அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-42-ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
நாற்பத்திரண்டாம் பாட்டு-அவதாரிகை –
பகவத் அவதாரங்களில் திருந்தாதவர்கள் எல்லாரும் எம்பெருமானார் உடைய அவதாரத்தாலே-திருந்தினார்கள் என்றார் கீழ் -விஷய ப்ரவணனாய் நசித்துப் போகிற வென்னைத் தம்முடைய பரம கிருபையால்-வந்து எடுத்து அருளினார் என்று தம்மை விஷயீகரித்த படியை அனுசந்தித்து தலை-சீய்க்கிறார் இதில்

ஆயிழையார் கொங்கை தங்கு மக்காத லளற்ற ழுந்தி
மாயும் என்னாவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீதில் இராமானுசன் தொல்லருள் சுரந்தே -42 – –

ஸ்ரக்வ ஸ்த்ராபரணான்க் கராகங்களாலே தேக தோஷம் புறம் தோற்றாதபடி மறைத்து
சேதனரை மோஹிப்பிக்கும் மவர்கள் ஆகையாலே தங்களுக்கு அனுரூபமாக தெரிந்து பூணப்பட்ட-ஆபரணங்களை வுடையராய் -அதுவே -நிரூபகமாக விருக்கும் ஸ்திரீகளுடைய ஸ்தனத்துக்கு-அவ்வருகு ஒன்றில் போகாததாய் -வாக்குக்கு நிலம் அல்லாதபடி-கை கழிந்து இருக்கிற ப்ராவண்யம் ஆகிற அளற்றிலே அழுந்தி -நசித்து போகிற என்னாத்மாவை அளறு-பாய்ந்து முடிய தேடுகிற வர்களை விரகு அறியும் தார்மிகர் வந்து எடுக்குமா போலே-ஸ்ரீயபதியான பெரிய பெருமாளே சர்வ ஆத்மாக்களுக்கும் சேஷி என்று உபதேசியா நின்று உள்ள-ஞான சுத்தியை வுடையராய்
இப்படி உபதேசிக்கும் இடத்தில் க்யாதி லாபாத்யபேஷா ரூப தோஷ ரஹீதரான எம்பெருமானார்-தம்முடைய ஸ்வபாவிக கிருபை கிளர்ந்து அந்த க்ருபா ப்ரேரிதராய் வந்து இன்று எடுத்து அற்ளினார் –இப்படி செய்து அருளுவதே என்று கருத்து –
ஆய்தல்-தெரிதல்
இழை-ஆபரணம்
அக்காதல் என்று -அதினுடைய ஹேயதையை சொல்லிற்றாகவுமாம் –
மாய்தல்-நசித்தல் –

அஸ்மாத் துல்யோ பவத் -மா மலராள்-நாயகன் எல்லா வுயிர் கட்கும் நாதன் அரங்கன்-இத்தையே சொல்லி சொல்லி -ஸ்ரீ யபதி -அரங்கன் –ஸூ லபன் -உயிர்கள் பல -பர ப்ரஹ்மம் ஒருவனே -பொய் மாயை இல்லை –விசிஷ்டாத்வைதம் ஒரே வரியில் –
அக்காதலில் அழுந்தி இருந்தேன் -உபதேசம் கயிறு
ரக்ஷிக்க-புருஷகார பூதை–மா மலராள்- அகலகில்லேன் இறையும்-என்று இருக்க இழக்கவோ-ஸ்வாதி கருடன் பெரியாழ்வார் நரசிம்மன் -தன் அடியார் திறத்தகத்து தாமரையாள்-இத்யாதி -அக்காதல் லளற்ற ழுந்தி-பெருமாள் அழுந்திய காதலால் நமக்கு வாழ்வு -நீளா தேவி -தயா சதகம் கண் புரை உடனே இருக்கட்டும்  போகைய படலம் பக்த தோஷை  பார்க்க முடியாத து ஸூதர்சனம் –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை
கீழில் பாட்டிலே ஈஸ்வரன் அவதரித்து உபதேசித்த இடத்திலும் -திருந்தாத–லவ்கிகர் –எம்பெருமானார் அவதரித்த பின்பு திருந்தி -விலஷணராய்-பகவதீயர் ஆனார்கள் -என்கிறார் –
இப்பாட்டிலே –ஆபாத ரமணீய வேஷைகளான தருணீ ஜனங்களுடைய ஸ்தனங்களிலே பத்தமான ப்ரீதியாலே-ஆழம்கால் பட்டு நசித்துப் போகிற என் ஆத்மாவை -ஸ்ரீயபதியான -திருவரங்க செல்வனாரே-சகல ஆத்மாக்களுக்கும் வகுத்த சேஷி என்று உபதேசிக்கும்படியான ஞான வைசையத்தை உடையராய்
நிர்துஷ்டரான எம்பெருமானார் -இப்போது அந்த லவ்கிகர் எல்லார் இடத்திலும் பண்ணின தம்முடைய-ஸ்வாபாவிக கிருபையை -அடியேன் ஒருவன் இடத்திலும் கட்டடங்க பிரவஹித்து -விஷயாந்திர-பிராவணயத்தில் கர்த்தத்தில் நின்றும் உத்தரித்தார் கண்டாயே -என்று தலை சீய்க்கிறார் –
வியாக்யானம் –
ஆயிழையார்
-சர்மா சர்க்கமாம் சமேதோச்த்தி மஜ்ஞாஞக்லாதிசம்யுதே –
தேஹி சேத் ப்ரீதி மான்மூடோ -என்றும் -கரிமிஜந்துசங்குலம் -என்றும் ஸ்வ பாவ துர்கந்த மசவ்சமத்ரு-வம்களேபரமமூத்ரபுரீஷபாஜனம் -என்றும் -முடித் தலை யூன் என்றும் -சொல்லுகிறபடி
அதி ஹேயமாய் இருக்கிற தேஹத்தின் உடைய ஹேயதை தெரியாதபடி -ஸ்ரக் வஸ்த்ர ஆபரண- ஆதிகளாலே அலங்கரித்துக் கொண்டு –
ஆபா தரமனியைகளான தருணீ ஜனங்கள் உடைய –ஆய்தல்-நெரிதல் – இழை-ஆபரணம்
இழையார் -ஸ்திரீகள் -அகவாயில் தோஷம் ஒன்றும் தோற்றாதபடி -கைப் பாணி இட்டால் போலே –காணும் இவர்கள் அலங்கரித்து கொண்டு இருப்பது –
கொங்கை தங்கும் –
ச்னதவ் மாம்சக்ரந்தி -என்கிறபடியே
மாம்சா சர்ன்மயமான ஸ்தனங்களிலே சக்தனாய் -அவற்றின் தோஷத்தை தெரிய மாட்டாதே –போக்யதா புத்தியைப் பண்ணி -அவற்றுக்கு அவ்வருகே போக அசக்தனாய் -த்ர்ஷ்டார்த்தனானவன் –
தண்ணீர் பந்தலிலே விழுந்து கிடக்குமா போலே அவற்றிலே தான் நித்ய வாசம் பண்ணும்படியான –
அக்காதல் அளற்றில் அழுந்தி –
அந்த விஷயம் போலே அதி ஹேயமான வ்யாமோஹம் என்கிற அள்ளல்
தரையிலே மக்நனாய் -அன்றிக்கே –அக்காதல் -வாக்குக்கு நிலம் ஆகாதபடி -கை கழிந்த காதல் என்னவுமாம் –
மாயும்
-நசித்துப் போந்த -என் ஆவியை -கீழே லவ்கிகர் எல்லாரையும் உத்தரித்தபடி அருளிச் செய்தீர் –இது உமக்கு தெரிந்தபடி என் –கர்ண கரணியாய் -கேட்டு இருந்தீர் ஆகில் -இது நமக்கு விச்வசநீயமாய்-இருக்குமோ என்ன -அப்படிக் கேட்டு சொன்னேன் அல்லேன் -இதுக்கு நான் சாஷி என்று தம்மைக் காட்டுகிறார் –
என் ஆவியை –
என் ஆத்மாவை -இவ்வளவும் -அசந்நேவ -என்னும்படியாய் போந்த என் ஆத்மாவை –ஒரு-கைம்முதல் இல்லா என் ஆத்மாவை –
மா மலராள் நாயகன்
-மா மலர் என்று சமஸ்த புஷ்ப சாதிக்கும்-உத்க்ரிஷ்டமாய் ஸ்லாக்யமாய் இருந்தது ஆகையாலே கமலத்தை சொல்கிறது -அந்த கமலம் தான்
தன்னுடைய கர சரண நேத்ராதிகளுக்கு ஒரு போலியாய் இருக்கையாலும் -பரிமள பிரசுரம் ஆகையாலே-போக்ய தமம் ஆகையாலும் -அதிலே உத்பன்னையாய் -அங்கே நித்ய வாசம் பண்ணுகையாலே மா மலராள்
என்கிறார் –மலராள் நாயகன் -பிரமச்சாரி எம்பெருமான் பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் –
இவளோட்டை சேர்த்தியாலே – வைஷம்ய நைர்க்ரன்யே நசாபேஷத்வாத க்ர்தாப்ரயத் ந அபேஷ ஸ்துவிஹி தப்ரதி ஷித்தாவை யதார்த்திப்ய-என்கிறபடியே -சகல சேதனர்கள் உடையவும் யோக்யதை அயோக்யதைகளை அடைவே கடாஷித்து -தத்
அநு ரூபமாக பலத்தை கொடுப்பவன் என்று பயப்பட வேண்டாதபடி –சஹா தர்மீ சரி ஸௌ ரே ச சம் மந்தரித்த-ஜகத்திதாம் -அனுக்ரஹா மயீம் வந்தே நித்யம் அஞ்ஞா ந நிக்ரகாம் -என்கிற படி தானும் அஞ்ஞான நிக்ரகையாய் –
அனுக்ரக ஏக மயியாய் ஜகத்தினுடைய ஹிதத்தை சர்வேஸ்வரனுக்கு அறிவிப்பவளாய்-கண்ணைப் புரட்டுதல்-கச்சை நெகிள்குதல் முதலான தன்னுடைய ப்ருவிலாச சேஷ்டிதங்களாலே -அவனை வசீகரித்து தனக்கு-கையாளாகப் பண்ணிக் கொண்டு -தானும் -இறையும் அகலகில்லேன் -என்று அநபாயி யாய் இருந்துள்ள
பெரிய பிராட்டியாருக்கு வல்லபனானவன் -இவள் தான் -ந கச்சின் ந அபராத்யதி -என்றவள் இறே –
எல்லா உயிர்கட்கும் நாதன்
-பதிம் விச்வச்ய -என்கிற படியே சகல ஆத்மாக்களுக்கும் பாலகன் -வகுத்த சேஷி -என்றபடி –
ஆனால் -விதி சிவ சனகாத்யைர் த்யாது மத்யந்த தூரம் -என்கிறபடியே -நமக்கு எட்டாத நிலத்தில் இருந்தான்-என்ன வேண்டா –
அரங்கன் –
நாம் இருந்த இடம் தேடி சந்நிஹிதனாய் கொண்டு -அபயம் சர்வ பூதேப்யோ ததாமி –
என்கிறபடியே இருந்தவன் அன்றோ -என்னும் -இப்படி உபதேசம் பண்ணும்படியான
-தூயவன்
நஹிஜ்ஞானே ந சதர்சம் மவித்ரா மித வித்யதே -என்கிறபடியே தத்வ யாதாம்ய ஜ்ஞான பூர்த்தியாலே
என் போல்வாரையும் பாவனராம் படி பண்ணுகிறார் -ஆனால் நீர் அனுவர்த்தனம் பண்ணாதே விஷயாந்தர ப்ரவண ராய் இருந்தீரே என்ன –
தீதில் –
அப்படி இத்தலையில் அதிகாரத்தை பார்க்கை யாகிற தோஷ ரஹீதர் –
உபதேசிக்கும் இடத்தில் க்யாதி லாப பூஜாத்ய பேஷா ரூபா தோஷ ரஹீதர் -என்றுமாம் –
இராமானுசன்
-இப்படிப்பட்ட எம்பெருமானார் –இன்று -அதுவும் காலாந்தரத்திலேயோ –
இன்று வந்து -சகல ஜகத்துக்கும் பிரத்யஷமாகவே இப்போது
வந்து -தொல் அருள் சுரந்து –
உமக்கு ஒருவருக்கும் ஒரு கால விசேஷத்தில் கிருபை பண்ணினார் -அவருக்கு எப்போதும் உண்டோ என்ன –
தொல் -அந்த கிருபை எப்போதும் அவருக்கு ஸ்வபாவிகம்-அருள் சுரந்து -அப்படி பட்ட கிருபை கிளர்ந்து
மேன்மேலும்-என்னுடைய துர்வாசனை எல்லாம் அடி மாண்டு போம் படி -த்ரி பாவனா ரேணு நிவார ணோதகம் –
என்கிறபடியே அவசரித்து மேஹம் வர்ஷித்தால் போலே பண்ணி அருளி
-எடுத்தான் –
ஆற்று வெள்ளத்தில் பாய்ந்து-போகிறவனை விரகு அறியும் தார்மிகர் வந்து எடுத்து ரஷிக்குமா போலேயும் -கூபத்திலே வீழும் குழவி உடன்
குதித்து -அவ் ஆபத்தை நீக்கும் அந்த அன்னை போலவும் -அந்த கிர்பா ப்ரேரிதராய்க் கொண்டு-வந்து எடுத்து அருளினார் –

————————————————————————–

அமுது விருந்து –
அவதாரிகை –
மாதவன் அவதாரங்களிலும் திருந்தாவதர்கள் எல்லாரும் எம்பெருமானார் அவதாரத்தாலே
திருந்தினார்கள் என்றார் கீழ்ப் பாட்டிலே -விஷய ப்ரவணனாய் நசித்துப் போகிற என்னைத்
தமது பரம கிருபையால் எம்பெருமானார் வந்து எடுத்து அருளினார் என்று தமது
பண்டைய இழி நிலையையும் இன்று எய்திய பேற்றின் சீர்மையையும் பார்த்துப்
பெருமைப்பட்டுப் பேசுகிறார் -இந்தப் பாட்டிலே –
பத உரை –
ஆய் இழையார்-தெரிந்து எடுத்த அணிகள் பூண்டவர்களான பெண்களின் உடைய
கொங்கை -தங்களிலே
தங்கும் -நிலை நிற்கும்
அக்காதல்-அப்படிப்பட்ட காதல் எனப்படும்
அளறு-சேற்றில்
அழுந்தி -அழுந்திப் போய்
மாயும் -நசித்துக் கொண்டு இருக்கும்
என் ஆவியை -என்னுடைய உயிரை
மா மலராள் நாயகன் -பெரிய பிராட்டியாரான கணவரான
அரங்கன் -பெரிய பெருமாளே
எல்லா உயிர் கட்கும் -எல்லா ஆத்மாக்களுக்கும்
நாதன் -சேஷியாவான்
என்னும் -என்கிற உபதேசம் செய்யும்
தூயவன் -சுத்தியை உடையவராய்
தீது இல் -குற்றம் அற்றவரான
இராமானுசன் -எம்பெருமானார்
தொல் அருள் சுரந்து -இயல்பான கிருபை பெருகி
வந்து இன்று எடுத்தனன் -வந்து இன்று எடுத்து அருளினார்
வியாக்யானம் –
ஆயிழையார் –அளற்றழுந்தி-
பெண்களை ஆயிழையார் என்று இங்கு குறிப்பிட்டது குறிக் கொள்ள தக்கது –
கண்டவர்கள் காதல் புரியும்படி தங்களை அலங்கரித்து கொள்ள அவர்கள் அணிகளை
ஆய்ந்து எடுப்பதிலேயே நாட்டம் கொண்டவர்கள் -என்பது கருத்து –
இழை என்பது ரத்னங்கள் இளைத்த உயர்ந்த அணிகளைக் கருதுகிறது –
இழை-உப லஷணமாய் ஆடை முதலிய வற்றையும் கொள்க -கொள்ளவே ஆடைகளாலும்
அணிகளாலும் -சாந்து முதலியவைகளாலும் -தங்கள் உடல் நாற்றம் முதலிய குற்றம்
புறம் தோற்றாதவாரும்-நலன் உள்ளது போல் தோற்றமாறும் மேனி மினுக்கி மயக்குமவர்கள்
ஆகையால் -மேல் தோற்றத்தில் அழகியராய்-படினும் ஆராய்ந்து பார்த்தால்-அருவருக்கத் தக்கவரே
என்றது ஆயிற்று -ஆகவே காதலை விளைவிப்பவர்களே அன்றி காதலிப்பதற்கு உரியர் அல்லர்
என்னும் கருத்து புலப்படுகிறது -இங்கு -அன்பின் விழையார் பொருள் விழை யுமாய் தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும் –வரைவின் மகளிர் -என்னும் குறளும் -ஆய்ந்த தொடியினை உடையார் என்றதனாலும்
இனிய சொல் என்றதனாலும் -அவர் கருவி கூறப்பட்டது -என்னும் பரி மேல் அழகர் உரையும் உணரத் தக்கன –
இனி இவன் தம்மைக் காதலித்து அணுகினும் தாம் இழை களையே காதலிப்பவராய்-அவைகளையே தேர்ந்து
எடுப்பவர் என்னலுமாம்-காதலித்தவன் அருள் நோக்கம் நாடி நிற்க அவர்கள் அணி நோக்கம் கொண்டவர்களாய்
இவனை அலஷ்யம் செய்கிறார்கள் -என்றபடி –
இவ்விடத்தில் பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி அணி மென் குழலார்-இன்பக் கலவி யமுதுண்டார் -திருவாய் மொழி -4 1-5 – – என்னும் நம் ஆழ்வார்  ஸ்ரீ சூக்தியும் –
பணிமின் திருவருள் என்னும் -என்பதனை -இன்பக் கலவி யமுதுண்டார் -என்பதோடு
இயைத்து பட்டர் -அவன் இப்படுக்கையிலே வைத்து திருவருள் பணிமின் -என்னா நின்றால்
அவர்கள் -கொண்டாடத்தை அநாதரித்து ஆபரணத்தை திருத்துவது குழலைப் பேணுவதாக நிற்பார்கள்
என்ற சுவையே வடிவு எடுத்தால் போன்று அருளிய வியாக்யானமும் நினைவு கூரத் தக்கன –
கொங்கை தங்கும் காதல்
-கொங்கைக்கு அப்பால் செல்லாது அங்கேயே காதல் தங்கியது -என்க
தங்கும் காதல் என்னவே நிலை பேர்க்காலாகாமை தோற்றுகிறது –
பேசி மாளும்படி அன்றி மூளும் காதல் கைம்மிக்கது என்பார் –அக்காதல்-என்றார் –
இனி காதலின் பொல்லாங்கைக் கருதி -அக்காதல் -என்றதுமாம் –
அகப்பட்டோரைத் தப்ப வொட்டாது ஆழ்த்தி முடிப்பது பற்றி காதல் அளறு என உருவகம்
செய்யப்பட்டது -இனி அக்காதல்
அளறு -நிரயத்தினை-இடையீடு இன்றி பயப்பது என்பது பற்றி காதலை அளறு ஆக
உருவகம் செய்தலுமாம்-வரை விலா மாணிழையோர் மென் தோள் புரை யிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு -வரைவின் மகளிர் -என்னும் குறளும்
அவர்கட்கு பூரியற்கு அளறு இடை இன்றிப் பயக்கும் என்பது தோன்ற -தோளினை-
உருவகம் ஆக்கியும் கூறினார் என்னும் பரி மேல் அழகர் உரையும் இங்கு உணரத் தக்கன –மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று
மாயும் ஆவி என்கையாலே -சாகும் தருவாயிலே வந்து எடுத்தமை தோற்றுகிறது
என் ஆவியை இராமானுசன் வந்து எடுத்தான் என்று கூறுதலின் தனது செயல் அறுதியைக் காட்டுகிறார் –
சற்று முன்பு வந்து எடுப்பினும் இவர் தடுப்பார் போலும் –
எம்பெருமானார் தொல் அருள் உடையவராய் இருந்தும் இது காறும் எடுக்காது விட்டு இருந்து
இன்று வந்து எடுத்துதற்கு காரணம் இதுவே -அளற்றில் அழுந்தி மாய்தல் ஆவது -புத்தி நாசாத் ப்ரணச்யதி-
என்றபடி -வுய்யும் உபாயம் தோன்ற கிலாமையின் ஆன்ம ஸ்வரூபம் மங்கி -இருந்தும் இல்லாதது போலே ஆதல்-
காமாதி தோஷ மாத்ம பதாச் ரிதா நாம் -யதிராஜ விம்சதி -என்றபடி -தம் அடியாரையும் காதல் அளறில் நெருங்க
விடாதவர் -அவ் அளறிலே தாமே வந்து -தார்மிகர் விரகு அறிவாராய் அளறறிலே பாய்ந்து முடிகிறவர்களை –
எடுப்பது போலே -என்னை எடுத்து அருளுவதே என்று ஈடுபடுகிறார் –
ஜட ரகு ஹரே தேவ ஸ்தி ஷ்டன்னிஷத்வர தீர்கி கா நிபதி தா நிஜா பத்யா தித் சாவதீர்ண பித்ரு க்ரமாத் -என்று
தேவன் அளற ஓடையில் விழுந்து விட்ட தன் குழந்தையை எடுக்கும் விருப்பத்தினால் அவ்வோடையில் இறங்கும்-தந்தை போன்று -இதய குகையில் எழுந்து அருளி உள்ளான் -ரகஸ்ய த்ரய சாரம் -நிர்யானாதிகாரம் -என்று
வேதாந்த தேசிகன் இதயத்தில் உள்ள கோஷத்தை பொருள் படுத்தாது தேவன் அந்தர்யாமி ரூபத்துடன்
சேதனனை கை தூக்கி விட வாத்சல்யத்துடன் எழுந்து அருளி இருப்பதை பாராட்டிப் பேசினார் -அமுதனார் காதல்
அளறறிலே உள்ள குற்றத்தை -சற்றும் பொருள் படுத்தாது -தன்னைக் கை தூக்கி விட வாத்சல்யத்துடன் எம்பெருமானார்
எழுந்து அருளி யதைப் பாராட்டி பேசுகிறார் -அமுதனாரைப் பின்பற்றி மணவாள மா முனியும் ஆர்த்தி பிரபந்தத்திலே
கூபத்தில் வீழும் குழலி யுடன் குதித்தல்
வாபத்தை நீக்கும் அந்த அன்னை போல் -பாபத்தால்
யான் பிறப்பே னேலும் இனி எந்தை எதிராசன்
தான் பிறக்கும் என்னை உய்ப்பதா -என்று அருளி இருப்பது அனுசந்திதற்கு உரியது
இதனாலே மாதவனே கண்ணுற நிற்கிலும் காண கில்லார் நாரணற்கு ஆனதற்கு தாமே சாஷி என்றார் ஆயிற்று –
மா மலராள் –என்னும் தூயவன் –
விரகு அறிந்த எம்பெருமானார் தம்மைக் கை தூக்கி விட்ட படியை இதனால் அமுதனார் காட்டுகிறார் .
உபதேசம் என்னும் நெடும் தடக்கையைக் கிருபையினால் நீட்டி -என்னை எம்பெருமானார் எடுத்து
அருளினார் -என்கிறார்.போலி அழகிலே மயங்கி அளற றில் அழுந்தினையே –
அழகுத் தெய்வம் ஆகிய மா மலராளே காதல் உறும் நாயகன் உடைய மெய் அழகில் அன்றோ
ஈடுபட வேண்டும் என்பது எம்பெருமானார் முதல் உபதேசம் -செய்தது -பெரிய பிராட்டியார் துய்க்கும்
மெய் அழகினை நாம் துய்த்தல் முறையோ -என்னும் ஐயம் நீங்க –எல்லா உயிர் கட்கும் நாதன் –என்பது
அடுத்துச் செய்யும் உபதேசம் –
எல்லா உயிர் கட்கும் -பிராட்டிக்கு உள்ள உறவு முறை உயிர் இனம் அனைத்தைக்கும் உண்டு என்பது கருத்து-
மா மலராளுக்கும் நாயகன் -உயிர் கட்கும் நாதன்-என்றது ஆயிற்று –
இனி எல்லா உயிர் கட்கும் நாதன் மா மலராள் நாயகன் –எனக் கொண்டு -நாதனாய்-சேஷியாய்-இருக்கும்
தன்மை ஸ்ரீ யபதிக்கே என்னலுமாம் -உபயாதிஷ்ட்டானம் ச ஏகம் சேஷித்வம் -சேஷியாய் இருக்கும் தன்மை
பிராட்டி பெருமாள் இருவர் இடத்திலும் சேர்ந்து அமைந்து உள்ளது -என்றபடி –
நாதனாய் -சேஷியாய் -இருப்பவன் மா மலராள் நாயகனே -என்க –
மெய் அழகினை துய்ப்பது கண்ணினால் கண்டால் அன்றோ –
ஸ்ரீயபதியாய் -சேஷியாய் இருப்பானை நம்மால் காண இயலுமோ -என்னும் ஐயம் அறுப்பது –அரங்கனை-
என்று மேலும் செய்யும் உபதேசம் -நாம் எல்லாரும் கண்ணாரக் கண்டு மெய் அழகினை துய்க்கலாம் படி
கோயிலிலே பெரிய பெருமாளாய் சேவை தரும் சௌலப்யம் -எளிமை-நிறைந்தவன் அரங்கன்-என்றபடி –
இங்கனம் அரங்கன் பால்-மா மலராள் நாயகன் -என்று மேன்மையையும் –
நாதன்-என்று ப்ராப்தியான -இயல்பான -தொடர்பினையும்
காண்பித்து காதல் விளைவித்து எம்பெருமானார் என்னை -அக்காதல் அளறறில் இருந்து எடுத்து அருளினார்
என்கிறார்–மாற்பால் மனம் சுழிக்கச் செய்து மங்கையர் தோள் கை விடச் செய்து அருளினார் -விரகு அறிந்த
எம்பெருமானார் -பிள்ளை உறங்கா வல்லி தாசரை இவ்விதமே எம்பெருமானார் திருத்தி
அருளினதும் இங்கு நினைக்கத் தகும் –
இனி மா மலராள் நாயகன் அரங்கன் எல்லா உயிர் கட்கும் நாதன் -என்று கூட்டி –
ஸ்ரீயபதியான பெரிய பெருமாளே சர்வத்மாக்களுக்கும் சேஷி என்று உபதேசித்து அருளினதாக கொள்ளலுமம் –
மா மலராள் மன்னும் ஆகமும் தானுமாய் காட்சி தரும் அரங்கனை சேஷியாக -சேஷத்வம் உடையவனாக –
சேஷ சயனம் உடையவனாக -நேரே உபதேசம் மூலம் கண்டு கொள்ளும்படி செய்து அக்காதல் அளறறில் இருந்து
எடுத்து அருளினார் எம்பெருமானார் -என்க –
தூயவன் –
உபதேச ஞானத்தில் உள்ள தூய்மை உடையவர் மேல் ஏற்றப்பட்டது
தூய்மை யாவது ஐயம் திரியற்ற தெளிவு
இதனால் ஆப்தி அதிசயம் கருதப் படுகிறது -நம்பிக்கை கொள்ளத்தக்க உபதேசம் செய்பவர் -என்றபடி –
தீதில் இராமானுசன் தொல் அருள் சுரந்தே –
தீது உபதேசத்துக்கு அனுவர்த்தனத்தை எதிர்பார்த்தல்-
எனது அனுவர்த்தனத்தை எதிர் பாராமல் தாம் பரம கிருபா மாத்ர பிரசன்னாசார்யராய் -உபதேசித்து-அருளினார் -என்றபடி –
இனி க்யாதி லாப பூஜைகளை எதிர்பாராமை யால் தீதிலர் என்னவுமாம் .
தொல் அருள் –
இயல்பான அருள்-நிர்ஹேதுதுக கிருபை என்றபடி-
தொல் அருள் சுரந்து வந்து இன்று எடுத்தான் -என்று கூட்டி முடிக்க –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தல்

தம்மை விஷயீ கரித்த படியை சொல்லி ஆனந்தம் படுகிறார்
அளறு=சேறு –அக் காதல் -சொல்ல கூடாமல் சுட்டி காட்டு கிறார்.
.உடல் இன்பத்தில் தங்கி மாய்கிறது ஆவி-ஆத்ம நாசனம்-சொரூப நாசம்
-வந்து எடுத்தான் இன்று-கிருபை என்னும் கையால்-
மா மலராள் நாயகன்-அரங்கன்-எல்லா உயிர் களுக்கும் நாதன்-என்று உபதேசிக்கும் தூயவன்
-தீது இல்லா இராமனுசன்–தொல் அருள் சுரந்து இன்று வந்து எடுத்தான்
ஆய்– தேர்ந்து எடுத்த இழையார்– ஆபரணங்கள்
-தேக தோஷம் மறைத்து -தேர்ந்து எடுக்க பட்ட-உள்ளது வெளியதானால் காக்கை ஓட்ட முடியாதே
-ஆடை சந்தனங்களும் இத்தால் உபலஷணம் சேதனர்களை மோகிகிறார்கள்
–ஞானம்-பகவத் விஷயம் அறிய கொடுத்தால் இதற்க்கு உபயோகிறார்கள்
—கண்ணை கவர்ந்து இழுக்க-கழுத்துக்கு பூணொடு காதுக்கு குண்டலம்-மற்றவர் பார்க்க தானே இவை –
–ஆயிழையார்-இதுவே சொரூப நிரூபண தர்மம்..
அக் காதல்– வாக்குக்கு நிலம் இல்லாதா
பிராவண்யம் ஆகிய– மாய வன் சேற்று அள்ளல்-மாயும் என் ஆவியை
-சேஷத்வம் மறந்து –இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –இருக்க
அளறு பாய்ந்து முடியை தேடுபவர்களை -முயல முயல முடிபவர்-விரகு அறிந்த தார்மிகர்
-.கிருபை உந்த உபதேசம் என்ற தடி கொண்டு-
உபதேசம்- மா மலராள் நாயகன் அரங்கன்
..தூய்மை– தெரிந்த விஷயம் சொல்லும் தூய்மை
சத்யம் -இஷ்டத்துக்கு இழுக்காமல் சாஸ்திர வழியில் உபதேசித்து
க்யாதி லாப பூஜா அபேஷ ரூப- தோஷ ரகிதர்-ஸ்வாமி-
தொல் அருள்- ச்வாபாவிக கிருபை
நானும் உனக்கு பழ அடிமை
சேஷத்வம் பழமை
சுரந்து– கிளர்ந்து /வந்து-அந்த கிருபை பிடித்து தள்ள வந்து இன்று எடுத்து –
இச்சை தள்ளுவது ஈஸ்வரனை-கர்ம நம்மை.
கிருபை ஆழ்வார் ஆச்சர்யர்களை-அருளினார் ஆய்தல்-தெரிதல் மாய்தல்-நசித்தல்..
ஆபாத ரமணீயமான வேஷங்கள் -ஆய் இழையார்
உபதேசம்–ஸ்ரீ ய பதி திரு அரங்க செல்வனாரே வகுத்த சேஷி
-விபீஷணன் சரண் அடைந்த பின்பு சுக்ரீவன்-எங்கள் அனைவர் இடத்தில் காட்டிய அன்பை-கிருபையை-
அவன் ஒருவன் இடம் காட்ட சொன்னது போல
அனைவர் இடம் காட்டிய கிருபையை அமுதனார் இடம் காட்டினாராம் ஸ்வாமி.
.அங்கு சுக்ரீவன் பிரார்த்திக்க காட்டினார் ராமன்
-இங்கு பிரார்திக்காமாலே ஸ்வாமி காட்டிய தொல் அருள்
..தன்னை பற்றி சொல்லி கடை ஏற்ற விலை.
சாஸ்த்ரம்- பதிம் விச்வச்ய -புரிய-அர்ச்சா ரூபமான அரங்கன் காட்டி சாஸ்ரத்துடன் – சேர்த்து தெரிவித்தார் கருணையால்.
.தேகம்-கூட்டு -அநித்தியம் –தெரியாத மூடன்
இழையீர் ரத்னங்கள் இழைக்க பட்ட ஆபரணங்கள்
-அக பாடு தோற்றாமல்-வஞ்ச மனசுடன் –
கை கூப்பி வணங்குவார் போல-
அன்பின் விளையார் பொருள் விளையும் ஆய் தொடியார் இன் சொல் இழுக்கு தரும்
வரை விளா மானிளையோர் மென் தோள் புரை இலா பூரியர்கள் ஆழும் அளறு
இவன் அவளை பார்க்க அவள் தன் குழலையே பார்த்து கொண்டு இருக்கும் வண்டார் குழ லாரும்
கரண காரணியாய் கேட்டு இருந்தீர் ஆகில் காதும் காதுமாக கேட்டீரா நம்பும் படி -அப்படி இல்லை -நானே சாஷி என்கிறார்
…நீசனான என்னையே –என் ஆவியை-வந்து எடுத்தான் இன்று..
என்-அசத்தாக இருந்த என்னை
-சாஸ்திரம் தெரியும் படி ஆக்கி
அவரை அடைய கை முதல் இல்லாத என் ஆத்மாவை
விஷயங்கள் -பற்று- சங்கம்-காமம்-குரோதம்-பகுத்தறிவு போய்
புத்தி போய் ஆத்மா அழியும் -படி கட்டு
மா மலராள்-உயர்ந்த கமலம் பிராட்டி -கர சரண நேத்ராதிகளுக்கு ஒரு படி போலியாக இருப்பதாலும் .
.பரிமளம் போக்யதையால் தமம் /உத்பன்னை-பிறந்து வசிப்பதால்
நாயகன்-பந்த மோஷ பொதுவாய் ஹேது தண்ட காரணனாய் இருக்கை வேண்டியதால்
-வைஷன்மையும்-உயர்வு தாழ்வு -விஷம புத்தி- உண்டு நைகிருண்யம் கிருபை இல்லாதவன்
-அபேஷை இருக்கிற படியால்-கர்மாவால் உந்த படுகிறான் என்று சமாதானம்-
சாஸ்திரம் சொன்னதற்கு உபயோகம் வேணுமே
-இவன் செய்வது இவன் தலையிலே /முதல் நிலை உதாசீன்-இந்த ஜன்மத்தில் –
அனுமதிக்கிறான் அடுத்து / தூண்டுகிறான்/.
.ஜீவாத்மாவும் கர்மாவும் அநாதி–ஆதி தான் இல்லை அந்தம்-ஆத்யந்திக பிரளயம் உண்டே
..ராஜா மந்திரிகளுக்கு அதிகாரம் கொடுப்பது போல அதனால் ச்வாதந்த்ராயம் இல்லை.
. அனுமதித்தது -ஈஸ்வரன் என்பதால் தக்க வைத்து கொள்ள
மோஷத்துக்கு அனைவரையும் அழைத்து போக வேண்டி இருக்கணுமே
சாஸ்த்ரம் படைத்து அதற்க்கு பிரயோஜனம்
லீலையிலும் நேர்மை ./எல்லாம் பிரமசாரி -நாராயணனுக்கு தான்
-இவனோ மா மலராள் நாயகன் .ஜகத்தில் ஹிதத்திலே நோக்கு நிக்ரகம் ஒன்றும் தெரியாதவள்
.சர்வேச்வரனுக்கு சொல்லி கொண்டே..கண்ணை புரட்டுதல் கச்சை நெகிழ்தல் வசீகரித்து கை ஆளாக பண்ணி கொண்டு–
அவள் அழகில் ..-விச்லேஷத்திலே ராவணனுக்கே உபதேசித்தாளே.. சம்ச்லேஷத்தில் அவனுக்கு பண்ணுவாளே
-இறையும் அகலகில்லேன் என்று இருந்து கொண்டு
கிருபை முதல் பிரிவில் காட்டினாள் ஸ்ரீ சீதை பிராட்டி-ஸ்ரீ ராமாயணம் சிறை இருந்தவள் ஏற்றம் சொல்லுமே
சகல ஆத்மாவுக்கும் பாலகன் வகுத்த சேஷி -நாதன்
– பிரம ருத்ரன் சனகாதிகளுக்கும் எட்டாதவன் என்று எண்ண வேண்டாம்
-அரங்கன்-நாம் இருந்த இடம் சந்நிகிதானாய் கொண்டு –என்ற -உபதேகிறார் ஸ்வாமி
-தத்வ யாதாத்வ ஞான பூர்த்தி -உள் உறை பொருள்—ஆப்த வாக்கியம்
-தூய்மை-நீசனையும் பாவனராய் ஆகும் படி. அழகு
படிப்படியாக ஸ்வாமி உபதேசம் செய்யும் முறையை அழகாக காட்டுகிறார் இதில்
-தலைவி- ஸ்ரீ தேவி-தேடி போகும் அவன் என்பார் முதலில் .
.-பரத்வம் இதில் சொல்லி எல்லா உயிர் களுக்கும் நாதன்
-உரிமை உண்டு பிராப்தி அனைவருக்கும்
/சௌலப்யம் அரங்கன் ..ஆசை விளைவித்தார் இக் காதல் காட்டி ..
காதலுக்கு காதல் தான் மாற்று மருந்து
../வைதிக காதல் /விஷத்தை முறிக்க விஷம்
-பிரம காதலும் விச்லேஷத்தில் விஷம் என்பதால்
அனுவர்தனம் பண்ணாமல் விஷயாந்திர பிராவண்யம் இருந்தீரா
-மாயும் என் ஆவி– சொரூப நாசம் வரை கத்து இருக்க வேண்டுமா?–
முன் வந்தால் விலக்கி இருப்போம்- தொல் அருள் சுரந்து-அவர் கிருபை என்றுமே உண்டு..
இன்று வந்து-ஒருவருக்கு இன்று இல்லை தொல்-அருள் சுரந்து -கிளர்ந்து எழ துர் வாசனை தொலைந்தது
மேகம் போல – சம்சார ஆற்று வெள்ளத்தில் அடித்து போகும் நம்மை
தூயவன்– அரங்கன் என்பதால் தூய்மை
அரங்கனே மா மலராள் நாயகன் என்று சொல்லிய தூய்மை..
கூபத்தில் வீழும் குழவி உடன் குதித்து அவ் ஆபத்தை நீக்கும் அன்னை போல
பாபத்தால் பிறந்தாலும் வந்து எடுத்து அருளுகிறான்
கொண்ட பெண்டிர் /நல்ல கோட்பாடு உடைய -கொடுத்து கொண்ட /அனுகூலர் கூடும்
…இந்த்ரியங்களை விலக்கி-வரை அற மீறாமல்..சாஸ்திரம் மீறாமல் உள்ளவர்
ஆத்ம பந்து -கூடி இருந்து அரங்கனுக்கு கைங்கர்யம் செய்ய .
-எதிர் பார்க்காத -பிரார்திக்காமலே -தானாகவே -வந்து -தன ச்வாபாவிக க்ருபை மட்டுமே கொண்டு –தீதில் சீர் –க்யாதி லாப பூஜா அபேஷை அற
–இன்று -வந்து எடுத்தான்-

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: