அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-41-மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து-இத்யாதி

பெரிய ஜீயர் அருளிய உரை
நாற்பத்தோராம் பாட்டு –அவதாரிகை-
இப்பாட்டில் எம்பெருமானார் உபதேசத்தாலே லோகம் திருந்தின படியைக் கண்டு
சர்வேஸ்வரன் அநேக அவதாரங்கள் பண்ணித் தன்னைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின
அளவிலும் காண மாட்டாத லவ்கிகர் எல்லாம் எம்பெருமானார் காலத்திலே
யதாஜ்ஞானம் பிறந்து பகவதீயர் ஆனார்கள் என்கிறார் –

மண் மிசையோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய வப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்கு ஆயினரே – 41-

வியாக்யானம் –
எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் -திரு விருத்தம் – 1- என்கிறபடியே பூமியிலே
மனுஷ்ய திர்யகாதி யோநிகள் தோறும் அவதரித்து -நமக்கு நாதனான ஸ்ரீய பதியே
நமாம்ச சஷூ ரபி வீஷதேதம் -என்கிற தன்னைக் கண்ணுக்கு விஷயம் ஆக்கிக் கொண்டு நிற்கிலும் –
இவன் நமக்கு சேஷி என்று தர்சிக்க மாட்டாத ல்வ்கிகர் எல்லாரும்
ஆஸ்ரிதருடைய இழவு பேறுகள் தம்மதாம் படியான -ச்வாமித்வ-ப்ராப்தியை உடையரான எம்பெருமானார் வந்து –
பாஷ்ய கரணாதி களாலே பிரகாசரான அக்காலத்திலே -ஸ்வ யத்னத்தாலே
துஷ்ப்ராபமான ஜ்ஞானமானது அதிசயித்து –சகல சேதன அசேதனங்களும்பிரகாரமாக
தான் பிரகாரியாய் இருக்கை யாலே நாராயணா என்னும் திரு நாமத்தை உடையவனுக்கு-சேஷம் ஆனார்கள்
தோன்றல்-பிரகாசித்தல்
அதவா
தோன்றிய அப்பொழுதே -என்றது ஆவிர்பவித்த அப்பொழுதே என்னவுமாம்
அந்தப் பஷத்திலும் அப்பொழுதே என்றது அவதரித்து அருளின அக்காலத்திலே -என்றபடி
அல்லது தத் ஷணத்திலே என்ன ஒண்ணாது இறே
கண்ணுற நிற்க்கையாவது-சஷூர் விஷயமாக நிற்கை
ஞானம் தலைக் கொள்ளுகையாவது -ஞானம் அதிசயிக்கை-

நாராயணன் என்று பேர் கொண்டவருக்கு ஆளாக்கினார் -இவனே பர ப்ரஹ்மம் என்று யார் என்று காட்டி அருளினார் –
திரிபுரா தேவியார் வார்த்தை
அடியேன் -சொல்லாதார் இடத்தில் சொல்லாதே என்றாரே அந்த ராமானுஜர் பெருமாள் இடமும் -கடல் அரசன் இடம் –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை –
கீழ் பாட்டிலே எம்பெருமானார் பண்ணின உபதேச வைபவத்தை சொல்லி -இப்பாட்டிலே பூ லோகத்திலே-பிரகிருதி வச்யராய் இருக்கிற சேதனரை ரஷிக்கைக்காக சர்வேஸ்வரன் மனுஷ்ய திர்ய காத்யநேக தேக பரிக்ரகம்-பண்ணி எல்லாருக்கும் சுலபனாய் கண்ணுக்கு இலக்காய் நின்றாலும் – இவன் சாது பரித்ராண அர்த்தமாக அவதரித்தான்-என்று அறிய மாட்டாத லவ்கிகர்களே–நமக்கு பிதாவான எம்பெருமானார் அவதரித்த பின்பு அவர் ப்ரசாதத்தாலே-சம்யக் ஜ்ஞான நிஷ்டராய் -நாராயணனே நமக்கு சர்வ பிரகாரத்தாலும் வகுத்த சேஷி என்று தெளிந்து -அவனுக்கு
தங்களை சேஷமாக்கி வைத்தார்கள் என்று அருளிச் செய்கிறார் –

வியாக்யானம்
-மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து
-மாறி மாறி பல பிறப்பும் பிறந்த இச் சேதனரைப் போலே –
எந்நின்ற யோநியுமாய் பிறந்தாய் -என்கிறபடியே -மனுஷ்ய திர்யக் ஸ்தாவர ரூபங்களான பல யோநிகள் தோறும்-ராம கிருஷ்ணா வராகாதி ரூபேண அவதரித்து –
எங்கள் மாதவனே
இத்தனை நிஹிதமான யோநிகளில் புக்கது –
உங்களுடைய இழவைக் காண மாட்டாதே -பரம க்ர்பையாலே இறே -உங்களை ரஷிக்கைக்காக என்றபடி –
மாதவனே -கிர்பா குணத்துக்கு உத்தம்பகை பெரிய பிராட்டியார் ஆகையாலே அவளுடைய சேர்த்தியை ச்ம்ரிக்கிறார் –
லஷ்ம்யாம் சஹ ஹர்ஷீகேசாவ் தேவ்யா காருண்யா ரூபயா -ரஷகஸ் சர்வ சித்தாந்தே வேதான் தேஷு சகியதே -என்று
ஈஸ்வரனுடைய ரஷணம் எல்லாம் பெரிய பிராட்டியாரோடு கூடி ஆஸ்ரயிக்கப்படுகிறது ஆகையாலும் -அவளும்-இந்த சேதனருடைய ரஷணத்துக்குகாகவே-அகலகில்லேன் இறையும்-என்று சர்வதா அநபாயிநியாய்இருக்கையாலும்-அத்தைப் பற்றி –மாதவன் –என்று அருளிச் செய்கிறார் -அந்த ஸ்ரீ யாலே இட்டு கார்யம் கொள்ளுகை அன்றிக்கே-நேர் கொடு நேர் தானே-
கண்ணுற நிற்கிலும் –
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் -என்கிறபடி சர்வ காலத்திலும்-சர்வ தேசத்திலும் -சர்வ பிரகாரத்தாலும் சர்வருடையவும் -கண்ணுக்கு தன்னை விஷயமாக்கி கொண்டு நிற்கிலும் –
அபயம் சர்வ பூதேப்யோ ததாம் ஏதத் வரதம் –என்றும் -மன்மநாபவ -மத்பக்தோ -மத்யாஜி -மாம் நமஸ்குரு –மாமைவேஷ்யசி -சத்யம்தே -ப்ரதிஜானோ ப்ரியோசிமே -என்றும் -அஹம் த்வா சர்வ பாபேப்யோ-மோஷ இஷ்யாமி மாசுச -என்றும் -அஹம் ஸ்மாராமி மத்பக்தம் நயாமி பரமாம்கதிம் -என்றும் –
இப்படி உபதேசித்து -படாதன பட்டு -தூத்ய சாரத்யங்களைப் பண்ணினாலும் –
காணகில்லா –
அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தநும் ஆஸ்ரிதம் -பரம்பாவமஜானந்த மமபூதமகேச்வரம் -என்கிறபடியே
இவன் வகுத்த சேஷி என்று அறிய மாட்டாதே -நமாம் ஸா சஷூ ரபிவீஷதேதம் -என்னும்படியான அவனுடைய ஸ்வரூபம்
அவதரித்த இடத்திலும் அப்படியே யாய்த் தலை காட்டிற்று காணும் -நதுமாம் சஷ்ய சேத்ரஷ்டும நே நை வஸ்வ சஷூஷா-நாஹம் வேதைர் நதபசா நதா நே ந சேஜ்யயா-சக்ய ஏவம் விதோத் த்ரஷ்டும் -என்று அவதாரத்திலும் அவன் அப்படி-அருளிச் செய்தான் இறே -கண்கள் காண்டற்கு அரியனாய் -என்றார் இறே ஆழ்வாரும் -இப்படி நேர் கொடு நேரே-உபதேசித்தாலும் திருந்தாத பேரான
-உலகோர்கள் எல்லாம் –
லவ்கிகர்கள் எல்லாரும் –அண்ணல்-சஹி வித்யா தஸ்தம்-ஜநயிதி தச்ச்ரேஷ்டம் ஜன்ம -என்கிறபடி அஸ்ரேஷ்டமாய் இருக்கிற -ஜன்ம ப்ரத்வம்சி ஜென்மத்தை கொடுத்து இருக்கிற –அன்றிக்கே ஸ்வ ஆஸ்ரிதருடைய இழவு பேறுகள் தம் தாம் படியான ச்வாமித்வ ப்ராப்தியை உடைய வரான
இராமானுசன் –
எம்பெருமானார் வந்து -லோகத்தை எல்லாம் ரஷிக்கைக்காக பரம பதத்தில் நின்றும் தீஷிதராய் வந்து-
தோன்றிய அப்பொழுதே -அவதரித்த அக்காலத்திலே –
அன்றிக்கே -வந்து தோன்றிய அப்பொழுதே –
அவதரித்து ஸ்ரீ பாஷ்ய கரணாதிகளாலே தத்வ ஹித புருஷார்த்தங்கள் பிரகாசகரான அக் காலத்திலேயே என்றுமாம்
தோன்றுதல் -பிரகாசித்தல் நண்ணரு ஞானம் தலைக் கொண்டு -ஜ்ஞானம் தலைக் கொள்ளுகையாவது -ஜ்ஞானம் அதிசயிக்கை –
சர்வ விலஷணமாய் ஸ்வ யத்னத்தாலே -ப்ராபிக்க வரிதான சம்பந்த ஜ்ஞானம் அதிசயித்தது -என்றபடி –
நாரணற்கு ஆயினரே
-மாதா பிதா ப்ராதா நிவாசாஸ் சரணம் சூக்ருதத் -என்றும் -சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் –நன் மக்களும் மேலேத் தாய் தந்தையும் அவரே -என்றும் சொல்லுகிறபடியே -1–சர்வ விதபந்துவாய் -அந்தர் பஹிஸ்ஸ தத் சர்வம் வ்யாப்ய –
என்றும் -கரந்து எங்கும் பரந்து உளன் -என்றும் சொல்லுகிறபடி –2-அந்தர் பஹிஸ்ஸ ஸ்வபாவனாய் –யஸ் யாத்மா சரீரம் -ஏஷ சர்வ பூதாந்தராத்மா பகதபாப்மா திவ்யா தேவ ஏக -என்றும்தான் ஓருருவே தனி வித்தாய் தன்னில் மூவர் முதலாய வானோர் பலரும் முனிவரும்மற்றிம் மற்றுயம் முற்றுமாய் – என்றும் சொல்லுகிறபடியே -3-சகல சேதனஅசேதனங்களும் பிரகாரமாய் –தான் பிரகாரி யாய் கொண்டு இருக்கிற நாராயணனுக்கே சேஷ பூதர் ஆனார்கள் —
திரு மந்திர த்வய நிஷ்டர்கள் ஆனார்கள் என்றது ஆய்த்து –

————————————————————————–

அமுது விருந்து
அவதாரிகை
எம்பெருமானார் செய்த உபதேசத்தாலே உலகம் திருந்தின படியைக் கண்டு
திருமகள் கேள்வன்-பல அவதாரங்கள் புரிந்து கண்ணிற்கு இலக்காகி நிற்பினும்
கண் எடுத்துப் பார்க்க மாட்டாத உலகத்தவர் அனைவரும் –எம்பெருமானார் காலத்தில்
மெய்யறிவு பிறந்து அவ்விறைவனை சார்ந்தவர்கள் ஆனார்கள் என்கிறார் –
பத உரை
மண் மிசை –பூமியிலே
யோநிகள் தோறும் -பிறப்புக்கள் தோறும்
பிறந்து -அவதாரம் செய்து
எங்கள்-எங்கள் உடைய
மாதவனே-திருமாலே
கண்ணுற -கண்ணிற்குப் புலனாக
நிற்கிலும் -நின்றாலும் கூட
காணகில்லா -கண்டு கொள்ள மாட்டாத
உலகோர்கள் எல்லாம் -உலகத்தவர் எல்லோரும்
அண்ணல்-ஸ்வாமியான
இராமானுசன் -எம்பெருமானார்
வந்து தோன்றிய அப்பொழுதே -பிரசித்தி பெற்ற அக்காலத்திலேயே
நண்ணரும் -பெறலரிய
ஞானம் தலைக் கொண்டு -உண்மை அறிவு மிகுந்து
நாரணற்கு -நாராயண னுக்கு
ஆயினர்-ஆளானார்கள்
வியாக்யானம் –
மண் மிசை யோநிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே –
மாதவன்-திரு மகள் கேள்வன்
மா -இலக்குமி
தவன்-கணவன் -வட சொல் –
மாதவன் பிறந்தான் உலகினரைக் காப்பதற்காக -பிறக்காமல் காப்பதற்காக தான் பிறந்தான் –
அங்கனம் பிறத்தற்கு ஹேது தான் மாதவனே இருத்தல் –
மா-கருணா ரூபிணி யாதலின் -அவளால் தூண்டப்பட்ட கருனையடியாக அவன் பிறப்பு அமைந்தது -என்க –
நாதன்-என்னும் உறவுமுறை பற்றி பிறந்தே யாக வேண்டியதாயிற்று என்பார்-எங்கள் மாதவன் -என்றார்.
எங்களுக்கு நாதனான மாதவன்-என்றபடி –
மாதவனுடைய அரும் குணங்களை வெளிப்படுத்தும் பிறப்புக்கு தோற்ற –எங்கள் மாதவன் –என்கிறார் ஆகவுமாம்-
பிறப்பு இல்லாதவன் –மாதவன் -அவனே பிறந்தான் –
பிறப்புக்களும் ஒன்றா இரண்டா -அளவே இல்லாதன -அவன்பிறக்காத யோநிகள் இல்லை –
யோநிகள் தோறும் பிறந்தான் -தேவனாக உபேந்த்ரனாக பிறந்தான் –
மானிடனாக -ராமனாகவும் -கண்ணனாகவும் பிறந்தான் –
விலங்கினமாக மீனாகவும் -ஆமையாகவும் -பிறந்தான்
தாவரமாக குள்ள மா மரமாய் பிறந்தான் –
எந்நின்ற யோனியுமாய் பிறந்தாய்– – திருவிருத்தம் -1 – என்றார் நம் ஆழ்வாரும் .
அப்ராக்ருதனாய் இருந்தும் ப்ராக்ருதரைப் போலே இப் பிரகிருதி மண்டலத்திலே
விண்ணகத்தில் வந்து உபேந்த்ரனாய் தேவ யோனியில் பிறந்தது போதாதா –
அற்ப்பர்களான தேவர்களும் கால் பாவவும் அருவருக்கத் தக்க பூ லோகத்திலே வந்து பிறந்து நிற்கிறானே –
என்னும் கருத்துடன் –மண் மிசை-என்கிறார்-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -திருவாய் மொழி -2-6 8- – என்றபடி
ஒரு சம்சாரி சேதனன் படும்பாடு படுகிறான் மாதவன் –
அவ்வரும் பாட்டைத் திரு உள்ளத்திலே கொண்டு -பிறந்து -என்கிறார் –
இறைவனுக்கும் பிறத்தல் குற்றமாம் என்று கருதி -அவதாரங்களை தோற்றமாக கூறுவர் ஏனையோர் –
அமுதனாரோ அருளடியாக பிறர்காகப் பிறத்தல் குற்றம் ஆகாது -நற்றமே யாம்-என்னும் கருத்துடன் –பிறந்து என்கிறார் -ஒருத்தி மகனாய் பிறந்து -என்றாள் ஆண்டாளும்
பிறந்தவாறும் -என்று ஈடுபட்டு மோஹித்தார் நம் ஆழ்வார்
கண்ணுற –எல்லாம்-
கட்கிலீ எனப்படும் அவன் மாதவன்
கட் கண்ணால் காணாத தன் உருவத்தைத் காட்டினும் உலகத்தவர் காண முடியாதவர் ஆயினர் –கட்கிலி தன் தன்மை மாறிக் கண்ணுற நிற்பினும் உலகத்தவர் தம் தன்மை மாறாது காண கில்லாதாராயே-இருக்கின்றனர் –
மாதவனே கண்ணுற நிற்கிலும்
எல்லாம் வல்ல திரு மாலே தன்னைக் காட்ட முயலினும் பயன்படாத வியப்பு தோற்றுகிறது –
நிற்கிலும் –
சிறுது காலம் கண்ணுரும்படி ஆகி மறைந்தான் அல்லன் –
பதினோராயிரம் ஆண்டுகள் இந்நில உலகிலே ஷூத்ரர்களான சம்சாரிகளோடு
அருவருப்பின்றி – பழகி -தன் இடமான பரம பதத்தைப் பற்றி நினைவுஊட்ட வேண்டும்படி –
பிறந்து வைகினும் பயன் உறாமல் போயிற்றே என்கிறார் –
மண் மிசை நெடும் காலம் கண்ணுற நிற்றலின் மாதவனது எல்லை இல்லாத சௌசீல்ய குணம்-புலன் ஆகின்றது -இங்கு ஆழ்வான் அருளிச் செய்த –
சீல க ஏஷ தவ ஹந்த தயைகசிந்தோ ஷூத்ரே ப்ருதக் ஜநபதே ஜகதண்ட மத்யே
ஷோதீய சோபிஹி ஜனச்ய க்ருதே க்ருதீத்வ மத்ராவதீர்யா நனு லோசன கொசரோ பூ –அதி மானுஷ ஸ்தவம் -10 – என்று
அருளே நிறைந்த கடலே -நீ செய்ய வேண்டியவை அனைத்தும் செய்து முடித்து இருந்தும் –உலக அண்டத்திற்கு இடையே சிறிதான பாமர மக்கள் குடி இருக்கும் இடத்தில்
மிகவும் அற்பர்களாகிய மக்களுக்காக இங்கே அவதரித்து கண்களுக்கு புலன் ஆயினை அன்றோ-
உனது சௌசீல்யம் குணத்தை என் என்பது -என்ற ஸ்லோகம் அனுசந்திக்க தக்கது
அளிப்பதற்கு பிராட்டி கூட இருப்பது -இன்றியமையாதது யாதலின் –உயிர் அளிப்பான் எந்நின்ற யோனியுமாய்-பிறக்கும் இறைவன் பிராட்டி யோடே அவதரிக்கிறான் -என்பது தோன்ற –மாதவன் பிறந்து -என்றார்.
ராகவத்வே பவத் சீதா ருக்மிணீ கிருஷ்ண ஜன்மனி
அன்யேஷ சாவதாறேஷூ விஷ்ணு ரெஸா நபாயிநீ -விஷ்ணு புராண ஸ்லோகம்-என்று
இறைவன் ராமனான போது -சீதை யானாள்-கிருஷ்ணனாய் பிறந்த போது ருக்மிணி யானாள் –
மற்றைய அவதாரங்களிலும் விஷ்ணுவை விடு கிலள்-
உலகினருக்கு தன்னைக் காட்டி அறிவுஊட்டி அவர்களை ஆஸ்ரயிக்கும்படி செய்து உய்விப்பதற்கு ஆகப்
பிறக்கிறான் மாதவன் -அப்பொழுது ஆஸ்ரயிப்பதற்கு உறுப்பான குணங்கள் மாதவன் இடம் மிளிருகின்றன –
அவையாவன -வாத்சல்யம்-ஸ்வாமித்வம்-சௌசீல்யம் சௌலப்யம் என்பன
இவை அனைத்தும் பிறந்த மாதவன் இடம் பிறந்குவதை இங்கு அமைத்த சொல் தொடரில்
அமுதனார் காட்டும் அழகு கண்டு கழிக்க தக்கதாய் உள்ளது
-மண் மிசை பிறந்து -என்றமையால் வாத்சல்யம் தோன்றுகிறது
வாத்சல்யமாவது குற்றத்தையும் நற்றமாகக் கொள்ளுதல்
எங்கள் மாதவன்-என்றமையால் ஸ்வாமித்வம் தோற்றுகிறது
ஸ்வாமித்வமாவது உடைமைக்கு உரியனாய் இருத்தல்
நிற்கிலும் -என்பதால் சௌசீல்யம் தோற்றுகிறது –
சௌசீல்யம் ஆவது மிகத் தாழ்வு உடையரோடு வேறுபாடு இன்றி பழகுதல்
கண்ணுற -என்றமையால் சௌலப்யம் தோற்றுகிறது
சௌலப்யம் ஆவது கண்ணுக்கு புலனாய் தோற்றுதல்
காணகில்லா
காண்டல்-நம்மை உய்விக்க வந்த இறைவன் என்று தெரிந்து கொள்ளுதல் –
கண்ணுற நிற்கிலும் காண கில்லாமைக்கு ஹேது இவ்வுலகில் உள்ளமை –
இருள் தருமமா ஞாலம் அன்றோ இது .
நம்மைப் போல் இவ்வுலகில் உள்ள ஒரு மனிதனே இவன் என்று பார்க்கின்றனரே அன்றி
இறைமையைச் சிறிதும் உணர்கிலர் என்றபடி –
அவஜானந்தி மாம்மூடா மாதுச்ஹீம் ததுமாஸ்ரிதம் பரம்பாவம் அஜா நந்த –என்று
மூடர்கள் மானிட வடிவம் கொண்ட என்னை பரமபுருஷனாய் இருக்கும்
தன்மையை உணராதவர்களாய் அவமதிக்கின்றனர் -என்று
மேல் எழுந்தவாறு பார்க்கின்றனரே யன்றி உள்ளடங்கிய இறைமையைக் காண இயலாதவர்கள்-உலகினர் -என்க -அகரூர் மாலாகாரர் முதலிய சிலர் காணும் திறனையும் கொடுத்து தன்னையும்-இறைவன் காட்டக் கண்டனரே யன்றி மற்ற உலகோர்கள் எல்லாம் காண கில்லாதாரே -என்க
அண்ணல் –அப்பொழுதே
அண்ணல்-ஸ்வாமி
அடியார்களுடைய இழவு பேறுகளை தம்மதாகக் கொள்பவர் -என்றபடி
தோன்றிய அப்பொழுதே -ஸ்ரீ பாஷ்யம் முதலிய நூல்கள் இயற்றி பிரசித்து பெற்ற வுடனேயே
என்றபடி-தோன்றுதல்-பிரகாசித்தல்
இனி தோன்றுதல்-அவதரித்தலுமாம்-இப்பொழுது அவதரித்த வுடனே என்ன ஒண்ணாது
அவதரித்த காலத்திலே என்ன வேண்டும் .
மாதவன் அவதாரத்தை –பிறந்து -என்றார்
சம்சாரிகள் போலப் பயன் பெறாமையின் –
அண்ணல் அவதாரத்தை தோன்றி என்றார் பயன் பெற்றமை பற்றி –
பிறவாத நிலையில் போலத் தனியாகவே மீள வேண்டி இருந்தமையின் பயன் அற்றுப் போனமை காண்க –
நண்ணரு ஞானம் தலைக் கொண்டு-
காண கில்லார் பெருவதாதலின் ஞானம் நண்ணரிய தாயிற்று -தன் முயற்சியாலும்
மாதவன் முயற்சியாலும் பெறற்கு அரியதாய் –எம்பெருமானார் அருளால் மட்டும் பெறப்படுவதாதலின்
நண்ணரு ஞானம் என்கிறார்.
பெற்ற ஞானம் இனிப் பெறாது மேலோங்கி நிலை நிற்கும் என்பார் –தலைக் கொண்டு –என்றார் –
தலைக் கொள்ளுதல்-அதிசயித்தல்
நாரணற்கு ஆயினர் –
பொருள் அனைத்தையும் உட் புக்கு நியமிப்பது பற்றி-நாராயணன் -என்று திரு நாமம் அமைந்தது –
நாராயணன் என்பது நாரணன் என்று மருவி நின்றது .
உட் புக்கு நியமிப்பது ஆத்மா ..அங்கன் நியமிக்கப் படுவதுஉடல் –
உடல் ஆத்மாவுக்கு போல -பரமாத்மாவுக்குப் பொருள் அனைத்தும் உபயோகப்பட்டு சிறப்பு உறுதல்
இயல்பு..அங்கனம் சிறப்பித்தல் சேஷத்வம் எனப்படும் .அதனை உணர்த்தற்கே மாதவன்யோனிகள்
தோறும் பிறந்தான் -ஆனால் பயன் இல்லை -எம்பெருமானார் தோன்றியதும் உலகோர்கள் எல்லாம்
தன் சேஷத்வத்தை உணர்ந்து சிறப்பு உறுத்தப்பட வேண்டிய நாராயண னுக்கு ஆளாகி விட்டனர் -என்றபடி –
நாரணன் யோநிகள் தோறும் பிறந்தும் பயன் இல்லை –
எம்பெருமானார் ஒரு கால் தோன்றிய வுடனேயே பயன் பெற்று அமைவதாயிற்று –
பிராட்டியும் பெருமாளும் சேர்ந்து இருவரும் பல கால் பிறந்தும் பயனில்லை
எம்பெருமானார் தனியே ஒரு கால் தோன்றிய அப்பொழுதே பயன் மிக்கது .
மாதவனால் கையால் ஆகாது விடப் பட்டவர்களை எல்லாம் எம்பெருமானார் கை கொடுத்து-எடுத்துக் காத்து விட்டார் -என்றது ஆயிற்று .

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது

திருத்தின வைபவம் –ஆழ்வார் மனோ ரதித்தார் -பொலிக பொலிகபொலிக கலியும் கண்டு கொண்மின்–ஆண்டாள் ஆள வந்தார் ஆசை பட்டதை நடத்தி காட்டினார் ஸ்வாமி -அதை கொண்டாடுகிறார் அமுதனார் இதில்
உபதேசம் முன்பு சொல்லி இதில் திருத்தின விதம் அருளுகிறார்
ஞானம் தலை கொண்டு-வளர்ந்து கொண்டே
…மண் மிசை -தேவர்களே கால் வைக்க கூசும் இங்கு .ஹவிர்பாவம் வாங்க வரும் பொழுது..
யோனிகள் தோறும்/ தேவ-உபெந்த்ரன் மனுஷ்ய -ராம கிருஷ்ண திர்யக் சேர்ந்து ஸ்தாவரம்-என் நின்ற யோனியுமாய் பிறந்தாய்
எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும்-அவளையும் கூட்டி கொண்டுயோனிகள் தோறும் பிறக்கிறான்
-சேதனர் தன்னிடம் இருந்து -விலக -அவர்கள் கர்மத்தால் பிறக்க
-அவர்களை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்க -கர்மங்கள் அறுந்து போல -அவன் உடன் அங்கு சேர – பிறக்கிறான்..
எங்கள் மாதவனே– உங்கள் இழவை காண மாட்டாத பரம கிருபையால் தானே..ஒக்க குதித்தான்
..குழந்தை விழ ராஜா குதித்து காப்பது போல.
இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் –
. கண்ணுற நிற்கிலும் 11000 வருஷம் ஸ்ரீ ராம ராஜ்ஜியம் ஆண்டு இருந்து
.நித்ய அனபாயிநீம் -சீதை-ராமன் /ருக்மிணி-கண்ணன் /மாதவனே-யே காரம்-தானே வந்து
-ஸ்ரீ யாலே இட்டு காரியம் பண்ணாமல் சொத்து சேர்க்க ஸ்வாமி வேணுமே..
/நிற்கிலும் 11000 வருஷம் இருந்தும்..120 வருஷம் ஸ்ரீ கண்ணன் இருக்க
எதிர் சூழல் புக்கு ஒருத்தரை பிடிக்க ஊரை வளைப்பாரை போல
..சர்வ காலம் சர்வ பிரகாரத்திலும் சர்வ தேசத்திலும் சர்வர் கண்ணுக்கும் இலக்காக்கி
.காண கில்லா உலகோர் எல்லாம்.. /அண்ணல்– மக்கள் உயர்வு தாழ்வு எல்லாம் தன் உடையது என்று நினைக்கிற ஸ்வாமி–
அவன் சொத்து பெற அவதரித்தான் –
இவரோ நம் சுகம் துக்கம் எல்லாம் தன் உடையது.. தோன்றியது -ஒரே தடவை . பிறந்து நடத்த முடியாததை தோன்றியதும்
.. இருவராய் அங்கு .. அவனை சொல்லும் பொழுது பிறந்து -பயன் அடைய வில்லை –நம் போல பல யோனிகள் அவதரித்ததும் –
ஸ்வாமி தோன்றி-பயன் இருந்ததால்..தோன்றும் பொழுதே
திரு துழாய் போல.. உபதேசம் -நண்ணி அரும் ஞானம் தலை கொண்டு-நிலை நின்றது..
/மாதவன் வந்து நடத்த முடியாததை–இவர் நாரணர்க்கு ஆள் ஆக்கினாரே
-மீண்டு வர மாட்டார்கள்..அந்தர்யாமி வியாபகன் சரீர ஆத்மா பாவத்தை எல்லா ஞானமும் பெற்றார்கள் –
யதாஜஞானம் பிறந்து -மறந்த உறவை காட்டினார்..
அம் பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் உள்ள சம்பந்தம் காட்டினார்
–இனி யாம் உறாமை இருபதுகால் கூப்பிட்டார்– மூன்று தடவை திரு விருத்தத்தில்
. இனி ஒன்றும் மாயம் செய்யேல் 17தடவை திரு வாய் மொழியில்.
மெய் நின்று -சத்யம்-சரீரத்தில் இருந்து கேள் என்றார்
எங்கள் மா தவனே-நமக்கு நாதனான ஸ்ரீ ய பதியே -/
பிறந்த நினைவால் வந்த நெருக்கம் எங்கள்
கட்கிலி உன்னை காணுமாறு அருளாய்-
தன்னை கண்ணுக்கு விஷயம் ஆக்கி கொண்டு நிற்கிலும்
-கண்ணால் பார்கிறேன் மனசுக்கு புரிய வில்லை என்கிறாள் தாரை
குகன் சபரி கபந்தன் சிசுபாலன் போன்றவர்களும் காணுமாறு-
உண்ணாத நீ உண்ணும் குலத்தில் பிறந்த பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தாயே-ஆண்டாள்
காண கில்லா- சேஷி என்றுஅறியாமல் –பிறந்தது நமக்கு என்று புரிந்து கொள்ளாமல்
மூடன்-மனுஷ்யன் பரமாத்மா தெரியாமல்-அபிஜாநாதி
-அவ்யயன்-அஜம் மாம் -அறியாமல் யோக மாயையால் தெரிந்து கொள்ள வில்லை..
அண்ணல் நமது -இழவு பேறுகள் தம்மதாக கொண்ட ஸ்வாமி
வந்து -தோன்றிய அப் பொழுதே-ஸ்ரீ பாஷ்ய முதல் பிரகாசித்த அப் பொழுதே –
நண்ணி நண்ணி அரும் ஞானம் மாதவனும் முயன்று பெறா முடியாத ஞானம்.
–சேஷி- சேஷன்/சரீர ஆத்மா சம்பந்தம் நாரணர்க்கு ஆயினரே.. தலை கொண்டனரே-
இல்லை ஆயினரே அனுஷ்டானம் உண்டு ஞானம் பெற்றதும்
..தோன்றல்-பிரகாசித்தல்..தோன்றிய அப் பொழுதே-ஆவிர்பவித்த அப் பொழுதே..தலை கொள்ளுகை= அதிசயிக்கை//
அறிய மாட்டாத அதே லௌகரிகளே–யுகம் வேற கலி–வகுத்த சேஷி என்று-
தெளிந்து-கலக்கம் தீர்ந்து- அறிந்து இல்லை தெளிந்து என்கிறார்.
.சொத்து போனதற்கு அழலாம் வக்கீல் தானே வாதாடனும்.
கலங்குபவன் கண்ணன் கலக்க ஒண்ணாதவர்கள் ஆச்சார்யர்கள்
ருசி ஜனித லாவண்யம் வைஷ்ணவ வாமனத்திலே பூர்ணம்.
. வர்ணம் திருமேனி..-வைஷ்ணவ நம்பி..ராமானுஜர் சிஷ்யர் தான் வைஷ்ணவர் வடுகா- வட்ட பாறை.
விஷ்ணு மற்ற அனைவரும் பிராட்டி வைஷ்ணவி விஷ்ணு பக்தி.
-தத்வ தர்சி வாக்கியம்
….மானை பிடிக்க மான் வேணும் புலி அனுப்பினால் நடக்குமா
..தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சம் வஞ்சித்து
-பூனை எலி-வெட்டி போனேன்
-கன்னி வைத்து பிடிப்பது போல ஆழ்வார்களை ..பாதி திருத்தினார்கள்
அனுபவத்தில் ஆழ்ந்து .ஆச்சார்யர்கள்..உபதேச பிரதானம்.
.மாதவனே– கிருபையால் பிறந்ததால்-ஆவிர்பூதம் மகாத்மா-இல்லை
– நாட்டில் பிறந்து மனிசர்க்காய் படாதன பட்டு/
ஸ்வா தந்த்ர்யம் அடக்கி கிருபை தூண்ட பிராட்டி வேணுமே-
சேர்த்தி மாதவன்…அகலகில்லேன் இறையும் என்று ரஷணத்துக்கு என்றே இருப்பவள்..
சரணா கதிக்கு கால நியமனம் இல்லை..
அபயம் சர்வ / அகம் த்வா / பரமாம் கதிம் -மூன்று சரம ஸ்லோகங்களையும் உபதேசித்து
தூதுவ சாரதித்வங்கள் பண்ணியும்..
பக்தி பண்ணு நேராக வரலாம் சத்யம் என்று சொல்லியும்
ரொம்ப பேசினான் -கண்ணன் ராமன் அனுஷ்டித்து காட்டிய தர்மங்கள் எல்லாம் உபதேசித்தான் கண்ணன்
ராமனை கண்ணனை பராத் பரன் – ரஷகன் புரிய வில்லை
ஆப்தன் என்று புரிந்து கொள்ள வில்லை
ஆஸ்ரித வ்யாமோகன் என்று தெரிந்து கொள்ள விலை.
நாட்டிலே பிறந்து மனிசர்க்காய் .படாதன பட்டு
திரு மோகூர் ஆப்தன் – வழி துணை பெருமாள் என்று புரிந்து கொள்ள வில்லை /
பிறந்து உபதேசித்து நடத்தியும் காட்டியும் பயன் இன்றி /
சாச்த்ரத்தாலும் காண கில்லா நேராக வந்தும் அந்தகன் சிறுவன் போல மூடர் .
.ஆசூரிம் ச்வாபம் அடைந்த சம்சாரிகள்
..மனுஷ்யந்தே பரத்வம் உயர்
-பரத்வே பரத்வம் திண்ணன்
-மோஷ பிரத்வம் அரவு-விபவ பரத்வம் ஒன்றும்-அர்ச்சையில் பரத்வம் பதிகம்.
. பூத மகேஸ்வரன் சர்வேஸ்வர ஈஸ்வரன்.-புரிந்து கொள்ள வில்லை
. அவ மதிப்பு வேற பண்ணுகிறார்கள்
…சூட்டு நன் மாலைகள் ..போன மாயங்களே
.. அவன் ஸ்வரூபம் -ரூபமே பார்க்கவில்லை-அவதரித்தாலும் காணகில்லா– ஸ்வரூபமே தலைக் கட்டிற்றே — ..தபசாலும் யாக யக்ஜங்களாலும் பார்க்க முடியாது
பக்தி ஒன்றாலே முடியும் என்றானே-
– செய்ய வேண்டியதை செய்து முடித்தான்
.சீல தனம் –இறங்காமல் இருந்திருக்கணும் சாஸ்திரம் உண்மையாக்கினோம் பார்க்க வில்லை நாமும்
..அண்ணல்-பிதா /வித்தையால் கிடைத்த ஜன்மம்..
..தன் ஜன்மம் நமக்கு கொடுத்த அண்ணல்.
.வந்து -தீஷிதராய் வந்து திருத்தி அல்லது போகாமல்
..பிரகாச படுத்தி..கிடைத்தற்கு அறிய ஞானம் நன் அரும்
– கண்ணால் நிற்கிறவனை பார்க்க முடியாதவன் ஞானத்தால் கொடுத்தாரே
ஞானம் ஏற்பட்டு நிலை நின்று .
.சம்பந்த ஞானம் ..நாரணர்க்கு –சர்வ வித பந்து /வியாபகன் /அந்தர்யாமி /சரீர ஆத்மா பாவம் /முழு முதல் காரணம் /பிரகார பிரகாரி பாவம்
தனி வித்தாய் .மூவரில் முதலாக ..முற்றும் முற்றும் மற்றும்
..இது தான் நல்ல அரும் ஞானம் /
திரு மந்த்ரத்தில் வளர்ந்து-சம்பந்தம் தெரிந்து – துவயத்தில் வளர்ந்து -அனுஷ்டானம்-சரம ஸ்லோகம்-மந்த்ரம் – -விதி -இரண்டையும் அறிந்து த்வய அனுஷ்டானம் -சரம ஸ்லோகத்தில் நாராயணன் வியக்தம் இல்லையே –…பல யோனிகள் மிதுனத்துடன் பிறந்தான் தோன்றினான்-இவர் தனியாக ஒரு தடவை ..ஆள் ஆக்கினரே அனைவரையும்..

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: