அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-46-கூறும் சமயங்கள் ஆறும் குலைய-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

நாற்பத்தாறாம்  பாட்டு –அவதாரிகை
எம்பெருமானார் செய்து அருளின உபகாரத்தை யனுசந்தித்து அதுக்குத் தோற்றுத்
திருவடிகளிலே வணங்குகிறார்
கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மறை யுணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானைத் திசை யனைத்தும்
ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே -46- –
விளம்பும் ஆறு சமயமும் -திருவாய்மொழி -4 10-9 – -என்கிறபடியே
 சிலவற்றை சொல்லா நின்றால் -தாங்களும் சில தர்க்கங்களைச் சொல்லா நிற்கும் அத்தனை போக்கி-பிரமாண அனுகூல தர்க்கம் அல்லாமையாலே கேவலம் உக்தி சாரமேயாய் இருக்கிற-பாஹ்ய சமயங்கள் ஆறும் சிதிலமாய்ப் போம்படியாக -அவ்வவ சமயங்கள் தன்னரசாக-நடத்தின இத்தேசத்திலே -ஆழ்வார் அருளிச் செய்த திராவிட வேதமான திரு வாய் மொழியை-சாஷாத் கரித்து அருளினவராய் -பிரமாண கதிகளாலே தர்சித்து விஸ்வசிக்கைக்கு உறுப்பான-ஞானமில்லாத நான் கீழில் பாட்டில் சொன்னபடியே ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தாமே என்று
விஸ்வசித்து இருக்கும்படி என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து அருளினவராய்
இப்படிகளாலே சர்வ திக்குகளிலும் பிரசித்தமான கல்யாண குணங்களை உடையரான
எம்பெருமானரை இவ் உபகாரத்துக்கு தோற்று வணங்கினோம்–
ஊமைக்கும் திருவடி பலத்தால் -மதி இன்மையால் -கடாக்ஷ பலத்தால் திருத்தி அருளுவார் -நம் ஆச்சார்யர்கள் உடையவர் திருவடிகளில் சேர்த்து நமக்கும் அந்த பலம் கிட்ட பண்ணும் உபகாரகர்கள் –
————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –

அவதாரிகை -கீழ்ப் பாட்டில் சொல்லுகிறபடியே சமஸ்த கல்யாண குணாத் மகரானவர் -தம்மை-இவர்க்கு முற்றூட்டாக கொடுக்கையாலே -அந்த உபகாரத்தை அனுசந்தித்து -விஸ்ரப்பத்தராய் கொண்டு -துச்தர்க்கங்களாய் -கேவலம் உக்தி மாத்திர சாரங்களாய்  இருக்கிற -பாஹ்ய சமயங்கள் ஆறும் -குத்ருஷ்டி சமயங்கள் ஆறும் –
அடியோடு நசிக்கும்படி பூ லோகத்தில் நம் ஆழ்வார் அருளிச் செய்த த்ரமிட வேதத்தை சார்த்தமாக அறிந்தவராய் -சகல திக் வ்யாபையான பிரதையை உடையவராய் -அறிவு கேடனான நான் விச்வசிக்கும்படி -என்னுடைய-மனசிலே ஸ்தாவர பிரதிஷ்டையாக புகுந்து அருளின -எம்பெருமானாரை -ஆஸ்ரயிக்கிறோம் -என்கிறார் –
வியாக்யானம்கூறும் சமயங்கள் ஆறும் குலைய -தேஹமே ஆத்மா வென்றும் -தேக பரிமாணமே ஆத்மா வென்றும் -ஷாணிக விஞ்ஞானமே ஆத்மா வென்றும் -ஞானம் ஒன்றுமே உள்ளது என்றும் -சூன்யமே தத்துவம் என்றும் –
பிரம்மம் நிர்க்குணம் என்றும் -நிராகாரம் என்றும் -அத்வதீயம் என்றும் -அவிபூதிகம் என்றும் -நிஸ் ஸ்ரீ கம் என்றும் -விக்ரக குணங்கள் எல்லாம் ஸ்வரூப விகாரம் என்றும் -பிரம்ம வ்யதிரிக்தம் எல்லாம் மித்யை என்றும் -ருத்ரன் சர்வ ஸ்மாத் பரன்  என்றும் -இப்படி பிரமாண தர்க்க அனுக்ர்ஹீ தங்கள்  அன்றிக்கே -ஸ்வ ஸ்வா ஞான
விஜ்ரம்பிதங்களான பிரலாபங்களை அநேக பிரகாரமாக கத்திக் கொண்டு போருகிற பாஹ்ய குத்ருஷ்டி சமயங்களும்-சிதிலமாய் நசித்துப் போம் படி –குவலயத்தே -கலவ் கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா    -க்வசித் க்வசித் மகா பாகா த்ராமிடே
ஷூச பூரிச -தாம்ர பரணீ நதீயத்ர  க்ர்தமால பயச்விநீ -காவேரி ச மகா பாகோ  ப்ரதீசீச மகா நதீ-என்றும்-ஜாயதே -என்றும் -கொண்டாடும்படி -மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய -திரு அவதார பிரதேசமான பூ லோகத்திலே -கலி யுகத்திலே -என்றபடி –மாறன் பணித்த -உயர்வற உயர்நலம் உடையவன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி -உளன் சுடர் மிகு சுருதியுள் -நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் -அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல்-மங்கை உறை மார்பா -அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே -என்று இப்படி
நம் ஆழ்வாராலே  அருளிச் செய்யப்பட்ட  -மிக்க இறை நிலையும் மெய்யா உயிர் நிலையும் தக்க நெறியும்-தடையாகி தொக்கியிலும் ஊழ்  வினையும் வாழ் வினையும் வோதும் குருகையர் கோன் யாழின் இசை வேதத்தியல் -என்கிறபடியே ஆழ்வாராலே   அருளிச் செய்யப்பட்டதாய்-அர்த்த பஞ்சகத்தையும் அடைவே பிரதிபாதிக்கிற
திருவாய் மொழி யாகிற திராவிட வேதத்தை சார்த்தமாக தெளிந்து கொண்டு இருக்கை யாகிற-பரி பூர்ண ஞானத்தை உடையராய் –  திசை யனைத்தும்  ஏறும்குணனை –திக்குற்ற கீர்த்தி ராமானுசன் -இத்யாதிகளிலும் -பாஷண்ட
 த்ருமஷண்ட தாவ தஹந -இத்யாதிகளிலும் -காதா தாதா கதானாம் -இத்யாதிகளிலும்
சொல்லுகிறபடியே -திகந்தரங்களிலே -வ்யாப்ததையான கீர்த்தியை உடையராய் –மதியிலேன்-தேறும்படி என் மனம் புகுந்தானை -பிரமாண கதிகளாலே தர்சித்து -விஸ்வசிக்கைக்கு உடலான-ஸ்வரூப யாதாம்ய ஞான சூன்யனாய் -சுஷ்க ஹ்ர்தயனாய் -அவிவேகியாய் போந்த அடியேன் –
கீழ் சொன்ன பிரபாவத்தை தெளிந்து விஸ்வசிக்கும்படி அடியேனுடைய மனசிலே பிரவேசித்து -எனக்கு வகுத்த சேஷியான -இராமானுசனை -எம்பெருமானாரை –இறைஞ்சினோமே-அவ் உபகாரத்துக்கு-தோற்று வணங்கினோம் -அவருடைய குணா க்ர்ஷ்டராய்க் கொண்டு காணும் இவர் அவர் திருவடிகளிலே வணங்குவது-
————————————————————————–
அமுது விருந்து
அவதாரிகை
எம்பெருமானார் செய்து அருளிய உபகாரத்திற்கு தோற்று-அவர் திருவடிகளில் வணங்குகிறார்
பத உரை
கூறும் -சொல்லளவில் பேசிக் கொண்டு இருக்கும்
சமயங்கள் ஆறும் -ஆறு புற சமயங்களும்
குலைய -குலைந்து போம் படியாக
குவலயத்தே -இம் மண்ணகத்திலே
மாறன்-நம் ஆழ்வார்
பணித்த -அருளிச் செய்த
மறை -தமிழ் வேதமாகிய திரு வாய் மொழியை
உணர்ந்தோனை-கண்டு அறிந்தவரும்
மதியிலியேன் -அறிவிலியான நான்
தேறும்படி -தெளிவுறும்படி
என் மனம் -என்னுடைய ஹ்ருதயத்தில்
புகுந்தானை -எழுந்து அருளினவரும்
திசை யனைத்தும் -எல்லாத் திக்குகளிலும்
ஏறும் -பரவுகிற
குணனை -குணம் உடைய வருமான
இராமானுசனை -எம்பெருமானாரை
இறைஞ்சினம் -வணங்கினோம்
வியாக்யானம் –
கூறும் சமயங்கள் ஆறும் குலைய –
விளம்புமாறு சமயமும் -என்ற நம் ஆழ்வார் வாக்கை அடி ஒற்றி –
கூறும் சமயங்கள் ஆறும் -என்கிறார் ..வெறும் சொல் அளவில் சமயங்களே அன்றி
பிரமாணங்களுக்கும்   யுக்திகளுக்கும் அனுகூலம் இல்லாதவை என்பது கருத்து .
ஆறு சமயங்கள் ஆவன -பௌத்தம் -சார்வாகம் ,நையாயிகம் -ஜைனம் -சாந்க்க்யம்-யோகம் -என்பன .

குவலயத்தே-அவ்வாறு சமயங்களும் மேலோங்கி யிருக்கிற இந்நாட்டிலே -என்றபடி –மாறன் பணித்த மறை வுணர்ந்தோனை –வட மொழி மறை போலே தான் தோன்றியாய் இராமல்-ஆபிஜாத்யத்தாலே உண்டான-மேம்பாடு தோற்ற –மாறன் பணித்த மறை-என்றார் .மாறன் பணித்ததாயினும் தன்னிடம் அன்பு இல்லாதார்க்கு தன் பொருளை மறைத்திடுதல்-பற்றி –மறை -என்கிறார் -ரகுவர சரிதம் முநி ப்ரநீதம்-என்பது போலே மறை மாறன் பணித்தது –என்றார் .-எம்பெருமானார் அன்புடையவர் ஆதலின் மறையை உணர்ந்தார் -இவர் உணரவே -சமயங்கள் ஆறும் பயந்து -குலைந்து -அழிந்தன என்பார் -குலைய உணர்ந்தோனை –என்கிறார் -குவலயத்தே என்பதைக் கூறும் சமயங்கள் என்பதோடு கூட்டினால் மெய்யறிவுடையதேவ லோகத்தே கூற அருகதை அற்ற சமயம் என்றது ஆயிற்றுஇனி –குவலயத்தே பணித்த -எனக்கூட்டினால் இருள் தரும் மா ஞாலத்திலே வெளிச் சிறப்பு தோற்ற அருளிச் செய்த -என்றபடி –இனி குவலயத்தே உணர்ந்தோனை-எனக் கூட்டினால் இந்த லோகத்திலே உணர்ந்தவர்இவர் ஒருவரே என அருமைப்பாடு தோன்றுகிறது  -மதியிலியேன் தேறும்படி என் மனம் புகுந்தானை-பிரமாணங்களின் போக்கைக் கொண்டு ஆராய்ந்து உண்மையான நம்பிக்கையிலே-நிற்கைக்கு உறுப்பான ஞானம் இல்லாதவன் என்று –மதியிலியேன் -என்கிறார் .மதி -பக்திக்கும் உப லஷணம் –தேறும்படி –ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் தாமே என்று நம்பும்படி என்றபடி -அவர் புகுந்த மனம் ஆதலின் -அதனோடு சம்பந்தம் தோற்ற -என் மனம் –என்கிறார் .இவருக்கு ப்ராப்யம் எம்பெருமானார் திருவடிகள் .-அவருக்கு பிராப்யம் இவர் மனம் போலே காணும் .-திசை யனைத்தும் ஏறும் குணனை இராமானுசனை இறைஞ்சினமே-இங்கனம் சமயங்கள் ஆறும் குலைய மாறன் உணர்ந்தமை -தேறும்படி என் மனம்-புகுந்தமை என்னும் குணங்கள் திக்குகள் அனைத்திலும் பரவின -அத்தகைய நற்குணம்-வாய்ந்த எம்பெருமானாரை இவ் உபகாரத்துக்கு தோற்று வணங்கினோம் -என்றபடி .

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது

கூறும் -பேசி கொண்டே திரியும்.. பேச நின்ற சிவனுக்கும் போல..ஆறு  சமயங்களும் குலைய..படியாக மாறன் பணிந்த மறையை உணர்ந்தவர்-மறையை உணர்ந்து -பக்தி வளர்க்க  பாடினார்-அதை வைத்து  ஆராய்ந்து பொதிந்த ரத்னன்களை எடுத்து ஸ்வாமி ஆறு சமயங்கள் குலையும் படி பண்ணி அருளினார்/ஸ்வாமி உணர தான் -கற்று -உணர்ந்த பின்பு தான் தர்க்கம் வேண்டாம் என்று ஓடினவாம்/பாபம் தொலைக்க நானும் வேண்டாம் நீயும் வேண்டாம்- தானே ஓடி போகும் போல/மதி இலியேன்–இவை ஒன்றும் தெரியாதவன்-..திசை அனைத்தும் பிரபை உசந்தே போகும்-ஏறும் குணம்..ஐதிக நிர்வாகம்-பிள்ளை எங்கு போனாய்- திரு பாற்  கடலுக்கு சென்று வந்தோம்-ஸ்ரீ ரெங்கத்தில் ஸ்வாமி கோலோச்சுக்குகிராராம் ..திருவடி வணங்கி போனேன் பேச்சு வந்ததாம் –வார்தாமாலை

பரத்வ பெருமை பேசி –ஆழ்வாரும் -உயர்வற வுயர் நலம் சொல்லி –மதி நலம் அருளியதை நடுவில் சொல்லி-பின்பு அயர்வறும்  அதிபதி சொன்ன க்ரமம்–இவ்வளவு உயர்வானவன் தமக்கு கொடுத்தானே -பெற்ற பேற்றை  சொல்லி -இதை கொடுத்தவன் அயர்வறும் அதிபதி/திசை அனைத்தும் கூறும் ஆறு. சமயங்கள் குலைத்தான்-நடுவில் மனசில் புகுந்தவனை சொன்னார் இங்கும்/.. எல்லாம் சொன்னதை விட -இவை –அனைத்தும் சுவாமிக்கு ச்வாபம் தானே பிரபாவம் இல்லை-பிறந்ததே இதற்க்கு தான் ..என் மனசில் புகுந்ததே பிரபாவம் என்கிறார்-எட்டு திக்கிலும் இந்த நீசன் உள்ளத்தில் புகுந்து தேறும் படி பிராப்ய பிராபகங்கள் அருளிய குணங்களை பேசுகிறார்களாம் /ஸ்வாமி செய்து அருளின உபகாரத்தை அனுசந்தித்து -தோற்று திருவடிகளில் வணங்குகிறார்../பிரமாண அனுகூல தர்க்கம் இல்லாமல் உத்தி ரசமாய்   இருக்கிற பாஹ்ய சமயங்கள்/திரிபுரா தேவி ஸ்வாமி கூறும் இடத்தில் வணங்குவோம்..ஈசான மூலையைக் காட்டினாலும் -அங்கே ஆச்சர்யர்களே புறம்பாய் பேசுவார்கள்

விளம்பும் ஆறு  சமயமும்  அவை ஆகியும்  மற்றும் தன் பால் அளந்து காண்டற்கு அரியனாகிய ஆதிப்  பிரான் அமரும்–ஆறு  சமயங்களையும் படைத்த ஆதி  பிரான்-வளம் கொள் படை சூழ்ந்த திரு குருகூர்-திரு குருகூர் அதனை உளம் கொள் -உம்மை உய்ய கொண்டு போக-.திவ்ய தேச ப்ராவண்யமே உய்ய ஒரே வழி என்றவாறு -.விளம்பும்-பேசியே நிற்க வைத்து இருக்கிறார்கள்.-ராமானுஜர் பிரமாணம் அறிந்து கூறுவதால் -இவர்களோ பிரமாணம் மூலம் இல்லாமல் அன்றோ கூறுகிறார்கள் -.ஆகாச தாமரை மணக்கிறது என்பார்-நீர் தாமரை ஹேது வஸ்து இன்றி பேசுவது போல-விதண்டா வாதம் -அனைவரும் சிதிலமாய் போகும் படி-குவலயத்தே  இந்த சமயங்கள் -தன் அரசாக நடத்தின இத் தேசத்திலே–தேகமே ஆத்மா –சாருவாக மதம் ஜாபாலி சாருவாதம் பேசினார் ராமனை திரும்பி வர-கர்ம இல்லை /தேக பரிமாணமே ஆத்மா-பவ்தன்-ஞானம் அநித்யம்-முதல்/வைபாஷிகர்  ஜகம்-அணு மானம்/யோகாசாரர் -அறிபவன் அறிய படுபவன் இல்லை ஞானமே உண்டு/மாத்யமிகர்- எல்லாம் சூன்யம் சர்வ சூன்ய  வாதம்-நான்கு  வித பவ்தன்/-சாக்ய-புத்தம்  உலுக்ய -சருவாதம் //ஷபணம்-ஜைனர்-பின்னாபினமே சத்யம் அசய்த்யமாய் இருக்கும்-இருக்கிறது–இல்லை– இருக்கும் என்றும் இல்லை என்றும் 7 வாதங்கள் ..ஊர்த்த கதியில் போவதே மோஷம்-போவான் போகின்றாரை/நையாயிக குப்தர்/அஷய பாதர்-பரமாணு ஜகத் காரணம்/உபாதான காரணம் நிமித்த காரணம் குயவன் பெருமாள்/பாசுபதன் வேற ஆகம சித்த ஈஸ்வரன் தான் ஜகத் காரணம்/பசுபதஈ சாரூப்யம் மோஷம் என்பர்/கபிலர்-தேவ போதை சம்வாதம் -பிரகிருதி புருஷ விவேக ஞானத்தால் மோஷம்/பதஞ்சலி- யோக சூத்திரம்- சாணக்யன் குருடன் நொண்டி சேர்ந்து போக பிரக்ருதியும் ஜீவாத்மாவும் சேர்ந்து போவார்கள்/இவை பாக்ய சமயங்கள் ஆறு

குதிருஷ்டிகள் முக்கியம் மாயாவாதி -பிரசன்ன பவ்தன்  வேஷம் போட்டு கொண்டு வந்த பவ்தன்/வேத வாக்யங்கள் தம் கொள்கைக்கு தக்கவாறு இழுத்து  பேசுவார்/பிரமம் நிர் குணம் நிர் ஆகாரம் நிர் விபூதி என்பர்..ஸ்ரீ தேவி அவர – பிரமம் -சித்தத்தில் பிடிக்க சொல்கிறது படி கட்டு போல வைத்து கொண்டு –தாழ்ந்த பிரமம்-என்பர்..பொய்  மித்யை/தர்க்கம் பிரமாணம் இன்றி மனம் போன படி பேசி உளறி கத்தி கொண்டு-கூறும் சமயங்கள்-சப்த்கம் வந்தாலே ஞானம் குறைத்து தப்பு -கொசித் கொசித் மகா பாதாக திராவிட .. நாராயண பராய -ஸ்ரீ பாகவதம் ஆவிர்பாவம் சூசிதம்/ஜாயதே என்று கொண்டாடும் படி-பூ லோகத்தில் கலி யுகத்தில்/மாறன் பணித்த மறை-உயர்ந்த குடி தமிழ் மறை -.வேதம்- தான் தோன்றி..ரகுவர சரிதம் முனி பிரணீதம்-போல மாறன் பணித்த மறை/உயர்வற உயர் நலம்-நிர் குண பிரமாண  வாதம் நிரசனம்/பச்சை மா மலை மிடற்றை பிடிக்க முதல் அடியில் அருளினார் ஆழ்வார் குணம் விபூதி திரு மேனி உண்டு என்று -ஆழ்வான்/அயர்வறும் அமரர்கள் அதிபதி-விபூதிதுயர் அடி -விக்ரகம் /தேவரோடு உலகம் படைத்தான் -வேர் முதலாய் வித்தாய்- மூன்று காரணமும் இவன் தானே/உளன் சுடர் மிகு சுருதியுள்-அனுமானிக்க முடியாது–நான் முகன் தன்னோடு   தேவர் உலகோடு உயிர் படைத்தான்-ஜகத் காரணம்/நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் படைத்தான்/வீடில் சீர் புகழ் ஆதி பிரான்/நிந்ய  ஸ்ரீ கரம்-அகலகில்லேன் இறையும்/அவாவில் அந்தாதி -மோஷம் உண்டு-பிறந்தார் உயர்ந்தே-/மிக்க உயிர்  நிலையும் – அர்த்த பஞ்சகமும் காட்டி கொடுத்த ஆழ்வார்-நமக்கும் வழி காட்டினாரே /உயர் தின் அணை   ஓன்று- நான்கும்பரத்வம் பேசும்/நோற்ற நாலும்/வீடு சொன்னால் .எம்மா வீடு  ஒழிவில் நெடுமாற்கு  அடிமை /உணர்ந்தோனை//-உணர குலைந்தது/குவலயத்தே கூறும் சமயங்கள்-இருள் தரும் மா ஞாலம்-ஏமாற ஆள் இங்கு இருக்கிறதால் தானே -மாயவாதி மயக்குவார்கள்/குவலயத்தே பணித்த மறை-அங்கு சொல்ல வில்லை குழந்தகை சிரமம் தீர்க்க /குவலயத்தே யுனர்ந்தொனை-ஸ்வாமி இங்கேயே /எட்டு திக்கிலும் -திக்குற்ற கீர்த்தி இராமனுசன் /– வலி மிக்க சீயம் -ராமானுஜ திவாகரன் த்ரை வித்யா சூடாமணி வைதிகர்கள் வேதங்களுக்கு சூடாமணி ஸ்வாமி ./ஸ்ரீ  ரெங்கேச விஜய கொடியே ஸ்வாமி .-ஆழ்வான்.. மூன்று தண்டம் -வஜ்ர தண்டம் -மந்திர தண்டு-அநிஷ்ட நிவ்ருத்தி இவை இரண்டும்–தீப தண்டம்-இஷ்ட ப்ராப்தி- வேதார்ந்த சாரம் காட்ட–கீர்த்தி எங்கும் ஒளி விட்டு கொண்டு–யதாத்மா  ஞான சூன்யனாய் -சுருங்கிய ஹ்ருதயனாய் ./பகுத்து அறிவு இலாதனாய்–இருந்தும் பாடினது-தேறும் படியாக மனத்தில் பிரவேசித்து வகுத்த சேஷி -தோற்று வணங்கினோம்..அவரது குணம்  பார்த்து  இல்லை ..-சொரூப ஹ்ருதய தாஸ்யம் பண்ண வில்லை/நல்லது பண்ணினார் என்று விழுந்து சேவிக்கிறேன்..ஆழ்வார் அருளி செய்த திராவிட வேதமான திரு வாய் மொழியை கொண்டு ஒருங்க விட்டாரே வேதாந்த சூத்தரங்களை-கை விளக்காக கொண்டு /உணர்ந்தார்- சாஷாத் கரித்தார்-வ்யாக்யானதோடு வளர்த்தார்-வளர்த்த தாய் –தேறும் படி-பிராப்ய பிராபகங்கள் இரண்டும்/தாமே என்று விச்வசித்து இருக்கும் படி/ஹ்ருதயத்திலே வந்து புகுந்து அருளினவராய் –இவ் உபகாரத்துக்கு -தோற்று -வணங்கினோம்– வணங்குதலே பிராப்யம் பிராபகம் -அனுஷ்டானம் இது இறைஞ்சினோம் -புகுந்து ஸ்தாவர பிரதிஷ்டை பேரேன் என்று என் நெஞ்சு நிறைய புகுந்து மன்னி கிடந்தான்–

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: