அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-38-ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

முப்பத்து எட்டாம் பாட்டு
அவதாரிகை
இப்படி ஸ்ரீ வைஷ்ணவர்கள் சேர்க்கும் போதும் -அத்வேஷாதிகள் வேண்டுகையாலே -தத் ப்ரவர்தகனான-ஈஸ்வரன் இறே -இப் பேற்றுக்கு அடி என்று நினைத்து -சாஷாத் நாராயணோ தேவ -இத்யாதிப் படியே –
எம்பெருமானார் தம்மை ஈஸ்வரனாக பிரதி பத்தி பண்ணி -இன்று என்னைப் பொருளாக்கி -திரு வாய் மொழி -10 8-9 –என்கிற பாட்டில் -ஆழ்வார் அருளிச் செய்தால் போலே -இவரும் அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
இவர்களை முன்னிட்டு தம்மை அங்கீகரித்து அருளின எம்பெருமானார் -ஆகையாலே –
இவர் திரு முகத்தைப் பார்த்து -இத்தனை நாள் இவ்வூரிலே நான் வர்திக்கச் செய்தே
என்னை அங்கீகரியாது இருக்கைக்கும் இப்போது அங்கீகரிக்கைக்கும்-ஹேது என் என்று-கேட்கிறார் ஆகவுமாம் –

ஆக்கி யடிமை நிலைப்பித்தனை என்னை யின்றவமே
போக்கிப் புறத்திட்ட தென் பொருளா முன்பு புண்ணியர் தம்
வாக்கில் பிரியா விராமானுச நின்னருளின் வண்ணம்
நோக்கில் தெரிவரிதால் உரையாய் இந்த நுண் பொருளே – 38-

வியாக்யானம்
அநாதி காலம் -ஈச்வரோஹம் -என்று இருந்த என்னை சேஷத்வத்துக்கு இசையும் படியாக்கி–அது தன்னை-ததீய சேஷத்வ காஷ்டை யளவும் செலுத்தி -ஸ்த்திப்பித்து அருளினீர் –இன்று இப்படி செயலாய் இருக்கச் செய்தே பூர்வ காலம் எல்லாம் வ்யர்த்தமே போக்கி –பாஹ்ய விஷயங்களில் தள்ளி விட்டு வைத்தது -என்ன நிமித்தமாக –தேவரீரை உள்ளபடி அறிகைக்கு ஈடான பாக்யாதிகருடைய வாக்குக்கு நித்ய விஷயமாய்-இருக்குமவரே -தேவரீர் உடைய கிருபா பிரகாரம் தர்சிக்கும் அளவில் துர் ஜ்ஞ்நேயமாய் இரா நின்றது –
இந்த சூஷ்ம அர்த்தத்தை தேவரீர் தாமே அருளி செய்ய வேணும்-
தெரிவரிது என்றது -விவேகிக்க அரிது என்ற படி –

மக்நன் ஆக  உழன்று இருக்கும் நம்மை  உத்தரணத்துக்காக வன்றோ நீர் ஆவிர்பவித்தது –உமக்குமா லீலா -புண்ணியர் வாக்கில் பிரியா -கலியும் கெடும் நம்மாழ்வார் தொடக்கமான -நின் –அருளின் வண்ணம் -வாசி உண்டே பெருமாள் அருளிலும் –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை –
அவதாரிகை
இப்படி ஆழ்வானை இட்டு அடியேனை திருத்தி சேர்த்து -சேஷத்வத்துக்கு இசைவிப்பித்து –தத் யாதாத்ம்ய ஸீமா பூமியான சரம பர்வதத்திலே -அத்ய அபிநிவிஷ்டனாம் படி -பண்ணி யருளின-தேவரீர் -இதற்க்கு முற்காலம் எல்லாம் அந்த ரசத்தை அடியேனுக்கு அனுபவிப்பியாதே வ்யர்த்தமே-விஷயாந்தரங்களிலே வைத்ததுக்கு மூலம் ஏது-பாக்யவான்கள் உடைய வாக்கிலே இடை விடாது சர்வ காலமும்
ஸ்துதிகப்படும் எம்பெருமானாரே -தேவரீர் உடைய க்ருபா பாத்ரம் உள்ளபடி அறியப் பார்த்தால் எத்தனை-தரம் உடையார்க்கும் அரிதாய் இருக்கும் – தேவரீரே இந்த சூஷ்ம அர்த்தத்தை அருளிச் செய்ய வேணும்-என்றே நேரே கேட்கிறார் –

வியாக்யானம்-
என்னை –
அநாதி காலமே தொடங்கி-சில நாள் தேகமே ஆத்மா என்று பிரமித்த அஞ்ஞாநத்தாலும் –பின்பு தேஹாதிர்க்தமாய் கொண்டு ஒரு ஆத்மவஸ்து இருக்கிறது என்று அறிந்ததாலும் -ஈச்வரோஹம் அஹம் போகி-சித்தோஹம் பலவான் சூகி -என்னும் படியான அந்யதா அஞ்ஞா நத்தாலும் – பின்பு காமநாதிகாரத்திலே விழுந்து
காமைஸ் தைர்ஹ்ர்தஜ்ஞான ப்ரபத்யந்தே அந்யதேவதா -என்னும் படியான விபரீத அஞ்ஞா நத்தாலும் –திரிந்து அசத்கல்பனாய் போந்த அடியேனை இன்று -இப்போது -ஆக்கி -அப்படிப் பட்டவற்றை எல்லாம் விடுவித்து –
முதலிலே நானும் உனக்கு பழ வடியேன் -பகவத் சேஷத்வத்தில் அந்வயிப்பித்து -அடிமை நிலைப்பித்தனை -பின்பு –
அடியார்க்கு என்னை ஆள் படுத்த விமலன் -உன் அடியார்க்கு ஆட் படுத்தாய் -என்னும்படி சர்வேஸ்வரன்-உபகரித்தால் போலே -குருரேவ பரப்ரம்மம் -ஆசார்யஸ் சகிரிஸ் சாஷாத் சாருபி ந சம்சய -என்னும் படியான தேவரீர்-அடியேனை சேஷத்வ காஷ்டா ரூபமான ததீய சேஷத்வத்திலே நிலை நிறுத்தினீர் –முன்பு -பூர்வ காலத்திலே-
அவமே போக்கி -வ்யர்த்தமாக பொகட்டு -புறத்திட்டது -அப்ராப்த விஷயங்களிலே பிரவணனாகப் பண்ணியது –
என் பொருளா -என்ன பிரயோஜனம் -மூலம் ஏது -என்று கேட்க -மக்நானுத் தீராதே லோகன் -என்கிறபடியே-சர்வரையும் உத்தரிப்பிக்கைக்காக அவதரித்த நீரும் சர்வேஸ்வரனைப் போலே என்னை உம்முடைய-கிரீடைக்கு இவ்வளவும் விஷயமாக்கி வைத்தீரே -என்ன -இவ்வளவும் உமக்கு அதிகாரம் இல்லாமையாலே
அப்படி வைத்தோம் -என்ன -அதிகாரம் உண்டேல் அரங்கர்-இரங்கரோ – அதிகாரம் இல்லாதவர்களுக்கு அன்றோ
எதிராசா நீர் இரங்க வேண்டுவது -ஆனாலும் இப்போது நீர் இரங்க வேண்டுவது எந்த அதிகாரத்தை பார்த்து-என்று முன்பு தம்மை –அவமே புறத்திட்டது என் பொருளா –என்னும்படியை பிடிக்கிறார் காணும் -இன்று என்னைப் பொருள் ஆக்கி –
என்கிற பாட்டிலே ஆழ்வாரும் அவன் மடியைப் பிடித்தார் இறே -நம்முடைய கிருபையாலே இன்று உம்மை இப்படி-பண்ணினோம் என்றீர் ஆகில் -அந்த கிருபையினுடைய ஸ்வபாவத்தை சொல்ல வேணும் என்கிறார் –
புண்ணியர் தம்
-மயர்வற மதி நலம் பெறுகைக்கு உடலான பகவத்நிர்ஹேதுக கிருபையான பாக்யத்தை உடையவர்கள் –
வாக்கில் பிரியா -அவர்கள் திரு வாக்கிலே இடைவிடாது இருக்கிற -பூர்வே மூர்த் நாயஸ் யாஸ்வயமுபகதா தேசிக –என்னும்படியான நம் ஆழ்வார் முதலானவர்கள் – பொலிக பொலிக பொலிக என்று மங்களாசாசனம் பண்ணினார்கள் இறே
அன்றிக்கே -குரோர் நாம சாதா ஜபேத் -குரோர் வார்த்தாஸ் சகதயேத்-என்று இருக்கையாலே -நித்யம் யதீந்திர-தவ திவ்ய வபுஸ் ஸ்மர்தவ் மேசக்தம் மனோ பவ து வாக்குண கீர்தனவ் ஸௌ க்ர்த்யஞ்ச தாஸ் கரனேது-கரத்வயஸ் யவ்ர்தயந்த்ரே -என்கிற படியே பிரார்த்தித்து அருளும் -வாசா வுதீந்திர மனசா வபுஷா சயுஷ்மத்
பாதாரவிந்த யுகளம் பஜதாம் குருணாம் கூராதி நாத குருகேச முகாத்யு பும்ஸாம் -என்னும்படி ஆழ்வான் பிள்ளான்-தொடக்கமான பாக்யவான் களுடைய திரு உள்ளத்திலே சர்வ காலமும் அனுசந்திக்கப்படுகிற
-இராமானுசா
எம்பெருமானாரே –
நின் அருளின் வண்ணம் –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவான அவனுடைய கிருபை-போல் அன்று இறே -மோஷ ஏக ஹேதுவான தேவரீருடைய கிருபை
-வண்ணம் -அதனுடைய பிரகாரம் ஸ்வபாவம்-என்றபடி –
நோக்கில் –
அதை நன்றாக தர்சித்தால் -அறிய வேண்டும் என்று பார்த்தால் -தெரிய வரிது -அறிக்கைக்கு-கடினமாய் இருக்கும் -இத்தனை நாளும் பலியாதே போய் இன்று நிர்ஹே துகமாக பலித்த பிரகாரம் என் என்று-விசாரித்தால் அந்த பிரகாரம் இன்னது என்று விவேக்கிக்க அரியதாய் இருக்கும் என்றபடி –
ஆல் –ஆச்சர்யம் –
ஏகாகாரமான தேவரீர் உடைய கிருபை என் அளவில் மாதரம் ஆகார த்வயத்தை பஜித்ததோ என்றுய் ஆச்சர்யப்படுகிறார் -அன்றிக்கே –ஆல் என்றது இன்று நிர்ஹேதுகமாக பலித்த கிருபை முற்காலத்திலே பலியாதே
போர வைத்தாய் புறமே –
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன் -என்று ஆழ்வார் நிர்வேதப் பட்டால் போலே-இந்த அனுபவத்தை இழந்து விஷய ப்ரவண னாக போனேன் என்று இழந்த நாளை நினைந்து-நிர்வேதப்படுகிறார்
-உரையாய் இந்த நுண் பொருளே
-இந்த சூஷ்ம அர்த்தத்தை -உபய விபூதி விருத்தாந்தத்தையும்-சாஷாத் கரித்தவர் ஆகையாலே தேவரீர் அறிந்து அருளுமே -ஆகையாலே தேவரீரே அருளிச் செய்ய வேணும் என்றது ஆய்த்து .

————————————————————————–

அமுது விருந்து
அவதாரிகை

நல்லோர் ஆள் அவர்க்கு ஆக்கும் போதும் அத்வேஷாதிகள்-த்வேஷம் இன்மை முதலியவை -வேண்டும் அன்றோ –அவைகட்கு ஈஸ்வரன் அன்றோ காரணம் -ஆக இப் பேற்றுக்கு அடி ஈச்வரனே யாதல் வேண்டும் -அந்த ஈஸ்வரன் தானும் –
சாஷாத் நாராயணோ தேவ -க்ருத்வா மர்த்யமயீம் தநூம்
மக்நான் உத்தரதே லோகன் காருண்யாச் சாஸ்திர பாணி நா -என்று நாராயணன் நேரே ஆசார்யன்-வடிவம் கொண்டு -கீழ்ப்பட்டவர்களை சாஸ்திரக் கையினால்-கை தூக்கி விடுகிறான்-என்றபடி –
நமக்கு ஆசார்யனான எம்பெருமானாரே என்று நினைந்து அவரை நோக்கி இன்று என்னைப்-பொருள் ஆக்குவதற்கும் முன்பு என்னைப் புறத்து இட்டதற்கும் என்ன ஹேது என்று வினவுகிறார் –
அல்லது –
தன்னடியார்களைக் கொண்டு எம்பெருமானார் தன்னை அங்கீகரித்தவர் ஆகையால் அவரை நோக்கி –
இத்தனை நாள் நான் இவ்வூரிலேயே இருந்தும் என்னை அங்கீ கரியாதற்கும் இன்று என்னை-அங்கீ கரித்தத்தற்கும் காரணம் என்ன -என்று கேட்கிறார் ஆகவுமாம்-

பத உரை –
என்னை ஆக்கி -என்னை சேஷத்வத்திற்கு இசையும் படி யாக்கி –
அடிமை-பாகவத சேஷத்வத்தின் எல்லை அளவிலும் வரும்படி செய்து -அது தன்னை
நிலைப்பித்தனை -நிலை நிற்கும்படி செய்து அருளினீர்
முன்பு -இதற்கு முந்திய காலம் எல்லாம்
அவமே போக்கி -வீணாகப் போகும்படி செய்து
புறத்து இட்டது -வெளி விஷயங்களில் தள்ளி வைத்தது –
என் பொருளா -என்ன காரணமாக
புண்ணியர் தம் -பாக்கியசாலிகள் உடைய
வாக்கில்-பேச்சில்
பிரியா -எப்பொழுதும் பிரியாது விஷயமாய் அமைந்து இருக்கும்
இராமானுச-எம்பெருமானாரே
நின் அருளின் வண்ணம் -தேவரீர் உடைய கிருபையின் பிரகாரம்
நோக்கில்-ஆராய்ந்து பார்த்தால்
தெரிவரிது-தெரிந்து கொள்ள முடியாததாய் இருக்கிறது
இந்த நுண் பொருள்-இந்த சூஷ்மமான விஷயத்தை
உரையாய்-தேவரீரே அருளிச் செய்ய வேணும் –

வியாக்யானம்
இன்று என்னை அடிமை யாக்கி நிலைப்பித்தனை
முன்பு எல்லாம் ஸ்வ தந்திரனாய் மதித்துத் திரிந்த என்னை இன்று அடிமைக்கு இசையும் படி ஆக்கினீர் –
ஆக்கி அடிமையின் எல்லை நிலத்திலே கொண்டு போய் நிலை நிறுத்தினீர் –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்று இறைவனை ஆழ்வார் அருளிச் செய்தார் –
அது போன்றது இதுவும் –
தான் முன்னர் இருந்த நிலைக்கும் இப்போது ஏற்பட்டு உள்ள நிலைமைக்கும் உள்ள நெடு வாசியை-நோக்கி –ஆக்கி-என்கிறார் -திருத்தி -என்கின்றிலர்-அவர்க்கே புதிய பொருளாகத் தோற்றுகிறது-
வேதமும் அசத் -சத் -என்று நெடு வாசியைக் காட்டிற்று –
அவமே போக்கிப் புறத்து இட்டது என் பொருளா முன்பு –
கழிந்த நாட்களுக்கு இரங்கிக் கூறுகிறார் -அவமே போக்கி -என்று
புறத்து இடல்-பாஹ்ய விஷயங்களில் ஈடுபடும்படி விட்டு இருத்தல்-
இழப்பதும் எம்பெருமானாராலேயே -பெறுவதும் எம்பெருமானாராலேயே என்று இப்போது நினைக்கிறார் –
அத்வேஷாதி களுக்கு காரணமான ஈச்வரனாம் மூல சூக்ருதத்தை -எம்பெருமானாரிலும்
வேறுபட்டதாக நினைப்பது -சரி யன்று -சாஷாத் அம்மூல சூக்ருதமே -எம்பெருமானாராக வந்து-உள்ளது என்பது -அமுதனார் கருத்தாகும் –
இட்டது -என்று இடுகைக்கு கூறுமாற்றால் தனது பாரதந்த்ரியத்தை வெளிப்படுத்தினார்
என் பொருளா -என்ன காரணமாக
இன்று -என்பது ஆளாக்கினதற்கு பின்பு உண்டான காலத்து
முன்பு -என்பது -அதற்கு முன்புள்ள அநாதியான காலத்தை –
புண்ணியர் தம் வாக்கில் பிரியா இராமானுசன்
எம்பெருமானாரை உள்ளபடி அறிக்கைக்கு ஈடான பாக்கியத்தை உடையவர் புண்ணியர் –அவர்தம் வாக்கில் பிரியாமை -எப்பொழுதும் அவர்களால் துதிக்கப் பெறுதல்-
நின்னருளின் வண்ணம் நோக்கில் தெரிவரிதால்-
வண்ணம்-பிரகாரம்
நோக்கில்-ஆராய்ந்தால்
தெரிவரிது –விவரிக்க முடியாமல் இருக்கிறது
இதற்கு முன் நோக்காததும் -இன்று இலக்கு ஆக்கியதுமான பிரகாரம் தெரிவரிதாய் உள்ளது –
எம்பெருமானார் –நல்லோர் இன்று உம்மை ஆளாக்கினர் -ஆகையால் அருள் பெற்றீர்–என்றார்
-அன்நல்லோர் இது காறும் ஏன் ஆள் ஆக்கி கிற்றிலர் என்றார் -இவர்
இது காறும் உமக்கு இசைவில்லை -என்றார் அவர் –
இன்று இசைவு வந்தது எங்கனம் -என்றார் இவர்
அத்வேஷாதிகள் உம்மிடம் உண்டானமையால் என்றார் அவர்
அத்வேஷாதிகள் இன்று உண்டாவானேன் -என்றார் இவர்
அது ஈஸ்வர கடாஷம் ஆகிற பிரதம சூக்ருதத்தாலே என்றார் அவர்
அவ் வீச்வரனும் தேவரீர் அன்றோ –ஏன் முன்பே கடாஷித்து இருக்க கூடாது -இப்பொழுது-கடாஷிப்பதற்கு என்று ஒரு அதிகாரம் உண்டாயிற்றோ எனக்கு -ஆகையால் இப்பொழுது-அருள் புரிதற்கும் முன்பு அருள் புரியாததற்கும் ஒரு காரணம் புரிய வில்லையே –
இது நுண் பொருளாய் இரா நின்றது -நீரே அருளிச் செய்ய வேண்டும் என்கிறார் –
ஆல்-அசை ஆல்-ஆகையால் என்றபடியுமாம்
உரையாய் இந்த நுண் பொருளே
இந்த சூஷ்ம அர்த்தத்தை தேவரீரே அருளி செய்ய வேணும் –
இன்று என்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் -திரு வாய் மொழி10-8 9- – என்று-நம் ஆழ்வார் அருளி இருப்பது இங்கு அனுசந்திக்கத் தக்கது–

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தல்

இப்படி ஸ்ரீ வைஷ்ணவர்கள் சேர்க்கும் போதும் அத்வேஷாதிகள் வேண்டுகையாலே
-தத் ப்ரவர்த்தகனான ஈச்வரனே இப் பேற்றுக்கு அடி –இதை விளைவிப்பவன் மூல சுக்ருதம்
-அவன் தானே ஓன்று பத்தாக்கி நடாத்தி கொண்டு போரும் –
சாஷாத் நாராயணா -என்று எம்பெருமானாரை ஈஸ்வரனாக கொண்டு
-இன்று என்னை பொருள் ஆக்கி ..அன்று என் புறம் போக வைத்தாய் -ஆழ்வார் கேட்டது போலே –
இத்தனை நாள் இவ் ஊரிலே வர்த்திக்க செய்தே என்னை அங்கீகரியாது இருக்கைகக்கும்
இப் பொழுது அங்கீ கரிக்கைக்கும் ஹேது என்ன என்று கேட்கிறார்
/இன்று என்னை -ஈஸ்வரன் சுத்தி திரிந்த தென்னை-ஆக்கி -அடிமை நிலைப்பித்தனை என் பொருளா ?
முன்பு என்னை அவமே போக்கி-வ்யர்தமாக போக்கி .–புறத்தி இட்டு -வெளி விஷயத்தில் ஆசை –என் பொருளா ?
புண்ணியர் தம் வாக்கில்-கூரத் ஆழ்வான் போல்வார்-நின் அருளின் வண்ணம்
நோக்கில்- தெரிவரிதால் -நித்யமாக ஒரே மாதிரி இருக்கும் என்று இருந்தேன் –
இரண்டு நாக்கு உனக்குமா ?-உரையாய் இந்த நுண் பொருளே
..ஆண்டாள் இடைச்சி பாவம் அனுகரித்தால் போல
கடல் ஞாலம் செய்தேனும் பதிகத்தில் ஆழ்வார் அநு கரித்தால் போல
-ஞானம் அடி களைஞ்சு போகும் —இந்த பாசுரம் ஸ்வாமியை ஈஸ்வரனாக நினைத்து அருளினது
உபய விபூதி நாதன்-உடையவர்-
பிரபுத்வம் வந்தது –பரணீ யத்வம் தெரிய வில்லை -ராமனை பார்த்து திரு வடிசொன்னால் போல
-பெண் நீர்மை ஈடு அளிக்கும் இது தகாது ஆண்டாள்..
உதங்க பிரசன்னம் /வன் நெஞ்சத்து -மன் நெஞ்சம் ஐவர்க்காய் படை தொட்டான்-
விஸ்வரூபம் ஒன்றையே காட்டி பதில் கண்ணன் அன்று
.விஷம புத்தி ..அநாதி காலம் ஈச்வரோகம் என்று இருந்த என்னை-
திருத்தி -இல்லை- ஆக்கி- புதுசாக ஆக்குவது -அன்னம் பண்ணுவது போல..சேஷத்வத்துக்கு இசையும் படி ஆக்கி
-நெடு மரக் கலம் கரை சேரும் படி-
மீண்டும் -அது தன்னை அடிமை நிலைப்பித்தனை–ததீய சேஷத்வது காஷ்ட்டை அளவும் நிலைக்க செய்து
./புண்ணியர்-தேவரீரை உள்ள படி அறிக்கைக்கு ஈடான பாக்யாதிகர் -ஸ்வாமி சம்பந்ததாலே என்று இருக்கும்
.அருளின் இயல்பு-தெரி வரிது -விவேகிக்க அரிது
தனக்கும் தன் தன்மை அறியாதவன் .சூஷ்ம அர்த்தத்தை நீரே அருளும்.
.என் அறியாதனத்தாலே கேள்வி.. கூரத் ஆழ்வான் போல்வார் ஸ்வாமி ச்வாபம் தெரிந்தவர் இப்படி நினைக்க மாட்டார்கள்.
குளித்து மூன்று அனலை ஓம்பும் — தன்னை ஒழித்திட்டேன்–.என் கண் இல்லை நின் காணும் பக்தன் அல்லேன்
களிப்பது என் கொண்டு நம்பி -குண பூரணன்-களிக்கலாமே–.கடல் வண்ணா-இதன் மூலம் தெரிந்து கொண்டேன்
-பிரயோஜனந்தார்களுக்கு கொடுத்தாயே – கதறுகின்றேன்.-இது ஒன்றே முடியும்
-பிர பன்னன்-பண்ண கூடாதே -என் கண் இல்லை
-ஞானமில்லை சொன்னேனே -அளித்து எனக்கு அருள் செய் கண்டாய் ..
அது போல இந்த பாசுரத்திலும் முன்னுக்கு பின் முரண் ஆக்கினீர் பாசுரம் பாடினேன்
..பட்டர்-வார்த்தையை நீயே எழுது கை எழுத்து நான் போடுகிறேன் -பிராட்டி இடம் சொன்னது போலே
நான் புண்யன் இல்லை -அருளி செய்ய வேணும் என்று நேரே கேட்கிறார்…
முன்பு இருத்த நிலை படி படியாக சொல்கிறார்..
தேகமே ஆத்மா என்ற விபரீத ஞானம் முன்பு
..ஈசவரோஹம்-ச்வாதந்த்ர்யா அபிமானம்
-அந்ய தா ஞானம் -சேஷத்வம் மாற்றி-/
பின்பு வென்றியே வேண்டி விபரீத ஞானம் காமம்-ஆசை -ஞானம் அபகரிக்க பட்டு-/
அசத் சத் பரமனை சத் என்று நினைந்தவன் சத் அசத் என்று நினைப்பவன் அசத் ..
ஆக்கி- விடுவித்து ,பகவத் சேஷத்வத்தில் வைத்து பின்பு-
அடியார்க்கு என்னை ஆட் படுத்தாய்- -வேண்டிக் கொண்டார் தொண்டர் அடி பொடி ஆழ்வார்
செய்து முடித்தான் அடுத்த ஆழ்வாரான திரு பாண் ஆழ்வாருக்கு
அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன் -அவர் அருளினார்
-பேசித்தே பேசும் ஏக கண்டர்கள்-சர்வேஸ்வரன் உபகரிதால் போல.
.குரு ரேவ பர பிரம -ததீய சேஷத்வத்தில் நிலை நிறுத்தினார்
அவமே போக்கி புறத்திட்டது-அசித் போல போட்டு வைத்தீர் .
அடிமை நிலைதிட்டனை-சூஷ்ம ரூபத்தால் பிராட்டி அகன்தா-அவனின் நினைவு தான் அவள்….
அது போல மூல சுக்ருதம் தான் ஸ்வாமி என்று கொண்டு-
.இவருக்கு அதிகாரம் இல்லாமையாலே இப்படி வைத்தோம் -என்று மறுதலிக்க
-அதிகாரம் உண்டேல் அரங்கர் இரங்காரோ -மடியை பிடித்து கேள்கிறார்
..கிருபையால் இன்று பண்ணினோம் என்றால் அந்த கிருபை முன்பு ஏன் இல்லை என்பது பற்றி சொல்லும்.
.புண்ணியர்- மயர்வற மதி நலம் அருள பட யோக்யதை
– நிர்பாதுக கிருபை உடையவர் -திரு வாயில் இருக்கிற -திரு முடி சம்பந்தம் பெற்ற நம் ஆழ்வார் பொலிக பொலிக –
/திரு அடி சம்பந்தம் -கு- இருட்டு ரு- போக்குபவன் அந்த காரம் போக்குபவனின் -குருவின்-குணம்
திருமேனி நினைந்து கொண்டு ஆழ்வான் பிள்ளான் போன்ற பாக்யவான்
/மோஷம் ஒன்றுக்கே ஹேது..வண்ணம்- விவேகிக்க அரிது ஆல்– ஆச்சர்யம்
..என் அளவில் மட்டும் ஆகார -துவயம்
ஏழையார் ஆவி உண்ணும் இணை கூற்றங்கள்-துவயம்-போர வைத்தார் புறமே- அல்ப சாரம் ஒழிந்து உகந்தேன்
-இழந்த நாளை நினைந்து நிர்வேதம் ஆல்
உபய விபூதியும் தேவரீர் உமக்கு தெரியும் உரையாய் இந்த நுண் பொருளே ..பதில் கிடையாது .

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: