அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-45-பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
நாற்பத்தஞ்சாம் பாட்டு –அவதாரிகை
இப்படி விமுகராய் இருந்த சேதனரிலே-அந்ய தமராய் இருந்த தம்மை நிர்ஹேதுகமாக
விஷயீகரித்துத் தம் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று விஸ்வசித்து இருக்கும்படி-பண்ணின உபகாரத்தை யனுசந்தித்து –தேவரீர் செய்து அருளின உபகாரம்வாசகம் இட்டுச்-சொல்ல ஒண்ணாது -என்கிறார் –

பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப் பேறு அளித்ததற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லாற்
கூறும் பரம் அன்று இராமானுச மெய்ம்மை கூறிடிலே – 45- –

தேவரீர் திருவடிகளை ஒழிய வேறு ப்ராப்யம் ஒன்றும் இல்லை –
அந்த ப்ராப்யத்தை தருகைக்கும் அத்திருவடிகளை ஒழிய வேறு உபாயம் ஒன்றும் இல்லை-என்று இவ்வர்த்த தத்தவத்தை தத்த்வயா தாத்ம்ய ஞாநத்தாலே -விஸ்வசித்து இருக்கும் அவர்களுக்கும்-அதில் விசுவாச ஹீனனான எனக்கும் ஒரு வாசி பாராதே தேவரீரை உபகரித்து அருளின-நேர் சொல்லால் உண்மை சொல்லில் -வாசா வ்யவஹரிக்கைக்கு சக்யம் ஆகிறதில்லை .–அனுசந்தித்து குமிழ் நீருண்டு போமித்தனை என்று கருத்து .
சொல்லால் கூறும் பரமன்று -என்றது வாசகம் இட்டுச் சொல்லும்படி
பரிஹரிக்கத்தக்க தன்று -என்கை-
செம்மை-செவ்வை
தேறுதல்-விஸ்வசித்தல் –

செம்மை ஆர்ஜவம் -கூரத் ஆழ்வான் போல்வாருக்கும் எனக்கும் அன்றோ அருளினாய் -1-வாசி இல்லாமல் /தேவரீரையே கொடுத்து -உனைத் தந்த செம்மை /3- ஆச்ரயிக்காமல் எனைத் தந்த சொல்லாமல் /4-ராமனைப் போலே ஆலிங்கனம் -பரிஷ்வங்கம் -லோக நாதம் இச்சித்தாரே /
மற்றை சரண் அன்று -கழிப்பது -மற்று ஒன்றும் வேண்டா -தீவு மற்று அறியேன் -சரம பர்வ நிஷ்டை ஸ்ரீ வைஷ்ணவ ஆதாரம்

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
கீழில் பாட்டிலே அஞ்ஞராய் போருகிற மனுஷ்யர் படியை சொல்லி – விஷண்ணராய் -இதிலே-அப்படிப்பட்ட அஞ்ஞரில் அந்ய தமராய் போந்த தம்மை நிர்ஹேதுகமாக விஷயீ கரித்து -தம்முடைய திருவடிகளே-ப்ராப்யமும் பிராபகமும் என்று விச்வசித்து இருக்கும்படி பண்ணின உபகாரத்தை அனுசந்தித்து -அப்படிப்பட்ட
பிரபாவத்தை கொண்டாடுகிறேன் என்று -சொல்ல ஒருப்பட்டால் -அதுவே –நமக்கு வாசா மகோசரமாய் இருந்தது என்கிறார் –
வியாக்யானம் –
பேறு ஒன்றும் மற்றில்லை நின் சரண் அன்றி –
ஆனந்தோ பிரம்ம -ரசோவைச-இத்யாதிகளிலே-
சர்வேஸ்வரனே என்றும் பிராப்யம் என்று சொல்லுகையாலும் -சர்வேஸ்வரனே ஆச்ரயநீயன் என்று நிஷ்கர்ஷிக்கப்படுகையாலும் –
பாதிநான்யத்ரா -என்கையாலே ஆசார்யத்வம் எம்பெருமானார் இடத்திலே தானே வ்யவஸ்த்திதமாய் இருக்கையாலும்
அவருடைய திருவடிகளே பிராப்யம் என்று நிஷ்கரித்து அருளினார் -பேறு ஒன்றும் மற்றில்லை நின் சரண் அன்றி –
நகுரோர பரஸ்த்ராதா -என்கிறபடியே வகுத்த சேஷியான தேவரீருடைய திருவடிகளே புருஷார்த்தம் என்று இருக்கிற-நமக்கு அத் திருவடிகளை ஒழிய வேறு ஒரு பிராப்யம் இல்லை -பிரம்ம வேத பிரம்மை வபவதி-சஏ நாந் பிரம்ம நம யதி —
ரசம்ஹ்யேவாய லப்த்வா நந்தீபவதி -இத்யாதிகளாலே பிரதிபாதிக்கப்பட்ட பிரத பிரதம பர்வதத்துக்கும் -குருரேவ பர பிரம்ம –
உபாயோபேய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத் -இத்யாதிகளாலே பிரதிபாதிக்கப்பட்ட சரம பர்வதத்துக்கும் -உண்டான வாசி அறியாதவர்களுக்கு இறே -பிரதம பர்வம் பிராப்தமாய் இருக்கிறது அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதீயம்
என்று இறே ஆளவந்தார் சந்தையும் -சர்வத்ர அவதாரணத்தாலே –இந்த அதிகாரிக்கு ஆசார்யன் திருவடிகளே பிராப்யம்-என்றது ஆய்த்து –
அப் பேறு அளித்தற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்று அச் சரண் அன்றி
-உபாயோபாய பாவேன தமேவ சரணம் வ்ரஜேத்-என்றும் -ராமானுஜச்ய சரணவ் சரணம் பிரபத்யே -என்றும் நிஷ்கரிஷித்த படியே அந்த பிராப்யத்தை பெறுகைக்கு அந்த
திருவடிகளை ஒழிய வேறு ஒரு உபாயம் இல்லை -ந குருரோர பரஸ்த்ராதா -குரோர் அன்யம் ந பாவயேத் – என்கிறபடியே
வேறு ஒரு பிராபகாந்தரம் இல்லை -எம்பெருமானார் திருவடிகளைக் கண்டு கொண்ட நமக்கு -எம்மாவீடு -என்கிறபடியே –
எத்தனை விலஷணம் ஆனாலும் பரமபதம் பிராப்யம் அன்று -பஜ ந சுகமே கஸ்ய விபுலம் -என்கிற பக்தி யோகமும் உபாயம் அன்று –
ஸித்திர் பவதி வாநேதி சம்சய அச்யுத சேவிதாம் -என்று சம்சயிக்க வேண்டும்படியான பகவத் பிரபத்தியும் உபாயம் அன்று –
வேதம் ஒரு நான்கினுள் பொதிந்த மெய்ப்பொருளும் -கோதில் மனு முதல் கூறுவதும் -தீதில் சரணாகதி தந்த தன இறைவன் தாளே-அரணாக மன்னுமது -என்று இவ் அர்த்தத்தை அருளாள பெருமாள் எம்பெருமானாரும் அருளிச் செய்தார் இறே –
காலத்ரயேபி -இத்யாதியாலே ஜீயரும் அனுசந்தித்து அருளினார் இறே -என்று இப் பொருளை தேறும் அவர்க்கும் –
எம்பெருமானார் திருவடிகளே பிராப்யமும் பிராபகமும் என்கிற இவ் அர்த்தத்தை -ந சம்சயஸ்து தத் பக்த்த பரிசர்யார்யதாத்ம நாம் –என்கிறபடியே சம்சய விபர்யய நிரசன பூர்வகமாகக் கொண்டு -தத்வ யாதாம்ய ஞானத்தாலே விச்வசித்து இருக்குமவர்க்கும்-
வாசா யதீந்திர –இத்யாதியால் சொல்லப்பட்ட அப்ரதிம பிரபாவரான ஆழ்வான் பிள்ளான் தொடக்கமானவர்களுக்கும் என்றபடி
-தேறுதல்-விச்வசித்தல் -எனக்கும் –வ்ர்த்யாபசு -இத்யாதிப்படியே அதி பாபிஷ்டனாய் -அதிலே விசுவாசம் லேசம் இல்லாத-அடியேனுக்கும் -இராமானுச –எம்பெருமானாரே –
உனைத் தந்த செம்மை –
ஞானதிகரானவர்களுக்கும் அஞ்ஞானான எனக்கும் உண்டான வாசி பாராதே
ஒரு வஸ்துவைக் கொடுக்கும் இடத்தில் -ததீயமாய் இருப்பதொரு வஸ்த்வந்தரத்தை கொடுக்கை அன்றிக்கே-தேவரீர் தம்மையே கொடுத்து அருளினீர் -நான் ஸ்வரூப சமர்ப்பணம் பண்ண வேண்டி இருக்க -தேவரீர்-தம்மை அடியோங்களுக்காக ஆக்கின இது அதரோத்தரம் ஆய்த்து –லோக நாதம் புரா பூத்வா சுக்ரீவம் நாதம் இச்சதி –
என்னுமா போலே ஆய்த்து –ஏஷ சர்வஸ்வ பூதோமே பரிஷ்வங்கோ ஹநுமதா – என்று பெருமாள் திருவடிக்கு-சர்வ ஸ்வ தானம் பண்ணினால் போலே நமக்கு இவரும் அப்படியே சர்வ ஸ்வ தானம் பண்ணுகிறார் காணும் –
உனைத் தந்த செம்மை –
இப்படி சர்வ ஸ்வ தானம் பண்ணுகைக்கு உடலான ஆர்ஜவ குணத்தை -மெய்ம்மை கூறிடிலே –சத்தியமாக சொல்லப் புக்கால் -உள்ளபடி பேசப் புக்கால் –சொல்லால் கூறும் பரம் அன்று –ஒரு வாசக சப்தத்தை இட்டு உள்ளபடி-சொல்ல அரிதாய் இருக்கும் -வாசா வ்யவஹரிக்க சக்யம் ஆகிறது இல்லை -அனுபவித்து -குமிழ் நீர் உண்டு போம் இத்தனை-என்றது ஆய்த்து–

——————————————————

அமுத விருந்து 

அவதாரிகை
கல்லார் அகலிடத்தோர் என்று கூறப் பட்டோரில் ஒருவராய் இருந்த தம்மை –
ஹேது எதுவும் இன்றி -ஏற்று அருளித் தம் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாக
நம்பும்படி செய்த எம்பெருமானார் உடைய உபகாரத்தை அனுசந்தித்து அவரை நோக்கித்
தேவரீர் செய்து அருளின உபகாரம் பேசும் திறத்தது அன்று -என்கிறார் .
பத உரை
இராமானுச -எம்பெருமானாரே
நின் சரண் அன்றி -தேவரீர் உடைய திருவடிகளை ஒழிய
மற்று -வேறு
பேறு –பயன்-ப்ராப்யம் –
ஒன்றும் இல்லை -ஒன்றும் இல்லை
அப்பேறு -அந்த ப்ராப்யத்தை
அளித்ததற்கு -கொடுத்ததற்கு
அச் சரண் அன்றி -அந்தத் திருவடிகளை ஒழிய
ஆறு-உபாயம்
ஒன்றும் இல்லை என்று -ஒன்றுமே இல்லை என்று
இப்பொருளை -இந்த விஷயத்தை
தேறும் அவர்க்கும் -நம்பித் தெளிந்தவர்களுக்கும்
எனக்கும் -அந்தத் தெளிவில்லாத எனக்கும்
உனைத் தந்த செம்மை-தேவரீரைக் கொடுத்து அருளின நேர்மை
மெய்ம்மை கூறிடில் -உண்மையைச் சொன்னால்
சொல்லால்-பேச்சாலே
கூறும் பரம் அன்று -பேசுவதற்கு இயலாததாய் உள்ளது
வியாக்யானம்
பேறு ஓன்று மற்று இல்லை நின் சரண் அன்றி –
குரு ரேவ பராகதி -என்றபடி எம்பெருமானார் திருவடிகளே ப்ராப்யம் என்கிறார் .
மேவினேன் அவன் பொன்னடி -என்று மதுர கவி ஆழ்வாரும்
அதர பரத்ரசாபி -இங்கும் அங்கும் -என்று ஆள வந்தாரும்
ஆசார்யன் திருவடியையே ப்ராப்யமாக அறுதி இட்டார்கள் –
பாத மூலம் கமிஷ்யாமி யானஹம் பர்யசாரிஷம் -என்று ஆசார்யருக்கு நான் சுஸ்ரு ஷை பண்ணினேனோ-அவர்களை அடையப் போகிறேன் -என்று ஸ்ரீ சபரியும் அவ்வாறே கூறினாள்-
மற்று ஒரு பேறு இல்லை எனவா பிரதம பருவத்தை இவர் கணிசிக்க வில்லை -என்று தெரிகிறது .-அப் பேறு அளித்ததற்கு ஆறு ஒன்றும் இல்லை மற்றச் சரண் அன்றி –
இதனால் உபாயமும் -அத்திருவடிகளே -என்கிறார்
ராமானுஜச்ய சரணவ் சரணம் ப்ரபத்யே -என்று ஆழ்வானும் அத்திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் –
வேதம் ஒரு நான்கின் உட்பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மநு முதல் கூறுவதும் -தீதில்
சரணா கதி தந்த தன்னிறைவன் தானே
சரணாகும் என்னும் அது – – என்று அருளாள பெருமான் எம்பெருமானார் வாக்கும் காண்க .
.காலத்ரயேபி-என்ற ஸ்லோகத்திலே எம்பெருமானாரையே உபாயமாக அனுசந்தித்து
அருளினார் ஸ்ரீ மணவாள மா முனிகளும் .
என்று இப் பொருளைத் தேறும் அவர்க்கும் எனக்கும்
இவ்விஷயம் வேதம் ஒரு நான்கின் உட்பொதிந்த விஷயமாயும் -மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
ஆயும் இருத்தல் பற்றி –இப்பொருளை தேறும் அவர்க்கும் -என்கிறார்.தேறும் அவர்க்கும் எனக்கும் –எனவே-தேறாத எனக்கும் என்பது பெற்றோம்
உனைத் தந்த செம்மை சொல்லால் கூறும் பரம் அன்று
தேறினவர்க்கும்-தேறாதவர்க்கும்ஒருபடிப் பட -தன்னையே கொடுக்கும் நேர்மை-செம்மை –
தன்னையே சேர்ந்தது ஒன்றைக் கொடுத்து விடுகை அன்றிக்கே
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் என்றபடி தேவரீர் தம்மையே கொடுத்து அருளினீர் – –
எம்பெருமான் போலே ஆத்ம சமர்ப்பணத்தை எதிர்பாராது தேவரீர் தம்மையே
அடியோங்களுக்கு ஆக்கி யருளுவதே-உபகாரம் செய்த திருவடிக்கு பெருமாள்
தன்னையே கொடுத்து அருளினார் -தரம் பாராதே உபகாரம் செய்யாதவர்களுக்கும் தம்மைக் கொடுத்த-இச் செயலை என் என்று சொல்லுவது -என்கிறார்.
இராமானுச மெய்ம்மை கூறிடிலே
மெய்ம்மை கூறிடில் சொல்லால் கூறும் பரமன்று என்று கூட்டுக
ஏதோ சொல்ல வேணும் -என்று சொன்னால் -அது முழுமையும் கூறாமையின்
பொய்யாகி விடும் .மெய்ம்மை கூறிடில் கூறும் பரமன்று என்கிறார்.
நெஞ்சால் நினைந்து குமிழ்நீர் உண்ணலாமே யன்றிச் சொல்லால் கூறும்
பரமன்று என்கிறார் .சுவாமி நம் ஆழ்வார் பிரதம பர்வதத்தையே உபாயமும்
உபேயமுமாக தெளிந்து தன் நெஞ்சை நோக்கி
நான் கூறும் கூற்றாவ தித்தன்னையே நாணாளும்
தேங்காத நீருருவன் செங்கண்மால் -நீங்காத
மா கதியாம் வெந்நரகில்சேராமல் காப்பதற்கு
நீ கதியா நெஞ்சே நினை – -என்கிறார்
அத்தகைய தெளிவு வாய்ந்த தனக்கு உபாயமாகத் தெய்வ நாயகன் தன் பாதத்தை தந்த
உபகாரத்தைக் கூறி அதற்குக் கைம்மாறு காணாது தடுமாறுகிறார் .
ஆறு எனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் உனக்கோர் கைம்
மாறு நான் ஓன்று இலேன் எனதாவியும் உனதே -திருவாய்மொழி – 5-7 10- – என்பது காண்க –.அமுதனாரோ அங்கனம் கூறவும் மாட்டாது தடுமாறுகிறார் .

————————————————————————–

அடியேன் ஞானத்தினால் ஜல்ப்பித்தல் —

உபாயமும் உபயமும் ஸ்வாமி திரு வடிகளே மட்டுமே -என்கிறார் இதில் .
அதையும் அவரே காட்டி கொடுத்தாரே
நாமும் உண்டியே உடையே என்று – இருந்த காலத்தில் ஆழ்வான் மூலம் கை கொண்டாரே
-அறியா காலத்து உள்ளே அடிமை கண் அன்பு செய்வித்து அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
.. பால்ய பிராயத்திலே அடிமையில் ஆசை பிறப்பித்தாயே– ஆழ்வார் அருளியது போல …./பிராப்யம் பிராபகம் இவ் உலகக்குக்கும் அவ் உலகுக்கும் ..
சொல்லால் கூறும் பரம் இல்லை..
பேறு – பேற்றுக்கு அளித்த ஆறும்/மற்று இல்லை
ஒரு திருவடி அதற்கும்இன்னும் ஓன்று இதற்கும்-இணை திருவடிகள் -ஒன்றுக்கு அடுத்த ஒன்ற ஒப்பு ..
தேறிய ஞானத்தார்–இதனை அறிந்த ஆழ்வான் போல்வருக்கும்
– எனக்கும் -தேறாத எனக்கும்உனை தந்த செம்மை /
படி எடுத்து சொல்லும் படி இல்லை ..வாசகம் இட்டு சொல்ல ஒண்ணாதது
–அமலன் ஆதி பிரான்- ..அமலன் என்றும் ஆதி என்று காட்டி கொடுத்த உபகாரன்
..அடியார்க்கு என்னை ஆட் படுத்திய விமலன் என்று காட்டி கொடுத்த பிரான் போல..
இதில் ராமாநுச என்று கூப்பிடு சொல்கிறார்
இப் பொருளை -அர்த்த தத்தவத்தை–தேறுகை-யாதாத்மா ஞானம் –விசுவாசம் இல்லாத எனக்கும்..
எனக்கே விசுவாசம் இல்லை நான் சொல்லி உலகோர் விசுவாசம் பெறுவாரா
தேறிய பொருள் /பிராபக ஞானம் .. பிராப்ய ஞானம் தேறிய ஞானம்..
அறிந்து அறிந்து தேறி தேறி–சௌலப்யம் பரத்வமும்..உணர்ந்து –
ஜன்ம ரகசியம் அறிந்து -கர்ம சேஷ்டிதம் மே திவ்யம் –
செம்மை நேர்மை வாசி அற எனக்கும் அவர்களுக்கும் தாரை வார்த்து கொடுத்தார்
..பிரம லோகம் விட்டு அயோத்யை வந்து திருவரங்கத்தில் நமக்கும் நம் பெருமாள் ஒக்க சேவை சாதிப்பது போல
– ராமானுஜர் எதிர் பொங்கி மீது அளிப்பவருக்கும் -நம் போல்வாருக்கும் -வாசி அற அருளுவது …சொல்லால் கூற முடியாது .
அறிந்ததை அனுஷ்டித்தல் தேறுதல் விச்வசித்தல்
/உனை தந்த =உன்னை பற்றிய பிராப்ய பிராபக ஞானம் தந்த
/இதை சொல்ல முற்பட்டால் முடியாது
..பேறு ஒன்றும் மற்று இல்லை நின் சரண் அன்றி
-உன் பிறப்பு உண்மை போல என் பிறப்பும் உண்மை
-தெரிந்ததை சொல்லி அருந்ததி காட்ட பெரிசு காட்டி பின்பு சொன்னால் போல.
ஆத்மாவை சொல்லி பின்பு பரமாத்மா சொன்னது போல.
.பிராபகம் தெரியும். அடைவிக்கும்.. பிராப்யம் தெரியாதவர்..பிராப்யத்தின் ஏற்றம் முதலில் சொல்லி ஆதரவு பிறப்பிக்க
..ஆனந்தோ பிரம திவ்ய ஞாநாத் –
ப்ருகு-வருணர்/பிராணன் -சொல்லி-மனோ அன்னம் விஞ்ஞானம் ஆனந்தம் சொல்லியது போல்
ஸ்தூலம் சொல்லி .சுலபமாக -பிராப்யம் ஆனந்தம் என்று அனைவருக்கும் தெரியும்.
தன் நாவுக்கு இனிதாக உள்ள கனி கொடுத்தாள் சபரி
..வேடன் கொடுத்ததை கொள்ள வில்லை ஆச்சர்ய நியமன் என்பதால்-கொண்டார் பெருமாள்
ஆச்சார்யர் பாத மூலம் போக போகிறேன் என்று பெருமாள் இடமே சொன்னாள்
ஆச்சார்யரே பகவான் திருவடி..
விவசதிதமாக ஆச்சார்யத்வமே எம்பெருமானார் இடம் இருப்பதாலும்.. அவர் திருவடிகளே பிராப்யம்.
.பிரதம -சரம பல்லவிதம்- மொட்டு விடுவது போல புஷ்பம் கனி ஒன்பது விஷயம்
..தத்வ ஹிதம் புருஷார்த்தம் ஒவ் ஒன்றிலும் மூன்று நிலை
..பிரமத்தை அறிந்து பிரமமாகவே ஆகிறான் -உபநிஷத்
-ஐக்கியம் என்பர் தப்பாக சங்கரர்
…இருவரும் சேர்ந்து கல்யாண குணங்களை அனுபவிகிறார்
..இந்த வாக்கியம் எதற்கு ?..பிரம இவ பவதி போல ஆகிறான் சாம்யா பத்தி மோஷம் .
முதல் நிலை இது/
குரு ரேவ பர பிரம -சரம பர்வம் -வாசி அறியாதவர்களுக்கு –
சர்வத்ர இங்கும் அங்கும் என்று என்றும் எல்லா இடத்திலும்
..அறிந்து இருக்க கடவன்.. பெருகைக்கு தமேவ -ஆச்சர்யாராய் பற்றி ஆச்சர்யாராய் அனுபவிக்கனும்..
மற்ற ஆச்சர்யர்களுக்கு கைங்கர்யம் பண்ணனும்- மக்களுக்கே பண்ணனும்..
எம்மா வீடும் -மா வீடு /வீடு-ஐஸ்வர்யம் /எம் வீடு-கைவல்யம் எம் மா வீடும்-பரம பதமும் பிராப்யம் இல்லை
பக்தி -காலை மாலை கமல மலர் இட்டு
-பக்தி – உபாயம் -இதையும் விட்டு /பிர பத்தி -சித்தி பவதி நா அச்சுத சேவிதாம்-நழுவதல் இல்லை
-சந்தேகம் இருக்கு – வேதம் ஒரு நான்கில்-அத்வீதிய வேதம்- நாலிலும் உண்டு
– உள் பொதிந்த-மேலாக பார்த்தால் தெரியாது
-மெய் பொருளும் பூதில் மனு முதல் கூறுவதும் தீதில் சாணாகதி தந்த தன் இறைவன் தாளே–
அரணாக மன்னும் அது இறைவன் சேஷி அரண்-சரண்யன் இரண்டும்../தாளே ஏ -வகரம்
பிராப்ய பிராபகம் இரண்டும் ஞான சாரம்பாசுரம்
..மூன்று காலத்திலும் மூன்று கரணத்தாலும் பண்ணிய பாவங்களுக்கு
பகவத் ஷமை விழ ஸ்வாமி -நீர் பண்ணிய சரணாகதியால் –வாங்கி கொடுத்த அதனால் தானே- மா முனிகள்.
தேறும் அவர்– மிக்க வேதியர் வேதத்தின் உள் பொருள் அறிந்தவர்கள்-விச்வசித்தவர்கள்-
அறிந்து நம்பி இருப்பவர்கள்
..செம்மை- வாசி இன்றி ஞானம் கொடுத்தது
1-தம்மையே கொடுத்தது -2–சேனை அவனுக்கும் தன்னை அர்ஜுனனுக்கும் கொடுத்த பல- இராமனுசன் போல அன்றி
இருவருக்கும் தன்னையே கொடுத்தது
ஆர் எனக்கு நின் பாதமே சரணக கொண்டு உகந்தாய்
3-தேவரீர வந்து என் இடம் கொடுத்தீரே-நாம் ஆத்மசமர்ப்பணம் பண்ண-வேண்டி இருக்க நீரே உம்மை எனக்குத் தந்து –
லோக நாதம்-சுக்ரீவன் குரங்கு காலில் விழுந்தால் போல தலை கீழே மாறினது போல..
ராமனும் தன்னையே திருவடிக்கு கொடுத்தாரே-கண்டேன் சீதையே உபகாரம் பண்ணினவனுக்கு கொடுத்தார்-இரண்டு உயிரை காத்தவனுக்கு அங்கு பெருமாள் – உபகாரம் பண்ணிய திருவடிக்கு அங்கு -4–அபச்சாரம் பண்ணிய என்னை அன்றோ –
நானோ உலகின் உயிரை எடுக்க வந்தேன் -நீசனான எனக்கே கொடுத்தாரே-இப்படி நான்கு அர்த்தங்கள் உனைத் தந்த  செம்மை –
..குமிழ் நீர் தான் உண்ண முடியும் ஆழ்ந்து அனுபவிக்கத் தான் முடியும்-பேச முடியாது-என்கிறார்
பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –திரு வாய் மொழி -2-5-8-

————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: