹீதர்க்கு ஒருக்காலும்
பிரகாசிக்கிறனவல்ல-இப்படிப்பட்ட பிராவண்ய அதிசயம் உடையவர்களுக்கே பிரகாசிக்கும் என்றபடி –

யதீந்திர நாத -சிஷ்டாக்ர கணய ஜன சேவ்ய பவத் பதாப்ஜே -என்று இறே ஜீயரும் அருளிச் செய்தது அஜடா சயோதயம் யதிராஜ சந்த்ரம் -என்று அபியுக்தரும் அருளிச் செய்தார் இறே –

ஒன்றலர்   நெஞ்சம் அஞ்சிக் கொதித்திட மாறி நடப்பனஒன்றலர் -என்றது பாஹ்ய குத்ர்ஷ்டிகள் தொடக்கமான-பிரதி பஷிகளை -அவர்களுடைய ஹ்ருதயமானது சூர்யோதத்திலே திவா பீதங்கள் பயப்படுமா போலே –
ஷிப்த ப்ரத்யர்த்தி த்ர்ப்தி-என்னும்படியான அவர் திருவடிகள் தன் உதயத்தால் பீதமாய்-ஆதித்யனுடைய தேஜசாலே-அவை பரிதபிக்குமா போலே -ஸ்வ தேஜச்சாலே பரிதபிக்கும்படி ஆதித்யன் இவற்றுக்கு பிரதிபடனாய் கொண்டு –

சர்வ திக்குகளிலும் பரஸ்பரம் மாறி நடவா நிற்கும் தன்மையை உடையன –  இத்தால் பாஹ்ய குத்ருஷ்டிகளை -நிரசிக்கைக்காக -வேம்கடாசலத்துக்கும் யாதவாசலத்துக்கும் சாரதாபீடம் முதலான ஸ்தலங்களுக்கும் இவர் எழுந்து அருளின படியை அருளிச் செய்தார் ஆய்த்து –

கொள்ளை வன் குற்றம் எல்லாம் பதித்த -சர்வதா சர்வ பிரகாரத்தாலும் பண்ணப்பட்டவை யாகையாலே -ச்மர்த்தங்களாய் பிரபலங்களாய் இருந்துள்ள தோஷங்கள் எல்லாம் திரட்டி ஒரு குப்பலாக வைக்கப்பட்ட –
என் புன் கவி பாவினம் -கவி பாடுகைக்கு தகுதியான ஞானமும் -காவ்ய லஷண பரி ஜ்ஞானமும் இல்லாத-என்னுடைய கவி யாகையாலே -புல்லியதாய் -அசமீசீனமான கவியாகிற சந்தஸ் சமூகத்தை –பாட்டுக்களை-என்றபடி -அன்றிக்கே அநேக சந்தஸ் சூக்களோடே கூடின  கலித்துறை யாகையாலே –பாவினம் -என்றார் ஆகவுமாம் –
பூண்டன -இவனுடைய அஞ்ஞானத்தாலே சொன்ன சொல்லுக்கள் அன்றோ -இவை என்று அவற்றில் ஒரு-குறைகளும் பாராதே -கலம்பகன் மாலையை அலங்கரித்துக் கொள்ளுவாரைப் போலே இவற்றை-அலங்கரித்து கொண்டன -இவற்றினுடைய தன்மை இருக்கும்படி என் என்று வித்தராகிறார் காணும் –
  ————————————————————————-

அமுது விருந்து

அவதாரிகை
எம்பெருமானாருக்கு பெரிய பெருமாள் திருவடிகளில் உண்டான ஈடுபாடு முன் பாசுரத்தில்-கூறப்பட்டது .
இங்கு தமக்கு உத்தேச்யமான எம்பெருமானார் திருவடிகளின் ஸ்வபாவத்தை
அனுசந்தித்து ஈடுபாடுகிறார் .
பத உரை
பரவு -பரவுகின்ற
தொல்-பழையதான
சீர்-குணங்களை உடையராய்
எதி-துறவிகளுக்கு
தலை -தலைவராய்
நாதன் -எனக்கு நாதனாய் இருக்கும்
இராமானுசன் தன் -எம்பெருமானார் உடைய
இணை -ஒன்றுக்கு ஓன்று ஒப்புடைய
அடி-திருவடிகள்
உத்தமர் -உயர்ந்தவர்களுடைய
சிந்தை-மனத்துள்
உதிப்பன –தோன்றுவன
ஒன்றலர் -சேராதவருடைய
நெஞ்சம் -உள்ளம்
கொதித்திட -கொதிக்கும்படி
மாறி -ஒன்றுக்கு ஓன்று மாறி அடி இட்டு
நடப்பன -நடந்து செல்வன
கொள்ளை-மிக
வன் -வலிமையான
குற்றம் எல்லாம் -தோஷங்கள் அனைத்தும்
பதித்த -பதித்து வைக்கப்பட்ட
என் -எனது
புன் கவி -அற்பக் கவி யாகிற
பா இனம் -பா இனத்தை
பூண்டன -ஏற்றன –
வியாக்யானம் –
உதிப்பன உத்தமர் சிந்தையுள்
உத்தமர் -மாதவான்க்ரி த்வயோபாய மாதவான்க்ரி பிரயோஜன ச உக்த மோதிகாரீ ஸ்யாத்-என்று
ஸ்ரீய பதியினுடைய இரு திருவடிகளையும் உபாயமாக கொண்டவனும் -அத்திருவடிகளையும் உபேயமாகக் கொண்டவனும் –
உத்தம அதிகாரி யாவான் -எனப்படும் உத்தம அதிகாரிகள் உடைய  திரு உள்ளத்தில் தோன்றி பிரகாசிக்கும் தன்மை உடையன
எம்பெருமானார் இணை யடிகள் என்றபடி –
பிள்ளை லோகம் ஜீயர் –
வேத பாஹ்யர் -அதமர் -பரம வைதிகர் ஆகிய சாமான்ய நிஷ்டர் மத்த்யமர் –
பரம வைதிகராய் விசேஷ சாஸ்திர நிஷ்டராய் முமுஷூ வானவர் உத்தமர் என்று கூறுகிறார் –
உதிப்பன என்றமையால் -திருவடிகளுக்கு சூர்ய சாம்யம் தோற்றுகிறது –
இள நாயிறு இரண்டு போலே -திருவாய் மொழி – 8-5 5- -என்று திருப்பாதத்தை -உதிக்கும் சூர்யன்
போன்றதாக திருவாய் மலர்ந்து இருப்பது இங்கு அனுசந்திகத் தக்கது –
ஒன்றலர் —மாறி நடப்பன –
ஒன்றலர் –சேராதவர்கள் -அவர்கள் ஆகிறார் குத்ருஷ்டிகளும் பாஹ்யர்களும்
பிரதி பஷ நிரசனத்துக்கு எம்பெருமானார் செய்த திருவேம்கட யாத்திரை முதலியன இங்கு நினைக்கத் தக்கன -நடந்த நடையிலே யஞமூர்த்தி அஞ்சித் தோற்றமை உலகம் அறிந்ததே –
கொள்ளை –பாவினம் பூண்டன
பாவினம் -பாக்களின் கூட்டம்
கலித்துறை யாகையாலே பாவினம் என்கிறார் ஆகலுமாம்-
உதிப்பன -என்று போக்யதையும்
நடப்பன  -என்று ரஷகத்வமும்
பூண்டன -என்று குணம் உடைமையும் தோற்றுகின்றன
பரவு –இணை யடியே
வேறு ஒப்பற்ற ஒன்றுக்கு ஓன்று இணையம் படியான சேர்த்தி அழகு கண்டு –இணையடி -என்கிறார் .
நின்ற மா  மருது இற்று வீழ நடந்தநின்மலன் நேமியான் என்றும்
வானவர் கை தொழும் இணைத் தாமரை யடி எம்பிரான் -பெரிய திருமொழி -1 8-3 – – என்று-திருமங்கை மன்னன் அசுரா வேசத்தாலே ஒன்றலராய் நின்ற மருது இற்று வீழ -நடந்த கண்ணன் அடிகளை-இணைத் தாமரை அடியாகக் கூறினார் .அவ்வடிகளும் ஒப்பாகா எம்பெருமானார் இணை அடிகளுக்கு .
அங்கு இருவர் இற்று வீழ்ந்தனர் –
இங்கே பலர் அஞ்சிக் கொதிக்கின்றனர் –
தாமரையும் ஒப்பாகாமையால் –இணை தாமரை அடி -என்று இலர் –
பாவு தொல் சீர் கண்ணா என்பரம் சுடரே -திருவாய் மொழி – 3-2 7- -என்றார் நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தை –
இவர் சரம பர்வதத்தை -பாவு தொல் சீர் எதித் தலை நாதன் -என்கிறார்.
எம்பெருமானார் சீர் சத்ரு கோஷ்டியிலும் பிரசித்தமாய் இருத்தல் பற்றி -பாவு தொல் சீர் -எனப்பட்டது.
உலகம் அளந்த -தென்னரங்கன் -பொன்னடியிலே ஈடுபட்டார் எம்பெருமானார் .
இவ்வமுதனார் அவ்வெம்பெருமானார் இணை யடிகளில் ஈடுபட்டுப் பேசுகிறார் .

அச்சுதனுடைய இரண்டு திருவடித் தாமரைகள் ஆகிற பொன்னில் -வ்யா மோஹம் உடைய-எம்பெருமானார் திருவடிகளை ஆழ்வான் ஆஸ்ரயித்தால் போன்று இருக்கிறது இது

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: