அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-40-சேம நல் வீடும் பொருளும் தருமமும் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை
நாற்பதாம் பாட்டு –அவதாரிகை
எம்பெருமானார் தமக்கு செய்த உபகாரத்தை அருளிச் செய்தார் கீழ்ப் பாட்டில் –
இப்பாட்டில் லோகத்துக்கு செய்த உபகாரத்தை அனுசந்தித்து வித்தராகிறார் –

சேம நல் வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
காமமும் என்றிவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
யாமது காமம் அறம் பொருள் வீடி தற்கென்று உரைத்தான்
வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண் மிசையே -40 – –

வியாக்யானம்
இத்தலையில் அர்த்தித்வாதி நிரபேஷமாகத் தாமே வந்து உபகரிக்கைக்கு
ஸ்ரீ வாமன துல்ய சீலரான எம்பெருமானார் -தர்மார்த்த காம மோஷாக்க்ய புருஷார்த்த உதாஹ்ருத –என்கிறபடியே ஷேம ரூபமாய் விலஷனமாய் இருந்துள்ள மோஷமும் ,-அர்த்தமும் ,தர்மமும் ,இவை போலே-அங்கதயாபுருஷர்தமாய் இருக்கை அன்றிக்கே –
ஸ்வயம் புருஷார்த்தம் ஆகையாலே -சீரியதாய் -விலஷணமாய் -இருந்துள்ள காமமும் என்று கொண்டு –இவை நாலும் புருஷார்த்தமாக ப்ரமாணிகர் சொல்லுவார்கள்-
இவை நாலிலும் -காமமாவது -சர்வேஸ்வரன் விஷயத்திலே உண்டாமது –
தர்மமும் அர்த்தமும் மோஷமும் ஆகிற இவற்றிலே-
தர்மம் ஆனது -தர்மேன பாபா மப நுததி – என்கிற படியே எதத் விரோதி பாப ஷய ஹேதுவாகையாலும் –
அர்த்தம்-தானாதி முகத்தாலே அதுக்கு உபகாரம் ஆகையாலும்
மோஷம் ததபிவ்ருத்தி ஹேது வாகையாலும்
அம் மூன்றும் காம சப்த வாசியான பகவத் சம்ச்லேஷத்துக்கு சேஷமாய் இருக்கும் அத்தனை என்று-இந்த பூமியிலே அருளி செய்தார்
அபேஷா நிரபேஷமாக இவ்வர்த்தத்தை இப்படி யுபகரித்து அருளுவதே -என்று கருத்து
வாமநன் சீரை – என்று பாடமான போது
பூர்வோக்த பிரக்ரியையாலே புருஷார்த்தத்தை நிர்ணயித்து
இப்புருஷார்த்தத்தை லபிக்க வேண்டும் இடத்தில் வருந்த வேண்டுவது இல்லை –
எளிதாக பெறலாம் -என்னும் இடத்தை தர்சிப்பிக்கைக்காக இத்தலையில்
அபேஷா நிரபேஷமாக வந்து கலக்குமவன் காணும் கோள் என்று
ஸ்ரீ வாமனுடைய ஸ்வபாவத்தை அருளிச் செய்தார் என்கை-
இதிலும் காட்டில் பூர்வ யோஜனைக்கு சப்த சுவாரஸ்யமும் அர்த்த கௌரவமும் உண்டு –

இம் மண் மிசையே கண்ணனுக்கே ஆமது காமமே ஸ்வயம் பிரயோஜனம் -மற்றவை இதற்கு அங்கம் -பாரோர் சொல்லப்பட்ட மூன்றும் -ஓராமை -ஏரார்  முயல் விட்டு காக்கை பின் போவதே -திருமங்கை -அர்ச்சையே -என்பார் -அடிக் கீழ் விள்ளாத அன்பன் அன்றோ இவர் -தசரதர் ஈடுபட்டது லௌகிக காமம் -வைதிக காமம் பற்றி வாழலாமே

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
கீழ்ப் பாட்டிலே எம்பெருமானார் தம்மமை ரஷித்த படியை சொல்லி ஹ்ர்ஷ்டராய்க் கொண்டு போந்து –
இதிலே -அர்த்தித்வ நிரபேஷமாக ஸ்ரீ வாமன அவதாரத்திலே -தாள் பரப்பி மண் தாவிய ஈசனை -என்கிறபடியே
சர்வருடைய சிரச்சுகளிலே -ஸ்ரீ பாதத்தை வைத்து உபகரித்தால் போலே -இவரும் அதிகார நதிகார விபாவம் அற-எல்லார்க்கும் ஸ்வரூப அநு ரூபமான அர்த்தத்தை உபகரித்தார் என்று வித்தர்- ஆகிறார்

வியாக்யானம்
-சேம நல வீடும் -மோஷத்தை கொடுக்குமதாய் -தமஸ பரஸ்தாத் -என்கிறபடி -அப்ராக்ருதமாய் –அயோதியை என்னும்படி அபராஜிதை -என்றும் சொல்லப்படுகிற பரம பதமும்
-பொருளும் –
அதுக்கு அங்கமாவது ஆதல் –பரம்பரையா சாதனமாகவாதல் -சாதனா அனுஷ்டானத்து உடலாதல் -விதிக்கப்படுகிற ந்யாயார்ஜித தனமும் –
தருமமும் –
நித்ய நைமித்திகாதி ரூபமாய் –ஆராதனா ரூபமாய் -வர்ணாஸ்ரம விஹிதமாய் இருக்கிற தர்மமும் –
சீரிய நற் காமமும்
-சாஸ்த்ரங்களில் ஸ்லாக்கிக்கப்பட்டதாய்-போக்யமாய் -விஹிதமாய் – சுயம் புருஷார்த்தமான-காமமும் -என்று இவை நான்கு என்பர் -ஏவம் வித ரூபேண நாலு வகைப் பட்டு இருக்கும் புருஷார்த்தம் என்று –
வியாச பராசராதிகள் சொல்லுவார்கள் -தர்மார்த்த காம மோஷாக்ய புருஷார்த்த உதாஹ்ர்தா -என்னக் கடவது இறே –
தர்ம அர்த்த காமங்கள் மூன்றும் ப்ராக்ருதங்களுமாய்-ஸ்வரூப அந அநு ரூபங்களாயுமாய்-இஸ் சரீரத்தோடு அனுபவிக்கபடுமவையாய் இருக்கும் துரீய புருஷார்த்தமான மோஷம் சேதனற்கு பிரகிருதி விமோசன அநந்தரம்
-இவன் தேகாந்தரத்தை பரிக்ரகித்து –தேச விசேஷத்தில் சென்று அனுபவிக்குமது -அப்ராக்ருதமாய் இருக்கும்-இது சாதநாந்த பரனுக்கும் ஸ்வ பிரயோஜனமாய்-
இருக்கும் -ஸ்வரூப ஞானம் உடைய அதிகாரிக்கு இவை எல்லாம் மாறாடி இருக்கும் -எங்கனே என்னில்
சேதனன் அசித் வத் பரதந்த்ரனாய் -தனக்கு என்று ஒரு பிரயோஜனம் இன்றிக்கே பேறு இழவுகள்-ஸ்வாமி யான அவனுக்கே என்று அத்யவசித்தவன் ஆகையாலே -என்றபடி
நான்கினும் -நாலிலும் -என்றபடி -புருஷார்த்தமான நாலிலும் வைத்துக் கொண்டு –
கண்ணனுக்கே ஆமது காமம் –
வகுத்த சேஷியாய் -சுலபனான சர்வேச்வரனுடைய சம்ச்லேஷத்தை
அபேஷிக்கும்படியானகாமம் பிரதான புருஷார்தமாய் இருக்கும் -அதிலே சுவார்த்தை யாகிற அஹங்காரத்தை-தவிர்த்து -அவனுடைய முக மலர்த்தியை உத்தேசித்து பண்ணும் -பகவத் சம்ச்லேஷமே பிரதான புருஷார்த்தம்
என்றபடி –கண்ணனுக்கே -என்கிற அவதாரணத்தாலே -தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே -என்றும் –
உற்றோமே யாம் உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறபடியே
அத்யவசிக்க வேண்டும் -என்றபடி -ஆக -இந்த அதிகாரிக்கு -பகவத் காமமே பிரதான புருஷார்தமாய் இருக்கும் –
காம ஏவர்த்த தர்மாப்யாம் கரீயநிதி மே மதி -என்று பெருமாள் சொன்னது நிந்தா ஸ்துதி யாகையாலே –விருத்த காமத்தை கர்ஹித்த இத்தனை -அர்த்த தர்மவ் பரித்யஜ்ய யக்காமம் அனுவர்த்ததே -ஏவமாதாத தேஷிப்ரம் ராஜா தசரதோயதா -என்று
அடைவே இவ் அர்த்தத்தை சொன்னார் இறே –
அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் -அறம் -விசேஷ தர்மம் –
குணைர் தாஸ்யம் உபாகத -அஹம் சர்வம் கரிஷ்யாமி -உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்கிறபடியே-சம்மார்ஜநோப லேபே நபவ நநந்த நாத் ஔபஸாரிக சாம்ச்பர்சிகங்கள் ஆகிற அசேஷ வ்ருத்திகளும் என்றபடி –
பொருள் -தாச்யத்துக்கு உபயுக்தமாய் அமுதுபடி சாத்துப்படி முதலானவற்றுக்கு சாதனமாய் இருக்கிற அர்த்தம் –
வீடு -தர்மார்த்தங்களை சம்பாதிகைக்கு தகுதியாய்-அவற்றினுடைய அபிவிருத்திக்கு உடலான ப்ராப்ய தேசம் –இதற்கு என்று -காம சப்தத வாச்யமான இந்த பகவத் சம்ச்லேஷ ரூபா பிரதான புருஷார்த்தத்துக்கு -சஹ காரியாய் –சேஷமாய் இருக்கும் இத்தனை என்று –
இந்த மண் மிசையே
-ஒரு தேச விசேஷத்தில் அன்றிக்கே -பரி த்ர்ச்யமானமாய் –
எல்லாருக்கும் அஞ்ஞா நத்தை விளைவிக்கும் இந்த மகா ப்ர்த்வியில் தானே -வாமனன் சீலன் -இத்தலையில்
அர்த்தித்வாதி நிரபேஷமாக தாமே வந்து உபகரிக்கைக்கு ஸ்ரீ வாமன துல்ய சீலரான
-இராமானுசன் -எம்பெருமானார் –
உரைத்தான் -ஒரு தேச விசேஷத்தே பெற வேண்டி இருக்கும்தான இவ் அர்த்தத்தை இங்கே தானே அருளிச் செய்தார் –
வாமனன் சீலன்
ஸ்ரீ வாமன அவதாரத்திலே அர்த்திவாதி நிரபேஷமாக -தானே வசிஷ்ட சண்டாள விபாகம் அற –எல்லாருடைய தலைகளிலும் -நல்லடிப்போது -என்னும்படியான ஸ்ரீ பாதத்தை வைத்தால் போலே -நிதித்யாசிதவ்ய –இத்யாதி -வேதாந்த சாஸ்திர விஹிதமாய் -மஹனீய விஷயே ப்ரீதிர்பக்தி -என்கிறபடியே
பக்தி ரூபமான இந்த பகவத் காமத்தை ஸ்ரீ பாஷ்ய முகேன -அருளிச் செய்தார் ஆகையாலும் –லோகத்தார் எல்லாருக்கும் பகவத் சம்ச்லேஷ ரசம் பிறக்கும்படி -அவரது அதிகார நதிகாரங்களைப்-பாராதே உபதேசித்தார் ஆகையாலும் -அவனுடைய ஸ்வபாவமே இவர்க்கும் ஸ்வபாவமாய்-அவனோடு துல்யர் ஆனார் என்றது ஆய்த்து –

————————————————————————–

அமுது விருந்து
அவதாரிகை
எம்பெருமானார் தமக்கு செய்த உபகாரங்களை அருளிச் செய்தார் கீழ் –
இப்பாட்டில் உலகிற்க்குச் செய்த உபகாரத்தை அனுசந்தித்து ஈடுபடுகிறார் –

பத உரை
வாமனன் சீலன் -ஸ்ரீ வாமனப் பெருமாளை ஒத்த ஸ்வபாவம் வாய்ந்த
இராமானுசன்-எம்பெருமானார்
சேம நல்வீடும் -ஷேம ரூபமாய் -சீரியதாயுமாய் இருந்துள்ள மோஷமும்
பொருளும் -அர்த்தமும்
தர்மமும் -தருமமும்
சீரிய -சிறப்பு வாய்ந்த
நற் காமமும் -நல்ல காமமும்
என்று இவை -என்று சொல்லப்படும் இவைகள்
நான்கு என்பர் -நான்கு புருஷார்த்தங்கள் என்று கூறுவர்
நான்கினும் -இந் நான்கிலும்
காமம் கண்ணனுக்கே ஆமது -காமமாவது சர்வேஸ்வரன் விஷயத்தில் உண்டாவது
அறம் பொருள் வீடு -தர்மமும் அர்த்தமும் மோஷமும்
இதற்க்கு என்று -இந்தக் காமத்துக்கு உறுப்பாகவே என்று
இந்த மண் மிசை -இந்தப் பூமியிலே
உரைத்தான் -அருளிச் செய்தார்-

வியாக்யானம் –
சேம நல் வீடும்
ஷேமம் எனபது சேமம் ஆயிற்று -வட சொல்
ஷேமமாவது -உரிய பொருளைப் பாதுகாத்தல்
மோஷம் எனபது அனைவருக்கும் இயல்பாகவே உரியது ஓன்று ஆதலின் அதனைப் பெறுதல்
புதியது ஒன்றை பெற்று விட்டது ஆகாது -இழந்ததை மீண்டும் பெற்று நிலை நிறுத்திக் கொள்வதே
யாதலின் -சேமமான வீடு -என்கிறார் .
கைவல்யத்தின் நின்றும் வேறுபாடு தோற்ற நல் வீடு என்றார்-
பரமாத்மா அனுபவம் இல்லாமையின் கைவல்யத்தில் நன்மை இல்லை என்க-
ஆத்மாவான பகவானை அனுபவியாது பிரிந்து இருத்தலின் கைவல்யத்தை ஆத்மா வியோகம்-எனப்படும் மரணமாக குறிப்பிட்டார் திருமங்கை ஆழ்வார் -பிணி மூப்பு இல்லா பிறப்பிலியாய்-இறப்பதற்கே எண்ணாது -திரு நெடும் தாண்டகம் -1 – என்றார் .
பொருளும் தர்மமும்
அவ்வீட்டிற்கு சாதனமாய் உள்ளன பொருளும் தருமமும் –பொருள் தருமத்திற்கு பயன்பட்டு சாதனம் ஆகும்-தருமம் நேரே சாதனம் ஆகும்
நியாயமான முறையிலே பாகவத ஆராதனா ரூபமான தருமத்துக்கு தேடப்படும் பொருள் புருஷார்த்தம் ஆகும்
யஜ்ஞார்த்தாத் கர்மநோன்யாத்ரா லோகோயம் கர்ம பந்தன-ததர்த்தம் கர்ம கௌ ந்தேய முக்த சங்கச்ச்மாசர –என்று பகவத் ஆராதனத்துக்கு என்று பொருள் ஈட்டல்
முதலிய செயல் தவிரத் தனக்கு என்று செய்யப்படும் செயல் -செய்பவனை சம்சாரத்தில் கட்டுப் படுத்தும் –
ஆகையால் பகவத் ஆராதனத்துக்கு என்று பற்று அற்றவனாய் அர்ஜுனா பொருள் ஈட்டல் முதலிய-செயல்களை செய்வாயாக -என்று கண்ணன் அருளியதை இங்கே நினைவு கூர்க-
சரீர யாத்ராபிசதே நப்ரசித்த்யே தகர்மண-என்று கர்மத்தை அடியோடு விடின் ஞான நிஷ்டைக்கு-தேவைப் படும்தேக யாத்ரையும் சித்திக்காது -கீதை – 3-8 – என்றும் பாஷ்யத்தில் –
ந்யாயர்ஜித தனென மகா யஞ்ஞாதிகம் க்ருத்வா தச்சிஷ்டா சனே நைவ சரீர தாரணம் கார்யம்-என்று-நியாயப்படி ஈட்டிய பொருளினால் பெரு வேள்வி முதலியவற்றை புரிந்து -அதனில் எஞ்சியதை-உண்பதனாலேயே சரீரத்தை தரித்து கொண்டு இருக்க வேண்டும் -என்றும் உரைக்கப் பட்டு-இருப்பதும் இங்கு உணரத் தக்கது –
முறைப்படி பொருள் ஈட்டி அதனைப் பயன்படுத்தும் வகையை-பழி யஞ்சிப் பாத் தூண் உடைத்தாயின்-வாழ்க்கை வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்-என்னும் குறளும் – பரி மல அழகர் அதனுக்கு –பாவத்தால் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின் அறம் பொருள் உடையார் மேலும் –
பாவம் தன் மேலுமாய் -நின்று வழி எஞ்சுமாதலின் பழிது அஞ்சி என்றார் -என்று எழுதிய உரையும்-நன்கு அறிவுறுத்தல் காண்க –
தருமமும்
பயன் கருதாது பகவத் ஆராதனமாக புரியும் நித்ய நைமித்திகாதி கர்மங்கள் தருமமாகும் –தருமத்துக்கு இயல்பு முக்திக்காக பயன்படுதல்-பயனைக் கருதிடின் அவ்வியல்வு தடைப் பட்டு விடுகின்றது –
ஆக பொருளும் தருமமும் சாதனமாக அமைந்து புருஷார்த்தங்கள் ஆகின்றன –
சீரிய நற் காமமும்
பொருளும் தருமமும் போலாது -தானே புருஷார்த்தமாய் இருத்தலின் காமத்துக்கு சீரிய -என்று அடை யிட்டார்-
தருமத்திற்கு முரண் பட்டதாயின் காமம் புருஷார்த்தம் ஆகாது என்று அதனை விலக்குவதற்காக நற் காமம் -என்றார்.
எனவே அறநெறிக்கு ஒத்த தக்கார் திறத்தது ஆகிய -விஹித விஷய -காமமே புருஷார்த்தம்-என்றது ஆயிற்று
என்று இவை நான்கு என்பர்
நூல் வல்லோர் எனபது அவை நிலையான் வந்தது
தர்மார்த்த காம மோஷாக்க்ய புருஷார்த்த உதாஹ்ருத -அறம் பொருள் இன்பம் வீடு எனப்படும்-புருஷார்த்தம் கூறப்பட்டது -என்று நூல் வல்லோரான முனிவர் கூறுதல் காண்க
நான்கினும் கண்ணனுக்கே ஆமது காமம்
ஏனைய முனிவர்கள் உடைய கூற்றின் படி வீடேமுக்கிய புருஷார்த்தமாக கருதப் படுகிறது –
இராமானுச முனிவர் உடைய சித்தாந்தம் அங்கன் அன்று –
காமமே முக்கிய புருஷார்த்தம் எனபது அவர் கொண்ட முடிவு –
கண்ணனுக்கே ஆமது –
சர்வேஸ்வரன் திறத்து செலுத்துவதான காமமே -அதாவது -பக்தியே -புருஷார்த்தம் என்பது கருத்து –
அக்காமம் தனக்கு இன்பமாய் இருப்பதன்றோ -அன்றி -தனக்கும் கண்ணனுக்கும் இன்பமாய் இருப்பது அன்றோ
கருதப்படலாகாது -கண்ணனுக்கே இன்பமாய் அமைய வேண்டும் –
அவன் இன்புறக் காண்பது அன்றி தனக்கு வேறு புருஷார்த்தம் இல்லை என்று கருதி
செலுத்தும் காமமே புருஷார்த்தம் என்றது ஆயிற்று –
இங்கு காமம் என்பது கண்ணைக் கலந்து களிப்புறுத்தும் நிலைமையேயாம்
அதாவது சம்ச்லேஷ சுகமே -கூடலின்பமே-என்றபடி –
கண்ணன்-எளியன் என்றபடி
காமம் ஏற்படுவதற்குத் தக்கபடி சர்வேஸ்வரன் அவதரித்து தன்னைக் காட்டி எளியனாக்கி-கொண்ட நிலைமை இதனால் தோன்றுகிறது –
மானுஷம் தனுமாஸ்ரிதம் பரம்பாவ மஜானந்த -கீதை -9 11- – மானிடம் வடிவம் கொண்ட என்னை-சர்வேச்வரத் தன்மை உடையவன் என்று அறிகின்றிலரே மூடர்கள்-என்றபடி-எளிமையில் பரத்வமும்-கலந்து மிளிர்கின்ற படியால் கண்ணனுக்கே யாம் காமம் புருஷார்த்தம் ஆயிற்று -என்க
வீடும் காமம் விளைவித்த கண்ண னதே-என்று நினைப்பார் கண்ணனைக் காமுற்றோர்
கண்ணன் விண்ணூர் -திரு விருத்தம் -47 – என்பது கண்ணனைக் காமுற்ற பராங்குச நாயிகையின் பேச்சு –
இனி மண் மிசையே -என்பதைக் கண்ணன் என்பதோடு கூட்டி தாம் காணும் இந்த மண்ணகத்தில்-கோயில் கொண்ட அர்ச்சாவதார எம்பெருமானுக்கே ஆமது காமம் என்று பொருள் கொள்ளலும் ஆம்
குணங்கள் நிறைந்து பரத்வத்துடன் தன் பால் ஆதாரம் பெருகும்படி அழகினையும் காட்டி
எளிமைப்பட்ட அர்ச்சாவதாரத் தெம்பெருமானாம் கண்ணனுக்கே ஆம் காமம் புருஷார்த்தம் ஆயிற்று -என்க
வீடும் ஆதாரம் பெருக வைத்த -அர்ச்சை வடிவனான கண்ணனதே என்று கருதுவர் கண்ணனைக் காமுற்றோர் –
புவனியும் விண் உலகும் அன்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் – -நாச்சியார் திரு மொழி – 11-3 – என்பது
கண்ணனைக் காமுற்ற காரிகையாம் ஆண்டாள் திரு வாக்கு –
இனி தலைமைப் பொருளில் கண்ணன் என்று வழங்கியதாம் –
அறம் பொருள் வீடு இதற்கு என்று உரைத்தான் –
தர்ம அர்த்த மோஷங்கள் கூடல் இன்பமான காமத்திற்கு உறுப்பாய் பயன்படுவன என்பது ஸ்வாமியின்-உபதேசம் -தர்மம் பகவத் சம்ச்லேஷ ரூபமான காமத்துக்கு தடங்கலான பாப்பம் தொலைவதற்கு உபயோகப்படும் –
பொருள் தானம் முதலியவற்றால் அதற்கு உபகரிப்பதாகும் வீடு -அதனை மேலும் மேலும் தொடர்ந்து துய்ப்பதற்கு-ஹேதுவாகும் –
வாமனன் சீலன் –
வேண்டுதலை எதிர்பாராது தானே வலியக் கொடுக்கையும் -சீரியதைக் கொடுக்கையும் –வரையாதே கொடுக்கையும் -தன் பேறாக உவந்து கொடுக்கையும் -வாமனனுக்கும் எம்பெருமானாருக்கும்-ஒத்த ஸ்வபாவன்களாம் -குறிப்பாக மாவலி யிடமிருந்து-விரகினால்-சாமர்த்தியத்தால்-
வாமனன் தன் விபூதியை -உலகினை-வாங்கியது போலே -எம்பெருமானாரும் என்னிடம் இருந்து –விரகினால் தன் விபூதிமான் ஆகிய அரங்கனை வாங்கிக் கொண்ட ஒப்புமை இங்குக் கருதத் தக்கது –
வாங்கின விபூதியை உரியது இந்திரற்கு இது என்று -இந்திரனிடம் ஒப்படைத்தான் -வாமனன் .-
வாங்கின விபூதிமானை உரியன் ஸ்ரீ வைஷ்ணவர்க்கு என்று ஸ்ரீ வைஷ்ணவர் இடம் ஒப்படைத்தார்-எம்பெருமானார் -ஒப்டைத்ததும் அந்த ஸ்ரீ வைஷ்ணவர்களை நோக்கி -இக்கண்ணனுக்கே ஆமது காமம் .
அதுவே புருஷார்த்தம்-ஏனைய புருஷார்த்தங்கள் இக் காமத்துக்காகவே ஏற்ப்பட்டன -என்று அனைவரும் –
நம்பெருமாள்-நம் பெருமாள்-என்று காமுரும்படி உபதேசித்து அருளினார் எம்பெருமானார் -என்க –
வாமனன் சீரை -என்னும் ஒரு பாடமும் உண்டாம் –
அப்பொழுது இப் புருஷார்த்தம் பெற வருந்த வேண்டியது இல்லை
தானே வந்து கூடும் இயல்பினன்அவன் என்று வாமனன் ச்வபாவத்தை அருளிச் செய்தார்
என்பது பொருளாகும் ,இந்தப் பாடத்திலும் முந்திய பாடமே சொல் அமைப்பிலும்
பொருள் ஈட்டு திறத்திலும் சீறியது என்கிறார் உரை அருளிய பெரிய ஜீயர் –
இந்த மண் மிசை –
சுட்டு இழிவு குறித்தது
மண் மிசை உரைத்தான் என்று இயையும்
நேரிய காதலே அமையும் -அவ்வின்ப வெள்ளத்தை விட்டு
நல் வீடு பெறினும் தெள்ளியோர் குறிப்பு கொள்வது எண்ணுமோ-என்கிறார் பராங்குசர் –காமத்தின் மன்னும் வழி முறையே நிற்று நாம் -என்கிறார் பரகாலர் –
அவர்கள் வழியிலே நின்று காமம் என்னும் முக்கிய புருஷார்த்தத்தை கைக் கொள்ளுமாறு-உபதேசிக்கிறார் யதிவரர் .

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்ப்பித்தது
-இந்த ஜகத்திலே உபதேசித்தார்-பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் உடைய இடத்தில்வாமனன் சீலன் இராமனுசன்..
நான்கு புருஷார்த்தங்கள் வியாசர் பராசர போல்வார் சொல்ல
-சாதனா பக்தி/ பல பக்தி இரண்டு…
.அன்பை வைத்து வேறு கேட்காமல் அதையே -அவ் விவசாரம் -/சீரிய நல் காமம் தர்மம் அர்த்தம் காமம் -மூன்றும்-
பிராக்ருதங்கள்-சொரூபத்துக்கு அநு குணம் இன்றி-
வீடு பிரகிருதி விமோசன அனந்தரம்-தேச விசேஷத்தில் சென்று அனுபவிப்பது -சொரூபத்துக்கு அநு குணம்
/சாதனாந்தர பரனுக்கு இது சுயம் பிரஜோயனம்../
-கிருஷ்ண சம்ச்லேஷனம் -வழி இல்லை..-மற்ற மூன்றும் இதற்கு அங்கம்
..இப் பாட்டில் லோகத்துக்கு செய்த உபகாரத்தை அனுசந்தித்து -தானே வந்து உபகரிக்கைக்கு -யாரும் பிரார்திக்காமலே
-ஸ்ரீ வாமன துல்ய சீலர் .தன் பேறாக கொடுத்தான்
/போரும் போரும் என்று இல்லாமல் /உவந்த உள்ளதனாய்
-ஆறு பேரும் உகக்க உவந்த உள்ளத்தனாய் -வாமனன் செய்து அருளினாரே
-இந்த்ரன் பெற்றான் இழந்த ராஜ்யத்தை -உகந்தான்
மகா பலி பட்டம் -வள்ளல் -உகந்தான்
சாஸ்திரம் ஸ்வாமி மீட்டு கொடுப்பான் -வேதம் உகந்தது
/உலகத்தார் திருவடி கேட்காமலே வந்து தீண்டியதே -உலகோர் அனைவரும் உகந்தார்களோ -ஆழ்வார்கள் அதில் ஈடு பட்டு
உலகம் அளந்த பொன்னடி என்று கிட்டும் -ஆசார்யர்கள் கதா புன -மதீயம் அலங்க்ருஷ்யதே -கேட்க வைத்த திருவடிகள்
நமுசி வானில் சுழற்றி -சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய -விரோதி நிரசனத்தலும் உகக்க
தானும் ஆஸ்ரயித்த இந்த்ரன் உகந்தான் என்று உகந்து -அந்த ப்ரீதியாலே ஓங்கி உலகு அளந்தான்
திரு பாண் ஆழ்வார் மண் அளந்த இணை தாமரை கண்டு உகந்து அருள –
/சேம ரூபமாய் /நல்/ வீடு- கைவல்யம் தவிர்த்து-
/பொல்லா அரக்கன்-விபீஷணன் இருப்பதால் நல்ல அரக்கன்-அங்கு அது போலே இங்கு -நல் வீடு -சேம நல் வீடு
பிணி மூப்பு இல்லாத இறபபிலயாய் பிறப்பதற்கே -கைவல்யம் -எண்ணாது -அந்தமில் பேர் இன்பம் –
யோகம்-கிடைப்பாதது கிடைப்பது /
சேமம் கிடைப்பது தங்குவது
//யோக நல் வீடு சொல்ல வில்லை சொரூப அனுரூபமான வீடு தானே மோஷம்.
இக் கரை அக் கரை போல.. சேர்த்தி என்றும் உண்டு..சேர்தியை தக்க வைத்து இருக்கிறான்
அக் கரை என்னும் அநர்த்த கடலில் அழுந்து கிடந்தேன் உன் பேர் அருளால்
இக் கரை ஏறி இளைத்து இருந்தேன் -பெரி ஆழ்வார்.
.விபீஷணன் ஆஜ காம-தன் இடத்துக்கு வந்தான்-பெருமாள் இடம் தானே அவன் இடம்
/பொருளும் அர்த்தமும்- கொண்டு செய்ய பட்ட தர்மம்- அதனால் பெற்ற வீடு-..சீரிய நல் காமம்/
அங்கம் இல்லை ஸ்வயம் புருஷார்தமாய் இருப்பதால் சீரிய -சாத்தியம் இது சாதனம் இல்லை
..நல்-தர்ம அனுரூபமான காமம் -சர்வேஸ்வரன் விஷயத்தில் காமம்../
சாஸ்திர வழியில் ஈட்டிய பொருள்
/மோஷ ஆனந்த பலத்துக்கு மட்டும் பண்ணி கிட்டிய பொருள்.
/பழி அஞ்சி பாத் தூண் உடைத்தாயின் வாழ்க்கை -குறள்-புண்யம் வராது பாபம் வரும் //
விதிக்க பட்ட காமம் -நமக்கும் இல்லாமல் நமக்கும் அவனுக்கும் இல்லாமல் அவனுக்கே –
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே -போலே
-பிரபல விரோதி-மற்றை நம் காமங்கள் மாற்று-போல-காமங்கள் போக்கு -பிரார்த்தனை இல்லை மாற்று என்பதே
நான்கினும்- நான்கின் உள்ளும்- அவர்கள் சொன்னதும் வைத்திக காமம் தான்.
–அங்கம் மட்டும் மாறும் –சேதனன் அசித் போலபாரதந்த்ர்யன் தனக்கு ஓன்று பிரயோஜனம் இன்றி பேறு இழவு சுவாமிக்கே
/வேய் மறு தோள் இணை மெலியுமாலோ- உன் தோள் தான் ..இப்படி மாறாடி இருக்கும்.
/இவ் உலகத்து காமம் த்யாஜ்யம் அவ் விஷய காமம் வேணும்..
-வகுத்த சேஷி இடம் ..அகங்காரம் தவிர்த்து அவன் திரு உள்ளம் உகப்பதே புருஷார்த்தம்
அவனுக்கே ஆகிய காமம்..உனக்கே நாம் ஆட் செய்வோம்/
தனக்கே ஆக எனை கொள்ளும் ஈதே தலை குனிந்து அவனை நோக்காமல் ஆழ்வார் அருளுகிறார்/
மற்றை நம் காமங்கள் மாற்று- நம் ஆனந்தத்துக்கு இன்றி கைங்கர்யத்தில் களை அறுகிறாள்.
.அறம் பொருள் வீடு மூன்றும் இதற்கே தான்../
தர்மம் -பாபம் விலக ஹேது- பக்தி வளர இது வேணும் /
அர்த்தம்-பொருள்- தானம் -அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்தது கண்ணனுக்கு பிடிக்கும் என்பதால்/
மோஷம்-அங்கம்-வளர வளர அனுபவிக்கணும்.- நீடித்து நிலைத்து இருக்க
-தக்க வைத்து கொள்ள -பகவத் சம்ச்லேஷம் கூடி இருப்பதே.
.இந்த பூமியிலே சொன்னார்..நல் பாலுக்கு உய்தனன் நான் முகனார் நாட்டுள்ளே-போல
-உரைப்பான்- இப்படியுமா உரைத்தான் ஆச்சர்யம்.
. சீரை- பாட பேதம்..புருஷார்த்தை லபிக்க எளிதாக -வருந்த வேண்டியது இல்லை எளிதாக பெறலாம்-
கேட்காமலே திரு வடி கொடுத்த வாமனன் இதையும் கொடுப்பான் .
.முந்தின பாடமே சப்த ச்வராச்யமும் அர்த்த கவ்ரமும் உண்டு..
சேம நல் வீடு- மோஷத்தை கொடுப்பதாய் ..
அங்கம் -பக்தி ஞாமம் கர்மம் -சாதனம் அனுஷ்டிக்க பொருள்- நியாயமாய் பெற்ற தனம்
../நித்ய நைமித்திய கர்ம ஆராதனா ரூபமாய் வர்ண ஆஸ்ரம தர்மம் //சுயம் புருஷார்தமாய்
அகம் சர்வம் கரிஷ்யாமி கைங்கர்யமே தர்மம் அவன் ஆனந்தத்துக்கு என்று
ஒழிவில் காலம் எல்லாம் உடனே மன்னி வழு இலா அடிமை செய்தல்/
அதற்க்கு பொருளும்/ அனுபவிக்க பிராப்தி வீடும் -இதற்க்கு அங்கம். சக காரி
/ஸ்ரீ பாஷ்யம் தானே உரைத்தார் இங்கேயே அருளி செய்தார்..
இம் மண் இசையே கண்ணனுக்கே காமம் அர்ச்சை அவதார பிராவண்யம்
…தர்மமும் பொருளும் -வீடு- நம் பெருமாள் மண் மிசையே கண்ணன்-
பெரிய பெருமாளே கண்ணன் -இன்றும் வெண்ணெய் நாற்றம் உண்டே பட்டர்
அதனாலே மயலே பெருகும் அரங்கம் என்றாலே -பேச்சு கேட்டாலே போதுமே
நல் அடி போது–ஸ்ரீ பாதத்தை வைத்தால் போல
ஸ்ரீ பாஷ்யம் சம்ச்லேஷம் ரசம் வரும் படி அனைவருக்கும் கொடுத்தார் .
.நல் வீடு பெறினும் மீறிய காதலே அமையும்-பராங்குசரும்
மன்னு காமத்தின் வழி மறைய // சீரார் இரு கரையும் எய்துவார் //பரகலாரும் அருளினார்கள்.
இப் பார் ஆர் சொல்ல பட்ட மூன்று அன்றே அம் மூன்றும் ஆராய அறம் பொருள் இன்பம்
.இவற்றின் இடை- அதனை -எய்துவார்
–பெயரை சொல்லும் படி இல்லாமல் உசந்தது என்றும் பெயரை சொன்னால் அதிகம் சோகம் வரும் என்று
– பொருள் – இடை அதனை -காமம்- எய்துவார்
-வீடு சேர்க்க வில்லை–சிக்கு என மற்று ஆரானும் உண்டு என்பவர் எனபது தான்-வீடு-
அதுவும்-பெயர் சொல்ல வில்லை
ஒராமை அன்றே உலகோர் சொல்லும் சொல்.
–. மடலில். ஞானம் தசை மாறி பிரேம தசையில்
–ஸ்வாமி சாஸ்திரம் கொண்டு -நாலையும் சேர்த்து -பரகால நாயகி சொன்னதையும் சேர்த்து- உபய வேதாந்தி ..அருளினார்
–பல பக்தி -அனுபவம் பண்ணும் பொழுது -சாதனம் இது..
-கண்ணனுக்கே ஆமது காமம்-கிருஷ்ண சம்ச்லேஷனம்
-பக்தி இல்லை–அனுபவிக்கும் பொழுது ஏற்படும் ப்ரீதி- ஒன்றே புருஷார்த்தம்–

——————————————————————–

கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: