அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-47-இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
நாற்பத்து ஏழாம் பாட்டு –அவதாரிகை
மதியிலியேன் தேறும்படி என் மனம் புகுந்தான் -என்றார் கீழ் .
லோகத்தில் உள்ளவர்களுக்கு தத்தவ ஸ்திதியை யருளிச் செய்து –
பகவத் சமாச்ரயண ருசியை ஜநிப்பிக்குமவர் தம்மளவில் பண்ணின விசேஷ விஷயீகாரத்தை-யனுசந்தித்து –இப்படி விஷயீகரிக்க பெற்ற எனக்கு சத்ருசர் இல்லை என்கிறார் இதில் –
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்
தரம் செப்பும் அண்ணல் இராமானுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என் தன் சிந்தை உள்ளே
நிறைந்து ஒப்பற விருந்தான் எனக்காரும் நிகர் இல்லையே – 47- –
வியாக்யானம்
சர்வ சமாஸ்ரயணீ யனாக -வேதாந்த பிரசித்தனான -சர்வ ஸ்மாத்பரன் –
அநந்த சாயித்வாதிகளாலே -ஈச்வரத்வம் தோற்ற -வந்து கோயிலிலே –
கண்வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் என்று –
அதர்ம அனுசாரியான இந்த லோகத்திலே சாஷாத் தர்மத்தை அருளிச் செய்யுமவராய்
ஆஸ்ரித இழவு பேறுகள் தம்மதாம்  படியான   சம்பந்தத்தை வுடையராய் இருக்கிற எம்பெருமானார் -என்னுடைய அனுபவத்தாலும் -ப்ராயசித்தத்தாலும் போக்க வரியகர்ம சமுஹத்தை நிரசித்து-அல்லு நன்பகலும் இடை  வீடின்றி -திரு வாய் மொழி -1 10-8 – -என்கிறபடியே-திவாராத்ர விபாகமற இடைவிடாதே என்னுடைய ஹ்ருதயத்தின் உள்ளே பூரணராய் கொண்டு-இவ்விருப்புக்கு சத்ருசம் இல்லை என்னும்படி எழுந்து அருளி இருந்தார் -ஈதரு ச விஷயீகார பாத்ரமான எனக்கு ஒருவரும் சத்ருசர் இல்லை
திறம்-சமூஹம்
நிகர் -ஒப்பு–
சாத்விக அஹங்காரம் -எம்பார் -வார்த்தை/ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் அருளிய இராமானுசன் -வளர்த்த தாய் -திருவரங்கன் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே
இறைஞ்சப்படும் ஷீராப்தி -பரன்-ஸ்ரீ வைகுண்ட நாதன் — ஈசன் அந்தர்யாமி /அரங்கன் அர்ச்சா -/அறம் செப்பும் வைபவம் -கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -ஐந்தையும் சொன்ன வாறு –
————————————————————————–
பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை-
அவதாரிகை -.கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்முடைய திரு உள்ளத்திலே பிரகாசித்து உஜ்ஜ்வலமாக-அவரை வணங்கினோம் என்று சொல்லி –இதிலே -லோகத்தார் எல்லாரையும் குறித்து -சர்வ சமாஸ்ரயநீயனான
சர்வேஸ்வரன் கோயிலிலே சந்நிகிதனாய் இருந்தான் -அவனை ஆஸ்ரியும் கோள் என்று பரம தர்மத்தை-உபதேசித்த உபகாரகன் -எம்பெருமானார் -என்னுடைய ஆர்த்த அபராதங்களை நசிப்பித்தி திவாராத்ரி விபாகம் அற
என்னுடைய ஹ்ர்த்யத்திலே சுப்ரதிஷ்டராய் -இவ் இருப்புக்கு சதர்சம் ஒன்றும் இல்லை என்னும்படி எழுந்தருளி இருந்தார் –இப்படி ஆனபின்புதமக்கு சர்தர்சர் ஒருவரும்  இல்லை என்கிறார்
வியாக்யானம்இறைஞ்சப்படும் -எழுவார் விடைகொள்வார் ஈன் துழா யானை  வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் –
என்றும் -முழு எழ உலகுக்கும் நாதன் -என்றும் – சொல்லுகிறபடி சர்வ சமாஸ்ரயநீயனாய்க்  கொண்டு பிரசித்தனாய்
பரன் -பராபரானாம் -என்கிறபடி சர்வ ஸ்மாத் பரன் -ஈசன் -சர்வேஸ்வரன் –அரங்கன் என்று –அநந்த சாயித்வாதிகளாலே-கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் என்று -அன்றிக்கே –இறைஞ்சப்படும் -சர்வ சமாஸ்ரயநீயன் –
ஈசன் -சர்வ ஸ்மாத் பரன் -ஈசன் -ஸ்வாபாவிக ரநவதிகாதிசயே சிதிர்த்வம் நாராயண த்வயி நமர்ஷ்யதி -என்கிறபடியே

சர்வ ஸ்வாமியானவன் -இந்தம ஹிமாவான் யார் என்னில் –அரங்கன் –அப்படிப்பட்டவன் -எட்டா நிலத்திலே இராதே -இன்றுசந்நிகிதனாய் -சுலபனாய் -கோயிலிலே எழுந்து அருளி இருக்கிற திருவரங்க செல்வனார் -என்று -இப்படிப் பட்டவர் என்று -இவ் உலகத்து -அதர்ம அநுசாரியான இந்த லோகத்திலே -அதர்ம பூதமான -இருள் -தரும்  மா ஞாலத்தில் உள்ள ஜனங்களுக்கு –அறம் செப்பும் -சாஷாத் தர்மத்தை  அருளிச் செய்யும் -அன்றிக்கே -அப்படிப் பட்டவனை ஆஸ்ரயிக்க -சம்சார நிச்தரனஉபாயத்தை உபதேசித்து அருளும் -அன்றிக்கே –இறைஞ்சப்படும் -தேவ ஜாதிக்கு ஒரு உபத்ரவம் வந்தால் -அவர்கள் எல்லாரும் திரண்டு -பிரமாவோடு கூடிப் போய் -கூப்பிடும் கூப்பீடு கேட்கைக்காக -வியூக ஸ்தானமான திருப்பாற் கடலிலேகண் வளர்ந்து -அவர்களாலே சேவிக்கப்படுமவன் -இத்தால் வியூகத்தை சொன்னபடி –பரன் -அயர்வறும் அமரர்கள் அதிபதியான பரன் –ஈசன் -அந்தப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனானாம் -என்கிறபடியே சர்வரையும் நியமிக்கைக்காக சர்வ அந்தர்யாமியாய் இருக்குமவன் -இத்தால்-அந்தர்யாமித்வத்தை சொன்னபடிஅரங்கன் -அர்ச்சையஸ் சர்வ  சஹிஷ்ணுரர்ச்சாக பராதீநாகிலாத்மா ஸ்த்திதி -என்னும்படியான அர்ச்சாவதாரங்களில் வைத்துக் கொண்டு பிரதானமாய் இருக்குமவன் –இத்தால்அர்ச்சாவதாரத்தை சொன்னபடி -என்று இவ் உலகத்து அறம் செப்பும் -அறம் –ராமோ விக்ரஹவான் தர்ம -யேசவேத விதொவிப்ரயேசாத்யாத்மா விதோஜன-தேவதந்தி மகாத்மானாம் க்ர்ஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறபடியே அவதாரங்களிலேபிரதானமான விபவம் -என்று    -என்கிறத்தை இத்தோடு அன்வயித்த படி –அஞ்சு  வகைப்  பட்டு இருக்கும் நாராயணனை -பிராப்யமும் பிராபகமும் என்று அருளிச் செய்யும் என்னவுமாம் –அண்ணல் -சஹி வித்யாதஸ்தம் ஜனயதி தத் ஸ்ரேஷ்டம்-ஜன்ம -என்றும்      குருர் மாதா குரு பிதா -என்றும் சொல்லுகிறபடி -இவ் உபதேச முகேன சேதனருக்கு சர்வ வித பந்துவாய்-அவர்களுடைய இழவு பேறுகள் தம்மதம்படியான சம்பந்தத்தின் உறைப்பை உடைத்தாய் இருக்கிற -இராமானுசன் –எம்பருமானார் –என் அருவினையின் திறம் செற்று – அஹ மச்ம்ய பராதா நாமாலய -என்றும்அமர்யாதா ஷூத்ரஸ் சலமதி -என்றும் -பாபானாம் பிரதமோச்ம்ய்ஹம்-என்றும் -ந நந்திதம் கர்மததச்திலோகே-சஹச்ரசோ யந்ந மயாவ்யதாதி -என்றும் -அஹ மச்ம்ய பாராத சக்ரவர்த்தி -என்றும் -யாவச் சயச் சதுரிதம்-சகலஸ் யஜந்தோ தாவத் சதத் தததிகம் சமமாஸ்தி சத்யம் -என்றும் சொல்லுகிறபடியே -என்னால் தீரக்கழியச் செய்யப்பட்டதாய் -அனுபவத்தாலும் பிராயசித்தத்தாலும் -போக்க அரிதான பாப சமூகத்தை -வானோ மறிகடலோ -என்னும்படி நசிப்பித்து –திறம் -சமூஹம் -இரவும் பகலும் விடாது -அல்லும் பகலும் இடைவீடு இன்றி -என்கிறபடியே -திவா ராத்ர விபாகம் அற -இடைவிடாதே –என் தன் சிந்தை உள்ளே -பண்டு எல்லாம் ஆசாபரனாய்  போந்து இப்போது இவ் விஷயீ காரத்தை பெற்ற என்னுடைய ஹிருதயத்தின் உள்ளே –நிறைந்து -ஸ்பர்ஷடா ஸ்பர்ஷடி மாத்ரம் அன்றிக்கே -ஸ்வரூபத்தோடும் குணங்களோடும் விக்ரகத்தோடும் -விபூதியோடும்  கூட -அதிலே பூரணமாய் புகுந்து -அணுவான ஆத்மாவின் உள்ளே -விபுவான ஈஸ்வரன் -ஸ்வரூப ரூப குணங்களோடு -அசந்குசிதமாக வியாபித்து நிற்குமா போலே காணும் -எம்பெருமானாரும் அதி சூஷ்மமான இவருடைய திரு உள்ளத்திலே அசந்குசிதமாக வியாபித்து நிற்கிறபடி -ஒப்பற  விருந்தான் – இவ் வாத்சல்யத்துக்கு சதர்சம் இல்லாதபடி இருந்தார் -அதிலே தானே சுப்ப்ரதிஷ்டராய்-எழுந்து அருளி இருந்தார் என்றபடி –ஒப்பு -சாதர்சம் எனக்கு -இப்படி எம்பெருமானார் உடைய விஷயீ காரத்தைப் பெற்ற எனக்கு –ஆரும் நிகர் இல்லையே -எத்தனை தரம் உடையார் உண்டானாலும் -சதர்சர் ஆக மாட்டார்கள் -அவித்யாந்தர்க்க தாச்சர்வே-தேஹி சம்சார கோசர -என்று சொல்லப்படுபவர்கள் சதர்சர் ஆக மாட்டார்கள் –நிகர் -ஒப்பு-த்ர்ணீ க்ரத விரிம்சாதி நிரந்குச விபூதய -ராமானுஜ பதாம் போஜ சமாச்ரயண சாலிந -என்னக் கடவது இறே —

————————————————————————–
அமுது விருந்து
அவதாரிகை

மதியிலியேன் தேறும்படி என் மனம் புகுந்தான் என்று தம்மை விஷயீகரித்த படியைக்கீழ் அருளிச் செய்தார் -உலகத்தாருக்கு தத்வ உபதேசம்  செய்து பகவத் சமாஸ்ரயண-ருசியை ஜநிப்பிக்குமவர் தம்மளவிலே விசேஷமாக விஷயீகரித்ததை அனுசந்தித்து-இப்படிப் பட்ட எனக்கு நிகர் யாரும் இல்லை -என்கிறார் –

பத உரை –

இறைஞ்சப்படும் -எல்லாராலும் ஆஸ்ரயிக்கப்படும்
பரன்-பரம் பொருள்
ஈசன் -ஈஸ்வரனாக காட்சி தரும்
அரங்கன் என்று -திருவரங்கத்திலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் என்று
இவ்வுலகத்து -இந்த லோகத்திலே
அறம் -தர்மத்தை
செப்பும் -அருளிச் செய்யும்
அண்ணல் -ஸ்வாமியான
இராமானுசன் -எம்பெருமானார்
என் அரு வினையின் -என்னுடைய அருமையான கர்மத்தின் உடைய
திறம்-சமூஹத்தை
செற்று -தொலைத்து
இரவும் பகலும் -இராப்பகலாக
விடாது -இடைவிடாது
என் தன் -என்னுடைய
சிந்தை உள்ளே -ஹ்ருதயத்திற்கு  உள்ளே
நிறைந்து -பூரணமாய்
ஒப்புற-நிகர் இல்லாதபடி
இருந்தான் -எழுந்து அருளி யிருந்தார்
எனக்கு -இத்தகைய எனக்கு
ஆரும் -எவரும்
நிகர் இல்லை-ஒப்பு இல்லை
வியாக்யானம் –
இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று
வேதாந்தங்களிலேஎல்லாராலும் ஆஸ்ரயிக்கப் படுவதாய்ச் சொல்லப்படும் பரம் பொருள் .ஈச்வரத்வம் தோற்ற பாம்பணைமேல் கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள் -என்று-எம்பெருமானார் உபதேசிப்பாராம் -இன்னாரால் இறைஞ்சப்படும் என விதந்து கூறாமையாலே -எல்லாராலும் இறைச்சப்படும் எனக் கொள்க -எல்லோராலும் ஆஸ்ரயிக்கப் படுபவனாக-கூறப்படும் பரம் பொருள் -கண்ணாலே காணலாம் படி -தன் ஈச்வரத்வம் தோற்றத் தானே வந்து-கண் வளர்ந்து அருளுகிறது -என்கிறார் .ஸ்ரீ ரங்க நாதனிடம் சர்வேஸ்வரத்வதைப் பல-படியாலும் சாஷாத் கரிக்கலாம் –
அணைவது அரவணை  மேல் பூம்பாவை யாகம் புணர்வது -திருவாய்மொழி- 2- 8- 1- என்றபடி-அநந்த சாயித்வமும் -பிராட்டி அகம் புணர்தலும் ஈச்வரத்வத்தை காட்டுகின்றன இவ்வுலகத்து அறம் செப்பும் அண்ணல் இராமானுசன்
அதர்ம வழியே போகும் இவ் வுலகின் கொடுமையைக் காட்ட –இவ் உலகம் -என்கிறார் .
அதர்ம அனுசாரியான லோகத்திலே தர்ம உபதேசம் பண்ணி இருக்கிறார் .
ராமோ விக்ரஹவான் தர்ம -என்றும் -க்ருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்கிறபடியே
சாஷாத் தர்மத்தை உபதேசித்து அருளினார் .
பகவத் ஆஸ்ரயண ரூபமான உபாய தர்மத்தை என்றார் ஆகவுமாம் –
இவ் அரிய விஷயத்தை உபதேசிப்பதற்கு காரணம் அண்ணலாய் இருத்தல் என்கிறார் .
அண்ணல் -ஸ்வாமி
ஆஸ்ரிதர் இழவு பேறுகள் தம்மதாம் படியான உறவு முறை உடையவர் -என்றபடி .
இராமானுசன் -விபரீதனான இராவணனுக்கு உட்பட ஹிதம் நாடின இராமனை அனுசரித்தவர்-என்பது கருத்து .
என் அரு வினையின் திறம் செற்று –
என் வினைஎன்கிறார் உலகத்தார் வினையின் வேறுபாடு தோற்ற –
வினைகள் பலகால் செய்யப்பட்டு செய்யாதது ஒன்றும் இன்றிப் பலவாய் இருத்தலின் வினையின் திறம் -என்றார் –
ந நிந்திதம்  கர்ம ததஸ்தி லோகே சஹா ஸ்ரசோ யந் ந மயா வ்யதாயி-என்று
உலகத்தில் என்னால் பல காலும் செய்யப்படாத பாபங்கள் ஒன்றும் இல்லை –
நானே நானாவித நரகம் புகும் பாவம் செய்தேன் -பெரிய திரு மொழி – 1-9 2- – -என்றது போலே-ப்ராயசித்ததாலோ -அனுபவத்தாலோ -அழியாத வினை என்பார் அருவினை என்றார் –
இரவும் பகலும் விடாது
அல்லு நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் நம்பி நம்பியே -திருவாய்மொழி 1-10 8- – -என்கிற படியே இடைவிடாதபடி எழுந்து அருளி இருந்தார் .என் சிந்தை உள்ளே நிறைந்து ஒப்பற இருந்தான்
ஆசாபாசங்களுக்கு உறைவிடமான என் சிந்தைக்கு உள்ளே இருந்தார் –
அருவருப்பின்றி மிக்க வாத்சல்யத்துடன் இதயத்தில் -ஈசானன் -அந்தர்யாமி -எழுந்து போன்று எந்தன் சிந்தை உள்ளே இருந்தார் -அருவருப்பு இன்றி ஆதரத்துடன் இருப்பது மாத்ரம் அன்று -குறை நீங்கி -நிறைவு பெற்றவராய் இருந்தார் .
க்ருத்ய பேற்றினை கைப்பற்றின வீறுடைமை தோற்ற ஒப்பற இருந்தார் –
அமுதனாரை வசப்படுத்துவது தவிர எம்பெருமானார் திரு வவதாரதிற்குப் பேறு வேறில்லை என்பது கருத்து .
நிறைந்து இருந்தான்
பகவத் விஷயத்துக்கும் இடம் இன்றித் தானே சிந்தையுள் நிறைந்து இருந்தான் -என்னலுமாம்.விஷயாந்தரங்களுக்கு அவகாசம் இல்லாதபடி
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் –திருவாய் மொழி – 10-8 1- – என்று
நம் ஆழ்வார் கூறியது போலே அமுதனாரும் கூறினார் .
நம் ஆழ்வார் நெஞ்சில் விஷயாந்தரங்களுக்கு இடம் இல்லை .
அமுதனார் நெஞ்சில் பகவத் விஷயத்துக்கும் இடம் இல்லை –
எனக்காரும் நிகர் இல்லை –
எனக்கு-எம்பெருமானார் திருவருளுக்கு இங்கனம் இலக்கான எனக்கு
அவர் ஒப்பற இருந்தார்
நான் ஆரும் நிகரில்லாத நிலையை எய்தினேன்
இருந்தவர் அருளுவாரில் ஒப்பற்றவர்
இருக்கும் சிந்தை வாய்ந்த நான் அருள் பெருவாரில் நிகர் அற்றவன்–
————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தல் –

தாழ்ந்தவன் மனத்தில் இருந்து நீங்காமல் இருந்தான்- இருவருக்கும் நிகர் இல்லை.இல்லை எனக்கு எதிர் இல்லை இல்லை எனக்கு நிகர் இல்லையே எம்பார் அருளியது போல..மதி இலியேன் தேறும் படி புகுந்தான் என்றார் முன்னம்-தத்வ ஸ்திதியை  அருளி செய்து பகவத் சமாச்ரயண ருசியை ஜனித்தவர்-தம் அளவில் விசேஷ விஷயீ  காரத்தை அனுசந்தித்து -தமக்கு சருசர் இல்லை என்கிறார்-

வந்தார் போல வருவான் வாராதார் போல வருவான் அவன்-கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்-சேவை சாதிக்க வில்லை/ விரக தாபத்தால் தூக்கம் அங்கு இல்லை-கூடி இருக்கும்  அனுபவத்தால் இங்கும் தூக்கம் இல்லை/ஸ்வாமி இரவும்  பகலும் விடாது என் சிந்தை உள்ளே மன்னி இருக்கிறார்–அரு வினை-பலிஷ்டம் -திறத்தை செற்றார் ..

அண்ணல் ஸ்வாமி-சொத்தை காத்தார்..தர்மம் காட்டி கொடுத்தார்/எது தர்மம்- இறைஞ்சப்படும்  படும்  பரன் ஈசன் அரங்கன்..சர்வ சமாஸ்ரயநீயன்–அனைவாராலும் இறைஞ்ச படுகிறான்-அனாலோசித  விசேஷ அசேஷ லோக சரண்யன்-அன்பன் தன்னை அடைந்தவர்கள் எல்லாம் அன்பன்-விசேஷணம் இன்றி  அனைவருக்கும் அன்பன் அவன் ஒருவனே ..வேதாந்த பிரசித்தனான சர்வச்மாத் பரன்–உயர்ந்தவன்-ஈசன் -நியந்தா- -லஷணம்-ஆதி சேஷ பர்யங்கம் கருட வாகனத்வம் மோஷ பிரதாணன்-அரங்கன்-கோயிலிலே கண் வளர்ந்து அருளுகிற பெரிய பெருமாள்விஷ்ணு போதம்-இக் கரை சேர்ப்பான்..எல்லாராலும் இறைஞ்ச படுபவன்-பிரமா தொடக்கமாக பிப்பிலி ஈறாக-சர்வ லோக சரண்யாய ராகவாய  மகாத்மாயா-விபீஷணன் பிராட்டி பிரித்த ராவணின் தம்பி சொல்வதை நம்பலாமே-சரணம் சுக்ருது -சரணாகதனும் அவன்-சர்வ வியாபி என்பதால் சரண்யனும் அவனே -சரணா கதியும் அவனே .. சரண்யா சர்வ லோகானாம் பிதா மாதாச மாதவன்–எழுவார் விடை கொள்வார் ஈன் துழாய் யானை  வழுவா வகை-மூவருக்கும் கதி த்ரயத்துக்கும் மூலத்வம்/நாரணன் முழு எழ உலகுக்கும் நாதன்.–பிரசித்தனாய்- இறைஞ்ச படும்- வேதம் கொண்டாட படுபவன்-பரன்-பரர்களுக்கும் பரன்- மேம்பட்டவன்-சொன்னதை கேட்கும் நியமன சாமர்தியமுமுண்டு- ஈசன்-நியமிக்கிறவர்கள் பரன் ஆக இருக்க வேண்டும் என்று இல்லை-மண்டோதரி-சதுச்லோகி-பரமாத்மா -ஸ்ரீ வட்ச வட்சா-நித்யர்கள் கூட  -நித்ய ஸ்ரீ /அந்த புரம் வேணுமே என்பதால் முன் அதை திரு மறு மார்பன்- தோஷம் இல்லை என்பதால் நித்ய ஸ்ரீ . சர்வேஸ்வரன்-பரன்- அயர்வறும் அமரர்கள் அதிபதி/ஈசன்-அந்தர்யாமி-சாஸ்தா சாசனம் பண்ண புகுந்தவன்/வியாபித்து தருகிறான்…அரங்கன்-அர்ச்சை பிரதானம் -அர்ச்சக பராதீனன்தனக்கு அபிமதனமான த்ரவ்யத்தை கொண்டு-தேச கால அதிகாரி நியமனம் இன்றி/அக்ஜனாய் அசக்தனாய் ஸ்வ ச்வாபம் மாறாடி கொண்டு –சீல குணம்-இறைஞ்ச படும் -கூப்பிடு   தேசம் -ஷீரப்தி /அறம்- ராமன் விக்ரமோ தர்மம் கிருஷ்ணன் தர்மம் சனாதனம்/.கோபிமார்கள் தேவர்கள் யோகிகள் அனைவரையும் சேர்க்க-அவதாரங்களும் -என்று என்பதை இத்தோடு அந்வயித்த படி..ஐந்து வகை பட்ட நாராயணன் பிராப்ய  பிராபகம்-சர்வ என்பதால் என்று .என்று இவ் உலகத்து செப்பும் அண்ணல் இராமனுசன்-அண்ணல்-சம்பந்தத்தின் உறைப்பை உடைய-இவ் உலகத்து அதர்ம அனுசாரியான இந்த லோகத்திலே-சாஷாத் தர்மத்தை அருளி செய்யுமவராய் ஆஸ்ரித இழவு பேறுகள் தம்மதாம்  படியான சம்பந்தத்தை உடையவர் -ஸ்வாமி-அண்ணல்-பர சுக  துக்கம் தம்சுக  துக்கம் என்று இருக்கும்-ராமன் போல ராமானுஜரும் /ஜகத் ஆச்சார்யர்  தொடர்பே அண்ணல்-அனுபவத்தாலும் பிராய சித்ததாலும் தீர்க்க முடியாத வினைகள் /போக்கி -அல்லு நன் பகலும் இடை வீடு இன்று திரு மால்  புகுந்தது போல -ஆழ்வார்-பகலும் இரவும் சொல்வது சரி- அமுதனார் தூங்கும் பொழுது புகுந்தாராம்/பகலில்  புகுந்தால் தடுப்பார் என்பதால் -விலக்காமை இரவில் இருக்குமே/நிறைந்து -முழுவதுமாக சொரூபம்  ரூபம்-அமுதனார்/உகந்த திருமேனி  குணம் விபவம் சேஷடிதம் புகுந்ததே சேஷ்டிதம்-பூரணராய் கொண்டு/இருந்தான்- எழுந்து அருளி இருந்தார் ..திறம்-சமூகம் /நிகர் -ஒப்பு-நிகர்-அமுதனாருக்கும்  ஸ்வாமிக்கும் இருப்புக்கும் நிகர் இல்லை..தாய் தந்தைகள் சோக ஜன்மம் கொடுக்க–ஆச்சார்யர் சுக ஜன்மம் கொடுப்பவர்–அன்னையாய் அத்தனாய் என்னை ஆளும் தன்மையாய்-சகி வித்யா=பிறப்பிக்கிறான் ஞான ஜன்மம் -இழவு  பேறு தம்மதாகும் படி-காவல் சோர்வு-வீர சுந்தர பிரம ராயனுக்கு – கூரத் ஆழ்வான் தர்ம பத்னி  ஆண்டாள் வருந்தியது போல..ஹிதம் தேடினான் ராவணனுக்கே  ராமன்-வழி தோன்றல் ஸ்வாமி-பல கால் பல வினை -ஒரு தப்பே பல தடவை இது போல பல தவறுகளும்..பல தடவை-என் -அருவினை–அசந்கேயமான தவறுகள்-அகம் அஸ்மி அபராத ஆலய /அமர்யாதய  சூத்திர துர்மானி சல மதி-நின்னவா நில்லா நெஞ்சு க்ருத்க்ஜணன் துர் மானி வஞ்சன பரன் பாபிஷ்டன்/நானே நானாவிதம் புகும் பாபம் செய்தேன் /அபராத சக்ரவர்த்தி-செற்று-சொல்லி முடிக்கும் முன் -வானோ மரி கடலோ -கண்டிலம்/அநிஷ்ட நிவ்ருத்தி/ இரவும் பகலும் விடாது -அல்லும் பகலும் இடை வீடு இன்றி மன்னி.எந்தை சிந்தை- பண்டு  எல்லாம் ஆசா பாசங்களுக்கு கட்டு பட்டு இருந்தேன்-நிறைந்து –பூரணமாய் -அணுவான ஆத்மாவுக்குள்  விபுவான ஈஸ்வரன்-கரந்து எங்கும் பரந்துளன்  நீர் தோறும் பரந்து உளன் போல/குற்றம் சொல்லி அவனை தள்ள  முடியாது அங்கு தோஷ தரிசனத்துக்கு வாய்ப்பு உண்டு-ஒப்பற இருந்தான்- குற்றங்களை குணமாக கொண்டு இருந்தான்-அருவருப்பு இன்றி-ஆனந்தமாய் //வீறு கொண்டு  //மூன்றிலும் நிகர் இல்லை -சுபிரதிஷ்டராய்-.அவதாரம் பிரயோஜனம் இவருள் புகுந்ததால் தான் –உச்சி உளானே போல –/ராமானுஜர் திருவடி பெற்ற பின் விபூதி எல்லாம் புல் போல நினைப்பார்கள் -தேசிகன்

——————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: