அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-43-சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

நாற்பத்து மூன்றாம் பாட்டு-அவதாரிகை
இப்படி தம்மை விஷயீ கரிக்கையால் வந்த ப்ரீதியாலே -லவ்கிகரைப் பார்த்து –
எல்லாரும் எம்பெருமானார் திரு நாமத்தை சொல்லும் கோள்-உங்களுக்கு
எல்லா நன்மையையும் உண்டாகும் -என்கிறார் .

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாயமுதம்
பரக்கும் இருவினை பற்றவோடும் படியிலுள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமானுசன் என்று சொல்லுமினே – 43-

எம்பெருமானார் திருவவதரித்து அருளுகையாலே -விச்வம் பரா புண்ய வதீ -என்கிறபடியே –
பாக்யவதியாய் இருக்கிற பூமிக்கு உட்பட்டவர்களே -நிச்சிதமாக அனுபவத்தாலே கை கண்ட-நான் -இதில் வாசி அறியாமல் இழந்து இருக்கிற உங்களுக்கு சொல்லுகிறேன் –
தர்மம் எனபது ஒன்றே நடையாட சஹியாத -பிரபலமாய் உறைத்து நிற்கிற கலியை –
தம்முடைய சம்பந்தம் உள்ள விடத்திலே நில்லாதபடி ஒட்டி விடும் பிரபாவத்தை உடையரான-
எம்பெருமானார் உடைய திரு நாம உச்சாரணத்தைப் பண்ணும் கோள் –
பக்தி யாகிற சம்பத்தும் ஜ்ஞானமும் மேன்மேலும் வர்த்திக்கும்
என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் -கண்ணி நுண் -1 – என்னும் அளவு அன்றிக்கே
சொல்லத் தொடங்கின போதே வாக்கிலே ரசம் பிறக்கும் –
அநுபவ விநாச்யம் ஆதல் -ப்ராயாசித்த விநாச்யம் ஆதல் -செய்யாத
மகா பாபங்கள் தானே யஞ்சி சவா சனமாக விட்டு ஓடும் –

தலை சீர் வண்ணம் தாம் கெட வரினே குறுகிய விகரமும் குற்றியலுகரமும்
அளபெடையாவையும் அலகியல்பிலவே -என்கிற ந்யாயத்தாலே
உரைக்கின்றன நுமக்கியான் அறம் சீறு முறு கலியை -என்கிற பாதத்தில் உமக்கியான்
என்கிற இடத்தில் ககரத்தின் மேல் ஏறின இகரம் குற்றியல் இகரம் ஆகையாலே
வண்ணம் கெடாமைக்குக் கழித்து உடல் எழுத்தான ககரத்தை கீழோடு ஓன்று வித்து
பூர்வ உத்தர பாதங்களுக்கு ஒக்க பதினேழு எழுத்தாக்கி எண்ணக் கடவது –
ஏன் முடியாதெனக்கி யாதே யரியது-என்று ஆழ்வார் நூற்றந்தாதியிலும் இப்படி
பிரயோக்கிகப் பட்டது இறே-ஆகையால் மகா கவி பிரயோகங்கள் இப்படி
வரக் கடவதே இருக்கும்..

அறம் சீறும் உறு கலியைத்-துறக்கும் பெருமை இராமானுசன் -இது தான் நாம் சொல்ல வேண்டிய சந்தை -கலியும் கெடுமே
பெருமை இராமானுசன்-மட்டுமே சொல்ல -வரும் நன்மைகளை -சொலப் புகில் -அமுதூறும் என் நாவுக்கே சொன்னால் மதுர கவி ஆழ்வாருக்கு -இங்கோ உத்யோ மாத்திரத்திலே /ஓத வல்லார் -சொல்ல சொல்ல ஊரும்-பிரதம பர்வம் /அமுதம் உப்பு சாறு கடைந்து -வாய் நஞ்சு பரக்கும் அங்கு –
வசவு / கொண்டாட்டம் / தாபம் மூன்றும் படியில் உள்ளீர் -என்பதால்-

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
இப் பாட்டிலே -எம்பெருமானார் -தம்முடைய தோஷங்களைப் பாராதே -தம்மை
விஷயீ கரித்த வாத்சல்ய குணத்திலே ஈடுபட்டு -அந்த ப்ரீதி தலை மண்டை இட்டு லோகத்தார் எல்லாரையும் –
உஜ்ஜீவிப்பிக்க வேணும் பர சமர்த்தி பரராய் -அவர்களை சம்போதித்து -சம்சார மக்னரான உங்களுக்கு-கரை கண்ட நான் -உபதேசிக்கிறேன் -தர்ம பிரத்வேஷியான கலியை வைதேசிகமாக போக்கக்-கடவதான சதுரஷரி மந்த்ரத்தை அதிகரியும் கோள் ..உங்களுக்கு சகல சுபங்களும் தன்னடையே-வந்து சேரும் என்கிறார் –
வியாக்யானம் –
படியில் உள்ளீர்
-இருள் தரும் மா ஞாலமான இந்த லோகத்தில் வர்த்திக்கிற அறிவிலிகளான
மனிசரே -சுக துக்க மூலமான புண்ய பாபங்களுக்கு விளை நிலமாய் இருக்கிற பூமியிலே இருக்கிற மனுஷ்யரை
என்றபடி -அன்றிக்கே –
எம்பெருமானார் திருவவதரித்து அருளுகையாலே -விச்வம்பரா புண்யவதி -என்கிறபடியே பாக்யவதியாய் இருக்கிற-பூமிக்கு உட்பட்டவர்களே -என்னுதல் -உள்ளபடி தத்வ ஹித புருஷார்த்தங்களை அறியப் பெறாதே -பிரக்ரிதி ஸ்வபாவத்தில்
திரியுமவர்களே -என்னுதல் –படி -பூமியும் -ஸ்வபாவமும் – அநாதி காலமே தொடங்கி இதன் வாசி அறியாதே இதன்-சப்தாதி விஷயங்களுக்கே -சேஷமாய் போந்த உங்களுக்கு -யான் -முன்பு துர் விஷயங்களிலே மக்னனாக
பின்பு எம்பெருமானார் தம்முடைய கிருபையாலே-மக்னானுத்தர தேலோ கான் காருண்யாஸ் சாஸ்திர பாணினா -என்கிறபடியே சமுத்தரிக்க -அங்குத்தைக்கு
அந்தரங்கனாய் -அங்கே இருக்கிற ரசத்தை அனுபவித்து கைக் கண்ட நான்
-உரைக்கின்றனன்-ச்நேஹாஸ் ச-பஹூமானாச்ச ஸ்மார யேத்வாம்னசிஷையே – என்கிறபடி ஹிதோபதேசம் பண்ணுகிறேன் -.
அறம் -கலவ்கார்த்த யுக தர்ம கர்த்தும் இச்சதி யோ நர -சாதுர்வர்ண்யம் மயா ஸ்ரஷ்டா குணா கர்ம விபாகச –என்கிறபடி -பகவத் ஆக்ஜா ரூபமாய் -தத்தத் வர்ணாஸ்ரம தேச காலாதி காரிகளாலே நியமதாய் –அதீந்த்ரிய வியாபார நிவ்ருத்தமான வ்ருத்தி விசேஷம் –சீறும் உறு கலியை –இப்படிப்பட்ட தர்மத்தையும் தத் கர்த்தாவையும் குறித்து –ஸ்வா மித்ரோ ஹீதிதம் மத்வா தஸ்மை பிரத்வேஷ்யதே கலி -என்கிறபடி அத்யந்த குபிதனாய் -இந்த-துர்வ்யாபாரத்திலே முறுகி இருக்கிற கலி புருஷனை -அன்றிக்கே –உறு கலியை -பிரபலமாய் உறைத்து நிற்கிற கலியை-என்றுமாம் –துரக்கும் பெருமை – சும்மனாதே கை விட்டோடி தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே
அந்த கலி புருஷனும் அவனாலே பிரவர்த்திக்கப்பட்ட அதர்மங்களும் ஓடிப்போம் படி பண்ணக் கூடிய அதிசயத்தை உடைய
இராமானுசன் என்று சொல்லுமினே-
சஹாஸ்ராஷரி மாலா மந்த்ரத்தை ஜபிக்க வேண்டா -ந சித்ரா மாநுஜெத்யஷா சதுரா சதுரஷரி –காமவச்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ர்ச -என்று இவருடைய ஆசார்யன் ஆழ்வானும் ஆழம் கால்-பட்டால் போலே -லோகத்தார் உடைய சம்சார துக்கத்தை பார்த்த இவர்க்கு கரை புரண்டு வந்தவாறே
எம்பெருமானாரைப் போலே இவரும் இந்த அதி ரகஸ்யத்தை -தூளிதானமாக -எல்லார்க்கும் வெளி இடுகிறார் காணும் .
இத்தாலே பலிக்கிறது என் என்ன –சுரக்கும் திரு உணர்வும் -லஷ்மனோ லஷ்மி சம்பன்ன -சது நாகவர ஸ்ரீ மான் -என்றும்
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம் -என்றும்-சொல்லுகிறபடி -சர்வதேச சர்வ கால சர்வ அவச்தோசித-சர்வ வித கைங்கர்ய சம்பத்தும் -அத்யந்த பர சேஷ தைகாச
ஸ்வரூப ஞானமும் மேன்மேல் என வர்த்திக்கும் -அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே –என்கிறபடியே பக்தி யாகிற சம்பத்தும் -அதில் நின்றும் ததீய பர்யந்தமாய் இருக்கிற ஸ்வரூப-யாதாம்ய ஞானமும் -சஹ்யத்தின் நின்றும் காவேரி பிறந்தால் போலே –சுரக்கும் என்றபடி –
சொலப்புகில் வாய் அமுதம் பரக்கும்
-தேவ ஜாதி எல்லாம் திரண்டு -அநேக சாமக்ரியை கொண்டு –
நெடும்காலம் படாதன பட்ட பின்பு இறே இந்த உப்பு சாறு பிறந்தது -பிறப்பே பிடித்து போஜன ரசம்-அறியாதவர்கள் ஆகையாலே -அத்தை அமர்த்தம் என்று பேரிட்டார்கள் -அது போல் அன்றிக்கே –
தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்கிறபடியே ஆழ்வாருடைய திருநாமம் தாம்
அனுசந்தித்த பின்பு இறே ஸ்ரீ மதுரகவிகள் நாவுக்கு யதார்த்தமான அமர்த்தம் பிறந்தது -அதன் படியும் போல் அன்றிக்கே
இந்த சதுரையான சதுரஷரியை அனுசந்திக்க வேண்டும் என்று உத்யோக்கிகவே –அவர்களுடைய-திருப் பவளத்துக்கு ஸ்வரூப உஜ்ஜீவனமான அம்ர்தம் ஊற்று போலே சுரவா நிற்கும் –இருவினை பற்றற ஓடும் –
ததா வித்வான் புண்ய பாபே விதூய -என்கிறபடியே அனுபவத்தாலும் பிராயசித்தத்தாலும் நிவர்திப்பிக்க
அரிதான மகா பாபங்கள் எல்லாம் வாசனையோடு -பிரிகதிர் படாதே விட்டோடும் -வேதாந்த விரோதம் வாராமைக்காக –
சூஹுர்தச்சா துக்ர்த்யாம்த்விஷந்த பாப கர்த்யாம் -என்கிறபடியே அசல் பிளந்தேறவிட்டு இந்த-அதிகாரிகளை நிர்மலராகப் பண்ணும் என்றது ஆய்த்து-

————————————————————————–

அமுது விருந்து
அவதாரிகை
இப்படி தம்மைக் கை தூக்கி விட்ட ப்ரீதியாலே உலகினரை நோக்கி
எம்பெருமானார் திரு நாமத்தை சொல்லும் கோள் -உங்களுக்கு எல்லா நன்மைகளும்
உண்டாகும் -என்கிறார்..
பத உரை –
படியில்-பூமியில்
உள்ளீர் -இருப்பவர்களே
யான்-நான்
உமக்கு -உங்களுக்கு
உரைக்கின்றனன் -சொல்லுகின்றேன்
அறம்-தர்மத்தை
சீறும் -கோபிக்கும்
உறு கலியை -வலிமை மிக்க கலியினை –
துரக்கும் -ஒட்டி விடும்
பெருமை -மகிமை வாய்ந்த
இராமானுசன் என்று சொல்லுமின் -இராமானுசன் என்று திரு நாம சங்கீர்த்தனம் பண்ணுங்கள்
திருவும் -செல்வமும்
உணர்வும் -ஞானமும்
சுரக்கும் -தொடர்ந்து பெருகும்
சொலப்புகில் -சொல்ல முற்பட்ட உடனேயே
வாய்-வாயிலே
அமுதம்பரக்கும் -இனிமை பரவி நிற்கும்
இருவினை -பெரும் பாபங்கள்
பற்று அற -வாசனையும் அழிய
ஓடும் -உங்களை விட்டு ஓடிப் போய் விடும்
வியாக்யானம்
சுரக்கும் திருவும் உணர்வும் –
திரு எனபது இங்கே பக்திச் செல்வத்தை
சுரத்தல்-மேன்மேலும் பெருகுதல்
விஷயம் விலஷணமாய் போக்யதை அளவு படாமை பற்றிப் பக்தியும் அளவிறந்து மேன்மேலும்
வளர்கிறது -என்க-
உணர்வு -ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்றபடி
பரம் பொருளை அதன் எல்லை நிலமான அடியார் அளவும் உள்ளவாறு அறிதல் –
ஸ்வரூபம் ரூபம் குணம் முதலியன அளவு படாமையின் அவை பற்றிய உணர்வும் மேன்மேலும்
அளவிறந்து பெருகுகிறது என்க -பக்தியையும் உணர்வையும் உரைத்தது
வைராக்யத்துக்கும் உப லஷணம்-ஆத்ம குணங்களில் முக்கியமானவை ஆதலின்
இவை மட்டும் கூறப்பட்டன
சொலப் புகில் வாயமுதம் பரக்கும்
எனக்கு என்றும் தேனும் பாலும் அமுதுமாகிய திரு மால் திரு நாமம் –பெரிய திரு மொழி – 6-10 6- –
என்று நாராயணா நாமம் தனக்கு அமுதமுமாய் இருப்பதாகத் திரு மங்கை ஆழ்வார் அருளிச் செய்தார் –
தென் குருகூர் நம்பி என்னக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே -என்று நம் ஆழ்வார் திரு நாமம்
சொன்னால் அமுது தன் நாவில் ஊருவதாக மதுர கவி ஆழ்வார் அருளிச் செய்தார் .
நாராயணா நாமம் சொல்ல சொல்ல அமுதமாக இருக்கிறது .
நம் ஆழ்வார் திரு நாமம் ஒரு கால் சொன்னால் போதும் நாவிலே அமுதம் ஊறிக் கொண்டே இருக்கிறது .
ராமானுச நாமமோ சொல்லத் தொடங்கின உடனேயே அமுதனாருக்கு வாயிலே அமுதம் பரக்கிறது –
உய்வித்தலானும் இனிமையானும் திரு நாமம் அமுதமாக சொல்லப்படுகிறது-
மூன்று திரு நாமங்களும் சதுரஷரி –நான்கு எழுத்துக்கள்-கொண்டவையே –
நாராயண -சடகோப ராமானுஜ -என்பவை அத்திரு நாமங்கள் .
திரு மங்கை ஆழ்வாருக்கு அமுதாய நாமம் -ஐஹ லவ்கிகம் ஐஸ்வர்யம் ச்வர்காத்யம் பார லவ்கிகம்-என்றபடி
இம்மைப்பயனையும் மேலுலப் பயனையும் தர வல்லது –
முக்தியை மாத்ரம் அன்றி சம்சாரத்தையும் பெருக்குவதே உள்ளது –
மதுர கவிகளுக்கு அமுதூரும்படி அமைந்த சடகோப நாமமோ -அவர் நாவுக்கே -சொன்ன பிறகே –
அமுதூருவதாய் அமைந்தது .
அமுதனாருக்கு அமுதம் பரக்கும்படி அமைந்த ராமானுஜ நாமமோ சம்சாரத்துக்கு துணை புரியாது –
முக்தியே தர வல்லதாய் –படியில் உள்ளோர் அனைவருக்கும் சொல்லப் புக்கவாறே அமுதம்
பரக்கும்படி செய்ய வல்லதாய் வீறு பெற்று விளங்குகிறது -இங்கனம் வீறு பெற்று விளங்குவது பற்றியே
ஆழ்வான் -நசெத் ராமானுஜெத்யேஷாசதுரா சதுரஷரீ காம வச்த்தாம் ப்ரபத்யன்னே ஜந்தவோ ஹந்த மாத்ருசா -என்று
சாதுர்யம் வாய்ந்த இந்த ராமானுஜ சதுரஷரீ இல்லை எனின் -என் போன்ற பிராணிகள் என்ன நிலையை அடைவர் -என்றார்.
அத்யேஷ்யதேசைய இமம் தர்ம்யம் சம்வாத மாவயோஜ்ஞான யஜ்ஞ்ஞே நதேநாஹ மிஷ்ட ச்ச்யாமிதிமேமதி -என்று
கீதை ஒத்தப் போகிறவன் எவனோ-அவனால் ஞான வேள்வியால் -நான் ஆராதிக்கப் பட்டவனாகி விடுவே
என்பது என் அபிப்பிராயம் -என்று கூறியது போலே –
சொல்லப் புகில் வாய் அமுதம்பரக்கும் -என்று தம் ஆதரம் தோற்ற அமுதனார் அருளிச் செய்கிறார்.
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே –திரு வாய் மொழி -9 1-11 – – என்று
நம் ஆழ்வார் அருளிச் செய்து உள்ளமையும் காண்க .இரு வினைகள் பற்றற ஓடும்
இரு வினைகள்-பெரிய பாபங்கள்
பாபத்துக்கு பெருமையாவது -அனுபவத்தினாலோ -ப்ராயச்சித்ததினாலோ ஒழிக்க ஒண்ணாமை –
புண்ணிய பாபங்கள் என்கிற இரு வினைகள் ஆகவுமாம்-
அவைகளால் படும்பாடு பகைவர்கள் வேணும் என்று துன்புறுத்துவது போன்று இருத்தலால்
அவைகட்கு உயிர் கொடுத்து இதுகாறும் கண்ணுற்று படாதபாடு படுத்திய பாபங்கள் –
இராமானுச நாமம் சொல்லப் புக்கவாறே அஞ்சி ஓடுவதாக அருளிச் செய்கிறார்.பற்றற ஓடுகின்றன
இரு வினைகள் .பற்று அற-வாசனையும் இல்லாது முழுதும் ஒழிந்து விட்ட படியால் இனி
மீள மாட்டாமை தொடருகிறது .நாராயண நாமம் ஆயின் வினைகள் மீண்டும் தலை காட்டவும் கூடும் –
மாடே வரப்பெறுவராம் என்றே வல் வினையார்
காடானு மாதானும் கைக்கொள்ளார் -ஊடே போய்ப்
பேரோதும் சிந்து திரைக் கண் வளரும் பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து -பெரிய திருவந்தாதி – 59– – என்று நம் ஆழ்வார் வல்வினையார் பேர்ந்து போகாது
பக்கத்தில் இருப்பதாக அருளிச் செய்வது காண்க -கண்டிலமால் என்பது தலை காட்டிற்று போலும் -.
வினையின் ஸ்வபாவம் இதுவே இருந்தது .பக்கத்தில் வருதலோடு அமையாது -சினத்தால் கண் சிவந்து
அடர்க்கவும் முற்பட்டதாக -அகம் சிவந்த கண்ணினராய் -பெரிய திருவந்தாதி – 69- -என்னும் பாசுரத்திலே
நம் ஆழ்வார் கூறி இருப்பதும் இங்குக் காணத் தக்கது –படியில் உள்ளீர் உமக்கியான் –
வேட்கை விளைவிப்பதற்க்காகப் பயன்கள் கூறப்பட்டன கீழே –
அவற்றைத் தரும் திரு நாமத்தை உபதேசிக்கிறார் மேலே –
படியில் உள்ளீர் –
திரு நாமத்தைச் சொல்ல எல்லாரும் அதிகாரிகள் என்பது இவ்விளியினால் விளங்குகிறது –
இருள் தரும் மா ஞாலத்தில் -உள்ளவர்களுக்கு தெள்ளியோர் கைக் கொள்ளும் விஷயத்தை
உபதேசிக்கிறேன் -என்றபடி –
இனி -எம்பெருமானார் அவதாரத்தினால் ஏற்றம் பெற்ற பூமியில் வாசம் செய்யும் பேறு பெற்ற
உங்களுக்கு உபதேசிக்கிறேன் -என்றதுமாம் –
எம்பெருமானார் அவதரித்த பூமியிலே பிறந்து -அவர் காலத்திலேயே -அப்பூமியில் உள்ள
பாக்கியத்தை என் என்பது –உரைக்கின்றனன் -என்று நிகழ் காலத்தில் கூறியது -ஒருகால்
உரைத்து ஆறி இராமல் நீங்கள் இழக்கல்ஆகாது என்று மீண்டும் மீண்டும் உபதேசித்துக் கொண்டே
யிருக்கிறேன் என்னும் கருத்துக் கொண்டது –
உமக்கு
திரு நாம பிரபாவத்தை அறியாதவர்களாய் இழந்து இருக்கிற உங்களுக்கு
யான் –
அனுபவத்தினால் உண்மையான பிரபாவத்தை அறிந்து கொண்ட நான்
அறம் சீறும் உறு கலியை துரக்கும் பெருமை –
கலி அறத்தை சீறுவதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை –
அறம் அறமாய் இருத்தலே காரணம் .
கலிக்கு அறத்தின் மீது இயற்பகை என்க .
செல்லாக் கோபம் அன்று -அறத்தை குலைக்கும் வலிமை அதற்கு உண்டு என்பர் -உறு கலி –என்றார்
அத்தகைய கலியையும் தம் தொடர்புடைய இடத்து நின்றும் கால் பாவ ஒட்டாது ஒட்டி விடும்
பிரபாவம் உடையவர் எம்பெருமானார் -அவர் திரு நாமத்தை சொல்லுங்கள் என்கிறார் .
இப்பாசுரத்தில் மூன்றாம் அடியில் –உமக்கியான் -என்னும் இடத்தில்
குற்றியலிகரம் அலகு பெறாது –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது

உபதேசம் பண்ணி ஆவி வந்து எடுத்த -விஷயீ கரிக்கையால் வந்த ப்ரீதியாலே
எல்லோரும் ஸ்வாமி திரு நாமத்தை சொல்லுங்கள்.-உய்யலாம் என்கிறார் .-நாராயணா -சடகோபன் -ராமானுசா -சதுரமான சதுர் அக்ஷரங்கள் –
.அறம் சீறும் -உறு கலி- பகை கலிக்கும் தர்மத்துக்கும் நிர்கேதுமான பகை-
. உறு கலி =பலிஷ்டமான கலி.-.கோபமும் சக்தியும் உண்டு கலிக்கு..படியில் உள்ளீர்
..இவ் உலகில் உள்ளவர்களே.. உமக்கு -யான்-உரைகின்றனன்.
திருவும் உணர்வும் சுரக்கும் பக்தியும் ஞானமும் -வைராக்யதுக்கும் உப லஷணம்
..பக்தி தான் ஸ்ரீ சம்பத் ..ஒண் தாமரையால் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு
பிரணாவாகாரம் ஸ்ரீ ரெங்க விமானம் ஸ்ரீ பாஷ்யம் -மூன்றிலும் சேஷித்வம் தெரிந்து கொள்ளலாம்
-ஞானம் -சொல புகில் வாய் அமுதும்-
ஆரம்பத்தில் யத்தனித்த உடன்
..இரு -பெரிய- பாப புண்யங்கள் இரண்டும் பற்று அற ஓடும்..
படியில்– இருள் தரும் மா ஞாலத்தில் உள்ளீரே-
எம்பெருமானார் அவதரித்த காலத்தில் இருக்கும் பாக்ய சாலிகளே .
.கலி கெட போவதால்-நிசயுதமாக கை கண்ட நான்-
வாசி அறியாத-பெருமை தெரியாமல் பெற்று போவார்களும் உண்டு-இருந்தும் இழந்து இருக்கிற உங்களுக்கு
சொரூப ஞானமும் விலக்காமையும் வேணும் பிராப்யத்துக்கு
–தூங்கும் பொழுது விலக்காமை இருக்கும் -துஞ்சும் போதும் விடேல் ஆழ்வார் தம் நெஞ்சுக்கு உபதேசம்
அறம் சீறும்-நடை ஆட விடாத பிர பலமாய் உறைந்து நிற்கிற கலி
.அறம்-வர்ண ஆஸ்ரம தர்மங்கள் -அதீந்த்ர்ய வியாபார நிவ்ருத்தமான -சீறும்
– தர்மத்தின் மேலும் கர்த்தாவின் மேலும் கோபம் கொண்டு..
துர் வியாபாரத்தில் முழுகி இருக்கும் கலி புருஷன் ..
தம் உடைய சம்பந்தம் உள்ள இடத்தில் நில்லாத படி ஒட்டி விடும்-பிரபாவத்தை உடையவர் ஸ்வாமி-
துரக்கும் -ஒட்டி விடுகிற ..
பறை தருவான் ..உபதேசம் பண்ணும் பொழுது கிடைக்க போகும் வஸ்து ஏற்றம் சொல்லி
..சுரக்கும் -மேல் மேல் வளர்ந்து கொண்டே இருக்கும் அளவு படாமல் இருக்கும்
.என்னக்கால் அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே
-உபாசனம் த்யானம் பண்ணினால் என்றால் அமுதூரும் ஆழ்வார்களுக்கு .
இங்கு சொல புகுந்தாலே ரசம் பிறக்கும் ..
அனுபவ வினாச்யம் ஆதல் பிராய சித்தம் வினாச்யம் ஆதல் செய்யாத மகா பாபங்கள்
தானே அஞ்சி சவாசனமாக விட்டு ஓடும் ..ஸ்வாமி உடைய திரு நாமமே பண்ணி கொடுக்கும் ..
உமக்கியான் –ககரத்தின் மேல் ஏறின இகரம்
என் முடியாது எனக்கி யாதே அரியது -நூறு அந்தாதி பாசுரம் போல- 17 எழுத்தாக என்ன கடவது –வண்ணம் மாறாமல் ..
படியில் உள்ளீர் இருள் தரும் ஞாலத்தில் -வர்த்திக்கும் அறிவிலிகளீரே
சுக துக்கம் -விளை நிலமான பூமியில்
ஸ்வாமி தோன்றிய பூமியில் இருக்கும் பெருமை பெற்றவர்களே –
பூமியே பாக்கியம் அடைந்தது ஸ்வாமி தோன்றியதால்
பிரகிருதி ச்வாபத்தால் தத்வ ஹித புருஷார்த்தங்கள் அறியாமல் திரியும் அவர்களே
படி –பூமியும் ஸ்வாபமும்
சப்தாதி விஷயங்களுக்கு சேஷமாய் போய்
எம்பெருமானார் சப்த விஷயத்துக்கு சேஷமாய் போகாமல்…
.இதே போல் இருந்த அமுதனாரும் ஸ்வாமியின் கிருபையால் சாஸ்திரம் கொண்டும அரங்கனைக் காட்டியும் தூக்கி விடப்பட
அங்கு உத்தைக்கு அந்தரங்கராய் ரசத்தை கை கண்டவர் ஹித உபதேசம் பண்ணுகிறார்-
சிநேகத்தால் நினைவு படுத்து கிறார் .
..துரக்கும் பெருமை..சும்மனாதே கை விட்டு ஓட –தூறுகள் பாய்ந்தனவே -வானோ மறி கடலோ -ஓடி போயின
–நாலு எழுத்து- நாராயண சடகோப ராமானுஜ—சாதுர்யமான நான்கு எழுது ராமானுஜ என்கிறார் – ஆழ்வான் –
கிருபையால் சரம ஸ்லோக அர்த்தம் ஸ்வாமி அருளியது போல அதி ரகஸ்யத்தை அமுதனார் இங்கு வெளி இடுகிறார்.

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: