அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-37-படி கொண்ட கீர்த்தி இராமாயணம்-இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை

முப்பத்து ஏழாம் பாட்டு –அவதாரிகை
இப்படி இருக்கிற இவர் தம்மை நீர் தாம் அறிந்து பற்றின படி என் -என்ன
நான் அறிந்து பற்றினேன் அல்லேன் –
அவர் திருவடிகளில் சம்பந்தம் உடையவர்களே -உத்தேச்யர் என்றும் இருக்குமவர்கள் –
என்னையும் அங்குத்தைக்கு சேஷம் ஆக்கினார்கள்-என்கிறார் –

படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம்
குடி கொண்ட கோயிலில் இராமானுசன் குணம் கூறும்
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர்
அடி கண்டு கொண்டு உகந்து என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினரே – 37-

வியாக்யானம் –
பூமியை அடங்கக் கொண்டு இருக்கும் கீர்த்தியை உடைத்தான – ஸ்ரீ இராமாயணம் ஆகிற-பக்தி சாகரம் -நித்ய வாசம் பண்ணுவதொரு திவ்ய ஸ்தானமாய் இருக்கிற எம்பெருமானாருடைய-குணங்களை பேசா நின்றுள்ள -பிரேம யுக்தருடைய பரிமளத்தை உடையதாய் -ச்லாக்யமாய் -போக்யமாய் –இருக்கிற திருவடிகளிலே -நெஞ்சு கலந்து -ச்நேஹித்து இருக்கும் -விலஷணரானவர்கள்-இவ் ஆத்ம வஸ்துவும்
அங்குத்தைக்கு சேஷம் அன்றோ என்று கொண்டு -இதினுடைய படியை தர்சித்து அந்த
சம்பந்தமே ஹேதுவாக விரும்பி -அங்கீகரித்து -தங்களைப் போலே என்னையும் அவர்க்கு-சேஷமாம் படி பண்ணினார்கள்-ஆகையாலே நான் அறிந்து இவ் விஷயத்தைப் பற்றினேன் அல்லேன்-ஸ்ரீ வைஷ்ணவர்கள் சேர்க்கச் சேர்ந்தேன் இத்தனை என்று கருத்து –
ஸ்ரீ ராமாயணத்தை பக்தி சாரம் என்றது நிரவதிக பக்தி ஜனகத்வத்தாலே
கடி -மணம்–

உலகத்தில் கடல் மாறி இங்கு கடல் உலகத்தில் -இவர் -உள்ளத்தில் உள்ளதே -அடி கண்டு கொண்டு உகந்து -என்னை திருத்தும் ஆச்சார்யர்கள் –உகந்து ஆட்க்கொண்டார்கள் -அவர்கள் உகப்பே நம்மை ஆளாக்கும் -குற்றம் பார்த்து காய் விடாமல் -நம் சம்பிரதாய ஏற்றம் -அதிகாரி இல்லாதார்க்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டும் —
வால்மீகி மலை -ராமர் குணங்கள் கடல் -தேக்கி வைப்பது ஸ்வாமி உள்ளத்தில் -பக்தி ரசம் அறிந்து -தானே சுற்றம் எல்லாம் பின் தொடர்வது போலே சுயமாகவே அனுபவித்தார் –திருவடி போலே ஆச்சார்யர்கள் நம்மை -இந்திரியங்கள் ராவணன் தலைகள் —

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை
இப்படி ஆச்ரயண சௌகர்யாபாதகங்களான கிருபாதி குணங்களை நீர் அறிந்த பின்பு இறே ஆஸ்ரயித்தது-
இப்படி உமக்கு தெளிவு பிறந்தது என் என்று கேட்டவர்களைக் குறித்து -முதலிலே நான் அறிந்து ஆஸ்ரயித்தேன் அல்லேன் –
எம்பெருமானார் உடைய கல்யாண குணங்களை அனுபவிக்கும் பிரிய தமருடைய திருவடிகளிலே அவஹாகித்து-அனுபவிக்கும் ரசஜ்ஜர் தங்களுடைய பரசமர்த்தை ஏக பிரயோஜனதை யாலே –என்னைப் பார்த்து அங்குத்தைக்கு ஆளாக்கி
அனந்யார்ஹராம்படி பண்ணினார்கள் –அத்தாலே நான் அறிந்தேன் என்கிறார் –

வியாக்யானம்
-படி கொண்ட கீர்த்தி
-சதகோடி பிரவிஸ்த்ரம் -என்றும் -வேத ப்ராசேத ஸாதா சீத் சாஷாத் ராமாயணாத் மனா –என்றும் சொல்லுகிறபடியே பூ லோகத்தில் எல்லாம் வ்யாப்தி இருக்கிற கீர்த்தி உடைத்தான –படி கொண்ட -என்ற இது
உபலஷணம் -சத்ய லோகத்தில் நின்றும் பிரம்மாவும் தாதர்சரான நாரத பகவானும் பூலோகத்தில் வந்து-வால்மிகியைக் குறித்து நியமித்தும் உபதேசித்தும் போருகையாலே -இதனுடிய கீரத்து ஊர்த்த லோகங்களிலும் இறே
பிரசித்தமாய் இருப்பது
-ராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் –
-காவ்யம் ராமாயணம் க்ரிச்னம் ஸீதாயாஸ் சரிதம் மஹத் –
என்று இருந்தாலும் யச்யைதே தஸ்ய தத்தனம் -என்கிற கட்டளையாலே அவளுடைய சம்பத் எல்லாம் சேஷியானவனது-ஆகையாலே ராம விஷயமாய் இருக்கும் என்று சொல்லத் தட்டில்லை -இறே
-தாசர்தமான ராமாயணம்-என்கிற கரை புரண்ட பக்தி ரசத்தை -இதில் பிரதிபாத்யமாய் இருந்துள்ள அர்த்தத்தை பக்தி ரசம் என்று சொல்ல வேண்டி இருக்க-இது தன்னையே பக்தி வெள்ளம் என்றது -தத் குணசா ரச்யாத்து தத் வ்யபதேச -என்றால் போலே அதுக்கு உத்பாதகம் ஆகையாலே –
ஏகைகம ஷரம் ப்ரோக்தம் மகா பாதக நாசகம் -என்ற பிரகாரத்திலே அர்த்த பர்யந்தம் போக வேண்டி இராதே-சப்த ராசி தானே ரசித்து இருக்கும் என்னுதல் இப்படி பட்ட பக்தி தான் அங்கே ஆஸ்ரயித்து இருக்கும் நாங்கள் அத்தை பெருகைக்கு என் என்றால்
-குடி கொண்ட-கோயில் இராமானுசன் –
எம்பெருமானாரே ஒரு கோயிலாக அவர் திரு உள்ளத்தை ஒரு ஷணம் பிரியாதே இவ்விடமே-குடியாக நித்ய வாசம் பண்ணி இருந்தது-இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மா இரும் சோலை என்னும் பொருப்பிடம்-மாயனுக்கு என்பர் நல்லோர் -ஏதத் பிரதி பாத்யனான பரமபுருஷனுக்கு அவை எல்லாம் கோயில்கள் ஆமாப் போலே
தத் பிரதிபாதகமான ஸ்ரீ ராமாயணம் என்னும் பக்தி பிரவாஹத்துக்கு இவரும் ஒரு கோயிலாக காணும் இருப்பது –
இராமானுசன் -அந்த ஸ்ரீ ராம அவதாரத்தில் திவ்ய தம்பதிகள் விஷயமாக சர்வவித கைங்கர்யங்களையும் பண்ணி-வயிற்றைப் பெருக்கி பக்தியினுடைய ரசம் அறிந்தவர் இறே எம்பெருமானாராய் அவதரித்தது
-குணம் -அவருடைய கல்யாண-குணங்களை -கூறும் அன்பர்
-இந்தலோகத்தார் எல்லாருக்கும் உபதேசிக்கும் பிரேமயுக்தர் -நலியும் நரகமும் நைந்த
நமனுக்கு இங்கி யாதொன்றும் இல்லைகலியும் கெடும் கண்டு கொண்மின் -என்று ஸ்லாகித்த நம் ஆழ்வாரும் –
அவர் கொடுத்த பவிஷ்யாசார்யா விக்ரகத்தை ஆராதித்துக் கொண்டு போந்த நாத முனிகளும் -ஆ முதல்வன் என்று-பிரதி பத்தி பண்ணின ஆளவந்தாரும்கடி கொண்ட மா மலர்த்தாள்-அவர்களுடைய பரிமள பிரசுரமாய் -விலஷணமாய்
-பரம போக்யமான திருவடிகளிலே -கடி -பரிமளம் மா -மகத்வம்-யாவதாத்மா பாவியாக அனுபவித்தாலும் சரம பர்வ-நிஷ்டர்க்கு குறை பட்டு இராதே -மேன்மேலும் பெருமை உடைத்தாய் இறே இருப்பது
-மலர் –
லோகத்தில்-புஷ்பம் போல் ஒருகால் விகசிதமாய் இருக்கை அன்றிக்கே -சர்வதா விகாசதோடே இருக்கும் என்றபடி –
அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணவ் சரணம் மதியம் -என்னக் கடவது இறே –
தாள்
யானிசா சர்வ பூதானாம்-தஸ்யாம் ஜாகர்த்தி சம்யமி-என்னும்படி இருக்கிற அவர்களுடைய திருத் தாள்களிலே –
கலந்துள்ளம்-திரு உள்ளம் கலந்துகனியும் நல்லோர்
-பக்வ பலம் போலே ரசித்து இருக்கும் சம்யஜ்க்ன ஞானத்தை உடையரானவர்கள்-கூரத் ஆழ்வான் -என்றபடி –
அடி கொண்டு உகந்து
-இவ் ஆத்மா வஸ்து -அங்குத்தைக்கு சேஷமானது அன்றோ
என்று கொண்டு -இதனுடைய படியை தர்சித்து -அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து -ஒரு-ராஜ புத்ரன்வழி தப்பிப் போய் ஒரு வேடன் கிரஹத்திலே சேர்ந்து இருக்க -அந்த பிரகாரத்தை அறிந்து இருக்கும்-தார்மிகர் சிலர் -இவருடைய சம்பந்தத்தை அறிவிப்பித்து -இரு தலையும் சேர்க்குமா போலே
என்னையும்-ஆள் அவர்க்கு ஆக்கினரே
என்னையும் -அவருக்கு தம்மைப் போலே என்னையும் எம்பெருமானாருக்கு –
சக்கரவர்த்தி திரு மகன் பக்கலிலே பிரேம யுக்தர் ஆனவர் என்று -அவர்க்கு -என்று தத் சப்தத்தால் தோற்றுகிறது –
ஆள் ஆக்கினர் -அங்குத்தைக்கு பிராப்தமான ஆகாரத்தோடு கூட்டினார்கள் -சேஷ பூதானாம் படி-பண்ணினார்கள் -என்றபடி -ஆகையாலே நான் வகுத்த விஷயம் என்று அறிந்து ஆஸ்ரயித்தேன் அல்லேன் –
எனக்கு புருஷகார பூதரான ஆழ்வான் ஆஸ்ரயிப்பிக்க ஆஸ்ரயித்தேன் என்றது ஆய்த்து

————————————————————————–

அமுது விருந்து
அவதாரிகை
எம்பெருமானாருடைய ஸ்வபாவத்தை எப்படி அறிந்து பற்றினீர்-என்பாரை நோக்கி
அவர் அன்பர் திருவடிகளில் சம்பந்தம் உடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்னையும்
சேர்க்க சேர்ந்தேன்-நானாக அறிந்து பற்றினேன் அல்லேன் -என்கிறார் –

பத உரை
படி கொண்ட -பூமி அடங்கப் பரவின
கீர்த்தி -கீர்த்தியை உடைய
இராமாயணம் என்னும் -இராமாயணம் என்று சொல்லபடுகிற
பக்தி வெள்ளம்-பக்தி பிரவாஹம்
-குடி கொண்ட -குடி இருக்கிற
கோயில்-திருக் கோயிலாய் இருக்கிற
இராமானுசன் -எம்பெருமானாருடைய
குணம் கூறும் -குணங்களை பேசா நிற்கும்
அன்பர் -பக்தர்களின்
கடி கொண்ட -வாசனையயுடையதும்
மா -சீறியதும்
மலர்-அழகியதுமான
தாள் -திருவடிகளில்
உள்ளம் கலந்து -நெஞ்சம் கலந்து
கனியும் -அன்பு கனிந்து இருக்கும்
நல்லோர் -நல்லவர்கள்
அடி கண்டு  – இவ் ஆத்மா வஸ்துவின் அடித்தளமான சேஷத்வத்தை அனுசந்தித்து
உகந்து -சந்தோஷித்து
கொண்டு-என்னை ஏற்று என்னையும் அவர்க்கு -அவ் எம்பெருமானார்க்கு
ஆள் ஆக்கினர்-சேஷம் ஆக்கினார்கள்

வியாக்யானம்
படி கொண்ட கீர்த்தி -படி-ஏனைய உலகங்களுக்கும் உப லஷணம்
பிரமனால் நூறு கோடிப் பிரபந்தமாக இராமாயணம் இயற்றப் பெற்று உம்பர் உலகில் பரவி இருப்பதாகவும் –அதுவே நாரதர் வாயிலாக வால்மீகிக்கு வந்ததாகவும் சொல்லப் படுவது காண்க –
இனி படியிலே கீர்த்தி கொண்ட இராமாயணம் என்று கூட்டி -மற்ற முனிவர்கள் இயற்றிய-இராமாயணங்களை விட பிரசித்தி பெற்ற ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தை கூறிற்றாகவுமாம்
இராமாயணம்-என்னும் பக்தி வெள்ளம் –
அளவற்ற பக்திப் பெருக்கிற்கு காரணமாகிய இராமாயணத்தை -பக்தி வெள்ளம்-என்கிறார் –
இனி வால்மீகி முனிவருடைய ஸ்ரீ ராம பக்தி உள் அடங்காது வெளிப்பட்டமை பற்றி -பக்தி வெள்ளம் –என்றார் ஆகவுமாம்-வெள்ளம்-பிரவாஹம்
வால்மீகி கிரிசம்பூதா ராம சாகரகாமி நீ
புனாதி புவனம் புண்யா இராமாயண மகா நதீ–என்று
வால்மீகி என்னும் மலையில் தோன்றி இராமாபிரான் என்னும் கடலை நோக்கி செல்லும்
இராமாயணம் என்னும் புண்ணிய நதி உலகத்தை சுத்தம் ஆக்குகிறது -என்று வெள்ளமாக-இராமயணத்தை முன்னோர் உருவகம் செய்து உள்ளமை காண்க –
இனி வெள்ளம் -கடலுமாம் –வெள்ளத்தின் உள்ளானும் – 99- என்று பொய்கை ஆழ்வாரால் கடல்-வெள்ளமாக சொல்லப்பட்டமை காண்க
ஸ்லோக சார சமாகீர்ணம் சர்வ கல்லோல சங்குலம்-காண்டாக்ராஹா மகாமீனம் வந்தே இராமாயண ஆர்ணவம் -என்று
ஸ்லோகங்களின் சாரத்தினால் நிறைந்ததும்
சர்க்கம் என்கிற அலைகள் நெருன்கினதும்
காண்டம் ஆகிற முதலையாம் பெரு மீன்கள் உடையதுமான
இராமயணமாம் கடலினை வந்திக்கிறேன் -என்று இராமாயணம் கடலாக உருவகம்
செய்யப்பட்டு உள்ளமையும் காண்க –
குடி கொண்ட கோயில் இராமானுசன்
பள்ளத்தாக்கான இடங்களில் வெள்ளம் கோத்து நிற்பது போலே எம்பெருமானாரது ஆழமான நெஞ்சத்தில்
இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் புகுந்து புகுந்து தேங்கிக் குடி கொண்டது –
ப்ரேமேயத்துக்கு கல் அரணாய் அமைந்த கோயிலே போதும் –
பிரமாணத்துக்கோ அறிவார்ந்த எம்பெருமானாரே அரணாக அமைய வேண்டி இருக்கிறது –
பிரமாணம் அல்லது பிரமேயம் சித்தி யாமையாலே பிரபல பிரமாணமான இராமாயணத்துக்கு
கல் அரணாம் கோயிலாக எம்பெருமானாரே அமைகிறார் -.ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தம்
இராமாயணத்தில் பொதிந்து கிடக்கையாலே அந்த சித்தாந்தத்தை எம்பெருமானாரே-பாதுகாக்கின்றார் -என்க –
இராமாயணமும் திருவாய் மொழியும் ஆகிற வலியன இரண்டு மகா பிரபந்தங்கள் உண்டாய் இருக்க –
ஒரு மதிளை இடித்து விட்டால் அந்த வைஷ்ணவ சித்தாந்தம் குலைந்து விடுமா –
என்று வைணவ கோயில்களை இடித்த குலோத்துங்க சோழனின் மகன் கூறியதாக -10 7-5 – – ஈட்டில்-காணப்படுகிறது –
உகவாதாரும் நெஞ்சு உளுக்கும்படி ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தமான பக்தியை புகட்டும் இராமாயணத்தை-சித்தாந்த ஸ்த்தாபகராகிய எம்பெருமானார் கோயிலாக பாதுகாப்பது பொருத்தமாக இருக்கிறது அன்றோ –
மற்று ஒரு சித்தாந்த சாஸ்திரம் ஆகிய திரு வாய் மொழியை பேணி வளர்த்து காப்பது போலே-இராமயணத்தையும் அவர் பேணி வளர்த்து காக்கின்றார் -என்க
திருவாய் மொழியில் –கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ – 7-5 1- -என்று நம் ஆழ்வார்-அருளி செய்ததை பின்பற்றி எம்பெருமானார் இராமாயணத்தை எப்போதும் நெஞ்சில் வைத்து-அனுசந்திப்பார் ஆயினர் -மற்றைய அவதார சரித்ரங்களை இராம சரித்ரித்தற்கு போலியாகவே நினைத்து அருளுவர் –
கண்ணன் இடம் காதல் கொண்டவள் ஆயினும் ஆண்டாள்-மனதிற்கு இனியான் –என்று இராமனைக்-குறிப்பிடுகிறாள் அன்றோ –ஸ்ரீ பெரும்புதூர் மா முனிக்கும் அவர்க்கு பின்னானாளுக்கும் இராமன் திறத்து-ஒரே மனப்பான்மை தான்-இராமாயணத்தை இடைவிடாது அனுசந்திப்பதனால் இவரிடம் பக்தி கரை-புரண்டமை பற்றி -இராமாயணம் என்னும் பக்தி வெள்ளம் -குடி கொண்ட கோயில் இராமானுசன் பக்தி வெள்ளம்-குடி கொண்ட கோயில் இராமானுசன் என்றதாகவும் கொள்ளலாம் -பக்தி வெள்ளத்தை சுவை மிகுதி பற்றி –அமுத வெள்ளமாக -குறிப்பிடுகிறார் -நம் ஆழ்வார் திருவாசிரியத்திலே -இராம சரித்ரத்தை இடைவிடாது-அனுபவித்து பக்தி யாகிற அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு நல் வீடு பெறினும் கொள்வது எண்ணாது
அதனைப் புறக்கணித்தார் சிறிய திருவடி –
பக்தி வெள்ளம் எனப்படும் இராமாயணமாம் கடல் -சுவை மிக்கு இருத்தலின் இராமானுச முனிவரின்-உள்ளத்திலேயே குடி கொண்டது –அகஸ்த்ய முனிவரது உட் புகுந்த உப்பு வெள்ளம் அங்கே குடி கொள்ள-முடிய வில்லை -அகஸ்தியர் அதனை உமிழ்ந்து விட்டார் –
ய பிபன்சத்தம் ராமசரிதாம் ருத சாகரம் அத்ருப்தச்தம் முனிம் வந்தே ப்ராசெதசம கல்மஷம் -என்று
எவர் எப்பொழுதும் ராம சரித்ரம் ஆகிய அமுதக்கடலை குடித்தும் -போதும் என்று திருப்தி
அடையாது இருக்கிறாரோ -குற்றம் அற்ற அந்த வால்மீகியை வணங்குகிறேன் -என்றபடி வால்மீகி போலே
எம்பெருமானாரும் பக்தி அமுதக் கடலை குடித்து தெவிட்டாதவர்-என்க –
இனி கோயில் இராமானுசன் என்பதற்கு கோயிலில் -ஸ்ரீ ரங்கத்தில் -வாழும் இராமானுசன் என்று-பொருள் ஆகவுமாம் –இதனால் அயோத்தியில் வாழ்ந்த இராமானுசனை -இளைய பெருமாளை -விலக்குகிறது
கோயில் அண்ணன் -என்று ஆண்டாள் அருளிச் செய்ததற்கு இது பொருந்தி இருப்பது காண்க –
குணம் கூறும் அன்பர் –
இராமாயணத்தை மட்டும் விசேடித்து அனுசந்திப்பதை குறையாக கருதாது -சாரத்தை
கிரஹிக்கும் குணமாக கொண்டு -அதனைக் கூறுகின்ற பக்தர்கள்-என்றபடி –
இனி தம்மை ஆஸ்ரயித்தை ஜனங்கள் இடம் அன்பு கொண்டவர் என்று கொண்டால்-தங்கள்-அனுபவத்திற்கு உரிய எம்பெருமானார் குணங்களை அனுசந்திப்பதொடு அல்லாமல் ஜனங்கள் பால்-அன்பால் அவற்றை கூறவும் செய்கின்றனர் எனக் கொள்க –இனி –பிணங்கி அமரர் பிதற்றும் குணம் கெழு கொள்கையினானே-திரு வாய் மொழி – -1 6-4 – – என்னும்-இடத்து போலே தாங்கள் அனுபவித்த குணங்களை அன்பின் மிகுதியால் வெளியே கூறியே ஆக வேண்டும்-படி ஆயிற்று -என்பார்-கூறும் அன்பர்-என்கிறார் என்னவுமாம் –
கடி கொண்ட மா மலர்த்தாள் கலந்து உள்ளம் கனியும் நல்லோர் –
மா என்று சீர்மையும் –மலர் -என்று அனுபவிக்கத் தக்க அழகு உடைமையும் -காட்டப் படுகின்றன –
ஆன்ம தத்துவம் உள்ள வரையிலும் அனுபவித்தாலும் குறைவு படாமை-சீர்மை-என்க –
நல்லோர் –
தம் அனுபவத்தில் பங்கு அளித்தல்என்னும் நன்மை உடையோர் -என்றபடி
அடி கண்டு ..உகந்து
இவ் ஆத்மா வஸ்துவும் எம்பெருமானார்க்கு சேஷப் பட்டது அன்றோ -என்று இதனுடைய
அடியாகிய சேஷத்வத்தை தர்சித்து அந்த சம்பந்தமே ஹேதுவாக விரும்பி அங்கீகரித்து -என்றபடி-என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கினர்
உம்மை-எச்ச உம்மை-என்னையும் தங்களைப் போலே அவர்க்கு ஆள் ஆக்கினர் என்றபடி –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்திநீல் ஜல்பித்தல்
கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ-ஆழ்வார் -கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம்-சகல கல்யாண குணங்களை கொண்டவர் ராமனும் சுவாமியும்.
. ஏசல் உத்சவம் பக்தி உலா நடை – ஸ்ரீ ராமன் சந்நிதி முன் நடந்து கற்றவர் இடம் நடந்து காட்டுவார்-ஸ்வாமி இன்றும் ஸ்ரீபெரும் தூரில் -காண கண் கோடி வேண்டும்
.பெரிய திரு மலை நம்பி மூலமும் ஸ்ரீ ராமாயணம் மூலம் கண்டு ராமனை கற்றார் .
.காட்டி கொடுத்த ஸ்ரீ ராமாயணத்தையே நெஞ்சில் கொண்டார்.
.நாயகனாய்-ஸ்ரீ ராமனுஜரையே ஆண்டாள் அருளுவதாக சொல்வர்
..அடியவர் துன்பம் துடைக்கும் நாயகன்-10 லஷண்யங்களை வால்மீகி அருளுகிறார் ஸ்ரீ ராமனுக்கு -அனைத்தும் சுவாமி -பக்கல் காணலாமே
முதல்-உயர்குடி பிறப்பு ..ஷத்ரிய குல கொழுந்து சூரிய குல திவாகரன் ..விவஸ்வான் மனு.28 சதுர் யுகம் முன்-கேசவ சோமயாஜுலு பிராமணர்-/பிர பன்ன குலம்-ஸ்வாமி
2-சாமுத்ரா லஷணம்- திரு மேனி அழகு .மூன்று பதக்கம் கோவில் பெருமாள் திருமலை செல்ல பிள்ளை
3-ராஜா சார்வ பௌமன்- மகா பாக்யசாலி- கருவிலே திரு உடன்
4-யதி சார்வ பௌமன் /வாரி வழங்கும் தன்மை
கோ தானம் கதை -கொடுக்கும் பொழுது பிராமணர் கேட்க தடி எறிய சொல்லி-ராமன் சிரிக்க-அது பசு மாடு கொடுத்த து போல இவரோ காப்பேன் சொன்னார் -இவரோ பின் படரும் குணன் பார்த்தோம்
5-தேஜஸ்வீ -வனம் சோபை அடைந்தது. பெருமாள் தண்ட காரண்யம் வந்ததும்
ஸ்வாமி -உள் இருட்டே போக்கினாரே -ராமானுஷ திவாகரன்
6 வைதப்யம் -எதை எப்பொழுது செய்யணும் அதை அவர் மூலம் நடத்தும் தன்மை
-விரோதி நண்பன் என்றதால் வாலி இடம் வர வில்லை என்று
-பிள்ளை உறங்கா வல்லி தாசரை அழகிய கண்களை பெரிய பெருமாளையே காட்ட சொல்லி திருத்தினார் சுவாமி-அப்பொழுது ஒரு சிந்தை செய்தே
7-தார்மிகத்வம் -நேர்மை கிருபை
விருத்தி கிரந்தம் பார்த்தே எழுத –பிரமாண்யத்தில் உள்ள ஊற்றம்
8-தெய்வ தன்மை– பவான் நாரயனோ தேவ -ஸ்வாமி யும் .அடையார் கமல கேள்வன் -ராமானுஜ முனி ஆயின
9 –பாண்டித்வம் -ஐந்து ஆச்சார்யர் –ஜைனர்களை வென்ற பாண்டித்தியம்-யாதவ பிரகாசர் போன்றோரை வென்ற
10- விநயம் உடையவர் -விச்வமித்ரர் இடம் இருவரையும் ஏவி பண்ணி கொள்ள சொல்லி
/ஸ்வாமி யும் கோஷ்டி கடைசியில் தீர்த்தம் வாங்கி கொண்ட வினயத்வம்
என்னையும் ஆள் அவர்க்கு ஆக்கி கொடுத்தார்கள்
ராமானுசனின் குணம் கூறும் அன்பர் / அவர்களின் கடி கொண்ட மலர் தாள் கலந்து உள்ளம் கனியும் .நல்லோர்
/என்னையும் //குணம்-வஞ்சகம் இருந்தாலும் குணமாக கொண்ட அன்பர்..
பஷ பாதி- நிறைய பிர மானங்கள் இருக்க .ஸ்ரீ ராமாயணம் மட்டும்- ஸ்வாமி மனத்தில் கொண்டு இருந்தாலும்
-அதை இவர் சார தமமாக கொண்டு இருந்தார் என்று சொல்லும் அன்பர்
..அல்ப சாரம் அசராம் சாரம் சார தரம் விட்டு சார தமம் -கொண்டு.
.ராஜ ஹம்சம்-பராங்குச -திருவடி தாமரை -தேனீ கூட்ட தலைவர் பருங்க ராஜம் ஸ்வாமி
-.அடியார்களுக்கு உபயோகம் என்று இதிகாச புராணங்களில் இதை மட்டும் க்ரகித்தார் என்பர்…
/நல்லோர் அடி கண்டு- ஜீவாத்மா அடி ராமானுஜ சேஷத்வமே என்று கண்டு.. உகந்து -கொண்டு -என்னையும் கொண்டு ஆள் அவர்க்கு ஆகினரே
/குணம்-சாரக்ராகி–ராமாயணம் -பக்தி வெள்ளம்-படி கொண்ட -உலகும் எங்கும் கீர்த்தி../
/ஸ்வாமி திருவடிகளிலே சம்பந்தம் உடையவர் அவர்களே உத்தேச்யம் என்று இருக்கும் அவர்கள் என்னையும் அங்கு உத்தைக்கு சேஷம் ஆக்கினார்கள் என்கிறார்
./சத்ய லோகம் வரை கீர்த்தி பெற்ற ஸ்ரீ ராமாயணம் பக்தி சாகரம் /வெள்ளத்தின் உள்ளான்
-வெள்ளம் -கடல்/நித்ய வாசம் கொண்டு திவ்ய ஸ்தானம்
கோ இல் /கோவில் ஆழ்வார் தான் ஸ்வாமி உள்ளம் ..24000 ஸ்லோகம் குடி வைக்கும் அளவு விசாலமான திரு உள்ளம் .
./கடி கொண்ட-பரிமளம் மா-பரத்வம் மலர் -போக்யத்வம் திருவடிகளில் நெஞ்சு கலந்து சிநேகித்து இருக்கும் விலஷணம் ஆனவர்கள்..
தங்களை போல -என்னையும்-அவருக்கு சேஷம் ஆகும் படி பண்ணினார்கள்
..நான் அறிந்து பற்றினேன் அல்லன் ஸ்ரீ வைஷ்ணவர்கள் சேர்க்க சேர்ந்தேன்
.ஸ்ரீ ராமாயணம் நிரவதிக பக்தி ஜனகத்வத்தாலே
/கடி -பரிமளம்-மணம்//ஆசரித்த- கார்ய-அகம் அர்த்தம்/ஆஸ்ரித – சௌகர்ய -மாம் அர்த்தம் க்ருபாதிகள் தெரிந்து கொண்டு
பற்றினீரே எப்படி //படி கொண்ட கீர்த்தி– //வால்மீகி மலை ராமன் நதி -சாகரம் அலை-சர்க்கம் .. கரை -ஜல திவலைகள் – ச்லோஹம் திமிங்கலம் -.காண்டம்
//வேதமே புண்யம் படித்தாலும் கேட்டாலும் //100 கோடி பெரிசு பிரம லோகத்தில் //பிரம்மாவும் நாரதரும் இங்கு வந்து வால்மீகி ஆணை இட்டு அருள சொன்னார்கள்
/படியிலே கொண்ட கீர்த்தி- மூல ராமாயணம். மற்றவற்றை தள்ளி இதை கொண்டே இதை தழுவியே படி கொண்ட கீர்த்தி
/ராமாயணம் -சீதா கதை- புலச்த்ய-சிறை இருந்தவள் ஏற்றம் சொல்ல வந்தது தானே
அவள் சம்பத்தும் அவனது சொத்து தானே
..கரை புரண்ட பக்தி ரசத்தை…வால்மீகி உள்ளம் பக்தி வெள்ளமாக புறப் பட்டது.
.அர்த்தம் தானே பக்தி -இது தன்னையே சொல்லி அது பக்தியை பிறப்பிபததால்–சப்தமே ரசிக்கும்.
.பிர மாணம் மதிள் தேடி ஸ்வாமி உள்ளம் புகுந்ததாம்

..இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மால் இரும் சோலை ..கோவில் போல
/ஆதாரம்-பக்தி ரசம் தெரிந்து -அகம் சர்வம் கரிஷ்யாமி -சொல்லி இருந்தாரே.
.மதிளுக்கு மதிள்…ஸ்ரீ ராமாயணமும் திரு வாய் மொழியும் மதிள்கள்//
/–பின்னை தன் காதலன் முன் சொன்னீரே ஆண்டாள் மனத்துக்கு இனியான் அருளியது போல
.ஹனுமான் வழி-ரஷித்தாரே அதனால் ஜாம்பவான் -வாய் குமரன் இருக்கிறாரா முதலில் யுத்தத்தில் கேட்டாரே
…/வயிற்றை பெருக்கினார் -திவ்ய தம்பதிகளுக்கு கைங்கர்யம் பண்ணினதால்
-அதன் ரசம் அறிந்தவர் தன் எம்பெருமானார்.
.குணம் -கல்யாண குணங்களை..கூறும் அன்பர்-உபதேசிக்கும் பிரேம யுக்தர்
–திரு முடி திரு அடி சம்பந்தம் -இவற்றால் வாழ்வு என்றாலும் கூரத் ஆழ்வான் பெற்ற மோஷத்தல் ஆனந்தம் அடைந்தாரே ஸ்வாமி /
/ குணங்களை கூறிய முதல் அன்பர்– நம் ஆழ்வார் -திரு வாய் மொழி பவிஷ்ய ஆச்சர்ய விக்ரகம்-ஆராதனை பண்ணி போந்த நாத முனிகள். குளப் படிகுருவிக்கு தானே . வீரான ஏரி ஜகமே வாழ்ந்தே போகும்
ஆளவந்தார் -ஆ முதல்வன் அருளி. போன்ற பெரியோர்கள் .
/கடி– பரிமளம் /மா -பெரிய -காலம் உள்ள அளவும்
/மலர் -சர்வ காலமும் விகசித்து /கோவில் -அயோத்ய ராமானுசன் லஷ்மணன் இல்லை என்பதால் கோவில் அண்ணன் இவர்..
தாள்-திருவடிகள்..பக்தன் முழித்து கொண்டு இருக்கிறான் மற்றவர்கள் அனைவரும் துஞ்சினாலும்
-அவர்கள் பிணங்கி அமரர் பிதற்றி எழும்-
/கலந்து கனியும் நல்லோர் -பக்குவ பழம்-ரசித்து சமயக் ஞானம் உடையவர்-நல்லோர்
– கூரத் ஆழ்வான் -கலந்து கணிந்தார்.. ராமானுஜர் சொத்தை பங்கு போட்டும் கொள்ள எண்ணம் உடைய நல்லோர்.
.யோக்யதை இல்லா என் இடம் கொடுத்தார்களே நல்லோர்
/அடி கண்டு-என் உடைய சேஷத்வத்தை கண்டு .-யோக்யதை உடையவன் -என்று விரும்பி
-ராஜ புத்திரன் -வழி தப்பி வேடன் வீட்டுக்கு போக -கூட்டி கொண்டு வந்து ராஜா இடம் சேர்த்தது போலே
அமுதனாரை அப்படி தானே சேர்ப்பிதார்கள்/அவருக்கு தம்மை போல என்னையும் எம்பெருமானாருக்கு ஆக்கி கொடுத்தார்களே
/சக்கரவர்த்தி திரு மகன் இடம் பக்தி கொண்டவர்கள் தான் -அவர்
…நின் தாள் நயந்து இருந்த -இவள்-வஸ்து நிர்நேயம் பண்ணினால் போல
வகுத்த விஷயம் என்று தெரிந்து இல்லை கூரத் ஆழ்வான் சேர்ப்பிக்க சேர்ந்தேன்..
சம்பந்தமே முக்கியம்
அண்ணனோ தம்பியோ /ராம -லஷ்மணன்/ கண்ணன் -பலராமன் / ஸ்வாமி-முதலி ஆண்டான் /
/அது இது உது எது ஆனாலும் உன் செய்கை என்னை நைவிக்கும்
சர்வ சகா-ஸ்ரீ வைகுண்டம் வியூகம் /சர்வ விதம் -எல்லா படிகளிலும் அனுபவம் திரு கோலங்கள் வாகனம் உத்சவங்கள் விபவங்கள்
/எந்த உறவுக்காரானாகவும் -அனுபவிக்கலாம் //அன்பர்-ஆழ்வார் நாத முனிகள் ஆள வந்தார் /தாள் -ஸ்வாமி- மாறன் அடி
கலந்து உள்ளம் கனியும் நல்லோர் -கூரத் ஆழ்வான் போல்வார்-

———————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: