அமுத விருந்து -இராமானுஜ நூற்றந்தாதி வியாக்யானம்-35-நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே-இத்யாதி – ..

பெரிய ஜீயர் அருளிய உரை
முப்பத்து ஐந்தாம் பாட்டு –அவதாரிகை
எம்பெருமானார் உம்மளவில் செய்த விஷயீகாரத்தை பார்த்து -கர்மம் எல்லாம் கழிந்தது –என்றீரே யாகிலும் -பிரக்ருதியோடே இருக்கையாலே -இன்னமும் அவை வந்து ஆக்ரமிக்கிலோ-என்ன -இனி –அவற்றுக்கு வந்து என்னை அடருகைக்கு வழி இல்லை என்கிறார் –

நயவேன் ஒரு தெய்வம் நானிலத்தே சில மானிடத்தை
புயலே எனக் கவி போற்றி செய்யேன் பொன்னரங்கம் என்னில்
மயலே பெருகும் இராமானுசன் மன்னு மா மலர்த் தாள்
அயரேன் அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவே -35 –

புறம்பு ஒரு தெய்வத்தை விரும்பேன்
இந்த லோகத்தில் சில சூத்திர மனுஷ்யரை புயலே -என்று அவர்களுடைய ஒவ்தார்யத்துக்கு-மேகத்தை ஒப்பாக கவி சொல்லி ச்துதியேன்-
ச்ப்ருஹநீயமான கோயில் என்னும் பிரசங்கத்திலே காதல் மையல் அபிவ்ருத்தமாக மிற்கும்-எம்பெருமானார் உடைய பரஸ்பரம் பொருந்திய பரம பூஜ்யமாய் போக்யமான திருவடிகளை விச்மரியேன் –
ஆதலால்-அறுக்க அரியதான கர்மங்கள் எவ் வழியாலே என்னை இன்று அடர்ப்பது –
அப்ராப்த தேவதா ப்ராவண்யமும் அசேவ்ய சேவையும் அப்ராப்த விஷய ஸ்ம்ருதியும் ஆயிற்று கர்மம்-அடறுகைக்கு வழி -இவை ஒன்றும் எனக்கு இல்லாமையால் கர்மத்துக்கு என்னை ஒரு-வழி யாலும் அடர்க்கப் போகாது என்று கருத்து –
கவி போற்றி செய்யேன் -என்ற இது-கவி செய்யேன்போற்றி செய்யேன் -என்று பிரித்து யோஜிக்க்கவுமாம் –அப்போதைக்கு கவி செய்கையாவது -அவர்களை கவி பாடுகை / போற்றுகை யாவது -கேவலம் புகழுகை
நயவேன் -என்றது -விரும்பேன் -என்றபடி /புயல்-மேகம் / மையல்-ப்ராந்தி /அயர்வு -மறுப்பு-

மனசால் உடையவர் திருவடி மறக்கேன் -என்கிறார் -பாதுகே யதிராஜ்ய-பச்சாயா நிழலை விடாமல் -நேராக திருவடி சேவை துர்லபம் அன்றோ –
அத்த பத்தர் சுற்றி வாழும் அரங்கம் -வாய் வார்த்தை யாதிருச்சிகமாக சொன்னாலும் மையல் கொள்ளும் -மன்னு மா மலர் தாள் –சென்னியில் சூடி -தேன் பால் கன்னல் அமுது –அஞ்சுவை அமுதம் -ஐந்து கருத்துக்கள் ஒரே பாசுரத்தில் -திவ்ய தேச மஹிமை /திருவரங்கம் வேர் பற்று -ஸ்வாமியின் மையல் / அஸேவ்ய சேவை கூடாது / ஆச்சார்யருக்கு மேற்பட்ட தெய்வம் இல்லை /இப்படி இருந்தால் பாபங்கள் அணுகா /

————————————————————————–

பிள்ளை லோகம் ஜீயர் அருளிய உரை
அவதாரிகை –
எம்பெருமானார் உம்மை நிர்ஹேதுகமாக அங்கீகரித்து அருளின ராஜகுல மகாத்ம்யத்தால்-களித்து -அநாதியான கர்மங்கள் என்னை -பாதிக்க மாட்டாது என்றீர் -நீர் ப்ரக்ருதி சம்பந்தததோடு இருக்கிற-காலம் எல்லாம் -நா புக்தம் ஷீயதே கர்ம -என்கிறபடியே கர்மபல அனுபவமாய் அன்றோ இருப்பது -என்ன –
தேவதாந்திர பஜனம் அசேவ்ய சேவை தொடக்கமான விருத்த கர்மங்களை அனுஷ்டித்தால் அன்றோ-அநாதி கர்மம் மேல் யேருகைக்கு அவகாசம் உள்ளது -அவற்றை சவாசனமாக விட்டேன் –எம்பெருமானார்-திருவடிகளை சர்வ காலமும் விச்மரியாதே வர்த்தித்தேன் -இப்படியான பின்பு க்ரூர கர்மங்கள்-என்னை வந்து பாதிக்கைக்கு வழி இல்லை -என்கிறார் .

வியாக்யானம்
-நயவேன் ஒரு தெய்வம்
-எம்பெருமானாரை ஒழிய மற்று ஒருவரை பர தேவதை அன்று-ஆதரிக்கிறேன் அல்லேன் -நயவேன் என்றது -விரும்பேன் என்றபடி
-நான்யம்வதாமி -ந பஜாமி-ந சிந்தயாமி -நான்யம் ஸ்மராமி ந ஸ்ருனோமி ந சாஸ்ரயாமி –முக்த்வாத்வ தீய சரணாம் புஜ மாதரேன
ஸ்ரீ ஸ்ரீ நிவாச புருஷோத்தம தேஹிதாச்யம் –என்றும் –
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம்-நாடுதிரே -என்றும் -மற்றைத் தெய்வம் விளம்புதிரே -என்றும் சொல்லுகிறபடியே
-பிரதம பர்வ-பர்யந்தம் அத்யாவசியம் இன்றிக்கே -குரோர் அன்யம் ந பாவயேத் –
தேவு மற்று அறியேன் என்கிறபடியே -எம்பெருமானாரை பர தேவதையாக அத்யவசித்து-இருந்தேன் என்றபடி –
உன்னை ஒழிய வேறு ஒரு தெய்வம் மற்று அறியா -மன்னு புகழ் சேர் வடுக நம்பி
தன்னிலையை என் தனக்கு நீ தந்து எதிராசா என் நாளும் உன் தனக்கே ஆட் கொள்ளு உகந்து -என்று-இது தன்னை ஜீயரும் பிரார்த்தித்து அருளினார் இறே –
த்ர்ணீ க்ரத விரிஞ்சாதி நிரந்குசவிபூதிய -ராமானுஜ-பதாம் போஜ சமாச்ரயண சாலின -என்னக் கடவது இறே –
நானிலத்தே சில மானிடத்தை புயலே என கவி போற்றி செய்யேன் -என்றும்
-என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் -என்றும்
மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -என்றும் -ஷோணீ கோண சதாம்ச பால நமவஹா துர்வார கர்வான-லஷூப் யத் சூத்ர நரேந்திர சாடுரச நாதன்யான் நமன்யமஹோ -யம்கம்சித் புருஷா தமம்கதி பயாக்ராமே-சமல்பார்த்ததம் – என்றும் சொல்லுகிறபடி -சதுஸ் சமுத்திர பரிவேஷ்டிதையான -மகா பிருத்வியிலே –
ஒரு ஷூத்ரனைக் குறித்து -ஜல ஸ்தல விபாகம் அறசர்வ விஷயத்திலும் வர்ஷிக்கும் வர்ஷூ-கலாவஹம் போலே இருப்பான் ஒருவன் என்று அவனுடைய ஔதார்யத்தை கவி பாடி-பிரபந்தீகரித்தும் -வாசா ஸ்துத்திதும் -இப்படி அப்ராப்தரை சேவியேன் -புயல்-மேகம் -போற்றுதல்-புகழ்தல் –
அன்றிக்கே -தாம் சரம பர்வ நிஷ்டர் ஆகையாலே -சர்வேஸ் வரனைக் கூட தேவதாந்திர தோடு ஒக்க-அநாதரித்து -கணிசித்து –ஸ்ரீ வேங்கடாசல சிகராலய காள மேகம் -என்று அவரைப் போலே ஸ்துதியாதே –
தேவு மற்று அறியேன் -குரோர் அந்ய ந பாவயேத் -என்கிறபடி இருக்க கடவேன் -என்னவுமாம்
இப்படி இவ்வளவும் -தேவதாந்தரங்களும் -நீச மனுஷ்யரும் -அப்ராப்தர் ஆகையாலே –
அவர்களை திரச்கரித்தும் -பிராப்த விஷயனான சர்வேஸ்வரனை -ஸ்வ தந்த்ரன் ஆகையாலே –பந்த மோஷங்கள் இரண்டுக்கும் -பொதுவானவன் என்னும் சம்சயத்தால் -அவனை அநாதரித்தும்-
பிரதி கூல்ய வர்ஜனம் பண்ணினீர் – ஆனாலும் சிறிது ஆநு கூல்ய சரணம் என்று பேர் இடலாவது ஒரு-வியாஜ்யம் உம்மிடித்தில் உண்டோ -என்ன -உண்டு என்கிறார் -அது என் என்ன –
பொன்னரங்கம் என்னில் மயலே பெருகும்
-வானும் மண்ணும் நிறையப் புகுந்து ஈண்டி-வணங்கு நல் தேனும் பாலும் கலந்து அன்னவர் சேர் தென்னரங்கமே-என்கிறபடியே தத் விஷயமான பக்தி -ததீய பர்யந்தமாய் -திருவரங்கம் -என்று யாதார்ச்சிமாக-சொன்னாலும் -தத் பக்தி பாரவச்யத்தாலே -காதல் மையல் மென்மேலும் பெருகி வாரா நிற்கும் –
மையல்-பிராந்தி –இராமானுசன் -இப்படிப் பட்ட எம்பெருமானாருடைய –மன்னு மா மலர் தாள் –இவருடைய திருவடிகளுக்கும் -மன்னு மா மலர் என்று -நித்தியமாய் மகத்தாய் -விகசிதமான-புஷ்பத்தை போலியாக அருளிச் செய்தது -லோகத்தில் சாதாரண புஷ்பத்தைஎடுத்து சொல்லிற்று அன்று –
லோகத்துக்கு புஷ்பத்துக்கு விகாசம் செவ்வி குளிர்த்தி நாற்றம் -தொடக்கமானவை -ஒரு கால விசேஷத்தில்-உண்டாய் -ஒரு காலத்தில் இல்லாதே ஒழியும் இறே -அப்படி அன்றிக்கே -யாவதாத்மா பாவியாய் கொண்டு-இருப்பதாய் -விகாசமும் பரிமளமும் மாறாதே மென்மேலும் பெருகி வரும்படி -அவற்றை உடைய தாய் –
லோகத்தாரை எல்லாம் ஸ்வ வசமாக்கிக் கொள்ளுகைக்கு ஈடான மகத்துவத்தை உடைத்தான தொரு-புஷ்பம் கிடைத்தால் அத்தை அவர் திருவடிக்கு ஒரு போலியாக சொல்லலாம் என்றபடி –
அயரேன்-குரு பாதாம் புஜம் த்யாயேத் -என்றும் – த்யா யேத்ஜ பேத் நமேத் பக்த்யா -என்கிறபடியே-அத் திருவடிகளை சர்வதா த்யானம் பண்ணிக் கொண்டு -விச்மரியேன் –அயர்வு -மறுப்பு –எனாத வந்தோ ஹி பவந்தி லோகே தி நாத் மகார்யாணி சமாரபந்தே -என்கிறபடியே என்னுடைய-பரத்தை எல்லாம் எம்பெருமானார் பரித்த பின்பு -நிர்ப்பரனாய் இருக்கிறேன் என்று கருத்து –
ஆன பின்பு –அருவினை என்னை எவ்வாறு இன்று அடர்ப்பதுவேஅருவினை -அனுபவ பிராயாச்சித்தங்களாலும்-போக்க அரியதாய் -அநாதி காலம் தொடங்கி பண்ணப்பட்ட புண்ய பாப ரூப கர்மங்கள் வந்து என்னை –
யேன யத்ர சபோக்தவ்யம் சுகம் வா துக்கமே வா சத்தத்த்ராஜ்வா பத்வை வபலாத் தேவே ந நீயதே –என்கிறபடியே -இத்தனை நாளும் ஸ்வ ஸ்வ பலங்களை அனுபவித்து -சம்சாரத்திலே மூட்டினாலும்-இப்போது எம்பெருமானாருடைய சம்பந்தம் ஆகிற ராஜ குல மகாத்மயம் உடைய என்னை -இன்று-இப்போது
எவ்வாறு அடர்ப்பது –
எந்த உபாயத்தாலே பாதிப்பது -வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ
கானோ ஒருங்கிற்று கண்டிலமால் -என்கிறபடியே -சிம்ஹத்தை கண்ட சூத்ர ம்ர்கங்களைப் போலே-கண்டு ஓடிப் போகிற கர்மங்களுக்கு -சும்மனாதே கை விட்டு ஓடி தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடியே
இரு செவி அறியாதபடி போக வேண்டி இருக்கை ஒழிய என்னைப் பாதிக்க வழி இல்லை என்றது ஆய்த்து –
நயவேன் பிறர் பொருளை -என்கிற பாட்டிலே இவ் அர்த்தத்தை பிரதம பர்வ நிஷ்டரும் அருளிச் செய்தார் இறே –

————————————————————————–

அமுது விருந்து

அவதாரிகை
பிரகிருதி சம்பந்தத்தாலே இன்னமும் வினைகள் உம்மை அடர்க்காவோ என்னில் –அவை என்னை அடர்க்க வழி இல்லை என்கிறார் –
பத உரை –
ஒரு தெய்வம் -வேறு ஒரு தெய்வத்தை
நயவேன் -ஆசைப்படேன்
நானிலத்தே -இவ் உலகத்திலே
சில மானிடத்தை -சில அற்ப மனிதர்களை
புயலே என –மேகம் போலே பொழிகிறவனே என்று
கவி போற்றி செய்யேன் -கவி பாடிப் புகல மாட்டேன்
பொன்னரங்கம் என்னில் -அழகிய திருவரங்கம் என்னும் பேச்சிலே
மயலே பெருகும் -காதல் மையல் வளரும்
இராமானுசன் -எம்பெருமானாருடைய
மன்னும் -ஒன்றோடு ஓன்று பொருந்தும்
மா –சீரிய
மலர்த்தாள்-தாமரை போன்ற திருவடிகளை
அயரேன்-மறவேன்
அருவினை-தொலைக்க அரிய கருமங்கள்
எவ்வாறு-எப்படி
என்னை இன்று அடர்ப்பது -என்னை இப்பொழுது பற்றிப் பிடித்து கொள்வது –
வியாக்யானம் –
நயவேன் ஒரு தெய்வம்
தேவு மற்று அறியேன் -என்னும் மதுர கவிகளைப் போலே கூறுகிறார் –
பிரதம பர்வத்தில் ஊன்றியவர்கள் -வாசுதேவம் பரித்யஜ்ய யோன்யம் தேவமுபாசதே
த்ருஷிதோ ஜாஹ்ன வீதீரே கூபம் கநதி துர்மதி -என்று
எங்கும் வியாபித்து விளங்கும் வாசுதேவனை விட்டு -எவன் வேறு தெய்வத்தை உபாசிக்கிறானோ –
அந்த மதிகேடன் -கங்கை கரையில் விடாய் தீரக் கிணறு வெட்டுகிறான் -என்றபடி-
தொடர்பு இல்லாதவராய் -துர்லபராய் -பாடுபட்டு வழி பட வேண்டியவராய் -உள்ள
திரு இல்லாத் தேவரை -உபேஷிப்பர் –
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்-என்பர்
காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யான் இலேன் -என்று இருப்பார் –
அமுதனாரோ -ஸ்வ தந்த்ரனாய் -சம்சார பந்தத்துக்கும் மோஷத்துக்கும் காரணமான சர்வேஸ்வரனையே உபேஷிப்பர்
எம்பெருமானாரே தெய்வம் என்பர்
கண்ணனைக் காட்டித் தரினும் வேண்டேன் என்று இருப்பார் –
இத்தகைய நிலை வடுக நம்பிக்கும் வாய்த்து இருந்தது –
அந்நிலையை மணவாள மா முனிகள்-
உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்று அறியா
மன்னு புகழ் சேர் வடுக நம்பி -தன்னிலையை
என்தனக்கு நீ தந்து எதிராசா எந்நாளும்
உன்தனக்கே ஆட்கொள் உகந்து -என்று வேண்டுகிறார் –
நானிலத்தே –கவி போற்றி செய்யேன் –
கவி வாணர் -ஆசை தீர்ந்து மீண்டும் பிறர் இடம் குறை வேண்டிப் போக வேண்டாதபடி கொடுக்கும் தரம் பெற்ற-செல்வம் உள்ளவர்கள் இல்லாத இடம் இது என்னும் கருத்துடன் –நானிலத்தே -என்கிறார் –
இம் மண்ணுலகில் செல்வர் இப்போதில்லை நோக்கினோம் -திருவாய்மொழி -3-9 5- – -என்று-நம் ஆழ்வார் அருளியதை இங்கு நினைவு கூர்க-
மானிடரை என்று உயர் தினையால் கூறுதற்கும் அருஹதை அற்றவர் என்று கருதி -சில மானிடத்தை –என்று அஃறிணையால் கூறுகிறார் –
வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன் -திருவாய் மொழி – 3-9 9- -என்றார் நம் ஆழ்வாரும் –
அசேதனங்களை சொல்லும் படியிலே சொல்லுகிறார் -தன்னை மெய்யாக அறியாதவன்
அசித் பிராயன் இறே-3-9 2- – என்பது ஈடு .கொடுக்கும் திறன் இல்லாத மானிடத்தை புயலே -என்று-கூறவே -அது பொய்யாயிற்று -பிழைப்புக்காக அங்கனம் பொய் கூறுவர் பிறர் .பயன் எதிர் பாராது-வழங்குதலும் வரையாது வழங்குதலும் கொடுக்கப் பெறாத பொது உடம்பு வெளுத்தாலும் உள்ள
புயலுக்கு ஒப்பானவனே என்று கூசாது போய் பேசுவர் –
மாரியனைகை மால்வரை யொக்கும் திண் தோள் என்று
பாரிலோர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே –
என்னும் திருவாய் மொழியும் இங்கு காண்க –
இவ்வாறு கவி போற்றி செய்யேன் –கவியால் போற்றி செய்யேன் -கவிகள் சொல்லித் துதியேன்-என்றபடி –
இனி கவி செய்யேன்போற்றி செய்யேன்-என்னவுமாம் –
கவி செய்கையாவது -அவர்களை கவி பாடுகை
போற்றுகை யாவது -அல்லாத சொற்களால் புகழுகை –
பொன்னரங்கம் –அயரேன் –
கீழ் பிரதி கூலிம் தவிர்ந்தமை கூறப்பட்டது
இனி ஆனுகூல்யம் சொல்லப்படுகிறது
பொன்னரங்கம் –
பொன் போலே விரும்பத்தக்க அரங்கம்-
அந்தப் பேச்சிலேயே எம்பெருமானார்க்கு மையல் பெருகுகிறதாம் –
அந்த துறவிக்கும் –பொன் -என்று தொடங்கும் போதே-மையல் பெருகி விடுகிறது –
மையல்-வியாமோகம்
மாந்தற்கு வியாமோகம் பொன்னிலே
இத்துறவி வேந்தற்கு வியாமோகம் பொன்னரங்கத்திலே
உலகில் அனைத்தையும் த்ருணமாக அற்பமாக -இவர் மதிப்பது அச்யுதனுடைய பொன்னடிகளிலே-உள்ள வ்யாமோகத்தாலே என்கிறார் ஆழ்வான் -அச்யுத பதாம் புஜ யுக்மருக்ம வ்யாமோஹத –என்பது அவரது திரு வாக்கு -.பொன்னரங்கத்தில் மயல் பெருகுகிறது என்கிறார் அவர் சிஷ்யரான அமுதனார் –
இனி திருவரங்கம் என்னும் பொருளில் பொன்னரங்கம் என்றார் ஆகவுமம் –
பொன் -திரு அவளுடைய அரங்கம் -நாட்டியம் ஆடும் இடம் என்னும் பொருளில் பொன்னரங்கம் என்றார் என்க-
பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கமே -நாச்சியார் திரு மொழி -11 9- – என்னும் இடத்தில்-பெரியவாச்சான் பிள்ளை -அவ்வூரின் பேரும் பெரிய பிராடியாருக்கு ந்ருத்த ஸ்த்தானம் -என்று-வியாக்யானம் அருளி செய்து இருப்பது இங்கு அறியத் தக்கது –பிராட்டி பிறந்தகத்தையும் –
புக்ககத்தையும் -மறந்து -மக்களாகிய நம்மை காப்பதற்கு தக்க இடமாய் இருத்தல் பற்றி
இவ்விடம் பெரும் களிப்புடன் களிநடம் புரிவதாக பெரியோர் பணிப்பர் –
மக்களை பிராட்டி காப்பது புருஷகாரம் எளிதில் பலிக்கும் இடம் ஆயிற்று திருவரங்கம் –
ஏனைய இடங்களில் பெருமாளுக்கு பிராதான்யமாக அவர் ஸ்வா தந்த்ரியம் தலை தூக்கி நிற்றல் கூடும்
அதனை அடக்கி கருணையைத்தூண்ட வேண்டிய அருமை உண்டு பிராட்டிக்கு -இங்கோ பிராட்டிக்கு
பிரதான்யமாய் -ஸ்வா தந்த்ரியம் தலை சாய்ந்து கருணை மீதூர்ந்து -இருத்தலின் களி நடம் கண்டு
பரவசம் அடைந்த பெருமாள் வாயிலாக மக்களை அளிப்பது மிக எளிதாய் உள்ளது -இவ்விடத்தில் –
அரங்கமே எனபது இவள் தனக்கு ஆசையே -பெரிய திருமொழி -8 2-7 – – என்னும் திரு மங்கை மன்னன் ஸ்ரீ சூக்தி
வ்யாக்யானத்தில் -நகச்சின்னா பராத்யதி -என்னும் பெண்ணரசி இறே-என்று பெரியவாச்சான் பிள்ளை-அருளிச் செய்து இருப்பது அறிதற்கு உரியது –
ஆக அரும் தவனாகிய எம்பெருமானார் -தாம் கைக் கொண்ட சரணாகதி -தம் தொடர்பு உடையார் அனைவர் திறத்தும் –பலிப்பதற்குப் பிராட்டி உறு துணையாய் இருந்தமை பற்றி பொன்னரங்கம் என்னும் போதே மையல்-பெருகுவாராய் ஆயினார் -என்க இனி இறைவன் திருநாமங்கள் பல இருக்க பொன்னரங்கம் என்னும் ஊரின் பேரிலே எம்பெருமானாருக்கு-மயல் பெருக காரணம் -தம் ஆசார்யராகிய ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் உகந்த திருப்பேராய்-இருத்தலே என்பர் பெரியோர் -இவ்விஷயம்பெரிய ஜீயரால் பெரியாழ்வார் திருமொழி -4 4-1 – – வ்யாக்யானத்தில்
ஓர் ஐதிஹ்யம் மூலம் நன்கு விளக்கப் பட்டு உள்ளது -அது இது –ஆழ்வார் திருவரங்கப்பெருமாள் அரையர் சரம காலத்தில்-உடையவர் எழுந்து அருளி -இப்போது திரு உள்ளத்தில் அனுசந்தானம் எது -என்று கேட்க –பகவன் நாமங்களாய் இருப்பன அநேகம் திரு நாமங்கள் உண்டாய் இருக்க -திருவரங்கம்-என்கிற நாலைந்து
திரு அஷரமும் கோப்பு உண்ட படியே -என்று நினைத்து இருந்தேன் காணும் -என்று அருளிச் செய்ய –அத்தை ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் விரும்பின திரு நாமம் என்று உடையவர் விரும்பி இருப்பர் –
மலர்த் தாள் அயரேன்
குருபாதாம் புஜம் த்யாயேத் -குருவின் திருவடித் தாமரையை த்யானம்செய்ய வேண்டும் -எனபது அனுஷ்டானத்தில்-வந்த படி –
அரு வினை -இன்று அடர்ப்பதுவே –
வினைகள் அடர்ப்பதற்கு மூன்று வழிகள் உண்டு -அவற்றில் முதலாவது -இயல்பான தொடர்பு அற்ற -அப்ராப்தமான –வேறு தெய்வங்கள் இடம் ஈடுபாடு -அது நானிலத்தில் எம்பெருமானார் இல்லாத வேறு ஒரு தெய்வத்தை-நயவாமையாலே-என்னிடம் இல்லை-இனி இரண்டாவது வழி சேவிக்கத் தகாத அற்ப மனிதர்கள் இடம்
பொருள் வேண்டி அவர்களைப் போற்றுதல்-சில மானிடத்தை புயலே எனப் போற்றாத என்னிடம்-அதுவும் இல்லை -இனி மூன்றாவது வழி -சப்தாதி விஷயங்களை நினைப்பதாகும் -அதுவும் –மன்னு மா மலர்த்தாள்-அயராத -என்னிடம் இருப்பதற்கு இல்லை -இனி எவ்வாறு அருவினை என்னை அடர்ப்பது -என்கிறார் –
பொய்கை யாழ்வார் –1-பிறர் பொருளை விரும்பேன்-
2-கீழாரோடு சேரேன் -3–மேலார்கள் உடனேயே பழகுவேன் -4–திருமாலின் அரிய சீர்மை கண்டு வியக்க மாட்டேன் –
5-திருமாலை அல்லது வேறு தெய்வத்தை ஏத்த மாட்டேன் -நம் மேல் வினை எவ்வாறு வரும் -என்னும்-பொருள் படப் பாடிய
நயவேன் பிறர் பொருளை நல்லேன் கீழாரோடு
உய்வேன் உயர்ந்தவரோ டல்லால்-வியவேன்
திருமாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் நம்மேல் வினை – 35- -என்ற பாசுரத்தொடு இதனை ஒப்பிடுக –

————————————————————————–

அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தல்

நயவேன் பிறர் பொருளை .முதல் திரு அந்தாதி -பிரதம பர்வ நிஷ்ட்டையில்
ஸ்ரீ ரெங்கத்தில் ஸ்வாமி காதல் கொண்டு இருந்தார்
பஞ்சா அமிர்தம் போல எல்லா திரு கோல பெருமாளையும் சேவிக்க
திரு வல்லி கேணி மங்களா சாசனம் திரு மங்கை ஆழ்வார்
—ஐ சுவை அமுதம்-தேன் பால் கன்னல் அமுது அனைத்தும் கலந்தசுவை போல-அதனால் தன் சக்கரை பொங்கல் இங்கே விசேஷம் ஆனதோ
— இந்த பாசுரத்தில்-திவ்ய தேச மகிமை
மானிடம் பாட கூடாது
ஆச்சார்யர் மேல் தெய்வம் இல்லை
ஆச்சர்யரை ஒரு கணமும் மறக்க மாட்டேன் என்று இருந்தாலே -அரு வினைகள் என்றும் வராது-சேராதன உளதோ பெரும் செல்வருக்கு போல.
.பல கருத்துகளை அருளுகிறார்.
.இனி பாபங்கள் என்னை ஆக்கிரமிக்காது பிரக்ருதியில் இருந்தாலும் என்கிறார் ..
நம்பினேன் பிறர் நன் பொருள் முன்பு எல்லாம்
அடியேன் சதிர்தேன் இன்றே
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் -நின்று தன் புகழ் ஏத்த அருளினன் என்றும்
திரு குருகூர் நம்பி என்னை இகழ்விலன்
ஆச்சார்யர் திரு வடி பலத்தால் திரும்பி வராது என்றார் மதுரகவி
கீதாசார்யன் கண்ணாடி மேல் அழுக்கு ஓட்டுவது போல வரும் என்றான்
நானிலத்தே நயவேன் ஒரு தெய்வம்-
ஆச்சர்யரை விட வேறு யாரையும் விரும்பேன்..
சில மானிடத்தை புயலே என்று போற்றி கவி செய்யேன்-பாடவும் மாட்டேன் புகழவும் மாட்டேன்-
மேகம் என்று-அநிஷ்டம் நிவ்ருத்தி.
. இனி இஷ்ட பிராப்தி..பொன் அரங்கம் என்னில்
– பிரச்தாபதமே போதும்- எங்கேயோ இருந்து பொன் அரங்கம்-வார்த்தை கேட்டதும் மயலே பெருகும் ராமானுசன்
– பெருகிண்டே இருக்கும் ஒரு தடவை சொன்னதும்.கோவில் என்று வார்த்தை கேட்டதும்
-ஸ்ரீ சைலம் ஸ்ரீ ரெங்கம் அஞ்சன கிரிம் சிம்ஹாசலம் ஸ்ரீ கூர்மம் புருஷோதமம் பத்ரி நைமிசாரண்யம்
த்வாரகை பிரயாகை கயா அயோதியை மதுரை புஷ்கரம்சாளக்ராமம் அயோதியை பல திவ்ய தேசங்கள் கைங்கர்யம்
.. காதல் மையல் பெருகி கொண்டே இருக்கும்
. மன்னு –நின்ற திரு கோலம் சேவிக்க முடியாது அந்தரங்கர் சேவித்து இருக்கலாம்
.சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று கிடந்தது இருக்கிறான் திரு அரங்கத்தில்
மா மலர்– பெருமையும் மிருதுவான தாள்
வாசுதேவம் விட்டு விட்டு வேறு தெய்வம் தொழுதல–ஜான் கவி -கங்கை -பக்கத்தில் கிணறு வெட்டுவது போல்
சிந்தனை-இப் பொழுது நடப்பதை சிந்திப்பது/
ஸ்மரணம்-பழையவற்றை நினைந்து சிந்தித்தல்/
/எல்லாம் அவனை பற்றியே இருக்கணும்.
.உள்ளாதார் உள்ளத்தை உள்ளமாக கொள்ளாமே ../
ஸ்ரீ நிவாசம்புருஷோத்தமன் – ஆதி பிரான் நிற்க மற்றை தெய்வம் நாடுதிரே
/மற்றை தெய்வம் விளம்புதிரே /பிரதம பர்வ
–குருவை தவிர –தேவு மற்று அறியேன்.சரம பர்வ நிஷ்ட்டை
நம் பாடுவான்-பிரம ரஜஸ் -பாபம் தீண்டட்டும் சொன்னதும் விட்டதே
புயலே -வள்ளல் தன்மைக்கு மேகம் போல-கொடுத்து கொண்டே இருக்கும் ஒப்பாக மானிடத்தை-கவிகள் சொல்லி போற்றி செய்யேன்-ஸ்தோத்ரம் செய்ய மாட்டேன்
.அயரேன்-மறக்க மாட்டேன்..அரு வினைகள் அடர்க்காது
..அப்ராப்த தேவதா ப்ராவண்யமும் அசேவ்ய சேவையும் அப்ராப்த விஷய ச்ம்ர்தியும் ஆயிற்று கர்மம் அடறுகைக்கு வழி /
கவி செய்யேன் போற்றி செய்யேன் கவி பாடுகையோ -கேவலம் புகழுகையோ கூடாது..மயல்=பிராந்தி /அயர்வு =மறப்பு/
..எல்லாம் ஸ்வாமி யாக கொண்டோம்
உன்னை ஒழிய மற்றை தெய்வம் மற்று அறியாத
மன்னு புகழ் சேர் வடுக நம்பி தன் நிலையை என் தனக்கு நீ தந்து -மா முனிகள் பிரார்த்திக்கிறார்
உனக்கேயாக எனைக் கொள்ள வேண்டும்
-திரு குறுங்குடி நம்பியே ஆசை பட்டாரே -வைஷ்ணவ நம்பி -வட்ட பாறை .
.விரிஞ்சன்- சத்யா லோகமே தள்ளு படி
நயவேன் ஒரு தெய்வம்../நானிலத்தே
-கொடுக்க ஆள் இல்லாத இடத்தில் -இம் மண் உலகில் செல்வர் இப் பொழுது இல்லை-ஆழ்வார்
– என் நாவில் இன் கவி ஒருவருக்கும் கொடுக்கிலேன் –யானாய் என்னை தான் பாடி ..மானிடம் பாட வல்ல கவி அல்லேன்
-அஃறிணையில்-தன்னையே மெய்யாக அறியாத ஞான ஹீனன் பசுவுக்கு சமம்.
.மாரி அனைய கை பச்சை பசும் பொய் காடு ஆள்வானை நாடு ஆள்வான் இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
/புயல்-மேகம் -அன்றிக்கே இவர் சரம பர்வ நிலையில் இருப்பதால்
-சர்வேச்வரனையும் இந்த நயவேன் ஒரு தெய்வம்
-ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் போல
-இருகரையர் என்று சிரிப்பார்-ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் என்று ராமானுஜரை போலே ஸ்தோத்ரம் பண்ணாமல் என்றுமாம் -இந்த ஸ்லோகம் ராமானுஜர் அருளியது –
பிராப்த விசயன் சர்வேஸ்வரன் ச்வதந்த்ரன் என்பதால் பந்த மோஷம் இரண்டுக்கும் பொது -என்பதால் அநாதரித்தும்
–அநிஷ்ட நிவ்ருத்தி..அனுகூல்யம் இருக்கா ?..உண்டு-பொன் அரங்கம் ..இராமனுசன் தாள் அயரேன்/வானும் மண்ணும் நிறைய புகந்து ஈண்டி வணங்கி .
.தென் அரங்கமே தத் விஷய பக்தி ததீய விஷயத்தில்-
பக்தி பாராவச்யத்தாலே –
தென் அரங்கம் செல்வம் எல்லாம் திருத்தி வைத்தான் வாழியே
..நித்ய அச்யுத -வ்யாமோகன்-வடிவு எடுத்தவன்-ஞானம் வடிவு விட இந்த வ்யாமோக வடிவு தான் சுவாமிக்கு யேற்றம்.
-சரம காலத்தில் திரு உள்ளத்தில் ஓடுவது என் ஸ்வாமி கேட்க ஆழ்வார் திரு அரங்க பெருமாள் அரையர்
–அநேககங்கள் இருக்க -அரங்கம் நினைத்து இருந்தோம்- இதன் கோப்பு இருந்தது என்
–இதுவும் ஆசார்யன் விட்ட வழி-இதுவும் ஆச்சார்யன் காட்டிக் கொடுத்த வழி -சரம நிலை தானே –
பொன்-சொன்னாலே பொன்-திரு- அரங்கம் சொல் .இதனால் மையல் பெருகிறதாம்
ஸ்ரீ தேவிக்கு நிருத்த ஸ்தானம் என்பதால் ஆசையாம்
அரங்கமே என்று இவள் தனக்கு ஆசை -கலியன்
-..கண்ணனூர் விண்ணகரம் போல இல்லை ஸ்ரீ தேவி ஏற்றம் பேணும் வூர் பேணும் அரங்கமே
-இது ஸ்ரீ ரெங்க நாச்சியார்க்கு ஆடுகிற மேடை
-இதனால் தான் அங்கு சரண கதி பண்ணினார் ஸ்வாமி.
.மன்னு -நித்யம் மா-மகத்தாய் மலர் விகசியாக இருக்கும் புஷ்பத்தை போலியாக -திருஷ்டாந்தம் ஆக சொன்னார்..
அபூத உவமை- செவ்வி மாறது குளிர்ச்சி மாறாது கொள்ளை கொள்ளும் பார்த்தாலே என்பதால்-
மன்னு மா மலர் தாள் /சர்வதா த்யானம் பண்ணி கொண்டு இருக்கணும்.
.நாதன் இடம் எல்லாம் விட்டு விடனும் ஸ்வாமி இடம். அயரேன்-நிர் பயோ
-எல்லாம் விட்ட பின்பு சோம்பரை உகத்தி போலும்
.அரு வினை– போக்கு வதற்கு அரியதாகி இருக்கிற வினை .
.சம்சாரத்தில் மூட்டினாலும் -ஸ்வாமி சம்பந்தம் ராஜ குல மகாத்மயம் -உடைய என்னை-
அது வானோ மறி கடலோ எங்கேயோ அரு வினைகள் ஓடி போன
சிம்கத்தை கண்ட மிருகம் போல-சும்மனாகி கை விட்டு ஓடி- போயின
சுவாமியின் மன்னு மா மலர் தாள் அயரேன் –மறக்காமல் -இருக்கிறேன்.. அரு வினைகள் என்னை அடர்க்காது–

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள்  திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: