அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-36-அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் -இத்யாதி ..

பெரிய ஜீயர் அருளிய உரை –
முப்பத்து ஆறாம் பாட்டு –அவதாரிகை
இராமானுசன் மன்னு மலர்த் தாள் அயரேன்-என்றீர் –
நாங்களும் இவரை ஆஸ்ரயிக்கும்படி இவர் தம்முடைய ஸ்வபாவம் இருக்கும்படி சொல்லீர் என்ன –அதை அருளிச் செய்கிறார் –

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண் பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படி இதுவே -36 –

‘விரோதி நிரசன சக்தியை உடைத்தான திரு வாழியை உடையனாய் -சகல ஆத்மாக்களுக்கும்-சேஷியானவன்-அஸ்த்தானே சிநேக காருண்யா தர்ம அதர்ம தியாகுலனாய் -கீதார்த்த சங்க்ரஹம் -கொண்டு-அர்ஜுனன் சோகா விஷ்டனான அன்று -அவனை வ்யாஜீகரித்து -பெரும்கடலிலே மறைந்து கிடக்கும்
பெரு விலையனான -ரத்னங்கள் போலே வேத சப்தமாகிற சமுத்ரத்துக்கு உள்ளே
ஒருவருக்கும் தெரியாதபடி -மறைந்து கிடக்கிற விலஷனமான அர்த்தங்களை -தர்சித்து –சகல சேதனருடைய உஜ்ஜீவன அர்த்தமாக ஸ்ரீ கீதா முகேன உபகரித்து அருள –
பின்னையும் பூமியில் உள்ளவர்கள் சம்சாரதுக்கத்தில் அழுந்தி தரைப்பட-தாமும் முன்பு
சர்வேஸ்வரன் அருளி செய்த அந்த விலஷனமான அர்த்தத்தைக் கொண்டு இது கைக்
கொள்ளும் அளவும் -அவர்களைப் பின் தொடரா நின்ற குணத்தை உடையராய் இருப்பராய் –எங்களுக்கு தம்மை முற்றூட்டாக தந்த எம்பெருமானார் உடைய ஸ்வபாவம் இது –ஆருயிர் நாதன் என்று ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண்பொருள் கண்டு அளிப்ப –என்று பாடமான போ து -அடல் கொண்ட நேமியனான சர்வேஸ்வரனே ஆத்மாக்களுக்கு சேஷி என்று கொண்டு –வேதத்தில் மறைந்து கிடக்கிற அர்த்தத்தை -தர்சித்து -ஸ்ரீ கீதா முகேன அருளி செய்த -என்ற பொருளாக கடவது –
அடல்-மிடுக்கு
காசினி-பூமி
இடரின் கண் -என்றது -இடரின் இடத்திலே என்கை-
படி -ஸ்வபாவம்–

ஸ்ரீ கீதா பாஷ்யம் அருளி -ஸ்ரீ கீதா சாரம் சரம ஸ்லோகம் அர்த்தம் பெற 18 தடவை திருக் கோஷ்டியூர் நம்பி இடம் பெற்று அதன் ஏற்றம் நமக்கு காட்டி அருளி -ஆசை உடையோர் அனைவருக்கும் உபதேசித்து அருளி -வேத
கடல் கொண்ட வஸ்து –கீதாச்சார்யர் -இரண்டாவது கடல் கடைந்து அ மிர்தம்–சர்வ உபநிஷத் பசு –கன்றுக்கு குட்டி அர்ஜுனன் கீதை பால் -நமக்கு –பின்னும் -கருட வாஹனனும் நிற்க -நாம் நம் கார்யம் செய்து கொண்டே இருக்க –/ அத்தை கடைந்து -கீதா சாரம் -ஸ்வாமி அருளி -தானும் -அவனே ஸ்வாமியாக ஆவிர்பவித்து –அவர் கண் படரும் குணன் -சம்சாரிகளை விடாமல் -திவ்ய தேசங்கள் எல்லாம் -நீர் நம்மை விட்டாலும் நான் உன்னை விட்டேன் -எங்கும் இருப்பார் -பேறுகால பராங்குச யதிராஜர் எல்லா கோயில்களிலும் பிரதிஷ்டை உண்டே -தத்வ ஹித புருஷார்த்தங்கள் அனைத்தும் நமக்கு தெளிய அருளி –18 சொல்லி அத்தாலே கலங்கிய அர்ஜுனனுக்கு
சரணாகதி சாஸ்திரம் வழங்கி –சர்வ தரமான இத்யாதி – சோகம் போக்கி என்றுமாம் –அங்கு ஒருவன் -இங்கே நாம் அனைவரும் -அதனாலே தானும் -ஸ்வாமி –பின்னும் தானும் -அவ் ஒண் பொருள் கொண்டு -இரண்டு உம்மை தொகை -ஸ்வாமி பெருமை காட்ட -கலி யுகம் -பாபா பிரசுரம் -தோஷம் பூயிஷ்டர் நாம் –

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
இராமானுசன் மன்னு மலர்த்தாள் அயரேன் -என்றீர் -நாங்களும் அவரை ஆஸ்ரயிக்கப் பார்க்கிறோம் –அவருடைய ஸ்வபாவம் இருந்தபடி சொல்லிக் காணீர் என்று கேட்க -பிரதி பஷத்துக்கு பயங்கரனான திரு வாழி யாழ்வானை-ஆயுதமாக வுடையனாய் -சகல ஆத்மாக்களுக்கும் சேஷி யானவன் -உபய சேனா மத்யத்திலே பந்து ச்நேகத்தாலே
அர்ஜுனன் யுத்தா நிவர்த்தனான அன்று -கடலிலே அழுந்தி தரைப் பட்டு கிடக்கிற ரத்னங்களை கொண்டு வந்து-உபகரிப்பாரைப் போலே -வேதாந்த சமுத்ரத்திலே -குப்த்தங்களாய்-ச்லாக்யங்களான அர்த்தங்களை-ஸ்ரீ கீதா சாஸ்திர முகேன – உபகரித்து அருளின பின்பும் –இந்த கலி காலத்திலே லௌகிக ஜனங்கள்
அவசாதத்தாலே கிடக்க -அந்த கீதா ரூபமான அத்யந்த சாஸ்த்ரத்தை வியாக்யானம் பண்ணி உபதேசிகைக்கு-அந்த லௌகிக ஜனங்களை ஸ்ரீ பத்ரிகாச்ரமம் அளவும் பின் தொடர்ந்த மகா குணம் உடைய பேர் இல்லை கிடீர்-என்று கொண்டு இப்படி இருந்துள்ள எம்பெருமானார் உடைய ஸ்வபாவம் இது என்று அருளிச் செய்கிறார் .

வியாக்யானம் –
அடல் கொண்ட நேமியன் -மடுவின் கரையில் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை பாதித்த முதலையும்-அஸ்வத்தாமா ப்ரேரிதமாய் கொண்டு பரிஷித்தை பாதிக்க ப்ரஹ்மாச்த்ரமும் துடக்கமான ஆஸ்ரித விரோதிகளுக்கு
அத்யந்த பயங்கரமான ஆகாரத்தை உடையவனாய் -வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழி – என்கிற-திரு வாழி யாழ்வானை பிரதானமான ஆயுதமாக உடையனாய் –அடல் -மிடுக்கு –ஆர் உயிர் நாதன் -பதிம் விச்வச்யாத்மேச்வரம் –
உதாம்ர்தத் வச்யேசானா -என்றும் -அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்றும் சொல்லுகிறபடியே -சகல-ஆத்மாக்களுக்கும் நாதனாய் -நாத்ர்யாச்ஞாயம் -என்கையாலே -சகல அர்த்தங்களும் யாசிக்கப்படுபவனாய் –ஏகோ பஹூனாம் யோவிததாதி காமான் -என்கிறபடியே சமஸ்த புருஷார்த்த பிரதனானவன் –
அன்று -குரு பாண்டவர்கள் யுத்த சன்னத்தரான அளவிலே -பித்ரீ நத பிதாமகன் மாதுவக்னச்வசுரான்-ப்ராத் ரீன் புத்ரான் பௌத்த்ரன் சகீம்ஸ்ததா-இத்யாதி யாலே சொல்லப்படுகிற பந்து வர்க்கத்தை எல்லாம்-உபய சேனையிலும் அர்ஜுனன் பார்த்து -எஷாமர்த்தம் கான்க்ஷித தமனோ ராஜ்ஜியம் போகஸ் சூகாநிச-தம் இமே வசதி தாயுத்தே ப்ரானாஸ் யுக்த்வாத நாநிச – ஆச்சார்யா பிதர புத்ரா யேதான் நஹந்து மிச்சாமி-க்ந்தோபி மது சூதனா -என்று பந்து ச்நேகத்தாலே தர்ம த்திலே அதர்ம புத்தி பண்ணி -விசர்ஜய சசரம்சாபம்-சோகசம் விக்நமா நாசா -என்று சோகித்து -யுத்தான் நிவர்த்தன் ஆன அன்று
-ஆரணச் சொல் கடல் கொண்ட-ஒண் பொருள் கண்டு அளிப்ப
சமுத்திர மத்யத்திலே -மறைந்து கிடக்கிற -தரைப்பட்டு கிடக்கிற-மகா ரத்னங்களை எடுத்துக் கொண்டு வந்து உபகரிப்பாரைப் போலே -கடல் போல் கம்பீரமாய் இருந்துள்ள
வேதாந்த வாக்யங்களிலே -தாவான் சர்வேஷு வேதேஷு ப்ராஹ்மானச்ய விஜானதா -என்னும் படியாக –ரகஸ்ய தமமாய் -விலஷண அர்த்தங்களை அடைவே கடாஷித்து –கீதா சாஸ்திர முகேன உபதேசித்து-ரஷித்து அருள -அன்றிக்கே –அன்று -கார்ப்பண்யா தோஷா பகுதஸ் ஸ்வபாவ ப்ரச்சாமித்வா தர்ம சம்முட சேதா –யச்ச்ரேயஸ் யாநிச்சிதம்ப்ருஹி தன்மே – சிஷ்யச்தே ஹம்சாதி மாம்த்வாம் பிரபன்னம் -என்று அர்ஜுனன்-உபசத்தி பண்ணினவாறே -அவனுக்கு மோஷ உபாயமாக -கர்ம யோகத்தையும் ஞான யோகத்தையும்-பக்தி யோகத்தையும் அவதார ரகச்யத்தையும் -புருஷோத்தம வித்தை தொடக்கமான வற்றையும் உபதேசிக்க-அவை எல்லாம் துச்ச்சகங்கள் என்றும் சப்ரமாதங்கள் என்றும் விளம்ப பலப்ரதங்கள் என்றும் ஸ்வரூப
விரோதிகள் என்றும் நினைத்து அர்ஜுனன் சோக விசிசிஷ்டனான அன்று-ஆரண சொல் கடல் கொண்ட-ஒண் பொருள் கண்டு அளிப்ப –வேதாந்த வாக்யங்கள் ஆகிற சமுத்ரத்திலே -தாஸ்மான் நியாச மோஷம் தபஸா-மதிரிக்த மாஹூ -என்றும் -வேதாந்த விஞ்ஞான சூநிச்சிதர்த்தாஸ் சந்நியாச யோகாத்ய தயச்சுத்த சத்வா –தி பிரம லோகேது பராந்தகாலே பராம்தாத்பரி முச்யந்தி சர்வே -என்றும் -ந கர்மணா ந ப்ரஜயாத நே நத்யா-கே நை கே அமர்த்தவ மானச -என்றும் -இத்யாதிகளிலே குக்ய தமமாக பிரதிபாதிக்கப்படுகிற-வி லஷண அர்த்தங்களை எல்லாம் -கண்டு திரட்டி -மன்மனாபவ மத பாகத்த -என்றும் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றும்
இரண்டு ஸ்லோகத்தாலே சகல சேதனருடையவும் உஜ்ஜீவன அர்த்தமாக -அர்ஜுன வயாஜேன பிரபத்தி-உபதேசம் பண்ணியும் லோகத்தை எல்லாம் ரஷிக்க என்னவுமாம் – பின்னும் -பிற் காலத்திலான கலி யுகத்திலும் –
காசினியோர் –
பூ லோகத்தில் உள்ள சேதனர் எல்லாரும் –காசினி -பூமி –இடரின் கண் வீழ்ந்திட -சம்சார துக்கத்தில் விழுந்து- அழுந்தி தரைப்பட்டு கிடக்க -த்வாபரத்தில் அர்ஜுனன் ஒருவனே இடர் பட்டான் -இந்த கலி யுகத்தில் ஒரு லோகம்-காணும் இடர் பட்டது -இத்தைக் கண்டு பொறுக்க மாட்டாத தம்முடையகிருபையாலே –
தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
எம்பெருமானாரும் அந்த ச்லாக்கியமான கீதா சாஸ்தரத்துக்கு வியாக்யானம் பண்ணி யருளி அத்தைக் கொண்டு –அன்றிக்கே -திருக் கோட்டியூர் நம்பியை பதினெட்டு தரம் அனுவர்த்தித்து பரம குக்யம் என்று அவரால் உபதேசிக்கப் பெற்ற-சரம ஸ்லோக அர்த்தத்தை கொண்டு என்றுமாம் –
அவர் பின் படரும் குணன்
-ஸ்ரீ பத்ரிகாச்ரமம் ஈறாக இந்த-பூ லோகத்தில் உள்ள சேதனர் எல்லாருக்கும் போதித்து பின் தொடர்ந்தவருடைய சம்சார துக்கத்தை-போக்க கடவதான கிருபா குணத்தை உடையரான – அங்கன் அன்றிக்கே –பின்னும் தானும் அவ் ஒண் பொருள் கொண்டு
பின்னும் தானும் என்னும் இரண்டு பதத்திலும் -சகாரங்களைப் பிரயோகித்தது -அந்த த்வாபர காலம் புண்ய-பிரசுரமானது -அதிகாரி ஞானாதிகனான அர்ஜுனன் -உபதேஷ்டா பர பிரம்ம பூதனானவன் -ஆகையாலே அது அரிது அன்று
இந்த கலிகாலம் பாப பிரசுரமானது -அதிகாரிகள் தோஷ பூயிஷ்டரான சர்வ வர்ண ஜனங்களும் -ஆகையாலே இவர்-லோகத்தை எல்லாம் ரஷித்ததுவே அரிது என்னும் இடம் தோற்றுக்கைக்காக-தானும் -எம்பெருமானரும் –அவ் ஒண் பொருள்
கொண்டு -திருக் கோஷ்டியூர் நம்பி பக்கல் பதினெட்டு தரம் எழுந்து அருளின அளவிலே அவரும் சூழரவு கொண்டு-குக்ய தமம் என்று நியமித்து சரம ஸ்லோக அர்த்தத்தை நியமித்தவாறே அந்த ஸ்லோக அர்த்தத்தை கொண்டு-அவர் பின் படரும் குணனை -காசியின் உள்ள ஜனங்களை அதிகார ந அதிகாரவிபாகம் அற
-தாமே வந்து-தொடர்ந்து -அந்த சரம ஸ்லோக அர்த்தத்தை பூரி தானமாக கொடுத்த கிருபா வாத்சல்ய ஔதார் யாதி குணங்களை உடைய-
எம் இராமானுசன் தன்
இப்படிப் பட்ட கல்யாண குணமான திவ்ய மங்கள விக்ரகத்தை நமக்கு முற்றூட்டாக கொடுத்து அருளின-எம்பெருமானார் தம்முடைய படி இதுவே –ஸ்வபாவம் இதுவே –படி ஸ்வபாவம் -ஏதாவா நஸ்ய மஹிமா –என்கிற படியே ஆய்த்து .

————————————————————————–

அமுது விருந்து-
அவதாரிகை
இராமானுசன் மன்னு மா மலர்த்தாள் அயரேன் -என்றீர்-
நாங்களும் இவரை ஆசரிக்கும் படி இவர்தம்முடைய ஸ்வபாவம் இருக்கும் படி சொல்லீர்
என்பாரை நோக்கி எம்பெருமானார் ஸ்வபாவத்தை அருளிச் செய்கிறார் –
பத உரை –
அடல் கொண்ட -பலம் வாய்ந்த
நேமியன் -திரு வாழியை உடைய
ஆருயிர் நாதன் -அருமையான எல்லா ஜீவாத்மாக்களுக்கும் சேஷியான சர்வேஸ்வரன்
அன்று -அக்காலத்தில்
ஆரணச் சொல் -வேத சப்தமாகிற
கடல் கொண்ட-சமுத்ரம் தன்னுள்ளே வைத்துக் கொண்டு இருக்கிற
ஒண் பொருள்-சீரிய பொருள்களை
கண்டு -பார்த்து
அளிப்ப -ஸ்ரீ கீதை வாயிலாக கொடுத்து அருள
பின்னும் -அதன் பிறகும்
காசினியோர் -பூமியில் உள்ளவர்கள்
இடரின் கண் -சம்சார துக்கத்திலே
வீழ்ந்திட -விழுந்து அழுந்திட
தானும் -எம்பெருமானாரைகிய தானும்
அவ் ஒண் பொருள் கொண்டு -சர்வேஸ்வரன் முன்பு அருளிச் செய்த அந்த சீரிய அர்த்தத்தைக் கொண்டு
அவர் பின் -அந்த பூமியில் உள்ளவர்களுக்கு பின்னே
படரும்குணன் -தொடர்ந்து செல்லலும் குணத்தை உடையரான
எம்ராமானுசன் தன்-எங்கள் எம்பெருமானாருடைய
படி-ஸ்வபாவம்
இது -இத்தகையது –
வியாக்யானம் –
அடல் கொண்ட நேமியன்
அடல்-மிடுக்கு-அதாவது விரோதிகளை அழிக்கும் திறன் –நேமி -சக்கரம் –
நல்லவர்கள் இறைவனை அனுபவிப்பதற்கு இடையூறாக உள்ள பாபங்கள் என்னும் விரோதிகளை-அழிக்கும் திறமையை இங்கு கருதுகிறார் -நம் மேல் வினை கடிவான் எப்போதும் கை கழலா நேமியான் –பெரிய திருவந்தாதி -86 – எனபது காண்க –
ஆருயிர் நாதன் –
எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷி -விச்வத்திற்கு பத்தி -என்றது வேதம் –
நேமியன் ஆகையாலே -ஆருயிர் நாதன்-என்க-நேமி-இறைவனது பரத்வத்துக்கு உரிய குறி-தமஸ பரமோதாதா சங்க சக்ர கதாதர -பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் பட்ட இறைவன் சங்கு-சக்கரம் கதை இவைகளை எந்தினவன் -என்றது காண்க -பர வாசுதேவன் ஆதலின் எல்லா உயிர்க்கும்-அவன் சேஷியானன்நேமியன் என்கையாலே காசினியோரை இடரினின்றும் எடுக்கும் திறன் உடைமையும் –
நாதன்-என்கையாலே -எடுத்தாக வேண்டிய உறவு முறையும் காட்டப் பட்டன –
அன்று –போர்க் களத்திலே -நிற்கும் எதிரிகளை உறவினராகப் பார்க்கும் அன்பும் -வீணில் மடியப் போகிறார்களே-என்ற கருணையும் -ஷத்ரியனுக்கு உரிய தர்மமான போரை அதர்மம் என்னும் மதி மயக்கமும்-உடையவனாய் அர்ஜுனன் கலங்கிய வேளையில் -என்றபடி
ஆரணச் சொல் –கண்டு அளிப்ப
பெரும் கடலிலே ரத்னங்கள் மறைந்து கிடப்பது போலே வேத சப்த ராசி -என்கிற சமுத்ரத்திலே –பல சீரிய பொருள்களும் மறைந்து கிடக்கின்றன -பல விதமான அந்த வேதாந்த ரத்னங்களை-கண்டு எடுத்து சம்சாரம் என்னும் இடரின் கண் வீழ்ந்த காசினியோர்க்கு கீதா சாஸ்திரம் என்கிற-பேரிலே கொடுத்து அருளினான் -சர்வேஸ்வரன் அங்கனம் கொடுத்தான் அதனைக் கையாள-அறியாது -அக்காசினியோர் மீண்டும் இடரின் கண் வீழ்ந்து விட்டனர் –
பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட -என்கையாலே -முன்னும் அவர்கள் இடரின் கண்-வீழ்ந்து கிடந்தமை புலனாகிறது -ஆக -அர்ஜுனனை வியாஜமாக கொண்டு உலகிற்கு ஆருயிர் நாதன்-கீதை அருளினான் -என்றது ஆயிற்று -எல்லாம் அறிந்த இறைவனும் -விலஷனமான வேதங்களை ஆராய்ந்து –
கண்டு அளித்தான் -என்பது தோன்ற -கண்டளிப்ப-என்கிறார் –
நெறி யுள்ளி யுரைத்த கணக்கறு நலத்தனன் -என்றார் நம் ஆழ்வாரும்
தரை குணிய விஷயா வேதா -சத்வம் ரஜஸ் தமஸ் என்னும் மூன்று குணங்களை உடைய மக்களுக்கு-ஏற்ப விஷயங்களை சொல்வன வேதங்கள்-என்றபடி -அவரவருடைய குணங்களுக்கு ஏற்ப –அவரவர்களுக்கு வேண்டிய பல திறத்தனவான விஷயங்களை உடைய வேதத்தை-விலை உயர்ந்த ரத்னங்களையும் சிப்பி போன்ற எளிய பொருள்களையும் கொண்ட-கடலாக உருவகம் செய்கிறார் –
ஆருயிர் நாதன் -என்று பாடம் ஓதுவாரும் உண்டு -அப்பொழுது என்று என்பதை பொருள் என்பதுடன் கூட்டி-அடல் கொண்ட நேமியனான சர்வேஸ்வரனே ஆத்மாக்களுக்கு சேஷி என்ற கடல் கொண்ட ஒண் பொருளைக்
கண்டு அளிப்ப -என்று கூட்டிப் பொருள் கொள்க –சர்வேஸ்வரனே ஆத்மாக்களுக்கு சேஷி என்னும் பொருளே-ஆரண சொற்கடலில் கண்டு அளித்த பொருள் ஆயிற்று –
பின்னும் காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட-சர்வ சக்தனும் -இயல்பான சேஷித்வ ரூபமான உறவு முறை வாய்ந்தவனுமான சர்வேஸ்வரன்
கண்டு அளித்த பின்னரும் -இடரின் கண் காசினியோர் வீழ்ந்தனரே -இது என்ன விந்தை -என்கிறார் –
தானும் அவ் ஒண் பொருள் கொண்டு –
கீதை சொன ஆருயிர் நாதன் -அர்ஜுனன் சோகத்தை பார்த்து அந்த வாசத்தில் கீதை யருளினான்-கீதா பாஷ்யம் அருளிய எம்பெருமானார் காசினியோர் இடரைக் கண்டு அவ் ஒண் பொருளையே விளக்கி –யருளினார் -சர்வ சக்தனும் முயன்றும் காசினியோர்க்கு பயன்படாமல் போயிற்று -எம்பெருமானார் தம்
பரம கிருபையினால் அவ் விஷயத்திலே முயன்று -வெற்றி காண முற்படுகிறார் –
அவர் பின் படரும் குணன் –
கீதாசார்யன் தன் சிஷ்யனாக ஆன அர்ஜுனனை நோக்கி உலகிற்காக உபதேசித்து ஓய்ந்தான் –
ஸ்ரீ கீதா பாஷ்யாசார்யாரோ சிஷ்யர் ஆவதை எதிர்பாராது –காசினியோர் எல்லாம் இவ் ஒண் பொருளை-இழக்கல் ஆகாது என்று அவர்கள் அறிந்து கைக் கொள்ளும் அளவும் -அவர்களைப் பின் தொடர்ந்து –
அவ் ஒண் பொருளை ஓயாது உணர்த்திக் கொண்டு இருக்கிறார் -சிஷ்யன் ஆசார்யனை பின் படர்வது போய் –ஆசார்யன் கிருபா மாத்திர பிரசன்னரராய் பின் படர்ந்து உபதேசிக்கிறார் -இங்கனம் பின் படர்தல்-ஒரு பயன் கருதி அன்று -இதுவே ஸ்வபாவம் -என்கிறார் –சிஷ்யன் கால் அடியில்  இருந்து உபதேசித்தான் கீதாசார்யன் –
கீதா பாஷ்யாசார்யர் -காசினியோரைப் பின் தொடர்ந்து ஏற்கும் அளவும் உபதேசிக்கிறார் –
அடல் கொண்ட நேமியன் அளிப்ப
கிரீடினம் கதினம் சக்ர ஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ரஷ்டு மஹம் ததைவ -என்று
கிரீடம் அணிந்தவனும் கதை ஏந்தினவனும் சக்கரக் கையனுமான உன்னை முன் போலவே-நான் காண விரும்புகிறேன் –என்று விஸ்வரூபம் சேவித்த பிறகு அர்ஜுனன் பழைய படி-கையும் சக்கரமும் ஆக உன்னைக் காண விரும்புகிறேன் என்கையாலே -அடல் கொண்ட நேமியனாக-சேவை தந்து கண்ணன் கீதை உபதேசித்தான் என்று தெரிகிறது –
அடல் கொண்ட நேமியன் தன் நேமியினாலேயே துர் யோதநாதியாரை வெல்லலாம் ஆயினும்-கையில் ஆயுதம் உபயோக்கிகலாகாது என்ற பிரதிக்ஜையை ஏற்பப் போரிடும்படி அர்ஜுனனைத்-தூண்டுவதற்காக கீதா சாஸ்திரம் உபதேசிக்க வேண்டியது ஆயிற்று -என்க
அடல் கொண்ட நேமியன் ஆரண சொற்பொருளை கண்டு அளித்தது பயன் படாது போயிற்று –கையிலே ஆயுதம் பிடிப்பவன் வேதர்த்தத்தை உபதேசித்தால் அது எங்கனம் பயப்படும் -என்று-ரசமான பொருளும் இங்கே தோன்றுவதை சுவைத்து இன்புருக –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தல்
நாங்களும் ஆச்ரயிக்கும் படி இவர் தம் உடைய ஸ்வபாவம் இருக்கும் படி சொல்லீர் என்ன அதை அருளி செய்கிறார்..விக்ரகத்தின் லாவண்யமும் சௌந்தர்யமும் சேர்த்து படி கொண்ட கீர்த்தி என்கிறார்-வித்யை தாயாக கொண்டு–விச்வபதி லோக பர்தா —ஆர் உயர் நாதன்--அடல் கொண்ட நேமியன் விரோதி நிரசன சக்தியை உடைத்தான திரு ஆழியை உடைய-
-சகல ஆத்மாக்காளுக்கும் சேஷி ஆனவன்..அன்று-
-அன்று-ஆரண சொல் ..அர்ஜுனன் சோகத்தோடு இருந்த காலத்தில் தேர் தட்டில்
-.கடல் கொண்ட ஒண் பொருள்-
சிஷ்யன் என்ற ஒரு சொல் கேட்டு -ரத்னம் எல்லாம் நடுவிலே கொட்டினானே
-குஹ்யமான அர்த்தங்களை பார்த்து -தேடி எடுத்து -கீதா முகத்தாலே அளித்து
. அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அஸ்தானே சினேகா காருண்யா தர்ம அதர்மாதியாகுலனாய் கொண்டு-மூன்று தோஷங்களை பச்சையா இட்டான்
– ஸ்தானம் இல்லாத இடத்தில் சிநேகம் காருண்யம் காட்டி தர்ம அதர்மம் தெரியாதவன்
-சோகத்தோடு வருந்திய அர்ஜுனன்…அர்ஜுனன் வாழ்ந்து போனான்-பின்னும் மறு படியும்-துவாபரம் முடிந்து கலி பிறந்த பின்
காசினியோர் இடரின் கண் வீழ்ந்திட-பல வருஷங்கள் கழித்து ஸ்வாமி-தானும்- அவ் ஒண் பொருள் கொண்டு அவர் பின்-இடரின் கண் வீழ்ந்தவர்
-படரும் குணம்-எம் இராமனுசன் -படி இதுவே
-ஸ்வாமி நம்மை விடாமல் -க்ருபா மாத்திர -பர கத ச்வீகார நிஷ்டர் ஸ்வாமி..
பெரும் கடலில் மறைந்து கிடக்கும் ரத்னங்கள் போல-வேத சப்தம் ஆகிற சமுத்ரத்துக்கு உள்ளே
-கடல் கொண்ட பொருள் கிடைக்குமா-
தசரதன் கண்கள் ராமன் பின்னே போனதே-கடல் கொண்ட வஸ்து திரும்பி வாராது
-சமுத்திர இவ காம்பீரம் கொண்டவன்-சக்கரவர்த்தி திருமகன்/ஒண் பொருள்-முத்து சிப்பி மேலாக கிடைக்கும் பொருள்
-ஒண் பொருள் கிடைக்காது மறைந்து கிடக்கிற விலஷணமான அர்த்தங்களை தர்சித்து -உணர்ந்து
-வேதம் அறிந்த பிரதம வித்வான் அவன் தானே
அதை அளிப்ப-சகல சேதன உஜ்ஜீவன அர்த்தமாக ஸ்ரீ கீதா முகேன
-அர்ஜுனன் வியாஜ்யம்-உபகரித்து அருள-
வருத்தத்துடன் தன் அடி சோத்திக்கு எழுந்து அருள
–..வீழ்ந்திட -அழுந்தி -பதிதம் பீமா பவ -தானும் -சுவாமியும்-அவ் ஒண் பொருள் கொண்டு--சொன்ன அர்த்தத்தைத்தான் ஸ்வாமி கொடுப்பார் இதை புரியும் வரை -கை கொள்ளும் அளவும்
– அவர் பின் -சம்சாரிகள்- கேட்டு கொள்ள மாட்டோம் என்று ஓடுகிற –பின் தொடரும் குணம் -படரும் குணம்
– எம் ராமானுசன்- படி ஸ்வாபம்-இதுவே .இரண்டு பாட பேதம் அன்று- என்று
-சர்வேஸ்வரனே சேஷி என்று கொண்டு வேதத்தில் மறைந்து கிடக்கிற அர்த்தம் தரிசித்து
கீதா முகேன அருளி செய்தார்..அடல்-மிடுக்கு /காசினி-பூமி /படி-ஸ்வாபம்
வேதத்தால் நானே சொல்ல பட்டேன்
.ஆர் உயர் நாதன் வேறு பட்டவன் புருஷோத்தமன் அபுருஷ புருஷ உத் புருஷ உத்த புருஷ உத்தம புருஷ
..தாங்குபவன் ஸ்வாமி சேஷி/
படி- பிரகாரம்-ஸ்வாபம்-இயல்பு..
பிரதி பஷ நிரசனம் ஆழிக்கே ஸ்வாபம்
நாதன் -சேஷி..விஸ்வத்துக்கு பதி சேஷி
பரிட்ஷை பண்ணாமலே -விரித்த குழல் முடிக்கைகாக
மூலை இலே கிடந்த ரத்னங்களை இட்டான்-இப் பொழுது பதன் பதன் என்று துடித்து அருளுகிறான்
-தாய் தம்பி தனயன் மாறன் மாறன் அடி பணிந்தார்க்கு உள்ள கிருபையால்..அருள-
.வியாக்யானம் இன்றி பட்டு போனது -கை இலங்கு நெல்லி கனி போல இருக்க வ்யாக்யானங்கள்.
.கீதா பாஷ்யம் அருளி -உபதேசம் பண்ண-பத்ரிகாச்ரம் அளவும் பின் தொடர்ந்து -லௌகிக ஜனங்களுக்கு உபதேசிக்க
அடல்-மிடுக்கு –மடுவின் கரையில் -சென்று நின்று ஆழி தொட்டானை –
அலர ஆனையின் துயரம் தீர புள் ஊர்ந்தானே முதலை மேல் சீறி வந்து -நீர் புழு-அஸ்வத்தாமா பரிஷித் பிரம்மாஸ்திரம் ஒழித்த ஆழி ..
நாராயண அஸ்த்ரத்துக்கு பிரதி- கிரீடம் கழற்றி வில்லை கீழே போட்டு அஞ்சலி பரமா முத்ரா –
/துர்வாசர்-அம்பரிஷித் -சக்ராயுதம் ஆஸ்ரித விரோதியை துரத்து/
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழி
//பரத்வம் சூசுகம் ஆழி – பரத்வம் ஆர் உயிர் நாதன்-ரஷிக்க பரத்வம் சொல்ல ஆழி
நாதன்-பிரார்த்திக்க படுபவன்..கண்டு அளித்தானே-/ஒருவன் நித்யன் கேட்டதை கொடுப்பவன்
/சமஸ்த புருஷார்த்த பிரதன்- எழுவார் விடை கொள்வார் — கதி த்ரயத்துக்கும் மூலம்
/ஜகத்துக்கு உபகாரம் நினைவாக
/தேர் ஓட்டியாக அனைவரும் பார்க்கும் படிஅடைவே கடாஷித்து
– நவ ரத்ன மாலை போல கோத்து அருளி
/மாயன் அன்று ஓதிய வாக்கு /நெறி உள்ளி உரைத்த //அன்று -முதல் சோகம்- நல்லது சொல்லு
-தெரிந்த நல்லது எல்லாம் சொன்னான்//நடு சோகம்- இறுதி சோகம்-மோஷ உபாயமாக அருளிய அன்று
– /கால விளம்பம்- குழம்பி /சொரூப விரோதி -சரணா கதியே சிறந்தது
-அளிப்ப- -பக்தி மார்க்கமும் -சர்வ தர்மான்-பிர பத்தி மார்க்கமும்
-கொடுக்க -பின்னும் -பூலோகத்தில் உள்ள சேதனர்கள் அனைவரும் அழுந்தி தரை பட்டு கிடப்ப
-ஒருவன் பட்ட சோகம் அங்கு லோகம் பட்ட துக்கம் இங்கு
.சர்வ சக்தனாலே முடிக்காத பின்னும்…பொருக்க முடியாத சுவாமி
கீதை -பொருள்/–கீதா பாஷ்யம்- ஒண் பொருள்/அன்றிக்கே -திரு கோஷ்டியூர் உபதேசித்த சரம ஸ்லோக அர்த்தம்.-ஒண் பொருள் .
/கத்ய த்ரயம் ஒண் பொருள்/தத்வ தரிசி வசனம் ஒண் பொருள் ஆனது /
கீதாசார்யன் சொன்னதால் இன்றி தம் ஆச்சார்யர் சொன்னதால் சொல்ல போனார் சுவாமி.. /சம்சார துக்கம் துடைத்த ஸ்வாமி//
பெரிய நம்பி திரு குமாரரை -நீர் எம்மை விட்டாலும் நான் உம்மை விட்டோம் என்று கை கொண்டாரே//தானும் ஒண் பொருள் கொண்டு .
.அங்கன் அன்றிக்கே பின்னும் தானும் -இரண்டு உம் இருப்பதால்-அது-சர்வேஸ்வரன் சர்வக்ஜன் சொல்கிறான்
-துவாபர காலம் ..அர்ஜுனன்-குடாகேசன்-மகா ஞானி ஆத்மா சகாவாக கண்ணனுக்கு இருந்தான் ..
//இதுவோ ஸ்வாமி —கலி -அதிகாரிகள் சர்வர் -வர்ண ஜனங்கள்-
..கன்று குட்டி பசு மாடு பின் போவது போல -போவேன் என்றான் பாகவதத்தில்/
/ ஸ்வாமி சென்று அனுஷ்டித்து காட்டினார் /
/அந்தரங்கமாக பெற்ற அர்த்தத்தை பூமி தானமாக கிருபை வாத்சல்யமாக ஒவ்தார்யமாக வாரி கொடுத்தார் ஸ்வாமி
…சங்கு சக்கரம் உடன் கீதை உபதேசித்தான் கண்ணன்
-நால் தோள் அமுதன் -அடல் கொண்ட நேமியன் – அளிப்பன் .
./திரு தண்ட ஹச்தராய் உபதேசிக்காமல் /திவ்ய மங்கள விக்ரகத்தில் கல்யாண குணங்கள் பொசிந்து காட்டும்
/மகிமை படைத்தவர் ஸ்வாமி உம் பின் வர அனைவரும் உய்யலாம்–

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: