அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-44-சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –
நாற்பத்து நாலாம் பாட்டு
அவதாரிகை
இப்படி உபதேசித்த விதத்திலும் ஒருவரும் இதில் மூளாமையாலே-அவர்கள் உடைய படியை அனுசந்தித்து இன்னாதாகிறார் –

சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
யில்லா வற நெறி யாவும் தெரிந்தவன் எண்ணரும் சீர்
நல்லார் பரவும் இராமானுசன் திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே – -44 –

விச்தீர்னையான பூமியில் உள்ளோர் புருஷார்த்தம் எது என்று இச்சியா நிற்பார்கள் –
சொல் நிரப்பத்தை உடைத்தாய் -அத்விதீயமாய் -இயல் இசை நாடக சம்பந்தத்தாலே
மூன்று வகைப்பட்டு இருந்துள்ள தமிழும் –ருகாதி சதுர்வேதங்களும் -அசந்கயேமான
தர்ம மார்க்கங்களான சகலமும் -அலகலகாக ஆராய்ந்து இருக்குமவராய் –
எண்ணப் புக்கால் எண்ணித் தலைக்கட்ட வரிதான கல்யாண குணங்களை உடையவராய் –
சத்துக்களுடைய ப்ரீதி பிரகர்ஷத்தாலே அடைவு கெட ஏத்தும்படியாய் இருக்கிற
எம்பெருமானாருடைய -திரு நாமத்தை -நான் சொன்ன வார்த்தையை -விஸ்வசித்துக் கற்கிலர்கள் .
ஐயோ இவர்கள் அளவு இருந்தபடி என் என்று கருத்து .
எண்ணரும் சீர் -என்கிற இது நல்லாருக்கு விசேஷணம் ஆகவுமாம் –
நம்புதல்-விருப்பமுமாம் –

வேப்பங்குடி நிறையா சொல்ல சொல்கிறேன் சொலப் புகில் வாய் முதல் பரக்கும் -ஒரு மூன்றும் -திருவாய் மொழி -மற்ற மூ வாயிரம் /ஆழ்வார் அருளிச் செய்த நான்கும் /இயல் இசை நாடகம் மூன்று அர்த்தங்கள் -ஒரு அத்விதீயம் -ஸூ தகா பிரமாணம் -சுருதிகள் நான்கும் இப்படியே –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ் பாட்டில் லோகத்தார் எல்லாருக்கும் அவருடைய அதிகார நதிகார விபாகம் பாராதே அத்யந்த விலஷணமான-உபாயத்தை உபதேசித்ததாலும் -அத்தை அத்யவசிக்க மாட்டாதே புருஷார்த்தம் எது என்று சந்தேகியா நின்று கொண்டு –
சிஷிதமான சப்த ராசியால் நிறையப் பட்டதாய் –அத்விதீயமாய் இயலும் இசையும் சந்தர்ப்பமும் கூடிய விலஷணமான
இப் பிரபந்தமும் -ரிகாதி வேத சதுஷ்டயமும் -அபரிமாய் தத் உப பிரஹமணமான தர்ம சாச்த்ரமாகிற இவற்றை
அடைவே ஆராய்ந்து இருக்குமவராய் -சத்துக்களாலே அடைவு கெட ஸ்துதிக்கும்படியாய் இருக்கிற எம்பெருமானாருடைய
திருநாமத்தை அப்யசியாதே போனார்களே என்று இன்னாதாகிறார்

வியாக்யானம் –
அகலிடத்தோர் –
அநந்தா என்றும் விபுலா என்றும் பேரை உடைத்தான இந்த மகா ப்ருதிவியில் உள்ள சேதனர்கள்
எது பேறு என்று காமிப்பர்-நான் இவர்களது இழவைக் கண்டு பொறுக்க மாட்டாதே -மந்த்ரம் யத்நேன கோபயேத்-என்கிற
சாஸ்திரத்தையும் அதிக்ரமித்து -அத்யந்த சுலபமாய் குரோர் நாம சதா ஜபேத் -என்கிறபடியே -ததீய சேஷ தைகரஸ்-ஸ்வரூப அநு ரூபமாய் -பரம போக்யமான சதுரஷரியை உபதேசித்தாலும் -அதிலே நிஷ்டர் ஆகமாட்டாதே
அறிவு கெட்டு -பின்னையும் -நமக்கு ஓர் சரணம் எது என்று இங்கும் அங்கும்நாடி -அந்த இச்சையோடு காலம் எல்லாம் இப்படியே
வ்யர்தமாகப் போக்குகிறார்கள் -ஐயோ இவர்கள் ப்ராப்தத்தின் உடைய க்ரௌர்யம் இங்கனே யாய் தலைக் கட்டிற்று-என்று இன்னாதாகிறார்
ஆனால் அத்யயனம் பண்ணுவிக்கும் அவர்கள் மந்த மதிகளுக்கு பின்னையும் ஒரு சந்தையை சொல்லி-அவர்கள் தரிக்கும் அளவும் க்ர்ஷி பண்ணுவார்கள் இறே-அப்படியே நீரும் செய்ய வேண்டாவோ என்ன –
யச்சகிம் கிஞ் ஜகத் சர்வம் த்ர்சயதே ச்ருயதேபிவா -அந்தர்பகிச்த தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்த்தித -என்றும்
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -என்றும் பிரபாவ புரச்சரமாக-அந்த மந்த்ரத்தை உபதேஸித்தால் போலே -இவரும் தாம் முன்பு அருளிச் செய்த சதுரஷரி மந்த்ரத்தை ஏறிட்டு -பிரபாவ வர்ணன பூர்வகமாக அருளிச் செய்கிறார் –
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் -சீர் தொடை ஆயிரம் -என்றும்
சடகோப வாங்மயம் -என்றும் சொல்லுகிறபடியே கோமளங்களாய்-தத்வார்த்த நிச்சாயகங்களான சப்தங்களாலே நிறையப்பட்ட
தமிழ் என்று -திரு வாய் மொழி -ஒரு என்ற சப்தம் காகாஷி நியாயேன பூர்வ உத்தர பதங்களிலே அன்வயிக்கும் -லோகத்திலும்
வேதத்திலும் அதுக்கு சதர்சமான பிரமாணம் இல்லை என்ற படி –மூன்றும் -அதுக்கு மூன்று பிரகாரமாக கணிசிக்க தக்கதாய்
அத்விதீயமான மற்ற மூவாயிரப் பிரபந்தமும் -இப்படி ஆழ்வார் பதின்மராலும் செய்யப்பட சமஸ்த திவ்ய பிரபந்தங்களும் –
அன்றிக்கே ஒரு மூன்று என்றது திருவிருத்தம் திருவாசிரியம் பெரிய திருவந்தாதி யும் பொருள் ஆகவுமாம்.
அன்றிக்கே சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் -சொல் நிரப்பத்தை உடையதாய் -அத்விதியீமாய்-இயல் இசை நாடக சம்பந்தத்தாலே மூன்று வகைப்பட்டு இருந்துள்ள தமிழ் என்னவுமாம் –ஸ்ருதிகள் நான்கும்
-பிரமாணாந்தரன்களைப் போலே அநித்யுமுமாய் சாபேஷையுமாய் இருக்கை
அன்றிக்கே -வாசாவிருபு நித்யா -என்றபடி நித்தியமாய் அபௌருஷேயுமாய் சவாத பிரமாண முமாய்-புஸ்தக நிரீஷனாதி சாத்தியம் அன்றிக்கே -ஸ்வாத்யா யோத்யே தவ்ய-என்கிறபடியே -ஆசார்ய உச்சாரண
அநு உச்சாரண மகாத் அயன சாத்தியமாய் -ரிசோ யஜூ சி சாமானி ததைவா தர்வணாநிச -என்னும்படியான
பேர்களை உடைத்தாய் கொண்டு நாலு வகைப்பட்ட வேதங்களும் –எல்லை இல்லா அற நெறி –அந்த வேதங்களினுடைய-அர்த்த பிரகாசங்களாய் தொகை இட்டு சொல்ல ஒண்ணாதபடி -அனந்தமான தர்ம மார்க்கங்களை –
யாவும் தெரிந்தவன் -வேத மார்க்க பிரதிஷ்டாப நாசார்யா – உபய வேதாந்த சார்யர் -ஆகையாலே-இவை எல்லாவற்றையும் அலகலகாக ஆராய்ந்து இருக்குமவராய்
-எண்ணரும் சீர்
-இவர் பகவத் அவதாரம் ஆகையாலே
சங்க்ய அனும் நை வசக்யந்தே குணா -என்னும்படி அனந்த கல்யாண குனாகரராய் -நாதச்யேச கஸ்ய நதஸ்ய நாம மகத்யச –என்னும்படியான அவனுடைய கீர்த்தியை பரிச்சேதிக்கிலும்-இவருடைய கீர்த்தியை பரிச்சேதிக்க ஒண்ணாது காணும் –
அன்றிக்கே -எண்ணரும் சீர் -என்றது -நல்லோர் என்ற பதத்துக்கு விசேஷணம் ஆகவுமாம் -அப்போது -வாசா மகோசர-மகா குணா தேசிகாக்ர்ய கூராதி நாத -என்னும்படி எண்ணித் தலைக் கட்ட அரிதான கல்யாண குணங்களை உடையவரான
ஆழ்வான் பிள்ளான் எம்பார் தொடக்கமானவர் -என்றபடி
-நல்லார் பரவும்
-ஜயதி சகல வித்யா வரஹி நீ ஜன்ம சிலோ –
இத்யாதியாலும் -காதா தாதா கதானாம் -இத்யாதியாலும் -வாழி எதிராசன் -இத்யாதியாலும் –அந்த சத்துக்கள் உடைய
பிரதி பிரகர்ஷத்தாலே அடைவு கெட ஏத்தும்படி இருக்கிற
-இராமானுசன் திருநாமம்
-எம்பெருமானாருடைய திருநாமம் –
ராமானுசன் என்கிற இத் திருநாமத்தை –நம்பிக் கல்லார் -இவருடைய பிரபாவத்தை அறிந்து விச்வசித்து -இவருக்கு
திருநாமமான சதுரஷரி மந்த்ரத்தை -அப்யசியாதே போனார்கள் -குரங்கானாலும் மகாராஜர் ப்ரத்யயம் பண்ணின பின்பு-விச்வசித்தார் இறே -இவர்கள் சதசத் விவேசனம் பண்ணுகைக்கு -யோக்யரான மனுஷ்யராய் இருந்தும் –நம்மை
எம்பெருமானார் விஷயீ கரித்ததை தெளிவித்து ப்ரத்யயம் பண்ணிக் கொடுத்தாலும் -இவர்கள் விச்வசிக்க-மாட்டாதே போனார்கள் -இவர்கள் அபாக்யத்தின் க்ரௌர்யம் என் என்று இன்னாதாகிறார் —

————————————————————-

அமுது உரை
அவதாரிகை
இப்படி இவர் உபதேசித்தும் படியில் உள்ளோரில் ஒருவரும் இவர் வார்த்தையின்படி –
இராமானுச நாமத்தை சொல்ல முற்படாமையாலே -அவர்கள் தன்மையை நினைந்து வருந்திப் பேசுகிறார் –
பத உரை –
அகல் இடத்தோர் -அகண்ட பூமியில் உள்ளவர்கள்
பேறு -புருஷார்த்தம்
எது என்று -யாதொன்று
காமிப்பார் -விரும்புவர்
சொல் ஆர் -சொற்கள் நிறைந்த
ஒரு -ஒப்பற்ற
தமிழ் மூன்றும் -மூன்று வகைப்பட்ட தமிழையும்
சுருதிகள் நான்கும் -நால் வகைப்பட்ட வேதங்களையும்
எல்லை இல்லா -அளவில்லாத
அற நெறி யாவும் -தர்ம மார்க்கங்கள் அனைத்தையும்
தெரிந்தவன் -ஆராய்ந்து அறிந்தவராய்
எண்ணரும் சீர் -எண்ண முடியாத கல்யாண குணங்களை உடையவராய்
நல்லார் -நல்லவர்கள்
பரவும் -துதிக்கும் படி யிருக்கும்
இராமானுசன் திரு நாமம் -எம்பெருமானாருடைய திரு நாமத்தை
நம்பி -நம்பிக்கை கொண்டு
கல்லார் -கற்கின்றினரே
வியாக்யானம்
சொல்லார் தமிழ் ஒரு மூன்றும் –
தமிழ் எனும் அளப்பரும் சலதி -என்றபடி சொற்கடலாய் அமைந்தது தமிழ் மொழி .
எல்லா மொழிகளிலும் சொற்கள் இருப்பினும் எத்தைகைய உணர்ச்சிகளையும் பொருள்களையும்
புலப்படுத்தும் பல சொற்கள் தமிழில் நிறைய காணப்படுதலின் –சொல்லார் தமிழ் –என்றார்.
அத்தகைய தமிழ் ஒப்பற்றதாதலின் -ஒரு தமிழ் -என்றார் .
வட மொழி தெய்வத் தொடர்பு உடையதாயினும் -எளிதில் எல்லாராலும் பேசப்படுவதாயும்
உணரப்படுவதாயும் -அமைந்து இலது -தமிழ் மொழியோ அங்கன் அன்றி யாவராலும் பேசவும் உணரவும்
பெற்றுத் தெய்வத் தொடர்பும் உடையதாய் இருத்தலின் -ஒப்பற்ற தாயிற்று .
இயல் இசை நாடகம் -என்னும் உட்பிரிவினால் மூன்று தமிழ் ஆயிற்று .
தாய் மொழி யாதலானும் ஆழ்வார்கள் ஈரத் தமிழ் ஆதலானும் -நான்கு ஸ்ருதிகளுக்கு முன்னர்
மூன்று தமிழ்கள் கூறப்பட்டன -செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி -என்று வட சொல்லுக்கு
முத்திச் செந்திறத்த தமிழைத் திரு மங்கை ஆழ்வார் அமைத்து அருளி இருப்பது இங்கு அறியற்பாலது –
தம் பாழி யாகையாலே தமிழை முதலில் கூறினார் என்பது அவ்விடத்திய வியாக்யானம் .இயல் தமிழ் -இயல்பாய் அமைந்த தமிழ்
இசைத் தமிழ் -குறிஞ்சி காந்தாரம் முதலிய பண் அமைந்த தமிழ் .
இயலும் இசையும் விரவிய தமிழ் -நாடகத் தமிழ் –
இசைத் தமிழ் -பண்ணார் பாடல் எனப்பட்ட திருவாய் மொழி -பெரிய திருமொழி முதலியன
இயல் தமிழ் -பொய்கையார் அந்தாதி முதலியன
நாடகத் தமிழ் -உரையாடல் வடிவமாய் அமைந்த திருப்பாவை முதலியன –
சொல்லார் ஒரு தமிழ் என்று கூட்டித் -திருவாய் மொழியும்
ஒரு மூன்று -என்று மற்றை மூவாயிரமும் சொல்லப்படுகின்றன –
இனி நம் ஆழ்வார் அருளிச் செய்த திரு விருத்தம் திரு வாசிரியம் பெரிய திருவந்தாதி என்னும்
திவ்ய பிரபந்தங்கள் சொல்லப் படுகின்றன என்னலுமாம்-என்று பிள்ளை லோகம் ஜீயர் உரைப்பர் –
மேலே ஸ்ருதிகள் நான்கும் என்று வட மொழி வேதம் நான்கும் கூறப் படுவதற்கு ஏற்ப
தென் மொழி வேதம் நான்கும் கூறப் படுவது பொருந்தி உள்ளது என்பது அவர் கருத்து போலும் .
சொல்லார் தமிழ் -என்பதுசொல் சீர்த் தொடை யாயிரம் -திரு வாய் மொழி – 1-2 11- –
சடகோப வாங்மயம் -என்னும் திருவாய் மொழியை நினைவுறுத்துகிறது .
இரும் தமிழ் நூலிவை மொழிந்து -திருவாய் மொழி -10 -6 4- – என்றபடி
இரும் தமிழ் நூல் ஆதலின் -திருவாய் மொழி -தமிழ் -என்றே வழங்கப் பட்டது .
தத்ராசவ் சத்த்வ சீம்ன சடமத நமுநே சம்ஹிதா சார்வபவ்மீ -என்று
இதிஹாச புராணங்களாலே ஸ்ருதிகளுக்கு செய்யும் செயலில் சத்துவ குணத்தின் எல்லையில் உள்ள-சடகோப முனிவனுடைய சம்ஹிதையான திருவாய்மொழி தலை சிறந்தது -என்று
திராவிட உபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் கூறியபடி திருவாய் மொழி ஒப்பற்ற பிரமாணம் ஆதலின்-ஒரு தமிழ் -எனப்பட்டது .
ஸ்ருதிகள் நான்கும்
ஆராலும் ஆக்கப்படாது அநாதியாக குரு வாயிலாக கேட்டே ஓதப்பட்டு வருதலின் வேதங்கள்
ஸ்ருதிகள் எனப்படுகின்றன -ஓதி ஒதுவித்தாதியாய் வரும் -பெரிய திருமொழி -3 5-6 – -என்றார்
திரு மங்கை மன்னனும் .அவை ருக் -யஜூஸ் சாமம் அதர்வம் என்று நான்கு வகைப்படும்
எல்லை இல்லா அற நெறி யாவும் தெரிந்தவன்
அற நெறி -ஸ்ருதிகளில் சொன்ன தர்மமார்க்கங்கள்
அவை எண்ணிக்கையில் அடங்காமையின் எல்லை இல்லாதன
அவை அனைத்தும் அறிந்தவர் எம்பெருமானார்
எண்ணரும் சீர் நல்லார் பரவும் இராமானுசன்
சீர் -குணங்கள்-அவைகள் எண்ண அரியன-இத்தனை என்று கணக்கிட முடியாதன
இனி நினைத்துப் பார்ப்பதற்கும் முடியாதன என்னலுமாம்
சீர் இராமானுசன் என்று இயைக்க
நல்லாரோடு இயைத்தலுமாம்-அப்பொழுது வாசா மகோசர மகா குண தேசிகாக்ர்ய கூராதி நாதர்
எனப்படும் கூரத் ஆழ்வான் போல்வாரை நல்லார் என்றது ஆயிற்று .
திரு நாமம் நம்பிக் கல்லார் அகல் இடத்தோர் –
நம்புதல் -விசுவாசம் கொள்ளுதல்
அமுதனார் உபதேசத்தில் நம்பிக்கை கொள்கிலர்-என்றபடி
நம்புதல்-விரும்புதலுமாம்
கற்றல்-குரு முகமாக உபதேசிக்கப் பெற்று அனுசந்தித்தல்
நாமம் கற்றலே கல்வி என்கிறதாகவுமாம் –
திரு நாமம் சொல் கற்றணமே -திரு விருத்தம் – – என்று நம் ஆழ்வாரும்
நின் நாமம் கற்ற ஆவலிப்பு -திருமாலை -என்று
தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் அருளினமை காண்க .
பரந்த உலகிலே நம்பித் திரு நாமம் கற்பார் ஒருவரும் இலரே என்னும்
இன்னாப்புடன் அகலிடத்தோர் -என்கிறார் ,
எது பேறு என்று காமிப்பரே
நம்பித் திரு நாமம் கற்றலாம் புருஷார்த்தத்தை விட்டு –புருஷார்த்தம் எது என்று
தேடி அலையா நிற்கிறார்களே -இவர்கள் அறிவீனம் இருந்த படி என் -என்று கருத்து

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது

இப்படி உபதேசித்த இடத்திலும் ஒருவரும் மூளாமையாலே அவர்கள் உடைய படியை
அனுசந்த்திது இன்னாதாகிறார் இதில்.
.அக்னி யால் சுடாது-பிரகலாதனை மடியில்-ஹோலிகா -ஹிரண்யகசிபுவின் தங்கை -அக்னியால் சுடப்படாள் வரம் -மீறி பக்த பிரகலாதனை அக்னி முடிக்க மடியில் விட்டு -அவள் முடிந்த நாள் ஹோலி -என்பர் –தீயை பார்த்து அச்சுதன் என்ற ஆழ்வார் போல
அனைத்திலும் அவனைக் கண்டான் பிரகலாதனும் –
எங்கும் உளன் கண்ணன் என்ற தன் மகன் கூறினதையும் கேட்காமல் –
சிருக்கன் உபதேசிக்க தந்தை கேட்காதது போல
அவனையும் அழித்த தினம் தான் ஹோலி. பண்டிகை..ஹோலிகா ஹிரண்ய கசிபு சகோதரியாம் –
மதுரகவி சொன்ன சொல் நம்புவர் பதி வைகுந்தம் என்றார் அவரும்..
..எண் அரும் சீர் –இது -நல்லார்-ராமனுசனுக்கும் விசேஷணம்-
பரவும்- கல்லார் -அகல் இடத்தில்- நிறைய இடம்
யாவும் தெரிந்தவன்-சர்வஜ்ஞன் இவரே -சர்வஜ்ஞத்வமே இவராக உரு எடுத்து வந்ததாம்..
உபய வேதாந்தாச்சர்யர்.
.சொல்லார்-தமிழ் என்னும் சொல் சமுத்ரம்- சொல்லால் நிறப் பட்ட-
ஒரு மூன்றும்
ஒரு தமிழ்– ஒப்பற்ற
இயல் இசை நாடகம்
ஸ்ருதிகள் நான்கும் ..
எல்லை இல்லா அற நெறி-அனுஷ்டானத்துக்கு—யாவும் தெரிந்தவன்..
நல்லோரும் சொன்னார்கள்
கெட்டே அலைந்து பெற்ற பேறு – தான் சொன்னதையும் நம்பாமல் இருக்கிறீர்களே –கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது புல்லோர்க்கு  அப்புறம் கழன்று –நல்லோர் சொல்லும் பொருள்  எனப் போயிற்று அன்றோ -தாடகை வாக்கியம் –
வாழ் ஆட் பட்டு நின்றீர் உள்ளீரேல் -கூப்பிட வந்தார்கள்
கூழ் ஆட் பட்டு- தேடாமலே கிடைப்பார் -நிறைய உண்டியே உடையே என்று ஓடும் மனிதர்கள் – இருப்பதால் –
தீர்பாரை யாம் இனி-சொல்லு என்று தோழி சொல-
துவாராபதி மன்னன் நாமம் சொன்னதையே ஹேதுவாக கேட்டே ஆடினார்களாம்–
தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு ஆட் செய்து ..–
தேவ தேவன் ஆசை பட்ட தமிழ்.
.நம்மை -ஆழ்வார் நம்மை பிரம ஞானத்தாலே நம்மை ஆள்வார்கள்
ஆழ்ந்த படியால்
சொல் சீர் தொடை ஆயிரம்- சொல்லும் சீரும் இசைந்து…
ஞானம் கலந்த பக்தி ஈர சொல்லில்
உரை நடை -இயல் தமிழ்-இயற்கையாக பேசும் தமிழ்
இசை தமிழ்/நாடகம் இயலும் இசையும் சேர்ந்து..
இயற்பா /இசைப்பா பெரிய திரு மொழி திரு வாய் மொழி/
நாடகம் -திரு பாவை -பெற்ற குழந்தையை வளர்க்க இது வேணுமே
ஒருத்தி மகனாய் -யசோதைக்கு கண்ணனை பிள்ளை என்று சொல்லலாம்
தேவகிக்கு சொல்லலாமா கேளும் என்றாரே நஞ்சீயர் இடம் பட்டர்
அது போல ஸ்வாமி -திரு வாய் மொழியில் உள்ள கல்யாண குணங்கள் அனைத்தும்
அறிந்தவர் -வளர்த்த இதத் தாய் என்பதால்
கிருமி கண்ட சோழன் சிரமம் .- பிர மத நிரசனம் பண்ண வேண்டிய நிலைமை
திவ்ய தேசங்களை ரஷித்து சமுக சீர்திருத்தம் பண்ணி
பிள்ளான் மூலம் வ்யாக்யானங்கள் அருள சொன்னார் ..
தெரிந்து கொண்டு அலகு அலகு ஆய் ஆராய்ந்து இருக்கும் ஸ்வாமி
-நித்ய அனுசந்தானத்தில் கொண்டு –
ஆத்ம குண சம்பத் –சீர்/நம்பி-விசுவாசம் கொண்டு
விருப்பத்துடன் -சொல புகுதில் அமிர்தம் ஊருகிறதா
விதித்து செய்வது இல்லை ஆசை உடன் செய்யணும். வைதம் அன்று ராக பிராப்தம்.
நாடகம் சந்தர்ப்பம்-கூடி- இசையும் இயலும் கூடி
அடைவு கெட-ஆழ்வார்கள் குரவை ஆட்டம் சொல்லி வேண்டி தேவர் இரக்க என்பார்.
ஆழ்ந்து- பத்திமை நூல் வரம்பு இல்லை.
.இருந்தாலும் ஆச்சார்யர்கள் அடைவோடு அறிந்தும்
அடைவு கெட இருந்த அவர்கள் திருவடிகளில் -மயர்வற மதி நலம் அருள பெற்றதால்..
மந்த்ரம் எத்தனத்துடன் பேணி பாதுகாக்க படனும்
-இருந்தாலும் ததீய சேஷத்வதுக்கு குருவின் நாமத்தை எப்பொழுதும் சொன்னால் போதும் என்று சொல்லியும்
-ராமாநுச -என்று தான் -போக்யமான சொரூப அனுரூபமான நாமத்தை உபதேசித்தாலும்-
நம்பாமல்– வேறு புருஷார்த்தம் சரணம் எது என்று இங்கும் அங்கும் நாடி காலம் வ்யர்தமாகி போக்குகிறார்கள்
…பிராரப்த கர்ம படுத்திய பாடு-
தொடங்கின கர்மா என்பதால்..துக்கம் ஏற்படுத்தும் காரணத்தில் ஆசை இன்றி சுகம் தரும் காரணத்தில் வெறுப்பு இன்றி ஞான யோகி..
இதிலும் நாம வைபவம் மீண்டும் சொல்கிறார்
..எண் பெரும் வண் புகழ் ஈரில நாரணன் திண் கழல் சேரே — போல
–மென்மை சப்தம் –ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
-அர்த்த புஷ்ட்டி -சொல்லார் தமிழ்…என்று திருவாய்மொழி
ஒரு-லோகத்திலும் வேதத்திலும் இதற்க்கு சரியான நிகர் இல்லை
தமிழ் முதலில் சொல்லி சுருதி நான்கும்-தனக்கு பிடித்ததை முதலில் ..ஆழ்வார் அருளியதால்..
தமிழ் ஓசை வட சொல்லாக்கி
இரும் தமிழ் நூல் புலவன் -பனுவல் ஆறும் /திரு வாய் மொழியென்ற இரும் தமிழ் கற்றவர்
மூன்றும்-அத்வீதியமாக மற்ற மூ வாரியம் பாசுரங்கள்
த்ரை வித்யா- அங்க அங்கி உபாங்கம் -எல்லா அருளிச் செயல்களும்
திரு விருத்தம் திருவாசிரியம் பெரிய திரு அந்தாதி என்ற மூன்றும்..
சுருதி-கேட்டு-பிரமாணம் அநித்யமாய்/அபுருஷேமாய் சுத்த பிரமாணமாய்
/ஆச்சர்ய உச்சாரண அநு வுச்சாரண மூலம்/
தர்ம சாஸ்திரங்களும் அநேகம் ..யாவும் அலகு அலகு ஆக ஆராய்ந்து இருப்பவர்
அநந்த கல்யாண குணங்கள்- பார்த்த சாரதி அவதாரம் என்பதால்..
அஷய கீர்த்தி -எண் அரும் சீர் ஸ்வாமிக்கு-நல்லாருக்கும் விசேஷணம்
.மொழியை கடக்கும் பெரும் புகழ்..சகல வித்யா வாகினி
வழி எதிராசன் என்று வாழ்த்துவர் ..திரு நாம சொல் கற்றமை
-சுக்ரீவன் இரண்டு பரிட்சை ராமனுக்கு வாய்த்த பின்பு
– குரங்கானாலும் விசுவாசம் பெற்றானே
-அமுதனார் பிரத்யட்ஷமாக காட்டினாலும்-கெட்டவன் மாறி நல்லவராக ஸ்வாமி கிருபையால்–மனிசர்க்கு நம்பிக்கை வர வில்லையே என்று வருந்துகிறார்–

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: