அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-48-நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
நாற்பத்து எட்டாம் பாட்டு –அவதாரிகை
எனக்காரும் நிகரில்லை -என்று இவர் சொன்னவாறே எம்பெருமானார் இவரைப் பார்த்து -நீர் நம்மை விட்டு வேறு ஒரு விஷயத்தை அவலம்பித்தல் -நாம் உம்மை விட்டு வேறு ஒரு விஷயத்தை-விரும்புதல்-செய்யில் இந்த ஹர்ஷம் -உமக்கு நிலை நிற்க மாட்டாதே என்ன –என்னுடைய நைச்யத்துக்கு-தேவரீர் கிருபையும் -அந்த கிருபைக்கு என்னுடைய நைச்யமும் ஒழிய புகல் இல்லையாய் இருக்க –
வ்யர்த்தமே நாம் இனி அகலுகைக்கு காரணம் என் -என்கிறார் –
நிகரின்றி நின்ற வென் நீசதைக்கு நின்னருளின் கண் அன்றிப்
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அக்தே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச இனி நாம் பழுதே
யகலும் பொருள் என் பயன் இருவோருக்கும் ஆன பின்னே – -48 —
இந்த பூமியில் ஆத்ம குணராஹித்யத்தாலும்-அநாத்மகுண  பாஹூள்யத்தாலும் வந்த
தண்மையை வுடையவர்களை தனித் தனியே ஆராய்ந்து பார்த்தல் என்னைப் போலே
ஆத்ம குண லவ லேச ரஹீதராய் -அநாத்ம குண  பரி பூரணராய் இருப்பார் ஒருவரும் இல்லாமையாலே-உபமான ரஹீதமாய்க் கொண்டு நின்ற என்னுடைய நீசதைக்கு –
அந்நீசதை தானே பச்சையாக அங்கீகரிக்கும் தேவரீருடைய கிருபையின் இடத்தில் ஒழிய-ஒதுங்க நிழல் ஒன்றும் இல்லை –
அந்த கிருபை தனக்கும் -எத்தனையேனும் தண்ணியரே அநுத்தம பாத்ரம் ஆகையாலே
என்னுடைய நீசத்தை ஒழிய புகல் இல்லை –
அச்ப்ருஷ்ட தோஷ கந்தரானவர்கள் பேச்சுக்கு விஷயமான பிரபாவத்தை வுடையவரே-எனக்கு-ஸ்வரூப லாபமாய் -தேவரீருக்கு குண லாபமாய் -இப்படி நமக்கு இருவருக்கும் பிரயோசனமான பின்பு-இது அறிந்து இருக்கிற நாம் மேலுள்ள காலம் வ்யர்த்தமே அகலுகைக்கு காரணம் என் –அகலுகைக்கு ஹேது இல்லை என்று கருத்து –
இருவர் இடமும் இருவர் தேட்டங்களும் இருக்க இழப்பேனோ
உன் அருள் -ராமன் சீதா அருள்களில் வாசி -அநாதி காலம் ராஷஷிகளாக திரிந்து உள்ளோம் -சம்சார ஆர்ணவத்தில் மக்நராக மூழ்கி உள்ளோம் -புன்மை இலோர் -நித்யர்களை சொல்லிற்று –நாம் பழுதே-யகலும் பொருள் என் -அமுதனார் தம்மையும் நம்மையும் -சேர்த்து அருளிச் செய்கிறார் – தம்மையும் உடையவரையும் என்றுமாம்
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த உரை

அவதாரிகை -இராமானுசன் இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே நிறைந்து
ஒப்பற விருந்தான் –எனக்காரும் நிகர் இல்லை -என்று இவர் சொன்னவாறே எம்பெருமானார் இவரைப் பார்த்து -நீர் -நம்மை விட்டு காலாந்தரத்தில் வேறு ஒரு விஷயத்தை விரும்புதல் -நாம் உம்மை விட்டு வேறு ஒரு
விஷயத்தை ஆதரித்தல் செய்யில் இந்த ஹர்ஷம் நிலை நிற்க மாட்டாதேஎன்ன -என்னுடைய நைசயத்துக்கு-தேவரீருடைய கிருபையும் -அந்த கிருபைக்கு என்னுடைய நைச்யமேஒழிய -புகல் இல்லையாய் இருக்க -வ்யர்த்தமே நாம் அந்ய பரர் ஆகைக்கு காரணம் என்கிறார் –
வியாக்யானம்நிகரின்றி நின்ற என் நீசதைக்கு -நீசனேன் நிறை ஒன்றுமிலேன் -அஹமச்ம்யபராதா நாமாலய -அத்யாபி  வஞ்சநபர -இத்யாதிப்படியே ஆத்ம குண ராகித்யத்தாலும் -அநாத்தம குண பாஹூள்யத்தாலும்
வந்த தண்மையை உடையவர்களை -இந்த விபூதியிலே தனித் தனியே ஆராய்ந்து பார்த்தாலும் -என்னைப்-போலே ஆத்ம குண லவ லேச ரஹீதனாய் -அநாத்மா குண பரி பூர்ணனாய் -இருப்பார் ஒருவர் ஆகிலும்-கிடையாமையாலே – கோன்யோச்தி  சத்ரசொமயா -என்கிறபடியே உபமான ரஹீதனாய் கொண்டு இருக்கிற

என்னுடைய நீச பாவத்துக்கு –உன் அருளின் கண் அன்றி -வயச நேஷு மனுஷ்யாணாம் ப்ர்சம் பவதி துக்கித -என்கிறபடியே பர துக்க துக்கித்வ நிராசி கீர்ஷத்வ-அசஹிஷ்ணுத்வாதி  லஷணமான தேவரீருடைய கிர்பா குணம் ஒழிய -புகல் ஒன்றும் இல்லை –வேறு ஒரு புகல் இடம் இல்லை -அந்த நீசதை தானே பச்சையாக அங்கீகரிக்கும் தேவரீருடைய கிருபையினிடத்தில் ஒழிய ஒதுங்க நிழல் ஒன்றும் இல்லை என்றபடி –கண்-இடம் -அபராத கணைர பூர்ண குஷி-கமலா காந்த தயே கதம் பவித்ரீ -என்னுமா போலே -இவரும் வயிறு நிரம்புகைக்காக எப்போதும் பூர்ண தோஷத்தை தேடித் திரியுமவர் ஆகையாலும் -சர்வேஸ்வரன் ஆர்த்த அபராதியான காகாசுரனை சிஷித்ததுவும் -யதிவா ராவணஸ் ஸ்வயம் -என்று சொன்னதுவும் -பாபிஷ்டரை ரஷித்தால் – யசஸ்ஸூ  அதிசயித்து இருக்கும்-என்றதைப் பற்றவாகையாலும் -சேஷ பூதனுடைய தோஷங்கள் எல்லாம் -சேஷியினுடைய கிருபா குணத்துக்கு-லஷ்யங்களாய்  இறே இருப்பது -ஆக தம்முடைய நீசதைக்கு -எம்பெருமானாருடைய கிருபா குணமொழிய- வேறு ஒரு புகல் இடம் இல்லை என்று அருளிச் செய்யத் தட்டில்லை இறே –அருட்கும் அக்தே புகல் -தேவரீருடைய கிருபா-குணத்துக்கு அடியேனுடைய துஷ்ட பாவதையே லஷ்யமாய் இருக்கும் -தோஷ ரஹீதர் ஆனவர்கள் பக்கலிலே-கிருபா குணத்துக்கு பிரயோஜனம் இல்லாமையாலே -எத்தனை யேனும் தண்ணியரே -அதுக்கு பாத்ரம் ஆகையாலும் -எனக்கு சதர்சரான பாபிஷ்டர் ஒருவர் ஆகிலும் இல்லாமையாலே -என்னுடைய நைச்யமே அதற்கு புகலிடம் -என்றது -த்வயாபி -இப்படி நமக்கு கைப்பட்ட தேவரீருக்கும் -இதாநீம் -இத்தனை நாளைக்கு இப்போது -பகவன் -சர்வஞ்ஞானாய் இருந்தாயே -நான் சொல்ல வேணுமோ -தயாயா -தேவரீர் உடைய கிருபைக்கு -அநுத்தமம் பாத்ரமிதம் -என்கிறபடியே பூர்ண பாத்ரமான நானும் -லப்த்தம் -தேவரீருக்கு பெறாப் பேறாக லபித்தேன் -அநந்த பவார்ண வாந்த -பிரசித்த ஆர்ணவத்துக்கு பரிகணம் உண்டு -என்னுடைய சம்சாரமாகிற ஆர்ணவத்துக்கு அந்தம் இல்லை -காலமும் அநாதியாய் -ஜன்மங்களும் பலவாய் -கர்மங்களும் விசித்ரங்களாய் -பஹூவாய் இருக்கையாலே -இந்த அரணவம் அனந்தமாய் இருக்கும் -இப்படிப்பட்ட பவார்ணவத்தின் உடைய அகாத ஜலத்திலே -நிமஜ்ஜதா -அழுந்திக் கிடப்பவன் -கேவலம் ஸ்வ இச்சையவாஹம் ப்ரேதேஷகம் சித்கதாசன -என்கிறபடி அனநதமான-காலத்துக்கு -மே-அடியேனுக்கு -கூலமிவ -கரை போலே -லப்தோஹி-பிரசித்த ஆர்ணவத்திலே  விழுந்து அழுந்தின-சேதனன் அப்போதே முடிய -முஹூர்த்த  மாத்ரத்திலே அந்த பிணத்தை கொண்டு வந்து கரையிலே தள்ளி விடும்-என்று சர்வ ஜக பிரசித்தம் -இந்த சம்சாரத்திலே அழுந்தி -அசந்நேவ-என்கிறபடியே -இருந்த என்னை சிரகாலத்துக்கு-சத்தை உண்டாக்கி அந்த அர்ணவத்துக்கு பாரமாய் கைபட்டாய் -கண்டு கொண்டு என்னைக் காரி மாறப் பிரான் -பண்டை வல் வினை பாற்றி அருளினான் – என்று இருவருக்கும் பிரயோஜனமாய் இருந்தது என்று -அபியுக்தரும்-அருளிச் செய்தார் இறே -அந்தோ அடியேன் உனபாதம் அகலகில்லேன் இறையுமே – என்றும் -புகல் ஓன்று இல்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்றும் அருளிச் செய்தார் இறே -நம் ஆழ்வாரும் -பரம காருணிகோ ந பவத்பர -பரம சோச்யதமோ நஹிமத்பர -என்னக் கடவது இறே —புன்மை -தோஷங்களுக்கு ஆகாரமான சம்சாரம் -அநாதி அவித்யா கர்ம வாசனா ருசிபிரகிருதி சம்பந்த ரூபமான சம்சாரம் -என்றபடி –இலோர் -சம்சாரிகமான பந்தத்தை பூண் கட்டிக் கொண்டு  நிற்கையாலே அவர்களை இங்கே சொல்ல ஒண்ணாது இறே -முக்தர் சிறிது காலம் சம்சாரத்தை பூண் கட்டிக் கொண்டு திரிந்து -பின்னை -கரை கண்டோர் -என்னும்படி அதை சவாசநமாக பொகட்டு -பகவத் குண அனுபவத்திலே -ஆழம் கால் பட்டு-இருந்தார்களே யாகிலும் நிருப பதமாக சொல்லுகையாலே அவர்களையும் இங்கே சொல்லக் கூடாது இறே அஸ்பர்ஷ்ட சம்சார கந்த ரஹீதரான நித்ய சூரிகளை ஆய்த்து -இலோர் -என்று அருளிச் செய்தது -பகரும் பெருமை -ஏக தேசாவஸ்தாநத்தாலும் –ஏக விஷய அனுபவத்தாலும் -அடியே பிடித்து  இவருடைய-பிரபாவத்தை -அடைவே அறியுமவர்கள் -நித்ய சூரிகள் ஆகையாலே -அவர்களாலே ஸ்தோத்ரம் பண்ணப்பட்ட -பிரபாவத்தை உடையரான –இராமானுச -எம்பெருமானாரே –பயன் இருவோமுக்குமானபின்னே -தேவரீரும் அடியேனும்-ஆகிற இருவருக்கும் ஸ்வரூப லாபமும் குண லாபமும் ஆகிற பரம பிரயோஜனம் சித்தித்த பின்பு -இப்படி இருவருக்கும் பிரயோஜமாய் இருக்க –இனி நாம் பழுதே அகலும் பொருள் என் -இது அறிந்து இருக்கிற-நாம் மேல் உள்ள காலம் எல்லாம் வ்யர்த்தமே அகலுக்கைக்கு காரணம் என் -நாம் என்றது தம்மையும் எம்பெருமானாரையும் –அன்றிக்கே -நாம் என்று பஹூ வசன பிரயோகம் பண்ணுகையாலே -எம்பெருமானாரும் -இவருடைய சம்பந்த-சம்பந்திகளுமான எல்லோரும் என்று பொருள் ஆகவுமாம் -நாம் பழுதே அகலும் பொருள் என் -பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய் -என்னைத் தீ மனம் கெடுத்தாய் -மருவி தொழும் மனமே தந்தாய் -அறியாதன அறிவித்த அத்தா நீ-செய்தன அடியேன் அறியேன் -என்கிறபடியே நாம் க்ர்த்ஜ்ஜராய் போம் அது ஒழிய நமக்கு-அகலுகை என்று ஒரு பிரயோஜனம் உண்டோ பாவத்தால் நான் பிறப்பேன் ஏலும் -இனி எந்தை-எதிராசன் தான் பிறக்கும் என்னை உய்ப்பதா -என்கிறபடியே -கைவிடுகை அவருக்கு அவத்யமாக-தலைக்கட்ட கடவதாகையாலும் -பெறாப் பேறாக அடியோங்களை தேவரீர் விஷயீ கரித்துக்- கொள்ளுகையாலும்  -நிழலும் அடி தாறும் போலே அடியோங்களை அனந்யார்ஹராம் படி-அங்கீகரிக்கை ஒழிய தேவரீருக்கு அகலுகை என்ற ஒரு பிரயோஜனம் உண்டோ என்றது ஆய்த்து –

 ————————————————————————–
அமுது விருந்து
அவதாரிகை
எனக்காரும் நிகரில்லை என்று களித்து கூறும் அமுதனாரை –
நமிருவரில் எவரேனும் ஒருவர் மற்று ஒருவரை விட்டு விளகிடின் உமது இக்களிப்பு
நிலை நிற்க மாட்டாதே -என்று எம்பெருமானார் வினவ –
என்பால் உள்ள நீசனாம் தன்மைக்குத் தேவரீர் அருள் அன்றி வேறு புகல் இல்லை –
அவ்வருளுக்கும் இந்நீசத் தண்மை யன்றி வேறு புகல் இல்லை-
ஆக இனி நாம் வீணாக என் அகலப் போகிறோம் -என்கிறார் –
பத உரை –
நிகர் -ஒப்பு
இன்றி நின்ற -இல்லாமல் நின்ற
என் நீசதைக்கு -எனது நீசனாம் தன்மைக்கு
நின் அருளின் கண் அன்றி-தேவரீர் உடைய கிருபையின் திறத்தில் ஒழிய
புகல்-கதி -ஒதுக்கும் இடம் –
ஒன்றும் இல்லை -ஒன்றும் கிடையாது
அருட்கும் -அந்த கிருபைக்கும்
அக்தே புகல்-அந்த நீசனாம் தன்மையே புகலாகும்
புன்மையிலோர் -குற்றமற்றவர்
பகரும் -பேசும்
பெருமை-பெருமையை உடைய
இராமானுச -எம்பெருமானாரே
இருவோமுக்கும் -நம் இரண்டு பேருக்கும்
பயன் ஆன பின்பு -பிரயோஜனம் ஏற்பட்ட பிறகு
நாம்-பயன் கண்ட நாம்
இனி -இனி மேல்
பழுதே -வீணாக
அகலும் பொருள் என் -அகலுவதற்குக் காரணம் என்ன –
வியாக்யானம்
நிகரின்றி நின்ற என் நீசதைக்கு
நீசத்தை-தாழ்வு
அது நற்குணம் இல்லாமையாலும் -தீய குணம் உள்ளமையாலும் உண்டாவது .
அன்பு அருள் முதலிய நற்குணம் வாய்ந்தோர் உயர்ந்தோர் .-அவை இல்லாதவர் தாழ்ந்தோர் .
சினம் வசை கூறல் முதலிய தீய குணம் உடையோர் மிகத் தாழ்ந்தோர் –
இவர்களில் எனக்கு ஈடாவார் எவரும் இலர் .
குணம் இல்லாமையிலும் -குற்றம் உடைமையிலும் ஒப்புயர்வற்றவனாய் நன் இருத்தேன்
நிகரின்றி நின்றது என் நீசதை என்கிறார் .-நீசனேன் நிறை ஒன்றும் இலேன் 3-3 4- – என்றார் நம் ஆழ்வார்
நீசதை நீங்கி சிலர் நல்லவர் ஆதலும் உண்டு -என் நீசதை அங்கனம் நீங்காது நிலை நிற்பது
தோன்ற -நின்ற என் நீசதை-என்றார் .
நின்னருளின் கண் அன்றிப் புகல் ஒன்றும் இல்லை  –
நிகரற்ற நீசனான நான் உயர தேவரீர் திரு வருளைத் தவிர வேறு புகல் இல்லை-என்றபடி.
எனவே தேவரீரை விட்டு அடியேன் அகல வலி இல்லாமையினால்
அருளுக்கு அடியேனை இலக்காக்க வேணும் என்பது கருத்து .
அருட்கும் அக்தே புகல் –
தேவரீருடைய அருளுக்கு முழு இலக்காய் அமையும் தகுதி அடியேன் ஒருவனுக்கே
உள்ளது என்று கருத்து -குற்றம் அற்றவரை  ஏற்பதில் அருளுக்கு சிறப்பு இல்லை .
குற்றம் நிறைந்தவரை ஏற்பதிலே தான் அருளுக்கு சீர்மை .
இராவணனே யாயினும் ஏற்பேன் என்ற இராம பிரான் அருள் சீறியது .
குற்றம் புரிந்த வண்ணம் உள்ள அரக்கியரை அளித்த பிராட்டியின் திருவருள் அதனிலும் சீரியது –
தவம் நீச சசவத் சம்ருத -நேசனான நீ  முயல் போன்றவன் -என்று பிராட்டி கூறிய படி
நீசனாகிய இராவணன் முதலியோர் போல் அல்லாமல்-நிகரில்லா நீசனாகிய
என்னை ஏற்று அளித்ததனாலே தேவரீர் அருள் மிக சீரியது ஆகும் .
நான் நீசதையில் நிகர் அற்றவன்
நின் அருள் ஏனையோர் அருள்களினும்-நின் பால் உள்ள ஏனைய குணங்களினும் -சீர்மையில்நிகர் அற்றது .
நிகர் அற்றமையில் -என் நீசதைக்கும் தேவரீர் அருளுக்கும் ஒற்றுமை உண்டு .
ஆகவே அவை நிலைத்து ஏன் இணைந்து இருக்க மாட்டா -என்கிறார் .
இங்கு வேதாந்த தேசிகன்
மயி திஷ்ட்ட திதுஷ்க்ருதாம் பிரதானே மித தோஷா நிதரான் விசின்வதீத்வம்
அபராத கணைர பூர்ண குஷி கமலா காந்த தயே கதம் பவித்ரீ –என்று
பாபம் செய்தவர்களுக்குள் எண்ணற்ற பாபங்கள் செய்ததனா பிரதானனாகிய நன் இருக்க –
என்னைப் புறக்கணித்து -அளவுக்கு உட்பட்ட பாபம் செய்தவர்களை தேடிக் கொண்டு இருக்கும் நீ
பாபத் திரள்களினால் வயிறு நிரம்பாமல் கமலியின் காதலனுடைய அருள் அணங்கே –
எப்படி யாகப் போகிறாயோ -என்றும் –
அஹம ச்ம்யபராத சக்ரவர்த்தீ கருணே த்வம்ச குனேஷூ சார்வ பௌ மீ
விதுஷீ ச்த்திதிமீத்ருசீம் ச்வயம்மாம் வருஷ சைலேச்வர பாத சாத்குரு-என்று
நான் பாபம் செய்தவர்களுள் சக்கரவர்த்தியாய் மேம்பட்டவன்
.கருணையே -நீயும் குணங்களுள் தலை சிறந்தவள் .
இத்தகைய நம் நிலையை உணர்ந்து தானாகவே என்னை திரு வேம்கடமுடையான்
திருவடிக்கு உரியனாக்குவாயாக -என்று தயா சதகத்திலே -29 30- – இக்கருத்தினையே தழுவி அருளி இருப்பது
நினைவுறத் தக்கது
புன்மையிலோர் பகரும் பெருமை இராமானுச
புன்மை உடையோர் சோறு கூறைகளை விரும்பி பேசிடின் அதில் உண்மை இராது –
அப்பேச்சினால் பெசப்படுவோர்க்கு பெருமை இல்லை –
அவாவினை அறத்த்துரந்தமையின் -புன்மை இலாதார் பேசிடினோஅதனில் உண்மை இல்லாது இராது –
பயன் கருதி இல்லாததை ஏற்றி அவர்கள் பேச மாட்டார்கள் அன்றோ –
எம்பெருமானார் பெருமை உண்மையானது என்பது கருத்து .
புன்மையிலோர் என்பது -என்றும் சிறிது அளவும் புன்மை இல்லாதவர்கள் ஆகிய
நித்ய சூரிகளைச் சொல்லுகிறது என்று பிள்ளை லோகம் ஜீயர் உரைப்பர் .அப்பொழுது
தாமரை கண்ணனை விண்ணோர் பரவும் தலை மகனை -என்றபடி விண்ணோர் தலை மகனது-அருள் நிறைந்த தாமரைக் கண் அழகாய் பாடுவதை விட்டு -எம்பெருமானார் அருள் பெருமையையே-பகருகின்றனர் -என்றது ஆயிற்று .
இனி நாம் பழுதே அகலும் பொருள் ஏன்
வீணாக காரணம் இன்றி நமதுய் பயனைக் கெடுத்து அகல மாட்டோம் -என்றபடி
பயனிருவோக்கும் ஆன பின்னே –
தேவரீருக்கு பயன் குண லாபம்
அடியேனுக்கு பயன் ஸ்வரூப லாபம்
கண்டு கொண்டு என்னைக் காரி மாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி யருளினன் -என்று இருவருக்கும் பயன் உண்டானதை
மதுர கவிகளும் அருளிச் செய்தார் .
நிமஜ்ஜ்தோ நந்த பவார்ணவாந்த சிராய மே கூல மிவாசி லப்த
த்வயாபி லப்தம் பகவன் நிதானி மனுத்தமம் பாத்ரமிதம் தாயாய -என்று
பகவானே அளவில்லாத சம்சாரக் கடலுக்குள் மூழ்கிக் கொண்டு இருக்கிற எனக்கு
நெடும் காலம் கழித்து கரை போலக் கிடைத்து உள்ளீர் -உம்மாலும் கருணைக்கு முகச்

சிறந்த கொள்கலமாக நான் கிடைக்கப் பெற்று உள்ளேன் -ததஹம் த்வத்ருதே ந நாதவான் மத்ருதே த்வம் தய நீய வாந்தச-விதி நிர்மித மேத்தா தான்யம் பகவன் பாலய மாஸம ஜீஹப -என்று-பகவானே உம்மைத் தவிர நான் வேறு நாதன் அற்றவனாய் இருக்கிறேன்-நீரும் என்னைத்தவிர இரக்கப்படத் தகுந்தவன் இல்லாதவனாய் இருக்கிறீர்-தற்செயலாக அமைந்த இந்த தொடர்பினை காத்து  அருள வேண்டும்விட்டு விடாதீர் -என்று ஆள வந்தாரும் காட்டி யருளினார்

ஸ்ரீ மணவாள மா முனிகளும் இப்பாசுரத்தின் கருத்தை அடி ஒற்றி யதிராஜ விம்சதியில் -வாசா மகோசர மகா குண தேசகாக்ர்யா கூராதி நாத கதிதாகில நைச்ய பாத்ரம்
ஏஷோ ஹமேவ ந புனர் ஜகதீச்ருசஸ் தத் ராமாநுஜார்ய கருணை வது மத் கதிச்தே -என்று-மொழியைக் கடக்கும் பெரும்புகளை உடையரான ஆசார்யர்களில் சிறந்த கூரத் ஆழ்வான்-கூறிய எல்லா நீசதைக்கும் உறைவிடமாய் இருப்பவன் இந்த நான் ஒருவனே
உலகத்தில் இத்தகைய ஒருவனைக் காண முடியாது .ஆகையால் எம்பெருமானரே
தேவரீர் உடைய வீறு பெற்ற கருணையே எனக்கு கதி -என்று

அருளிச் செய்து இருப்பது இங்கு அனுசந்திக்கதக்கதாகும்

——————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: